மதுரை: மதுரையில் மாநகர் தி.மு.க., அமைப்பு கூண்டோடு
கலைக்கப்பட்டுள்ளது. அனைத்து நிர்வாகிகளும் இதனால் பதவி இழப்பதுடன் அதில்
அழகிரி ஆதரவாளர்கள் அனைவரும் ஓரம் கட்டப்படுவதற்கு ஒரு முன்னோட்ட
நடவடிக்கையாக தலைமை கழகம் களத்தில் இறங்கியிருப்பதாகவும் தி.மு.க.,
தொண்டர்கள் கூறுகின்றனர். இதனால் இரு அணியினர் இடையே கோஷ்டி மோதல்
அப்பட்டமாக வெடிக்க துவக்கியுள்ளது.
மதுரையை பொறுத்தவரை தி.மு.க., வில் ஸ்டாலின், அழகிரி என கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். ஸ்டாலின் ஆதரவாளர்கள் நடத்தும் கட்சி கூட்டத்தில் அழகிரி ஆதரவாளர்கள் பங்கேற்பதில்லை. சில இடங்களில் இரு தரப்பினரும் மோதிக்கொள்வதும் வழக்கமாக இருந்து வந்தது. இவர்களின் மோதல் இம்முறை பாரதூரமானதாக தான் தெரிகிறது . திமுக மெல்ல மெல்ல அதிமுகவை போல ஒரு ஜால்ரா கட்சியாகி கொண்டு வருகிறது, அது ஜெயாமயம் இது ஸ்டாலின் மயம், கொள்கை கோட்பாடெல்லாம் கோவிந்தா