சனி, 2 நவம்பர், 2019

பாஜகவின் 6 ஆண்டுகளில் வேலையிழந்தோர் எண்ணிக்கை 90 லட்சம்! இது தொடரும்!

கடந்த 6 ஆண்டுகளில் வேலையிழந்தோர் எண்ணிக்கை 90 லட்சம்!மின்னம்பலம் : இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் வேலை இழந்தோரின் எண்ணிக்கை 90 லட்சத்தை எட்டியுள்ளதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலையான வேலைவாய்ப்பு மையம், சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், 2011-12 முதல் 2017-18 வரை நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வீழ்ச்சியை சுட்டிக்காட்டுகிறது. சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி கே. பரிதா ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, இந்திய வரலாற்றில் முதல் முறையாக இந்த 6 ஆண்டுகளுக்கு இடையில் மட்டும் வேலையிழந்தோர் எண்ணிக்கை 90 லட்சமாக அதிகரித்துள்ளது என தெரிவித்திருக்கிறது.
மொத்த வேலைவாய்ப்பு குறைந்து வருவதாகவும், வேலையில்லாத இளைஞர்களின் இருப்பு மிகப்பெரும் அளவில் அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேலும், அரசு மற்றும் தனியார் வேலைகளில் ஒப்பந்தமயமாக்கல் அதிகரிக்கும் போக்கையும் இந்த ஆய்வு காட்டுகிறது.
2011-12 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் மொத்த வேலைவாய்ப்பு 90 லட்சமாக குறைந்துள்ளது, 2011-12 முதல் 2017-18 வரை ஒவ்வொரு ஆண்டும் 26 லட்சமாக வேலையிழப்பு ஏற்பட்டுள்ளன என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

மெக்டொனால்ட் பர்கர்: 10 ஆண்டுகள் ஆகியும் கெட்டுப் போகாமல் இருப்பது எப்படி? எப்படி செரிமானமாகும்?

BBC  :  2009ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் உள்ள மெக்டொனால்ட் உணவு
விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டது. அப்போது ஒருவர் கடைசியாக பர்கரும் ஃப்ரென்ச் ஃப்ரைஸும் வாங்க முடிவு செய்தார். "மெக்டொனால்டில் வாங்கும் உணவு கெட்டுப்போகாது என்று கேள்விபட்டேன். அது உண்மையா என்பதை பார்க்கவே இதை வாங்கி வைத்தேன்" என ஏஃப்பியிடம் கூறினார் ஜோர்துர் மராசான்.
இந்த வாரத்தோடு இந்த உணவு வாங்கி 10 வருடம் ஆகிறது. ஆனால் இந்த உணவு வாங்கி ஒருநாள் ஆனது போலவே தோன்றுகிறது.
இப்போது தெற்கு ஐஸ்லாந்தில் இருக்கும் ஸ்னொத்ரா எனும் விடுதியில் கண்ணாடி பெட்டியில் உள்ள இந்த பர்கரை பார்வையாளர்கள் பார்க்க முடியும்.
"அந்த உணவு இங்கு தான் இருக்கிறது. நன்றாகவே உள்ளது" என அந்த விடுதியின் உரிமையாளர் சிக்கி சிகர்துர் பிபிசியிடம் கூறினார்.
மேலும், "இது பார்க்க வேடிக்கையாக இருந்தாலும் நீங்கள் எதை சாப்பிடுகிறீர்கள் என்பதை சிந்திக்க வேண்டும். இது கெட்டுப்போகவில்லை. அதை சுற்றியுள்ள பேப்பர் மட்டுமே பழையதுபோல் இருக்கும்" என்கிறார் அவர்.

துரைமுருகனுக்கு பொது செயலாளர் பதவி ?

 tamil.oneindia.com : சென்னை: கட்சியில் இருந்து துரைமுருகனை ஒதுக்கிவிட்டார்கள், ஓரங்கட்டி விட்டார்கள் என்ற வதந்திகளுக்கு எல்லாம் ஒருமுற்றுப்புள்ளி வைக்கும் தருணம் நடக்க போகிறது.
கூடிய சீக்கிரம் துரைமுருகனுக்கு தலைமைக்கு அடுத்தபடியாக உள்ள டாப்-மோஸ்ட் பதவி ஒன்றினை கொடுத்து உயரத்தில் வைத்து அழகு பார்க்க போகிறது திமுகழகம்! 
பொதுச்செயலாளர் பதவி என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி. தலைவர் பதவிக்கு அடுத்து, முக்கிய முடிவுகளை எடுக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.. கட்சியின் எந்த ஒரு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடுவதுகூட பொதுச்செயலாளர்தான். எந்த ஒரு காரியத்தையும் இவர் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது. அதனால்தான் கருணாநிதி இந்த பதவியை அன்பழகனிடமே கடைசிவரை தந்தார். ஆனால் பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு உடம்பு சரியில்லை.. இப்போது 96 வயது ஆகிறது. 2 வருஷமாக வயோதிக உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வில்தான் இருக்கிறார். தீவிர கட்சிப் பணிகளில் ஈடுபட முடிவதில்லை. 

பெரியார் மணியம்மையை திருமணம் செய்த உண்மை காரணம் இதுதான்

Anbarasan Thanjai Anbarasan Jayaraman.: மணியம்மை பிறப்பு - 1920
மணியம்மை பெற்றோர் இறப்பு - 1942
மணியம்மை திருமணம் - 1949
மணியம்மை 22 வயது வரை பெற்றோருடன் இருந்தார் அதன் பின் இயக்கத்துக்கு வந்தார்
29 வயதில் இணையேற்ப்பு - 7 வருடம் இயக்கத்தில் மக்கள் தொண்டாற்றினார்... வளர்ப்பு மகள் இல்லை

திருமணத்தின் போது இருந்த வயது வித்தியாசத்தை மட்டுமே வைத்து..
மணியம்மையின் போராட்டங்கள் தேசிய அளவில் கவனத்தை திருப்பியவை... பெண் எனும் ஒரே காரணத்திற்காக அவரை பற்றிய உண்மைகளை இந்த சூத்திரர்கள் இருட்டடிப்பு செய்து வருகிறார்கள்...
சுமார் 38 ஆண்டு காலமாக தன் முதல் மனைவியை மரியாதையுடனும் காதலுடனும் பார்த்த பெரியார்... அந்த மனைவி இறந்தவுடன் வேறு ஒருவரை தேடிஇருக்கலாம்... ஆனால் அதை செய்யாமல் சமூக தொண்டினையே பெரிதாக கருதினார்...
வலதுசாரிகள் குறிப்பிடுவதை போல பெரியார் காமத்திற்காக தான் இரண்டாம் திருமணம் செய்தாரா..? உலகில் பிற நாடுகளை சுற்றி பார்த்து.. பிற கலாச்சாரங்களை கவனித்த பெரியார்... திருமணத்தையும் செக்ஸ்ஸையும் சேர்த்தி பார்க்கும் அளவிற்கு முட்டாளில்லை... அவருக்கு அது தேவை என்றால் அதற்கு சம்மதிக்கும் யாருடன் வேண்டுமானாலும் அவர் அந்த உறவை வைத்திருக்கலாம்... அதற்கு திருமணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை...

கந்து வட்டி கொடுமை: மூன்று குழந்தைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

தினமணி : சேலம்: சேலத்தில் கந்து வட்டி கொடுமையால் மூன்று குழந்தைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் கிச்சிப்பாளையம் அறிஞா் அண்ணா தெருவைச் சோ்ந்தவா் கு.மருதுபாண்டியன் (30). இவா் வெல்டிங் பட்டறை ஒன்றில் வேலை செய்து வந்தாா்.இவருக்கு பூஜா என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனா். இதனிடையே மருதுபாண்டியன் வீட்டுச் செலவுக்காக வட்டிக்கு ரூ.60 ஆயிரம் கடன் வாங்கியதாகத் தெரிகிறது. மேலும் வட்டி தொகையுடன், அசல் தொகையை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தாா்.
இதனிடையே கடன் கொடுத்தவா்கள் தினமும் மருதுபாண்டியனின் வீட்டிற்கு வந்து பணத்தை திருப்பி கேட்டு தொல்லை செய்து வந்தனா் என தெரிகிறது.இதனால் மனமுடைந்த மருதுபாண்டியன் சனிக்கிழமை அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

அதிமுகவிடம் 2 மேயர் பதவிகளை பாஜக கேட்கிறது

அதிமுகவிடம் 2 மேயர் சீட் கேட்கும் பாஜக!மின்னம்பலம் : உள்ளாட்சித் தேர்தலில் 2க்கும் குறையாமல் மேயர் சீட் ஒதுக்கித் தர வேண்டும் என அதிமுகவிடம் பாஜக வலியுறுத்திவருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தன. பாஜக 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இக்கூட்டணி தேனி தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. எனினும் அப்போது நடந்த இடைத் தேர்தலில் 22 இடங்களில் 9 இடங்களை மட்டும் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. தோல்வியால் துவண்டிருந்த அதிமுக கூட்டணிக்கு தற்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் பெற்ற வெற்றி பெரும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

பிரதமர் மோடி தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் பதிப்பை வெளியிட்டார்

தினத்தந்தி :பாங்காங், பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து நாட்டில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் தாய்லாந்து சென்றடைந்தார். அங்கு அந்நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் சென்றிறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து, நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தாய்லாந்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு மொழியில், மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் பதிப்பினை இன்று வெளியிட்டு உள்ளார். இதேபோன்று இந்த நிகழ்ச்சியில் சீக்கிய மதகுருவான குரு நானக் தேவின் 550வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அதனை குறிக்கும் வகையிலான நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார்.

தமிழகத்தில் ரூ.1600 கோடி முதலீடு - ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்பு .. அரசு பேருந்து துறையை சீர்திருத்த சுமார்

தமிழகத்தில் அரசு பேருந்து துறையை சீர்திருத்த சுமார் ரூ.1600 கோடி முதலீடு - ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்பு தினத்தந்தி : தமிழகத்தில் அரசு பேருந்து துறையை சீர்திருத்த சுமார் ரூ.1600 கோடி முதலீடு செய்யப்படும் என்று ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார். புதுடெல்லி,iv>
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், அரசு முறை பயணமாக நேற்று காலை இந்தியா வந்தார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டு, ஏஞ்சலா மெர்கலை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்கு சென்று ஏஞ்சலா மெர்கல் மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் தலைமையில் இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கு இடையேயான 5-வது உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தலைவர்களின் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டன. 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : குண்டர் சட்டம் ரத்து..


tamil.indianexpress.com : Pollachi sexual assault case : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து...
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட ஏராளமான பெண்களை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினர். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து காவல்துறை. பின்னர் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திருநாவுக்கரசுவின் தாயார் லதா மற்றும் சபரி ராஜன் தாயார் பரிமளா ஆகியோர் சார்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தங்கள் மகன்களுக்கு எதிராக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் உத்தரவிட்டார்.

இளையராஜா - பாரதிராஜா சந்திப்பு: பின்னணி என்ன?

hinduonline : தேனி. ‘இயலும் இசையும் இணைந்தது. இதயம் என் இதயத்தைத் தொட்டது...
என் தேனியில்’ என இளையராஜாவுடனான தனது சந்திப்பு குறித்து ட்விட்டரில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் பாரதிராஜா. பாதிராஜாவின் முதல் படமான ’16 வயதினிலே’ படத்துக்கு இசையமைத்தவர் இளையராஜா. ஆனால், அவர்களின் பந்தம் அதற்கும் முந்தையது. சென்னையில் பாரதிராஜா, இளையராஜா, அவரின் சகோதரர்கள் கங்கை அமரன், பாஸ்கரன், பாடகர் எஸ்பிபி என பல பிரபலங்கள் ஒன்றாக ஒரே அறையில் நாட்களைக் கழித்த காலத்தில் அவர்களே அறிந்திருக்க மாட்டார்கள், அத்தனை பேரும் புகழின் உச்சியைத் தொடுவார்கள் என்று.
ஆனால், காலம் அவர்களை உச்சத்தில் வைத்தது. அதற்குக் காரணம், அவர்களின் கலையாக இருந்தது. ‘16 வயதினிலே’ படம் தொடங்கி, ’சிகப்பு ரோஜாக்கள்’ (1978), ’கிழக்கே போகும் ரயில்’ (1978), ’புதிய வார்ப்புகள்’ (1979), ’நிறம் மாறாத பூக்கள்’ (1979), ’கல்லுக்குள் ஈரம்’ (1980), ’நிழல்கள்’(1980), ’டிக் டிக் டிக்’ (1981), ’அலைகள் ஓய்வதில்லை’ (1981) என இரண்டு ராஜாக்களும் ஹிட் அடித்துக்கொண்டே இருந்தனர். அந்த வெற்றிக் கூட்டணி, ஏராளமான படங்களில் தொடர்ந்தது. இளையராஜாவோடு தொடர்ச்சியாகப் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, 'கிழக்கு சீமையிலே' படத்தின் இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானிடம் பாரதிராஜா சென்றதுதான் அவர்களிடையே மனஸ்தாபம் ஏற்படக் காரணம் என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள்.

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியா?

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியா?மின்னம்பலம் :
நவம்பர் 7ஆம் தேதிக்குள் ஆட்சியமைக்காவிட்டால் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுவிடும் என பாஜக மூத்த தலைவர் சுதிர் முன்கன்டிவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி இணைந்து பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியபோதிலும், முதல்வர் பதவி, ஆட்சியில் சமபங்கு என்ற கோரிக்கையில் சிவசேனா உறுதியாக இருக்கிறது. அதுபோலவே முதல்வர் பதவி பாஜகவுக்குத்தான் என பாஜக கூறிவருவதால் ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்துவருகிறது.
இதற்கிடையே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் கடந்த செவ்வாய், புதன் என இரு இரவுகளில் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை சந்தித்துப் பேசியிருக்கிறார். இதனால் மகாராஷ்டிரா சபாநாயகர் தேர்தலில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸும் இணைந்து பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க ரகசியமாக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளுக்குள் நாள் மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் ஏற்பட்டு வருகிறது.

வெள்ளி, 1 நவம்பர், 2019

சரத் பவார்- தாக்கரே கூட்டணி.. பாஜகவின் சபாநாயகரைத் தோற்கடிக்க ஆயத்தம்

பாஜகவின் சபாநாயகரைத் தோற்கடிக்க பவார்- தாக்கரே  கூட்டணி!மின்னம்பலம் : மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக-சிவசேனா கூட்டணி இணைந்து பெரும்பான்மையைக் கடந்தாலும் முதல்வர் பதவியைக் கேட்கும் சிவசேனா தனது கோரிக்கையில் உறுதியாக இருப்பதால் ஆட்சி அமைப்பதில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.
ஆட்சியில் சம உரிமை, சம பங்கு, முதல் இரண்டரை வருடங்களுக்கு சிவசேனாவுக்கே முதல்வர் பதவி போன்ற ஒப்பந்தம் எதுவும் இரு கட்சிகளுக்கு இடையே ஏற்படுத்தப்படவில்லை என்று பாஜகவின் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அண்மையில் தெரிவித்திருந்தார். இது சிவசேனாவை கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது. சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் கடந்த செவ்வாய், புதன் என இரு இரவுகளில் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த சந்திப்புகளில் அரசியல் பேசப்பட்டது என்றாலும் இரு கட்சிகளுக்கும் இடையே எந்த கருத்துப் பரிமாற்றமும் அதிகாரபூர்வமாக நடைபெறவில்லை. நான் பத்திரிகையாளராக இருந்த காலத்தில் இருந்தே சரத் பவாரை அறிவேன். எனவே இந்த சந்திப்பு புதிதல்ல. தீபாவளி வாழ்த்து சொல்வதற்காக அவரை சந்தித்தேன்” என்று கூறியிருந்தார்.

பெண் குழந்தை'யை உயிரோடு புதைக்க முயன்ற தந்தை.. தெலுங்கானா! அதிர்ச்சி வீடியோ


வெப்துனியா :தெலுங்கான மாநில, ஹைதராபாத் அருகே உள்ள கிராமத்தில், பிறந்த பெண் குழந்தையை உயிரோடு புதைக்க முயன்ற தந்தை மற்றும் தாத்தவை போலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் உள்ள ஜூப்ளி பேருந்து நிலையத்தில் போலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் இருவர் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் பிடித்த போலீஸார் அவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது, தங்கள் துணிப்பையில் வைத்திருந்த பச்சைகுழந்தையை உயிரோடு புதைக்க திட்டமிட்டு இருந்ததாகத் தெரிகிறது. மேலும், குழந்தை இறந்துவிட்டதால் புதைக்க இங்கு வந்ததாகவும் கூறியுள்ளனர். அவர்களின் பேச்சில் மேலும் சந்தேகம் அடைந்த போலிஸார்,பெண் சிசுக்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்

ஒய். ஜி .மகேந்திரன் : மக்கள் பாஜக, மோடிக்கு பின்னால் போகவேண்டும் !

புலம் பெயர்தமிழர்களின் அடுத்த சீமான் இவர்?
வெப்துனியா : நாடு முன்னேற வேண்டுமென்றால் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு  பின்னால் மக்கள் எல்லோரும் செல்ல வேண்டும் என்று காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ( ரஜனியின் சகலன்)  கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் திராவிட இயக்கங்களுக்கு சாதகமான சூழல் இருந்தது என்றும், ஆனால் தற்போது பாஜகவுக்கு சாதகமான சூழல் அமையும் என தான் எதிர்பார்ப்பதாகவும் நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார். மக்களுடைய ரசனைகள் மாறி மாறி வருவதாகவும் ஒரு காலத்தில் நான் தான் முன்னணி காமெடி நடிகனாக இருந்தேன், எனக்கு பின் கவுண்டமணி, வடிவேலு ஆகியோர் வந்தனர். அதேபோல் மக்களின் பார்வை பாஜக பக்கம் திரும்பும் என்றும் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்தார்.
தமிழ் திரையுலகமும் விரைவில் பாஜக பக்கம் செல்லும், இனி திராவிட கட்சிகளின் ஆதிக்கம் தமிழகத்திலும் தமிழ் திரையுலகிலும் எடுபடாது என்றும் அவர் மேலும் கூறினார்.

சென்னை – யாழ்ப்பாணம் 10 ஆம் திகதி முதல் தினசரி , திருச்சி யாழ் வாரத்துக்கு மூன்று சேவைகள்

வீரகேசரி :யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், சென்னை சர்வதேச
விமான நிலையத்துக்கிடையிலான வர்த்தக விமான சேவைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விமான சேவையானது தினசரி விமான சேவையாக இடம்பெறவுள்ளதுடன் பயண நேரமானது 32 முதல் 50 நிமிடங்களுக்குள் இருக்கும். டிக்கெட் முன்பதிவு முகவர் மூலம் விமானங்களின் அந்தந்த வலைத்தளங்களிலிருந்து மக்கள் தங்கள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இந்திய உயர் ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணத்தின் கீழ் உள்ள தூதரக பொது அலுவலகத்தில் இருந்து இதற்கான விசா அனுமதியினை பெற்றுக் கொள்ளவும் முடியும். இதவேளை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்துக்கிடையில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

பிகில் வசூல்: அடித்துவிடும் டிராக்கர்கள் - கலங்கும் விநியோகஸ்தர்கள்!

மின்னம்பலம் : அக்டோபர் 25 அன்று ஆர்பாட்டத்துடன் ரிலீஸான பிகில் திரைப்படம், முதல் 3 நாட்களில் 100 கோடி வசூல் செய்ததாக வழக்கம் போல தகவல்கள் வெளியாகத் தொடங்கி, தற்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வசூல் கணக்குகளை சோஷியல் மீடியா டிராக்கர்கள் கூட்டம் ஒன்று பரப்பி வருகிறது. இதனை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் முதல் லோக்கல் சேனல் வரை பிகில் படம் பற்றிய செய்திகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகின்றனர். இதைப் படிக்கும் படத்தை வாங்கியவர்கள், நமக்குத் தெரியாமல் எங்கிருந்து வருகிறது இவ்வளவு பணம் என அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சோஷியல் மீடியா டிராக்கர்களைப் பொறுத்தவரை கடிவாளம் கட்டிய குதிரையைப் போன்றவர்கள் என்று கூறலாம். எப்படி என்றால் ரீமேக் செய்யப்பட்ட படத்திற்கு அல்லது அதில் நடிப்பவர்களுக்கு அரசு விருதுகள் வழங்கப்படமாட்டாது என்ற அடிப்படை கூட தெரியாமல் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததற்காக அஜித் குமாருக்கு தேசிய விருது கிடைக்குமென்று கூவியவர்கள் தான் பிகில் பட வசூல் பற்றியும் பேசி வருகின்றனர்.
படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் கூறவில்லை. முதல் நாள், படம் சூப்பர் என்று சொல்லி ட்விட்டரில் பெரிய பில்டப் கொடுத்த ரசிகர்கள் அடுத்த நாள், விஜய்க்காக படம் பார்த்ததாகவும், கதையில் அவ்வளவு சுவாரசியம் இல்லை என்றும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
முதல் நாள் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யக்கூடாது என்று கூறி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியது தமிழக அரசு. இருந்தபோதிலும், ரூ.500 ரூ1000 என அதிக பணம் கொடுத்தே ரசிகர்கள் பிகில் படத்தைப் பார்த்தனர்.

விக்கிரவாண்டி தோல்வி: ஸ்டாலினோடு உரசும் திருமாவளவன்

விக்கிரவாண்டி தோல்வி: ஸ்டாலினோடு உரசும் திருமாவளவன்
மின்னம்பலம் : அண்மையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனிடம் சுமார் 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் திமுக கூட்டணியின் தவறான வியூகத்தால் தோல்வி அடைய நேர்ந்தது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இதை நான் சுயவிமர்சனமாகவே முன் வைப்பது என் கடமை. திமுகவுக்கும் அதிமுகவுக்குமான தேர்தல் அரசியல் எங்கள் கூட்டணியின் தேர்தல் உத்தியால் திமுகவுக்கும் சாதீய சக்திகளுக்கான களமாக மாறிவிட்டது.
திமுக திடுமென வன்னியர் சமுதாயத்துக்கான ஓர் அறிக்கையை வெளியிட்டது. அது வரையிலும் பாமக களத்துக்கே வராத நேரம். இன்னும் சொல்லப் போனால் பாமகவை முன்னிலைப்படுத்தாமல் அதை அமைதியாக வைத்திருக்க அதிமுக ஒரு உத்தியைக் கையாண்டது. திமுக இந்த அஸ்திரத்தைக் கையிலெடுத்தவுடனே பாமக வேகமாக களத்தில் இறங்கியது.

கீழடியில் ரூ.12 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

கீழடி அகழாய்வு
கீழடியில் ரூ.12 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமிமாலைமலர் : தமிழகத்தின் கீழடியில் 12 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாட் நாள் விழாவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:
தமிழ்நாடு என்று பெயரை மாற்றி அண்ணா சாதித்தார். கீழடி அகழாய்வு தமிழர் நாகரீகத்தை உலகிற்கே பறைசாற்றி உள்ளது. சிவகங்கை திருப்புவனம் அருகே உள்ள கொந்தகையில் 12.21 கோடி ரூபாயில் கீழடி அகழாய்வு பொருட்களை கொண்டு உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்தார்

மார்பகம் ஒரு கவர்ச்சிப் பொருளா? கலாச்சாரம் ? ...சமுக வலையில் பரவும் கருத்துக்கள்

Kalpana Ambedkar :  சமுக வலைத்தங்களில் தற்போது  அனைவராலும்
பகிரப்பட்டு வரும்  ஒரு புகைப்படம் இது.
ஆடைக்கு பின்னால அரசியல், ஆதிக்கம்,சாதியல் அடக்குமுறை, ஆணாதிக்கம் இப்படி நிறைய விசயங்கள் இருக்கு
உடை என்பது ஆதி மனிதன் குளிருக்கும், மழையைக்கும், பூச்சிகளிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இலைத்தழை, மிருகத்தின்தோல் கொண்டு தன்னை . பின் அறிவாற்றல் தொடங்கிய பின் அதை பருத்தி, பட்டு பூச்சிகள் போன்றவற்றின் மூலம் துணிகளை நெய்ய தொடங்கி உடைகள் தான் மனிதனின் நாகரீகம் என்று வியாபார முதாலித்துவத்தை அங்கே தொடங்கினான் ஆதிக்க என்னமும் அங்கே உதிக்க தோன்றியது சாதிய பாகுபாடுக்கு வழி வகுத்தது பின் ஆண் பெண் மீதான ஆதிக்கத்திற்கு பயன்படுத்தினான் அதை அழுத்தமாக கொண்டு பெண்ணை அடிமையும் படுத்தினான்.
இன்றைய காலகட்டதிலும் ஆடை தான் கலாச்சாரம் என்று போலி பின்பத்தை பல நாடுகள் உருவாக்கி அதன் வழியே மக்களை/ பெண்களை அடிமை படுத்தி கொண்டிருக்கிறது
பல மேலை நாடுகள் ஆடை என்பது தான் கலாச்சாரம் அல்ல என்று உணர்ந்து விட்ட நிலையிலும் இங்கே இன்னும் ஆண் பெண் பேதம் மாறவில்லை . இன்னும் ஆண் மார்பகம் ஒரு அங்கமாகவும் பெண்ணின் மார்பகம் மட்டும் கவர்ச்சி பொருளாகவே பார்க்கபடுகிறது அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் கூறவே வேண்டாம்

குடும்பமாக உட்கார்ந்து பேசி.. கூலிப்படையை ஏவி.. உமா மகேஸ்வரியை கொன்றோம்.. அதிர வைத்த சன்னாசி

tamil.oneindia.com - Hemavandhana  : திருச்சி: "உமா மகேஸ்வரி இருக்கிற வரைக்கும் எங்களால வளர முடியாது.. அதனால கூலிப்படையினருடன் குடும்பமே உட்கார்ந்து பேசி.. அப்பறம்தான் இந்த கொலையை செய்தோம்" என்று சீனியம்மாள் கணவர் சன்னாசி வாக்குமூலம் அளித்துள்ளார். 
கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், வீட்டு வேலைக்கார பெண் என 3 பேரும் கொல்லப்பட்டனர். நடந்த இந்த கொலையே ரொம்ப பயங்கரமாக இருந்தது. உமா மகேஸ்வரி கழுத்தில் 6 இன்ச் அளவுக்கு கத்தியால் குத்தி கிழிக்கப்பட்டு இருந்தது. கணவரின் உடம்பெல்லாம் எண்ணவே முடியாத அளவுக்கு கத்தி குத்துகள். ஆளுக்கு ஒரு ரூமில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். 
இது சம்பந்தமான விசாரணையில், திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் பெயர் துவக்கத்திலேயே அடிபட ஆரம்பித்தது. ஆனால் அதனை அவர் உடனடியாக மறுத்தார். "உமா மகேஸ்வரி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், நான் மாநில துணை செயலாளர்.. அவருகிட்ட போய் நான் நிக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை. அதனால உண்மையான குற்றவாளியை மட்டும் தப்ப விட்டுடாதீங்க" என்று கூறினார்.

மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு . பணிக்கு திரும்புகிறார்கள்


/tamil.news18.com :போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் இன்று காலைக்குள் பணிக்குத் திரும்ப தமிழக அரசு கெடு விதித்திருந்த நிலையில், அரசின் வேண்டுகோளை ஏற்று மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
காலமுறை ஊதிய உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை உயர்த்துவது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த 7 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நேற்று பிற்பகல் 2 மணிக்குள் பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்திருந்தார். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த 8 பேரில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு பணிமாறுதல் நோட்டீசும் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் வேண்டுகோளை ஏற்று 11 மாவட்டங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் முழுமையாக பணிக்கு திரும்பியுள்ளதாக கூறியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று மாலை 7 மணி நிலரவப்படி 1,613 மருத்துவர்கள் மட்டுமே பணிக்கு வரவில்லை என்றார்.

‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் உளவு பார்க்கப்பட்டது .. உலகம் முழுவதும் .. - மத்திய அரசு விளக்கம் கேட்கிறது


மாலைமலர் :   இந்திய பத்திரிகையாளர்கள், மனித உரிமைவாதிகள் உள்பட உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. புதுடெல்லி: ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘வாட்ஸ்-அப்’ செயலி, தகவல்களையும், வீடியோக்களையும் பகிர்வதற்கு பயன்படுகிறது. உலகம் முழுவதும் 150 கோடி பேர் ‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், ‘வாட்ஸ்-அப்’ நிறுவனம் நேற்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டது. உலகம் முழுவதும் பலரது ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறியது.
இதுகுறித்து ‘வாட்ஸ்-அப்’ கூறியதாவது:-
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. என்ற கண்காணிப்பு நிறுவனம், ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருளை தயாரித்துள்ளது. அந்த மென்பொருளை பயன்படுத்தி, அடையாளம் தெரியாத சில நிறுவனங்களின் உளவாளிகள், உலகம் முழுவதும் 1,400 பேரின் மொபைல் போன்களில் ஊடுருவி தங்கள் வசப்படுத்தி உள்ளனர். அந்த போன்களில் ‘வாட்ஸ்-அப்’ மூலம் பரிமாறப்படும் முக்கியமான தகவல்களை திருடி உள்ளனர். ‘வாட்ஸ்-அப்’ தகவல் பரிமாற்றங்களை உளவு பார்த்துள்ளனர்.

ஆழ்துளை கிணறு... சுர்ஜித் தாத்தா : 10 வருடங்களாக குழிக்கு மேல் மண்போட்டு விவசாயம் பார்க்கிறோம்

Sujith falls in deep well ...   Surprised grandfather is shockednakkheeran.in - ஜெ.டி.ஆர். : கடந்த வாரம், தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட விசயம் 2 வயது குழந்தை சுர்ஜித். அவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கி கொண்ட சம்பவம் உலக தமிழர்களை உலுக்கியது. அரசாங்கம் எவ்வளவோ முயன்றும், 80 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுர்ஜித் உடல் துர்நாற்றம் வீசி அழுகிய நிலையில் பாதி சடலமாக மீட்கப்பட்டான்.
சிலர் சுர்ஜித் இறந்ததற்கு, அவனுடைய பெற்றோரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குழந்தையை பார்த்துக்கொள்ளாமல் பெற்ற தாய் எப்படி இருந்தார் என்று சமூக வலைதளங்களிலும், பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இன்று மணப்பாறை காவல் நிலையத்தில் வி.ஏ.ஓ. கொடுத்த புகாரின் அடிப்படையில் சுர்ஜித் மரணம் சந்தேகம் மரணம் என்கிற ரீதியில் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை .. கோவை, நாகூர், காயல்பட்டினம், திருச்சி, இளையான்குடியில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

கோவை, நாகூர், காயல்பட்டினம், திருச்சி, இளையான்குடியில்என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனைமுக்கிய ஆவணங்கள் பறிமுதல் தினத்தந்தி :  தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து கோவை, நாகூர், காயல்பட்டினம், திருச்சி, இளையான்குடியில் 6 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கோவை, இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையன்று நடந்த குண்டுவெடிப்பில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். என்.ஐ.ஏ. அதிகாரிகள்.
 இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுடன் கோவையைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து கோவை, நாகூர், காயல்பட்டினம், திருச்சி, இளையான்குடியில் 6 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கோவை,கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையன்று நடந்த குண்டுவெடிப்பில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.</div> என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுடன் கோவையைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ஐஎஸ்ஐஎஸ்: மலேசிய காவல்துறை அதிர்ச்சி தகவல்.. தென்கிழக்கு ஆசியாவை குறி வைக்கிறது

அபுபக்கர்BBC ::   ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி இறந்துவிட்டாலும், அந்த அமைப்பு தொடர்ந்து தீவிரமாகச் செயல்படும் என நம்புவதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே, மலேசிய போலிசாரும் பாதுகாப்புப் படையினரும் உச்சபட்ச விழிப்பு நிலையில் இருப்பதாகவும், ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தல் நீடிப்பதாகவும் மலேசிய காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் துணை இயக்குநர் டத்தோ அயோப் கான் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஎஸ் அமைப்பின் வேகம் இனி சற்றே குறையக் கூடும் என்றாலும், தென் கிழக்கு ஆசியாவில் தங்களுக்கான ஒரு தளத்தை அமைப்பதில் அவர்கள் இன்னும் தீவிரமாகச் செயல்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
ஐ.எஸ் சித்தாந்தம் முற்றிலுமாக முடக்கப்படும் வரை ஆபத்து நீடிக்கும்:
கடந்த 2017இல், சிரியாவில் வீழ்ச்சி கண்ட பிறகு, தென்கிழக்கு ஆசியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள ஐ.எஸ் அமைப்பு திட்டமிட்டதை மலேசிய போலீசார் முன்பே அறிந்திருப்பதாகக் குறிப்பிட்ட அயோப் கான், அந்த அமைப்பு தெற்கு ஃபிலிப்பின்சில் காலூன்ற அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

மகராஷ்டிரா ஆட்சி சிவசேனாவுக்கு ஏமாற்றம் ... பாஜக குதிரை பேரம்?

Shyamsundar - tamil.oneindia.com/n: சிவசேனாவிற்கு மகாராஷ்டிராவில் பாஜக கட்சி மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்க காத்துக் கொண்டு இருக்கிறது. 
சிவசேனாவிற்கு பாஜக முக்கியமான அமைச்சர் பதவிகளை ஒதுக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. 
அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது. 
காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 104 இடங்களை வென்றது. 
என்னதான் பெரும்பான்மை இடங்களில் பாஜக சிவசேனா கூட்டணி வெற்றிபெற்று இருந்தாலும் இன்னும் அவர்களால் கூட்டணி அமைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
சிவசேனா தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று உறுதியாக இருப்பதால். 50/50 வேண்டும் கண்டிப்பாக கேட்டு வருவதால் அங்கு பாஜக ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வியாழன், 31 அக்டோபர், 2019

நவீன மருத்துவம் மீது பொய் பிரசாரங்களை பார்பனீயம் + முருகதாஸ் + அட்லி வகையறாக்கள் ...

Ganesh Babu  : நம் சமூகத்தில் கணிசமானவர்களுக்கு நவீன (அலோபதி) மருத்துவர்கள் மீது அதிர்ச்சி அளிக்கத்தக்க அளவுக்கு வன்மமும், பொறாமையும் உள்ளது என்பதுதான் உண்மை. இதற்கு காரணமாக பலர் இருந்தாலும், எனக்கு சட்டென நினைவுக்கு வருபவர்களின் பட்டியல் இது:
1. நவீன மருத்துவத்தின் மீது இடைவிடாமல் போலி பிரச்சாரம் செய்யும் டூபாக்கூர் நாட்டுமருந்து கும்பல்.
2. ஊடகத்தின் மூலம் மருத்துவர்களை ஏதோ பணவெறிப் பிடித்த பேய்களைப் போல சித்தரித்து அயோக்கியத்தனமான பொதுப் புத்தி ஒன்றைக் கட்டமைத்துள்ள முருகதாஸ், அட்லி போன்ற பிராடுகள்.
3. ஒருக்காலத்தில் 'மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும்' என்று அதிகாரப்பூர்வ விதிமுறையே இருந்த அளவுக்கு 'அவாள்' மட்டுமே கோலோச்சி வந்த ஒரு துறையை, பெரியாராலும், திராவிட இயக்கத்தாலும் இன்று பார்ப்பனரல்லாதவர்கள் கைப்பற்றிவிட்டார்களே என்ற வயிற்றெரிச்சலில், "தற்கால மருத்துவத்துறையின் தரம் கெட்டுவிட்டது" என்று ஓயாமல் பிரச்சாரம் மேற்கொண்டுவரும் பார்ப்பனர்கள்.
Last but not least, ஒரு விசித்திரமான கும்பல் உண்டு
4. பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் ஓரிரு மதிப்பெண்கள் குறைந்ததால் கவுன்சிலிங்கில் மருத்துவராகும் வாய்ப்பைப் பறிக்கொடுத்தவர்களுள் சிலர்.
இவர்களை தவிர்த்து இயல்பாகவே பிறர் மீது பொறாமைப்படுவதைத் தவிர வேறு ஒரு மயிரும் தெரியாத சைக்கோக்கள்.
வேறு யாராவது விடுப்பட்டிருந்தால் கமெண்ட்டில் குறிப்பிடவும்.

மலேசியா புலி ஆதரவு எம்பிக்கள் நீதிமன்றத்தில் .... 30 வருட சிறைத்தண்டனை கிடைக்கலாம்? வீடியோ

இலங்கைநெட் : மலேசியாவில் பயங்கரவாத இயக்கம் என தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்புக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்தமை மற்றும் அவர்களது சின்னங்கள் மற்றும் இறுவெட்டுக்களை தமது உடமைகளில் வைத்திருந்தமை தொடர்பில் அந்நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் இருவர் உட்பட பன்னிருவர் கைது செய்யப்பட்டிருந்தமை யாவரும் அறிந்தவிடயமாகும். குறித்த பன்னிருவரும் இன்று மேலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இருவேறு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றப்பத்திரிகைகள் வாசிக்கப்பட்டுள்ளதுடன் , சந்தேக நபர்கள் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாக தலையசைத்ததாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளதுடன், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும்பட்சத்தில் 30-40 வருட சிறைத்தண்டனையும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படலாம் என செய்தி வெளியிட்டுள்ளனர்.
மலேசியச் செய்திகள் இவ்வாறு தெரிவிக்கின்றது.
கோலாகங்சார் நீதிமன்றத்தில் அரவிந்தன் -பாலமுருகன் மீது குற்றச்சாட்டு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான அம்சத்தை கொண்ட ஆவணங்களை வைத்திருந்தது தொடர்பில் கூலிமைச் சேர்ந்த 27 வயதுடைய அரவிந்தன் மற்றும் சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த டாக்சி டிரைவர் வி. பாலமுருகன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

சீமானின் சொத்து விபரங்கள் ... எப்படி இவ்வளவு சொத்துக்கள் சேர்ந்தது?

seithipunal.com : நெல்லை கோலா பாக்டரியில் 7சதவீதம் பங்கு!
V V Minerals நிறுவனத்தில் இருந்து மாதாமாதம்  ஒன்றரை இலட்சம் ரூபா ..
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 8 கிரவுண்டு நிலம்
பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம்
ஆவடியில் 6 ஏக்கர் நிலம்
பங்களூரில் நாலு மாடி  அப்பார்ட்மென்ட் வீடுகள்
சென்னையில்கிறித்துவ பள்ளிஒன்றில்  சீமானின் தம்பி நிர்வாகஇயக்குனர் 
இலங்கையில் பவர் பிளான்ட் தொழில்
விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடுமற்றும்  ட்ரஸ்ட் பெயரில் சர்ச்
மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம்
கோவையில் தங்கையின் கணவர் பெயரில் 9 ஏக்கர் நிலம்
மதுரை பைபாஸில் தென்னந்தோப்பு
நெல்லை . குமரி மாவட்ட நாடார் சங்கங்கள் மாதாமாதம் விசேச கவனிப்பு
தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக மூன்று தவணைகளில் 1.43 கோடி பெற்றது
பழனி அருகே தென்னந்தோப்பு
ஊட்டியில் எஸ்டேட் தொழில் 
அரனையூரில் 6000 சதுர அடியில் பெரிதாக ஒரு வீடு
இவை போக புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து மாதாமாதம் வரும் பணம்
குடியிருக்கும் வீட்டுக்கே வாடகை கட்ட முடியாமல்  இருந்தவர்தான் இந்த சீமான்.
கடந்த சட்டமன்ற தேர்தலில்  கடலூரில் போட்டி இட்டபோது இவர் காட்டிய சொத்துக்கள் விபரம் இதோ :
35. 36 இலட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் ,8 .97 இலட்சம் கடனும் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார் .
அவரது மாணவி கயல்விழிக்கு  52 . 25 இலட்சம் அசையும் சொத்துக்களும் , 29 இலட்சம் அசையா சொத்துக்களும் மட்டுமே இருப்பதாக காட்டி இருந்தார்கள்


தங்கம் ரசீது இல்லாமல் வைத்திருந்தால் .. பதுக்கல் தங்கமாக கருதப்பட்டு .. வரி வட்டி தண்டம் அறவிடப்படும் .. அல்லது பறிமுதல் ... வழிப்பறி கொள்ளை தொடர்கிறது?

டுபாக்கூர்துனியா : கருப்பு பணத்தில் , அதாவது மக்கள் தங்களிடம் வைத்திருக்கும் தங்க நகைகளுக்கு ரசீது வதிருக்கவேண்டுமாம்.  பரம்பரையாக குடும்பங்கள் வைத்திருக்கும் தங்க நகைகளுக்கு ரசீது யாரிடம் இருக்க போகிறது? புதிய சட்டப்படி அவை எல்லாம் பதுக்கிய தங்கம் என்ற வகையில் சேரும் . கடுமனையான வரி வட்டி தண்டம் எல்லாம் அறவிடப்படும்! கட்ட தவறின் பறிமுதல் செய்யப்படும்! இதைத்தான்  பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் என்று மத்திய அரசு தற்போது ஏற்பாடு செய்துள்ளது !கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது பெரும்பாலான பாஜக  பண முதலைகள் தங்கத்தில் முதலீடு செய்தனர். அதே போன்று இப்போதும் அதே பணமுதலைகள் தங்கள் பணத்தையும் தங்கத்தையும் பாதுகாத்து இருப்பார்கள்
தற்போது மக்களின்  தங்கத்தை வெளியே கொண்டு வர மத்திய அரசு ‘தங்கம் பொதுமன்னிப்பு திட்டம்’ என்ற ஒரு திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது இந்த திட்டத்தின்படி மக்கள்  வாங்கிய தங்கத்தை கணக்கில் காட்டி, அதற்குரிய வரியை செலுத்தி கருப்பு பணம் அல்லாத தங்கமாக வைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி வாங்கிய சுமார் 25 முதல் 30 டன் எடையுள்ள தங்கத்திற்கான வரி கிடைக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறதாம்!
ஆனாலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஒரு சில சிக்கல்கள் எழலாம் என்பதால் இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னாக தங்க முதலீட்டாளர்கள், பொருளாதார வல்லுனர்கள் ( ஆர் எஸ் எஸ் பிளஸ் சாமியார்கள்)   மற்றும் தங்க நகை வியாபாரிகளுடன் மத்திய அரசு கலந்து ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

சசிகலா- எடப்பாடி: தூதுவரின் அடுத்த நகர்வு!

சசிகலா- எடப்பாடி: தூதுவரின் அடுத்த நகர்வு! மின்னம்பலம் :  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமமுகவைச் சேர்ந்தவரும், தினகரனுக்கு எதிராக செயல்பட்டு வருபவருமான புகழேந்தி அக்டோபர் 25 ஆம் தேதி சந்தித்துப் பேசினார். அப்போது இடைத்தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சந்தித்ததாக தெரிவித்தார் புகழேந்தி.
ஆனபோதும், எடப்பாடியுடனான சந்திப்பில் அவர் சொன்ன தகவல்களோடு பெங்களூரு சென்று சிறையிலிருக்கும் சசிகலாவை சந்தித்துவிட்டு மீண்டும் வந்து முதல்வரை சந்திப்பதாக சொல்லிவிட்டு மும்பை சென்றுவிட்டார் புகழேந்தி. அவர் சசிகலாவை சந்தித்த பிறகு மீண்டும் முதல்வர் எடப்பாடியை சந்திப்பார் என்றும் அப்போது அதிமுக, அமமுக இணைப்பு ரீதியான முயற்சிகள் அடுத்த கட்டத்தை எட்டும் என்றும் தெரிகிறது.
புகழேந்தி வட்டாரத்தில் இதுகுறித்துப் பேசும்போது இந்த முயற்சி இன்று நேற்று நடப்பதல்ல என்று சொல்லிவிட்டு சில தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள்.

பாகிஸ்தான் ரயிலில் தீ விபத்து.. 73 பேர் உயிரழப்பு .. மேலும் பலர் ?.. சமையல் அடுப்பு வெடித்து ..


BBC :பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்று கொண்டிருந்த தாஜ் ஜெம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 73 பேர் உயிரிழந்துள்ளனர். ரயிலில் பயணித்தவர்கள் எரிவாயு சிலிண்டரை எடுத்துவந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ மூன்று ரயில் பெட்டியில் பரவியதாக கூறப்படுகிறது.
பலர் எரியும் ரயிலில் இருந்து தப்பிக்க வெளியே குதித்ததால் உயிரிழந்ததாக அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் இதுவரை 40 பேர் காயமடைந்துள்ளனர் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
"இரண்டு சமையல் அடுப்புகள் வெடித்துவிட்டன. அவர்கள் சமைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வைத்திருந்த சமையல் எண்ணெய் மேலும் தீயை கூட்டியுள்ளது," என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷித் அகமது தெரிவித்துள்ளார்.
நீண்ட தூர பயணங்களில் சமையல் செய்வதற்கு பயணிகள் ரயிலில் அடுப்புகளை எடுத்து வருவது பெரும் பிரச்சனையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதியில், ரஹிம் யார் கான் நகருக்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பிரேமலதா சுஜித் அடிதடி .. விஜயகாந்த் குடும்பத்தில் அதிகார போட்டி .. சுஜித் போர்க்கொடி!

Mahalaxmi : அக்கா – தம்பிக்குள்ளேயே அடிதடி… விழி பிதுங்கும் விஜயகாந்த்… பரிதாப தொண்டர்கள்…
சினிமாவில் எத்தனையோ மயிற்கூச்செரியும் சண்டைக் காட்சிகளை நிகழ்த்திக் காட்டியவர் விஜயகாந்த்.
அப்படிப்பட்டவர் இன்று தன் கண்முன்னே குடும்பத்திற்குள் நடக்கும் ஆக்ரோஷ மோதலைக் கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இயல்பாக செயல்பட முடியாத அளவிற்கு விஜயகாந்த் உடல்நலம் என்றைக்குப் பாதிக்கப்பட்டதோ அன்று முதல் குடும்பத்திலும், கட்சியிலும் மனைவி பிரேமலதாவின் ஆதிக்கம் உச்சத்திற்கு போனது.
2016ல் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற விஜயகாந்தின் விருப்பத்தையும் மீறி, அவரை மக்கள் நலக் கூட்டணிக்குள் திணித்ததில் பிரேமாவுக்கு முக்கிய பங்கு உண்டு. அதுபோலவே அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கைகோர்க்கும் முடிவையும் பிரேமாவே தன்னிச்சையாக எடுத்தார்.
அண்மையில் நடைபெற்ற நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வரை இதே நிலைதான்!

தமிழக மருத்துவர்கள் போராட்டம்: ‘அரசுப் பணிக்கு காத்திருக்கும் 10,000 மருத்துவர்கள்’ – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

மருத்துவர்கள் போராட்டம்: தமிழக அரசு எச்சரிக்கைbBC : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிவரும் அரசு மருத்துவர்கள் நாளை (வியாழக்கிழமை) பணிக்குத் திரும்பாவிட்டால், புதிய மருத்துவர்களை நியமிக்கப்போவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார். ஆனால், தங்களை திறந்த மனதோடு அழைத்துப் பேசாவிட்டால் பணிக்குத் திரும்பப்போவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறித்தி கடந்த வெள்ளிக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதில் 5 மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயத்திற்கு ஆபத்து... விவசாயத்தை மார்வாடிகளிடம் தாரைவார்க்க ஒப்பந்த விவசாய சட்டம்

தினகரன் : விவசாயிகள் நலன் காப்பதற்காக ஒப்பந்த விவசாயம் என்ற புதிய சட்ட வரைவு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களும் இந்த திட்டத்தை பரிசீலிக்காதபோது தமிழக அரசு மட்டும் கடந்த 14.2.2019  அன்று சட்டப்பேரவையில் இந்த மசோதாவை நிறைவேற்றியது. அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து விட்டதால் விரைவில் மசோதா அமல்படுத்தப்பட உள்ளது. இது தமிழக விவசாயத்திற்கு ஆபத்தாக அமையும்  என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.இதுவரையும் விவசாய நிலத்தை தான் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டார்கள். அதுவும் தனியார் நிலங்கள் தான் இதில் ஈடுபடுத்தப்பட்டன. குத்தகைக்கு எடுத்து பருவம் பார்ப்பது என்று கிராமங்களில்  கூறுவார்கள். நிலம் தரிசாக போவதை தடுக்க நில உரிமையாளர்கள் விவசாய கூலித்தொழிலாளர்களிடம் பருவத்திற்கு ஏற்ப ஒப்பந்தம் செய்து குத்தகை வழங்குவார்கள்.

துரைமுருகன்-பாஜக தலைவர்கள் ரகசிய சந்திப்பு! உதவிய ஓபிஎஸ்

டிஜிட்டல் திண்ணை: துரைமுருகன்-பாஜக தலைவர்கள் ரகசிய சந்திப்பு! உதவிய ஓபிஎஸ்மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. வாட்ஸ்அப் ஆன் லைனில் இருந்தது. லொகேஷன் டெல்லி காட்டியது. “திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கும் அவ்வப்போது ஊடல்கள் வருவதும் பின்பு அந்த ஊடல்கள் உடைந்து போவதும் வழக்கமான ஒன்றுதான். அறிவாலய வட்டாரத்தில் துரைமுருகனுக்கும் ஸ்டாலினுக்குமான சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் பற்றி பல்வேறு விவாதங்கள் வந்து போகும். அந்த வகையில் இப்போது பேசப்படும் விஷயம் கொஞ்சம் பெரிதாகத்தான் இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு அறிவாலயம் சென்ற துரைமுருகன் திமுக தலைவர் ஸ்டாலினிடம், ‘தம்பி உடம்பு கொஞ்சம் படுத்துது. ஒரு வாரம் நல்லா ஓய்வு எடுக்கலாம்னு இருக்கேன். லீவு வேணும்’ என்று தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாகக் கேட்டிருக்கிறார். இதைக் கேட்டதும் ஸ்டாலின், ‘ஏன் அப்படி கேக்கறீங்க. உடம்ப பாத்துக்கங்க. ஊருக்கு போறீங்களா? ஊர்ல போய் நல்லா ரெஸ்ட் எடுங்க. மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று அக்கறையாக சொல்லியிருக்கிறார்.

மகா புயல் - தொலைத்தொடர்பு சேவை பாதிக்கும்: வானிலை மையம்!

மகா புயல் - தொலைத்தொடர்பு சேவை பாதிக்கும்: வானிலை மையம்!
 மின்னம்பலம் : அரபிக் கடலில் ஏற்கனவே கியார் புயல் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை மற்றொரு புயல் உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரே சமயத்தில் இரு புயல்கள் உருவாகியிருப்பது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் வட கிழக்கு பருவ மழைத் தொடங்கி மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி அருகே அரபிக் கடலில் ஏற்கனவே கியார் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில் மற்றொரு புயல் உருவாகியிருப்பதாகவும் அதற்கு மகா என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு - தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து 320 கி.மீ. மேற்கு வடமேற்கு திசையில் மகா புயல் நிலைகொண்டுள்ளது. இந்த புயலானது இன்று (அக்டோபர் 31 ) தீவிர புயலாக மாறும். இதனால் காற்றின் வேகம் மணிக்கு 95 கி.மீ. முதல் 115 கி.மீ. ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SujithHackathon ஆழ்துளை கிணற்றில் விழுந்தால் .. இப்படி தூக்க தூக்கமுடியுமா?

Alwar Narayanan : சுஜித்...  எனக்கு தோன்றியதை இங்கே பதிவிடுகிறேன். ஆர்வமுள்ளவர்கள் இதை மேம்படுத்தி வடிவமைப்பாளர்களுக்கு அனுப்பவும்.
குழந்தை ஆழ்துளை குழியில் (போரில்) விழுந்தவுடன் பக்கவாட்டில் குழிதோண்டுவது இயலாத காரியம். மண் சரியும், நேரமெடுக்கும் etc
நேராக விழுந்த பாதையில் தூக்குவதுதான் விரைவான தீர்வாகும்.
அ) முதலில் மண்டையை கவ்வ வேண்டும். மண்டைதான் குழியை அடைக்கும். ஆக்சிஜன் கொடுத்துக்கொண்டே ரப்பர் கிண்ணத்தை கொண்டு உச்சந்தலை மண்டையை தொட்டு காற்றை உறிஞ்சினால் கப்பு ஒட்டிக்கொள்ளும். (sticking by Vaccum Suction). பிரசவத்தின் போது குழந்தையை இழுப்பதுபோல இது.
ஆ) ஆனால் இழுக்க / தூக்க கூடாது. இது மேலும் கீழே போகாமல் தடுக்கமட்டும்தான்.
இ) இப்போது பக்கவாட்டின்மூலம் (கொஞ்சம் மண்ணை சுரண்டியாவது) "L" போன்ற கம்பியை / பட்டையை நுழைத்து மோவாய்கட்டையை பிடிக்கவேண்டும். அதாவது (கெஜ்ரிவால் மப்ளர் கட்டிக்கொண்டதுபோல, அல்லது சவத்துக்கு துணிக்கட்டுவதுபோல தாடைக்கு அடியில் இருந்து உச்சந்தலை வரை கட்டு போட்டிருப்பார்கள்) - தாடையில் பிடி கிடைத்தால் தலையை கொஞ்சம் மேலே தூக்கமுடியும். தவறில்லை. ஒன்றும் ஆகாது. (கழுத்தை சுற்ற கூடாது)
ஈ) இப்படி செய்தால் உடம்பு கொஞ்சம் நீள்படும். பக்கவாட்டில் சந்து (Gap) கிடைக்கும். இந்த சந்தில் ஒரு மெல்லிய குழாயை சொருகி அதன் நுனியில் பலூன் கொண்டு குழந்தைக்கு அடியில் நிரோத் போன்ற உடையாத ஆனால் கனமான பலூனை விரிவாக்கிக்கொண்டே போகவேண்டும். பலூன் மேலும் இறங்காமல் பார்த்துக்கொள்ள மட்டும்தான்.

இன்று இரண்டாக பிரிகிறது ஜம்மு - காஷ்மீர்...

நக்கீரன் : ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370, 35A- ஐ நீக்கி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து ஜம்மு- காஷ்மீர் மாநிலம் முழுவதும் துணை ராணுவப்படையை குவித்தது மத்திய அரசு. மேலும் ஜம்மு காஷ்மீர் தொடர்பான இந்த அறிவிப்பு வெளியாகும், முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி  உள்ளிட்டோரை வீட்டுக்காவலில் வைத்தது மத்திய அரசு. அத்துடன் ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவை பிறப்பித்தது.

பக்தாதி பற்றி தகவல் கூறியவருக்கு 177 கோடி ரூபாய் பரிசு .. அடுத்த தலைவரும் உயிரிழப்பு?

தினமலர் : நியூயார்க்: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதியின் இருப்பிடம் குறித்து, அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் கொடுத்த உளவாளிக்கு, 177 கோடி ரூபாய் பரிசு அளிக்க, அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் பதுங்கியிருந்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதியை, அமெரிக்க ராணுவம், சமீபத்தில் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் தப்பிக்க முடியாத பாக்தாதி, உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து, தற்கொலை செய்தார். அவரது உடலை, அமெரிக்க ராணுவம் கடலில் துாக்கி வீசியது.
இந்நிலையில், பாக்தாதியை, அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்தது குறித்து, அமெரிக்க பத்திரிகைகளில் வெளியிட்டுள்ள செய்திகளில் கூறப்பட்டுள்ளதாவது:அல் பாக்தாதியின் இருப்பிடம், அவர் தங்கியிருந்த அறை, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், அதை எப்படி முறியடிப்பது என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், ஒரு முக்கிய நபர் தான் தெரிவித்துள்ளார்.

.முஸ்லீம்கள் வெளியேற்றம்...புலிகளின் இனச்சுத்திகரிப்பு... 1990 அக்டோபர் 30 !

சிவசங்கரன் சுந்தரராசன் :
1981 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் யாழ்ப்பாணத்தில் 14,844 முஸ்லீம்கள் வசித்து வந்திருந்தனர். தாம் உடுத்திருந்த உடுப்புடனும் ஆகக்கூடியது 50 ரூபாய் பணத்துடனும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் இவர்கள் இருந்த குடியிருப்புகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. வட மாகாணத்தில் இருந்து 14,400 முஸ்லிம் குடும்பங்கள் (கிட்டத்தட்ட 72,000 பேர்) வெளியேற்றப்பட்டனர். இவர்களில் மன்னாரில் இருந்து 38,000 பேரும், யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இருந்து 20,000 பேரும், வவுனியாவில்இருந்து 9,000 பேரும், முல்லைத்தீவில்5,000 பேரும் அடங்குவர். இவர்களில் பலர் புத்தளம் மாவட்டத்திலும், ஏனைய பகுதிகளிலும் குடியமர்த்தப்பட்டனர்
சி : அக்டோபர் 30 என்றால் ஈழத்தில் வாழும் முஸ்லீம்கள் வெளியேற்றம் தான். ஈழத்தில் பிரபாகரன் முன்னின்று இன சுத்திகரிப்பு நடத்தியதன் உச்சம் தான் யாழ்ப்பாண முஸ்லீம்கள் வெளியேற்றம் தான்
1990 களில் விடுதலைப் புலிகள் வடமாகாண முஸ்லீம்கள் மீது தமது இனத்துடைப்பை எவ்வாறு செய்தனர்?
கிழக்குமாகாணத்தில் தமது இனத்துவேச நடத்தையில் படுகொலை வரை செய்யத் துணிந்த புலிகள் அதன்பின் தமது கட்டுப்பாட்டில் இருந்த வடபகுதியிலும் தமது கைவரிசைகளை காட்டத் தொடங்கினர். கருத்தியல் ரீதியில் இனத்துடைப்பை நியாயப்படுத்த தமிழர்கள் மத்தியில் மெதுவாக நச்சு விதைகளை விதைக்க தொடங்கினர். பொது சிவில் நிர்வாகம் சீர்குலைந்த நிலையில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான துப்பாக்கி பஞ்சாயத்தை அவர்கள் செய்தனர். அதில் முஸ்லீம் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தமிழர்களுக்கு சார்பான தீர்ப்புகள் வழங்கப்பட்டது. நீங்கள் தமிழர்களுக்கு கீழ்ப்பட்டுதான் வாழ வேண்டும் என கடுமையான எச்சரிக்கைகளும் நேரடியாக விடப்பட்டது.

புதன், 30 அக்டோபர், 2019

தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம் .. மார்வாடிகளுக்கு தமிழக நிலத்தை பறித்து கொடுக்க அவசர அவசரமாக சட்டம் .

Mathi Vanan : · விவசாயிகள் வருமானத்தை பெருக்க விவசாய ஒப்பந்த சட்டம்.
குடியரசு தலைவர் ஒப்புதல். இந்தியாவிலே முதலில் தமிழ்நாட்டில் அமல்.
 விவசாயி, விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் வியாபாரிகளிடம் ஒப்பந்தம் போடும் சட்டம்.
இதனால் வியாபாரி நல்ல விலை குடுப்பார். வியாபாரி விதைகள், தொழில்நுட்பமும் குடுப்பார். விவசாயிக்கும் வியாபாரிக்கும் பிரச்சனை என்றால் அரசு நடுவராக சரி செய்யும்.
இதில் வியாபாரி என்ற இடத்தில் அம்பானி அதானி பெருமுதலாளிகளை போட்டுக் கொண்டால், அம்பானி அதானிக்கு பொருள்களை உற்பத்தி செய்யும் கூலித்தொழிலாளிகளாக விவசாயிகள் என்பதை புரிந்து கொள்ளலாம். அம்பானி அதானி ஆலைகள் கூட அமைக்க வேண்டாம். விவசாயி நிலமே அம்பானி அதானியின் ஆலை.
 Devi Somasundaram : · தமிழக அரசு நிறைவேற்றிய நில குத்தகைச் சட்டம் குடியரசு தலைவரால் ஒப்புகை தரப்பட்டது ..செய்தி . .
நீட் சட்டத்துக்கு ஒப்புகை தருவதில் காட்டப் படாத அவசரம் ஏன் இதுல காட்டப்பட்டது . இனி பஞ்சமி நிலம் மட்டும் இல்ல ...குத்தகையா கூட சிறு விவசாயி யாரும் விவசாயம் செய்ய முடியாது ....சாவுங்க .! இவங்களுக்கு தேவை தான் ...எதுக்குமே போராட மாட்டோம் ...பம்முவோம்ன்னா இனி மார்வாடி ,ரிலையன்ஸ் மொத்தமா நிலத்தை குத்தகை எடுத்துட்டு போகப் போறான் ....இவங்க வாய்ல விரல வச்சுக்கட்டும்!

பயிற்சி மருத்துவர்கள் மற்றும் செவிலியரின் பங்கு அளப்பரியது....

Drprakash Surgeon Thanjavur : கடந்த வாரம், 2 வயது குழந்தை க்கு ஆசன வாய்
வழியாக ரத்த போக்கு ஏற்பட்டு இரவு நேரத்தில் அட்மிட் ஆனான்...
ரத்த போக்கு சுமார் 1 லிட்டர் இருக்கும்....
உடனே 2 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டது...
அடுத்த நாள் பரிசோதனை செய்ய படும் போதே தனியார் மருத்துவமனை க்கு போவதாக சொல்லி அழைத்து போய் விட்டனர்...
இவ்வளவு ஆபத்தான கேஸ் தனியாரில் சமாளிக்க முடியாமல் திரும்ப அரசு மருத்துவமனைக்கே வந்தார்கள்...
மேலும் ரத்த போக்கு மீண்டும் ரத்த ஏற்றம்,,,
அறுவை சிகிச்சைக்கு தயார் செய்யும் முன் குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு icu க்கு மாற்றினோம்...
கூடவே காய்ச்சலும் வந்துவிட்டது...
அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய பொற்காலத்தை தனியார் மருத்துவமனைக்கு அலைந்து வீனடித்ததின் விளைவு....
மீண்டும் ரத்த போக்கு....
ஹீமோகுளோபின் 1.3 ஆகி போனது, தட்டணுகள் மிகவும் குறைந்து போய் விட்டது...
அறுவை சிகிச்சை செயதாலும் மரணம் என்ற நிலையில் இருந்தது குழந்தை...
icu டாக்டர் களின் சிறப்பான கவனிப்பில் ஹீமோகுளோபின் 5 ஐ தொட்டது...
அடுத்த ரத்த போக்கு ஏற்படுவதற்குள் அறுவை சிகிச்சை செய்ய திட்ட மிட்டோம்...

கூடங்குளம் அணுமின்நிலைய கம்பியுட்டரகளை ஹேக் செய்த வடகொரியா .. Malware linked to North Korea's Lazarus Group

Confirmed: North Korean malware found on Indian nuclear plant's network Two days after rumors of a malware infection at the Kudankulam Nuclear Power Plant surfaced on Twitter, the plant's parent company confirms the security breach.
தினகரன் : கூடங்குளம் அணுமின் கணினிகளுக்குள் சைபர் தாக்குதல்: விரிவான விசாரணையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்...மு.க.ஸ்டாலின் டுவிட் சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் வடகொரியாவைச் சேர்ந்த 'லாசரசு' எனும் குழுவால் ஹேக் செய்யப்பட்டு டி ட்ராக் என்னும் வைரசால் கூடங்குளத்தின் தகவல்கள் திருடப்பட்டதாக சில தனியார்  சைபர் அமைப்புகள் தெரிவித்தன. இந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கியது. ஆனால் கூடங்குளம் அணுவுலை நிர்வாகம் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கூடங்குளம் அணு உலை சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக வெளிவந்த தகவல் பொய்யானது. கூடங்குளம் அணு உலை கட்டுப்பாட்டு அமைப்புகள் அனைத்தும் தனித்துவமானது வெளியிலிருந்து அதனை ஹேக் செய்ய முடியாது என  குறிப்பிட்டுள்ளது.
இணையத்தில் வைக்கப்படாததால் அணுமின் தொழில்நுட்ப தகவல்களை ஹேக்கர் உள்ளிட்ட யாரும் திருட வாய்ப்பில்லை என அணுமின் நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
கூடங்குளத்தில் அணுமின் தொழில்நுட்பம் தொடர்பான  தகவல்கள் ஏதும் இணையத்தில் வைக்கப்படவில்லை. நிர்வாகம் தொடர்பான தகவல்கள் மட்டுமே இணையத்தில் வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இங்கிலாந்து எம்பி.கிறிஸ் டேவிஸ் : காஷ்மீரில் மோடியின் பிரசார உத்திக்கு உதவி செய்யமாட்டேன்


ககன் சபர்வால் - பிபிசி தெற்காசிய செய்தியாளர் : காஷ்மீரைப் பார்வையிடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இடம்பெறுவதாக இருந்த வடமேற்கு இங்கிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் (லிபரல் ஜனநாயக கட்சி) ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஸ் டேவிஸ் கடைசியில் தமக்கு அந்தக் குழுவில் இடம் மறுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் மேற்பார்வை இல்லாமல், காஷ்மீரில் தான் விரும்பிய இடங்களுக்கு எல்லாம் சென்று பார்க்கவும், விரும்பியவர்களை சந்தித்துப் பேசவும் சுதந்திரம் வேண்டும் என்று இந்தப் பயணத்துக்கு அவர் நிபந்தனை விதித்திருந்தார்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பறிக்கப்பட்ட பின் முதல்முறையாக இத்தகைய பயணத்திற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பல இடங்களுக்கு செல்லும் இந்த ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு, களத்திலுள்ள உண்மையான நிலவரங்களை நேரடியாக தெரிந்து கொள்ளும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், பிபிசி தெற்காசிய செய்தியாளர் ககன் சபர்வாலுக்கு, கிரிஸ் டேவிஸ் அளித்த பேட்டி இதோ:
கேள்வி: காஷ்மீருக்கு வர உங்களுக்கு அழைப்பு கொடுத்தது யார்? இந்திய உயர் ஆணையத்திடம் இருந்து அழைப்பு வந்ததா?
பதில்: இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் ஆதரவாளர்களிடம் (பெண்களின் பொருளாதாரம் மற்றும் சமூக ஆலோசனை அமைப்பு) இருந்து இந்த அழைப்பு வந்தது. இந்திய அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடு இந்த ஏற்பாடுகள் அனைத்து செய்யப்படுவதாகக் கூறப்பட்டது.
கேள்வி: காஷ்மீரில் பயணம் மேற்கொள்வதில் நீங்கள் ஏன் மிகவும் ஆர்வமாக இருக்கிறீர்கள்?

மருத்துவர்கள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு!

TAMILNADU GOVT HOSPITAL DOCTORS STRIKE CONTINUE MINISTER VIJAYA BASKER PRESS MEET nakkheeran.in - பா. சந்தோஷ் : அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து எங்கள் போராட்டம் தொடரும் என அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மருத்துவர்களின் போராட்டத்தை மக்களுக்கு எதிரான போராட்டமாக பார்க்க வேண்டாம் என அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாளைக்கு பணி திரும்ப பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்திருந்தார். ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மருத்துவர்கள் ஆறாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குழந்தை சுஜீத் உடல்... பொய் சொல்லும் அரசு!

குழந்தை சுஜீத் உடல்... பொய் சொல்லும் அரசு!
மின்னம்பலம: மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆறு இஞ்ச் என்ற சின்னஞ்சிறு அகலம் கொண்ட ஆழ் துளைக் கிணற்றில் இரண்டு வயது பாலகன் சுஜித் விழுந்துவிட்டான் என்ற செய்தி அக்டோபர் 25 ஆம் தேதி இரவு செய்தித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதுமே தமிழகம் முழுக்க தீபாவளி கொண்டாட்டத்தை மீறிய ஒரு கவலை படரத் தொடங்கியது.
தீபாவளிக் கொண்டாட்டத்தை தள்ளி வைத்த தமிழகம்
தீபாவளி விசாரிப்புகளை விட பொது இடங்களில் சுஜித் பற்றிய விசாரிப்புகளே அதிகமாகியின. 25 ஆம் தேதி இரவு ஆறு முதல் 10 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித்தை பார்க்க முடிந்திருக்கிறது. கிராமத்தினர் எல்லாம் கூடி நின்றனர்,. அம்மா குழியின் மேல் நின்று சுஜீத்து சுஜீத்து... என்று நீண்ட நெடில் குரலெடுத்துக் கதறினார். கீழேயிருந்து அம்மா அம்மா என்ற சுஜீத்தின் குரலும் சன்னமாகக் கேட்க சுற்றியிருந்த ஊர் மக்கள் மனதெல்லாம் கனத்துப் போனது.
விஜயபாஸ்கரின் யோசனை
அந்த ஆழ்துளைக் கிணறு ஆறு இஞ்ச் என்ற மிகச் சிறிய அளவு என்பதால் வேறு நபர்களை விட்டும் இறங்கிக் காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக தீயணைப்புத் துறையினர் வந்துவிட அவர்களாலும் அந்த மிகக் குறுகிய அகலம் கொண்ட குழிக்குள் மீட்புப் பணிகளை செய்ய முடியவில்லை.

ex நெல்லை மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் சீனியம்மாள், அவரது கணவர் கைது -

உமா மகேஸ்வரி
முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி
முன்னாள் மேயர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் கைது - சிபிசிஐடி அதிரடி
சீனியம்மாள்
மாலைமலர் : நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், திமுக பிரமுகர் சீனியம்மாள் மற்றும் அவரது கணவரை இன்று கைது செய்தனர். சென்னை: நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் உமா மகேஸ்வரி (62). அவரது கணவர் முருகசங்கரன் (71). கடந்த ஜூலை 23-ம் தேதி இவர்கள் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அப்போது வீட்டில் இருந்த மாரி என்ற பணிப்பெண்ணும் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதால் கொள்ளையர்கள் தான் கொலையை செய்திருக்கலாம் என்று முதலில் போலீசார் சந்தேகித்தனர். இது தொடர்பாக 3 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும், அரசியல் போட்டி காரணமாக கூலிப்படையை ஏவி யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, உமா மகேஸ்வரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்களது விசாரணையில் சீனியம்மாள் மகன் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

சுஜித் மரண மர்மம்... ஸ்டாலின் கேட்கும் கேள்விகள்

tamil.samayam.com : சுஜித்தின் மரணத்தில் இருக்கும் தன் கேள்விகளைப் பட்டியலிட்டு ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..  சுஜித் மரண மர்மம்... ஸ்டாலின் கேட்கும் கேள்விகள்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து இறந்த சிறுவனின் நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின் தமிழக அரசின் மீது மெத்தனம் என்ற குற்றச்சாட்டைச் முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் எல்லாம் தெரிந்த விஞ்ஞானி போல் பேசுவதாக பகடி தொனியில் பதிலளித்தார்.
தற்போது சுஜித்தின் மரணத்தில் இருக்கும் தன் கேள்விகளைப் பட்டியலிட்டு ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “
மனசாட்சியுடன் பதில் சொல்ல வேண்டும்:
குழந்தை சுஜித் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு உரிய பதில் சொல்லாமல் முதலமைச்சர் பதுங்கிக் கொள்ள முடியாது. கோபத்தின் உச்சத்தில் இருக்கும் மக்களின் கேள்விகளுக்கு மனசாட்சியுடன் பதில் சொல்லியே ஆக வேண்டும்!

4 ஐரோப்பிய எம்பிக்கள் திரும்பி சென்றனர் ..ராணுவம் புடைசூழ காஷ்மீர் செல்வதில் பயனில்லை .. அதிருப்தி ..

.hindutamil.in : காஷ்மீர் அழைப்பை ரத்துசெய்து திரும்பிய சில தூதுக்குழு உறுப்பினர்கள்: பாதுகாவல் துணையின்றி மக்களை சந்திக்க விரும்பியதாக தகவல்
uk-member-of-eu-parliament-claims-india-withdrew-invitation-to-visit-kashmir
 நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் டேவிஸ்
இங்கிலாந்தின் மூத்த அரசியல்வாதி ஒருவர், காஷ்மீரை பார்வையிடும் ஐரோப்பிய தூதுக்குழுவிலிருந்து விலகி இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ரத்துசெய்து சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளதாக லண்டன் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது காஷ்மீர் விஜயத்தில் பாதுகாவல் துணையின்றி மக்களை சந்திக்க விருப்பம் என்ற சிறிய விளக்கத்துடன் அவர் இந்தியாவின் அழைப்பை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. அவரைப்போன்று மேலும் 3 பேரும் அவ்வாறே அழைப்பை ரத்துசெய்துவிட்டு நாடு திரும்பியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செயத ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குப் பிறகு பள்ளத்தாக்குக்கு ஒரு வெளிநாட்டு தூதுக்குழுவிற்கு இந்தியா அனுமதி அளித்தது.

ஐரோப்பிய எம்பிக்கள் காஷ்மீர் இன்பச்சுற்றுலா ... தனிப்பட்ட ரீதியிலான மடி ஷர்மாவின் அழைப்பு

Ms. Madi Sharma: flight and accommodations will be covered and are sponsored by the International Institute for Non-Aligned Studies”.
தினத்தந்தி :ஐரோப்பிய எம்.பி.க்கள் குழு காஷ்மீருக்கு சென்றது. அதே
சமயத்தில், அங்கு பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
ஐரோப்பிய எம்.பி.க்கள் குழு காஷ்மீர் சென்றது பாதுகாப்பு படையினர்-போராட்டக்காரர்கள் மோதல் நீடிப்புஸ்ரீநகர், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள கள நிலவரம் பற்றி அறிவதற்காக, ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 27 எம்.பி.க்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். நேற்று முன்தினம் அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்தனர். 4 எம்.பி.க்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பிய நிலையில், 23 எம்.பி.க்கள் நேற்று காஷ்மீருக்கு சென்றனர்.
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து அவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டலுக்கு குண்டு துளைக்காத கார்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த கார்களுடன் பாதுகாப்பு படையினரின் கார்களும் சென்றன. ஓட்டலில் அவர்களுக்கு காஷ்மீர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பாடம்... சவுக்கு சங்கர்

savukkuonline : நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத் தேர்தல்களின் முடிவுகள் எதிர்பார்த்ததுதான் என்றாலும், ஆளுங்கட்சி பெற்ற பெரும் வெற்றி, இம்முடிவுகளை ஆராய வைக்கிறது.   தமிழகத்தை பொறுத்தவரை, இடைத் தேர்தல்கள் பணத்தால் வெல்லப்படுபவைதான் என்பது நாம் அறிந்ததே என்றாலும், இந்த இடைத்தேர்தல்களில் ஆளும் அதிமுகவுக்கும், திமுக கூட்டணிக்கான வாக்கு வித்தியாசம் ஒரு உரத்த செய்தியை அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் உணர்த்துகிறது.
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரை விட 31,813 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். விக்கிரவாண்டியில், அதிமுக வேட்பாளர், திமுக வேட்பாளரை விட 44,924 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  2016 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், ஜெயலலிதா ஆர்கே.நகரில், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை விட வெறும், 39,545 வாக்குகள் மட்டுமே என்பதை இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

இன்று முதல் எண்களைச் தமிழில் சொல்லுங்கள்.

தமிழை அழிப்பதற்கு நாம் நம்மையறியாமல் ஓரிடத்தில் தொடர்ந்து துணை போய்க் கொண்டிருக்கிறோம்.
எண்களைத் தமிழில் சொல்லும் பழக்கத்தை நாம் கைவிட்டதுதான் அது.
கடையொன்றில் என்னிடம் கைப்பேசி எண் கேட்ட பெண்ணிடம் “தொண்ணூற்று நான்கு, நாற்பத்து மூன்று....” என்று தமிழில் சொல்லத் தொடங்கினேன்.
அந்தப் பெண்ணுக்கு எழுதவே வரவில்லை. தவறிழைத்தபடியே மூன்று முறைகள் எழுதினார். கடைசியில் எப்படியோ எழுதி முடித்தார்.
எண்ணிப் பார்த்தால் நம் அனைவர்க்கும் எண்களைத் தமிழில் சொல்வது மறந்தே போய்விட்டது.
நேரத்தைச் சொன்னால் ஆங்கிலத்தில்தான் சொல்கிறோம். மதிப்பெண்களை ஆங்கிலத்தில் சொல்கிறோம்.
தமிழ் அறிவிப்புகளிலும் ஆங்கிலக் கலப்பு. பண்பலை வரிசையில், தொலைக்காட்சி அறிவிப்புகளில் எங்கும் எண்களைக் குறிக்க ஆங்கிலச் சொற்கள்.
ஈவிரக்கமில்லாமல் எல்லாவிடங்களிலும் எண்களை ஆங்கிலத்திலேயே சொல்கிறோம். நாம் மொழியுணர்ச்சி மரத்தவர்களாய் அதைக் கேட்டு ஏற்றுக்கொண்டு நாமும் அவ்வாறே கூறிப் பழகிவிட்டோம்.
“நைன் ஓ கிளாக் கிளம்பி டென் தர்டிக்கு அங்க வந்துடறேன்”
“இன்னிக்கு ட்ரெயின் பார்ட்டி மினிட்ஸ் லேட்டாம்”
“டெய்லி ஒன் அவர் வாக்கிங் போனா எல்லாம் சரியாயிடும்”
”டுவெல்வ் பி இன்னும் வரல..”
“சிக்ஸ்த் கவுண்டர்ல போய் நில்லுங்க...”

சுர்ஜித்தை மீட்க வந்த பஞ்சாப்காரர் குரிந்தர் சிங் .. பஞ்சாபில் மீட்டவர் .... பயன்படுத்த மறுத்த தமிழக அரசு.... இறுதியில் உடலை எடுக்க மட்டுமே .. அதுவும் பாதியாம்?


பெரியார் அழகன் : ; குரிந்தரிடம் பேசியதில் 2 வயது சிறுவனை அவர் தான் மீட்டிருக்கிறார். சுர்ஜித்தை மிக கொடூரமாக இயந்திரங்கள் கொன்று உள்ளது..
பஞ்சாபிலிருந்து குரிந்தரை கொண்டுவாருங்கள்..
நீங்கள் செய்வது தவறு..
அவர் மீட்பார்..
இதே போல் 2 வயது சிறுவன் ஃபத்வீர் சிங்கை பஞ்சாபில் NDRF கொன்றார்கள்..
குரிந்தர் தான் 6 நாட்கள் பிறகு மீட்டார் என்று நான் சொல்லாத ஆளில்லை.
சம்பவத்தில் மேற்பார்வையிட்ட திருச்சி கலெக்டர் என் பேச்சை வெறும் 20 நொடி மட்டுமே கேட்டார்.. தொடர்ந்த அழைத்தும் அவரால் என் அழுகுரலை கேட்க விரும்பவில்லை..
தயவு செய்து அவர்களை உடனே கொண்டு வாருங்கள் என்று மன்றாடினேன்..
குரிந்தரால் சுர்ஜித்தை நேற்று அதிகாலை 2மணிக்கு மீட்க முடிந்தது என்றால் அவரை 2 தினங்கள் முன்பே கொண்டு வந்திருந்தால் இன்று நம்மிடம் சுர்ஜித் உயிரோடு இருந்திருப்பான்..
ஆட்சியாளர்கள் காதுகளுக்கு ஒரு பாமரனின்
அழுகுரல் சற்று தாமதமாகத்தான் கேட்கும் போல...
 பஞ்சாபில், சங்குரூர் என்ற ஊரில் இந்த ஆண்டு ஜீன் மாதம் சுர்ஜித் போல் ஆழ்குழாயில் விழுந்து 2 வயது சிறுவனை 5 நாட்கள் பிறகு சடலமாக மீட்டார்கள்..
மீட்டது யார்? NDRF இல்லை.. ஒரு சாதாரண ஆழ்குழாய் ஊழியர் விரேந்தர் சிங்.. அவர் எண் 07696642217.. அவர் முதல் நாளிலிருந்து எனக்கு ஒரு வாய்ப்பு தாங்க, நான் 15 நிமிடத்தில் மீட்கிறேன் என்பதை உதாசின படுத்தியது இதே டீம்...5 நாட்கள் பிறகும் சிறுவனக் மீட்க முடியாமல் அந்த NDRF, வீரேந்தர் என்பவருக்கு ஒரு வாய்ப்பு தந்தது.. அவர் சொன்னது போல் 15 நிமிடத்தில் குழந்தையை மீட்டார்...

மருத்துவர்கள் போராட்டம் ஒத்தி வைப்பு .. பேச்சுவார்த்தைக்குப் பின் தமிழ்நாடு மருத்துவர் சங்கம் அறிவிப்பு

மருத்துவர்கள் போராட்டம் தள்ளிவைப்பு : அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் தமிழ்நாடு மருத்துவர் சங்கம் அறிவிப்புmaalaimalar.com மருத்துவர்கள் போராட்டம் தள்ளிவைப்பு : அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் தமிழ்நாடு மருத்துவர் சங்கம் அறிவிப்பு அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் போராட்டத்தை தள்ளிவைப்பதாக தமிழ்நாடு மருத்துவர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். சென்னை: அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தரவேண்டும், மேற்படிப்பு அரசு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு வெளிப்படையாக நடத்த வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 6 பேர் உயிரிழப்பு

இன்றைய நிலநடுக்கத்தில் இடிந்த வீடுபிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 6 பேர் உயிரிழப்புமாலைமலர் : பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோவ் தீவை இன்று தாக்கிய 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மணிலா: புவியியல் அமைப்பின்படி பசிபிக் பெருங்கடலையொட்டி, அடிக்கடி நிலநடுக்கங்களை சந்திக்கும் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மின்டானாவ் தீவில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 8.12 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுக்கோலில் 5.8 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒரு நிமிடம் வரை நீடித்ததால் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்த மக்கள் உயிர் பயத்தில் மக்கள் ஓட்டம் பிடித்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
இன்றைய நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள் மற்றும் ஒரு பள்ளிக்கூடம் இடிந்து விழுந்தது. பள்ளியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற ஒரு சிறுவன் மீது சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 5 மாணவர்கள் காயமடைந்தனர்.

பிலிப்பைன்சில் நில நடுக்கம் 6.6 ரிச்டர் அளவில் .. ஒரு தமிழரின் நேரடி அனுபவம் .... வீடியோ


Rubasangary Veerasingam Gnanasangary : இங்கு பிலிப்பீன்சில் மூன்று மணி நேரத்துக்கு முன்னர் பலமான இரெண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. நான் வாழும் தமிழன்  எந்தளவுக்கு மனிதாபிமானம் மிக்கவன் என்று நினைக்கும் போது உடலில் உள்ள முடிகள் எல்லாம் குத்திக்கொண்டு நிமிர்ந்து நிக்கிறது.
இங்கு Mall கள்பல சேதம்.  இனி Mallகளுக்கு செல்வதில்லை என்று முடிவு செய்துள்ளோம். மருத்துவ நிலையங்களில் சிகிச்சை நித்தம் நோயாளிகளாக படுத்திருப்பவர்கள் நிலை சொல்லத் தேவையில்லை. Life support இல் இருந்த சிலர் இறந்தும் விடுகின்றனர். ஹோட்டலில் தங்கியிருந்த ஒருவன் அம்மணமாக வெளியே ஓடிய வீடியோ ஒன்று FBயின் உலாவியது. எனக்கும் இப்ப கக்குசுக்குப் போகப் பயமாக இருக்கிறது. நான் முதலில் கக்குசுக்கு போறதுக்கு என்று ஒரு சாரம் தைப்பிக்கணும். நம்ம முன்னாள் ஜனாதிபதி மாதிரி கலர்கலரா சாரத்தோடேயே திரியலாம் என்று இருக்கேன்.
பகுதிதான் மைய்யப் பகுதி. அத்தோடு போன மின்சாரம் மூன்று மணிநேரங்களின் பின்னரே வந்துள்ளது. இந்த முறை பலத்த சேதங்கள். அம்புலன்ஸ் வண்டிகள் ஓடித் திரிந்தன. நாள் ஒன்றுக்கு நூறில் இருந்து இருநூறு வரையான சிறியளவில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இன்னும் ஆறு மாதங்களுக்கு அபாய நிலை தொடருமாம். மின்சாரம் மீண்டும் வந்ததும் Facebook வந்தால் எல்லோருடைய பதிவுக்கும் நான் RIP போடவேண்டி இருக்கு,ம்.