புதன், 15 மே, 2024

சவுக்கு சங்கர் கோடீஸ்வரன் ஆனது எப்படி? மகனுக்கு 2 ஆயிரம் கொடுக்க வழியில்லை என்ற கூறிய...

May be an image of 1 person and text

  தோழர் நிலவு மொழி (சங்கரின் முன்னாள் மனைவி) அவர்களின் பதிவு.
"சங்கரின் கைது திட்டமிடப்பட்டது, மனித உரிமைக்கு எதிரானது. சாதாரண மக்கள் vs வொயிட் காலர் கிரிமினல்ஸ், அரசியல்வாதிகள், அல்லக்கைகள் சிறையை எதிர்கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. சிறை அவர்களுக்கு வழங்கும் அடையாளமும், சாதாரண மக்களுக்கு வழங்கும் அடையாளமும் பெருமளவில் மாறுபடும்.
ஊழலுக்கு எதிராக அடையாளம் காட்டிக்கொண்ட சங்கரின் இன்றைய சொத்து மதிப்பு என்ன? எனக்கு தெரிந்த சங்கருக்கு மாத சம்பளம் 35 ஆயிரம். தினமணில வந்த மாத 10,000₹ சேர்த்து என்னோட டெலிவரி செலவுக்கு வைச்சது.
மாலதிக்கு பத்துகோடி மதிப்புள்ள சொத்து வாங்கிக்கொடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான், எனது மகனிற்கு 2000₹ வழங்கமாட்டேன் என நீதிமன்றத்தில் நின்றான். திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குனு கல்யாணம் ஆன மாதிரி, இன்னைக்கு சங்கரோட கார் மதிப்பு மட்டுமே பல இலட்சங்கள்.

செவ்வாய், 14 மே, 2024

யார் அடுத்த பிரதமர் என்பதை ஜெகன்மோகன் ரெட்டியும், நவீன் பட்நாயக்கும் தீர்மானிக்கப் போகிறார்களா?

மின்னம்பலம் -vivekanandhan  : ஆந்திரா, ஒடிசா இந்த இரண்டு மாநிலங்களில் எந்த கட்சி வெற்றி பெறப் போகிறது என்பது நாடு முழுதும் முக்கியமாக கவனிக்கப்படுகிறது.
இந்தியாவில் மத்தியில் எந்த கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறது என்பதைத் தீர்மானிப்பதில் இந்த இரண்டு மாநிலங்களின் வெற்றி யாருக்கு என்பது முக்கியமான காரணியாக இருக்கும் என்று அவதானிக்கப்படுகிறது.
ஆந்திராவிற்கும், ஒடிசாவிற்கும் இந்த தேர்தலில் உள்ள ஒற்றுமை என்னவென்றால்,
இரண்டு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும் தொகுதிகள் தவிர்த்து மற்ற கட்சிகள் வெல்லும் தொகுதிகள் எந்த கூட்டணிக்கு ஆதரவாக மாறப் போகிறது என்பது தெரியாமல் இருப்பது தான்.
இரண்டு மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியில் இல்லாத மாநிலக் கட்சிகளே செல்வாக்கு செலுத்துகின்றன.    ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சியும் ஆளுங்கட்சிகளாக இருக்கின்றன. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த மாநிலங்களின் பெரும்பான்மை தொகுதிகளை வென்ற கட்சிகளாக இக்கட்சிகளே இருக்கின்றன. இரண்டு கட்சிகளுக்கும் எதிர் தரப்பில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது.

புலிகள் மீதான தடை 5 ஆண்டுகள் நீட்டிப்பு

 தினமலர் ; புதுடில்லி:இந்தியாவில், விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.
இலங்கையில், தனி நாடு கேட்டு, ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த, விடுதலைப் புலிகள் அமைப்பினர், 1991ல், நம் நாட்டின், முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்தனர்.
அதன் பின், நம் நாட்டில், புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில்,
 புலிகள் அமைப்பின் தலைவர், பிரபாகரன், 2009ல், இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்ட பின், இலங்கையில், அவர்களது நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன.

Red Pix பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 27-வரை ரிமாண்ட்!

 மின்னம்பலம் - Selvam :  சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி திருச்சி நீதிமன்றம் இன்று (மே 13) உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்களையும், காவல்துறை உயரதிகாரிகளையும் அவதூறாக பேசி ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் பேட்டி கொடுத்திருந்தார்.
இதுதொடர்பாக சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தற்போது அவர் கோவை சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்த பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

திங்கள், 13 மே, 2024

நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் காலமானார்... அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி

 tamil.asianetnews.com Ajmal Khan  : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் செல்வராசு எம் பி (67) இன்று அதிகாலை காலமானார். உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  சென்னை மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்
 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர். எம் செல்வராசு எம் பி (67) இன்று காலமானார்.
எம் செல்வராசு திருவாரூர் மாவட்டம். நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கப்பலுடையான் என்ற ஊரில் வாழ்ந்து வந்த ஏழை விவசாயி முனியன் - குஞ்சம்மாள் தம்பதியரின் மகனாக 1957 மார்ச் 16 ஆம் தேதி பிறந்தவர்.

ஒரே மேடையில் இந்தியா கூட்டணி தலைவர்கள்? மாற்றி யோசிக்கும் ஸ்டாலின்

 மின்னம்பலம் - Aara  :    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பெயிலில் வந்து பிரச்சாரம் செய்யும் காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
”மே 10 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறையின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.  அவர் நேற்று மே 11ஆம் தேதி டெல்லியில் தனது கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஞாயிறு, 12 மே, 2024

மம்தா பானர்ஜி : ஆளுநரின் “முழு வீடியோவையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்; அனந்த போஸ் இனியும் தொடரக்கூடாது”

 கலைஞர் செய்திகள் - Prem Kumar :  இந்தியா ஆளுநர் மாளிகை வெளியிட்டது எடிட் செய்யப்பட்ட வீடியோ. தனக்குப் பென் டிரைவ் மூலம் முழு வீடியோ வந்திருப்பதாகவும் அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநராக இருப்பவர் சி.வி.அனந்த போஸ். இவர் அம்மாநில அரசுக்கு தொடர்ந்து பல்வேறு இடையூறு கொடுத்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவராக அறியப்பட்டவர். இவர் மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஒருவர் கடந்த மே 2ஆம் தேதி, ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் புகார் ஒன்றை கூறினார்.

நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அலை" - ராகுல்

 
மின்னம்பலம் -Selvam :  “நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அலை” – ராகுல்
நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அலை வீசுகிறது என்று காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (மே 11) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இன்றோடு நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது. மே 13-ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பார் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம்! ஒரு வருடம் வெளியே வர முடியாது!

 தினமலர் :  சென்னை: பெண் போலீஸ் குறித்த அவதூறு பேச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள யூ டியுபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
 தமிழக அரசு , முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, முதல்வர் மருமகன் சபரீசன் ஆகியோர் குறித்து கடுமையாக விமர்சித்து வீடியோ பதிவு செய்து வந்த சவுக்குசங்கர் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் சவுக்கு சங்கர் ஒரு வருடம் வெளியே வர முடியாது.

உக்கிரேன் ரஷ்ய போரில் 300ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள்! காமினி வலேபொட எம்பி

 hirunews.lk : இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக ரஸ்யாவுக்கு அனுப்பப்பட்டவர்களில் 300ற்கும் அதிகமானோர் போரில் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் 200ற்கும் அதிகமானோர் தற்போது முகாம்களில் பயிற்சி பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்ய – யுக்ரைன் மோதலுக்காக இலங்கையிலிருந்து 800ற்கும் அதிகமானோர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனி, 11 மே, 2024

பாட்டுக்கு மெட்டா மெட்டுக்குப் பாட்டா? மன்னிப்புக் கேட்ட இசை மேதை!

May be an image of 2 people
Gauthaman Munusamy :   பாட்டுக்கு மெட்டா மெட்டுக்குப் பாட்டா? மன்னிப்புக் கேட்ட இசை மேதை!
“பாடலாசிரியர் எழுதித் தரும் வார்த்தைகளுக்குள்ளேயே இசை ஒளிந்து
கொண்டிருக்கிறது. அதைத் தேடிக் கண்டுபிடித்து வெளியே கொண்டு வர வேண்டியது தான் இசையமைப்பாளர் செய்ய வேண்டிய வேலை” – இது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் சாட்சியம்! இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்து காட்டியவர் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்.
பாடலாசிரியர் எழுதித்தரும் பாடலுக்குத்தான் அவர் இசையமைப்பார். எழுதப்பட்ட வரிகள் மெட்டுக்குள் அடங்காமல் முட்டி மோதினால் அவற்றை விருத்தமாக அமைத்து விட்டு அடுத்த வரியை இசைக்குள் கச்சிதமாக அடக்கிவிடுவார்.

ரெட் பிக்ஸ் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் தூக்கிய போலீஸ்.. சவுக்கு சங்கரை தொடர்ந்து

tamil.asianetnews.com - vinoth kumar : தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் வைத்து தமிழக போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

CM அரவிந்த் கெஜ்ரிவால் : பாஜக வென்றால்... ஸ்டாலின், மம்தா உள்ளிட்டவர்கள் சிறையில் இருப்பார்கள்! டெல்லி முதல்வர் எச்சரிக்கை

 மின்னம்பலம் - christopher  :”மீண்டும் மோடி அரசு அமைந்தால் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பிற எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உச்சநீதிமன்றம் நேற்று ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

கே.சந்திரசேகர் ராவ் (Ex Cm telungana) : மாநில கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும்!

 tamil.oneindia.com -  Vigneshkumar  : டெல்லி: லோக்சபா தேர்தலில் பிராந்திய கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று பிஆர்எஸ் கட்சித் தலைவரும் தெலுங்கானா முன்னாள் முதல்வருமான கேசிஆர் கூறியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நமது நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் திங்கள்கிழமை நடக்கிறது. இதில் மொத்தம் 10 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடக்கிறது.
குறிப்பாகத் தெலுங்கானாவில் மொத்தம் இருக்கும் 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. இன்றுடன் அங்குப் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில், பல்வேறு தலைவர்களும் தீவிரமாகப் பரப்புரை செய்து வருகிறார்கள்.

வெள்ளி, 10 மே, 2024

வடமாநில ரெயில்வே ஊழியர்கள் தமிழ் கற்கவேண்டும் - தெற்கு ரயில்வே ‛அறிவிப்பு இது நடக்குமா?

 tamil.oneindia.com -  Halley Karthik  :  ‛தமிழ் கற்றே ஆகணும்’.. வடமாநில ஊழியர்களுக்கு தெற்கு ரயில்வே ‛ஆர்டர்’.. பஞ்சாயத்துக்கு ‛எண்ட் கார்டு’?
சென்னை: தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் வட மாநிலங்களை சேர்ந்த ஊழியர்களுக்கு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகள் பயிற்றுவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ரயில்வே சேவையை மேலும் மேம்படுத்தும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
பொதுவாக ரயில்வே துறை என எடுத்துக் கொண்டாலே பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள்

அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை கிடைத்தது Delhi CM Arvind Kejiriwal

 மாலை மலர் :  டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கதுறை கைது செய்தது செல்லாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் தேர்தலை கணக்கில் கொண்ட இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை நேற்று மனுதாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில் இன்று கெஜ்ரிவால் தொடர்பான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

அம்பானி, அதானி பற்றி பேச்சு.. மறுநாளே பிரச்சாரத்திற்கு போகாத மோடி.. என்ன நடந்தது? இதுதான் காரணம்

tamil.oneindia.com  - Shyamsundar :  சென்னை: அம்பானி, அதானி பற்றி முதல்முறையாக பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசினார்.
இந்த பிரச்சாரத்திற்கு மறுநாளே.. அதாவது நேற்று முதல்முறையாக இந்த தேர்தல் காலத்தில் மோடி பிரச்சாரம் எதையும் செய்யாமல் தவிர்த்து உள்ளார்.
நேற்று முதல் நாள் தெலங்கானாவின் கரீம்நகரில் நடைபெற்ற பேரணியின் போது,
​​பிரதமர் நரேந்திர மோடி, அம்பானி, அதானி ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் "டீல்கள்" குறித்து கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
2024 மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அம்பானி, அதானி ஆகியோரை விமர்சனம் செய்வதை ராகுல் காந்தி ஏன் நிறுத்தினார் என்று பிரதமர் மோடிதனது உரையில் கேள்வி எழுப்பினார்.

இந்திரா காந்தியின் சாயல்…பிரியங்காவின் அரசியல் எழுச்சி…உத்திரப் பிரதேசத்தில் மீண்டெழுகிறதா காங்கிரஸ்?

 மின்னம்பலம் - vivekanandhan :   பிரியங்காவின் அரசியல் எழுச்சி பலரையும் மலைக்க வைத்துள்ளது. நீண்ட காலமாக நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி BackEnd-ல் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த பிரியங்கா காந்தி, 2019 ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலில் கட்சிப் பொறுப்பில் நேரடியாக அடியெடுத்து வைத்ததிலிருந்து பல சிக்சர்களை விளாசி வருகிறார்.
சமீபத்தில் உத்திரப் பிரதேச மாநிலத்தின் சஹாரன்பூர் பகுதியில் பிரியங்கா காந்தியின் ரோடு ஷோ விற்கு கூடிய கூட்டத்தின் எழுச்சியைப் பார்த்து பாஜகவினர் திகைத்து விட்டார்கள். காங்கிரசுக்கு ஒரு புத்தெழுச்சியை பிரியங்காவின் பிரச்சாரம் கொடுத்திருப்பதாக காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

வியாழன், 9 மே, 2024

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து 8 பேர் உயிரிழப்பு

 zeenews.india.com - JAFFER MOHAIDEEN : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சுதர்சன் என்ற பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்கள் உட்பட பலர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

நிர்மலா தேவி வழக்கு: மாணவிகளிடம் தவறா பேசியது பேராசிரியர் முருகன் கருப்பசாமிகாகத்தான்- ப்ளீஸ் தண்டனையை ரத்து பண்ணுங்க!

tamil.samayam.com - மரிய தங்கராஜ் : கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை, தவறாக வழிநடத்திய வழக்கில்
குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றம் ஏப்ரல் 30ஆம் தேதி தீர்ப்பளித்தது.
மேலும், ரூ.2.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் பேராசிரியர் நிர்மலா தேவி அடைக்கப்பட்டார்.

சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

 minnambalam.com - indhu : பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் இன்று (மே 9) கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் விமர்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் குறித்தும் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல்துறை துணை ஆய்வாளர் சுகன்யா புகாரளித்து இருந்தார்.

12,000 நெல் மூட்டைகள் சேதம் திடீர் கோடை மழையால்

 மாலைமலர் : சென்னை  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்வதற்காகவும், கொள்முதல் செய்யப்பட்டும் வைக்கப்பட்டிருந்த 12,000-க்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கோடை மழையில் நனைந்து சேதமடைந்தன.
நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில்,
அதை மூடி மறைக்க செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிர்வாகம் முயல்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சவுக்கு சங்கர் வலது கையில் கட்டு.. தாங்கி.. தாங்கி நடக்கிறார் .. பலத்த போலீஸ் பாதுகாப்போடு நீதிமன்றத்தில் ஆஜர்

 tamil.asianetnews.com - Ajmal Khan :  கஞ்சா வைத்திருப்பதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது கையில் முறிவு ஏற்பட்டு கட்டுபோட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பெண் காவலர்களை தவறாக விமர்சித்த வழக்கில் சவுக்கு சங்கர் கடந்த சனிக்கிழமை தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவரது காரில் சோதனை செய்த போது 400 கிராம் கஞ்சா இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்தநிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கரை போலீசார் தாக்கியதாகவும்,

அழகிரியின் மகன் துரை தயாநிதியை நலம் விசாரித்த முதல்வர்

 nakkheeran.in  : அழகிரியின் மகன் துரை தயாநிதியை நலம் விசாரித்த முதல்வர்
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரியுடைய மகன் துரை தயாநிதியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
கடந்த மார்ச் 14ஆம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
 உயர்ரக சிகிச்சை அளிக்கக்கூடிய வார்டில் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார்.
துரை தயாநிதிக்கென்று மருத்துவக் குழு ஒதுக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவரை 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சாம் பிட்ரோடா காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 மாலை மலர் : இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக இந்திய மக்களின் நிறங்களை குறிப்பிட்டு சபாம் பிட்ரோடா பேசினார்.
இதனால் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. சாம் பிட்ரோடாவிற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
பிரதமர் மோடி நிறவெறி என கடுமையாக சாடினார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் பதவியை சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளார்.
சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம்.