செவ்வாய், 24 டிசம்பர், 2024

சி.பா.ஆதித்தனின் பண ஆசையால் உடன் பிறந்த மூத்த என் அப்பா தியாகி S.T.ஆதித்தன்

May be an image of 2 people

Balasubramania Adityan T. :  எங்க அப்பாவுக்கு 60 ஆம் வயதில் தான் நான் பிறந்தேன்...
எனக்கு சுமார் 15 வயது இருக்கும் போது தினத்தந்தியின் நிர்வாக டிரஸ்டி, சன் பேப்பர் மில் நிர்வாக இயக்குனர், மாலை முரசு இப்படி எத்தனையோ நிர்வாகத்தை தன் பெயரில்  வைத்து இருந்தார்கள்.
அப்போது எங்கள் வீட்டில் 4 கார்கள் உண்டு.
தனது தம்பி சி.பா.ஆதித்தனின் பண ஆசையால் உடன் பிறந்த மூத்த என் அப்பா தியாகி S.T.ஆதித்தன் அவர்கள்  உடன் சிறு வயது முதல் வேலை செய்த மாதவடையான் என்பவரை கயவர்கள் கொலை செய்தனர்.
எப்போது பணத்திற்காக ஒருவரை கொலை செய்ய உன் குடும்பம் துணிந்ததோ அந்த ரத்தக்கரையில் உள்ள ஒரு தம்படி பணம் கூட எனக்குத் தேவை இல்லை. என் பெயரில் உள்ள நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் நீயே பெற்றுக் கொண்டு உன் குடும்பத்தை நன்றாக வைத்துக் கொள் என்று கூறவே, சி.பா.ஆதித்தன் ஏற்கனவே தயாரித்து வைத்து இருந்த பேப்பர்களில் உடனே கையெழுத்துகள் அனைத்தையும் வாங்கினார்.

திமுக கூட்டணியில் விசிக 25 தொகுதிகளைக் கேட்கிறது

 nakkheeran.in :கூடுதல் தொகுதிகளில் வி.சி.க. போட்டியா?” - தொல். திருமாவளவன் எம்.பி. விளக்கம்!
தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அரசியல் கட்சிகள் சார்பில் ஆலோசனைக் குழுக்கள், ஒருங்கிணைப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சட்டமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில், விசிகவிற்கு இரட்டை இலக்கத்தில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளைக் கேட்டுப்பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” எனத் தெரிவித்திருந்தார்.

கக்கன் போலியாக கட்டி எழுப்பப்பட்ட அந்த காலத்து .....

May be an image of 1 person

 Sivakumar Nagarajan  :  கலைஞரும் தமிழ்நாடும் தமிழர்களும் கக்கனுக்கு செய்த துரோகத்தை பார்த்தீங்களா ப்ரோ???
கக்கனை போல வருமா? கக்கனை தோற்கடித்த தமிழ்நாடு! என்ற உலகமகா உருட்டை தமிழ்நாடு அரசியல் வரலாறு அறியாத WhatsApp காலத்து நண்பர்கள் பலர் படித்திருப்பீர்கள்.
25-01-1965 முதல் 12-02-1965 வரை 18 நாள் பற்றி எரிந்த இந்தி எதிர்ப்பு மொழிப்போரில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயானோர் எண்ணிக்கை, 63.
குமாரபாளையம்-15
பொள்ளாச்சி-10
பாண்டிச்சேரி-10
கோவை-4

தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

 தினத்தந்தி :  சென்னை :கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது;
தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

5 மற்றும் 8ஆம் வகுப்பு கட்டாய தேர்ச்சி ரத்து; மத்திய அரசின் முடிவால் அதிர்ச்சி - RTE Amendment 2024 :

 tamil.samayam.com - ஜான்வி :  RTE Amendment 2024 : தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அமலிக்கும் இருக்கும் நிலையில், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது.
இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் இந்த முடிவு மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamilகட்டாய தேர்ச்சி முறை ரத்து
கட்டாய தேர்ச்சி முறை ரத்து
RTE Amendment 2024 Compulsory pass for class 5 and 8th cancelled :

திங்கள், 23 டிசம்பர், 2024

உயர் கல்வி செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்! அரசு பள்ளி மாணவர்களுக்கு வந்த ‘செம’ செய்தி.

 tamil.oneindia.com - Vignesh Selvaraj  :  சென்னை: உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்துவிட்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவுக்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திராவிட மாடல் அரசின் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார்.

இலங்கை பொருளாதாரம் திவால் நிலையில் இருந்து மீண்டது!

Who is Ranil Wickremesinghe? | Tamil Guardian

ராதா மனோகர் : இலங்கை பொருளாதாரம் திவால் நிலையில் இருந்து மீண்டது!
கடந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மேம்பாடு பூரண வெற்றியை தந்துள்ளது எனலாம்!
மிகப்பெரிய பொருளாதார சுழியில் இருந்து இலங்கை மீண்டுள்ளது  
ஃபிட்ச் மதிப்பீடுகள் நேற்று இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR) ‘RD’ (கட்டுப்படுத்தப்பட்ட இயல்புநிலை) இலிருந்து ‘CCC+’ ஆக உயர்த்தியது.
இது கடந்த வார தொடக்கத்தில் நாட்டின் 12.55 பில்லியன் அமெரிக்க டாலர் சர்வதேச இறையாண்மை பத்திரத்தின் (ISB) கடனுக்கான கடனாளர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இலங்கை அதன் திவால்நிலையிலிருந்து மீண்டுள்ளது என்பதே இதன் அடிப்படையில் பொருள்.

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

ஜெய்ப்பூர் விபத்தின்போது தீயில் எரிந்தபடி உதவி கேட்டு ஓடிய நபர்: உதவாமல் வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்

தி ஹிண்டு  தமிழ்  : ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் எல்பிஜி எரிபொருள் லாரி மீது சரக்கு லாரி மோதியது. இதில் எரிபொருள் லாரி வெடித்து சிதறி எல்பிஜி வாயு காற்றில் பரவியது. இதனால் சில மீட்டர் தொலைவில் இருந்த லாரி பேருந்து உட்பட 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 35 பேர் பலத்த தீக்காயமடைந்தனர்.
விபத்து நேரிட்டபோது ஜெய்ப்பூரை சேர்ந்த ராதேஷியாம் (30) வேலை முடிந்து தனது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். சமையல் காஸ் காற்றில் பரவியதால் ராதேஷியாம் உடல் முழுவதும் தீப்பற்றியது. அவர் சுமார் 600 மீட்டர் தொலைவு தீயில் எரிந்தபடி உதவி கேட்டு ஓடினார்.

கென்யாவில் அதானியின் ஒப்பந்தம் நிறுத்தப்பட முக்கிய காரணமாக இருந்த இளைஞர் நெல்சன் அமென்யா

நெல்சன் அமென்யா, கென்யா, அதானி,

BBC -  எஸ்தர் கஹூம்பி  : அமெரிக்க நீதித்துறை அதானி குழுமத்தின் மீது அண்மையில் முறைகேடு புகார்களை முன்வைத்தது. அதனைத் தொடர்ந்து கென்ய அரசு அதானி குழுமத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.
ஆனால் அதற்கு முன்பாகவே, இந்த ஆண்டு ஜூலை மாதம் கென்ய மாணவர் ஒருவர் கென்ய அரசுக்கு அதானி குழுமம் வழங்கிய ஒப்பந்த முன்மொழிவு தொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இது அங்கே பெரும் பேசுபொருளாக மாறியது.
கென்யாவைச் சேர்ந்த, தொழில்துறை தொடர்பாக படிக்கும் மாணவர் நெல்சன் அமென்யா தான் அந்த ஆவணங்களை வெளியே கசியவிட்டது. யார் அவர்? இதனால் ஏற்பட்ட சர்ச்சை என்ன? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.