நடிகை ஜோதிகாவுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் திருமணமாகி ஒரு பெண்
குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். ஜோதிகா ஒரு நல்ல நடிகை
அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது தான்
எனக்கு ஆசை என்று திருமணத்தின் போது சொல்லி இருந்தார் சூர்யா. ஆனால்
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க ஜோதிகா விரும்பவில்லை.
மலையாளத்தில்
'சீதா கல்யாணாம்' என்ற படம் தான் ஜோதிகாவின் கடைசி படம். தமிழில் கடைசி
படமாக அமைந்தது 'மொழி'. திருமணத்திற்கு பின்னர் சூர்யாவின் அகரம் தொண்டு
நிறுவனம் தயாரித்த குரும்படத்திலும், சூர்யாவுடன் சேர்ந்து சில விளம்பரப் படங்களிலும் நடித்தார் ஜோதிகா.