jaffnamuslim.com : திசைகாட்டியினர் வெறுப்புணர்வை ஏற்படுத்த முயற்சி, இவ்வாறு அரசியல் செய்ய முடியாது
நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாதவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் உரிமை இல்லை எனவும், நாட்டின் எதிர்காலம் குறித்து பேசுபவர்களுக்கு மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இலங்கையின் வர்த்தகர்கள் மற்றும் கைத்தொழிற் துறையினர்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்த போதிலும், இலங்கை செய்துள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை இரத்துச் செய்வதகாக அவரின் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாமல் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என கேள்வி எழுப்பினார்?
சனி, 7 செப்டம்பர், 2024
ஜேவிபியினர் மீண்டும் வெறுப்பு அரசியலை செய்கிறார்களா?
பர்மா மலேயா இலங்கை நாடுகளில் செயல்பட்ட திராவிட இயக்கங்களின் வரலாறு
ராதா மனோகர் : திராவிட கருத்தியலின் முக்கிய முழக்கம் சுயமரியாதை கோட்பாடுதான்
சுயமரியாதை கோட்ப்பாடு உருவாகி வளர்ந்த தமிழ்நாட்டில் இன்று சர்வ சாதாரணமாக சங்கிகள் பல போர்வைகளில் மேடைகள் தோறும் இந்துத்துவா கருத்துக்களை விதைத்து கொண்டு வருகிறார்கள்
உதட்டில் மட்டும் திராவிட கருத்துக்களை பேசும் பல அரசியல்வாதிகள் அந்த கூட்டங்களின் முன் வரிசைகளில் அமர்ந்திருக்கிறார்களே?
தொலைக்காட்சிகளில் தெரியும் அந்த காட்சிகள் சங்கிகளுக்கு ஒரு அங்கீகாரம் தருகிறதே ?
இது எங்கே கொண்டு போய் விடும் என்பதை பட்டுத்தான் தெரியவேண்டும் என்றால்
பெரியார் அண்ணா கலைஞர் என்ற பெயர்களை ஏன் உச்சரிக்க வேண்டும்?
இன்றைய தமிழகத்திற்கு குறைந்த பட்சம் திராவிட வரலாறு கூறப்படவேண்டும்
இலங்கை மீது இந்திய அரசின் தொடர் கண்ணாமூச்சி விளையாட்டு
ராதா மனோகர் : இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்காக கூட்டணிகளை ஒழுங்கமைக்கும் பணியில் இந்திய ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது!
குறிப்பாக வடக்கு மற்றும் மலையக தமிழ் கட்சிகளையும் முஸ்லிம் கட்சிகளையும் சஜித் பிரேமதாசா அணிக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் ஒன்றிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தெரிகிறது.
அஜித் தோவல் மற்றும் இந்திய தூதரங்களின் ஆலோசனைகள் செவி மடுத்து அரசியல் செய்யும் சிறுபான்மையினரின் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் இந்திய அரசின் தூதுவர்களோடு பேசும் பொழுது ·
தமிழகத்தில் சுமார் தொண்ணூறு ஆயிரம் தமிழர்கள் இன்னும் குடியுரிமை அற்று பெரும் கேள்விக்குறியான் வாழ்வு வாழ்கிறார்கள்
இந்திய அரசுக்கு இதை எடுத்து கூறவேண்டிய கடமையும் வாய்ப்பும் தற்போது இலங்கை தமிழ் தலைவர்களுக்கு உண்டு
முதலில் இதை செய்யுங்கள் ..
அப்புறம் இலங்கை ஜனாதிபதியாக சஜித் வருவதா விஜய் வருவதா அஜித் வருவதா என்பதை பற்றி பேசலாம் என்று உங்கள் எஜமானர்களுக்கு கூறுங்கள்
டெல்லியில் பல்கலைக்கழக விடுதியில் தமிழக மாணவி தற்கொலை ? - கொலை?
தினமணி : “டெல்லி துவாரகாவில் உள்ள சட்டப்பல்கலைக்கழக விடுதியில், தமிழக மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த அமிர்தவர்ஷினி என்ற மாணவி பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாணவியின் அறையில் இருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை என்று மாணவி எழுதி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.படிப்பு சம்பந்தமாக மாணவி ஒருவித பதற்றத்தில் இருந்ததாக சக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
அசோக் நகர் பள்ளியில் சங்கி சொற்பொழிவு; தட்டிக்கேட்ட ஆசிரியர்- என்னதான் நடந்தது?
நக்கீரன் : சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி, தமிழக முதல்வர் வரை சென்று விவகாரமாகியுள்ளது.
பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதகரமானத்தைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது யார்?
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி கொடுத்தாரா?
அல்லது தன்னிச்சையாக இவர் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டாரா?
என்பது குறித்து முழுமையாக விசாரணை தொடங்கி இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. ஆக்சிஜன் சப்போர்ட்- ஐ துண்டித்து கணவன் கொலை
மாலை மலர் : உயிருக்குப் போராடும் கணவனுடன் ஆம்புலன்சில் வந்த மனைவிக்கு ஆபுலன்ஸ் ஓட்டுநரும் உதவியாளரும் பாலியல் தொல்லை அளித்து கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த ஆகஸ்ட் 29 அன்று உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட தனது கணவனுக்கு வைத்தியம் அளிக்க தனியார் மருத்துவமனையில் ஆகும் செலவை சமாளிக்க முடியாததால் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றில் மனைவி அழைத்துச் சென்றுள்ளார். கணவனின் சகோதரனும் அவர்களுடன் சென்றுள்ளார்.
பள்ளிக்கல்வி துறையா சங்கிக்கல்வி துறையா
சாவித்திரி கண்ணன் : அசோக் நகர் அரசு பள்ளியில் ஆதிக்க சக்திகள் நடத்திய சம்பவம் வெளியில் தெரிய வந்ததால் இவ்வளவு பரபரப்பு!
கடந்த ஓராண்டாகவே இது போல தமிழகம் முழுக்க பல பள்ளிகளில் சில அமைப்பினர் கல்வித் துறை அனுப்பியதாக யோகா பெயரிலும், உடற்பயிற்சி பெயரிலும் உள் நுழைந்து கேட்பாரற்ற வகையில் செயல்படுகின்றனர் என அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் சொல்கிறார்கள்.
ஆன்மீகத்திற்கோ, யோகாவிற்கோ நான் எதிரானவன் இல்லை. அதற்கென தனி பள்ளிகள் நடத்துங்கள். மகிழ்ச்சி. தேவைப்படுவோர் வந்து கற்கக்கட்டுமே!
‘’புத்தகப் படிப்பு மட்டும் போதாது, மத்தகப் படிப்பு வேண்டும்’’
‘’இதையெல்லாம் உணர மறுத்ததால் தான், பேச தயங்குவதால் தான் இந்த நாடு நாசமாகப் போனது.’’
வெள்ளி, 6 செப்டம்பர், 2024
சென்னை அசோக் நகர் பள்ளிக்கூடத்தில் இந்துத்வா பிரசாரத்தில் இறங்கிய பாலியல் குரு மகாவிஷ்ணு
மாலை மலர் : சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் மூன்று நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆன்மிகச் சொற்பொழிவாளர் மகா விஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் புறம்பாகப் பேசியதாக கூறப்படுகிறது. மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம் தான் காரணம் என்று பேசியுள்ளார்.
அரசு பள்ளிக்கூடங்களில் ஆன்மிகத்திற்கு இடமில்லை என்று கேள்வி எழுப்பிய ஆசிரியருக்கு ஆன்மிகச் சொற்பொழிவாளர் மகா விஷ்ணு ஆன்மிகம், மறுபறவி, பாவ-புண்ணியம்" ஆகியவை பற்றி பேசினார்.
வியாழன், 5 செப்டம்பர், 2024
திரைத்துறையில் பாலியல் புகார் உறுதியானால் பணியாற்ற 5 ஆண்டுகள் தடை விதிக்க பரிந்துரை
dinakaran.co : சென்னை: பாலியல் புகார் உறுதியானால் திரைத்துறையில் பணியாற்ற 5 ஆண்டுகள் தடை விதிக்க பரிந்துரை செய்ய தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நடிகர் சங்கத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்! காளீஸ்வரனின் கையில் மாவுக் கட்டு!
tamil.oneindia.com - Rajkumar R : விருதுநகர் அருகே கொலை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களை அப்புறப்படுத்த முயன்ற பெண் டிஎஸ்பியை போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதோடு அவரது தலை முடியை பிடித்து இழுத்து ரகளை செய்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெண் போலீஸ் அதிகாரி தலைமுடியை இழுத்த காளீஸ்வரன், தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்ததால் கை உடைந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அருப்புக்கோட்டையில் காளி குமார் என்பவரை கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் திருச்சுழி அருப்புக்கோட்டை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 மீனவர்களுக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் : இலங்கை நீதிமன்றம்
மின்னம்பலம் -christopher : தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் விதித்த இலங்கை அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு உடனே முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (செப்டம்பர் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”இலங்கை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரில் 12 பேருக்கு தலா ரூ.3.5 கோடி (இந்திய மதிப்பு ரூ. 1 கோடி) அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
அபராதத்தை செலுத்தத் தவறினால் மீனவர்கள் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
புதன், 4 செப்டம்பர், 2024
குஜராத் கனமழை எதிரொலி: பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு
மாலை மலர் : அகமதாபாத் குஜராத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்த கனமழையில் சிக்கி 29 பேர் பலியாகினர். வெள்ளத்தில் சிக்கிய சுமார் 1,200 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் இருந்து சுமார் 20,000 பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
செவ்வாய், 3 செப்டம்பர், 2024
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை நடந்த ஆர்ஜி கார் மருத்துவமனை முதல்வர சந்தீப் கோஷ் கைது
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட போது ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷை இப்போது சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் தான் அவருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்திய நிலையில், இப்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை, வெள்ளம் - புகைப்படங்களுடன் BBC Tamil
BBC News தமிழ் - - லக்கோஜு ஸ்ரீநிவாஸ் : ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
ஆந்திராவில் தலைநகர் அமராவதி மற்றும் அருகிலுள்ள விஜயவாடா ஆகிய இரண்டு பகுதிகளும் நீரில் மூழ்கின.
கிருஷ்ணா, குண்டூர், ஏலூர் மாவட்டங்களில் பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
விஜயவாடாவில் புடமேரு ஆறு நிரம்பியதால் சிங்நகர், வம்பே காலனி, ராஜராஜேஸ்வரிபேட்டை உள்ளிட்ட பல பகுதிகள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கின.விஜயவாடாவில்
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை மீட்டபோது கைக்குழந்தையை தூக்கிச்
சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த பணியாளர்
திங்கள், 2 செப்டம்பர், 2024
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்காக இந்தியா வேலை செய்கிறது ?
island - Indrajith
Highly placed sources within the Indian High Commission dismissed the rumours circulating that India’s National Security Adviser (NSA), Ajit Doval, was in Colombo for a last-ditch effort to reconcile the UNP and SJB and persuade them to contest the forthcoming presidential election as a single entity.
“If such a need had arisen, Doval could have spoken to the relevant leaders from New Delhi itself, rather than travelling all the way to Colombo,” a senior diplomatic source told the Sunday Island. “Even if he needed to meet these leaders in person, he could have done so without the knowledge of the media and other parties. He has done so many times before. There is no basis for the claim that Doval met with Sri Lankan leaders to exert influence over their election plans,” the official added.
ராதா மனோகர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி மோடி அரசின் தோல்வி
இலங்கை அரசியல் தலைவர்களுடன் பேச வேண்டிய தேவை இந்திய பாதுகாப்பு ஆலோசகருக்கு இல்லை
அப்படி ஒரு தேவை ஏற்பட்டிருந்தால், கொழும்புக்கு பயணிப்பதை விட, புதுதில்லியில் இருந்தே சம்பந்தப்பட்ட தலைவர்களுடன் டோவல் பேசியிருக்க முடியும்” என்று இந்திய மூத்த இராஜதந்திர வட்டாரம் ஒன்று சண்டே ஐலண்டிடம் தெரிவித்தது.
“ஒருவேளை அஜித் தோவல் இரகசியமாக இந்த தலைவர்களை நேரில் சந்திக்க வேண்டியிருந்தால் கூட, ஊடகங்களுக்கும் மற்ற கட்சிகளுக்கும் தெரியாமல் அவர் அதைச் செய்திருக்கலாம்.
இதற்கு முன்பும் அவர் பலமுறை இதை (இரகசியமாக) செய்திருக்கிறார்.
இதைத்தான் நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்
ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியை தெரிவு செய்ய கூடாது என்று நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது திரு டல்லாஸ் அழகப்பெருமா என்ற ஒரு விலாசமில்லாத அரசியல்வாதியை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று முழு மூச்சுடன் இந்தியா முயன்றது
பார்முலா 4 கார் பந்தயம்- வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கிய உதயநிதி
BBC News தமிழ் : தெற்காசியாவில் முதன்முறையாக, சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் நடைபெறுகிறது. ஃபார்முலா 4 (F4) இந்தியன் சாம்பியன்ஷிப், இந்தியன் ரேசிங் லீக் (IRL- ஐஆர்எல்) என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இவைதவிர ஜேகே டயர் ஜூனியர் தேசிய போட்டிகளும் நடைபெறுகின்றன.
கார் பந்தயங்களுக்கு இடையில் பொழுதுபோக்கு கார் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இப்போது நடைபெறுவது ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் கார் பந்தயத்தின் 2ஆம் சுற்று போட்டிகள். முதல் சுற்று போட்டிகள் ஒரு வாரத்திற்கு முன்பாக (ஆகஸ்ட் 24 மற்றும் 25) சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் நடைபெற்றன. தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், ஆந்திராவைச் சேர்ந்த தனியார் அமைப்பு
ஒன்றும் இணைந்து ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துகின்றன. சென்னை
தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா
சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள 3.5 கிலோ மீட்டர்
சுற்றளவு கொண்ட பாதையில் இது நடத்தப்படுகிறது.
ஞாயிறு, 1 செப்டம்பர், 2024
ஒரே பேட்டிக்காகவா சவுக்கு சங்கர் மீது 15 எஃப்.ஐ.ஆர்?" - உச்சநீதிமன்றம் கேள்வி!
மின்னம்பலம் - Selvam : யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 15 வழக்குகளையும் ஒரே வழக்காக இணைத்து விசாரிக்க முடியுமா என்று தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் போலீசாரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா , உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.