சனி, 27 மே, 2017

யாகங்களில் அவிர்பாகம் என்ற பெயரில் சுவையான மாட்டிறைச்சியை பெற்றுக்கொண்ட பார்ப்பனர்கள்

meena.somu. இந்து மதம் பினாத்தும் எல்லா விஷயத்தையும் செயல்படுத்தினால், வேதத்தில் சொன்ன சுவையான மாட்டிறைச்சியை, மற்றவர்களை ஏமாற்றி அவிர்பாகம் என்ற பெயரில் அதிகமாக லவட்டிக் கொண்ட பார்ப்பனர்களை இழிவு படுத்தலாமா ?
மரக்கறி உண்டதெல்லாம் பின்னாளில் மற்ற மதங்களை காப்பியடித்து தானே ? அப்ப என்ன வெங்காயத்துக்கு பசுவை யாகத்தில் போட்டு அவித்து sorry சுட்டு திண்ணீங்க ?
எத ஃபாலோ செய்றிங்க ? உங்க இந்து மதத்தில் சொன்ன விசயத்தில், எது சரி அது தவறு என்று முதல்ல முடிவு பண்ணுங்க காவி பாய்ஸ். மொத்தமும் புழுகு மூட்டையும் அபத்தமாக விளக்கங்கள் என்ற பெயரில் ஏமாற்றும் சங்கதிகளும் இருக்கு.
இந்து மதம் எங்கு ஆரம்பிக்கிறது, வேத காலம் எனில் அப்போது மாட்டிறைச்சியை பிடுங்கி திண்ணீர்கள்.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ? எது இந்து மதம் ? அப்பப்போ புளுகறதையெல்லாம் உங்க இஷ்டத்துக்கு சட்டம் என்று போட, இது இந்திய மக்களாட்சியா ? இல்லை உன் வீட்டு அடுப்பங்கரையா ? தேச பக்தாள்... பதில் சொல்லுங்க.

ஏன் இந்தியாவில் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை?’ நேருவுக்கு நன்றி சொல்லுங்கள்!

நேருவிகடன் :இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி திம்மய்யாவைக் காண நேரு வந்திருந்தார். அவருடைய வீட்டில் மேஜைக்குப் பின்னால், ஓர் இரும்பு பீரோ இருப்பதை நேரு கண்டார். “அதில், என்ன இருக்கிறது” என்று ஆவலாகக் கேட்டார்.
''மேல் அறையில் தேசத்தின் பாதுகாப்புத் திட்டங்கள்'' இருப்பதாகச் சொன்னார் திம்மய்யா. இரண்டாவது அறையில், “நாட்டின் உயர் பொறுப்பில் உள்ள தளபதிகள் குறித்த ரகசிய கோப்புகள்'' இருப்பதாக விளக்கினார் திம்மய்யா.
''மூன்றாவது அறையில் என்ன இருக்கிறது'' என்று நேரு ஆவலோடு கேட்டார்.
நேருவை நோக்கி எந்தச் சலனமும் இல்லாமல், தலைமைத் தளபதி, “அதில் உங்களுக்கு எதிராக ராணுவப் புரட்சியை நடத்துவதற்கான ரகசிய திட்டங்கள் இருக்கின்றன” என்றார்.
நேரு புன்னகைத்தார். ஆனால், அந்தப் புன்னகையில் அனேகமாக ஒரு பதற்றம் கலந்து வெளிப்பட்டிருக்கும்.
காலனிய ஆட்சியில் இருந்து விடுதலைபெற்ற பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் ராணுவ சர்வாதிகார ஆட்சிகள் ஏற்பட்டன.

நீட் தேர்வு : ஏழைகளுக்கு எதிரான புதிய மனுநீதி !

உச்சநீதி மன்றத்தின் கட்டப் பஞ்சாயத்து மூலம் திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வு, மருத்துவக் கல்வியைப் பணக்கார வீட்டு வாரிசுகளின் தனிச் சொத்தாக்கிவிட்டது. நாயைக் கொல்வதென்றாலும் சட்டப்படிதான் கொல்வாம் என ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்கள் தமது நேர்மைக்குத் தாமே சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டது போல, நீட் தேர்வை நியாயப்படுத்த தரம், தகுதி, தனியார் கட்டணக் கொள்ளையைத் தடுப்பது என வாதங்கள் அடுக்கப்படுகின்றன. நீட் தேர்வுக்கு வக்காலத்து வாங்கும் மோடி அரசு, இந்திய மருத்துவ கவுன்சில், உச்ச மற்றும் உயர்நீதி மன்றங்கள் ஆகியவை எல்லாம் தாம் ஏதோ வானத்திலிருந்து குதித்த அப்பழுக்கற்றவர்கள் போலவும், நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் தரம், தகுதிக்கு எதிரான ஊழல் பேர்வழிகள் போன்றும் ஒரு சித்திரத்தைக் கட்டமைக்கின்றன. ம.பி. பா.ஜ.க. முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் (இடது)ஆட்சியில்தான் வியாபம் ஊழல் அதன் உச்சத்தைத் தொட்டது. தரமற்ற, மோசடியான தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி, கோடிக்கணக்கில் ஊழல் பணத்தோடு சி.பி.ஐ.யால் பிடிக்கப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேதான் தேசாய். (கோப்புப் படம்) இந்தியாவிலேயே, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய முறைகேடு வியாபம் ஊழல்தான். மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த இந்த ஊழலின் சூத்திரதாரிகள் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். யோக்கியசிகாமணிகள். அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அவரது மனைவி என இந்த ஊழலில் கைநனைத்த பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் பட்டியல் நீளமானது.

மோடி – அதானியை அம்பலப்படுத்தும் ஆஸ்திரேலிய விவசாயி


இந்தியாவோ, ஆஸ்திரேலியாவோ, முதலாளிகள் எங்கும் உள்ளூர் மக்களை அழிக்கிறார்கள்!” – அதானிக்கு எதிராக ஒரு ஆஸ்திரேலிய விவசாயியின் எதிர்ப்புக் குரல்
வளர்ச்சியின்’ நாயகன் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு மேற்கொண்ட தமது முதல் பயணத்தின்போது, இந்தியப் பெருமுதலாளிகளில் ஒருவரும், தன்னைப் பிரதமராக்கியவருமான கவுதம் அதானியை உடன் அழைத்துச் சென்றார். சரியாகச் சொல்வதென்றால், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள கலீலி பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் உலகின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்களில் ஒன்றான சார்மிக்கேல் சுரங்கத்தைப் பேரம் பேசி முடித்துக் கொடுப்பதுதான் அப்பயணத்தின் பிரதான நோக்கம்.
அந்தச் சுரங்கத்தின் நிலக்கரி தரம் குறைந்தது என்றும், அதனை எரிப்பதால் கடுமையான சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும், சர்வதேசத் தரத்திற்கு உகந்ததல்ல என்பதனால் விற்பனை செய்ய முடியாது என்றும் கூறி, அதானியின் இத்திட்டதிற்கு கடன் கொடுக்க எந்தத் தனியார் வங்கியும் முன்வரவில்லை. அதைவிட முக்கிய காரணம், அதானி குழுமம்  ஏற்கெனவே பல்வேறு வங்கிகளில் சுமார் 72,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கிறது.

நரகம் எப்படி இருக்கும்? நெருப்பு மேடு மக்கள் தண்ணீர் இல்லாமேலே துணி துவைக்கும் அவலம்

நரகமுன்னு சினிமாவுல பார்த்திருக்கோம்; கதைகைள்ல கேட்டிருக்கோம். அது எப்படி இருக்குமுன்னு இப்பத்தான் அனுபவிச்சிகிட்டிருக்கோம். சென்னையில இந்த தண்ணிக்கு நாங்க படுறபாடு இருக்கே, நரக வேதன சார்.
சொர்க்கம் – நரகமுன்னு சினிமாவுல பார்த்திருக்கோம்; கதைகைள்ல கேட்டிருக்கோம். அது எப்படி இருக்குமுன்னு இப்பத்தான் அனுபவிச்சிகிட்டிருக்கோம். சென்னையில இந்த தண்ணிக்கு நாங்க படுறபாடு இருக்கே, நரக வேதன சார்” – என்றார் 75 வயது மதிக்கத்தக்க பெரியவர்.
சென்னை – சைதாப்பேட்டை ஐந்துவிளக்குப் பகுதியில் அடையாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ள எளிய மக்கள் வாழும் நெருக்கமான குடியிருப்புப் பகுதி நெருப்புமேடு. மாலை 5 மணி இருக்கும். பத்து பதினைந்து குழந்தைகள் கும்பல் கும்பலாகச் சேர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அரைத் துணியோடும் அம்மனக்குண்டியோடும் ஓடித்திரியும் அந்த அழகைப் பார்க்கும்போது பலருக்கும் சொந்த கிராமத்தை நினைவூட்டுவது உறுதி.

வயதான ஒரு பெரியம்மா வாசலில் உட்கார்ந்து துணி துவைத்துக்கொண்டிருக்கிறார். இரண்டு பக்கெட்டில் பாதியளவு தண்ணீர். அதுவும் கண்ணங்கரேலென நிறத்தில். சுற்றிலும் அழுக்கு துணி மூட்டை சிதறிக் கிடக்கிறது. அவரது எண்ணமும் எங்கெங்கோ ஓடிக்கொண்டிருந்த்து போலும்! “என்னம்மா இது… தண்ணியே இல்லாம துணி தொவைச்சிகிட்டிருக்கீங்க?” – என்றதும் திடுக்கிட்டு திரும்பினார்.

நிதானத்துடன் “என்னப்பா செய்யிறது? வீட்டுக்கார்ரு செத்து நாளாச்சு. ஒரே ஒரு பொண்ணு. அத கட்டிக் கொடுத்தாச்சு.

பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரன் எடப்பாடி அணிக்கு தாவுகிறார் ... ஏராளமான கிரிமினல் குற்ற விசாரணைகள் காரணம்?

அணிமாறத் தயாராகும் ஓபிஎஸ் மகன்!
அதிமுக இரு அணிகளாகப் பிளவுபட்டு, ஓ.பி.எஸ். தலைமையிலும், சசிகலா தலைமையிலும் செயல்படத் துவங்கியது கடந்த மூன்றுமாதமாக. இரு அணியாகப் பிரிந்து செயல்படத் துவங்கியதால் தக்க நேரம் பார்த்திருந்த பாஜக, தேர்தல் ஆணையம் மூலமாக அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்கம் செய்தது. ஆனால், தற்போதைய சூழ்நிலை மாறியதால் ஓ.பி.எஸ். அணியினரில் பெரும்பாலோர் அமைதியானார்கள் கடந்த சில வாரங்களாக.
இந்நிலையில் மணல் குவாரியை எப்படியாவது எடுத்துவிடலாம் என்று கனவில் இருந்துள்ளார் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரன். அப்பா அணியின் பலம் நாளுக்கு நாள் குறைந்து வருவதோடு, டெல்லி செல்வாக்கும் குறைந்து வருவதாலும், எப்படியாவது இ.பி.எஸ். அணியுடன் சேர்ந்துடவேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகிறாராம். ஓ.பி.எஸ்.-சை நம்பி வந்தவர்கள் நிலையைப் பாருங்கள் என்றால், நமக்குக் கட்சிதான் முக்கியம், கட்சியைக் காப்பாற்ற வேண்டும், ஒத்துவராதவர்களைக் கட்சியை விட்டு நீக்கவேண்டியதுதான் என்று நம்பியவர்களைக் கழட்டிவிட்டு இணையத் துடிக்கிறார் ஓ.பி.எஸ். மகன் என்கிறார்கள் ஓ.பி.எஸ். அதிருப்தியாளர்கள். மின்னம்பலம்

இலங்கை பாராளுமன்ற கட்டிடத்தை தண்ணீர் சூழ்ந்தது

கொழும்பு : இலங்கையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இலங்கை பார்லி.,யை தண்ணீர் சூழ்ந்தது. இதனை காக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக இலங்கையில் மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 200 க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகினர். தாய்நாட்டுக்கு பிரார்த்தனை செய்யுங்கள்: மழை காரணமாக இலங்கை பயங்கர சேதத்தை சந்தித்துள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் வீரர் தினேஷ் சண்டிமால், அவரது டுவிட்டரில்; மிக மோசமான செய்தி இலங்கைக்கு வந்துள்ளது. நாட்டு மக்கள் காத்திட நான் பிரார்த்திக்கிறேன். எனது தாய் நாடு ஸ்ரீலங்காவிற்காக நண்பர்களே பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மீண்டும் மழைக்கு வாய்ப்பு இந்நிலையில் வரும் 48 மணி நேரத்தில் இலங்கைக்கு மீண்டும் பெரும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.தினமலர்

ரஜினி கட்சி ஜூலையில் ஆரம்பம் .. அண்ணன் சத்தியநாராயணா கேக்வார்ட் அறிவிப்பு

சென்னை: புதிய கட்சி குறித்த அறிவிப்பை ஜூலை மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று அவரது சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனை அவர் கூறியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளதாக சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார். அரசியலில் ஈடுபடுவது குறித்து முதற்கட்ட ஆலோசனையை ரஜினி முடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் ரஜினி இணைவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த சத்திநாராயணா, ரஜினி அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தான் தொடங்குவார் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அரசியலில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே ரஜினியின் நோக்கம், கொள்கை என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே ரஜினியின் அரசியல், தமிழகத்தில் புதிய அத்தியாயமாக இருக்கும் என்று சத்தியநாராயண ராவ் கூறியுள்ளார்.( ரஜினிகாந்த் கைது ஒரு பழைய   flaschback  அரசியலுக்கு  வரவிருக்கும்  ஆளுமையின் ஹிஸ்டரி  கொஞ்சம் தெரிவது அவசியம்) 

தனியார் பாலில் கலப்படம் இல்லை என நிரூபித்தால் பதவி விலக தயார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர்:
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார். தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாகவும், இதனால் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்து தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது குற்றச்சாட்டை தனியார் பால் நிறுவனங்கள் மறுத்தன. ஆனால் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது கருத்தில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் அவர் சிவகாசியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் தனியார் நிறுவன பாலில் 100 சதவீதம் கலப்படம் இருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. பால் கெடாமல் இருக்க வேதிபொருட்களை கலந்திருப்பது அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் தெரிய வந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு, ஓசூரில் உள்ள ஆய்வகங்களில் தனியார் நிறுவனங்களின் பால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வெளிமாநிலத்தவரும் தமிழகத்திற்கு வந்து பால் நிறுவனங்களை தொடங்குகின்றனர். நான் பதவி ஏற்று 6 மாதம் தான் ஆகிறது.

ஜெயலலிதா - சசிகலா தோழிகளின் பினாமி நிறுவங்கள் பற்றிய முழு விபரம் !இந்து பத்திரிக்கை

Shankar.K:ஜெயலலிதா மற்றும் சசிகலா தொடங்கிய பினாமி நிறுவனங்கள் குறித்து இன்று இந்து விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளது. இந்த பினாமி நிறுவனங்கள் குறித்து நவம்பர் 2014 முதல் சவுக்கு தளத்தில் தொடர் கட்டுரைகள் வெளி வந்தன. ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தில் சசிகலா இயக்குநர் என்பதையும், அது எப்படி சத்யம் நிறுவனத்திடமிருந்து மிரட்டி வாங்கப்பட்டது என்பதையும் முதன் முதலில் அம்பலப்படுத்தியது நாம்தான் .
V.K. Sasikala.  

These shell companies have fake addresses, no business activity and large transactions

In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two.
A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman.
The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier Hot Wheels Engineering), which raised eyebrows for the manner in which it acquired a Chennai cinema multiplex in 2015.
Almost all these companies have an auditor called K. Soundarvelan, who is registered as having an office in flat no. 16 of Gyan Apartments. The residents of this flat refused to speak to this reporter, but others — neighbours, for instance — swear there is no one by that name who lives in the apartment block.  இந்து பத்திரிக்கை மிக கவனமாக இந்த கட்டுரையில் ஜெயலலிதாவின் பெயரை கூடுமானவரை தவிர்த்து இருக்கிறார்கள் .அவ்வளவு அய்யங்கார் பாசம். ஜெயாவின் அத்தனை தில்லுமுல்லுகளையும் சசிகலா குடும்பத்தின் மீதே போட்டு ஜெயாவை புனிதராக காட்டும் அரசியல் ஊடக விபச்சாரத்தையும் கடை விரித்துள்ளது

பாகிஸ்தான் ஒரு மரண கிணறு .. கட்டாய திருமணத்தில் இருந்து தப்பி வந்த பெண் ..

_96215528_b7f480c6-9576-46e7-b19a-155ac606ae7b  பாகிஸ்தான் ஒரு மரணக்கிணறு, அங்கு செல்வது ஆபத்து!!: துப்பாக்கி முனையில் வலுக்கட்டாயமாக திருமணம்  செய்யப்பட்ட உஜ்மா 96215528 b7f480c6 9576 46e7 b19a 155ac606ae7bபாகிஸ்தான் ஒரு மரணக்கிணறு, அங்கு செல்வது
ஆபத்து!!: துப்பாக்கி முனையில் வலுக்கட்டாயமாக திருமணம் செய்யப்பட்ட உஜ்மா “பாகிஸ்தான் ஒரு மரணக்கிணறு, அங்கு செல்வது எளிது, திரும்புவது கடினம். இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய பெண்கள் பாகிஸ்தான் சிறப்பான நாடு என்று நினைக்கிறார்கள், ஆனால் “பட்டு உணர்ந்த” நான் சொல்கிறேன், அங்கு ஆண்களுக்கே பாதுகாப்பில்லை, பெண்களின் நிலை மிகவும் மோசம்” என்று சொல்கிறார் உஜ்மா. இந்தியரான உஜ்மா, பாகிஸ்தான் சென்றிருந்தபோது, அங்கு பாகிஸ்தான் குடிமகனான தாஹிர் அலியுடன் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு திருமணம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார். அங்கு, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறும் உஜ்மா, இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.< தூதரகத்தில் அடைக்கலம் புகுந்த உஜ்மாவுக்கு உதவியாக சட்டரீதியான போராட்டம் நடத்தி அவரை தாயகத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளனர் இந்திய தூதரக அதிகாரிகள்.

எடப்பாடி வாயை திறந்தா ஆட்சி பறிபோகும் .... பாஜக கையில் கத்தியுடன் ?

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டு நூறு நாட்களை கடந்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி பூரித்துப்போய் இருக்கிறார். அத்தோடு முதல்வரை எம்எல்ஏக்கள் சந்திக்கும் நிகழ்ச்சியும் இடைவிடாது பெய்யும் மழையை போல நடந்து வருகிறது. அதில் தொகுதி வளர்ச்சி பற்றி பேசப்படுகிறதோ இல்லையோ தங்களது வளர்ச்சி பற்றி தவறாமல் பேசுகிறார்களாம். இதேபோல பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல், ஆண்டிப்பட்டி தங்க தமிழ்செல்வன் ஆகியோர் முதல்வரை சந்தித்து நன்றி மறவாமை குறித்து முதல்வருக்கு பாடம் எடுத்தார்களாம். அதில் வெற்றிவேலும்,தங்க தமிழ்செல்வனும் டிடிவி தினகரனிடம் எம்எல்ஏக்களாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று இந்த நன்றி மறவாத எம்எல்ஏக்கள் இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், நீங்க உட்கார்ந்து இருக்கற பதவி சின்னம்மா கொடுத்தது. அம்மா இருந்த காலத்திலேயே உங்களை முதல்வர் பதவிக்கு கொண்டு வர முயற்சி செஞ்சவங்க சின்னம்மா.

பாஜக திமுகவை உடைக்க - பிரிக்க -தந்திரங்களை ஆரம்பித்துவிட்டது ...

தமிழகத்தில் காலூன்றுவதற்காக எந்த எல்லை வரை வேண்டுமானாலும் செல்ல பாஜக தயாராக உள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலா சிறை, ஓபிஎஸ் தனி அணி என பல சோதனைகளைச் சந்தித்த அதிமுகவை செயலிழக்கச் செய்து தன் வழிக்கு கொண்டு வரும் அரசியலை மிகச் சிறப்பாக செய்து வருகிறது பாஜக. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மத்திய பாஜக அரசின் வியூகம்தான், ஐடி ரெய்டு. அமைச்சர் விஜயபாஸ்கர், சிட்லபாக்கம் ராஜேந்திரன் என அதிமுக நிர்வாகிகள், அரசுப் பணியில் நியமிக்கப்பட்டவர்கள் என வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதுமட்டுமால்லாமல் தினகரனின் கைது அமைச்சர்களை நிலைகுலைய செய்தது. வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையைக் கண்டு மிரண்ட மற்ற அமைச்சர்களும் நிர்வாகிகளும் அடுத்த ரெய்டு யாருக்கு என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர். அந்த தருணத்திலேயே மத்திய பாஜக அரசிற்கு கட்டுப்பட்டு செல்லலாம் என முடிவெடுத்தவர்களாக செயல்பட்டு வருகின்றனர். நினைத்தபடி அதிமுகவை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்ட நிறைவோடு “பிராஜக்ட் திமுக”வை தொடங்கிவிட்டதாம் பாஜக.

தமிழக சட்டப் பேரவையில் ஜெயலலிதா படத்தை திறக்க எதிர்ப்பு

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோதி திறந்து வைக்க தமிழக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தனது டெல்லி பயணத்தின் போது ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்து வைக்க வருமாறு பிரதமருக்கு, முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார்.> இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் ஜெயலலிதாவின் படம் திறந்துவைக்கப்பட்டால், அது இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை அளிப்பதாகும் என்றார்.< பிபிசி தமிழிடம் பேசிய அவர், ”ஜெயலலிதாவின் படம் சட்டமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டால், ஆட்டோ சங்கர் மற்றும் வீரப்பனின் படங்களையும் திறக்கவேண்டிய நிலை வந்துவிடும். நீதிமன்றத்தால் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவர் படத்தை சட்டமன்றத்தில் திறப்பது மோசமான உதாரணம்,” என்றார்.

அதிமுக அணிகள் இணையுமாறு முதலாளி கட்டளை? ஒரு டெண்டர் பிரச்சனை ....

டெண்டர் பிரச்னை: அதிமுக அணிகள் இணைவதில் சிக்கல்!‘அதிமுக-விலிருந்து பிரிந்து சென்ற இரு அணிகளும் இணையுமா? இணையாதா?’ என்ற கேள்வியும், பரபரப்பும் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரிடமும் இருந்தன. அதேபோல், தொடக்கத்தில் வேகமாக ஓ.பி.எஸ். அணிக்குச் சென்றவர்கள் ஓ.பி.எஸ். அணிக்குப் பிரதமர் ஆதரவிருந்ததால் மகிழ்ச்சியில் இருந்தார்கள். தற்போது தயக்கத்தில் உள்ளார்கள்.
காரணம், தற்போது பிரதமர் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதால் தைரியமாக ஆட்சியிலும், நிர்வாகத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார்கள். முன்புபோல், ஓ.பி.எஸ். அணி இணைய வேண்டும் என்று அதிகமாக அழுத்தம் கொடுப்பதில்லை முதல்வர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாய் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு, ஆன்-லைனில் டெண்டர் விடப்பட்டதில், ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி ஆதரவாளர்கள் டெண்டர் போட்டிருந்தார்கள்.

‘பிருந்தாவனம்’ - Feel good படங்களுக்கு மீண்டும் ஒரு ரவுண்டு


இயக்குநர் ராதாமோகன் அதிக செலவு வைக்காமல், பெரிய நடிகர்களை நடிக்க வைக்காமல் கதை, திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைவான படங்களை கொடுப்பவர் என்ற பெயரை இன்றுவரை தக்கவைத்துள்ளார். தற்போது வந்துள்ள பிருந்தாவனமும் அவரது நல்ல படங்களின் பட்டியலில் வலுவாக இடம் பெறுகிறது. ராதாமோகன் அவரது முதல் படமான ‘அழகிய தீயே’, சினிமாவுக்கு சென்று வெற்றி பெற முற்படும் இளைஞர்களின் போராட்டங்களை நகைச்சுவை ததும்ப சொல்லியிருப்பார்.

அதன் றகு வந்த அவரது படங்களான மொழி, பயணம், உப்புக்கருவாடு போன்றவற்றில் சினிமா குறித்தும் சினிமாவில் இருக்கும் அபத்தங்கள் குறித்தும் லேசான கிண்டல் பார்வையோடு கூடிய வசனங்கள் இருக்கும்.

உத்தர பிரதேசம் .. பார்ப்பன முதல்வரை சந்திக்க முன்பு தலித் மக்களை சோப்பு கொடுத்து குளிக்க பணித்த அதிகாரிகள்

உத்தரப்பிரதேசத்தில் முதல்வரைச் சந்திக்க இருந்த தலித் சமூக மக்களை
அதிகாரிகள் சோப்பு, ஷாம்பு கொடுத்து சுத்தமாகச் சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தைப் பல்வேறு துறைகளில் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுப்பேன் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்திருந்தார். அதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்திக்க இருந்த முஷார் என்ற தலித் மக்களைச் சோப்பு, ஷாம்பு மற்றும் வாசனைத் திரவியங்களைக் கொடுத்து அதிகாரிகள் சுத்தமாகுமாறு கூறியுள்ளனர். பூனை, எலிகளைப் பிடிப்பதை பாரம்பர்யத் தொழிலாக கொண்ட முஷார் மக்கள் தீண்டத்தகாத சமூகமாகக் கருதப்படுகிறார்கள்.

கேரளாவில் விடிய விடிய மாட்டிறைச்சி விருந்து விழா!

trollmafia2/ களை கட்டும் கேரளா : விடிய விடிய மாட்டிறைச்சி விருந்து....!! மாட்டிறைச்சி தடை உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கேரளா முதல்வர் பிணராய் விஜயன் அறிவித்துள்ள நிலையில்... கேரளாவில் DYFI யை சேர்ந்தவர்கள் விடிய விடிய மாட்டிறைச்சி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் கேரளா களை கட்டியுள்ளது

இலங்கை வெள்ளம். மண் சரிவில் 100 பேர் மரணம் மேலும் 110 பேரை காணவில்லை! .


இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலைப் பிரதேச மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கீலனி ஆறு மற்றும் காலு கங்காவின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் பெய்து வரும் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு இதுவரை 90க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், கனமழை காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மீட்பு பொருட்களுடன் கப்பல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவி்துள்ளார். இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள முதல் கப்பல்  காலை கொழும்பு சென்றடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டாவது கப்பல் ஞாயிற்று கிழமை சென்றடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தடை செய்யப்பட்ட"சரணம் கச்சாமி" தடையை வென்று திரைக்கு வருகிறது!

Umadevi.Lyricist? ஆந்திர திரையுலக வரலாற்றிலேயே ஒரு மொத்தப்படத்துக்கும் சென்சார் போர்டு தடை போட்டதென்றால் அது " சரணம் கச்சாமி " #SaranamGachami திரைப்படத்திற்குத்தான்.
பிரேம்ராஜ் இயக்கிய இந்தப்படம் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான நெத்தியடி.
எந்தெந்த காட்சிகள் வேண்டாம் என்று தோன்றுகிறதோ அவைகளை வேண்டுமென்றாலும் வெட்டிக் கொள்ளுங்கள் என்று இயக்குநர் பிரேம்ராஜ் சொல்லியும்...
"மொத்தப்படத்தையும்தான் வெட்டுவோம்" என கசாப்புக்கடை ஸ்டைலில் சென்சார் போர்டு சொல்ல,
மேல்முறையீட்டுக்குப் போனது படம்.
மும்பை மேல்முறையீட்டில் ஓரிரு வெட்டுகளோடு U/A சான்றிதழும் கொடுத்து படம் வெளிவர பச்சைக் கொடி காட்டியிருக்கிறார் மறுஆய்வுக் குழுவின் தலைவர் நடிகை ஜீவிதா.
இட ஒதுக்கீடு மட்டுமல்லாமல் ஐதராபாத் பல்கலையில் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட ரோஹித் வெமுலாவின் அவலம்.....
ஊனாவில் கசையடிக்கு ஆளான தலித்துகள் துயரம்....

மாட்டிறைச்சித் தடையின் பின்னணி.. இறைச்சி ஏற்றுமதி ! பண நீக்கத்தைப் போல மாடு நீக்கம்!..

sanna" :உலகின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. •மோடி பதவியேற்ற மூன்றாண்டுகளில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் வேகமாக முன்னேறிக் கொண்டுள்ளது இந்தியா. அநேகமாக விரைவில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளிவிடடு முதலிடத்தைப் பிடிக்கும் என அமெரிக்க விவசாயத்துறை கணித்துள்ளது. •மோடியின் இந்தப் பதவிக்காலத்தில் இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி மாதம் 18 லட்சம் கிலோவா கவும், ஆண்டிற்கு 21,600,000 கிலோவாகவும் அதிகரித்து.. உலகச் சந்தையில் 48 சதவிகிதத்தை கைப்பற்றியுள்ளது என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. பிரேசில் 19 சதவிகிதமே இன்னும் கடைபிடிக்கிறது. •இந்தியாவின் ஒட்டுமொத்த மாட்டிறைச்சி ஏற்றுமதியை All India Meat & Livestock Exporters Association (AIMLEA) கையாள்கிறது. இதன் மூலம் 45 நிறுவனங்கள் மாட்டிறைச்சியை உலகத் தரத்திற்கு மாடுகளை அறுத்து உற்பத்தி செய்கின்றன. இவைகளிடமிருந்து கொள்முதல் செய்வனவற்றில் ஆறு நிறுவனங்களே முன்னணியில் உள்ளன. அதில் 3 நிறுவனங்கள் பாஜக ஆதரவாளர்களைச் சேர்ந்தது. அவை..

1) Arabian Exports Pvt.Ltd.
Owner’s name: Mr.Sunil Kapoor
Add: Russian Mansions, Overseas, Mumbai 400001

வெள்ளி, 26 மே, 2017

காஷ்மீரில் மனிதகேடயம் .. இராணுவத்தின் இமாலைய சாதனை .. விருது வழங்கிய பாஜக அரசு!

Major Leetul Gogoi was given the award for his efforts in counter-insurgency.
marx.anthonisamy பா.ஜ.க ஆட்சியில் இந்தியா எத்தனை கோடூரமான நிலைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இன்றைய காஷ்மீர் ஒரு எடுத்துக்காட்டு.
ஒரு 24 வடது இளைஞனை இராணுவ வாகனத்தின் முகப்பில் கட்டிக் கொண்டு மனிதக் கேடயம் தரித்துப் போன மேஜர் லீதுல் கோகோய் என்னும் ஒரு இராணுவகொடூரனுக்கு இந்திய இராணுவம் விருது அளிப்பதும், அதை பா.ஜ.கவின் இராணுவ அமைச்சர் அருண் ஜேட்லியும் காஷ்மீரின் துணை முதலமைச்ச (இந்த ஆளும் ஒரு பாஜக) "புத்திசாலித்தனமான நடவடிக்கை" எனப் பாராட்டுவதும் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டுகள். இதன்மூலம் அவர்கள் சொல்ல வரும் சேதி என்ன? "இராணுவம் என்ன வேண்டுமானாலும் செய்யும். அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. எவ்வளவு கோடூரமாக மக்கள் நடத்தப்படுகின்றனரோ அத்தனை உயர் விருதுகள் அந்தக் கோடூரன்களுக்குத் தரப்படும்... இதுதானே? அவர்கள் மிருகமாக இருப்பது மட்டுமல்ல.. இவை அத்தனையையும் சகித்துக் கொண்டு புல்லையும் புண்ணாக்கையும் தின்று கொண்டிருக்கும் நம்மையும் அவர்கள் மிருகங்களாக மாற்றிக் கொண்டுள்ளனர்
 http://www.gulf-times.com/story/549833/Indian-army-commends-Kashmir-human-shield-officer

விகடன் : மோடி அரசு மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறதா? புள்ளி விபரம் ..

மூன்றாண்டுகள் நிறைவு செய்யும் பிரதமர் மோடி
சாலைகளில் தேநீர் விற்று, ஆர்.எஸ்.எஸ் என்னும் அமைப்பின் அடிப்படைத் தொண்டராக இருந்து, குஜராத் மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்கிறார் மோடி. முதல்வராக அவரது பதவிக்காலம் சரியாக அக்டோபர் 2001 முதல் மே 2014 வரை. வரலாற்றில் குருதிகொண்டு எழுதப்பட்ட புத்தகங்கள் என இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த மாநிலத்தில் பெரும் கலவரங்கள் வெடிக்கின்றன. பல வகையிலான குற்றச்சாட்டுகள் மோடிமீது முன்மொழியப்படுகிறது.

அரிசி ஆலை மீது இடி விழுந்ததில் 6 பெண்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலை செங்கம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை செங்கம் அருகே மின்னல் தாக்கியதில் அரிசி ஆலை கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தளவாநாயக்கர்பேட்டை என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாளர்கள் வழக்கம் போல் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். இன்று மாலையில் திடீரென புகைக் கூண்டு மீது இடி விழுந்தது. இதனால் புகைக்கூண்டு இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது. இதில் 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய இருவர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. tamiloneindian

வீட்டுக் கூரையின் மீது விழுந்த ஏலியன்ஸ் குட்டிகள்!? கரூரில் பரபரப்பு!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள லாலாபேட்டையில் அண்மையில் மழை பெய்தது. அப்போது வீட்டு கூரையின் மீது “தொப், தொப்” என்று ஏதோ பொருள் விழும் சத்தம் கேட்டுள்ளது. ஆழங்கட்டி மழை என நினைத்துள்ளனர். வெளியே சென்று பார்த்த போது, ஒரு சிறிய உருவம் நீரில் மிதந்து சென்றுள்ளது. தலைப்பகுதி பெரிதாகவும், உடல் பகுதி முழுவதும் ஒல்லியாக வால் போன்றும் இருந்திருக்கின்றது. அந்த உயிரினம் வானத்தில் இருந்து தான் விழுகிறதா என பார்த்துள்ளனர். அதுவும் உறுதியானது. வானத்தில் இருந்து தான் விழுந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பக்கத்தில் போக பயந்துள்ளனர். இ

இலங்கையில் பெருமழை மண்சரிவு 32 பேர் மரணம் 46 பேரை காணவில்லை! தேடுதல் பணிகள் தீவிரம்

கொழும்பு:நேற்று தொடங்கி பெய்து வரும் கனமழையினால் உண்டான வெள்ளப்பெருக்கின் காரணமாக இலங்கையில் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். இலங்கையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது.  நேற்று துவங்கி இலங்கையில் பல பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பகுதிகளில் வேகமான காற்றும் மழையும் தொடர்ந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக அந்நாட்டில் ஓடும் பெரும்பாலான நதிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தத்தளிக்கும் மக்களை மீட்கும் பணியில் இலங்கை பேரிடர் மேலாண்மை அமைப்பு ஈடுபட்டுள்ளது.

BBC :இந்தியாவின் மிக நீண்ட பாலம் - அஸ்ஸாம்- அருணாசலப் பிரதேசத்தை இணைக்கிறது

இந்தியாயின் மிக நீண்ட பாலமாக, அசாம் மாநிலத்தை அருணாச்சல பிரதேசத்தின் எல்லையோடு இணைக்கும் வகையில்9.15கிலோ மீட்டர் நீளமான பாலத்தை லோஹித் நதியின் மீது கட்டப்பட்டுள்ளது<>இந்த பாலத்தை பாஜகவின் ஆட்சியின் மூன்றாவது ஆண்டு நிறைவுபெற்ற தினத்தில் பிரதமர் நரேந்திர மோதி திறந்துவைத்தார்.
1962ல் இந்தியா-சீனா இடையே நடந்த எல்லைப் போரில், சீனா பெருமளவில் ஆக்கிரமித்த பகுதிகள் கொண்ட அருணாச்சல பிரதேசத்தை அசாமுடன் இந்த நீண்ட பாலம் இணைக்கிறது என்பது இதன் முக்கிய அம்சம்.
அருணாச்சல பிரதேசத்தை தன்னுடைய பகுதி என சீனா இன்றும் கூறி வருவதுடன், அதை 'தென்னக திபெத்' என்று கூறுகிறது.
திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா சமீபத்தில் வந்திருந்த போது, அவரது வருகைக்கு, சீனா எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமின்றி, அங்கு இந்திய ராணுவம் எந்தவித உள்கட்டமைப்பை கட்டியெழுப்புவதையும் எதிர்த்து வருகிறது.

ரஜினி கருத்து தவறுமில்லை, வித்தியாசமானதுமில்லை: கமல் பேட்டி


வடமாநில சேனல்களில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. இதை நகடிர் கமல்தான் தொகுத்து வழங்க உள்ளார். இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. கேள்வி : நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் கூறுகிறார்களே பதில் : இப்ப இருக்கிற சூழ்நிலையில் யாருமே வரக்கூடாது. அது ஏன் நடிகர்கள் என்று ஒதுக்க வேண்டும். அரசியல் என்பது சேவை தொடர்புடையது; சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினி கருத்து தவறுமில்லை, வித்தியாசமானதுமில்லை. எம்எல்ஏக்களுக்கு நல்ல சம்பளம் தரலாம். நான் பல ஆண்டுகளாகவே அரசியலில் இருக்கிறேன். ஓட்டு போட ஆரம்பித்தது முதலே நான் அரசியல்வாதிதான். தமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்; தற்போதைய அரசியலை பார்த்தால் யாருமே அரசியலுக்கு வரக்கூடாது. தமிழ் உணர்வோடு இருக்கும் எல்லோரும் தமிழர்தான்.நான் இந்தியனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். நக்கீரன்

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை!

விவசாய காரணங்களுக்காக மாடுகளை வாங்க - விற்க புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. மாடுகளை வாங்கும்போதும், விற்பனை செய்யும்போதும் விவசாயி என்ற அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்ற முறையை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. மேலும் விலங்குகள் வதைச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்கவும், கன்றுகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வருவதற்கும், மத நம்பிக்கைக்களுக்காக மாடுகளை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது மத்திய அரசு. மாநிலம் தாண்டி மாடுகளை கொண்டு செல்வதற்கு, மாநில கால்நடைத்துறையின் அனுமதி பெறவேண்டும் என்பதை கட்டாயப்படுத்தியுள்ளது மத்திய அரசு நக்கீரன்

சாரு நிவேதா : ஷோபாவைப் போல் இருட்டில் ராஜபக்‌ஷே ஆதரவும் வெளிச்சத்தில் முற்போக்கு முகமூடியும் //

thetimestamil:: எழுத்தாளர் ஷோபா சக்தி தனது முகநூலில் எழுத்தாளர் சாரு நிவேதிதா குறித்து பதிவொன்றை எழுதியிருந்தார். “.இலக்கிய விமர்சனத்திலோ இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது’ என்ற புரிதலோடு எப்படி நான் இருந்தேனோ’ அதுபோலவே இப்போது சாருவால் பாராட்டப்படும் இளைஞர்களும் இருந்துகொள்ளுங்கள்” என எழுதியிருந்த ஷோபா சக்தியின் பதிவுக்கு சாரு நிவேதிதா தனது வலை தளத்தில் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.
முதலில் ஷோபா சக்தியின் பதிவை முழுமையாக படிக்கவும்:
நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோது எனக்கு 30 வயது. சாரு நிவேதிதாவுக்கு 44 வயது. கண்ட நாள் முதல் நெருக்கமாகிவிட்டோம். அப்போதெல்லாம் சாரு எனக்கு நீளமாகக் கடிதங்கள் எழுதுவார். என் மகனைப் போல நீயிருக்கிறாய், என்னை இருபது வருடத்திற்கு முன்பு பார்த்ததுபோலவே இருக்கிறாய் என்று கடிதத்திலும் ‘சிறுகதையில் ஷோபாவை அடித்துக்கொள்ள ஆளில்லை’ என்று பத்திரிகைகளிலும் எழுதுவார்.

அமைச்சரவையில் மேலும் இரண்டு பேருக்குப் பதவி!

தமிழக அமைச்சரவையில் மேலும் இரண்டு பேருக்கு வாய்ப்பு அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதையடுத்து, விரைவில் அமைச்சரவையில் மாற்றம் நடைபெறும் என்று தெரியவருகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, கடந்த 22ஆம் தேதி திங்கட்கிழமை மற்றும் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று அதிருப்தி அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் சிலர் தலைமை செயலகத்துக்குச் சென்று சந்தித்து தங்களுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று வலியுறுத்தினர். தொகுதி பிரச்னைகள் குறித்து முதல்வருடன் அவர்கள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்பட்டாலும் உண்மையில் அவர்கள் தங்களுக்கு முக்கிய பதவி கேட்டே சென்றனர். அதேபோல், அதிமுக-வில் உள்ள எஸ்.சி.எஸ்.டி. இன எம்.எல்.ஏ-க்களும் ஆலோசனை நடத்தியது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியாக மாறியது.
இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக அமைச்சரவையை மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. தற்போது, முதல்வர் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் அவரையும் சேர்த்து 31 பேர் மந்திரிகளாக உள்ளனர். அரசியலமைப்பு சட்டப்படி ஒரு மாநிலத்தில் இருக்கும் மொத்த எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கையில் 15 சதவிகிதம் வரை அதிகபட்சமாக அமைச்சர்களாக நியமனம் செய்யலாம். அதன்படி, தமிழக அமைச்சரவையில் மொத்தம் 35 பேர் மந்திரிகளாக முடியும்.

வைகோ : சிறை என்னை கூர்மை படுத்தியிருக்கிறது ... யாரையாவது குத்திடப்போறாரு?

நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது பற்றி பேசுவதுதான் தற்போது தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக். கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி, சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிகளில் தற்காலிக அரசியல் பற்றியெல்லாம் பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை, சிஷ்டம் இல்லை. போர் வரும் போது நாம் பார்த்துக்கொள்வோம் எனக்கூறி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார். அவரின் பேச்சு விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே காட்டியது. அவர் அரசியலுக்கு வருவதை சில தலைவர்கள் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இரண்டு நாட்களில் இணையப்போகும் அதிமுக அணிகள்! டெல்லி கடும் முயற்சி

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுக ஓபிஎஸ்  அணி,  இபிஎஸ் அணி என இரண்டாக பிளவுபட்டது. இதனை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்தி இரு அணிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் மிகவும் ஓப்பனாக பேசுகிறார்கள்.தமிழகத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கு இது தான் சரியான தருணம் என திட்டமிட்ட பாஜக அதிமுகவை அதற்காக பயன்படுத்துவதாக அரசியல் கட்சிகள் விமர்சனம் வைத்து வருகிறது. இந்நிலையில் இரு அணிகளும் கட்சியையும், முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தையும் பெற முயற்சி செய்து வந்தது.இதனையடுத்து இரட்டை இலை சின்னத்தை மீட்க இரு அணிகளும் இணைவதே சரியான வழி என இபிஎஸ் அணி கூறி வருகிறது. ஆனால் இரு அணிகளும் இணைய சில நிபந்தனைகளை வைத்து ஓபிஎஸ் அணி அதற்கு தடை போட்டு வருகிறது.இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் அதிமுகவின் இரு அணிகளுடைய வாக்குகள் சிதறாமல் பாஜகவுக்கு வேண்டும் என்பதால் மோடி இரு அணிகளும் இணைவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்;

திமுக மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி காலமானார் .. தூத்துக்குடி மாவட்ட

சென்னை : தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் என். பெரியசாமி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பெரியசாமி இன்று காலை உயிரிழந்தார். எம்.எல்.ஏ கீதாஜீவனின் தந்தையாகிய என். பெரியசாமி கருணாநிதியின் முரட்டு பக்தன் என அழைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  தினகரன்

குட்டி ரேவதி : நாம் எல்லோரும் 'digital alzheimer' நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோமா?

kutti.revathi சில நாட்களுக்கு முன், ஒரு திரைக்கலைஞரைச் சந்தித்தேன். சந்திப்பின் சாராம்சமாய் நினைவில் இருப்பது, நாம் எல்லோரும் 'digital alzheimer' நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று அவர் கூறியதுதான். அதாவது, மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை நம் நினைவை அழிக்கும் நோய்.
ஒவ்வொரு மூன்று நிமிடமும் ஒரு நினைவிலிருந்து வேகமாய் நழுவி இன்னொரு நினைவிற்குள் விழுந்து விடுகிறோம்.
விரல்களுக்கு இடையே நழுவும் காலத்தைப் போலவே, நழுவிய அந்த நினைவையும் நினைவூட்டிக்கொள்ளும் மனிதத் திறனை இழந்துவிட்ட காலகட்டத்திற்கு வந்திருக்கிறோம்.
'digital alzheimer', நோயின் தீவிரமான பின்விளைவு, நாம் எல்லோரும் சிதறிப்போய் அவரவர் தனிமையில் உறைந்து கிடப்பது. டிஜிட்டல் உலகம், இணையத்தளம், சமூகவலைத்தளங்களின் தறிகெட்ட தகவல் பரப்புமுறை இவை எல்லாம் இந்த நோயை வேகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

குஷ்பு தமிழிசை டுவீட்டர் மோதல் ...

சென்னை, ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் நடக்குமா? நடக்காதா? என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் கடந்த 19-ம் தேதி ரசிகர்கள் மத்தியில், வாழ்க்கையில் எதிர்ப்பு, ஆதரவு இருப்பது சகஜம்தான். எதிர்ப்பு இல்லாமல் வளரவே முடியாது. அதுவும் அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். “நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக இருங்கள்” என அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார். நல்லவர்களுக்கு எப்போதும் எங்களுடைய கட்சியில் இடம் உண்டு என பா.ஜனதா தலைவர்கள் ரஜினிகாந்திற்கு பா.ஜனதா தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.இப்போது இவ்விவகாரம் தொடர்பாக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், நடிகை குஷ்புவுக்கும் இடையே கடும் மோதல் நடந்து உள்ளது.

ஆடிட்டர் குருமூர்த்தி + மோடி Gang ஐ சரிக்கட்டிய அதானி தங்கமணி குறுப்...

அ.இ.அ.தி.மு.க. என்கிற பெயர் காரணத்தாலோ என்னவோ அ.தி.மு.க.வில் தினசரி நடக்கும் அனைத்தையும் டெல்லிதான் தீர்மானிக்கிறது என்பதை மே 20-ஆம் தேதி அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்  பிரதமர் மோடியுடன் நடத்திய மாரத்தான் சந்திப்புகள் நிரூபித்தன. பிரதமர் மோடியை முதலில் பாராளுமன்ற சபாநாயகர் தம்பிதுரை சந்தித்துப் பேசினார். அடுத்து ஓ.பி.எஸ். தலைமையில் மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் சந்தித்தார்கள். அதைத் தொடர்ந்து மறைந்த மத்திய மந்திரி அனில்மாதவ் தவேவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த மோடியை டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்களான வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சந்தித்தனர்.;";தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினையும், டெல்லியில் 35 நாட்களாக போராட்டம் நடத்திய விவசாயிகளையும் பெயரளவுக்குக் கூட சந்திக்காத பிரதமர் மோடி, அ.தி.மு.க.வின் அனைத்து அணியினருடனும் நடத்திய சந்திப்புகளில் என்ன நடந்தது என அவர்களைக் கேட்டோம்.

ஜெகத் ரட்சகன் ,சிதம்பரம் அடுத்தது...? ரஜினி பாஜகவில் சேரும்வரை தொடரும் ரெய்டுகள் ...



""ஹலோ தலைவரே, தமிழகமே இப்ப, ரஜினி < உண்டாக்கிய  பரபரப்பில் மூழ்கியிருக்கு.; நான் எப்ப வருவேன். எப்படி
வருவேன்னு எனக்கே தெரியாதுங்கிற டயலாக் வாய்ஸை  20 வருசத்துக்கு முன்பே ரஜினி கொடுக்க ஆரம்பிச்சார். அந்த வாய்ஸ்தான் இப்பவும் அவர்ட்ட இருந்து ரீமிக்ஸில் வந்திருக்கு.'' ""ஆமாம்ப்பா. அதேபோல் 20 வருசத்துக்கு முன்ன, அவர் யார் யாரை எல்லாம் சந்திச்சாரோ, அவங்களை எல்லாம் இப்பவும் சந்திக்க ஆரம்பிச்சிருக்காராமே?'' ""உண்மைதாங்க தலைவரே, அவரோட பழைய நண்பர்கள் சிலரை அவர் சந்திச்சிக்கிட்டிருக்கார்.  அந்த வரிசையில் 20-ந் தேதி காலைல, தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சரான ஜெகத்ரட்சகனை சந்திச்சார். ஜெகத் வீட்டுக்கு ரஜினி வருவதா சொல்ல, நானே வர்றேன்னு ரஜினியோட வீட்டுக்குப் போயிட்டார் ஜெகத். அப்ப ரஜினி, "நான் அரசியல் கட்சியை ஆரம்பிச்சா, என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்? அதை எல்லாம் எப்படி சமாளிக்கலாம்'ன்னு கேட்டிருக்கார். அதோட, எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது நடந்த விசயங்கள் குறித்தும், இந்த சந்திப்பின் போது ஜெகத்கிட்ட விரிவாக கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டாராம் ரஜினி.  மன்மோகன்சிங் பீரியடில் தி.மு.க. சார்பில் மத்திய இணையமைச்சரா இருந்த ஜெகத்ரட்சகன் சம்பந்தப்பட்ட இடங்களில் பா.ஜ.க. அரசின் வருமானவரித்துறை ரெய்டு நடத்தி பரபரப்பை உண்டாக்குனது. அவரைத்தான் ரஜினி சந்திச்சிருக்காரு.''