சனி, 1 பிப்ரவரி, 2020

கல்வி உரிமையைப் பறிக்கும் பார்ப்பனர்கள் ....பேரா. கருணானந்தன் Prof. Karunanandan வீடியோ


சங்க இலக்கியத்தில் புலவர்கள் ஒரே சமுக பிரிவை சார்ந்தவர்கள் அல்ல .
தமிழில் .. இன்றுள்ள நிலைமையில் தமிழின் மிக தொன்மையான இலக்கியம் சங்க  இலக்கியம்.
சங்க இலக்கியத்துக்கு நூற்று கணக்கான புலவர்கள் தங்கள் புலமையை தந்துள்ளார்கள் .
சமஸ்கிருததின் தொன்மை இலக்கியம் என்ன ? ரிகிவேதம் !
ரிக்வேதத்தில் 1029 பாடல்கள் . இதை எழுதியவர்கள் அனைவருமே ஒரு பிரிவை சார்ந்தவர்கள் .. புரோகித கும்பல்!
புரோகிதம் அல்லாத வெறும் யாரும் அதை எழுதவில்லை.
ரிக்வேதம் என்பது இறை வேண்டுதலே அன்றி வேறுதுவும் அல்ல.
ரிஷிகள் என்று அவர்கள் சொல்வார்கள் ..  அவர்கள் முற்றும் துறந்த முனிவர்கள் அல்ல.
அனைத்து பற்றியும் கொண்ட நபர்கள் .
அந்த நபர்களுக்கு ஆதரவாகத்தான் அந்த இலக்கியங்கள் எழுதப்பட்டன.
அந்த ரிக்வேதத்தில் இரண்டே இரண்டு அரசகுல பெண்கள் தங்கள் கருத்துக்களை சொல்வதாக வருகிறதே தவிர அங்கே பெண்களுக்கும் இடமே இல்லை.
பிராமணர் அவர்களை சார்ந்த ஓரிரு சத்திரியர்கள்
இந்த சத்திரியர்களுக்கு கொடுத்தால் கூட அவர்களும் பிராமணர்களாக இருந்திருப்பார்களோ என்ற கதை ....
அங்கே பன்முக தன்மை இல்லை ..
அடித்தள மக்களது உணர்வுகள் அங்கே இல்லை.
ஆனால் அந்த ரிக்வேதம் என்பது கிருஷ்ண வர்ணம் கொண்ட மக்களை எப்படி அழிப்பது என்பதற்காக இந்திரன் போன்ற தேவர்களை வேண்டுதல்.
தங்களது எதிரிகளை பற்றி மிக சிறப்பாக சொல்லியிருக்கிரர்கள். வேற யாரும் சொல்ல வேண்டியதில்லை ..எங்களது எதிரிகளை இந்திரனே அழிப்பாயாக.
எந்த எதிரிகள்?
இந்த எதிரிகள் கரு நிறத்தவர்கள் ... கிருஷ்ண வர்ணம்
இந்த எதிரிகள் சப்பையான மூக்கை கொண்டவர்கள்.
இந்த எதிரிகள் கோட்டை கொத்தளங்களில் வாழ்பவர்கள்.
இந்த எதிரிகள் அணைகளை கட்டி நீரை தேக்கி வேளாண்மையை பெருக்கியவர்கள்.
இந்த எதிரிகள் எங்களுக்கு தெரியாத மொழியை பேசுபவர்கள்.
இவர்கள் பெண்களை தெய்வமாக வழிபடுகின்றனர்
இவர்கள் லிங்கங்களை வழிபடுகின்றனர்.
இவர்களது படைகளில் பெண்கள் போர் வீரர்களாக இருக்கின்றனர்.
இதையெல்லாம் நீங்கள் ஒப்பிட்டு பார்த்தால் வேதத்துக்கு முந்திய சிந்து வெளி நாகரீகத்தில் அனைத்தும் இருக்கிறது .
நம்மவர்கள் !

பாஜக ஐடி விங் ரஜினிக்காக முழுநேரம் வேலை செய்கிறது. ..பார்ப்பன ஊடக புரோக்கர்கள்...

CAA பற்றி, குழந்தைகளுக்கான பொதுத்தேர்வு பற்றி வாய்திறக்காத
ரஜினிகாந்த் ஏன் 50 ஆண்டுகள் பழமையான அரசியல் நிகழ்வைப் பற்றி பொய் பேசினார்? நிற்க.
பாஜக துணையுடன், அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஊடக புரோக்கர்கள் துணையுடன், அவர்கள் போட்டிருக்கும் "வருமான வரி வழக்கு வாபஸ்" எனும் பிச்சையின் துணையுடன் பெரியாரைப் பற்றி அவதூறு பேசியவர்தான் ரஜினிகாந்த். அதுமட்டுமல்லாமல், பேசிமுடித்து அது பிரச்சினை ஆனவுடன் சுப்பிரமணியசாமிக்கு ஃபோன் செய்து, "சப்போர்ட் பண்ணுங்க சார்," என கெஞ்சிக் கேட்டிருக்கிறார். அதை சுப்பிரமணியசாமி ஆங்கில ஊடகங்களில் போட்டுடைத்துவிட்டார். கோடி கோடியாக பணத்தைக் கொட்டி "ட்ரால் ஆர்மியாக" செயல்படும் பாஜக ஐடி விங் ரஜினிக்காக முழுநேரம் வேலை செய்கிறது. பாண்டே போன்ற பார்ப்பன ஊடக புரோக்கர்கள் ரத்தம் வரும் அளவுக்கு ரஜினிக்கு சொறிந்து விடுகிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க இன்னொரு பக்கம் பெரியாரியர்களும், பொதுமக்களும் ரஜினியின் சாயம் காவி அல்ல, நிறமே காவிதான் என புரிந்துகொண்டு அவரை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பியர்கிரில்ஸ் நிகழ்ச்சியில் ரஜினிக்கு அடிபட்டுவிட்டது என செய்திபோட்டால் பாரிசாலனுக்கு பஜாஜ் நிறுவனத்தில் 'அடிப்பட்ட' போது செய்ததைப் போல ஆயிரக்கணக்கில் 'ஹாஹா' ரியாக்ட் செய்துவைக்கிறார்கள்.
"இது தானா சேர்ந்த கூட்டம்," என ரஜினி வேண்டுமானால் பாலகுமாரன் வசனத்தைத்
திரையில் பேசியிருக்கலாம்.

டெல்லியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு! வீடியோ


மின்னம்பலம் : டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இரண்டாவது முறையாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா மில்லியா பகுதியில் ஊர்வலம் சென்றவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட கோபால் என்னும் 17 வயது நபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் மீண்டும் துப்பாக்கி சூடு நடந்திருப்பது பதட்டமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. : “என் மீது கை வைத்தால் சிஎம் ஆபீஸ் வரை சிக்கும்”

 டி.என்.பி.எஸ்.சி. : “என் மீது கை வைத்தால் சிஎம் ஆபீஸ் வரை சிக்கும்”மின்னம்பலம் : -எச்சரிக்கும் சித்தாண்டி தத்தளிக்கும் சிபிசிஐடி டிஎன்பிஎஸ்சி ஊழலில் விசாரணை, கைது என ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தாலும் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்படும் காவலர் சித்தாண்டி இப்போது வரை சிக்கவில்லை.
டி.என்.பி.எஸ்.சி. கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், பல அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
குருப் 4 முறைகேடு விவகாரத்தில் ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி தட்டச்சர் மாணிக்கவேல், பார்சல் சர்வீஸ் வாகன ஓட்டுநர் கல்யாணசுந்தரம் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் முக்கிய இடைத்தரகர்களாகச் செயல்பட்ட ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனுக்கு உடந்தையாக இருந்ததாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடுத்தர மக்களை நடுத்தெருவில் நிறுத்தும் பட்ஜெட்... மு.க. ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: இருட்டறையில் கருப்பு பூனையை தேடும் வீண் முயற்சியை போல் பட்ஜெட் உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பொருளாதார தேக்கநிலை, வேலைவாய்ப்பின்மை, நலிவடையும் கிராமப்புற வளர்ச்சி பற்றி மத்திய அரசு சிறிதும் கவலைப்படவில்லை என ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 மிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை; திட்டங்களும் கிடைக்கவில்லை! "ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி" தவிர வேறு எந்த ஒரு உருப்படியான அறிவிப்பும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவில்லை.விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் வருமானத்தை பெருக்கிடவும், வேலை வாய்ப்புகள் இழப்பு ஏற்படாமல் தடுத்து, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும்- எவ்வித ஆக்கபூர்வமான திட்டங்களும் இல்லை. "விவசாயிகளின் சூரிய ஒளி மின்சக்தி மோட்டார்" என்று கூறி அவர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தைத் துண்டிக்க, மத்திய பா.ஜ.க. அரசு துடிக்கிறது.
 சீர்குலைப்பு சீர்குலைப்பு கல்விக்கு நிதியைக் குறைத்து- மாணவர்கள்- குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வியைப் பாழ்படுத்தும் வகையிலும், சமூக நீதிக் கொள்கையின் கட்டுமானத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் பா.ஜ.க. அரசு தொடர்ந்து நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது.

திமுக வரலாற்றில் முதல் முறையாக குத்துவிளக்கு ஏற்றல்- மங்கல இசை.. திருச்சியில் திருப்பம்!

Trichy Conference: DMK to compromise Dravidian ideology? tamil.oneindia.com : திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றிலேயே முதல் முறையாக அக்கட்சியின் மாநாடு ஒன்று குத்துவிளக்கேற்றப்பட்டு மங்கல இசையுடன் தொடங்கப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 திராவிட கொள்கைகளில் இருந்து திமுக விலகிச் செல்கிறதோ என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரியில் திமுகவின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு இன்று தொடங்கியது.
இம்மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்தும் 30,000 பேர் பங்கேற்றுள்ளன்னர். பொதுவாக திமுகவின் எந்த ஒரு மாநாடாக இருந்தாலும் கட்சி கொடி ஏற்றுதல் என்பது முதலில் நடைபெறும். திமுகவின் அனைத்து மாநாடுகளிலும் கட்சி பிரசார பாடல்கள் குறிப்பாக நாகூர் ஹனீபாவின் பாடல்கள்தான் ஒலித்து கொண்டே இருக்கும்.
கொடி ஏற்றிக் கொண்டு இருந்தாலும் இப்பாடல்கள் பின்னணியில் ஒலிக்கும். இதனைத்தான் அத்தனை திமுக மாநாடுகளிலும் கட்சி தொண்டர்கள் பார்த்து வந்துள்ளனர். ஆனால் திருச்சியில் இன்று நடைபெற்ற திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு அக்கட்சியில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்திருக்கிறது.

ஒரே நாளில் 78,500 பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ( கட்டாய) ஓய்வு

  மாலைமலர் :  ஒரே நாளில் 78 ஆயிரத்து 500 பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப  ஓய்வு  பெற்றனர். அவர்களுக்கு ரூ.70 ஆயிரம் கோடி பணப்பலன்கள் கிடைக்கும். புதுடெல்லி :பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., கடுமையான ந‌‌ஷ்டத்தில் இயங்கி வருகிறது. பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு ஒரு வழிமுறையாக, ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.) திட்டத்தை பி.எஸ்.என்.எல். அறிவித்தது. 50 வயதை தாண்டிய எந்த ஊழியரும் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தது. அதை ஏற்று, சுமார் 78 ஆயிரத்து 500 ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தனர். பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அதற்கு ஒப்புதல் அளித்தது.& இந்நிலையில், 78 ஆயிரத்து 500 பேரும் நேற்று விருப்ப ஓய்வில் சென்றனர். இதனால், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் எண்ணிக்கை பாதிக்கு பாதி குறைந்துள்ளது.
இவர்களுடன் 6 ஆயிரம் ஊழியர்கள் பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றுள்ளனர்.
ஊழியர்களுக்கான சம்பள செலவாக பி.எஸ்.என்.எல்.லுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 272 கோடி செலவாகி வந்தது. இந்த செலவு, இனிமேல் ரூ.500 கோடியாக குறையும்.

திருச்சிக்கு 3 மாவட்ட செயலாளர்கள் நியமனம்; திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு

தினகரன் : சென்னை: கே.என்.நேரு முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டதால் திருச்சி மாவட்டத்தை 3-ஆக பிரித்து 3 பொறுப்பாளர்களை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திருச்சி வடக்கு மாவட்ட செயலாளராக காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக வைரமணி மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

BBC : 2020-2021ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை ( பட்ஜெட்)

பட்ஜெட் பற்றி நிர்மலா சீதாராமன் என்ன சொல்கிறார்? வெளிநாடுவாழ்
இந்தியர்கள் வருமானவரி கட்ட வேண்டுமா? 2020-2021ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று (சனிக்கிழமை) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பல்வேறு நிதியமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:
தனிநபர் வருமானவரியில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் மக்களின் சேமிப்பை மட்டுப்படுத்தாதா ?
வரிவிதிப்பு முறையை எளிமைப்படுத்துவதற்காகவே இந்த சீர்த்திருத்தங்களை கொண்டுவந்துள்ளோம். தனிநபர் வருமானவரி விதிப்பு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதன் மூலம், மக்களின் பணம் அவர்களது கையிலேயே இருக்கும். நடுத்தர வர்க்க குடும்பங்களை மனதில் கொண்டே வருமானவரி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிவிதிப்பில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அதே முறையையே இங்கேயும் கையாண்டுள்ளோம். அதாவது, வருமானவரியில் விலக்குகள் வேண்டுமானால், பழைய வரிவிதிப்பு முறையையும், இல்லையென்றால் புதிய முறையையும் பின்பற்ற முடியும்.
வெளிநாடுவாழ் இந்தியர்களும் வருமானவரி கட்ட வேண்டுமா?
இந்தியாவை சேர்ந்த ஒருவர் ஒரு குறிப்பிட்ட நாட்டில் 240 நாட்களுக்கு மேல் வசித்தால்தான் அவருக்கு இந்தியாவில் வருமானவரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். அதே போன்று, இந்தியாவை சேர்ந்த ஒருவர் எந்த ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டிலும் தொடர்ந்து வசிக்காமல் இருந்தால் அவர் பெறும் வருமானத்துக்கு இந்தியாவில் வரி செலுத்த வேண்டும் என்ற இரண்டு மாற்றங்களை முன்மொழிந்துள்ளோம்.
புதிய வருமானவரி விதிப்பு முறையில் அனுமதிக்கப்படும் விலக்குகள் என்னென்ன?

துரைமுருகன் : அன்று இரவு ஸ்டாலின் தூங்கியிருந்தால் இன்று இத்தனை பேர் வந்திருக்க முடியாது.

தேர்தல் அதிகாரியை  ‘சிக்க’வைத்த துரைமுருகன்
மின்னம்பலம் : தேர்தல் அதிகாரியை ‘சிக்க’வைத்த துரைமுருகன் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் அதிகளவில் வெற்றிபெற ஸ்டாலினும் ஒரு காரணம் என துரைமுருகன் பேசியுள்ளார்.< ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுகவை விட திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றது. வாக்கு எண்ணிக்கை சமயத்தில் திமுக வெற்றிபெற்ற பல இடங்களில் அதிகார பலம் காரணமாக ஆளுங்கட்சியான அதிமுக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது என திமுக குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக வாக்கு எண்ணிக்கை நடந்த ஜனவரி 2ஆம் தேதி டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் மாநில தேர்தல் ஆணையத்திற்கு பல முறை சென்று மனு அளித்தனர். ஒரு கட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினே நேரடியாகச் சென்று, தேர்தல் அதிகாரிகளை சந்தித்து, புகார் அளித்தார்.
இந்த நிலையில் இந்த விஷயங்களை நேற்று (ஜனவரி 31) திருச்சி கேர் கல்லூரியில் நடந்த திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் விளக்கமாகப் பேசினார்.

ஒரே நாளில் 45 பேர் மரணம்.. 11,000 பேருக்கு பாதிப்பு.. சீனாவில் தீவிரம் அடைந்த கொரோனா.. அதிர்ச்சி!

tamil.oneindia.com : பெய்ஜிங்: கொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 258 ஆகியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் எல்லோரும் நினைத்தை விட வேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில், முதல் ஒருவாரம் மட்டும் கொரோனா வைரஸ் மிக மெதுவாக பரவியது. ஆகவே இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. மக்கள் யாரும் இதனால் பெரிய அளவில் இறக்க மாட்டார்கள் என்று சீன அரசு கருதியது. இதனால் சீன அரசு இதில் மெத்தனமாக இருந்தது. ஆனால் போக போக கொரோனா வைரஸ் வேகம் எடுக்க தொடங்கியது. கொரோனா வைரஸ் காரணமாக சீனா மொத்தமாக நடுங்கிப் போய் உள்ளது. சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய இந்த வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவு கூடியது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது. இதனால் சீனாவின் வுஹன் நகரம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் வுஹன் நகரம் மூடப்பட்ட பிறகும் கூட இந்த வைரஸ் வெளியே பரவி வருகிறது.
தற்போது இந்த வைரஸ் இன்னும் தீவிரம் அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 258 ஆகியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 45 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

குரூப்-4 தேர்வை தொடர்ந்து குரூப்-2 தேர்விலும் தவறு நடந்தது உறுதி போலீஸ் விசாரணைக்கு டி.என்.பி.எஸ்.சி. பரிந்துரை

குரூப்-4 தேர்வை தொடர்ந்து குரூப்-2 தேர்விலும் தவறு நடந்தது உறுதி போலீஸ் விசாரணைக்கு டி.என்.பி.எஸ்.சி. பரிந்துரை தினத்தந்தி :  குரூப்-4 தேர்வை தொடர்ந்து குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்து இருப்பது உறுதி ஆகியுள்ளது. இது தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு தேர்வாணையம் பரிந்துரை செய்து இருக்கிறது. சென்னை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குருப்-4 தேர்வில் மோசடி நடந்திருப்பது அம்பலம் ஆனது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி. சி.ஐ.டி. போலீசார் டி.என்.பி.எஸ்.சி. ஆவண குமாஸ்தா ஓம்காந்தன் உள்பட 14 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சென்னை முகப்பேரை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் டி.என். பி.எஸ்.சி. தட்டச்சர் மாணிக்கவேல் (வயது 26), கூரியர் வேன் டிரைவர் வே.கல்யாணசுந்தரம் (31) ஆகிய 2 பேரும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் மாணிக்கவேல் மதுராந்தகத்தையும், டிரைவர் கல்யாணசுந்தரம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தையும் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இயேசு சிலுவையில் அறையப்பட்டதன் பின்னணி..

Krishnavel T S  :  இயேசு சிலுவையில் அறையப்பட்ட கதை நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் அதன் பின்னணியில் வேறு ஒரு சுவாரசியமான சம்பவம் உள்ளது
பைபிளை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் ஒரு விஷயம் புரியும்
இயேசு பல இடங்களில் பல்வேறு விதமாக தனது பிரச்சாரங்களை செய்து வந்தாலும் இந்த யூத பூசாரிகளுக்கு பயந்துகொண்டு அவர் எப்போதுமே தனது பிரச்சாரங்களை மறைமுகமாகவே பேசுவார் செய்வார்
அர்த்தத்தை நேரடியாக சொல்ல மாட்டார் ஆனால் நிச்சயமாக ஒவ்வொரு முறையும் "நான் உங்களுக்கு உண்மையாகவே சொல்கிறேன்" "I am telling you the truth "என்று ஒரு பன்ச் டயலாக்கை சேர்த்துக் கொள்வார்
ஒவ்வொரு முறையும் பிரச்சாரம் செய்யும்போது யூத பூசாரிகளும் காவலர்கள் வரும்போது பட்டென்று எஸ்கேப் ஆகி விடுவார் அந்த இடத்தைவிட்டு
ஆரம்பத்தில் வெறும் கருத்துக்களை மட்டும் பிரச்சாரம் செய்து வந்தார்
ஆனால் அவர் கருத்துக்களை ஒரு சாரார் ஏற்றுக்கொண்டாலும் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை
எனவே எல்லோரையும் கவர சில வித்தைகளை செய்ய தொடங்கினார் அதன் ஒரு பகுதிதான் ஆட்களை செட்டப் செய்து முடவனை நடக்க வைத்தது குருடனை பார்க்கவைத்தது போன்றவை
இருப்பினும் மக்கள் அவரை தடாலடியாக திரும்பிப் பார்க்க வைக்க இறுதியாக ஒரு ஏற்பாடு செய்தார்

வெள்ளி, 31 ஜனவரி, 2020

சீனாவில் நடுத்தெருவில் சுருண்டு விழும் மக்கள் .. வுஹான் நகர கொடுமை .. வீடியோ


tamil.oneindia.com  :  சீனாவில் சாலையில் சுருண்டு விழும் மக்கள் பீஜிங்: நகரில் தெருவிலேயே சடலம் விழுந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது...! சீனாவின் வுஹான் நகரில் ஒரு பர்னிச்சர் கடை வாசலில் இந்த சடலம் விழுந்தது கிடந்தது
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸின் துவக்கம் சீனாவின் வுஹான் நகரில்தான் துவங்கியது.. இந்த பகுதி எப்போதுமே கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் பிஸி பகுதி ஆகும். நிறைய ஷாப்பிங் மால்கள், கடைத்தெரு நிறைந்த இடம்.. ஆனால் இப்போது வெறிச்சோடி கிடக்கிறது.. இப்படி நடமாட்டம் இல்லாமல் இருந்ததே கிடையாதாம்.
இந்நிலையில், 60 நபர் மதிக்கத்தக்க ஒருவர் இந்த தெருவில் சடலமாக விழுந்து கிடக்கிறார்.. ஒரு பர்னிச்சர் கடை வாசலில் தரையிலேயே சுருண்டு விழுந்துள்ளார்.. முகமூடி அணிந்திருக்கிறார்.. கையில் பிளாஸ்டிக் ஷாப்பிங் பேக் ஒன்றும் இருந்தது. ஆனால் யாருமே இவரை மீட்கவில்லை.
அந்த தெருவில் ஒன்றிரண்டு பேர் மாஸ்க் அணிந்தபடி நடமாடுகிறார்களே தவிர, யாருமே சடலத்தின் அருகே போகவில்லை. அதே வழியில் நிறைய ஆம்புலன்ஸ்களும் செல்கின்றன.. அந்த பகுதி மட்டும் வாகன நெரிசலாக காணப்படுகிறது. ஆனால், தெருவில் விழுந்த கிடந்த இந்த சடலத்தை யாருமே மீட்க முன்வரவில்லை. கருப்பு நிற உடை அணிந்த நபரை ஒருவர் தூரமாக நின்று எட்டி பார்த்தபடி உள்ளார்.

இரும்புக் கம்பி சித்ரவதை; 2-வது திருமணம்?!’- கேரளப் பெண்ணின் புகாரால் சிக்கிய குமரி அதிமுக பிரமுகர்

நளினகுமாரி, ஷாஜின் காந்தி திருமணத்தின்போதுஅ.தி.மு.க பிரமுகர் மீது புகார் அளித்த நளினகுமாரிvikatan - சிந்து ஆர் : திருமணம் ஆன அன்று இரவு அவரது போனுக்கு ஒரு பெண் மெசேஜ் அனுப்பியதைப் பார்த்ததும் அவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதைப் புரிந்துகொண்டேன். கேரள மாநிலம் பால்ராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் மகள் நளினகுமாரி (36). இவரும் சுசீந்திரம் அக்கரை பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம் பெண்கள் மாவட்ட துணைச் செயலாளர் ஷாஜின் காந்தியும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இதற்கிடையில், ஷாஜின் காந்தி வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும் அவர் தன்னை தாக்கியதில் கை உடைந்துவிட்டதாகவும் நளினகுமாரி நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதிமுக கூட்டுறவு கடன் சங்க தலைவி பிரேமா விபச்சார வழக்கில் கைது!

Mahalaxmi : இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய அதிமுக பிரமுகர் பிரேமா கைது ....
அதிமுகவின் மாவட்ட பிரதிநிதியாம்..
உம்ராபாத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவரும்கூட.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உம்ராபாத் பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் நிறைய விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
லாட்ஜ்கள் தவிர, தனி வீடுகள் எடுத்தும் இந்த விபச்சாரம் நடப்பதாகவும், இதற்காகவே வெளிமாநிலங்களில் இருந்து இளம்பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் செய்கிறார்கள் அடுத்தடுத்த தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன.
இதுகுறித்த உடனடியாக உயரதிகாரிகளுக்கு விஷயம் சென்றது, அதனால் ரகசிய விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது
அதனடிப்படையில், போலீசாரும் விபச்சாரம் நடப்பதாக சொல்லப்பட்ட லாட்ஜ்கள், வீடுகளை ரகசியமாக கண்காணித்தனர்..அப்போதுதான் சம்பந்ததப்பட்ட இடங்களில் ஏராளமான இளம்பெண்கள் நடமாட்டத்தை அறிந்தனர்
மேலும் இதற்கெல்லாம் காரணம் பிரேமா என்ற பெண் என தெரியவந்தது..இவர் உமாராபாத் பகுதியை சேர்ந்தவர்தான்.. அதிமுகவின் மாவட்ட பிரதிநிதி... உமராபாத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவரும்கூட.
இத்தனை பொறுப்புகளை வகித்த பிரேமாதான் இந்த தொழிலை நடத்தி வந்துள்ளார்.

தர்பார் நஷ்டம்: களமிறங்கும் அமைப்புகள்!

மின்னம்பலம்:  தமிழ் சினிமா வியாபார வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பேசு பொருளாக மாறி இருக்கிறது தர்பார் படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டம். தர்பார்
திரைப்படத்தை வாங்கி வெளியிட்டதின் மூலம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி இது சம்பந்தமாக பேசுவதற்கு இப்படத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த், இயக்குனர் முருகதாஸ் ஆகியோரை சந்திப்பதற்கு நேற்றிலிருந்து வினியோகஸ்தர்கள் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று மாலை வரை அதற்கு எந்தவிதமான உரிய பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம் தர்பார் படத்தின் மூலம் யாருக்கும் நஷ்டம் ஏற்படவில்லை என்று ஊடகங்கள் மூலமாக மறைமுக பிரச்சாரத்தை படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தொடங்கியுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. படத்தை தயாரித்த லைகா நிறுவனம், படத்தை வாங்கி விநியோகம் செய்தவர்கள் திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் இவர்கள் வெளிப்படையாக விவரங்களை வெளியிட்டால் மட்டுமே தர்பார் லாபமா நஷ்டமா என்பது தெரியவரும்.
திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இணைந்து உண்மையான வசூல் விபரத்தையும் வியாபார தகவலையும் வெளியிடுவதற்கான முயற்சியை இன்று மாலை தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

முன் ஜாமீன் முயற்சியில் செந்தில்பாலாஜி ...

 கைது? முன் ஜாமீன் முயற்சியில் செந்தில்பாலாஜிமின்னம்பலம் : முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜியின் வீடுகள், அலுவலகங்களில் இன்று (ஜனவரி 31) சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.
சென்னை மத்திய குற்றப் பிரிவு டிஎஸ்பி தலைமையில் தனிப்படைகள் சென்னை, கரூர், திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் அமைந்துள்ள செந்தில்பாலாஜியின் வீடு, அலுவலகம், அவரது தம்பியின் வீடு, சென்னை மந்தவெளியில் இருக்கும் செந்தில்பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினார்கள். 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது செந்தில்பாலாஜி போக்குவரத்துக் கழக வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக அம்பத்தூர் கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காலை போலீஸ் சோதனை நடப்பதாக காவல்துறை வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

தமிழக மனிதச் சங்கிலி போராட்டம் : CAA-வுக்கு எதிராக .... வீடியோ


kalaignarseithigal.com  :   குடியுரிமை திருத்தச்சட்டம் எதிராக மாநிலம் முழுவதும் நடைபெற்ற மனிதச் சங்கிலி இயக்கத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கட்தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் இன்று மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெற்றது.
கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக திட்டமிடப்பட்டு நடைபெற்ற இந்த மனித சங்கிலி நிகழ்ச்சிக்காக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களிடம் ஆதரவு கோரியிருந்த நிலையில் அனைத்துக்கட்சிக்களும் மனிதச் சங்கிலி இயக்கத்தில் பங்கேற்கும் என அறிவித்திருந்தனர்.
அதுமட்டுமின்றி, இந்த மனிதச் சங்கிலி இயக்கத்திற்கு மக்களைப் பங்கேற்க வைப்பதற்காக சுமார் 10 லட்சம் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்.அருணன் தெரிவித்தார்.
இந்நிலையில் நடைபெற்ற மனிதச் சங்கிலி இயக்கம் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் கட்சி வேறுபாடுன்றி ஒன்றுகூடிய மக்கள், மனிதச் சங்கி இயக்கத்தில் பங்கேற்றனர்.

கொரோனா: உலக சுகாதார எமர்ஜென்சி பிரகடனம்!

கொரோனா: உலக சுகாதார எமர்ஜென்சி பிரகடனம்!மின்னம்பலம் : சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் ஒரு வாரத்தில் பத்து மடங்கு அதிகரித்திருப்பதால், நேற்று (ஜனவரி 30) இரவு உலக சுகாதார நிறுவனம் (World Health Organaisation) உலகளாவிய சுகாதார அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியிருக்கிறது.
ஐநாவின் சுகாதார அமைப்பான உலக சுகாதார நிறுவனம் இந்த சர்வதேச அவசர நிலையை ஒரு அசாதாரண நிகழ்வு என்று வரையறுக்கிறது. சீனாவுக்கு மட்டுமல்ல, மற்ற நாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதால் இந்த வைரஸை ஒடுக்க சர்வதேச முயற்சி தேவை என்றும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஜனவரி 30ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு தலைமையகத்தில் ஊடகங்களுடன் பேசினார்.
அப்போது அவர், “இந்த அறிவிப்புக்கு முக்கிய காரணம் சீனாவில் என்ன நடக்கிறது என்பது மட்டுமல்ல. மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது என்பதன் காரணமாகவே. சீனாவிலிருந்து இந்த வைரஸ் பல நாடுகளுக்கும் பரவுவதே எங்கள் கவலை. பலவீனமான சுகாதார அமைப்புகள் கொண்ட நாடுகள் இதைச் சமாளிக்கத் தயாராக இல்லை என்பது மேலும் கவலைக்குரியது. இருப்பினும், ஐநா சுகாதார அமைப்பு இந்த அவசர நிலையால் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கவில்லை.

மு,க, அழகிரி : தற்போது மறப்பது எளிதாகிவிட்டது .. அதற்கு நானே உதாரணம் பிறந்த நாள் விழாவில் .. வீடியோ


நக்கீரன் :  மதுரை வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தனது ஆதரவாளர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு, தனது 69வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து
அவர் பேசுகையில், தற்போது மறப்பது எளிதாகி விட்டதுஅதற்கு நானே உதாரணம். அதிமுகவை சேர்ந்த எம்எல்.ஏ., எம்பிக்கள் எனக்கு வணக்கம் செலுத்தி பேசுகின்றனர். ஆனால், என்கூட பழகியவர்கள், என்னை சந்தித்து பேசுவதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலைமை எப்போது மாறப்போகிறது என்பது தெரியவில்லை. மாறவில்லை என்றால் அவ்வளவு தான். நான் நினைத்ததை முடிப்பேன். மற்றவர்கள் மட்டும் தான் கலைஞரின் பிள்ளை அல்ல ; நானும் கலைஞரின் பிள்ளை தான் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, தமிழ்நாடு இருக்க வேண்டுமானால் நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.

டிஎம் கிருஷ்ணாவின் மிருதங்க நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு


கலாக்ஷேத்ராவில் டிஎம் கிருஷ்ணாவிற்கு அனுமதி மறுப்புBBC : மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து Sebastian & Sons என்ற பெயரில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டிஎம் கிருஷ்ணா எழுதியுள்ள புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கு அளித்த அனுமதியை கலாக்ஷேத்ரா திரும்பப் பெற்றுள்ளது. புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகள் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து டி.எம். கிருஷ்ணா Sebastian & Sons என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம் மிருதங்கம் செய்யும் கலைஞர்களுக்கும் மிருதங்கம் வாசிக்கும் கலைஞர்களுக்கும் இடையிலான சங்கடமான உறவு குறித்து விரிவாகப் பேசுகிறது. மிருதங்கம் பெரும்பாலும் மாட்டுத் தோலில் செய்யப்படும் நிலையில், மிருதங்கம் வாசிப்பவர்கள் பெரும்பாலும் மாட்டைப் புனிதமாகக் கருதுவதால், இந்த உறவு மிகச் சிக்கலான ஒன்றாகவும் இருக்கிறது.

`கனிமொழி : நாங்கள் 10 பேர், அவர்கள் 9 பேர்... பிறகு எப்படி வெற்றி?! கோவில் படி ஒன்றியம்

இ.கார்த்திகேயன் - விகடன் :
சாலை மறியல்``கோவில்பட்டி யூனியன் மறைமுகத் தேர்தலில் அ.தி.மு.க நிச்சயம் வெற்றிபெறும் என அமைச்சர் கடம்பூர் ராஜு வெளிப்படையாகப் பேட்டி கொடுத்ததிலேயே மர்மம் உள்ளது” எனக் கனிமொழி எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.
சாலை மறியலில் கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 யூனியன்களில் கோவில்பட்டி யூனியனுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்ட ஜெயசீலனுக்கு (கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்) நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. கோவில்பட்டி ஒன்றியத்தில் மொத்தம் 19 உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில், 7 தி.மு.க கவுன்சிலர்கள், ஒரு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர், ஒரு சி.பி.எம் கட்சியின் கவுன்சிலர், 4 அ.தி.மு.க கவுன்சிலர்கள், ஒரு முக்குலத்தோர் புலிப்படையின் கவுன்சிலர், ஒரு தே.மு.தி.க கவுன்சிலரும் இதுதவிர 4 சுயேச்சை கவுன்சிலர்களும் உள்ளனர்.

BBC : இந்தியாவில் கொரோனா வைரஸ்: சீனாவில் இருந்து வந்த கேரள மாணவர் .. வீடியோ


கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்தில் இருந்து கேரளா திரும்பிய பெண்ணுக்கு வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அப்பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என்று கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மொத்தம் 20 பேருடைய மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அதில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். அப்பெண் அபாயகரமான நிலையில் இல்லை. அவரது உடல்நிலை சீராகவே இருக்கிறது" என்று தெரிவித்தார்.

சிறுமியை சீரழித்த வாலிபர்; 25 ஆண்டு சிறை தண்டனை .. கிருஷ்ணகிரி மாவட்ட ..

krishnagiri child incident district mahila court judgement இளையராஜா - நக்கீரன் :  கிருஷ்ணகிரி அருகே, உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்த சிறுமியை, உறவினர் மகனே சீரழித்த வழக்கில் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நாகமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரீத்திகா (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அளேசீபம் அருகே உள்ள தொட்டமெட்டரை பகுதியில் உள்ள தனது உறவினர் நாராயணப்பா என்பவர் வீட்டில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
நாராயணப்பாவின் மகன் சுதாகர் (22), சிறுமி பிரீத்திகாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு செப். 14ம் தேதியன்று, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

டி.ஆர்.பாலு மகன் திமுக இளைஞரணி துணை செயலாளர் …? அடுத்தடுத்து நிகழும் அதிரடிகள்

சுறுசுறுப்பு tamiloneindia.com : சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு மகனும், மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு திமுக இளைஞரணி துணைச் செயலாளர் பதவி தரக்கூடும் எனக் கூறப்படுகிறது.
திமுக இளைஞரணி துணைச் செயலாளராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட செயலாளராக புதிய பயணத்தை தொடங்கவுள்ளதால் அவரது வெற்றிடத்தை டி,ஆர்.பி.ராஜாவை கொண்டு நிரப்பப்பட உள்ளதாம். திமுகவில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் வரிசையாக நிகழ்ந்து வருவதால் சீனியர்கள் பலரும் அரண்டு போய் காணப்படுகின்றனர். ஆனால் அதேசமயம் இளைஞர்கள் மத்தியில் ஸ்டாலின் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வெற்றிடம் திமுக இளைஞரணி துணைச் செயலாளராக உள்ள அன்பில் மகேஷ்பொய்யாமொழி அரசியலில் தனது அடுத்தக்கட்ட பயணத்தை விரைவில் தொடங்க உள்ளார்.

வியாழன், 30 ஜனவரி, 2020

வட்டி தொழிலில் கொடிகட்டி பறக்கும் ரஜினிகாந்த் ! ஒப்புதல் வாக்குமூலம்!.. பைனான்சியர்கள் மூலம் கோடிக்கணக்கான .. காசு பணம் துட்டு மணி மணி ...

Kalai Selvi : · This Scoundrel  ( Rajni kanth) gave 2.43 Cr as loan & received 1.45 Cr as interest and says it is mere Hand loan , and IT dept with drawnnon paym of 66.50 lak IT case against this fraud fellow s His Moron only says system is corrupted and want to clean the system
வட்டிக்கு விட்டு சம்பாதித்தேன்:  ரஜினி வாக்குமூலம்!மின்னம்பலம் : நடிகர் ரஜினிகாந்த் மீதான வருமான வரி வழக்குகளை கடந்த ஜனவரி 28 ஆம் தேதி வருமான வரித்துறை வாபஸ் பெற்றதன் பின்னணியில் ரஜினி தெரிவித்திருக்கும் முக்கிய காரணம், ‘நான் வட்டிக்கு கடன் கொடுத்தேன்’ என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இன்று ட்விட்டரில், ‘கந்து வட்டி ரஜினி’ என்ற ஹேஷ்டேக் டிரண்டிங் ஆகியுள்ளது.
வருமானம் தொடர்பான முழு விவரங்களை வழங்கவில்லை என்றும்
தவறான தகவல்களை அளித்தார் என்பதற்காகவும் நடிகர் ரஜினிகாந்துக்கு 66.21 லட்சம் ரூபாயை வருமான வரித் துறை அபராதமாக விதித்தது. இதை எதிர்த்து ரஜினி வருமான வரி மேல்முறையீட்டு வாரியத்துக்கு செல்ல ரஜினிக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது. இதை எதிர்த்து வருமான வரித் துறை தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் வினித் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் முன்பு ஜனவரி 28 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சுவாமிநாதன், ‘அபராதத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாக இருந்தால், சட்ட நடவடிக்கைகள் மூலம் வழக்கை கைவிடலாம் என்று மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டதைக் கருத்தில்கொண்டு வழக்குகளை வாபஸ் பெறுகிறோம்’ எனத் தெரிவித்தார்.

திருச்சி பாஜக பிரமுகர் கொல்லப்பட்டது தனிப்பட்ட விரோதம் ... காவல் துறை ஆணையர்!

திருச்சி பாஜக பிரமுகர் கொல்லப்பட்டது ஏன்?மின்னம்பலம் : திருச்சியில் படுகொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் விஜயரகு தனிப்பட்ட விரோதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டுள்ளதாகத் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் வரதராஜு இன்று (ஜனவரி 30) தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பாலக்கரை மண்டல பாஜக செயலாளராக இருந்த விஜயரகு, கடந்த 27ஆம் தேதி காந்தி மார்க்கெட் அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். விஜயரகுவின் மகளுக்கு பாபு என்கிற மிட்டாய் பாபு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாகவும். இதன் காரணமாகக் கடந்த ஓராண்டாக இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது. விஜயரகு பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் நேற்று அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ”17 வயதான விஜயரகுவின் மகளிடம் ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்ய முயன்றதில் ஏற்பட்ட பிரச்சினைதான் கொலையில் முடிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்” என்று கூறினார்.

போலீஸ் வேடிக்கை பார்க்க .. ஜாமியா மாணவரை சுட்ட ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி ராம் பகத்.. வீடியோ


 Veerakumar- /tamil.oneindia.com : டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடி வரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மீது, போலீசாரின் முன்னிலையில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் பெயர் ராம் பகத் கோபால் ஷர்மா ( பார்ப்பான்) என்று தெரியவந்துள்ளது. 19 வயது இளைஞரான இவர் உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் என்று காவல்துறை தெரிவிக்கிறது. இதனிடையே, ராம் பகத் கோபால் சர்மா, ஃபேஸ்புக்கில் எழுதிய ஒரு போஸ்ட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.
  பேஸ்புக் பதிவு ராம் பகத் கோபால் சர்மா, தனது பேஸ்புக் பக்கத்தில், "ஒரு வேளை நான் இறந்து விட்டால், என் மீது காவிக்கொடி போர்த்தப்பட வேண்டும். ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பப்பட வேண்டும்" என்று எழுதியுள்ளார். மேலும் 2018 ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் போது உத்தரபிரதேசத்தில் அபிஷேக் குப்தா என்பவர் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கப் போவதாகவும் அவர் தனது பேஸ்புக்கில் எழுதி உள்ளார்.
சிகிச்சை இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவத்தில் கை பகுதியில் காயம் அடைந்துள்ளார் ஜாமியா பல்கலைக்கழக மாணவர் சதாப் பாரூக். கையில் ரத்தம் வழிந்த நிலையில் அவர் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

மக்கள் வரிப்பணத்தில் தேர்தல் பத்திர மோசடி.. சவுக்கு சங்கர்

savukkuonline.com : இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள், பணக்காரர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவின் அரசியல் கட்சிக்களுக்கு கோடிக்கணக்கான இந்திய ரூபாயை, நன்கொடையாக கொடுத்தபோது, அந்த பரிவர்த்தனைகளுக்கான கமிஷன், வங்கி கட்டணம், அச்சடிக்கும் செலவு, எழுதுபொருள் செலவு ஆகிய செலவுகள் அனைத்தையும், இந்தியாவின் வரிசெலுத்தும் குடிமகன்கள் ஏற்றனர் என்ற அதிர்ச்சிதரும் தகவலை, ஹப்பிங்டன் போஸ்ட் பரிசீலித்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.
நன்கொடை அளிக்கும் செல்வந்தர்களோ, நன்கொடை பெறும் அரசியல் கட்சிகளோ, இந்தத் தேர்தல் பத்திரங்களை பாதுகாப்பாக வைக்கவும், அவற்றை அச்சடிக்கவும் ஆகும் செலவுகளை ஏற்பதில்லை.   மாறாக, இதற்கான செலவு, இந்திய கூட்டு நிதியில் (Consolidated fund of India) இருந்து செலவிடப்படுகிறது. இந்த இந்திய கூட்டு நிதிக்கான வருவாய்  இந்தியாவின் நேரடி மற்றும் மறைமுக வரி வசூல் மூலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.  அதே நேரத்தில், நம்மைப் போன்ற சாதாரண குடிமக்களுக்கு வங்கி செய்யும் சேவைக்கான கட்டணங்கள், நம்மிடமிருந்தே வசூலிக்கப்படுகின்றது.

நித்தியானந்தாவின் முக்கிய சீடர்! கொலை ! காருக்குள் நிர்வாண நிலையில் சடலமாக... புதுசேரியில்

வில்லியனூர்: புதுச்சேரி தினகரன் :: புதுச்சேரி பாகூர் அருகே நித்தியானந்தாவின் முக்கிய சீடர் ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வில்லியனூர், ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல் என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் நித்தியானந்தாவுக்கு புதுச்சேரியில் உள்ள முக்கிய சீடர்களில் ஒருவராக இருந்தார்.
ஏம்பலம் பகுதியில் நித்தியானந்தா ஆசிரமம் அமைய முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அவரது பெரிய மாமியார் வசந்தா என்பவர், அவர் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்காக வஜ்ரவேலுக்கு போன் செய்துள்ளார்.
அப்போது நித்தியானந்தா பெயரில் இவர் நடத்திவரும் பேக்கரியில் இருந்த வஜ்ரவேலு தனது காரை எடுத்துக்கொண்டு வசந்தா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் இருந்து 2 இலட்சத்தை வாங்கிக் கொண்டு திரும்பியதாக கூறப்படுகிறது.
 இந்த நிலையில் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவுஸ்ரேலிய தேசிய கீதம் தமிழில் பாடுவதற்கு அரசு அனுமதி ... வீடியோ


.vanakkamlondon.com :தமிழர்களுக்கும் தமிழுக்கும் பெருமை ஏற்படுத்தும் விதமாக அவுஸ்ரேலிய நாட்டு தேசிய கீதம் தமிழில் மொழிபெயர்த்து பாடப்பட்டுள்ளது. இந்த கீதத்தை தமிழ் மக்கள் தமது நிகழ்ச்சிகளின்போது, பாடலாம் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உலகமெங்கும் தமிழர்கள் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்கின்றனர். இலங்கையில் உள்நாட்டுப் போரின் காரணமாக புலம்பெயரை்ந்த தமிழர்கள் வாழாத நாடு இல்லை என்றே சொல்ல முடியும். இந்த நிலையில் கனடாவுக்கு அடுத்தபடியாக அதிக தமிழர்கள் அவுஸ்ரேலியாவில் வாழ்கின்றனர். இந்த நிலையில் அங்கு தமிழ் மக்கள் பல்வேறு பணிகளிலும் உயர்நிலை வகித்து வருகின்றனர். அந்நாட்டில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக அந்நாட்டு தேசிய கீதத்தை தமிழில் மொழிபெயர்த்து பாட அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

புதன், 29 ஜனவரி, 2020

முஸ்லிம் பெண் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் புலம் பெயர்ந்தவர் எனப் பதிவு.. ஈரோடு இந்தியன் ஓவசீஸ் ..

bank_pass_bookதினமணி : ஈரோடு: ஈரோடு பெரியார் நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புதிதாகக் கணக்குத் துவங்கிய முஸ்லிம் பெண் வங்கிக் கணக்கு புத்தகத்தில் புலம் பெயர்ந்தவர் என பதிவானதால் சர்ச்சை எழுந்தது.
ஈரோடு பெரியார் நகர் வளைவு அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இங்கு ஈரோடு பெரியார் நகரில் வசிக்கும் டாக்டர் சலீம் மனைவி ஜஹானாரா பேகம் என்பவர் வங்கிக் கணக்குத் துவக்கினார். வங்கி மூலம் கணக்கு துவங்கி கணக்குப் புத்தகம் வழங்கினர். அதில் இரு இடங்களில் புலம் பெயர்ந்தவர்(migration)என பதிவாகி உள்ளது.< இதை அறிந்து டாக்டர் சலீம் மற்றும் சிலர் சென்று கேட்டபோது, வங்கி ஊழியர்கள் கணினியில் ஏற்பட்ட சிறு கோளாறால் அவ்வாறு பதிவாகிவிட்டது. மென்பொருள் மேம்பாட்டு பணி நடக்கிறது. அதனால் தவறுதலாக அவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

என்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..!! : ஒபரேய் தேவன் 35வருடங்களுக்கு முன்னரே கூறியது!

என்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..!!  : ஒபரேய்  தேவன்  35வருடங்களுக்கு முன்னரே கூறியது!ஓபரோய் தேவன் என்கிற இராணுவ திறமைகள் நிரம்பிய போராளி.
Godfather படப்பாணியில் 1983 ஜூலை தாக்குதலுக்குபின் தனக்கு போட்டியாக வரக்கூடியவர்களை பிரபாகரன் (#செல்லக்கிளி அம்மான் உட்பட) குறுகிய காலத்துக்குள் கொன்றார்.
இன்று அவரின் சின்னத்தம்பி தயா(படம் 2) லண்டன் சீமையிலிருந்து அவரை நினைவுகூருகிறார்.
“என்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்”….
புலிகளினால் August 14 ம் திகதி 1983 ம் ஆண்டு யாழ் நீராவியடியில் சுடப்பட்டு இறக்க முன்னர் 25 வயது நிரம்பிய ஒபரேய் (பறுவா) தேவன் கூறியது. நிறுத்தினார்களா இல்லையே… அந்தக் கூற்று இன்று எவ்வளவு நிதர்சனமாகியிருக்கின்றது. புலிகளினால் August 14 ம் திகதி 1983 ம் ஆண்டு யாழ் நீராவியடியில் சுடப்பட்டு இறக்க முன்னர் 25 வயது நிரம்பிய ஒபரேய் (பறுவா) தேவன் கூறியது. நிறுத்தினார்களா இல்லையே…
அந்தக் கூற்று இன்று எவ்வளவு நிதர்சனமாகியிருக்கின்றது. தமக்கு நிகராக மற்றொரு அமைப்பு வலுப்பெற்று விடும் என்ற குரூர எண்ணத்தினால் தனக்கு ஒரே மேசையில் பிள்ளை போல் உணவு பரிமாறிய தாயின் பிள்ளையை கொல்ல ஆட்களை அனுப்பியதை என்னவென்று சொல்ல…
; 70களின் பிற்பகுதி 80 களின் ஆரம்பத்தில் திருநெல்வேலியில் தலைமறைவுச் சந்திப்புக்கள் வழமையாக நடைபெறுகின்ற ஒரு நாள் புதிய புலிகள் என்ற அமைப்புக்குள் குழப்பமெழ அதிலிருந்து சிலர் விலக மனவேதனையில் தான் சாகப்போவதாக டெலோவின் தலைவர் தங்கத்துரை அவர்களிடம் பிரபாகரன் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிப்பது உறுதி ?



தினகரன் :அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுவது குறித்தான முடிவுகளை எடுக்க, ஏற்கனவே,  5 அமைச்சர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென்றால் தமிழகத்தின் இட ஒதுக்கீடு முறையில் பாதிப்பு ஏற்படாது என மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என தமிழக அரசு முடிவெடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது.
அதன் அடிப்படையில் மத்திய அரசு உறுதியளிக்கும் பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுமா? என 5 அமைச்சர்கள் அடங்கிய ஆய்வு செய்யவுள்ளது.>இந்த குழுவில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், மின் அமைச்சர் தங்கமணி, சட்ட அமைச்சர் சிவி சண்முகம், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளது

திருப்பதி உண்டியலில் வசூலான 80 டன் சில்லரை நாணயங்களை உருக்க முடிவு

திருப்பதி கோவில்

கிணற்றில் விழுந்த அரசு பேருந்து- உயிரிழப்பு 26 ஆக உயர்வு .. ஆட்டோவுடன் மோதி மும்பாய் ..

மீட்பு பணி
ஆட்டோவுடன் மோதி கிணற்றில் விழுந்த அரசு பேருந்து- உயிரிழப்பு 26 ஆக உயர்வுமாலைமலர் : மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளாகி கிணற்றில் விழுந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், மாலேகான் டியோலா சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும், சாலையோரம் உள்ள கிணற்றில் விழுந்தன. மேஷி காட் அருகே நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களும் மீட்பு பணிக்கு உதவினர். கிணற்றுக்குள் தலைகீழாக பேருந்து விழுந்ததால் பயணிகள் பலர் தண்ணீரில் மூழ்கினர். மேற்பகுதியில் சிக்கி பலத்த காயமடைந்தவர்கள், பின்பக்க கண்ணாடி வழியாக கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.  நேற்று இரவு நிலவரப்படி 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

பாஜக பிரமுகர் கொலை வழக்கில் மிட்டாய் பாபு கைது!

bjp party leader incident babu arrested in chennai police நக்கீரன் :பாஜக திருச்சி மண்டலத் துணைத் தலைவராக உள்ள விஜயரகு என்பவரை பரபரப்பான மக்கள் கூட்டம் நிறைந்த காந்திமார்கெட் பகுதியில்  கடந்த (27/01/2020) அதிகாலை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்பவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமைறைவாக இருந்த மிட்டாய் பாபு உட்பட இரண்டு பேரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றனர்.

BBC கொரோனா வைரஸ் பரவ சீனர்களின் உணவுப் பழக்கம் காரணமா?

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். 4500 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா தவிர வேறு எந்த நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவுகிறது என்பது குறித்தும், இந்த வைரஸ் பாதிப்பின் காரணம் வௌவால் இறைச்சி உள்ள சூப்தான் என்று கூறும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இவ்வாறான காணொளிகள் எங்கிருந்து பகிரப்பட்டது, ஏன் பரவுகிறது என்பது குறித்து பிபிசி மானிடரிங் குழு ஆராய்ந்தது.
வௌவால் சூப் காணொளிகள் கொரோனா வைரஸ் உருவானதன் காரணம் குறித்து ஆரம்பத்தில் இருந்தே மக்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். வுஹானில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகும் சீன மக்கள் வௌவால் இறைச்சி உட்கொள்கின்றனர் என்று கூறும் காணொளிகள் பலவும் அதிகமாக பகிரப்பட்டு வந்தன.
அவ்வாறு ஒரு காணொளியில் சீனப் பெண் ஒருவர் சமைத்த வௌவால் இறைச்சியை கையில் வைத்துக்கொண்டு இது கோழிக்கறியைவிட சுவையாக உள்ளது என கூறும் காணொளி பரவியது. இதனால் சீனர்களின் உணவுப்பழக்கமே இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவக் காரணம் என விவாதங்கள் எழுந்தன.
ஆனால் உண்மையில் இந்த காணொளி வுஹானிலோ சீனாவிலோ பதிவு செய்யப்படவில்லை. ஒரு பிரபல ஊடக தொகுப்பாளர், தனது பயண நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மேற்கு பசிஃபிக் பெருங்கடலில் உள்ள பலோவ் தீவில் இந்த காணொளியை பதிவு செய்துள்ளார்.

BBC :மடகாஸ்கரிலும் விளையாடப்படும் ஜல்லிக்கட்டு


அலங்காநல்லூர் முதல் ஆப்பிரிக்கா வரை: மடகாஸ்கரிலும் விளையாடப்படும் ஜல்லிக்கட்டு ஆப்பிரிக்காவுக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என பல ஆய்வுகள் கூறுகின்றன. ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு நிகழ்வும் அதற்கு சான்றாக இருக்கிறது. “கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையூம் புல்லாளே ஆய மகள்,” என்கிறது கலித்தொகை. காளையை அடக்காத ஆண்மகனை மறுமையிலும் மணம் செய்ய பெண் விரும்பமாட்டாள் என்பதே இதன் பொருள். இது தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் நிலவிய ஒரு பழக்கத்திற்குச் சான்றாக இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுதான் இப்போது மடகாஸ்கரிலும் நிலவுகிறது. காளையை அடக்குபவரையே மணம் செய்கிறார்கள் மடகாஸ்கர் பெண்கள்.

சுயநலம் ஒன்றே பூசைகளின் நோக்கம் .. சாமிக்கு லஞ்சம் கொடுக்கலாம்????

Dhinakaran Chelliah : !!சுயநலம் ஒன்றே பூசைகளின் குறிக்கோள்!!
வைதீக கோயில்களில் நடைபெறும் பூசை முறைகளில் மந்திரங்கள் ஒலிக்கும் அர்ச்சனையும் ஒன்று.அர்ச்சனை என்றால் அர்ச்சிப்பது என்று பொருள்.அர்ச்சா என்பது சிலையைக் குறிக்கும்.
கோயிலுக்குச் சென்று ஒருவர் தனது கோத்திரம், பெயர், நட்சத்திரத்தைக் கூறி சுய சங்கல்பம் செய்து கொண்டு, அர்ச்சித்து தங்கள் சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் முறை.
ஒருவர் கோத்திரத்தை சொல்லும் போது அது அவரது பரம்பரையை மூதாதையர்களைக் குறிக்கிறது.அவர் பிறந்த நட்சத்திரத்தையும் பெயரையும், ப்ரவரத்தையும்
சொல்லும் போது அவருக்கென தனி அடையாளத்தைக் கொடுக்கிறது. இதை தனிப்பட்ட வகையில் புரோகிதர்கள் எடுத்துக் கூறவேண்டும். இந்த அடையாளங்களைச் சொல்லாமல் தேவ தேவதைகளுக்கு நம்மைப் பற்றி தெரிவதற்கு வாய்ப்பே இல்லை.மந்திரங்கள் ஒலிக்கப்படுவது ஆத்மாவிற்காகவே என்ற விளக்கம் தரப்படுகிறது வைதீர்கர்களால்.
“நம் (வைதீக) கலாச்சாரத்தில் இதைப் புரிந்து கொண்டு, ‘வம்சாவழி’ என்னும் முறையை மிகவும் நேர்த்தியாக பராமரித்து வந்தார்கள்.

பொதுத் தேர்வு நடைபெறும்: தமிழக அரசு திட்டவட்டம்!..


பொதுத் தேர்வு நடைபெறும்: தமிழக அரசு திட்டவட்டம்!மின்னம்பலம் : ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதன்முறையாக ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. ஆனால், பொதுத் தேர்வு நடத்துவதால் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்படும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தது. ஆளும் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், மாணவரின் திறனை மேம்படுத்தவே இதுபோன்ற தேர்வுகள் நடத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்து வருகிறது.

முதல்-அமைச்சருக்கு எதிராக அவதூறு ... மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு

முதல்-அமைச்சருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்குதினத்தந்தி : முதல்-அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. ஆட்சி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக, மு.க.ஸ்டாலின் மீது 2 வழக்குகளை தமிழக அரசு தாக்கல் செய்து உள்ளது. சென்னை, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமி குறித்தும், அ.தி.மு.க. ஆட்சி குறித்தும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது அறிக்கைகள் மூலமும், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் விமர்சித்து வருகிறார். இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமியும், அமைச்சர் களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசின் தர வரிசை பட்டியலில் சிறந்த முறையில் நிர்வாகம் செய்து வரும் மாநிலங்களில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், அ.தி.மு.க. ஆட்சி குறித்தும் விமர்சனம் செய்து கடந்த 28.12.2019 அன்று மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை முரசொலி பத்திரிகையில் வெளியானது.

தமிழில் குடமுழுக்கு கோருவது அரசியலுக்காக- அமைச்சர் மாபியா பாண்டியராஜன் பேட்டி!

thanjavur temple minister pandiarajan press meet nakkheeran.in - பா. சந்தோஷ் : தஞ்சை பெரியக்கோவில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என மொழிகளிலும் நடத்தப்படும் என இந்து சமய அறநிலையதுறை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதிலளித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், "இறை நம்பிக்கையற்றவர்கள் அரசியலுக்காக தமிழில் குடமுழுக்கு வேண்டும் என கூறி வருகின்றனர். தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கை. குடமுழுக்கு நடத்துவது குறித்த இறுதி முடிவை இந்து சமய அறநிலையத்துறை எடுக்கும். ஆறாம் நூற்றாண்டு வரை தமிழில் மட்டுமே வழிபாடுகள் நடைபெற்றுள்ளன. 7- ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தான் சமஸ்கிருதத்தில் வழிபாடுகள் தொடங்கின. மக்களுக்கு எதிரான எந்த திட்டங்களையும் தமிழக அரசு அனுமதிக்காது." இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.

பறிபோகும் உயர் மருத்துவம் .. அதிமுக அரசின் துரோகம் .. மத்திய அரசின் தமிழ்நாடு கொள்ளை

Satva T : அடிமை அதிமுக பிஜேபி ஆட்சியாளர்களின் மற்றுமொரு துரோகம்....
தமிழக மருத்துவ உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளான (DM/Mch) சிறுநீரகவியல், இதயவியல், மூளை நரம்பியல் முதலியவற்றை முழுவதுவாக 100% யையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டது. அவற்றில் தமிழக மருத்துவர்களுக்கோ அல்லது அரசு மருத்துவர்களுக்கோ எந்தவித இட ஒதிக்கீடும் இல்லை. அது மட்டுமல்லாது SC/ST/MBC பிரிவினருக்கும் எந்த ஒதுக்கீடும் இல்லை.
ஆனால் இது தொடர்பாக மாநில அரசு ஒரு மேல்முறையீட்டு வழக்கு கூட தொடரவில்லை. கூடுதலாக நீட் விலக்கு கோரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களிலும் இந்த படிப்புகளுக்கான நீட் விலக்கு (NEET-SS) கோரப்படவில்லை. இவ்வாறு தமிழக சுகாதார கட்டமைப்பை முழுவதும் சிதைத்து அரசு மருத்துவமனைகளை நம்பி இருக்கும் கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை நாசப்படுத்தியுள்ளது தற்போதைய அதிமுக மாநில அரசு.
அடுத்த தேர்தலில் இந்த அரசு தோற்கடிக்கப்பட்டு திமுக அரசு கொண்டு வரப்படவில்லை எனில் தமிழகம் ஐம்பதாண்டுகள் பின்னால் தள்ளப்படுவது உறுதி.

Sivasankaran Saravanan : நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவக்கனவு சிதைக்கப்பட்டு வருகிறது ஒருபக்கம். தமிழ்நாடு சுகாதாரத்துறையில் Post graduate மருத்துவ மேற்படிப்புகளை முழுவதுமாக ஒன்றிய அரசு எடுத்துக்கொண்டுவிட்டது.

அரசு- குடிமக்கள்: இரண்டாய் பிரிந்த குடி-அரசு தின கொண்டாட்டம்!... குடியரசு தின செய்தி பாசிசத்தின் வீழ்ச்சி ?

மின்னம்பலம் : ராஜன் குறை அரசு- குடிமக்கள்: இரண்டாய் பிரிந்த குடி-அரசு தின கொண்டாட்டம்!குடியரசு தின கொண்டாட்டம் என்றாலே ராணுவ அணிவகுப்புதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை வானத்தில் பல வித்தைகள் காட்டும். புதிய பீரங்கிகள் ஊர்வலத்தில் பவனி வரும். ஜனாதிபதி ராணுவ அணிவகுப்பின் மரியாதையை ஏற்றுக்கொள்வார். தேசிய கொடியை ஏற்றிவைப்பார். சர்வதேச அரங்கிலிருந்து ஏதோவொரு தேசத்தின் தலைவர் விசேஷ விருந்தினராக கலந்து கொள்வார்.
குடியரசு என்பதன் பொருள் குடிமக்களின் அரசு என்பதுதான். ஆனால் இந்த கொண்டாட்டங்களில் அரசு ராணுவமாகவும், ஜனாதிபதி பிரதமராகவும், அரசு நிர்வாகிகளாகவும் வெளிப்பட்டு சர்வதேச விருந்தினர் வருகை, பார்வையிடல் என்று அரசு தன்னை கொண்டாடிக்கொள்ளும் விழாவாகவே நிகழும். குடிமக்கள் சார்பாக கலையம்சத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள் ஒவ்வொரு மாநிலத்தின் சார்பாகவும் வரும். அதில் கலைஞர்கள், பெரும்பாலும் நாட்டுப்புறக் கலைஞர்கள் காட்சிப்பொருள்களாக பங்கேற்பார்கள்.

வானதி சீனிவாசனை கனடாவுக்கு அழைத்த புலம்பெயர் தமிழர்கள் கூட்டமைப்பு! தமிழியல் விழாவாம்

விஜயகுமாரன்:  வானதி சீனிவாசனை கூப்பிட்டு தமிழியல் விழா நடத்தும் புலம்பெயர் அறிவாளிகள்
முத்தமிழ் ஆறு, தமிழியல் மலை வானதி சீனிவாசனை கனடாவிற்கு கூப்பிட்டு தமிழியல் விழா நடத்தியிருக்கிறார்கள் சில புலம்பெயர் அமைப்புக்கள். தமிழ், தமிழீழம் என்று சொல்லிக் கொண்டு பிழைப்பு நடத்தும் இந்த புலம்பெயர் வியாபாரிகளிற்கு வானதி சீனிவாசனுக்கு தமிழ் மொழியின் அரிச்சுவடி தெரியுமா என்பது பற்றிக் கவலையில்லை. இந்துத்துவம் பேசி மக்களை பிரிக்கும் பாசிச பாரதிய ஜனதா கட்சியில் அம்மையார் உறுப்பினராக இருப்பது பற்றி கவலையில்லை. தமிழ் மொழியை புறக்கணித்து சமஸ்கிருதத்தை முன் தள்ளும் பார்ப்பனியத்தின் அடிமையாக வானதி சீனிவாசன் இருப்பது குறித்து அக்கறை இல்லை. இந்தியா முழுமையையும் ஒடுக்கும் , குறிப்பாக தமிழ்நாட்டை திட்டமிட்டு அழிக்கும் நரேந்திர மோடியின் அரச பயங்கரவாதத்தை அவர் வரிந்து கட்டிக் கொண்டு நியாயப்படுத்துவது பற்றி எள்ளளவும் கவலையில்லை.

செவ்வாய், 28 ஜனவரி, 2020

நடுக்காட்டில் ரஜினிகாந்த்துக்கு கால், தோளில் காயம்.. Man vs Wild .. வருமான வரி அபராதம் 66 லட்சம் ரத்து


 Rajinikanth has suffered minor injuries during the shooting of an episode of Man vs Wild  Rajinikanth has suffered minor injuries during the shooting of an episode of Man vs Wildtamil.oneindia.com -veerakumaran : மைசூர்: டிஸ்கவரி சேனல் நடத்தக்கூடிய பிரபலமான நிகழ்ச்சி மேன் vs வைல்ட். சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
வனப்பகுதியில் விலங்குகளுடனும், பறவைகளுடனும், இணைந்து,விலங்கள் வாழும் வகையில் இந்த நிகழ்ச்சி சூட்டிங் செய்யப்படும். பிரபல பிரிட்டிஷ் நாட்டு வன வல்லுநரும், சாகசக்காரருமான பியர் கிரில்ஸ்
வனப்பகுதிக்குள் இருந்தபடி இந்த நிகழ்ச்சியை நடத்துவார் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் பிரபலமானவர் என்பதால் அவரை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து கர்நாடக மாநிலம், பந்திப்பூர் வனப்பகுதிக்குள் வைத்து ஷூட்டிங் நடத்த முடிவு செய்யப்பட்டது. இது புலிகள் சரணாலயம் அமைந்துள்ள இடம். காப்பு காடுகள் ஆகும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா இருவரும் விமானத்தில் நேற்று சென்னையில் இருந்து மைசூர் புறப்பட்டு சென்றனர். அவர் பயணித்த விமானம் ஆரம்பத்திலேயே இயந்திரக் கோளாறு காரணமாக சுமார் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. அப்போதே ஏதோ ஒரு தடங்கல் என்பதை ரஜினி ரசிகர்கள் உணர்ந்தனர்.

கொரோனா வைரஸ்’- 500 இந்தியர்களை சீனாவில் இருந்து மீட்க நடவடிக்கை

‘கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தல்- 500 இந்தியர்களை மீட்க நடவடிக்கை maalaimalarமாலைமலர் : சீனாவில் ‘கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தலை தொடர்ந்து வுகான் நகரில் உள்ள 500 இந்தியர்களை மீட்க, ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 747 ரக விமானம் தயார் நிலையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி: சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருகிறது.
குறிப்பாக இந்த வைரஸ் உருவான வுகான் நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வுகான் நகரம் அமைந்துள்ள கியூபி மாகாணம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,500 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் கியூபி மாகாணத்தில் பஸ், ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் சுமார் 1 கோடி பேர் வசிக்கும் வுகான் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்மாலைமலர் : சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்து பேசியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன்: சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியோர் உள்பட பலர் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதற்கிடையே, சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 1300 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவை சேனாதிராஜா தவிர்ந்த மற்றைய கூட்டமைப்பு உறுப்பினர்களை சுடச்சொன்ன பிரபாகரன்!! -கருணா- (வீடியோ)

ilakkiyainfo.com :தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவன் நான் தான். நான் இல்லையென்றால் கூட்டமைப்பு இப்போது இருந்திருக்காது என முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்திருந்தார். கூட்டமைப்பை உருவாக்கியது தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகத்தான் ஆகவே அவர்கள் அவ்வாறு செயற்படவில்லை. இது தொடர்பில் நான் எமது தேசியத் தலைவர் பிரபாகரனிடம் கூறிய போது அவர்கள் அனைவரையும் நான் சுடச்சொல்லியும் அவர்களை வைத்தே கட்சியை உருவாக்கியுள்ளீர்களா என கேட்டிருந்ததாகவும், அவர் தெரிவித்திருந்தார். மேலும், மாவை சேனாதிராஜா தவிர்ந்த மற்றைய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரையும் தலைவர் சுடச் சொல்லிருந்தார் எனவும் தெரிவித்திருந்தார்.அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,

சீனாவிலிருந்து கோவை வந்த 8 தமிழர்கள்.. தீவிர கண்காணிப்பு.. 28 நாட்கள் வெளியே போக தடை


tamil.oneindia.com  - Veerakumar: கோவை: சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, மலேசியா, இலங்கை என்று ஆசிய நாடுகள் பலவற்றில் கண்டறியப்பட்டுள்ளதால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், சீனாவுக்கு சென்று கோவைக்கு வந்த 8 பேரை பொது இடங்களுக்கு செல்லவேண்டாம் என்று சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேர், கோவையைச் சேர்ந்த 4 பேர், சென்னை மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 8 பேர் நேற்று சீனாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்துள்ளனர். சீனாவிலிருந்து வருபவர்கள் தீவிரமாக பரிசோதிக்கப்படுகிறார்கள். அதே மாதிரி, இவர்களை பரிசோதித்துப் பார்த்துள்ளனர். இருப்பினும், இவர்களுக்கு கொரனோ வைரஸ் அறிகுறி இல்லை என தெரியவந்தது
ஆனால், ஒருவேளை, இனிமேல் நோய் தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உள்ளது. எனவே, சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லக்கூடாது, 28 நாட்கள் பொது வெளியிலும், பொது நிகழ்ச்சிகளுக்கும், செல்லாமல் இருக்கவேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அது தவிர, சுகாதாரத்துறையினர் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணியும், இந்த தகவலை உறுதி செய்தார். கோவை வந்த 8 பேர் 28 நாட்கள் வெளியே போக கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

: பெரியாரிய இயக்கங்களில் ஏன் பார்ப்பனர்களை சேர்ப்பதில்லை..!? -

திருச்சி பெரியார் சரவணன். புத்தருக்கு பிறகான 400 ஆண்டுகளில் 108 பிரிவுகளாக பௌத்தம் உடைந்ததாக தெரிகிறது,
இந்த 108 பிரிவுகள் குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் 18 பிரிவுகள் பற்றிய செய்திகள் முழுமை யாக இருக்கின்றன..!
அவை...
1) ஸ்தவரம்.
2) மஹிசாசக்.
3) விரிஜிபுத்ரக்.
4) தர்மோத்ரி.
5) பத்ரயாளிக்.
6) சன்னகாரிக்.
7) சம்மியதிக்.
8) மகா சாங்க்கியம்.
9) கோகுலிக்.
10) ஏக வியாவ ஹாரிக்.
11) பிரெஞ்ஞாப்தி.
12) பாகுலிக்.
13) சைதன்ய.
14) சர்வாஸ்தி.
15) தர்மகுப்தி.
15) காஸ்யபீய.
16) சங்கராந்திக்.
17) நடுவு தளபதி .
18) சூத்திரக்.
இந்த 18ம் பௌத்தப் பிரிவுகள்..!
இதையெல்லாம் கடந்து கி.மு. 200ல்,ஆந்திரப் பகுதியில், பௌத்தத்தின் மூலக்கருத்தி லிருந்து விலகி..!?
பௌத்தத்திலிருந்து விலகிப்போன பிரிவுகளின் தத்துவக் கருத்துக்களை எடுத்துக் கொண்டு..!
மஹாயானம் என்கின்ற மிகப் பெரிய பௌத்தப் பிரிவு ஒன்று உருவாகியது.
இதை உருவாக்கியது ஸ்ரீ பர்வதம் என்று அழைக்கப்படும்,நாகார்ஜுனாகுண்டாவைப் பிறப்பிடமாகக் கொண்ட நாகார்ஜுனன் என்கின்ற பார்ப்பனன்.

இந்தியாவின் சிஏஏ அபாயகரமானது.. பாரபட்சமானது.. ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் அதிரடி தீர்மானம்

https://www.nationalheraldindia.com/india/154-european-union-lawmakers-draft-stunning-anti-caa-resolution?fbclid=IwAR3WHgKMxlj-oxtCGbD8RhG4jXeLGkGkj3DaY2JbK_TzXyPa4TODiMjVPLg Vishnupriya R  - tamil.oneindia.com :    CAA லண்டன்: இந்தியாவில் அண்மையில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரத்தில் தீர்மானம் கொண்டு வரவுள்ளனர். பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக குடியேறிய இந்து, கிறிஸ்துவர்கள், பார்சிகள், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. இது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்து இந்தியாவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. 
இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்பிக்களின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அடுத்த வாரம் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. 
 அந்த கூட்டத் தொடரில் 5 பக்கங்கள் கொண்ட தீர்மானத்தை 150-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் தாக்கல் செய்யவுள்ளனர். அந்த தீர்மானத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது: இந்திய அரசு சிறுபான்மையினரின் குடியுரிமையை சட்டரீதியாக பறிப்பதற்காகவே இந்த சட்டத்தை உருவாக்கியுள்ளது.

திங்கள், 27 ஜனவரி, 2020

கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு.. பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் ...

Janaki Karthigesan Balakrishnan : ஸ்ரீ லங்கா வாழ் மக்களுக்கான கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு கீழே தரப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு சிறீ லங்கா வாழ் மக்களுக்காக உள்பெட்டியில் நண்பர்களால் பகிரப்பட்டது.
 கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். சீனாவில் தொற்றிய இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை பலர் பலியாகி இருக்கிறார்கள்.
இலங்கை சீனர்கள் அதிகம் வலம் வரும் நாடு என்பதால் இந்த கொடிய வைரஸ் தற்போது இலங்கையிலும் பரவும் அபாயம் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கொரோனா குடும்ப வைரஸ் வகைகளுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப் படாத நிலையில் ஏற்கனவே கொரனா குடும்பத்தில் 6 வைரஸ் தொற்று இருக்கும் நிலையில் இவை 7 வது வைரஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 2019- nCoV (new strain of coronavirus) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் கண்டறிந்ததற்காக 2019 என்ற ஆண்டையும் n என்பது புதிய என்றும், CoV என்பது கொரனாவையும் குறிக்கிறது.
2002 ல் சார்ஸ் SARS- CoV என்னும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் சீனாவில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இது வெளவால் மற்றும் காட்டுப்பூனையால் மனிதனுக்கு பரவியது. இந்த வைரஸ் தொற்றுக்கு 744 மக்கள் பலியானார்கள் என்பதும் இத்தருணத்தில் குறிப்பிட வேண்டும்.
சீன நாட்டில் அதிகப்படியான விலங்குகளின் ( ஆடு, கோழி தவிர பல தரப்பட்ட விலங்குகளையும்) இறைச்சியையும், கடல் வாழ் உணவுகளையும் சாப்பிடுகிறார்கள். இந்த இடத்தில் இருந்து தான் விலங்குகளை வெட்டி விற்பனை செய்யும் இடத்தில் பரவியிருப்பதாக கண்டறிந்துள்ளது.

திருச்சியில் பாஜக பிரமுகர் படுகொலை- மகளின் காதலன் வெறிச்செயல்


மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்தினத்தந்தி :  திருச்சியில் இன்று பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் பாஜக பிரமுகர் படுகொலை- தொண்டர்கள் மறியல்.  திருச்சி பாலக்கரை மண்டல பாஜக செயலாளராக பதவி வகித்து வந்தவர் விஜயரகு. இவர் இன்று காலை காந்தி மார்க்கெட்டிற்கு சென்றபோது, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆப்கானிஸ்தான்: பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்தது .. 83 பேர் நிலை ? தாலிபான் மீது சந்தேகம்?

ஆப்கானிஸ்தானில் விமான விபத்து.. தலிபான் கட்டுப்பாட்டு பகுதியில் விழுந்தது.. 83 பேரின் நிலை என்ன?
 காபூல்: ஆப்கானிஸ்தானில் 83 பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் விபத்துக்கு உள்ளானது பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த விமானம் போயிங் நிறுவனத்தை சேர்ந்த 737-400 விமானம் ஆகும். ஆப்கானிஸ்தானில் ஹெரெட் பகுதியில் இருந்து இன்று காலை அந்த விமானம் புறப்பட்டுள்ளது. காபூல் நோக்கி அந்த விமான சென்றுள்ளது

BBC : கிழக்கு ஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலுக்கு தென் மேற்கே உள்ள கஜ்னி மாகாணத்தின் டே யாக் மாவட்டத்தில் இந்த விபத்து நடந்ததாக அந்த மாகாணத்தை சேர்ந்த அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப கோளாறு தொடர்பான காரணங்களால் இந்த விமானம் தீப்பிடித்து, நொறுங்கி விழுந்ததாக அரசு செய்தி தொடர்பாளர் மேலும் கூறினார்.
இந்த பயணிகள் விமானம் ஆரியானா விமான சேவை நிறுவனத்தை சேர்ந்தது என்று தொடக்கத்தில் கூறப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம் இதனை மறுத்துள்ளது.

நீட் - பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: உச்சா நீதிமன்றம்!

மின்னம்பலம் : மருத்துவ படிப்புக்கான நீட் தேர்விலிருந்து பின் வாங்கப்போவதில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 27) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
2016ல் தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட போதும் கடந்த 3 ஆண்டுகளாகத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அரசுப் பள்ளி மற்றும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது எட்டாக் கனியாக மாறிவிட்டது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இதில் நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் சட்டத்திருத்தத்தை எதிர்த்து வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜனவரி 27) நீதிபதிகள் அருண் மிஷ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீட் தேர்வு கட்டாயம் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விஷயம். அதை மாற்ற முடியாது என்று நீதிபதி அருண் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முகத்தை மூடி செல்லக் கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன்

மின்னம்பலம் : தமிழகத்தில் இந்துக்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் விஜயரகு, பாஜகவின் திருச்சி மண்டலச் செயலாளராக பதவி வகித்துவந்தார். இந்த நிலையில் இன்று (ஜனவரி 27) அதிகாலை காந்தி மார்க்கெட் பகுதியில் 4 பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையாளிகளை கைது செய்யக் கோரி விஜயரகு உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை அருகே பாஜகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 27) செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் இந்துக்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

ஆந்திர பிரதேச மேலவை கலைப்பு; மத்திய அரசுக்கு தீர்மானம் அனுப்பி வைக்க முடிவு


தினத்தந்தி : அமராவதி, ஆந்திர பிரதேசத்தில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.  58 உறுப்பினர்கள் கொண்ட மேலவையில் அக்கட்சிக்கு 9 உறுப்பினர்கள் உள்ளனர்.  ஆனால், எதிர்க்கட்சியான தெலுங்கு தேச கட்சிக்கு 28 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஒப்புதல் கிடைக்காமல் போகும் சூழ்நிலை எழுந்தது.  சமீபத்தில் 3 தலைநகரங்களை அமைக்கும் மசோதாக்கள் நிறைவேறாமல் போனது.

யாழ் பண்ணை கடற்கரையில் மருத்துவ மாணவி காஞ்சனா வெட்டி கொலை

image_304c764796  பண்ணைக் கொலை: Call me image 304c764796பண்ணைக் கொலை: Call me வீரகேசரி : கணவன், மனைவிக்கு இடையிலான புரிந்துணர்வுகள், அன்யோன்யங்கள் குறைந்து, சந்தேகங்கள் எழுவதால் விரிசல்கள் ஏற்பட்டு, பல குடும்பங்களில், குடும்ப வன்முறைகள் தலை தூக்குகின்றன.
அவற்றின் அடுத்த கட்டங்களாக, அவர்களிடத்தில் பிளவுகள், வன்மம் தோன்றி, விவாகரத்து மட்டும் நீளுகின்றன.
இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒரு கொலைச் சம்பவம், இன்றைய சமூகத்தின் உள்ஊடாட்டங்களை வௌிப்படுத்தி நிற்கின்றது. இந்தக் கொலைச் சம்பவம், யாழ்ப்பாண சமூகத்தின் மத்தியில் மாத்திரமன்றி, முழு இலங்கையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
புதன்கிழமை, 22ஆம் திகதி, காலை வேளை, யாழ்ப்பாணம் வழமையான சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.
யாழ்.நகர் மத்தியில் இருந்து, சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில், வடக்குப் பக்கமாக, பண்ணைக் கடற்கரை உள்ளது.
கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பின்றி, அமைதியாகக் காணப்படும் அக்கடற்கரையில் காலை, மதிய வேளைகளில் காதலர்கள் உட்கார்ந்திருப்பதை என்றும் காணக்கூடியதாக இருக்கும். புதன்கிழமையும், சுமார் 20 க்கும் மேற்பட்ட ஜோடிகள், பண்ணைக் கடற்கரையில் அமர்ந்து, கடலைப் பார்த்தவாறு உரையாடிக்கொண்டு இருந்தார்கள்.
இவர்கள் மத்தியில், ஒரு ஜோடி மாத்திரம், தமது காதல் வாழ்க்கையின் கசப்புகளையும் பிரிவையும் பற்றி, நீண்ட நேரமாகத் தமக்குள் விவாதித்துக் கொண்டு இருந்தார்கள்.