எல்லாவகையான Gemstone களும் இலங்கையில் மாணிக்க கல் என்றே கூறப்படுகிறது.. மண்ணை அகழ்ந்து எடுக்கப்படுவதால் மாணிக்க கல் என்பது பொருத்தமான பெயராக தோன்றுகிறது. பலவகையான் கற்களையும் நீல மாணிக்கம் சிவப்பு மாணிக்கம் என்றே குறிப்பிடுவர். இதற்கான அரசு துறையும் "இலங்கை மாணிக்க கல் ஆபரண அதிகார சபை " என்றே குறிப்பிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் Gemstone இன் பொதுப்பெயராக இரத்தினக்கல் என்ற சொல் வழக்கத்தில் உள்ளது. ரத்னா என்ற சம்ஸ்கிருத சொல்லையே ரத்தினம் இரத்தினக்கல் என்று குறிப்பிடப்படுகிறது . நல்ல தமிழ் சொல் இருக்க சம்ஸ்கிருத நிழலில் ஏன் இருக்க வேண்டும்? மொழியின் வேர் சிதைந்து விடாமல் இருக்க ஆவன செய்வோம்..
இலங்கையில் முழுக்க முழுக்க மாணிக்க கல் என்ற சொல்லே பாவிக்கப்படுகிறது ..
உதாரணமாக இந்த ஒரு செய்தியை பாப்போம் : நாடளாவிய ரீதியில்
சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாணிக்க கல் அகழ்வுகளை சுற்றிவளைப்பதற்காக விசேட பொலிஸ் குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை விடுத்துள்ளார்.
புவியியல் ஆராய்ச்சி மற்றும் மாணிக்க அகழ்வு பணியகத்தின் நிலைமை தொடர்பிலான விசேட கூட்டம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பிலுள்ள புவியியல் ஆராய்ச்சி மற்றும் மாணிக்க அகழ்வு பணியகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது சமுத்திர உள்ளிட்ட அனைத்து வளங்களை பாதுகாப்பதற்கான விசேட நிறுவனமொன்றை நிறுவுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுகின்ற மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்படுவோருக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்போது சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாணிக்க கல் அகழ்வுகளை சுற்றிவளைப்பதற்காக விசேட பொலிஸ் குழுவை நியமிக்குமாறும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு பூஜித்த ஜயசுந்தரவிற்கு உத்தரவிட்டார். வீரகேசரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக