சனி, 24 டிசம்பர், 2022

மூதூரில் பட்டினியால் வாடிய சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

மூதூரில் பட்டினியால் வாடிய சிறுவன் பரிதாபமாக மரணம்(Photos) | Starving Boy Dies Tragically In Muthur

eelanadu.lk சமூக வலைத்தள பதிவு: வறுமையால் பட்டினியில் வாடிய சிறுவன் போஷாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலை அந்தப் பகுதியின் சுகாதார தரப்பினர் உறுதி செய்துள்ளனர்.
சுகாதார தரப்பினர் உறுதி
மூதூர் - 64ஆம் கட்டை - சகாயபுரம் கிராமத்தில் உள்ள மாணிக்கவிநாயகர் ஆலயத்துக்கு பின்புறமாகவுள்ள வீதியில் குடியிருக்கும் வைரமுத்து ராமராஜன் என்ற சிறுவனே பட்டினியின் கொடுமையால் உயிரிழந்துள்ளார்.

பெங்களூருவில் கட்டிப்புடி வைத்தியம் நடத்திய 2 இளம்பெண்கள் Free hugs movement

பெங்களூருவில் கட்டிப்புடி வைத்தியம் நடத்திய 2 இளம்பெண்கள்

மாலை மலர் :  பெங்களூரு  உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பலதரப்பட்ட மக்களும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை விமரிசையாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
தலைநகர் பெங்களூருவில் இதுபோன்ற பண்டிகைகளுக்கு என்றே எம்.ஜி.ரோடு, சர்ச் தெரு உள்பட சில முக்கிய இடங்கள் பெயர் போனவையாகும். புத்தாண்டின் முந்தைய நாள் இரவு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் எம்.ஜி.ரோடு, சர்ச் தெரு ஆகிய இடங்கள் மக்கள் வெள்ளத்தில் மிதக்கும்.

தமிழிசை மூவர் மண்டபம்: மின்னம்பலம் கட்டுரை- முதல்வர் எடுத்த ஆக்‌ஷன்! சீர்காழி தமிழிசை மூவர் மணி மண்டபம்

minnambalam.com  -  Kavi  :  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தமிழிசை மூவர் மணி மண்டபத்தை முதல்வர் உத்தரவின் பேரில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் டிசம்பர் 23ஆம் தேதி ஆய்வு செய்தார்.
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி நமது மின்னம்பலத்தில் கலைஞர் அமைத்த தமிழிசை மண்டபம் : கவனம் செலுத்துவாரா ஸ்டாலின் என்ற தலைப்பில் பத்திரிகையாளர் பிரியன் எழுதிய சிறப்புக் கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.
அதில், “தமிழிசை மூவர் என்றும் சீர்காழி மூவர் என்றும் போற்றப்படும் முத்துத்தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசல கவிராயர் ஆகியோருக்கு 2010-11 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சீர்காழியில் கலைஞர் மணிமண்டபம் எழுப்பினார்.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பிடிக்கும் கமல்!.. ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்றார்!

maalaimalar :   சென்னை: பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை ஒவ்வொரு கட்சியும் வகுக்க தொடங்கி விட்டன. தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியிலும், பா.ஜனதா அ.தி.மு.க. கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளன.
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றே இரு கட்சி தலைவர்களும் கூறி வருகிறார்கள்.
பா.ஜனதாவை எதிர்க்கும் எல்லா கட்சிகளுமே இந்த கூட்டணியில் இடம் பெறவே விரும்புகின்றன. கமலின் மக்கள் நீதிமய்யம் கட்சி இந்த தேர்தலில் கூட்டணி என்ற முடிவுக்கு வந்து விட்டது. சமீபத்தில் அந்த கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் அண்ணா நகரில் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த கமலிடம் கூட்டணி பற்றி கேட்டபோது, கூட்டணி தொடர்பாக நாங்கள் எந்த திசையில் பயணிக்கிறோம் என்பதை என் பயணத்தை தெரிந்து கொண்டாலே உங்களுக்கு புரிய வரும் என்று கூறினார்.

Ex-ICICI Bank CEO Chanda Kochhar, Husband Arrested ஐசிஐசிஐ வங்கி சாந்தா கோச்சர் கணவர் தீபக் கோச்சார்.அதிரடி கைது.. கடன் மோசடி வழக்கு

 மாலை மலர்  :  புதுடெல்லி  ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் செயல்பட்டவர் சாந்தா கோச்சார். இவரது கணவர் தீபக் கோச்சார்.
இதற்கிடையே, 2009 முதல் 2011 வரையில் பதவியில் இருந்த காலத்தில் சாந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்திற்கு 1,875 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது.
அந்த கடன் தொகை சாந்தா கோச்சாரின் கணவர் நடத்தி வந்த நுபவர் சுப்ரீம் எனர்ஜி என்ற நிறுவனத்திற்கு பல்வேறு தவணைகளாக மாற்றப்பட்டது. மேலும், வீடியோகான் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட கடன் திரும்பி வராத கடனாக அறிவிக்கப்பட்டது.
இதனால், ஐசிஐசிஐ வங்கிக்கு 1,730 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக கடந்த 2018- ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி, நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து சாந்தா கோச்சார் விலகினார்.

ராகுல் நடைபயணத்திற்கு கமல்ஹாசன் அழைப்பு! உயிரே உறவே தமிழே வணக்கம்! நான் வர்றேன்.. நீங்களும் வாங்க!

கமல்ஹாசன்

tamil.oneindia.com - Rajkumar R  :   சென்னை : தலைநகர் டெல்லியில் நாளை நடைபெறும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில் இது தொடர்பாக வீடியோ ஒன்று அக்கட்சி ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

வெள்ளி, 23 டிசம்பர், 2022

ஆப்கான் பெண்களின் கல்விக்கு தடை தலிபான்கள் தடை .. ஐ.நா. எதிர்ப்பு

 dhinkaran :dinakaran.com : காபூல்: ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்த தலிபானின் உத்தரவுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கிலாந்து, அமெரிக்காவும் கண்டித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர்.
அதேவேளையில், ‘கடந்த முறையை போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும்’ என்று உறுதியளித்தனர்.
ஆனால், தலிபான்களின் ஆட்சி அவ்வாறாக நடைபெறவில்லை.
தற்போது, அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கனிமொழி பங்கேற்பு ..107 நாளாக ஹரியானாவில்...

nakkheeran.in :  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைக் கடந்து தற்போது அரியானா மாநிலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழகம் விமான நிலையங்களில் நாளை முதல் கொரோனா பரிசோதனை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மாலைமலர் : தூத்துக்குடி  கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு இன்று காலை வந்தார்.
பின்னர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் அதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான மருந்து கையிருப்பு, படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆராய்ந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா : பெருந்தோட்ட மக்களுக்கு அவசியமான காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

hirunews.lk  :  பெருந்தோட்ட மக்களுக்கு அவசியமான காணிகளை வழங்க நடவடிக்கை - ஜனாதிபதி
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள, அனைத்து காணிகளுக்குமான அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்து, மக்களுக்கு அவசியமான காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுவரெலிய மாவட்டத்தின் காணிப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில், அனைத்து அரச நிறுவனங்களும் ஒன்றிணைந்து தயாரிக்கும் அறிக்கையை பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு கிடைக்கச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

காரைக்கால் -- காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல்- அடுத்த மாதம் முதல்

shipதினகரன் : கொழும்பு: இலங்கை காங்கேசன் துறைக்கு காரைக்காலில் இருந்து பயணிகள் கப்பல் சேவை அடுத்த மாதம் துவங்குகிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் சேவையை துவங்க இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.
 இது தொடர்பாக   இலங்கை கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபால டிசில்வா அளித்த பேட்டியில், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அடுத்த மாதம் துவங்க உள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறையில் இருந்து காரைக்காலுக்கு இந்த பயணிகள் கப்பல் இயக்கப்படும். ஒவ்வொரு கப்பலிலும் 300 முதல் 400 பயணிகள் பயணிக்கலாம்.
பயண நேரம் மூன்றரை மணி நேரம். பயண கட்டணமாக இந்திய ரூபாயில் 5000 வசூலிக்கப்படும் என்று தெரிகிறது. ஒவ்வொரு பயணியும் 100 கிலோ பொருட்களை தங்களோடு எடுத்துச் செல்லலாம்.

புதுச்சேரியில் சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை- 7 பேருக்கு சாகும்வரை சிறைத்தண்டனை

 மாலை மலர்  :   புதுச்சேரி: வில்லியனூர் கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் வாத்துப்பண்ணை நடத்திவருகிறார்.
மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் வாத்து பண்ணை பணிகளை கவனித்து வந்தனர். வாத்துகளை மேய்ப்பதற்காக புதுச்சேரியை ஒட்டி உள்ள தமிழக பகுதிகளில் இருந்து சிறுமிகளை வேலைக்கு வரவழைப்பது வழக்கம்.
இவ்வாறு வாத்து மேய்க்கும் சிறுமிகளை கொத்தடிமை போன்று அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சித்ரவதைகள் செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக குழந்தைகள் நல காப்பகத்தில் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

பொங்கல் பரிசு ரூ.1000... முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு.. .. ரேஷன் கடைகளில் வழங்கும் தேதி அறிவிப்பு

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரி, ஒரு கிலே சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைத்தாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும்.

tamil.news18.com  : 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பரந்தூர் விமான நிலைய பணிகளை விரைவுப்படுத்த மத்திய அரசு உறுதி - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பரந்தூர் விமான நிலைய பணிகளை விரைவுப்படுத்த மத்திய அரசு உறுதி - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தினத்தந்தி : பரந்தூர் விமான நிலைய பணிகளை விரைவுப்படுத்துவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
புதுடெல்லி,
தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டெல்லி சென்றுள்ளார். அங்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரியை நாடாளுமன்றத்தில் அவர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது நிதித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம் உடனிருந்தார்.

கூர்வாளின் நிழலில் தமிழினியின் ( புலிகளின் மகளிர் அணித்தலைவி) கணவர் தோழர் ஜெயன் தேவா காலமானார் .. லண்டனில் ..

Image result for கூர்வாளின் நிழலில்
விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அணி தலைவியின் கணவர் உயிரிழப்பு | Ltte S Former Women S Team Leader S Husband Dies
jvpnews.com - Sulokshi : புலிகளின் போராளியாகவும், மகளிர் அணி  -  அரசியல் பிரிவுகளின் தலைவியாகப் பணியாற்றியவருமான மறைந்த தமிழினியின் கணவர் காலமானார்
இவர்  சமூக, அரசியல் செயற்பாட்டாளரும்,  எழுத்தாளருமாவார்
சிறுநீரக நோய்ப்பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயன் தேவா அதற்காகச் சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை எடுத்து வந்து கொண்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    
தமிழினி ஜெயக்குமரனின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ (சுயசரிதை) ‘மழைக்கால இரவுகள்’ (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை தமிழினியின்  மறைவையடுத்து வெளியிட்டார். இந்நிலையில் யாழ் பல்கலைக்கழகப் பட்டதாரியான மகாதேவன் ஜெயக்குமரனின் மறைவு உலகெங்கும் உள்ள ஜனநாயகவாதிகளுக்கும் மனித உரிமையாளர்களுக்கும்  தமிழ் உணர்வாளர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

 Suhan Kanagasabai  :  இரண்டு கல்வியாளர்கள் அருகருகான வீட்டில் வசித்தனர்.
இந்திய அமைதிப்படைக்கு மொழிபெயர்ப்பு மற்றும் பொதுமக்களுக்கான அன்றாட சிக்கல்களை நிவர்த்திக்கும்பொருட்டு அப்பிரதேசத்தில் ஒரு தகைமையாளர் தேவைப்பட்டார்.
மகாதேவா எனும் ஜெயன் தேவாவின் தந்தையாரை அவர்கள் அணுகினர்.
மற்றக் கல்வியாளர் உடனேயே பின்னடித்துக்கொண்டார்.
மகாதேவாவைச் சுடவந்த புலிகளுக்கு அங்கு ஒரு குழப்பம் வந்தது ,
தாம் சரியானவரைத்தான் சுடவந்தோமா என்பதல்லாமல் எந்த வீடு என எவருக்கும் இக் குழப்பம் வரத்தான் செய்யும். சில நேரங்களில் காலபலனைப்பொறுத்து மிகத்தெளிவாகவும் கடும் குழப்பத்துடனும் அவ் எத்தனங்கள் ,முயற்சிகள் அமைந்துவிடும் ,அல்லது வாய்த்துவிடும்.
ஒருமுறை ஒருவீட்டில் சுடப்போனவர்கள் அந்த வீட்டின் விருந்தினராக வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருவரைச் சுட்டுவிட்டுப்போனார்கள் .

வியாழன், 22 டிசம்பர், 2022

அதிகரிக்கும் கொரோனா அபாயம்... ஸ்டாலின் போட்ட உத்தரவு - வெளிநாட்டில் இருந்து வருவோர் கொரோனா கண்காணிப்பு

 zeenews.india.com  -  Sudharsan G  :  கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது.
ஒமிக்ரான் BF.7, BF.12 போன்ற கரோனா தொற்றுவகைகள் அதிகம் பரவும் தன்மையுடையது எனக்கூறப்படும் நிலையில்,
இவை நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், சீனா, ஹாங்காங், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது.
மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் நேற்று காலை ஆலோசனை கூட்டத்திற்கு பின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,"கோவிட் இன்னும் முடிவடையவில்லை. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.

மகனுக்கு நிச்சயதார்த்தம்: திடீரென உயிரிழந்த முன்னாள் எம்.பி மஸ்தான் தஸ்தகீர்!

minnambalam.com - Kalai  : மகனுக்கு நிச்சயதார்த்தம்: திடீரென உயிரிழந்த முன்னாள் எம்.பி!
திமுக சிறுபான்மை நலப்பிரிவு செயலாளரான மஸ்தானின் மகனுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருந்தநிலையில் அவர் இன்று(டிசம்பர் 22 ) திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் 1995 ல் இருந்து 2001 வரை ராஜ்யசபா எம்பியாக இருந்தவர் மஸ்தான் தஸ்தகீர்(66).
இன்று அதிகாலை அவர் திருவல்லிக்கேணியில் இருந்து  தனது உறவினர் இம்ரான் என்பவருடன் காரில் புறப்பட்டு செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஊரப்பாக்கம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

ஆ.ராசாவின் பினாமி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை தகவல்

 நக்கீரன் : வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்ட பலர் மீது 2015 ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு ஒன்றைப் பதிவு செய்திருந்தது. அண்மையில் இது தொடர்பான வழக்கின் விசாரணையில் ஆ.ராசா உட்பட நான்கு பேர் வரும் ஜனவரி 10ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், விஜய் சடரங்கனி உள்ளிட்ட 4 பேரும், அதேபோல் கோவை ஷெல்டர்ஸ், மங்கல் டெக் பார்க் என்ற 2 நிறுவனமும் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பி வழக்கு விசாரணையை ஜனவரி 10ஆம் தேதி தள்ளி வைத்திருந்தது.

அரசு பணிகளில் 27 சதவீதத்திற்கும் அதிகமாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி்னர் நியமனம்- மத்திய மந்திரி

மாலை மலர்:  ராளுமன்ற மாநிலங்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு, எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்தியப் பணியாளர் நலத்துறை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை மத்திய அரசுப் பணிகளில் 27% மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி்னர் நேரடியாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அளித்த தகவலின்படி இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் விமானப் போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறையில், பைலட், விமான ஊழியர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், விமான நிலைய ஊழியர்கள், சரக்குப் பிரிவு, சில்லறை விற்பனை, பாதுகாப்பு, நிர்வாகம் உள்பட சுமார் 2,50,000 பேர் நேரடி வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாக விமானப் போக்குவரத்துறை இணை மந்திரி வி.கே சிங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேரில் சந்திப்பு..!!

தினத்தந்தி :  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளார். போர் தொடங்கிய பிறகு அவர் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
வாஷிங்டன், உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் நீண்டகாலமாக மோதல் நீடித்து வந்த சூழலில் உக்ரைன் தனக்கான பாதுகாப்பு அரணை உருவாக்க அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய உலகின் வலுவான ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய முயற்சித்தது.
அப்படி நடந்தால் நேட்டோ அமைப்பால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதிய ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்து அந்த நாட்டை ஆக்கிரமிக்க முடிவு செய்தது.
அதன்படி சிறப்பு ராணுவ நடவடிக்கை என கூறி கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியது.

அருந்ததி ராய் ஒரு செலக்டிவ் புத்தி ஜீவி - ஒரு செலக்டிவ் இடதுசாரி - செலெக்டிவ் போராளி!

அருந்ததி ராய் : ஊழல்களிலேயே , '2ஜி ஊழல்' என்று அறியப்பட்டதுதான் மிகவும் மோசமானது அதில் அரசாங்கம் (அதாவது ஆ ராசா) மொபைல் போன்களுக்கான தொலைத்தொடர்பு அலைக்கற்றையை (பொது சொத்து) தனியார் நிறுவனங்களுக்கு அபத்தமான குறைந்த விலையில் விற்றது. நிறுவனங்கள் அவற்றை பெரும் லாபத்தில் மற்ற நிறுவனங்களுக்கு விற்று, பல கோடி ரூபாய் பொது கஜானாவை கொள்ளையடித்தன.

ராதா மனோகர் :  அருந்ததி ராய் ஒரு செலக்டிவ் புத்தி ஜீவி  ஒரு செலக்டிவ் இடதுசாரி .  மொத்தத்தில் ஒரு செலெக்டிவ் போராளி   
சில்லறையை சிதறவிட முன்பு கொஞ்சம்  ஹோம் வேர்க்  செய்து பாருங்கள் மக்காள் ..
 நாட்டின் எந்த விவகாரமானாலும்  திராவிட கோட்பாட்டை தாக்குவதற்கு வாய்ப்பு கிடைக்குமானால், .
இன்னும்  சரியாக சொல்லப் போனால் திமுகவை தாக்குவதற்கு ஒரு போலியான  வாய்ப்பு  கிடைக்குமானால் கூட வரிந்து கட்டிக்கொண்டு முன்வருகிறார்கள் என்றால்...

தமிழிசை சங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் : “மொழி ஒரு இனத்தின் ரத்த ஓட்டம்; மொழி அழிந்தால், இனமும் அழியும்”

முரசொலி தலையங்கம்  :  மொழி தான் ஒரு இனத்தினுடைய இரத்தஓட்டம். மொழி அழிந்தால் இனமும் அழிந்து போகும். தமிழின் வளர்ச்சியும், தமிழனின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21.12.2022) சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற தமிழ் இசைச் சங்கத்தின் 80-ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-
 தமிழ் இசைச் சங்கத்தின் எண்பதாம் ஆண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவில் நானும் பங்கெடுத்து, விருதுகளை வழங்கி, அவர்களை வாழ்த்தக்கூடிய, ஒருசில நிமிடம் உரையாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்று உங்கள் முன்னால் நிற்கிறேன். வாய்ப்பை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய அனைவருக்கும்  நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பாகிஸ்தானில் தாலிபான்கள் பிடியில் இருந்த போலீஸ் நிலையம் மீட்பு: 33 தாலிபான்கள் சுட்டுக்கொலை

தினத்தந்தி  : இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த போலீஸ் நிலையம் மீட்பு: 33 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் பன்னு மாவட்டத்தில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட் வளாகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு பாகிஸ்தான் தலீபான் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளைச் சோந்தவா்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 33 பேரை போலீசார் விசாரணை கைதிகளாக பிடித்து வைத்திருந்தனா்.
இந்த நிலையில் கடந்த ஞயாற்றுக்கிழமை மாலை விசாரணை கைதிகளில் ஒருவர் போலீஸ்காரரை தாக்கி அவரிடம் இருந்து

கவிஞர் தாமரை : ஆபாசக்கூத்து.. கைதேர்ந்த கேடி. சிக்கலில் விஜி பழனிச்சாமி

கோவை விவகாரம்

Gurusamy News18 Tamil Nadu : 'கைதேர்ந்த' கேடி அம்பலப்படுகிறாள்.. விஜிஸ் பழனிசாமி இந்தப்பெயரை இதுவரை நான் உச்சரிக்கவில்லை. பாடல்களில்கூட அநாகரீகத்தை அனுமதிக்காத நான் இந்த 'ஆபாசக்கூத்தை' என் பேனாவால் எழுத வேண்டி நேர்கிறதே .. என கவிஞர் தாமரை முகநூலில் பதிவிட்ட ஒரு பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை இளைஞரின் மரணத்திற்கு சின்னத்திரையில் பணியாற்றும் விஜிஸ் பழனிசாமி காரணம் என கவிஞர் தாமரை தனது பேஸ்புக் பதிவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதன், 21 டிசம்பர், 2022

வட கொரியா (கம்யூனிஸ்டு )மக்கள் 10 நாட்களுக்கு சிரிக்க தடை

 மாலை மலர் :  பியாங்யாங்: சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ள கம்யூனிஸ்டு வடகொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் தடை விதித்து அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். அவரது தந்தையும் வடகொரியாவின் முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. நினைவுதினத்தை முன்னிட்டு, 11 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது, மெதுவாகவே அழவேண்டும்.
இந்த தடையை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் நுழைந்த புதுவகை கரோனா வைரஸ் - மூன்று பேருக்குத் தொற்று உறுதி

nakkheeran.in : கடந்த 2019ம் ஆண்டில் சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி கோடிக்கணக்கானவர்களைப் பாதித்தது.
 பல லட்சக்கணக்கான மக்கள் இந்த பாதிப்பின் காரணமாக உயிரிழந்தனர். இந்தியாவில் இதன் பாதிப்பு என்பது மிகப்பெரிய அளவிலிருந்தது. கிட்டதட்ட 4.5 கோடி பேர் இதுவரை இந்நோயினால் பாதிக்கப்பட்டனர். 5 லட்சம் பேர் வரை இந்த நோய் தாக்குதல் காரணமாக மரணமடைந்தனர்.
இந்நிலையில் தற்போது கரோனா வைரஸ் திரிபு ஏற்பட்டு சீனாவில் வெகு வேகமாகக் கடந்த சில நாட்களாகப் பரவி வந்தது.
பலர் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி இறந்து வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. சீனாவில் பரவி வரும் பிஎப் 7 வகை கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும் 3,000 அகதிகளுக்கு இலங்கை குடியுரிமை !

 தேசம்நெட் - அருண்மொழி :  தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும் சுமார் 3,000 அகதிகளுக்கு இந்த வருடம் இலங்கை குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுமார் 20 சிறப்பு தூதரக முகாம்கள் ஊடாக பெப்ரவரி 23ஆம் திகதிக்கும் டிசம்பர் 15ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக, தி இந்து பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு ஒன்று  பதிலளிக்கையில் சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அக்டோபர்  2021 இலிருந்து டிசம்பர்  2022 வரை  25 சிறப்பு தூதரக முகாம்கள் ஊடாக மாநில புனர்வாழ்வு நிலையங்களில் வாழ்ந்து வரும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு சுமார் 900 தூதரக பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா.. 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! 70,000 பேர் மின்சாரமின்றி தவிப்பு

tamil.oneindia.com  - Halley Karthik :  நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பல இடிந்து விழுந்துள்ளன. தற்போது வரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
வடக்கு கலிபோர்னியாவில் அதாவது சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து சுமார் 345 கி.மீ தொலைவில் கடலில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் சுமார் 6.4 அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் சில சரிந்து விழுந்துள்ளன.
இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆனால் 11 பேர் வரை காயமடைந்துள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பரந்தூரில் விமான நிலையம் .. விவசாயிகளிடம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!!

tamil.asianetnews.com  -  Narendran S :  பரந்தூரில் விமான நிலையம் அமைக்க ஆட்சேபனை… விவசாயிகளிடம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!!
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில், விவசாயிகளின் ஆட்சேபனை குறித்து, சென்னை, தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில், விவசாயிகளின் ஆட்சேபனை குறித்து, சென்னை, தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். காஞ்சிபுரம் வட்டத்தில் 7 வருவாய் கிராமங்கள், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 6 வருவாய் கிராமங்கள் என மொத்தம் 13 வருவாய் கிராமங்களில் சென்னை புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சீனா, அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை

 தினத்தந்தி :  சீனா, அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை
சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.
புதுடெல்லி,
சீனாவில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று நமது நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.
ஆனால் சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று திடீர் எழுச்சி பெற்று வேகமாக பரவி வருகிறது.

"மிஸ்டர் க்ளீன்" வந்தாச்சு.. ஒருத்தரும் தப்ப முடியாது.. கண்சிவந்த திமுக மேலிடம்.. யாரந்த "புள்ளிகள்"

 tamil.oneindia.com - Hemavandhana  :  சென்னை: அடுத்தக்கட்ட அதிரடியை கையில் எடுக்க போகிறதாம் திமுக.. அதற்கான காய் நகர்த்தல்களும், முன்னெடுப்புகளும் தீவிரமாக நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளது.. தேசிய கட்சிகள் இதற்கு தயாராகி வரும் நிலையில், திமுகவும் அதற்கான முன்னெடுப்பை எடுத்து வருகிறது.. மற்றொருபுறம், பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைப்பதிலும் ஸ்டாலின் ஆர்வம் காட்டி வருகிறார்..
எப்போதுமே தேர்தல் சமயங்களில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் சபரீசன் மேற்கொண்ட முயற்சிகளும், அதுகுறித்த களஆய்வும், மேலிடத்துக்கு பேருதவியாக இருந்து வருவதை மறுக்க முடியாது.
திமுக-பாஜக கூட்டணி வைக்கும் என சிவி சண்முகம் 'எத்தனை மணிக்கு பேசினாரு'.. அமைச்சர் கே.என்.நேரு பொளேர் திமுக-பாஜக கூட்டணி வைக்கும் என சிவி சண்முகம் 'எத்தனை மணிக்கு பேசினாரு'.. அமைச்சர் கே.என்.நேரு பொளேர்

செவ்வாய், 20 டிசம்பர், 2022

பிரிட்டனில் மனைவியை பிள்ளைகள் கண்முன்னே கொன்றுவிட்டு பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிய கணவன்.. தேடிப்பிடித்த பிரிட்டன் போலீஸ்

 news.lankasri.com : இதற்காகத்தான் காத்திருந்தோம்... பிரித்தானியாவில் தங்கள் கண்முன் தாயைக் கொன்ற தந்தை தொடர்பில் பிள்ளைகள் கருத்து
பிள்ளைகள் கண்முன்னே தாயை துடிதுடிக்க கொலை செய்துவிட்டு வெளிநாடு ஒன்றிற்கு தப்பிச் சென்ற ஒருவர் பிரித்தானியாவுக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில், தற்போது அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இதற்காகத்தான் காத்திருந்தோம்... பிரித்தானியாவில் தங்கள் கண்முன் தாயைக் கொன்ற தந்தை தொடர்பில் பிள்ளைகள் கருத்து
பிள்ளைகள் கண்முன்னே கொடூரமாகக் கொல்லப்பட்ட தாய்
2001ஆம் ஆண்டு, தெற்கு லண்டனிலுள்ள வீடு ஒன்றில்  (38) என்னும் பெண் தன் பிள்ளைகள் கண் முன்னே துடிக்கத் துடிக்க கொலை செய்யப்பட்டார்.

சென்னையில் பகலில் குப்பை லாரிகளை இயக்குவதற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

மாலை மலர்  : சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியுள்ளதாவது:
சென்னை மாநகரில் துர்நாற்றம் வீசும் குப்பைகளை சேகரித்து குப்பைக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் குப்பை லாரிகளின் பின்னால் வாகன ஓட்டிகள் நிம்மதியாக பயணம் செய்ய முடியவில்லை.
இந்த லாரிகளில் இருந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் விபத்து ஏற்படுகிறது.
குப்பைகள் மீது வலைகளைப் போர்த்தாமல் செல்வதால் லாரியில் இருந்து குப்பைகள் காற்றில் பறந்து சாலைகளில் கொட்டுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

2 லட்சம் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு கொண்டு வந்ததுதான் சாதனை'' - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

நக்கீரன் :    சென்னை நுங்கம்பாக்கத்தில் 'அன்பின் கிறிஸ்துமஸ்' எனும் விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''ஆதிதிராவிட கிறித்தவர்கள் தொடர்பான கோரிக்கை நீதிமன்றத்தில் இருக்கிறது.
ஆனால் 2006-11 ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு என்ன சலுகைகள் வழங்கப்பட்டதோ அதனை ஆதிதிராவிட கிறித்துவர்களுக்கும் வழங்கிய ஆட்சி இது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
உதவித்தொகை நிறுத்தப்பட்டிருக்கிறது. அது தொடர்பான கோரிக்கை எடுத்து வைத்துள்ளார்கள்.
அதை ஒன்றிய அரசுதான் இன்றைக்கு நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரு நிலையில் இருப்பதையும் இனிகோ இருதயராஜ் எடுத்துச் சொன்னார்.

டெல்லியில் ரெயில்களை தினமும் கணக்கெடுத்த தமிழக இளைஞர்கள்- பணத்தை வாங்கி பயிற்சி என்று ஏமாற்றப்பட்ட பரிதாபம்

டெல்லியில் ரெயில்களை தினமும் கணக்கெடுத்த தமிழக இளைஞர்கள்- பணத்தை வாங்கி பயிற்சி என்று ஏமாற்றப்பட்ட பரிதாபம்

maalaimalar : ஒண்ணு... ரெண்டு... மூணு.... மொத்தம் 18 கோச். இதில் ஏ.சி. கோச் 3, முன்பதிவு செய்யப்படாதது 2 என்று டெல்லி ரெயில்வே ஸ்டேசன் பிளாட்பாரங்களில் நம்ம வடிவேலு மாதிரி ஓடி ஓடி சென்று புறப்படும் ரெயில்களையும், வந்த ரெயில்களையும் சில இளைஞர்கள் கணக்கெடுத்து கையில் இருந்த குறிப்பேட்டில் கவனமாக குறித்து கொண்டிருந்தார்கள்.
பிளாட்பாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை மெதுவாக சென்று திரும்பிய போதும் கணக்கெடுப்பாளர்கள் செல்லவில்லை. அங்கேயே நின்று கணக்கெடுப்பதில்தான் தீவிரமாக இருந்தார்கள்.
இதை கவனித்த இந்தி போலீஸ்காரர்கள் மற்ற பிளாட்பாரங்களில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்களுடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

கர்நாடகாவில் 4ம் வகுப்பு மாணவனை பால்கனியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற ஆசிரியர்

Angry Karnataka Teacher Kills Class 4 Student, Beats Up Mother: Cops

 மாலைமலர் : பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹாக்லி என்ற கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த பாரத் என்ற மாணவனை, அவனது ஆசிரியர் முத்தப்பா இன்று மண்வெட்டியால் கடுமையாக தாக்கி உள்ளார்.
அப்போதும் ஆத்திரம் தணியாத அவர், மாணவனை முதல் மாடியின் பால்கனியில் இருந்து கீழே தள்ளி உள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மாணவன் பாரத், பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த மாணவனின் தாயார் அதே பள்ளியில் ஆசியையாக பணியாற்றுகிறார்.

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமுக்குள் புகுந்த என்ஐஏ... புலிகளோடு தொடர்புடையவர்கள் உட்பட 9 பேர்.. ...

tamil.samayam.com  :  திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் ஐந்துக்கும் மேற்பட்டோர் துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் விசாரணையில் ஈடுபட்டுனர்.
கடந்த 2020 மார்ச் மாதம் கேரளா விளஞ்சியம் கடற்பகுதியில் சந்தேகத்தில் இடமாக கைது செய்யப்பட்ட படகிலிருந்து 300 கிலோ 323 கிராம் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, அந்த கடத்தலில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேற்கொண்ட விசாரணையில் அந்த கடத்தலில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சிலர் ஈடுபட்டதாகவும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு குற்ற வழக்கில் ஈடுபட்டு, திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாமில் உள்ளவர்களும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.
தொழிலில் நஷ்டம்... மனமுடைந்த ஃபேஷன் டிசைனர் எடுத்த துயர முடிவு!

இந்தியாவில் 2021ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை - மத்திய குற்ற ஆவண காப்பகம் தகவல்

மாலைமலர் :  கடந்த 2021-ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்துகொண்டதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு நலன் துறை மற்றும் மத்திய குற்ற ஆவண காப்பகம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

திங்கள், 19 டிசம்பர், 2022

ராகுல் காந்தி : இந்தி உதவாது... ஆங்கிலம் படியுங்கள்!

மின்னம்பலம் - Prakash  :  இந்தி உதவாது… ஆங்கிலம் படியுங்கள்: ராகுல் காந்தி
”இந்தி உதவாது… ஆங்கிலம் படியுங்கள்” என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தவும், கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலும் ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்ரா’ எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்கி (செப்டம்பர் 7), பல மாநிலங்களிலும் அதை நிறைவு செய்து வருகிறார்.
தற்போது அவருடைய இந்த ஒற்றுமைப் பயணம் ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பொதுக்கூட்டத்தில் இன்று பேசிய ராகுல்காந்தி, “ஆங்கில மொழியை பள்ளிகளில் கற்பிப்பது பாஜக தலைவர்களுக்கு பிடிக்கவில்லை.

குத்துச்சண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா- எதிராளி முகத்தில் குத்துவிட்டார்

maalaimalar :  புதுடெல்லி:  டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
ஓராண்டில் நாம் பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றினோம். டெல்லி மாநகராட்சியை வென்று விட்டோம். கோவாவில் 2 எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளார்கள். குஜராத்தில் 14 சதவீத வாக்கு வங்கியுடன் 5 எம்எல்ஏக்களை பெற்றுள்ளோம். இதில் குஜராத்தில் பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல.

புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை

மாலை மலர்   :; சென்னை  வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கான புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிப்பதாவது:-
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கென நலத் திட்டங்கள், அவர்களுக்கான தூதரக உதவிகள்,செம்மொழியாம் தமிழ்மொழியைத் தழைத்தோங்கச் செய்திட வெளிநாடுகளில் தமிழ்க் கல்வி, கலை, பண்பாடு மற்றும் கருத்துப் பரிமாற்றத்திற்கென பல்வேறு சீர்மிகு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

அதிகரிக்கும் வட இந்தியர்கள்! அகதிகளாகும் தமிழர்கள்!

aramonline.in  ;  தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலைக்கு மண்ணின் மைந்தர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது! பல்லாயிரக்கணக்கில் வட இந்திய பெண்களுக்கு வேலை! பெரும் திரளாக வருவோருக்கு வேலையும், இருப்பிடமும் தந்து, இருப்போரை சொந்த மண்ணில் அகதிகளாக்குவதா?
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கெலமங்கலம் ஒன்றியம் வன்னியபுரம் கிராமம் அருகே டாடா எலக்ரானிக்ஸ் எனப்படும் போன் உதரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று 5,300 கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த ஆலை செயல்படுவதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கார்ப்பரேஷன் எனப்படும் டிட்கோ 500 ஏக்கர் நிலத்தை தந்துள்ளது. இங்கு சீனாவில் இருந்து வெறியேறிய ஆப்பிள் நிறுவனத்திற்கான போன் உதிரிபாகங்களை தயாரிக்க சுமார் 18,000 பேருக்கான வேலை வாய்ப்பு கொண்ட நிறுவனமாக இது உள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து: "மெஸ்சி மேஜிக்" - அர்ஜென்டினா அணி "சாம்பியன்"

தினத்தந்தி  : 1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் 'மேஜிக்' நிகழ்த்தியுள்ளார்.
தோகா,
22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையை கட்டியது.
எதிர்பார்க்கப்பட்ட 'நம்பர் ஒன்' அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில், கால்இறுதியில் குரோஷியாவிடம் மண்ணை கவ்வியது. லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்த நிலையில் உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று இரவு மோதின.

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

பிரிட்டனில் மனைவியையும் குழந்தைகளையும் கொலை செய்தது (மலையாளி) கணவரா? போலீஸார் விசாரணை

பிரிட்டனில் மனைவியையும் குழந்தைகளையும் கொலை செய்தது மலையாளி கணவரா? போலீஸார் விசாரணை

zeenews.india.com  :  லண்டன்: பிரிட்டனில் செவிலியராகபணிபுரிந்த பெண் மற்றும் அவருடைய குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கொலை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோட்டயம் வைக்கம் குலசேகரமங்கலம் பகுதியைச் சேர்ந்த அஞ்சு, அவரது கணவர் சஜுவால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அஞ்சு, அவரது ஆறு வயது மகன் மற்றும் நான்கு வயது மகள் என குடும்பத்துடன் பிரிட்டனின் கெட்டரிங் என்ற இடத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இங்கிலாந்தில் செவிலியராகப் பணிபுரியும் அஞ்சு, அவரது குழந்தைகள் ஜான்வி, ஜீவா ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மரணங்களைத் தொடர்ந்து, அஞ்சுவின் கணவரும், கண்ணூர் பாடியூர் கொம்பன்பாறையைச் சேர்ந்தவருமான செளவலன் சஜு, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

104 மியான்மார் அகதிகளை இலங்கை கடற்படையினர் மீட்டனர் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்

இலங்கை கடற்படையின் மீட்புக் கப்பலுடன் சேதமடைந்த படகு.
படகில் இருந்து கைக்குழந்தையுடன் மீட்கப்படும் பெண்

jaffnamuslim.con  :  பங்களாதேஷில் இருந்து படகு மூலம் தப்பிச் சென்ற 104 மியான்மார் அகதிகளை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் வெந்தலை தீவுக்கு அப்பால், பருத்தித்துறையில் இருந்து 18 கடல் மைல் தொலைவில் ஒரு பெரிய மீன்பிடி படகை அவதானித்த மீனவர்கள் உடனடியாக வடக்கு கடற்படை கட்டளைக்கு தகவல் வழங்கியதையடுத்து கடற்படையினர் 3 படகுகளை அந்த இடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சனிக்கிழமை (17) மாலை வேளையில் மீனவர்களால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து, கடற்படையினரால் மீட்கப்பட்ட குறித்த படகு, காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அருகில் சனிக்கிழமை இரவு கொண்டு செல்லப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி, ஞாயிற்றுக்கிழமை (18) காலை கிடைத்ததைத் தொடர்ந்து படகில் இருந்தவர்கள் கடற்படையினரால் முகாமிற்கு மாற்றப்பட்டதுடன், மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட நான்கு பேர் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மெட்ரோ ரெயில் திட்டம்- கிரீன்வேஸ் சாலையில் அடுத்த மாதம் துவங்குகிறது சுரங்கப்பாதை தோண்டும் பணி

மாலைமலர் : சென்னை  சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் - விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதை தொடர்ந்து தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி நடைபெறுகிறது.
இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்ட ருக்கும், மாதவரம் முதல்- சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் வழித்தடம் அமைய உள்ளது.
இதில் உயர்மட்ட பாதை, சுரங்க பாதையில் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரெயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன.

டெக்ஸ்டைல் துறை -200 பில்லியன் டாலர் சந்தை! கண்ணீரில் மிதக்கிறது

tamil.goodreturns.in -  Prasanna Venkatesh  : ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பின் உலக நாடுகளில் பணவீக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற பெரிய பொருளாதார நாடுகளில் உள்ள மக்கள் ஆடைகளுக்காகச் செலவிடும் தொகையைப் பாதியாகக் குறைத்துள்ளதால், இந்தியாவின் 200 பில்லியன் டாலர் டெக்ஸ்டைல் மற்றும் ஆடைத் தொழில் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.
கொரோனா தொற்றுக் காலத்தில் இருந்து அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் டெக்ஸ்டைல் மற்றும் ஆடை துறை, கொரோனா-வுக்குப் பின்பு வேகமாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பருத்தி விலை அதிகமாக இருந்த காரணத்தால் தொடர்ந்து மந்தமாகவே இருந்தது.
பருத்தி விலை குறைந்த காலகட்டத்தில் ரஷ்யா - உக்ரைன் போர் இத்துறை வளர்ச்சியின் கழுத்தை நெரித்துள்ளது.

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு தளர்வு

 tamil.hindustantimes.com -  Muthu Vinayagam Kosalairaman :  நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்துள்ள சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்வு செய்து உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை பதிவாளர் உத்தரவுபடி மதுரையில் தங்கி நாள்தோறும், மதுரை மாவட்ட நீதிமன்றத்தி்ல் கையெழுத்திட வேண்டும் என சவுக்கு சங்கருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக 10 நாள்கள் நீதிமன்ற உத்தரவை கடைப்பிடித்து வந்த சவுக்கு சங்கர், சென்னையில் கையெழுத்திட அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இதை ஏற்றுக்கொண்டு சென்னை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் முன் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை அளிக்கப்பட்டது.