சனி, 8 ஜூன், 2024

உத்தேச அமைச்சர்கள் பட்டியல் லீக் .. புதிய என் டி ஏ கூட்டணி அரசின்

 மாலை மலர் :  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நாளை இரவு 7.15 மணிக்கு 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
பிரதமர் உடன் கேபினட் அமைச்சர்கள் பதவி ஏற்க வாய்ப்புள்ளது. இன்று நடைபெறவுள்ள என்.டி.ஏ கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. கூட்டணி கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது.
அமையவுள்ள புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் யூகங்களும் எழத் தொடங்கியுள்ளன.

இந்த முறை பாஜக ஆட்சியமைக்க 12 சீட் வைத்துள்ள நிதிஷ் குமாரின் ஆர்.ஜே.டி கட்சியும், 16 சீட் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் முக்கிய காரணமாக உள்ளதால் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கங்களுக்கு இந்த இரண்டு கட்சிகளும் அடிபோடுவதாக தெரிகிறது.

130 தொகுதிகளில் மறு வாக்கு எண்ணிக்கை! நீதிமன்றத்தை நாட இந்தியா கூட்டணி முடிவு!

 தமிழ்க்கவி  :  INDIA கூட்டணியின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்;
பாஜக (BJP)500 லிருந்து1000 வாக்குகளுக்கும் கீழே குறைவாகப் பெற்று ,
வெற்றி பெற்ற 130 தொகுதிகளிலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றத்தை நாட இந்தியா கூட்டணி முடிவு!
நண்பர்களே தெரிந்து கொள்ளுங்கள்,
பிஜேபி-500 வாக்குகளுக்கு  கீழ் வித்தியாசத்தில் வென்றது 30 தொகுதிகள்.
1000 வாக்குகளுக்கு கீழ் வென்றது 100 தொகுதிகள். மொத்தம் 130 தொகுதிகள்.
தற்போதுள்ள கணக்குப்படி பிஜேபி வென்றது -243 தொகுதிகள்.
243 தொகுதிகளில் 130 தொகுதிகளை கழித்தால் 113 தொகுதிகளில்தான் வென்று இருக்க வேண்டும்.
மோடி அவர்கள் வாரணாசி தொகுதியில் பின்னடைவை சந்திக்கிறார் என்று முடிவு வரவும்....
தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில்
மந்த நிலையை ஏற்படுத்தி, எதிர் கட்சிகள் தேர்தல் ஆணையத்தை
கண்டிக்கும் அளவுக்கு  நிலைமை சென்றுவிட்டது.

வெள்ளி, 7 ஜூன், 2024

பாஜகவுக்கு முட்டு கொடுத்த நவீன் பட்நாயக் மாயாவதி ஜெகன் மோகன் வரிசையில் நாயுடு நிதிஷ்!


 Maha Laxmi
:  நிதிஷ் குமார்களுக்கும்  சந்திரபாபு நாயுடுகளுக்கு ஒரு  எச்சரிக்கை...
நிதீஷ் குமார் , சந்திரபாபு நாயுடு போன்றோர் கொஞ்சம் வரலாற்றை நோக்கவேண்டும்
இன்று மோடிக்கு இவர்கள் கொடுக்கும் ஆதரவு எப்படிப்பட்ட விளைவுகளை எதிர்காலத்தில் இவர்களின் கட்சிகளுக்கு கொடும் என்பதை சற்று பார்ப்போமா?
இவர்களின் கட்சி எம்பிக்கள் ஏறக்குறைய அனைவருமே பாஜகவினால் மிரட்டியோ விலைகொடுத்தோ பாஜகவில் இணையும் சாத்தியம் இருக்கிறது!
சரத் ​​பவாரும் உத்தவ் தாக்கரேவும் இந்த விதியை நொந்து அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.

ஆண்டுக்கணக்காக பாஜகவின் ஒரு பீ டீம் போலவே செயல் பட்ட  நவீன் பட்நாயக் இன்று தனது மாநிலத்தில் ஆட்சியை பறிகொடுத்து விட்டார்!

சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு மறுப்பு.. சொந்த ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவு

 tamil.oneindia.co -  Velmurugan P  :  திருச்சி:பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக திருச்சியில் பதிவான வழக்கில் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு மறுத்துவிட்டார்.
மேலும் சவுக்கு சங்கருக்கு சொந்த ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்..
திருச்சி வழக்கில் தான் சொந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டம் உள்பட எல்லா வழக்கில் இருந்து மீண்டால் தான் சவுக்கு சங்கர் வெளியே வரமுடியும
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் பஞ்சாப் பெண் பளார் .. சண்டிகர் விமான நிலையத்தில்

 nakkheeran.in :; பாஜகவைச் சேர்ந்தவரும், நடிகையுமான கங்கனா ரனாவத்திடம் சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் (CISF) பெண் கான்ஸ்டபிள் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கங்கனா ரனாவத்தை அந்தப் பெண் கான்ஸ்டபிள் சரமாரியாக கண்ணத்தில் தாக்கினார்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்த மூத்த சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய விவசாயிகளுக்கு எதிராக கங்கனா ரனாவத் பேசியிருந்ததால், பெண் காவலர் அவரை அறைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

BJP in UP winning margin because of AIMIM - Asaduddin Owais

Lok Sabha Elections: "It's Clear There ...

ஆலஞ்சி மு மன்சூர் :   BJP in UP winning margin because of AIMIM
*● Bijnor:*
*BJP - 97165*
*SP+RLD  - 95720*
*AIMIM - 2290*
*● Nakur:*
*BJP - 1,03,771*
*SP - 1,03,616*
*AIMIM - 3591*
*● Kursi:*
*BJP - 1,18,614*
*SP - 1,18,094*
*AIMIM - 8533*
*● SULTANPUR:*
*BJP - 92245*
*SP - 90857*
*AIMIM - 5240*

நியாயமான முறையில் தேர்தல் நடந்திருந்தால் நிச்சயம் பிஜேபி கூட்டணி படுதோல்வியை சந்தித்திருக்கும்.

May be an image of 2 people

Karthikeyan Fastura  :   நியாயமான முறையில் தேர்தல் நடந்திருந்தால் நிச்சயம் பிஜேபி கூட்டணி படுதோல்வியை சந்தித்திருக்கும்.
ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் முடிந்த அளவிற்கு அனைத்துவித தேர்தல் ஊழல்களையும் செய்ய ஆரம்பித்து இருந்தார்கள்
சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு தலைமை தேர்தல் கமிஷனர் அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜிவ்குமாரை நியமிக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் கமிஷனர் அருண் கோயல் திடீரென்று மார்ச் மாதம் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அறிவிக்கிறார்.
அவருக்கு பதிலாக சுக்பீர்சிங் சாந்து நியமிக்கப்படுகிறார்.

வியாழன், 6 ஜூன், 2024

தமிழில் ஆங்கில வார்த்தைகளை கலக்க வேண்டிய தேவை உண்டா? ஏன் ?

May be an image of 1 person, smiling, studying, book and text that says '자로 CONSTITUTION INDIA'

Radhika Murugesan  :   ஒரு நண்பர் “ஏன் நீங்கள் ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டார். உண்மையில் தமிழை விட எனக்கு ஆங்கிலம் தான் சரளமாக பேசவும் எழுதவும் வரும்!.
என் தாய் வழி முன்னோர் இலங்கையிலிருந்து புரசைவாக்கம் பகுதியில் வந்து குடிபெயர்ந்தனர்.
 பின்பு அடுத்த தலைமுறை இங்கே ஆங்கிலம் வழி கல்வி கற்றனர்.
அதனால் தாய் வழியில் பெரும்பாலானோர் ஆங்கிலம் மட்டுமே பேசுவர்.
அப்பா மதுரையில் பிறந்து 18 வயதில் மெட்ராஸில் கிண்டியில் பொறியியல் படிக்க வந்து சேர்ந்தார்.
அவர் படித்தது தமிழ் வழியில். ஆங்கிலம் அற்புதமாக எழுதுவார்.
ஆனால் சரளமாக பேச வராது.
நான் படித்தது மெட்ராஸில் ஆங்கில பள்ளியில்.
அங்கே ஒரே பாடம் மட்டுமே  தமிழ் மொழி .
வெளியே தமிழ் பேசினால் தண்டனை கட்டணம் 5 பைசா உண்டு.

நிதி, உள்துறை, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளை கேட்கும் நிதிஷ் நாயுடு கட்சிகள்

சோலை மலர் : மக்களவை தேர்தல் வாக்குகள் கடந்த 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கூறியது போல பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணியாக 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனிக்கட்சியாக 240 இடங்களை கைப்பற்றியுள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு 272 இடங்கள் தேவை. இதனால் 32 இடங்களுக்கு கூட்டணி கட்சிகளை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தெலுங்குதேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12), ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா (7), சிராக் பஸ்வான் கட்சி (5) முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஜஸ்டின் ட்ரூடோ :இந்தியாவும் சீனாவும் கனடா ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்!

மாலை மலர்  :   ஒட்டாவா  கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கடந்த ஆண்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்தார். இதையடுத்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேறுமாறு அந்த நாடு உத்தரவிட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா தூதரை இந்தியாவில் இருந்து வெளியேறச் சொல்லியது. கனடாவை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுக்கும் நடைமுறையையும் நிறுத்தி வைத்தது.
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது குற்றம் சுமத்தியபோது ஆதாரமற்றவை என இந்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.justin-trudeau-canada-india-second-biggest-foreign-threat-democracy

சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

 nakkheeran.in :  இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
இதற்கான தேர்தல் முடிவுகள் நேற்று (04-06-24) வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியாக் கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது.
இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
இந்தப் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆந்திராவில் முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.கவுடனான கூட்டணியை உறுதி செய்தார்.

புதன், 5 ஜூன், 2024

திணறும் பா.ஜ.க; ஆட்சி அமைக்க முயற்சிக்கும் இந்தியா கூட்டணி!

 நக்கீரன் : ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (04-06-24) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
அதில், மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது.
இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க வெறும் 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும்,
கூட்டணி கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பதற்கான சூழல் நிலவுகிறது.

ராகுல் காந்தி : ஆட்சி அமைக்க எங்களிடம் வியூகம் உள்ளது!

 மாலை மலர்  :  புதுடெல்லி பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 230-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:
அரசியல் அமைப்பு நிறுவனங்கள் மீதான மோடி, அமித்ஷாவின் தாக்குதலுக்கு எதிரான போர் இது. அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவதற்கான தேர்தலாகவே இந்த தேர்தல் அமைந்துள்ளது.
அரசு எந்திரங்களை தவறாகப் பயன்படுத்தியதற்கு எதிரான தேர்தல் இது. பா.ஜ.க. மட்டுமின்றி சி.பி.ஐ, அமலாக்கத் துறையை எதிர்த்து நின்று வென்றுள்ளோம்.

கமல்ஹாசன் : திமுக அரசின் பணிகளின் அறுவடைதான் இந்த வெற்றி” - முதலமைச்சருக்கு பாராட்டு !

“திமுக அரசின் பணிகளின் அறுவடைதான் இந்த வெற்றி” - முதலமைச்சருக்கு கமல்ஹாசன் பாராட்டு !

 கலைஞர் செய்திகள்  -KL Reshma  :  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி தேர்தலில் களம் கண்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 543 தொகுதிகளில் ஏற்கனவே குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமிருக்கும் 542 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சைலண்ட்டாக காய் நகர்த்தும் காங்கிரஸ்... பலமடையும் இந்தியா கூட்டணி - பாஜகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

 zeenews.india.com  -   Sudharsan G  :  Lok Sabha Election Result 2024: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி ஆகியோர் பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சைலண்ட்டாக காய் நகர்த்தும் காங்கிரஸ்
நிதிஷ் குமார் பீகாரில் 14 தொகுதிகளிலும், சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் 16 தொகுதியிலும் முன்னணியில் உள்ளன. இருப்பினும் இந்த இரு கட்சிகளும் பாஜகவின் கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் மற்றும் பாஜக இரு கட்சிகளுக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்றே தெரிகிறது. இரு கட்சிகளும் மத்தியில் ஆட்சியமைக்க வேண்டும் என்றால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு நிச்சயம் தேவை.

பாஜகவிடம் பறிபோன அதிமுக + எம்ஜியார் +ஜெயலலிதா வாக்கு வங்கி .. புள்ளிவிபரம்

 tamil.oneindia.com -  Mani Singh S :  தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களில் அதிக ஓட்டு வாங்கியது யார்னு பாருங்க.. லிஸ்ட்ல இவருதான் டாப்!
சென்னை: தமிழகத்தில் பாஜக 19 இடங்களில் போட்டியிட்ட நிலையில் அனைத்திலும் தோல்வி அடைந்தது. அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் தோல்வியை தழுவினார். தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணிக்கையை பார்க்கலாம்.
நாடு முழுவதும் நடந்து முடிந்த 18-வது லோக்சபாவிற்கான தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி தனித்தும் என 4 முனைப் போட்டி நிலவியது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில், திமுக 21, காங்கிரஸ் 9, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 2, ம.தி.மு.க. 1, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1 இடங்களில் போட்டியிட்டன. புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் களம் கண்டது.

தமிழ்நாட்டில் காங் கூட்டணி 40...வடக்கில் பாஜக கூட்டணி 240 மட்டுமே .... : மின்னம்பலம் சொன்னதே மெய்யானது!

 மின்னம்பலம் -Kavi  :  மின்னம்பலம் கணித்தபடி தமிழ்நாட்டில் 40க்கு 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நமது மின்னம்பலம் கடந்த ஏப்ரல் மாதம் மக்களை நேரடியாக சந்தித்து, இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று சர்வே எடுத்தது.
இதன் முடிவில் தமிழ்நாடு புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தோம்.
“அதிமுக மற்றும் பாஜக கூட்டணியால் இந்த முறை தமிழ்நாட்டில் வெற்றி எதுவும் பெற இயலாது என்பதே மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவாக இருக்கிறது.

இரண்டாவது இடத்தைப் பொருத்தவரை, பெரும்பான்மையான தொகுதிகளில் அதிமுக கூட்டணி இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது.

செவ்வாய், 4 ஜூன், 2024

“கருத்துக் கணிப்புகளை மக்கள் பொய்யாக்கி விட்டனர்” - கலாநிதி வீரசாமி கருத்து |

 Hindu Tamil  : “கருத்துக் கணிப்புகளை மக்கள் பொய்யாக்கி விட்டனர்” - கலாநிதி வீரசாமி கருத்து
சென்னையில் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த கலாநிதி வீராசாமி
சென்னை: “மக்களவைத் தேர்தல் கருத்துக்கணிப்புகளை எல்லாம் மக்கள் பொய்யாகிவிட்டனர்” என்று வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார்.
வடசென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஐந்தாவது சுற்று முடிவில் 1,43,705 வாக்குகள் பெற்று, 98,617 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் வாக்கு என்னும் மையத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இண்டியா கூட்டணி தமிழகத்தில் 6, 7 இடங்களில் மட்டுமே வெல்லும் என பொய்யான கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டது. இது மோடியின் கருத்துக்கள்; உண்மையான கருத்து கணிப்பு இல்லை.

தனி மெஜாரிட்டியை இழக்கும் பாஜக: விஸ்வரூபம் எடுத்த காங்கிரஸ்!

 மாலை மலர்   :  மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 350 தொகுதிளுக்கு மேல் பிடிக்கும் என கணிக்கப்பட்டது.
ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் பாஜக-வுக்கு உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார் மாநிலங்களில் பலத்த அடி விழுந்துள்ளது.
இதனால் மத்தியம் 2 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 295 இடங்களில் முன்னணியில் உள்ளது. இப்படியே கடைசி சுற்று வரை சென்றால் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.
கடந்த முறை பாஜக 303 தொகுதியில் தனித்து வெற்றி பெற்றிருந்தது. தற்போது 241 தொகுகளில்தான் முன்னணி பெற்றுள்ளது. இது பாஜக-வுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (14) ஆகியவை பா.ஜனதா ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

India Today 2024 Election Results Live

 

News tamil 18 2024 Election Result Live

ABP 2024 Election LIve

Puthiya thalimurai TV 2024 election result live

Sun tv 2024 Election result Live

தேர்தல் வெற்றி கொண்டாட்டம் - தயாராகும் காங்கிரஸ் : தயங்கும் பாஜக

Image

மின்னம்பலம் - Kavi : தேர்தல் வெற்றி கொண்டாட்டம் – தயாராகும் காங்கிரஸ் : தயங்கும் பாஜக
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 24 மணி நேரம் கூட இல்லாத நிலையில், காங்கிரஸ் வெற்றி கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. 64 கோடி பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் வெற்றிப் பெறப்போவது பாஜக தலைமையிலான என்.டி.ஏ.கூட்டணியா? காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

“தாயின் கல்லறைக்கு அருகில் பெட்ரோலை ஊற்றி காதலியை எரித்து கொன்ற கொடூரன் - யாழ்ப்பாணம்

 ilakkiyainfo.com:  தாயின் கல்லறை மீது சத்தியம் செய்வதாகக் கூறி அழைத்து சென்று பெண்ணை தீயிட்டு படுகொலை செய்தேன் – இளைஞன் வாக்குமூலம்
“தாயின் கல்லறை மீது சத்தியம் செய்கிறேன்” என பெண்ணை சேமக்காலைக்கு (சுடலை) அழைத்து சென்றே இளைஞன் தீ மூட்டி படுகொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்குள் வைத்து, கடந்த சனிக்கிழமை பெண்ணொருவரை, இளைஞன் ஒருவர் உயிருடன் தீ மூட்டி படுகொலை செய்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கு திருமணத்தை மீறிய காதல் தொடர்பு சுமார் ஐந்து வருட காலமாக இளைஞனுடன் இருந்துள்ளது. இந்நிலையில் இளைஞன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு முயன்றுள்ளார்.

திங்கள், 3 ஜூன், 2024

வி.கே.பாண்டியனை பார்த்து என்ன பயம்? சாட்டையை எடுத்த ஜெயக்குமார்!

 tamil.samayam.com  -  மகேஷ் பாபு   : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், "தமிழன் என்றோர் இனமுண்டு,தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை நாம் உணர்ந்தவர்கள்!அறிந்தவர்கள்! ஒரு தமிழன்‌ ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்று விடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பாஜக ஏவியது!
பாஜக வெளியிட்ட விளம்பரம்
தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ் இனத்தை இழிவுபடுத்தி பார்க்க வேண்டும் நோக்கத்தில் தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் ஒருவர் வாழை இலையில் உணவருந்துவதை போலவும் அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் ஒரு தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டுள்ளது.

டெல்லியில் கலைஞர் - ராகுல், சோனியா புகழாரம் மலரஞ்சலி !

 மின்னம்பலம் - christopher :  கலைஞர் திருவுருவ படத்திற்கு டெல்லியில் மரியாதை : ராகுல், சோனியா புகழாரம்!
“கலைஞரின் வாழ்க்கை நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களிடையே முத்திரையை பதித்துள்ளது” என்று டெல்லியில் அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் 101வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழ்நாடு தாண்டி உலகம் முழுவதும்  கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக திமுக நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இந்த நிலையில் கலைஞரின் 101வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

கலாஷேத்ரா பாலியல் வழக்கில் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா நிபந்தனை ஜாமின்

 மாலை மலர் : சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்திருந்தார்.
அப்பெண்ணிடம் அடையாறு மகளிர் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்ட நிலையில், கடந்த ஏப்ரல் 22ம் தேதி நீலாங்கரை போலீசாரால் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீஜித் கிருஷ்ணா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஆசிரியர் வீரமணி : கலைஞரின் 101 இல் திராவிடத்தின் தேவையைத் திக்கெட்டும் பரப்புவோம் என்ற உறுதி எடுப்போம்


 minnambalam.com  - Aara :  ”சமரசமற்ற கொள்கைப் போராளியான முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு நாளில், திராவிடத்தின் தேவையைத் திக்கெட்டும் பரப்புவோம் என்ற உறுதி எடுப்போம்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அழைப்பு விடுத்துள்ளார்.
.இதுகுறித்து இன்று (ஜூன் 2) அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னை ஒரு வரியில் சுய விமர்சனம் செய்த ஓய்வற்ற உழைப்பின் ஒப்பற்ற தலைவர் பல்கலைக் கொள்கலனான நூற்றாண்டு நிறைவு விழா நாயகர் கலைஞரின் 101 ஆம் ஆண்டு பிறந்த நாள் (3.6.2024).

தமிழகத்தில் 39 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

 மாலை மலர் :  சென்னை 543 தொகுதிகள் கொண்ட இந்திய பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இவ்வாறு மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்படுகின்றன. இந்த பணியில் 38 ஆயிரத்து 500 பேர் ஈடுபட உள்ளனர். இதில், வாக்கு எண்ணும் பணியில் 10 ஆயிரம் பேரும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து வைக்கும் பணியில் 24 ஆயிரம் பேரும், நுண் பார்வையாளர்களாக 4 ஆயிரத்து 500 பேரும் ஈடுபடுகிறார்கள்.

ஞாயிறு, 2 ஜூன், 2024

கலைஞர் 101- வெறும் பெயர் அல்ல வெறும் சொல் அல்ல வெறும் பட்டம் கூட அல்ல! அது ஒரு கொள்கை வரலாறு

 ராதா மனோகர் : கலைஞர் என்ற வரலாறு ஒரு நூறாண்டை கடந்திருக்கிறது!

ஒரு சாதாரண மனிதராக வாழ்ந்து  
சாதாரண மக்களின் வாழ்வு உயர கலைஞர் அளவு பணியாற்றியவர்கள் வெகு குறைவு
பல விடயங்களில் கலைஞர் மட்டுமே இந்த வரலாறை கொண்டிருக்கிறார்.
பெரும் ஆயுத புரட்சிகளால் மட்டுமே சாத்திய படக்கூடிய பல விடயங்களை கலைஞர் அரசியல் அதிகாரத்தின் மூலமும் மக்களிடேயே மேற்கொண்ட பரப்புரைகள் மூலமும் செய்திருக்கிறார்!
சாதாரண மக்களின் வாழ்வு மேம்படுவது என்பது பல வேளைகளில் பலருக்கும்  ஏற்புடையதாக இருப்பதில்லை!  
குறிப்பாக ஆரிய ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கி இருந்த மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை உண்டாக்குவது என்பது ஆயுத போராட்டங்களை விட நுட்பமானது ஆபத்தானது!
கலைஞர் மீது இன்று வரை அந்த சக்திகளின் வன்மமும்  வசையும் கொஞ்சம் கூட குறைந்த பாடில்லை!
ஆதிக்கம் பறிபோன ஆற்றாமை ..
சாதாரண மக்களும்  சரிசமமாக வாழ்வில் உயர்வதை  ஆண்ட பரம்பரையில் எப்படி சகித்து கொள்ளும்?

இந்தியா கூட்டணி தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை! தபால் வாக்குக்களை முதலில் எண்ணி அறிவிக்க வேண்டும்

 tamil.oneindia.com - Mani Singh S :  டெல்லி: இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர். 3 விஷயங்களை வலியுறுத்தி தேர்தல ஆணையத்திடம் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, திமுக எம்பி டிஆர் பாலு உள்ளிட்டோர் மனு ஒன்றை அளித்தனர்.
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது.
லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், ஜூன் 04 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கான முழு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

கலைஞரை சந்தித்த ரணில் விக்கிரமசிங்கா - ஈழப்பிரச்சனைக்கு கலைஞர் மாதிரி யாரும் ஆலோசனை தரவில்லை என்று கூறினார்!

 ராதா மனோகர் : ஒரு முறை (கலைஞர்) முதலமைச்சர் அலுவலகத்தில இலங்கை எதிர்க்கட்சி தலைவராக இருந்த,
இப்போது அதிபராக இருக்க கூடிய திரு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வந்து சந்தித்தார்.
அப்போது கலைஞரும் ரணில் விக்கிரமசிங்க இரண்டுபேர்  மூன்றாவதாக என்னை மட்டும் நிற்க சொன்னார் .
முக்கியமான விஷயங்களை ஆங்கிலத்தில் சொல்வதற்காக என்னை வைத்து கொண்டார்
அப்போது இலங்கையில் நடந்த குழப்பங்கள் ஈழத்தமிழர்கள் விடுதலை புலிகள் இந்த பிரச்சனை பற்றி எல்லாம் இரண்டுபேரும் விவாதித்து கொண்டிருந்தார்கள்
அப்போது கலைஞர் வந்து ஒரு சஜஷன் . முக்கியமான ஒரு சஜஷசனை (ஆலோசனை) சொல்றேன்ன்னுட்டு சொன்னார்.
அப்ப அவர் சொன்னார் நீங்க வந்து ஆடோனாமி என்று சொல்றீங்க .. அவங்க வந்து செப்பரேஷன் தனி ஈழம்னு கேக்கிறாங்க
நீங்க மானில சுயாட்சி .. மாநிலத்திற்கு அதிக அதிகாரம்  ... இப்படியெல்லாம் போட்டு கன்பியூஸ் பண்ணிட்டு இருக்கிறீங்க
அவங்க இந்த வம்பே வேண்டாம் . நாங்க தனி நாடாவே இருந்துகிறோம் ..

பாஜக இந்திய ஜனநாயகத்தை படுகுழிக்குள் தள்ள முயல்கிறது

ராகுல் காந்தி : இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெறும்! மோடியின் நாடக கருத்துக் கணிப்புக்களை நம்பவேண்டாம் "It is not exit poll, it is Modi fantasy poll."

 மாலை மலர் :   புதுடெல்லி பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.
நேற்று மாலை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க.வே 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்தன.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் காங்கிரஸ் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.
வாக்கு எண்ணிக்கையின் போது எப்படி நடந்து கொள்வது என்பது தொடர்பாக இந்த ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்துக்கு வர முடியாத சில தலைவர்கள் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்றனர்.