சனி, 25 ஏப்ரல், 2020

மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு வளையத்துக்குள் .. கிரிமி நாசினி தெளிப்பு .. தெருக்கள் சீல் வைக்கப்பட்டது


Shyamsundar  --  /tamil.oneindia.com| மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பட்டரின் குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், தற்போது மதுரை மீனாட்சி அம்மன்
கோவில் மொத்தமும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பட்டரின் குடும்பத்தில் உள்ள பெண் ஒருவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. பட்டரின் தாயாருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இது மதுரையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பட்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிநாடு சென்று வந்துள்ளார். இதன் மூலம் அந்த பட்டரின் தாயாருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதனால் தற்போது மொத்தமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி 2 கிமீ பகுதிக்கு மொத்தமாக லாக் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் மொத்தமும் தற்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. கோவில் மொத்தமும், கோவிலுக்கு வெளியே இருக்கும் பக்தியும் சுத்தம் செய்யப்பட்டது வருகிறது.

முருங்கை .. பிடல் காஸ்ட்ரோ கியுபாவில் அறிமுகம் செய்த அற்புத தாவரம்


பாண்டியன் சுந்தரம் : நம்ம ஊரில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாடும் முருங்கை மரமும் இருந்தால் போதும், அந்தக் குடும்பம் வாழ்க்கையில் முன்னேறிவிடும் என்று சொல்வது வழக்கம். ‘‘முருங்கை இந்தியாவின் நாட்டுப் பயிர். இதன் இலைகளில் ஏராளமான சத்துக்களும், மருத்துவக் குணங்களும் உள்ளன. கியூபா மக்கள் முருங்கையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என இதே அறிவுரையை சில ஆண்டுகளுக்கு முன்னால் கியூபா நாட்டின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தன் மக்களுக்கும் சொல்லியிருக்கிறார்.
உலக அளவில் இயற்கை விவசாயத்தில் கியூபாதான் முன்னிலை வகிக்கிறது. இன்று நாம் அமைக்கும் வீட்டுத்தோட்டத்திற்கும் அவர்கள்தான் முன்னோடி. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னால் வீட்டுக்கு ஒரு முருங்கை மரத்தை வளர்க்க சொல்லி கியூபா அரசே அறிவித்தது.
முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ ஹவான்னாவில் உள்ள தன்னுடைய வீட்டுத்தோட்டத்தில் முருங்கை மரத்தை சாகுபடி செய்திருக்கிறார். தினமும் முருங்கை மரத்தை பராமரிக்கிற வேலையையும் காஸ்ட்ரோதான் செய்து வந்தார். அவர் நேசித்த முருங்கைக்கு பின்னால் முக்கியமான சம்பவம் காரணமாக இருகிறது.

ஊரடங்கை மதிக்காத அப்போலோ .. தமிழக அரசின் அவல நிர்வாகம்

Shankar A : 15 நாட்களுக்கு முன்பாக, 60 + வயதில் உள்ள ஒரு தம்பதியர்,
கீழ்ப்பாக்கதில் உள்ள ஃபர்ஸ்ட் மெட் அப்பொல்லோ மருத்துவமனையில் காய்ச்சலுக்காக செல்கின்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், ஒரு இரவு உள்நோயாளியாக தங்கி செல்லுங்கள் என்று வழக்கம் போல அனைத்து பரிசோதனைகளையும் எடுக்கின்றனர்.
மறு நாள் காலை, இருவருக்கும், இருமல் அதிகமாகிறது. இருவரும், வானகரத்தில் உள்ள அப்போல்லோவுக்கு மாற்றப்படுகின்றனர். அங்கே இருவருமே கொரொனாவால் பாதிக்கப்படுகின்றனர் என்பது பரிசோதனையில் தெரிய வருகிறருது.
இதையடுத்து, பர்ஸ்ட்மெட் அப்போல்லோவில் பணியாற்றிய மருத்துவர்கள், இதர நோயாளிகளுக்கு கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. அதில் மேலும் 2 நோயாளிகளுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதையடுத்து, மருத்துவமனையை மூடச் சொல்லி, சென்னை மாநகராட்சி அறுவுறுத்தியது. அதன்படி, வெளிப்படையான அறிவிப்பு இன்றி, மருத்துவமனை இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டது. தற்போதைய தமிழக ப்ரோட்டோக்காலின்படி, 28 நாட்களுக்கு தனிமைபடுத்தல் செய்யப்பட வேண்டும்.

சிவகுமாருக்கு குடைச்சல் கொடுத்த ஜோதிகா - வீண் வம்பை வீட்டுக்கு இழுத்துட்டு வந்த சூர்யா!


 Papiksha Joseph|- வெப்துனியா : தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும் திரைபிரபலம் மிக்க பின்னணி குடும்பத்தை சேர்ந்தவருமான நடிகர் சூர்யாவிற்கு விருப்பு வெறுப்பின்றி ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
மற்ற திரைத்துறை குடும்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிவந்த சூர்யாவின் குடும்பம் மீது பலரின் கண்ணு பட்டுவிட்டது.
ஆம், அப்பாவின் செல்ஃபி விவகாரம் துவங்கி ஜோதிகாவின் தஞ்சை கோவில் விவகாரம் வரை அடுக்கடுக்கான பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது அந்த குடும்பம். இதற்கிடையில் ஆன்லைனில் வெளியாகவிருந்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் திரைப்படத்தை அமேசான் ப்ரைமில் நேரடியாக ரிலீஸ் செய்யக் கூடாது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு கேலிக்கூத்து ஆனது .. அறிவற்ற அரசின் தவறான திட்டமிடல்


குழப்பும் அரசு- பொறுப்பற்ற பொதுமக்கள்-  உல்டாவான ஊரடங்கு!மின்னம்பலம் : இன்று (ஏப்ரல் 25) என்ன சித்திரைத் திருவிழாவா, தேரோட்டமா, அல்லது 144 தடை உத்தரவை மீறி ஏதேனும் முக்கிய கட்சி நடத்தும் பேரணியா.... இதெல்லாம் இல்லை அடுத்த நான்கு மூன்று நாட்களுக்கான காய்கறி, மளிகை சாமான் வாங்குவதற்காகத்தான் இத்தனை கூட்டம் சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில் இன்று திரண்டது.
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும்போதும் மக்கள் குறிப்பாக நகரப்புறங்களில் கடைக்கு செல்வதாக கூறி கணிசமான அளவில் தெருக்களில் பயணித்த வண்ணம் இருக்கின்றனர். முதலில் பிற்பகல் 2.30 வரை இருந்த நடமாட்ட நேரம் பின் மதியம் 1 மணி வரை என குறைக்கப்பட்டது. அப்போதும் டூவிலர்களும், கார்களும் ஊர்வதை தடுக்க முடியவில்லை. ஊரடங்கின் ஆரம்ப நாட்களில் போலீஸார் லத்தியை சுழற்றத் தொடங்கியது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில் அதன் பின் லத்தியெடுப்பதை போலீஸார் கைவிட்டுவிட்டனர். இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது ஊரடங்கை மீறியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வடகொரியா அதிபரின் சகோதரி பதவிக்கு வந்தால் மகா கொடுரம் ? சீன மருத்துவர்கள் விரைவு .. தப்புவாரா கிம் ?

வடகொரியாவில் கிம் ஜாங் சகோதரி ஆட்சிக்கு வந்தால் முந்தைய ஆட்சியை விட கொடூரமாக இருக்கும்  மாலைமலர் : வடகொரியாவில் கிம் ஜாங் சகோதரி ஆட்சிக்கு வந்தால் முந்தைய ஆட்சியை விட கொடூரமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.
 லண்டன. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.  கிம் ஜாங் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றால் அவரது சகோதரி கிம் யோ ஜாங் ஆட்சிக்கு வர வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிம் யோ ஆட்சி என்பது 8 ஆண்டு கால கிம் ஜாங் ஆட்சியை விடவும் மிக கொடூரமாக இருக்கும் என ஆய்வாளர்  நடாஷா லிண்ட்ஸ்டேட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் தம்மை எதிர்ப்பவர்கள் மீது எந்த இரக்கமும் காட்டுவதில்லை, அது தமது உறவினர்களாக இருந்தாலும் கடுமையாகவே நடந்து கொள்வார்.ஆனால் கிம் ஜாங் ஆட்சியை விடவும் அவரது சகோதரி கிம் யோ ஆட்சி மிகவும் கொடூரமாக இருக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
நவீன புதிய ஆயுதங்கள் மீது அதிக மோகம் கொண்ட கிம் யோ, வடகொரியாவின் அடுத்த தலைவராக தம்மை தயார் படுத்தியும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.பெண் என்பதால் வடகொரிய ஆளும் வர்க்கம், கிம் யோவை புறக்கணிக்காது என்றும், கிம் குடும்பத்தாரை அங்குள்ள மக்கள் கடவுளுக்கு நிகராகவே பார்க்கிறார்கள் எனவும் நடாஷா குறிப்பிடுகிறார்.

வியட்நாமில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – சாத்தியமானது எப்படி?

வியட்நாமில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – சாத்தியமானது எப்படி?    BBC :உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 தொற்று, சீனாவுடன் நில எல்லையை பகிர்ந்திருக்கும் வியட்நாம் நாட்டில் மட்டும் பெரும் பாதிப்பை இதுவரை ஏற்படுத்தவில்லை. வியட்நாமின் மக்கள் தொகை சுமார் 9.7 கோடி ஆகும். அங்கு இதுவரை 268 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதுவரை (ஏப்ரல் 23 வரை) ஒரு மரணம் கூட பதிவாகவில்லை.மக்களை ஒன்றுதிரட்டி “கொரோனாவுக்கு எதிரான போரை” அந்நாடு அறிவித்தது.
தற்போது அங்கு கட்டுப்பாடுகள் தளர்தத ஆரம்பித்துள்ளதோடு, பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது எப்படி சாத்தியமானது? இதனை மற்ற நாடுகள் பின்பற்ற முடியுமா?
மூடப்பட்ட எல்லைகள்
ஜனவரி மாத இறுதியில் கொரோனா தொற்று குறித்த செய்தி வந்தவுடனேயே வியட்நாம் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கிவிட்டது.

எம்ஜியார் உருவாக்கிய பிம்ப சிறையில் இருந்து அவராலும் ரசிகர்களாலும் மீளவே முடியவில்லை

இராமமூர்த்தி நாகராஜன்.  :  நூல் அறிமுகம்:
பிம்பச் சிறை- எம்.ஜி.ராமச்சந்திரன் - திரையிலும் அரசியலிலும்.
ஆங்கிலத்தில் :எம் எஸ் எஸ் பாண்டியன் தமிழில்: பூ கொ சரவணன்
பிரக்ஞை வெளியீடு
பக்கங்கள்:248
விலை:225/-
1977 முதல் 1987 வரை பத்து ஆண்டுகால எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தை தமிழக வரலாற்றில் ஓர் இருண்ட காலம் என்று சொன்னால் உங்களுக்கு சட்டென்று கோபம் வருகிறதா?
அப்படியெனில் நீங்களும் எம்ஜிஆர் என்ற பிம்பச் சிறையில் சிக்கி உள்ளீர்கள் எனலாம்.
பொதுவாக எம்ஜிஆர் பற்றி வெளிவந்துள்ள நூல்கள் அனைத்தும் அவரின் புகழ் மட்டுமே பாடும். ஆனால் இந்த பிம்பச்சிறையானது தமிழ்நாட்டில் தெய்வமாக பல பேரால் கொண்டாடப்படும் எம்ஜிஆரின் ஆட்சிக்காலம் தமிழக வரலாற்றில் ஒரு இருண்ட காலம் என துணிச்சலாகப் பதிவு செய்கிறது.
இந்நூல் மேம்போக்காகவோ, அரசியல் காரணங்களுக்காகவோ எழுதப்பட்ட நூல் அல்ல. இந்த நூலானது பேராசிரியர் எம் எஸ் எஸ் பாண்டியன் அவர்களால் ஆங்கிலத்தில் "The Image Trap" என்னும் தலைப்பில் எம்ஜிஆர் இறப்புக்குப் பிறகான 1992ஆம் ஆண்டில் பல்வேறு நூல்கள் மற்றும் இதழ்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

நடிகை ஜோதிகா மதங்களை கடந்தவர் ..தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை

gdg'  '  நக்கீரன் : திருமதி ஜோதிகா மதம் கடந்தவர். அவரின் பிறப்பை வைத்து அவரது பொது அறிவை எடைபோடும் சிலரை பார்த்தால் உங்களை இன்னும் எத்தனை கரோனா தின்றாலும் திருந்த மாட்டீங்கடான்னுதான் சொல்லத் தோணுது. இஸ்லாமிய பெண்ணானவர்,  ஒரு இந்துவை திருமணம் செய்துகொள்ள நேர்ந்தால்-
அந்த இந்து ஆண், முஸ்லிம் ஆகி.. சுன்னத் செய்து வேறு பெயர் வைத்த பின்தான் சாத்தியம்.  ஆனால் திருமதி ஜோதிகா காதலித்தவரை எந்த
மாற்றமும் செய்யாமல் காதலுக்காக, காதலனை மட்டுமே திருமணம் செய்துகொண்டவர்.  ஒரு இந்து இறை நம்பிக்கை அதிகம் கொண்ட குடும்பத்தில் இணைந்துகொண்டு அவர்களோடு அவர்களாக பல ஆண்டுகளாக வாழ்பவரை எது திடீரென முஸ்லிமாக நினைக்க வைத்தது?  உங்கள் வழிக்கே வருவதாக இருந்தாலும் கிட்டத்தட்ட அவர் ஒரு கன்வெர்ட்டட் இந்துவாகத்தானே இருக்கிறார்?

நடிகர் சிவகுமாரின் தஞ்சை கோயிலின் தீண்டாமை .. திருப்பதியின் ஊழல் ..முழு விபரம் வீடியோ


கோயில்களில் இன்னும் தீண்டாமை இருக்கிறது .ஏழை பணக்காரன் பாகுபாடு இருக்கிறது
கிபி ஆயிரத்தில தஞ்சவூர் கோயில கட்டினாங்க .. இப்ப ஆயிரமாவது ஆண்டு கொண்டாடினாங்க . அந்த கோயிலை ஆயிரக்கணக்கான் சிற்பிகளும் ஆயிரக்கணக்கான கொத்தனர்களும் சித்தாட்களும் வேலை பார்த்திருப்பாங்க அந்த கோயில ஆறு வருஷம் கட்டியிருக்காங்க  . அப்புறம் கட்டி முடிச்சு பிரதட்ஷை பண்ணியிருக்காங்க   கும்பாபிசேகம் செய்து முடிஞ்சால் ..
அந்த மேல ஏறிய சிற்பி கொத்தனார் சித்தாள் ஒருவரும் அந்த சிவலிங்கத்தை தொட முடியாது ...
அந்த சித்தாட்களும் கொத்தானரும் கோயிலுக்குள்ளே போயி சாமி கும்பிட முடியாது   இதை நான் தவறாக சொல்வதாக நினைக்காதீங்க
நான் செம்மொழி மாநாட்டில் பேசுகின்ற பொழுது அந்த சிவலிங்கத்தை செய்த  சிற்பிகளின் பன்னிரண்டாவது தலைமுறையை சேர்ந்த சிற்பியே எனக்கு சொன்னது... அய்யா இன்னும் அதே நிலைமைதான் . எங்க பன்னிரண்டாவது தலைமுறையை சேர்ந்தவங்கதான் அந்த சிலையை செய்தாங்க .நாங்க இன்னும் கோயிலுக்குள்ளே போக அனுமதி இல்லை என்றார்கள்.
யோசனை பண்ணுங்க யோசனை பண்ணுங்க  . இன்னும் அந்த கோயிலில தீண்டாமை இருக்கிறது .

சுத்திகரிப்பானை உடலில் செலுத்தினால் மோடியை மிஞ்சிய அபத்தம் டொனால்ட் ட்ரம்ப்

மின்னம்பலம்  :  கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் தீவிரத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் பொறுப்புடன்
செயல்பட வேண்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நேற்றைய (ஏப்ரல் 24) செய்தியாளர்கள் சந்திப்பு பலரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“பொருட்களை, தரையைச் சுத்திகரிக்கும் சுத்திகரிப்பான் ஒரு நிமிடத்தில் கொரோனா வைரசை அழித்து விடுகிறது. அதுபோல் மனிதர்களின் உடலுக்குச் செய்ய ஏதாவது இருக்கிறதா? உடலில் ஊசி போல செலுத்துவதற்கு, உடலை சுத்தம் செய்வதற்கு அதுபோல ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும். உடலை சுத்திகரிக்கும் கிருமி நாசினி ஒன்றைக் கண்டறிய விஞ்ஞானிகள் முயல வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் நாளை முதல் 4 நாள் முழு ஊரடங்கு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் நாளை முதல் 4 நாள் முழு ஊரடங்கு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு  தினத்தந்தி :  பெருநகரங்களில் கொரோனா அதிகம் பரவும் வாய்ப்பு இருப்பதால், சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் 3 நாட்கள் இதே உத்தரவு அமலில் இருக்கும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். சென்னை, கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு, வருகிற மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட போதிலும் கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மக்கள் பல இடங்களில் வெளியே நடமாடுவதும், மார்க்கெட், கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்து கொள்வதுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் பலர் வாகனங்களில் சுற்றுவதை காண முடிகிறது. போலீசார் அபராதம் விதிப்பது போன்ற கடும் நடவடிக்கைகளை எடுத்த போதிலும் பலன் இல்லை. இதனால் பெருநகரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

புலிப்பண முதலைகளால் கைவிடப்பட்ட தமிழினி ... புலிகளின் மகளிர் பிரிவு பொறுப்பாளர்

தமிழினியின் பிறந்தநாள் தமிழினி என்றழைக்கப்பட்ட சிவகாமி ஜெயக்குமரன் (23 ஏப்ரல் 1972 - 18 அக்டோபர் 2015) இவர் மலையகத்தை பூர்வீகமாக கொண்டவராகும் . (சிவகாமி சுப்பிரமணியம் தமிழக வம்சாவளி)
புலிகளின் மகளிர் பிரிவு பொறுப்பாளர் தமிழினி தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அவருக்காக வாதாடுவதற்கு 3 லட்சம் பணம் கேட்டுள்ளார் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி. கச்சான் விற்று சீவியம் நடத்தும் தமிழினியின் தாய் 3 லட்சத்திற்கு எங்கே போவார். பின்னர் ஒரு சிங்கள சட்டத்தரணி இலவசமாக வாதாடினார். தமிழினியின் தாயாரே இதை தெரிவித்துள்ளார்.
சகாதேவன் நித்தியானந்தன் : தமிழினியின் வழக்குகாக ஒரு சிங்கள சட்டத்தரணி உதவியதாக கூறப்படுகிறது எப்படி, எவ்வாறு?
தமிழினியை சிறையில் இருந்து வெளியில் எடுக்கும் முயற்சியில் பல லோயர்மாரை சந்தித்தன். இந்த நேரத்தில் எனக்கு சொன்னார்கள் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை (முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பா.உ) போய் பாருங்கோ என்று அவரை போய் சந்தித்து விசயத்தை சொன்னன். அவர் சொன்னார் அம்மா இந்த வழக்கை ஒரு மூன்று இலட்சம் வரை செலவாகும் என்று, நான் மூன்று ரூபாவுக்கும் வழியில்லாத நான் எப்படி மூன்று இலட்சத்தை கொடுக்கிறது. ஐயா நீங்கள் வழக்குக்கு காசு கேட்கிaங்களா? அல்லது வசனத்திற்கு காசு கேட்aங்களா என்று கேட்டுப்போட்டு நான் வந்திட்டன்.
பிறகு எனக்கு ஒருவர் சொன்னார் தலைமன்னாரில் ஒரு லோயர் இருக்கிறார் அவர் நல்ல மனிசன் பீஸ் குறைவாகதான் கேட்பார் போய் பாருங்கோ என்று நானும் இடம் வலம் தெரியாது அவருடைய போன் நம்பரையும் எடுத்துக்கொண்டு விசாரிச்சு விசாரிச்சு போய் ஆளை சந்தித்து விசயத்தை சொன்னன்.

ரஜினி - விஜய் . கொலையில் முடிந்த ரசிகர் சண்டை .. கொரோனாவுக்கு எந்த நடிகர் அதிக நிதி ?

INCIDENT IN VILUPURAM
யுவராஜ் விஜய் ரசிகர்
INCIDENT IN VILUPURAM
தினேஷ்பாபு ரஜினி ரசிகர்
nakkheeran.in - எஸ்.பி. சேகர் : விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் டவுன் பகுதியில் உள்ளது சாந்திகாப்பான் கோயில் தெரு. அந்தப்பகுதியை சேர்ந்தவர் முருகன், இவரது மகன் யுவராஜ் (22 வயது ) கூலி தொழிலாளியான இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். இவரது எதிர் வீட்டில் வசிப்பவர் ஆறுமுகம், சமையல் தொழிலாளியான இவரது மகன் (22 வயது) தினேஷ் பாபு இவர் ரஜினியின் தீவிர ரசிகர். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களும் கூட, இந்த நிலையில் தற்போது 144 தடை உத்தரவு காரணமாக இரு நண்பர்களும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளனர். நேற்று மதியம் இவர்கள் 2 பேரும் மது அருந்திய போதையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கரோனா நிவாரண நிதி அளித்ததில் ரஜினி அதிக நிதி கொடுத்தாரா இல்லை, விஜய் அதிக நிதிகொடுத்தாரா என்று இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்பாபு, யுவராஜை கையால் பலமாக தள்ளியுள்ளார். நிலை தடுமாறி கீழே விழுந்த யுவராஜ், அருகில் கிடந்த கல்லின் மீது தலை பலமாக மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மத்திய பிரதேசம் பாலியல் வல்லுறவு..ஆறு வயது சிறுமி - அடையாளம் காட்டாமல் இருக்க கண்ணை காயப்படுத்திய கொடூரன்

BBC :  மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆறு வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரை வல்லுறவு செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அந்தச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல் அவரது முகம் மற்றும் கண்களிலும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
அந்தச் சிறுமி ஒருவேளை தன்னை அடையாளம் காட்டி விடக்கூடாது எனும் நோக்கில் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட நபர் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஜபல்பூர் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அந்த சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார் என்று காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
இந்த பாலியல் வல்லுறவு 'வெட்கக்கேடானது' என்று மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
தாமோ மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அந்தச் சிறுமி புதன்கிழமை மாலை கடத்தப்பட்ட போது தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதிமுகவினரால் கைப்பற்றப்பட்ட அம்மா உணவகங்கள்!


மின்னம்பலம : அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நலன் கருதி அனைத்து மாவட்டங்களிலும் அம்மா உணவகங்கள் திறந்திருக்கும் என தமிழக அரசு தெரிவித்தது. அதிமுக தலைமை உத்தரவின்படி, தமிழகம் முழுவதுமுள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளை இலவச உணவு வழங்குவதற்கான செலவுகளை அந்தந்த பகுதியிலுள்ள அதிமுகவினரே ஏற்றுக்கொண்டனர். அதன்படி, பல இடங்களில் இலவச உணவுகளும் வழங்கப்பட்டு வந்தது
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், அம்மா உணவகங்களை ஆளுங்கட்சியினருக்கு குத்தகைவிட்டது போல தாரைவார்ப்பது மோசமான அரசியல் எனவும், அரசே இலவச உணவு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார். இதன் பின்னணியோடு, இன்று இலவச உணவு: அம்மா உணவக அரசியல்! என்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அர்னாப் கோஸ்வாமி மீது தாக்குதல்: என்ன நடந்தது? நாடகம் அன்றோ நடக்...


BBC :   இந்தியாவின் பிரபல பத்திரிகையாளராக அறியப்படும் அர்னாப் கோஸ்வாமி, நேற்று நள்ளிரவு இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சில நபர்கள் தன் மீது தாக்குதல் நடத்தியதாக மும்பை போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அவர் வெளியிட்டிருந்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த காணொளியில் இரண்டு மர்ம நபர்கள் தன்னைத் தாக்க எப்படி முற்பட்டனர் என்பது குறித்து விளக்கி இருந்தார். மேலும், தன்னைத் தாக்கிய இருவரும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் என்றும், தனக்கு பாடம் கற்பிக்க வேண்டி காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களால் அந்த இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் காங்கிரஸ் கட்சி மீது அர்னாப் குற்றஞ்சாட்டியிருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை குறிப்பிட்டு பேசிய அர்னாப், தான் கேட்ட கேள்விகள் குறித்து பதிலளிக்க தைரியமில்லாதவர் என்று அந்த காணொளியில் கடுமையாக சாடி இருந்தார்.
தனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு முழு காரணம் சோனியா காந்தி மற்றும் வாத்ரா குடும்பமும்தான் என்றும், தன்னுடைய கேள்விகள் இன்னும் கடுமையாக இருக்கும் என்றும் அந்த காணொளியில் சோனியா காந்திக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் அர்னாப்.

வடகொரியா அதிபர் உடல்நிலை பாதிப்பு, கரோனாவால் பதற்றம்: உணவு பொருட்கள் தட்டுப்பாடு


www.hindutamil.in : வடகொரியா தலைநகர் பியாங் யாங்கில் அத்தியாவசியப் பொருட் கள் வாங்க பொதுமக்கள் அலை மோதுகின்றனர்.
உலகம் முழுவதும் கரோனா< வைரஸ் பரவியது. அதனால் முழு ஊரடங்கை பல நாடுகள் அமல்படுத்தி உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியானவுடன் பல நாடுகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மால்களிலும், மார்க்கெட்டுகளிலும் மக்கள் குவிந்தனர். ஆனாலும் வட கொரியாவில் என்ன நடக்கிறது என்பது குறித்து செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவ ருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மே மாத மத்தியில் கொரோனா உச்சத்தைத் தொடுமா?

மே மாத மத்தியில் கொரோனா உச்சத்தைத் தொடுமா?மின்னம்பலம் : மே மாத மத்தியில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தைத் தொடும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்றுக்கு உலகம் முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று புதிதாக 1,409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. ஆக, கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21,700 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 686 ஆக உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,176 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி : நியூயார்க், உலக நாடுகளில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் நேற்று 1,738 பேர் பலியாகி இருந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 46 அயிரத்து 583 ஆக உயர்ந்தது. இதேபோன்று 8 லட்சத்து 34 ஆயிரத்து 858 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.  இது ஸ்பெயின் நாட்டை விட 4 மடங்கு  அதிகம்.  ஸ்பெயினில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 389 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை கொண்டுள்ளது.  இந்த நாடுகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலி எண்ணிக்கையை கொண்டுள்ளன.
இதேபோன்று உலக அளவில் 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.  1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர்.

ஈழத்தமிழ் திரைப்பட முன்னோடி, தயாரிப்பாளர் திரு ஏ.ரகுநாதன் காலமானார் .. கொரோனா தொற்று..

இலங்கையின் ஆரம்ப கால தமிழ் திரைப்பட முன்னோடிகளில் ஒருவரான
திரு ஏ.ரகுநாதன் பாரிஸ் மருத்துவ மனையில் காலமானார்.
இவர் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாகவே காலமானார் என்று தெரிகிறது.
அமரர் ஏ.ரகுநாதன் அவர்கள் ஈழத்தமிழ் திரையுலகில் மிகபெரும் சாதனையை நிகழ்த்தியவர் ..
அவரது நிர்மலா திரைப்படம் பார்த்திருக்கிறேன். அந்த காலத்தின் சூழ்நிலை அவருக்கு கிடைத்த வாய்ப்பு போன்ற காரணிகளை தற்போது எண்ணிப்பார்க்கையில் உண்மையில் ஒரு பிரமிக்க தக்க சாதனையாகதான் தெரிகிறது.
வசூல் ரீதியில் பெரிய வெற்றியை பெறாத போதும் அவர் அடுத்த படமான தெய்வம் தந்த வீடு என்ற படத்தையும் தயாரித்து இருந்தார்.
அவர் காலத்தை முந்திக்கொண்டு கனவு கண்ட ஒரு முற்போக்கு இளம் கலைஞராகும். அவரது நிர்மலா திரைப்படத்துக்கு போட்டியாக  ஈழத்தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் "அரச கட்டளை" "பணமா பாசமா" "நான்" போன்ற பிரமாண்ட வெற்றி படங்களை திரையிட்டனர்.

மதுரை மீனாட்சி கோயில் அர்ச்சகரின் தாய் கொரோனாவால் உயிரழப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டர்கள் 150 பேர் வழிகளுக்கும் மற்றும் 250 இதர பணியாளர்களுக்கும் பரிசோதனை நடைபெற்று வருகிறது

/tamil.news18.com : சமீபத்தில் வெளிநாடு சென்று வந்த மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் குடும்ப நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பரிசோதனை வளையத்தில் மீனாட்சி அம்மன் கோவில் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஊரடங்கு அறிவித்த நாளிலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சாத்தப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் ஆகமவிதிப்படி தினமும் ஆறு கால பூஜை நடைபெற்று வருகிறது. இதற்காக கோவில் பட்டர்கள் கோவிலுக்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர். கோவில் பட்டர்கள், கோவில் பணியாளர்கள், கோவில் காவல் நிலைய போலீசார் மட்டுமே அங்கு பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் குடும்பத்தாருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர் வீட்டிலேயே இருந்து வரும் நிலையில் அவருக்கு கொரானா  எப்படி பரவியது என்று விசாரித்ததில் சம்பந்தப்பட்ட கோவில் பட்டர் சமீபத்தில் வெளி நாடு சென்று வந்துள்ளார்.

ஜனாதிபதி செய்யாவிட்டாலும் தற்போது பாராளுமன்றத்தை கூட்டலாம்..! சுமந்திரன் அதிரடி!

லங்கா ஈ நியூஸ் : திகதி அறிவிப்பின்றி ஒத்திவைக்கப்பட்ட பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது. அரசியல் யாப்பின்படி தற்போதுள்ள நிலைமை குறித்த உங்கள் கருத்து என்ன?
சுமந்திரன் - "தற்போது இவ்விடயத்தில் நாம் தௌிவாக உள்ளோம். ஜூன் 2ம் திகதிக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படாது. அரசியல் யாப்பின் 70வது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் 2ம் திகதி வௌியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடி அற்றது. காரணம் அரசியல் யாப்பில் நான்கு வருடங்களும் ஆறு மாதங்களும் கழிந்த பின்னர் பாராளுமன்றை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் சரத்தில் மற்றுமொரு விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதுதான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் மீண்டும் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பதாகும். ஜனாதிபதி மார்ச் 2ம் திகதி பாராளுமன்றை கலைத்தார். எனவே ஜூன் 22ம் திகதிக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் மாத்திரமே ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியாகும்."
தேர்தல் தினத்தை ஒத்திவைக்க வாய்ப்பு இல்லையா?
சுமந்திரன் - பாராளுமன்றத்தை கலைக்கவும் ஒத்திவைக்கவும் அரசியல் யாப்பின் 70 (5) சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் மூன்று மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றம் கூட வேண்டும் என அதில் தௌிவாக கூறப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் படி தேர்தலை பிற்போடுவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளது.

சாமியை விட உண்டியல் பெரிதா? நடிகை ஜோதிகா மீது ஏனிந்த வன்மம்?

ஆலஞ்சியார் : ஜோதிகா.. கோயில் உண்டியலில் போடுவதை விட ன்பதே கடவுளுக்கான வருவாய் என்பதைவிட கடவுளின் பணியாளர்களின் வளர்ச்சிக்குதான் பயன்படுகிறது .. உண்டியலில் பணம் என்பது கூட ஒருவகை லஞ்சம்தான் குணமானால் இதை தருகிறேன் என்பது கூட கடவுளின் மகிமையை குறைத்து எடைபோடுதல் தான் ..
இந்திய ஒன்றியத்தின் பிரதமர் இப்போதைய தேவை கோயில்கள் அல்ல கழிப்பறைதான் என்ற போது யாரும் அதை விமர்சனம் செய்யவில்லை அவரின் கருத்தில் எல்லோரும் உடன்பட்டோம் அரசியல் ரீதியாக சித்தாந்த ரீதியாக மாற்றுகருத்தை கொண்டிருந்தவர்கள் கூட பிரதமரின் கழிப்பறை தான் முக்கியம் என்ற நிலையை ஆதரித்தார்கள் .. ஆனால் ஜோதிகா சொன்னவுடன் மதம் வருகிறது யார் இவர் இதைசொல்ல என்ற அகங்காரம் வருகிறது ..
உண்மையில் ஜோதிகாவை நாம் பாராட்டவேண்டும் இதை சொல்ல துணிவு வேண்டும் புகழுச்சியில் இருக்கும் தாரங்கள்
வாய்மூடி மௌனம் காக்கும் போது தெளிவான தேவையான கருத்தை தேவைபடும் நேரத்தில் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் .. கல்வியின் அருமை உணர்ந்த குடும்ப பின்னணியில் இருந்து பேசுகிறார் அவர் அங்கம் வகிக்கும் "அகரம்" அறக்கட்டளை சாதிமதம் பார்க்காமல் ஏழை மாணவர்களின் உயர்க்கல்விக்கு உதவுகிறது

வியாழன், 23 ஏப்ரல், 2020

இஸ்லாமியர்கள் தமிழ் அடையாளங்களை தவிர்த்து அரபிகளை இமிடேட் செய்வது .. .. ஒரு அலசல்

Dr. Fazil Freeman Ali, PhD  : என் அன்பிற்குரிய‌ முஸ்லிம் ச‌முதாய‌த்துக்கு ஒரு ம‌ன‌ம் திற‌ந்த‌ மட‌ல்.
நீண்ட‌ நாட்க‌ளாக‌ நான் சொல்ல‌ நினைத்தை, சொல்ல‌ வேண்டுமா என்று ப‌ல‌முறை யோசித்த‌தை, இன்று உங்க‌ளோடு ப‌கிர்கிறேன்‌, கால‌த்தின் தேவை க‌ருதி. நீண்ட‌ ப‌திவுதான், சில‌ நிமிட‌ங்க‌ள் என‌க்காக‌ ஒதுக்க‌ நேர‌மிருந்தால், அவ‌சிய‌ம் ப‌டியுங்க‌ள்.
ஓரிறை, ஓர் ம‌றை, ஒரு ந‌பி என்ற‌ க‌ட்டுப்பாடான‌ "தீன்" வ‌ழியில் ந‌ட‌க்கும் ஒரு மார்க்க‌ம் இந்த‌ ச‌முதாய‌த்தில் எத்துணை உய‌ர‌த்தில் கொலுவீற்றிருக்க‌ வேண்டும்..? உண்மையில் அப்ப‌டி இருக்கிற‌தா உங்க‌ள் நிலை..?
இன்றைய‌ இந்த‌ இழி நிலை உங்க‌ள் ச‌முதாய‌த்துக்கு ஏன், எப்ப‌டி நேர்ந்த‌து என்று கொஞ்ச‌மேனும் நீங்க‌ள் சிந்திக்க‌ வேண்டாமா..?
அன்பிலும், அறிவிலும், க‌ருணையிலும், ச‌மூக‌ அந்த‌ஸ்திலும் உச்ச‌த்தில் இருந்த‌ உங்க‌ள் ச‌முதாய‌ம் "வாங்க‌ பாய்" என்று ம‌ரியாதையோடு அழைக்கப்பட்டு , கெள‌ர‌வ‌மாக‌ மாற்று ம‌த‌த்தாராலும் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட உங்க‌ள் ச‌முதாய‌ம்...
இன்று சர்வ‌ சாத‌ர‌ண‌மாய் "துலுக்க‌ ப‌ய‌லுக‌ள்" என்று சில‌ அர‌சிய‌ல் மேடைக‌ளிலேயே பேச‌ப்ப‌டும் நிலைமை வ‌ர‌ கார‌ண‌ம் என்ன‌..?
நான் சொல்வ‌தை கொஞ்ச‌ம் கோபப்ப‌டாம‌ல் சிந்தித்துப்பாருங்க‌ள். த‌மிழ் முஸ்லிம் என்ற‌ ஒற்றை அடையாள‌த்தோடு உலா வ‌ந்த‌ கால‌ம் வ‌ரை உங்க‌ள் வாழ்விய‌ல் அழ‌கான‌தாக‌வே இருந்த‌து. ஆனால் இன்றோ, எத்த‌னை கூறுக‌ளாக‌ பிரிந்து சித‌றுண்டு கிட‌க்கிறீர்க‌ள் நீங்க‌ள்..?
மாம‌ன் ம‌ச்சான் என்று கால‌ம் கால‌மாய் உங்க‌ளோடு உற‌வு பாராட்டி வாழ்ந்திருந்த இந்து ச‌முதாய‌ம், இன்று கொஞ்ச‌ம் அச்ச‌த்தோடும், கொஞ்ச‌ம் வெறுப்போடும் உங்க‌ளை பார்க்கும் நிலைமை வ‌ர‌ கார‌ண‌ம் என்ன‌..?

13 வயது சிறுமியை இருவர் பலாத்காரம் நால்வர் வீடியோ எடுத்தனர் .. சீதாப்பூர் ..உபி U P: 13-year-old girl gang-raped, filmed in Sitapur

Hemavandhana - tamil.oneindia.com : லக்னோ: 13 வயது சிறுமியை 2 பேர் சீரழிக்க.. அதை 4 பேர் வீடியோ எடுத்துள்ளனர்... விடுமா போலீஸ்.. சம்பந்தப்பட்ட 6 பேரில் 5 பேரை கைது செய்து தூக்கி உள்ளே வைத்துள்ளது... இந்த அக்கிரம சம்பவம் உபியில் நடந்துள்ளது. வன்முறை தாண்டவமாடும் மாநிலங்களில் முதன்மையாக திகழ்ந்து வருவது உத்திர பிரதேசம்தான்.. நாளுக்கு நாள் கொலைகளும், பாலியல் அக்கிரமங்களும் ஒரு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.. ஏராளமான பெண்கள் பலாத்காரம் செய்வது என்பது போய், அவர்களை கொளுத்தி தீ வைப்பது என்ற பயங்கரமும் அங்கு நடந்து வருகிறது. தற்போது ஊரடங்கு என்பதாலும், கொரோனா என்பதாலும் இதெல்லாம் இல்லாமல் இருக்கும் என்று நினைத்தால், மீண்டும் ஒரு கொடூரம் நடந்துள்ளது.சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை, 13 வயது சிறுமி வயலில் வேலைக்கு சென்றுள்ளார்.. மதியம் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும்போது 6 பேர் கொண்ட கும்பல் சிறுமியை சுற்றி வளைத்துள்ளனர்.

மீண்டும் பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியுமா?


மீண்டும் பழைய இயல்பு வாழ்க்கைக்கு  திரும்ப முடியுமா?மின்னம்பலம்: கொரோனா வைரஸ் பாதிப்பை குணப்படுத்தும் மருந்துகள், தற்போதுதான் விலங்குகளை தாண்டி மனிதர்களுக்கு சோதனை செய்யும் நிலையை எட்டியுள்ளது. இங்கிலாந்தில் இன்று, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இந்த வைரஸ் தொற்றுக்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி முதற்கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த செய்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஊரடங்கால் தவித்துக் கொண்டிருக்கும் பலகோடி மக்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது. மருந்து கண்டுபிடிப்பது வெற்றிகரமாக முடிந்தால் மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பலாம் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்இந்தியா டுடே செய்தி நிறுவனத்திடம் பேசிய முன்னணி வைராலஜி நிபுணர் டாக்டர் இயன் லிப்கின், வைரசுக்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பது தான் அதிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி ஆகும் என்று கூறியுள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் அறிஞர்கள் இந்த வருட இறுதி, அதாவது டிசம்பர் மாதத்திற்கு உள்ளாக கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்று நம்புகிறார்கள்.

அல்கய்தா , புலிகள் அமைப்புக்கள் போன்று ஆர் எஸ் எஸ் அமைப்பும் தடை செய்யப்படும் ..?

       Chozha Rajan : · ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அரபு நாடுகள் முடிவு கட்டுமா? ஆர்எஸ்எஸ்சை இந்துத்துவா டெர்ரரிஸ்ட் அமைப்பு என்றும் அதை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வளைகுடா நாடுகளில் வலுப்பெறத் தொடங்கியுள்ளது. ஆர்எஸ்எஸ்சின் மதவெறி அம்பலமாகி தடைவிதிக்கப்பட்டால், பின்லேடன் அமைப்புக்கும், பிரபாகரன் அமைப்புக்கும் விதிக்கப்பட்ட தடையைப் போல ஆர்எஸ்எஸ் முடக்கப்படும். அதோடு தொடர்பு வைத்திருக்கும் அமைப்புகளான பாஜக உள்ளிட்ட அமைப்புகளுக்கும் ஆபத்துதான்

“thamizhidhayam.com : ஒத்த சைக்கிளை கொண்டு வந்து மொத்த ஊரையும் சரிச்சுப்புட்டியேடானு” ஒரு படத்துல வசனம் வரும்.
இங்கே என்னடான்னா ஒரே ஒரு ட்வீட்டை போட்டுட்டு, ஒட்டு மொத்த சங்கிகளின் கூடாரத்துக்கும் ஒருத்தன் வேட்டு வச்சிருக்கான்.
பாவம் இஸ்லாமிய நாடுகளின் கொந்தளிப்பில் ஆர்எஸ்எஸ்சும், மோடி சர்க்காரும் ஆட்டம் கண்டிருக்கிறார்கள்.

இங்கிலாந்தில் கொரோனா உயிரிழப்பு 72 சதவீதம் ஆபிரிக்க ஆசிய சிறுபான்மையினர்!


தினத்தந்தி :இங்கிலாந்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில், கொரோனா வைரஸ் இறப்பு நிகழ்ந்த மருத்துவமனையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், 19 சதவீதம் பேர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த கணக்கு மொத்த மக்கள் தொகையை கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது.
 இங்கிலாந்து தேசிய சுகாதார இயக்குநர், ஹபீப் நக்வி கூறுகையில், இதுபோன்று கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் அதிகம்பேர் உயிரிழந்தது கவலையை அளித்துள்ளது. இது மிகவும், கடினமான சூழல். ஆனால் இதை எதிர் கொள்ள நாம் தயாராக வேண்டும். இதற்கான உண்மையான காரணம் கண்டறிப்படும்’ என தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ தகவல்படி இங்கிலாந்தில் மொத்த மருத்துவ பணியாளர்களில், 44 சதவீதம் பேர் கருப்பின மற்றும் ஆசிய சிறுபான்மையினர்களே உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

WHO அமைப்புக்கு அமெரிக்கா உதவி நிறுத்தியது . சீனா மேலதிகமாக வழங்க முடிவு உலக சுகாதார அமைப்புக்கு

Hua Chunying 华春莹 ✔ @SpokespersonCHN China has decided to donate additional $30 million in cash to WHO to support its global fight against #COVID19, in particular strengthening developing countries' health systems. China already donated $20 million in cash to WHO on March 11.
latest tamil newslatest tamil newslatest tamil newsதினமலர் : பிஜிங்: அமெரிக்காவில் கொரோனா புயல் மையம் கொண்டுள்ளது. அதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முதலில் சீனாவைக் குற்றம்சாட்டினார். பின், உலக சுகாதார அமைப்பை குறை சொன்னார். மற்றவர்கள் மீது பழிபோடுவதில் ஒருபடி மேலே சென்று, தற்போதைய பிரச்னைக்கு, முந்தய அதிபர் ஒபாமா அரசு தான் காரணம் என்றும் சொல்லி வருகிறார்.
 இந்நிலையில், கடந்த 13ம் தேதி, 'உலக சுகாதார அமைப்பில், 196 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால், அந்த அமைப்பின் ஒட்டுமொத்த நிதியில், 15 சதவிகிதம் வழங்குவது அமெரிக்காதான். ஆனால் அந்த அமைப்பு சீனாவிற்கு சாதகமாகச் செயல்படுகிறது. அமெரிக்க இனி அந்த அமைப்பிற்கு நிதி வழங்காது' என்றார்.

அமெரிக்காவில் புதிய குடியேற்றம், கிரீன் கார்டு வழங்குவது 60 நாட்களுக்கு நிறுத்தம்: அதிபர் ட்ரம்ப் கையொப்பமிட்டார்-

trump-signs-executive-order-temporarily-suspending-immigration-into-ushindutamil.in :அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் : அமெரிக்காவில் அமெரிக்கக மக்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கும் வகையில் புதிய குடியேற்றம், கிரீன் கார்டு வழங்குதல் ஆகியவற்றை தற்காலிகமாக 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையொப்பமிட்டார்
இந்த உத்தரவின் மூலம் அமெரிக்காவில் சட்டபூர்வமாக அமெரிக்காவில் ேவலைவாய்ப்புக்காக நுழைவதற்காக அனுமதி கோருபவர்களை கடுமையாகப் பாதிக்கும். அதேசமயம் அங்கு ஏற்கெனவே வசித்துவரும் வெளிநாட்டவர்களை பாதிக்காது
காவில் கரோனா வைரஸ் மோசமான உயிரிழப்புகளையும், மக்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 8.48 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர், 47ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள 50க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன.

திராவிடம் 425 BCE இல் கிரேக்க வரலாற்று ஆசிரியர் Herodotus குறிப்பு

425 BCE இல்   Herodotus  என்னும் வரலாற்று ஆசிரியர் திராவிடம் என்றே குறிப்பிடுகிறார். அறியப்படாத  தமிழ் மொழி. வரிகளை காணுங்கள் :
Dravidians   (111 , 100 )  having a complesion closely resembling the Arthiopiyans and as being situated very far from Persian's  toward  the south and never subjected to Emperor Darius.
உலகம், தமிழுக்கு வழங்கிய இதே திசை சொல்லைச் சம்ஸ்கிருத மொழியிலும் பயன்படுத்தி கொண்டார்கள் அவ்வளவே!
சொல்லபோனால் இந்த உலக சொல்லை வைத்து நம்மை இழிவு செய்தும் உள்ளார்கள்.
தென் மொழியான தமிழை / திராவிடத்தை * காண்க, மகாபாரதம் - அனுசாசன பர்வம்.
மேகலா, திரமிட... தாஸ்  தா ஷத்திரிய ஜாதய
விருஷலத்வம் அனுபிராப்தா, பிராமணனாம்  அதர்சனாத்
ந பிராமண விரோதேந . சக்கியா சாஸ்தும் வசுந்தரா

***************************
**************
***************************
திரவிட ( திராவிட) நாட்டு அரசர்கள், ஷத்திரிய அந்தஸ்து குறைந்து  போய் சூத்திரர்கள் ஆகிவிட்டார்கள் . .. பிராமணர்களை பகைத்து கொண்டதால்.
உயர்ந்த அப் பிராமனர்களை பகைத்து கொண்டு எவனாலும் நாடாள முடியாது.
அது சாசன பாவம்.
இதுவே நீங்கள் அறிந்திராத மகாபாரதத்தின் இன்னொரு முகம்

( அறிக .. திராவிடம் = சம்ஸ்கிருத சொல் அல்லவே அல்ல.. தமிழ் திசை சொல். கிரேக்கம் உரோமானியம் எகிப்து என பல இனங்களும் தமிழை குறிந்த சொல்லாகும்.)
ஆழ்வார்களில் முதல்வர் நம்மாழ்வார் ( காலத்தால் அல்ல கருத்தால் : நாலாம் வர்ணத்தை சேர்ந்த சூத்திர இளைஞன்  32   வயதிலே இயற்கை எய்தினார்.
அவர் எழுதிய திருவாய் மொழி :=  திராவிட வேதம் என்னும் தமிழ் மொழி

1972 கலைஞர் கண்ணொளி வழங்கும் திட்டம் .. மருத்துவர் எழிலன் நாகநாதன்


கண்ணொளி திட்டம் ..வல்லரசு ஆகவேண்டுமா? நல்லரசு ஆகவேண்டுமா?
தமிழ்நாடு என்ற மாநிலம் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் வருவாயில் கிட்டத்தட்ட நாற்பது நான்கு சதவீதம் முதலீடு செய்கிறது
இதே மத்திய அரசு எவ்வளவு செய்கிறது தெரியுமா?
கல்விக்கு மூன்று சதவீதம் .. சுகாதாரத்துக்கு ஒரு சதவீதம்..
திராவிட இயக்க கொள்கை என்ன என்றால் கல்வியும் சுகாதாரமும் எல்லா ஏழைகளுக்கும் சென்று சேரவேண்டும் என்பதுதான்.
அப்போதுதான் ஏற்ற தாழ்வு அற்ற நிலையில் சமுகம் இருக்கும்
இந்த நிலையில்தான் கலைஞரின் கண்ணொளி வழங்கும் திட்டத்தை பற்றி பேச இருக்கிறேன்.
1972   ஆண்டு கலைஞர் கண்ணொளி வழங்கும் திட்ட வரைவை முன் வைக்கிறார்.. Blue print ஐ ரிலீஸ் பண்றார்.
அப்போது தமிழ்நாட்டில் எக்கச்சக்கமான மக்களுக்கு மாலை கண் நோய் .விட்டமின் ஏ குறைபாட்டால் அது வருவது.
ஐம்பது வயசு தாண்டிய நெறைய பேருக்கு கண்ணில புரை Cataract ஆல் பாதிக்க பட்டிருக்காங்க.

பிலிப்பைன்ஸ் வரை புட்டு, தாய்லாந்து வரை அப்பம்.. Farm to Table

Farm to Table :   பிளிப்பீன்ஸ் வரை புட்டு, தாய்லாந்து வரை அப்பம்.
"இடியப்பம் (ஒடியப்பம் or string HOPPAH) என்று எப்படி பெயர் வந்தது" என்பதை ரூம் போட்டு ஜோசித்தவர்கள் பலர் உண்டு. சில நாட்களாக இடியப்பம் , புட்டு, இட்லி (இட்டலி) பற்றிய விவாதங்கள் நடந்தன. இந்த பதிவு வழக்கம் போல ஆய்வுகள் செய்தும் சொந்த அனுபவங்களை வைத்தும் எழுதப்படுகிறது. இது வெறும் விக்கிப்பீடியாவின் தமிழாக்கம் அல்ல. விக்கிப்பீடியாவே திருத்திக்கொள்ள வேண்டிய ஒரு பதிவு.
முதலில் தென் கிழக்காசியா நாடுகளில் அப்பம், புட்டு மற்றும் இடியப்பம் போன்ற உணவுகள் எப்படி அழைக்கப் படுகின்றது என்பதைப் பார்ப்போம்.
புட்டு (puttu)
இந்தோனேசியாவில் putu bampu (bambu = bamboo or மூங்கில்) என்று அழைக்கப்படுகிறது. அதே வார்த்தை பிளிப்பீன்சில் puto bumbong என்று அழைக்கப்படுகிறது. ஆனால் நம்மைப்போல் அல்லாமல் இங்கு புட்டு என்பது ஒரு இனிப்புப் பண்டம். தேங்காய்ப்பூ, தேங்காய்ப்பால் மற்றும் சக்கரை போட்டு சாப்பிடுவார்கள். பிளிப்பீன்சில் மரவள்ளிக் கிழங்கு மாவு அல்லது இராசவள்ளிக் கிழங்கு மாவை அரிசி மாவுடன் கலந்து பயன்படுத்துவர்.
பிலிப்பீன்ஸ் உட்பட இந்தோனேசிய, மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் புட்டு என்னும் பெயரில் ஆவியில் அவிக்கப்படும் மேலும் பல உணவுகள் உள்ளன .

புதன், 22 ஏப்ரல், 2020

ஜோதிகா : கோயில்களுக்கு ஏன் செலவு செய்றீங்க? ஜோதிகா பேசிய வீடியோ


Bahanya - tamil.filmibeat.com : - சென்னை: விருது விழாவில் கோயில்களுக்கு ஏன் செலவு செய்கிறீர்கள் என பேசிய நடிகை ஜோதிகாவுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
To UNMUTE “தஞ்சை பெரிய கோவில் எதற்கு? - ஜோதிகாவின் சர்ச்சை பேச்சு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விருது விழா ஒன்றில் பங்கேற்றார் நடிகை ஜோதிகா. அந்த விருது நிகழ்ச்சி அண்மையில் டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. ஒரு முறை ஷுட்டிங்குக்காக சென்றபோது அழகாக இருக்கும், கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.
 உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி உள்ளது. அப்போது எனக்கு ஷுட்டிங் அங்குள்ள ஹாஸ்பிட்டலில் இருந்தது. ஹாஸ்பிட்டலுக்கு சென்றபோது அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்ததை பார்த்தேன். நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. பள்ளிகள் முக்கியம் பள்ளிகள் முக்கியம் கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். இதை நான் ராட்சசி படத்திலும் சொல்லியிருக்கிறேன். இயக்குநர் கௌதம் ராஜுஙம சொல்லியிருக்கிறார்.

மத்திய அரசின் நிதி உதவி முழு தென்னிந்தியாவை விட உத்தர பிரதேசத்துக்கு நிதி அதிகம்!

உத்தர பிரதேசம் - 8,255.19 கோடி ரூபாய். 
பீகாருக்கு 4,631.96 கோடியும்,
மத்திய பிரதேசத்துக்கு 3,630.6 கோடி ரூபாயும்
மே .மேற்கு வங்கத்திற்கு 3,461.65 கோடி ரூபாய்
தமிழகத்துக்கு வெறும்1928.56 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. .
மின்னம்பலம் :மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நிதியில் உத்தர பிரதேசத்தை விட தென்னிந்திய மாநிலங்களுக்கான நிதி மிகவும் குறைவாக உள்ளது.
கொரோனாவால் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை கட்டுப்படுத்த நிதி அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில் 15ஆவது நிதிக் குழு பரிந்துரையின் பேரில் மாநிலங்களுக்கான ஏப்ரல் மாத நிதிப் பங்கீடு 46,038.10 கோடி ரூபாயை மத்திய நிதித் துறை அமைச்சகம் விடுவித்தது. என்.கே.சிங் தலைமையிலான நிதி ஆணையம் வரி வருவாயில் 41 சதவிகிதத்தை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கும், 1 சதவிகிதத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கும் அளிக்க பரிந்துரை செய்ததன் அடிப்படையில் இந்த நிதி விடுவிக்கப்பட்டது.

தரமற்ற ரேபிட் டெஸ்ட் கிட்கள்? - சீனாவின் 2 நிறுவன தயாரிப்புகள் குறித்து ஐசிஎம்ஆர் விசாரணை

hindutamil.in  : கரோனாவைக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட்கள் தொடர்பாக புகார்கள் வந்துள்ள நிலையில் சீனாவை சேர்ந்த 2 நிறுவனங்களின் தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.
கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிசிஆர் எனப்படும் கிட் மூலம் பரிசோதனை முடிவுகள் வர நாள் கணக்கில் ஆகிறது. அதனால், அறிகுறி தெரியாத வீடுகளில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் இந்த நோய் சமூகப்பரவல் நிலையை அடையாமல் இருக்க ரேபிட் டெஸ்ட் கிட் எனப்படும் விரைவு சோதனை கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது இதில் பரிசோதனை முடிவுகள் 15 நிமிடத்திற்குள்ளாகவே முடிவுகள் கிடைக்கும். ஒரு நாளைக்கு அதிகமானோரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்யலாம். ஆனால், இது மட்டுமே இறுதியான கரோனா பரிசோதனை முடிவு இல்லை.
ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மீண்டும் பிசிஆர் எனப்படும் கிட் மூலம் பரிசோதனை செய்யப்படும். சீனாவில் இருந்து விரைவான கரோனா பரிசோதனைக்காக வந்த ரேபிட் டெஸ்ட் கருவிகள் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கரோனா இல்லாத ஈரோடு... வெற்றியின் விளிம்பில் சாதனை!!

Erode without corona ... Achievement on the verge of successErode without corona ... Achievement on the verge of successஜீவாதங்கவேல் - நக்கீரன் : உலகின் கொடிய நோயான கரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவிய நிலையில், மார்ச் மூன்றாம் வார தொடக்கத்தில் இந்திய அரசு அறிவிப்பு ஒன்றை கொடுத்தது. அது, நாடு முழுக்க 72 மாவட்டங்கள் கரோனா வைரஸ் தொற்று வீரியமாக கால் பதித்து விட்டது என்பதுதான். இந்த 72 மாவட்டங்களும் உடனே துண்டிக்கப்பட்டு தனிமைபடுத்தப்படுவதாக அறித்தது. அந்த 72ல் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம் அடுத்து ஈரோடு என்று கூறப்பட்டது. ஈரோட்டில் தொடர்ந்து வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி ஒரு கட்டத்தில் மொத்தம் 70 பேர் என்று உட்ச கணக்கில் இருந்தது. இதனால் ஈரோடு மாவட்ட மக்கள் மத்தியில் அளவுக்கு மீறிய அச்சமும் உயிர் பயமும் இந்தது. இது ஒருபுறம் இருக்க, இந்த வைரஸ் தொற்று ஈரோட்டில் ஊடுருவிய வழியை மாவட்ட நிர்வாகம், காவல்துறை, சுகாதார துறை என இந்த மூன்று துறைகளும் துல்லிய ஆய்வு நடத்தி, வைரஸ் தொற்று வந்த அந்த வழியை கண்டுபிடித்து தீவிர நடவடிக்கையில் இறங்கியது. ஈரோட்டுக்கு வைரஸ் தொற்று வந்த வழி என்பது ஏற்கனவே நமது நக்கீரன் இதழிலும், இணையத்திலும் வெளிப்படுத்திய தகவல்தான்.

அருந்ததியர் சமூகத்தில் அத்தியாய் பூத்த மருத்துவர் இலக்கியா

 இலக்கியாவின் தந்தை கூறுகையில்... மாட்டுத்தரகர் வேலை பார்த்ததுல நஷ்டப்பட்டு தற்கொலை பண்ணிக்கிற அளவுக்குப் போயிட்டேன். அப்புறம்தான் ஆதித்தமிழர் பேரவை #அதியமான் அய்யா பண்ணுன #உதவியால, இந்த பழைய இரும்பு, பிளாஸ் டிக் வியாபாரம் பார்த்து பொழைக்க ஆரம்பிச்சேன்....
நக்கீரன் வார இதழ் 07.04.2015 : அருந்ததியர் சமூகத்தில் பிறந்ததால் செருப்பு தைக்கும் தொழிலைத்தான் சின்னப்பெத்தனால் செய்ய முடிந்தது. வீதியில் நடக்கும்போது காலில் அணியும் செருப்பை கையில் தூக்கிச் செல்வார்; தோளில் போட வேண்டிய துண்டை இடுப்பில் கட்டுவார். டீ கடையில் தனி டம்ளரெல்லாம் கிடையாது. சிரட்டையில்தான் டீ ஊற்றுவார்கள். அங்கே பிற ஜாதியினர் முன் கூனிக் குறுகி நிற்பார். கடைக்காரர் நீட்டும் சிரட்டையை பணிந்து வாங்கி, தலையைக் கவிழ்ந்தபடி டீயை உறிஞ்சி குடிப்பார்.
சின்னப்பெத்தனின் மகன் சுந்தரம் அடுத்த தலைமுறை ஆயிற்றே. செருப்பு தைத்ததில்லை. பட்டி, தொட்டியெல்லாம் சைக்கிளில் சென்று பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கவும் விற்கவும் செய்கிறார். அப்போது சம்சாரி வீட்டு பெண்கள் பழைய பொருட்களை விற்கும்போது “"ஏம்பா நீ குடியானவனா?'’என்று கேட்பார்கள். சுந்தரமோ "என்னம்மா நீங்க? பழைய பொருளை விக்கிறதுக்கு ஜாதியெல்லாம் கேட்கிறீங்க? நான் அருந்ததியர்ம்மா'’என்பார். அவ்வளவுதான்... முகத்தைச் சுளித்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றுவிடுவார்கள் அந்தப் பெண்கள்.

ஊரடங்கு நேரத்தில் உயர்மின் கோபுரத்திற்கு அனுமதியா?

ஊரடங்கு நேரத்தில் உயர்மின் கோபுரத்திற்கு அனுமதியா?மின்னம்பலம் : ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி உயர்மின் கோபுரம் அமைக்க அனுமதியளிக்கப்பட்டதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைத்து, உயர் மின் அழுத்த மின்சாரம் கொண்டு செல்வதற்கு விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம் தொடர்ந்தபோது, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் மக்களைத் திரட்டி பல கட்டங்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜனவரி 21, 2020 அன்று பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.

அம்மா உணவகங்களில் அனைவருக்கும் இலவச உணவு வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ... வீடியோ


தினத்தந்தி : அம்மா உணவகங்கள் வரும் அனைவருக்கும் இலவச உணவு வழங்க வேண்டும்” என்று தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தொடர் ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் இழந்து நிற்கும் ஏழை-எளிய மக்களும், அமைப்புசாரா தொழிலாளர்களும் தங்களின் ஒருவேளை உணவிற்குக்கூட நாள்தோறும் போராடி, அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை ஆங்காங்கே அளித்து வந்தாலும், வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு மேலும் தேவையான நிவாரணத்தை வழங்கிட வேண்டிய மிக முக்கியமான கடமையும், பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகங்களை ஆளுங்கட்சியினருக்கு மட்டும் குத்தகைக்கு விட்டதை போல் தாரைவார்ப்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல.

ட்ரம்பின் குடியேற்ற விசா அறிவிப்பால் 43,850 கோடி இழந்த இந்திய ஐ டி கம்பனிகள

ட்ரம்ப் ட்விட்ஐடி கம்பெனிகளுக்கு அடிஇந்தியர்கள்விசா கெடுபிடி.outbrain.com : ஒபாமா இருந்த வரை கூடுமான வரை இந்தியா உடனான நட்பை நல்ல முறையிலேயே கொண்டு சென்றது அமெரிக்கா.
ஆனால் ட்ரம்ப் பதவிக்கு வந்ததில் இருந்தே, இந்தியாவை பல கோணங்களில் சீண்டிக் கொண்டு இருக்கிறது அமெரிக்கா.
H-1B விசா தொடங்கி சமீபத்தில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (hydrochloroquine) மருந்துகளை வாங்கியது வரை எல்லாமே இதற்கு சாட்சி./
ஏற்கனவே அமெரிக்கா வழங்கும் H-1B விசாக்களில் கணிசமான விசாக்களை இந்தியர்கள் (இந்திய ஐடி கம்பெனிகள் வழியாக) தான் வாங்கிக் கொண்டு வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக ஐடி கம்பெனிகளில், இந்தியர்கள் இந்த H-1B விசாவை வைத்துக் கொண்டு தான் அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
விசா எண்ணிக்கைகளில் கை வைப்பதாகச் சொல்வது, இந்தியர்களுக்கான விசா காலம் நீட்டிப்புகளில் கெடுபிடி செய்வது, விசா வழங்கும் முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவது என அமெரிக்க அரசு தொடர்ந்து இந்தியாவுக்கு பல கொடைச்சல்களைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இன்று இந்த குடைச்சல் வேறு ஒரு பரிமாணத்தை எடுத்து இருக்கிறது.

ஊரடங்கை தளர்த்த காவல்துறைக்கு ரகசிய ஆணை வந்திருக்கிறதா? ராமதாஸ்

சிவசங்கரன் சுந்தரராசன் :
1) மகாராஷ்டிரா 4,245
2) டெல்லி 1,498
3) குஜராத் 1,949
4) ராஜஸ்தான் 1,404
5)மத்தியப் பிரதேசம் 1,324
6)உத்தரபிரதேசம் 1,179
7) தமிழ்நாடு 943
என தமிழகம் ஆக்டிவ் 7வது நிலையில் ஆக்டிவ் வைரஸ் நிலைகள் உள்ளது. இது விரைவில் மேலும் குறையவே வாய்ப்புகள் மிகவும் அதிகம். இவைகளுக்கு காரணம் தமிழகத்தில் சிறந்த கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனைகள் தான் ஆகும்.

இவ்வாறு தமிழகம் திராவிடத்தால் வீழ்ந்தோம்  உறவுகளே
நக்கீரன் : சென்னையில் ஊரடங்கை மீறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு இரு சக்கர வாகனங்களும், மகிழுந்துகளும் விரைகின்றன.

மருத்துவரின் உடலை தகனம் செய்வதில் கிறிஸ்தவ மத குழு சண்டையா?

டாக்டர் உடம்பு கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ கல்லறைக்கே எடுத்துட்டு போகலையாம். இடம் பற்றாக்குறையால அங்க யாரையும் புதைக்குறது இல்லயாம். அங்க இருந்து அற கிலோ மீட்டர் தள்ளி மாநகராட்சி இடுகாடு ஒன்னு இருக்காம்.அங்கதான் எடுத்துட்டு போனாங்களாம்,அங்க தான் சண்டையாம். இந்த கல்லறை ட்ரஸ்ட்டோட தலைவர் போட்டு இருக்காரு. மீடியா ஒழுங்கா கவர் பண்ண கூடாதா?

Shalin Maria Lawrence : நேற்று மருத்துவரின் உடல் அடக்கம் செய்ய மறுக்கப்பட்ட பிரச்சனை கிறிஸ்தவ மதத்திற்கும் இருக்கும் குழு சண்டை என்று சங்கீகள் காலையிலிருந்து வாட்ஸ் அப்பில் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
அதில் கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ கல்லறை எனவும் இறந்த மருத்துவர் கத்தோலிக்கர் என்பதால் அவரை அங்கு புதைக்க விடாமல் கோஷ்டி மோதல் ஏற்பட்டது என்று உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே மக்களுக்காக உழைத்த மருத்துவர்களுக்கு கண்ணியமான விதத்தில் இறுதிசடங்கு செய்யப்படவில்லை என்பது வருத்தத்தை கொடுக்கும் பொழுது இதை வைத்து மிக மிக மலிவான இழிவான அரசியலை முன்னெடுக்கும் சங்கிகளின் போக்கு அராஜகம் ஆனது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கீழ்ப்பாக்கம் கல்லறை கத்தோலிக்கர்கள் உடையது ஆனால் ஆதியிலிருந்தே அங்கே கத்தோலிக்கர்கள் அல்லாத சிஎஸ்ஐ கிறிஸ்தவர்களும் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
மிகமிக சமத்துவமான கல்லறை அது. அங்கே கிறிஸ்தவத்தில் பிரிவு மட்டுமல்ல ஜாதிப் பிரிவும் கிடையாது எல்லோரும் அடக்கம் செய்யப்படுவார்கள்.
என் உறவினர்களே பலர் அங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் RC தான்.

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

மத்திய கிழக்கு நாடுகளில் இந்துத்வாவுக்கு கிடைத்த அதிர்ச்சி வைத்தியம்


ஆலஞ்சியார் : திடீர் மாற்றம்.. என்ன திடீரென சங்கிகள் ியலையும் அது இந்திய முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள கொரூர பகையையும் தொடர்ந்து கவனித்து வந்ததன் வெளிபாடுதான் சமீபத்திய அரபு பிரபுகளின் கடுமையான கண்டனம் .. தொடர்ந்து உயர்பதவியில் இருப்பவர்கள் கூட மோடி இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும்
தங்களுக்கு வழங்கபட்ட அதிகாரமாக எண்ணி நகையாடியதும் கடைசியில்
ஒருவகை மிரட்டல் லெவலுக்கு வந்ததும் ஆட்சியாளர்களின் பார்வைக்கு கொண்டு செல்லபட்டது .. கீழ்நிலை தொழிலாளர்களிடையே மெல்லிய போக்கு நிலவியதும் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்ததும் உயர்பதவிகளில் கல்வியாளர்கள் தொழிலதிபர்கள் என முஸ்லிம் விரோத மனப்பான்மை படர தொடங்க விழித்துக்கொண்டு அதன் மூலத்தை ஆராய தொடங்கியதும் அதிர்ச்சியளித்தது ..
இந்திய ஒன்றிய அரசை இயக்கும் ஆர்எஸ்எஸ் இதன் பின்னில் என்ற உண்மை புலப்பட ஆர்எஸ்எஸ் டெரரிஸ்ட் என்ற ஹேஸ்டாக்கோடு
பதிவுகள் வர தொடங்கியதும் உசாரான ஆர்எஸ்எஸ் பிரதமரை கொண்டே ட்விட் எல்லாம் போட செய்தது .. உயர்பதவிகளில் இருந்தவர்கள் உடனடியாக தூக்கபடுவதும் இவர்கள் பதற காரணம்.. வளைகுடா நாடுகளில் வேலைக்கு சென்றவர்களிடம் குறிப்பாக ஆர்எஸ்எஸ் சித்தாந்திகளிடம் ஒருவித அச்சம் வரவும் தங்கள் சமூகவலைத்தள கணக்குகளை எல்லாம் மூடியும் மன்னிப்பு கேட்டும் மறைகிறார்கள் .

குருடாயில் நெகட்டிவ் ... எத்தனை நாடுகள் , நிறுவனங்கள் திவாலாகப் ... தெரியவில்லை.

Karthikeyan Fastura : குருடாயில் நெகட்டிவ் தொட்டதால் பொருளாதாரம் தன் உயிர் மூச்சு விட்டு விட்டது என்று நான் கூறியதை ரொம்பவும் அதீதமாக
கூறியதாக நினைக்கலாம்.
ஆனால் எங்களுடைய மொபைல் ஆப்பிற்காக பலகாலம் இந்தத் துறையை அனுதினமும் கவனித்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் சொல்கிறேன் உலகப் பொருளாதாரம் இதுவரை இயங்கிவந்த விதிகளை உடைத்துவிட்டது. இனி இயங்கப் போகும் பொருளாதாரம் பல புதிய விதிகளை கொண்டு இயங்கி ஆகவேண்டும் என்பதால் அவ்வாறு கூறினேன்.
குருடாயில் ஜூன் மாத காண்ட்ராக்ட் 20 டாலரில் விற்கிறது என்பதால் இன்னும் இது முடியவில்லை என்று கருதமுடியாது. அதுவும் விழுகவே செய்யும். இன்று இப்போது வரை 15$ க்கு விழுந்திருக்கிறது. இன்று இரவு இன்னும் விழவே செய்யும். இந்த கான்ட்ராக்ட்டை வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டு பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை என்றும் கவலை மறந்து இருக்க முடியாது.
இது ஒன்றும் பெரியவிஷயமில்லை என்று நம்பும்
நண்பர் ஒருவர் இப்படி கூறியிருந்தார் //தக்காளி விற்கும் ஓரு வியாபாரி, கடைசி நேரத்தில் விற்காத தக்காளிகளை கீழே கொட்டிவிட்டுப் போவதைப் போலத்தான் இது. கொட்டுவதற்கு குப்பை அள்ளுபவர்களுக்கு கொஞ்சம் காசும் அவர் கொடுக்க வேண்டியிருந்தது என்பதே இந்த நெகட்டிவ் விலை.//

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உடல் நிலை கவலைக்கிடம்? தங்கை ஆட்சிக்கு தயார் ?

தினமலர் :சியோல்,; உலக நாடுகள் கொரோனாவுக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்திலும், அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை  நடத்தி  அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து வந்தவர்  வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், தனது நாட்டை மர்ம தேசமாக வைத்திருக்கும்  கிம் ஜாங் அன் கடந்த சில வாரங்களாகவே பொது வெளியில் தோன்றவில்லை.  கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கிம் ஜாங்-உன்னின் தாத்தாவும் வட கொரியாவின் நிறுவனத் தலைவருமான கிம் இல் சங்க்கின் பிறந்த தின கொண்டாட்டம் நடந்தது. இதில் கிம் ஜாங்-உன் கலந்து கொள்ளவில்லை.
இதுவரை இந்த பிறந்த தின கொண்டாட்டத்தில் கிம் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது பலருக்குச் சந்தேகத்தை எழுப்பியது.ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் நடந்த இருவேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன்பின் பொது இடங்களில் கிம் தோன்றவில்லை. கடந்த வாரம் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியது. அதில் அவர் கலந்து கொண்டதாக தெரியவில்லை.

அமெரிக்காவில் குடியேற வெளிநாட்டவர்களுக்கு தடை .. ட்ரம்ப் அறிவிப்பு


Donald J. Trump ✔ @realDonaldTrump In light of the attack from the Invisible Enemy, as well as the need to protect the jobs of our GREAT American Citizens, I will be signing an Executive Order to temporarily suspend immigration into the United States! 
 தினமலர் : கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “கண்ணுக்கு தெரியாத எதிரியின் தாக்குதல் காரணமாகவும், அமெரிக்க குடிமகன்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கவும், வெளிநாட்டவர்கள், அமெரிக்காவில் குடியேறுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கும் உத்தரவில் நான் கையெழுத்திடுவேன்” என்று பதிவிட்டுள்ளார்

ரேபிட் கிட் பரிசோதனைகளை 2 நாட்கள் நிறுத்த அறிவுரை .. தவறான முடிவுகளை காட்டுகிறது ?


தினமலர் : ஜெய்பூர்: ராஜஸ்தானில் ரேபி கிட் மூலம் செய்யப்பட்ட பரிசோதனைகளின், 95 சதவீத முடிவுகள் தவறாக காணப்படுவதால், அப்பரிசோதனைகளை நிறுத்திவிட்டு, புதிய திட்டத்தை வகுக்க இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. அங்கு இதுவரை 1,600-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 25 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதில் 13 பேர் சுற்றுலா நகரமான ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள்.
பரிசோதனைகளை அதிகப்படுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரேபிட் கிட் பரிசோதனைகளை ராஜஸ்தான் தொடங்கியது. இதற்காக மாநிலத்திற்கு 10 ஆயிரம் ரேபிட் கிட்டுகள் வரவழைக்கப்பட்டன. அவற்றின் மூலம் பெறப்பட்ட 95 சதவீத முடிவுகளில் முரண்பாடுகள் உள்ளதாகவும், ஆன்டிபாடி பரிசோதனைகளை நிறுத்திவிட்டு, ஆர்டி - பிசிஆர் பரிசோதனைகளை தொடர உள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரகு ஷர்மா கூறியுள்ளார்.

குஜராத் -அகமதாபாத் நகரில் 1248 பேர் கொரோனா பாதிப்பு ... மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன

வளன்பிச்சைவளன் : அகமதாபாத் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1248 
குஐராத்தின் மொத்த பாதிப்பில் 64. 43% 
இந்திய அளவில் குஜராத்1939 தொற்று பாதிப்புடன் மூன்றாம் இடம் கார்பரேசன் மருத்துவ மனைகள் நிறைந்து விட்டது 
ஒன்றிய அரசின் அதிகம் பாதித்த பகுதிகள் பட்டியலில் குஜராத்தோ அகமதாபாத்தோ இல்லை
இந்தியாவின் முதன்மை மாநிலம், மாடல் என்று எல்லாம் வர்ணிக்கப் பட்ட குஜராத் தலைநகர் அகமதாபா த்தில் தொற்று எண்ணிக்கை 1248 ஐ தொட்டு உள்ளது இதை சமாளிக்கும் அளவிற்கு மாநகர சுகாதார மருத்துவ மனை யில் படுக்கை வசதிகளோ மருத்து வர்களோ இல்லை இக்கட்டை சமாளிக்க தற்போது மூன்று தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்தியாவிலே அதிகம் தொற்று பாதித்த வரிசையில் குஜராத் மூன்றாம் இடத்தில் 1939 பேர் கண்டறியப் பட்டுள்ளனர் இதில் அகமதா பாத்தில் மட்டும் 1248 பேர் அதாவது ஒட்டு மொத்த குஜராத் பாதிப்பில் 64.43 %.
இவ்வளவு மோசமாக இந்த நகரம் பாதிக்க ப்பட்டதற்கான காரணம் இன்ன மும் அறிவிக்கப் படவில்லை
தமிழக பாதிப்பு பிற்கு தப்லீத் ஜமாத் என்றும் சிங்கிள் சோர்ஸ் என்றும் இன்றளவும் சொல்லப் பட்டு வருகிறது. மேலும் ஒட்டு மொத்த இந்தியா கொரோனா பாதிப்பில் தப்லீத் ஜமாத் மூலம் 30 %என துள்ளியமாக இந்திய சுகாதாரத்துறை தெரிவிக்கிறது

பத்திரப் பதிவு அலுவலகங்கள் திறப்பு ஏன்?

பத்திரமாக வீட்டுக்குள் இருக்கும்போது பத்திரப் பதிவு அலுவலகங்கள் திறப்பு ஏன்? மின்னம்பலம் : நாடு முழுவதும் கொரோனாவால்
ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தளர்வுகளைக் கொண்டுவர முடியாது என்று தமிழக அரசும் நேற்று (ஏப்ரல் 20) திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
ஆனால்,  நேற்று முதல் தமிழக அரசின் பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்கள் மட்டும் திறக்கப் பட்டிருக்கின்றன. மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களில் மட்டுமல்லாமல், இணை, துணைப் பதிவாளர் அலுவலகங்களும் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் குறைந்த அளவிலே வந்திருந்தாலும் அலுவலகங்கள் இயங்கின. ஏற்கனவே சார்பதிவாளர்கள் சங்கத்தினர், “ஊரடங்கு முடியும் வரை பத்திரப் பதிவு அலுவலகங்களைத் திறக்க வேண்டாம். பத்திரப் பதிவு செய்ய பலர் வர வாய்ப்பில்லை என்றாலும் தொற்று அறிகுறியோ, தொற்றோ இருக்கும் சிலர் வந்தாலும் பிரச்சினை ஆகிவிடும். இது அத்தியாவசியமான தேவையும் அல்ல. எனவே ஊரடங்கு முடியும் வரை பத்திரப் பதிவு அலுவலகங்களைத் திறக்க வேண்டாம்” என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனாலும் அவர்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, பத்திரப் பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன
தமிழகம் முழுவதும் சில இடங்களில் முத்திரைத் தாள் விற்பனை நடைபெற்றதாகவும் சில இடங்களில் பத்திரப் பதிவுகளும் நடைபெற்றிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

டாக்டர் சைமன் உடலை அடக்கம் செய்ய தடுத்தோர் மீது உயர் நீதிமன்றம்


அமரர் டாக்டர் சைமன்
கனிமொழி கருணாநிதி : தன் உயிரைக்கூட துச்சமென மதித்து சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் சைமன், சிகிச்சையின் போது ஏற்பட்ட கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கிறார். எந்த மக்களுக்காகத் தன் வாழ்நாளெல்லாம் சேவை செய்துவந்தாரோ, அதே மக்களின் ஒரு பிரிவினர் அவருக்கான இறுதி மரியாதையை தடுத்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தருகிறது.
நமக்காக பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரையும் மதிப்பது என்பது கைதட்டுவதோடு நின்றுவிடக் கூடாது. 

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல் எரியூட்டப்பட்ட பின்னரோ அல்லது முறைப்படி புதைக்கப்பட்டுவிட்டாலோ நோய்த்தொற்று மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம்மைக் காக்கும் பணியில் ஈடுபட்டு காலமானவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பது நம் கடமை.

லுலு தேவ ஜம்லா Vs பிரான்ஸ் தமிழச்சி மோதல்? . இருவர் தரப்பு வாதங்கள் .. வீடியோக்கள்



Lulu Deva Jamla G :;லுலுவின் கில்மா கதைகள்*
“லுலு உங்கள சுத்தி இவ்வளவு பிரச்சனைகள் நடந்துகிட்டு இருக்கிறதால நீங்க கொஞ்ச நாள் செக்ஸ்/ காமம் தவிர்த்து பெண்விடுதலைய சுத்தின பொருளாதார சுதந்திரம், women empowerment, குழந்தைவளர்ப்பு, உங்க பொது வாழ்வியல் கருத்துக்கள், சாதி மத எதிர்ப்பு அரசியல் பத்தியெல்லாம் மட்டும் எழுதலாம் இல்ல? உங்க எழுத்து நடையில படிச்சா நல்லா இருக்குமேன்னு தோணிச்சி. அதான் கேட்டேன்”
“நான் ஏன் காமத்தை பத்தியும் உடலரசியல் பத்தியும் பேசுறதை தவிர்க்கணும்?”
“முழுசா தவிர்க்க சொல்லல. லேசா குறைச்சிக்கவாச்சும் செய்யலாம்ல? இப்ப உங்க மேல விழுந்திருக்கிற இந்த இமேஜ் அப்ப மாறும் இல்ல?”
ஓ அதாவது என்னைய சமூகத்துக்கு முன்ன பொய்யா நடிச்சி ஒரு good girl imageஐ இரந்து வாங்கிக்க சொல்றிய? அதானே? ஒரு விஷயம் சொல்றேன் கேளுங்க, என்னோட அடுத்த புக்கான #காதல்_உன்மத்தக்காரி யில ரெண்டு பகுதி வரும்... ஒண்ணுல rawவா hardcore செக்ஸ் பத்தி அப்பட்டமா பேசியிருப்பேன்.

பேரறிஞர் அண்ணா தலையில் கொரோனா .. தினத்தந்தியின் கார்டூன்

 thamizhidhayam.com : 2004ஆம் ஆண்டு நான் சென்னை தினமணியில் சேர்ந்தப்போ, பொறுப்பாசிரியரா எம்.சந்திரசேகரனும், தலையங்க பக்க ஆசிரியரா ராயப்பாவும் இருந்தாங்க.
அப்போவெல்லாம் தினமணி கார்ட்டூன்கள் பிரச்சனைகள் தொடர்பாகத்தான் இருக்கும். தனி மனித தாக்குதல்களை ஆசிரியர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
துக்ளக் சோ குருமூர்த்தியிடம் சொல்லி, குருமூர்த்தி தினமணி ஓனர்கிட்ட சொல்லி தினமணியில் கார்ட்டூனிஸ்ட்டாகச் சேர்ந்தவன் இந்த மதி. சம்பந்தம் ஆசிரியரா இருந்தப்போ உள்ளே வந்தவன், திமுகவை விமர்சனம் செய்றதுன்னா ரொம்ப ஆர்வமா இருப்பான். அப்படி அவன் போட்ட கார்ட்டூன் எதையாச்சும் முரசொலியில் தூக்கிப் போட்டு, கலைஞர் பதில் எழுதிட்டா இவனுக்கு ஒரே கொண்டாட்டமா இருக்கும். முரசொலி பத்திரிகையை தூக்கிட்டு எல்லோர்கிட்டயும் காட்டி சந்தோஷப்படுவான்.
அதிகபட்சம் கலைஞர் இவனை திட்டி எழுதிட்டா அதுவே இவனுடைய கார்ட்டூனுக்கு கிடைத்த அங்கீகாரம்னு நெனக்கிற கழிசடைப் பயதான் இந்த மதி.

திங்கள், 20 ஏப்ரல், 2020

கச்சா எண்ணை அடிமட்ட விலையை தொட்டிருப்பதால் மீண்டும் மேலே வந்துதான் ஆக வேண்டும்?

Karthikeyan Fastura : குருடாயில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு
மிக மோசமாக இன்று விழுந்து பேரல் 10.98 டாலருக்கு என்ற அளவில்
வந்திருக்கிறது. குருடாயில் என்பது உலக இயக்கத்திற்கான ரத்த ஓட்டம் போல. ரத்த ஓட்டம் குறைந்து காணப்படுவது பொருளாதாரம் ICUவில் இருப்பதைத்தான் காட்டுகிறது.
இந்த அளவுக்கு குறைவது பல வளைகுடா நாடுகளையும் ஐரோப்பிய நாடுகளையும் கடுமையாகத் தாக்குவதால் வருவாய் குறைந்து பெரும் பொருளாதார சரிவை தாக்குதல் ஏற்படுத்தும். இது அங்கு வேலை பார்க்கும் இந்தியர்களையும் சேர்த்து பதம் பார்க்கும். வேலைவாய்ப்பு இழப்புகள் தவிர்க்க முடியாது. விமானப் போக்குவரத்து தொடங்கியவுடன் அங்கு இருக்கும் பலரும் வெளியேற்றப்படலாம்.