BBC News தமிழ் : இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவிய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் பதற்றம் நிலவுகிறது.
ஜெருசலேம் உள்பட நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். போருக்கான தயார் நிலையை இஸ்ரெல் பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவைச் சேர்ந்த டஜன் கணக்கான ஆயுதக்குழுவினர் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து தற்போது தலைமறைவாக உள்ளனர்.
சனி, 7 அக்டோபர், 2023
5000 ராக்கெட் தாக்குதல்களை நடத்தி இஸ்ரேலுக்குள் நுழைந்த காஸா போராளிகள் - இருபதே நிமிடங்களில்
800 Movie - முன்பு தமிழ் தேசிய கந்துவட்டி சாபக்கேடுகளால் தடைப்பட்டது
ராதா மனோகர் : முத்தையா முரளிதரனின் 800 திரைப்படம் எப்போதோ விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கவேண்டியது
தமிழ் தேசிய கந்துவட்டி சாபக்கேடுகளால் அப்போது அது தடைப்பட்டது
தற்போது வெளியாகி இருக்கிறது வாழ்த்துக்கள்!
இலங்கையில் உள்ள இந்தியவம்சாவளி மக்கள் எல்லோருமே மலையக தோட்ட தொழிலாளர்கள் என்றே இன்னும் கூட பலர் கருதுகிறார்கள்
உண்மையில் ஏராளமான வணிகர்கள் .. குறிப்பாக வட்டிக்கு பணம் கொடுக்கும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள்
பல தொழில்களை கையில் வைத்திருந்த தூத்துக்குடி நாடார்கள் போன்றவர்களின் இலங்கை செய்திகள் அதிகமாக பொதுவெளியில் வரவில்லை
இலங்கையின் நான்காவது பெரிய தேயிலை தோட்டத்தையே ஒரு கங்காணியால் முப்பதுகளிலேயே வாங்க முடிந்திருக்கிறது என்ற செய்தியையும் கவனத்தில் கொள்ளவேண்டும்
செட்டியார்களிடம் இருந்து வட்டிக்கு பெற்ற பணமும் கருப்பையா கங்காணியின் கடும் முயற்சியும் அதை சாதித்து இருக்கிறது
தெலுங்கானாவிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் - தமிழகத்தை பின்பற்றும் இதர மாநிலங்கள்
தினத்தந்தி : ஐதராபாத் தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் சுமார் 23 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவளிக்கும் நோக்கில் முதல்-மந்திரி காலை உணவு திட்டம் தெலுங்கானா மாநிலத்தில் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை மந்திரி கே.டி.ராமராவ், உள்ளிட்ட தெலுங்கானா மந்திரிகள் பல்வேறு இடங்களில் இத்திட்டத்தை முறைப்படி தொடங்கிவைத்தனர்.
காலை உணவு திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய மந்திரி கே.டி.ராமராவ், மாநிலம் முழுவதும் உள்ள 27,147 அரசு பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். காலை உண்வு மெனுவில் இட்லி-சாம்பார், கோதுமை, ரவா உப்புமா, பூரி-உருளைகிழங்கு குருமா, கிச்சிடி, தினை இட்லி மற்றும் பொங்கல் உள்ளிட்டவை இருக்கும்.
அமைச்சர் டயானா : பெண்களை கேவலப்படுத்தினால் கன்னத்தில் அறைவேன்! பெண் அமைச்சரை நாய் என்று கூறிய எதிர்க்கட்சி எம்பி!
தேசம் நெட் - அருண்மொழி : பெண்களை கேவலப்படுத்தினால் கன்னத்தில் அறைவேன் என எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சர் டயனா கமகே எச்சரிக்கை விடுத்தார்.
தன்னை பெட்டை நாயென ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்ததாக குறிப்பிட்டு சபையில் வியாழக்கிழமை (05) சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது இராஜாங்க அமைச்சர் தொடர்ந்து கூறுகையில்,
பாராளுமன்றத்தில் மட்டுமல்ல நாட்டில் எங்கேயும் பெண்களை அவமதிக்கும் வகையில் செயற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை. பெண்களை யார் என்று நினைத்தீர்கள்.
பெண்களை பெட்டை நாய் என்று இந்த சபைக்குள் கூற முடியாது. பெண்களிடம் கன்னத்தில் அறைவாங்கும் நாளில் புரியும்.
அதனால் பெண்களை அவதித்து பேசுவது இது முதல் தடவையல்ல.
மகளிர் உரிமைக்காக போராடி 154 சவுக்கடி; நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
nakkheeran.in : மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.
ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, ஆராய்ச்சியாளர்கள் கேட்டலின் கரிக்கோ, ட்ரூ வெய்ஸ்மன் ஆகிய 2 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பியரி அகோஸ்தினி, ஃபெரங்க் க்ரவுஸ் மற்றும் ஆனி ஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்
நக்கீரன் : ஒரிசா பாலு என்ற பெயரில் அறியப்பட்ட கடலியல் வரலாற்று ஆய்வாளரின் இயற்பெயர் சிவபாலசுப்ரமணி. இவருக்கு வயது 60.
இவர் ஆமைகள் நீர் வழித்தடங்கள் மூலம் பழங்கால தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டது குறித்துக் கண்டறிந்தவர்.
குமரிகண்டம் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,
ஒரிசா பாலு இன்று சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார்.
இவரின் மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“தமிழ் வரலாற்று ஆய்வாளரான ஒரிசா பாலு என்கிற சிவபாலசுப்பிரமணி மறைந்த செய்தியால் வேதனையடைந்தேன்.
வெள்ளி, 6 அக்டோபர், 2023
அமைச்சர் ஜீவன் தொண்டமான் : மலையக மக்களுக்கு காணி உரிமை; நவம்பர் 2 ஆம் திகதிக்கு முதல்
மலையோரம் செய்திகள் : மலையக மக்களுக்கு காணி உரிமை; நவம்பர் 2 ஆம் திகதிக்கு முதல் சாதகமான பதில்
மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதிக்கு முன்னதாக சாதகமான பதில் கிடைக்கும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அம்மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டியும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும் 'நாம் - 200' நிகழ்வின் அறிமுகவிழாவும், சின்னம் வெளியீடும் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'நாம் 200' நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
உலக கிரிக்கெட் கிண்ண வரலாற்றிலேயே மிக மோசமான ஆரம்பம்! குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில்
நேற்றைய தினம் குஜ்ராத் இல் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் முதல் போட்டி ஆரம்பமானது, அப்பொழுது மைதானத்தின் பெரும் பகுதி பார்வையாளர்கள் யாருமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. கிரிக்கட் உலகக் கிண்ண வரலாற்றில் முதல் போட்டியிலேயே மைதானம் வெறிச்சோடிப் போயிருந்த முதலாவது சந்தர்ப்பத்தை நரேந்திர மோடி விளையாட்டரங்கு பெற்றுக் கொண்டது.
இந்துத்துவா பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய புள்ளியும், இந்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வின் பையன் ஜெய் ஷா செயலாளராக உள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் காவி மயமாக்கலை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இந்திய அணியின் பயிற்சி ஆடையின் நிறம் மற்றும் நரேந்திர மோடி அரங்கின் இருக்கைகளின் நிறம் ஆகியன காவி வர்ணத்தை ஒத்தே உள்ளன.
மைதானத்தில் காலியாக இருந்த இருக்கைகளையும், இந்திய அணியின் பயிற்சி ஆடையின் வர்ணத்தையும் இணைத்து "இந்திய அணியின் பயிற்சி ஆடை அணிந்த இந்திய அணி ஆதரவாளர்களால் மைதானம் நிரம்பிக் காணப்பட்டது" என்று கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளனர் நெட்டிசன்கள்.
வான் இயற்பியல் விஞ்ஞானி மேகதாத் சாஹா 130 வது பிறந்தநாள்! இன்று மக்களுக்கான அறிவியல் நாள்.
Muthukumar Sankaran Tuticorin : 'பாராளுமன்றத் தேர்தலில் வடமேற்கு கல்கத்தா தொகுதியில் போட்டியிடப் போகிறேன். என்னுடைய Treaties on Heat நூலின் விற்பனைத் தொகையில் முன்பணமாக ஐயாயிரம் ரூபாயை விடுவிக்க வேண்டுகிறேன்.'
பதிப்பாளருக்கு இப்படி ஒரு கடிதம் 1951இல் எழுதியவர் நம் நாட்டின் மிகப்பெரிய விஞ்ஞானி ஒருவர். சோஷலிஸ்ட் முற்போக்கு அமைப்பின் ஆதரவுடன் தேர்தலில் எந்தவொரு பணவசதியும் இன்றிப் போட்டியிட்டு பெருந்தலை ஒருவரைத் தோற்கடித்து பாராளுமன்றம் நுழைகிறார். வான் இயற்பியல் விஞ்ஞானி மேகதாத் சாஹா தான் அவர்.
சர். சி.வி. ராமன் அவர்களுடன் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இவருடைய பெயர் பல தடவை பரிந்துரைக்கப்பட்டும், பரிசீலிக்கப் படாமல், இவருக்கு மறுக்கப்பட்டதன் காரணம் ஆங்கிலய அரசுக்கு எதிராக இவர் தொடர்ந்து போராடியது தான்.
திமுக பற்றி போன ரிப்போர்ட்.. அண்ணாமலைக்கு இனி ப்ரீ ஹேண்ட் தர முடியாது.. டெல்லி எடுத்த "கஷாய" முடிவு
tamil.oneindia.com - Shyamsundar : சென்னை; அண்ணாமலைக்கு ப்ரீ ஹேண்ட் கொடுக்க முடியாது என்றுள்ளனர். அதனால் தற்காலிகமாக அவருக்கு கட்டுப்பாடுகள் போட்டுள்ளனர், என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி பிரிவால் உட்சபட்ச அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த குழப்பம் காரணமாக அண்ணாமலைக்கு ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டு இருக்கிறது.
டெல்லியில் அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்த பல்வேறு கூட்டங்களில் , ஆலோசனைகளில் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை அண்ணாமலை சந்தித்தார்.
வேலுமணிக்காக வரும் ஈஷா! அ.தி.மு.க.வில் அடுத்த பிளவு?
இனிமேல் பா.ஜ.க.வுடன் எவ்வித கூட்டணியும் கிடையாது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, அதற்கடுத்து வரவிருக்கின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அறிவித்தது.
இதனையடுத்து வேலுமணிக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் கருத்து மோதல், உரசல் என செய்திகள் சிறகடித்துப் பறந்தது.
இந்த நிலையில், வேலுமணியின் எக்ஸ் தளப்பதிவு எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டவே எனவும், இதன் பின்னணியில் ஈஷாவின் ஜக்கி வாசுதேவ் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
மனு தர்ம சாத்திரமும் பெண்களும் - பார்ப்பனர்கள் கீழ்சாதிப் பெண்களை அனுபவிக்கும் உரிமையை மலபார் பகுதியில்
Lulu Deva Jamla : *மனு தர்ம சாத்திரமும் பெண்களும்*
(சமசுகிருதம்: मनुस्मृति, மனுஸ்மிருதி)
இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது.
இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794ல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழில் திருலோக சீதாராம் என்பார் மொழி பெயர்த்துள்ளார்.
தனி மனித மற்றும் சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்திக் கூறும் ஒரு சட்டக்கோவையாக இது இந்தியாவில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தது.
இந்நூலுக்கு மானவ தர்மம் - மானுட அறம் என்று பொருளாகும்.
மனு தர்மத்தில் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது என தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
வியாழன், 5 அக்டோபர், 2023
17 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியேறுமாறு பாகிஸ்தான் உத்தரவு!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது.
இதனால், அங்கிருந்து ஏராளமானோர் அகதிகளாக அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.
இந்தநிலையில், பாகிஸ்தானில் அனுமதியில்லாமல் தங்கியுள்ள 17 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு அந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இந்தியா கனடா மோதல் சைட் எபெக்ட் அமெரிக்க இந்திய உறவில் நெருடல் விரிசல்?
tamil.oneindia.com - Vigneshkumar : வாஷிங்டன்: இந்தியா கனடா மோதல் தொடரும் நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா நிலைப்பாடு என்று ஒரு தகவல் வெளியானது. இதற்கிடையே அதற்கு அமெரிக்கா முக்கிய விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளது.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். கனடாவில் இருக்கும் காலிஸ்தான் ஹர்தீப் சிங் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார்.
US envoy told his team that India ‘could get worse’ due to Canada row
அதில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்கு முக்கிய காரணமாகும்.
அதைத் தொடர்ந்து இந்தியா கனடா உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
வள்ளலார் (கற்பூரத்தை கொட்டி அவ்வுடலை எரித்து விட்டார்கள் என்று தினவர்த்தமானி பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது)
ராதா மனோகர் : வள்ளலார் இராமலிங்க ஸ்வாமிகளின் பிறந்த நாள் அக்டோபர் 5, 1823
காணாமல் போன நாள் சனவரி 30, 1874
உண்மையில் வள்ளலாருக்கு என்னதான் நடந்திருக்கும்?
(கற்பூரத்தை கொட்டி அவ்வுடலை எரித்து விட்டார்கள் என்று தினவர்த்தமானி பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது)
வடலூர் இராமலிங்க வள்ளலார் பூட்டிய அறைக்குள் சென்று கதவை உள்ளிருந்து பூட்டி கொண்டார்.
பின்பு திறந்து பார்த்தபோது அவர் இருந்த அடையாளமே அங்கிருக்கவில்லை.
அவர் உடலோடு அப்படியே மறைந்து போய்விட்டார்
அதாவது சமாதி அடைந்து விட்டார் என்று வழக்கம் போல கதையளந்து கடந்துவிட்டனர் சனாதனிகள்!
யாழ்ப்பாண மத்திய கல்லூரி அதிபராக இருந்து பைபிளை தமிழில் மொழி பெயர்ப்பு செய்தவருமான திரு பெர்சிவல் பாதிரியார் இது பற்றி ஒரு முக்கிய குறிப்பை தனது தினவர்த்தமானி என்ற பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்
அப்பத்திரிகை தமிழிலும் தெலுங்கிலும் வெளியானது
நியூஸ் க்ளிக் ஆசிரியர் கைது பத்திரிகைகளைக் கண்டு பயப்படும் பாஜக அரசு! 9–12 minutes
இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே பாஜக அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்கள். உண்மைகளை பேசி, அரசை கதிகலங்க வைத்தவர்கள். இந்த கைதின் பின்னணி என்ன..?
அக்டோபர் 3 ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு தில்லி காவல்துறை நியூஸ் க்ளிக் என்ற ஆங்கில இணைய இதழ் ஆசிரியர் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசியல் விமர்சகர்கள்.. என பத்துக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர்.
அவர்களது கைபேசி மற்றும் லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை பறித்து உள்ளனர் .
பத்து மணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மழை - 100 அடியை கடந்த காவிரி கேஆர்எஸ் அணை நீர்மட்டம்
தமிழகத்துக்கு காவிரியில் நீர் வழங்குவதில் கேஆர்எஸ் அணை முக்கிய பங்காற்றி வரும் நிலையில் இது மகிழ்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது.
கர்நாடகா-தமிழ்நாடு இடையே காவிரி நீர் பங்கீட்டு கொள்வதில் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
கடந்த 27 ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை காவிரியில் தமிழகத்துக்கு 3 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதன், 4 அக்டோபர், 2023
பாஜக அதிமுகவின் நாற்பதும் நமதே நாமமும் நமதே
Surya Xavier : நாற்பதும் நமதே நாமமும் நமதே
பாஜக தலைமையிலான கூட்டணி
1.பாஜக-12- (15)
2.அமமுக-12
3.பாமக-07
4.அதிமுக (ஓபிஎஸ்)-04
5.தேமுதிக-02
6.புதிய நீதிக்கட்சி-01 (01)
7.புதிய தமிழகம்-01 (01)
8.பாரிவேந்தர் ஐஜேகே-01 (01)
* அடைப்புக்குறிக்குள் உள்ளவை தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவதை குறிக்கிறது.
* ஓபிஎஸ் அணியும் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக அழுத்தம்.
15+12+07-04-02=40
பாஜக போட்டியிடும் தொகுதிகள்
1. தென்சென்னை
2. நீலகிரி
நிர்வாண படத்தில் நடித்ததாக பேச்சு: அமைச்சர் ரோஜா கண்ணீர் மல்க வீடியோ
இந்த நிலையில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா திருப்பதியில் உள்ள அவரது வீட்டில் கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி சித்ரவதை செய்கின்றனர். சட்டசபையிலும் சிடிக்கள் காட்டப்பட்டன. ஆனால் சிடியில் இருப்பது நான்தான் என நிரூபிக்கப்படவில்லை.
பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சி பெண்களை விளையாட்டுப் பொருளாக நடத்துகிறது. (கண்ணீர் விட்டு கதறி அழுதார்).
அதிமுக ஆரம்பிக்க எம்.ஜி.ஆர். சொன்ன காரணம்- ரஜினி வெளியிட்ட ரகசிய ஆடியோ!
மின்னம்பலம் Aara : அதிமுக ஆரம்பிக்க எம்.ஜி.ஆர். சொன்ன காரணம்- ரஜினி வெளியிட்ட ரகசிய ஆடியோ!
1972 இல் உருவானது எம்.ஜிஆர்., தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். எந்த சூழலில் அதிமுக ஆரம்பிக்கப்பட்டது என்று எம்.ஜி.ஆரே விளக்கிய ஒரு ரகசியத்தை இன்று (அக்டோபர் 4) வெளியிட்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி இன்றைய (அக்டோபர் 4) முரசொலி நாளேட்டில், கலைஞருடனான தனது அனுபவத்தைப் பற்றி எழுதிய கட்டுரையில்தான் ரஜினி இந்த ரகசியத்தை உடைத்துள்ளார்.
அந்தக் கட்டுரையில், “பல நேரங்களில் நான் கலைஞருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். அவர் எந்த ஒரு விஷயத்திற்கும் நான் அவரை கவனித்துப் பார்த்ததில் எந்த ஒரு முடிவையும் எடுத்தோமா கவிழ்த்தோமா என்று எடுக்கமாட்டார். அதற்கு சம்பந்தப்பட்டவர்களின் பல பேருடன் விசாரித்து, பேசி, விவாதித்து தான் எந்த ஒரு முடிவையும் எடுப்பார். அப்படி இருக்கும் போது எம்.ஜி.ஆர் அவர்களை கட்சியில் இருந்து நீக்கும் முக்கியமான முடிவை நிச்சயம் கலைஞர் அவர்கள் பல பேரின் ஆலோசனைகளை கேட்டுதான் எடுத்திருப்பார்” என்று ஒரு முன்னுரை கொடுத்துவிட்டுத்தான் அந்த ரகசியத்துக்குள் செல்கிறார் ரஜினிகாந்த்.
இயக்குனர் நடிகை ஜெய தேவி காலமானார்
மாலை மலர் " 1980 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக நடிகை, கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டிருந்தவர் ஜெய தேவி.
1976-ம் ஆண்டு வெளிவந்த இதய மலர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜெயதேவி. தொடர்ந்து சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம், சரியான ஜோடி, ரஜினியுடன் காயத்ரி ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.
இதை தொடர்ந்து மற்றவை நேரில் என்ற படத்தை முதல் முதலாக 1980-ம் ஆண்டு இயக்கினார்.
பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமை வா இந்த பக்கம் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.
விலாங்கு மீன், விலங்கு பாசம் ஒரு வேஷம், நலம் நலமறிய ஆவல்.
பல காதல்களை கடந்த Renato வால் Malena மேல் இருந்த காதலை மட்டும் மறக்கவே முடியவில்லை !
சுமதி விஜயகுமார் : Renato விற்கு எல்லாம் ஒரே நேரத்தில் நடக்கிறது.
அவனுக்கு முதல் சைக்கிளை அப்பா வாங்கி கொடுக்கும் போது தான் இத்தாலி இரண்டாம் உலகப் போரில் பங்கெடுக்கிறது.
ரெனாட்டோவும் தன் வாலிப உணர்ச்சிகளை உணரத் துவங்குகிறான்.
சைக்கிள் வாங்கியதும் தான், அவன் விரும்பிய நண்பர்கள் அவனை நண்பனாக ஏற்றுக் கொள்கிறார்கள். அவனுக்கு ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். Malena.
அந்த சிறிய டவுனின் அழகி அவள். முதல் முறை அவளை பார்க்கும் போதே தன் அழகால் அவனை சுண்டி இழுகிறாள் Malena.
அதன் பிறகு தான் Renato கவனிக்கிறான் அந்த ஊரில் Malena வை பற்றி அறியாதவர்கள் யாரும் இல்லை என்று. எப்போதும் Malena பற்றி தான் பேச்சுக்கள்.
அவள் அவனை வைத்திருக்கிறாள், அவள் என்னை படுக்கைக்கு அழைத்தாள். அவள் என்னை வேறு மாதிரி பார்த்தாள் என்று ஆண்களும் அவள் என்ன அவ்வளவு அழகா, அவள் ஒரு விபச்சாரி என்று பெண்களும் பேசுவதை கவனித்தான்.
நக்கீரனுக்கு வந்த போன்; போர்வைக்குள் ஜெபம்.. ஆதாரத்துடன் சிக்கிய பாதிரியார்!
கடவுளின் பெயரால் டேனி என்ற பாதிரியார் என்னை ஏமாற்றிவிட்டான்.
அவனது மன்மத லீலைகள் இப்போதுதான் எனக்குத் தெரியவந்தது.
அந்தப் படுபாதகனை நீங்கதான் அம்பலப்படுத்தணும்” என்றது. அவரை ஆசுவாசப்படுத்தி, அவர் இருக்கும் இடத்தை அறிந்து சந்தித்தோம்.
அப்போது அவர், “என்னை திருமணம் பண்ணிக்கொள்கிறேன் என்று சொல்லி, நிச்சயதார்த்தம் வரை சென்று, என் நகை மற்றும் பணத்தை முதலில் சுருட்டிக்கொண்டான் டேனி.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ஜெர்மனியில் கொடுத்த அதிரடி பேட்டி
Annesley Ratnasingham ஜெர்மனி : .ரணில் DW என்ற Deutsche Welle என்று ஜேர்மனிய ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கும் போது அவர்களை அவமான படுத்திவிட்டாராம் என்று பலர் மனம் வருந்துகிறார்கள்.
அவர்களுடன் சேர்ந்து தம்மை ஊடகவியலாளர்கள் என்று தம்மைத்தாமே புகழும் சிலரும் இணைந்திருக்கிறார்கள் .
ஒரு journalism என்றால் என்ன என்று தெரியாத அதைவிட investigative journalism என்றால் ஒரு அமைச்சர் எந்த பெண்ணுடன் இரவில் சாப்பிடுகிறார் என்று நினைக்கிறார்கள் .
ரணிலின் ஜெர்மனிய Deutsche Welle வுடன் நடந்த சம்பாஷணையை மட்டும் விமர்சிக்கும் இவர்கள் அதே ரணில் "Berlin Global Dialogue" என்ற கூட்டத்தில் பேசிய விடயங்கள் பற்றி ஒரு சொல்கூட பேசுவதில்லை .
அந்த பேச்சை உங்களால் முடிந்தால் நீங்கள் விமர்சித்தாவது உங்கள் முகநூலிலோ அல்லது உங்கள் பத்திரிகையிலோ வெளியிட்டு இருக்கலாம் .
சனாதனத்தில் பெண்கடவுளே இல்லை! ஆதார கட்டுரை #சனாதனலீக்ஸ்
Dhinakaran Chelliah : சனாதனம் அறிவோம்(பாகம் 31) #சனாதனலீக்ஸ்
பெண்தெய்வ வழிபாடு
பெண்களைத் தெய்வமாக வழிபடுகிறோம்,அதில் பெருமை கொள்கிறோம் என்கிற அப்பாவி ஹிந்துக்களாக, சனாதனிகளாக, சாக்தர்களாக, சைவர்களாக, வைஷ்ணவர்களாகத் தங்களைக் கருதிக் கொண்டிருப்பவர்களுக்காக இந்தப்பதிவு சமர்ப்பணம்.
சனாதனிகளில் தாய்த் தெய்வ வழிபாட்டை விமர்சித்து எழுதியவர்கள் மிகக் குறைவே.
அப்பேற்பட்ட கட்டுரை ஒன்றை சமீபத்தில் வாசித்தேன்.
அந்தக் கட்டுரை இராமபாணம்(முதல் தொகுதி) இடம் பெற்றுள்ளது, நூல் ஆசிரியர் ஆழ்வார் திருவடிப்பொடி சே.பத்மநாபன் அவர்கள்.
இந்நூல் 2002 ஆம் ஆண்டு பதிப்பு.இந்நூலில் விமர்சிக்கப்பட்டுள்ள பத்திரிக்கைகள் என ஞானபூமி,குமுதம் பக்தி ஸ்பெஷல்,ஆன்மீகம்,ஞானமணி,அம்மன் தரிசனம்,தினபூமி-ஆன்மீக பூமி,காமகோடி,ஶ்ரீ பெரும்புதூர் தேவஸ்தானம்,ஆன்மீக ஜோதி,தினமலர் பக்திமலர்,துக்ளக்,தெய்வம் பேசுகிறது,
ஓம் சக்தி,ஆன்மீக ஆலயம்,அருள்பூமி,நல்லநேரம் என இருபது இதழ்களின் பட்டியல் உள்ளது. சனாதனிகளிடையே 2002 களில் இருந்த சகிப்புத் தன்மை இப்போது இல்லை என்பதே கசப்பான உண்மை.
அந்த வகையில் துணிச்சலாக தனது விமர்சனங்களை இராமபாணம் நூலில் பதிவு செய்த ஆசிரிரைப் பாராட்டலாம். இப்போ ஆசிரியரின் கட்டுரைக்கு வருவோம்,
செவ்வாய், 3 அக்டோபர், 2023
கனடா தூதரகத்தில் இருந்து 40 அதிகாரிகளை திரும்ப பெறுமாறு இந்தியா கோரிக்கை
தினமலர் : புதுடில்லி: கனடாவின் 40 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றுக்கொள்ள இந்தியா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காலிஸ்தான் விவகாரத்தால் மோதல் முற்றி உள்ள நிலையில் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில் கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக, கனடா பார்லி.,யில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இதனால், இந்தியா - கனடா உறவில் முன்எப்போதும் இல்லாத அளவிற்கு விரிசல் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 32 பேர் மரணம்!
BBC தமிழ் : மகாராஷ்ட்ரா மாநிலம் நான்டெட் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 32 மரணங்கள் பதிவாகி அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.
அக்டோபர் 1ஆம் தேதியன்று 12 பச்சிளங்குழந்தைகள் உட்பட 24 பேர் வரை இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்துள்ளனர்.
அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்புகளையடுத்து, ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எதிர்கட்சிகள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
என்ன நடந்தது?
மகாராஷ்ட்ரா மாநிலம், நான்டெட் மாவட்ட தலைநகரில் இயங்கும் டாக்டர். ஷங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையில் தான் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
Sanitary napkins என்ற சொல் தவிர்ப்போம்; Period products என்றழைப்போம் ஒக்ஸ்பாம் நிறுவனம்
இலங்கநாதன் குகநாதன் : `Sanitary napkins` / ` `Sanitary products` என்ற சொல்லாடல்களைத் தவிர்ப்போம்; ஏனெனில் `Sanitary`எனும் போதே ஏதோ ஒன்றினைத் தூய்மைப்படுத்துவது என்ற பொருளில் வரும், அது `மாதவிடாய்` இனை அழுக்கு என்ற பொருளில் கொண்டு வரும். எனவே அதற்குப் பதிலாக ` Period products ` என்ற சொல்லினைப் பயன்படுத்துமாறு Oxfam நிறுவனமானது தனது ஊழியர்களைக் கேட்டிருந்தது. விழுமியங்களுக்கு முரணாக ஆங்கிலத்தலுள்ள இவ்வாறான தவிர்க்கப்பட வேண்டிய சொற்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் குறிப்பிட்டு, 92 பக்க அறிக்கை ஒன்றினை குறித்த நிறுவனம் வெளியிட்டிருந்தது. அவ்வாறான சில சொற்களைக் கீழே காணுங்கள்.
INCLUSIVE LANGUAGE GUIDE
AVOIDED INSTEAD
sanitary products period products /menstrual products
அமைச்சர் மெய்யானாதான் : நான் அமைச்சராக உயர காரணம் துர்கா ஸ்டாலின்தான்!
முன்னதாக ஒன்றிய திமுக செயலாளர் மற்றும் ஒன்றிய பெருந்தலைவராக இருந்த மெய்யநாதன் 2016ஆம் நடந்த தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் ஆலங்குடி தொகுதியில் வென்றார்.
பல சீனியர்களும் அமைச்சர் பதவியை எதிர்நோக்கி காத்திருந்த நேரத்தில் இரண்டாவது முறை எம்.எல்.ஏ.வான மெய்யநாதனுக்கு ஜாக்பாட் அடித்தது.
பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு- பிற்படுத்தப்பட்டோர் 63 சதவீதம்
தினத்தந்தி : பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு வெளியீடு: பிற்படுத்தப்பட்டோர் 63 சதவீதம்
பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை அம்மாநில அரசு வெளியிட்டது. அதன்படி, அங்கு மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும், இதர பிற்படுத்தப்பட்டவர்களும் மொத்தம் 63 சதவீதம் பேர் உள்ளனர்.
பாட்னா,
நாடுதழுவிய வகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு பிரதமர் மோடியிடம் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்து வந்தார். அவர் பா.ஜனதா கூட்டணியில் இருந்தபோது, இந்த கோரிக்கையை எழுப்பினார்.
ஆனால், எஸ்.சி., எஸ்.டி. ஆகியோரைத் தவிர, இதர சாதிகளின் கணக்கெடுப்பை நடத்துவது இல்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது.
மு.க.ஸ்டாலின் பேச்சு திமுகவில் நிலவும் உள்கட்சி பூசலின் வெளிப்பாடா? திடீர் எச்சரிக்கை ஏன்?
திமுகவை பொருத்தவரை, இதுவரை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில், தேர்தல் முடிவுகள் வந்தபின்னர், தோல்வியுற்ற தொகுதிகளுக்கு ஒரு குழுவை அனுப்புவது வழக்கம். தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் என்ன என்று ஆராயப்பட்டு, அதனை அடுத்த தேர்தலில் சரிசெய்து கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகள்தான் வழங்கப்பட்டுவந்தன.
திங்கள், 2 அக்டோபர், 2023
ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி மோடியின் அரசியலுக்குத் தோல்வி?
இலங்கை விடயத்தில் இந்தியா ஒன்றிய அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் போட்டி போட்டுகொண்டு தப்பு கணக்குகள் போட்டவண்ணமே உள்ளனர்.
சில விடயங்களை கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்!
சென்ற ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார சிக்கலின் போது மக்கள் வீதிக்கு வந்து அந்த ஆட்சியாளர்களை தூக்கி எறிந்தார்கள்.
அந்த பொருளாதார சிக்கலுக்கு வெறும் கோவிட் தொற்று மட்டும் காரணமல்ல,
வகை தொகை இல்லமால் கொள்ளை அடித்து நாட்டை நடுத்தெருவுக்கு கொண்டு வந்ததில் அன்றைய ஆட்சியாளர்களின் பங்கும் பெரிய அளவில் இருந்தது.
அந்த நிலையில் இருந்து ராஜபக்சவினர் தப்புவதற்கு அவர்களுக்கு முன்னால் தெரிந்த ஒரே ஒரு வழி,
திரு ரணில் விக்கிரமசிங்கா அவர்களை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவருவதுதான். .
இந்த மக்களின் போராட்டத்திற்குள் மறைந்து கொண்ட கலவரக்காரர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டையும் எரித்து அவரது வளர்ப்பு நாயையும் அடித்து கொன்றார்கள்.
மாலத்தீவு அதிபர் தேர்தலில் சீன சார்பு வேட்பாளர் வெற்றி - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?
BBC , ஏஜே கோக்ஸ்டெஃப் : மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றுள்ளார். பதவி விலகும் அதிபர் இப்ராகிம் முகமது சோலி தோல்வியை ஏற்றுக்கொண்டார்.
முகமது முய்சு நவம்பர் 17ஆம் தேதி அதிபராக பதவியேற்கிறார். அதுவரை இப்ராகிம் சோலி தற்காலிக அதிபராக இருப்பார்.
முகமது முய்சு சீனாவின் ஆதரவாளர் என்று கருதப்படுகிறார். அதேசமயம் இப்ராஹிம் முகமது சோலியின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான மாலத்தீவின் உறவுகள் வலுப்பெற்றன.
செயல் உத்தி காரணங்களுக்காக சீனாவும் இந்தியாவும் மாலத்தீவில் தேர்தல்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றன என்று நம்பப்படுகிறது.
முகமது முய்சுவுக்கு 54 சதவிகித வாக்குகள் கிடைத்தன. தலைநகர் மாலேயின் மேயரான முகமது முய்சு தனது தேர்தல் பிரச்சாரத்தில் 'இந்தியா அவுட்' அதாவது இந்தியாவை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் முழக்கத்தை முன்வைத்திருந்தார்.
மலையாளதில் பிரம்மாண்டமாக கால்பதிக்கும் லைகா நிறுவனம்
இதன் மூலம் மலையாள திரையுலகில் பிரம்மாண்டமான தயாரிப்புடன் லைக்கா நிறுவனம் களமிறங்குகிறது.
இந்நிறுவனம் தற்போது இயக்குநர் ஷங்கர் - 'உலகநாயகன்' கமல்ஹாசன் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'இந்தியன் 2' படத்தை தயாரித்து வருகிறது.
மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், 'லால் சலாம்' எனும் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.
ஞாயிறு, 1 அக்டோபர், 2023
இந்தியா - ஆப்கானிஸ்தான் உறவு முறிந்தது: தூதரகங்களை மூட என்ன காரணம்? தாலிபனால் பிரச்னையா?
சனிக்கிழமை இரவு, ஆப்கானிஸ்தான் தூதரகம், அக்டோபர் 1, 2023 முதல் இந்தியத் தூதரகம் செயல்படுவதை நிறுத்துவதாக அறிக்கை வெளியிட்டது.
"இந்த முடிவு ஆப்கானிஸ்தானின் நலன் சார்ந்தது" என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
தூதரகம் தனது மூன்று பக்க அறிக்கையில், இந்த முடிவுக்கு மூன்று காரணங்களைக் கூறியுள்ளது.
முதலில், இந்திய அரசாங்கத்திடம் இருந்து ஆதரவைப் பெறாதது,
இரண்டாவதாக, ஆப்கானிஸ்தானின் நலன்களைப் பாதுகாப்பது தொடர்பான எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட முடியாமல் போனது மற்றும் மூன்றாவதாக, ஊழியர்கள் மற்றும் வளங்களின் எண்ணிக்கை குறைப்பு. ஆப்கானிஸ்தான் தூதரகம் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகின.
ஸ்டாலினிடம் சிக்கிய ஏழு மாசெக்கள்.. காணொலிக் கூட்டம்..
minnambalam.com - Aara : “திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில், இன்று (அக்டோபர் 1) மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் இருந்து திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்துகொண்டார்.
முதலில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்புரை ஆற்றினார்.
பொதுச் செயலாளர் துரைமுருகன் சில நிமிடங்கள் பேசினார். பின் பேசிய துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, ‘வரும் அக்டோபர் 14 ஆம் தேதி நடக்க இருக்கும் மகளிர் உரிமை மாநாட்டில் பெண்கள் அதிகளவு கலந்துகொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
காலை 10.40 மணிக்கு ஸ்டாலின், பேசத் தொடங்கினார். ‘தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரம் பி.எல்.ஏ-2 வாக்குச்சாவடி பாக முகவர்களை சேர்த்துள்ளோம். பி.எல்.சி- 100 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாங்கள் பிரம்மாவின் தலையில் இருந்து பிறந்தவர்கள் .. வாரணாசி குருக்களின் பேட்டி! . சனாதனலீக்ஸ் . வீடியோ
ராதா மனோகர் : எனது பெயர் பத்து பிரசாத் சாஸ்த்திரி . நான் துளசி மானஸ் கோயிலின் பிரதம குருக்கள் . நான் வாரணாசி வேதவிற்பன்னர்கள் சங்க தலைவர். நான் சாஸ்திரங்களை நம்புபவன். நான் இந்து அடிப்படைவாதியாகும் .நான் ஜாதியையும் தீண்டாமையை கடைப்பிடிக்கிறேன் .. அதை நம்புகிறேன்.
கடவுளின் வாயிலிருந்து பிராமணன் பிறந்தான்! கைகளில் இருந்து சத்திரியன் பிறந்தான் .! . வயிற்றில் இருந்து வைசியன் பிறந்தான் . கால்களில் இருந்து சூத்திரன் பிறந்தான்.
நான் வேதத்தில் இருந்ததை கூறுகிறேன் .
சிருஷ்டியை வேதமாதா விளக்கி கூறுகிறது..
வேதசாஸ்திர கண்ணாடி மூலமாக மட்டுமே இந்த உலகை பார்க்க நாம் அறியமுடியும்.
வேறு விதமான வழிகளில் உலகை அறிய முயல்வது தவறு.
நான் விமானத்தை ஓட்ட முடியாது . அதை பைலட்தான் செலுத்த முடியும் .அது போலத்தான் ஒவ்வொரு வேலைக்கும் ஒருவர் இருக்கிரான் .
குன்னூர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து:8 பேர் உயிரிழப்பு
தினமலர் : குன்னூர்: குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைபாதையில சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம், கடையம் தாலுகாவை சேர்ந்த, 54 பேர் ஊட்டிக்கு, பஸ்சில் சுற்றுலா வந்து, நேற்று மாலை குன்னுார் வழியாக திரும்பி சென்று கொண்டிருந்தனர். டிரைவர் முத்துபாண்டி 60, பஸ்சை ஓட்டி சென்றார்.
குன்னுார் மேட்டுப்பாளையம் மலைபாதையில் மரப்பாலம் அருகே, 5:30 மணிக்கு பஸ் செல்லும் போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்தது. அங்கிருந்த மரம் பஸ் பள்ளத்தில் உருளாமல் தடுத்தது.
தகவலின் பேரில், தீயணைப்பு துறையினர், போலீசார், தனியார் டிரைவர்கள், பஸ்சில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு, கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர். 10க்கும் மேற்பட்ட,108 ஆம்புலென்ஸ் வாகனங்களில், குன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், 5 பெண்கள் உட்பட, 8 பேர், இரவு, 9:00 மணி வரை உயிரிழந்தனர்.