சனி, 22 ஆகஸ்ட், 2015
மதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்பவே அதிமுக இளங்கோவனையும் பாஜக ராசாவையும் ........
தமிழகத்தில்
பெரும்பான்மையான மக்களின் அரசியல் அறிவு என்பது நினைத்துப் பார்க்க
முடியாத அளவிற்குத் தரம்தாழ்ந்து போய் இருக்கின்றது. தம்முடைய அரசியல்
கட்சித் தலைவர்கள் மீது கொள்கை சார்ந்த பற்று என்பது முதன்மையாக இல்லாமல்
அவர்களைப் புனிதர்களாக வழிபடும் வழிபாட்டு மரபுகளையே வளர்த்தெடுத்துக்
கொண்டு இருக்கின்றார்கள். ஒரு அரசியல் கட்சியை, ஒரு அரசியல் தலைவரை
பின்பற்றுவதற்கான எந்த நியதியும் அவர்களிடம் தற்போது இல்லை. தன்னலம்,
பிழைப்புவாதம், அற்பவாதம் போன்றவை கட்சித் தலைமையிடம் இருந்து கடைநிலை
உறுப்பினர் வரை அனைவரையும் செல்லரித்துப் போகச் செய்திருக்கின்றது. உள்ளீடு
அற்ற எலும்புக் கூடுகளாய் கட்சித் தலைமையும், தொண்டர் படையும் மாறி
இருக்கின்றது.
குழந்தை திருமணத்திற்கு எதிராக முஸ்லீம் பெண்கள்!-ஆய்வில் தகவல்! தலாக் தலாக் தலாக் தடை கோரும்...
இந்தியாவில் உள்ள பெருவாரியான திருமணமான முஸ்லீம் பெண்கள் முஸ்லீம் தனி
நபர் சட்டத்தில் திருத்தம் செய்ய விரும்புகிறார்கள் என சமீபத்தில் நடத்திய
ஆய்வில் தெரியவந்து உள்ளது.
பாரதீய முஸ்லீம் மஹிலா ஆண்டோலன் அமைப்பு மொத்தம் 4710 திருமணமான முஸ்லீம்
பெண்களிடம் 10 மாநிலங்களில் இந்த ஆய்வை எடுத்து உள்ளது. இது குறித்த முடிவை
நேற்று வெளியிட்டது.
பாரதீய முஸ்லீம் மஹிலா ஆண்டோலன் ( BMMA) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில்
விவகாரத்து சடங்கில் மூன்று தலாக்,பலதார மணம் ஆகியவற்றை தடை செய்ய
வேண்டும் என 90 சதவீதம் பேர் கூறி உள்ளனர். 75 சதவீதம் பேர் குழந்தை
திருமணத்தை தடை செய்ய வேண்டும் என கூறி உள்ளனர்.
தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் உள்நோக்கத்தோடு என் மீது வழக்குப் பதிவு ஆ.ராசா குற்றசாட்டு
முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்குபதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவரது வீடு மற்றும் உறவினர்
வீடு,அலுவலகங்கள் என 20 இடங்களில் அதிரடை சோதனை நடைபெற்றது.இதில் தங்கம்
மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித் தனர்.
இந்த சோதனை குறித்து சென்னை அண்ணா அறிவா லயத்தில் ஆ.ராசா இன்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:_ ஏற்கனவே என்மீது தொடுக் கப்ட்ட 2 ஜி வழக்கில், உச்ச நீதிமன்ற வழிகாட்டு தலின் பேரில் எனது சொத்துக்களை மதிப்பிட வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிபு, சி.பி.ஐ. ஆகிய 3 துறை அதிகாரிகளும் இணைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. இதன்படி இவர்கள் ஆய்வு செய்ததில் வருமானத்துக்கு அதிகமாக நான் சொத்து சேர்க்கவில்லை என்று தெரியவந்தது. இதனால் டெல்லி சி.பி.ஐ. கோர்ட் டில் அப்போதே என்னிடம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் இல்லை என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் கூறினார்கள்.
அப்போது அவர் கூறியதாவது:_ ஏற்கனவே என்மீது தொடுக் கப்ட்ட 2 ஜி வழக்கில், உச்ச நீதிமன்ற வழிகாட்டு தலின் பேரில் எனது சொத்துக்களை மதிப்பிட வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிபு, சி.பி.ஐ. ஆகிய 3 துறை அதிகாரிகளும் இணைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. இதன்படி இவர்கள் ஆய்வு செய்ததில் வருமானத்துக்கு அதிகமாக நான் சொத்து சேர்க்கவில்லை என்று தெரியவந்தது. இதனால் டெல்லி சி.பி.ஐ. கோர்ட் டில் அப்போதே என்னிடம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் இல்லை என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் கூறினார்கள்.
இன்று இரவுக்குள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கைது செய்யப்படலாம்? தனிப்படை போலீஸார் தில்லிக்கு படையெடுப்பு....
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது
ஜாமீனில் வெளி வரமுடியாதபடி 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் தில்லி
விரைந்துள்ளனர். இன்று இரவுக்குள் அவர் கைது செய்யப்படுவார் என்று தில்லி
வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி,
முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச்
சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசிய இளங்கோவன், இதைக் கண்டித்து கடந்த 5
நாட்களாக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பள்ளி கேன்டீன்களில் பீட்ஸா, பர்கர் சிப்சுக்கு விற்க தடை
பீட்ஸா, பர்கர், சிப்ஸ், கேக், குளிர்பானம், பிஸ்கட் போன்ற
நொறுக்குத்தீனிகளை, நாடு முழுவதும் உள்ள பள்ளி கேன்டீன்களில் விற்க,
விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தை
நலத்துறை அமைச்சகம் நியமித்த, 10 உறுப்பினர்கள் உயர்மட்டக்குழு, பள்ளிகளில்
விற்கக்கூடிய உணவு பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை
சமர்ப்பித்து உள்ளது. இறுதி முடிவு எடுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ள, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாடு
முழுவதும் உள்ள பள்ளி கேன்டீன்களில், இந்திய உணவு வகைகளை மட்டுமே விற்க
வேண்டும். பீட்ஸா, பர்கர், சிப்ஸ், கேக், பிஸ்கட், இனிப்பு வகை, சாக்லேட்,
குளிர்பானம் போன்ற நொறுக்குத்தீனிகளை விற்கக் கூடாது.
மதுவாவது… விலக்காவது…அதிமுகவின் அத்திவாரமே டாஸ்மாக் வருமானம்தாய்ன்!
இந்தியா முழுவதும் மத்திய அரசு மது விலக்கை அமல்படுத்தினால்
தமிழகத்திலும் மதுக்கடைகளை மூடுவோம் என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன்
கூறியுள்ளார். இது ஒரு காலும் நடக்காது என்பதை அறிந்தே இவ்வாறு
கூறியுள்ளார்.
ஆட்சிப் பீடத்தில் அதிமுக இருக்கும்வரை மது விலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை இதைவிட உறுதியாகவும் தெளிவாகவும் யாரும் சொல்லமுடியாது. கலால் துறையை கையில் வைத்திருக்கும் விசுவநாதன் முதல்வரின் வலது கரம் போன்றவர். வசூல் மன்னர். ஓ.பன்னீர்செல்வத்தை விட செல்வாக்கு மிக்கவர். ஜெயலலிதாவின் மனம் தெரியாமல் எதையும் பேசமாட்டார். மொத்த மாநிலமே மதுக்கடைகளை மூடச்சொல்லி போராடும்போது இவ்வளவு வெளிப்படையாக ஒரு அமைச்சர் பேசுகிறார் என்றால், அதற்கு நிறைய துணிச்சல் வேண்டும் என்பது மட்டுமல்லாமல், மேலிடத்தின் ஆதரவும் உண்டு என்பதே.
ஆட்சிப் பீடத்தில் அதிமுக இருக்கும்வரை மது விலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை இதைவிட உறுதியாகவும் தெளிவாகவும் யாரும் சொல்லமுடியாது. கலால் துறையை கையில் வைத்திருக்கும் விசுவநாதன் முதல்வரின் வலது கரம் போன்றவர். வசூல் மன்னர். ஓ.பன்னீர்செல்வத்தை விட செல்வாக்கு மிக்கவர். ஜெயலலிதாவின் மனம் தெரியாமல் எதையும் பேசமாட்டார். மொத்த மாநிலமே மதுக்கடைகளை மூடச்சொல்லி போராடும்போது இவ்வளவு வெளிப்படையாக ஒரு அமைச்சர் பேசுகிறார் என்றால், அதற்கு நிறைய துணிச்சல் வேண்டும் என்பது மட்டுமல்லாமல், மேலிடத்தின் ஆதரவும் உண்டு என்பதே.
இளங்கோவன் மீது கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு
காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் மீது கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது.
காமராஜர் அரங்க முன்னாள் ஊழியர் வளர்மதி என்பவர் அளித்த புகாரி்ன் பேரில், சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளை சேர்ந்த மேலாளர் நாராயணன் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது.
சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் அறக்கட்டளையி்ல் டெலிபோன் ஆபரேட்டராக பணி புரிந்தவர் வளர்மதி. இவர், அறக்கட்டளையி்ல் நடைபெற்ற ஊழலை தட்டி கேட்டதால் அடித்து, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீசாரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
கலைஞர்:ராசா மீது அரசியல் காரணங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மத்திய
அமைச்சராக இருந்த, தி.மு.கழகத்தைச் சேர்ந்த தம்பி ஆ. ராசா மீது சொத்துக்
குவிப்பு வழக்கு பதிவு செய்ததோடு, சுமார் 20 இடங்களில் சி.பி.ஐ. சோதனையும்
நடைபெற்றதாகவும், ஏதோ ஆவணங்களையெல்லாம் கைப்பற்றி யதாகவும் கடந்த சில
நாட்களாக ஒரு சில நாளேடுகளில் கொட்டை எழுத்துக்களில் செய்திகள் வந்து
கொண்டிருக்கின்றன.அது
பற்றி இன்றைய தினம் மாலையில் கழக அலுவலகத்தில் ராசா என்னைச் சந்தித்து,
இது பற்றிய முழு விவரங்களையும் என்னிடம் விளக்கினார். அந்த விளக்கத்தை
நாளைய தினம் உரிய அதிகாரியிடமும் செய்தியாளர்களிடமும் அவரையே விளக்கிக்
கூறுமாறு தெரிவித்திருக்கிறேன்.அவர்
என்னிடம் கூறும்போது, 13-11-2013 அன்று சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரியாக
இருந்தவர் நீதிபதியின் முன்பாகவே ராஜாவின் மீதோ, அவருடைய குடும்பத்தினர்
மீதோ எந்தவிதமான சொத்துக் குவிப்பும் இல்லை என்று தெரிவித்திருப்பதாகவும்
சொன்னார்.ஸ்ரீலஸ்ரீ ஆ. ராசா அய்யர்ன்னு இருந்தாக்க ஒரு பிரஷ்னையும் இல்ல பாருங்கோள்!
வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015
ரணில் விக்ரமசிங்க நான்காவது முறையாக இலங்கை பிரதமராக பதவியேற்றார்! மகிந்தாவும் கலந்துகொண்டார் !
நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத்
தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில்
விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை இலங்கைப் பிரதமராக மீண்டும் பதவி
ஏற்றார். இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன் இந்த பதவியேற்பு
நடைபெற்றது. மத நிகழ்வுகளின் பின்னர் சத்தியப் பிரமாணம் நடைபெற்றது.
ஜனாதிபதி
செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட
அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
திருமாவளவன் உயிரைக் காப்பாற்றிய வாட்ஸ் - அப் மெசேஜ்
தஞ்சாவூர்
மாவட்டம் பட்டுக்கோட்டை சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்
திருமாவளன் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சதி திட்டம்
தீட்டப்பட்டிருந்தது. இந்த சதியில் இருந்து அவரை காப்பாற்றியது
எதிராளிகளின் வாட்ஸ் அப் மெசேஜ்தான்.முதல்
நாள் இரவு முழுவதும் திருமாவளவன் வருகைக்கு எதிராக ஆதரவாளர்கள் வாட்ஸ் -
அப்’பில் மெசேஜ் அனுப்பி பகிர்ந்துகொண்டனர். இந்த விசயம் போலீசாருக்கு
தெரியவந்ததும், அவர்கள் உஷார் ஆனார்கள். அசம்பாவிதங்களை தடுக்கும்
பொருட்டு அவர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து திருமாவளவனை பெட்ரோல் குண்டு
வீச்சில் இருந்து காப்பாற்றியுள்ளது போலீஸ் அந்த வாட்ஸ் - அப் மெசேஜ்:’தென்மாவட்டங்களில் தொடர்ந்து சாதிக்கலவரங்ளை தூண்டிவரும் திருமாவளவன் ,தஞ்சை
மாவட்டம் வடசேரி பகுதியில் சாதிய கலவரத்தை தூண்டும் விதத்தோடு கொடி
யேற்றுவிழா நடத்த இருப்பதாக தகவல் தெரிந்தது. இதையறிந்த மக்கள் முன்னேற்ற
கழகம் நாளை தடுத்து நிறுத்த உள்ளது..!
தினமலர்.:தி.மு.க.,வில் மீண்டும் அழகிரி? ஸ்டாலினை சமரசப்படுத்த தீவிரம்
தி.மு.க., தலைவர் கருணாநிதியையும், கட்சியின் பொருளாளர் ஸ்டாலினையும்
சமரசப்படுத்தி, மீண்டும் கட்சியில் இணைய, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி,
சென்னையில் முகாமிட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டசபை
தேர்தல் நெருக்கத்தில் இருப்பதால், தி.மு.க.,வில் மீண்டும் அழகிரியை
சேர்க்க வேண்டும் என, கட்சியின் மூத்த தலைவர்கள், கருணாநிதியிடம் விருப்பம்
தெரிவித்து வருகின்றனர். ஆனால், அழகிரியை சேர்க்கக் கூடாது என்பதில்,
பொருளாளர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.
இந்நிலையில், நேற்று
முன்தினம் நடந்த, நீதிபதி ஒருவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க, அழகிரி
சென்னைக்கு வந்தார். நேற்று, கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார்; அங்கு,
தாயார் தயாளுவை சந்தித்து, அவரது உடல்நலம் பற்றி விசாரித்தார்; ஆனால்,
வீட்டிலேயே இருந்த கருணாநிதியை சந்திக்கவில்லை.
இந்துமதத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை! திருமாவளவன் Ultimatum ?
விழுப்புரம்: சேஷ சமுத்திரம் மக்கள்
இந்து மதத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று விடுதலை
சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் சேஷ சமுத்திரத்தில்
கடந்த 14ஆம் தேதி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா தொடங்கியது. 15ஆம் தேதி
தேரோட்டம் நடைபெற இருந்தது. அந்தத் தேரை பொதுப் பாதையில் கொண்டு வருவதற்கு
ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கோவிலுக்கு முன்பு
தேரோட்டத்திற்காக நிறுத்தப்பட்டிருந்த தேர் மீது பெட்ரோல் குண்டு
வீசப்பட்டதால் தேர் முற்றிலும் எரிந்து சேதமானது. மின் இணைப்பு
துண்டிக்கப்பட்டது. காலனி பகுதியில் உள்ள தலித் வீடுகளும் தீயிட்டு
எரிக்கப்பட்டுள்ளன.
இரா.சம்பந்தர் எதிர்க்கட்சி தலைவர்? இலங்கையில் எதிர்க்கட்சி தலைவராக மீண்டும் ஒரு தமிழர் .....
நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்க் கட்சிகளை
உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வாய்ப்பு
உருவாகி உள்ளது.
இலங்கையில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க மொத்தம் 113நாடாளுமன்ற
உறுப்பினர்க்கள் ஆதரவு தேவை. தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் ஐக்கிய
தேசிய கட்சி 106 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் ஆட்சியமைக்க 7 நாடாளுமன்ற
உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இந்நிலையில் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திர கட்சியும் ஆளும் கட்சிகளாகிவிட்டன.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் 3வது பெரிய கட்சியான 16உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இயல்பாகவே பிரதான எதிர்க்கட்சியாகிவிடுகிறது. மகிந்தா கட்சியின் எம்பிக்கள் பெரும்பாலோர் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட ரணிலின் காலில் விழுந்துள்ளார்கள்.செஞ்ச வினை கொஞ்சமா?
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் 3வது பெரிய கட்சியான 16உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இயல்பாகவே பிரதான எதிர்க்கட்சியாகிவிடுகிறது. மகிந்தா கட்சியின் எம்பிக்கள் பெரும்பாலோர் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட ரணிலின் காலில் விழுந்துள்ளார்கள்.செஞ்ச வினை கொஞ்சமா?
உ.பி.-ல் பெற்றோர் கண்முன் சிறுமியை சீரழித்த கொடூரர்கள்..
உத்தரபிரதேசம் : கன்னாஜ் மாவட்டத்தில் பெற்றோர் கண் முன் 15 வயது
சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கன்னாஜ் மாவட்டத்தில் தான் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி
டிம்பிள் யாதவ் எம்.பி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். இதே மாவட்டத்தில்
தான் இந்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் தாயார் கூறியதாவது... காலை 11
மணியளவில் எங்கள் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்த 6 பேர், பணம் மற்றும்
நகையைக் கேட்டு மிரட்டி எங்களைக் கட்டி வைத்தனர்.
என் மாமியாரையும் என் சின்ன குழந்தையையும் அவர்கள் அடித்து உதைத்தனர்.
எங்கள் கண்முன்பாகவே எங்களுடைய 15 வயது மகளை கூட்டாக பாலியல் பலாத்காரம்
செய்தனர். அவளை விட்டு விடும்படி கதறிய எங்களின் அழு குரலையோ, என் மகளின்
கதறலையோ, அவர்களை கேட்கவில்லை என்று தெரிவித்தார்.
இந்த கொடூரத்தை அரங்கேற்றிய அந்த 6 கொடூர மனித மிருகங்களும் தப்பி
ஓடிவிட்டனர்.முலாயம் வந்தாலும் மாயாவதி வந்தாலும் சாதாரண மனிதர்களின் வாழ்வுக்கு அங்கு உத்தரவாதம் இல்லை, பணம் புடுங்கி அரசியல்தான் நடக்கிறது,
வியாழன், 20 ஆகஸ்ட், 2015
குஷ்பு வீட்டை முற்றுகையிட்ட அ.தி.மு.க.வினர்
நரேந்திர மோடி – ஜெயலலிதா சந்திப்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறி தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.>இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்புவின் வீட்டு முன்பு 80-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வியாழக்கிழமை மாலை திடீரென்று திரண்டனர். அங்கு அவருக்கு எதிராக கோஷமிட்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கொடும்பாவியை எரித்தனர்.படங்கள்
காமன்வெல்த் மாநாடு ரத்து செய்தது பாகிஸ்தான்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் செப்டம்பர் மாதம் 30-ல் துவங்கி அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த காமன்வெல்த் மாநாட்டை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் காஷ்மீர் சட்டசபை சபாநாயகருக்கு அழைப்பிதழ் அனுப்பும் விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, காஷ்மீர் மாநில சபாநாயகரை அழைக்க மறுப்பு தெரிவித்த பாகிஸ்தானின் செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து மாநாட்டை புறக்கணிப்பதாக கூறியது. இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து பாகிஸ்தான் மாநாட்டை ரத்து செய்துள்ளது dinamani.com
தென்கொரிய - வட கொரிய எல்லையில் மோதல் ! எல்லை பகுதி மக்கள் ஊரை காலிபண்ணுகிறார்கள்
தென்கொரியாவின் மேற்குப் பகுதியில்
குடியிருப்பவர்கள், அங்கிருந்து வெளியேறும்படி அந்நாடு கூறியுள்ளது. வட
கொரியாவுடன் ராணுவ மோதல் துவங்கியதையடுத்து, இந்த நடவடிக்கையை தென் கொரியா
மேற்கொண்டுள்ளது.
வடகொரியாவின் ராக்கெட் தாக்குதலுக்கு தென்கொரியா பதிலடி கொடுத்துள்ளது.
தென் கொரியாவிலிருக்கும் ராணுவப்
பிரிவின் மீது வட கொரியா வியாழக் கிழமையன்று ராக்கெட் வீசித் தாக்குதல்
நடத்தியது. இதையடுத்து, தென்கொரியாவும் பதில் தாக்குதல்களை நடத்தியது என
தென் கொரியா தெரிவித்துள்ளது.
விரைவில் தென் கொரியாவின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூடி இது தொடர்பாக விவாதிக்கவுள்ளது.
சியோலுக்கு வட மேற்கில் இருக்கும் யியோன்சியோன் பகுதியின் மீது உள்ளூர் நேரப்படி மாலை நான்கு மணியளவில் வடகொரியா தாக்குதல் நடத்தியது.
விரைவில் தென் கொரியாவின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூடி இது தொடர்பாக விவாதிக்கவுள்ளது.
சியோலுக்கு வட மேற்கில் இருக்கும் யியோன்சியோன் பகுதியின் மீது உள்ளூர் நேரப்படி மாலை நான்கு மணியளவில் வடகொரியா தாக்குதல் நடத்தியது.
பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 பெருநகரங்களில் கொல்கொட்டா,சென்னை ,பெங்களூரு ,அய்தரபாத்,மும்பை ,,டில்லி ......
புதுடில்லி: நாட்டில், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்கள்
பட்டியலில், பெரிய மாநிலங்கள் வரிசையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
பெண்களுக்கு எதிரான, பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் நகரங்களில், சென்னை,
மிகக்குறைவான குற்ற எண்ணிக்கையுடன் அசத்தி உள்ளது; தலைநகர் டில்லி, இதில்
முதலிடத்தை பெற்றுள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிராக, பாலியல்
வன்கொடுமை, வீடுகளில் பெண்களுக்கு அடி, உதை என, காலங்காலமாக, பல்வேறு
கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. இதுதொடர்பாக, என்.சி.ஆர்.பி., எனப்படும்,
தேசிய குற்ற ஆவணக்குழு, ஆய்வு மேற்கொண்டு, கடந்த 2014ல், பாதுகாப்பான 10
மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
முதல் ஐந்து இடங்கள்:இப்பட்டியலில்,
முதல் ஐந்து இடங்களை, நாட்டின் மிக சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன்
பிரதேசங்கள் பிடித்துள்ளன. நாகாலாந்து, லட்சத்தீவு, புதுச்சேரி, தத்ரா
அண்ட் நகர் ஹவேலி, டையு - டாமன் ஆகியவை, முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும்தான் பெண்கள் இரவில் நடமாடுவதை பார்க்க முடியும் ..
மதுரை நெல்லை போன்ற சிறு நகரங்களில் கூட பாதுகாப்பாக உள்ளது
புதன், 19 ஆகஸ்ட், 2015
பா.ம.க. மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் ! விடுதலை சிறுத்தைகள் மனு: ஜாதிவெறி வேண்டாம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் அன்பழகன்,
கிழக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் 50–க்கும்
மேற்பட்டோர் இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அங்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து, அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
வருகிற 23–ந்தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பங்களா பகுதியில் பாண்டி மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெறும் பகுதி சோழவந்தான் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியாகும்.
இந்த பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் தற்போது பா.ம.க.வினர் வட மாவட்டங்களில் சாதிய மோதல்களை உருவாக்கி, சாதி ரீதியான அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள்.
அங்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து, அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
வருகிற 23–ந்தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பங்களா பகுதியில் பாண்டி மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெறும் பகுதி சோழவந்தான் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியாகும்.
இந்த பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் தற்போது பா.ம.க.வினர் வட மாவட்டங்களில் சாதிய மோதல்களை உருவாக்கி, சாதி ரீதியான அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள்.
27.9 கோடி சொத்து குவிப்பு: ஆ.ராசா மீது சி.பி.ஐ.வழக்கு- 20 இடங்களில் ரெய்டு! அப்ப 176000 கோடின்னது?
வருமானத்துக்கு அதிகமாக ரூ27.9 கோடி சொத்து குவித்ததாக முன்னாள்
மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது சி.பி.ஐ. புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து டெல்லி, சென்னை, திருச்சி, பெரம்பலூர் உட்பட 20 இடங்களில்
சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில்
தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ. ராசா.
இவரது பதவி காலத்தில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முதலில்
வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது.
இதனால் மத்திய அரசுக்கு ரூ1 லட்சத்து 70 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக
கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்த தகவல் நாட்டில் பெரும் பிரளயத்தை
உருவாக்கியது. 176000 கோடி லஞ்சம் எப்படி திடீரென்று வெறும் 27 கோடியாக சுருங்கியது,? சும்மா வெறும் கற்பனை வளத்தோடு கரக்டர் கொலை செய்வது ஆட்சியை கவிழ்ப்பது அப்புறம் ஒப்புக்கு சாட்டுக்கு ஒரு வழக்கு ஜோடிப்பது ? இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் பத்தி பேசினவங்க எல்லாம் எங்கே போயிட்டாங்க? வேறொண் ணும் இல்லைங்க !ராஜா ஒரு பார்ப்பானாக இல்லிங்கோ ! மத்திய அமைச்சராக எப்படி இருக்கலாம்?
மத்தியத் தரைக்கடல் : ஏழை அகதிகளின் இடுகாடு
June
7, 2014 – ஆப்பிரிக்காவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பா செல்ல
விரும்பும் அகதிகள் – கரை தொடாடமல் மரிப்பவர்களே அதிகம்!
ஐரோப்பாவிற்கு வரும் அகதிகள் மற்றும் புலம்
பெயர்பவர்களின் எண்ணிக்கையில் நடப்பு ஆண்டான 2015-லும் எந்த மாற்றமும்
இல்லை. அதாவது அகதிகளாக வருவொர் பிணங்களாக கரையேறுகிறார்கள் – அந்த
எண்ணிக்கைதான் அப்படியே தொடர்கிறது.
வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக ஐரோப்பாவை நோக்கி வருகிறார்கள்.
வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக ஐரோப்பாவை நோக்கி வருகிறார்கள்.
கள்ளத்தொடர்பு தப்பில்லை: கோர்ட் அதிரடி! நேர்மையற்ற பழக்கமே தவிர...
புது டில்லி: 'கள்ளக்காதலில் ஈடுபடுவது, நேர்மையற்ற பழக்கமே தவிர, தண்டனைக்குரிய குற்றமில்லை' என, டில்லி கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.டில்லியைச்
சேர்ந்த பெண் ஒருவர், 2010ல், காதலித்த நபர் ஒருவரை, பெற்றோர்
எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின், அந்த
ஆணுக்கும், மற்றொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.இதை தட்டிக்
கேட்ட மனைவியை, அவன் அடித்து துன்புறுத்தி உள்ளான். இதனால், மனவேதனை அடைந்த
மனைவி, திருமணமாகி, ஓர் ஆண்டு நிறைவடைவதற்குள், தற்கொலை செய்து
கொண்டார்.இறந்த பெண்ணின் சகோதரர், டில்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில்,
அவளின் கணவர் மீது வழக்கு தொடர்ந்தார்.
காங். கட்சி அலுவலகம் தாக்குதல்: அ.தி.மு.க.,வுக்கு கண்டனம்
தி.மு.க., தலைவர் கருணாநிதி: அனைத்துக் கட்சித் தலைவர்களும்,
ஊடகங்களும் விமர்சனம் செய்ததைப் போல, தமிழ்நாடு காங்., தலைவர்
இளங்கோவனும், மோடி - ஜெயலலிதா, சந்திப்பு குறித்து, தன் கருத்தை
வெளியிட்டிருக்கிறார். இதற்காக, ஆளுங்கட்சியினர், சத்தியமூர்த்தி
பவனிற்கும், இளங்கோவன் வீட்டுக்கும் சென்று, வன்முறை வெறியாட்டங்களில்
ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு: இளங்கோவன்
தவறாக பேச வாய்ப்பில்லை; அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை பற்றி, அவர் தன்
கருத்தை தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., ஆட்சியின் ஊழலை எதிர்த்து அவர்,
போராடி வருகிறார். அவர் நடத்தும் போராட்டத்தை திசை திருப்ப,
அ.தி.மு.க.,வினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிரிய அகதிகளில் கிறிஸ்தவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்வோம்: ஸ்லவாக்கியா
சிரிய அகதிகளில் கிறிஸ்தவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்போவதாக ஐரோப்பிய நாடான ஸ்லவாக்கியா தெரிவித்துள்ளது.
சமூக ஒருங்கிணைப்பை மனதில் வைத்தே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஸ்லவாக்கியா தெரிவித்துள்ளது.
துருக்கி, இத்தாலி, கிரேக்கம் ஆகிய நாடுகளில் உள்ள சிரிய அகதிகளின் முகாம்களில் இருந்து, இரு நூறு கிறிஸ்த அகதிகளைத் தேர்வுசெய்து, தான் ஏற்றுக்கொள்ளப் போவதாக அந்நாட்டு உள்துறைஅமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இவான் மெடிக் தெரிவித்துள்ளார்.
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015
கோத்தாவுக்கு அழைப்பாணை: வாசற் கதவில் கடிதம் ஒட்டிவைப்பு
பல்வேறு காரணங்களைக் காட்டி ஆஜராவதைத் தவிர்த்துவந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை இன்று ஆஜராகுமாறு விசேட ஜனாதிபதி விசாரணைக் குழு அறிவித்துள்ளது.
அவருக்கான அழைப்பாணையை நேற்றைய தினம் அவரது இல்லத்திற்குச் சென்றுள்ள மிரிஹான பொலிஸ் அதிகாரிகள் வாசல் ‘கேற்’றில் ஒட்டிவிட்டு வந்துள்ளனர்.
எழுத்து மூலமான மேற்படி அழைப் பாணையை மிரிஹான பொலிசார் கோதாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு எடுத்துச் சென்ற போது அங்கு பாதுகாப்புக் கடமையிலிருந்த இராணுவ வீரர் சுனில் ப்ரியந்த சுமணதாச அதனை ஏற்க மறுத்துள்ளார்.
எதனையும் பொறுப்பேற்கக் கூடாது என கோதாபய ராஜபக்ஷ தமக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
வங்காளதேசத்தில் இங்கிலாந்து நாட்டவர் கைது! வலைத்தள எழுத்தாளர் கொலை வழக்கில் .....
வங்காளதேசத்தில் இரண்டு முக்கிய வலைத்தள எழுத்தாளர்கள் கொலை தொடர்பாக
இங்கிலாந்து நாட்டுக்காரர் உள்ளிட்ட 3 பேரை சிறப்பு பாதுகாப்பு படை இன்று
கைது செய்துள்ளது.
வங்காளதேசத்தில் நாத்திகம் மற்றும் மதச்சார்பின்மை குறித்து வலைத்தளத்தில்
பதிவு செய்யும் எழுத்தாளர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுகின்றனர்.
இதையடுத்து, அன்சருல்லா பங்களா டீம் என்ற அமைப்புக்கு கடந்த மே மாதம் அரசு
தடை விதித்தது.
இந்நிலையில், அமெரிக்க வலைத்தள எழுத்தாளர் அவிஜித் ராய் மற்றும் ஆனந்த
பிஜோய் தாஸ் கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த அதிரடிப்படை
பட்டாலியன் போலீசார் இன்று முக்கிய குற்றவாளி உள்ளிட்ட 3 பேரை கைது
செய்துள்ளனர்.
கொச்சி விமான நிலையம் உலகின் முதல் சோலார் விமான நிலையமாகிறது கேரளாவின்...
உலகிலேயே முதல்முறையாக முழுக்க முழுக்க சூரிய சக்தியாலேயே இயங்கும் விமான நிலையமாக கொச்சி ஏர்போர்ட்டை மாற்றியிருக்கிறது கேரளா.
கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு நாளைக்கு 50 ஆயிரம் முதல் 60
ஆயிரம் யூனி்ட்டுகள் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. இந்நிலையில், இந்த
மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்ய முடிவு செய்த கொச்சி விமான
நிலைய நிறுவனம் (சி.ஐ.ஏ.எல்) கடந்த மார்ச் 2013-ல் 100 கிலோவாட் மின்சார
உற்பத்தி திறன் கொண்ட சோலார் பிளான்டை விமான நிலையத்தின் அரேவல் டெர்மினல்
பிளாக் கட்டிடத்தின் கூரையில் அமைத்தது. கிரிட் முறையில் வடிவமைக்கப்பட்ட
இதில் பேட்டரிக்கு பதிலாக ஸ்டிரிங் இன்வெர்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மிகப் பெரிய வெற்றி! ஆட்சியாளருக்கு தவிர்க்க முடியாத சக்தியாக மீண்டும் தமிழர்கள்.....
தற்போதைய தேர்தலில் அது குறைந்தபட்சம் 15 இடங்களை வெல்வது
உறுதியாகிவிட்ட நிலையில், தேசியப் பட்டியலில் கிடைக்கக்கூடிய இடங்கள்
இரண்டாக உயர்ந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மொத்த உறுப்பினரின்
எண்ணிக்கை இந்த நாடாளுமன்றத்தில் பதினாறாக அதிகரிக்கக்கூடும் என்று அந்தக்
கட்சியின் தரப்பில் நம்பிக்கை நிலவுகிறது.
தேர்தல் ஆணையத்தால் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின்படி,
யாழ். மாவட்டத்தில் 5 இடங்களும்,
வன்னி மாவட்டத்தில் 4 இடங்களும்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இடங்களும்,
அம்பாறை மாவட்டத்தில் 1 இடமும்
திருகோணமலை மாவட்டத்தில் 1 இடமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கிறது
ஆக மொத்தம் 14 இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் வென்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின்படி,
யாழ். மாவட்டத்தில் 5 இடங்களும்,
வன்னி மாவட்டத்தில் 4 இடங்களும்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இடங்களும்,
அம்பாறை மாவட்டத்தில் 1 இடமும்
திருகோணமலை மாவட்டத்தில் 1 இடமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கிறது
ஆக மொத்தம் 14 இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் வென்றுள்ளது.
பாங்காக் வெடிகுண்டு! அந்த நேரம் நடிகை ஜெனிலியா அங்கிருந்தார் ! Bangkok Blast: Genelia D'Souza Was Across the Street, Says She's 'Fine'
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சிட்லாம் மாவட்டத்தில் பிரசித்த பெற்ற எராவன் என்ற பிரம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே 3 ஷாப்பிங் மால்களும், ஸ்டார் ஓட்டல்களும், பல வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. இது எப்போதும் மக்கள் நெரிசல் நிறைந்த பகுதி. நேற்று இரவு கோயில் வளாகத்துக்கு வெளியே இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் சக்தி வாய்ந்த வெடி குண்டு வெடித்தது. இதில் 25க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏராளமானபேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த பகுதியில் அமைந்துள்ள வர்த்தக மால் ஒன்றில் நடிகை ெஜனிலியா பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது வெடிகுண்டு வெடித்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். உடனே அங்கிருந்து வெளியேறினார். இதுகுறித்து அவர் தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில்,‘வர்த்தக மாலில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு பயந்து அலறினேன். அந்த சத்தம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது பாதுகாப்பாக உள்ளோம். ஆனால் பலியானவர்கள் பற்றி அறிந்தேன். அந்த அதிர்சியிலிருந்து இன்னும் நான் மீளவில்லை’ என குறிப்பிட்டுள்ளா dinakaran.com
இளங்கோவனுக்கு எதிராக வலுக்கும் அதிமுகவினர் போராட்டம்
பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர்
ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்தது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி
தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவதூறாக பேசியதாக, அவரைக் கண்டித்து
அதிமுகவினர் இன்று 2-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தின்
பல்வேறு இடங்களில் கடந்த 15-ம் தேதியன்று உண்ணாவிரதப் போராட்டம்
நடைபெற்றது.
போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய இளங்கோவன், அண்மையில் பிரதமர் நரேந்திர
மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்தது தொடர்பாக சில
கருத்துகளை பதிவு செய்தார்.
சேஷ சமுத்திரம் தேர் எரிப்பு! ‘நல்ல’ மாற்றம்! ‘நல்ல’ முன்னேற்றம்! அன்புமணி ராமதாஸ்!
விழுப்புரம் மாவட்டம் சேஷ சமுத்திரத்தில் வன்னிய ஜாதி வெறியர்களால்
தலித்துகளின் குடிசைகளும் உடமைகளும் கொளுத்தப்பட்டன.வினவு.com
தலித்துகளின் குடிசைகளும் உடமைகளும் கொளுத்தப்பட்டன.வினவு.com
இந்த சம்பவம் பற்றி மருத்துவர் ராமதாஸ் காவல்துறை மீதுதான் குற்றம் சாட்டி உள்ளார் :விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கலவரம் தொடர்பாக, காவல்துறை மீது
நடவடிக்கை எடுக்கக் கோரி இம்மாதம் 26-ம் தேதி பாமக சார்பில் போராட்டம்
நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
குட்டி இந்தியாவை துபாயில் காண்கிறேன்: 50 ஆயிரம் இந்தியர் மத்தியில் மோடி
துபாய்: ''துபாயில், குட்டி இந்தியாவை நான் காண்கிறேன்,'' என்று, நேற்றிரவு அந்நாட்டில், 50 ஆயிரம் பேர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, பெருமிதத்துடன் தெரிவித்தார்.
துபாய், கிரிக்கெட் மைதானத்தில், யு.ஏ.இ.,யில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கென, வளைகுடா நாடுகளில் வசிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு திரண்டிருந்தனர்.நிகழ்ச்சியில், 'பாரத் மாதா கி ஜே' என்ற கோஷத்துடன் மோடி பேச்சை துவங்கினார்.
தொடர்ந்து மோடி பேசியதாவது:துபாயில் நான் குட்டி இந்தியாவை பார்க்கிறேன்.
ரணில் விக்ரமசிங்கே ஆட்சி அமைக்கிறார் !அதிபர் மைத்ரி பால சிறிசேனா முன்னிலையில் பதவி....
தேர்தல் முடிவுகள்!: ஐ.தே.க. 107, ஐ.ம.சு.மு. 95, த.தே.கூ. 16, ஜே.வி.பி. 5, ஈ.பி.டி.பி. 1, மு.க. 1 இலங்கை பார்லி. தேர்தலில் .இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் ரணில் விக்ரமசிங்கே கட்சி 106 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழ் தேசிய கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மாலை அதிபர் மைத்ரி பால சிறிசேனா முன்னிலையில் பதவியேற்கிறார்.
மகிந்த
கட்சியில் தெரிவான 95 எம்பிக்களில் இருந்து சுமார் 25 தொடக்கம் 40 வரையிலான MPக்கள் ரணில் பக்கம்
தாவ உள்ளார்கள். இதன் காரணமாக ரணில் தனித்து ஆட்சியமைக்க தேவையான 113
ஆசனங்கள் கிடைத்து விடும். அதுபோக பாராளுமன்றில் அறுதிப்
பெரும்பாண்மை (மூன்றில் இரண்டு) ரணில் அரசுக்கு கிடைக்கும் சாத்திய கூறும் உள்ளது தமிழ் தேசிய கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது எனவே அவர்கள் ஏற்கனவே அறிவித்த படி அவர்களது ஆதரவும் ரணிலுக்கு கிடைக்கும்
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 7 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதில் தமிழ் தேசியகூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன், சித்தார்த்தன், சுமந்திரன், சரவணபவ உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், மேலும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் டக்ளஸ் தேவானந்தாவும், ஐக்கிய தேசிய கட்சியின் விஜயகலாவும் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளன
தலைவர் சம்பந்தர் திருகோணமலையில் வெற்றி பெற்றுள்ளார்
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 7 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதில் தமிழ் தேசியகூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன், சித்தார்த்தன், சுமந்திரன், சரவணபவ உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், மேலும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் டக்ளஸ் தேவானந்தாவும், ஐக்கிய தேசிய கட்சியின் விஜயகலாவும் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளன
தலைவர் சம்பந்தர் திருகோணமலையில் வெற்றி பெற்றுள்ளார்
மஹிந்தா ராஜபக்சே:தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன் ! உத்தேசமாக UNP 101- UPFA 97 - TNA 17 தொகுதிகளில் வெற்றி .....
4 மாவட்டங்களில் தமிழர் தேசியகூட்டணி வெற்றி! அறுதிபெரும்பான்மை இரு பெரும் கட்சிகளுக்கும் கிடைக்க வில்லை! தமிழ் தேசிய கூட்டணியின் உதவியுடன் தான் ஆட்சி அமைக்க முடியும்!
15ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் தோல்வியடைந்துள்ளதை ஏற்றுக் கொள்வதாக, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக, ஏ.எஃப்.பி செய்திச் சேவை தெரிவிக்கின்றது. இந்தத் தேர்தலில் ஐ.ம.சு.கூ அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது என்பதனாலேயே அவர் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. "பிரதமராக வருவது என்ற என்னுடைய கனவு இல்லாமற் போயுள்ளது. நான் ஏற்றுக் கொள்கிறேன். சிறப்பான போட்டியொன்றில் நாம் தோல்வியடைந்துள்ளோம்" என அவர் தெரிவித்ததாக, ஏ.எஃப்.பி செய்திச் சேவை தெரிவிக்கின்றது. ஐ.ம.சு.கூ ஆட்சியமைக்காத போதிலும், எதிர்க்கட்சி உறுப்பினராக அவர் தொடர்ந்தும் கடமையாற்றுவார் எனவும் அவர் அறிவித்துள்ளார். tamil.dailymirror.lk
தாய்லாந்து இந்து கோவிலில் குண்டு வெடிப்பு 27 பேர் உடல் சிதறி பலி 80 பேர் படுகாயம்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இந்து கோவில் வளாகத்தில் நடந்த குண்டு
வெடிப்பில் 27 பேர் உடல் சிதறி பலியாயினர். 80 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கின் மத்திய பகுதியில் சித்லோம் என்ற இடம் உள்ளது. இங்குள்ள ராஜ்பிரசாங் சந்திப்பில், பிரம்மதேவன் இந்து கோவில் அமைந்து இருக்கிறது.
இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த பகுதியில் 3 பெரிய வணிக வளாகங்களும், சில நட்சத்திர ஓட்டல்களும் இருப்பதால் இங்கு எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கின் மத்திய பகுதியில் சித்லோம் என்ற இடம் உள்ளது. இங்குள்ள ராஜ்பிரசாங் சந்திப்பில், பிரம்மதேவன் இந்து கோவில் அமைந்து இருக்கிறது.
இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த பகுதியில் 3 பெரிய வணிக வளாகங்களும், சில நட்சத்திர ஓட்டல்களும் இருப்பதால் இங்கு எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும்.
ராஜக்சாக்களின் கோட்டையான காலி தொகுதியில் யுஎன்பி அமோக வெற்றி (57.61%)
மகிந்தாவின் கோட்டையான காலி தொகுதியில் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியகட்சி பெருவெற்றி பெற்றுள்ளது பலரையும் ஆச்சரிய படுத்தி உள்ளது,முழுமையான தேர்தல் முடிவுகள் நாளையே வரும் என்று தெரிகிறது யுன்பியின் வாக்கு வங்கி கணிசமான அளவு உயர்ந்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனாலும் இனவாதத்தை கக்கிய ராஜபக்சாவுக்கும் சவால் விடக்கூடிய அளவு வாக்குகள் இருப்பதையே இது காட்டுகிறது.
The UNP carried the electorate with 33,798 votes (57.61%)
while the UPFA won only 19,613 votes (33.43%).
The JVP also received 4,777 votes.
In 2010, the UPFA UPFA won the Galle Electorate with 20,348 votes (50.08%) while the UNP won 14,804 votes.
The UNP carried the electorate with 33,798 votes (57.61%)
while the UPFA won only 19,613 votes (33.43%).
The JVP also received 4,777 votes.
In 2010, the UPFA UPFA won the Galle Electorate with 20,348 votes (50.08%) while the UNP won 14,804 votes.
திங்கள், 17 ஆகஸ்ட், 2015
யானைக்கு வழங்கிய உணவில் பிளேடு: பாகன் விஷம் குடித்து தற்கொலை!!
கேரளாவில் கோவில்களில் ஏராளமான யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த
யானைகளை பராமரிக்க பாகன்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த கோவில்
யானைகள் உரியமுறையில் பராமரிக்க படுவதை உறுதிசெய்ய கண்காணிப்பு
ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதுபோல கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தெச்சிக்கோட்டு காவு கோவிலில் ராமச்சந்திரன் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. 51 வயதாகும் இந்த யானை கேரளாவில் உள்ள கோவில் யானைகளில் மிக உயரமானது என்ற பெருமை பெற்றது. மேலும் ஆசியாவிலேயே 2–வது உயரமான யானை என்ற சிறப்பும் ராமச்சந்திரன் யானைக்கு உண்டு.
இதுபோல கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தெச்சிக்கோட்டு காவு கோவிலில் ராமச்சந்திரன் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. 51 வயதாகும் இந்த யானை கேரளாவில் உள்ள கோவில் யானைகளில் மிக உயரமானது என்ற பெருமை பெற்றது. மேலும் ஆசியாவிலேயே 2–வது உயரமான யானை என்ற சிறப்பும் ராமச்சந்திரன் யானைக்கு உண்டு.
250 விமானங்களை மொத்தமாக ஆர்டர் செய்தது இண்டிகோ.
இந்தியாவின் முன்னணி பயணிகள் விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ, தனது
விமானச் சேவை மற்றும் குத்தகை விமானங்களை அதிகரிக்க ஏர்பஸ் நிறுவனத்திடம்
சுமார் 250 ஏ320நியோ விமானங்களை வாங்கத் திட்டமிட்டு இதற்கான ஆர்டரை
சமர்ப்பித்துள்ளது.
இந்த 25 விமானங்களின் மொத்த மதிப்பு 26.55 பில்லியன் டாலராகும். இதற்கான
ஒப்பந்தத்தில் இண்டிகோ மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் சனிக்கிழமை
கையெழுத்திட்டது.
நடிகர் நாசர் ,விஷால் கோஷ்டி ரஜினி கமல் உள்பட பலரின் ஆதரவை ......
நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இவ்விரு அணியிரும் தற்போது வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
சமீபத்தில் தென்மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு, நாடக நடிகர்களிடம் வாக்கு சேகரித்தனர். தற்போது, முக்கிய சினிமா பிரமுகர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் விஷால் அணியினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
அதன் முதற்கட்டமாக இன்று நடிகர் ரஜினிகாந்தை விஷால் அணியினர் நேரில் சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு கோரினர்.
அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் வாய்ப்பு கிடைத்தும் வசதியின்மையால் தவிக்கும் மாணவர்; கூலி வேலைக்கு செல்கிறார்..
தொடர்பு எண்: 90478 48635.
புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில் பயின்று, அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்புக் கிடைத்தும் வசதியின்மையால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கிறார் ஏழை மாணவர் தினேஷ்குமார். புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுண்டாங்கிவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி(55). தள்ளுவண்டி தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா(48). தென்னங்கீற்றுமுடையும் தொழிலாளி. இவர்களுக்கு மகள்கள் ரம்யா, தீபா ஆகியோரும், மகன் தினேஷ்குமாரும் உள்ளனர். இதில், ரம்யா அங்குள்ள வங்கியில் ரூ.1 லட்சம் கடன் பெற்று, பொறியியல் படித்துள்ளார். தீபா அரசுக் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில் பயின்று, அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்புக் கிடைத்தும் வசதியின்மையால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கிறார் ஏழை மாணவர் தினேஷ்குமார். புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுண்டாங்கிவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி(55). தள்ளுவண்டி தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா(48). தென்னங்கீற்றுமுடையும் தொழிலாளி. இவர்களுக்கு மகள்கள் ரம்யா, தீபா ஆகியோரும், மகன் தினேஷ்குமாரும் உள்ளனர். இதில், ரம்யா அங்குள்ள வங்கியில் ரூ.1 லட்சம் கடன் பெற்று, பொறியியல் படித்துள்ளார். தீபா அரசுக் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்துள்ளார்.
மைத்திரிபால அதிரடி! 25 மத்திய குழு உறுப்பினர்களின் உறுப்புரிமை ரத்து! சதி முறியடிக்கப்பட்டது? ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின்...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய 25 உறுப்பினர்கள் கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நீக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய புதிய 25 உறுப்பினர்கள் அக்கட்சியின் மத்திய செயற்குழுவிற்காக ஜனாதிபதி உத்தரவில் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
கட்சியின் புதிய செயலாளர் துமிந்த திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் கூடிய புதிய நியமிப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.jaffna.com
விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தில் 5 லட்ச டாலர்கள் பணம்
இந்தோனேஷியாவில் ஒரு தொலைவான மலைப் பகுதியில் ஞாயிறன்று விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஐந்துலட்சம் அமெரிக்க டாலர்கள் வரையான பணத்தை எடுத்துச் சென்றிருந்ததாக இந்தோனேஷிய தபால் அலுவலகம் தெரிவிக்கிறது.
அரசாங்கத்தினால் ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதி பணம் நான்கு பைகளில் எடுத்துச் செல்லப்பட்டதாக பப்புவா மாகாணத்தின் தலைநகர் ஜயபுராவில் உள்ள அஞ்சல் அலுவலகத்தின் தலைமை அதிகாரி பிபிசிக்குத் தெரிவித்தார்.
விபத்திற்கு உள்ளான பயணிகள் விமானத்தில் பயணித்த 44 பேரில் எவராவது உயிர்பிழைத்துள்ளார்களா என்பதை தெரிந்து கொள்வதற்காக மீட்புப் பணியாளர்கள் விபத்து நடந்த பகுதிக்கு செல்கின்றார்கள் bbc.tamil.com
இலங்கை தேர்தல்: முதலாவது முடிவு மாலை 6.30க்கு வெளியாகும்!
இலங்கை
பாராளுமன்றத்துக்கு இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடந்தது. இதற்கான
ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை
நடைபெற்றது.முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்படி தபால் ஓட்டு எண்ணிக்கை இன்று மாலை 6 மணிக்கு துவங்குகிறது.முதலாவது
தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் 6.30 மணியளவில் வெளியிடுவதற்கு முயற்சி
எடுப்பதாக தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் nakkheeran.in .Exit opinion poll தடை செய்யப்பட்டுள்ளது ஆனாலும் ரணில் வெற்றி முகம் ஓரளவு உறுதி செய்யப்பட்டுள்ளது . ராஜபக்சா இறுதி நேரத்தில் முழுக்க முழுக்க இனவாதத்தையே நம்பி உள்ளார் என்பது அவரின் தோல்வி மனப்பான்மையை காட்டுவதாக தெரிகிறது, இவரது ஆட்டம் முடிந்து போனதை இன்னும் உணராமல்........
ராதாரவி சரத்குமார் கும்பலிடம் இருந்து நடிகர் சங்கம் விடுதலை ?
தென்னிந்திய
நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் தனியாருக்கு கட்டிடம் கட்ட
அனுமதி அளித்ததை அடிப்படையாக வைத்து நடிகர் சங்கம் இரு அணிகளாக வடம்
இழுக்கின்றன.
நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி தலைமையிலான அணி
ஒருபுறம். விஷால், நாசர், கார்த்தி, பொன்வண்ணன் அடங்கிய அதிருப்தி அணி
மறுபுறம்.
நிலம் குறித்த அடிப்படை பிரச்சனை தவிர்த்து, இன்றைய நிர்வாகிகளின் கட்சி
சார்ந்த அடையாள அரசியலும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது.
சரத்குமார், ராதாரவி போன்றவர்களின் வெளிப்படையான அதிமுக ஆதரவு நடவடிக்கைகளை
அச்சம் காரணமாக திரையுலகினர் வாய்மூடி அனுமதித்தாலும் அவர்கள் கடும்
அதிருப்தியில் உள்ளதை நேரடிப் பேச்சுகளில் அவதானிக்க முடிகிறது.
நடிகர் சங்கத்தின் சமீபத்திய நடவடிக்கையை, திரைத்துறையை தாண்டி பலரும் விமர்சித்து வருகின்றனர்.
bbc: முஸ்லிம்கள் தாடியை மழிப்பது தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்திய ஃபத்வா
இந்தியாவின் முன்னணி இஸ்லாமிய மதப்
பள்ளிகளில் ஒன்று எனக் கருதப்படும் தாருல் உலூம் தியோபந்த், விடுத்துள்ள
ஃபத்வா எனப்படும் மத அறிவுறுத்தல் ஒன்று விவாதப் பொருளாக மாறியுள்ளது. சவரக்கடையில் தாடியை மழித்துக் கொள்ளும் ஒருவர்
முடிதிருத்தும் நிலையங்களை
வைத்துள்ளவர்கள் தமது கடைகளுக்கு வரும் இஸ்லாமியர்கள் தாடியை மழிக்கச்
சொன்னால் அதைச் செய்யலாமா, இஸ்லாமியர்கள் தாடியை மழிக்கலாமா என்பது
குறித்து விளக்க வேண்டும் என உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு
முஸ்லிம் நாவிதர்கள், அந்த மதப் பள்ளியின் அறிஞர்களிடம் கேட்டுள்ளனர். பிரிக்க முடியாதது எதுவோ ? தாடியும் மயிரும்! பிரிக்க கூடியது எதுவோ? சமாதானமும் சமயமும்!
ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015
தேனி மாவட்டம் முத்துலெட்சுமி ! எல்லோருக்கும் கைகொடுக்கும் மாற்று திறனாளி!
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகத்தில்
பணிபுரியும் ஊழியர்களுக்கும் தேனியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கும்
முத்துலெட்சுமியைத் தெரியாமல் இருக்க முடியாது. அவர் அரசாங்க உயர்
அதிகாரியோ கட்சிப் பிரமுகரோ இல்லை. தாசில்தார் அலுவலக வளாகத்தின்
மரத்தடியில் அமர்ந்து மனு எழுதித் தருகிறவர். தனது உடல் ஊனத்தை ஒரு
பொருட்டாக நினைக்காமல் எழுத படிக்கத் தெரியாத பாமர மக்களுக்குத் தனது
மனுக்களால் முதியோர், திருமணம், விதவை, மாற்றுத்திறனாளி உள்ளிட்ட பல்வேறு
உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற்றுத் தந்து அவர்களின்
நன்மதிப்பைப் பெற்றுவருகிறார்.
தேனி அருகே அல்லிநகரத்தில் எந்தவொரு வசதியும் பின்புலமும் இல்லாத ஏழைக்
குடும்பத்தின் இரண்டாவது மகள் முத்துலெட்சுமி. மூன்று வயதில் தந்தையை
இழந்து, வறுமையில் வாடினார். ஐந்து வயதில் விஷக்காய்ச்சலால்
பாதிக்கப்பட்டார். முத்துலெட்சுமியின் இடது கை, முதுகுத் தண்டுவடம்
பாதிக்கப்பட்டு 60 சதவீத ஊனத்தை அடைந்தார். இவரால் இயல்பாக நடக்கவோ, வேலை
செய்யவோ முடியாது. தன் அம்மாவின் ஒத்துழைப்புடன் கல்லூரிப் படிப்பை
முடித்தார்.
இந்தோனேஷியா: 54 பேருடன் விமானம் காணவில்லை! உள்ளூர் பயணிகள் டிரிகானா ஏர் சேர்விஸ்....
இந்தோனேஷியாவில் உள்நாட்டு பயணிகள்
விமானம் ஒன்று 54 பேருடன் விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்துடனான
தொடர்பினை இழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
டிரிகானா ஏர்
சேர்விஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம் பப்புவா பிராந்தியத்தில்
உள்ள ஒக்ஸிபில் நகருக்குச் சென்றுகொண்டிருந்ததாக போக்குவரத்து துறை அமைச்சு
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தினமலர்: தி.மு.க., - 140, தே.மு.தி.க., - 45, காங்கிரஸ் - 30, ம.தி.மு.க., - 15, புதிய தமிழகம்..........
அடுத்தாண்டு நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், ஆளும்
அ.தி.மு.க.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை இணைத்து, தி.மு.க., தலைமை யில்
கூட்டணி அமைக்கும் முயற்சிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து
முட்டுக்கட்டையாக இருக்கிறது.
'கூட்டணிக் கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கு அளிக்கும் முறையை அமல்படுத்தினால் தான் கூட்டணி' என்ற, சிறு கட்சிகளின் கோரிக்கையை, ஏற்றுக் கொண்டாலும், அ.தி.மு.க., - தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ., அல்லாத கட்சிகளுடன் வேண்டுமானால், இக்கூட்டணியை அமைக்கலாம் என்பது, மார்க்சிஸ்ட் கருத்தாக உள்ளது இதற்கிடையே, தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய
தமிழகம் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்டு, கூட்டணி அமைந்து விட்டதாகவும், அவை, போட்டி யிடும் தொகுதிகளை உத்தேசமாக முடிவு செய்துவிட்டதாகவும் கடந்த சில தினங்களாக தகவல்கள் உலா வருகின்றன இந்த உத்தேச தகவலில் தி.மு.க., - 140, தே.மு.தி.க., - 45, காங்கிரஸ் - 30, ம.தி.மு.க., - 15, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (காதர் மொய்தீன்) ஆகியவற்றுக்கு தலா இரண்டு இடங்களில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டு விட்டதாகவும், கடைசியாக சொல்லப்பட்ட இரண்டு கட்சிகளும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எனவும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'கூட்டணிக் கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கு அளிக்கும் முறையை அமல்படுத்தினால் தான் கூட்டணி' என்ற, சிறு கட்சிகளின் கோரிக்கையை, ஏற்றுக் கொண்டாலும், அ.தி.மு.க., - தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ., அல்லாத கட்சிகளுடன் வேண்டுமானால், இக்கூட்டணியை அமைக்கலாம் என்பது, மார்க்சிஸ்ட் கருத்தாக உள்ளது இதற்கிடையே, தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய
தமிழகம் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்டு, கூட்டணி அமைந்து விட்டதாகவும், அவை, போட்டி யிடும் தொகுதிகளை உத்தேசமாக முடிவு செய்துவிட்டதாகவும் கடந்த சில தினங்களாக தகவல்கள் உலா வருகின்றன இந்த உத்தேச தகவலில் தி.மு.க., - 140, தே.மு.தி.க., - 45, காங்கிரஸ் - 30, ம.தி.மு.க., - 15, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (காதர் மொய்தீன்) ஆகியவற்றுக்கு தலா இரண்டு இடங்களில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டு விட்டதாகவும், கடைசியாக சொல்லப்பட்ட இரண்டு கட்சிகளும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எனவும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)