சனி, 24 ஆகஸ்ட், 2024
இணையத்தை கலக்கும் ’அழகிய லைலா’ அன்ஷா ஷாகீர்.. இன்ஸ்டாவில் கிளம்பிய எதிர்ப்பும் ஆதரவும்!
உள்ளத்தை அள்ளித் தா படத்தில் வரும் அழகியா லைலா பாடலை கவர் செய்து அவர் பாடிய பாடல், உலக லெவல் ஃபேமஸாக 'சிலர்' அவரை மிகக் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் அவருக்கு ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவிக்க இப்போது இன்ஸ்டாகிராமில் அன்ஷா தான் ஹாட் டாபிக்.
தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்துள்ள நிலையில் செல்போன் தான் எல்லாமே என்று ஆகிவிட்டது.
தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை மூன்று ஆண்டுகளுக்கு விருப்ப பணிமாறுதல்!
nakkheeran.in : சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் காவல்துறை சார்பில் இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா இன்று (23.08.2024) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 158 காவலர்களுக்கு மத்திய அரசு பதக்கங்களும், 301 காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்களையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “காவல்துறையில் முதன்முதலாக மகளிரை இடம்பெறச் செய்தது கலைஞர் தான். இன்று எனக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதை கமாண்டராக ஒரு பெண் அதிகாரி இருந்து எனக்கு மிகவும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.
இலங்கையும் தமிழ்நாடும் ஒரு பலம் வாய்ந்த பொருளாதார மண்டலம்!
Pon Raj : 15 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் போ-ர் நடைபெற்றதற்குப் பல்வேறு காரணிகள் இருந்தாலும் அதன் அடிப்படை, மொழி சார்ந்த ஒரு விதமான இனவாதப் போர் என நாம் அறிவோம்.
அதே இலங்கையில் அதன் தலைவர், இன்று தன் நாட்டு சிங்கள மொழி பேசும் மக்களை, "தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள் என பேச ஆரம்பித்து இருக்கிறார்". இது ஒரு மிகப்பெரும் மாற்றம்.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் நோக்கிச் செல்லும் போது, தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு அங்குள்ள வேலை மற்றும் தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்கிறார் இலங்கையின் தலைவர்.
வியாழன், 22 ஆகஸ்ட், 2024
தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி; நெல்லை வண்ணாரப்பேட்டையில் ரசிகர்கள் ஆரவாரம்!
tamil.samayam.com - மதுமிதா.M : நடிகர் விஜய் அரசியலில் தனது பயணத்தை தொடங்கிய நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார், இன்று கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் உறுதிமொழி வாசிக்க நிர்வாகிகள அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு கட்சி கொடியை அறிமுகம் செய்தார்.
விஜயின் கட்சிக்கொடி அறிமுகம்
இந்த நிகழ்ச்சியில் விஜயின் பெற்றோர் கலந்து கொண்டனர், விஜயின் கட்சிக்கொடி அறிமுகம் செய்யும்பொழுது விஜயின் கண்கள் கலங்கியதாகவும், புஸ்ஸி அழுததாகவும் வீடியோ வெளியாகி உள்ளது. மஞ்சள் சிவப்பு வண்ணத்தில் இரண்டு போர் யானைகள் அணிவகுக்க வாகை மலரும் நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளது.
கலைஞரின் அனைத்து நூல்களும் நாட்டுடைமை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
கலைஞர் செய்திகள் - Lenin : தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 14.42 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விசா தேவையில்லை - இந்தியா அமெரிக்க சீனா கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இன்றி செல்லாம்
இந்தியா அமெரிக்க சீனா கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இன்றி இலங்கைக்கு செல்லாம்
இந்த நடைமுறை ஆக்டொபர் முதலாம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது
Sri Lanka approves visa-free facility for citizens of 35 countries
The Cabinet of Ministers has decided to allow visa-free entry to Sri Lanka for citizens of 35 countries, including the United Kingdom (UK), United States (US), Canada, Germany, Australia, Saudi Arabia, China, India, Russia, South Korea, and Japan.
This new visa-free policy will be in effect from October 01, 2024, and will remain in effect for a period of six months.
List of countries to be offered visa-free access to Sri Lanka:
1. United Kingdom
2. Germany
3. Netherlands
இலங்கை மலையக தொலைகாட்சி விவாதத்தில் ஒருவரை ஒருவர் அடித்து கொண்ட இரு தமிழ் எம்பிக்கள் வேலுகுமார் - பழனி திகாம்பரம்
thinakaran.lk - Prashahini : அரசியல் நிகழ்ச்சியில் சண்டையிட்ட திகாம்பரம் – வேலு குமார்
- வாக்குவாதம் முற்றியதில் ஒருவரை ஒருவர் கழுத்தைப் பிடித்துக் கொண்டனர்
தமிழ் முற்போக்கு கூட்டணியில் அரசியல் செய்து பின்னர் பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோர் தனியார் தொலைக்காட்சி விவாத இடைநடுவில் கைகலப்பில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியின் இடையே பழனி திகாம்பரம் வேலுகுமாரைப் பார்த்து ‘பாbர் குமார்’ எனக் கூறிக் கொண்டே செல்ல, வேலுகுமார் திகாம்பரத்தினை பார்த்து குடு திகாம்பரம் எனக் கூற, கோபம் உச்சத்தில் திகாம்பரம் வேலுகுமாரை தாக்கி கழுத்தினை நெரிக்கும் விதமாக நடந்து கொண்டிருந்ததை நேரலையூடாக காணக்கூடியதாக இருந்தது.
இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிக்கு ரூ.75 லட்சம் பணம் கொடுத்தாரா?
tamil.asianetnews.com - Velmurugan s : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மொட்டை கிருஷ்ணனுக்கு ரூ.75 லட்சம்பணம் கொடுத்தேன் என்று குற்றம் சாட்டுவது அடிப்படை ஆதாரம் அற்றது என இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா விளக்கம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்த ஆம்ஸ்ட்ராங்க் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி அவரது வீட்டருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இவரது கொலை தொடர்பாக தற்போது வரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரௌடி சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் வெளிநாடு தப்பி சென்றுள்ளார்.
புதன், 21 ஆகஸ்ட், 2024
முகநூலில் முகமூடிகள் -Bunker syndrome பங்கர் சின்ரோம் உள்ளவர்கள்
ராதா மனோகர் முகநூலில் முகப்புக்களை மூடி வைத்துக்கொண்டு அழைப்பு அனுப்புவது என்பது ஒருவகை பங்கர் மனோநிலை சின்ரோம் உள்ளவர்கள் என்ற ஐயம் எனக்குண்டு
இருந்தாலும் அந்தந்த நேரத்து மூட் அடிப்படையில் சிலவேளைகளில் அவற்றை சேர்ப்பதுவும் உண்டு.
தங்கள் அடையாளங்களை பொதுவெளியில் மறைத்து கொண்டு பிறர் விடயங்களை சுதந்திரமாக ஆய்வு செய்யும் பலர் மிக மோசமான சயனைட் வியாதியால் பாதிப்புற்றவர்கள் என்ற அனுதாபம் கூட அவர்கள் மீது உண்டு
அதிலும் இப்படியாக சுய அடையாளங்களை மறைத்து கொண்டு உலா வருவோர் பெரும்பாலும் பிரேமதாசா வீட்டில் பலகாலமாக உற்ற நண்பனாக பணியாளராக நடித்துக்கொண்டே அவரை கொன்றவர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்கள்தான்.
இப்படிப்பட்டவர்களுக்கு பொழுது இன்னும் புலரவில்லை
தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருந்து கொண்டு பிறரின் விடயங்களை எல்லாம் அறிந்திருக்கிறோம் என்ற கனவில் இன்னும் அதே பாணி சிந்தனையை விட்டு கொஞ்சம் கூட பரிணாம வளர்ச்சி அடையாதவர்கள் அந்த சிந்தனை எவ்வளவு தோல்வியை தந்தாலும் பாடங்களை படிப்பதாக இல்லை
காத்திருந்து கருவறுத்த பகை? மிரளவைக்கும் மலர்கொடியின் பின்னணி - ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திடீர் திருப்பம்
nakkheeran.in : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி இரவு, பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே ரவுடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படார்.
இது தொடர்பாக எட்டு பேர் அன்றிரவே போலீசாரிடம் சரணடைந்தனர்.
இதையடுத்து, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மூன்று பேரை கூடுதலாக போலீசார் கைது செய்தனர்.
அதன்படி, ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
கெட்டுப்போன பிரியாணி சாப்பிட்ட மூன்று மாணவர்கள் உயிரிழப்பு /
மாலை மலர் : ஆந்திராவில் கெட்டுப்போன பிரியாணி மற்றும் சமோசா சாப்பிட்ட 3 பழங்குடியின மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அனகாபள்ளி மாவட்டம் கொடவரோட்லா மண்டல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பின் விடுதிகளை சேர்ந்த மாணவர்கள் அங்கு வழங்கப்பட்ட சமோசா மற்றும் பிரியாணியை சாப்பிட்டனர்.
விடுதிகளில் சமோசா, பிரியாணி சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 30-க்கு் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாகபட்டினம் – காங்கேசன் கப்பல் சேவை வாரத்திற்கு 3 நாட்கள்!
தமிழ் மிரர் : நாகப்பட்டினம்: இந்தியா-இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 14-ந்தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.
ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக அதே மாதம் 23-ந்தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் ‘சிவகங்கை’ என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டு, ஆகஸ்ட் 16 ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
ஆரியமயம் - தமிழகத்தில் பல்லவர் காலத்தில் தொடங்கி சோழர்கள் காலத்தில் உச்சம் பெற்று , நாயக்கர்கள் காலத்தில் முற்று முழுதானது
பிரஜாபதி ; தமிழகம் பார்ப்பன மயம் ஆனது பல்லவர் காலத்தில் தொடங்கியது, சோழர்கள் காலத்தில் உச்சம் பெற்றது, நாயக்கர்கள் காலத்தில் முழுதும் பார்ப்பன மயம் ஆக்கப்பட்டுவிட்டது.
முதலில் தமிழில் பாடப்பட்டு வந்த தேவாரம் திருவாசகம் போன்ற சைவம் ஓரம் கட்டப்பட்டு - இராமாயணமும், மகாபாரதமும் மக்களிடம் பரப்பப்பட்டது.
கல்வி அறிவு மறுக்கப்பட்டதால் கூத்துகள், கதாகாலட்சேபம் (சொற்பொழிவு) மூலம் விடிய விடிய போதிக்கப்பட்டு நமது மூளையில் திணிக்கப்பட்டது!
இந்த பணிக்காகத்தான் வடக்கிலிருந்த ஆரியர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.
பரப்புரைக்கு கூலியாக:
இறையீலி மங்களங்கள் என்ற பெயரில் நமது நிலங்கள் பிடுங்கப்பட்டு பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டது.
புராணங்கள், இதிகாசங்கள் வாயிலாக மனுதர்மமும், வர்ணாசிரம பேதமும் நம்மை ஆட்கொண்டது, நமது கடவுள்களை வைத்தே நம்மை அடிமைப்படுத்தும் கதைகள் மூலமாக ஆழமாக வேரூண்றியது பார்ப்பனீயம்.
செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024
14 இடங்களில் காயம்... உயிரிழந்த கோல்கட்டா பெண் டாக்டரின் பிரேத பரிசோதனையில் தகவல்
தினமலர் : நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இளம்பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து, தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி டாக்டர்கள் சங்கத்தினர் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரேதப்பரிசோதனை அறிக்கை
இந்த நிலையில், இளம்பெண் டாக்டரின் பிரேத பரிசோதனை வெளியாகியுள்ளது. அதில், தலை, கழுத்து, முகம், கைகள் மற்றும் பிறப்புறுப்பு என 14 இடங்களில் காயங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், கழுத்தை நெரித்து கொலை செய்து இருப்பதாகவும், கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள், 19 ஆகஸ்ட், 2024
திமுக விழாவுக்கு ராஜ்நாத்தை மோடி அனுப்பிய பின்னணி!
மின்னம்பலம் christopher : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா நேற்று ஆகஸ்ட் 18ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் விமரிசையாக நடைபெற்று முடிந்தது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் 100 ரூபாய் நாணயத்தை முகம் மலர வெளியிட்டதுடன்,
‘தேசிய அரசியலை தீர்மானித்தவர், வேற்றுமையில் ஒற்றுமையை போற்றியவர், கூட்டாட்சி தத்துவத்திற்காக பாடுபட்டவர்’ என புகழாரம் சூட்டினார்.
தமிழகத்தில் புதிய நகரம் உருவாக்கும் ரத்தன் டாடா / Ratan Tata Building A New City In Tamil Nadu
மாலை மலர் : இந்தியாவின் பிரபலமான தொழில் நகரம் ஜாம்ஷெட்பூர். டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்ட இந்த நகரில் ஸ்டீல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே சிறப்பாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தொழில் நகரமாக ஜாம்ஷெட்பூர் விளங்கி வருகிறது.
இந்த வரிசையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நகரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஆலைகள், உற்பத்தி கூடங்கள் ஓசூரில் இயங்கி வருகின்றன. 2020 ஆம் ஆண்டு டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது ஆலையை ஓசூரில் கட்டமைத்தது. இந்த ஆலை நாட்டின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி செய்யும் ஆலையாக மாற இருக்கிறது.
ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024
மக்கள் முதலில் Taxpayers .. அதற்கப்புறம்தான் தமிழர் சிங்களவர் எல்லாம்....
ராதா மனோகர் : மக்கள் என்பவர்கள் முதலில் Taxpayers
அரசாங்கத்தின் வருமானம் என்பது மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசுக்கு செலுத்தும் வரிப்பணம்தான்.
மக்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் மறைமுக வரிகள் செலுத்துகிறார்கள்
நேரடி வரி என்பது வருமான வரி போன்றவையாகும்
உண்மையான அரசியல் என்பதே வரி செலுத்தும் மக்களின் நலன்களை எப்படி அரசியல்வாதிகள் கையாளுகிறார்கள் என்பதுதான்
உங்களின் பணத்தை நிர்வகிக்கும் உரிமையை தேர்தல்களின் போது அரசியல்வாதிகளுக்கு நீங்கள்தான் வழங்குகிறீர்கள்.
தேர்தல்களின் போதும் அரசியல் பொது வெளியிலும் எப்போதும் மக்கள் தங்களை ஒரு வரி செலுத்துவோர்களாகவே Taxpayers கருத வேண்டும்.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு!
நக்கீரன் : தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில்
அவரது உருவம் பொறித்த நூறு ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்திருந்தது.
இதனையடுத்து கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடும் விழா கலைவானர் அரங்கில் இன்று (18.08.2024) மாலை நடைபெற்றது.
மல்லிகார்ஜுன கார்கே : தமிழ்நாட்டுக்கு சென்று இந்தியில் கேள்வி கேட்க முடியுமா? - Can you go to Tamil Nadu and ask questions in Hindi? - Kharge
மாலை மலர் : பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் (MUDA) முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது.
சித்தராமையா மனைவிக்கு மனை ஒதுக்கியதில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் குற்றம் சாட்டி வருகின்றன.
முடா முறைகேடு வழக்கில் கர்நாடக மாநில முதல் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
நெல்லை கண்ணன் காமராஜரை புகழ்வதை போல கலைஞரை மறைமுகமாக தாக்குவார்.
ராஜா ஜி : கர்மவீரர் காமராஜரைப் பற்றி தொடர்ந்து மேடையில் பேசிவந்த ஒரே ஆளுமை நம்ம தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மட்டுமே!
10 வருடங்கள் முன்பு முகநூலில் அவற்றைக் கண்டதும் திடுக்கிட்டேன்...
எனக்கு நன்றாகத் தெரியும் காமராஜரைப் பற்றி நெல்லை கண்ணன் மட்டுமே மேடைகளில் தொடர்ந்து பேசி வந்தவர்..
கையில் மைக் கிடைக்கும் போதெல்லாம் காமராஜரைப் புகழ்வார்..
நெல்லை கண்ணனுக்கு அவ்வளவு ஆர்வம் என்று நமக்குத் தோனும்..
அரசியல் தொடர்பற்ற இலக்கிய மேடைகளில், கூட்டங்களில் என்று கிடைக்கும் இடங்களில் எல்லாம் காமராஜரைப் பேசுவார்..
இதில் முக்கியமான ஒன்று..
ஒவ்வொரு பாராட்டுக்குப் பின்பும் கலைஞரை மறைமுகமாக குற்றம் சாட்டுவார்.. காமராஜரைப் புகழ்ந்தது கலைஞரை இகழத்தானோ என்று தோன்றும்.. ஆனால் திமுகவினர் கூட அதை ரசித்துக் கேட்பார்கள்..
வலைத்தளங்களின் ஆதிக்கமும் வாட்சப்பும் வந்த பின்பு சங்கிகள், பாஜகவினர், நாம் தமிழர் போன்றோர் நம்முடைய நெல்லைக் கண்ணன் ஆங்காங்கே தூவிய காமராஜரின் புகழ்ப் பாடலை..
முழு ரைட்டப்பாக எழுதி வந்தார்கள்..
மறுபிறவி எடுத்து வந்த டயானா?
Tamil Onindia : இளவரசி டயானா குறித்த சர்வதேச அளவிலான விவாதம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.. யாரிந்த டேவிட்? யாரிந்த பில்லி? இந்த குழந்தை சொல்வதெல்லாம் உண்மைதானா? என்ற ஆச்சரியமும், குழப்பம் உலகளவில் வெடித்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் டேவிட் காம்பெல். இவர் அங்குள்ள ஒரு பிரபல சேனலில், தொகுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பெயர் பில்லி காம்பெல்.
இங்கிலாந்து இளவரசி டயானா, தற்போது மறுபிறவி எடுத்து, தன்னுடைய மகனாக பிறந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் டேவிட்.. இதுகுறித்து டேவிட் சொன்னதாவது: