இனி மக்களுக்கு கருத்து சொல்லும் வகையிலான படங்களை எடுக்கப் போவதில்லை. நானும் அதிரடி மசாலா படங்களைத் தரப்போகிறேன், என்றார் இயக்குநர் சாமி.
இயக்குநர் சாமி, சென்னையில் நேற்று சினிமா நிருபர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "130 தியேட்டர்களில், சிந்து சமவெளி படம் ஓடிக் கொண்டிருக்கிறது. படித்த, சுயமாக சிந்திக்கும் அனைவரும் அந்த படத்தை கொண்டாடுகிறார்கள்.
சில சமூக விரோதிகள், கலாசார காவலர்கள் என்ற போர்வையில் பெண்களின் சுதந்திரத்துக்கு எதிராக செயல்பட்டு, படம் பார்க்க வரும் பெண்களை திசை திருப்புகிறார்கள். தியேட்டரின் வாசலில் நின்றுகொண்டு படம் பார்க்க வரும் பெண்களிடம் படத்தை பற்றி தவறாக எடுத்துக்கூறி, அவர்கள் மனதை குழப்புகிறார்கள். அதையும் மீறி தெளிவான பெண்கள் படத்தை பார்த்து பாராட்டுகிறார்கள்.
இந்தப் படத்தை எதிர்ப்பவர்களிடம் நான் கேட்பது, பெண்களுக்கென்று தனிப்பட்ட ஆசை கிடையாதா? அவர்கள் உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்தக் கூடாதா? பெண்கள் பார்க்கும் படத்தை கூட, பிற்போக்கு மனம் படைத்த சில ஆண்கள்தான் முடிவு செய்ய வேண்டுமா?
படத்தின் விளம்பரத்துக்காக, என் காரை நானே உடைத்துக்கொண்டதாக இன்னும் சிலர் வதந்தி பரப்புகிறார்கள். போலீசார் என்னை கைது செய்யப்போவதாக பயமுறுத்துகிறார்கள்.
அதனால், என் படங்களின் மூலம் பொதுமக்களுக்கு கருத்து சொன்னது போதும் என்று நினைக்கிறேன். இனிமேல், சர்ச்சைக்குரிய படங்களை இயக்குவதில்லை என்ற முடிவு நான் வந்து விட்டேன். நானும் அதிரடியான மசாலா படங்களைத் தரப் போகிறேன்,'' என்றார்.
சனி, 11 செப்டம்பர், 2010
1500 ஆண்டுகளுக்கு முன்பே ஆன்டிபயாடிக்கை பயன்படுத்திய வடக்கு ஆப்பிரிக்கர்கள்
பாக்டீரியா ஒரு ஆன்டி பயாடிக் என்பது தெரியாமலேயே அதை அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு முன்பே வடக்கு ஆப்பிரிக்கர்கள் ஆன்டிபயாட்டிக்கை பயன்படுத்தியுள்ளதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
பீருடன் சேர்த்து டெட்ராசைக்ளின், ஸ்டிரெப்டோமைசிஸ் போன்ற பாக்டீரியாக்களை வடக்கு ஆப்பிரிக்கர்கள் பயன்படுத்தியுள்ளனராம்.
சூடான், எகிப்து எல்லைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகளை வேதியியல் ஆய்வுக்கு உட்படுத்தியபோது இது தெரிய வந்துள்ளது. ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட எலும்புகள் கிடைத்த இடம் ஒரு காலத்தில் நூபியா என அழைக்கப்பட்டது. அப்பகுதியில் டெட்ரா சைக்ளினை உற்பத்தி செய்யும் பாக்டீரியா மண்ணில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இப்பகுதியில் பீர் உற்பத்தி மிகவும் பிரபலமானது. குறிப்பாக பழங்காலத்து எகிப்தில் பீர் உற்பத்தி அக்காலத்தில் வெகு பிரபலமாக இருந்துள்ளது. அக்காலத்தில் நூபிய மக்கள் ஸ்டிரெப்டோமைசிஸ் அல்லது அது தொடர்பான பாக்டீரியாக்களை பீர் தயாரிக்க பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் அடர்த்தியான பீரை அவர்கள் தயாரித்துள்ளனர். இந்தப் பீரை 2 வயது முதலானவர்கள்
அருந்தியுள்ளனராம்.
அவர்கள் பயன்படுத்தி வந்த பாக்டீரியா ஒரு ஆன்டி பயாடிக் என்பது தெரியாமலேயே அதை அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் என்கிறது அந்த ஆய்வு.

ஆபாச இணையதளங்களை தடைசெய்ய நடவடிக்கை..!
நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களை தடை
நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களை தடைசெய்வது தொடர்பாக பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு நீதிமன்றம் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. 107 ஆபாச இணையதளங்களையும் மேலும் 81 இணையதளங்களையும் செப்டம்பர் பத்தாம் திகதிக்கு முன்பதாக தடைசெய்யுமாறு மேற்படி நீதிமன்றம் ஆகஸ்ட் 20ம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரட்டை கோபுரம் தகர்ப்பு நினைவு தினம்: ஒபாமா பங்கேற்பு
அமெரிக்காவின் நியூயார்க்கில் இரட்டை கோபுர வர்த்தக மைய கட்டிடங்கள் கடந்த 2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ந் தேதி விமானங்களால் மோதி தகர்க்கப்பட்டது. இதில், 300 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலை பின்லேடன் தலைமையில் இயங்கும் அல் கொய்தா தீவிரவாதிகள் நடத்தினர். இச்சம்பவம் நடந்து இன்றுடன் 9 ஆண்டு நிறைவு பெறுகிறது.
இதை தொடர்ந்து வாஷிங்டனில் 9வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. இதில், அதிபர் பராக் ஒபாமா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,
இதை தொடர்ந்து வாஷிங்டனில் 9வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. இதில், அதிபர் பராக் ஒபாமா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,
இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்தின் அருகே மசூதி கட்ட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அங்கு ஒருவர் இந்து கோவில் கட்டும் போது, ஏன் மசூதி கட்ட கூடாது. அமெரிக்காவில் மத சுதந்திரம் உள்ளது. இது அவர்களின் விட்டுக் கொடுக்க முடியாத உரிமையாகும்.
அமெரிக்காவை பொறுத்த வரை ஆணும், பெண்ணும், சமமாக நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு என்று தனிப்பட்ட உரிமைகள் உள்ளன. அது போன்றுதான் மத உரிமையுமாகும்.
அங்கு கிறிஸ்துவ தேவாலயமும் கட்டலாம். யூதர்களின் வழிபாட்டு தலமும், இந்து கோவிலும் கட்டலாம். அது போன்று அங்கு மசூதியும் கட்ட முடியும். இரட்டை கோபுர இடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நான் சந்தித்து இருக்கிறேன். அவர்களின் வருத்தங்கள், வேதனைகளை நான் அறிவேன். அமெரிக்கர்களாகிய நாம் அவர்களின் பிராத்தனையிலும், நினைவு நாளிலும் பங்கேற்போம் என்றார்.

BBC முக்கிய சில நாடுகளில் ஒளிபரப்பை நிறுத்த முடிவு
நிதிப் பற்றாக்குறையினால் திண்டாடுகிறது பி.பி.சி
முக்கிய சில நாடுகளில் ஒளிபரப்பை நிறுத்த முடிவு
உலகம் முழுவதும் மிகப்பெரிய ஒளிபரப்புச் சேவையினைக் கொண்டுள்ள ஊடக நிறுவனமான பி. பி. சி. தனது நிதி பற்றாக்குறையினால் ஆட்குறைப்பு செய்வதுடன் சில முக்கிய நாடுகளில் ஒளிபரப்பு சேவையினை நிறுத்தி வைக்கவும் முடிவு செய்துள்ளது. பி. பி. சி. ஒளிபரப்பு நிறுவனம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் 25 சதவீதம் ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக ‘கார்டியன்’ பத்திரிகை செய்தி வெளி யிட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையினால் தள்ளாடி வந்த நிலையிலும் இந்நிறுவனம் வெளிநாடுகளில் தனது ஒளிபரப்பு அலுவலகங்களை நிறுவியுள்ளது. போதிய விளம்பர வருமானம் இல்லாத சில நாடுகளில் இதன் ஒளிபரப்பினை நிறுத்தி வைக்கவுள்ளது. அதன்படி மியன்மார், ரஷ்யா ஆகிய நாடுகளில் தனது ஒளிபரப்பினை நிறுத்தவுள்ளது. மேலும் பிற நாடுகளில் உள்ள அலுவலக நிர்வாகிகளை 272 மில்லியன் டொலர் அளவுக்கு நிதி திரட்டுமாறும் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில மிஹின் லங்கா விமான சேவை
ஸ்ரீலங்கா எயார்வேஸ், இந்தியன் எயார்வேஸ் ஐத் தொடர்ந்து
யாழ்ப்பாணத்தில் 'மிஹின் லங்கா' விமான சேவைக்கான காரியாலயம்
மிஹின் லங்கா விமான சேவை, அதன் பிராந்திய நிலையம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி திறந்து வைக்கிறது. இத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாக நாளைய இளைஞர்கள் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கலந்து கொள்வார். யாழ்ப்பாணத்தில் தற்போது ஸ்ரீலங்கா எயார்வேஸ் மற்றும் இந்தியன் எயார்வேஸ் என்பவற்றின் கிளைகள் மட்டுமே உள்ளன. மிஹின் லங்கா மூலம் அங்குள்ள மக்களுக்கு மேலும் ஒரு சேவையைப் பெறும் வாய்ப்புத் தற்போது கிடைத்துள்ளது. கட்டுநாயக்க - பலாலி விமான சேவை மற்றும் வெளிநாட்டு விமானப் பயணங்களுக்கான டிக்கட்டுக்களைப் பதிவு செய்தல் போன்ற பணிகளை இதனூடாக மேற்கொள்ள முடியும்.
தங்கபாலு நீக்கப்பட வேண்டும் : இளங்கோவன் திடீர் போர்க்கொடி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தங்கபாலுவை நீக்க வேண்டும்,'' என முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இளங்கோவன் கூறினார்.
நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேசமணிக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும். நாகர்கோவிலை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். முதல்வர் நாகர்கோவில் வரும்போது இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலையை இன்னும் முறைப்படுத்த வேண்டும். அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் தாக்கப்படுவதும், அவர்களது வீடுகள் மீது தாக்குதல் நடைபெறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. கூட்டணி பற்றி, தேர்தல் வரும் போது காங்., தலைவர் சோனியா அறிவிப்பார். கடந்த 45 ஆண்டுகளாக காங்., தமிழகத்தில் எல்லாருக்கும் ஏணியாகவே இருந்துள்ளது. தமிழகத்தில் காங்., தனித்து ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு தாமதமானால், ஏணியில் ஏறிச் சென்று சிம்மாசனத்தில் சரி சமமாக அமர வேண்டும். மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி போன்ற சிறந்த தலைவர்கள் இல்லாதது, தமிழக காங்கிரசுக்கு பெரும் குறையாக உள்ளது.
தமிழக காங்., கமிட்டியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. ராதாபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு காமராஜர் பெயர் வைக்கக் கோரி சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடத்திய காங்கிரஸ்காரர்கள் மீது, கமிட்டியினரே போலீசில் புகார் செய்தனர். மாநிலத்தில் காங்கிரசின் திருப்தியற்ற செயல்பாடு பற்றி மேலிடத்தில் சொல்லியுள்ளோம். தமிழக காங்., தலைவர் தங்கபாலு நீக்கப்பட வேண்டும். காங்கிரசில் கோஷ்டி பூசல் என்பதை ஏற்க முடியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தந்து விட்டு, பார்லியில் தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு எதிர்த்து பேசுகிறார். முல்லை பெரியாறு பிரச்னையில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்க, முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை.
தமிழகத்தில் காங்., ஆட்சி அமைய வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். காங்., ஆட்சிக்கு வந்தால், தமிழகம் வளம் பெறும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதில்லை. கடந்த தேர்தல்களில் சில நிர்பந்தங்களால் கன்னியாகுமரி தொகுதியை இழந்தோம். இனி அப்படி நடக்காது. நான் மாநில காங்., தலைவராக நியமிக்கப்படுவேனா? என்பது பற்றி சோனியா தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

வாசு.gunasekaran - Lagos,நைஜீரியா
2010-09-11 16:12:02 IST
இளங்கோவனுக்கு மினிஸ்டர் போஸ்ட் வேனுமாம்ப , அதுக்குதான் அலையிரர் . புருஞ்சிக்கொங்க ....
Ramu - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-11 16:06:07 IST
இந்திய நாட்டை ஒரு இந்தியன் தான் ஆட்சி செய்ய வேண்டும் ,அதேபோல் தமிழ் நாட்டை ஒரு தமிழன்தான் ஆட்சி செய்ய வேண்டும் ,அது திமுக,அதிமுக,காங் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் .அடுத்த மாநிலத்தவர் வர கூடாது...
ராஜ் குமார் - Madurai,இந்தியா
2010-09-11 15:26:53 IST
ராமதாசுக்கு அடுத்த காமெடி பீஸ் இவர்தான்...
தங்க பாலு pa - திருச்சி,இந்தியா
2010-09-11 15:05:55 IST
அவர் (தங்கபாலு) பாட்டுக்கு காலேஜ் உண்டு காங்கிரஸ் உண்டு,ஏகப்பட்ட அமௌன்ட் பார்த்துகிட்டு பேசாமல் இருந்தால் என்ன இளங்கோ மானத்தை வாங்குற .பேசாமல் என்னை தொடர்பு கொண்டு உனக்கு எவளவு என்று என்னை தொடர்பு கொண்டால் பேசி சுமுகமான முடிவு எடுக்கலாம் .உனக்கு மட்டும் ஒன்னு சொல்லுறேன் எங்க அண்ணன் காலேஜ் கூடிய விரைவில் மெடிக்கல் காலேஜ் அகபோகுது போசாமல் இருந்தால் அதுக்கும் சேர்த்து ஒரு அமௌன்ட் வாங்கி தரேன் ....
அறிவழகன் - திருச்சி,இந்தியா
2010-09-11 14:12:12 IST
ஐயா, இளங்கோவன் அவர்களே கடந்த முறை தாங்கள் தானே தமிழ் நாட்டின் தமிழக காங்கிரஸ் தலைவர் அப்போது என்ன செய்து கிழித்தீர்கள் இன்று குறை சொல்ல வந்துள்ளீர்கள் வெட்கமாக இல்லை உமக்கு. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து இப்போ தங்கமான தங்கபாலுவை கடிக்கிரீரா? உன் கனவு பழிக்காது ஐயா, உமக்கு காலம் தான் பதில் சொல்லும். அன்புடன், உண்மையான காங்கிரஸ் காரன், திருச்சி....
ramasami - coimbatore,இந்தியா
2010-09-11 13:46:31 IST
அய்யா ஈ வீ கே எஸ் , முதலில் டெல்லிக்கு காவடி தூக்குவதை காங்கிரஸ் தலைகள் நிறுத்தட்டும் .அப்புறம் டெபாசிட் வாங்குறத பற்றி யோசிக்கலாம்.யார் இருக்கா உங்களுக்கு ஓட்டுப்போட ?....
உண்மை இந்தியன் - london,இந்தியா
2010-09-11 13:32:01 IST
இளங்கோவன் இருக்கும் வரை congressku தமிழ்நாட்டில் மதிப்பு irukaathu...
esspee - trichi,இந்தியா
2010-09-11 13:23:59 IST
தமிழக காங்கிரஸ் ஒரு குங்குமம் சுமக்கும் கழுதை என்பது வெகு நாட்களுக்கு முன்னமே நிருபிகபட்ட உண்மை. இதை அவர்களே வெட்கம் கேட்டு சட்டசபையில் ஒப்புக்கொண்டுள்ளனர். இதில் கட்சி தலைவர் யாராக இருந்தாலும் செய்யவேண்டிய வேலை, அழும் கட்சிக்கு தலையாட்டுவது மட்டும் தான். அகில இந்திய காங்கிரஸ் தலைமை எப்போதும் மத்திய ஆட்சியை பிடிப்பது ஒன்றே குறிகோளுடன் செயல்படும். அதற்க்கு தமிழகத்தை பற்றியோ அல்லது ஆட்சியை பற்றியோ கவலை இல்லை. அதெல்லாம் காமராஜருடன் போச்சு இப்போ 17 எம் பி சீட்டு மட்டுமே குறிக்கோள். இதற்குபோய் நான் நீ என்று கோஷ்டி சண்டை வேஸ்ட் ....
கண்மணி - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-11 13:17:24 IST
சுப்ரமணிய சாமியின் அடுத்த வாரிசு தான் இந்த அண்ணன். மனசுல ரொம்ப புத்திசாலி என்று நினைப்பு....
BALA - Palayamkottai,இந்தியா
2010-09-11 13:16:50 IST
நீங்க மத்திய ஜவுளி துறை அமைச்சராக இருந்த பொது குறைந்தபட்சம் உங்க தொகுதிக்கு என்னத்த செய்து கிழிச்சிடிங்க....
jeyaraj - Kanchipuram,இந்தியா
2010-09-11 11:59:16 IST
தங்கபாலு தலையும் மூளையும் சுத்தம். அவரை ஒரு மடதலைவராக பார்போம்....
vinoth - chennai,இந்தியா
2010-09-11 11:39:35 IST
தமிழக காங்., தலைவர் தங்கபாலு நீக்கப்பட வேண்டும். காங்கிரசில் கோஷ்டி பூசல் என்பதை ஏற்க முடியது ஆஹா ஆரம்பிசிட்டங்காய ஆரம்பிசிட்டங்கா...
லார்சன் - Dubai,இந்தியா
2010-09-11 11:15:00 IST
உண் வாயை வச்சிட்டு சும்மா இருக்க முடியலையா..? உனக்கு ஏன்டா இந்த பதவி ஆசை...? நீ காங்கிரெஸ் தலைவன் ஆனா என்னடா கிழிச்சு தள்ளுவ... தவள மாதிரி உண் வாய திறந்து எதாவது பேசிட்டே இருக்காதா... நல்ல புள்ளையாட்டும் இருக்கனும்... ஓகே.. நண்பன் டா.......
SethuRajan - Singapore,இந்தியா
2010-09-11 10:29:29 IST
சூப்பர்...
c.ramasamy - tup,இந்தியா
2010-09-11 10:26:10 IST
அண்ணா,நீங்க சரியான ஆளுணோ...அங்க கடிச்சு இங்க கடுச்சு...உங்க ஆளவே கடிக்க ஆரம்பிச்சுடீங்க...இது யார புடிச்ச கெரகம்னு தெரியலை...i...
பாஷா.J - DUBAI,இந்தியா
2010-09-11 10:13:39 IST
ரொம்போ புத்திசாலி மாதிரி பேட்டி கொடுக்குறார்! எப்படி!!!!!!! அவரை மாத்தினால் தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துடுமா? எப்படியும் உன்னை கட்சியை விட்டு தூக்க போறாங்க நீ ஆ தி மு க வில் செரபோற கொஞ்சம் வெயிட் பண்ண................
திருக்குமரன் - திருவாரூர்,இந்தியா
2010-09-11 09:33:07 IST
ஆசை எவனை விட்டு வைத்தது....
தண்டபாணி - தூத்துக்குடி,இந்தியா
2010-09-11 08:47:17 IST
தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணியானாலும் (அல்லது தனித்தனியே நின்றாலும்) கண்டிப்பாகத்தோற்கடிக்கப்படவேண்டும்... வேறு யாரு ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை... ஆனால் தி.மு.க மீண்டும் வந்தால் தமிழ்நாட்டை(மக்களை) யாராலும் காப்பாற்றமுடியாது....
AXN பிரபு - சென்னை,இந்தியா
2010-09-11 08:36:11 IST
தவளை வாய் மீண்டும் பிதற்ற ஆரம்பித்து விட்டது. ஐயா இளங்கோவா ! திமுகவையும் உனது கட்சியான காங்கிரஸ்ஐயும் இப்படி வீரமாக தாகும் உன் வாய் ஏன் அதிமுகவையோ ஜெயளைதவையோ ஒரு வார்த்தை பேச மாட்டேன் என்கிறது ? காங்கிரஸ் ஆட்சிக்கு வர திமுகவை விமர்சிக்கும் வீரன் நீ என்று யாரை ஏமாற்றுகிறாய் ? அப்படி திமுக வீழ்ந்தால் adhimuga thaanae ஆட்சிக்கு varum . yidhil காங்கிரஸ் aatchi yengae nottugiradhu ? unmaiyil நீ காங்கிரஸ் katchi ஆட்சிக்கு வர yenninaal yirnadu kazhagangaliyum vimarsanam sei. appodhu நீ வீரன் என்று oppukolgirome....
iindian - dubai.,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-11 08:09:36 IST
LET CONGRESS GO TO HELL. WHO BOTHERS! BUT ONE THING , THIS THANGABALU WHEN HE WAS MP, HE HAD THE DISTICTION, RECORD OF NOT ASKED EVEN A SINGLE QUESTION IN PARLIAMENT. SO, HE SHOULD BE DRIVEN OUT OF TAMILNADU!...
மதி - Chennai,இந்தியா
2010-09-11 08:08:45 IST
தமிழகத்தில் காங்., ஆட்சி அமைய வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். ஆனால் நீ ஆட்சிக்கு வரவேண்டும் என்றா விரும்புகிறார்கள்? பிள்ளை பூச்சியை மடியில் கட்டிக்கொண்டு,புராணம் பார்த்தவன் கதையாக உன்னையும் ராமதாஸையும் கட்சியில் வைத்துக்கொண்டு காலம் ஓட்டுவது மிக்க கஷ்டமே.கவுன்சிலர் தேர்தலில் நின்றே உன்னால் வெற்றிபெற முடியாது! வெட்டிப் பேச்சு பேசி, கட்சியைக் குழி தோண்டிப் புதைப்பதுதானே உன் எண்ணம். அம்மா கட்சியில் பதவி பெறுவது நிச்சயம்.எனவே போகும்போது,காங்கிரசை சவக்குழியில் புதைக்கத்திட்டம் இடுவது உனக்கே நல்லா இருக்கா இளங்கோவா?...
பாமரன் - America,இந்தியா
2010-09-11 08:06:21 IST
சபாஷ்டா இளங்கோவா!!!...
MANNANDHAI - India,இந்தியா
2010-09-11 07:49:30 IST
தந்தை பெரியார் அவர்களின் காலம் கடந்த திருமணத்தையே எதிர்த்து போர்க்கொடி பிடித்து வெளியே வந்து தி மு க வை துவக்கிய முக்கிய தூண்களில் ஒருவர் EVK சம்பத் அவர்கள். பின்னர் ஏதோ காரணங்களால் விலகி தனிக்கட்சி துவங்கிச் சென்றுவிட்டார். அவர் மட்டும் DMK விலேயே தங்கியிருந்தால் அண்ணாவே முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என்பதெல்லாம் பழைய ஏங்கவைக்கும் வரலாறு. இவர் அத்தகைய சம்பத் அவர்களின் புதல்வர். might is right என்பது இவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். சூழ்நிலைகளை பயன் படுத்திகொண்டு வலிமையுள்ளவன் ஜெயிப்பதையே நாம் இதுவரை பார்த்து கொண்டிருக்கிறோம். இவர் புதிதாக எதையும் சொல்லவில்லை. ஆயினும், புதிதாக எதையாவது செயவாரேயாயின், பார்க்கலாம்....
jopet - singapore,சிங்கப்பூர்
2010-09-11 07:47:00 IST
அட உனக்கு பந்தியிலேயே இடம் இல்லன்னு சொல்லறாங்க நீ என்னன்னா பாயாசத்துல சக்கரை சரியா இருக்கான்னு பாத்துகோங்கன்னு அட்வைஸ் பண்ணிக்கிட்டு நிக்கிறை அவவளவுதான் உன் சாப்டர் close . நீ இனிமேல் காங்கிரஸ்ல்ல சீட்டு வாங்க முடியாது வாங்கினாலும் ஜெய்க்க முடியாது. அப்படியே நீ அதிமுகவுக்கு போனாலும் உனக்கு உன் தொகுதி கிடைக்காது. வேற எங்கேயாவது நின்னாலும் உன்னை காங்கிரஸ்காரனுன்களே தோக்கடிசிடுவானுங்க. சரின்னு விஜயகாந்த் கிட்ட சேந்தின்னா உன்னை வேட்டி ஜட்டியை எல்லாம் உருவிட்டு தெருவில பராரியா விட்டுடுவான் அவன் அந்தளவுக்கு அவன் காசுல்ல கெட்டி. இப்ப ஒன்னு சொன்னா கோவிச்சுக்காத! நீ உனக்கு ஆப்பை நீயே தேடி அதுல போய் உக்காந்திட்டேயா! அதனால உன் ஜோலி முடிஞ்சுபோச்சுயா முடிஞ்சுபோச்சு!...
மணி - சென்னை,இந்தியா
2010-09-11 07:11:45 IST
தமிழகம் செழிக்க காங்கிரஸ் அழியவேண்டும். காங்கிரஸ் அழிய தங்கபாலுவின் தலைமை மிக அவசியம். நல்லெண்ணம் கொண்டோரே!!தடுக்காதீர்கள்!!....
V.Subbarao - Singapore,இந்தியா
2010-09-11 07:05:57 IST
திரு. இளங்கோவன் அவர்களே, தங்கள் எடுத்துகாட்டு, சரியானதே. அது தமிழகத்தில் மட்டுமல்ல , இந்திய நாடு முழுவதிலுமுள்ள காங்கிரஸ் காரர்கள் அப்படித்தான் ; சுயநலம் முதன்மையில். உதாரணம் வேண்டுமா: இன்று தினமலர் போட்டோ ஆல்பத்திணை பாருங்கள். காலம் சென்ற வல்லபாபை பந்த் அவர்கள் ஒரு பழம் பெரும் காங்கிரஸ் காரர். அவரின் நினைவு நாளில் சிலையினை கௌரவிக்கும் படத்தில் அவர்மகன் 'பந்த்; ஐ தவிர வேறு பேர் சொல்லும் காங்கிரஸ் காரர்கள் ஒருவருமிலர். இதுதான் இந்திய காங்கிரஸ்....
Rajavel - Singapore,இந்தியா
2010-09-11 06:28:12 IST
தமிழ்நாடு காங்கிரஸ்க்கு E V K S இளங்கோவன் போன்ற ஒரு முதுகெலும்புள்ள தலைமை தேவை....
john - tirunelveli,இந்தியா
2010-09-11 06:27:28 IST
எங்களுக்கு(தமிழ் மக்களுக்கு ,எங்கள் ரத்த உறவு இலங்கை தமிழனுக்கு ) முதல் எதிரியே காங்கிரஸ்தான் ....அதனால நீ தலை கீழா நின்னாலும் ஆட்சிக்கு வரவிட மாட்டோம் .நீயே ஒரு வெட்டிபய ,உன் பேச்ச எவனாவது கேப்பானா ?.உன்ன தலைவரா வேற ஆக்கனுமா ?சும்மா புலம்பாம வாய மூடிக்கிட்டு குப்புற படுத்து தூங்கு !...
ப. மாதவன் - சென்னை,இந்தியா
2010-09-11 05:58:47 IST
அதே மூப்பனார், வாழப்பாடி காலத்தில் தானே ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார். அப்பொழுது எங்கே போனது உங்கள் கட்சியின் பற்று? தலைவரின் பற்று? உங்கள் அடிப்படை கொள்கை என்ன? பணமும் பதவியும் தானே. இனி அந்த கொள்கைகளுக்கு தமிழகத்தில் விலைக் கிடையாது. இருப்பது நான்கு பேர்கள். அதிலும் நான்கு கோஷ்ட்டிகள். தனித்து நின்றால் நிற்க கூட ஆள் கிடைக்காது....
செல்வன் - Chennai,இந்தியா
2010-09-11 05:50:36 IST
கட்சியில தன்மானமுள்ள நபர்கள் ஒருசிலராவது உள்ளனர் என்பதை இவர் நிரூபித்துள்ளார். ஊழல் மாமன்னனின் கூஜா தூக்கிகளும், கால் நக்கிகளும் வெட்கமில்லாமல் ஆளும்கட்சியின் பினாமியாக காங்கிரஸ் கட்சியில் தாலைமையில் உட்கார்ந்து கொண்டு கல்லா பெட்டியை நிரப்பிக்கொண்டு இருக்க கேள்வி கேட்ட்க முதுகெலும்பில்லாத காங்கிரேச்ச்கரர்கள் ஏன் வாழவேண்டும்....
sathish - cbe,இந்தியா
2010-09-11 05:49:40 IST
சரியான செம அடி,, இந்த பொம்மை தங்க பாலுவை தூக்கி குப்பை தொட்டிலில் போடணும்,,, எல்லாம் சோனியா சொல்வார்,,,எல்லாம் சோனியா சொல்வார் ,,அப்போ இவரு என்ன தான் சொல்வாரு,, இப்படி ஒரு தலையாட்டி பொம்மை {மத்தியில் ஒரு பெரிய பிரதம மந்திரி பொம்மையும் இருக்கிறது}தேவையா,, நாப்பது வருசமா தூக்கு தூக்கியா இருக்கிறது போதாதா ,, இளங்கோவனை தலைவர் ஆக்கவேண்டும் ,, காங்கிரசில் முதுகெலும்பு,, உண்மையான காங்கிரஸ் ஆளு,, நேர்மை,, நீதிக்கு வேண்டி போராடும் ஆளு ,, இவருக்கு கொஞ்சம் அன்னை சோனியா கடை கண் காட்டினால் போதும் நிச்சயமாக காங்கிரஸ்தான் அடுத்த ஆட்சி ,,பின்னர் இந்த திராவிட கட்சிகள் எல்லாம் தூக்கு தூக்கியாக மாறும்,,, இவரின் கையை கொஞ்சம் பல படுத்தினால் போதும்,,,,ஏன்தான் சோனியாவுக்கு இன்னும் புரியவில்லை,,, ராகுல் கூட தலை அசைத்துவிட்டார்,, மறுபடியும் இந்தியாவை காங்கிரஸ் ஆளும் அந்த பொற்கால நாள் வரத்தான் போகிறது,,, அந்த பொற்காலம் வெகு தூரமில்லை,,, இன்னும் சோனியா கொஞ்சம் தீவிர முயற்சி எடுத்தால் போதும்,, இங்குள்ள தலைவர்களை கொஞ்சம் பேசாவிட்டால் போதும்,,, இளங்கோவனுக்கு தலைவர் பதவி உடனே கொடுத்தால் நிச்சயமாக காங்கிரஸ் மறுபடியும் சிம்மாசனம் ஏறும் ,,,, இல்லை என்றால் இதே போல் அடுத்தவர் எச்சிலைக்கு கோஷ்டி அடிதடி தான்,,,...
veera - chennai,இந்தியா
2010-09-11 05:15:04 IST
KVT is the bridge between Karuna and sonia. How he will be removed...
கலைச்செல்வன் - பால்டிமோர்யுஎஸ்ஏ,இந்தியா
2010-09-11 04:14:40 IST
முதலில் உன்னை காங்கிரசை விட்டு நீக்கவேண்டும்.இன்றோ ?! நாளையோ ?! என்று இழுத்துக்கொண்டு, மரணப்படுக்கையில் கிடக்கும் காங்கிரசை உடனடியாக புதை குழிக்கு அனுப்ப முயலும் உன்னை, உடனடியாக கட்சியிலிருந்து நீக்கினால்தான் கொஞ்சகாலத் திற்காவது காங்கிரஸ் தமிழகத்தில் உயிர்வாழும். தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமையவேண்டும் என்று ஒருவரும் ஆசைப்படவில்லை. 1967 க்குப் பிறகு காங்கிரசை அடியோடு ஒழித்து காலிசெய்து விட்ட தமிழக மக்கள், காங்கிரஸ் ஆட்சியை கெட்ட கனவாக மறந்தே விட்டார்கள்.ஆனாப்பட்ட காங்கிரஸ் பாட்டனார்களே முட்டி மோதி பாச்சா பலிக்காமல் பரலோகம் போய்ச்சேர்ந்து விட்டார்கள்.பெரிய யானைகளாலேயே முடியாத காரியம் கேவலம் எலிப்புழுக்கை உன்னால்தானா முடியப்போகிறது.நல்லா இழுத்துப் போர்த்தி காங்கிரஸ் ஆட்சியைப்பற்றி பகல் கனவு காணுங்கள் ( நன்றி அப்துல் கலாம் )............
jagir - jahra,குவைத்
2010-09-11 03:22:51 IST
சூப்பர் ராஜா. கெளம்பிட்டியா....
jamal - chennai,இந்தியா
2010-09-11 02:33:38 IST
லூசுக்கு இதே வேலை...
வாசு கனடா - டொராண்டோ,கனடா
2010-09-11 01:49:10 IST
இந்த ஆள் எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்க முடியாது,ஆகையால் தங்கபாலுவுக்கு கொல்லி வைத்து அந்த பதவியை பிடிக்க முயச்சிக்கிறார்,இந்த ஆள் வாழப்படி ராமமுத்திக்கு கொடுத்த தொல்லை சொல்ல முடியாது,காங்கிரஸ் தமிழ் நாட்டில் உருப்பட கூடாது அது முழு தமிழ் இனத்துக்கும் கேடு விளைவிக்கும் சிந்தித்து செயல்பட வேண்டும் தமிழ் நட்டு மக்கள்,...
காமெடி பீஸ் - boston,யூ.எஸ்.ஏ
2010-09-11 01:16:21 IST
அப்படிபோடு. அடுத்த தலைவர் இவர்தான். அதுக்குத்தான் இந்த ஆட்டம் போட்டியா?...
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-09-11 01:04:40 IST
சுத்தம். ஆமாங்க, அந்த தங்கவேலு வேஸ்ட்ங்க. நல்லா சிரிச்சிட்டு ஞானபழம் மாறி போசு கொடுக்கிறாரே தவிர ஒரு கெத்தே இல்லீங்க. அடாவடியா ஒரு ஆள தூக்கி போடுங்க. நீங்க காவடி தூக்குறத பாத்து எங்களுக்கே பாவமா இருக்கு....
zamir khan - chennai,இந்தியா
2010-09-11 00:58:23 IST
Why did you loose Kanyakumari ( Nagercoil) parliament constituency? Are you not responsible? Mr.EVKS, think it well. Now, what you are doing is nothing other than creating destruction to congress. We are doubtful whether you got something cooking in your mind. It seems you are joining hands with Ms.Jaya. How is that? EVKS control your blood pressure. There is no use and, you are spoiling your future. If you want to build congress then first strengthen Kanyakumari which use to be a congress fort. Nesamony, Ponnappa Nadar, James, Palaya, Mahadevan Pillai, Vijayaraghavan those were the pillars of the congress and had reputation among the people. Visit the villages and see how those leaders were adored by the people. When you could not with hold such a fort how you anticipate to built congress??. Secondly, stop making noise which is not going to give fruit to congress. Develop root level. Is it possible for you now? Do not just hold the tail leaving the entire animal....
srini - chennai,இந்தியா
2010-09-11 00:48:01 IST
கொஞ்சம் அந்த திருட்டு முழிய மாத்திகிட்டு நல்ல முழியோட வா...
srini - chennai,இந்தியா
2010-09-11 00:46:15 IST
முல்லை பெரியாறு பத்தி பேசற, பாலாறு பத்தி பேசவே இல்ல, அங்க காங்கிரஸ் காரன் ஆட்சி செய்யறான்னு பேசலியா, கர்நாடகவில காங்கிரஸ் ஆட்சி இருந்தப்போ காவிரி பிரச்சனைக்கு ஒண்ணுமே செய்யல, இப்பவும் மத்தியில ஒன்கட்சி தானே இருக்கு. ஒரு ஆணியும் புடுங்கல ? சரி இலங்கை தமிழர் பிரச்னையில் ராஜீவின் இலங்கை இந்திய ஒப்ந்தத்தை நிறைவேற்றுவதில் பொடியன்கள்தான் பிரச்னை செய்கிறார்கள் இல்லை என்றல் ஈழத்தில் தேனாறும் பாலாரும் ஓடும் என்று நீயும் ஒன்கட்சியில் உள்ள எல்லா ஈனர்களும் பேசி வந்திர்கள், இப்ப எல்லாம் ஒரு பொடியனையும் காணோமே, இப்ப ஆணிய புடுங்க வேண்டியதுதானே. தமிழனுக்கு சிங்களவனுக்கு இணையான குடி உரிமையை வாங்கி தரவேண்டியதுதனே, அவ்வளவு ஏன், அடி பட்டு சாவற மீனவன பத்தி பேசவே இல்ல. ஒன்கட்சிய தமிழ் நாட்டுல வளக்கறது பத்தி மட்டும் வாய் கிழியரமாதிரி பேசற....
ஜெயசங்கர் - chennai,இந்தியா
2010-09-11 00:43:35 IST
இவனால மக்களிடம் வோட்டு வாங்க வக்கு இல்ல. இவன் நியூஸ் போட்டு நீங்க ஏன் பக்கத்த வேஸ்ட் பண்றீங்க?...
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-09-11 00:26:49 IST
தங்கபாலுவை நீக்கினால் காங்கிரஸ் உருப்பட வாய்ப்பு இருக்கிறது.ஆகையால் தங்கபாலுவை நீக்க கூடாது....
தமிழ்க் கட்சிகளின் அரங்கம் 7 ஆவது தடவையாக இன்றைய தின
தமிழ்க் கட்சிகளின் அரங்கம் 7 ஆவது தடவையாக இன்றைய தினம் பிற்பகல் 4.00 மணியளவில் கொழும்பு தமிழீழ விடுதலைக் கழகத்தில் கூடுகிறது.இத்தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பின் செயலாளருமான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கு விரைந்த தீர்வு, தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை என்பன குறித்தும் மேற்படி அரங்கத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.இதன்போது வடக்கு, கிழக்கில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், போர் கைதிகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் கலந்துரையாடப்படும் என சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

‘லயன்’ வரிசைக் குடியிருப்பு முறையை இல்லாதொழிக்கும் திட்டத்திற்கு இந்தியா
்இந்திய உதவியுடன் பெருந்தோட்ட கிராமங்கள்
மலையகத் தோட்டப் புறங்களில் உள்ள ‘லயன்’ குடியிருப்புகள் அனைத்தையும் இல்லாதொழித்து தனித்தனி வீடுகளைக் கொண்ட கிராமங்களாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இதற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
தொழிலாளர்களின் வீடுகளைக் கொண்ட கிராமத்தைத் தனியாகவும் தொழில்புரியும் தோட்டத்தைத் தனியாகவும் அடையாளப்படுத்துவதற்கு திட்டமிட்டுச் செயற்படுத்தவுள்ளதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.
தொழிலாளர்களின் ‘லயன்’ வரிசைக் குடியிருப்பு முறையை இல்லாதொழிக்கும் திட்டத்திற்கு முதற்கட்டமாக இந்தியா ஆறாயிரம் வீடுகளை நிர்மாணித்து வழங்கவுள்ளது. இதில் முதன் முதலாக ஊவா மற்றும் மத்திய மாகாண தோட்டங்களில் ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படுமென்று பிரதியமைச்சர் சிவலிங்கம் குறிப்பிட்டார்.
தற்பொழுது தொழிலாளர் குடியிருப்புகளும் தோட்டமும் ஒன்றாகவே உள்ளன. இதனால், அவர்களின் வாழ்விடமும் தோட்டம் என்றே அடையாளப்படுத்தி அழைக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் அந்த நிலையை மாற்றி வாழ்விடம் அமையும் கிராமத்தை வேறாகவும் தேயிலை, இறப்பர் தோட்டங்களை வேறாகவும் அழைக்கும் விதத்தில் ஏற்பாடுகளைச் செய்யவுள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
‘நான் இந்தத் தோட்டத்தில் வாழ்கிறேன் என்பதை இல்லாமற் செய்து நான் இந்தக் கிராமத்திலிருந்து அந்தத் தோட்டத்திற்கு வேலைக்குப் போகிறேன் என்று சொல்லும் நிலையை உருவாக்குவோம்’ என்று கூறிய அமைச்சர் தோட்டங்கள் ஆங்கிலப் பெயர்களில் அழைக்கப்பட்டாலும் 90% தமிழ்ப் பெயர்கள் உண்டென்றும் அந்தத் தமிழ்ப் பெயர்களில் தொழிலாளர்களின் கிராமங்கள் அழைக்கப்படுமென்றும் விளக்கினார்.
வாழமலை, சமுத்திரவள்ளி, சமரவள்ளி, தெய்வானை, மண்வெட்டி, லெட்சுமி, கல்மதுரை, பூப்பனை என்று பல்வேறு தமிழ்ப் பெயர்களில் தோட்டங்கள் அழைக்கப்படுகின்றன. இந்தத் தமிழ்ப் பெயர்களைக் கிராமங்களுக்குச் சூட்டுவதோடு தோட்டங்களை ஆங்கிலப் பெயரில் அழைக்க முடியும் என்று குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம் உதாரணமாக கல்மதுரை கிராமத்திலிருந்து ஸ்ரோனிகிளிப் தோட்டத்திற்குத் தொழிலுக்குச் செல்கிறேன் என்ற நிலையைத் தோற்றுவிப்போம் என்று மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்திய அரசினதும் இலங்கை அரசினதும் முழுமையான ஒத்துழைப்புடன் மலையகத் தோட்டப் புற மக்களின் வாழக்கை முறையை முற்றாக மாற்றியமைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்குமென்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

புலிகளின் அழிவைக் கூட நம்பமுடியாமல் திண்டாடும் ஒரு கையறுந்த நிலையை
மிகைப்படுத்தப்பட்ட வரலாறில் தொலைந்து விட்ட வீரம் கையேந்தி நிற்கும் தமிழ்ப் பாசிசம்.- கற்சுறாஈழத்திலிருந்து வெளிவரும் புலிகளது பத்திரிகைகளாக இருந்தாலும் சரி கொழும்பிலிருந்து வரும் தமிழ்ப் பத்திரிகைகளாக இருந்தாலும் சரி புலம் பெயர்ந்த பத்திரிகைகள் என்றாலும் சரி தமிழர்களது வீரம் பற்றியும் தமிழினம் பற்றிய ஒரு மாயைத்தனமான மிகைப்படுத்திய கற்பனைக்கூடான எழுத்துமுறையை வளர்த்துக்கொண்டு வந்தது. தமிழர்கள் மீதான புனிதக் கதையாடலாக அது கொண்டிருந்தது. அது ஒவ்வொரு தமிழ் மனங்களிலும் மெல்ல மெல்ல இனவாதத்தைத் தூண்டி விட்டுக் கொண்டு வந்ததை யாரும் கணக்கிடவில்லை.
ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் மாற்றுக் கருத்துக்கொண்ட பத்திரிகைகள் தொடக்கம் ஜனரஞ்சகப் பத்திரிகைகள் வரை தடைசெய்யப்பட்ட காலங்கள் இருந்தன. புலிகளது செய்தித் தாள்களும் புலிகளது சஞ்சிகைகளுமே மக்களின் வாசிப்புக்குக் கிடைக்கப்பெற்றன. அவற்றில் வருகின்ற புதினங்கள் மட்டுமே உண்மையாக இருந்தது அவர்களுக்கு. அதற்கு இயல்பாகப் பழக்கப்பட்ட மக்கள் புலம்பெயர்ந்த பின்னும் வெளியில் கிடைக்கக்கூடிய எவ்வித செய்திகளையும் உள்வாங்க விருப்பமற்றுப் போனார்கள். புலிகள் மீதோ அல்லது ஈழவிடுதலைப் போராட்டம் மீதோ சிறிய விமர்சனத்தை முன்வைப்பவர்கள் அவர்களின் அறிவுப்படி துரோகிகளது சார்பிலிருந்து வருபவையாக முதல்வார்த்தையிலேயே நிராகரிக்கப்பட்டன. ஆதலினால் மிகக் குறைந்தளவு வெளியுலக அறிவு என்பதையும் பெற்றுக்கொள்ள வசதியிருந்தும் அவர்களால் முடியவில்லை.
இவ்வகையான மந்தநிலைப்போக்கு இறுதியில் புலிகளின் அழிவைக் கூட நம்பமுடியாமல் திண்டாடும் ஒரு கையறுந்த நிலையை நமது மக்களுக்குக் கொடுத்து விட்டிருக்கிறது. கடந்த இரண்டுவருடமாக தொடரும் போரில் இதுவரையான புலிகளது செய்திகள் அல்லது அதன் சார்பு ஊடகங்களது செய்திகள் மே 17ந்திகதி நடைபெற்ற அவர்களது மானங்கெட்ட நிலையை ஊகித்துக் கொள்ளக்கூடியதான ஒரு வாசிப்பு நிலையைக் கொடுக்கவில்லை. போர் ஆரம்பித்த மாவிலாற்றிலும் பின் மூதூர் சம்பூர் போன்ற இடங்களில் பாரிய இராணுவத் தோல்வியைச் சந்தித்த புலிகள் வழமைபோல தற்காலிக பின்வாங்கல் என்று தமது ஊடகங்களில் பொய் எழுதிக் கொண்டிருந்தன. கிழக்குமாகாணத்தை விட்டு முற்றாகப் புலிகள் துடைத்தெறியப்பட்டதை வரலாறு கொண்டாடிக் கொண்டிருந்தது. ஆனால் அநேகமானவர்கள் புலிகள் பதில்தாக்குதலுக்காகப் பின்வாங்குகிறார்கள் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். புலிகளின் முரட்டுத்தனமான பிடிவாதத்தால் தமது வாழ்வை சீரழித்த மூதூர்மக்கள் மூன்றுமாதகாலம் எந்த உணவுமின்றி இருப்பிடங்களை விட்டு யாரும் கண்டுகொள்ளாமல் தெருவில் நின்றார்கள்.
கிழக்குமாகாணத்தை விட்டு வன்னிப் பிரதேசத்திற்குள் மட்டும் முடங்கிய புலிகள் மீது இராணுவம் போர் தொடுக்கத் தயாராக இருந்தது. அப்போது கூட புலிகள் சுதாகரித்துக் கொள்ளவில்லை. புலிகளும் புலிகளின் ஊடகங்களும் தமது ஒவ்வொரு பின்னடைவையும் முற்போக்கானதாகவே மக்களிடம் பரப்புரை செய்தன. தாம் மிகத் தந்திரோபாயமானவர்கள் என்பதை மக்கள் நம்பும்படி அந்தவகைப் பரப்புரை அமைந்தது. புலிகள் வீரம் செறிந்தவர்கள். அவர்களுடைய பின்வாங்கல்கள் எல்லாமே அரசின் மீதான மிகப்பெரிய தாக்குதலுக்கானது என்று மக்கள் நம்பிக்கொண்டார்கள். வன்னிக்குள் இராணுவம் நுழைய நேர்ந்தால் இலங்கை பூராவும் இரத்த ஆறு ஓடும் என்று அர்த்தப்பட கிளிநொச்சியில் செப்படம்பர் 2008இல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ்ச்செல்வன் அறிவித்திருந்ததை நாம் கவனிக்க வேண்டும்.
இவ்வாறு தமிழ்ச்செல்வன் சொன்னதையிட்டு தமிழ்ச்சமூகம் வெட்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக அவ்வாறானதொரு நிலை உருவாவதை தமிழ் மனங்கள் நியாயம் என்று நம்பியது. தமிழ் மக்களை சிங்கள இராணுவம் கொல்வதற்கு ஈடாக அப்பாவிச் சிங்கள மக்களை கொல்வது சரி என்பதாக நமது சமூகம் நம்பியது. கடந்தகாலத்தில் புலிகளால் அறந்தலாவையிலும் ஹபரணையிலும் கென்பார்மிலும் புலிகள் நடாத்திய படுகொலைகளில் அனுபவப்பட்ட சிங்கள அரசு இந்த யுத்தம் தொடங்குவதற்கு முன்னாடியே அதற்கான அத்தனை வழிகளையும் அடைத்துவிட்டது. அவ்வப்போது பஸ்வண்டிகளில் வெடிக்கவைக்கப்பட்ட குண்டுகளைத் தவிர பாரிய அழிவுகளை புலிகள் சிங்கள மக்கள் மீது ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. புலிகளின் இந்தவகையான படுகொலைச் செயற்பாடுகளால் மிகவும் பாதிக்கப்பட்டுவந்தது தென்பகுதித் தமிழர்களே. புலிகளின் மிகத்துல்லியமாகப் பயிற்றுவிக்கப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகள் இலங்கையின் பலபாகங்களிலும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் என்று நம்பிய சிங்கள அரசு கொழும்பிலுள்ள தமிழர்களை முக்கியமாக இளைஞர்களை ஜுன் 2007இல் பலவந்தமாக வெளியேற்றியது. பின் கண்துடைப்பிற்காக மீளக் கொண்டுவந்தாலும் வெளியேற்றியது எத்தனைபேர் திரும்பக் கொண்டுவந்தது எத்தனைபேர் என்ற கணக்கு யாரிடமும் இல்லை. இந்தமாதிரியான செயற்பாடுகளினூடு கொழும்புத் தமிழர்களை முதல் முறையாக வடிகட்டியது இலங்கை அரசு. ஆனால் நமது தமிழ்ப் பத்திரிகைகளோ அதன் ஆய்வாளர்களோ இதை ஒரு இனத்துவேசச் செயற்பாடு என்று வர்ணித்ததற்குப் பின்னால் மறந்துபோயினர்.
pic:prabha with duwaraka
http://www.matrathu.com

முரளியின் திடீர் மரணம் திரைத்துறையினர் , பத்திரிகையாளர்கள், உறவினர
தயத்தின் வலியை தமிழ்த் திரை ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியிருக்கிறார் முரளி 1991ம் ஆண்டு வெளியான இதயம் திரைப்படத்தின் மூலம் காதலால் துடிக்கும் இதயத்தின் வலியை தன் நடிப்பால் நமக்குள் ஏற்படுத்திய முரளி... இம்முறை தானே அந்த வலிக்கு உட்பட்டு பழகியவர்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் இதய வலியை உணர்த்தியிருக்கிறார். இது நிஜம் என்பதால் இந்த முறை அந்த வலியின் தாக்கம் மிகப்பெரிதாக இருக்கிறது.முரளியின் இந்தத் திடீர் மரணம் திரைத்துறையினர் மட்டுமல்லாது, பத்திரிகையாளர்கள், உறவினர் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் பேரதிர்ச்சியை தந்து, சொல்லொன்னாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 46 வயதில் முரளியின் இதயம் துடிக்க மறுத்திருக்கிறது1984ம் ஆண்டு பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகிமாகி 26 ஆண்டுகாலம் சினிமா வாழ்க்கையில் ஒப்பற்ற கலைஞனாக திகழ்ந்தவர் முரளி.>தமிழ்த்திரையுலகில் என்றும் மார்க்கண்டேயன், என்றென்றும் கல்லூரி மாணவர், அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கச்சிதமாக பொருந்தும் ஒப்பற்ற நடிகர் என்று அனைவராலும் போற்றப்படுபவர் முரளி. இவர் பிரபல கன்னட பட தயாரிப்பாளர் சித்தலிங்கையாவின் மகன். தந்தை கன்னடர் என்றாலும் அவரது தாய் ஒரு தமிழ்ப்பெண். இவரது மனைவி ஷோபனா. மகள் காவ்யா, மகன்கள் அதர்வா, ஆகாஷ்.பெங்களூருவில் பிறந்த இவர், தமிழில் நடிக்க வந்த பின்னர் தமிழ்நாட்டிலேயே இருந்தார். தமிழ் தவிர பிற மொழி படங்களில் நடிக்காதவர் என்ற பெருமைக்குறியவர் முரளி.>ஒரு நடிகன் என்றால் நல்ல நிறம்,அழகு, உயரம், அப்படி இப்படி என்று கூறப்படும் எந்த ஒரு மிகைப்படுத்தப்பட்ட அடையாளங்களும் இல்லாதவர். கறுப்பு, சாதாரண உயரம், மிகமிக எளிமையான தோற்றம் இதுதான் முரளி. ஆனால் அதுதான் அவரின் சிறப்பு. ‘கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு’ என்ற பாடலே அவருக்காகதான் உருவாக்கப்பட்டது. இயக்குனர் மணிரத்தினம் பகல் நிலவு படத்திற்கு நாயகன் தேடிய போது. முரளிதான் இந்தப் படத்திற்கு ஏற்ற நடிகன் என்று கூறி நடிக்கவைத்தார்.அந்தப் படத்திற்கு மட்டுமல்ல, காதல்(இதயம்), பாசம்(பொற்காலம்), நகைச்சுவை(சுந்தரா டிராவல்ஸ்), ஆக்ஷன்(அதர்மம்), என்று அனைத்துவிதமான கதாபாத்திரங்களுக்கும் ஏற்ற சிறந்த நடிகர் முரளி.
2001ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் மாநில விருது கடல்பூக்கள் படத்தில் முரளியின் சிறந்த நடிப்புக்கு கிடைத்தது. கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.
சிவாஜி கணேசன்(என் ஆச ராசாவே), விஜயகாந்த்(என்னாசை மச்சான்), பிரபு(நினைவுச் சின்னம்,பாசக்கிளிகள்), சத்யராஜ்(பகல் நிலவு), பிரபுதேவா(அள்ளித்தந்த வானம்), சூர்யா(கதலே நிம்மதி), பார்த்திபன்(வெற்றிக் கொடிகட்டு), சரத்குமார் (சமுத்திரம்), மம்முட்டி(ஆனந்தம்) உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக ஆண்டுக்கு 5 அல்லது 6 படங்களில் நடித்து வந்தார் முரளி. இதயம் படத்தின் இவரது ‘ராஜா’ கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இன்றும் அவரது மகன் அதர்வா நாயகனாக அறிமுகமாகியுள்ள ‘பாணா காத்தாடி’ படத்திலும் ‘இதயம் ராஜா எம்.பி.எஸ் நான்காம் ஆண்டு மாணவர்’ என்ற கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.
இப்படி ஒரு முன்னணி கதாநாயகனாய் இருந்தாலும் முரளி இதுவரை யாரிடமும் மரியாதைக் குறைவாக நடந்ததில்லை. படப்பிடிப்பில் டீ கொடுப்பவராக இருந்தாலும் சரி, படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும் சரி அனைவரிடமும் ஒரே மாதிரியான பரிவுடன் பழகக்கூடியவர்.
அதுமட்டுமல்ல... கடந்த 2006ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலின் போது விஜயக்குமார், சிம்ரன், சினேகன் ஆகியோருடன் இணைந்து முரளியும் அ.தி.மு.க கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது, சினேகன்கூட எதிர்கட்சிகளை கடுமையாக சாடிப் பேசினார். ஆனால், அந்த அரசியல் பிரச்சாரக் காலகட்டத்திலும்கூட அரசியல் நாகரீகத்துடன் பேசிய ஒருவர் முரளி மட்டுமே. இவர் சிறப்பான நடிகர் மட்டுமல்ல பொறுப்பான தந்தையும் கூட. < தனது மகன் அதர்வாவை ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி ஒரு நடிகனாக்கிவிட்டார். அந்தவகையில் முரளியின் குடும்பம் மூன்றுத் தலைமுறை திரைக்குடுப்பம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இவரது மூத்த மகள் காவ்யா எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளார். அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் திருமணம் பேசி முடித்துள்ளார். தனது மகளின் திருமணத்தை வரும் மே மாதம் பிரமாண்ட விழாவாக நடத்தத் திட்டமிட்டிருந்தார் முரளி.>பாணா காத்தாடி படம் வெளிவத்திருந்த வாரத்தில் அதர்வாவுடன் நக்கீரன் அலுவலகம் வந்திருந்தார் முரளி.அதார்வாவை நக்கீரன் ஆசிரியரிடம் அறிமுகப்படுத்தி பேசிய முரளி, “ஒரு தந்தை என்ற முறையில் அதர்வாவை நடிகனாக்கி எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன். இனிமேல் இவனோட வளர்ச்சி எல்லாம் உங்களிடம் தான் (பத்திரிகைதுறை) இருக்கு. இனி இவன் உங்கவீட்டு பிள்ளைங்க அண்ணா. இந்தப் படத்தில் அதர்வாவின் நடிப்புக்கு நிறையப் பாராட்டுக்கள் வருகிறது. கௌதம் மேனனின் அடுத்தப் படத்தில் அதர்வா நடிக்க வாய்ப்பிருக்கிறது. (முரளி அடுத்து நடிப்பதாக இருந்த அவரது நூறாவது படத்திற்கு ஒப்பந்தமாகியிருந்தார்.எனது பகல் கனவு, இதயம் படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே எனது பையனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்கு எனது முதல் நன்றியை சொல்லியாகனும்” என்றார். அதர்வாவை நக்கீரன் ஆசிரியரிடம் எப்படி அறிமுகப்படுத்தினாரோ அதே போல் பைண்டிங் பிரிவினரிடமும் இவனை உங்கள்வீட்டு பிள்ளையாக பார்த்துக்கோங்க என்றார். சுமார் 2 மணி நேரம் அலுவலகத்தில் இருந்த அவர் அனைவரோடும் போட்டோ எடுத்து மகிழ்ந்தார்.
மனைவி ஷோபனா பற்றி சொல்லிய போது, “இவர் மனைவி மட்டுமல்ல, இன்னொரு தாய். இதுவரை எனது வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் அனைத்திலும் என்னுடன் உற்றத்துணையாக இருப்பவர். நான் நேசிக்கும் அன்பான ஜீவன்” என்றார்.(முரளி-ஷோபனா காதல் திருமணம் செய்தவர்கள்.)
இப்படி ஒரு அன்பான குடும்பம், இன்று முரளியின் பிரிவால் கண்ணீரில் மூழ்கி இருப்பது காண்பவர் அனைவரின் நெஞ்சத்தையும் உறையச் செய்கிறது.
‘தனது முதல் படமே தந்தைக்கு இறுதிப் படமாகிவிட்டதே’என்ற வேதனையின் உச்சத்தில் அழுவதற்கும் முடியாமல் விக்கித்துபோயுள்ளார் அதர்வா.
உறவினர்கள், திரையுலகத்தினர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள் மட்டுமின்றி யார் ஒருவர் அழைப்பிதழ் வைத்தாலும் நேரில் சென்று வாழ்த்துவதை வாடிக்கையாக கொண்டிருந்த ஒப்பற்ற பண்பாளர் முரளி. இத்தகைய ஒரு நல்ல மனிதரின் இறப்பு அனைவருக்கும் பேரிழப்பு. இதை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.
இதயம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகி “தண்ணீர் பாட்டிலில் கண்ணீர் துளி ஒன்றை மட்டும் இட்டு” முரளியிடம் தருவார்.
அதே போல் நமது கண்ணீர் கங்கையை அவரது அஞ்சலிக்கு அர்ப்பணிப்போம்.

கை எலும்பு உடைவுக்குப் புக்கைகட்டி குணமாக்க முயன்ற இளைஞருக்கு விரல்களுடன் கையினை இழக்கும் அபாயநிலை
கை எலும்பு உடைவுக்குப் புக்கைகட்டி குணமாக்க முயன்ற இளைஞருக்கு விரல்களுடன் கையினை இழக்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, கடந்த 3ம் திகதி வெள்ளிக்கிழமை வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் வீடு நிர்மாணிக்கும் வேலையில் ஈடுபட்ட இளைஞர் சாரமரம் முறிந்து வீழ்ந்தபோது கையின் மணிக்கட்டுப் பகுதி உடைந்தது. இதனை குணப்படுத்த அந்த இளைஞர் புக்கை கட்டினார். வேதனை அதிகரிக்கவே அதனைத் தாங்க முடியாமல் கடந்த செவ்வாய்க்கிழமை அந்த இளைஞர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது மணிக்கட்டுப் பகுதி எலும்பு உடைந்ததுடன் புக்கை கட்டிய இடத்தில் புண் ஏற்பட்டிருந்தது. உடனடியாக வைத்தியசாலையில் பி.ஓ.பி. போடப்பட்டது. தென்மராட்சிப் பிரதேச மக்களின் வைத்திய தேவைகளுக்கான சகல வசதிகளும் சாவகச்சேரி வைத்தியசாலையில் செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்படும் மக்கள் மூட நம்பிக்கைகளை கைவிட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறுமாறு வைத்திய வட்டாரங்கள் அறிவுறுத்தியுள்ளன.
பாலாவின்அவன் இவன,்்மெல்ல கசிந்துவரும் தகவல்கள
அவன் இவன்' சில தகவல்கள் பலாவின் படம் என்றாலே படம் முடிந்து திரைக்கு வரும்வரை மர்மதேசமாகவே இருக்கும். ஆனால் அவன் இவன் படம்தொடங்கியதில் இருந்தே படம் குறித்த ஏதாவது ஒரு தகவல் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.விஷால் இதில்திருநங்கையாக நடிக்கிறார்... கிராமத்தில் முன்பு, வட்டமாக ஒட்ட முடிவெட்டிக்கொள்வார்கள். ஆர்யாவுக்கு இதேபோன்றஒரு வித்தியாசமான கெட்டப்... இப்படி அடிக்கடி சில தகவல்கள் வெளியாகின்றன. இதேமாதிரி அண்மையில் வெளியான ஒருசிலவிஷயங்கள் அவன் இவன் எப்படிப்பட்ட படம் என்பதை சொல்லாமல் சொல்லிப் போகுது.நான்கடவுள் படத்திற்கான தேசிய விருதினை பெற்ற மகிழ்ச்சியோடு அவன் இவன் படத்தை தொடங்கினார் பாலா. விஷால்,ஆர்யா கதைநாயகர்கள். நாயகி ஜனனி ஐயர். நந்தா படத்திற்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்குஇசையமைக்கிறார்.பாலாவுக்கு பிடித்தமான இசை என்றால் அது இளைய ராஜாவினதுதான். ஆனால் இந்தப் படத்திற்கு பல இடங்களில் ரீமிக்ஸ் இசை தேவைப்படுதாம். அதனால், ரீமிக்ஸ் பற்றி இயராஜாவிடம் எப்படி கேட்க முடியும் என்ற தயக்கத்தால் யுவனை அணுகினாராம் பாலா. (ரீமிஸ் இசைப்பதில்லை என்பது இளையராஜாவின் விடாப்பிடியான கொள்கையாம்.) ஒளிப்பதிவு -ஆர்தர்>வில்சன். வசனம் - பிரபல எழுத்தாளர் எஸ். ரா கிருஷ்ணன். இவர் பாபா, சண்டைக்கோழி, சுல்தான் தி வாரியார் ஆகியப் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.தயாரிப்பு - கல்பாத்தி எஸ். அகோரம்.பொதுவாகவே பாலாவின் படம் என்றாலே நாடாறு மாதம், காடாறு மாதம் என்று வருச கணக்காக எடுக்கப்படும். ஆனால்இந்தப் படத்தை ஆறே மாதத்தில் முடித்துக் காட்டுகிறேன் என்ற சவாலின் பகிரங்கமானஅறிவிப்புடன் தொடங்கினார் பாலா.ஏதோ ஒரு வேகத்துல அவர் அப்படி சொல்லிவிட்டாலும் வழக்கம்போல் ஆறு மாதம் தாண்டி எட்டு மாதத்தை கடந்து படப்பிடிப்பு மெல்ல நடந்து கொண்டிருக்கிறது. அதனால் என்ன... தரமான படம் ஒன்றுக்கு எத்தனை மாதம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம்.அதுவும் இது பாலாவின் படம், நடப்பதுதானே நடக்கும். என்ற சமாதானத்தோடு பாலா சொன்ன ‘ஆறுமாதகால படம்’ எனும் சவாலை மறந்து விடலாம்.
ஆனால் அவர் சொன்ன இன்னொன்றுதான் இங்கு கவனிக்கப் படவேண்டியது.
“அவன் இவன் எனது வழக்கமான படமாக இருக்காது” என்றும் சொல்லியிருந்தார் பாலா. ஆனால் இந்தப் படம் பற்றி திரைவட்டாரத்தில் மெல்ல மெல்ல கசிந்துவரும் தகவல்கள் இது பாலாவின் வழக்கமான படம்தான் என்று சத்தியம் செய்கின்றன..
அதென்ன வழக்கமான பாலா படம்...
“அவன் இவன்”- சேது, நந்தா, பிதாமகன் போல் புதுமையான திரைக்கதை அமைப்பா... இல்லையென்றால், நாம் தினமும் சாலையோரம் சந்தித்து இரக்கத்தோடோ, அலட்சியத்தோடோ கடந்து போன மாற்றுத் திறனாளியரின் நரக வேதனையை வெளிச்சம் போட்டுக் காட்டிய நான் கடவுள் படத்தினைப் போன்ற கதை அமைப்பா... என்று திரைவட்டாரத்தில் விசாரித்தால், அவர்கள் சில விளக்கம் தருகிறார்கள்.
வியக்கவைக்கும் கதை, திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டிய பாலாவின் வழக்கமான சில விஷயங்கள் இந்தப் படத்திலும் இருக்காம்.
குடும்பத்துடன் வந்து படம் பார்த்து சிரிச்சுட்டே போற மாதிரியான ஜாலியான படமாம் அவன் இவன். இதில் அவன் - விஷாலும், இவன்-ஆர்யாவும் சகோதரர்கள். பிதாமகனில் சூர்யா பல இடங்களில் விதவிதமான தொழில் செய்து ஏமற்றுவதைப் போல், இருவரும் பல்வேறான கெட்டப்பில் வந்து பல இடங்களில் திருடுகிறார்கள். கிட்டத்தட்ட பிதாமகனில் விக்ரம் கெட்டப் போன்று ஆர்யாவுக்கும் இதில் தலைமுடி அமைப்பு.
இதுபோக, சேது படத்தில் ஏர்வாடி மனநிலை பாதிக்கப்பட்டோர் காப்பகம் காட்டப்பட்டிருக்கும். இதில் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை. (கடந்த சில நாட்களாக பாலா தனது படப்பிடிப்பை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் நடத்திவருகிறார்.)
மேலும் பிதாமகன், நான் கடவுள் படத்தில் பல ஹிட்டான சினிமா பாடல்கள் கலந்து மிக்ஸிங் பாடல் ஒன்று காட்சியாக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் பாடலில் மட்டுமில்லாமல் பின்னணி இசையிலும் பல ரீமிக்ஸ் இசையினை கலந்து மிரட்டலான ஒரு புது இசையமைப்பை உருவாக்கியுள்ளாராம் யுவன்.
இவை போன்ற விஷயங்களில்தான், ‘அவன் இவன்’ பாலாவின் வழக்கமான ஸ்டைலில் அமைந்தப் படம் .
பாலாவின் எல்லாப் படங்களிலும் ‘கஞ்சா’ முக்கிய இடம் பெற்றிருக்கும். இந்தப் படத்தில் அதுவும் இருக்கலாம்...!
India 10 million broadband, இந்தியா... 10 மில்லியனை பிராட்பேண்ட் இணைப்புகள்
இந்தியாவில் பிராட்பேண்ட் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டியுள்ளது.
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் - ட்ராய் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, கடந்த ஜூன் 2010-ல் 9.45 மில்லியனாக இருந்த பிராட்பேண்ட் இணைப்புகளின் எண்ணிக்கை, ஜூலையில் 9.77 ஆக உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் மாத கணக்குப்படி இது 10 மில்லியனைத் தாண்டியிருக்கலாம் என ட்ராய் கணித்துள்ளது.
இதில் பெருமளவு இணைப்புகள் அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மூலமே வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், லேண்ட்லைன் எனப்படும் தரைவழி இணைப்புகளின் பயன்பாடு குறைந்துவருகிறது. ஜூன் மாதம் 36.18 மில்லியனாக இருந்த தரைவழி இணைப்புகள், ஜூலை மாதம் 35.96 மில்லியனாகக் குறைந்துவிட்டது.
இன்னொரு பக்கம், செல்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. ஜூலை மாதத்தில் மட்டும் 17 மில்லியன் புதிய வாடிக்கையாளர்கள் செல்போன் இணைப்பு பெற்றுள்ளனர்.
இத்துடன் சேர்த்து இந்தியாவில் 688.38 மில்லியன் பேர் தொலைபேசி வசதியைப் பெற்றுள்ளனர். இவர்களில் செல்போன் இணைப்பை மட்டும் பெற்றுள்ளவர்கள் 652.42 பேர்.
செல்போன் நிறுவனங்களில் இப்போதும் பார்தி ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு 139.2 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
113.3 மில்லியன் சந்தாதாரர்களுடன் ரிலையன்ஸ் இரண்டாம் இடத்திலும், 111.4 இணைப்புகளுடன் வோடபோன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. வழக்கம்போல பிஎஸ்என்எல் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பாஸ் என்கிற பாஸ்கரன் தொடக்க நாளில் அனைத்து திரையரங்குகளும் நல்ல ரெஸ்பான்ஸ்
ஆர்யா, நயனதாரா நடித்துள்ள பாஸ் என்கிற பாஸ்கரன் இன்று தமிழகம் எங்கும் திரைக்கு வந்தது. தொடக்க நாளில் அனைத்து திரையரங்குகளும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதாம்.
ராஜேஷ் இயக்க, ஆர்யா நாயகனாக நடித்துள்ள படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இதில் அவருக்கு ஜோடியாக நயனதாரா நடித்துள்ளார். காமெடிக்கு சந்தானம். படம் முழுக்க முழுக்க காமெடிக் கதை என்பதால் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் இன்று பாஸ் என்கிற பாஸ்கரன் திரைக்கு வந்தது. முதல் நாளிலேயே அனைத்து திரையரங்குகளும் நிரம்பி வழிந்துள்ளதால் படக் குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையடுத்து படத்தை சட்டுப்புட்டென்று ஹிட் ஆக்கும் வகையில் ஊர் ஊராகப் போய் புரமோஷன் வேலைகளில்இறங்கப் போகின்றனராம். ராஜேஷ், ஆர்யா, சந்தானம் ஆகியோர் இந்த புரமோஷன் பயணத்தில் ஈடுபடவுள்ளனராம். நாயகி நயனதாரா வர மாட்டார் என்று தெரிகிறது.
சமீபத்தில் மதராச பட்டினம் படத்திற்காக இப்படி நாயகி எமி ஜேக்சனுடன் ஆர்யா ஊர்வலம் வந்தார். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. அதே பாணியில் பாஸ் படத்திற்கும் திட்டமிட்டுள்ளனராம்.

Rajini: அரசியல குறித்துப் பேசும் சூழ்நிலை இப்போது இல்லை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா மற்றும் மகள் சௌந்தர்யா, மருமகன் அஸ்வின் ஆகியோருடன் கார் மூலம் நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார்.
தரிசனம் முடிந்து வெளியில் வந்த ரஜினியை சூழ்ந்து கொண்ட நிருபர்கள், வரவிருக்கும் எந்திரன், அரசியல் பிரவேசம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அவர்களிடம் ரஜினி கூறியதாவது:
எனது மகளின் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது. அதற்காக ஏழுமலையானுக்கு நன்றி செலுத்த குடும்பத்துடன் வந்தேன்.
இம்மாதம் வெளிவர உள்ள 'எந்திரன்' படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இத் திரைப்படம் குழந்தைகள் முதல் இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் அமைந்துள்ளது.
'எந்திரன்' மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. 'எந்திரன்' படம் மாபெரும் வெற்றி பெறவும் ஏழுமலையானை நான் வேண்டிக்கொண்டேன்.
அரசியல் பற்றியெல்லாம் இப்போது எதுவும் பேசும் சூழ்நிலை இல்லை. இப்போதைக்கு அரசியல் மற்றும் எனது அடுத்த படம் பற்றிச் சொல்ல எதுவுமில்லை.
நண்பர் சிரஞ்சீவி மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வெற்றி மேல் வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்," என்றார் ரஜினி.
ரஜினியைக் கண்டதும், 'சூப்பர் ஸ்டார் வாழ்க', 'ரோபோ, ரோபோ', 'இனிய எந்திரா' என ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்க முயன்றனர். அவரும் முடிந்தவரை சிலருக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். கூட்டம் அலைமோதியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்

பதிவு செய்தவர்: kasinathan
பதிவு செய்தது: 11 Sep 2010 8:16 am
தலைவனும் ஒரு அரசியல் வாதி தான்.தன்னோட ராம்போ படம் ஓடனும்ல அதான்.எல்லாரும் திருடனுங்க
பதிவு செய்தவர்: பட்டிமன்றம்
பதிவு செய்தது: 11 Sep 2010 7:37 am
பட்டி மன்றம்: தலைப்பு : ரஜினி மென்டலா or அவன் ரசிகர்கள் மேண்டல்லா: இடம் கீழ்பக்கம் மெண்டல் hospital : நடுவர் பைந்திரன்: தீர்ப்பு : ரஜினிக்கு 75 % நல்ல இருக்கான் காரணம் கல்யாணத்திற்கு மேண்டலுகள தடுத்தது(குனமானததிற்கு அடையாளம்)ரசிகர்கள் தான் 100 % மெண்டல்: காரணம் 40 வயசாகியும் இன்னமும் பைத்தியம் தீராம 100x100 அடி கட் அவுட் வைக்கும் அளவுக்கு மெண்டல் தன்மை உள்ளதால்( ரஜினி எவ்வளவு அடிச்சாலும் தான்குரரணுக) மஞ்ச பேண்டு இக்கு பதிலா எல்லா மேண்டளுகளுக்கும் பச்சை பேண்டு கொடுத்தாச்சு
பதிவு செய்தவர்: rasigan
பதிவு செய்தது: 11 Sep 2010 3:49 am
சூப்பர் அப்பு ரஜினி ஓட ஒரு வருட வாழ்கைய ஒரே வரில சொல்லிட்ட
பதிவு செய்தவர்: கேதிஸ் ஜெர்மனி
பதிவு செய்தது: 11 Sep 2010 2:24 am
அரசியல் நல்லவனுக்கு ஏத்த இடமல்ல.உலகத் தமிழனுக்கு நல்லது செய்வது என்றால் MGR போல பவறான ஒருத்தர் தமிழ் நாட்டை ஆள வேண்டும் அப்பத்தான் காங்கிரஸ் காரனை அடக்க முடியும்.
பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 11 Sep 2010 5:19 am
நல்லவர்கள் - காமராஜ், கக்கன், ஜீவா, பாரதி, காந்தி, நெல்சன் மண்டேலா, மதர் தெரசா போண்டவர்கள், சினிமா நடிகன், நாலு பொண்டாட்டிக்காரன் - many more - 1981-ல் ஈழத்திற்காக போராடிய தமிழர்களை சிறையில் அடைத்து விட்டு பின்பு ஆதரிப்பது போல் நாடகமாடி போராளிகளை பிரித்த மலையாள நடிகன் மேனன் எம்.ஜி. ஆர் அல்ல.
பதிவு செய்தவர்: superstar rajini
பதிவு செய்தது: 11 Sep 2010 1:21 am
I want to retire and go to himalayas for 6 months and spend time with my wife, kids and grandkids for the remaining 5 months. For 1 month i want to spend time with my old friends. During rare occasions and in some meetings, I will talk about my fans "Ennai vazha veitha enn rasigargal".
பதிவு செய்தவர்: பிரம்மதேசம் ராமசந்திரன்
பதிவு செய்தது: 11 Sep 2010 12:23 am
விருப்பமில்லாதவரை வீனா வம்புக்கு இழுக்கறாங்க. கலைஞர் இருக்கிறவரைக்கும் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வரமாட்டார். பொறு தலைவா சிறிது காலம்
பதிவு செய்தவர்: அறிவு
பதிவு செய்தது: 10 Sep 2010 10:43 pm
படம் வர முன்னுக்கே அது எந்த படத்தின் தழுவல் என்று தெரியுமோ? முதலில Bicentinnial Man படம் பாத்தியா? அந்த கதையே வேற. பாஷை புரியாட்டி பேசாம இருக்கணும்.
பதிவு செய்தவர்: சிவாஜி
பதிவு செய்தது: 11 Sep 2010 7:33 am
சிவாஜி (ஷங்கர் படம்)ஹிந்தி இல் வாங்க ஆளு இல்லாம direct ஆ டிவி ல போட்டாங்க, ரஜினி மேன்டல்ல கமல் தான் கிரப்தார் மூலம் ஹிந்தி இல் கொண்டு போனார். எந்திரன் யாவரம் ஹிந்தி இல் எவ்வளவு ? ஏக து ஜே கேலியே, சாகர், சனம் தெரிகசம், ஹிந்துஸ்தானி (ஷங்கர் படம்) அப்புராஜா, சாச்சி 420 , தற்போது தஷாவ்தார் இதல்லாம் மேக ஹிட் கமல் ஹிந்தி படங்கள் கமல் கால் பதிக்காத இடம் ந அது ரஜினி வழுக்க மண்டைதான்
பதிவு செய்தவர்: மெண்டல் ரசிகன் கனவு
பதிவு செய்தது: 11 Sep 2010 7:31 am
ரஜினி மென்டலு ஒன்னு கனவு காணுது "எந்திரன்ரூ 1600 கோடி collect பண்ணிடிச்சு , ரஜினி மூத்திரத்தில் பெட்ரோல் இருபதாக அரசு அறிவிப்பு, ரஜினி யை பார்க்க ஒபாமா இந்திய வருகை , ரஜினி மூத்திரத்தை விற்கும் உரிமையை சன் குழுமம் வாங்கியது (sun Urions ltd ) ரஜினி மலத்திற்கு போட்டி நடக்கிறது சுதான் தி வாரியார் 3500 கோடி யாவரம் செய்துள்ளது " திடீர்னு ,மென்டலு மனைவி அவன் மேல தண்ணிய ஊத்தரா எழுந்து பார்த்த suntv ல மாறன் brothers தலேல துண்ட போட்டுக்கிட்டு உக்கார்ந்து இருக்கானுக எந்திரன் பலாப் ஆனதால
மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு விபரம்
ஏழ்மையான இந்தியா என்று பொதுவாக கூறப்பட்டு வரும் நேரத்தில் மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்புகள் மட்டும் கோடிக்கணக்கில் உள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரதமர் மன்மோகன் சிங் சொத்துமதிப்பு 4.30 கோடி, அடுத்தபடியாக பிரணாப்முகர்ஜிக்கு 1 கோடி ரூபாய், அவரது மனைவிபெயரில் 1.5 கோடி ரூபாய், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.,கிருஷ்ணாவுக்கு 1 கோடி ரூபாய், விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் 3.9 கோடி ரூபாய், அவரது மனைவி பிரதீபாவுக்கு 2.16 கோடி ரூபாய், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபில் 14 கோடிரூபாய், அவரது மனைவிக்கு 7 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் உள்ளது. தமிழக மத்திய அமைச்சர்களில் சிதம்பரத்திற்கு 5 கோடி ரூபாயும் அரவது மனைவி நளினி பெயரில் 7 கோடி சேர்த்து சுமார் 15 கோடிக்கு சொத்து உள்ளது. ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரிக்கு 9 கோடி ரூபாய் சொத்து உள்ளது. அவரது மனைவி மற்றும் மகன்பெயரில் 6 கோடி ரூபாய் உள்ளது. அதேசமயம் மத்திய அமைச்சர்களில் குறைவான சொத்துக்கள் <கொண்டவர்களாக மம்தா பானர்ஜி 6 லட்சம் ரூபாயும், பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணிக்கு 1 லட்சம் ரூபாயும், தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு 88 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து மதிப்பு உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலுக்கு எதிர்ப்பு; இளம் ஜோடி தற்கொலை
காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மனம் உடைந்த காதலி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். காதலி இறந்த துக்கத்தில் காதலனும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல் மேலத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (23), ஐ.டி.ஐ. படித்து வந்தார். வன்னிக்கோனேந்தல் கிழக்கு தெருவை சேர்ந்தவர், கருப்பன். அவருடைய 2 வது மகள் கலா (22). கோவையில் உள்ள ஒரு மில்லில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
மணிகண்டனும், கலாவும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். ஏற்கனவே இவர்கள் இருவரும் அறிமுகம் ஆனவர்கள். அவர்கள் 2 பேரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். நாளடைவில் இந்தச் சந்திப்பு காதலாக மாறியது.
இந்த காதல் விவகாரம் மணிகண்டன் வீட்டுக்கு தெரிந்துவிட்டது. பெற்றோர்கள் அவரை கண்டித்தனர். இதுபற்றி அவருடைய காதலி கலா அறிந்து மனம் உடைந்தார். சில நாட்களாக அவர் சோகத்துடன் காணப்பட்டார். காதலனுடன் சேர முடியாமல் போய்விடுவோமோ என்று அஞ்சிய அவர் கடந்த 09.09.2010 அன்று விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை, உறவினர்கள் கவனித்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே கலா பரிதாபமாக இறந்தார்.
காதலி விஷம் குடித்ததை கேள்விப்பட்டு மணிகண்டன் சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு கலாவின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து அழுதார். மிகுந்த துக்கத்தில் இருந்த அவர் மனம் உடைந்த நிலையில் வீட்டுக்கு வந்தார்.
வீட்டுக்கு வந்தவுடன் சற்று நேரத்தில் மணிகண்டன் விஷம் அருந்தியுள்ளார். இதை அக்கம்பக்கத்தினர் கவனித்து, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு மணிகண்டனை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டனும் பரிதாபமாக இறந்தார்.
இன்று விநாயகர் சதுர்த்தி
மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் போற்றும் தனிப்பெருந் தெய்வம் விநாயகப் பெருமான். ஓங்கார வடிவமுடையவர். போற்றுபவர் துயர்களைப் போக்கும் அருட்கடல். அடியாருக்கு ஓடி வந்து அருள்புரியும் மூலாதார மூர்த்தி. வாழ்வில் உண்டாகும் இடர்களைப் போக்கி வழிகாட்டுபவர் என்பதால் விக்னேஸ்வரன் என்று பெயர் பெற்றார். "வி' என்றால் சிறப்பு. "நாயகன்' என்றால் தலைவர். சிறப்பு மிக்க தலைவர் என்பது பொருள். கடவுளுக்கெல்லாம் மேலான தலைமைக் கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குகிறா
கரும்பு, பழங்கள், சர்க்கரை, பருப்பு,நெய், எள், பொரி, அவல், இளநீர், தேன்,பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை,கொழுக்கட்டை முதலிய பொருட்களை விநாயகருக்கு நிவேதனம் செய்ய வேண்டும். விநாயகப்பெருமானுக்குரிய இந்நிவேதனப் பொருட்களை அருணகிரிநாதர் திருப்புகழில் அழகாக குறிப்பிடுகிறார். விநாயகருக்கு உகந்தது அருகு. இது ஓரிடத்தில் முளைத்து, கொடிபோல நீண்டு ஆறு இடங்களில் வேரூன்றிக் கிளைக்கும் தன்மையுடையது. ""அருகு போல் வேரூன்றி'' என்பது பழமொழி. இந்த அருகம்புல்லை அர்ச்சிப்பது விநாயக வழிபாட்டில் மிகவும் குறிப்பிடத்தக்கது. முமு முதற்கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த இந்த சதுர்த்தி நன்னாளிலே அவருடைய பாத கமலங்களை வணங்கி அருள் பெறுவோம்.

senthil - singapore,இந்தியா
2010-09-11 06:36:34 IST
விநாயகனே வினை தீர்பவனே .. யானை முகத்தோனே ஞான முதல்வனே ....... என்றும் இந்திய மக்கள் அனைவரையும் , எத்திசையில் இருந்தாலும் போற்றி காத்தருள்வாய் .... என் இந்திய சொந்தங்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் ....நன்றி தினமலர் ......
saravanan - Singapore,இந்தியா
2010-09-11 05:36:34 IST
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு ஹிந்தி இங்கிலீஷ் பிரென்ச் மூன்றும் தா . பெரிய குடும்பமே சங்கத் தமிழ் படிக்கிறது இல்லை. இதில் நான் படிச்சு நாசமா போகனுமா. பொழைக்கிற வழியை காட்டு பிள்ளையாரப்பா....
ramasubbu - jubail,சவுதி அரேபியா
2010-09-11 04:28:09 IST
MAkkal anaivarukkum enathu idhyam kanindha vinayagar chathurthi dhina nal vaazthukkal...
rajasji - chennai,இந்தியா
2010-09-11 04:13:02 IST
ஸ்ரீ விநாயகர் அம்மையவும் அப்பனையும் சுற்றி வந்து உலகத்தையே சுற்றிவந்துவிட்டதாக கூறி வெற்றி பெற்றார் ! அந்த முழு முதற் கடவுளை இந் நன்னாளில் ஸ்ரீ பிள்ளையார் அப்பனே போற்றி ! ஸ்ரீ கணபதியே போற்றி ! ஸ்ரீ கணேசா போற்றி ! ஸ்ரீ விநாயக போற்றி ! போற்றி !! என்று துதிக்கிறேன் ! இப்படி நான் போற்றி துதிக்கும் போது அது உலகத்தில் உள்ள எல்லா ஜீவன்களையும் வாழ்த்துவதாக அமைகிறது ! இந்து மதம் ஒரு சுதந்தரமான மதம் ! அதன் தெய்வங்களுடைய சிறப்பினை மகிமையினை மனிதர்களால் உணர்ந்து கொள்ளமுடியாது ! முழு முதற் கடவுளின் அருள் இருந்தால் தான் ஒரு சில தெய்வங்களாலும் சூட்சுமத்தை அறியமுடியும் ! அப்படிப் பட்ட பெருமைக்கும் புகழுக்கும் சிறப்புக்கும் உரிய ஸ்ரீ விநாயகப் பெருமானின் திருவடியினை பணிந்து வணங்கி இவ்வுலகில் அமைதி சூழவும் எல்லா ஜீவன்களும் வேற்றுமைகளை மறந்து எப்பொழுதும் அன்பில் ஆனந்தத்தில் திளைத்திருக்கவும் அருள் பாலிக்க வேண்டி பிராத்திக்கிறேன் !!! @ rajasji...
சின்னா - சிங்கபூர்,சிங்கப்பூர்
2010-09-11 03:08:33 IST
என் உயிர் கணேசா நீயின்றி நானில்லை உன் பேர் சொல்ல வாழுவேன் நான் எல்லாம் நன்மையாகவே நடக்கட்டும் எல்லாரும் நல்லவருகலாவே இருக்கட்டும் துன்பம் துயரம் அனைத்தும் துடயட்டும் இன்பம் சந்தோசம் நிறைந்து பரவட்டும் மக்கள் நலனே மகேசன் நலன் எங்கள் நலனே உங்கள் நலன் கணேசா வாழ்க விநாயகா வாழ்க எங்கள் நாயகனே வாழ்க உலக வீரனே வாழ்க வில்லாதி வீரனே வாழ்க வீர புதல்வனே வாழ்க உயிருள்ள இறைவா வாழ்க கருணை கடவுளே வாழ்க என்னுடன் இரு என் இறைவா உன் கருணை என்றும் இருக்கட்டும் என் உயிரே விநாயகா...
பாஷா.J - DUBAI,இந்தியா
2010-09-11 01:29:21 IST
உலகம் முழுவதும் வாழும் அனைத்து இந்து மத சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் உள்ளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்....
சூசையின் சகோரதரர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை...!
கடற்புலிகளின் தளபதி சூசையின் சகோரதரர்,தனக்கு உதவுமாறு ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை...!
யுத்தம் அகோரமாக இடம்பெற்ற இறுதிச் சமயத்தில் படகு மூலம் தப்பிச் செல்லும் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கூடவே கைது செய்யப்பட்ட தனது மனைவியையும் மகனையும் விடுவிப்பதற்கு விநயமாக உதவுமாறு கோரி கடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று(2010.09.10)வடமராட்சி ஈபிடிபி அரசியல் அலுவலகத்திற்கு சென்ற கடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரரான பொலிகண்டி கிழக்கைச் சேர்ந்த சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம் தவராசா(வயது 61)வடமராட்சி ஈபிடிபி அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் மூலமாக இக்கோரிக்கையை விடுத்துள்ளார். அக்கோரிக்கையில்,கடந்த வன்னியின் யுத்தம் அகோரமாக இடம்பெற்றபோது தனது மனைவி சந்திராதேவி(வயது 60)மகன் சிலம்பரசன்(வயது 16)மற்றும் தனது சகோதரன் சிவநேசனின்(சூசை) மனைவி சத்தியதேவி(வயது 46)மகள் சிந்து(வயது 18)மகன் மணியரசன் (வயது 17)ஆகியோர் 2009.05.14அன்று படகு மூலம் தப்பிச் சென்று கொண்டிருக்கையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் ஐவரையும் விடுவிப்பதற்கு உதவுமாறு கேட்டுள்ளாh.மேலும் 61.வயதாகும் தன்னைக் கவனிப்பதற்கு உறவினர் எவரும் இல்லையெனவும் தனது மகனை கல்வி கற்பிப்பதற்கு விருப்பமாக உள்ளது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாளை யாழ்ப்பாணம் வந்தவுடன் அவரிடம் உங்களது கோரிக்கை தொடர்பாக தெரிவித்து அமைச்சரை நேரடியாகச் சந்திப்பதற்கு ஆவண செய்து தருவதாக வடமராட்சி ஈபிடிபி அமைப்பாளர் சூசையின் சகோதரர் சிவலிங்கம் அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.இதன் போது ஈபிடிபியின் கொற்றாவத்தைப் பகுதி அபிவிருத்திக்குழு உறுப்பினர் கணேசமூர்த்தி விஜிந்தனும் உடனிருந்தார்.
யாழ் நகர வர்த்தகர்கள் சிலர் பொலிஸாரால் கைது
யாழ் நகர வர்த்தகர்கள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் யாழ்.வர்த்தக சமுகம் தனதவர்த்தக நிலையங்களிற்கு முன்னால் கழிவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன என்ற ு கடுமையான கண்டணத்தை வெளியிட்டுள்ளதுடன். அராஜகத்தின் உச்சக்கட்டம் எனவும் விபரித்துள்ளது. குற்றச்சாட்டின் பெயரில் கடந்த இரண்டு நாட்களாக நகரில் உள்ள வர்த்தகர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர்
இவர்கள் கைது செய்யப்பட்ட விதம் யாழ். மாவட்ட வணிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முச்சக்கர வண்டிகளில் சிவில் உடைகளில் வந்த பொலிஸார் வர்த்தகர்களை பிடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.
இது முற்றிலும் முரணான செயற்பாடாகும் என வணிகர்கள் குறிப்பிட்டுள்ளதுடன் நாம் கொலைக்குற்றவாளிகளோ திருடர்களோ அல்ல எனவும் இதைத் தொடந்தும் நாம் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை எனவும் எச்சரித்துள்ளனர்.
கழிவுப் பொருட்களை அகற்ற வேண்டியது மாநகர சபையின் பொறுப்பு. கழிவுகளை வர்த்தகர்கள் அகற்ற முடியாது எனக்குறிப்பிட்டுள்ள வணிகர்கள் மாவட்டத்தில் பொலிஸார் பாரபட்சமாக செயற்படுவதாகவும் கூறியுள்ளனர்.
நகரில் பெருமளவான கழிவுகள் தென்னிலங்கை சிங்கள சுற்றுலாப் பிரயாணிகளால் போடப்படுகின்றது. ஆனால் அது குறித்து பொலிஸார் கவனிப்பதே கிடையாது என வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

சொத்துக்காக படுகொலை முயற்சி! யாழ்ப்பாணத்தில் சம்பவம
விஜயலட்சுமியின் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிப் பற்ற வைத்தனர்யாழ்ப்பாணத்தின் தட்டார் தெருவில் வசித்து வந்த 47 வயதுடைய க.விஜயலட்சுமி என்பவரை அவரின் சொந்தச் சகோதரியும், அச்சகோதரியின் மகளும் சொத்துக்களை அபகரிக்கின்றமைக்காகப் படுகொலை செய்ய முயற்சித்திருக்கின்றார்கள்.
ஆயினும் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இப்படுகொலை முயற்சியில் இருந்து மயிரிழையில் தப்பிய விஜயலட்சுமி யாழ்.போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விஜயலட்சுமியின் சகோதரி காதல் திருமணம் செய்திருந்தார். இதனால் இவர்களின் தகப்பன் கோபம் அடைந்து சொத்துக்கள் முழுவதையும் விஜயலட்சுமியின் பேருக்கு எழுதி வைத்து விட்டார்.
விஜயலட்சுமியின் சகோதரி குடும்ப சமேதராக வன்னியில் இருந்து அண்மையில்தான் யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வந்திருந்தார் இவர்கள் மீது இரக்கமுற்ற விஜயலட்சுமி வீட்டு மாடியிலேயே இவர்களைத் தங்க வைத்தார். ஆயினும் இக்குடும்பத்தினர் சொத்தில் பங்கு கோரத் தொடங்கினார்கள்.
இதனால் இரு சகோதரிகளுக்கும் இடையில் சொத்துத் தகராறு ஏற்பட்டது. வெளியாட்கள் தலையிடும் வகையில் முற்றியும் விட்டது. இந்நிலையில் விஜயலட்சுமியின் சகோதரியின் கணவர் சம்பவ தினம் விஜயலட்சுமிக்கு படுகொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
இரவு மின்சாரம் தடைப்பட்டபோது விஜயலட்சுமியின் சகோதரியும், அச்சகோதரியின் மகளும் விஜயலட்சுமியின் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிப் பற்ற வைத்தனர். விஜயலட்சுமியின் சகோதரி மண்ணெண்ணெய்யை விஜயலட்சுமியின் உடலில் ஊற்ற, அச்சகோதரியின் மகள் நெருப்பை பற்ற வைத்திருக்கின்றார்.
ஆயினும் சுதாகரித்துக் கொண்ட விஜயலட்சுமியை தீயை ஒருவாறு அணைத்துக்கொண்டு வீதிக்கு ஓடி வந்தார். அருகில் இராணுவம் முகாம் ஒன்று உள்ளது. அங்கு கடமையில் இருந்த படையினரிடம் முறையிட்டார். தீ மூட்டியவர் பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படுகொலை முயற்சி தொடர்பாக பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.

கே.பி.யின் பிரதிநிதிகளை தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் இணைப்பதற்கு எதிர்ப்பு!
தமிழ்க் கட்சிகளின் ஒன்றியத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுத கொள்வனவாளரு குமரன் பத்மநாதனின்(கே.பி) பிரதிநிதிகளை தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் இணைத்து கொள்வதற்கு அவ் ஒன்றியத்தில் உள்ள சில தமிழ்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கே.பி.யின் லண்டனை தளமாக கொண்ட சில பிரதிநிதிகள் இந்த ஒன்றியத்தின் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். எனினும் இதை தான் கடுமையாக எதிர்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பின் பொது செயலருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
நான் அதை எதிர்கின்றேன், கே.பி. தற்போது அரசாங்கத்தின் நலன்களுக்கேற்ப செயற்படுகிறார். ஆவரின் பிரதிநிதிகளை எமது கூட்டங்களில் இணைத்து கொள்ள முடியாது. பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா அம்மான்) இக் கூட்டங்களுக்கு அழைப்பதற்கும் யோசனை தெரிவிக்கப்பட்டது. அதையும் நான் எதிர்க்கின்றேன். அவர் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்தவராக உள்ளார் எனவும் சிவாஜிலிங்கம் கூறினார். தமிழ் கட்சிகளின் ஒன்றியத்தின் அடுத்த கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பழநி அருகே 2500 ஆண்டு பழமையான ஓவியக் குறியீடு
Saturday, September 11th, 2010 at 1:31
பழநி அருகே மலைக் குகையில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்து சமவெளி நாகரீக ஓவியக் குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கரடிக் கூட்டம் மலையில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கரடிக்கூட்ட மலையில் மூன்று குகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஒரு குகையில் தான் 2,500 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் இருப்பது தெரிகிறது.
கிழக்கு நோக்கி திரும்பியுள்ள இந்த குகை, மனிதன் எளிதாக ஏறிச் செல்ல இயலாத வழுக்கலான பாறை. இந்த குகையின் உட்தாழ் வாரத்தில் இரண்டு ஓவியங்கள் உள்ளன. இவற்றை ஓவியங்கள் என்று கூறுவதைவிட ஓவியக் குறியீடுகள் என்று கூறுவதே பொருத்தமாகும். இடது புறம் உள்ள ஓவியக் குறியீடு வெள்ளை நிறத்தில் எளிமையான சதுரமாக வரையப்பட்டுள்ளது.
11 செ. மீ. நீளத்திலும் 11 செ.மீ. உயரத்திலும் உள்ளது. இதையடுத்து வலது புறம் உள்ள ஓவியக் குறியீடு 10 செ.மீ. நீளத்திலும் 9 செ.மீ உயரத்திலும் உள்ளது. இந்தக் குறியீடு உட்புறம் நான்கு சம சதுரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுவும் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு குறியீடுகளும் எதற்காக இந்த குகையில் வரையப்பட்டன என்பது புதிராக உள்ளது.
இந்த இரண்டு ஓவியக் குறியீடுகளும் சிந்து சமவெளி அகழாய்வில் கண்டறியப்பட்ட ஓவியக் குறியீடுகளை போல உள்ளன. சிந்து வெளி அகழாய்வில் 417 ஓவியக் குறியீடுகள் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. குகையில் கண்டறியப்பட்ட இடது வெள்ளைச் சதுரம் சிந்து வெளிக் குறியீட்டின் 240வது வடிவத்துடனும் வலதுபுற நாற்சதுரம் சிந்து வெளிக் குறியீட்டின் 247வது வடிவத்து டனும் பெருமளவு ஒத்துப் போகின்றன.
சிந்து வெளிக் குறியீடுகளை படிக்க முயன்றவர்கள் இடது புறம் உள்ள வடிவத்தை வீடு என்றும், வலது புறம் உள்ள வடிவத்தை இடம் என்றும் படித்துள்ளார்கள். வரலாற்று சிறப்பு மிக்க இந்த மலைக் குகையில் கிடைத்துள்ள ஓவியக் குறியீடுகள் சிந்து சமவெளி குறியீடுகளை ஒத்து இருப்பது, சிந்து வெளி நாகரிகம், தமிழர் நாகரிகமே என்று உறுதியாக்க உதவுகின்றது.
இதே மலையின் ஒரு பகுதியில் சங்க காலத்தை சேர்ந்த 2,500 ஆண்டுகள் பழமையான 3 பல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பல்லாங்குழிகள் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளன. இதில் ஒரு பல்லாங்குழி முழுமையாக உள்ளது. மற்ற இரண்டு பல்லாங்குழிகளும் தோண்டப்பட்டு பின்பு முற்றுப் பெறாமல் நின்று விட்டன.

வெள்ளி, 10 செப்டம்பர், 2010
புனே குண்டு வெடிப்பில் கைதான தீவிரவாதிக்கு கொழும்பு நகரில் பயிற்சி: விசாரணையில் திடுக்கிடும் தகவல்
புனே குண்டு வெடிப்பில் கைதான தீவிரவாதி, கொழும்பு நகரில் பயிற்சி பெற்ற திடுக்கிடும் தகவல் விசாரணையில் தெரியவந்து உள்ளது.மராட்டிய மாநிலம் புனே நகரில் வெளிநாட்டினர் அதிகம் வந்து செல்லும் ஜெர்மன் பேக்கரியில் கடந்த பிப்ரவரி 13-ந் தேதி சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 17 பேர் பலி ஆனார்கள். மேலும் 51 பேர் காயம் அடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த மராட்டிய மாநில தீவிரவாத தடுப்பு போலீசார், புனே நகரில் மிர்சா ஹிமாயத் பெய்க் (வயது 29) என்ற தீவிரவாதியையும், நாசிக் நகரில் ஷேக் லால்பாபா முகமது உசேன் என்ற பிலால் (27) என்பவனையும் கைது செய்தனர். பெய்க் மராட்டிய மாநிலத்தில் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்துக்கு தலைமை தாங்கி செயல்பட்டு வந்தவன் ஆவான். பிலால் அவனது கூட்டாளி. இவர்கள் இருவரும் மோசின், யாசின் ஆகிய 2 தீவிரவாதிகளுடன் சேர்ந்த இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக தெரியவந்து உள்ளது.பெய்க் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து, துப்பாக்கி, ஒரு செல்போன் ஆகியவையும். நாசிக்கில் உள்ள பிலால் வீட்டில் நடத்திய சோதனையில் ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து, வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள், லஸ்கர்-இ-தொய்பா பிரசார புத்தகம், ரொக்க பணம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கைதான இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் போது அவர்கள் லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தினரிடம் தீவிரவாத பயிற்சி பெற்றது தெரிய வந்தது. பிலால் 3 முறை பாகிஸ்தானுக்குச் சென்று பயிற்சி பெற்று திரும்பியதாக விசாரணையில் தெரிய வந்தது.

கொழும்பு நகரில் பயிற்சி
பெய்க்கிடம் நடத்திய விசாரணையின் போது அவன் கொழும்பு நகரில் தீவிரவாத பயிற்சி பெற்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. கொழும்பு நகரில் எந்த இடத்தில் பயிற்சி முகாம் உள்ளது? அங்கு எத்தனை பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது? என்பது பற்றிய விவரங்களை அறிய பெய்க்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த ஏப்ரல் 17-ந் தேதி கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு குண்டு வெடித்ததில் 11 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பிலும் பெய்க், பிலால் ஆகியோருக்கு தொடர்பு இருக்கலாம் என தீவிரவாத தடுப்பு போலீசார் சந்தேகிக்கிறார்கள். அது பற்றியும் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இலங்கை நடவடிக்கை
கொழும்பு நகரில் பயிற்சி பெற்றதாக தீவிரவாதி பெய்க் கூறி இருப்பதால் அதுபற்றி இந்திய ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விவரங்களை தெரிவிக்குமாறு டெல்லியில் உள்ள தங்கள் தூதரகத்தை இலங்கை அரசு கேட்டுக் கொண்டு உள்ளது. இதுதொடர்பாக தங்கள் தூதரக அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி டெய்லி மிரர் என்ற பத்திரிகை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)