சனி, 24 ஏப்ரல், 2021
தமிழ்நாட்டின் மருத்துவ வளர்ச்சியின் வரலாறு . கல்லூரிகளின் பட்டியல்
தமிழ்நாட்டு வளர்ச்சியை வடநாடுகள் நெருங்க இன்னும் பல ஆண்டுகள் தேவை .. குஜராத் உத்தரபிரதேசம்... ...
நம்மை நோக்கி வரிசையாக கேள்வி கேட்டவர்கள் கூடவே குஜராத்தில் நாங்கள் இதை செய்திருக்கிறோம், மத்தியபிரதேசத்தில் நாங்கள் அதை செய்திருக்கிறோம் என்று கலர் கலராக கயிறு திரித்துக்கொண்டிருந்தார்கள்.
எல்லாமே பொய்...
நீங்க வெறும் சோற்றாலடித்தப் பிண்டங்கள் தான்...
வளர்ச்சியில் எங்களை நெருங்க இன்னும் 100 வருசமானாலும் முடியாது,
திருணமூல் காங்கிரசை அழிக்க தேர்தல் ஆணையம் சதி: வாட்ஸப் ஆதாரம் காட்டும் மம்தா?
minnampalam : சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர்கள் மூலம் திருணமூல் காங்கிரஸ் என்ற கட்சியையே அழிக்க தேர்தல் ஆணையம் சதி செய்கிறது என்று அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்துக்கு என நூற்றுக்கணக்கான தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையிலும், அண்மையில் தேர்தல் ஆணையம் மூன்று சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர்களை மேற்கு வங்காளத்துக்கு என்று நியமித்தது.
பிகார் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி அஜய் நாயக், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் விவேக் துபே, ம்ன்ரல் காந்தி தாஸ் ஆகியோர்தான் அந்த மூன்று சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர்கள். மாநிலம் முழுதும் எங்கே எந்த நேரத்திலும் போலீஸ், துணை ராணுவப் படைகளை அனுப்பவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் இந்த மூன்று கண்காணிப்பாளர்களுக்கு முழு அதிகாரம் கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
NEP மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு” - மீண்டும் வேலையைக் காட்டிய மோடி அரசு!
kalaignarseithigal.com - Vignesh Selvaraj : மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தமிழ்நாட்டின் மீதும், தமிழர்களின் மீதும் விரோதப் போக்கை கையாண்டு வருகிறது. அதற்கு இன்னொரு சாட்சியாக, தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை மாநில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, 484 பக்கங்கள் கொண்ட வரைவை 2019 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. வரைவை வெளியிட்ட மத்திய அரசு அதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தது.
புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அம்சங்களுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கை வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எனது ஆடையைக் கிழித்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தார்!” - நடிகை ஜெனிபர் பரபரப்பு புகார்!
சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24). இவர் 23ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:"நான், எனது பெற்றோர் மற்றும் சகோதரி, சகோதரனுடன் வசித்து வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வருகிறேன். எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்து 25.08.2019 அன்று திருமணம் செய்து கொண்டேன். பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டோம். விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தொலைக்காட்சி தொடர் துணை இயக்குநர் நவீன்குமார் என்னை காதலிப்பதாகக் கூறினார். அதற்கு, நான் எனது முதல் திருமணம் பற்றியும், விவாகரத்துப் பற்றியும் கூறினேன்.
கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது அரசு .. தமிழகத்தை மிரட்டும் கொரோனா..
குஜராத்தில் பா.ஜ.கவின் 25 வருட ஆட்சியில் ஒரு அரசு மருத்துவமனை கூட கட்டவில்லை” இதுதான் குஜராத் மாடல்’
கலைஞர் செய்திகளை :இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகியவற்றை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சுகாதாரத்துறையின் படுதோல்வியால், உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன.
பிற மாநிலங்களை விட பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பும், இறப்பும் அதிகரிப்பதற்கு மோசமான மருத்துவக் கட்டமைப்பே காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்டு வருவதாக பேசி வரும் பிரதமரின் சொந்த ஊரில் தான் கொரோனாவை கடுப்படுத்த முடியாமல் அம்மாநில அரசு திணறி வருகிறது.
மோடி முதன்முதலாக மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தேர்தல் பிரச்சாரங்களில், அனைத்து மாநிலங்களையும் குஜராத் போல மாற்றுவேன்.
இந்தியாவிற்கே குஜராத் ஒருமுன்மாதிரி மாநிலம் எனக் கூறி. ‘குஜராத் மாடல்’ என்ற வெற்று விளம்பரத்தை நாடுமுமுவதும் பரப்பி ஆட்சியைப் பிடித்தார்.
பிரதமர் மோடி பிறந்த குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க சுமார் 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தது.
உலகளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் . 3,45,147 பாதிப்புடன் தொடர்ந்து புதிய உச்சம்!
Rayar A - /tamil.oneindia.com/ : வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா தொடர்ந்து உலகளவில் முதலிடம் பிடித்து தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,45,147 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 2,621பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 65,971 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 2,866 பேர் உயிரிழந்துள்ளனர்
கொரோனா அதிகரிப்பு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் பராசபட்சம் இல்லாமல் கொரோனா தாக்கி வருகிறது.
உலகம் முழுவதும் 146,218,354 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 3,098,835 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 124,320,293 பேர் குணமடைந்துள்ளனர்.
பிரேசிலில் அதிக உயிரிழப்பு அமெரிக்காவில் கொரோனா கொஞ்சம் ஓய்வு எடுத்து வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை அரசே கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாமே: உச்ச நீதிமன்றம் கேள்வி
Vivekanadan T : சென்னை அரசு பொது மருத்துவமனையில் கூட ஆக்சிஜன் சிறிய அளவில் தயாரிக்கும் கட்டமைப்பு இருக்கிறது....
திராவிட இயக்க தலைவர்கள் எங்களுக்காக செய்த சாதனை அது ....
ஆனால் மருத்துவ உள்கட்டமைப்பு என்பதையே அறியாத மத்திய பாசிச ஆட்சியாளர்களால் ,
அரசு மருத்துவ நிறுவனங்களை செயல்படுத்தி தடுப்பூசிகளை தயாரிப்பதை மறுத்து,
தனியார் முதலாளிகளிடம் எல்லா ஒப்பந்தத்தை கொடுத்திவிட்டு,
பின்பு மத்திய அரசுக்குக் கொடுக்கும் 50% தடுப்பூசிக்கு பழைய விலையான ரூ.150 வசூலிக்கப்படும் என்றும்,
மீதமுள்ள 50% தடுப்பூசிகளுக்கு மாநில அரசுகளுக்கு டோஸ் ஒன்றிற்கு ரூ.400 என்ற விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு டோஸ் ஒன்றிற்கு ரூ.600 என்ற விலையிலும் விற்கப்படும் என்று சொல்லுவதை எப்படி எடுத்துக்கொள்வது ..?
உத்தர பிரதேசம்: வென்ட்டிலேட்டர் வசதி கிடைக்காமல் 6 பத்திரிகையாளர்கள் பலி
tamil.news18.com :உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, கடந்த 10 தினங்களில் வென்ட்டிலேட்டர் கிடைக்காமல் கொரோனா தொற்றுக்கு 6 பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரிழந்துள்ளனர்.l
ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 568 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் 306 பேரும், சத்தீஸ்கரில் 207 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 195 பேரும், குஜராத்தில் 135 பேரும், கர்நாடகாவில் 123 பேரும், ஜார்க்கண்டில் 106 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உ.பி.யில் ஆறு பத்திரிகையாளர்களுக்கும் தொற்று ஏற்பட்டவுடன், மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை இங்கிலாந்தில் வாங்கிய முகேஷ் அம்பானி..
tamil.goodreturns.i - Pugazharasi S : இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனர் முகேஷ் அம்பானி 79 மில்லியன் டாலர் மதிப்பில். இங்கிலாந்தில் உள்ள ஸ்டோக் பார்க் லிமிடெட் நிறுவனத்தினை வாங்கியுள்ளது.
இது வெறும் வணிகம் மட்டும் அல்ல, வரலாறு. 900 வருட வரலாற்று பாரம்பரியம் மிக்க ஒரு இடமாகும். இது ஒரு வரலாற்று சின்னமாகவும் கருதப்படுகிறது.
இது சிறந்த சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதோடு மட்டும் அல்ல, சிறந்த விளையாட்டு துறை வசதிகளையும் கொண்டுள்ளதாம். இதன் இன்றைய இந்திய மதிப்பு சுமார் 590 கோடி ரூபாய்க்கு மேல். இத்தனை கோடிகள் கொடுத்து வாங்கும் அளவுக்கு இந்த ஹோட்டலில் என்ன சிறப்பம்சம், வாருங்கள் பார்க்கலாம்.
என்னென்ன வசதிகள்?
இங்கிலாந்தில் உள்ள இந்த ஸ்டோக் பார்க் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த, ஹோட்டலில் இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படம் எடுக்கப்பட்டுள்ளதாம். 900 வருட வரலாற்றினை கொண்டு இருந்தாலும், இது 1908 வரையில் ஒரு தனியார் வீடாகவே இருந்து வந்துள்ளது. இந்த ஹோட்டலில் 49 சொகுசு படுக்கையறைகள் மற்றும் suite அறைகள் உள்ளன.
இந்தியாவுக்கு உதவ தயார் - சீனா அறிவிப்பு
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை.. நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக துணை இயக்குனர் மீது டி.வி. நடிகை புகார்
malaiamalar : துணை இயக்குனர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டி.வி.நடிகை பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். தன்னை அரை நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக புகாரில் குற்றம்சாட்டி உள்ளார்.
இஸ்லாமிய நூல்கள் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் ! இலங்கை அரசு அறிவிப்பு
விடிவெள்ளி : (ஏ.ஆர்.ஏ.பரீல்) : வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குள் இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசு புதிய விதிகளை விதித்துள்ளது.
புதிய விதிகளுக்கமைய இறக்குமதி செய்வதற்கு முன்பு அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும். முன் அ-னுமதியின்றி இஸ்லாமிய நூல்கள் இறக்குமதி செய்ய முடியாது.
நிறுவனங்களோ, அமைப்புகளோ,தனிநபர்களோ இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்வதென்றால் அதன் பிரதியொன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவேண்டும்.
அத்தோடு நூலின் பெயர், நூலின் உள்ளடக்கம், ஆசிரியரின் பெயர், அவரது பின்னணி, நூலில் தீவிரவாத கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளனவா-? அந்நூல் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளதா? எந்த நாட்டிலிருந்து நூல் இறக்குமதி செய்யப்படவுள்ளது. எனும் விபரங்கள் இறக்குமதியாளர்களால் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
மேலும் புத்தகம் விலை கொடுத்து கொள்வனவு செய்யப்படுகின்றதா? அல்லது நன்கொடையாகக் கிடைக்கப்பெறுகிறதா? நன்கொடையென்றால் நன்கொடையாக வழங்குபவரின் விபரங்கள் என்பனவும் தெரிவிக்கப்படவேண்டும்.
வெள்ளி, 23 ஏப்ரல், 2021
ஜெயலலிதாவின் அண்ணா நூலக பயங்கரவாதமும் ஜெயவர்த்தனாவின் யாழ் நூலக பயங்கரவாதமும்
அதேபோல், கலைஞர் கட்டிய 'அண்ணா நூற்றாண்டு நூலகத்தை' பாழடையச் செய்தார் ஜெயலலிதா. குழந்தைகள் நல மருத்துவமனையாக இதை மாற்றப் போகிறேன் எனத் திமிராய்ப் பேசிய ஜெயாவை அடக்கிய நீதிமன்றம், நூலகம் தொடர வேண்டும் என்றது.
178 கோடி செலவில் கட்டப்பட்ட, இந்தியாவின் பெரிய நூலகமான, தெற்காசியாவின் இரண்டாவது பெரிய நூலகமான, ஒரே நேரத்தில் 5000 பேர் அமர்ந்து படிக்கும் அளவிற்கு வசதிகள் கொண்ட மாபெரும் நூலகத்தை, நீதிமன்ற உத்தரவையும் மீறி திருமண நிகழ்விற்கு வாடகைக்கு விட்டார் பார்ப்பனத் திமிர் நிரம்பிய ஜெயலலிதா.
ஏராளமான போட்டித் தேர்வுகளுக்கு, மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவான விலையுயர்ந்த நூல்கள் செல்லரித்துப் போயின.
50000 க்கும் மேற்பட்ட நூல்கள் திருடு போயிருக்கின்றன. நூலகப் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாயையும் தன் போயஸ் தோட்டத்திற்குள் பதுக்கிக் கொண்டார் ஜெயா.
எங்கு திரும்பினும் ஓலம்... பிணங்களின் குவியல்; எரிந்து கொண்டேயிருக்கும் சுடுகாடுகள்!
tamil.samayam.com :கொரோனாவின் 2ஆவது அலையின்கீழ் இந்தியா தள்ளாடிக் கொண்டுள்ளது. பல
மாநிலங்கள் அதிகரித்து வரும் தொற்றின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாமல்
போராடி வருகின்றன. குறிப்பாக, இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான
உத்தரப்பிரதேசம் நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக இருக்கிறது.
அம்மாநிலத்தில் கொரோனா
தொற்றின் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து வரும்
போதிலும், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதுதான் நிதர்சனமாக
உள்ளது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. கொரோனா தவிர வேறு
சிகிச்சைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கே சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லை
என்பதுதான் உத்தரப்பிரதேசத்தின் கள நிலவரம்.கான்பூரை சேர்ந்த நிரஞ்சன் பால் சிங்கின் 51 வயதான தந்தை கடந்த வாரம் இதே
நாள் ஒவ்வொரு மருத்துவமனையாக அலைக்கழிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே
உயிரிழந்தார். படுக்கை வசதி இல்லாத காரணத்தால் சுமார் 4 மருத்துவமனைகளில்
அவருக்கு அனுமதி கிடைக்காமல் கடைசியாக ஆம்புலன்ஸிலேயே அவர் உயிரிழந்தார்.
ட்ராபிக் ராமசாமி தீவிர சிகிச்சை பிரிவில் . எப்படி இருக்கிறார்? - அரசு மருத்துவமனையில்
ஆ. விஜயானந்த் - பிபிசி தமிழுக்காக : சமூக ஆர்வலர் டிராபிஃக் ராமசாமியின் உடல்நிலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாள்களாக அவரது உடல்நிலையில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. எப்படியிருக்கிறார் டிராபிஃக் ராமசாமி?
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளை சட்டை, காக்கி உடுப்பில் வழக்குக் கட்டுகளோடு வலம் வரும் டிராபிஃக் ராமசாமியை பார்க்காதவர்கள் அரிது என்றே சொல்லலாம்.
சட்டையின் இரு பாக்கெட்டுகளிலும் வழக்குக் கட்டுகளை வைத்திருப்பது அவரது பழக்கம்.
ஹெல்மெட் விவகாரம், கட்அவுட் கலாசாரம், வரம்புமீறிக் கட்டப்படும் கட்டடங்கள், கட்டுப்பாடில்லாமல் சுற்றிய மீன்பாடி வண்டிகள் என டிராபிஃப் ராமசாமி கையாண்ட பொதுநல வழக்குகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது அவ்வளவு எளிதல்ல.
ஆக்சிஜனுக்காக ஸ்டேர்லைட்டை கைப்பற்றி ஏன் உற்பத்தி செய்யக்கூடாது? - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!
கலைஞர்செய்திகள் -Janani : கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லாததும், ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்படுவதும் அதனால் மக்கள் கொத்து கொத்தாக மடிவது கடந்த நாட்களாக இந்தியாவின் குரல்களாக உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கடுத்த படியாக மத்திய அரசும் ஆக்சிஜன் தேவைக்காக ஆலையை திறக்க உத்தரவிடலாம் என்று நேற்று நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை இன்று தொடங்கியது.
அர்விந் கெஜ்ரிவால் : டெல்லி ஆக்சிஜன் லாரிகளை.. உ.பி.யும் ஹரியானாவும் பிடித்து வைத்துக் கொள்கின்றன..
Vigneshkumar - /tamil.oneindia.com : டெல்லி: உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அரசு அதிகாரிகளும் போலீசாரும் ஆக்சிஜன் லாரிகளை பிடித்து வைத்துக் கொள்வதாக மத்திய அரசுக்கு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் மிக மிக மோசமான நிலையில் உள்ளது.
கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் அங்குள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
டெல்லியுள்ள சரோஜ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, டிராத் ராம் ஷா மருத்துவமனை, இங்கிலாந்து நர்சிங் ஹோம், ரதி மருத்துவமனை, சாண்டம் மருத்துவமனை,
ஹொலி ஃபேமலி மருத்துவமனை ஆகிய 6 தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசு கூறியுள்ளது.
அண்டை மாநிலங்கள் இந்நிலையில், டெல்லிக்கு வர வேண்டிய ஆக்சிஜன் லாரிகளை அண்டை மாநிலங்களில் தடுத்து நிறுத்தப்படுவதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுவே எனது இறுதி காலை வணக்கமாக இருக்கலாம்” : இறப்பதற்கு முன்பு முகநூலில் பதிவிட்ட மும்பை மருத்துவர்!
kalaignarseithigal.com : இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் தொற்றுப்பரவலின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அதிலும் பல இடங்களில் நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்காமல் காத்திருக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. அதாவது தற்போது வரையே 80 சதவீதமான படுக்கைகள் நிரம்பிவிட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பன்னீர்செல்வம் தொகுதியில் இ.வி.எம். அறைக்கு வெளியே 96 தகரப் பெட்டிகள்; திமுக தங்க தமிழ்ச்செல்வன் சந்தேகம்
tamil.indianexpress.com - Balaji Ellappan : “போலீசுக்கு உணவு எடுத்துச் செல்ல வந்த 2 வாகனங்களை பதிவு செய்யாமல் அனுப்பியிருந்தார்கள்.
இது போன்ற குறைபாடுகளை சொன்னால் சரி செய்கிறார்களே தவிர நடவடிக்கை எடுக்க மாட்டேங்கிறார்கள்.” என்று திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
போடிநாயக்கனூர், தங்க தமிழ்ச்செல்வன், ஓ பன்னீர் செல்வம், theni vote counting centre, ஓபிஎஸ் தொகுதி போடிநாயக்கனூர், இ.வி.எம். அறைக்கு வெளியே 96 தகரப் பெட்டிகள், திமுக புகார்,
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், இ.வி.எம். இயந்திங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக திமுகவினர் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய பாகிஸ்தானிய பயணிகளுக்கு கனடா தடை 30 நாட்களுக்கு இந்த தடை என அறிவிப்பு
லங்கா ஸ்ரீ : இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பயணிகள் விமானங்களை கனடா 30 நாட்களுக்கு தடை செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பாதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. மக்கள் ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறையால் பரிதவித்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் இறப்பு எண்ணிக்கையும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், பல மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முடியாமல் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
தற்போது நாட்டின் முதன்மையான பல நிறுவனங்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஈடுசெய்ய, தாமாகவே முன்வந்து இலவசமாக மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கி வருகிறது.
பெடரல் அரசு கண்டுகொள்ளாத நிலையில், பொதுமக்கள் சக மனிதர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.
டெல்லி மருத்துவமனையில் இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே ஆக்சிஜன் உள்ளது
வியாழன், 22 ஏப்ரல், 2021
இந்தியாவிலேயே ஒரு அரசு மருத்துவ மனையில் ஆக்சிஜன் தயாரிக்கும் வசதி . ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனை கலைஞர் சாதனை
பாலகணேசன் அருணாசலம் : சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அந்த மருத்துவமனைக்கு தேவையான முழு அளவிளான ஆக்ஸிஜனையும் தயாரிக்கும் வசதி இருக்கிறது.
இது நேற்றைய சன் டிவி விவாதத்தில் நெறியாளர் குணசேகரன் சொன்னப் பிறகு தான் வெளிச்சத்துக்கே வருது.
ஒரு அரசு மருத்துவமணைக்கு சொந்தமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி இருக்கிறது என்பதோ, அப்படி ஒரு தொலை நோக்கு திட்டத்தை தீட்டி செயல்படுத்தியவர் கலைஞர் என்பதையோ யாரும் பேசி இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை
இப்படிப்பட்ட ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டத்தை தந்த தலைவரும் இதை பெரிதாக பேசவில்லை. நிச்சயம் உடன்பிறப்புகளுக்கான கடித்தத்தில் எழுதியிருப்பார். அந்த நேரத்தில் இதன் அருமை தெரியாத நாமும் அதை சாதாரணமாக கடந்துப் போயிருப்போம்.
இந்த தலைவரைத்தான் இங்கேயே ஒரு கூட்டம் திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது, கொண்டிருக்கிறது, அவர் மறந்த பின்பும் அது குறைந்தபாடில்லை.
ஆனால் அந்த தலைவர் தான் நாம் மூச்சு விட முடியாத போது கூட நமக்கு துணையிருக்க கூடிய வகையிலான ஒரு கட்டுமானத்தை உருவாக்கி தந்துவிட்டு போயிருக்கிறார்
உலக அரங்கில் இந்தியாவின் பெயர் சரிகிறது? காரணம் கொரோனாவா? பாஜகவா?
திருமதி கனிமொழிக்கு திமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்படலாம்?
Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: திமுக எம்பி கனிமொழிக்கு புதிய பதவி குறித்த பேச்சு அடிபட்டு வருகிறது..
இதற்கு பின்னணி காரணங்களும் சில வெளியாகி வருகின்றன..!
நேற்று முதல், திமுகவின் கனிமொழிக்கு புதிய பதவி தரப்படும் என்ற செய்தி வட்டமடித்து கொண்டிருக்கிறது..
குறிப்பாக தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை பொறுத்தவரை ஐபேக் டீமின் பங்கு அளப்பரியது..
அந்த வகையில், வேலை பார்த்த இந்த ஒரு வருட காலத்தில் எத்தனையோ தகவல்களை தலைமைக்கு திரட்டி தந்துள்ளது ஐபேக்...
இதில் கனிமொழி குறித்த சில விஷயங்களையும் அனுப்பி வைத்ததாம்.
கனிமொழி கடந்த நவம்பர் 29-ம் தேதியே கனிமொழி தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்.. அதிலும் தென்மாவட்டத்தை குறி வைத்தே பிரச்சாரத்தை துவக்கினார்..
இதன் காரணமாக, தென்மண்டலங்களில் திமுகவின் வாக்கு வாங்கி அதிகரித்துள்ளதாக தெரிகிறது.. வாக்குப்பதிவின்போது, பெருமளவு அதிமுகவின் வாக்குகள் திமுகவுக்கு டிரான்ஸ்பர் ஆனதில் மிக முக்கிய பங்கு கனிமொழிக்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை... ஐகோர்ட்டில் அரசு தகவல்
சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனாவால் மரணம்
Mathivanan Maran - /tamil.oneindia.com : டெல்லி: சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகனும் பத்திரிகையாளருமான ஆஷிஸ் யெச்சூரி (வயது 34) கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா உச்சவேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது
ஒருநாள் கொரோனா மரணங்களும் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. இதுவரை 13 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இதனிடையே சி.பி.எம்.பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரியின் மூத்த மகனும் பத்திரிகையாளருமான ஆஷிஸ் யெச்சூரி, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலையில் காலமானார்.
டெல்லி குருகிராம் மருத்துவமனையில் ஆஷிஸ் யெச்சூரி சிகிச்சை பெற்று வந்தார்
பிச்சை எடுங்கள், திருடுங்கள், எதையாவது செய்து உயிர்களை காப்பாற்றுங்கள்” – ஆக்சிஜன் தட்டுப்பாடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம்
BBC :கொரோனா வைரஸ் உச்சத்தை தொட்டு கடுமையான தாக்கத்தை நாடு முழுவதும் பரவலாக ஏற்படுத்தி வரும் வேளையில்,
ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உயிர்களை காக்க பிச்சை எடுத்தோ திருடியோ, எதையாவது செய்தோ உயிர்களை காப்பாற்றுங்கள் என்று உணர்ச்சிபூர்வமாக கருத்து தெரிவித்திருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம்.
இது தொடர்பாக புதன்கிழமை மாலை மற்றும் இரவில் நடந்த விசாரணை முடிவில், தங்குதடையின்றி ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்ய மத்திய அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதையடுத்து,
வழக்கின் விசாரணையை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை சமாளிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை மாலையில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.
அய்யா ஆற்காடு வீராசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .
செபாஸ்டியன் சீமானின் ஜாதி பேத வியாதி அரசியல்!
கல்லூரி மாணவியைக் கொன்று சாக்கு மூட்டையில் வீசிய காதலன்! புதுச்சேரி
கருப்பையை அகற்றும் ஏழைப்பெண்கள் ஒப்பந்த பணிக்கு தடையாம் மருத்துவமும் முதலாளிகளும் கூட்டு கொடூரம் .. வடநாட்டு அவலம்
Fazil Freeman Ali : பெண்மையை பலிகேட்கும் ஒப்பந்த பணிமுறை
பணிக்குத் தடையாக மாதவிடாய் இருப்பதால் கருப்பையையே அகற்றிவிடும் ஏழைப் பெண்கள். ஒப்பந்ததாரர்களும் மருத்துவ முறைகேடுகள் கூட்டு சேர்ந்து அரங்கேற்றிய அவலம்.
"பெண்கள் மாதவிடாய் காரணமாக தம் பணியை இடையூறு இன்றி செய்ய முடியவில்லை,
இதனால் பணியிடங்களில் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது என்று காரணம் காட்டி,
கருப்பையையே அகற்றி விடுகிறார்கள்" என்ற அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாக, மகாராஷ்ட்ர மாநில மகளிர் ஆணையம் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பீட் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பணிக்குச் செல்லும் கிராமத்துப் பெண்கள் பணிக்கு இடையூறாக மாதவிடாய் இருப்பதாலும் இதனால் பணிக்குச் செல்ல முடியாமல் ஊதிய இழப்பு, அபராதங்கள் கட்ட நேரிடுவதாலும் கருப்பையையே அகற்றிவிடுகின்றனர்.
இந்த அவலம் குறித்து தி இந்து பிசினஸ் லைனில் அதிர்ச்சி செய்தி அறிக்கை வெளியானதை தொடர்ந்து மகளிர் ஆணையம் பீட் மாவட்ட அதிகாரிகளுக்கு விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா ஆக்சிஜன் டேங்கரில் கசிவு; 22 கரோனா நோயாளிகள் உயிரிழப்பு
புதன், 21 ஏப்ரல், 2021
கமலஹாசனுக்கு 200 கோடி, சீமானுக்கு 50 கோடி பாஜக + அதிமுக பட்டுவாடா!
Karuppu Neelakandan : ஒரு யூ ட்யூப் சேனல் இன்டெர்வியூவில் ஜெகத் கஸ்பர் திமுக வின் வெற்றிவாய்ப்புகளை குலைக்கும் விதமாக,
சிறும்பான்மையினரை முக்கிய தொகுதிகளில் மநீம வேட்பாளராக நிறுத்தி பிரித்தாளும் சூழ்ச்சிக்காக கமலஹாசனுக்கு 200கோடி ரூபாயை அதிமுகவின மூலம் பாஜக செட்டில் செய்துள்ளது என்கிறார்.
அதற்கேற்றார் போல கமலஹாசன் கட்சியிலிருந்து ஒன்னே ஒன்னுகண்ணே கண்ணுவென இருந்த சிறும்பான்மையின பெண்மணியான கமீலா நாசரும் இன்று வெளியேற்றப் பட்டுள்ளார்.
அதே போன்று அதே போன்ற அதே பிரித்தாளும் ஆர்எஸ்எஸ் அடியாள் வேலை பார்க்க சீமானிற்கும் அவரது சித்தப்பா தலைமையிலுள்ள அதிமுகவின் மூலமாக 50 கோடியை பாஜக செட்டில் செய்துள்ளதாக ஜெகத்கஸ்பர் சொல்வியுள்ளார்.
ஆட்சியை பிடித்தெல்லாம் சம்பாதிக்கும் முறையை விட இந்த சினிமாக்காரர்கள் சுலபமா சம்பாதித்துக்கொள்ளும் வித்தைத் தெரியாமல் கொஞ்சம் இளைஞர் இவர்கள் இருவரின் அரசியலிலும் சிக்கி சீரழிகிறார்கள்.
DrTrupti Gilada : நிலைமை மிகமோசம்; உங்களை நீங்களே சூப்பர் ஹீரோ என நினைக்க வேண்டாம்” : மும்பை மருத்துவரின் கண்ணீர் வீடியோ!
கியூபாவில் காஸ்ட்ரோ குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வருகிறது! புதிய அதிபராக டயஸ்-கனல் தெரிவாகிறார்
soodram Lஅந்தவகையில், கியூபாவின் இரண்டு முக்கியமான பதவிகளான, கியூப கம்யூனிசக் கட்சியின் தலைவராகவும், கியூபாவின் ஜனாதிபதியாகவும் 60 வயதான டயஸ்-கனல் காணப்படுகின்றார்.
ஆக, மேலும் அதிகாரமிக்கவர்களால் ஆளப்படும் இடத்தை நிரப்ப வந்தவர் என்ற வதந்திகளை டயஸ்-கனல் முறியடித்துள்ளார்.
பயிற்சியால் மின்னியல் பொறியலாளரான டயஸ் கனல், கட்சியில் துரித வளர்ச்சி கண்டவராக இருந்தபோதும் வாழ்க்கையில் பெரும்பாலான காலத்தில் கட்சிக்காக இயங்கியுள்ளார்.
தனது சகோதரர் பிடலை கட்சியின் முதலாவது செயலாளராக தான் பிரதியிட்ட சிறிது காலத்தில், 2012ஆம் ஆண்டு டயஸ்-கனலை உப ஜனாதிபதியாக றாவுல் கஸ்ரோ நியமித்திருந்தார்.
கியூபாவின் மிகவும் அதிகாரமிக்க பதவியான கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது செயலாளராக மிகேல் டயஸ்-கனல் பெயரிடப்பட்டுள்ளார்.
அந்தவகையில், 1959ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் கஸ்ரோவின் பெயரில்லாத முதலாமவராக கியூபாவை டயஸ்-கனல் ஆளவுள்ளார்.
பரவலாக எதிர்பார்க்கப்பட்ட குறித்த நகர்வானது நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வேலூர் மருத்துவமனையில் 7 நோயாளிகள் உயிரிழப்பு! ஆக்சிஜன் குழாயில் கசிவு
அமெரிக்க ஜார்ஜ் பிளாய்ட் கொலை ! போலீஸ் டெரிக் குற்றவாளி 40 ஆண்டு சிறை வழங்கப்படலாம்? Derek Chauvin found guilty of the murder of George Floyd
தலித் கலை இலக்கியச் செயல்பாடு என்பது புனிதப் பசு நிலையை அடைந்துவிட்டது. பட்டியல் வகுப்பினர் மட்டுமே படைக்கவும் விமர்சிக்கவும் முடியும்?
Sathyaperumal Balusamy : தலித் கலை இலக்கியச் செயல்பாடு என்பது புனிதப் பசு நிலையை அடைந்துவிட்டது.
தலித் கலை இலக்கியத்தைப் பட்டியல் வகுப்பினர் மட்டுமே படைக்கமுடியும் என்ற நிலையிலிருந்து தலித் கலை இலக்கிய விமர்சனத்தையும் கூட பட்டியல் வகுப்பினர் மட்டுமே வைக்க வேண்டும் என்ற புனித நிலையை அடைந்திருக்கிறது.
தப்பித்தவறிப் பட்டியல் வகுப்பைச் சேராத யாராவதும் தலித் கலை இலக்கியச் செயல்பாட்டை எதிர்மறையாக விமர்சித்துவிட்டால் இருக்கவே இருக்கிறது அவருக்குப் பரிசளிக்கச் 'சாதிவெறியர்' என்ற பட்டம்!
தலித் அதாவது ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் சினிமாவாக முன்வைக்கப்படும் கர்ணன் திரைப்படத்தின் தொடக்கத்திலேயே சொல்லப்படும் மிக முக்கியமான செய்தி என்னவாக இருக்கிறது என்றால்,
அந்தப் பட்டியல் வகுப்பினருக்கும் ஒரு நாடாண்ட பெருமை இருந்தது என்பதாக இருக்கிறது.
யானையின் மீது அமர்ந்து வாளேந்திப் பாண்டிய நாட்டை அரசாண்ட பரம்பரை இப்படி அடங்கிக் கிடக்கிறதே என்ற ஆதங்கம் முன்வைக்கப்படுகிறது.
எந்த ஒரு ஆண்ட பரம்பரையும் தான் ஆளுங்காலத்தில் மற்றவர்களை அடக்கி ஒடுக்கியே வைத்திருக்கும். அதே போல இன்றைக்கு ஐராவதம் என்ற யானையை வாகனமாகக் கொண்ட தேவேந்திரனின் வம்சமாகச் சொல்லிக் கொள்ளும் பரம்பரையும் ஆண்ட பரம்பரையாக இருந்த பொழுது மற்ற பரம்பரையினரை அடக்கி ஒடுக்கியே தனது ஆளுகையை நிலை நாட்டியிருக்கும்.
கை கூப்பி கேட்கிறேன்... 3 கட்ட தேர்தல்களை ஒரே நாளில் நடத்துங்கள் - மமதா மீண்டும் கோரிக்கை
Jeyalakshmi C - tamil.oneindia.com : கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் 3 கட்ட தேர்தல்களை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தேர்தல் ஆணையத்திற்கு மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.
தேர்தல் ஆணையம் பொது சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை விட பெரிய மாநிலம் மேற்கு வங்கம். அங்கு 294 தொகுதிகள் உள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 8 கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்ட வாக்குப் பதிவு மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.
ஏப்ரல் 1, 6, 10, 17 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
ஏப்ரல் 22 ஆம் தேதி 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
7ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 26ஆம் தேதியும் 8 வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
நடிகர் அஜீத்தை படமெடுத்ததால் அப்போலோவில் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்.. இரக்கம் காட்டாத அஜீத்
தான் எடுத்த வீடியோக்கு மன்னிப்பு கேட்டும், மீண்டும் தன்னை பணியில் சேர்த்துக்கொள்ளாததால், மனமுடைந்த பர்ஷானா, அஜித்தை சந்தித்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவும், மீண்டும் தனக்கு பணி கிடைக்க வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை வைக்க முடிவு செய்தார். கடந்த ஒரு வருடமாக அஜீத்தை சந்தித்து முறையிட அலைந்து வருகிறார் பர்ஷானா.
அஜித்தின் வீட்டு வாசலுக்கு பலமுறை சென்று, அங்கு காவலர்களால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பெஃப்சி யூனியன் மூலம் அஜித்தை சந்திக்க முயற்சி எடுத்துள்ளார். அது பலனளிக்க, பர்ஷானாவை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.
திராவிட கட்சிகள் எதுவும் ஏன் தமிழ்நாட்ட தாண்டலை.. கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லாம் தங்கள திராவிடம் என்று...?
Skp Karuna : ஒரு கேள்வி : : "சேம்சைடு கோல்தான்... இருந்தாலும் கேக்குறேன்.. திராவிடம்னு பேர் வச்ச கட்சிகள் எதுவும் தமிழ்நாட்ட தாண்டலை.. கேரளா, கர்நாடகா, ஆந்திராக்காரனுகளும் தங்கள திராவிடன்னு சொல்லிக்கிறதில்லை.. பெறகெதுக்கு நாம மட்டும் அந்த பேர தூக்கிட்டு சுத்தணும்?"
எனது பதில் :
ஒரு பழைய்ய்ய்ய கிராமம். அந்த ஊர்லே ஒரு நாட்டாமை கிழவன், கடுமையா உழைச்சு ஊரிலேயே முதல் காரை வீடு கட்டுனான். அந்த பெருசுக்கு நாலஞ்சு பிள்ளைங்க பிறந்தது. அது செழிப்பான ஊர் என்பதால் பஞ்சம் பிழைக்க, வியாபாரம் பண்ண அவ்வப்போது வெளியே இருந்து சிலபேர் வந்து தங்குவாங்க. அவங்க எல்லாம் இவர்களை காரை வீட்டுக்காரங்க என்று அழைத்தார்கள்.
அந்த நேரத்திலே உலகம் எங்கிலும் ஓலைக் குடிசைதான் என்பதால் காரை வீடு என்பது பெரிய அடையாளம்தான். அரும்பாடுபட்டு வீடு கட்டிய பெருசும் நாளடைவில் மண்டையைப் போட, வளர்ந்து நின்ன பிள்ளைங்க எல்லாம் தனி அடுப்பு வச்சு பிழைக்கப் போனார்கள்.
வாரணாசியில் இறுதிச்சடங்கிற்கு 3 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக எகிறிய ரேட் . டிமாண்ட் அதிகமாம் From Rs 3000 to Rs 30,000, cost of cremation
மோடியின் தொகுதியான வாரணாசி மற்றும் மீரட்டில் 25 ஆயிரத்துக்கு இறுதி சடங்கு செய்து பிணத்தை எரித்து வந்த புரோகிதர்கள்,
இப்போது அதிக பிணங்கள் வருவதால் 30 ஆயிரத்துக்கு உயர்த்தி விட்டார்களாம்.
புரோகிதர்களின் இந்தக் கொள்ளையால் அங்கு பிரச்சனை ஏற்பட்டு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கொரோனா மரணத்துக்கு 7 ஆயிரம் மற்றவை 5 ஆயிரம் என நிர்ணயத்துள்ளது.
செவ்வாய், 20 ஏப்ரல், 2021
இவர்கள் உண்மையாகவே திருந்தினால் இவர்கள் செய்யவேண்டியது பிராயச்சித்தம் தவிர அரசியல் அல்ல
இவர்கள் சீமானின் செயற்கை அடுப்பில் குளிர் காய்ந்தார்கள் இப்போது இது வேலைக்கு ஆகாது என்பதை புரிந்துகொண்டுள்ளார்கள் ஆனாலும் இப்போதும் இவர்களின் அறிவு வளர்ச்சி அடைந்ததாக எந்த அடையாளமும் இல்லை.
இவர்கள் சீமானை வைத்து தமிழ்நாட்டில் தங்களின் இழந்து போன இமேஜை பில்டப் பண்ணலாம் என்று கனவு கண்டார்கள் அதற்காக தமிழ்நாட்டின் எல்லா பெரிய காட்சிகளையும் அமைப்புக்களையும் கிள்ளுக்கீரையாக நடத்தினார்கள் தூற்றினார்கள் இந்த அறிவாளிகளுக்கு தங்களின் கணக்கு பிழைத்த விட்டது என்பது இப்போதுதான் புரிந்திருக்கிறது
இவர்களின் போன சாயம் இனி மீண்டுவராது எத்தனை நாளைக்குதான் தமிழ்நாட்டை ஏமாற்ற முடியும்?
இவர்களுக்கு எல்லா வசதிகளும் எல்லா விளம்பரங்களும் இன்னும் என்னன்னவோ எல்லாம் கொடுத்த்தார்கள் இவர்களின் அத்தனை சகோதர படுகொலைகளையும் ராஜீவ் காந்தி கொலை உட்பட சகித்து கொண்டார்கள் எப்படியாவது ஈழம் மீழட்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக எல்லாவற்றையும் தமிழகம் இழந்தது அதிலும் திமுக இழந்தது மிக மிக அதிகம்
ஆனால் நன்றி கெட்ட இவர்கள் ஆர் எஸ் எஸ் இன் கைப்பாவையாக மாறி அவர்களின் அத்தனை நிகழ்ச்சி நிரலையும் நிறைவேற்றினார்கள்
இப்போது முழுக்க முழுக்க ஆர் எஸ் எஸ் பாஜக அடியாட்களாகவே மாறியும் விட்டார்கள்
மதம் புகுந்த வீடும் ஜாதி புகுந்த வீடும் விளங்காது! ஹிந்து,கிறிஸ்தவம்,இஸ்லாம்,ஜாராஷ்டிரம் எதுவாயினும் சரி
Dhinakaran Chelliah : குருட்டு நம்பிக்கையும் வெள்ளையுள்ளமும் படைத்த ஜனங்கள் எவ்வளவு தூரம் அக்கிரமத்தைப் பொறுத்துக் கொள்ளுகிறார்கள் என்பதை நினைக்கும்போது நமக்கு ஆச்சரியம் உண்டாகிறது.
இந்தக் காரணத்தால்தான் மதம் என்பது பல நாடுகளில் மிகுந்த பண வருவாயுடைய பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது.
கோயில்களிலுள்ள குருக்கள் மாரைப் பார். கோயிலுக்குப் போவோரிடம் அவர்கள் எவ்வாறு பணம் பறிக்கிறர்கள்!
கங்கைக் கரைக்குச் சென்றால், ஏழைக் கிராமவாசிகள் தக்ஷிணை கொடுத்தாலொழிய ஒருவிதக் கிரியையும் செய்யமுடியாது என்று பிடிவாதம் செய்யும் பண்டாக்களைக் (புரோகிதர்கள்)காணலாம்.
குடும்பத்தில் பிரசவமோ, கலியாணமோ, சாவோ எது நேர்ந்தாலும் புரோகிதன் வந்துவிடுறோன்.உடனே அவனுக்குத் தக்ஷிணை கொடுத்துத்தான் ஆகவேண்டும்.
ஒவ்வொரு மதத்திலும் இப்படியேதான்.
ஹிந்து,கிறிஸ்தவம், இஸ்லாம்,ஜாராஷ்டிரம் எதுவாயினும் சரி,இதற்கு விலக்கு இல்லை. தன்னிடத்தில் நம்பிக்கை
கொண்டோரிடமிருந்து பணம் பறிப்பதற்கு ஒவ்வொன்றும் தனி முறைகளைக் கையாளுகிறது.
ஹிந்து மதத்தின் முறைகள் நமக்குத் தெரிந்தே இருக்கின்றன.
இஸ்லாம் மதத்தில் புரோகிதர்கள் இல்லை என்று கருதப்படுகிறது.
முற்காலத்தில் இது அம்மதத்தினரை மதச் சுரண்டலிலிருந்து ஓரளவு காப்பாற்றி வந்தது.
ஆனால், மத விஷயங்களில் தேர்ச்சிபெற்றவர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் மனிதர்களும் வகுப்புக்களும் தோன்றலானார்கள்.
அம்மத சாஸ்திர பண்டிதர்கள் மௌல்விகள் என்றும் முல்லாக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
தேர்தலில் வெற்றிபெறுவதற்காக நாட்டு மக்களை கொல்லவும் துணிந்துவிட்டீர்கள்” - நடிகர் சித்தார்த்!
Siddharth @Actor_Siddharth · 9 You are not a Covid warrior @drharshvardhan .
You in fact are an ally of Covid. Keep on murdering people in the name of winning elections at all cost. Then murder more people with moronic overcrowded religious gatherings. History will never forget it forgive you. #Shame
kalaignarseithigal.com :மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மன்மோகன் சிங்குக்கு எழுதிய பதில் கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஹர்ஷ்வர்தனை கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகர் சித்தார்த்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சமீபத்தில் பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி குறித்து எழுதிய கடிதத்தில் ஐந்து அம்ச யோசனைகளை முன்வைத்து நிறைவேற்ற வேண்டுமென்று கோரினார். அதில், தடுப்பூசி தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தார்.
தாமதமாகும் தமிழகத் தேர்தல் முடிவு...? வாக்கு எண்ணும் மேஜைகள் குறைப்பு !
:
நக்கீரன் :சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது.
'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.
இந்நிலையில், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு தலைமையில் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் கரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் வாக்கு எண்ணும் ஒவ்வொரு மையத்திலும் வாக்கு எண்ணும் மேஜைகளைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் இருக்கும் நிலையில், கரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்காக, 7 அல்லது 10 மேஜைகளாகக் குறைக்கப்படவுள்ளது.
மேஜை எண்ணிக்கை ஏழா? அல்லது பத்தா? என்பதை வாக்கு எண்ணும் மையத்தின் பரப்பளவைப் பொறுத்து இறுதி செய்யப்பட உள்ளது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதலாக 25 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டிருந்தது.
மஹாராஷ்டிராவுக்கு ரெம்டேசிவர் மருந்தை கொடுக்க மத்திய பாஜக அரசு முட்டுக்கட்டை! குஜராத்தி கம்பனிகளால் மருந்து பதுக்கல் கடத்தல்
ஸ்டாலின் அமைச்சரவை இப்படித்தான் இருக்குமாம்: கொடைக்கானல் ஆலோசனை
அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று நம்புகிறார்களாம்! EVM பிராடு வேலை பார்த்துவிட்டார்களோ என்ற சந்தேகம் வருமா? வராதா?
மின்னம்பலம் : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஏப்ரல் 19) குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது ஏற்கனவே மருத்துவர்களின் ஆலோசனையோடு திட்டமிடப்பட்ட ஒன்று என்கிறார்கள் முதல்வர் வட்டாரங்களில்.
இதற்கிடையே தேர்தலுக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு தரப்பினரிடமும் பேசி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தரவுகளையும் கள அனுபவம் மூலம் கிடைக்கும் தகவல்களையும் பெற்று வந்தார்.
முதல்வரின் தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டுவரும் சுனில், “அதிமுக கூட்டணி 85-90 இடங்களில் வெற்றிபெறுவது உறுதி. மேலும் ஒரு 27 தொகுதிகளில் கடுமையான இழுபறி நிலவுகிறது. அதிலும் அதிமுகவுக்கே அதிக தொகுதிகள் கிடைக்கும்” என்று முதல்வரிடம் ஒரு ரிப்போர்ட் அளித்திருந்ததாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
டெஸ்லா மின்சார கார் தீப்பற்றி இருவர் உயிரிழப்பு! பேட்டரி வெடித்து கட்டுக்கடங்காத தீ ..4 மணித்தியாலங்களாக எரிந்த கார்
காவல்துறைக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, மரத்தின் மீது கார் மோதியபோது அதில் ஓட்டுநர் இருக்கையில் யாரும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது என்று ஹாரிஸ் கவுன்டி காவலர் மார்க் ஹெர்மன் கூறினார். இந்த வழக்கு தொடர்து விசாரணையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று ஸ்டாலின் கடிதம்.. இன்று மத்திய அரசு அறிவிப்பு.. இனி மாநில அரசுகளில் நேரடி தடுப்பூசி கொள்முதல்
Vigneshkumar - tamil.oneindia.com : டெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில்,
மாநில அரசுகளுக்கு தனியாக தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசிகள் மட்டுமே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க உதவும் வகையில், தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உடனடி கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.
சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு சீல்: 39 பேருக்கு கொரோனா!
minnambalam : சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் பணியாற்றும் ஊழியர்களில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தினமும் 10 ஆயிரத்துக்கு குறையாமல் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக, பெரிய வணிக வளாகங்கள், துணிக்கடைகள், கோயம்பேடு சந்தை போன்ற பகுதிகளில் 2 வாரங்களுக்கு ஒருமுறை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், புரசைவாக்கம் கரியப்பா தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் பணியாற்றும் 360 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த சனிக்கிழமை 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள், தண்டையார்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திங்கள், 19 ஏப்ரல், 2021
மும்பை ஓடிவரும் ரெயிலின் முன்பு பாய்ந்து சென்று குழந்தையை காப்பாற்றிய மனித நேயன்
அதில் இரண்டு விஷயங்கள்.
அம்மா அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முனையவில்லையே என்ற கேள்வி ஒன்று. திகிலடித்துப் போயிருக்கலாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால், அந்தத் தாய் பார்வையற்றவர். அதனால்தான் பையனின் குரலைக் கேட்டு எங்கே எங்கே என்று தடுமாறுகிறார். (செய்தியில் பார்த்தேன்.)
இன்னொரு விஷயம் என் ஊகம். வீடியோவை கவனமாகப் பார்த்தபோது அதை கவனித்தேன் —
விழுந்தது தெரிந்ததும் ஓடி வருகிறார்.
ஆனால் ஓடிவரத் துவங்கியபிறகு தன் உயிர் பற்றிய அச்சம் வருகிறது.
ஒரு கணம், ஒரே ஒரு இமைப்பொழுது, தண்டவாளத்திலிருந்து அந்தப்பக்கம் போய்விடலாம் என்று நினைக்கிறார்.
ஆனால் மனதுக்குள் தொலைவையும் ரயில் வேகத்தையும் கணக்கிடுகிறார். காப்பாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை வருகிறது.
மறுபடி ஓடுகிறார். அந்த நான்கைந்து விநாடிகளுக்குள் என்ன வேகமாக அவருடைய மனது கணக்குப் போட்டிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். அபாரமான presence of mind.
அந்த ஒரு கணத்தின் தடுமாற்றத்தை, அதை வென்று அவர் ஓடுவதை, வீடியோவில் 18-19ஆம் நொடிகளில் கவனிக்கலாம்.
#salute_mayur_shelke