சனி, 20 மார்ச், 2021

LR Jagadheesan : · அறிவுஜீவிகளல்ல; ஐந்தாம் படைகள்!

May be an image of 1 person and standing
LR Jagadheesan : · அறிவுஜீவிகளல்ல; ஐந்தாம் படைகள்!   
நடப்பது தமிழ்நாட்டு சட்டமன்றத்தேர்தல்;
இங்கே 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது அதிமுக கட்சி. எனவே நடக்கும் தேர்தல் என்பது இன்றைய அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கவேண்டுமா அல்லது இந்த ஆட்சி இத்தோடு முடியவேண்டுமா என்பதற்கான தேர்தல்.
அதாவது தமிழக வாக்காளர்கள் இந்த தேர்தலில் முடிவு செய்யவேண்டியது அதிமுக ஆட்சி ஐந்தாண்டுகள் தொடரவேண்டுமா?
இத்தோடு முடியவேண்டுமா? என்பதைப்பற்றித்தான்.
இது மட்டுமே இந்த தேர்தலின் முதன்மையான கேள்வி. ஒரே கேள்வி.
அதை முடிவு செய்வதே இந்த தேர்தலின் ஒரே நோக்கம். இலக்கு. தேவை.
எனவே ஒன்று நீங்கள் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி இன்னும் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.
இல்லை இந்த அதிமுக ஆட்சி இத்தோடு முடியவேண்டும் என்று சொல்லுங்கள்.
இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பதே குறைந்தபட்ச அரசியல் தெளிவுக்கான அடையாளம்; அறிவுநாணயத்துக்கான அளவுகோள்.
அதைத்தாண்டின எந்தவிதமான வியாக்கியானங்களுக்கும் இந்த தேர்தலில் எந்த இடமும் கண்டிப்பாக இல்லை. இல்லை. இல்லவே இல்லை.

உட்கட்சி பூசலில் சிக்கி தவிக்கும் காங்கிரஸ்!

உட்கட்சி பூசலில் சிக்கி தவிக்கும் காங்கிரஸ்!
மின்னம்பலம் : கூட்டணி கூட்டணி என்று வருஷம் முழுவதும் திமுகவுடன் பேசி குமரி மக்களவைதொகுதி ,மற்றும் சட்டசபையில் 25இடம் பெற்றது காங்கிரஸ்.
இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அறிவித்து கடைசியில் தேர்தல் அறிக்கையும் வெளியிட்டு பிரச்சாரத்துக்கு போகும் வழியில் மீண்டும் உட்கட்சி பூசலில் சிக்கி தவிக்கிறது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் மீனவா் அணிச் செயலா் சபீன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது
அக்கட்சியினரிடையே மட்டுமில்லாமல் திமுக உட்பட கூட்டணி கட்சியினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் சட்டமன்ற தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த மக்களவை உறுப்பினா் வசந்தகுமாரின் மகன் விஜயகுமாா் என்ற விஜய் வசந்த் போட்டியிடுகிறாா்.

அதிமுக-திமுக வேட்பாளர்கள் 131 தொகுதிகளில் “நேருக்கு நேர்” போட்டி

அதிமுக-திமுக வேட்பாளர்கள் 131 தொகுதிகளில் “நேருக்கு நேர்” போட்டி

maalaimalar :சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டிருந்தாலும் அ.திமு.க. தலைமையிலான அணியும், தி.மு.க. தலைமையிலான அணியும் ஆட்சி யாருக்கு என்று மல்லு கட்டுகின்றன.              இரு அணிகளுமே தொகுதிகளில் கள நிலவரங்களை ஆராய்ந்தே தொகுதிகளை தேர்வு செய்து வேட்பாளர்களையும் களம் இறக்கி உள்ளது.                அனைத்து வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்து விட்டனர். 131 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேருக்கு நேர் மோதுகின்றன.                       தி.மு.க.வும், பா.ம.க.வும் 18 தொகுதிகளில் நேருக்கு நேர் சந்திக்கின்றன. 14 தொகுதிகளில் தி.மு.க.வுடன் பா.ஜனதா மோதுகிறது. காங்கிரஸ் 15 தொகுதிகளில் அ.தி.மு.க.வுடனும், 5 தொகுதிகளில் பா.ஜனதாவுடனும், 2 தொகுதிகளில் த.மா.கா.வுடனும் மோதுகிறது.                           அ.தி.மு.க.வுடன் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா 5 தொகுதிகளில் மோதுகின்றன. பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகளும் ஒரு தொகுதியில் நேருக்கு நேர் சந்திக்கின்றன.

மலையகத்தில் பயங்கர பேருந்து விபத்து 14 பேர் உயிரிழப்பு 20 பேர் படுகாயம்

மலையகத்தில் பயங்கர பேருந்து விபத்து . 14 பேர் உயிரிழப்பு 20 பேர் படுகாயம் லுணுகலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து பஸ்ஸறை பகுதியில் ஒரு அபாய வளைவில் கனரக வாகனத்தோடு மோதியதில் மலை அடிவாரத்திற்கு செங்குத்தாக விழுந்தது அதில் பயணம் செய்த 14 பேர் உயிரிழந்துள்ளார்கள் மேலும் 20 பேர் படுகாயம் மொனராகலை- பதுளை வீதியின் பஸ்ஸறை 13 ஆம் தூண் பிரதேசத்தில் இன்று காலை 7.15 மணியளவில் இந்த விபத்து சம்பவித்தது குறித்த விபத்தில் மேலும் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பில பஸ்ஸர பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

2019 இல் வெளியான இந்திய திரைப்படங்களின் மொழிவாரி வீதம்

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்பட  மொழி வாரி வருவாய்:

ஹிந்தி        44%
ஆங்கிலம்     15%
தமிழ்         13%
தெலுங்கு     13%
மலையாளம்  5%
கன்னடம்     5%
ஏனையவை  3%
பஞ்சாபி      2%
காணாமல் போனவை :
ராஜஸ்தான்
மராத்தி
ஒடிஷா
வங்காளம்
குஜராத்தி
போஜ்பூரி ,    சிந்தி      Distribution of the Indian box office in 2019, based on language Hindi films made up the highest share in India's box office in 2019 at 44 percent. Hollywood followed that year, with Tamil cinema ranking third.

காயத்திரி மந்திரத்தால் கொரோனா குணமாகிறதா?.. ஆய்வுக்கு மத்திய அரசு பணம் ஒதுக்கியது (விதம் விதமாக கொள்ளை)

 dailythanthi.com : புதுடெல்லி   காயத்ரி மந்திரம்,மற்றும் பிராணயாமம்  யோகாசனம் கொரோனாவை குணப்படுத்துகிறதா என்பதை கண்டறிய அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்), ரிஷிகேஷில்  உள்ள மருத்துவ மற்றும் சோதனைத் துறை (டிஎஸ்டி)க்கு  நிதியுதவி அளித்துள்ளது.
இது நோயாளிகளின் துணைக்குழுவில் கொரோனாவை  விரைவாக குணப்படுத்தவும் முடியும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மருத்துவ சோதனைகளில்  (மனித சோதனைகளுக்கு ஒரு கட்டாயத் தேவை) முறையாக பதிவுசெய்யப்பட்ட மருத்துவ சோதனை, மிதமான அறிகுறிகளுடன் உள்ள 20  நோயாளிகளை  இந்த் சோத்னையில் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த சோத்னை இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் , ஒன்று நிலையான சிகிச்சையைப, மற்றொன்று, நிலையான சிகிச்சையுடன், ஒரு சான்றளிக்கப்பட்ட யோகா பயிற்றுவிப்பாளரால் மேற்பார்வையிடப்படும்
14 நாட்களுக்கு காயத்ரி மந்திரம் உச்சரித்தல்  மற்றும் சுவாச பயிற்சிகள் ஆகியவை அடங்கும்.   AIIMS Studying Gayatri Mantra Covid-19

அவ்ளோ கூட்டம்.. தூரத்தில் நின்றாலும்.. ஸ்டாலின் மனதை வென்ற 'வெற்றிச் செல்வி'

 Anbarasan Gnanamani  - tamil.oneindia.com : பட்டுக்கோட்டை: ஒரத்தநாட்டில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலினை, இதற்கு முன் இவ்வளவு எனர்ஜியாக பார்த்ததில்லை என்கின்றனர் உடன் பிறப்புகள்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரசார பயணத்தை துரிதப்படுத்தியுளளார்.
ஒரு தொகுதியில் அதிகபட்சம் 30 நிமிடங்களுக்கு மேல் இருப்பதில்லை. அதற்குள் எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசிவிட்டு, ஸ்பாட்டை காலி செய்து வருகிறார்.
குறிப்பாக, திமுக வெற்றிப் பெற்றால் அந்த குறிப்பிட்ட தொகுதிக்கு என்ன செய்வோம் என்பதையும், முதல்வர் பழனிசாமியை அட்டாக் செய்யும் சில பாயிண்ட்ஸ்களை பேசிவிட்டு கிளம்பிவிடுகிறார்.
வேட்பாளர்கள் அறிமுகம் அந்த வகையில், நேற்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

கமல் கட்சி பொருளாளர் சந்திரசேகரன் 80 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமானவரித்துறை தகவல்

Treasurer caught in IT raid ... Kamal explanation!

‘‘கமலை பிஜேபியின் ‘பி’ டீம் என்று பொதுவெளியில் பலரும் பேசிவருகிறார்கள். நாங்கள் யாரும் அதை நம்பவில்லை. ஆனால் இத்தனை மாநிலங்களில் ஒரு நிறுவனத்துக்கு இவ்வளவு மதிப்பிலான பொருள்களை விநியோகம் செய்ய டெண்டரே இல்லாமல் ஆர்டர் கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு அரசியல் பின்புலம் கண்டிப்பாகத் தேவை. இவருடைய நண்பர் கார்த்திக் ஸ்ரீதர் என்பவர், சென்னையில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மென்திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

 மின்னம்பலம் : 2018 பிப்ரவரி 1 அன்று, மதுரை ஒத்தக்கடையில் கமல் கட்சி துவக்கியபோது, அவருடன் சேர்ந்தவர்களில் பலர் யாரும் அறியாதவர்கள். பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழ் ஆளுமையுமான கு.ஞானசம்பந்தன், நடிகை ஸ்ரீப்ரியா, போலீஸ் அதிகாரி மவுரியாவைத் தவிர, வேறு யாரையும் அப்போது மக்களுக்குத் தெரியாது. துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட மருத்துவர் மகேந்திரன், மாணவர் நகலகம் செளரிராசன், நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், கோவை தங்கவேலு போன்றோரும் அந்தந்தப் பகுதியிலும், ஒரு குறிப்பிட்ட வட்டத்திலும் மட்டுமே அறிமுகமானவர்கள். கட்சியின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பலருக்கும் ஒருவருக்கு ஒருவரே அறிமுகம் கிடையாது.

கோயில்களை அறநிலைய துறையிடம் இருந்து மீட்கவேண்டும் என்று துடிப்பது ஏன்?

இளமாறன் (Elamaran) (@elaoffl) | Twitter
முட்டாள் சங்கி:- கோயில்களை மீட்க வேண்டும்.
யாரிடம் இருந்து?
முட்டா சங்கி:- அரசிடம் இருந்து.
அரசு யாரை வைத்து கோயிலை நிர்வகிக்கிறது?
முட்டா சங்கி:- அறநிலையத் துறையை வைத்து.
அறநிலையத் துறையில் யார் வேலை செய்கிறார்கள்?
முட்டா சங்கி:- இந்துக்கள்.
இந்துக்களில் எந்த சாதி?
மு.ச:- அனைத்து சாதி இந்துக்களும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை செய்கிறார்கள்.
அப்போ, நாடார்கள்?
மு.ச:- ஆமாம். வேலை செய்கிறார்கள்.
வன்னியர், தேவர், கவுண்டர்கள்?
மு.ச:- ஆமாம். வேலை செய்கிறார்கள்.
பள்ளர், பறையர், அருந்ததியர்?
மு.ச:- அவர்களும் வேலை செய்கிறார்கள்.
அறநிலையத் துறை வருவதற்கு முன் யார் கோயில்களை நிர்வகித்தார்கள்?
மு.ச:- பிராமணர்களும், ஊரில் பணக்காரர்களாக இருந்த தர்மகர்த்தாக்களும் மற்றும் ஜமீன்தார்களும்.

ஐந்து கோடி மக்கள் பேசிய ராஜஸ்தான் மொழி காணாமல் போனது .

May be an image of text that says 'Rajasthani Language #SaveRajasthani 1947 Hindi Rajasthani Language Hindi 1971 Rajasthani Language Hindi 2001 Rajasthani Language ????? 2031 思龙是怎么美的 Hindi'

ஐந்து கோடி மக்கள் பேசிய ராஜஸ்தான் மொழி காணாமல் போனது .
இந்த மொழி யில் கரைந்து போய்விட்டது  
இவர்களின் சொந்த மொழி பாடல்கள் திரைப்படங்கள் வரலாறு இலக்கியம் போன்றவை எல்லாம் காணாமலே போய்விட்டது
ராஜஸ்தான் மொழி ( மார்வாடி) சுமார் ஐந்து கோடி மக்களின் தாய்மொழி என்று கருதப்படுகிறது.
ராஜஸ்தான் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்திலும் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் உள்ளனர்.
ராஜஸ்தானி மொழியானது பல வழக்கு மொழிகளின் கலப்பு மொழி போல உள்ளது
அழிவின் விழிம்பில் உள்ள இந்த மொழியை மீட்டெடுக்கும் முயற்சி தற்போது ஓரளவு நடைபெறுகிறது.
கவலைக்கு உரியவிடயமாக இளந்தலை முறையினருக்கு இந்த மொழி தெரியவில்லை  
இந்த காணொளியில் ( பின்னூட்டத்தில்)  இவர்கள் இதை பேச முயலும் காட்சிகள் பார்ப்போரை கவலைக்கு உள்ளாக்கும்.
ராஜஸ்தானின் வட்டார வழக்கு மொழிகள் பற்றிய ஒரு குறிப்புக்கள் பின்வருமாறு :
மால்வி மொழி  ஒரு கோடி மக்கள் பேசும் மொழி மத்திய பிரதேசத்தில் உள்ள மால்வா பிரதேசத்தில் உள்ளனர்
ஐந்து கோடி மக்கள் பேசிய ராஜஸ்தான் மொழி காணாமல் போய்விட்டது
துந்துரி மொழி எண்பது இலட்சம் மக்கள் பேசுகிறார்கள் ராஜஸ்தானில் உள்ள துந்தார் பிரதேசத்தில் இது பேசப்பட்டது

வெள்ளி, 19 மார்ச், 2021

கமல்ஹாசனை மட்டும் ஐயங்கார் என்று சொல்கிறார்கள்? சில பெண்களை மட்டுமே மாமி என்று ஏன்?

May be an image of text that says 'QUESTION EVERYTHING Shalini 5h. வேறு யாரையும் ஜாதி பெயர் சொல்லி குறிப்பிடாதவர்கள் எல்லாம் ஏன் கமல்ஹாசன் என்றால் மட்டும் ஐயங்கார் என்று சொல்கிறார்கள்? சில பெண்களை மட்டுமே மாமி என்கிறார்கள்? Racism/Reverse Racism Genetic profiling Prejudice இவை எல்லாம் human right violation தான். ஒரு பக்கம் சமூக நீதி பேசி விட்டு இன்னொரு பக்கம் இப்படி reverse racism பேசுவது எவ்வளவு பெரிய psychological blind spot!! comments shares'

Thameem Tantra  : /வேறு யாரையும் ஜாதி பெயர் சொல்லி குறிப்பிடாதவர்கள் எல்லாம் ஏன் கமல்ஹாசன் என்றால் மட்டும் ஐயங்கார் என்று சொல்கிறார்கள்?
சில பெண்களை மட்டுமே மாமி என்கிறார்கள்?//
இதற்கு பெரிய சயின்ஸ் புக் எல்லாம் படிக்க தேவையே இல்லை நம்மளை சுற்றி என்ன நடக்கிறது என்ற புரிதல் இருந்தாலே போதும்.
அர்ஜுன் சம்பத் ஒரு தீவிர இந்துத்துவவாதி, இந்துத்துவம் அவர் சார்ந்த சாதியை இழிவுபடுத்துகிறது என்று அவருக்கு தெரிந்தாலும் கூட தான் கொண்ட கொள்கைக்கும், ப்ராஹ்மணர்களுக்காகவும் மூச்சு முட்ட வாழ்நாள் முழுவதும் பேசிக்கொண்டு இருக்கிறார்.
இப்போது கமல் ஹாசனை எடுத்துக்கொள்வோம்..
அவர் கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறார், பெரியாரை வேணும்போது பெப்பர்போல் அவர்மேல் தூவிக்கொள்கிறார், மாட்டுக்கறி சாப்பிடுகிறார். தன் படங்களில் ப்ராஹ்மணர்களை so called கிண்டல் செய்கிறார் ( அதிலும் ப்ராஹ்மணர்களில் ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை மட்டும் அவர் டார்கெட் செய்கிறார்).
சரி இப்போ நா ஒரு scenario சொல்றேன்..
இப்போது மைலாப்பூரில் அர்ஜுன் சம்பத்தும் கமல் ஹாசனும் போட்டியிட்டால் யார் ஜெயிப்பார்கள் ?

பாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் !

பாலியல் அத்துமீறல்களை ஆதரிக்கும் கமிட்டியை நியமிக்காமல், இவர்களை தவிர்த்த நேர்மையான பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர் பிரதிநிதிகள் கொண்ட கமிட்டியை அமைத்து விசாரணை செய். சௌந்திர ராஜனை பணி நீக்கம் செய். By வினவு செய்திப் பிரிவு : 

 அன்பார்ந்த மாணவர்களே / பேராசிரியர்களே,
வணக்கம்,
கடந்த ஜனவரியில் சென்னைப் பல்கலைக்கழக மெரினா விடுதியின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக போராடியதால், எங்களது துறைத்தலைவர் பேரா.சௌந்திரராஜன் திட்டமிட்டு 8 மாணவர்களை ஃபெயில் ஆக்கினார். இதற்கு எதிராக, நாங்கள் போராடியதால், வேறொரு பேராசிரியரை பணியமர்த்தி, எங்களது விடைத்தாள்களை சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் திருத்தியது. இதன் முடிவுகள் அறிவிக்கப்படாதிருந்த நிலையில், கடந்த 12-ம் தேதி மாணவர்களுக்கே தெரியப்படுத்தாமல் முடிவுகள் வெளியானது. 

இட ஒதுக்கீட்டை நீக்கினால் சாதி ஒழியும்

May be an image of 5 people, beard, people standing and text
திராவிடர் சிந்தனையாளர் பேரவை! இட ஒதுக்கீட்டை நீக்கினால் சாதி ஒழியும்
ஐயங்காரின் சாதி ஒழிப்பு ஐடியா. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியா இந்த பாப்பாரப் பரதேசி ஓநாய் நம்ப கிட்டேயே வந்து நிக்குது....
1. இட ஒதுக்கீடே இல்லாத கமலஹாசன் தனது அப்பா பெயரை சீனிவாச ஐயங்கார் என்று கூறத் தவறியதில்லை.
அவரிடம் ஐயங்கார் என்றால் என்னவென்று முதலில் கேள் பத்மபிரியா.
2.நான் என் குழந்தைகளுக்கு சாதி சொல்லி வளர்க்கவில்லை என்பார் கமலஹாசன். அவரது மகள் சுருதிஹாசனோ "நான் ஐயங்கார் வீட்டு பெண் என்று சொல்வது ஏன் என்று கேள் பதம்பிரியா.
3.உச்சத்தலையில் நான்கு முடிகளை மட்டும் வைத்துக் கொண்டு, மயிரிலும் கூட சாதி அடையாளத்தை சுமப்பது ஏன் என்று கேள் பத்ம்பிரியா.

அடிபட்ட புலியாக மம்தா . திணறும் பாஜக! மேற்கு வங்கத்தில் வெற்றி பாதையில் தீதி!

 Veerakumar - tamil.oneindia.com :  கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாஜக எடுத்த முயற்சிகள் இப்போது அவர்களுக்கு பெரும் பின் விளைவுகளை (backfires) ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
நடப்பவை அனைத்தையும் உள்ளுக்குள் சிரித்தபடி ரசித்துக் கொண்டிருக்கிறார் மம்தா பானர்ஜி.
ஒரு திரைப்படத்தில் வடிவேலு சொல்வாரே.. "அவரவர் எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாக இருக்கிறது.." என்று. கிட்டத்தட்ட பாஜக எடுத்த சில முடிவுகள் அப்படித்தான் மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய சாதகமாக மாறி போய்விட்டது
என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதுமட்டுமல்லாது ஏற்கனவே பாஜகவுக்கு இருந்த செல்வாக்கும் இந்த தேர்தலில் குறைய இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக மாறிவிட்டன என்று அவர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.
மம்தா vs அமித் ஷா மம்தா vs அமித் ஷா ஆமாம்.. கடந்த லோக்சபா தேர்தலில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாஜக.

தேவேந்திர குல வேளாளர் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது

 மாலைமலர் :புதுடெல்லி:    தமிழகத்தில் மாநில பட்டியல் இனத்தில் உள்ள உட்பிரிவுகளான தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிடும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.
 தமிழக அரசின் இந்த பரிந்துரையை ஏற்று, 7 பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வழி செய்யும் அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதாவை கடந்த மாதம் மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்படும் இந்த திருத்தம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.

திமுக கூட்டணி 200 இடங்களுக்கு குறையாமல் வெல்லும்! ...உழைத்தால் 234 தொகுதிகளையும் வெல்லலாம்! .. .கார்த்திகேயன் பஸ்துரா

May be an image of 1 person and smiling

Karthikeyan Fastura : : போன சட்டமன்ற தேர்தலில் கிடைத்த அதே வாக்குசதவிதம் திமுகவிற்கு கிடைத்தால் கூட இம்முறை திமுக கூட்டணி 200 இடங்களுக்கு குறையாமல் வெல்லும் என்று நம்புகின்றேன். சின்சியராக உழைத்தால் 234 தொகுதிகளையும் வெல்லலாம். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு Paradox of Choices எதிர்தரப்பில் அமைந்திருக்கிறது. 

அதிமுக கூட்டணி
ம்முக கூட்டணி
மக்கள் நீதி மைய கூட்டணி
நாதக   
திமுககூட்டணிக்கு எதிர்தரப்பு எண்ணம் கொண்ட கொஞ்ச நஞ்ச மக்களின் வாக்குக்களை கூட அழகாக சிதறடித்துவிடுவார்கள்.    திமுக கூட்டணி முழுவெற்றி அடையும்போது பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் இடத்தை பெற்று காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறலாம். ஆனால் அந்த கட்சியில் பேச்சாளுமை கொண்ட தலைவர் இல்லை. ஆகவே காங்கிரஸ் ஆதரவுடன் கம்யுனிஸ்ட்கட்சி, விசிக, மதிமுக கட்சி உள்ளிட்ட கூட்டணிகட்சிகளில் சிறந்த தலைவரை நியமிக்கலாம்.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சந்திரசேகரன் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை..

  Velmurugan P - tamil.oneindia.com :  சென்னை: சென்னையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக வந்த புகாரையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தன் மீதான குற்றச்சாட்டை அந்த பேராசிரியர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தனக்கு எதிராக சதி நடப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
ஆனால் மாணவிகள் தரப்பிலோ நடந்த சம்பவங்கள் உண்மை என்று கூறியுள்ளனர்.
சென்னையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், உதவிப் பேராசிரியராக மருத்துவர் சந்திரசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் கல்லூரியில் தனியாக இருக்கும் மாணவிகளிடம் அத்துமீறியதாக புகார் எழுந்தது.
இது குறித்து மாணவிகள் ஒன்று சேர்ந்து கல்லூரி டீனிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆயிரம் விளக்கு பிரசார கூட்டத்தில் கண்ணீர் விட்ட குஷ்பு ..

 Veerakumar - /tamil.oneindia.com : சென்னை: நல்லாத்தான் பேசிக் கொண்டு இருந்தார் குஷ்பு.. ஆனால் ஒரு கட்டத்தில் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.. குரல் தளுதளுக்க உடைந்து லேசாக அழுதுவிட்டார்.
சென்னை: தாய் தான் எனது முன்னேற்றத்திற்குக் காரணம்:
குஷ்பு இப்படி உடைந்து போய் விம்மியதை பார்த்த பாஜக தொண்டர்களும் சோகத்தில் உறைந்து போயினர்.
இந்த உருக்கமான காட்சிகள் ஆயிரம் விளக்கு தொகுதியில் அரங்கேறின.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக குஷ்பு போட்டியிடுகிறார்.
இதையொட்டி, நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் குஷ்பு பங்கேற்றார்.
அப்போது ரொம்பவே உணர்ச்சி மிகுந்தவராக இருந்தார் குஷ்பு.
நான் வெற்றி பெற வேண்டும் என்று தனது தாய், கடவுளை வேண்டி வருவதாகவும், தாய் இல்லாமல் நான் இல்லை என்றும் குஷ்பு கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் : காட்டுப்பள்ளி அதானி துறைமுகத் திட்டத்தை அதிமுக ஆதரிக்காது

அதானி துறைமுகத் திட்டத்தை அதிமுக ஆதரிக்காது: ஓபிஎஸ்

 minnambalam :காட்டுப்பள்ளி அதானி துறைமுகத் திட்டத்தை அதிமுக ஆதரிக்காது என்று துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.          சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருவொற்றியூர் தேரடி பகுதி, பொன்னேரி, அம்பத்தூர் பேருந்து நிலையம், போரூர் சந்திப்பு உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.               அப்போது பேசிய துணை முதல்வர், “தாலிக்குத் தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்த்தப்பட்டுள்ளது. பேறு கால நிதியுதவியும் உயர்த்தப்பட்டுள்ளது, இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்பட்டுள்ளது” என அதிமுகவின் திட்டங்கள் குறித்துப் பேசினார்.

விரைவில் சுங்கச்சாவடிகள் இல்லா நெடுஞ்சாலைகள்: நிதின் கட்கரி சொன்னது என்ன?

கட்கரி
BBC :இந்தியா முழுவதும் அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஓராண்டுக்குள்ளாக சுங்கச்சாவடிகள் இல்லாத நிலை ஏற்படும் என்று இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, “வாகனங்கள் அழிப்பு கொள்கை” குறித்து பேசினார்.
அப்போது நிதன் கட்கரி, “அடுத்த ஓராண்டுக்குள்ளாக நாடு முழுவதும் மனிதர்கள் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறை ஒழிக்கப்படும்,” என்று கூறினார்.
அப்படியென்றால் இனி வாகனங்களின் ஜிபிஎஸ் படத்தை வைத்து சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வரும் என்று கட்கரி தெரிவித்தார்.  இந்தியாவில் தற்போது 93 சதவீத வாகனங்கள் ஃபாஸ்ட் டேக் அட்டை மூலம் ரீசார்ஜ் செய்து சுங்கக்கட்டணத்தை செலுத்தி வருவதாகக் கூறிய அவர், ஃபாஸ்ட் டேக் இல்லாத வாகனங்கள் இரட்டை வரி செலுத்த கட்டாயப்படுத்தப்படும் என்று தெரிவித்த பிறகும் 7 சதவீத வாகனங்கள் அவ்வாறே ஃபாஸ்ட் டேக் அட்டையின்றி செல்வதாக குறிப்பிட்டார்.

13 வயது மாணவனை கட்டாய கல்யாணம் செய்த ஆசிரியை! செவ்வாய் தோஷ நிவர்த்தியாம் ஜலந்தரில் சம்பவம்

தினமலர் :ஜலந்தர்:பஞ்சாபில், தன்னிடம், 'டியூஷன்' பயின்ற, 13 வயது மாணவனை, ஆசிரியை திருமணம் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.பஞ்சாபில்,
முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜலந்தர் மாவட்டத்தின் பாஸ்தி பாவா கேல் என்ற பகுதியில், பெண் ஒருவர், பள்ளி மாணவர்களுக்காக டியூஷன் வகுப்புகளை நடத்தி வருகிறார். . இவருக்கு, செவ்வாய் தோஷம் இருப்பதால், திருமணமாவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், கவலையில் இருந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர், ஜோதிடர் ஒருவரின் உதவியை நாடினர்.'அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகவேண்டும் என்றால், பரிகாரமாக, ஒரு சிறுவனுடன், அந்த பெண்ணுக்கு சம்பிரதாயமாக திருமணம் செய்து வைக்க வேண்டும்' என, அவர் கூறினார். இதையடுத்து, தன்னிடம் டியூஷன் படிக்கும், 13 வயதான ஒரு மாணவனை, திருமணம் முடிப்பதற்காக, அந்த பெண், தேர்வு செய்துள்ளார்.' மூலப்பதிவு ஆங்கிலம்

விஜய், சூர்யா என்ன மன்னிச்சிடுங்க - மீரா மிதுன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

cinema.maalaimalar.com :தமிழில், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். 

அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துகளை பதிவு செய்து வந்த இவர், சமீபத்தில் விஜய், சூர்யா, ஜோதிகா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதுாறாக பேசிதற்காக மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீராமிதுன்.                                                அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: நான் இதுவரை நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதுாறாகப் பேசியதற்கு, திருநங்கையும், அதிமுக பிரமுகருமான அப்சரா ரெட்டி தான் காரணம்.      

நேப்கின் பேடுகளைகூட மாற்ற விடமாட்டார்கள்” – வாழ்வாதாரத்துக்காக நகரம் பெயர்ந்த இளம் தொழிலாளர்களின் கதை

தமிழ்நாடு தேர்தல் 2021
அபர்ணா ராமமூர்த்தி - பிபிசி தமிழ்:   இடம்: தென்கரும்பலூர் கிராமம், தண்டராம்பட்டு தாலுகா, திருவண்ணாமலை மாவட்டம்
"என் அப்பாக்கு காது கேக்காது. அம்மா வீட்ல இருக்காங்க. அண்ணனும் சரியில்ல. அதனாலதான் நான் 17 வயசுல வேலைக்கு போனேன்.
வெளில சொல்ல முடியாத அளவுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டேன்"
குடும்ப வறுமையில் சிக்கித் தவிக்கும் சௌந்தர்யாவின் வார்த்தைகள்தான் இவை.
இவர் தனது குடும்பத்திற்காக சொந்த ஊரைவிட்டு சென்று வெளியூரில் வேலை பார்த்துள்ளார்.
திருவண்ணாமலை நகரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் தென்கரும்பலூர் கிராமத்தில் இருக்கும் சௌந்தர்யாவின் வீட்டில் ஒரே ஒரு அறைதான்.

படிச்ச திமிருலதானே பேசுற! இருடா . இரு, NEC (தேசிய கல்விக் கொள்கை) வருது! அப்புறம் நீயும் உன் ஜாதியும் பள்ளிக்கூட்டத்திற்கு வெளியிலதான் நிப்பீங்க. “

No photo description available.
Annamalai Arulmozhi : திருச்சி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இருந்து ME படித்து நல்ல வேலையில் இருக்கும் ஒரு நண்பர் நேற்று என்னை சந்தித்தார்.
அவரது பிரச்சினையைக் கூறினார்.
அவர் தனக்குப் பிடித்த ஒருவருடைய பேச்சினை தனது முகநூலில் பகிர்ந்ததற்காக, பல ஆண்டுகளாக தொடர்பில் இல்லாத அவரது கல்லூரிக்கால நண்பர் ஒருவர் (தற்போது முக்கியமான இடத்தில்
பணியாற்றுகிறார்)
திடீரென்று அவரது முகநூல் பக்கத்தில் வந்து அவரது சாதியை குறித்து இழிவுபடுத்தி கடுமையான வசைமொழிகளை பதிவிட்டுள்ளர்.
மேலும் அந்த நண்பர் தனது முகநூல் பக்கத்திலும் இந்த ME படித்த நண்பரைப் பற்றி மிக இழிவாகக் குறிப்பிட்டு அவரையும் Tag செய்துள்ளார்.
அந்த பதிவில் இந்த நண்பரை
“ மதம் மாறியவர் “ என்று பொய்யும் சொல்லியிருக்கிறார்.
அந்த நபரின் பதிவின் நோக்கம் இந்த நண்பரை வன்முறையாளர்களுக்கு காட்டிக்கொடுப்பதுபோல அமைந்துள்ளது.

டாக்டர் அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் வேண்டுகோள்

May be an image of 1 person, sitting and indoor

Anitha Manirathinam : அனிதாவின் ஆரம்பக்கால போராட்டம் முதல் இறுதிவரை உடன் நின்றவர்... இன்றும் நிற்கிறார்... ..  என்றும் நிற்பார்....
அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வில் தவறாமல் கலந்து கொள்பவர்.
அனிதாவின் இறப்பின் போது சனாதனக் கும்பல்  அண்ணனின் மீது பல்வேறு அவதூறுகளை அள்ளி வீசினர். அனைத்தையும் எதிர்கொண்டு அனிதாவிற்காக இன்று வரை உடன் நிற்கிறார்.
தமிழக வரலாற்றில் அனிதா மறைக்க முடியாத வரலாறு, அந்த வரலாற்றை எழுத் துணை நின்றவர் அண்ணன் சிவசங்கர் எஸ் எஸ்.
அவரை எதிர்த்தே அனிதாவின் குடும்பத்தைச் சேர்ந்தவரைத் தூண்டி விட்டு போட்டியிடச் செய்து "நன்றி கெட்ட அனிதாவின் குடும்பம்" என்ற அவப்பெயரை ஏற்படுத்திவிடாதீர்கள்.
தயவு செய்து தலைமையிடம் சொல்லி வேட்பாளரை மாற்றுங்கள் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பாண்டியனை வெளியூரில் ஒளித்து வைத்துக்கொண்டு மனுதாக்கல் செய்துள்ளீர்கள்.

வியாழன், 18 மார்ச், 2021

கமல் Vs சமூக நீதி.. ஷாலின் மரியா லாரன்ஸ்!

May be an image of Shalin Maria Lawrence
 Shalin Maria Lawrence :  கடந்த வாரம் ஆங்கில டிஜிட்டல் நாளிதழின் பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசி கொண்டிருந்தேன்.அப்பொழுதுதான்
வேட்பாளர் அறிவிப்புகள் சுட சுட வந்துகொண்டிருந்தன.
அப்பொழுது இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இல்லாதது குறித்தும் மற்ற கட்சிகளில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆறு சதவிகிதத்துக்கும் கீழே இருப்பதை பற்றி விவாதம் எழுந்தது.(அப்பொழுது விசிக பட்டியல் வரவில்லை).
அப்பொழுது அவர் நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் சரி சமமாக பெண்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது பற்றி பேசினார்.
அப்பொழுது நான் சொன்னேன். இது வெறும் டோக்கனிசம்.
அதாவது பெயருக்கு ஒரு விஷயத்தை செய்வது. நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு இந்த தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்புகள் மிகக்குறைவு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.  கமலுக்காவது ஓரிரு இடங்களில் வெற்றி கிடைக்கும், சீமான் கட்சிக்கு அந்த வாய்ப்பு கூட கிடையாது. தாங்கள் எங்கேயும் நின்று வெற்றிபெற முடியாது என்று தெரிந்தே எல்லா தொகுதிகளிலும் போட்டி போடுகின்றனர். அது ஓட்டுக்களை பிரிப்பதற்காக மட்டுமே. அப்படிப்பட்ட சூழலில் அந்த இடங்களை பெண்களுக்கு கொடுப்பதில் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது தானே?

தோழர் மருதையன் : பாசிச எதிரி தமிழகத்தில் அரசியல் அதிகாரத்திற்கு வந்துவிட கூடாது ! இந்த தேர்தலில் நான் திமுகவுக்கு வாக்களிப்பேன்!

செல்லபுரம் வள்ளியம்மை  :மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொது செயலாளராக ஏறக்குறைய 25  இருந்தவர் தோழர் மருதையன்!
மக்கள் கலை இலக்கிய கழகமானது தேர்தல் அரசியல் நம்பிக்கை அற்ற மாக்சீய அமைப்பாகும்.
தேர்தல் என்பது போலி ஜனநாயகம், மக்கள் புரட்சியின் மூலம்தான் உண்மையான ஜனநாயகத்தை அடைய முடியும் என்பதுதான் ம க இ கவின் கொள்கையாகும்.
ம க இ கவில் இருந்து கருத்துவேறுபாடு காரணமாக தோழர் மருதையன் அவர்கள் அண்மை காலமாக விலகி இருக்கிறார்!
இந்த நிலையில் நடைபெறும் சட்டமன்ற இந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அது ஏன் என்று கூறுகையில், நாம் விரும்புகின்ற புதிய ஜனநாயக புரட்சியை தேர்தல்கள் மூலமாக கொண்டுவர முடியாது என்பது உண்மைதான்.
ஆனால் எல்லா தேர்தல்களை போல அல்ல இப்போது நடைபெற இருக்கும் தேர்தல்!
இப்போது நாம் எதிர்கொள்வது வேறொரு பிரச்சனையை!
இந்த தேர்தலில் வழமை போல அடிமை எடப்பாடி அரசு,  மோடி அரசுக்கு அடிமையாக செயல்படும் எடப்பாடி அரசு மீண்டும் பதவிக்கு வந்தால்,
அது பாரதீய ஜனதா கட்சியே ஆட்சிக்கு வருவதாக பொருள்படும்! அதன் விளைவு எப்படி இருக்கும்?

இடஒதுக்கீட்டை நீக்கினால் சாதி ஒழியும்! கமல் ஹாசனின் வேட்பாளர் பத்மபிரியா ஒப்புதல் வாக்குமூலம்

“இடஒதுக்கீட்டை நீக்கினால் சாதி ஒழியும்” - ம.நீ.ம வேட்பாளரின் எக்குத்தப்பான யோசனை!

kalaignarseithigal :.பொய்யான தகவலை உண்மை என நம்பி, அதைப் பரப்பிய பத்மபிரியாவுக்கு தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் சீட் கொடுத்த நிலையில், அவர் தற்போது இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா குறித்து பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே போகர் என்பவர் பாடல் எழுதியுள்ளதாக பரவிய தகவலை உண்மை என நம்பி அதுகுறித்து பெருமிதத்துடன் வீடியோ வெளியிட்டு பலத்த கிண்டலுக்கு உள்ளானவர் பத்மபிரியா.

அவரை மக்கள் நீதி மய்யத்தின் மதுரவாயல் வேட்பாளராக அறிவித்தார் கமல்ஹாசன். இந்நிலையில், செய்தித்தளம் ஒன்றிற்கு பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியா, இட ஒதுக்கீட்டு கொள்கையின் அடிப்படையையே புரிந்துகொள்ளாமல், சாதியை ஒழிக்க இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும் எனப் பேசியுள்ளார்.

புதுவை காங்-தி.மு.க. கூட்டணியில் முதல்-அமைச்சர் யார்? காங்கிரசுக்கு 15, தி.மு.க.வுக்கு 13, சி பி ஐ விசிக தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது

காங்-தி.மு.க. கூட்டணியில் முதல்-அமைச்சர் யார்? புதுவை அரசியலில் குழப்பம்
maalaimalar : புதுவையில் முதல்வராக இருந்த நாராயணசாமி போட்டியிடாததால் காங்-தி.மு.க. கூட்டணியில் முதல்-அமைச்சர் யார்? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. <
நாராயணசாமி
புதுச்சேரி:புதுவையில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து தேர்தலை சந்திக்கிறது.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் இருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் விலகி பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரசில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. கவர்னர் கிரண்பேடியின் முட்டுக் கட்டையால் தேர்தலின் போது அறிவித்த திட்டங்களை காங்கிரசால் நிறைவேற்ற முடியவில்லை.

மம்தாவின் தேர்தல் அறிக்கை :மாதம் ரூ.1000 உதவித்தொகை, ரூ.5 சாப்பாடு, ஏக்கருக்கு ரூ.10,000 !

puthiyathalaimurai.com : மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மம்தா பானர்ஜியின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய அம்சங்கள்…
  • மேற்குவஙக மாநிலத்தில் புதிதாக 5 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் .
  • ஏழைகள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
  • மாநிலத்தின் 1.6 கோடி குடும்பத்திற்கும் குறைந்த பட்ச வருமானமாக மாதம் 500 (பொதுப்பிரிவினர்) மற்றும் 1000 (எஸ்சி/எஸ்டி/ஓபிசி) ரூபாய் வழங்கப்படும்.
  • மாணவர்களுக்கு 4 சதவீத வட்டியில் 10 இலட்ச ரூபாய்க்கான கடன் அட்டை வழங்கப்படும்.
  • கர்ப்பிணி பெண்களுக்கு 731 நாட்கள் பேறுகால விடுமுறை அளிக்கப்படும்.சிறுகுறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
  • ஒன்றரை கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி வந்து ரேசன் பொருட்கள் வழங்கப்படும்.
  • 2500 ‘மா’ கேண்டீன்கள் மூலமாக 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படும்.
  • அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படும்.

அழகிரியின் அமைதி: திமுகவுக்கு சாதகமா?

அழகிரியின் அமைதி: திமுகவுக்கு சாதகமா?

 minnambalam :திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக எப்படியாவது அவரது அண்ணன் மு.க.அழகிரியை மீண்டும் அரசியல் களத்துக்குக் கொண்டு வந்து நிறுத்திட வேண்டுமென்று கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகவே பல முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் அழகிரி கடந்த தீபாவளியன்று தனது ஆதரவாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு செயல் வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட, அது மின்னம்பலத்தில் வெளியாகி பரபரப்பானது. சில முறை ஒத்திவைக்கப்பட்ட அந்த ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 3ஆம் தேதி பாண்டிகோவில் பகுதியில் உள்ள ஒரு பெரிய மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

திமுக, மதிமுக, மநீம பிரமுகர்கள் வீடுகளில் ரெய்டு!

திமுக, மதிமுக, மநீம பிரமுகர்கள் வீடுகளில் ரெய்டு!

 minnambalam :தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறையினரின் ரெய்டுகள் கடந்த சில ஆண்டுகளாகவே வழக்கமாகியுள்ளன.

அந்த வகையில் திமுக, மக்கள் நீதி மய்யம், மதிமுக பிரமுகர்களைக் குறிவைத்து நேற்று (மார்ச் 17) வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள்.

அதிமுக கூட்டணியில் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் போட்டியிடும் தாராபுரத்திலும், கமல் இன்று பிரச்சாரம் செய்ய வரும் திருப்பூரிலும் ரெய்டு நடந்துள்ளது.  மதிமுகவின் திருப்பூர் மாவட்ட துணை செயலாளராக இருப்பவர் கவி நாகராஜ்.

Welfare State! மக்கள் 'நலப்பணி அரசு! இலவசம் என்ற சொல் தவறானது நற்பணிகளில் தெற்காசியாவுக்கே தமிழகம்தான் முன்மாதிரி

May be an image of 1 person and smiling
Sridhar Subramaniam : · இலவசங்கள் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு இந்துத்துவர்கள் விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
மக்களுக்கு இலவசங்கள் கொடுப்பது தவறானது என்பது 19ம் நூற்றாண்டு விக்டோரியன் சிந்தனாவாதம். 18ம் நூற்றாண்டில் தேங்கிப் போய் விட்ட இந்துத்துவர்கள் 19ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் சிந்தனையை இப்போதுதான் எடுத்துக் கொண்டு யோசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என்ற அளவில் அவர்களைப் பாராட்டலாம்.
ஒரு நூறு ஆண்டுகள் முன்னேறி இருக்கிறார்கள்
உண்மை என்னவெனில், இலவசங்கள்தான் தமிழகத்தை கட்டமைத்தன.
சொல்லப் போனால் இலவசங்கள் என்ற சொல்லே தவறான பதப்பிரயோகம்.
 'நலப்பணி அரசு' என்பதுதான் சரியான பதம். அதாவது Welfare State.
சத்துணவு, இலவச யூனிஃபார்ம், பஸ் பாஸ், இலவச லேப்டாப், பொது விநியோக அரிசி, கர்ப்பிணி உதவித்தொகை, அம்மா உணவகம் என்று தமிழகம் முன்னெடுத்த திட்டங்கள் எல்லாமே இன்று தேசிய அளவில் காப்பி அடிக்கப்படுகின்றன.
தமிழகம் மனிதவளக்குறியீடுகளில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருப்பதற்கு இந்த நலப்பணி திட்டங்கள் மிக முக்கிய காரணம்.
சத்துணவு பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தது. கர்ப்பிணி உதவித்தொகை வீட்டில் பிரசவம் பார்ப்பதை குறைத்தது.

தமிழக தேர்தலை ஈழத்தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

45 R. Sampanthan Photos and Premium High Res Pictures - Getty Images
Rauf Hakim - Sambanthar
சந்திரஹாசன் hashtag on Twitter
சந்திரஹாசன்

செல்லபுரம் வள்ளியம்மை தமிழக தேர்தலை
இலங்கையில் எப்படி பார்க்கிறார்கள்?
சிங்கள பெரும்பான்மை மக்கள் திமுகவை ஒரு நிரந்தர அச்சுறுத்தலாகதான் பார்க்கிறார்கள்.  இன்றுவரை கலைஞர்தான் ஈழப்பிரச்சனையை தமிழகத்திலும் இந்திய அளவிலும் பெரிய அளவில் பரப்புரை செய்தவர். அதன் காரணமாகவே போராளிகளுக்கு இந்திய மண்ணில் எல்லாவிதமான உதவிகளும் கிடைத்தது எனவே கலைஞரும் திராவிட முன்னேற்ற கழகமும்தான் அவர்களின் வெறுப்புக்கு உள்ளாகிறது . ஆனாலும் அவர்கள் தமிழக அரசியல் பற்றி தற்போது பெரிதாக அலட்டி கொள்வதில்லை.
ஆனால் இந்திய காப்பரேட்டுக்களை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கிறார்கள்.
இலங்கை மலையகத்தவர்கள் பெரிதும் அந்த காலத்து எம்ஜியார் விசுவாசிகள். தற்போது பாஜகவின் இந்துத்வா கருத்துக்கள் அங்கு கொஞ்சம் பரவுவது போல தெரிகிறது.


இலங்கை தமிழர்களை பொறுத்தவரை பெரும்பாலான தலைவர்கள் திமுகவோடு நெருங்கிய தொடர்போடு உள்ளவர்கள்தான்.
குறிப்பாக சம்பந்தர் சுமந்திரன் போன்ற தமிழரசு கட்சியினருக்கும் திமுகவுக்கும் உள்ள தொடர்பு அண்ணா காலத்து பாரம்பரியம். அது இப்போதும் தொடர்கிறது 

தந்தை செல்வநாயகத்தின் புதல்வர் திரு சந்திரகாசன் சென்னையிலேயே பெரிதும் தங்கி இருப்பவர் . அவர் கலைஞரின் மிக நெருங்கியா நண்பர்  கலைஞரின் இறுதி நிகழ்வின் போது குலுங்கி  அழுதார்.

புதன், 17 மார்ச், 2021

தமிழகத்தின் 69 வீத இட ஒதுக்கீட்டுக்கு வேட்டு வைக்க உச்சநீதிமன்றம் முயல்கிறது ஊடகங்கள் இதுபற்றி பேச மறுப்பதேன்?

உச்ச நீதிமன்றம் மராத்தா மாநில மக்களுக்க்காக இயற்றிய சட்டத்தை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது பின்தங்கிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை எப்படி நீங்களே தீர்மானித்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது 

அதை நாடாளுமன்றம்தானே செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளது. இது எவ்வளவு ஆபத்தான விடயம்? அந்த மாநில மக்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சமூக அளவிலும் மிகவும் பின்தங்கி இருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை தருகின்ற சமூக நீதிக்கான வாய்ப்பை வழங்குகின்ற உரிமை அந்த மாநில அரசுக்கு கிடையாது! 

இது ஏதோ வெறும் மகாராஷ்டிரா மாநிலத்துக்கான கேள்வி மட்டுமல்ல எல்லா மாநிலங்களுக்கும் இது பொருந்தும். இது மிக ஆபத்தான விடயம் இதை இப்படியே விட்டுவிட்டால் நாம் இதுவரை போராடி பெற்ற எல்லாவற்றையும் இழந்து விடுவோம்.

 இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாமல் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டை இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வழக்கில் 50 வீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு போகவில்லையா? அப்படி என்றால் தமிழ்நாட்டில் 69 வீதம் இருக்கிறதே?       அதை நிறுத்தவேண்டுமே? தமிழ்நாட்டு அரசு வழக்கறிஞர் என்ன சொல்கிறார் என்று ஒவ்வொரு முறையும் கேட்கிறது உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் ஒவ்வொரு முறையும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் தமிழ்நாட்டு 69 வீத இட ஒதுக்கீடு என்பது பாதுகாக்கப்பட்டு அட்டவணைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ளது. 

தோழர் ஜீவா சகாப்தம் இந்த விடயத்தை பற்றி பேசி உள்ளார்கள் ஏனைய ஊடகங்கள் கள்ள மௌனம் காக்கின்றன இந்த காணொளியில் இது பற்றி மேலும் பல விபரங்களோடு விரிவாக பேசி உள்ளார் .பாருங்கள்

 tamil.news18.com :தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மம்தாவை கொன்று ஆட்சியைப் பிடிக்கத் அமித்ஷா,மோடி திட்டம்? BJP May Conspire To Assassinate Mamata Banerjee If It Fails Bengal Polls

kalaignarseithigal.com : மேற்குவங்க மாநிலத்தில், மார்ச் 27ம் தேதியிலிருந்து எட்டு கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில் பிரதான கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.                    இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில், மோடியும், அமித்ஷாவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ, எம்.பி, மூத்த தலைவர்களைக் குதிரை பேரம் பேசி பா.ஜ.கவில் சேர்த்து வருகின்றனர்.                     இதற்கெல்லாம் அசராமல் முதல்வர் மம்தா பானர்ஜி பா.ஜ.கவை துணிவுடன் எதிர்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பரப்புரையின்போது, மம்தா பானர்ஜியை மர்ம நபர்கள் கீழே தள்ளிவிட்டதில், அவரது காலில் காயம் ஏற்பட்டது.                           இருந்தபோதும் காலில் ஏற்பட்ட காயத்துடனேயே சக்கர நாற்காலியில் அமர்ந்து மம்தா பானர்ஜி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.                               இதனால் மேற்கு வங்கத்தின் பேசுபொருளாக மாறிவிட்டிருக்கிறார் மம்தா. இது பா.ஜ.கவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மம்தா வாக்குகளைப் பெற நடகமாடுவதாக பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.                    இந்நிலையில், மெஜியா, சாத்னா நகரங்களில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். 

கள்ளகுறிச்சி 8-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்கள்

maalaimalar : உறவினர் வீட்டில் தங்கி இருந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 10-ம் வகுப்பு மாணவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

8-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்கள் திருநாவலூர்: கள்ளகுறிச்சி மாவட்டம் திருநாவலூர் அடுத்த ஒரு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 13 வயது மாணவி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவியின் பெற்றோர் சென்னையில் வசித்து வருகின்றனர். மாணவி அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வந்தார். அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் இந்த மாணவியுடன் பேசி பழகி வந்தார். சம்பவத்தன்று அவரது உறவினர் வீட்டில் மாணவி தனியாக இருந்தார்.
இதை நோட்டமிட்ட 10-ம் வகுப்பு மாணவர் அந்த வீட்டுக்குச் சென்றார். வீட்டில் இருந்த மாணவியை மிரட்டி உல்லாசம் அனுபவித்தார். இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என அந்த மாணவியை மிரட்டி சென்றார். மாணவியிடம் உல்லாசம் அனுபவித்ததை அந்த மாணவர் அவருடன் படிக்கும் நண்பர்கள் 2 பேரிடம் கூறினார்.

ஈழப்போராட்டம் யாருக்கு விடிவைக் கொடுத்தது?

இலங்கைநெற் -ஞானசக்தி சிறிதரன்:   : என் தம்பியின் மரணம்!
1987 மார்ச் 16 பேரிடியாக பேரதிர்ச்சியாய் வந்த செய்தி என் தம்பியின் மரணம்.
இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக. அவன் அக்காலத்தில் முல்லைத்தீவு தேவி புரத்தில் ஈழப்புரட்சி அமைப்பில் செயற்பட்டான்.
எம்மைப்பொறுத்தவரை அவரது உடலையோ அவர்தொடர்பான வேறு எந்த ஆதாரங்களையோ நாம் பெறமுடியவில்லை.
புலிகளின் ஜனநாயக மறுப்பு காரணமாக ஏனைய அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டு இயங்கமுடியாத காலம், டிசம்பர் 12 ஈழப் பெண்கள் விடுதலை முன்னணியினரால் அனைத்து ஜனநாயக மறுப்புக்களுக்கும் எதிராக திரண்ட பெண்களின் ஊர்வலம் யாழ் பெரியகோயிலில் ஆரம்பித்து பெருமாள் கோவிலில் முடிவடைந்தது. புலிகளின் அராஜகங்களுக்கெதிராக கண்டன உரைகளுடன் கொடும்பாவி எரிக்கப்பட்டதை தொடர்ந்து மறுநாள் எமது அமைப்பும் நாங்களும் செயற்பட முடியாத சூழல் ஏற்பட்டது.

நடிகை ஜெயசித்ரா மகன் கைது.. இரிடியம் விற்பனை செய்வதாகக் கூறி ரூ.26 கோடி மோசடி:

  dhinakaran :சென்னை: அரிய வகை இரிடியம் விற்பனை செய்வதாகக் கூறி ரூ.26 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஜெயசித்ரா மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.  மோசடி புகாரில் நடிகை ஜெயசித்ரா மகன் அம்ரீஷ்(33) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நாளை முதல் ஊரடங்கு..மத்திய பிரதேச அரசு அதிரடி அறிவிப்பு!

Samayam Tamil : இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.                          இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு> விதிக்கலாமா என சில மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன.                             பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.இந்த வரிசையில், நாளை முதல் போபால்"இந்தூர்"ஆகிய நகரங்களில்  இரவு ஊரடங்கு. அமல்படுத்தப்படுவதாக மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

 கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதால் ஊரடங்கு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போதைய கொரோனா சூழல் குறித்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது, ஊரடங்கு விதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க பிரமுகர் உதவியுடன் நில அபகரிப்பு - மன உளைச்சலில் ஆடிட்டர் மரணம்” : சென்னையில்

“அ.தி.மு.க பிரமுகர் உதவியுடன் நில அபகரிப்பு - மன உளைச்சலில் ஆடிட்டர் மரணம்” : சென்னையில் தொடரும் அராஜகம்!
.kalaignarseithigal.com :சென்னையில் பெசண்ட் நகர் பகுதியில் வசித்து வருபவர்

ன்னையில் பெசண்ட் நகர் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர் ஆடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஸ்ரீவத்ஸன் என்ற மகன் உள்ளார். ஆடிட்டர் சீனிவாசன் கடந்த 2019-ம் ஆண்டு சோழிங்கநல்லூர் கிராமம், கலைஞர் கருணாநிதி சாலை அருகே உள்ள 27 சென்ட் காலி இடத்தை ஒரு கோடியே இரண்டு லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

இந்நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு தான் வாங்கிய நிலத்தை பார்ப்பதற்காக சீனிவாசன் சென்றுள்ளார். அப்போது அங்கு கட்டுமான பணிகள் நடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது கிரானைட் நிறுவன உரிமையாளர் ஆனந்தகுமரன் என்பவர் கார்த்திக் என்பவரிடம் வாடகை ஒப்பந்தம் செய்திருக்கும் தகவல் தெரியவந்தது.

ஸ்டாலின் அழுத்தம்: வெளியான காங்கிரஸ் மீதப் பட்டியல்!

ஸ்டாலின் அழுத்தம்: வெளியான காங்கிரஸ் மீதப் பட்டியல்!

 minnambalam :தமிழக காங்கிரஸ் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிடும் நிலையில்... 21 தொகுதிகளுக்கான முதல் பட்டியல் மார்ச் 13ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று (மார்ச் 16) இரவு அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.    விளவங்கோடு, குளச்சல் தொகுதிகளுக்கு தற்போது அங்கே இருக்கும் சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான விஜயதாரணி, பிரின்ஸ் ஆகியோரே மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

`அ.தி.மு.க அணி கரை சேருவது கடினம்”- டெல்லிக்கு ஓலை அனுப்பியதா பா.ஜ.க. தலைமை?

அ.தி.மு.க - பா.ஜ.க பேச்சுவார்த்தை
vikatan.com - அ.சையது அபுதாஹிர் : அ.தி.மு.க - பா.ஜ.க பேச்சுவார்த்தை! கூட்டணியை பலப்படுத்தவேண்டி அ.தி.மு.க இந்த முறையும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்கிற அதீத  நம்பிக்கையில் கூட்டணிக்கட்சிகளை  சரியாக கையாளவி்ல்லை .“அ.தி.மு.க அணி வரும் சட்டமன்ற தேர்தலில் கரைசேர்வது கடினம். நமது வேட்பாளர்களின் வெற்றியும் எளிதல்ல” என்று தமிழக பாஜக தரப்பிலிருந்து டெல்லிக்கு தகவல் சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடக்கிறது. ஆளும் கட்சியான அ.தி.மு.க அணியில் பா.ம.க, பா.ஜ.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. தி.மு.க தலைமையிலான அணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகளுடன் இஸ்லாமிய கட்சிகளும் களத்தில் நிற்கிறன. கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியே தொடர்ந்து நடந்துள்ளது. இதனால் இந்த முறை ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்கிற வேகத்தில் தி.மு.க இருக்கிறது. ஆனால் மத்தியில் ஆளும் கட்சியும், மாநிலத்தில் ஆளும் கட்சியும் ஒரே அணியாக தேர்தல் களத்தில் நிற்பது தி.மு.க அணிக்கு அச்சத்தையும் கொடுத்துள்ளது.

வர்த்தமானம் JNU வில் நடந்த சம்பவங்கள் பற்றிய மலையாள படம்

 

Ag Sivakumar :சென்சாரில் படத்தைப்பார்த்த ஒருவர் (சங்கி) 'இதில் ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளது. குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும்' என்று குதித்தார். அதன்பிறகு Revising Committee சென்று சேதாரமின்றி திரும்பியுள்ளனர். JNU - Jawaharlal Nehru University சர்ச்சைகள் பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுதான் இங்கே களம். பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெறும் இடது vs வலதுசாரி மோதல்கள் பற்றி தெளிவாக விளக்கியுள்ளார் இயக்குனர் சித்தார்த்தா. கதையின் நாயகி Faiza வாக பார்வதி, பேராசியராக சித்திக், மாணவரணி தலைவராக ரோஷன் போன்றவர்கள் மட்டுமே தெரிந்த நடிகர்கள். ஹாஸ்டலில் தங்கி ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்கிறார் Faiza. அங்கே தலித் மாணவருக்கு தரப்படும் உதவித்தொகை நிறுத்தப்படுவதால் போராட்டம் செய்கிறார்கள். நெற்றியில் காவித்திலகம் பூசிக்கொண்டு இவர்களை சீண்டுகிறது ஒரு பிரிவு. இதில் Faiza எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் கதை. இதன் அடித்தளம் கேரளத்தின் சுதந்திர போராட்ட வீரர் அப்துல் ரஹ்மான்.

கொலை குற்றவாளி தளி.ராமச்சந்திரனை சுமக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!

May be an image of 7 people and people standing
இளையரசன் பெரியார் : கொலைகார பார்ட்டி ஆப் இந்தியா ராமச்சந்திரனிஸ்ட்! கொலை குற்றவாளி தளி.ராமச்சந்திரனை: சுமக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.இந்தமுறையும் தளி தொகுதியில் ராமச்சந்திரனையே நிறுத்தியிருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மாற்று ஆட்சி என்று முழங்கிய மக்கள் நலக் கூட்டணியிலும் 2016 ஆம் ஆண்டில், இ.கம்யூ.சார்பாக இதே தொகுதியில் ராமச்சந்திரன் நிறுத்தப்பட்டார். அப்போது, முகநூலில் அதை நாம் வன்மையாகக் கண்டித்தோம். ஊடகங்களில் சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்ச்சகர்கள் பலரும் கண்டித்தார்கள். இப்போது, மீண்டும் அதே தளி தொகுதியில் ராமச்சந்திரன் இ.கம்யூ.கட்சி சார்பாக நிறுத்தப்படுகிறார். தளி ராமச்சந்திரன் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்தானே, அவரை ஏன் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்கிறீர்கள் என்று கேட்பவர்கள் ராமச்சந்திரனின் மக்கள் விரோதம் என்னும் இன்னொரு பக்கத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

பார்ப்பனீயம் தமிழகத்தில் பெறாத வெற்றியை ஈழத்தில் பெற்றுள்ளது?

 செல்லபுரம் வள்ளியம்மை : கலைஞர் திமுக பெரியார் திராவிட கருத்தியல் என்று வரும்பொழுது ஈழத்தமிழர்கள் தமிழக பார்ப்பனர்களின் கண்களால்தான் அவற்றை பார்க்கிறார்கள்  
பார்ப்பனர்களுக்கு எதை பிடிக்குமோ அவை இவர்களுக்கும் பிடிக்கும்
பார்ப்பனியத்திற்கு எது எதிரியாக தெரியுமோ அதுவே இவர்களுக்கும் எதிரியாக தெரியும்  
இந்த சிந்தனை போக்கை கட்டமைத்தது தமிழக பார்ப்பனீயம் .
அது இன்னும் இவர்களுக்கு தெரியவில்லை . தங்களின் சிந்தனை போக்கை பற்றி மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றுகூட இவர்களுக்கு இன்னும் தோன்றவில்லை
இலங்கை ஜாதீயம் என்பது தமிழக பார்ப்பனீயம் பெற்ற திருட்டு குழந்தை என்றுதான் கூறவேண்டி இருக்கிறது  
தமிழகத்தில் ஒண்ணரை பார்ப்பனர்கள் என்ற சொல்லாடல்  பார்ப்பனர்களை விட மோசமான பார்ப்பனீய சிந்தனை உடையவர்களை குறிக்கிறது  
இலங்கையில் கடந்த சுமார் எழுபது வருடங்களாக கோலோச்சிய தமிழ் பத்திரிகை ஆசிரியர்களின் பூர்வீகம் ஆராய வேண்டிய தேவை இருக்கிறது  இந்த பத்திரிகை ஆசிரியர்கள் முதலாளிகள் எல்லாம் தமிழக பாப்பனீயர்கள்தான்  இவர்களில் சிலர் பார்ப்பனர்கள் அல்லர் ஆனாலும் அவர்கள் தமிழக பார்ப்பனீய கருத்துக்களை கொண்ட நாடார்களும் செட்டியார்களுமாவார்

செவ்வாய், 16 மார்ச், 2021

விளவங்கோட்டில் விஜயதரணி போட்டி! - உறுதியாக வெற்றிபெறுவேன் என சூளுரை!

May be an image of ‎text that says '‎The CEC has selected the following candidates for the ensuing elections to the Legislative Assembly of Tamil Nadu SI. No. No Name of Constituency 1 26 Selected Candidates 2 Velachery 161 J.M.H Hassan 3 Mayiladuthurai 231 S. Rajakumar Colachel 233 J.G Prince Vilavancode Mrs. S. Vijayadharani For favour of Publication. عشماسeا (MUKUL WASNIK) General Secretary Incharge CEC 16th March, 2021 Congress Mung 24, Akbar Road New Delhi-11+ Delhi-‎'‎

CONGRESS VILAVANCODE CANDIDATE VIJAYATHARANInakkeeran :தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது.                       இந்த நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் 25 இடங்களைப் பெற்ற காங்கிரஸ், 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.                         வேளச்சேரி, மயிலாடுதுறை, விளவங்கோடு, குளச்சல் ஆகிய நான்கு தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை.                           இதில், விளவங்கோடு தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு மீண்டும் சீட் தரக்கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்....

இந்நிலையில், நக்கீரன் இணையதளத்துக்கு இதுகுறித்து பேட்டியளித்த விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதரணி, "ஒரு பத்து பேர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதில், இரண்டு பேரின் முகம் மட்டும்தான் எனக்குத் தெரிகிறது. மீதமுள்ள அறியாத முகங்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.

பறக்கும் படையினரின் அடாவடி ... கல்யாண வீட்டுக்கும் களவாணித்தனத்துக்கும் வித்தியாசம் தெரியாதா? கபோதிகள்

May be an image of 3 people and military uniform

Ezhumalai Venkatesan :  தேர்தல் முடிவதற்குள் இன்னும் எவ்வளவு  எழவுகளை பார்க்க வேண்டுமோ?
மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கிய சகாயம் என்பவரின் குடும்பம் சென்னைக்கு சென்று திருமண விழாவில் கலந்துகொண்டு விட்டு காரில் திரும்பும்போது சீர்காழி அருகே தேர்தல் ஆணைய பறக்கும் படையினர் மடக்கு கின்றனர்..
அணிந்துவிட்டு பின்னர் பாதுகாப்புக்காக 30 சவரன் நகைகளை கழட்டி ஒரு பெட்டியில் வைத்துக்கொண்டு வைத்துள்ளது அந்த குடும்பம்.
நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று சொல்லி பறிமுதல் செய்து அதை வட்டாட்சியரிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டனர் அதிகாரிகள்..
புதியதலைமுறை டீவி டுவிட்டரில் இந்த செய்தியை படித்த போது தேர்தல் ஆணைய பறக்கும் படையின் கடமை உணர்வால் தலை கிறுகிறுத்தது..
எப்பவோ வாங்கிய நகைகளுக்கு இப்பவும் ஆவணங்களோடு அலைய முடியுமா?
பறக்கும் படையினரிடமே, "நீங்களெல்லாம் யார் யார்? மரியாதையா உங்களுடைய ஆரம்பகால கவர்மெண்ட்  அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர காட்டுங்க"ன்னு கேட்டால் என்னவாகும்?

1960 இல் இந்தியாவின் ஏழை மாநிலமாக இருந்த தமிழ்நாடு 2011 இல் நாட்டின் பணக்கார மாநிலங்களில் ஒன்றாகியது எப்படி?

May be an image of 1 person and text that says 'The FATHER of Modern TAMILNADU'
திமுக என்ன கிழித்ததுனு சொல்ரவனுங்க.. இந்தா படிச்சு தெறிஞ்சுக்கங்க.*
1. அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்
2. பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்
3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்
4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்
5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்
7. இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்தது கலைஞர்
8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது கலைஞர்
9. கை ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர்
10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்
11.குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்

தலைமன்னாரில் ரெயில் பள்ளி மாணவர் பேருந்து கோர விபத்து! 9 வயது மாணவன் உயிரிழப்பு - 25 பேர் படுகாயம்

ibctamil :தலைமன்னாரில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து புகையிரதத்துடன் மோதியதில் 9 வயதுடைய மாணவன் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை பேருந்து கடக்க முயன்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

தலைமன்னார் புகையிரத கடவையில் ரயில் மற்றும் தனியார் பஸ் நேரடியாக மோதியதில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் விபத்தில் ஒன்பது வயதான மாணவன் பலியாகியுள்ளார், சம்பவத்தில் 23 ​பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை, தலைமன்னார் விபத்தை அடுத்து மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு நிலவுகிறது. குருதி கொடையாளிகள் குருதி வழங்கி உதவுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்டேன்லி டி மெல் அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
பஸ்ஸில் பயணித்த அதிகமானோர் மாணவர்கள் என கூறப்படுகின்றது..
பேருந்தில் சென்றவர்களில் 14 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேட்பாளர் தேர்வு: திமுக உதவியை நாடும் காங்கிரஸ்

வேட்பாளர் தேர்வு: திமுக உதவியை நாடும் காங்கிரஸ்

 minnambalam :வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் இதுவரை 21 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மீதமிருக்கும் விளவங்கோடு, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது.   இதில் குமரி மாவட்டத்தில் இருக்கும் இரு தொகுதிகளிலும் முறையே விஜயதாரணி, பிரின்ஸ் ஆகியோர் தொடர்ந்து 2 முறை சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பதால் அவர்களைத் தவிர வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டது. குறிப்பாக விஜயதாரணிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று சத்தியமூர்த்தி பவனில் போராட்டங்களும் நடந்தன..

ஒரே நாளில் 26,291 பேருக்கு கொரோனா.. 2021ம் ஆண்டின் உச்சபச்ச தினசரி பாதிப்பு ... மீண்டும் லாக்டவுன்???

dinakaran:  டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.58 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.13 கோடியை  தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 26,291 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,13,85,339 ஆக உயர்ந்தது.
* புதிதாக 118 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,58,725 ஆக உயர்ந்தது.

கடுமையான பக்க விளைவு எதிரொலி; ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசிக்கு 9 நாடுகள் தற்காலிக தடை

dailythanthi.com : லண்டன், இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டின் மிக பெரிய மருந்து விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஆஸ்டிரா ஜெனிகா கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது. 

இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து நாடுகளில் அந்நிறுவனம் 1.7 கோடி பேரிடம் பரிசோதனை மேற்கொண்டு பாதுகாப்பு தரவுகளை சேகரித்து வைத்துள்ளது. இந்த நிலையில், ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியை போட்டு கொண்ட பின்னர் ஆஸ்திரியா நாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் அந்நாட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.                        அதுபற்றி அந்நாட்டு அரசு ஆய்வில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அந்நாடு தடை விதித்தது.                            இதனையடுத்து, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் நார்வே உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் இந்த தடுப்பூசியை தடை செய்தன.  ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி போட்டு கொண்ட முதியவர்கள் பலருக்கு ரத்த கட்டு ஏற்பட கூடிய பல சம்பவங்கள் தெரிய வந்துள்ளன என அந்நாடுகள் கவலை தெரிவித்து உள்ளன.

விஜயதரணி : காங்கிரஸை விட்டு விலகப் போவதாக வரும் தகவல் வதந்தி ! ... விஜயதாரணி விவகாரம் சமூகவலை லீக்ஸ்

maalaimalar : விளவங்கோடு தொகுதியை எனக்குக் கொடுக்கக் கூடாது என்று 10 பேர் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். ஆனால், அத்தொகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். அவா்களின் கருத்து என்ன என்பதுதானே முக்கியம். இதை தலைமை அறியாமலா இருக்கும். எனக்கு விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் தலைமை தரும். காங்கிரஸை விட்டு விலகப் போவதாக வரும் தகவல் வதந்திதான் என்றாா்.
May be an image of 1 person and standing

Raj Dev  : காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணியை நிராகரிக்க வேண்டிய காரணங்கள் பல உள்ளன தான். அவற்றில் முதன்மையானவை பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் சேர அவர் முயற்சிகள் மேற்கொண்டார் என்பது.
தமிழிசை சவுந்தரராஜனுடன் முன்பு டி.விக்களில் விவாதிக்க நேர்ந்த காலத்தில் தீவிர பாஜக எதிர்ப்பாளராக அறியப்பட்டவர்,
பின்னர் பாஜகவுடன் அனுசரணை கூடி அதற்கேற்ப தனது சத்தத்தை குறைத்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பணியாற்றாமல் ஒதுங்கி இருந்தார். காங்கிரஸ் கட்சியிலிருக்கும் அவரது ஆதரவாளர் ஒருவரிடம் பேசிய போது ஒரு திட்டத்தில் கூட ஐந்து பைசா அவர் கமிசன் பெற்றாரென்று சொல்ல முடியாது என்கிறார்.

எடப்பாடி : திமுக இத்தனை சீட்டுகள் நிற்கிறார்கள். நாம் மட்டும் எப்படிக் குறைவான இடத்தில் நிற்பது’

பக்குவம் இல்லாதவரா எடப்பாடி?   திகைப்பூட்டும் சம்பவங்கள்!

minnambalam : வெயில் சூட்டோடு வேட்புமனு தாக்கலின் சூடும் கிளம்பி, தமிழக அரசியல் களத்தை அனலாய் தகிக்கவைத்துக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் இருந்துகொண்டே அதிமுக மீது தாக்குதல் நடத்திய தேமுதிக, இப்போது கூட்டணியை விட்டு வெளியேறிய பின் சும்மா இருக்குமா?

“தேமுதிக பக்குவமற்ற அரசியலை நடத்துகிறது” என்று கூறியிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலளித்து நேற்று (மார்ச் 15) தேமுதிக தலைமை அலுவலகத்தில் பேட்டியளித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, “ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை” என்று பதிலளித்துள்ளார்.

ஆமை ஓடும் அதன் மேல் ஒரு பிராடும்!

May be an image of 1 person and text that says 'நாய் டம்ளர் வழங்கும் சைமன் ஆமை ஓடும் அதன் மேல் ஒரு பிராடும் ஒரு டுபாகூரின் டூப்ளிகேட் பயணம்'

Antony Valan
: மீனவ இளைஞர்கள் சீமான்டியிடம் ஏமாற என்ன காரணம்னு பலர் கேட்கிறார்கள்.. மீனவ இளைஞர்கள் பாவம்..அவனுக்கு ஆக்ரோசமா எவனாவது அடிதடியா அடிப்பேன் உடைப்பேன் சிங்கள ராணுவத்தை கடலில் வைத்து கொல்ல துப்பாக்கி தருவேன் தனி ராணுவம் மீனவர் படை அமைப்பேன்னு எவனாவது உணர்ச்சி பொங்க பேசிட்டாலே சில்லறையை சிதர விட்டுருவான்..
கச்சத்தீவை மீட்க ஐம்பதாயிரம் ராணுவ வீரர்களை ஒரே இரவில் அனுப்பி ராசபக்சே குடும்பத்தை கொன்று கச்சத் தீவை மீட்பேன்னு பேசினா அடேய் என்னடா பேசுற என்று கேட்பதற்கு பதிலா நாலு விசிலா சேர்த்து அடிப்பான்...அவனது இயல்பு...
இது மீனவர் இளைஞர்களை தவறாய் சொல்ல அல்ல. அவனது இயல்பே வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு மாதிரியான பேச்சுகள். அடில புடில என்று பேசினால் நம்ம பய பூரா ஆதரவு தான்.