சனி, 20 பிப்ரவரி, 2021

காந்தி சிலை - கரூர் எம்பி ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்

minnambalam : கரூரில் லைட் ஹவுஸ் ரவுண்டானாவில் 70 ஆண்டுகள் முன் நிறுவப்பட்ட காந்தி சிலையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கரூர் பயணத்தை ஒட்டி அகற்றிவிட்டு புதிய சிலையை வைக்க முயன்றிருக்கிறார்கள்.ஆனால் எவ்வித அனுமதியும் நிர்வாக நடைமுறைகளுமில்லாமல் அந்த காந்தி சிலை அகற்றப்பட்டிருக்கிறது என்று கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி நேற்றே குற்றம் சாட்டினார். மேலும் புதிய சிலைக்கான பீடம் மிகவும் பலவீனமான முறையில் தரமற்ற பொருட்கள் கொண்டு கட்டப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இன்று இதைக் கண்டித்து காங்கிரஸார் சார்பாக போராட்டம் நடைபெற்றபோது ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர் போலீசார். இதனால் நிலைகுலைந்து போன ஜோதிமணி போலீஸுக்கும் தமிழக அரசுக்கும் எதிராக கடுமையான முழக்கங்களை எழுப்பினார். இது கரூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க அதிர்ச்சி அலைகளைப் பரப்பியுள்ளது,

மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” : மு.க.ஸ்டாலின்

“மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” : மு.க.ஸ்டாலின்
kalaignarseithigal.com : “மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கும் கடன்கள் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி செய்யப்படும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். பாலியல் வன்கொடுமை வழக்கில் சி.பி.ஐ.யிடம் நியாயம் கிடைக்கவில்லை என்றால், கழக ஆட்சி அமைந்தவுடன் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்; சட்டத்தின் பிடியில் இருந்தும், இந்த ஸ்டாலினிடமிருந்தும் இந்த வழக்கில் சிக்கியுள்ள அ.தி.மு.க.வினர் தப்பவே முடியாது." என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (20-02-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கோவை மாவட்டம், பொள்ளாச்சி - கோவை ரோடு, சங்கம்பாளையம் - ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற, கோவை கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டக் கழகங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

40 சீட்டுகள்! கட்சிகளை இணைத்து காட்டுகிறேன் பழிவாங்க மாட்டேன் சசிகலா உத்தரவாதம் ..எடப்பாடி மறுப்பு ? புரோக்கர் அமித் ஷா பேச்சு தோல்வி?

 பொதுச்செயலாளர்

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: மலையளவுக்கு ஆசைப்பட்ட சசிகலா, இப்போது கடுகளவாவது ஏதாவது நல்லது நடந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த "40" சீட்டுகள்..! சசிகலா சென்னைக்கு வருவதற்கு முன்பிருந்தே, தமிழக அரசியலில் களை கட்டி வருகிறது.. ஜெயிலுக்கு போய்விட்டு வருவதால், அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் ஆதரவு தனக்கு ஏராளமாக இருக்கும் என்று கணக்கு போட்டார் சசிகலா. 

சென்னைக்கு காரில் வந்த அன்றும், 23 மணி நேர தொண்டர்களின் வரவேற்பை பார்த்து மிரண்டும் போய்விட்டார்.. அதனால், எப்படியும் அதிமுக நிர்வாகிகள் நம்மிடம் தாவி வருவார்கள் என்று நினைத்தா சசிகலா "கூடிய விரைவில் உங்களை சந்திக்கிறேன்" என்று செய்தியாளர்களிடம் வேனில் உட்கார்ந்தபடியே சொன்னார்.. அதிமுகவில் ஒருபுயலே வீச போகிறது என்ற ரீதியில் எதிர்பார்ப்பும் கிளம்பியது. ஆனால். ஒன்றுகூட நடக்கவில்லை.. எல்லாமே புஸ்ஸென்று போய்விட்டது. எதனால் சசிகலா அமைதியாக இருக்கிறார்? ஏதோ பெரிய அளவுக்கு மெகா பிளானை தீட்டி வருகிறார் என்ற யூகங்கள் இன்றும் வலம் வருகின்றன.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்.. மூன்றாண்டுகளாக போராடியும் மதிக்காத மத்திய அரசு”

nakkheeran.in : கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்குப் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நலன் விரும்பும் கட்சிகளின் சார்பில் பல கட்டமாக போராட்டமும், எதிர்ப்பும் இருந்து வந்தது. அதனைக் கண்டுக்கொள்ளாத மத்திய அரசு, 2 அணு உலைகளைக் கட்டுமானம் செய்து செயல்படுத்தி வருகிறது. இன்றளவும் இதற்கு எதிர்ப்புகள் இருந்தும் அதனை ஒரு துளி அளவும் கவனிக்காமல், கருத்தில் கொள்ளாமல் மேலும் 2 உலைகளை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.

 இதனைக் கண்டித்தும், எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாகவும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தெரிவித்திருப்பதாவது, “ஒருபுறம், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக எடப்பாடி பழனிசாமி அரசு அறிவித்து வரும் நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைக்க, எல் அண்ட் டி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது அதிர்ச்சியளிக்கிறது.

புதுச்சேரியில் திமுக-காங்கிரசை சேர்த்துவைத்த பாஜக

திமுக-காங்கிரசை சேர்த்துவைத்த பாஜக

minnambalam :புதுச்சேரியில் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கருத்து வேறுபாடுகளால் கடந்த ஆறு மாதங்களாக பிரிந்திருந்த நிலையில், தற்போதைய தனது நடவடிக்கைகள் மூலம் இந்த இரு கட்சிகளையும் மீண்டும் ஒன்றிணைத்துள்ளது பாஜக.

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ்- திமுக இணைந்து போட்டியிட்ட 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 15, திமுக 2 மொத்தம் 17 எம். எல்.ஏ. க்களுடன் காங்கிரஸ் ஆட்சியை அமைத்து முதல்வரானார் நாராயணசாமி.   கடந்த ஆறு மாதங்களாகவே முதல்வர் மீது அதிருப்தியான திமுகவினர் காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக செயல்பட்டுவந்தார்கள். ஒரு கட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.   புதுச்சேரி திமுக நிர்வாகிகள் இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினை ஒன்றாக சென்று அறிவாலயத்தில் சந்தித்து, ‘புதுச்சேரியில் திமுக தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்க முடியும்’ என்று வலியுறுத்தினார்கள்.

134 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள்- ராமராஜன், சரோஜா தேவி, சவுகார் ஜானகி, தேவதர்ஷினி, மதுமிதா, கலைப்புலி எஸ் தாணு...

134 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
maalaimalar : 134 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் கலைமாமணி விருது வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை: தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு கலைத் துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019, 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நேற்று அறிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுகார் ஜானகி, நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா, கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ், இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா உள்ளிட்ட 128 பேருக்கு கலைமாமணி விருதும், 6 பெண் கலைஞர்களுக்கு ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதும் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கலைமாமணி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். கலைமாமணி விருது பெறுவோருக்கு பரிசாக 5 சவரன் தங்கப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல் கலைமாமணி விருது பெற்ற, வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

இந்தியன் 2. இந்த பிரம்மாண்டத்திற்கும் ஊழலுக்கும் தொடர்பேயில்லை. நம்புங்கள்... ஜீவசகாப்தன்

May be an image of Jeeva Sagapthan and tree
Jeeva Sagapthan : · ஊழல் ஒழிப்பையே லட்சியமாகக் கொண்டவர்களுக்கான கடந்த ஆண்டு பதிவிட்ட பதிவு.... பிரம்மாண்ட சினிமாக்களின் படு கொலைகள் - ஜீவசகாப்தன்
தொடக்க காலத்தில் வசனங்கள் வழியே கதை சொன்னார்கள். பின்னர் காட்சிகளின் வழி பேசினார்கள். 90 களுக்குப் பிறகு தொழில் நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துகிறோம் என்ற பெயரில் பிரம்மாண்ட சினிமாக்கள் அதிகம் வரத் தொடங்கின. கதையை விட கிராபிக்ஸ் காட்சிகளும், ஒலி அமைப்பு முறையும் அதிகம் பேசப்பட்டன. திரைப்படங்களில் எதார்த்தம், மண்ணுக்கேற்றத் தன்மை, ஊர் அமைப்பு எதுவும் தேவையில்லை. பிரம்மாண்டம் என்ற ஒன்று போதும் என்ற மனநிலையை இளைஞர்களுக்கு உருவாக்கினார்கள்.
அப்படி ஒரு மனநிலையை உருவாக்கியவர்களுள் முக்கியமானவர் ஷங்கர். அரசியல்வாதிகளின் ஊழலும், உதிரி தொழிலாளர்களின் அலட்சியமும்தான் நாட்டின் அவலத்திற்கு காரணம் என்பதுதான் இவருடைய படங்களின் சாரம்சமாக இருக்கும். இந்த உண்மையை மக்களிடம் கொண்டு செல்வதற்காக, பல கோடி ரூபாயைச் செலவழிப்பார். அதற்காக, சினிமா டிக்கெட்டுகளும் பல மடங்கு அதிகமாக விற்கப்படும். என்ன செய்ய? அரசியல்வாதிகளின் ஊழலை ஒழிக்க ஷங்கர் பிரம்மாண்டமாகச் செலவு செய்கிறார். அவ்வளவுதான்.
பாய்ஸ் படத்தில் தன் காதலை வெளிப்படுத்த அரிசியை சாலையில் கொட்டி எழுதிக் காண்பிப்பார் கதாநாயகன். ஒரு பருக்கைச் சோற்றின் அருமை தெரிந்த எவனாலும், அந்த காட்சியை ரசிக்க முடியாது. இப்படி பிரம்மாண்டம், வித்தியாசம் என்ற முறையில் ஷங்கர் செய்த சாதனைகள் ஏராளம்...

'அமித்ஷா' ஆஜராக வேண்டும்! - சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நக்கீரன் செய்திப்பிரிவு : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியும் அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவர், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துவருகிறார். இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு பேரணியில், மத்திய அமைச்சர் அமித்ஷா தன்னை அவதூறாகப் பேசியதாக அபிஷேக் பானர்ஜி, மேற்கு வங்கத்தில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அபிஷேக் பானர்ஜி தொடர்ந்த இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவு பிறப்பித்து, அமித்ஷாவுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக மேற்கு வங்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் ராமர் ரத யாத்திரை நடத்த அனுமதி!

nakkeeran : மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக அனைவரிடமிருந்தும் பொருள் உதவி பெறும் நோக்கில் ரத யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் மதுரையில் உள்ள 100 வார்டுகளில் அந்த வாகனத்தை ஒலிபெருக்கியுடன் இயக்க அனுமதிக்கக் கோரி உதவி காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தோம். 

 கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அதனைக் கருத்தில் கொண்டும், சட்ட ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டும் அனுமதி வழங்க இயலாது என மனுவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இன்று (19/02/2021) இரவு 08.00 மணி முதல் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு ரத யாத்திரை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, மதுரையில் ரத யாத்திரையை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார். 

கொரோனா ஊரடங்கை மீறியவர்கள் மீதான 10 லட்சம் வழக்குகள் ரத்து; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கை மீறியவர்கள் மீதான 10 லட்சம் வழக்குகள் ரத்து; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
dailythanthi.com :முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.கடையநல்லூரில் பொதுமக்கள் மத்தியில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- மத்திய அரசு, கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க கடந்த 25.03.2020 அன்று முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததையடுத்து, தமிழக அரசும் பொதுமக்களின் நலனை கருதி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதுடன், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் - 1939 மற்றும் தொற்று நோய் சட்டம் - 1937 ஆகிய சட்டங்களின் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது.

தமிழ்நாட்டில் நட்டநடுநிலை, நடு சென்டர்களின் அட்டகாசம்!!!

Kandasamy Mariyappan : · தமிழ்நாட்டில் நட்ட நடுநிலைகள், நடு சென்டர்களுடன் விவாதித்தால்...
திமுக, குடிசை மாற்று வாரியம் மூலமாக வீடுகள் கட்டிக் கொடுத்தது, நட்ட நடுநிலை; கமிஷன் பார்ப்பதற்கு!!!
திமுக, தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஓட்டு வீடு கட்டிக் கொடுத்தது, நட்ட நடுநிலை: கமிஷன் அடிப்பதற்கு!!! திமுக, நில உச்சவரம்பு மூலமாக குத்தகைதாரர்களுக்கே நிலங்களை பட்டா போட்டு கொடுத்தது,
நட்ட நடுநிலை: சொந்த கட்சிக்காரங்களுக்கு எங்கள் நிலத்தை எடுத்து கொடுத்து விட்டார்கள்!!!
திமுக தாழ்த்தப்பட்டவர்களுக்கும், நத்தம் புறம்போக்கு இடத்தில் வாழ்ந்த குடியானவர்கள்களுக்கும் அதே இடத்திற்கு வீட்டுமனை பட்டா கொடுத்தது,
நட்ட நடுநிலை: பொறம்போக்கு இடத்தை கட்சிக்காரங்களுக்கு பட்டா போட்டு கொடுத்து விட்டார்கள்!!!
திமுக, பேருந்துகள் அரசுடைமையாக்கி எல்லா கிராமங்களுக்கும் பேருந்து பேருந்து போக வழி செய்தனர்,
நட்ட நடுநிலை: பார்ப்பனர் மீது கொண்ட பொறாமையால் அவர்களிடம் இருந்த பேருந்துகளை பறித்துக் கொண்டார் கலைஞர்!!!
திமுக பத்துக்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்களை உருவாக்கியது,
நட்ட நடுநிலை: குழாய் புதைக்க, மோட்டார் அமைக்க காண்ட்ராக்ட் விட்டு நல்ல சம்பாதித்தது!!!

தமிழக இட ஒதுக்கீட்டுக்கு முடிவு கட்டுகிறாரா பாமக ராமதாஸ்?

May be an image of 1 person
Parthi Ravichandran : · அது 1998ம் ஆண்டு ; அன்று விடியம்போது சிதம்பரம் நகரம் அதுவரை சந்தித்திடாத கலவரத்தை சந்திக்கும் என்றோ; தமிழ்நாடு அரசியல் அன்றிலிருந்து சாதியில் சிக்கி சீரழியும் என்றோ தில்லை நடராஜனுக்கோ, தில்லைவாழ் மக்களுக்கோ தெரிந்திருக்காது. சிதம்பரம் பாமகவின் நகர பிரமுகர் பழனிவேல் என்பவர் தில்லை கிழக்கு வாசலில் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த படுகொலையை செய்ததாக அறியப்படுபவர்கள் பிரேம்குமார் வாண்டையாரும்; அவருடைய தம்பி ஶ்ரீதர் வாண்டையாரும்.
சிதம்பரம் நகரத்தில் மாரியப்பா தியேட்டர், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என தொழிலில் கோலோச்சிய வாண்டையார் குடும்பம்.
எளிதாக சொல்வதென்றால் பசும்பொன் படத்தில் ‘தென்னாட்டு சிங்கமே’ பாடலில் சிவாஜிக்கு மாலை போடுபவர் தான் இந்த பிரேம்குமார் வாண்டையார்.
சினிமா பாணியில் ரவுடியிசம் கட்டபஞ்சாயத்து, மாமுல், பெட்டிக்கடைகளில் கூட இவர்களது படம் இருக்க வேண்டுமென உத்தரவிடுகிறார்கள் என்பது பாமகவின் குற்றச்சாட்டு.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

தெலுங்கானா வக்கீல் தம்பதி படுகொலை : சந்தேக வலையில் ஆளும் கட்சி பிரமுகர் TRS தலைவரான குந்தா சீனிவாஸ்

  tamil.indianexpress.com : தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த வக்கீல் தம்பதி நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்த தம்பதி ஜி. வாமன் ராவ் (52) மற்றும் ஜி நாகமணி (48). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (புதன்கிழமை) பெடப்பள்ளி மாவட்டத்தில் காரில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென காரை வழிமறித்த மர்மநபர்கள் தம்பதி இருவரையும் கத்தி மற்றும் அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நாகமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது கணவர், வாமன் ராவ் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியுள்ளார். ஆனால் 108 ஆம்புன்சில் அவரை சிகிச்சைக்காக மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழ்நதார். இந்த படுகொலை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டிடிவி தினகரன் விடுத்த திடீர் அழைப்பு.. மௌனம் கலைப்பாரா ஒபிஎஸ்! செம்ம பரபரப்பு

tamil.oneindia.com -Velmurugan P : சென்னை: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் பரதன் ஆகலாம் வாருங்கள் என டிடிவி தினகரன் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்பாரா அல்லது மௌனம் கலைத்து டிடிவி தினகரனுக்கு பதிலடி கொடுப்பாரா என்ற பரபரப்பு நிலவுகிறது.
விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.
அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தேர்தல் வேலைகளில் இறங்கி உள்ளார். கூட்டுறவு கடன் ரத்து, அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் ரத்து, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் ரத்து, சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் ரத்து, ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட வழக்குகள் ரத்து என பல்வறு அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து- முதலமைச்சர் அறிவிப்பு

சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து- முதலமைச்சர் அறிவிப்பு
maalaimalar :தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:

 * கொரோனா ஊரடங்கை மீறியதாக பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
* குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.
* சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட 1500 வழக்குகளில் சிலவற்றை தவிர மற்றவை ரத்து செய்யப்படும்.
* கூடங்குளத்தில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய பரிசீலனை செய்யப்படும்.
* காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, வன்முறை தொடர்பான வழக்குகள் தவிர்த்து மற்ற வழக்குகள் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

PetrolPriceHike பெட்ரோல்விலை ! எதிர்கட்சிகள் எப்போது மக்களுக்காக வாய் திறப்பார்கள்? எப்போது போராடுவார்கள்?

Karthikeyan Fastura  : சண்டை பழகலாம் வாங்க என்று Startup Business வகுப்பு எடுக்கும்போது ஒரு பொருளின்/சேவையின் விலை நிர்ணயிப்பது பற்றி நான் இவ்வாறு கூறுவேன்.
உங்களின் பொருளின்/சேவையின் விலை என்பது கைக்கு எட்டும் உயரத்தில் வாடிக்கையாளர் கண்ணின் உயரத்திற்கு இருக்கவேண்டும்.
தரையில் கிடக்கவும் வேண்டியதில்லை. கைக்கு எட்டாத உயரத்திலும் இருக்க கூடாது.
கையை எட்டி பிடிக்கும்படி இருந்தாலோ, தாவி பிடிக்கும்படி இருந்தாலோ என்னதான் சிறப்பான பொருளாக இருந்தாலும் தேவையான பொருளாக இருந்தாலும் சரியான விலையாக இருக்க முடியாது என்பேன்
பெட்ரோல் விலை இன்று 92 ரூபாய்க்கு வந்திருக்கிறது. கேஸ் சிலிண்டரின் விலையில் மானியத்தையும் ரத்து செய்தும் ரூபாய் 785க்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
இது உண்மையிலேயே சரியான விலைதானா என்றால் நிச்சயம் இல்லை. பொருளாதார சுமையை அவரவர் பொருளாதார வளத்திற்கு ஏற்ப பகிர்ந்தளிக்காமல் பொதுமக்களின் தலையில் மட்டுமே சுமத்தியுள்ளது அரசு. கோவிட் பிரச்சனையால் மக்கள் அவதியுறும்போது பெருநிறுவனங்கள் அதன் முதலாளிகள் நல்ல லாபம் பார்க்கிறார்கள். அவர்களுக்கு தேவையான முதலீடு தங்குதடையில்லாமல் வருகிறது. 

இந்தியாவில் முதன்முறையாக தூக்கிலிடப்படும் பெண்!

இந்தியாவில் முதன்முறையாக தூக்கிலிடப்படும் பெண்!
minnambalam.com : இந்தியாவில் முதன்முறையாக தூக்கிலிடப்படும் பெண்!" : தந்திரம் பெற்றபின் முதன்முறையாக இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.  உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் வன்கேடா கிராமத்தில் உள்ள பள்ளியின் ஆசிரியராக இருந்த சவுகத் அலியின் மகள் ஷப்னம். பட்டதாரியான ஷப்னம், படிக்காத கூலித் தொழிலாளியான சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார்.   இவர்கள் திருமணத்துக்கு ஷப்னத்தின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி ஷப்னத்தின் ஒட்டு மொத்தக் குடும்பமும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது.அடையாளம் தெரியாத சிலர், ஷப்னத்தின் ஒட்டுமொத்தக் குடும்பத்தினரையும் கொன்று குவித்துவிட்டுச் சென்றதாக ஷப்னம் போலீஸாரிடம் கூறினார். ஆனால் போலீஸாரின் விசாரணையில், இந்தக் கொலையில், ஷப்னம் மற்றும் அவரின் காதலன் சலீமும் ஈடுபட்டது தெரியவந்தது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் இதுதான்..! வெளியான உத்தேச பட்டியல்

தேமுதிக போட்டியிடும் உத்தேச தொகுதிகள் - 14 விருகம்பாக்கம் எழும்பூர் கொளத்தூர் ராணிப்பேட்டை விருத்தாச்சலம் ரிஷிவந்தியம் திருவெறும்பூர் கடையநல்லூர் கள்ளக்குறிச்சி (தனி) திருப்பரங்குன்றம் வால்குடி ஆத்தூர் (திண்டுக்கல்) தாராபுரம் (தனி) திருச்சுழி

Divakar M - Samayam Tamil : 2021 சட்ட சபை தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என்ற உத்தேச தொகுதி பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் 16 ஆவது சட்ட சபை தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. வருகின்ற மே மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடித்து ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்க பட வேண்டும். அதற்காக தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் தங்களது பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகின்றன. அதிமுக பொறுத்தவராவை முதல்வர் வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான எடப்பாடி பழனிசாமி '' வெற்றிநடை போடும் தமிழகம்'' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதே சமயம் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் காரசார பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக இரு வலுவான கட்சிகளை பொறுத்தவரை பேச்சுவார்த்தைகள் சுமூகமாக இருக்கிறதா என்பதே மர்மமாக உள்ளது. கடந்த 2011 சட்ட சபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு அதிகபட்சமாக 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றது.

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் Live Perseverance rover landed on Mars and sent back its first images

dailythanthi.com வாஷிங்டன், செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி நாசா விஞ்ஞானிகள், இந்த விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. இந்தநிலையில், செவ்வாய் கிரகத்தின் வெளிப்பரப்பை, விண்கலம் நேற்று நெருங்கியதால் விஞ்ஞானிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இதையடுத்து ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் அனுப்பிய தகவலின்படி, அது தற்போது வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி விட்டது என்று தெரியவந்தது. மேலும் செவ்வாய் கிரகத்தில் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் எடுத்த புகைப்படத்தையும் நாசா டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

அமரர் ராஜீவ் காந்தியும் ஏழுபேர் விடுதலையும்

அமரர்  ராஜீவ் காந்தியை கொலைசெய்தவர்களை மன்னித்து விட்டதாக திரு ராகுல் காந்தி கூறியது அவரின் மேன்மையை காட்டுகிறது  .பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என்பதற்கு அமரர் ராஜீவ் காந்தி குடும்பம்தான் நிகழ்கால சான்று .
இங்கே ஒரு விடயத்தை கூறவேண்டும் என்று எண்ணுகிறேன் .
ராஜீவ் காந்தியை கொலை செய்தது புலிகள் இயக்கம்  அது ஒரு killing machine என்பதை தவிர வேறு சுருக்கமான விளக்கவுரை கிடையாது.
அதன் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் போன்றோர் அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்பு உடையவர்கள் ஆகிறார்கள்.
குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் புலி ஆதரவு அரசியல் சக்திகள் ராஜீவ் கொலையை கண்டிக்காதவரைக்கும்  அவர்களும் இதற்கு பொறுப்பானவர்கள்தான் .
வெறுமனே ஒப்புக்கு கண்டனம் தெரிவித்தால் கூட ஏற்று கொள்ளமுடியுமா என்பது கேள்விக்குறிதான் . ஆனால் பலர் இன்னும் அதை கண்டிக்க கூட இல்லையே?
அது மட்டுமல்ல அதை நியாயப்படுத்தவும்கூட தயாராகவே உள்ளார்களே?
அப்படியாயின் அந்த killing machine இன்னும் இயங்கி கொண்டிருக்கிறது என்றுதானே பொருள்?
நடந்த சம்பவத்தை இன்னும் கூட நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிப்பவர்கள் அந்த குற்றத்தை தொடர்ந்து செய்கிறார்கள் என்றுதானே பொருள் ?

வியாழன், 18 பிப்ரவரி, 2021

சசிகலா அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகி உள்ளார் .. தினகரன் திவாகரன் மோதல் வெடித்தது

Veerakumar - tamil.oneindia.com : சென்னை: சசிகலாவை சுற்றியுள்ள சொந்தங்கள், அவருக்கு தலைவலியாக மாறியுள்ளன. சசிகலாவின் தம்பி திவாகரன் எந்த பக்கம் போகப் போகிறார் என்பது இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக அரசியல் பார்வையாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதல் முறையாக முதல்வரான காலம் முதல், சசிகலாவின் உறவினர்களால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன. ஜெயலலிதாவால் சுதாகரன் தத்துப் பிள்ளையாக்கப்பட்டு நாடே வியக்க ஆடம்பரமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.
அந்த காலகட்டத்தில் மக்களிடையே பெரும் அதிருப்தியை சம்பாதித்தது. அடுத்த எம்ஜிஆர் நான்தான் என்று சொல்லும் அளவுக்கு சுதாகரனுக்கு தைரியம் பிறக்க இதுதான் காரணம்.
இப்படி சசிகலா உறவினர்கள் எல்லை மீறி போனதன் காரணமாக, 1996ம் ஆண்டு தேர்தலில் அதிமுக மிக மோசமாக தோற்றது. பிறகு அவ்வப்போது சில உறவினர்களை போயஸ் கார்டன் வீட்டுக்கு வரக்கூடாது என்று உத்தரவிடுவதும், கட்சியில் இருந்து நீக்குவது என்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதும், வாபஸ் பெறுவதும் ஜெயலலிதா வாடிக்கையாக இருந்தது.

பாலியல் ரீதியாக துன்புறுத்தி சிறுவன் கொலை: குற்றவாளிக்கு 3 தூக்கு!

minnambalam :  புதுக்கோட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் நம்பர்-1 அம்பிகா பார்க் பகுதியைச் சேர்ந்தவர் டானிஷ் படேல் (34). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கூர் அருகே உள்ள ஒரு தனியார் குவாரியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். 2019 டிசம்பரில், ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை டானிஷ் படேல் பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 18 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.... இதுதொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு டானிஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று நீதிபதி ஆர்.சத்யா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு

புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு
maalaimalar.com :புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். <
தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி:புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை கவர்னராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. அவரை மாற்றவேண்டும் என்று நாராயணசாமி போர்க்கொடி தூக்கி வந்தார். இந்தநிலையில், கிரண்பேடியை திரும்பப்பெறுவதாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவித்தார்.

நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று ரெயில் மறியல்

நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று ரெயில் மறியல்

  daiylithanthi : வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. பதிவு: பிப்ரவரி 18, 2021 06:25 AM புதுடெல்லி, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதை தீவிரப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணி முதல் 4 மணி வரை நாடு முழுவதும் 4 மணி நேர ரெயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை உறுதி செய்ய ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ரெயில் மறியலை தடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசத்தில் ரெயில் பாதுகாப்புக்காக கூடுதல் படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன.

உதயநிதி ஸ்டாலின் : மருத்துவர் லோகோஷ் குமார் மரணத்தை கொரோனா மரணமாக கணக்கில் கொள்ள வேண்டும்

“அரசு மருத்துவர் மரணத்திலேயே இத்தனை அலட்சியம் என்றால் எளிய மக்களின் நிலை?” - உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
“அரசு மருத்துவர் மரணத்திலேயே இத்தனை அலட்சியம் என்றால் எளிய மக்களின் நிலை?” - உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
kalaignarseithigal.com  :  மருத்துவர் லோகோஷ் குமார் மரணத்தை கொரோனா மரணமாக கணக்கில் கொள்ள வேண்டும். அவரது குடும்பத்தாருக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ முதலாம் ஆண்டு மாணவர் லோகோஷ் குமார் கொரோனா நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், மருத்துவர் லோகோஷ் குமார் மரணத்தை கொரோனா மரணமாக கணக்கில் கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று அவரது குடும்பத்தாருக்கு உரிய இழப்பீட்டை வழங்க அடிமைகள் முன்வர வேண்டும் என தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் பயங்கர வெற்றி ! . பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது

schema.org : வெற்றிக் களிப்பில் காங்கிரஸ் . பாதின்டா மாநகராட்சியை காங்கிரஸ் 53 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றியிருக்கிறது
  • இந்த வெற்றி 2022ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான டீசர் என்று பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கருத்து
  • கட்சிகள் செய்த வஞ்சகத்தையும் துரோகத்தையும் மன்னிக்கவோ மறக்கவோ யாரும் தயாராக இல்லை
  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்த போராட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கிய விவசாயிகள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.                இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 8 மாநகராட்சிகள் மற்றும் 109 நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு கடந்த 14ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. நீண்ட கால கூட்டணியான சிரோன்மணி அகாலிதளம் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகியதால் இரண்டு கட்சிகளுன் தனித்து களம் கண்டன, அது தவிர, ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் இருந்தன.

    துபாய் இளவரசி லதீபா சிறையில். மனித உரிமையாளர்கள் கேள்வி

    tamil.samayam.com: துபாய் மன்னர் ஷேக் முகமதுவின் மகளும், துபாய் இளவரசியுமான லதீபா அல் மக்தோம் 2018ஆம் ஆண்டு நாட்டை விட்டே வெளியேற முயற்சித்தார். அவரது முயற்சிகள் தடுக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இந்நிலையில், லத்திபா ஒரு தனி வில்லாவில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாக வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. லதீபா தான் அடைக்கப்பட்டிருக்கும் வில்லாவில் இருந்து ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பிபிசி ஊடகம் வெளியிட்டுள்ளது. வில்லாவின் பாத்ரூமில் இருந்துகொண்டு அந்த வீடியோவை அவர் பதிவு செய்திருப்பதாக தெரிகிறது. தனது விருப்பத்தின் பேரில் பாத்ரூமில் மட்டுமே அவர் தனியாக இருக்க முடியுமென தெரிகிறது. மற்ற கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

    சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் ரூ.11 கோடி மதிப்புடைய நகைகளை... திருடி இந்தியாவுக்கு அனுப்பிய தமிழக குருக்கள் சிங்கப்பூரில் கைது


    Vigneshkumar - /tamil.oneindia.com : சிங்கப்பூர்: கோயில் நகைகளை கையாடியதாக சிங்கப்பூர் நாட்டிலுள்ள மாரியம்மன் கோயிலின் தலைமை குருக்கள் மீது வழக்குப்பிதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நாட்டின் சவுத் பிரிட்ஜ் ரோட்டில் அந்நாட்டின் மிகவும் பழமையான மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. 194 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலில் அர்ச்சகராக இந்தியவைச் சேர்ந்த கந்தசாமி சேனாபதி தலைமை குருக்களாக இருந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை இவர் தலைமை குருக்களாக இருந்த போது கோவிலுக்கு சொந்தமான தங்க நகைகளை கையாடிதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

    இந்த நகைகள் வழக்கமாக கோயில் பூஜைகளின் போது பயன்படுத்தப்படும். இந்த நகைகளை அடகு வைத்த கந்தசாமி, சுமார் 1.40 லட்சம் சிங்கப்பூர் டாலர்களை தனது சொந்த காரணங்களுக்கு பயன்படுத்தி உள்ளார். இந்தப் பணத்தில் பெரும்பகுதியை அவர் பல்வேறு வங்கிகளை பயன்படுத்தி இந்தியாவுக்கு அனுப்பியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.   Singapore news link

    தோடர் பழங்குடியினத்தின் முதல் வழக்கறிஞர் நந்தினி.. பழங்குடிகளுக்கு சட்ட உதவிகள் இலவசம்!'

    nandhini with her father
    nandhini with her father
    vikatan.com/ஊட்டி அருகில் உள்ள தவிட்டுக்கோடு மந்துவை சேர்ந்த இளம்பெண் நந்தினி, தோடர் பழங்குடியினத்தின் முதல் வழக்கறிஞராகத் தடம் பதித்துள்ளார். ஊட்டியிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தவிட்டுக்கோடு மந்து (தோடர் பழங்குடிகள் வாழும் கிராமத்தை 'மந்து' என்றே அழைப்பர்). இந்தக் கிராமத்தில் தோடர் வளர்ப்பு எருமைகள் மற்றும் மலைக்காய்கறி விவசாயத்தில் ஈடுபட்டுவரும் ஸ்ரீகாந்த்-செண்பகவள்ளி தம்பதியின் மூத்த மகளான நந்தினி, தனது வாழ்நாள் லட்சியமான சட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் தோடர் பழங்குடி இனத்தின் முதல் வழக்கறிஞர் என்ற வரலாற்றுச்‌ சிறப்பைப் பெற்றுள்ளார்...நந்தினியை நேரில் சந்தித்தோம். 'பூத்துக்குளி' எனும் பூ வேலைப்பாடுகள் நிறைந்த தோடர்களின் பாரம்பர்ய போர்வையைப் போர்த்தியபடி வந்தார். விகடனின் சார்பாக நந்தினிக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தோம்.

    புதன், 17 பிப்ரவரி, 2021

    ரவுடி என்கவுண்டர்- போலீசாரை தாக்கி தப்பி ஓடியபோது அதிரடி . உதயநிதி மன்றத் தலைவர் தலையைத் துண்டித்தவர்

    பிரபல ரவுடி என்கவுண்டர்- போலீசாரை தாக்கி தப்பி ஓடியபோது அதிரடி
    கொல்லப்பட்ட ரவுடி கிருஷ்ணா

    .maalaimalar.com :பண்ருட்டி: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகரை சேர்ந்தவர் வீரா என்கிற வீரங்கையன் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு கொலை-கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. கடலூர் உழவர்சந்தை அருகே ரவுடி வீராவுக்கு சொந்தமான பழக்கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வீரா வீட்டுக்கு புறப்பட்டார்.
    அப்போது 10 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் வீராவை பின்தொடர்ந்து சென்றனர். இதனை வீரா கவனிக்கவில்லை.
    சுப்பராயலு நகர் பகுதியில் உள்ள ஒரு தெருவில் வீரா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அந்த மர்ம கும்பல் வீராவை சுற்றி வளைத்தது.உதயநிதி  மன்றத் தலைவர் தலையைத் துண்டித்தவர்  என்கவுன்ட்டர்!

    டிக்டாக் பிரபலத்திடம் பணம் பறிகொடுத்த ஆண்கள் .. வேற்று மதம் பொய் பெயர் .. போலி கல்யாணங்கள்

    Hemavandhana - tamil.oneindia.com : மயிலாடுதுறை: மீராவுக்கு 40 வயசாகிறது..

    மொத்தம் 5 கணவன்கள்.. இந்த விஷயம் தெரிந்ததுமே, அந்த 4வது கணவன் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.. ஸ்டிரைட்டா போலீஸ் ஸ்டேஷனுக்கே ஓடிப்போய் விட்டார்..!
    மயிலாடுதுறையை சேர்ந்தவர் பாலகுரு.. 27 வயசு ஆகிறது.. இவர் ஒரு டிரைவர்.. டிக்டாக் வீடியோவில்தான் முதன்முதலாக மீராவை பார்த்தார்.. மீராவின் அழகில் மயங்கி விழுந்துவிட்டார். நாளடைவில் இது காதலானது.. இருவரும் கல்யாணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தனர்..
    அதன்படியே திருமணம் நடந்தது.. அப்போதுதான், மீரா என்பது ஒரிஜினல் பெயர் இல்லை, அவர் பெயர் ரஜபுன்னிஷா என்பதும், அவர் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது இதனால் அதிர்ந்து போன பாலகுரு, மீராவின் மீதுள்ள காதலால் அந்த பொய்யை மறந்து வாழ ஆரம்பித்தார்.
    அப்போதுதான் இன்னொரு ஷாக் அவருக்கு வந்தது.. தான் வேலைக்கு போனபிறகு, வீட்டுக்கு யார் யாரோ ஆண்கள் வந்து போவது தெரியவந்தது..
    இதை பற்றி கேட்டதற்கு தகராறு வெடிக்க ஆரம்பித்தது.. மீரா எந்த கேள்விக்கும் சரியாக பதில் சொல்லாமல் மழுப்பினார்.. ஒருகட்டத்தில் அம்மா வீட்டுக்கு போவதாக சொல்லி கிளம்பி சென்றுவிட்டார்.

    ராகுல் காந்தி: "என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன்

    ராகுல் காந்தி
    BBC :எனது தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது உருக்கமாகப் பேசினார். தமிழ்நாட்டில் 1991ஆம் ஆண்டு மே மாதம் ராகுல் காந்தியின் தந்தையும் இந்திய முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரை விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் கொலை செய்ததாக நடந்த வழக்கில் சாந்தன், நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் ஆயுள் சிறை தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறையில் உள்ளனர். அவர்களின் விடுதலைக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பரவலாக கோரிக்கைகள் வலுத்து வரும் வேளையில், தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக அரசும், எதிர்கட்சியான திமுகவும் அந்த கோரிக்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஆனாலும், இது தொடர்பாக குடியரசு தலைவரே இறுதி முடிவு எடுப்பார் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

    கனலரசன் கைது ..`ராமதாஸின் தூண்டுதலே காரணம்..!’ -சொல்கிறார் காடுவெட்டி குரு மனைவி

    vikatan - க.குணசீலன் : அன்புமணியின் வளர்ச்சிக்கு நாங்க தடையாக இருப்போம் என்கிற காரணத்தால் ராமதாஸ் எங்க குடும்பத்தினரை பல வகையில் சித்ரவதை செய்வதாக காடுவெட்டி குரு குடும்பத்தின் தரப்பில் குற்றம் சாட்டி வந்தனர். அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் அமைந்துள்ள காடுவெட்டி குருவின் சமாதிக்கு வந்த அவரின் மனைவி சுவர்ணலதா, “என் மகன் கனலரசன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதற்கு ராமதாஸ் தான் காரணம். அவரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த கைது நடந்துள்ளது. உடனடியாக அவனை விடுதலை செய்யவில்லை என்றால், நான் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவேன்” என எச்சரித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்னியர் சங்க தலைவராக இருந்தவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான காடுவெட்டி குரு, கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து குரு குடும்பத்தினருக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

    அதிமுக 171, பாமக 21, பாஜக 20, தேமுதிக 14, தமாகா 5, இதர காட்சிகள் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவதாக உத்தேச பட்டியல்

    Image result for அதிமுக பாமக பாஜக தேமுதிக

    Rayar A - tamil.oneindia.com : சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச வேட்பாளர் பட்டியல் என்று ஒரு பட்டியல் உலா வருகிறது. இந்த உத்தேச பட்டியலில் பாமகவுக்கு 21 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.செங்கல்பட்டு, காட்பாடி, செஞ்சி, பண்ருட்டி உள்பட 21 இடங்களில் பாமக போட்டியிடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 171 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக 20 இடங்களில் போட்டியிடுவதாக இந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் களைகட்டியுள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணியையும் இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது தெரிந்த ஒன்றுதான். வி.சி.,க. இடது சாரி உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெரும் என தெரிகிறது. 

    பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக, தேமுதிக கூடுதல் சீட் கேட்டு காத்திருக்கின்றன. இந்த நேரத்தில் பாமக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக பாமகவுடன் தமிழக அமைச்சர்கள் பலகட்டம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    108 ஆடுகள் வெட்டி சீமான் கறி விருந்து

    dhinamalar :சிவகங்கை : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகன்
    Seeman,சீமான்,கறி விருந்து ,நாம் தமிழர் கட்சி

    , பிரபாகரனின் காதணி மற்றும் முடிகாணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. குலதெய்வ கோவிலான சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே, முடிக்கரை வீரமாகாளியம்மன் கோவிலில் நடந்த விழாவில், பங்கேற்ற கட்சியினர், தொண்டர்களுக்கு சீமான், 108 ஆடுகள் வெட்டி கறிவிருந்து அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விவசாயி மட்டும் தான், உற்பத்தி செய்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை.   இந்த நிலை மாறாத வரை, அரசு பயிர்கடன் தள்ளுபடி செய்தாலும், விவசாயிகள் மீண்டும் கடனாளியாகவே மாறுவர்.சசிகலா வருகை, அ.தி.மு.க.,வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.     நாம் தமிழர் கட்சி எட்டு கோடி தமிழர்களிடம் மட்டுமே, கூட்டணி வைத்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், தமிழகம் வெற்றி நடைபோடவில்லை. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, தமிழகம் வெற்றி நடைபோடும்.இவ்வாறு அவர் கூறினார்

    கொரோனாவால் 24 மணி நேரத்தில் 18 மாநிலங்களில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை

    dailythanthi.com : புதுடெல்லி, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்தியா தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. வலுவான சுகாதார கட்டமைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் சுகாதார பணியாளர்களாலும் கொரோனா மீட்பில் இந்தியா தொடர்ந்து உலகளவில் முதல் இடத்தை தக்கவைத்து வருகிறது. நேற்றும் கூட 24 மணி நேரத்தில் நாட்டில் 11 ஆயிரத்து 805 பேர் இந்த வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடுகளுக்கு திரும்பி இருக்கிறார்கள்.

    கேரள மாநிலத்தில் 5,073 பேரும், மராட்டிய மாநிலத்தில் 3,105 பேரும் கொரோனா வைரசின் கோரப்பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.   நமது நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 33 ஆயிரத்து 25 ஆக உயர்ந்து இருக்கிறது.

    தமிழகம் எங்கெங்கும் வட இந்தியர்கள்! அடையாளம் இழக்கும் தமிழ்நாடு!

    May be an image of one or more people, people standing and outdoors
    தமிழகத்தின் வேலைவாய்ப்புகள், வணிகம், நிலம் அனைத்தும் வட இந்தியர் 

     

    சாவித்திரி கண்ணன் : · தமிழகம் தவிர வேறெந்த மாநிலத்திலும் இப்படியான ஒரு சூழல் கிடையாது..! ஜெயலலிதாவும், கருணாநிதியும் அடுத்தடுத்து மரணமடைந்த நிலையில் – மக்கள் செல்வாக்கோ, ஆளுமையோ இல்லாத ஒ.பி.எஸ்-இ.பி.எஸ் ஆகியோர் தலைமைக்கு தமிழக அரசின் அதிகாரம் கைமாறியதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் 90 முதல் 99.5 சதவிகிதம் வட மாநிலத்தவர் நியமனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேலைவாய்ப்புகள், வணிகம், நிலம்…அனைத்தும் வட இந்தியர் வசம் சென்று கொண்டுள்ளதை கவனப்படுத்துகிறது இந்த கட்டுரை! ஆனால், இது குறித்த தமிழக மக்களின் அதிர்ச்சி, கவலை, அச்சம் எதையுமே மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளவே தயாரற்ற நிலையும் நிலவுகிறது. 2017-ஆம் ஆண்டுமுதல் ரயில்வே, அஞ்சல்துறை,என்.எல்.சி,பாரத மின்மிகு நிலையம், வருமானவரித் துறை,உளவுத் துறை,வங்கிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய அரசின் கீழ் வரும் பொதுப்பணித்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு கிடைக்காமல் வட மாநிலத்தவர்களுக்கே அதிகம் கிடைத்து வருகிறது.

    கொள்கை சார்ந்த அரசியலை மக்கள் புரிந்து கொள்கிறார்களா? Are we deserved for Ideological politics!!

    Kandasamy Mariyappan - திராவிட ஆய்வு : · தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்திய ஒன்றியத்திற்கே திராவிட சித்தாந்தம் மிகவும் முக்கியமான ஒன்று, மாற்று கருத்தில்லை! ஆனால், திமுக தலைவர் திரு. முக. ஸ்டாலின், பொதுச்செயலாளர் திரு. துரைமுருகன் மற்றும் உதயநிதி அவர்கள் வேலுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த, தங்களை முற்போக்குவாதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர்... அய்யோ திமுக கொள்கையை விட்டு விலகி சென்று விட்டது! இது திமுகவிற்கும் நல்லதில்லை, தமிழ்நாட்டிற்கும் நல்லதில்லை என்று பதிவிட்டு பேசி வருகின்றனர்! மேலும், திமுக Soft Hindutvaவை கடைபிடிக்கிறது என்ற குற்றச்சாட்டையும் வைக்கின்றனர்!
    இதனை எப்படி பார்ப்பது!
    உண்மையில் இந்த மண், கொள்கைக்கான மண்தானா!?
    Are we deserved for Ideological politics!!???!!!
    காரணம், கொள்கை என்பது ஒரு கட்சி மற்றும் அதன் தலைவர்கள் மட்டுமே கடைபிடித்தால் போதுமா! மக்களும் அதனை உள்வாங்கிக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் வாழ்ந்து காட்ட வேண்டாமா!
    தமிழ்நாட்டில் நடந்தது மற்றும் நடப்பது என்ன!!??
    கொள்கை, புண்ணாக்கு என்று வாழ்ந்து வந்த கலைஞரையும், திமுகவையும் அழிக்க வேண்டும் என்ற வெங்கட்ராமன்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வண்ணம் கலைஞர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடமும், மத்திய அமைச்சரவையிலும் திரு. ராமச்சந்திரன் கொடுத்திருந்த பொழுதும், தனது தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்று தெரிந்த பிறகும்...
    இந்த நாட்டுக்கே ஒரு பிரச்சினையாக இருந்த எமர்ஜென்சியை...
    அச்சுத மேனன் தலைமையிலான கேரள கம்யூனிஸ்ட் கட்சியே எதிர்க்காத போதும், கொள்கை, புண்ணாக்கு என்று ஒற்றை மனிதராய் எதிர்த்து நின்று ஆட்சியை பறிகொடுத்தவர் கலைஞர்!

    செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

    கிரண்பேடி பதவி நீக்கம் - நாராயணசாமி வரவேற்பு! ..புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை

    May be an image of 2 people and text that says 'புதிய தலைமுறை உண்மை னுக்கு ன் BREAKING NEWS புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா? புதுச்சேரி அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர் அமைச்சர் கந்தசாமி அரசை கவிழ்க்க சதி நடப்பதாக கூறி, அமைச்சரவையை தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்ய முதலமைச்சர் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது - Puthiya Thalaimural TV PTTVOnlineNews Ûumurai 16/02/2021 dishty Dairtet SUN 一® jongioon T้ดอาม புதிய தலைமுறை BREAKING NEWS உண்மை புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பு வகிப்பார் குடியரசுத் தலைவர் அறிவிப்பு Puthiya Thalaimural V PTTVOleNews Ûr Daltal 16/02/2021 Puthyathalaimural'
    நக்கீரன் செய்திப்பிரிவு : பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ச்சியாக ஆளாகி வந்த புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த புதுவை துணைநிலை ஆளுநர் பதவியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஆளுநரின் பதவி நீக்கத்தை அம்மாநில எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியினர் வரவேற்றுள்ளார்கள். இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரி மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கிரண்பேடி தன்னிச்சையாகச் செயல்பட்டார். எங்களின் தொடர் போராட்டத்திற்குப் பின் கிரண்பேடியை மாற்றியதை வரவேற்கிறோம்" என்று தெரிவித்துள்ளா

    தேவேந்திர குல வேளாளர்கள்- மத்திய அரசு விளக்கத்தின் பின்னணி!

    minnambalam : தங்கள் இனத்தில் இருக்கும் ஏழு பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என்று சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலான கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவந்துள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை அரசு விழாவில் பேசிய பிரதமர் மோடியும் இதுபற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். ஒரு அரசு விழாவில் தமிழ்நாட்டின் ஒரு சமுதாயத்தைப் பற்றி பத்து நிமிடங்கள் நாட்டின் பிரதமர் பேசுவது இதுவே முதல் முறை. மூன்று முறை உரத்த குரலில் "தேவேந்திர குல வேளாளர் " என்று பிரதமர் மோடி அழைத்ததை அடுத்து அந்த சமுதாயப் பிரமுகர்கள் உருகிவிட்டார்கள். பிரதமர் மோடி பொதுப்பெயரை அறிவித்துவிட்ட நிலையில் நாடாளுமன்றத்திலும் அந்த மசோதா விரைவில் நிறைவேற இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 15) மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.      “ ஏழு உட்பிரிவுகளை உள்ளடக்கிய சமுதாயத்துக்கு தேவேந்திர குலவேளாளர் என்று பிரதமர் பெயர் சூட்டியதை அடுத்து. அவர்களை பட்டியல் பிரிவு (எஸ்சி) வெளியேற்றப் போவதாகவும் அவர்களை ஓபிசி பட்டியலில் சேர்க்கப் போவதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால் அப்படி ஒரு திட்டமும் அரசிடம் இல்லை. அவர்கள் தொடர்ந்து பட்டியல் வகுப்பிலேயே நீடிப்பார்கள்” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    டூல்கிட் என்றால் என்ன? கிரெட்டா துன்பெர்க் ஷேர் செய்த டூல்கிட்டில் என்ன இருந்தது? யார் இந்த திஷா ரவி? இவர் கைதானது ஏன்?

    Veerakumar - tamil.oneindia.com :டெல்லி: இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பர்க் ட்விட்டரில் பகிர்ந்த டூல்கிட் தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த மாணவியும், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளருமான திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை அரங்கேறியது. இந்த கைதைத் தொடர்ந்து, டூல்கிட் என்றால் என்ன? ஏன் அது குற்றச் செயலாக பார்க்கப்பட்டது, என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 21 வயதாகும் திஷா ரவி கைது செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்று டெல்லி போலீஸ் கமிஷனர் ஸ்ரீவத்சவா இன்று அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் திஷா கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தில், கிரெட்டா ஷேர் செய்த டூல்கிட்டை தான் உருவாக்கவில்லை என தெரிவித்தார். திஷா குறிப்பிட்ட டூல்கிட் கிரெட்டா டுவிட்டர் பக்கத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டதும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது

    சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்- உயர்நீதிமன்றம்

    maalaimalar : சென்னை: 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிவகங்கை
    தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தம்மை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட மூவாயிரத்து 354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை இறுதியாக நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்த நிலையில், அனைத்து தரப்பு விசாரணையும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே முடிவடைந்தது. இதையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    அப்போது நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, 2009 ஆம் ஆண்டு சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும். மேலும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி ராஜகண்ணப்பனின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    ப.சிதம்பரத்தை எதிர்த்து வழக்கு... 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு!

     

     nakkeeran : 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்ற வெற்றியை எதிர்த்து,  அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கில்,  சென்னை உயர்நீதிமன்றம் இன்று (16 பிப்.) தீர்ப்பு அளிக்கிறது.   கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பனை விட, 3,354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு, கடந்த 10 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    வைகோ : திமுக இணைந்து போராடுவது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம் .. கோவை நிதியளிப்பு விழாவில்

    tamil.samayam.com : சட்டமன்ற தேர்தலுக்காக மதிமுக நிர்வாகிகள் பொதுமக்களிடம் நிதி திரட்டி வருகின்றனர்.
  • கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 80.88 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது
  • கோவை சித்தாபுதூர் சாலையில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் சார்பில் தேர்தல் நிதியளிப்பு விழா நடைபெற்றது. மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி, கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  கோவை மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவிடம் முதல்கட்ட தேர்தல் நிதியாக மொத்தம் ரூ.80.88 லட்சம் ரூபாயை அளித்தனர். இதில் அதிகபட்சமாக கோவை மாநகர் மாவட்டம் சார்பாக ரூ.30 லட்சத்து 88 ஆயிரம் வழங்கப்பட்டது.

    ஒன்றியத்தை ஒரு நாடாக்கக் கோரும் முற்றுருரிமை!

    சிறப்புக் கட்டுரை: ஒன்றியத்தை ஒரு நாடாக்கக் கோரும் முற்றுருரிமை!

    minnambalam : பாஸ்கர் செல்வராஜ் பாகம் 9    :   கொரோனா முடக்கம் ஏற்கனவே இந்தியச் சில்லறை சந்தையில் இருந்த வியாபாரிகளைப் பெருமளவு வியாபாரம் செய்ய விடாமல் தற்காலிகமாக முடக்கியது. இந்த காலத்தில் அவர்களின் இடத்தை இணைய வர்த்தகத்தின் வழியில் பிடித்த பெருநிறுவனங்கள் இப்போது அதிரடியாக அந்த இடத்தை விரிவுபடுத்தி வியாபாரிகளை நிரந்தரமாக வெளியேற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் இடத்தை அமேசான், வால்மார்ட் - ஃப்ளிப்கார்ட், ஜியோ – கூகுள் - முகநூல் ஆகிய மூன்று பெருநிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டு கைப்பற்றி வருகின்றன. 1.2-1.4 கோடி கடைகள் செயல்பட்டு வரும் இந்தச் சந்தையை இந்த மூவரும் கட்டுப்படுத்தும் வகையில் ஒருமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி சில நிறுவனங்களிடம் சந்தை ஒருமுகப்படும்போது இந்த சந்தை உள்ள நிலப்பரப்புக்குள் பொருட்களை உற்பத்தி செய்யவும், கொள்முதல் செய்யவும், விற்பனை செய்யவும் எந்த தடையுமற்ற கட்டமைப்பைக் கோருகிறது. நடைமுறையில் இருக்கும் எல்லா தடைகளையும் நீக்க சொல்கிறது.

    அழிவின் விழிம்பில் உள்ள பனை வளம்

    May be an image of palm trees and nature
    Jaffna Fashion : · அழிவின் விளிம்பில் பனை மரங்கள். உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்த வரை, அதனால் வருமானம் கிடைத்தவரை பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. அதன்பிறகு, பனை மரங்களை கைவிட்டு விட்டனர் விவசாயிகள். வறட்சி காரணமாக பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடிதான் உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன.
    பனையில் ஆண், பெண் என 2 வகை உள்ளன. பெண் பனையை பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை எனக் குறிப்பிடுவது வழக்கம். பனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 15 அடி உயரம் வரை வளர்க்கிறது. இந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பூக்கும். அப்போது தான் ஆண் பனை, பெண் பனை எது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

    இலங்கை, நேபாளத்திலும் கிளைகள்.... சர்வதேச கட்சியாகிறதாம் பாஜக.... அமித்ஷா கூறியதாக திரிபுரா முதல்வர்

         theekkathir.in : அகர்தலா: பாஜக-வை இந்தியாவில் மட்டுமல்ல, நேபாளம் மற்றும் இலங்கையிலும் விரிவுபடுத்த அமித் ஷா திட்டமிட்டார் என திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் குமார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்லப் தேவ் குமார் என்றாலே எதையாவது உளறிக்கொட்டக் கூடியவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும்.“மகாபாரத காலத்தில் சேட்டிலைட், இண்டர்நெட் வசதிகள் இருந்தன; சிவில் என்ஜீனியரிங் படித்தவர்கள் மட்டுமே சிவில் சர்வீஸஸ் தேர்வுகளை எழுத வேண்டும்; குளத்தில் வாத்துக்கள் நீந்துவதால், தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும்; டயானா ஹெய்டனுக்கு உலக அழகிப் பட்டம் கொடுத்திருக்கக் கூடாது” என்று எப்போதுமே ‘அறிவுப்பூர்வமாக’ பேசுபவர் பிப்லப் தேவ் குமார்.

    யாழ்ப்பாணத்திலும் இந்தியாவிலும் தியாகப் பணி புரிந்த மாதரசி மங்களம்மாள்! (1884 – 1971)

    May be an image of 1 person
    Maniam Shanmugam : · யாழ்ப்பாணத்திலும் இந்தியாவிலும் தியாகப் பணி புரிந்த மாதரசி மங்களம்மாள்! யாழ்ப்பாணத்தில் பிறந்த பெண்ணொருவர் காந்தியவாதியாகவும், பெண் விடுதiவாதியாகவும், இதழியலாளராகவும், இந்தியாவில் அரசியல்வாதியாகவும் வாழ்ந்த வரலாறு நமது இன்றைய தலைமுறையினர் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால் அப்படியொருவர் வாழ்ந்திருக்கிறார். அவரது பெயர் மங்களம்மாள் மாசிலாமணி (1884 – 1971) யாழ்ப்பாணத்திலுள்ள ஓட்டுமடம் பகுதிக்கு நான் செல்லும் போதெல்லாம் ‘பீ.ஏ.தம்பி ஒழுங்கை’ என்ற வீதியால் செல்வதுண்டு. அப்பொழுதெல்லாம் அந்த வீதிக்கு அந்தப் பெயர் வந்த காரணத்தை அறிந்திருக்கவில்லை. ஆனால் மங்களம்மாளின் வாழ்க்கை வரலாற்றைப் படித்த பின்னர்தான் அதை அறிந்து கொண்டேன்.
    அந்த வீதியின் பெயருக்கு உரியவரின் பெயர் கதிரவேலுப்பிள்ளை. அவர் மங்களாம்மாளின் தாய்வழிப் பாட்டனார். 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர் ஒரு வழக்கறிஞர் என்பதுடன், அந்தக் காலத்தில் மிகச் சிலரே அரிதாகப் பெற்றிருந்த பீ.ஏ. பட்டத்தையும் பெற்றிருந்தார். அதன் காரணமாக, மக்கள் அவரை “பீ.ஏ. தம்பி” என அழைத்தனர். அதன் காரணமாகவே அந்தப் பெயர் அவர் வாழ்ந்த வீதிக்குப் பின்னர் சூட்டப்பட்டது.

    திங்கள், 15 பிப்ரவரி, 2021

    முதலில் பெண் இனம் தான் தோன்றியது.. உலக மதங்களின் மீதும் தாக்குதல் தொடுத்த பரிணாம வளர்ச்சி!

    May be an image of 3 people

    Sivakumar Shivas : · ஒட்டுமொத்த உலக மதங்களின் மீதும் தாக்குதல் தொடுத்த பரிணாம வளர்ச்சி விளக்கப் படம்! ஆண் பெண் பால் வித்தியாசமில்லாத உயிரினங்களில் இருந்து முதல் உருவாகிய பால் இனம் பெண்! பின்பு தான் ஆண் என்ற வேலைக்காரா காவல்காரா இனம்! வாழ்க நீ எம்மான் டார்வின்!.. 

     Ahmed Muhammed : கற்பனை ஓவியங்கள் ஆதாரங்களாகாது..டார்வினிசம் இன்னும் ஃபிக்ஷன் தானே தவிர ப்ரூவ்ட் கிடையாது... டார்வின் கொள்கையும் நம்பிக்கை தான் அறிவியல் கிடையாது சகோதரரே...

     Sivakumar Shivas : Ahmed Muhammed நம்ப முகமது கழுதை மேலே ஏறி ஏழு வானம் கடந்து போயி அல்லா சாமியை பார்த்துட்டு திரும்பி வந்தது? Fiction ஆ? Theory ஆ? Proven truth ஆ? .. 

    Ahmed Muhammed : Sivakumar Shivas ஹாஹா நாங்க நம்பிக்கை னு தானே சொல்றோம்... 

    பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும், இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்!

    Malathi Maithri : மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீத்திக் கொள்பவர்கள் யாரிடமாவது பதில் இருக்கிறதா?
    1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?
    2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?
    3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்?
    4. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட. அல்லது பத்தாயிரம் கோடிகளை ஒரு கட்சிக்கு வாரி வழங்கி டொனேஷன்கள் தருமளவு பணக்காரர்கள் ஏன் முன்வந்தார்கள் ?
    5. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?
    6. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன், பாஜக மீது குற்றம் கூறியவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் பாய்ந்து பாய்ந்து நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகளும் அமைதியாவது எப்படி?

    Dr. ஷாலினி நல்ல மனநல மருத்துவர் ஆனால் சிறந்த அரசியல் விமர்சகர் அல்ல.

    May be an image of 1 person
    ஆலஞ்சியார் :· டாக்டர் ஷாலினி. மனநல மருத்துவர்.. மனித மனம் குறித்து அறிந்தளவிற்கு அரசியல் மற்றும் பொது சிந்தனை குறித்து அறிந்திருக்கவில்லை .. சமீபத்திய கருத்துகள் நிறைய விமர்சனங்களை தருகிறது .. எதிர்கருத்துகளை சொல்லவே கூடாதா என்றால் சொல்லலாம் கருத்தை எதிர்ப்பை பதிவு செய்வதற்கு முன் அதுகுறித்து முழுமையாக அறிந்திருக்கவேண்டும் . விவசாயிகள் போராட்டம் குறித்து ஏன் வாயை திறக்கவில்லை என தயாநிதியை கேள்வி கேட்கிறார் .. எனது தொகுதி எனது பிரதிநிதி என் சார்பாக அவர்தானே கேட்கவேண்டும் என்கிறார்..
    தன் எம்பியின் செயல்பாடுகளை கவனிக்காமல் இருப்பது தவறில்லை ஆனால் கேள்வி கேட்கும் முன் அவர் பேசியிருக்கிறாரா என தெரிந்துக்கொண்டிருக்கலாம் .. எது குறித்தும் எவர் மீதும் விமர்சனம் செய்வதற்குமுன் குறைந்தபட்ச அதுகுறித்து அவர் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கேள்வி எழுப்பவேண்டும் ..
    அவர் பேசினால் போதுமா மற்ற எம்பிகள் ஏன் பேசவில்லை என்கிறார் ..
    நாடாளுமன்ற நடைமுறைகள் .. எந்தெந்த கட்சிக்கு எத்தனை மணிதுளிகள் தரப்படும் ..கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்ப்போல் நிமிடங்கள் ஒதுக்கபடும் .. திமுகவிற்கு ஒதுக்கபடும் நிமிடங்களுக்கு சில உறுப்பினர்கள் மட்டுமே பேசமுடியும் ..அதோடு பிற பிரச்சனைகள் குறித்தும், தங்கள் தொகுதிநலன் குறித்தும் மாநில நலன் இப்படி பல்வேறு விடயங்களை பேச வேண்டியிருக்கும் .. Dr. ஷாலினி
    நல்ல மனநல மருத்துவர் ஆனால் சிறந்த அரசியல் விமர்சகர் அல்ல.

    சசிகலாவை ஓரங்கட்டுவதில் வெற்றி பெறுகிறாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

    Image result for சசிகலா எடப்பாடி பழனிசாமி

    .Hemavandhana - tamil.oneindia.com :  சென்னை: பஞ்ச தந்திரங்களை கையில் எடுத்து, அதை நாசூக்காக வென்று முடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி...
    சசிகலாவுக்கு எதிராக முதல்வர் முன்னெடுத்து வரும் ஒவ்வொரு அஸ்திரமும், தனக்கு சாதகமான சூழலையே களத்தில் உருவாக்கி வருகிறது..!
    "சசிகலா வருவதற்கு முன்பிருந்தே முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒருவித பயம் வந்துவிட்டது.. அதனால்தான் ஜெயலலிதா நினைவிடத்தை, அவரது வருகையன்று அவசர அவசரமாக திறந்தார்,
    பிறகு சென்னைக்கு சசிகலா வருவதாக தெரிந்ததுமே சூட்டோடு சூட்டோக உடனே மூடிவிட்டார். தன்னுடைய வேலூர் பிரச்சாரத்தையும் அன்றைய தினம் ரத்து செய்துவிட்டார்..
    சசிகலா என்ற பேரையே தன் பேச்சில் எடுக்காமல் பிரச்சாரம் செய்து வருகிறார்.. அமைச்சர்களை யாரும் சசிகலாபற்றி பேசக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு போட்டுள்ளார்.. அப்படியே யாராவது நடந்து கொண்டாலும் அவர்களை கண்காணிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்...
    இளவரசி, திவாகரன் சொத்துக்களை முடக்குகிறார்.. பல வகைகளில் நெருக்கடி தந்து கொண்டே இருக்கிறார்" என்ற பரபரப்பு பேச்சுக்கள் முதல்வரை வட்டமடித்து கொண்டே இருக்கின்றன

    பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்: துணை முதல்வர் ஓபிஎஸ் புகழாரம்

    ops-speech
    hindutamil.in : பிரதமர் மோடி இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் என்று சென்னையில் நடந்த அரசு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டினார். சென்னையில் நேற்று நடைபெற்ற மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்கம் உட்பட பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இவ்விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுப் பேசும்போது கூறியதாவது: மத்திய - மாநில அரசுகளின் கூட்டுமுயற்சிக்கும் இணக்கத்துக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் நல்லதொரு உதாரணம். மத்திய பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

    மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் பல வளர்ச்சிகளை காண முடியும் என்பதற்கு இங்கு தொடங்கி வைக்கப்படும் பல்வேறு திட்டங்களே எடுத்துக்காட்டு. இந்த ஆக்கப்பூர்வமான கூட்டுசெயல்பாடு தமிழகத்தை இன்னும் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும்.

    நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ இன்று நள்ளிரவு முதல் கட்டாயம்

    நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ இன்று நள்ளிரவு முதல் கட்டாயம்
    dailalythanthi :புதுடெல்லி,சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுவதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. நேரமும் வீணாகிறது.எனவே, இப்பிரச்சினையை தவிர்க்க மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் ‘பாஸ்டேக்’ முறை, கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர்கள் கிடைக்கும். குறிப்பிட்ட தொகை செலுத்தி அந்த ஸ்டிக்கர்களை வாங்கி வாகனங்களில் ஒட்டிக்கொள்ள சுங்கச்சாவடிகளை வாகனம் கடக்கும்போது, சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு கருவி மூலம் அந்த வாகனத்துக்கான கட்டணம் தானியங்கி முறையில் கழித்துக்கொள்ளப்படும். இதனால், சுங்கச்சாவடிகளில் நிற்காமல் பயணத்தை தொடரலாம்.

    ‘பாஸ்டேக்’ முறைக்கு வாகன உரிமையாளர்கள் மாறுவதற்கு கால அவகாசம் அளிக்கும் வகையில், இதை கட்டாயம் ஆக்குவதற்கான தேதி அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.

    வேளாண் சட்டத்தை எதிர்த்த இளம் செயற்பாட்டாளர் திஷா ரவி கைது!

    வேளாண் சட்டத்தை எதிர்த்த இளம் செயற்பாட்டாளர் திஷா ரவி கைது!

    Minnambalam : மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து பகிர்ந்த ட்வீட் தொடர்பாக பெங்களூருவுவைச் சேர்ந்த காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் 21வயதான திஷா ரவி என்கிற சமூக செயற்பாட்டாளரை டெல்லி போலீசார் இன்று (பிப்,14) கைது செய்துள்ளனர்.   திஷா ரவி தனி நபர் இல்லை. "உங்கள் தலைமுறை வயது மூப்பால் இறந்து போவீர்கள். ஆனால், எங்கள் தலைமுறை காலநிலை மாற்றத்தால் கொண்டுவரும் பேரழிவுகளால் இறந்து போவோம்" என எழுந்து நின்று ஒவ்வொரு இளைஞருக்காவும் குரல் உயர்த்தியவர்.  கடல், மண், காற்று, ஆறு என எல்லாவற்றையும் மாசாக்கும் பெருமுதலாளிகள் இவற்றையெல்லாம் பாதுகாத்து அடுத்த தலைமுறை பிள்ளைகள் பயன்படுத்த குரல் கொடுத்த திஷா ரவியை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    கமல் உள்ளே வருவாரா; காங்கிரஸ் வெளியே போகுமா? திமுகவுக்குள் நடக்கும் திரைமறைவு பேச்சுவார்த்தை!

    minnambalam : மக்கள் நீதி மய்யம் பொதுக்குழுவில் கமல் பேசியதாக எந்தக் காணொளியும் வெளியில் வரவில்லை; ஆனால் உள்ளே அவர் பேசியதாக, சிலர் கூறியதாக பல தகவல்கள் வெளியாகின.
    அதில் முக்கியமானது, அவர் திமுகவை கடுமையாக விமர்சித்தார் என்பதுதான்.
    பொதுக்குழு கூடுவதற்கு முன்பாக, திமுகவை அவர் இவ்வளவு காட்டமாக விமர்சித்ததில்லை என்பதால் அவர் இந்தத் தேர்தலிலும் தனித்தே களம் காண்பார் என்பதாகத்தான் அவருடைய அபிமானிகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
    உள்ளே கமல் அப்படிப் பேசினாலும் தேர்தல் நெருங்கும் போது அவர் என்ன செய்வார் என்பது குறித்து யாராலும் யூகிக்க இயலவில்லை.
    அதேநேரத்தில் இந்தத் தேர்தலில் கமல் என்ன செய்ய வேண்டுமென்று தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் நினைக்கின்றன என்பது பற்றி பல்வேறு தகவல்களும் செவிகளில் வந்து விழுகின்றன.
    திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது, இழுபறியாகிக் கொண்டிருக்கிறது, அவர் அதைச் சொன்னார், இவர் இதைச் சொன்னார் என்று தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகளுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகள் பற்றித்தான் ஊடகங்களில் பலவிதமான யூகங்கள் உலா வருகின்றன.

    பண்பாட்டுப் படையெடுப்பின் பக்கவிளைவே நரபலிகள்

    May be an image of text that says 'பண்பாட்டுப் படையெடுப்பின் பக்க விளைவே நரபலிகள்! urtime. மஞ்சை வசந்தன்'
    May be an image of 2 people
    May be a black-and-white image of 2 people and text that says 'அலேக்யா சாய் திவ்யா'
    Manjai Vasanthan : · பண்பாட்டுப் படையெடுப்பின் பக்கவிளைவே நரபலிகள். நரபலி என்பதே பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாய் நிகழ்த்தப்படும் படுகொலை. உலகில் தமிழர்களுக்கென்று ஓர் உயர்ந்த பண்பாடு உண்டு. தமிழினம் தொல்லினம் என்பதால் அவர்கள் பகுத்தறிவின்பாற்பட்ட, இயற்கையோடு இயைந்த மனிதநேயமுடைய சமத்துவ வாழ்வை வாழ்ந்தவர்கள். தன்னை ஒத்த மனிதர்களை மட்டுமின்றி மற்ற உயிர்களையும் நேசித்த உயிர் நேயர்கள். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். புறாவைக் காப்பாற்ற தன் தொடையை அறுத்துக் கொடுத்தான் சிபி மன்னன். முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி. பகுத்தறிவுக்கு இவை ஏற்புடைய செயல்கள் அல்லவென்றாலும் அவர்களின் உயிர்நேயம் இங்கு உய்த்து உணரத்தக்கது. தமிழர்க்கு கடவுள் நம்பிக்கையில்லை. அவர்களிடையே நன்றியின்பாற்பட்ட வழிபாடு மட்டுமே உண்டு. தனக்குப் பயன்படுபவற்றை மதித்து வணங்கினான். அப்படி வணங்கும்போதுகூட பலியிடும் வழக்கம் தமிழர்க்கு இல்லை.

    ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

    தமிழ்நாட்டை கொள்ளை அடிக்க ஜாக்கி வாசுதேவ் கன்னக்கோல் காவுகிறான் மக்களே விழித்து கொள்ளுங்கள்

    ஜாக்கி தன் மனைவியை கொலை செய்தவர் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது
    https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-0/p526x296/150371846_1871402219702181_456361879803592067_o.jpg?_nc_cat=109&ccb=3&_nc_sid=730e14&_nc_ohc=SdKWAQ45qS0AX8VzGzO&_nc_ht=scontent-yyz1-1.xx&tp=6&oh=f18461e3c525b6c059983c32b1b5c44c&oe=604DD71D

     

    Nata Rajan  :  கன்னக்கோலும் ஜக்கி வாசுதேவ் என்ற திருட்டு பரதேசியும்!
    அந்தக் காலத்தில், மிகவும் இருட்டாக உள்ள இரவு நேரத்தில் கொள்ளையர்கள் திருடச் செல்வார்கள். அப்போது,
    தாங்கள் எந்த வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்தார்களோ, அவ்வீட்டின் சுவற்றில் ஓட்டையிட்டு அதன் வழியாக உள்ளே நுழைந்துசென்று கொள்ளையடிப்பார்கள்.
    அவ்வாறு திருடர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க வீடுகளில் உள்ளோர் எச்சரிக்கையாக விழித்திருப்பர். இந்தச் சூழலில் எவ்வாறு வெற்றிகரமாகக் கொள்ளையடிப்பது?
    அதற்காக, கொள்ளையர்கள் ஒரு தந்திரத்தைக் கையாள்வார்கள். ஒரு வீட்டின் சுவற்றில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு ஓட்டையிட்டபின், ஒரு கருப்பான பழைய சட்டி அல்லது சிறிய பானையை, ஒரு நீளமான கோலில் மாட்டி மெதுவாக அந்த ஓட்டை வழியே, நுழைப்பர். கன்னங்கரிய அந்த இருட்டில்,

    May be an image of one or more people and text

    வீட்டின் உள்ளே இருப்போர், திருடன்தான் தனது தலையை நுழைக்கிறான் என்று எண்ணி, தமது கையில் உள்ள கழியால் ஒரே அடியாக வேகமாக அடிப்பர். அவ்வாறு அடித்த அடியில் திருடர்களால் நுழைக்கப்பட்ட பானை சுக்குநூறாக உடையும்.

    கஜினி முகம்மதுவுக்கு சோம்நாத் கோயிலும் உண்மையில் என்னதான் நடந்தது? தயானந்த சரஸ்வதியின் "சத்தியர்த்தப் பிரகாரம் நூலிலிருந்து

    May be an illustration of 1 person, beard and text
    கஜினி முகம்மது
    May be an image of temple and outdoors
    சோம்நாத் கோவில்
    Sundar P : கஜினி முகம்மதும் சோம்நாத் கோவிலும்: கஜினி முகம்மது சுமார் 20,000போர் வீரர்களுடன் சோமநாத் கோவிலக் கொள்ளையடிக்க வந்து கொண்டிருந்த சமயம்..... ஒற்றர்கள் முலம் உண்மையை அறிந்த குஜராத் அரசர்கள் தங்களுடைய குருவான சோமநாதபுர தலைமை அர்ச்சக‌னிடம் '"எங்களிடம் நாலரை லட்சம் சைன்னியங்கள் இருப்பதால், அவனை வழியிலேயே சென்று அடித்துத் துரத்திவிடலாம் சுவாமி! உத்தரவு கொடுங்கள்"என்று விண்ணப்பித்தனர். அதற்கு அந்த குருவோ, "நீங்கள் சொல்லுவதற்கு முன்னரே கணேசனும், காளியும், பைரவரும் என் கனவில தோன்றி,"மிலேச்சன் வருகிறான்;அவனால் அரசர்களுக்கு யாதும் கேடு விளையாமல் காப்பாற்றுவோம். ஆனால் அதற்கு விசேஷமான ஹோமங்களும், பிராமணர்களுக்கு அன்னதானம், கன்னிகாதானம் முதலியவை நடைபெற வேண்டும்," என்று சொல்லி மறைந்தார்கள் ஆதலால், யுத்தத்திற்குப்‌போக வேண்டாம். புராணங்களிலும், பிராமண வாக்கிலும்
    உங்களுக்கு வரவர நம்பிக்கை குறைந்து வருவதால், இவ்வித இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே யுத்தத்திற்கு செலவழியும் பொருளை
    பிராமணர்களுக்கும் தானம் கொடுத்து விடுங்கள்"என்று கூறினார்...

    அதிமுகவுக்கு இரு மத்திய அமைச்சர் பதவிகள் உறுதி? ரவீந்திரநாத் மற்றும் தம்பித்துரை அல்லது நவநீதகிருஷ்ணன் (காஷ்மீர் பியூட்டிபுள்)

    Vishnupriya R - tamil.oneindia.com  :  சென்னை: மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவி வழங்க பாஜக முடிவு செய்துள்ளது. அவர்களில் ஒருவருக்கான பதவி உறுதியாகிவிட்டது. இன்னொருவருக்கான பதவி குறித்து பிரதமரிடம் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த ஒருவர் ஓ பி எஸ் மகன் ரவீந்திரநாத் ஆவார். இவர் வேட்புமனு தாக்கல் செய்த போதே கல்வெட்டில் இவரது பெயர் பதிப்பு என கிட்டதட்ட வெற்றி உறுதி செய்யப்பட்டது. இதை வைத்து தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஓபிஎஸ் இருந்துள்ளார். இதுகுறித்து டெல்லி சென்று பேச்சுவார்த்தையும் நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் பலன் கிடைக்கவில்லை

    ஐக்கிய ஜனதா தளம் இந்த நிலையில் மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவும் அதில் அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்கவும் பாஜக முடிவு செய்துள்ளது. பொதுவாக 80 பேர் வரை மத்திய அமைச்சரவையில் இடம்பெறலாம். ஆனால் தற்போதோ 53 பேர் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர்.

    இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏன்? இலங்கை மந்திரி விளக்கம்

    dailythanthi.com : கொழும்பு, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதி சரக்கு முனையத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்பாக இந்தியா-ஜப்பான்-இலங்கை இடையே முத்தரப்பு ஒப்பந்தம் முந்தைய சிறிசேனா ஆட்சியில் (2019-ம் ஆண்டு) கையெழுத்திடப்பட்டது. ஆனால் இது தொடர்பாக துறைமுக ஊழியர் சங்கங்கள் தொடர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சே சமீபத்தில் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார். நிலையில் மேற்படி ஒப்பந்த பிரச்சினை தொடர்பான கேள்விகளுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில், துறைமுகத்துறை மந்திரி ரோகிதா அபேகுணவர்தனா பதிலளித்து பேசினார். அப்போது அவர் இந்த பணிகளை எடுத்துக்கொண்டிருந்த இந்திய நிறுவனம், தங்கள் புதிய விதிமுறைகளை ஏற்க மறுத்ததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

    வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ ரெயில் சேவை திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    maalaimalar : ரூ.3770 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ ரெயில் சேவை திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
    விம்கோ நகரில் இருந்து முதன் முதலாக புறப்பட்ட மெட்ரோ ரெயில்< சென்னை: சென்னையில் வண்ணாரப்பேட்டை- விம்கோநகர் இடையே ரூ.3770 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்கம் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மேலும் 2 ரெயில் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் ரூ.4,486 கோடி செலவில் 3 ரெயில் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளது. ரூ.2,640 கோடி செலவில் கல்லணை கால்வாய் சீரமைப்பு திட்டம் மற்றும் ரூ. ஆயிரம் கோடி செலவில் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பம் சார்பில் ஆராய்ச்சி வளாகம் அமைக்கும் திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    நில அதிர்வு.. அறை குலுங்கினாலும் அசராமல் நேரலையில் பேசிய ராகுல் காந்தி

     

     Anbarasan Gnanamani -tamil.oneindia.com டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காணொலி மூலம் சிகாகோ பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடிய போது நில அதிர்வு ஏற்பட்டது. தஜிகிஸ்தானை மையமாகக் கொண்டு நேற்று (பிப்.12) இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

    ரிக்டர் அளவுகோலில் 5.9-ஆக இது பதிவானது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், கைபர்-பக்துன்கவா, பஞ்சாப் மாகாணங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் உணரப்பட்டது. v>அதுமட்டுமின்றி, டெல்லி, டெல்லி என்சிஆர், வடமாநிலங்களிலும் சில வினாடிகளுக்கு இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பதறிய மக்கள், வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். 

    ஆனால், இதுவரை வடமாநிலங்களில் நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் குறித்துத் தகவல் ஏதும் பதிவாகவில்லை. குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காணொலி மூலம் சிகாகோ பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது அறை முழுவதும் குலுங்கியது. கொஞ்சமும் பதட்டப்படாத ராகுல், 'இங்கே நிலநடுக்கம் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன்' என கேஷுவலாக சொல்லிவிட்டு மீண்டும் தனது உரையாடலைத் தொடங்கினார்

    2021: அதிர்ச்சி கொடுத்த கொங்கு மண்டல சர்வே முடிவுகள்.. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

    BBC    :  2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் ஆட்சியமைப்பதற்கு கொங்கு மண்டலமே பிரதான காரணமாக இருந்தது. ஆனால், தற்போதைய களநிலவரம் கலவர நிலவரமாகவே இருப்பதாக அதிமுகவினரே ஆடிப்போயிருக்கிறார்கள். தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு பரப்புரையிலும் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களில் மக்களின் குறைகளைத் தீர்ப்போம்' என ஸ்டாலின் தெரிவித்தார். அதற்கேற்ப, தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறார்.

    100 முதல் 1100 வரை!

    தி.மு.க தலைவரின் இந்த முயற்சிக்குத் திருப்பூர் பிரசாரத்தில் பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கி பெட்டிக்குள் போட்டுவிட்டு 100 நாட்களில் இவர் தீர்ப்பாராம். எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை இது. உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது ஏன் மக்களின் குறைகளைத் தீர்க்கவில்லை? ஆட்சியில் இருந்தபோது இதனைச் செய்யாமல் தற்போது ஏமாற்றி வருகிறார்' என கொதித்தார்.

    பிரதமர் மோடி இன்று சென்னை வருகை- 10,000 போலீசார் பாதுகாப்பு

    .dailythanthi.com :சென்னை, பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் அரசுமுறை பயணமாக இன்று காலை 10.35 மணியளவில் சென்னை வருகிறார். அவர், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் அவர், சென்னை வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே ரூ.3,770 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரெயில் முதல்கட்ட விரிவாக்க திட்டம், ரூ.293.40 கோடி செலவில், சென்னை கடற்கரை-அத்திபட்டு இடையே 21.1 கி.மீ. நீளமுள்ள 4-வது ரெயில் பாதை இணைப்பு, ரூ.423 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம்-கடலூர், மயிலாடுதுறை-தஞ்சை மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் இடையே 228 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்டு உள்ள ஒருவழி ரெயில் பாதை ஆகிய முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ரூ.2,640 கோடி செலவில் கல்லணை கால்வாய் விரிவாக்கம், புதுப்பிப்பு மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்துக்கும், சென்னை தையூரில் ரூ.1,000 கோடி செலவில் ஐ.ஐ.டி.க்காக அமைக்கப்பட உள்ள ‘டிஸ்கவரி கேம்பஸ்’ வளாகம் அமைப்பதற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

    ஜப்பானில் ஃபுகுஷிமாவிற்கு அருகில் 7.1 என்ற அளவில் நிலநடுக்கம்

                 BBC : ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியில் 7.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் அதிர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது பெரிதாக எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளிவரவில்லை. நிலநடுக்கத்தால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக ராயட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. ஜப்பானின் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிலிருந்து நாட்டின் தென்மேற்கு பகுதி வரை உணரப்பட்டுள்ளது.

    ஜப்பான் அரசு தொலைக்காட்சியான எஹெச்கே டிவி, ஃபுகுஷிமா அணுஉலை ஏதும் பிரச்னை ஏற்பட்டுள்ளதா என சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன