சனி, 28 நவம்பர், 2015

பெண்களை கடத்தி எயிட்ஸ் நோயாளியுடன் உறவு கொள்ளவைத்து விபசாரம் ..கேரளா புரோக்கர் ஜோஷி அச்சயன் கைது

online sex-trafficking case, Joshi alias Achayan, has been remanded to custody. The Kochi native was..
கொச்சி: கேரள செக்ஸ் கோல்மால் புது கட்டத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது. அம்மாநிலத்தின் விபச்சார புரோக்கர் ஒருவன் கொடுத்துள்ள வாக்குமூலம், அவன், கஸ்டமர்களின் வயிற்றில் புளிகரைப்பதாக உள்ளது.
ஆன்லைனில் விபச்சாரம் செய்து வந்த மாடல் அழகி  அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆன்லைன் செக்ஸ் கும்பல்களுக்கு போலீசார் வலைவீச தொடங்கினர். அப்படி சிக்கியவன்தான், ஜோஷி அகா அச்சயன்.
கோழிக்கோட்டை சேர்ந்த அச்சயன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளி வந்துள்ளது.
எய்ட்ஸ் பரிமாற்றம் இதுகுறித்து கூறப்படுவதாவது: பெண்களை கடத்திவரும் அச்சயன், அந்த பெண்கள் தப்பியோடிவிடுவர் என்ற சந்தேகத்தின்பேரில், முதலில் ஒரு எய்ட்ஸ் பாதித்த நோயாளியுடன் உறவு கொள்ளச் செய்வானாம்.

ராமதாஸ்: தமிழக அமைச்சர்கள் அண்டை மாநிலங்களில் சொத்து குவிக்கிறார்கள் !

தமிழக அமைச்சர்கள் அண்டை மாநிலங்களில் சொத்து குவிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராம்தாஸ் பகிரங்கமாக குற்றசாட்டினார். ;மேலும் இது குறித்து அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியாவின் முன்னணி பொருளாதார ஆய்வு இதழான இந்தியா ஸபென்ட் தனிநபர் கடனில் தமிழகம் முதலிடம் பெற்றது. இது ஜெயலலிதாவின் புதிய சாதனை. அவர் மது விற்பனையில் முதலிடம் என பல சாதனைகளை செய்தவர்கள். முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என ஓயமாட்டேன் என ஜெயலலிதா சபதம் நிறைவேற்றியுள்ளார். சபதம் நிறைவேற்றும் வகையில் பல வகையில் முதலிடத்தை தமிழகத்தை கொண்டு வந்துள்ளார். இந்தியாவின் பெரிய மாநிலங்களில் கடன் சுமை குறித்து வெளியிட்டுள்ள அந்த இதழ் 2014 15 வரையில் தனிநபர் கடன் சுமை தமிழகம் முதலிடம் இருப்பது தெரிவித்துள்ளது.

விஜயதாரணி மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு. ...ஈவிகேஸ் ஆதரவாளர் புகார்.....ஜாதியை இழுத்து பேசினார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தரப்பைச் சேர்ந்த தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் துணை தலைவர் மனோகரி, சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி மற்றும் அவரது ஆதரவாளர்களான சாந்தா சீனு, மானசா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். இதன் பேரில் விஜயதாரணி உள்ளிட்ட 3 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகார் கொடுத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோகரி, சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தலித்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் இவர்கள் ஜாதியை அவமானப்படுத்தி எங்களை கேவலப்படுத்துகிறார்கள். இந்த அம்மாவுக்கு (விஜயதாரணி) மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருப்பதற்கு தகுதியே கிடையாது.

மழைக்கும் கமிசனுக்கும் அஞ்சி ஓடிய முதலீட்டாளர்கள்

சென்னை மழைக்கு அஞ்சி, தொழில் முதலீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை, முதலீட்டாளர்கள் தவிர்த்து வரும் தகவல் வந்துள்ளது. ;இதுகுறித்து, தொழில் துறை வட்டாரங்கள் கூறியதாவது:சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்குப் பின், தொழில் முதலீட்டாளர்களுடன், ஆலோசனைக் கூட்டங்கள் வரிசையாக நடந்தன. அதன் காரணமாக, சில ஆலைகளில் செயல்பாடும் துவங்கியது. ஆனால், கடந்த இரு வாரமாக, இப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு, சென்னையில் பெய்து வரும் தொடர் மழையே காரணம். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பல கூட்டங்கள், மழை காரணமாக முதலீட்டாளர்கள் வராததால், ஒத்திவைக்க நேர்ந்தது. கடந்த வாரம், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய, முதலீட்டாளர் ஒருவர், தான் போக வேண்டிய விமானத்தை தவறவிட்டார்.  2.42 லட்சம் கோடி என்பதே கடைந்தெடுத்த புருடா ...ஒரு புருடாவை கூட அம்மையார் மனம் குளிரும் படி விட வேண்டும் என ...24ம் தேதி 2ம் மாதம் அம்மையார் பிறந்த தேதியை கொண்டு....2.42 என சொல்லி மக்களை முட்டாளாக்கி உள்ளனர்...எவன் வருவான்... இருப்பவன் ஓடாமல் இருக்க வேண்டும்.......

நரபலிகளுக்கு தனி விசாரணை! சகாயம் அறிக்கை! A to Z ரிப்போர்ட் ஜூ.விகடன் ரிப்போர்ட்

சி.பி.ஐ. அதிகாரிகள்... லோக் ஆயுக்தா நீதிமன்றம்... நரபலிகளுக்கு தனி விசாரணை! சகாயம் அறிக்கை! A to Z ரிப்போர்ட்‘‘இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துவிட்டனர். அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை. சகாயம் குழுவுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதைச் சகித்துக்கொள்ள மாட்டோம். அப்படி முட்டுக்கட்டை போடப்படுமானால், எனது கடுமையான இன்னொரு பக்கத்தை நீங்கள் பார்ப்பீர்கள். சுப்ரீம் கோர்ட் காட்டிய வழியில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் தடை செய்துவிடுவோம்’’ இப்படி அரசுக்கு எதிராக கர்ஜித்தவர் தலைமை நீதிபதி கவுல்.
கிரானைட் கொள்ளையின் முகம் கிழிந்து தொங்குகிறது. ‘16 ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் கொள்ளை’ இப்போது 1.9 லட்சம் கோடி இழப்பாக எழுந்து நிற்கிறது. கிரானைட் கொள்ளையை கண்டுபிடித்ததற்காக மதுரை கலெக்டர் பதவியில் இருந்து பந்தாடப்பட்ட சகாயம்தான், இப்போது அதன் விசாரணை அதிகாரி. ஆட்சியாளர்கள் அமைக்கும் விசாரணை கமிஷன்களைப்போல சகல வசதிகள், ஆள், அம்பு, சேனையோடு, ஏசி அறைக்குள் அமர்ந்துகொண்டு சகாயம் விசாரணை நடத்தவில்லை. பல உருட்டல் மிரட்டல்களுக்கு இடையில் சுடுகாட்டில் படுத்துக்கிடந்து சகாயம் நடத்திய வேள்வி, முடிவை எட்டிப்போய்க் கொண்டிருக்கிறது. சகாயம் அளித்த அறிக்கையின் சாராம்சமாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தொகுப்பு இது...
டிராஃபிக் ராமசாமியின்பிள்ளையார் சுழி!

சௌதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்ற திட்டம்- அம்னெஸ்டி

சௌதி அரேபியா பல டஜன் கணக்கானோருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு அச்சம் தெரிவித்திருக்கிறது.  சௌதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டம் - அம்னெஸ்டி 55 பேர் "பயங்கரவாதக் குற்றங்களுக்காக" மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்று ஒக்காஸ் என்ற பத்திரிகை கூறியது. ஆனால் அல் ரியாத் பத்திரிகையில் வெளியாகி, தற்போது நீக்கப்பட்ட செய்தி ஒன்றில், 52 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதாக்க் கூறப்பட்டிருந்த்து. இதில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட ஷியா முஸ்லீம் பிரிவினரும் அடங்குவர் என்று கருதப்படுகிறது.

ஆட்டம் போட்ட பி.ஆர்.ஓ-க்கள்! வெளியேற்றியது வெள்ளம்...விகடன் .

அடாவடி... அத்துமீறல்... வசூல் வேட்டை! ஆட்டம் போட்ட பி.ஆர்.ஓ-க்கள்! வெளியேற்றியது வெள்ளம்ரசின் செய்தித் துறைக்குள் இப்போது அதிர்வேட்டுச் சத்தம் கேட்கிறது. கோட்டையிலும் திருநெல்வேலியிலும் பணியாற்றிய இரண்டு செய்தித் துறை அதிகாரிகள் அதிரடியாக கழற்றிவிடப் பட்டிருக்கிறார்கள். அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டிய செய்தித் துறையினர் கடமையைச் செய்யாமல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அடாவடிகளை அரங்கேற்றியதற்காகத் தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் திருநெல்வேலி மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி அண்ணா. இன்னொருவர் தலைமைச் செயலகம் பத்திரிகைத் தொடர்பு உதவி இயக்குநர் உமாபதி.
முதலில் அண்ணாவை பார்ப்போம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பணியாற்றும் அரசு பி.ஆர்.ஓ-க்களை நியமிப்பதும் மாற்றுவதும் செய்தித் துறைதான்.

ராமநாதபுரம்: புனரமைக்கப்படும் ஊரணிகள்...நிலத்தடி நீர் பெருக்குவதில் சாதனை !

இனி... ராமநாதபுரம் தண்ணியுள்ள காடு..!’
புனரமைக்கப்படும் ஊரணிகள்... அசத்தும் ஆட்சியர்!இரா.மோகன், படங்கள்: உ.பாண்டிவிவசாயத்துக்கு காவிரித் தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மத்தியில்... குடிநீர்த் தேவைக்கே மற்ற மாவட்டங்களின் நீர் ஆதாரங்களை நம்பி இருந்த மாவட்டம் ராமநாதபுரம். இதனால்தான் ராமநாதபுரம் ‘தண்ணி இல்லா காடு’ என அழைக்கப்பட்டது. அந்த அளவுக்கு வறட்சி மாவட்டமாக இருந்த ராமநாதபுரம், இன்று ‘நிலத்தடி நீரைப் பெருக்குவது எப்படி?’ என மற்ற மாவட்டங்களுக்கு வழிகாட்டி வரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது!
சுமார் 410 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் கிழவன் சேதுபதி, நகரின் நீர் ஆதாரங்களுக்காக சுமார் 38 ஊரணிகளை உருவாக்கினார்.

விஷ்ணுப்ரியா வழக்கு சாட்சி வழக்கறிஞர் தற்கொலை முயற்சி...தலித் அமைப்புகள் டெல்லியில் போராட்டம்



திருச்செங்கோடு துறை துணை கண்காணிப்பாளர் விஷ்ணுப்ரியா தற்கொலைத் வழக்கில் திடீர் திருப்பமாக முக்கிய சாட்சியாக கருதப்பட்ட மதுரை வழக்கறிஞர் தற்கொலை முயற்சி செய்து மதுரை அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிஎஸ்பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக விசாரிக்க பட்ட மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் மாளவியா, சிபிசிஐடி போலீஸார் தன்னை டார்ச்சர் செய்வதாகவும், அவருடன் எனக்கு ஏற்பட்ட காதல் பிரச்சனையால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று என்னை ஒத்துகொள்ள சொல்லி சிபிசிஐடி போலீஸார் நெருக்கடி செய்கின்றனர் என்ற குற்றசாட்டை ஏற்கனவே, வழக்கறிஞர் மாளவியா ஊடகங்கள் வழியாக கூறியிருந்தார். இந்நிலையில், சிபிசிஐடி நெருக்கடியால் அவர் இன்று மதுரையில் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அப்பொழுது அவரை வீட்டில் அருகில் இருந்தவர்கள் மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். தற்பொழுது, அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது webduniya.com

தந்தி டிவி விவாதங்களில் திமுக கலந்துகொள்ளாது...நடுநிலை என்ற பெயரில் அதிமுகவுக்கு தந்தி டிவி....

நடுநிலை என்ற பெயரில் அதிமுக-விற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டி இனிமேல் தந்தி தொலைக்காட்சியில் நடைபெறும் விவாதங்களில், திமுகவினர் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ ஆளுங்கட்சியாக இருந்த போதும், எதிர்கட்சியாக இருக்கும் போதும் ஆளும் அதிமுக கட்சிக்கு ஆதரவாகவும் தி.மு.கழகத்தை எதிர்த்தும் பிரச்சாரம் செய்து வருவது ஒரு சில ஊடகத் துறையினர் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது “நடுநிலை” என்ற பெயரை சூட்டிக் கொண்டுள்ள “தந்தி தொலைக்காட்சி ”, ஆளும் அதிமுக அரசுக்கு ஆதரவாகவும் - தி.மு.கழகத்திற்கு எதிராகவும் தொடர்ந்து, திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.

சினிமா புத்தகங்கள்-1 சினிமா ஒரு கனவை போன்றது. கனவில் வரும் இமேஜ்கள் தொடர்ச்சியற்று....

Making moviesதமிழ் சினிமாவின் இயக்குனர்களை, இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடிய இயக்குனர்கள், திரைக்கதை எழுதி இயக்கக்கூடியவர்கள், டைரக்ஷனை விட திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர்கள் என்று வகைப்படுத்தலாம். எந்த வகையான இயக்குனராக இருந்தாலும், ஒவ்வொரு காட்சியை இயக்கும் போதும் எல்லோரிடமும் இருக்கும் பிரதான கேள்விகள், ‘கேமராவை எங்கே வைப்பது?’ ‘நடிகரிடம் என்ன விளக்குவது?’. இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலம், சினிமா இயக்குதல் பற்றியும் திரைக்கதை எழுதுதல் பற்றியும் ‘On directing film’ என்ற இந்த புத்தகத்தில் அழகாக விவரிக்கிறார் டேவிட் மேமட். எப்படி ஒரு காட்சியை இயக்குவது என்பதற்கு அவர் சொல்லும் பதில்கள் எப்படி ஒரு காட்சியை எழுதுவது என்பதற்கும் பொருந்துவதால், இந்த புத்தகம் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் பெரிதும் பயன்படும்.
இயக்குனரின் வேலை என்ன என்ற பிரதான கேள்விக்கு மேமட் சொல்லும் பதில், “திரைக்கதையில் இருந்து ஷாட் லிஸ்ட் எடுப்பதே இயக்குனரின் வேலை. செட்டில் செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை. விழிப்பாக இருந்தாலே போதும்.” என்பதே.

நீதிபதிகள் மன்னர்களும் அல்ல!..பணத்துக்கும் பெண்ணுக்கும் பதவிக்கும் விலை போன வரலாறுகளும்....

adv_stuggle_book
”நீதிபதிகள் மன்னர்களும் அல்ல! வழக்கறிஞர்கள் அடிமைகளும் அல்ல!”
-புதிய ஜனநாயகம் அக்டோபர் இதழில் தோழர் மருதையன் எழுதிய கட்டுரை
  • “ஒரு ஹெல்மெட் தீர்ப்புக்காக இவ்வளவு பிரச்சனை, போராட்டம் தேவையா?”
  • ”எப்படி இருந்தாலும் நீதிபதி நல்லதுக்கு தானே சொன்னார்? தீர்ப்பின் நோக்கத்தை பார்க்கவேண்டாமா?”
  • ”நீதிமன்றத் தீர்ப்பை வழக்கறிஞர்களே விமர்சிக்கலாமா?”
– இப்படி கேள்விகளை முன்வைப்பவர்களுக்கும், வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்கும் பதில்கள்!
பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் சிந்தனைக்கு…. பிரசுரம்!
”மதுரை வழக்கறிஞர்களைக் காப்போம்!
நீதித்துறை ஊழலை ஒழிப்போம்!” – கட்டுரை!
”வழக்கறிஞர்களுக்கு எதிரான அடக்குமுறை : நடந்தது என்ன?” – தேதி வாரியாக நடைபெற்ற நிகழ்வுகள்!
படியுங்கள்! மக்கள் மத்தியிலும், சக வழக்கறிஞர்கள் மத்தியிலும் பரப்புங்கள்!
நீதித்துறை ஊழலை ஒழிப்போம்!

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பார்ப்பன பாசிச பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி.....

ருப்பைப் பதுக்கி வைத்திருக்கும் கள்ள வியாபாரிகளைவிட, மாட்டுக் கறி உணவு அருந்துபவர்களைத்தான் மிகப் பெரும் கொடியவர்களாக, சமூக விரோதிகளாகச் சித்திரிக்கின்றன மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும். பருப்பைப் பதுக்கி வைத்த கள்ள வியாபாரிகளுக்கு உடனடி தண்டனை வழங்கப்பட்ட செய்தி எதுவும் இதுவரை நமக்குக் கிட்டவில்லை. ஆனால், பசு மாட்டிறைச்சியைச் சாப்பிட்டதாக பழிபோடப்பட்ட 50 வயதான முகம்மது அக்லக் செங்கற்களால் அடித்தே கொல்லப்படுகிறார்; பசு மாட்டினைக் கொன்றதாகப் பழி போடப்பட்ட 24 வயதான ஜாஹித் அகமது பட் உயிரோடு எரித்துக் கொல்லப்படுகிறார்; மாடுகளை இறைச்சிக்காகக் கடத்திச் செல்வதாகப் பழி போடப்பட்ட 28 வயதான நோமன் அக்தர் அடித்துக் கொல்லப்படுகிறார்.

தோழர் கோவன் கலைஞரை சந்தித்ததை ஏன் விமர்சிகிறார்கள்? ஜாதி ஜாதி ....

12279121_1094048800607324_2725703425716751393_n
தோழர் கோவன், கலைஞரை சந்தித்தை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்கள், திமுக எதிர்ப்பை மட்டுமே அரசியலாகக் கொண்ட பலரும்.
கோவன் கைது செய்யப்பட்டபோது, அன்றே – முதலில் அதைக் கண்டித்துக் கைதை பிரச்சினையாக்கி மய்ய அரசியலுக்குத் தள்ளியவர் கலைஞர் தான். அவர் கண்டிக்காமல் இருந்திருந்தால், அது ஒரு துண்டு செய்தியாககூட ஊடகங்களில் வந்திருக்காது.
அதன் பிறகே பலரும் அதைக் கண்டித்தார்கள். அது இந்தியா வரை கவனத்திற்குப் போனதற்குத் திமுக வின் கண்டனமே காரணம்.
தேர்தலில் பங்கெடுக்காத அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தும்போது அதை ஊடங்கள் பத்து பைசாவிற்குக்கூட மதிப்பதில்லை.
அந்த அடிப்படையில் பார்த்தால் மக்கள் அதிகாரம் குழுவினரும் தோழர் கோவனும் கலைஞரை தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பார்த்திருக்க வேண்டும். அதனால் கலைஞரை கோவன் சந்தித்தது சரியான அரசியல் கண்ணோட்டம் தான்.

பள்ளி மாணவர்களுக்கு ஜாதி கயிறு ! நெல்லை ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் தங்கள் ஜாதியை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் கயிறுகட்டி வருவது தொடர்பாக 2 வாரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரனுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி மோதல்களும், அதன் பின்னணியில் நடைபெறும் கொலைகளும் பல்வேறு அதிர்வு அலைகளை உருவாக்கியிருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஜாதி வெறி தலைதூக்குவது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுவருகிறார்கள்.

வெள்ளி, 27 நவம்பர், 2015

பிகாரில் ஏப்ரல் முதல் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும்..நிதிஷ்குமார் அறிவிப்பு

பாட்னா :'பீஹாரில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப் படும்' என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.பீஹார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு நவ., 20ல் பதவியேற்றது. முன்னதாக சட்டசபை தேர்தலை ஒட்டி நடைபெற்ற பிரசாரத்தின் போது ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 'மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என நிதிஷ் குமார் அறிவித்தார்.இந்நிலையில் கலால் வரி தினத்தை முன்னிட்டு பாட்னாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது 'மீண்டும் ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என உறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசு கடமைப்பட்டுள்ளது. மது விற்பனை மூலம் அரசுக்கு வருமானமாக பல கோடி ரூபாய் கிடைக்கிறது. சிறப்பான முடிவு நிதிஷுக்கு வாழ்த்துக்கள் ஆனாலுங்க வேற தேதியா கிடைக்கல

சோனியா மன்மோகன் சிங்கிற்கு மோடி பாதபூஜை...பாராளுமன்றத்தில் காங்கிரஸ் அமைதியா இருக்கணுமே?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து
பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதற்காக அவர் டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தேநீர் விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். இதன்படி வெள்ளிக்கிழமை மாலை இந்த விருந்தில் சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரையும் நரேந்திர மோடி வாயிலில் வந்து வரவேற்றார். மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி ஆகியோரும் உடனிருந்தனர்.முன்செஞ்ச வினை சும்மா விடுமா? முன்பு சொன்னெதெல்லாம் பொய் செய்ததெல்லாம் கூச்சல் கொலைவெறி..இப்ப குத்து குடையுதுன்னா...  

அதிமுகவில் அடித்த கட்ட தலைவராக பன்னீர்செல்வம் முதலிடம்..ஜூவி கருத்துகணிப்பு....

சென்னை: அ.தி.மு.க.வின் அடுத்த தலைவராக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு அந்த தகுதி இல்லை எனவும் ஜூனியர் விகடன் சர்வே தெரிவிக்கிறது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. பின் மீண்டும் அ.தி.மு.க. ஒன்றாக இணைந்த காலம் முதல் அக்கட்சியின் சகலமுமாக இருப்பவர் ஜெயலலிதா மட்டுமே. அவ்வப்போது அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவுக்கு அடுத்தது யார்? என்ற கேள்வி வரும்போதெல்லாம் அந்த இடத்துக்கு அடிபடுகிறவர் கட்சியில் நிலைத்ததாக இல்லை. தற்போது ஜெயலலிதாவுக்கு அடுத்தது சசிகலாவா? அல்லது ஓ. பன்னீர்செல்வமா என்ற நிலை அ.தி.மு.க.வில் உள்ளது.
ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு இதில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்குத்தான் அதிக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. வச்சாண்டா பன்னீருக்கு ஆப்பு...பாவம் மனிஷன் கஞ்சா கேசுல இனி உள்ள போகாமல் இருக்கனும்லே.. 

தயாநிதி மாறன் பி எஸ் என் எல் இணைப்பு முறைகேடு சி பி ஐ விசாரணைக்கு ஆஜார் ஆகவேண்டும்

பி.எஸ்.என்.எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை என்றும் அதேசமயம் வரும் 30ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை விசாரணைக்காக சிபிஐயிடம் தயாநிதி மாறன் ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்ஜாமீனை ரத்து செய்து, சிபிஐயிடம் சரணடையுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வு, தயாநிதி மாறனுக்கு முன்ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டதோடு, அவரை காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை என்று கூறியது அதேசமயம் வரும் 30ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை விசாரணைக்காக சிபிஐ யிடம் தயாநிதி மாறன் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிபிஐயின் கேள்விகளுக்கு தயாநிதி மாறன் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கலாம் என்றும் நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க bbc.tamil.com

கேரளா 55 கோடி செலவில் ஆடம்பர திருமணம்...தொழில் அதிபரின் சமுக சேவை?

கொல்லம் : பிரபல தொழில் அதிபர் ரவி பிள்ளை, 55 கோடி ரூபாய் செலவில், தன் மகள் டாக்டர் ஆர்த்தி -
டாக்டர் ஆதித்ய விஷ்ணு திருமணத்தை நடத்தினார். கேரளாவைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர், ரவி பிள்ளை. கேரளாவின், 'நம்பர் 1' பணக்காரர்
என்ற பெருமையை உடைய இவர், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள
சொத்துக்களுக்கு சொந்தக்காரர். உலகில் உள்ள டாப் 1000 பணக்காரர்களில் இவரும் ஒருவர்.
 பிரம்மாண்டமாக..; வளைகுடா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் கனிமம், கட்டுமானம், கல்வி நிறுவனங்கள் என, ஏராளமான தொழில்களை நடத்தி வருகிறார். இவருக்கு, உலகின் பல நாடுகளில் 26க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன; அவற்றில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். ரவி பிள்ளை, தன் மகள் திருமணத்தை, நாடே வியக்கும் வண்ணம் பிரம்மாண்டமாக நேற்று நடத்தினார். இத்திருமணம், கேரளாவின் கொல்லம் நகரில் புகழ் பெற்ற ஆஸ்ரமம் மைதானத்தில் நடைபெற்றது. இதற்காக, 8 ஏக்கரில், 3.50 லட்சம் சதுர அடி பரப்பில், 40,000 சதுரடி பரப்பளவிற்கு ஏசி வசதி செய்யப்பட்டிருந்தது. ராஜஸ்தான் கோட்டை மற்றும் அரண்மனை போன்ற பிரம்மாண்டமான, 'செட்' அமைக்கப்பட்டிருந்தது.  இவர் கேரளாவில் சீட்டுகம்பனி நடத்தி  அப்படியே கஷ்டப்பட்டு பலதொழிகளும் செய்து விடா முயற்சியால்....இப்படித்தாய்ன் எல்லா பணக்காரங்க வரலாறும்

பொள்ளாச்சியில் கந்துவட்டி..குடும்பம் தற்கொலை முயற்சி...தாய் மகன் பலி...தந்தை மருமகள் உயிருக்கு....

பொள்ளாச்சியில் கந்துவட்டி கொடுமையால் புத்தகக்கடை உரிமையாளர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். விஷம் குடித்த அவரது மனைவி, மகன் இருவரும் பலியானார்கள். மாமனார், மருமகள் ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- புத்தக கடை உரிமையாளர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையத்தை சேர்ந்தவர் பால கிருஷ்ணமூர்த்தி (வயது 63). இவர் கடை வீதியில் ஒரு புத்தக கடை நடத்தி வருகிறார். இவர் குடும்பத்துடன் சின்னாம்பாளையம் ஊராட்சி தலைவர் பானுமதி ரவி என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். பாலகிருஷ்ணமூர்த்தியின் மனைவி உஷாராணி (53), மகன் பாலவிஜயபிரகாஷ் (35), அவரது மனைவி நித்யா (30) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

சிரியாவில் விமான தாக்குதலுக்கு பிரான்ஸ் பாராளுமன்றம் அனுமதி

பாரீஸ் நகரில் கடந்த 13-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். அதைத் தொடர்ந்து சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தனது வான்தாக்குதலை பிரான்ஸ் தீவிரப்படுத்தியது. இந்த நிலையில், சிரியாவில் வான்தாக்குதலை நீட்டிப்பது தொடர்பாக பிரான்ஸ் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 515 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 4 ஓட்டுகள் மட்டுமே விழுந்தன. 10 எம்.பி.க்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.< இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய பிரான்ஸ் பிரதமர் மேனுவல் வால்ஸ், “ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் மீண்டும் போர் தொடுத்துள்ளது. இதற்கு மாற்று இல்லை. நாம் அவர்களை அழித்தே தீர வேண்டும்” என குறிப்பிட்டார். maalaimalar.com

மம்தா பானர்ஜி : அமீர்கானை வெளியேறு என்று யாரும் சொல்ல முடியாது

நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மை குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், அமீர்கானை இந்தியாவை விட்டு வெளியே செல்லுமாறு யாரும் சொல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். சகிப்பின்மை குறித்த அமீர்கானின் கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இருதரப்பு விமர்சனங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. அரசியல் தரப்பில் மட்டுமல்லாது திரைத்துறையிலுமே சிலர் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்தனர். இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திலும் நேற்று இந்த விவகாரம் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் உரையில் மறைமுகமாக ஒலித்தது. இந்நிலையில், அமீர்கானுக்கு மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய தமிழறிஞர் நொபொரு கரசிமா காலமானார் Noboru Karashima உலகத்தமிழாராச்சி மாநாடு.....

Noboru Karashima born 24 April 1933) is a Japanese historian, writer and Professor Emeritus in University of Tokyo, Japan. He also serves as Professor Emeritus at the Taisho University, Japan. He is prominent scholar of Asia in the studies of South Indian and South Asian histories. He has rewritten historical accounts on medieval South India and published a number of writings.[1] Professor Karashima played a critical role in developing Indo-Japan cultural ties and was conferred the Padma Shri award in 2013, one of India's highest civilian award, for his contribution in the field of Literature and Education.[2] In a rare gesture the Indian Prime Minister Dr. Manmohan Singh handed over the award personally to Professor Karashima in Tokyo
நொபோரு கரஷிமா ஒரு வரலற்று அறிஞர். தமிழக வரலாற்றை
வித்தியாசமான கோணத்தில் பார்த்து எழுதிய அறிஞர். சமூகம் எப்படி இயங்கியது, எப்படி மாறியது என்பது தெரியாமல் அரசியல் வரலாற்றை – ஆட்சி வரலாற்றை- புரிந்துகொள்ள முடியாது என்னும் கொள்கையில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். தமிழகத்தின் மன்னர் ஆட்சிகளைப் பேரரசுகளின் ஆட்சிகளாகப் பார்த்து வரலாறு எழுதிய பழைய தலைமுறை வரலாற்று ஆய்வாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தமிழக வரலாற்றைப் பார்த்தவர். இன்றைய தமிழ்த் தேசியத்துக்கு உரம் போடும் செய்திச் சுரங்கமாக அவர் தமிழக வரலாற்றைப் பார்க்கவில்லை.

வியாழன், 26 நவம்பர், 2015

நடிகர் நெப்போலியன் பாஜக துணை தலைவராகிறார்....முன்னாள் திமுக மத்திய மந்திரி...

நடிகர் மற்றும் திமுக முன்னாள் மத்திய
மந்திரியான நெப்போலியன் பாஜகவின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக விற்கு தமிழகத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அதன் விவரங்களை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் மத்திய மந்திரி நெப்போலியன் மாநில துணைத் தலைவராகவும், மக்கள் தமிழகம் கட்சியினை பாஜாகவில் இணைத்த புரட்சி கவிதாசன் மாநில செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நடிகர் நெப்போலியன் முதலில் திமுக வில் இருந்தார். வில்லிவாக்கம் தொகுதியில் எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றார். அதன் பின் அவருக்கு மத்திய மந்திரி பதவியும் தரப்பட்டது. மேலும் அவர் அழகிரியின் ஆதராளராக இருந்தார். நெப்போலியன் கொஞ்சம் நல்ல மனிசனாச்சே...வேற கட்சியே கிடைக்கல்லியா

சுவிட்சிலாந்து பர்தாவுக்கு தடை..மீறினால் 10000 SF அபராதம்.. சுவிஸ் டினோ மாகாணத்தில்..


சுவிட்சர்லாந்து நாட்டின் டிசினோ மாகாணத்தில் இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ர்தா" இந்தத் தடையை மீறி, பெண்கள் பர்தா அணிந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இது குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.;அதன்படி, சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்தின் பொது இடங்களில் பர்தா அணிந்து வரும் பெண்களுக்கு ரூபாய் மதிப்பில் 6.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தwebdunia.com

வெள்ளத்தால் ஒரு லட்சம் வீடுகள் விற்பனை முடங்கிவிட்டது..சென்னை புறநகர் மனைகள் தண்ணீரில்...

மழை, வெள்ள பாதிப்புகளால், சென்னை புறநகரில், ஒரு லட்சம் வீடுகள் விற்பனை முடங்கி உள்ளது. இந்த நிலை சீராக, மூன்று மாதங்கள் ஆகும் என்பதால் கட்டுமான நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளன. அண்மையில் பெய்த கன மழையின் காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. குறிப்பாக, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், சிட்லபாக்கம், கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், முடிச்சூர், பழைய பெருங்களத்துார், ஊரப்பாக்கம், வண்டலுார், போரூர், குன்றத்துார், அய்யப்பன் தாங்கல், காட்டுப்பாக்கம், அம்பத்துார், ரெட்டேரி, கொளத்துார் பகுதிகள் வெள்ளத்தில் தவிக்கின்றன.  அறிவு ஜீவியான தமிழனை இவர்களுக்கு ஏமாற்ற தெரியாதா? ஒரு வீடு வாங்கினால் விஜயின் தெறி பட டிக்கெட்கள் பத்து இலவசம் என்றால் தமிழன் வரிசை கட்டி நிற்க மாட்டானா?

மது ஒழிப்பு பாடகர் கோவன் கலைஞரை சந்தித்தார் !

மது ஒழிப்புப் பிரச்சாரப் பாடல்களைப் பாடி, தமிழக அரசால் கைதுசெய்யப்பட்ட இடதுசாரிப் பிரச்சாரப் பாடகர் கோவன் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். கருணாநிதியை சந்தித்து மதுவிலக்கு பிரசாரக் கூட்டத்துக்கு ஆதரவு கோரிய இடதுசாரிப் பாடகர் கோவன் இந்த சந்திப்பின்போது மது ஒழிப்பிற்கு அதரவு கோரிய கோவன், தான் கைதுசெய்யப்பட்டபோது அதனைக் கண்டித்ததற்காக நன்றி தெரிவித்தார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோவன், வரும் டிசம்பர் மாதத்தில் மது ஒழிப்பிற்காக ஒரு பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தப்போவதாகவும் அதற்கு ஆதரவு கோரி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்துவருவதாகவும் அதன் ஒரு பகுதியாகவே தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சந்தித்ததாகவும் தெரிவித்தார். அ.இ.அ.தி.மு.க., பாரதீய ஜனதாக் கட்சி ஆகிய கட்சிகளைத் தவிர அனைத்துக் கட்சியினரையும் சந்தித்து ஆதரவு கோரப்போவதாகவும் கோவன் தெரிவித்தார்.

பிரான்ஸில் ஹிஜாப் அணிந்ததால் வேலை இழந்தவர் தொடுத்த வழக்கு தள்ளுபடி.

முஸ்லீம் தலையங்கியான, ஹிஜாபை அணிந்து வரக்கூடாது என்ற உத்தரவுக்கு பணிய மறுத்ததால் வேலை இழந்த பிரெஞ்சு மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவர் தொடுத்த வழக்கை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மத விசுவாசங்களைக் காட்டும் எந்த ஒரு ஆடையையும் அரசு அதிகாரிகள் அணிய பிரான்ஸில் தடை இருக்கிறது இந்த வழக்கை கிறிஸ்தியேன் இப்ராஹிமியான் என்ற பெண் தொடுத்திருந்தார். ஆனால் , மத விசுவாசங்களை வெளிப்படுத்தும் எந்த ஒரு குறியீடையும் அணிவது அரசுத் துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளின் கடமை விதிகளை மீறுவதாகும் என்று நீதிமன்றம் கூறியது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவருக்கு மூன்று மாத அவகாசம் இருக்கிறது. பாரிஸ் நகரில் மருத்துவமனை ஒன்றில் உளவியல் துறையில் சமூகப்பணியாளராக வேலைபார்த்து வந்த கிறிஸ்தியேன் இப்ராஹிமியானின் பணி ஒப்பந்தம் 2000ம் ஆண்டில் டிசம்பர் மாதத்திற்குப் பின் புதுப்பிக்கப்படவில்லை.

ஆனந்த விகடனை விற்கக் கூடாது என கடைக்கார்களை மிரட்டும் போலீஸ்!

சென்னை: ஆனந்த விகடன் வார இதழை விற்கக் கூடாது என ஏஜெண்டுகள், விற்பனையாளர்களைப் போலீசார் மிரட்டி அச்சுறுத்துவதாக அதன் ஆசிரியர் ரா. கண்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ரா. கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: அன்புடன் ஆனந்த விகடன்! தமிழகத்தில் அ.தி.மு.க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆனந்த விகடன் இதழில் கடந்த 30 வாரங்களாக ‘மந்திரி தந்திரி' என்ற கட்டுரைத் தொடர் வெளியானது. இந்த தொடர் கட்டுரைகள் தமிழக மக்களிடையே பரபரப்பாக வாசிக்கப்பட்டன.s இதுபோன்ற தொடர், விகடன் வாசகர்களுக்குப் புதிது அல்ல. ஏற்கெனவே கடந்த தி.மு.க ஆட்சியின்போது, கருணாநிதி பற்றியும் அவரது தலைமையில் இருந்த அமைச்சர்கள் அனைவரைப் பற்றியும் இதேபோல் தொடர்ந்து எழுதி வெளியிட்டுள்ளோம். அரசு இயந்திரத்தை, நம்மை ஆளும் பிரதிநிதிகளின் செயல்பாடுகளை மதிப்பிடுவதும், விமர்சிப்பதும் ஒரு பத்திரிகையின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று.யார் எழுதினாலும் 500 ரூபாய் மட்டுமே கொடுக்கும் ஆனந்தவிகடன் மட்டும் தர்மத்தை பேசினா சிரிப்பு வராதா? இனியாவது எழுத்தாளர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்   

புதன், 25 நவம்பர், 2015

King fisher விஜய மல்லையா 2000 கோடியை முழுங்க ரெடி..இவர் தேவகவுடா கட்சி MP யும் ஆவார்,

முடங்கிப்போன கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா 17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய 6,900 கோடி ரூபாய் கடனில், அசல் தொகையை மட்டும் தான் செலுத்துவதாக வங்கிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதற்காக விஜய் மல்லையா மற்றும் வங்கி தரப்புகள் மத்தியில் அடுத்தச் சில நாட்களில் முக்கியப் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
கடன் தொகை கிங்பிஷர் ஏர்லைன்ஸ் வங்கிகளுக்கு அளிக்க வேண்டிய அசல் தொகை 4,500-5,000 கோடி ரூபாய் வரையில் இருக்கும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக்கடனுக்கான வட்டி தொகை தோராயமாக 2,000 கோடி ரூபாய் எனவும் வங்கி தரப்பு தெரிவித்துள்ளது. இவரின் அரசியல் பின்புலம்  கொஞ்சம் பாருங்கUnknown month, 2002 – Feb. 2004 and Oct. 2004 – April 2008, Member, Consultative Committee for the Ministry of Defence
  • Sept. 2002 – Feb. 2003, Member, Committee on Science and Technology, Environment and Forests
  • Feb. 2003 – Feb. 2004, Member, Committee on Defence
  • Aug. 2004 – April 2008, Member, Committee on Industry
  • Sept. 2004 – April 2008, Convenor, Sub-Committee-III of the Committee on Industry for the Ministry of Heavy Industries and Public Enterprises
  • Unknown time span, Member, Sub-Committee-IV of the Committee on Industry for Action Taken Report
  • Aug. 2007 – April 2008, Member, Sub-Committee-II for Small Scale Industries of the Committee on Industry
  • Aug. 2010 onwards, Member, Committee on Industry
  • Aug. 2010 onwards, Member, Consultative Committee for the Ministry of Civil Aviation
  • Aug. 2012 onwards, Member, Committee on Chemicals and Fertilizers.

இன்னும் 3 நாளைக்கு மழை.. 27முதல் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க! - ரமணன் எச்சரிக்கை

சென்னை: கடலோர மாவட்டங்களில் மீண்டும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நவம்பர் 27 முதல் 29 வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு என மீண்டும் ரமணன் எச்சரித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்தது. கடந்த 15 தினங்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழை கடலூரையும், சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. மழை சற்றே ஓய்ந்து வெயில் தலைகாட்டியுள்ள நிலையில், மீண்டும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் எச்சரித்துள்ளார். 

ஏ.ஆர்.ரகுமான் :சகிப்புத்தன்மை பிரச்சனையை நானும் சந்தித்தேன்...திலீப்குமாருக்கு இது தேவையா?

இசையமைப்பாளர் சேகர் மகன் திலீப்குமார் மதம் மாறி ரஹ்மான் ஆனதில் பிரச்சனை ஒன்றும் இல்லை, ஆனால் ரஹ்மான் திலீப்குமார் ஆக முடியுமா? அந்த சுதந்திரம் ரஹ்மானுக்கு  கிடைக்குமா?   கொஞ்சம்  யோசிச்சு பாருங்க ரஹ்மான் சார்..
சகிப்புத்தன்மை குறித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கும் சூழலில், நானும் அது போன்ற சூழ்நிலையை சந்தித்துள்ளேன் என்று இசையமைப்பாளர் கூறியுள்ளர். சமீபத்தில், சகிப்புத்தன்மை குறித்து நடிகர் அமீர்கான் தெரிவித்த கருத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவரது வீட்டின் முன்பு போராட்டங்களும் நடைபெற்றது. டெல்லியில், அமீர்கானுக்கு எதிராக போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இது போன்ற சூழ்நிலையை நானும் சந்தித்தேன் என்று ஏ.ஆர்.ரகுமான் கருத்து தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன் ஈரானிய திரைப்படமான  “முகம்மது மெஸேஞ்சர் ஆப் காட்” என்ற திரைப்படத்துக்கு ரகுமான் இசை அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு எதிராக பத்வா விதிக்கப்பட்டது.

பெங்களூர் கல்லூரி மாணவிகளுடன் ராகுல் கலந்துரையாடல்...வழக்கம்போல சொதப்பல்...

பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மெல் கல்லூரி மாணவிகளுடன் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி  இன்று கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் மத்தியில் பேசிய ராகுல் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பயன்தருகிறது என்று நினைக்கீறிர்களா? என்று கேட்டார். இதற்கு மாணவிகளில் பெரும்பாலானவர்கள் ஆமாம் என்று கூற, ராகுல் சற்று அதிர்ச்சியடைந்தார். ஆனால், சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் மீண்டும் மேக் இன் இண்டியா திட்டம் சிறப்பானதா? என்று கேட்டார். இதற்கும் மாணவிகள் ஆமாம் என்று கூறியதால், தர்மசங்கடத்திற்கு ஆளான ராகுல் ஓ.. நீங்கள் அப்படி நினைக்கிறீங்க.. என்று சமாளித்தார். ஆனால், மூன்றாவது கேள்வி கொஞ்சம் பரவாயில்லை என்றுதான் கூறவேண்டும். இளைஞர்களுக்கு போதுமான வேலை கிடைக்கிறதா? என்ற கேள்விக்கு மாணவிகள் மத்தியில் ஆமாம், இல்லை என்ற பதில்கள் கிடைத்தது.

ரஷ்ய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதற்கு அமெரிக்கா ஆதரவு

சிரியாவின் மீது வான் தாக்குதலில் ஈடுப்பட்டிருந்த ஒரு ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதற்கு, அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. துருக்கிய அதிபர் ரெஜெப் தயிப் எர்துவானுடன் தொலைப்பேசி மூலம் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, துருக்கி தனது இறையாண்மையைப் பாதுகாத்துக்கொள்ள அதற்கு உரிமை என்று தெரிவித்துள்ளார். துருக்கியின் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை பாதுகாப்பதையே இச்செயல் காட்டுகிறது என்று ரஷ்ய பிரதமர் திமித்ரி மெட்வியதேவ் தெரிவித்துள்ளார். ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் எண்ணெய் விற்பனையின் மூலம் சில துருக்கிய அதிகாரிகள் பணம் சம்பாதிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். துருக்கியுடனான ரஷ்யாவின் கூட்டுத் திட்டங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும், ரஷ்ய சந்தையிலிருந்து துருக்கிய நிறுவனங்கள் வெளியேற்றப்படலாம் என்றும் மெட்வியதேவ் தெரிவித்துள்ளார். துருக்கியின் வான் பரப்புக்குள் ரஷ்யா அத்துமீறி நுழைந்ததாக துருக்கி கூறுகிறது. ஆனால் சிரியாவின் எல்லையில் தான் தமது விமானம் பறந்ததாக ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.bbc.tamil.com

ஆமிர் கான் கூறியதை கேஜ்ரிவால் ஆமோதிக்கிறார் ...நாட்டில் அசாதாரண நிலைமை...பாதுகாப்பில்லை ..

கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு சகிப்பின்மை காரணமாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. மாட்டுக்கறி வைத்திருந்ததன் பேரில் முஸ்லீம் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.மும்பையில், பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலியின் இசைக்கச்சேரி நடத்த இருந்ததற்கு சிவ சேனா எதிர்ப்பு தெரிவித்தது. எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டனர். க்ரிஷ் கர்நாட்டிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தேறியது.;இந்நிலையில், சில தினங்கள் முன்பு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமீர் கான் பேசும்போது, "இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாதுகாப்பு இல்லாத அசாதாரண நிலை நிலவுகிறது. பாதுகாப்பில்லாத சூழலை மக்கள் அவ்வப்போது உணர்ந்து வருகின்றனர்.சில நாள்கள் முன்பு என் மனைவி கிரண் என்னிடம், நாம் வேறு நாட்டிற்கு சென்று விடுவோமா, குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று கூறினார். கிரண் பயப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை" என்று கூறியிருந்தார்webdunia.com

இந்துஸ்தான் போட்டோ பிலிம்..கச்சா பிலிம் ஒருநாளும் தயாரிக்கவே இல்லை? மொத்தமாக வாங்கி வெட்டி வித்தே ஊழல்...

savukkuonline.com ஊழல் செய்தி என்றால் அன்றும் அப்படித்தான் சினிமா செய்தியிலிருந்து மீண்டும் மையநீரோட்டம் திரும்ப எனக்கு உதவி செய்தது இந்துஸ்தான் ஃபோட்டோ பிலிம்ஸ் (எச்.பி.எஃப்) ஊழல் தொடர்பான செய்திதான்.
திரைத்துறைக்கு தேவையான கச்சா படச்சுருள் தயாரிப்பதற்காக  ஜவஹர்லால் நேரு காலத்தில் உருவாக்கப்பட்டது அந்த நிறுவனம். பல ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கியது. இன்று ஏறத்தாழ மூடப்பட்டுவிட்டது.
இறுதிவரை அங்கு கச்சா ஃபிலிம் தயாரிக்கவே இல்லை. ஜம்போ சுருள்களை வாங்கி வெட்டிக் கொடுத்து வந்தது. எக்ஸ்ரே ஃபிலிம்கள் உள்ளிட்ட வேறு சில புகைப்படம் சார்ந்த பொருட்களையும் தயாரித்து வந்தது.
எப்படியெல்லாம் ஒரு நிறுவனத்தை நடத்தக் கூடாதோ அப்படி நடத்தினர். தண்டத்திற்கு ஆட்களை சேர்ப்பதிலிருந்து எல்லாவற்றிலும் வரைமுறையற்ற சுருட்டல். கேட்பாரில்லை.
சென்னையைச் சேர்ந்த எம்.எஸ்.அப்பாராவ், ஜார்ஜ் ஃபெர்னாண்டசின் நண்பர், பெரும் செல்வந்தர், ஆனால் சோஷலிச சிந்தனையுள்ளவர், பரோடா டைனமைட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர். அவர் ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் எச்..பி.எஃப் தலைவராக நியமிக்கப்படுகிறார். அவருக்கு அந்த நிறுவனத்தில் நடைபெற்று வந்த இமாலய ஊழலைக் கண்டு பேரதிர்ச்சி. நடவடிக்கை எடுக்கத் தொடங்குகிறார். ஆனால் ஜனதா ஆட்சி கலைகிறது. இவரது பதவியும் பறிபோகிறது.

ஆப்கான் பாகிஸ்தான் பஷ்டூன் திருமண நடனம்...அந்த மக்கள் ரொம்பவே மாறிவிட்டார்கள்?



செவ்வாய், 24 நவம்பர், 2015

தமிழக வெள்ளம் சினிமாக்காரன் கண்ணுக்கு தெரியல்ல..ஆந்திர புயலுக்கு அள்ளிகொடுத்த தமிழ் நடிகர்கள்...சாதாரண மக்களே ஆயிரக்கணக்கில் கொடுக்கையில்....

ஸ்கிரீனன்  : ஹூட் ஹூட் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர மக்களுக்கு லட்சங்களில் நிவாரண நிதி
அளித்த தமிழ் நடிகர்கள் எல்லாம் வடகிழக்குப் பருவ மழையால் பாதிப்புக்குள்ளான தமிழக மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? என்ற கேள்வி, சமூக வலைதளங்களில் எழுத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழை அக்டோபர் 28-ல் தொடங்கியது. இன்றளவும் மழை நீடிக்கிறது. மழையால் தமிழகமே பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தானே புயலுக்குப் பிறகு கடலூர் கடுமையாக பாதிக்கப்பட்டது இந்த மழையால்தான். விளை நிலங்கள், பயிர் சேதம், வீடுகள் சேதம், பொருட்கள் இழப்பு என சேதாரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

தங்கபாலுவின் பச்சை பொய்: ராகுல் காந்தியை கொல்லுமாறு கோவன் பாடினாரா ?


பத்திரிகையாளர் அருள் எழிலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையனோடு நடத்தும் நேர்காணல் – மூன்றாம் பாகம்  

கேள்வி: தேர்தல் அரசியலில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் ஒருமையிலயோ, அவதூறாகவோ பேசுறாங்கன்னா அது இஸ்யூ கிடையாது. பிராப்ளம் இல்லை. ஆனா, கம்யூனிஸ்டு அமைப்பு, மக்கள் மத்தியில பிரச்சாரம் செய்யிற அமைப்புனு சொல்லக்கூடிய நீங்கள் சில வார்த்தைகளை மோசமா, பெண்ணுக்கு எதிரா,  5 தடவ சி.எம்.மா இருந்த முதல்வருக்கு எதிரா பயன்படுத்துறது மோசமான விசயம்தானே?
பதில்: என்னுடைய பதில் என்னவென்றால்,  தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபடும்பொழுது அதை எப்படி கௌரவமான வார்த்தைகளில் விவரிக்க முடியும்னு தெரியல.
அவதூறுக்கு என்ன விளக்கம்? கொடநாட்டுல ஓய்வெடுத்தார்னு எழுதுனதுக்கு பத்திரிக்கையாளர்கள் மேல அவதூறு வழக்கு போட்டுருக்காங்க.

விகடன், முரசொலி கலைஞர் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு..விகடன் facebook முடக்கம்...?

தமிழில் வெளிவரும் பிரபல வாரப் பத்திரிகையான ஆனந்த விகடன், தி.மு.கவின் அதிகாரபூர்வ இதழான முரசொலி, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பாக அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் இது தொடர்பாக இரண்டு வழக்குகளை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.
கடந்த வாரம் வெளிவந்த நவம்பர் 25ஆம் தேதியிட்ட இதழில், 'என்ன செய்தார் ஜெயலலிதா' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. இந்தக் கட்டுரையில் தமிழக அரசுக்கும், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியாகி உள்ளது என்றும் இதனை வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர், பதிப்பாளர் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஒரு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

இலங்கை :உயிரிழந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் 16 பேர் பேர் இணைந்துள்ளார்....பாகிஸ்தானில் படித்தவர்..

முகமது முஹாடீன் சர்னாஸ் நிலாம் எனப்படும் நிலாம் டீன் என்கின்ற இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி தனது விருப்பதுடனே தங்கள் இயக்கத்தில் இணைந்து கொண்டுள்ளதாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினால் வெளியிடப்படும் டாபிக் பத்திரிகை எனப்படும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. முகமது முஹாடீன் சர்னாஸ் நிலாம் எனப்படும் நிலாம் டீன் என்கின்ற இலங்கை நபர் குடும்ப உறுப்பினர்கள் 16 பேருடன் அந்த இயக்கத்தில் இணைந்துள்ளதாகவும், அவர்களில் 6 பிள்ளைகளும் உள்ளடக்கப்படுவதாக அந்த பத்திரிகையில் சுட்டிக்காட்டப்ட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் மீது விமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் தாக்குதலில் காயமடைந்தவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்ற போது மேலும் ஒரு விமான தாக்குதலில் முகமது முஹாடீன் சர்னாஸ் நிலாம் எனப்படும் நிலாம் டீன் உயிரிழந்துள்ளதாக அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி ரங்கராஜ் பாண்டே சொல்வது உண்மையா? நிருபித்தால் தொழிலையே விட்டு விடுவேன் ..பாண்டே பதில்.


சென்னை: குற்றச்சாட்டை நிரூபித்தால் தொழிலைவிட்டே விலகிவிடுவேன்
என்று தந்தி டிவி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே, திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீரபாண்டியனிடம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு பத்திரிகை உலகம் இடதுசாரி கொள்கை ஆதிக்கம் கொண்டது. திராவிட சிந்தாத்தத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இதில் ஒரு சில பத்திரிகைகள் மட்டும் வேறுபட்டவை. ஒரு சில செய்தியாளர்கள் மட்டும் வலதுசாரி சிந்தனையுள்ளவர்களாக உள்ளனர்.
அதுபோன்ற வலதுசாரி சிந்தனை கொண்டவராக செயல்படுகிறார் தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக திராவிட இயக்கங்களால் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது< பாண்டே நடத்திய 'என் கேள்விக்கு என்ன பதில்?' நிகழ்ச்சியில், தி.க.தலைவர் வீரமணியிடம் தாறுமாறாக கேள்விகளை கேட்டுவிட்டார் என்பதே இந்த குற்றச்சாட்டுக்கு அடிப்படை அமைத்தது.

இந்தியர்களை இழிவாக நடத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகள்...போர்த்திறன் இல்லாதவர்கள்’’

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் பிரசாரத்தால் கவரப்பட்டு, இந்திய இளைஞர்கள் சிலர் அதில் சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் இழிவாக நடத்தி வருவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த அறிக்கை, இந்திய புலனாய்வு அமைப்பிடமும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:– ஐ.எஸ். இயக்கத்தில் 23 இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் 6 பேர் பல்வேறு சண்டைகளில் கொல்லப்பட்டு விட்டனர். இதற்கு காரணம், இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்காளதேசம், சூடான், நைஜீரியா போன்ற தெற்கு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் இளைஞர்கள், போர்த்திறன் இல்லாதவர்கள் என்று கருதி, அவர்களை மனித கேடயங்களாக ஐ.எஸ். இயக்கம் பயன்படுத்துவதுதான். அந்த இயக்கத்தில், அரபு நாட்டைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் உள்ளது. அவர்கள்தான் ஐ.எஸ். இயக்கத்தின் போலீஸ் படையில் சேர முடியும். அவர்களுக்குத்தான் அதிக சம்பளம், நவீன ஆயுத வசதி மற்றும் தங்குமிடம் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளின் இளைஞர்களை ஒரு சிறிய பாசறையில் மொத்தமாக அடைத்து வைக்கிறார்கள்.

அரசு பணத்தில் அதிமுக பிரசாரம்- தி.மு.க. வழக்கு; ஜெ.வுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!

அ.தி.மு.க.வுக்காக தமிழக அரசு பணத்தை செலவழித்து பிரசாரம் செய்வதை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க.வின் தலைமை நிலைய முதன்மை செயலாளர் துரைமுருகன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அ.தி.மு.க, ஆட்சி காலம் 13.5.16 அன்று முடிய உள்ளது. ஆகையால் மே மாதத்துக்குள் தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும்
இத்தேர்தலில் தமிழக அரசு பணம், மனித ஆற்றல் உள்பட அரசு நிர்வாகத்தை பயன்படுத்துவதற்கு, முதல்வர் ஜெயலலிதாவும் அவரது அ.தி.மு.க. கட்சியும் முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து அரசுத்துறை செயலாளர்களுக்கும் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள், அரசு திட்டங்களை பேனர்கள், கைப்பிரதிகள், டிஜிட்டல் பேனர்கள், குறும்படங்களை வெளியிடும் எல்.சி.டி. டி.வி.கள் பொருத்தப்பட்ட 32 வேன்கள், சில வீடியோ படங்கள் ஆகியவற்றின் மூலம் விளம்பரம் செய்து வருகின்றனர்.

சென்னை...துத்துக்குடி மீண்டும் தண்ணீரில் ..நான்கு மணிநேரத்தில்

சென்னையில் கனமழை காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து அடியோடு முடங்கியது.
 சென்னையில் கனமழை காரணமாக, எழும்பூர், சென்ரல், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு, புரசைவாக்கம், சேட்பட், ராதாகிருஷ்ணன் சாலை, தி.நகர், வடபழனி,  கிண்டி, ராயப்பேட்டை, கோடம்பாக்கம் சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், சென்னையின் முக்கிய பகுதிகளில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து அடியோடு முடங்கியது.
 தாழ்வான பகுதிகளில் நான்கு அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கி நின்பதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்துவருகின்றனர்.

இளையராஜாவின் சவால்...இன்றைய இசை அமைப்பாளர்களால் கம்யுட்டரை விட்டு வர முடியுமா?


கம்புடரை விட்டு விட்டு இசையமைக்க வரமுடியுமா என்று இன்றைய இசையமைப்பாளர்களுக்கு MSV நினைவு நிகழ்ச்சியில் இளையராஜா சவால் விட்டுள்ளார்.
 உங்க கிட்டே எல்லா சாம்பிளும் இருக்கிறது .அதை எல்லாம் தூக்கி வீசி விட்டு வாருங்கள் , கம்யுட்டர் சிப்பை யூஸ் பண்ணாதீங்க .உங்க தலைல இருக்கிற சீப்பை யூஸ் பண்ணுங்க.
இந்த சவாலுக்கு நாம் தலை வணங்குகிறோம்.
பெரும்பாலும் இன்றைய பாட்டுக்களின் தொண்ணுறு வீதம் விடயத்தை கம்யுட்டரே கவனித்து கொள்கிறது, மீது பத்து வீதம் கூட திருட்டு சமாச்சாரம்தான். திரை இசைக்கலை செத்து விட்டது. வெறும் சத்தங்களை உரக்க கூவி கூவி விற்கும் வியாபாரம்தான் இன்று நடக்கிறது.
ஒரு பாட்டு கம்போஸ் பண்ணுவதென்றால் முதல்ல ஏதாவது ஒரு பழைய பாடல் அல்லது ஏதாவது ஒரு வெளிநாட்டு டியுனை அப்படியே கேட்க வேண்டியது. அதன் பின்பு அதை அப்படியே ஏதாவது ஒரு வாத்தியத்தில் அல்லது ஒரு வாய்ப்பட்டு சந்தத்தில் கம்யுட்டரில் பதிய வேண்டியது ,
மீதி கம்யுட்டரில் நல்ல நல்ல புரோகிராம்கள் உள்ளன, வேண்டியமாதிரி. அங்கிட்டும் இங்குட்டும் அசைச்சு அசச்சு பார்த்தால் ஏதாவது சகிக்கும் படியாக வருவதை. அதற்கு நெருங்கிய ராகத்திலும் கொஞ்சம் சங்கதிகளை தூவி
ஆர்கேஸ்ட்டிரா மூலம் வாசித்து அதிலும் அப்படியும் இப்படியும் உலாவி உலாவி எதோ ஒரு சாம்பார் சமையல் மாதிரி அவித்து இறக்கி விடுகிறார்கள்.
மிகப் பெரும் பான்மையான பாடல்கள் இப்படித்தான் சினிமா சந்தைக்கு வருகிறது.

சென்னையில் மீண்டும் மழை..வெள்ளம்..தூத்துக்குடி - நெல்லை போக்குவரத்து துண்டிப்பு..

சென்னையில் திங்கள்கிழமை மாலை கனமழை பெய்தது. இதனால்
சென்னையில் முக்கிய சாலைகளில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு புரசைவாக்கம், ராதாகிருஷ்ணன் சாலை, தி.நகர், வடபழனி, அண்ணசாலை, எழும்பூர், கிண்டி, ராயப்பேட்டை, டிடிகே சலை, சென்ட்ரல், கோடம்பாக்கம் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வடபழனியில் இருந்து போரூர் செல்லும் ஆற்காடு சாலையில் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பேருந்து மற்றும் மற்ற வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனிடையே தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் இரண்டு அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் குளம் நிரம்பியது.

திங்கள், 23 நவம்பர், 2015

கோவனுக்கு அம்மா ரூபத்தில் அதிஷ்ட தேவதை...ஊத்தி கொடுத்த அம்மா உலக பிரசித்தம்..

00-seditionistsடாஸ்மாக்கிற்கெதிராக இரு பாடல்களை இயற்றிப் பாடியதற்காக ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் பாடகர் தோழர் கோவன் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மட்டுமின்றி, இந்தப் பாடலை வெளியிட்ட வினவு தளத்தின் பொறுப்பாளரும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச்செயலருமான தோழர் காளியப்பன் மீதும் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.மார்க்கண்டேய கட்ஜூ" முன்னாள் உ ச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு, ஏற்கெனவே தனது முகநூலில் கோவன் கைதைக் கண்டித்திருக்கிறார். தற்பொழுது, இது தொடர்பாக தந்தி டி.வி.க்கு அளித்துள்ள பேட்டியில், “வழக்கை ரத்து செய்து, கோவனை விடுவிக்க வேண்டும்; நடந்த தவறுக்காக ஜெயலலிதா கோவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்; இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசு அதிகாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.” என கூறியிருக்கிறார்.
இந்த அடக்குமுறைகளுக்கு எதிராகத் தமிழக அளவிலும் தேசிய அளவிலும் பரவலாக கண்டனக் குரல்கள் எழுந்திருக்கின்றன. தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, தி.மு.க.வின் பொருளாளர் ஸ்டாலின், மகளிர் அணி செயலர் கனிமொழி, ம.தி.மு.க.வின் பொதுச்செயலர் வை.கோ., தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந்த், வி.சி.கட்சியின் பொதுச்செயலர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் சி.பி.ஐ., சி.பி.எம்., பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்டுப் பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

நண்­பி வெட்டி படு­கொலை..அவ­ரது கருப்­பபையிலி­ருந்த குழந்­தையைக் கள­வாடிய பெண்..நியுயோர்க்

A baby was cut from the womb of a 22-year-old woman who was nearly nine months pregnant by a childhood friend with a knife, and the suspect was arrested on a murder charge, police said Saturday. Angelikque Sutton was found in a pool of blood on Friday at an apartment in the Wakefield section of the Bronx. The suspect, 22-year-old Ashleigh Wade, was taken into custody while screaming that the baby was hers, police said. She was being held on murder, manslaughter and weapons charges. நிறை மாதக் கர்ப்­பி­ணி­யான தனது நண்­பியை கழுத்தை வெட்டி படு­கொலை செய்த பின்னர், அவ­ரது வயிற்றைக் கத்­தியால் கிழித்து அவரது கருப்­பபையிலி­ருந்த குழந்­தையைக் கள­வாடி அதனைத் தனது குழந்­தை­யென உரிமை கோரிய பெண்­ணொ­ரு­வரை பொலிஸார் கைது­செய்த அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம் அமெ­ரிக்க நியூயோர்க் நகரில் இடம்­பெற்­றுள்­ளது.
கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற மேற்­படி சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் ஞாயிற்­றுக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.
புரோன்க்ஸ் பிர­தே­சத்தைச் சேர்ந்த அஷ்லி வேட் (22 வயது) என்ற பெண்ணே இவ்­வாறு தனது நண்­பி­யான அன்­ஜி­லிக்­கியு சட்­டனை (22 வயது) தனது வீட்­டிற்கு வர­வ­ழைத்து படு­கொலை செய்து அவ­ரது கருப்­பை­யி­லி­ருந்த குழந்­தையை கள­வா­டி­யுள்ளார்.
அன்­ஜி­லிக்­கியு சட்­டனைப் படு­கொலை செய்து அவ­ரது குழந்­தையை அஷ்லி கள­வாடி கையில் ஏந்­தி­யி­ருந்த சமயம், அங்கு வந்த அஷ்லியின் காத­ல­ரான ஏஞ்சல் பிரேலோ (27 வயது) அதிர்ச்­சி­ய­டைந்து அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்ளார்.

16 தீவிரவாதிகள் பெல்ஜியத்தில் கைது...பாரிஸ் தாக்குதலில் தொடர்பு

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். 350 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் மொத்தம் 9 தற்கொலை படை தீவிரவாதிகள் ஈடுபட்டனர்.
அவர்களில் 7 பேரை பிரான்ஸ் போலீசார் சுட்டுக்கொன்றனர். 2 பேர் தப்பி விட்டனர். மேலும் இந்த தாக்குதலுக்கு பெல்ஜியத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீத் அபாவுத் (27) என்பவன் மூளையாக செயல்பட்டான். அவன் சிரியாவில் அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் பலியானான்.
கிரீஸ் வழியாக அகதிகளுடன் புகுந்த தீவிரவாதிகள் பெல்ஜியத்தில் இருந்து பிரான்ஸ் வந்து தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. எனவே அங்கு தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் பாரீஸ் போன்று பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் தொடர் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். அதை முறியடிக்க பெல்ஜியம் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.
பிரசல்ஸ் நகரம் கடந்த 3 நாட்களாக முழுவதும் மூடி சீல் வைக்கப்பட்டது. மெட்ரோ ரெயில் சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. கடைகள் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவத்து நிறுத்தப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூட பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைகேல் உத்தரவிட்டார்.

வர்த்தகர் காங்கிரஸ் பிரிவு தலைவர் பதவியில் இருந்து எச்.வசந்த குமார் நீக்கம்

காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் பதவியில் இருந்து வசந்தகுமார் நீக்கப்பட்டார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவராக செயல்பட்டு வரும் எச்.வசந்த குமார் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு வர்த்தகர் காங்கிரஸ் பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார்.
அவர் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவராக தொடர்ந்து நீடிப்பார். அவர் இன்று முதல் வர்த்தகர் காங்கிரஸ் பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.  இவரது அண்ணன் குமரி அனந்தனின் மகள்தான்  தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவி தமிழிசை  சௌந்தரராஜன். காங்கிரஸ் வந்தாலும் பாஜக வந்தாலும் ரொம்ப வசதிதாய்ன்.

மதத்துடன் பயங்கரவாதத்தை இணைக்க வேண்டாம்: மலேஷியாவில் பிரதமர் மோடி ....குஜாராத்தில் வேறென்ன நடந்தது?

கோலாலாம்பூர் : ''மதத்தையும், பயங்கரவாதத்தையும் தனியே பிரிக்க வேண்டும்; அவை இரண்டையும், ஒன்றாக இணைக்க வேண்டாம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.< மூன்று நாள் பயணமாக மலேஷியா சென்ற பிரதமர் மோடி, இரண்டாவது நாளான நேற்று, கோலாலம்பூரில், இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் உரையாற்றினார். ;அப்போது அவர் பேசியதாவது: உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக, பயங்கரவாதம் உள்ளது; அதற்கு எல்லை இல்லை. பயங்கரவாதிகள், தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற, மதத்தை பயன்படுத்தி, மக்களை இழுக்கின்றனர். ஆனால், பயங்கரவாதத்திற்கு, அனைத்து மதத்தினரும் பலியாகின்றனர். அதனால், பயங்கரவாதத்தில் இருந்து, மதத்தை தனியே பிரிக்க வேண்டும். இரண்டுக்கும் இடையே, ஒரே ஒரு வித்தியாசம் தான் உள்ளது. ஒரு தரப்பிற்கு, மனிதநேயத்தின் மீது நம்பிக்கை உள்ளது. மற்றொரு தரப்பிற்கு, அதில் நம்பிக்கை இல்லை; அவ்வளவு தான்.   தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற, மதத்தை பயன்படுத்தி, மக்களை இழுக்கின்றனர். // மறுக்க முடியாத உண்மைதான்.ஆனால் இதை தானே இந்தியாவில் நீங்கள் செய்கிறீர்கள். இத்தகைய பேச்சை நீங்கள் இந்தியாவில் வந்து நம் இந்தியர்களுக்காக பேசினால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும். மலேசியாவில் தமிழில் சிறிது பேசினீர்கள். வரவேற்கத்தக்கது.ஆனால் இதையே ஏன் இந்தியாவில் கடை பிடிக்க மாட்டேன் என்கிறீர்கள். தமிழ் நாட்டுக்கு வந்து ஹிந்தி இல் பேசுகிறீர்கள். அரசு விளம்பரங்கள் அனைத்தும் ஹிந்தியில் வருகிறது. அப்படியென்றால் உங்களுடைய நல்லிணக்கம், ஒற்றுமை, சகிப்புதன்மை போன்றவை இந்தியாவிற்கு அப்பாற்பட்டது தானே.?

பீகாரில் தமிழக மெகா கூட்டணிக்கு அச்சாரம்?

தமிழகத்தில், தி.மு.க., தலைமையில், 'மெகா' கூட்டணி அமைக்க வேண்டும்' என, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலினுக்கு, வட மாநில அரசியல் தலைவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இது தொடர்பாக, பீஹார் தலைநகர் பாட்னாவில், தலைவர்கள் வகுத்த வியூகம் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த, 2010 சட்டசபை தேர்தலில், பீஹாரில், எதிரும் புதிருமாக இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமாரும், சமீபத்தில், அம்மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஒன்றாக கைகோர்த்தனர். அத்துடன், காங்கிரசையும் சேர்த்து, மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டு, மாபெரும் வெற்றி பெற்றனர்.   அண்ணன் அழகிரி இல்லாம மெகா....?ஸ்பெல்லிங் மிஸ் ஆகுதே?அஹ்தாவது முதல்ல மெகா முக கூட்டணி உருவாகணும்ல...?

விஜய் மல்லையா ஒரு மோசடியாளர்: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு ! கண்டுபிடிச்சான்யா கொலம்பஸ் ..

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காகப் பெறப்பட்ட ரூ.7,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாததால் தொழிலதிபர் விஜய் மல்லையாவை "வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்' என்ற பட்டியலின்கீழ் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்த வங்கியின் மூத்த அதிகாரிகள் சிலர் கூறுகையில், "விஜய் மல்லையா, அவரது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், அதன் தாய் நிறுவனமான யுனைடெட் ப்ரீவரீஸ் (யு.பி.) குழுமம் ஆகியவற்றை வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள் என்ற பட்டியலின் கீழ் இணைத்துள்ளோம்' என்று தெரிவித்தனர்.
 முன்னதாக, விஜய் மல்லையாவையும், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் மூன்று இயக்குநர்களையும் "வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள்' என்ற பட்டியலின்கீழ் முதன்முதலாக யுனைடெட் வங்கி கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது.  மல்லையாவுக்கு கடன் கொடுத்ததற்கு நெறைய பேரை ஜெயில்ல போடணும்