சனி, 17 நவம்பர், 2018

மின்காந்த அலகு வருகிறது! .. கிலோ கல்லை நிறுத்துத் தரும் கல்லுக்கு ஓய்வு - மாறுகிறது எடை அளவை

BBC : மேற்பரப்பில் காணப்படும் தூய்மைக்கேடுகளால் நாம் எடை போட
வைத்திருக்கும் கிலோ மாதிரிகளின் துல்லியமான எடை அளவு பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஒரு கிலோ அரிசி கேட்டால் கடைக்காரர் எடைக் கல்லால் அதை நிறுத்துத் தருவார். அந்த ஒரு கிலோ எடைக் கல் எவ்வளவு எடை இருக்கவேண்டும் என்று நிறுத்து அளவிடுவது யார் தெரியுமா? அதை செய்வதற்கு உள்ளூரில் அதிகாரிகள் இருக்கிறார்கள்தான். ஆனால், உலக அளவில் ஒரு கிலோ எடை என்பது எவ்வளவு என்பதை வரையறை செய்வதற்காக பயன்படுத்திவந்த ஒரு மூல எடைக் கல்லுக்கு ஓய்வு தர இருக்கிறார்கள்.
2019 முதல் அந்த மூல எடைக் கல்லை மாற்றி, நவீன கருவி மூலம் உலக அளவில் எடையை வரையறை செய்ய உள்ளார்கள்.

சின்மயி : ‘96’எனது கடைசி படம், சினிமா டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டேன்

nakkheeran.in - kathiravan" சினிமா டப்பிங்
சங்கத்தில்
தான் நீக்கப்பட்டதாகவும்,  தமிழில் ‘96’ திரைப்படம்தான் தனது கடைசி படம் என தெரிகிறது என்றும் சின்மயி ட்விட் செய்துள்ளார்.  தனக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியிருப்பதாகவும் சின்மயி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
விகடன் : அலாவுதின் ஹுசைன் > பிரபல பின்னணிப் பாடகி, பின்னணிக் குரல் ஆர்ட்டிஸ்ட் சின்மயி. சமீபத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த '96 படத்தில் த்ரிஷாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருந்தார். படத்தில் நாயகி பாடும் பாடல்களையும் இவரே பாடியிருந்தார். தமிழ்நாடு டப்பிங் யூனியனில் உறுப்பினராக இருந்த தன்னை தற்போது யூனியனிலிருந்து நீக்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார் சின்மயி.
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணத்தில் உள்ள சின்மயி, இதுகுறித்து வெளியிட்டுள்ள ட்வீட்டில், ``நான் கடந்த இரண்டு வருடங்களாக டப்பிங் யூனியனுக்காக சந்தா செலுத்தவில்லை எனக் காரணம் கூறப்பட்டு, யூனியனில் எனது உறுப்பினர் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டுள்ளேன்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை டப்பிங் யூனியனில் உறுப்பினர் அல்லாத ஒருவர் எந்தப் படத்துக்கும் டப்பிங் செய்ய முடியாது.

இலங்கை: மீண்டும் பேரம்!

     மின்னமாலம்: இலங்கையில் அரசுக்கு எதிராக மீண்டும் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் திங்கட்கிழமையன்று கொண்டுவர வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், எம்.பி.க்களை இழுப்பதற்கான பேரமும் தொடங்கியுள்ளது.
இலங்கை: மீண்டும் பேரம்!இலங்கையில் அதிபர் சிறிசேனாவால் நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்ஷே ஆட்சிக்கு எதிராக நவம்பர் 14ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதிகளில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த இரண்டு தீர்மானங்களும் வெற்றியடைந்துள்ளபோதும் அதனை ஏற்க முடியாது என அதிபர் மறுத்துள்ளார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுகையில் உரிய நாடாளுமன்ற நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என அதிபர் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 17) செய்தியாளர்களை சந்தித்த இலங்கை பொதுஜன முன்னணி உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் யப்பா அபேவர்தன, சரியான முறையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் ராஜபக்ஷே தோல்வியடைந்தால் அடுத்த கட்டம் குறித்து அவர் முடிவெடுப்பார் என்றும் அபேவர்தன கூறியுள்ளார்.

குட்கா வழக்கில் அத்தனை பெருச்சாளிகளும் தப்புகிறார்கள் .. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன்..

தினகரன் :சென்னை: குட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊழலின் பிதாமகன்களான குட்கா டைரியில் இடம்பெற்ற உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் பெயர் இல்லாதது சந்தேகமளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸடாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நள்ளிரவில் சி.பி.ஐ இயக்குநர் விநோதமான சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மாற்றப்பட்ட வழக்கு விசாரணை முடியும் வரை, சி.பி.ஐ பொறுப்பு இயக்குநர் எந்த முக்கியமான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், குட்கா வழக்கில் ஒரு முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையை அவசர அவசரமாகத் தாக்கல் செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. மத்திய அரசுக்கு 250 கோடிக்கு மேல் வரி இழப்பு ஏற்படுத்தி, 40 கோடிக்கு மேல் மாமூல் பெற்றதற்கான “குட்கா டைரி” கைப்பற்றப்பட்ட வழக்கில், 40 இடங்களுக்கும் மேல் சி.பி.ஐ அதிரடியாக சோதனை நடத்தியது. அதிமுக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இரட்டை இலைக்கு லஞ்சம் - டிச. 4ம் தேதி விசாரணைக்கு நேரில் வர தினகரனுக்கு உத்தரவு

இரட்டை இலைக்கு லஞ்சம் - டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு மாலைமலர் :  இரட்டை இலை சின்னம் பெறும் விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிசம்பர் 4ம் தேதி ஆஜராக வேண்டும் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தினகரன், சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா, குமார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே, அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும். லஞ்சம் கொடுக்க முயற்சித்தல், முறைகேட்டில் ஈடுபடுதல், சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யவும் உத்தரவிட்டது. இந்த வழக்கில் இருந்து நத்துசிங், லலித்குமார், குல்பித் குந்த்ரா உள்பட 5 பேரை விடுவித்தது நீதிமன்றம்.< மேலும், இந்த வழக்கில் டிசம்பர் 4ம் தேதி ஆஜராக வேண்டும் என டிடிவி தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. #TwoLeave

தம்பதிகளை ஆணவ கொலை செய்த ஜாதி வெறியர்கள் இவர்கள்தான்

Ra. Vinoth : இந்தப் படத்திலிருக்கும் இவர்கள் தான் பெற்ற மகளைக் கொடூரமாகக் கொலை செய்த 

சுவாதியின் அப்பா சீனிவாசனும், பெரியப்பா வெங்கடேசனும். அவர்களது முகத்தைத் தேடிக் கண்டுபிடித்துப் பார்த்தேன். கிழிந்த சட்டை, செருப்பில்லாத கால், ஒட்டிப் போன முகம், நோஞ்சான் போன்ற உடல்வாகு பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கடும் வறுமையும், அறியாமையும்,  இறுக்கமும் நிறைந்திருக்கிறது. சாதி வெறிக்கான குணாம்சமாகக் கருதும் எதுவும் இவர்களது முகத்தில் இல்லை. 'பொசுக்'குன்னு இருக்கும் இந்த மனிதர்களிடத்தில எங்கிருந்து சாதி வெறி வந்தது? சாதி எப்படி இந்தச் சாதாரண மனிதர்களிடம் இவ்வளவு மூர்க்கமாக இயங்குகிறது? அறிவியல் வளர்ந்த இந்த 21-ம் நூற்றாண்டிலும் எப்படி இன்னும், இவ்வளவு முட்டாளாக இருக்கிறார்கள்? பெற்ற மகளை, சக மனிதரைத் துள்ளத் துடிக்கக் கொல்லும் மனநிலையை எங்கிருந்து பெற்றார்கள் இவர்கள் என யோசிக்கவே முடியவில்லை. நாமெல்லாம் யோசிக்கவே முடியாத அளவு, சாதி ஆழமாகவும் விருட்சமாகவும் வேர் பிடித்துப் பாய்ந்திருக்கிறது என்பது மட்டும் நிஜம்.

ஓசூர் தம்பதி ஆணவ கொலை பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் பிடிபட்டனர்

ஓசூர் அருகே பயங்கரம்: காதல் திருமண தம்பதி ஆணவ கொலை பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் பிடிபட்டனர்தினத்தந்தி : "ஓசூர் அருகே பயங்கரம்: காதல் திருமண தம்பதி ஆணவ கொலை பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் பிடிபட்டனர்"
 ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூடுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணப்பா. இவரது மகன் நந்தீஸ் (வயது 25). இவர் ஓசூரில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மரக்கடையில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சுவாதி (20). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம். படித்து வந்தார்.< நந்தீசும், சுவாதியும் ஒரே ஊர் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் காதல் ஜோடி நந்தீஸ், சுவாதி கடந்த 15.8.2018 அன்று சூளகிரி திம்மராயசாமி கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

இலங்கை .. சர்வதேச நெருக்கடிகள் சிறி சேனாவை நோக்கி ?

சிறிசேனாவை நெருக்கும் சர்வதேசம்!மின்னம்பலம்: இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (நவம்பர் 16) நடந்த சம்பவங்களுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா வந்தபோது அவரைச் சுற்றி சங்கிலி வளையம் அமைத்தபடி போலீசார் பாதுகாப்புக்காக வந்தனர். ஆனால் ராஜபக்‌ஷே ஆதரவு எம்.பி.க்கள் போலீஸாரையும் சபாநாயகரையும் நோக்கி நாற்காலிகளை வீசினர். பின் மிளகாய் பொடி கரைத்த தண்ணீரை வீசியடித்து நிலைகுலையச் செய்தனர். இந்தக் காட்சிகள் அல்ஜசீரா, பிபிசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களில் வீடியோக் காட்சிகளாக வெளியாகி கடுமையான விமர்சனங்களை அதிபர் சிறிசேனா மீது ஏற்படுத்தி வருகின்றன.
நேற்று முன் தினம் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு ஜனநாயகத்துக்கு இது கெட்ட நாள் என்று ஜெர்மனி தெரிவித்திருந்தது. நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவத்துக்கு இங்கிலாந்து தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருக்கிறது.

இலங்கையில் கஜா!.. வடமாகாணத்தில் ...

இலங்கையில் கஜா!மின்னம்பலம்: கஜா புயலினால் தமிழகத்தில் ஆறுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், இலங்கையில் தமிழர்கள் அதிகமுள்ள வடக்கு மாகாணத்திலும் கஜா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஜா புயல் நேற்று அதிகாலை கரையைக் கடந்த நிலையில், திருவாரூர், தஞ்சை, நாகை உட்பட 6 மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன. அங்கு சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.
கஜா புயல் காரணமாக இலங்கையிலுள்ள வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் பரவலான மழை பெய்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அங்கு, சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அந்த 18 எம் எல் ஏக்களுக்கும் சம்பளம் உள்ளிட்டவற்றை வாரி வழங்கிய சசி தினகரன் குழு

குஷியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்!மின்னம்பலம் : கடந்த ஓராண்டுக்கு மேலாக சம்பளம் பெறாமல் இருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம், கிம்பளம் உட்பட அனைத்து சேர்த்து கவனிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் குஷியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை, சபாநாயகர் தனபால் 2017 செப்டம்பர் 18ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால், கடந்த 14 மாதமாகச் சம்பளம், கிம்பளம் கிடைக்காமல் இருந்த அவர்கள் நீதிமன்ற தீர்ப்பை நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியது.
தகுதி நீக்கம் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் அதிருப்தியின் உச்சத்திற்கே அவர்கள் சென்றுள்ளார்.

சவூதி பட்டத்து இளவரசர் உத்தரவின் பேரிலேயே காசோக்கி கொல்லப்பட்டுள்ளார் : சிஐஏ தகவல்

சவூதி பட்டத்து இளவரசர் உத்தரவின் பேரிலேயே காசோக்கி கொல்லப்பட்டுள்ளார் : சிஐஏ தகவல்தினத்தந்தி :சவூதி பட்டத்து இளவரசர் உத்தரவின் பேரிலேயே காசோக்கி கொல்லப்பட்டுள்ளார் என்று சிஐஏ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாஷிங்டன், அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் பத்திரிகையாளர் ஜமால்.துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், இரு வாரங்களுக்கு முன்னர் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார். இதனைத் தொடர்ந்து  துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் ஜமால் கொல்லப்பட்டதாகவும், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரையும் துருக்கி வெளியிட்டது.

ஆதார் என்ற மோசடி.. தகவல்கள் தனி நிறுவனங்களிடம் .. விளைவுகள் மிகவும் ஆபத்தானது

savukku - Jeevanand Rajendran" : ஆதாரை மையமாக கொண்டு நடந்து வரும் மோசடிகளை அதனால்  ஏற்படும் விளைவுகளை பற்றி சவுக்கு தளம் தொடர்ந்து விவாதித்து  வந்துள்ளது , அதன் தொடர்ச்சியாக ஆதார் வாக்காளர் அட்டை இணைப்பினால் ஏற்பட கூடிய விளைவுகள் என்ன என்பதனை இந்த கட்டுரையில் பார்ப்போம். Wire இணையதளத்தில் வெளியான இந்த செய்தியின் அடிப்படையில் இது நிறுவப்பட்டுள்ளது.
2015 ஆம் வருடம் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்களை திருத்துவதற்கும், போலிகளை களைவதற்கும் National Electoral Roll Purification and Authentication Programme (NERPA) என்ற திட்டத்தை துவங்கியது இணைப்பு . இந்த திட்டத்தை செயல்படுத்த ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை (EPIC) எண்ணை இணைத்து அதன் மூலம் விபரங்களை சரி பார்த்து, போலிகளை களையலாம் என்பது தான் திட்டம். இந்த திட்டம் துடங்கிய உடனே தேர்தல் ஆணையம்  பெரும் எதிர்ப்பினை சந்தித்தது , இந்த திட்டத்திற்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டு 3 மாதத்தில் ஆதார் இணைப்புக்கு தடை விதிக்கப்பட்டது இணைப்பு. ஆனால் ஆச்சரியமூட்டும் வகையில் மிக குறுகிய காலமான 3 மாதத்தில் சுமார் 30 கோடி நபர்களின் ஆதார் எண்கள் வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டிருந்தது

கிருஷ்ணகிரி.காதல் தம்பதி காவிரி ஆற்றில் பிணமாக மீட்பு! கொலை செய்து ஆற்றில் போட்ட வன்னிய ஜாதி வெறியர்கள்

BBC :கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த
இளைஞரை ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண் காதல் திருமணம் செய்ததால் தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து தம்பதியை கொலை செய்ததாக கொலை வழக்கு பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூடகொண்டபள்ளி, வெங்டேஷபுரம் எனும் கிராமத்தைச் சார்ந்த நாராயணப்பா மகன் நந்தீஷ். 25 வயதான இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
நந்தீஷ் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சுவாதி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் ,வெவ்வேறு சாதியை சேர்ந்த இவர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி சூளகிரியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
சாதி இந்துவான சுவாதியும், தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் நந்தீஷ் இருவரின் திருமணத்திற்க்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டுச் சென்று திருமணம் செய்துகொண்ட இத்தம்பதி, கடந்த தீபாவளியை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடிய நிலையில், 11.11.2018 முதல் நந்தீஷை காணவில்லை என்று நவம்பர் 14 அன்று அவரது சகோதரர் ஓசூர் நகரக் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதே நாளில் சுவாதியின் குடும்பத்தினரும், அவரைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.

சபரிமலை விவகாரம் ஒரு ஆர் எஸ் எஸ் நாடகம்

Swathi K : சபரிமலைக்குள் பெண்கள் செல்ல அனுமதி கொடுக்கலாமா,
வேண்டாமா என்பதை தாண்டி கீழே உள்ளதை படிச்சு யோசிச்சு பாருங்கள்..
2006ல் சபரிமலைக்குள் பெண்கள் செல்ல வேண்டும் என்று கோர்ட்டில் கேஸ் போட்டது யார்? 6 பெண் வக்கீல்கள் & RSS ஆதரவு வக்கீல் சங்கம்
அவர்களுக்கு தேவையான ஆதரவு அனைத்தும் கொடுத்தது யார்? RSS
2018ல் பெண்கள் செல்லலாம் என்று தீர்ப்பு கொடுத்த தீர்ப்பின் முக்கிய நீதிபதி யார்? RSS/ BJP ஆதரவாளர் "தீபக் மிஸ்ரா".. அவருடன் மூன்று நீதிபதிகள்..
எப்ப தீர்ப்பு கொடுத்தார்? பதவி காலம் முடிய ஒரு வாரம் இருக்கும் போது..
தீர்ப்பை முதலில் வரவேற்றது யார்? RSS/ BJP
இப்ப கோவிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது என்ற போராட்டத்தை தூண்டுவது யார்? - RSS/ BJP
இவ்வளவு பிரச்சனைக்கு நடுவிலும் கோவிலுக்கு செல்ல துடிக்கும் பெண்கள் யார்? - RSS அமைப்பின் பின்னணியில் உள்ள பெண்கள்
இந்த பெண்களை எதிர்த்து போராடுவது யார்? - RSS/ BJP

வெள்ளி, 16 நவம்பர், 2018

ஆந்திராவில் மாநில அரசு அனுமதியின்றி சிபிஐ சோதனை செய்ய தடை: சந்திரபாபு நாயுடு அதிரடி!

NDTV : ஆந்திர பிரதேசத்தில் அனுமதியின்றி சிபிஐ எந்த ஒரு சோதனையும்,
விசாரணையும் மேற்கொள்ளக்கூடாது என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திராவில் சிபிஐ சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியை அம்மாநில அரசு திரும்ப பெற்றது.
சட்டப்படி, டெல்லியில் மட்டுமே சிபிஐ அதிகாரம் பெற்றது. பிற மாநிலங்களில் நுழைய அம்மாநிலங்களில் ஒருமனதான சம்மதத்தை பெற வேண்டியது கட்டாயமாகும்.
ஆந்திராவில் சிபிஐ-க்கான இந்த அனுமதி தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால், ஆந்திராவில் மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஐ எந்த ஒரு வழக்கிலும் தலையிட முடியாது. இதைத்தொடர்ந்து சிபிஐ பணிகளை மேற்கொள்ள மாநில புலனாய்வு அமைப்புகளுக்கு ஆந்திர அரசு அதிகாரம் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அக்ஷாரவின் படங்களை நடிகை ரதியின் மகன் நடிகர் தனுஜ் லீக் செய்தாரா?

அக்ஷாரா .. தனுஜ்
மின்னம்பலம் : நடிகை அக்‌ஷரா ஹாசனின் புகைப்படங்களை வெளியிட்டது
பிரபல நடிகையின் மகன் என்ற சந்தேகத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
கமல் ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனின் தனிப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. இதையடுத்து தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் யாரால் வெளியிடப்பட்டன என்று கேள்விகள் எழுந்தன. இவ்விவகாரம் குறித்து நடிகை அக்‌ஷரா ஹாசன் சமீபத்தில் மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவ்வழக்கு விசாரணையில் தற்போது புதிய திருப்பமாக அக்‌ஷராவின் நண்பர் தனுஜ் வெளியிட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

இரண்டாவது முறையாக பதவி இழந்தார் ராஜபக்‌ஷே

மின்னம்பலம் : இரண்டாவது முறையாக பதவி இழந்தார் ராஜபக்‌ஷேநேற்று குப்பைக் கூடைகளையும், தண்ணீர் பாட்டில்களையும், கத்தியையும் கண்ட இலங்கை நாடாளுமன்றம் இன்று (நவம்பர் 16) மிளகாய்ப் பொடியையும், சபாநாயகர் இருக்கையில் எம்.பி. அமர்ந்ததையும் கண்டது. அதேநேரம் ராஜபக்‌ஷேவுக்கு எதிராக இரண்டாவது முறையாக இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.
நேற்று மாலை ஐக்கிய தேசியக் கூட்டணித் தலைவர்களோடு ஆலோசித்த அதிபர் சிறிசேனா, “புதிய நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அவையில் கொண்டுவாருங்கள். ஏற்கனவே கொண்டுவந்ததில் அதிபரின் செயல் சட்டவிரோதமானது என்பதை நீக்கிவிட்டு ராஜபக்‌ஷேவின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவாருங்கள்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் படி, ஐக்கிய தேசியக் கூட்டணியினர் அதற்குத் தயாராகினர். இந்தத் தகவல் நேற்றே அரசியல் வட்டாரத்தில் பரவியது.
இன்று மதியம் 1.30க்கு அவை கூடுகிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ராஜபக்‌ஷே ஆதரவு எம்.பி.க்கள் 1.15 மணியளவிலேயே அவையில் நுழையத் தொடங்கினர். நேற்று ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்கள் இருவர் கத்தியோடு அவையில் நுழைந்ததால் உஷார் ஆகி, ஒவ்வொரு எம்.பி.யையும் போலீசார் முழு சோதனைக்கு உட்படுத்தியே அவைக்குள் அனுப்பினர்.

கஜா: எதிர்பாராத அளவில் சேதம்!

கஜா: எதிர்பாராத அளவில் சேதம்!மின்னம்பலம் : கஜா புயலினால் எதிர்பாராத அளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இப்புயலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான கஜா புயல், நள்ளிரவு 12 முதல் இன்று காலை 6 மணி வரை கரையைக் கடந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு, புயல் கடந்த இடமான நாகை, வேதாரண்யம் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுத் தனித்தீவாகக் காட்சியளிக்கின்றன. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வீசிய கஜா புயல், திண்டுக்கல்லில் நிலை கொண்டிருந்தது. தற்போது, தமிழக எல்லையைக் கடந்து அரபிக்கடல் நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புயல் வலுவிழந்து, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையாக மாறியுள்ளது. இதனால், கேரள மாநிலத்திற்குப் பெருமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருப்தி தேசாய் : என்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர்.. ...

திருப்தி தேசாய் ஆர் எஸ் எஸ் பின்னணியில் உள்ளவரா?
என்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் - திருப்தி தேசாய்மாலைமலர் : என்னை மீண்டும் புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் என கொச்சி விமான நிலையத்தில் காத்திருக்கும் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.
சபரிமலை: மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும். சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதி அளிப்பதற்கு எதிராக போராட்டம் தொடரும் நிலையில், பெண்ணியவாதியான திருப்தி தேசாய் சபரிமலை கோவிலுக்குள் செல்வேன் என்று அறிவித்தார். அதன்படி இன்று காலை 4:30 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தை விட்டு அவர் வெளியே வரமுடியாத வகையில் போராட்டக் குழுவினர் அங்கு குவிந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டனது. போராட்டக்காரர்கள் பெருமளவு திரண்டதால் திருப்தி தேசாயை வெளியே அனுமதிக்கவில்லை. 12 மணி நேரத்துக்கும் மேலாக தேசாய் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், கொச்சி விமான நிலையத்தில் திருப்தி தேசாய் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், போலீசார் என்னை சந்தித்தனர். அவர்கள் என்னை மீண்டும் புனேவுக்கு திரும்பி செல்லும்படி கேட்டுக் கொண்டனர் என தெரிவித்துள்ளார். #SabarimalaShrine #TruptiDesa

தமிழகத்தில் கஜா புயல் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது

தமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்ததுமாலைமலர் : தமிழகத்தில் பல மாவட்டங்களை பதம்பார்த்த கஜா புயல் பாதிப்பினால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை இன்று பிற்பகல் நிலவரப்படி 23 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை: கஜா புயல் வியாழக்கிழமை மாலை தமிழக கடலோரப் பகுதியை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நகரும் வேகம் அதிகரிக்காததால் வியாழக்கிழமை நள்ளிரவுதான் கரையைக் கடக்கும் என்று தெரிய வந்தது.
அதன்படி நேற்று இரவு 11 மணி அளவில் கஜா புயலின் முன் பகுதி தமிழக கடலோரத்தை தொட்டது. நள்ளிரவு 12.30 மணிக்கு புயல் ஆக்ரோ‌ஷமான வேகத்துடன் கரையைக் கடக்க தொடங்கியது. வேதாரண்யத்துக்கும் நாகைக்கும் இடையே புயல் கரையை கடந்தது.
புயல் முழுமையாக கரையைக் கடப்பதற்கு சுமார் 6 மணி நேரமாகும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்ப கஜா புயல் வேதாரண்யம் - நாகை இடையே 12.30 மணி முதல் 2.30 மணி வரை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் மிக பலத்த சூறாவளிக் காற்றுடன் கரையை கடந்தது. புயலின் மையப் பகுதியான கண் பகுதி ஒரு இடத்தை கடப்பதற்கு சுமார் 2 மணி நேரம் எடுத்துக் கொண்டது.

தோற்றது மகிந்தவின் திட்டமா?.. மைத்ரியின் திட்டமா? மிளகாய்தூள் தாக்குதலில் பலர் பாதிப்பு

Ajeevan Veer : கடந்த இரு தினங்களிலும் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கை
இல்லா வாக்கெடுப்பை தடுக்க வேண்டும் என்பதே மகிந்தவின் திட்டம். காரணம் பெரும்பான்மை இல்லை.
தம்மால் பெரும்பான்மையை காட்ட முடியாது எனத் தெரிந்த போது முதலாவதாக சிரிசேனவை பிடித்து கால வரையறையின்றி பாராளுமன்றத்தை திறக்கவிடாமல் பண்ணுவதே முதல் முயற்சியாக நடந்தது. அதற்குள் ஏலத்தில் ஆட்களை வாங்கிவிடலாம் என நினைத்தார்கள். அது நினைத்தது போல சாத்தியமாகவில்லை.
அதற்குள் பாராளுமன்றத்தை இழுத்து மூடியது தவறு என உச்ச நீதிமன்றம் சிரிசேன - மகிந்தவின் எதிர்பார்ப்புக்கு எதிராக தடையுத்தரவை பிறப்பித்தது. அதோடு முன்னர் சிரிசேன தெரிவித்த 14ம் திகதி (நேற்று) கூட சபாநாயகர் முடிவெடுத்தார்.
இனி பாராளுமன்றம் கூடும் போது மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை வெல்ல விடக் கூடாது என்பதே மகிந்த தரப்பின் அடுத்த திட்டம்.

முதல்நாள் சிரிசேன அரசியல் சாசனத்தை மீறினார் என்று ஒரு தீர்மானத்தையும் , மகிந்தவின் பிரதமர் பதவி மற்றும் அரசு அரசியல் சாசனத்துக்கு முரணானது என மற்றொரு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்த போது மகிந்த எதிர் தரப்புகள் வெற்றி பெற்றன.

மைத்திரி இறங்கி வருகிறார் ... ஆனால் ரணிலை பிரதமராக ஏற்க முடியாதாம் .. வேதாளம் மீண்டும் ,,,

இறங்கி வருகிறாரா இலங்கை அதிபர்?மின்னம்பலம்: இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்குத் தீர்வு காண அதிபர் மைத்திரி பால சிறிசேனா நேற்று மாலை (நவம்பர் 15) ஒரு சிறப்பு சந்திப்பை நடத்தினார். இந்த ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகிறன.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்களை அதாவது ராஜபக்‌ஷேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்த கட்சிகளின் பிரமுகர்களை நேற்று மாலை முதல் இரவு வரை கூட்டாக சந்தித்தார் சிறிசேனா. சில மணி நேரங்கள் நடந்த இந்த ஆலோசனைக்குப் பிறகு ஒரு முக்கிய முடிவுக்கு வந்திருக்கிறார் இலங்கை அதிபர்.

காலியாகிறது டெல்லி ?காற்று மாசுபாட்டினால் 35 சதவீத மக்கள் வெளியேற விருப்பம்!

டெல்லியை விட்டு வெளியேற விருப்பம்!மின்னம்பலம்: காற்று மாசுபாட்டினால் 35 சதவிகித மக்கள் டெல்லியை விட்டு வெளியேற விரும்புவதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் காற்றின் தரத்தை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையைத் தாங்கள் இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
சமூக ஒத்துழைப்புக்கான வலைப்பின்னல் தளமான லோக்கல் சர்க்கிள் என்ற அமைப்பு, ஓர் ஆய்வை நடத்தியது. அதில், 26 சதவிகித மக்கள், தாங்களாகவே காற்று சுத்திகரிப்புக் கருவிகள், முகமூடிகள் மற்றும் அதிக தாவரங்களை வாங்கித் தற்காத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களது எண்ணிக்கை சுமார் 12,000 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு : தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை...

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை  -மத்திய அரசுதூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை என மத்திய அரசு கூறி உள்ளது. சென்னை தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபட ஸ்டெர்லைட் மட்டுமே காரணம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபட ஸ்டெர்லைட் மட்டுமே காரணம் இல்லை என மத்திய நிலத்தடி நீர் வாரியம் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்தை நிர்வகிக்க அதிகாரி: தீபக்,ஜெ.தீபாவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

/tamil.thehindu.com : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பராமரிக்கக் கோரிய வழக்கில் தீபக், ஜெ.தீபாவுக்குநோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அம்மா பேரவைச் செயலாளர் வழக்கறிஞர் கே. புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளைப் பராமரிக்க அதிகாரியை நியமிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ''மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சென்னை உள்பட இந்தியாவின் பல இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன.
அவரது மறைவுக்குப் பின்னர், அச்சொத்துகளைப் பாதுகாத்திட அவருக்கு நேரிடையான வாரிசு கிடையாது. அவரது அண்ணன் மகன் தீபக், மகள் தீபா மட்டுமே உள்ளனர். ஜெயலலிதாவின் சொத்துகளை மூன்றாம் நபர்களும் அபகரித்துப் பயன்படுத்தி வருகின்றனர்.

கஜா புயல் முழுமையாக கரையைக் கடந்தது - வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தினத்தந்தி : கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்து உள்ளது. கஜா புயலின் கண் பகுதி கரையை கடந்ததால் அடுத்த 2 மணி நேரத்திற்கு எதிர்திசையில் காற்று பலமாக வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது
கஜா புயல் காரணமாக பாம்பன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. கஜா புயல் காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை, கடலுர், ராமநாதபுரம், மதுரை, திருப்பூர், திருவாருர், புதுக்கோட்டை, தஞ்சை, சிவங்கை, அரியலூர், தேனி, விழுப்புரம், திருச்சி,  கரூர், திண்டுக்கல்,  காரைக்கால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர், தூத்துக்குடி , சேலம் ,  ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்றுவரும் ‘நெல்’ ஜெயராமனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு 


tamil.thehindu.com/ பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து உற்பத்தி செய்து வரும் நெல் ஜெயராமனின் மருத் துவ செலவுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
திருவாரூர் மாவட்டம் கட்டி மேட்டைச் சேர்ந்த ஜெயராமன், ‘நமது நெல்லை காப்போம்’ என்ற இயக்கம் மூலம் பாரம்பரிய விவசாயத்தை போற்றிப் பாது காத்து வருகிறார். இயற்கை முறை யில் பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்து, அனைத்து விவசாயிகளும் பயன் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் சேவை செய்து வருகிறார்.
மாப்பிள்ளை சம்பா, ராஜமன்னார், கவுனி, மிளகுசம்பா, குண்டு கார், சேலம் சம்பா, சிகப்பு குருவிகார், கல்லிமடையான், சம்பா மோசானம், வாடன் சம்பா, பிச்சாவாரி, நவரா, நீலன் சம்பா போன்ற 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி உள்ளார்.

வியாழன், 15 நவம்பர், 2018

மெர்சல்: மேஜிக் கலைஞர் சம்பள பாக்கி 4 லட்சம் ... முறைப்பாடு!

மெர்சல்: மேஜிக் கலைஞர் சம்பள பாக்கி புகார்!மின்னம்பலம்:  நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் பணியாற்றிய மேஜிக் கலைஞர் ராமன் ஷர்மா, அப்படத்தில் வேலை செய்ததற்காக தனக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் மெர்சல். எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, வடிவேலு, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இராம நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்ப்பில் அவரது மகன் முரளி இப்படத்தைத் தயாரித்திருந்தார். இந்த படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருந்தார். அதில் ஒரு கதாபாத்திரம் மேஜிக் நிபுணர்.

டெல்லி .டி.எம் கிருஷ்ணா நிகழ்ச்சிக்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு

டி.எம் கிருஷ்ணா: இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு!மின்னம்பலம் ;டில்லியில் இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சிக்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சி டில்லி சாணக்யாபுரியில் உள்ள நேரு பார்க்கில் நவம்பர் 17ஆம் தேதி நடைபெற இருந்தது. ‘டேன்ஸ் அன்ட் மியூசிக் இன் தி பார்க்’ என்ற இந்த நிகழ்ச்சியை இரு நாள்கள் நடத்த விமான நிலையங்கள் ஆணையமும் (AAI), ஸ்பிக் மெக்கே (SPIC-MACAY) நிறுவனமும் திட்டமிட்டிருந்தன.
டி.எம்.கிருஷ்ணா கிறிஸ்தவ பாசுரங்கள், பாடல்களை கர்னாடக இசையில் பாடுவதற்கு ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது அவரை ‘ஆன்டி இந்தியன்’,‘அர்பன் நக்சல்’ என்ற பெயரில் இந்துத்துவ அமைப்பினர் விமர்சித்துவருகின்றனர். அவர்களின் எதிர்ப்பால் டில்லி இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பணமதிப்பு நீக்கத்தின் ‘சாதனை’களின் நிஜமுகம்.. Savukku

சவுக்கு : மிகப் பெரிய கொள்கை முடிவுகளில் ஒன்றான பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் இரண்டாவது ஆண்டை அரசு கொண்டாடவில்லை. மற்ற அனைத்து பெரிய கொள்கை முடிவுகளின் ஆண்டு நிறைவையும் அரசு கொண்டாடி இருக்கிறது. ஏன் இந்த மாற்றம்?
நிதி அமைச்சர், பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் சாதனைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனால் அவரது அறிக்கையை, 2016 நவம்பர் 8, பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் பரிந்துரை செய்த, ரிசர்வ் வங்கி வாரியக் கூட்டத்தின் விவரங்களை பொருத்திப்பார்த்து அணுக வேண்டும். கறுப்புப் பணம் அல்லது கள்ள நோட்டை ஒழிக்க பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஏற்றது அல்ல என வாரியம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆக, பிரதமர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்தபோது குறிப்பிட்ட இரண்டு முக்கிய நோக்கங்கள், இந்த முடிவு அறிவிக்கப்பட்ட அன்றைய தினமே அர்த்தமற்று போயின. எனவே, வங்கிகளில் பணம் வந்து குவிவது தெளிவானவுடன் அரசு ரொக்கமில்லாச் சமூகம் பற்றி பேசத் துவங்கியதில் வியப்பில்லை.  அதன் பிறகு, குறைந்த ரொக்கம் கொண்ட பொருளாதாரம், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் ஒருங்கிணைக்கப்படாத பொருளாதாரத்தை அமைப்பு சார்ந்ததாக மாற்றுவது பற்றி பேசப்பட்டது. இந்த டெபாசிட்கள் காகிதத் தடத்தை உருவாக்கி, கறுப்புப் பணப் புழக்கத்தைக் கடினமாக்கும் என்று சொல்லப்பட்டது.

குடிகாரர்களில் ஆந்திரா பிகார் கேரளா பஞ்சாப் முதல் நான்கு இடங்களில் .. பெரிய மாநிலங்களில் குடிக்கும் அளவு வரிசை

Don Vetrio Selvini  : பெரிய மாநிலங்களில் குடிகாரர்கள் ஒரு வருடத்திற்கு
குடிக்கும் மதுவின் அளவு லிட்டரில்.
ஒருங்கிணைந்த ஆந்திரா - 35 லி
பிஹார் - 14 லி
கேரளா - 10 லி
பஞ்சாப் - 10 லி
ஒடிசா - 8 லி
மத்திய பிரதேசம் - 7.5 லி
ஹரியானா - 6.8 லி
ராஜஸ்தான் - 6.3 லி
தமிழ்நாடு - 5.6 லி
குஜராத் - 2.9 லி
உத்திர பிரதேசம் - 2 லி
நேற்றைய பதிவில் தமிழ்நாடு, கேரளா நீங்களாக பெரிய மாநிலங்களில், அதிகம் குடிப்பவர்கள் இருக்கும் மாநிலம் எதுவென்று கேட்டிருந்தேன்.
தோழர்கள் பலரும் பல்வேறு மாநிலங்களை சொல்லியிருந்தனர். ஒருங்கிணைந்த ஆந்திரா,மஹாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் குஜராத் என்பவையே பெரும்பாலும் சொல்லப்பட்ட பெரிய மாநிலங்கள்.
2014 ல் சர்வே படி, இந்தியாவிலேயே அதிகம் குடிப்பவர்கள் , ஒருங்கிணைந்த ஆந்திர மாநில மக்கள். வருடத்திற்கு 35 லிட்டர் அளவுக்கு குடிக்கிறார்கள். இதில் 85% கள் மற்றும் நாட்டு சாராயம்.
நாட்டிலே அதிகமாக சாராயம் புழங்கும் இடம் குஜராத்(95%) . குஜராத் மாநிலத்தில் மது விலக்கு அமுலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர , ஜாரகண்டட், பிஹார், ஒடிசா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள குடிகாரர்கள் , கள் & சாராயத்தை 80%+ அதிகமாக குடிக்கிறார்கள்.

ஒருமாதத்தில் தமிழ்நாட்டில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பாலியல் வல்லுறவுக்கொலைகளில் பெரும்பாலும் சிறுமிகள்?

LR Jagadheesan : கடந்த ஒருமாதத்தில் தமிழ்நாட்டில்
நடந்த சுமார் பத்துக்கும்
மேற்பட்ட பாலியல் வல்லுறவுக்கொலைகளில் பலியானவர்கள் பெரும்பாலும் சிறுமிகள். அல்லது இருபது வயதொட்டிய பதின்பருவத்தினர். பெரும்பாலும் வறியவர்கள். சமூக, அரசியல் செல்வாக்கற்றவர்கள்.
அவர்கள் கொல்லப்பட்ட விதங்களின் குரூரமும் அவற்றை செய்தவர்களில் கணிசமானவர்கள் கூட்டாக இந்த கொடூரத்தை நன்கு திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கிறார்கள் என்பதும் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்களின் வயதும் கூட இருபதுகளில் இருப்பதும் நம் சமூக அழுகலின் ஆபத்தான அறிகுறிகள்.