ceylonmirror.net : இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று மாலை 4 மணியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையில் ஈடுபட்டனர்.
வன்முறைகள் மற்றும் சட்டமீறல்களைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொலிஸார் கடமைகளில் ஈடுபட்டதுடன் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதலாவது முடிவை இன்று நள்ளிரவு வெளியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
சனி, 21 செப்டம்பர், 2024
ஜனாதிபதித் தேர்தலில் 80 சதவீத வாக்குப் பதிவு
ஐரோப்பிய Schengen visa விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக ஊடக கணக்குகளை சோதிக்க ஜேர்மன் பொலிசார் திட்டம்
அதிரடி.காம் : விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக ஊடக கணக்குகளை சோதிக்க ஜேர்மன் பொலிசார் திட்டம்
ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, அவர்களுடைய சமூக ஊடகக் கணக்குகளை சோதிக்கும் திட்டத்தை ஜேர்மன் பொலிசார் முன்வைத்துள்ளார்கள்.
காரணம் என்ன?
ஒருவருடைய சமூக ஊடகக் கணக்குகளைப் பார்க்கும்போதே, அவர் ஏதாவது குழுவைச் சேர்ந்தவரா, அவர் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றுள்ளார், அவரது உண்மையான பணி என்ன என்பதுபோன்ற பல உண்மையான விடயங்களைக் கண்டறியலாம் என்கிறார்கள் ஜேர்மன் பொலிசார்.
ஜனாதிபதி தேர்தல் 2024: பிற்பகல் 2 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு
லங்கா ஸ்ரீ : இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024: பிற்பகல் 2 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான மாவட்ட மட்ட வாக்களிப்பு வீதம் இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி பல மாவட்டங்களில் ஏற்கனவே 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதன்படி இன்று (21) பிற்பகல் 2 மணி நிலவரப்படி பல மாவட்டங்களின் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு.
கொழும்பு - 60%
கம்பஹா - 62%
களுத்துறை - 60%
நுவரெலியா - 70%
திருப்பதி லட்டு மாமிச கொழுப்பின் பின்னணியில் ஒன்றிய பாஜக இருக்கிறது?
புகச்சோவ் புகச்சோவ் : திருப்பதி கோயில்ல, உள் நிர்வாகம் செய்யறது கோனேட் ராஜபாளையம் சமஸ்தானத்தோட மன்னர்.
லட்டுக்கான பொருட்களுக்கு டெண்டர் தருவது மற்றும் வியாபாரிகளை தேர்ந்தெடுப்பது ஆந்திர அரசு
மற்றபடி
லட்டுக்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுப்பது
லட்டுக்கான பொருட்களை பக்குவப்படுத்துவது
லட்டுக்கான இயந்திரங்கள் மற்றும் வேலையாட்களை கையாள்வது
லட்டு தயாரிப்பது
லட்டை பேக்கிங் செய்வது மற்றும் விநியோகிப்பது
லட்டின் தரத்தை மெய்ன்டெய்ன் செய்வது என அனைத்தையும் கவனிப்பவர்கள் பிராமணர்கள்தான்.
பூசாரிகளும், லட்டு தயாரிக்கும் பிராமணர்களும் அறியாமல், மாட்டுக்கொழுப்பு திருப்பதிக்குள் நுழைய வாய்ப்பில்லை.
நல்ல சுவைக்காகவும், லட்டு இளுகிவிடாமலிருக்கவும், லட்டு கெட்டியடையவும், லட்டு தயாரிக்கிற பிராமணர்களே மாட்டுக்கொழுப்பை, மீனின் ஒமேகா அமீனோ ஆசிட்டை கலந்துவிட்டு, இப்போது ஜெகன்மோகன் ரெட்டியின்மேல் குற்றச்சாட்டை முழுமையாக சுமத்துகின்றனர்.
வெள்ளி, 20 செப்டம்பர், 2024
சிவகங்கையில் பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை; 5 பேர் கைது:
மானாமதுரை போலீஸார் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணும் 24 வயதுடைய இளைஞரும், இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் மானாமதுரை - தாயமங்கலம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
திருப்பதி லட்டு - மாட்டுக்கொழுப்பு பன்றி கொழுப்பு மீனெண்ணெய் சோயா எண்ணெய் சோதனையில் அதிர்ச்சி
tamil.oneindia.com - Shyamsundar : திருப்பதி: திருப்பதி லட்டு தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்த புகார் தற்போது உண்மையாகி உள்ளது. லட்டுவில் செய்யப்பட்ட சோதனைகள் மாட்டுக் கொழுப்பு தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் முடிவுகளை வெளியிட்டு உள்ளன.
ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதியில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
சிதம்பரம் கோயில் '2000 ஏக்கர்களை சுருட்டிய தில்லை தீட்சிதர்கள்! அறநிலையத்துறை அதிரடி குற்றச்சாட்டு
nakkheeran.in : சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான 3,000 ஏக்கர் நிலத்தில் 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத்துறை நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தது.
அப்பொழுது கோவிலின் ஆண்டு வருமானம் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.. ராகுலுக்கு பறந்த கடிதம்..?
மாலை மலர் : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக பகீர் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்புள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் எழுதி இருக்கிறார்.
டிரம்ப் பரப்புரை செய்யவிருந்த இடத்தில் மீண்டும் கொலை முயற்சி - வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
dinanai : மீண்டும் கொலை முயற்சி: டிரம்ப் பரப்புரை செய்யவிருந்த இடத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரப்புரை செய்யவிருந்த இடத்திற்கு அருகில் இருந்த காரில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டிரம்பும், தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர்.
வியாழன், 19 செப்டம்பர், 2024
சுகாதாரத்துறையில் என்ன நடக்கிறது? என் வேலை நீக்கம் நடந்து 2 மாதம் ஆகிறது
Loganayaki Lona : சுகாதாரத்துறையில் என் வேலை நீக்கம் நடந்து கிட்டத்தட்ட 2 மாதம் ஆகுது.
வேலையில் இருந்தது, வேலை செய்தது,ப்ரச்சனைகளில் குரல் கொடுத்தது ,
விதிமீறல்களை எதிர்த்தது ,
முதல்வர் ,சுகாதாரத்துறை அமைச்சரை விமர்சித்ததாக,கிசுசெக்களை விமர்சித்ததாக இப்படி பணிக்கு சேர்ந்து 2 ஆண்டில் ஓராண்டாக அடுக்கடுக்காக இப்படியெல்லாம்.குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன்.
இறுதியில் பணி நீக்கம் எனும் பழிவாங்கும் நடவடிக்கையை அதிகாரிகள் படிப்படியாக doc தயாரித்து நிரந்தர மருத்துவர்களாக ,நிரந்தர கிசு செக்கள் விருப்பத்தை நிறைவேற்றி அதை பரிசு போல் அவர்கள் குழுக்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
ஒவ்வொரு முறை தனிப்பட்டு தாக்கப்பட்ட போதும் துறையின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கிறேன்.இங்கும் எழுதியிருக்கிறேன்.
முதல்வர் பெட்டிசன் 2 முறை போட்டு ஒரு முறை தீர்வு கிடைத்தது.இன்னொரு முறை அது ஒரு மாதகாலமாக படிக்கப்படவே இல்லை.
டொனால்ட் டிரம்ப் : என் மீதான கொலை முயற்சிக்கு பைடன், கமலா ஹாரிஸ் தான் காரணம்
dinakara : தன் மீதான கொலை முயற்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோரின் பேச்சுக்களே காரணம் என குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியும், தற்போதைய துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் களம் இறங்கி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ட்ரம்ப்பை குறிவைத்து இரண்டாவது முறையாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமைக்கு வேட்டு வைத்த இலங்கை இடதுசாரிகள்!
ceylon indian union leader abdhul aseez |
ராதா மனோகர் : இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமைக்கு வேட்டு வைத்த இடதுசாரிகள்
இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிபோன வரலாற்றில் மீண்டும் மீண்டும் பச்சை பொய்களையே வரலாறாக கட்டமைக்கிறார்கள்!
உண்மை வெளிவந்தால் பலரின் அரசியலும் சித்து விளையாட்டுக்களும் நிரந்தரமாக ஆட்டம் கண்டுவிடும் என்ற ஒற்றை நோக்கத்தில்தான் இந்த இருட்டடிப்பு தொடர்கிறது.
1930 களிலேயே இலங்கையில் இனமுரண்ட்பாடுகள் தோற்றம் பெற்றன.
ஆனால் தற்போது எல்லோரும் கூறுவது போல அந்த முரண்பாடுகள் தமிழ் சிங்களம் என்ற ரீதியில் இருக்கவில்லை.
தென்னிலங்கையில் தோட்ட காணிகளை கைப்பற்றிய காலத்துவவாதிகள் அவற்றில் பணியாற்றுவதற்கு தென்னிந்தியாவில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்த போதே இந்த முரண்பாடுகள் முளைவிட்ட தொடங்கியது.
கொழும்பு துறைமுகத்திலும் கண்டி கொழும்பு காலி போன்ற பெருநகரங்களிலும் சிறு சிறு உள்ளூராட்சி மன்றங்களிலும் துப்பரவு பணியாளர்கள் உட்பட தொண்ணுறுவீதமான வேலைகளுக்கு இந்திய வம்சாவளி மக்களே பெரிதும் பயன்படுத்த பட்டனர்
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறார்.. 11.30 மணிக்கு அறிவிக்க.....
tamil.oneindia.com - By Shyamsundar I : நாளைக்கு எல்லோரும்.. சென்னைக்கு வாங்க.. ஸ்டாலின் அனுப்பிய "அவசர" மெசேஜ்.. உதயநிதிக்கு போகும் பவர்
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை.. செப்டம்பர் 20ம் தேதி துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு அவசர மெசேஜ் ஒன்று முதல்வர் ஸ்டாலின் சார்பாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக போகும் டாப்பிக்தான் தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக். நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக போகிறார்.. 11.30 மணிக்கு அவரை துணை முதல்வராக அறிவிக்க போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தன.
விசிகவின் அரைநிர்வாணப் போராட்டம்: திமுக அரசுக்குத் தொடரும் குடைச்சல்!
minnambalam.com - Kavi : ஆளுங்கட்சியான திமுகவுக்கும், கூட்டணிக் கட்சியான விசிகவுக்கும் இடையில் கடந்த சில வாரங்களாகவே இறுக்கமான போக்கு நிலவி வருகிறது.
அமெரிக்கா சென்று வந்த முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின் இறுக்கம் போய் இணக்கம் தழைத்துவிட்டதாக தலைவர்கள் சொன்னாலும்… ஆங்காங்கே நடக்கும் சம்பவங்கள் அதற்கு முரணாகவே இருக்கின்றன.
உதாரணத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் வடக்கனந்தல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு சுவாமி வீதியுலா வரவேண்டும் என்று வலியுறுத்தி விசிகவும், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தியும் இணைந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
லெபனானில் பேஜர்கள் வெடிப்பு - வாக்கி டாக்கிகள் வெடித்தன- 9 பேர் பலி 300 பேர் காயம்
BBC tamil : லெபனான் முழுவதும் வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 300 பேர் காயமடைந்துள்ளனர் என்று நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே லெபனானில் நூற்றுக்கணக்கான பேஜர்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தநிலையில் பல வாக்கி டாக்கி சாதனங்கள் வெடித்துள்ளன.
தெற்கு லெபனானில் உள்ள சிடோனில் உள்ள ஒரு தொலைபேசி கடையில் இருந்து புகை வெளியேறும் புகைப்படங்கள் வந்துள்ளன.
கடந்த ஒரு மணி நேரத்தில் லெபனானில் மீண்டும் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தாலும், புகைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் - ரணில் விக்கிரமசிங்கா வெற்றி வாகை சூடுகிறார்? 6,800,000 + வாக்குக்ககளை பெக்கூடிய ...
Rajh Selvapathi : கடந்த 2019ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குக்கள்
• கோத்தாபாய ராஜபக்ச 69,24,255
• சஜித் பிரேமதாச 55,64,239
• அநுரகுமார திஸநாயக்க 4,18,553
2020 நாடாளுமன்ற தேர்தலில் இவர்களுடைய கட்சிகள் பெற்ற வாக்குகள்
• பொதுஜன பெரமுன-SLPP 6,853,690
• ஐக்கிய மக்கள் சக்தி-SJB 2,771,980
• தேசிய மக்கள் சக்தி NPP/ JVP 445,958
கவனிக்கப்பட வேண்டிய விடயம்
1. கோத்தாவின் வாக்குகளில் 98% சிங்கள வாக்குகளே, முஸ்லிம்கள் முழுமையாக கோடாவுக்கு வாக்களிக்கவில்லை. இவரின் கிட்டதட்ட 1,200,000 வாக்குகள் தீவிர சிங்கள தேசிய வாக்குகள்.
2. சஜித்தின் வாக்குகளில் கிட்டதட்ட 1,600,000 வாக்குகள் தமிழ் முஸ்லிம் வாக்குகள்.
சஜித்துக்கு வாக்களித்த முஸ்லிகளில் 50% இந்த தடவை அனுரவுக்கு வாக்களித்தால் அனுரவுக்கான நிரந்தர கட்சி வாக்குகளுடன் மேலதிகமாக 400,000 வாக்குகள் கூடலாம்.
கோட்டாவுக்கு வாகளித்த சிங்கள தேசிய வாக்குகள் இம்முறை ரணிலுக்கு கிடைக்க போவதில்லை. அது நிச்சயமாக அநுர மற்றும் நாமலுக்கிடையில் பகிரபடலாம்.
புதன், 18 செப்டம்பர், 2024
பெரியார் பாதையில் பயணிப்போம்” - த.வெ.க தலைவர் விஜய் உறுதி!
nakkheeran.in ;தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று பெரியார் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவையொட்டி பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
2005 புலிகளை உடைத்தமைக்காக ரணிலுக்கு வழங்கப்பட்ட தண்டனை
jaffnamuslim.com : புலிகளை உடைத்தமைக்காக ரணிலுக்கு வழங்கப்பட்ட தண்டனை
புலிகள் இயக்கத்தினை இரண்டாக பிளவுபடுத்தியதற்காக விடுதலைப் புலிகளினால் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனை தான் 2005 ஆம் ஆண்டு தேர்தலை பகிஸ்கரிக்கச் செய்தது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று (17) மாலை மட்டக்களப்பு கல்லடி மீனிசை பூங்காவில் நடைபெற்றது.
கெஜ்ரிவால் ராஜினாமா.. ஆட்சியமைக்க உரிமை கோரிய அதிஷி
மாலை மலர் : டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்தது.
அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்தும் விடுதலை ஆனார்.
கடந்த 15-ந்தேதி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து இருந்தார்.
மக்கள் தீர்ப்பளிக்காமல் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை என்று தெரிவித்த கெஜ்ரிவால், சட்டமன்றத் தேர்தலை வருகிற நவம்பர் மாதமே நடத்த வலியுறுத்தினார்.
செவ்வாய், 17 செப்டம்பர், 2024
திமுக 75-ம் ஆண்டு பவள விழா, முப்பெரும் விழா-லட்சக்கணக்கில் திரளும் தொண்டர்கள்!
tamil.oneindia.com - Mathivanan Maran : சென்னை: திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் பவள விழா மற்றும் திமுக ஆண்டுதோறும் நடத்தும் முப்பெரும் விழா ஆகியவை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் திமுகவின் முப்பெரும் விழா விருதுகள், மூத்த தொண்டர்களுக்கான பண முடிப்புகள் வழங்கப்பட உள்ளன. மேலும் A1 தொழில்நுட்பத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்த்தும் இடம் பெற உள்ளது.
பாடகர் மனோவின் மகன்கள் தொடர்புடைய வழக்கில் திடீர் திருப்பம்!
nakkheeran.in : சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாகரன் (20) மற்றும் மதுரவாயிலைச் சேர்ந்த நிதிஷ் (16) இருவரும் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால் பந்து ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயிற்சி முடிந்து வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள உணவகத்திற்கு உணவு வாங்கச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு நின்ற 5 பேர் கொண்ட கும்பல், கிருபாகரன், நிதிஷ் ஆகிய இரண்டு பேரிடமும் தகராறில் ஈடுபட்டு இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் கிருபாகரனுக்குத் தலையிலும் நிதிஷுக்கு பல இடங்களிலும் அடிப்பட்டுள்ளது.
திங்கள், 16 செப்டம்பர், 2024
ராணிப்பேட்டையில் Jaguar Land Rover உற்பத்தி ஆலை : செப். 28ல் அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர்!
kalaignarseithigal.-Lenin : ராணிப்பேட்டையில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை மற்றும் மெகா காலணி உற்பத்தி பூங்காவிற்கு வரும் செப்டம்பர் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குவதோடு, அதிக தொழிற்சாலைகளுடன் இந்திய அளவில் முன்னணி மாநிலமாகவும் விளங்குகிறது.
நடிகை ரோகிணி டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்கு
மாலை மலர் : மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து தமிழ் திரை உலகில் பாலியல் புகார்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக நடிகை ரோகிணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 6-ந்தேதி அன்று டாக்டர் காந்தராஜ் என்பவர் மீது புகார் அளித்திருந்தார். அதில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள டாக்டர் காந்தராஜ் நடிகைகள் பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
Donald Trump டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி! துப்பாக்கியால் சுட்ட நபர் பிடிபட்டார்
dinamani அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினைகொலை செய்வதற்கு மீண்டும் முயற்சி
இடம்பெற்றதாகதாகவும் அதனை முறியடித்துள்ளதாகவும் எவ்பிஐ தெரிவித்துள்ளது.
புளோரிடாவின் வெஸ்ட்பாம் பீச்சில் கோல்வ் விளையாடுவதற்காக டிரம்பை சென்றவேளை கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.
அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் காணப்படுவதை அவதானித்த இரகசிய சேவை பிரிவினர் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல்! வெற்றி யாருக்கு? ரணில் ,சஜித், அநுர ? தமிழ் மக்களின் வாக்குகளை யார் பெறுவார்?
வீரகேசரி -டி.பி.எஸ். ஜெயராஜ் : இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சி என்று கருதப்படும் இலங்கை தமிழரசு கட்சி 2024 செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ( சமகி ஜன சந்தானய ) தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.
செப்டெம்பர் முதலாம் திகதி வவுனியாவில் கூடிய அதன் ‘ மத்திய செயற்குழு ‘ அதற்கான தீர்மானத்தை எடுத்தது. தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிடும் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரிப்பதில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அவர் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்.
Dehlhi Cm முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” : கெஜ்ரிவால் அறிவிப்பு!
minnambalam.com - christopher சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், டெல்லி முதல்வர் பதவியை அடுத்த 2 நாட்களில் ராஜினாமா செய்வதாக இன்று (செப்டம்பர் 15) அறிவித்துள்ளார்
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ கைது செய்திருந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
அதனையடுத்து திகார் சிறையில் இருந்து வெளிவந்த அவருக்கு ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நாடு – இலங்கை கப்பல் போக்குவரத்தின் ஆயிரம் ஆண்டு வரலாறு
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரை தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கி, நடந்து வருகிறது.
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் விமானத்தின் மூலமே சென்றடைகிறார்கள் என்றாலும், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில், கப்பல் போக்குவரத்திற்கு முக்கியமான இடம் இருந்தது. தமிழக கடற்கரை பகுதிகளான நாகப்பட்டினம், மரக்காணம், பூம்புகார், மாமல்லபுரம் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது.
பேரறிஞர் அண்ணாவை நாம் உலகம் முழுவதும் கொண்டு செல்லவேண்டும்.
ராதா மனோகர் : தமிழக வரலாற்றில் பேரறிஞர் அண்ணா பெற்ற புகழை இதுவரை எவரும் பெறவில்லை!
கலைஞரும் எம்ஜியாரும் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக மோதிக்கொண்ட போதும் அண்ணாவை புகழ்வதில் அவர்களுக்கு இடையே ஒரு போட்டியே இருந்தது என்று கூறினால் மிகையல்ல.
முழுத்தமிழ்நாடும் எந்தவிதமான தயக்கம் இன்றி தமிழ்நாடு அண்ணாநாடுதான் என்று கூறுமளவுக்கு அண்ணா மிகப்பெரிய வரலாற்று ஆளுமையாக அறியப்படுகிறார்!
பேரறிஞர் அண்ணா அப்படி என்னதான் செய்துவிட்டார்?
ஏன் எல்லோரும் அவரை அளவு கணக்கில்லாமல் புகழ்கிறார்கள்?
இதுவரை பேரறிஞர் அண்ணாவின் வரலாறு போதிய அளவு பொதுவெளியில் கூறப்படவில்லைஎன்று கூட ஒரு கருத்து உண்டு.
இன்னும் கூட அண்ணாவின் சாதனைகள் பற்றி புரிதல் பொதுவெளிக்கு இல்லை என்ற சந்தேகம் கூட எனக்கு உண்டாவதுண்டு!
உண்மையில் வரலாற்றை கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால்தான் பேரறிஞர் அண்ணாவின் பேராற்றல் எத்தகையது என்று புரியும்.