கடந்த 2002 தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகப் பங்காற்றிய நபர்கள்/நிறுவனங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறேன்.
விருதுகளுக்கு நான் வகுத்துக்கொண்ட விதிமுறைகள்
- தமிழில் நேரடியாக உருவாக்கப்பட்ட திரைப்படமாகவோ, தமிழில் மறுஆக்கம் செய்யப்பட்ட திரைப்படமாகவோ, தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்திய மொழித் திரைப்படமாகவோ இருத்தல் வேண்டும்.
- திரைப்படம் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான தேதிகளில் சென்னையில் வெளியாகி இருத்தல் வேண்டும் (மத்திய திரைப்படத் தணிக்கைத் துறை சான்றிதழ் தேதி கணக்கில் கொள்ளப்படுவதில்லை).
- விருதுகளுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அமைப்பின் நடுவர் திரைப்படத்தை முழுமையாகப் பார்த்து விட்டால் அப்படம் விருதுகளின் அனைத்து பிரிவுகளுக்கும் விண்ணப்பித்ததாகப் பொருள் கொள்ளப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விடும்.
ஆடுகளம் * காவலன் * சிறுத்தை * யுத்தம் செய் * தூங்காநகரம் * பயணம் * நடுநிசி நாய்கள் * குள்ளநரிக்கூட்டம் * நஞ்சுபுரம் * பொன்னர் – சங்கர் * கோ * வானம் * அழகர்சாமியின் குதிரை * ஆண்மை தவறேல் * ஆரண்ய காண்டம் * அவன் இவன் * நூற்றெண்பது * தேநீர் விடுதி * தெய்வத்திருமகள் * காஞ்சனா * போடிநாயக்கனூர் கணேசன் * போட்டா போட்டி 50-50 * ரௌத்திரம் * மங்காத்தா * எங்கேயும் எப்போதும் * வந்தான் வென்றான் * முரண் * வகை சூட வா * வேலூர் மாவட்டம் * சதுரங்கம் * 7-ஆம் அறிவு * வேலாயுதம் * தம்பி வெட்டோத்தி சுந்தரம் * வித்தகன் * மயக்கம் என்ன * போராளி * ஒஸ்தி * மம்பட்டியான் * மௌனகுரு * ராஜபாட்டை * ரா-1 * டர்ட்டி பிக்ச்சர் * (மொத்தம் – 42)