சனி, 7 நவம்பர், 2020

ஜோ பைடன்: மூன்றாவது ஓட்டத்தில் முதலிடம் பிடித்த "அதிபர்

 BBC  :ஜோ பைடன்: மூன்றாவது ஓட்டத்தில் முதலிடம் பிடித்த "அதிபர்
அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் மூன்றாவது முயற்சியாக முதலிடத்துக்கு தகுதி பெற்றிருக்கிறார் ஜோ பைடன். ஆனால், அதற்கு அவர் கொடுத்த விலைகள் ஒன்றிரண்டு தசாப்தங்கள் அல்ல. 1987ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2008ஆம் ஆண்டில் இரண்டாவது முறையும் அதிபராகும் போட்டியில் இருந்த அவரால், தனது 77ஆவது வயதில்தான் அப்பதவிக்கான போட்டியில் முதலிடத்துக்கு முன்னேற முடிந்திருக்கிறது.
ஐயோவா மாகாணத்தில் மறைமுக தேர்வு (காகசஸ்), நியூ ஹாம்ஷையரில் நேரடி தேர்வு (பிரைமரி) மூலம் அதிபர் வேட்பாளராக தேர்வாக முடியாத நிலை பைடனுக்கு சில தசாப்தங்களுக்கு முன்பே உண்டு. அந்த பின்னடைவு தந்த வலிகளும் அரசியலில் நீடிக்கும் அவரது பழுத்த அனுபவமும்தான் இம்முறை மூன்றாவது முயற்சியாக நில்லாமல் ஓடி மறைமுக தேர்வு, நேரடி தேர்வு என இரண்டிலும் ஒருமித்த ஆதரவை பெற்று ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரானார் ஜோ பைடன். இதற்கு அவருக்கு 14 மாகாணங்களில் இருந்து அவரது முன்மொழிவை ஜனநாயக கட்சியினர் ஆதரித்தனர்.

அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றி - 273 முன்னிலை.. Joe Biden Wins US Presidency With 273 Electoral College Votes

Vox on Twitter: "Joe Biden is projected to win the 2020 Election. Decision  Desk called the state of Pennsylvania for Joe Biden early on Friday, giving  him giving him 273 electoral votes —

BBC  :அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெறுவதற்கான தேர்தல் சபை வாக்குகளை பெற்றுள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான 270 வாக்குகளின் பலத்தை கடந்து அவருக்கு 273 தேர்தல் சபை வாக்குகள் இருப்பதாக பிபிசி கணித்துள்ளது.

 தேர்தலில் நானே வென்றேன் - ட்விட்டர் பதிவு மூலம் உரிமை கோரும் டிரம்ப். அமெரிக்க தேர்தலில் நானே அதிக அளவில் வென்றேன் என்ற ஒற்றை வரியை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் டொனால்ட் டிரம்ப். முன்னதாக, மற்றொரு பதவில் தனது வழக்கறிஞர்கள் அமெரிக்க நேரப்படி காலை 11.3 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார் டிரம்ப். பிறகு அந்த பதிவை நீக்கி விட்டு, மிகப்பெரிய செய்தியாளர் சந்திப்பு நடக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

குட்டி புட்டி புகை ஜாலி பழக்கமுள்ள பார்ப்பனர்கள் மற்ற சாதி மக்களுடன் சேர்ந்து ...

Seetha Ravi Suresh : · பிராமணர்களில் வேதீய ஒழுக்கமுடையவர்கள், குடி மற்றும் புகை நான்வெஜ் பழக்கங்களுள்ள சக பிராமணர்களை ஒதுக்கிவைத்துவிடுவார்கள். விழாக்களிலும், கூடுமிடங்களிலும், சமுதாய நிகழ்வுகளிலும் புறக்கணிக்கப்படுகிற, குட்டி புட்டி புகை ஜாலி பழக்கமுள்ள பிராமணர்கள், மற்ற சாதி மக்களுடன் சேர்ந்து இந்தவகையான தேவைகளை பூர்த்திசெய்துகொள்கின்றனர்! அங்கே சந்திக்கிற விஷயங்களும், பேசப்படும் செய்திகளும், சார்ந்திருக்கிற பிறசாதியினரின் தயவுகளுக்காக பேசப்படுகிறது!
உதாரணமாக, ஒரு ஆண்டைசாதி நபருடன் சேர்ந்து தண்ணியடிக்கிற பிராமணன், அவன் யாரையாவது வெட்டணும்னு சொன்னால்! இவனும் ஆமா வெட்டணும் மாப்ளன்னு சொல்லிக்குவான்! அந்த நேரத்திற்காக!!!
இந்த பிராமண அரிய பிராமண ஒத்தூதலை கண்டு புழங்காகிதம் அடைகிற நம்பாட்கள்! அவன் முற்போக்கான ஆளென தீர்மானித்துவிடுகிறார்கள்! அவன் ரொம்ப நல்லவன்டா! அவன் சாதிபாக்கறதில்லை! என்னிய மாப்ள மச்சான்னுதான் கூப்புடறாண்டா! போன்ற சர்ட்டிபிக்கேட்களை அள்ளி வழங்குகின்றனர்!
இந்த சப்பைத்தனமான பழக்கவழக்கங்களைத்தான் முற்போக்குன்னு நெனச்க்கிட்டு, ஊதிக்கிட்டிருக்கானுக மையம் குரூப்ல இருக்கிற மற்றசாதியர்கள்!
கமலஹாசனும் ஒரு முற்போக்கு சர்ட்டிபிக்கேட் வச்சிருக்கறது! தன்னோடி லேடி, புட்டி, புகைவலி, சினிமா சமாச்சாரங்களால் கிடைத்ததுதான்!
அதனால பிராமணன் முற்போக்காளன்னு ஊதறதை நிறுத்திக்கோங்க! அதற்கான காரணங்கள் வேற

பாஜகவினர் பங்கேற்கும் ஊடக விவாதங்களில் பங்கேற்பதில்லை: திமுக+ தோழமைக் கட்சிகள் முடிவு

ddd

nakkeeran.in :  திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளின் ஊடகக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் 06.11.2020 வெள்ளிக்கிழமை இணைய வழியில், திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளின் ஊடகக் கண்காணிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பேரா.கான்ஸ்டன்டைன் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் அருள்மொழி (திக), கோபண்ணா (காங்கிரஸ்), மகேந்திரன் (சிபிஐ), கனகராஜ்(சிபிஎம்), மல்லை சத்யா (மதிமுக), ரவிக்குமார் (விசிக), அப்துல் ரஹ்மான் (இயூமுலீ), அப்துல் சமது (மமக), சூர்ய மூர்த்தி (கொமதேக) ஆகியோர்கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-1. ஊடக விவாதங்களில் பாஜக சார்பில் பங்கேற்போர் தரம் தாழ்ந்த முறையில் கருத்துக்களைத் தெரிவிப்பதோடு, தனிநபர் தாக்குதலிலும் ஈடுபடுகின்றனர்.                     அவர்களால் தமிழ்த் தொலைக்காட்சி ஊடக விவாதங்களின் தரம் சரிந்து கொண்டே போகிறது. எல்லா அரசியல்  கட்சிகளின் பிரதிநிதிகளையும் விவாதத்துக்கு அழைக்கவேண்டியது ஊடகங்களில் கடமை என்றாலும் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் தனிநபர் தாக்குதல்கள் முதலானவற்றைத் தடுக்க வேண்டியதும் அவர்களுடைய கடமையே ஆகும்.

திமுக வேட்பாளர் தேர்வு .. ‘மண்டல’ செயல்திட்டம்!

minnambalam : சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவில் பல்வேறு
திமுக  வேட்பாளர் தேர்வு : பிரசாந்த் கிஷோரின், ‘மண்டல’ செயல்திட்டம்!
நடவடிக்கைகளுக்கு அச்சாரமாக விளங்கும் ஐபேக், தற்போது மேலும் ஒரு முக்கியமான பகுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஐபேக் தலைவரும் உத்தி வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் சென்னையில் வந்து சில நாட்கள் தங்கியிருந்தபோது முக்கியமான ஒரு மீட்டிங் நடத்தியிருக்கிறார். ஸ்டாலின் பொறுக்கியெடுத்த நால்வர் இதில் திமுக தலைவர் ஸ்டாலின், தலைமைக் கழக நிர்வாகிகளோடு முக்கியமாக அழைக்கப்பட்ட நான்கு பேரும் கலந்துகொண்டிருக்கிறார்கள் . அதாவது தொமுச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, கொறடா சக்கரபாணி, திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எ.வ. வேலு ஆகியோர்தான் முக்கியமான அந்த அழைப்பாளர்கள்.

7 பேர் விடுதலை: திமுக- காங்கிரஸ் மோதல்!

minnambalam :ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினி, வி.ஸ்ரீகரன் என்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி. ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு ஆயத்தமாகி வருவதாகத் தெரிகிறது. இதற்கு தமிழக காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரு வருடங்களாக முடிவெடுக்காமல் இருப்பதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த நிலையில்...தமிழக அரசே இவர்களை விடுதலை செய்யலாம் என்று சட்ட வல்லுநர்களும், தமிழ் ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலினும் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று (நவம்பர் 7) வெளியிட்டிருக்கும் செய்தியில்,    “ முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச் சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும்.

பிஹார் லாலுவின் RJD காங்கிரஸ் கூட்டணி 138 ! நிதிஷ் BJP கூட்டணி 112. Exit கருத்துக் கணிப்பு Bihar Exit - RJD emerge single largest party

டhindutamil.in :ைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கணிக்கப்பட்டுள்ளது. 243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிஹார் மாநிலச் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியோடு முடிகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதையடுத்து 3 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்று முடிந்துள்ளது. 71 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 94 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 78 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. 3-ம் கட்டத் தேர்தலில் 51.4 சதவீத வாக்குகள் பதிவானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ரஷிய அதிபர் புதின் அடுத்த ஆண்டு பதவி விலகுகிறாரா? கிரெம்ளின் மாளிகை விளக்கம்

  thinathanthi: மாஸ்கோ, ரஷியாவில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் புதின் அதிபராக இருந்து வருகிறார். அவர் ரஷியாவின் செல்வாக்கு மிக்க தலைவராக அறியப்படுகிறார். ரஷியாவில் அதிபரின் பதவிக்காலம், 6 ஆண்டுகள் ஆகும். அந்த நாட்டு அரசியல் சாசனப்படி, ஒருவர், 2 முறை மட்டுமே தொடர்ந்து அதிபராக நீடிக்கலாம். அதன்படி புதினின் பதவிக்காலம் வருகிற 2024-ம் ஆண்டுடன் முடிவடைய இருந்த நிலையில், அவர் மேலும் 12 ஆண்டுகள் அதிபராக இருக்கும் வகையில் கடந்த ஜூலை மாதம் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது 2024 மற்றும் 2030-ல் நடைபெறும் அதிபர் தேர்தல்களில் புதின் போட்டியிடும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஒரு சிங்கள மாணவிக்கு யாழ்ப்பாணத்தில் படிப்பதற்கு ஏன் பிடித்திருக்கிறது?

நம்ம Jaffna : யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற சிங்கள மாணவி ஒருவர் சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் யாழ்ப்பாணத்தைப்பற்றி கூறிய விடயங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.சிங்கள மொழியில் இடம்பெற்ற இந்த உரையாடலின் தமிழ் மொழிபெயர்ப்பினை இங்கு இணைக்கின்றோம். 

யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயக பிரதேசங்கள் குறித்து தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் மத்தியில் இந்த மாணவியின் வெளிப்படையான கருத்துக்கள் இங்கு காண்பிக்கப்படவேண்டியதாகும்.

கேள்வி:- உங்களுக்கு கிட்ட உள்ள பல்கலைக்கழகம் எது?
மாணவி:- சபரகமூவா பல்கலைக்கழகம்
கேள்வி:- இரத்தினபுரி மாணவர்களுக்கு சபரகமூவா பல்கலைக்கழகம் கிட்ட, கொழும்பில் உள்ள மாணவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழகம் கிட்ட, பேராதெனியாவில் உள்ளவர்களுக்கு பேராதெனிய பல்கலைக்கழகம் கிட்ட, இரத்தினபுரி, பேராதெனியவில் உள்ளவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழகம் மிகவும் தொலைவில் உள்ளது. கொழும்பில் உள்ளவர்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மிகவும் தூரத்தில் உள்ளது. அப்படி இருக்கும் போது உங்களுக்கு எப்படி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கிட்ட ஆகியது?
மாணவி:- எனக்கு மிகவும் ஆசை தமிழ்த்திரைப்படம் பார்ப்பதற்கு, அழகான உலகம் இருப்பது போல தெரிந்தது எனக்கு, அங்கு சென்றால் அப்படி வாழமுடியும் போல எனக்கும் தோன்றியது. நான் விரும்பியே அங்கு சென்றேன், முதலில் எனக்கு வவுனியா பல்கலைக்கழகத்திற்கு (applied science)தான் அனுமதி கிடைத்தது, நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு (Bio science ) விண்ணப்பம் செய்தேன், அதனால் தான் எனக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது. 

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு பினாமிகள் ஐவர் அடுத்தடுத்து கைது ..வேலுமணியின் 300 கோடி ரூபா எங்கே?

இறந்த அமைச்சர் துரைக்கண்ணு பினாமிகள் ஐவர் அடுத்தடுத்து கைது
வேலுமணி கொடுத்துவைத்த 300 கோடி ரூபாப் கட்சிப்பணம் எங்கே?.. விகடன் செய்தி
சக அமைச்சரிடம் கொடுத்து வைத்தது மட்டுமே 300 கோடி எனில் கொரோனாவை வென்ற நாயகனிடமும் வெளிநாட்டில் தீவும் ஹெலிகாப்டரும் வாங்கியதாக சொல்லப்படும் மகனிடமும் எவ்வளவு இருக்கும்
கோவை மெயிலின் நாயகனுக்கு எப்படி அவ்வளவு பணம் வந்திருக்கும் என்பவர்களுக்கு ஒரு சின்ன விசயம் சொல்றேன் விசாரிச்சு பாருங்க
நீங்க வசிக்கும் பகுதிகளில் பஞ்சாயது அல்லது நகராட்சி சார்பில் வீதீ விளக்குகள் மாட்டிருப்பாங்க
அந்த LED விளக்குகள் சமீபத்திய வருடங்களாக எவ்வளவு முறை பீஸ் போயிருக்கிறது எத்தனை முறை மாற்றப்பட்டிருக்கிறது என விசாரித்து பாருங்கள்
உதாரணத்திற்கு எங்க பூர்வீக கிராமத்தில் உள்ள LED விளக்குகளில் 80% எறிவதில்லை அல்லது அடிக்கடி மாற்றப்படுகிறது இதே போன்ற நிலைதான் தமிழகமெங்கும் நிலவுகிறது
காரணம் என்ன தெரியுமா ஒரு LED பல்புக்கு 4300 ரூபாய் என டெண்டர் விடப்பட்டு வாங்கப்பட்டது

மஹா பெரியவாள் எங்கு போனாலும் பல்லக்கிலேயே போவா.. பல்லக்கைத் தூக்க 72 சூத்திரன்கள்...



Thamilan Da : மஹாப்பெரிய"வால்".... 1968 வரை... எங்கு போனாலும் பல்லக்கிலேயே போவா.... பல்லக்கைத் தூக்க, தொட்டாலே தீட்டு என்று சொல்லப்படும் சூத்திரன்தான் தூக்க வேண்டும்...  முன்புறம், 18 பேர்,,, பின்புறம் 18 பேர்.. மொத்தம் 36 பேர்... 100 கிலோமீட்டர் வந்தபிறகு ஆட்கள் மாற்றப்படும்... ஆக 72 சூத்திரன்கள்... அதுமட்டுமல்லாது, 2 குதிரை, யானை, நாதஸ்வர செட் என்று காஞ்சியிலிருந்து திருச்சிபோல எங்கு போனாலும் இதில்தான் போவா... 1968...இல் திருச்சியில் தந்தை பெரியார் பேசும்போது.... 

""தோழர்களே மனிதனை மனிதன் தோளில் தூக்கிவந்தால், காவிரிப்பாலத்தில் தள்ளிவிடுங்கள்"" என்றார்... அந்த "வாலுக்குத்" தெரியும், பெரியார் தொண்டர்கள் தள்ளிவிட்டால்,,, எந்தக் கடவுளும் காப்பாற்ற மாட்டான் என்று... பல்லக்கை ஓரங்கட்டிவிட்டு, அன்றுமுதல் காரில் போனாள்... தமிழனின் மானம் காத்த பெரியார்

தஞ்சை: `வரவு, செலவுக் கணக்கு; கைவிரித்த மகன்?’ - துரைக்கண்ணு ஆதரவாளர்கள் கைது பின்னணி

முதல்வருடன் துரைக்கண்ணு
துரைக்கண்ணு
கே.குணசீலன் - ம.அரவிந்த் - vikatan :  மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் திடீரெனக் கைது செய்யப்பட்டிருப்பது, அவரின் ஆதரவாளர்களை மட்டுமன்றி அவரின் மகன் ஐயப்பனையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கே.குணசீலன்ம.அரவிந்த் அமைச்சர் துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள் எனச் சொல்லப்படும் ஐந்து பேர் நேற்று இரவு கும்பகோணத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பது துரைக்கண்ணு குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. முதல்வருடன் துரைக்கண்ணு வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். நுரையீரல் 90 சதவிகிதம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 31-ம் தேதி இரவு உயிரிழந்தார். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள அவரது சொந்த ஊரான ராஜகிரிக்கு துரைக்கண்ணுவின் உடல் எடுத்துவரப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்துகொண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வெள்ளி, 6 நவம்பர், 2020

அப்பா இல்லாத வெறுமையை கடந்துவிட்டதாக சொல்ல முடியாது – கலங்க வைத்த கனிமொழி எம்.பி.

 

puthiyamugam.com :எனது தந்தை இருக்கும்வரை எங்கள் வீடு கொண்டாட்டமாகவே இருக்கும். அப்படி இருக்கும்போது அவர் இல்லாத வெறுமையிலிருந்து நான் மீண்டுவிட்டதாக சொல்லமுடியாது.

அதேசமயம் அவர் இல்லாத நிலையில் அவரிடம் பெற்ற உறுதியை வெளிப்படுத்தி பணியில் ஈடுபடுகிறேன் என்று கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி பேட்டியில் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது.

2ஜி வழக்கில் எனக்கு தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதுகூட தெரியாமல் என்னை கடுமையாக விமர்சித்தார்கள். அந்த வழக்கில் நான் கைதுசெய்யப்பட்டு ஜாமீன் கிடைக்குவரை எனது தந்தை மனதளவில் வருத்தப்பட்டார். தன்னால்தான் எனக்கு இதெல்லாம் நடப்பதாக கூறுவார். ஆனால், பொதுவாழ்க்கை என்று வந்துவிட்டால் இதெல்லாம் சகஜம் என்ற பக்குவத்தை அவரிடமிருந்து நான் பெற்றேன்.

விஜய் எத்தனையோ முறை சொல்லியும் எஸ்ஏசி கேட்கவில்லை.. விஜய்யின் தாயார் ஷோபா பேட்டி

 

 Velmurugan P - tamil.oneindia.com : சென்னை: விஜய் எத்தனையோ முறை சொல்லியும் அரசியல் பயணம் குறித்து பொதுவெளியில் பேசுவதை எஸ்ஏ சந்திரசேகர் நிறுத்தவில்லையாம். இதனால் விஜய் அவருடைய தந்தையுடன் பேசுவதை நிறுத்திவிட்டார் எ னநடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் கூறினார். 

கற்பனையான கேள்வி

சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட இந்த நேரத்தில், நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி உள்ளதாகவும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஆரம்பக்க உள்ளதாகவும் செய்தி ஊடகங்களின் சமூக வலைதளங்களில் நேற்று தகவல்கள் காட்டுத் தீயாக பரவின. இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்கு நான் தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன்.                   இது என்னுடைய முயற்சி. இது விஜயின் அரசியல் கட்சி அல்ல" என்று நேற்று விளக்கம் அளித்தார். விஜய் விளக்கம் இதையடுத்து அரசியல் பிரவேசம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் விஜய், " என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகா் அவா்கள் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.   ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்  ஒரு எம் எல் ஏயாக  முடியல்லியே நோ பீஸ் ஆப் மைண்ட் அல்லது 

ஆனைமலை சமணத்தின் அடையாளம்; அங்கு புதிய வழிபாட்டு கட்டமைப்புகளை உருவாக்கக் கூடாது – நீதிமன்றம்

ஆனைமலை
   Madras November : தமிழகத்தில் நடைபெற்ற சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, ஆதிச்சநல்லூா் மற்றும் ஈரோடு மாவட்டம் கொடுமணல் அகழ்வாய்வுப் பணிகளைத் தொடர்ந்து நடத்த எழுத்தாளா் முத்தலாங்குறிச்சி காமராசு சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தாா். அதேபோல மதுரை மாவட்டத்தில் உள்ள சமணர் படுகைகள் மற்றும் பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்க உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தாா். 

வரலாற்றில் பிராமணர்கள் செய்த எடை குறைப்புகள்!

Madras Radicals : வரலாற்றில் பிராமணர்கள் செய்த எடை குறைப்புகள்!
தமிழ்நாட்டு வரலாற்றில் கோவில் நகை, பணம், விலையுயர்ந்த சாமி ஆடைகள், பூசை பாத்திரங்கள், தானியங்கள் திருட்டில் ஈடுபட்ட பிராமணர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.
கிபி 1152-ம் ஆண்டு பந்தநல்லூர் கோவிலில் உள்ள பிராமணர்கள் இறைவனுக்கு நகைகள் செய்ய வைத்திருந்த தங்க நகைகளை திருடி விட்டார்கள்.
இதனால் கோயிலில் பூசை செய்யும் உரிமையை அவர்கள் இழக்க நேரிட்டது. பின்பு அந்த உரிமை 180 காசுகளுக்கு வேறு பிராமணர்களுக்கு விற்கப்பட்டது.
கிபி 1213-ம் ஆண்டு கடவுளுக்கு தலையில் அணியப்பட்ட திருப்பட்டம் என்ற நகையைத் திருடிய பிராமணனின் வீடு பறிமுதல் செய்யப்பட்டது.
கி.பி 1289-ம் ஆண்டு மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் பிராமணர்கள் கோவில் நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
கி.பி 1255-ம் ஆண்டு குடுமியான்மலை கோயில் பிராமணர்கள் ஆலயத்தின் பணம் நகைககளை களவாடி உள்ளனர்.
கி.பி 1225-ம் ஆண்டு திருநாகேஸ்வரம் கோயிலில் பணியாற்றிய இரண்டு பிராமண சகோதரர்களும், வேறு ஒருவரும் கோயிலில் விலையுயர்ந்த ஆடைகளைத் திருடி தங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்தி உள்ளனர். கோயில் கட்டுமானப் பணியில் இருந்த செங்கற்களை தங்கள் வீடுகள் கட்ட பயன்படுத்தி உள்ளனர்.
கி.பி 1225-ம் ஆண்டு சிரீரங்கம் கோயிலில் பூசாரிகளும் பிராமண அலுவலர்களும் கோயில் சொத்துக்களை கையாடல் செய்துள்ளனர்.
கி.பி 1374-ம் ஆண்டு திருக்கழுக்குன்றம் கோயிலில் 150 பொற்காசு பணத்தை அங்கு வேலை பார்த்த பார்ப்பன அதிகாரி திருடிவிட்டார். அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொலை செய்ய ரூ.55,000! ரவுடி கும்பல் விலைப்பட்டியல் வெளியிட்டுள்ளது.. உத்தரப் பிரதேச மார்க்கெட்டில்

கொலைக்கு ரூ.55,000: அதிர்ச்சியில் உபி மக்கள்!   minnampalam :உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை, வன்கொடுமை, பாலியல் பலாத்காரம் எனக் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 2019 ஆண்டில், ஜனவரி முதல் ஜூலை வரை 2,204 கொலைகளும், இதே காலகட்டத்தில் 2020ல் 2,032 கொலைகளும் நடந்துள்ளதாக மாநில அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மாநிலத்தில் குற்றச்சம்பவங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில அரசு அறிவித்தாலும், அவை குறைந்த பாடில்லை. இந்நிலையில், உபியைச் சேர்ந்த ரவுடி கும்பல் ஒன்று குற்றம் செய்வதற்கான விலைப் பட்டியலை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    மார்க்கெட்டில் காய்கறிகளுக்கு விலைபட்டியல் வைத்திருப்பது போன்று, யாரையாவது மிரட்ட வேண்டுமா ரூ. 1000, அடிக்க ரூ.5,000, தாக்கி காயப்படுத்த வேண்டுமா ரூ.10,000 கொலை செய்ய ரூ.55,000 வசூலிக்கப்படும் எனக் குற்றம் செய்வதற்கான விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தொடங்கிய கட்சி பொறுப்பில் இருந்து விலகினார்

விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய தாய் ஷோபா... கட்சி பொறுப்பில் இருந்து விலகினார்
vijay  shoba
எஸ் ஏ சந்திரசேகர் ஷோபா
எஸ் ஏ சந்திரசேகர்-ஷோபா
  maalaimalar : எஸ் ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியிலிருந்தும் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக விஜய்யின் தாயார் ஷோபா பேட்டி அளித்துள்ளார். விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய தாய் ஷோபா... கட்சி பொறுப்பில் இருந்து விலகினார் தாயுடன் நடிகர் விஜய் விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறினார்.

மேலும், அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்தார். இதையறிந்த நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். எஸ் ஏ சந்திரசேகர் ஷோபா இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாய் ஷோபா அளித்த பேட்டியில், அசோசியேஷன் தொடங்குவதாகவே என்னிடம் கையெழுத்து பெற்றார் எஸ்.ஏ.சி. கட்சி தொடங்குவதற்காக 2 வது முறை கையெழுத்து கேட்டபோது நான் போடவில்லை. அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என எஸ்.ஏ.சி. இடம் விஜய் கூறியிருந்தார். 

டிரம்ப்பின் அதிகாரிகள் ராஜினாமா! புதிய அதிபராகிறார் பிடென்

minnambalam :அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் மூலம் தோல்வியை மட்டுமல்ல,

உலக அளவில் மிகப் பெரிய அவப்பெயரையும் சேர்த்தே சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் டொனால்ட் டிரம்ப். நவம்பர் 3 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகள், இந்திய நேரப்படி இன்று நவம்பர் 6 ஆம் தேதி வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஜார்ஜியா, பென்சில்வேனியா மாநிலங்களில் இறுதிகட்ட எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய நேரப்படி நவம்பர் 6 ஆம் தேதி அதிகாலை அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். வாடியமுகத்தோடு பிரஸ் ரூமுக்கு வந்த டிரம்ப், முதலில் தனது குடியரசுக் கட்சி வெற்றிபெற்ற மாநிலங்களின் பெயர்களை எல்லாம் பட்டியலிட்டார். பின், ‘தேர்தல் சட்ட ரீதியாகவும் நியாயமாகவும் நடந்திருந்தால் நான் வெற்றிபெற்றிருப்பேன். சட்டவிரோதமான ஓட்டுகளை எல்லாம் எண்ணிக்கொண்டிருப்பதால்தான் அவர்கள் எங்களிடமிருந்து வெற்றியைத் திருட முயற்சிக்கிறார்கள்”என்று கூறியவர் அதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. டிரம்ப் தனது அறிக்கையை மட்டும் படித்துவிட்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மீண்டும் தன் அறைக்குள் சென்றுவிட்டார்.

ராமேஸ்வரம் கோயில் தங்க நகை எடை குறைவு: ’40 ஆண்டு பயன்பாட்டால் தேய்மானம்’ – ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம்

 BBC :ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நகைகளில் எந்த முறைகேடும்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நகை எடை குறைவு: '40 ஆண்டு பயன்பாட்டால் நகைகள் தேய்மானம்'
Add caption
நடைபெறவில்லை எனவும், 40 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டதால் நகைகளில் தேய்மானம் ஏற்பட்டு எடை குறைந்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ராமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுவாமி நகைகளை 40 ஆண்டுகளுக்குப் பின் மறுமதிப்பீடு செய்தபோது, அவற்றில் பல நகைகளின் எடை குறைவாக இருந்தது. இதனையடுத்து திருக்கோயில் பணியாளர்கள் 47 பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது ராமேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமாக தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம், செம்பு ஆகியவைகளால் செய்யப்பட்ட 350க்கும் மேற்பட்ட ஆபரணங்கள் உள்ளன. இந்த ஆபரணங்கள் அனைத்தும் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பெரிய கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க மாகாண தேர்தல்களில் 5 பெண்கள் உள்பட இந்திய வம்சாவளியினர் 12 பேர் வெற்றி

maalaimalar :அமெரிக்க மாகாண தேர்தல்களில் 5 பெண்கள் உள்பட இந்திய வம்சாவளியினர் 12 பேர் வென்று புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.
அமெரிக்க மாகாண தேர்தல்களில் 5 பெண்கள் உள்பட இந்திய வம்சாவளியினர் 12 பேர் வெற்றி
ஜெனிபர் ராஜ்குமார், கேஷாராம், நிமா குல்கர்னி, வந்தனா சிலேட்டர், பத்மா குப்பா.
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் நாடாளுமன்றத்துக்கும், பல மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியினர் டாக்டர் அமி பெரா, ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோர் அபாரவெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் தமிழர்கள் ஆவார்கள். அங்கு நடந்த மாகாண சட்டசபை தேர்தல்களிலும் இந்திய வம்சாவளியினர் 5 பெண்கள், 7 ஆண்கள் என 12 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

* நியூயார்க் மாகாண சட்டசபைக்கு இந்திய வம்சாவளி பெண் வக்கீல் ஜெனிபர் ராஜ்குமார் (38), ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவர் குடியரசு கட்சி வேட்பாளர் ஜியோவானி பெர்னாவை வீழ்த்தி, அந்த மாகாண சட்டசபைக்கு தேர்வு பெற்றுள்ள முதல் தெற்காசிய பெண் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

இந்தியா விமானங்களுக்கு தடை விதித்த சீனா.. இந்தியர்கள் சீனா வரவும் தற்காலிமாக தடை

Velmurugan P  /tamil.oneindia.com  : பெய்ஜிங்: இந்தியர்கள் சீனாவிற்குள் நுழைவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சீனா முடிவு எடுத்துள்ளது சீன வழங்கிய செல்லுபடியாகும் விசாக்கள் அல்லது குடியிருப்பு அனுமதி வைத்திருக்கும் இந்தியர்கள் யாரும் தற்காலிகமாக சீனா செல்ல முடியாது. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகமாக உள்ளதால், அதனை காரணம் காட்டி இந்தியாவில் இருந்து செல்லும் அனைத்து விமானங்களையும் சீனா நிறுத்தியுள்ளது. அத்துடன் இந்தியாவில் வசிப்போர் சீனாவிற்குள் நுழைவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சீனா முடிவு செய்துள்ளது. இதன்படி இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினர், சீனாவிற்கு செல்ல விசா வைத்திருந்தாலும் வருவதற்கு தடை விதித்துள்ளது.
சீனா வர தடை இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். "இந்தியாவில் உள்ள சீன தூதரகம் / துணைத் தூதரகங்கள் இந்தியாவில் வசிக்கும் சீனர்களை தவிர மற்றவர்கள் விசா அல்லது குடியிருப்பு அனுமதிகளை வைத்திருந்தாலும், அவர்களுக்கு சீனா வர அனுமதி அளிக்கப்படாது

மாலியில் இஸ்லாத்தை ஏற்ற மர்யத்தின் கடிதமும் ,, Stockholm Syndrome மும்

அம்பலமாகும் பொய்கள் : மாலியில் இஸ்லாத்தை ஏற்ற மர்யத்தின் கடிதமும், உண்மை முஸ்லிம் உஸாமா பின்
Rishvin Ismath : · அம்பலமாகும் பொய்கள் : மாலியில் இஸ்லாத்தை ஏற்ற மர்யத்தின் கடிதமும், உண்மை முஸ்லிம் உஸாமா பின் லேடனும்! சுமார் நான்கு வருடங்களாக மாலியில் பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 75 வயதான பிரெஞ்சுப் பெண்மணி Sophie Pétronin இஸ்லாம் மதத்தை ஏற்று முஸ்லிமாக மாறி மரியா சோபியாவாக பிரான்ஸ் வந்தடைந்த சம்பவம் ஊடகங்களில் அண்மைய நாட்களாக செய்தியாக இருந்தது, அத்துடன் அவர் பிரெஞ்சு அதிபர் மக்ரோனுக்கு எழுதியதாக சொல்லப்படும் ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்கள் மத்தியில் சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கின்றது. பொய்யிலே பிறந்து, பெய்யிலே வளர்ந்து, பொய்யிலேயே வாழும் மதங்களில் பொய்களுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருப்பதில்லை. அந்த வகையில் இஸ்லாத்தின் பழைய பொய்கள் அப்படியே இருக்க, அவை போதாது என்று புதிதாக உருவாக்கப்படும் பொய்களை முழுதாக விழுங்கி புளாங்கிதம் அடைவதற்கு முஸ்லிம்கள் பின் நிற்பதில்லை. சந்திரனுக்கே முஅத்தினை அனுப்பி ஆம்ஸ்ட்ரோங் இற்கு ஸ்பீக்கரில் பாங்கு (அதான்) சொன்னதில் இருந்து, மைக்கல் ஜாக்சனுக்கு சுன்னத்து (விருத்தசேதனம்) பண்ணி முஸ்லிமாக்கியது வரை முஸ்லிம்களின் சாதனைகள் ஏராளம். தற்பொழுது லேட்டஸ்டாக அந்த லிஸ்டில் சேர்ந்து இருப்பதுதான் இஸ்லாம் தொடர்பாக சோபியா பிரஞ்சு அதிபருக்கு எழுதிய கடிதம்.

வியாழன், 5 நவம்பர், 2020

அமெரிக்காவில் முதல் திருநங்கை எம்.பி.,யாக சாரா தேர்வு

dhinamalar :வாஷிங்டன்: அமெரிக்க தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட திருநங்கையான சாரா மெக்ப்ரைட் வெற்றி பெற்று எம்.பி., ஆனதன் மூலம், அமெரிக்க வரலாற்றில் எம்.பி.,யான முதல் திருநங்கை என்ற சாதனையை படைத்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று அதிகாலை 5.30 மணிக்கு துவங்கியது. வெற்றி நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், ஜோ பிடனின் கை, சற்று ஓங்கி உள்ளது. இந்நிலையில், அமெரிக்க வரலாற்றில் சாரா மெக்பைட்(30) என்ற திருநங்கை எம்.பி.,யாக தேர்வாகி முதல் திருநங்கை எம்.பி., என்ற சாதனையை படைத்துள்ளார்.>ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட சாரா மெக்பைட், குடியரசு கட்சியை சேர்ந்த ஸ்டீவ் வாஷிங்டனை தோற்கடித்தார். , முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாக பணியாளராக, சாரா பணியாற்றி உள்ளார். மேலும், ஓர்பால் ஈர்ப்பு வக்கீல் குழுவின் மனித உரிமைகள் பிரசார பத்திரிகை செயலாளராகவும் உள்ளார்.

திமுக-வில் இணைந்தார் (ஜல்லிக்கட்டு) காங்கேயம் கால்நடை வளர்போர் சங்க செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி

  thinakaran :காங்கேயம்: காங்கேயம் கால்நடை வளர்போர் சங்க செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி திமுக-வில் இணைந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்தியவரான சேனாதிபதி கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை நடத்துகிறார். திராவிடத்தால் கொங்கு மண்டலமும் தமிழ்நாடும் பெற்ற நன்மைகளை பற்றி ஆய்வாளரை சேனாதிபதி நிகழ்த்தி வந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கார்த்திகேய சேனாதிபதிக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார்.

மயிலாப்பூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டி?

minnambalam :   2018ஆம் ஆண்டு மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவங்கிய கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலை இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். மக்கள் நீதி மய்யத்துக்கு கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அதிக வாக்குகள் கிடைத்தன. இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது மக்கள் நீதி மய்யம். தேர்தல் வியூகம் அமைப்பது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் சென்னை தி.நகரிலுள்ள ஹோட்டலில் நடந்தது. அதில், கழகங்களுடன் கூட்டணி இல்லை, 3ஆவது அணிக்கான தகுதி தங்களுக்கு இருக்கிறது என கமல்ஹாசன் தெரிவித்தார்.

ரஜினியுடன் கமல்ஹாசன் பேச்சு ( தன்கட்சிக்கு ஆதரவு தரவேண்டும் அம்புடுதே)

மின்னம்பலம் :  ரஜினியுடன் அரசியல் பற்றி பேசிவருவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மண்டல ரீதியாக கடந்த மூன்று நாட்களாக சென்னை தி.நகரிலுள்ள ஜிஆர்டி ஹோட்டலில் நடைபெற்றது. அதில், கழகங்களுடன் கூட்டணி இல்லை எனவும், 3ஆவது அணி அமைப்போம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் செய்தியாளர்களை சந்தித்தார் கமல்ஹாசன்.அப்போது, “எங்களுக்கு வந்துள்ள கள விவரங்களின் படி தமிழகத்தில் நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி. 3 ஆவது அணி ஏற்கனவே அமைந்துவிட்டது. எங்களது கூட்டணி நல்லவர்களின் கூட்டணியாக இருக்கும். அனைத்து கட்சிகளிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனம் நொந்து இருக்கிறார்கள். அவர்கள் இங்கே வரவேண்டும். அப்படி நல்லவர்களின் கூட்டணி அமையும்போது எங்களது 3ஆவது அணி, முதல் அணியாக இருக்கும்” என்ற கமல்ஹாசன்,  

விஜய் மக்கள் இயக்கம் கட்சி SC சந்திரசேகர் பதிவு .. எனக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை நடிகர் விஜய் அறிவிப்பு

மாலைமலர் :விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பது குறித்து நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறினார். மேலும், அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்தார். இந்நிலையில் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா் அவா்கள் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளா்ா என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் அவா் அரசியல் தொடா்பாக எதிா்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தொியப்படுத்திக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளாா் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்பதை தொிவித்துக்கொள்கிறேன்  

அமெரிக்க தேர்தலில் 4 இந்திய வம்சாவளியினர்.. டாக்டர் அமி பெரா, ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால்


அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 4 பேர் வெற்றி
தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியினர்
thinathanthi :வாஷிங்டன்:   அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் சேர்த்து 5 இந்திய வம்சாவளியினர் எம்.பி.க்களாக இருந்தனர். அவர்களில் 4 பேர் பிரதிநிதிகள் சபை என்று அழைக்கப்படுகிற கீழ்சபை எம்.பி.க்கள் ஆவர். அவர்கள், டாக்டர் அமி பெரா, ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோர் ஆவார்கள்.   செனட் சபை என்று அழைக்கப்படுகிற மேல்சபையில் கமலா ஹாரிஸ் எம்.பி.யாக இருந்தார்.

இவர்கள் அனைவரும் செல்லமாக ‘சமோசா காகஸ்’ என்று அழைக்கப்பட்டு வந்தனர்.    இவர்களில் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். எஞ்சிய 4 பேரும் மீண்டும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிட்டனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற்று நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கு மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.

அமெரிக்க தேர்தல் 264 இடங்களில் ஜோ பைடன்முன்னிலை . டிரம்ப் 214 இடங்களுடன் பின்தங்கியுள்ளார்

 

dailythanthi.com :வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்று தற்பொது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிபரை தேர்வு செய்ய அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் 538 தேர்வாளர்கள் (பிரதிநிதிகள்) உள்ளனர். இவர்களில் 270 பேரின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க அதிபராக தேர்வாக முடியும். 

 இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். அதிபர் தேர்தலில் வெற்றியை முடிவு செய்யும் மாநிலங்களாக கருதப்படும் மிச்சிகன், விஸ்கான்சின் ஆகியவற்றில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அதே நேரம் வடக்கு கரோலினா, பென்னிசில்வேனியா, ஜியார்ஜியா ஆகிய இடங்களில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.         மிச்சிகனில் ஜோ பிடனுக்கு 49.9 சதவீதமும், டிரம்புக்கு 48.6 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. ஏற்கனவே, அமெரிக்காவின் நியூ மெக்சிகோ, நியூ ஹார்ம்ஷயர், நியூயார்க், வெர்மான்ட், மேரிலேண்ட், மசாசூட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர், வாஷிங்டன், கொலராடோ, கலிபோர்னியா, இல்லினாய்ஸ், விஸ்கான்சின் உள்ளிட்ட மாநிலங்களில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.

உலகை ஒரு நாள் இஸ்லாம் ஆளும்.... கோஷமிடும் இஸ்லாமியவாதிகள்

 R
ishvin Ismath
: · இதர மதங்களைப் போல இஸ்லாமும் ஒரு சாதாரண மதம் தானே, அதற்குரிய மரியாதையை உலகம் ஏன் அதற்கு கொடுப்பதில்லை? இஸ்லாம் என்பது கிறிஸ்தவத்தைப் போல, இந்து மதம் போல ஒரு சாதாரண மதம் அல்ல. இஸ்லாம் என்பது ஒரு கடும்போக்கு சர்வாதிகார அடக்குமுறை அரசியல் சித்தாந்தம் ஆகும். இஸ்லாத்துடைய முக்கிய நோக்கம் உலக மக்களுக்கு இஸ்லாம் பற்றி போதனை செய்து, எல்லோரையும் இஸ்லாமியர்களாக மாற்றுவது மட்டுமல்ல, அதே நேரத்தில், முழு உலகத்தையும் ஒரு இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வருவதாகும். அதாவது அலெக்சாண்டர் த கிரேட் ஆசைப்பட்டது போல, உலகம் முழுவதையும் ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வருவது தான் இஸ்லாத்தின் முக்கிய நோக்கம். இஸ்லாத்தில் மத சடங்குகள், வணக்க வழிபாடுகள் போன்றவையும் இருக்கின்றன என்பது உண்மை தான். ஆனால், அதையெல்லாம் தாண்டி, உலகம் முழுவதற்கும் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமுலுக்கு கொண்டுவருவது தான் இஸ்லாமியவாதிகளின் பிரதானமான நோக்கம் ஆகும். ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன், அல்கைதா, போகொஹராம், அல்சபாப் உட்பட உலகளாவிய இஸ்லாமிய இயக்கங்களில் கணிசமான எண்ணிக்கையிலானவை இந்த நோக்கத்திற்காக செயற்படுபவை ஆகும். இலக்கை அடைவதற்கான அவற்றின் பாதையில் சிறு சிறு வேறுபாடுகள் காணப்படலாம், சில இஸ்லாமிய இயக்கங்கள் மிக நீண்டகால திட்டத்துடனும், இன்னும் சில குறுகிய கால திட்டத்துடனும் களத்தில் உள்ளன என்பதே அந்த வேறுபாட்டில் பிரதானமானது ஆகும்.

அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள் நீதிமன்ற காவல் - ஏன் அர்னாப் கோஸ்வாமி கைது?

அர்னாப்பினால்  தற்கொலை செய்தவரின் மனைவியும் மகளும்

  dailythanthi.com : மும்பை அலிபாக் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாய் தற்கொலை செய்த வழக்கு தொடர்பாக தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை போலீசார் இன்று கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.மும்பையில் உள்ள வீட்டில் இருந்து தன்னை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றதாக அர்னாப் தெரிவித்திருந்தார். அவரது கைதுக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட விதி மீறல் எதுவும் இல்லை என மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.இதற்கிடையில் மும்பையில் உள்ள இல்லத்தில் சென்று கைது செய்ய முயன்றபோது காவலர்களை தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி, அவரது மனைவி மற்றும் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அர்னாப் கோஸ்வாமியை அலிபாக் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜோ பிடன் வெற்றிக்கு அருகில்! கடைசி நேரத்தில் திடீரென மாறிய முடிவு.. டிரம்ப் அதிர்ச்சி.... நூலிழை வித்தியாசத்தால்.....

tamil.oneindia.com - Velmurugan P :  வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்த தான் இப்போது ஒவ்வொரு மாநிலமாக பின்னடைவை சந்தித்து வருவது விசித்திராக உள்ளதாக அதிபர் டிரம்ப் அதிர்ச்சியுடன் புலம்பி வருகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் 3ம் தேதியான நேற்று நடந்தது. தேர்தல் முடிந்த உடனனேய வாக்குகுள் எண்ணப்பபட துவங்கின. முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன.. மொத்தம் 538 பிரதிநிதிகளை கொண்ட தேர்வு குழுவில், 270 பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெறுபவர்தான் வெள்ளை மாளிகையை ஆள முடியும். அதாவாது அமெரிக்காவின் ராஜ்ஜியத்தை கைப்பற்ற முடியும். இதில் ஆளும் கட்சி வேட்பாளரான டிரம்பை விட எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலையில் இருக்கிறார். அதாவது தற்போதைய தகவலின் படி குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகள் பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 238 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இருதரப்பிலும் போட்டி மிக கடுமையாக உள்ளது
உச்ச நீதிமன்றம் போவேன் அமெரிக்காவில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த முறை மிக அதிக அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளதால், இந்த முறை வாக்கு எண்ணிக்கை முடிய நீண்ட நேரம் ஆகும் என்று தெரிகிறது.. இந்நிலையில் எதிர்கட்சியினர் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து வெற்றி பெற முயற்சி செய்வதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். அத்துடன் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். உச்சநீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் கூறியுள்ளார்., தேர்தலில் ஏற்கனவே தாம் வெற்றி பெற்று விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

திருமாவளவன் கைவைத்தது, சிலந்தி வலை அல்ல, உயிர்ப்பும், எதிர்வினையும் நிறைந்த தேன்கூடு.

A
rivazhagan Kaivalyam
: · மாயாவதி, இந்தியாவின் முதல் தலித் பிரதமர் ஆகப்போகிற அரசியல்வாதியாக அறியப்பட்டவர், பிறகு அடிப்படைவாத இந்துத்துவதோடு ஒருகட்டத்தில் சமரசம் செய்து கொண்டார், அவருடைய அரசியல் கட்சியில் உயர் சாதி இந்துக்களுக்கு ஒரு சிறப்பு "பெர்த்" உருவாக்கினார். தலித்துகளுக்கு பாதகம் நிகழ்ந்தாலும் கூட தனது உயர் சாதிக் கூட்டாளிகளுக்கு பங்கம் வராமல் காத்தார், உயர் சாதி வாக்கு வங்கியைக் குறிவைத்து அவர் நடத்திய அந்த சதுரங்கத்தில் அவரால் வெற்றியடைய முடியவில்லை, கடைசியில் இரண்டு பக்கமும் வாக்குகளை இழந்து பரிதாபமான ஒரு இடத்தில் வந்து நின்றார். ராம்விலாஸ் பாஸ்வான் ஒருகாலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சித்தாந்த ரீதியான தலைவர்களில் மிக முக்கியமானவராக அறியப்பட்டார், அடிப்படை இந்துத்துவ ஆற்றல்களுக்கு எதிரான போரில் முக்கியமான தளகர்த்தராக இருந்தவர், காலம், அதே வலது சித்தாந்த அரசியலுக்குள் அவரை மூழ்கடித்தது, பிறகு மந்தமான ஒரு பொருந்தாத அடையாளத்தோடு இறந்து போனார்.

புதன், 4 நவம்பர், 2020

அர்னாப் நிச்சயம் ஒரு ஊடகவியலாளர் இல்லை ஆட்சியாளர்களுக்கான மார்க்கெட்டிங் கூலியாள் .. சமூக வலையில் ..

Arivazhagan Kaivalyam : · அர்னாப் நிச்சயம் ஒரு ஊடகவியலாளர் இல்லை, ஒரு சித்தாந்தத்தை விளம்பரப்படுத்துகிற கூலியாள், ஆட்சியாளர்களுக்கான மார்க்கெட்டிங் செய்பவர், அறத்தின் பக்கமாக எப்போதும் நிற்காத ஒரு முதலாளித்துவ அடிமை. ஆனாலும், அவருக்கு "ஊடகவியலாளர்" என்ற அட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது, அந்த அட்டைக்காகவாவது நாம், மஹாராஷ்டிரா அரசு வீடு புகுந்து அவரைக் கைது செய்ததை வன்மையாகக் கண்டித்து வைப்போம்.
கர்நாடகாவில் "கௌரி லங்கேஷ்" என்கிற பெண் ஊடகவியலாளர் அவரது வீட்டு வாசலிலேயே படுகொலை செய்யப்பட்டார், முற்போக்கு எழுத்தாளர் M.M. கலபுர்கி சுட்டுக் கொல்லப்பட்டார்.
மணிப்பூரின் இளம் ஊடகவியலாளர் "கிஷோர் சந்திர வாங்கெம், பாரதீய ஜனதா அரசையும், மோடியையும் விமர்சித்த குற்றத்துக்காக அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து சிறையில் இருக்கிறார்.
டெல்லியில் சங்கப்பரிவார் அமைப்புகளோடு சேர்ந்து கொண்டு இஸ்லாமிய சகோதரர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய கயவர்களைப் படம் பிடித்த குற்றத்துக்காக "ஷாகித் தந்ராய்", "பிரபிஜீத் சிங்" இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள்.

அமெரிக்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப் முயற்சி; பிடென் கண்டனம்! live streaming

minnampaalm : அமெரிக்கத் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி மாலை முடிந்தவுடன், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பல்வேறு மாநிலங்களில் குடியரசுக் கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பிடெனும் கடுமையான போட்டியில் இருக்கிறார்கள். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க நேரப்படி இரவு 2 மணிக்கு, இந்திய நேரப்படி இன்று பகல் 1 மணிக்கு வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.

“நாங்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற தயாராகி கொண்டிருக்கிறோம். வெளிப்படையாகச் சொல்வதானால் நாங்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். ஆனால் தேர்தலில் மோசடி நடக்கிறது. சட்டத்தை முறையான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே நாங்கள் நாட்டின் உச்சநீதிமன்றத்திற்கு செல்வோம். அனைத்து வாக்குகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்”என்று அறிவித்திருக்கிறார் டிரம்ப்.

அர்ணாப் கோஸ்வாமி அதிகாலையில் அடித்து இழுத்துச் சென்றதாக ரிபப்ளிக் டிவி புகார்!

| Republic's team enroute Raigad Police station where Arnab Goswami has been assaulted and taken by Mumbai Police; Fire in your support for #ArnabGoswami dear viewers, #LIVE here - http://republicworld.com/livetv.html

tamil.oneindia.co -Arivalagan : மும்பை: ரிபப்ளிக் டிவி தலைமை எடிட்டர் அர்ணாப் கோஸ்வாமி இன்று திடீரென மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அர்ணாபின் வீட்டுக்கு இன்று காலை சென்ற மும்பை போலீஸ் படையினர் அவரை அங்கிருந்து கைது செய்து ராய்காட் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட ஒரு பழைய வழக்கின் கீழ் அர்ணாப் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை நடத்துவதற்காகவே அர்ணாபை போலீஸார் கைது செய்து கொண்டு சென்றுள்ளனராம். முன்னதாக பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் அர்ணாப் வீட்டுக்கு விரைந்தனர். அவர்களுடன் அர்ணாப் கடும் வாக்குவாதம் புரிந்துள்ளார். இதையடுத்து அவரை போலீஸார் பிடித்து இழுத்து கைது செய்து வண்டியில் ஏற்றதாக சொல்லப்படுகிறது. போலீஸார் தன்னைத் தாக்கியதாக அர்ணாப் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் போலீஸார் இதை மறுத்துள்ளனர். 

ஆர்.கே.சுரேஷ் சினிமாக்காரர்களை வலைவீசி பாஜகவுக்கு ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறார். சினிமாவை விட அதிகம் சம்பாதிக்க...

Krishna Kuma
r  : · ஆர்.கே.சுரேஷின் அப்பா ஓர் ஒருபடத் தயாரிப்பாளர். அவர் தயாரித்த படம்தான் ஜெய்சங்கர் நடித்த கடைசிப்படம் என்று நினைக்கிறேன். சென்னைக்கு வந்து படங்களில் நடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார் சுரேஷ். ‘புதுப்பேட்டை’யில் விஜய்சேதுபதி மட்டுமல்ல, சுரேஷும்கூட துணைநடிகர்தான். சேதுபதிக்கும், சுரேஷுக்கும் அப்போது துளிர்த்த நட்பு ‘நடுவுலே கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘சூது கவ்வும்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ ஆகிய படங்களின் வணிக உறவுக்கும் உதவியது. ‘தர்மதுரை’ படத்தின் தயாரிப்பாளரும் சுரேஷ்தான். இடையில் இருவருக்கும் பணவிஷயத்தில் முட்டிக்கொண்டதும் உண்டு. தயாரிப்பு, வினியோகம், பைனான்ஸ் என்று வகையாக செட்டிலான சுரேஷுக்கு நடிப்பு ஆசை முற்றிலுமாக போய்விடவில்லை. ’தாரை தப்பட்டை’யில் தொடங்கி டஜன் படங்களுக்கு மேலாக நடித்துவிட்டார். இதில் அவர் ஹீரோவாக நடித்த ‘பில்லா பாண்டி’யும் அடக்கம்.

அர்னாப் கோஸ்வாமி கைது .. (ரிபப்ளிக் டிவி) இருவரின் தற்கொலை விவகாரம்

சில ஆண்டுகளுக்கு முன்பு  ( 2018 ) அன்வாயி நாயக் என்பவரும் அவரின் தாயார் குமுது நாயக் என்பவரும் தற்கொலை செய்துகொண்டார்கள் . அவர்களின் தற்கொலை கடிதத்தில் அர்னாப் கோஸ்வாமியும் வேறு இருவரும் சுமார் ஐந்து கோடி ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டார்கள் என்று குறிப்பிட்ட பட்டிருந்தது .. இந்த விவகாரம் தொடர்பாகத்தான் இவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்று தெரிகிறது .. 
Republic TV Editor-in-Chief Arnab Goswami outside N M Joshi Marg Police Station. (File Photo)

Add caption
  .hindustantimes.com :Republic TV Editor-in-Chief Arnab Goswami outside N M Joshi Marg Police Station. (File Photo)(PTI)          The Maharashtra CID on Wednesday detained Republic television editor Arnab Goswami from his house in connection with the death of interior designer Anvay Naik and his mother Kumud Naik in 2018. A senior police official has confirmed that Goswami will now be taken to Alibaug. This comes at a times when TRP scam investigation against Goswami is going on in Mumbai.

This case goes back to 2018 when a 53-year-old interior designer Anvay Naik and his mother Kumud Naik dies by suicide in Alibaug in May 2018. A suicide note purportedly written by Anvay was found in which he said that Goswami and two others had not paid him Rs 5.40 crore which led to his financial constraints.  

இலங்கையில் கரை ஒதுங்கிய 100 திமிங்கலங்கள் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணி தீவிரம்

sathiyam.tv :இலங்கையில் சுமார் 100 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள பாணந்துரை கடற்கரையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 100 திமிங்கலங்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்கியது. சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர், இலங்கை கடலோர காவல்படையின் உதவியுடன் மீன்களை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு திமிங்கலமும் சுமார் 10 அடி முதல் 25 அடி நீளமுடையவை என தெரிகிறது. திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கியது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கலங்களை காண பொது முடக்கத்தை மீறியும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.

ரஜினி செல்வாக்கு - அதிர்ச்சி தந்த ரிப்போர்ட்! சினிமா புகழ், ரஜினியின் அரசியல் செல்வாக்காக மாறவில்லை!

டிஜிட்டல் திண்ணை: ரஜினி செல்வாக்கு - அதிர்ச்சி  தந்த ரிப்போர்ட்!
minnambalam :மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது. போயஸ் கார்டனில் ரஜினி பேனர் அணிந்து சிலர் நின்றிருந்த படத்தை அனுப்பியது. அதில் இருந்தே டைப்பிங் தொடங்கியது.

“இந்த போட்டோ டெல்லி வரை போயிருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென்றும், வருகிறார் என்றும் முப்பது வருடங்களாக தமிழ்நாட்டில் பேசப்படுகிறது. அதுவும் 1996 முதலான கடந்த 24 ஆண்டுகளில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்றே எல்லாரையும் பேசவைத்து தேர்தல் வாய்ஸ், ரஜினி மன்றம் இன்ன கட்சிக்கு ஆதரவு, எதிர்ப்பு என்றெல்லாம் பேசிய ரஜினி இன்று க்ளைமாக்ஸில் மீண்டும் அரசியலுக்கு வருவேனா, வர மாட்டேனா என்பது பற்றி மீண்டும் குழப்படைய வைத்திருக்கிறார்.

U.S Election live அமெரிக்க தேர்தல் முடிவுகள் நேரடி ... ஜோ பைடன் முன்னிலை ..

தினத்தந்தி : வாஷிங்டன்,உலகமே கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில், அமெரிக்க வல்லரசு நாட்டின் ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் மாதம் நடக்கிற இந்த தேர்தல், அமெரிக்காவின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற தேர்தலாக மட்டுமல்லாமல், உலகம் செல்ல வேண்டிய பாதை இதுதான் என்று சுட்டிக்காட்டுகிற தேர்தலாகவும் அமைகிறது.இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (வயது 74) குடியரசு கட்சி சார்பில் மீண்டும் களத்தில் குதித்துள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் (77) போட்டியிடுகிறார். ஜோ ஜோர்கென்சன் (லிபர்டேரியன் கட்சி), ஹோவி ஹாக்கின்ஸ், (கிரீன் கட்சி) மற்றும் 7 பேர் போட்டியிட்டாலும் ‘நீயா, நானா?’ என்கிற அளவுக்கு டொனால்டு டிரம்புக்கும், ஜோ பைடனுக்கும் இடையேதான் போட்டி நிலவியது.

துணை ஜனாதிபதி பதவிக்கு அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக, இந்திய வம்சாவளிப்பெண்ணான கமலா ஹாரிஸ் (56) களத்தில் உள்ளதால் இந்தியாவில் இந்த தேர்தல் முன் எப்போதையும் விட இப்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவுக்கு டாடா குழுமம் தேர்தல் நிதி: ரூ46.78 கோடி வழங்கியது

tamil.indianexpress.com>டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை 2019-20 ஆம் ஆண்டில் அதிமுகவுக்கு ரூ.46.78 கோடி தேர்தல் நிதியாக வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

அரசியல் கட்சிகள் தனிநபர், தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதிகளைப் பெறுகின்றன. அதன்படி, டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை 2019-20 ஆம் ஆண்டில் அதிமுகவுக்கு ரூ.46.78 கோடி தேர்தல் நிதியாக வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
அதிமுக கடந்த நிதியாண்டில் பெற்ற மொத்த தேர்தல் நிதி பங்களிப்புகளில் தலா ரூ.20,000க்கு மேல் என கிட்டத்தட்ட 90% தேர்தல் நிதியாக பெற்றுள்ளது.    அதிமுக 2020 அக்டோபர் 26ம் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த 2019-20 ஆம் ஆண்டிற்கான தேர்தல் நிதி பங்களிப்பு அறிக்கையின்படி, ஐ.ஐ.டி.சி லிமிடெட் நிறுவனத்திடமிருந்து அதிமுக ரூ.5.39 கோடி இரண்டு தனித்தனி காசோலைகளைப் பெற்றுள்ளது.  

நிரவ் மோடியின் மேல்முறையீட்டு மனு இங்கிலாந்து நீதிமன்றத்தில் தள்ளுபடி

நிரவ் மோடியின் மேல்முறையீட்டு மனு இங்கிலாந்து நீதிமன்றத்தில் தள்ளுபடி

dailythanthi.com இந்திய அரசு சமர்ப்பித்த ஆதாரங்களுக்கு எதிரான நிரவ் மோடியின் மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. லண்டன்,குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த ஆண்டு மார்ச் 19-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செவ்வாய், 3 நவம்பர், 2020

ஆஸ்திரியா பயங்கரவாதத் தாக்குதலில் 4 பேர் பலி.. பலர் காயம் .. வியன்னாவில் 6 இடங்களில் துப்பாக்கிச்சூடு

hindutamil.in : ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் வெவ்வேறு ஆறு இடங்களில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் பலியாக, 15 பேர் காயமடைந்தனர். ஆஸ்திரியா ஆட்சித்துறைத் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ், "இந்த சம்பவத்தை வெறுப்பூட்டும் தீவிரவாத தாக்குதல்" என்று அழைத்துள்ளார். இந்த சம்பவத்தில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். தாக்குதலையடுத்து வியன்னாவில் பெரும்பாலான பகுதிகள் காவல்துறையால் சீல் வைக்கப்பட்டு மற்ற பயங்கரவாதிகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. வியன்னா நகர மேயர் இந்த சம்பவம் பற்றி கூறும்போது, இதுவரை 15 பேர் காயம் அடைந்ததாகவும் அதில் ஏழு பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

நகரின் மையப்பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகே தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், பயங்கரவாதிகள் அந்த ஆலயத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வந்தார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ராமேஸ்வரம் கோயில் நகைத்திருட்டு அம்பலம் குருக்கள்கள், மணியம் உள்ளிட்ட 30 பேர்கள் மீது சந்தேகம்

விகடன் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நகைகளை மறுமதிப்பீடு செய்தபோது, அவற்றில் பல நகைகளின் எடையில் குறைவு ஏற்பட்டிருந்தது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து கோயில் ஊழியர்கள் 30 பேருக்கு அபராதம் செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
ராமேஸ்வரம் கோயில்
ராமேஸ்வரம் கோயில்
உ.பாண்டி

இந்துக்களின் முக்கிய புனித தலங்களில் ஒன்றாக விளங்கிவருவது ராமேஸ்வரம். காசிக்கு நிகராக விளங்கும் இந்தத்தளத்திலுள்ள அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இலங்கை மன்னர் பராக்கிரம பாகுவால் சிறிய அளவில் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில், பின்னர் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களால் உலகப் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிராகரத்துடன் உருவானது. மன்னர்களுக்குச் சொந்தமான கோயிலாக இருந்ததால், இந்தக் கோயிலில் பழைமைவாய்ந்த தங்கம், வெள்ளி, பவளம், முத்து, வைரம், வைடூரியம் உள்ளிட்ட 65 வகையான ஆபரணங்கள் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.

வீடியோவால் பிரபலமான உணவுக் கடை முதியவர்: வீடியோ எடுத்த நபர் பணத்தை ஏமாற்றியதாக புகார்

BBC :சில தினங்களுக்கு முன் ஒரு வயதான தம்பதி தனது சாலையோர உணவுக் கடையில் வியாபாரம் ஏதும் ஆகவில்லை எனக் கண்கலங்கிய வீடியோ ஒன்று வைரலானது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த வயதான தம்பதி குறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலான பின் அவர்கள் கடையில்தான் கூட்டம் கூடிவிட்டதே பின் தற்போது என்ன என்றும் உங்களுக்கு தோன்றலாம்.. தான் குறித்த செய்தியை பதிவிட்ட வலைப்பூ நபர் பணமோசடி செய்துவிட்டதாக வைரலான முதியவர் தற்போது புகார் தெரிவித்துள்ளார். கெளரவ் வாசன் என்பவர் வெளியிட்ட வீடியோ பதிவில், இந்த கொரோனா பெருந்தொற்றால், டெல்லியில் உணவுக் கடை நடத்தி வரும் முதியவர் கண்டா பிரசாத், தன் கடைக்கு யாரும் வரவில்லை என கண்கலங்கியபடி பேசியிருப்பார்.

அந்த வீடியோ வைரலானது; பலரும் அந்த முதியவருக்கு உதவ முன் வந்தனர் மேலும், கெளரவ் வாசன் அந்த முதியவருக்கு உதவ நன்கொடைகள் வழங்குமாறும் கேட்டிருந்தார்.தற்போது தனது பெயரில் வந்த பணத்தை, கெளரவ் மோசடி செய்துவிட்டார் என முதியவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கமலா ஹாரிஸ் எங்கள் கிராமத்து பொண்ணு" - கொண்டாடும் மன்னார்குடி கிராமவாசிகள்

பதாகை
  பிரமிளா கிருஷ்ணன் - பிபிசி தமிழ் : தமிழகத்தின் மன்னார்குடி பகுதியில் உள்ள துளசேந்திரபுரத்தை சேர்ந்த மக்கள், கமலா ஹாரிஸ் அமெரிக்கத் துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாங்கள் பெருமையடைவதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றிபெறுவதற்காக, துளசேந்திரபுரம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமையன்று சிறப்பு பூஜை ஒன்றும் நடைபெறவுள்ளது. கமலா ஹாரிஸின் தாய்வழி குலதெய்வமான தர்மசாஸ்தா கோயில் துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கமலாவின் உறவினர் மூலம் நன்கொடை வழங்கப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். கமலா துணை அதிபராக வெற்றிவாகை சூடவேண்டும் என்பதற்காக தேர்தல் நாளான நவம்பர் 3ம் தேதி அன்று பாலாபிஷேக பூஜை ஒன்றை கிராம மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். கமலா வெற்றி பெற வாழ்த்துக்கள் என கூறி துளசேந்திரபுரத்தில் பதாகைகள் வைத்துள்ளனர்.

பாஜகவின் வேல் யாத்திரை நவ. 6-ம் தேதி கர்நாடகா முதல்வர் எடியூரப்பா சென்னை வருகை

தினகரன் :சென்னை: பாஜகவின் வேல் யாத்திரையை தொடங்கி வைக்க நவம்பர் 6-ம் தேதி கர்நாடகா முதல்வர் எடியூரப்பா சென்னை வருகிறார். நவம்பர் 15-ம் தேதி பழனியில் நடக்கும் யாத்திரையில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்கவுள்ளார். திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரேநாளில் 7 பில்லியன் டாலர் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பில் சரிவு.. அதிர்ச்சி !

tamil.goodreturns.in/ கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட வர்த்தக மற்றும் பொருளாதாரப் பாதிப்பில் இந்திய மக்களும், இந்திய நிறுவனங்களும் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்ட போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கும் முயற்சியாக இப்பிரிவு பங்குகளை விற்பனை செய்து 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை முதலீடாகப் பெற்றுப் பங்குச்சந்தையில் தாறுமாறான வளர்ச்சியைக் கண்டது. 

இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது மோசமான காலாண்டு முடிவுகள் மற்றும் பியூச்சர் ரீடைல் ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் இந்நிறுவன பங்குகளை மிகவும் மோசமான சரிவை எதிர்கொண்டுள்ளது. திங்கட்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தின் ஒரு நாள் சரிவில் ஏற்பட்ட பாதிப்பு முகேஷ் அம்பானி சொத்து மதிப்பில் சுமார் 5 பில்லியன் டாலர் அளவிலான சரிவை ஏற்படுத்தியுள்ளது. 

இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவன முதலீட்டாளர்கள் இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இழந்துள்ளனர்   ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர் ஆக விளங்கும் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த லாக்டவுன் காலத்தில் மட்டும் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. 

இலங்கையில் கரையொதுங்கிய சுமார் 100 திமிங்கிலங்கள்.. பாணந்துறை கடற்கரையில்..

veerakesari "பாணந்துறை கடற்கரையில் இன்று சுமார் 100 திமிங்கிலங்கள் கரையொ துங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ள நிலையில் அவற்றை மீண்டும் கடலுக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை பொலிஸார், இலங்கை கடலோர காவல்படையினரின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர். கரையொதுங்கியுள்ள திமிங்கிலங்கள் 10 முதல் 25 அடி நீளமுடையவை என்றும் கூறப்படுகிறது. இந் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் திமிங்கலங்களை பார்வையிட மக்கள் கடற்கரையில் கூடியுள்ளனர்

மத்தியபிரதேசத்தில் 28 தொகுதிகள் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு .- ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?

மத்தியபிரதேசத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம் - ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?   maalaimalar.com  :மத்தியபிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. மத்தியபிரதேசத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம் - ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? போபால்: 230 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்யா சிந்தியா போர்க்கொடினார். அவருக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியில் இருந்து விலகினர். இதையடுத்து, ஜோதிர் ஆதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். அவர்களை தொடர்ந்து மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர். 

இதனால்,  மத்தியபிரதேச காங்கிரஸ் அரசு கவிழ்ந்து சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை கைப்பற்றியது. இதன் விளைவாக ஏற்கனவே காலியாக இருந்த 3 இடங்களை  சேர்த்து மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. 

பா.ஜ அரசுக்குக் கப்பம் கட்டிவிட்டு தமிழ்நாட்டை கொள்ளையடிக்கும் அதிமுகவினர்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

 (எல்லா திட்டங்களிலும் 40 வீதம் கமிஷன் . அதில் 15 வீதம்  பாஜகவுக்கு . .10 வீதம் அமைச்சர்களுக்கு  10 வீதம்  எம் எல் ஏக்கள் .5 வீதம் அதிகாரிகளுக்கு ..  நாட்டில் உலாவரும் செய்தி) . 

 

dhinakaran :சென்னை: வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், பிரிட்டிஷாருக்குக் கப்பம் கட்டிவிட்டு சில குறுநில மன்னர்கள் மக்களை கொள்ளையடித்ததைப் போல, மத்திய பா.ஜ அரசுக்குக் கப்பம் கட்டிவிட்டு அ.தி.மு.க.வினர் தமிழ்நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதாக புதுக்கோட்டையில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டத்தில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டங்கள் சார்பில் நடைபெற்ற ‘’தமிழகம் மீட்போம்’’ - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்று, கலைஞர்  சிலையைத் திறந்து வைத்தார். பின்னர் அவர், திமுக முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கியும், மிசா தியாகிகள்  சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்ற தியாகிகளுக்கு ‘கலைஞர் தியாகச் செம்மல்’ விருதுகளையும் வழங்கி  பேசியதாவது:

சீனாவுக்கு எதிராக அமெரிக்க - இந்திய ராணுவக் கூட்டணி! விளைவுகள் என்ன?

minnambalam - பாஸ்கர் செல்வராஜ்; :
சிறப்புக் கட்டுரை:  சீனாவுக்கு எதிராக அமெரிக்க - இந்திய ராணுவக் கூட்டணி!  விளைவுகள் என்ன?

அமெரிக்க தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பாக இந்தியா - அமெரிக்கா இடையே துல்லியமான ராணுவ வரைபடங்களையும் ஏவுகணை வழிகாட்டு தொழில்நுட்ப வசதிகளையும் அமெரிக்க ராணுவத்திடமிருந்து இந்திய ராணுவம் பெறுவதற்கான BECA ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அமெரிக்கா எந்த நாட்டுடன் General Security of Military Information Agreement (GSOMIA), Logistics Exchange Memorandum Of Agreement (LEMOA), Communication Compatibility and Security Agreement (COMCASA), Basic Exchange Cooperation Agreement (BECA) ஆகிய நான்கு அடிப்படை ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்கிறதோ அந்த நாடு நடைமுறையில் அமெரிக்க அணியாக ஆகிவிடும். முதல் மூன்று ஒப்பந்தங்களில் இந்தியா ஏற்கனவே கையெழுத்திட்டு விட்ட நிலையில் நான்காவதாக இந்த ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்கத் தேர்தலுக்கு முன்பாக இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுவதால் இது அதிபர் ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெற உதவும் நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என்றும், அவர் இந்தத் தேர்தலில் தோற்கும் நிலையில் இருப்பதால் அவர் ஆட்சி இருக்கும்போதே இந்த முக்கிய ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்திக் கொள்ள முடிவு செய்திருக்கலாம் என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. எது எப்படியோ... வெற்றிகரமாக அதிகாரபூர்வ அமெரிக்க அணியாக இந்தியா மாறிவிட்டதில் இந்தியர் அனைவரும் பெருமை கொள்வோம்.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை? 20 முதல் 30 தொகுதிகளுக்குள் அதிகபட்சம்..

minnambalam : தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொடர்வதாக அண்மையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெளிவுபடுத்திவிட்டார். அடுத்ததாக திமுகவுடனான கூட்டணி பற்றி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தமிழக காங்கிரஸுக்கு சில தெளிவுகளைக் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.
டிஜிட்டல் திண்ணை:  திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை? ராகுல் உத்தரவு

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தினேஷ் குண்டு ராவ் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி சென்னை வந்தார். காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட குண்டு ராவ் பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, ’தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும். மொத்த இடங்களையும் திமுக காங்கிரஸ் கூட்டணியே கைப்பற்றும். தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்” என்று தெளிவான ஆங்கிலத்தில் கூறினார். அவர் coalition government என்று கூறாமல் allaince government என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். தமிழக காங்கிரஸ் புதிய பொறுப்பாளரான குண்டுராவின்

திங்கள், 2 நவம்பர், 2020

அமெரிக்கா தேர்தலுக்கு முந்தைய புதிய கருத்துக் கணிப்புகள் .. ஜோ பிடன் முன்னிலையில்

maalaimalar.com :அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், என்பிசி நியூஸ் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. டிரம்ப், ஜோ பிடன் வாஷிங்டன்: அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் நடக்கிறது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறும் இந்த தேர்தல் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் காண்கிறார். கொரோனா வைரஸ், இனப்பாகுபாடு ஆகிய விவகாரங்கள் இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தேர்தல் நடந்தாலும் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் அமெரிக்க மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மிகுந்தஆர்வம் காட்டிவருகின்றனர்.
அந்தவகையில் 8 கோடியே 50 லட்சம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்தினர். அதைப்போல் தேர்தல் நாளன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் இசையமைப்பாளர் நவீன் சங்கர் திடீர் மரணம்

பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி - Manithan maalaimalar :இளம் இசையமைப்பாளரான நவீன் சங்கர் உடல்நலக்குறைவால் திடீரென மரணமடைந்தது தமிழ் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. .... தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி நவீன் சங்கர் வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான விசிறி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் நவீன் சங்கர். இளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம் !

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக திகழும் நவீன் சங்கருக்கு, கடந்த வாரம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

உங்களுக்கு ஏற்ற சரியான வழிகாட்டுதல்களை தர தயாராக இருக்கிறேன்... Karthikeyan Fastura

Income tax தாக்கல் செய்யாவிட்டால் VISA கிடைக்குமா ? | panathottam |
Karthikeyan Fastura :Term Insurance என்பது தான் உண்மையான இன்சூரன்ஸ். அது தான் indemnityஐ பெரிய அளவில் கொடுக்கிறது. சராசரியாக இன்று ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கிறது.
வாழும் போதே பணம் கிடைக்கும் என்ற பாலிசிகள் அனைத்தும் indemnity நீங்கள் செலுத்தும் ப்ரீமியம் தொகையை காட்டிலும் இரண்டு மடங்கு மட்டுமே கொடுக்கும். அதாவது 3 லட்சம் ப்ரீமியம் செலுத்தினால் உயிரிழப்பு நேரும்போது கிடைக்கும் இழப்பீட்டு தொகை சராசரியாக 6 லட்சம் கிடைக்கும். இது சராசரி அளவு திட்டத்திற்கு திட்டம் இது மாறுபடும்.
அதே சமயம் எல்லோராலும் Term இன்சூரன்ஸ் எடுத்துவிட முடியாது. அவர்கள் இன்சுரன்ஸ்ஸில் நீண்டகால முதலீடாகவும் ஓரளவிற்கு நல்ல indemnityம் சேர்த்து கொடுக்கும் பாலிசிகள் நிறைய உள்ளன. அதில் சேரலாம்.
Insuranceஐ முதலீடாக பார்க்கக்கூடாது என்று நிறைய பேர் சொல்லிவருவதை பார்க்கிறேன். அதுவும் தவறு. ரிஸ்க் எடுக்க விரும்பாத நண்பர்கள் நீண்டகால முதலீடாக இன்சூரன்சில் செல்லலாம். ஆனால் அடிப்படையில் ஒரு Term Insurance எடுக்க தகுதி உள்ளவர்கள் அதை எடுத்துவிட்டு பிறகு இன்சுரன்ஸ் சேமிப்பு திட்டங்களில் செல்லலாம்.