சனி, 23 ஜனவரி, 2021

பாலுமகேந்திரா ஏன் மகேந்திரனை விட முக்கியமான கலைஞர்?

Image may contain: 3 people, people sitting and outdoor
Arun Mo : · பாலுமகேந்திரா ஏன் மகேந்திரனை விட முக்கியமான கலைஞர் என்பதையும் பாலுமகேந்திராவை கொண்டாடும் தமிழ் ஸ்டுடியோ ஏன் மகேந்திரனை கொண்டாடுவது இல்லை என்பதையும் நான் அடிக்கடி எழுதி வருகிறேன்.
இன்றைய இளம் இயக்குநர்கள் அல்லது திரைத்துறைக்கு வரவிருக்கும் நண்பர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பாலுமகேந்திரா ஒரு இயக்கம் போல தொடர்ந்து செயல்பட்டார். அவர் சினிமாவை தவிர்த்து வேறொன்றையும் சிந்திக்காத முழுக்க சினிமாவிற்கே தன்னை அர்ப்பணித்த மனிதராக இருந்தார்.
எல்லாவற்றையும் விட எல்லாரும் அவரை எளிதில் அனுகலாம். தமிழ்நாட்டில் எந்த மூலைமுக்கில் நீங்கள் சினிமா சார்ந்து இயங்கும் மனிதராக இருந்தாலும் நீஙகள் பாலுமகேந்திராவை அனுகலாம். நீங்கள் இன்னாராக உங்களை நிரூபித்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டே இருந்தார். யார் தொடர்ந்து தன்னை புதுப்பிக்க முடியும் என்றால் அவர் எப்போதும் களத்தில் இயங்கும் இளைஞர்களோடு, அமைப்புகளோடு நல்ல உறவில் தொடர்பில் இருக்க வேண்டும். கலைஞன் என்பவன் கிட்டத்தட்ட மக்கள்பணி செய்யும் களப்பனியாளன் போலவும் தன்னை உருமாற்றிக்கொள்ள வேண்டும். பாகுபாடில்லாமல் எல்லாரையும் அரவணைக்கும் பக்குவம் வேண்டும். அது பாலுமகேந்திராவிடம் இருந்தது.

ஜோ பைடன் பாஜக - RSS சோனல் ஷா . அமித் ஜானி ஆகியோரை விலக்கி வைத்தார் ! joe biden exclude sonal shah amit jani

Indian-Americans With RSS Links Don't Make It to Biden's First Cut
Image may contain: text that says 'oneindia tamil 2.8M பின்பற்றுவோர் பாலோயிங் பாஜக-ஆர்எஸ்எஸ் பாஜக- தொடர்பு... பைடன் நிர்வாகத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட இரு இந்தியர்கள் 22 Jan 21 1:58 PM'
Tamiloneindia :பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகளுட னான தொடர்பு காரணமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவரை பைடன் அரசு, தனது நிர்வாகத்திலிருந்து விலக்கி வைத்துள்ளது.
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அந்நாட்டின் துணை அதிபராகப் பதவியேற்றார். அமெரிக்க வரலாற்றிலேயே பெண் ஒருவர் துணை அதிபராவது இதுவே முதல்முறையாகும்.
ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் பணிபுரிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 20 பேரை பரிந்துரைத்திருந்தார். அமெரிக்க மக்கள்தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவுள்ள இந்தியர்களுக்கு இது மிகப் பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
விலக்கி வைக்கப்பட்ட இருவர்
பைடன் நிர்வாகத்தில் பணிபுரிய இதுவரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 20 பேர் நியமிக்கப்பட்டுள் ளனர். இருப்பினும், முன்பு பரிந்துரைத் திருந்த பட்டியலுடன் பார்க்கும்போது சோனல் ஷா மற்றும் அமித் ஜானி ஆகியோரது பெயர்கள் இதில் விடுபட் டுள்ளது. பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புக ளுடனான தொடர்பு காரணமாக இவர்க ளை பைடன் நிர்வாகம் விலக்கி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நினைக்கிறார் பிரதமர் மோடி” - கோவையில் ராகுல் காந்தி பேச்சு!

Image may contain: 1 person, text that says 'NEWS FAML BREAKING கோவையில் ராகுல் காந்தி பேச்சு! "தமிழ்நாடு என்பது இந்தியாவின் ஒரு பகுதி அல்ல, தமிழ்நாடே இந்தியா என்ற நிலை உருவாகும்!" 23 JAN 2021 010 191 071 059 1548'
kalaignarseithigal.com :காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., 3 நாள் சுற்றுப்பயணமாகத் தமிழகத்துக்கு இன்று வருகை தந்துள்ளார். மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த ராகுல் இன்று மீண்டும் தமிழகம் வந்துள்ளார்.

இன்று முதல் 25-ம் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அதன்படி, இன்று காளப்பட்டி சாலை சுகுணா ஆடிட்டோரியத்தில் தொழில் முனைவோரிடம் கலந்துரையாடினார் ராகுல் காந்தி.    அப்போது பேசிய ராகுல், “ஜி.எஸ்.டியால் தொழில்துறையினர், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை ஆளும் பா.ஜ.க அரசு புரிந்துகொள்ளவில்லை.   பேங்கிங் சிஸ்டம் பெரும் முதலாளிகளுக்கே சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. அரசின் பொருளாதார கொள்கை சிறு-குறு தொழில்துறையினரை பாதித்துள்ளது. சிறு-குறு தொழில் முனைவோருடைய தொழில் வரிகளால் அவர்களது கைகள் கட்டப்பட்டுள்ளன. அதை அவிழ்த்துவிட்டால், சீனாவின் பொருளாதாரத்தை வீழ்த்தி விடலாம்.

இலங்கைக் கடற்படையால் உயிரிழந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு கனிமொழி நேரில் ஆறுதல்!

 Vikatan -. ( உ.பாண்டி )  ": இலங்கைக் கடற்படையிர் தாக்குதலில் உயிரிழந்த மீனவர் மெசியாஸ் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறியதுடன், அவரது குடும்பத்திற்கு நிதியுதவியை கனிமொழி வழங்கினார். `ஆட்சி மாற்றத்துக்குப் பின் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திவரும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என கனிமொழி எம்.பி தெரிவித்தார். இலங்கைக் கடற்படையினரால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், நிதியுதவியும் வழங்கினார்.

உயிரிழந்த மீனவர்கள் படத்திற்கு கனிமொழி அஞ்சலி.
உயிரிழந்த மீனவர்கள் படத்திற்கு கனிமொழி அஞ்சலி.
உ.பாண்டி
தி.மு.க மகளிர் அணி செயலாளர் கனிமொழி கடந்த 2 நாள்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் சாயல்குடி தொடங்கி சத்திரக்குடி வரை பிரசாரம் மேற்கொண்ட அவர், இன்று காலை தனுஷ்கோடியில் தனது பிரசாரத்தைத் தொடங்கினர். அங்கு நாட்டுப் படகு மீனவர்களைச் சந்தித்து அவர்களதுகுறைகளைக் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இல்லத்துக்குச் சென்று கலாமின் சகோதரர் முத்து முகமது மீரான் மரைக்காயரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

தேனீ இணையத்தள ஆசிரியர் ஜெமினி கங்காதரன் காலமானார் .கருத்து சுதந்திரத்திற்காக வீரத்துடன் போராடியவர்

Image may contain: 1 person, standing
Thambirajah Jeyabalan : · ஜெமினி - தேனீ - கருத்துச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு சுதந்திர வேட்கைகொண்ட மனிதன் சரத்து 19: ஒவ்வொருவரும் சுயாதீனமான கருத்துக்களைக் கொண்டிருக்கவும் அதனை வெளிப்படுத்தவும் உரிமையுடையவர்கள். இந்த உரிமை என்பது இடையூறற்று கருத்துக்களைக் கொண்டிருக்கவும் தகவல்களையும் கொள்கைகளையும் தேடவும் எந்த ஊடகத்தினூடாகவும் எல்லைகளைக் கடந்தும் அதனை வெளிப்படுத்தவுமான உரிமையயை உள்ளடக்குகின்றது. - ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பிரகடனத்தின் 19வது சரத்து.
Article 19: Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers.
இந்தக் கருத்துச் சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்காகப் போராடிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஊடகங்களில் 'தேனீ' இணையத்தளத்தின் பாத்திரம் மிகமுக்கியமானது. அதற்குப் பின்நின்ற ஜெமினியின் - கங்காதரனின் உழைப்பு மதிப்பிட முடியாதது.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தமிழர்களை உலகெங்கும் புலம்பெயர நிர்ப்பந்தித்த போது, யுத்தத்தின் ஆரம்ப காலகட்டங்களில் வடக்கு கிழக்கை விட்டு, ஆரம்ப நாட்களில் புலம்பெயர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அராஜகப் போக்கினால் பாதிக்கப்பட்ட மாற்று இயக்கத்தைச் சார்ந்தவர்களே.  இலங்கையில் மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தை, தாங்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் அவர்கள் கட்டியெழுப்ப முற்பட்டனர்.
ஆனாலும் மிகக் கூறுகிய காலத்தினுள்ளேயே கட்டமைப்பு ரீதியாக மிகப்பெரும் பலத்துடன் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம், புலம்பெயர் தேசங்களிலும் கோலோச்ச ஆரம்பித்தது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான அரசியல் வன்முறையானது; அரசியல் படுகொலைவரை சென்றது. பாரிஸ், பேர்ளின், லண்டன், ரொறொன்ரோ, சிட்னி என வன்முறைகள் தொடர்ந்து சில படுகொலைகளும் நிகழ்ந்தது.

Fefsi விஜயன்.. மலையாள கதாநாயகன் ஜெயனின் விபத்தோடு கலங்கிய விஜயனின் கதை

Image may contain: 1 person

Selvan Anbu :  · ஒரு புகழ் வாய்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஒரு மாநில திரைப்படத்தில் டைட்டிலில் பெயர் வந்து 40 வருஷமாச்சு... 40 வருஷத்துக்கு முன்னே அவர் பெயர் டைட்டிலில் வந்ததோடு சரி. அதன் பின் யாருமே அவரை கூப்பிடலை. ஏன்?யார் அவர்? இன்று மிகப்பெரிய ஸ்டண்ட் டைரக்டர். அன்று அவர் பெயர் விஜய். விஜய் தந்தை சுப்ரமண்யன் பெரிய ஸ்டண்ட் டைரக்டர். அதுவும் எம்.ஜி.ஆரோட ஸ்டண்ட் மாஸ்டர். அவர் புகழ் பெற்றது அடிமைப்பெண் படத்தில் எம்.ஜி.ஆர் புலியோடு சண்டை போட்ட போது. அதை செய்தது விஜய்யோட அப்பா.
விஜய் 17 வயதிலேயே ஸ்டண்ட் நடிகராயிட்டார். படிப்படிப்படியாக வளர்ந்து ஸ்டண்ட் மாஸ்டராக 80 களில் வளர்ந்தார். 1980ல் அவருக்கு மலையாளத்தில் ஒரு படத்துக்கு அழைப்பு வந்தது. பொதுவாக அன்று மலையாளப்படங்களுக்கு தியாகராஜன் என்பவர் தான் மாஸ்டராக இருப்பார்.

ஜோ பைடனின் வரவும் பேர்னி சாண்டர்ஸின் புரட்சிகர சிந்தனையையும் எதை காட்டுகிறது

Image may contain: 1 person, sitting, shoes and outdoor

Rajasangeethan. ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் எதைக் காட்டிலும் அதிக புகழை ஈட்டியிருப்பது பெர்னி சாண்டர்ஸ்ஸின் இந்த புகைப்படம்தான்.
பைடன் மற்றும் அவரின் குடும்பம், ஒபாமா மற்றும் அவரின் மனைவி என அனைவரும் அமெரிக்கா இழந்ததாக(!) நினைக்கும் படாடோப வாழ்க்கையை பிரதிபலிக்கும் படடோப உடைகளை போட்டு விழாவுக்கு வந்திருந்தனர். அந்த விழாவில் கலந்துகொண்ட பெர்னி சாண்டர்ஸ்தான் இப்படி அமர்ந்திருக்கிறார்.
தீவிர கம்யூனிசம் இல்லையெனினும் அமெரிக்காவை கொஞ்சமேனும் அசைத்து பார்க்கும் சோசலிசத்தை பேசுபவர் பெர்னி சாண்டர்ஸ். தற்போது ஜெயித்திருக்கும் பைடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் பெர்னி. வேட்பாளர்களுக்கான போட்டி கட்சிக்குள் நடந்தபோது பெர்னி போட்டியிட்டார். பெரும் ஆதரவு கிடைத்தது. அமெரிக்காவிலிருந்து ட்ரம்ப் மட்டுமல்ல, அதன் பொருளாதார முறையும் வெளியேற வேண்டும் என்றே மக்கள் பெர்னியை ஆதரித்தனர்.

அதானி துறைமுகத்துக்காக 700 ஏக்கர் அரசு நிலம், 3300 ஏக்கர் விளை நிலங்கள்

Image may contain: 1 person, text that says 'TAMILNADU தீக்கதிர் CHIER அதானி துறைமுகத்துக்காக 700 ஏக்கர் அரசு நிலம், 3300 ஏக்கர் விளை நிலங்களை அபகரிப்பதா? தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்த்துப் போராடும்.... நமது நிருபர் ஜனவரி'
  Chinniah Kasi :  · அதானி துறைமுகத்துக்காக 700 ஏக்கர் அரசு நிலம், 3300 ஏக்கர் விளை நிலங்களை அபகரிப்பதா? தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்த்துப் போராடும்.... ஜனவரி 23, 2021 மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்கள் ஆண்டுக்கு 274.9 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்டது. கடந்த ஆண்டு 122.3 மில்லியன் டன் மட்டுமே மேற்படி துறைமுகங்களால் கையாளப்பட்டுள்ளது. இது இத்துறைமுகங்களின் திறனில் 44 சதவீதம் மட்டுமே ஆகும். இந்நிலையில் காட்டுப்பள்ளி அருகில் 330 ஏக்கர் எல்&டிக்கு சொந்தமான சிறிய துறைமுகத்தை அதானி நிறுவனம் வாங்கி 6,110 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. மத்திய அரசு அனுமதியளித்தால் சுமார் 3,300 ஏக்கர் விளை நிலங்களும், 2,000 ஏக்கர் கடல் பகுதிகளிலும், சுமார் 700 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களும் அபகரிக்கப்படும் ஆபத்துள்ளது.

பா.ஜ.க.வின் அஜெண்டா... ரகசிய பேரம்? ராகுல் அதிர்ச்சி!

nakkeeran :சட்டமன்ற தேர்தலில் ‘மிஷன் 200' என்கிற இலக்கை அடைவதற்கான திட்டத்தில் செயலாற்றி வருகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். 200 தொகுதிகளில் உதயசூரியன் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் டார்கெட். இதனைப் பக்குவமாக கூட்டணி கட்சிகளிடமும் தெரிவித்து வருகிறது அறிவாலயம்.      இதில் காங்கிரசுக்கு மட்டும் இரட்டை இலக்க அளவில் சீட் என்றாலும், தி.மு.க. சொல்லும் எண்ணிக்கையை ஏற்கும் மனநிலையில் காங்கிரஸ் இல்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டை பார்வையிட மதுரைக்கு வந்த ராகுல்காந்தி, சீட் பற்றி தி.மு.க. தலைமையிடம் பேசி முடிக்கலாம் என்கிற ப்ளானும் நிறைவேறாததால் அவர் அப்செட் என்கிறார்கள்.  

ராகுல் காந்திக்கு நெருக்கமான தமிழக எம்.பி. ஒருவர், “தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுக்க அதி.மு.க. - பா.ஜ.க. கட்சிகள் ஏகப்பட்ட திட்டங்களைப் போட்டுள்ளதாகவும், அதை முறியடிக்க வேண்டுமானால் அதிகபட்சமாக 190-200 இடங்களில் போட்டியிட தி.மு.க. தீர்மானித்திருப்பதால் காங்கிரசுக்கு 15 இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என்றும் தி.மு.க. தரப்பிலிருந்து ராகுல் காந்திக்கு தெரியப்படுத்தப்பட்டுவிட்டது. அவர் இதை எதிர்பார்க்கவில்லை.

எங்க அம்மா ஸ்ரீலங்கன் அப்பா Indian Brahmin, father is from Maharashtra and my mother is a brahmin...

Image may contain: people sitting, text that says 'பிறருக்கு தீங்கின்றி நன்மை செய்யும் எவருக்கும் கடவுளோ, ,மதமோ, வழிகாட்டியோ தேவையில்லை. -பெரியார்'
சுமதி விஜயகுமார் : · நாம் எதுவாக நம்மை முன்னிறுத்தி கொள்கிறோமோ, அதை சார்ந்தே நம் மேலான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. கடந்த 4 வருடங்களாக மட்டுமே நான் ஒரு பகுத்தறிவுவாதியாக இருக்கிறேன். அதுவும் முழுதாக கூட இல்லை. ஒரு சில பழக்க வழக்கங்களை, பிறந்ததில் இருந்து கடைபிடித்து வருவதால், அது மூட நம்பிக்கை என்றாலும் அதில் இருந்து வெளிவருவத்தில் சிரமம் இருக்கிறது. அதிலும் ஒரு குடும்ப அமைப்பில் முதல் தலைமுறை பகுத்தறிவுவாதியாக இருக்கும் ஆண்களுக்கே கூட தன் வீட்டில் உள்ளவர்களிடம் பகுத்தறிவை பின்பற்றவைப்பது கடினம். பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். நான் நம்பிக்கையுடன் சாமி கும்பிட்டு வருடங்கள் ஆயிற்று. ஒரு விசேஷம் வந்தால் 'இதை செய்யவில்லையா அதை செய்யவில்லையா ' என்று கேட்டு என்னை எந்த நீர்பந்ததுக்கும் என் கணவர் ஆளாக்குவதில்லை. மிஞ்சி போனால் சாமி படங்களையும் விளக்கையும் சுத்தம் செய்வதோடு சரி. நான் பெரியாரியவாதி ( ஆரம்ப நிலை ) என்பதலே என்னிடம் மிக சிறுபிள்ளைத்தனமான கேள்விகள் வைக்கப்பட்டுள்ளன. ' நீ தான் பெரியாரிஸ்ட் ஆச்சே அப்புறம் என்ன உங்க வீட்ல சாமி படம் வச்சுருக்க' ' ஏன் கோவிலுக்கு போற' என்பன அனேகமாக அனைத்து பகுத்தறிவுவாதிகளும் சந்திக்கும் கேள்விகள்.

வெள்ளி, 22 ஜனவரி, 2021

நாதஸ்வரத்திற்கு புது வடிவம் கொடுத்த மேதை நரசிங்கம்பேட்டை பிரம்மஸ்ரீ ரங்கநாத ஆசாரி

Image may contain: 1 person, text that says 'Narasingampettai Brahmasri Ranganath Achari'
கம்மாளர் களஞ்சியம் ;· நரசிங்கம்பேட்டை பிரம்மஸ்ரீ ரங்கநாத ஆசாரி நாதஸ்வரம்  என்றதும் மனத்தில் தோன்றும் பெயர் மேதை ராஜரத்தினம் பிள்ளையினுடையதுதான். அவரின் நீங்காப் புகழுக்கு அவருடைய அதீத கற்பனையும், அதை வெளிக்காட்டக் கூடிய அற்புதத் திறனும் காரணங்கள் என்றாலும் இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அது அவர் வாசித்த வாத்யம். ராஜரத்தினம் பிள்ளை வாசிக்கத் தொடங்கிய காலத்தில் அளவில் சிறிய, ஐந்து கட்டை ஸ்ருதியில் ஒலித்த திமிரி நாயனம் என்கிற வகை நாதஸ்வரமே உபயோகத்திலிருந்தது. திமிரி நாயனத்தில் அனைத்து ஸ்வரங்களையும் துல்லியமாக வெளிப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தன. குறிப்பாக சுத்த மத்தியம ஸ்வரத்தை வாசிக்க கலைஞர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
1945-ல் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நரசிங்கம்பேட்டையில் இருந்த ரங்கநாத ஆசாரி என்பவர். இரண்டு கட்டை ஸ்ருதியில் வாசிக்கக் கூடிய, அளவில் சற்று பெரிய நாகஸரத்தை வடிவமைத்தார். அடுத்த ஊரான திருவாவடுதுறையில் இருந்த ராஜரத்தினம் பிள்ளையைச் சந்தித்து தன் கண்டுபிடிப்பைக் காட்டினார். வாசித்துப் பார்த்த ராஜரத்தினம் அனைத்து ஸ்வரங்களும் துல்லியமாய் சேருவதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தார்.. சுத்த மத்யமத்தை இடைஞ்சலின்றி வாசிக்க முடிந்ததால் அதுவரை கடக்க முடியாத எல்லைகளை எல்லாம் அவரது வாசிப்பு கடக்கத் தொடங்கியது. தன்னுடனே இருந்து தனக்கு மட்டுமே இந்த வாத்தியத்தை அளிக்குமாறு ரங்கநாத ஆசாரியைக் கேட்டுக் கொண்டார் ராஜரத்தினம்.

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கைக் கடற்படையால் நடுக்கடலில் 4 மீனவர்கள் உயிரிழப்பு! கொதிக்கும்  தமிழ்நாடு ராமேஸ்வர மீனவர்கள் - Tamilwin
Douglas Devananda : · ஊடக அறிக்கை - 22.01.2021 எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி நான்கு இந்தியக் கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நால்வரது சடலங்களும் கிடைத்துள்ளன என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றது.
இவ்வாறான இழப்புக்கள் பலவற்றை கடந்து வந்த அனுபவத்தின் அடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரதும் உறவினர்களினதும் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றேன். அவர்களை சூழ்ந்திருக்கும் துன்பக் கடலில் இருந்து அவர்கள் மீண்டு வரவேண்டும் என்பதே என்டைய எதிர்பார்ப்பாகும்.
இலங்கையின் கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டதில் இருந்து, இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்ததப்பட்டு இலங்கை கடற்றொழிலாளர்களும், எமது உறவுகளான இந்தியக் கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் இரண்டு தரப்பினரும் இணங்கிக் கொள்ளும் வகையிலான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுத்தி வந்தேன்.

ஓசூர் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை

maalaimalar : ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 
தனியார் நிதி நிறுவனத்தில் போலீசார் விசாரணை
ஓசூர்: ஓசூர் அருகே பாகலூர் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள், மேலாளர் உள்பட 4 பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டதாக மேலாளர் புகார் அளித்துள்ளார். இன்று காலையில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஸ்டாலினுக்கு போனை போட்ட ராகுல்.. "நான் பார்த்துக்கறேன்".. "கதர்"கள் ஷாக்.. என்னாச்சு?

Stalin proposes Rahul as PM candidate in 2019 elections | Deccan Herald

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: கூட்டணியில் சிக்கல், இழுபறி என்று சொல்லப்பட்ட நிலையில், காங்கிரஸும் திமுகவும் இணைந்தே தமிழகத்தில் தேர்தலை சந்திக்கும் என்று தெரிய வந்துள்ளது.. அப்படியானால் கடந்த 4 நாட்களாக திமுகவில் நடந்ததுதான் என்ன? இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் யூகத்தின் அடிப்படையில் நமக்கு தந்த சில தகவல்களை இங்கே சுருக்கி தந்துள்ளோம். "இந்த முறை திமுகவுக்கு வெற்றி வெற்றாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.. இதையும் தவறவிட்டுவிட்டால், 15 வருஷம் ஆட்சியில் இல்லாத நிலை ஏற்படும்.. அத்துடன் கட்சியை நடத்துவதிலும் நிறைய சிக்கல்கள் ஏற்படும். அதனால்தான் பல வியூகங்களை கையில் எடுத்துள்ளது. அதில் ஒன்று கூட்டணி கட்சிகள்.. இந்த கூட்டணி கட்சிகளில் முக்கியமானது காங்கிரஸ் கட்சி.. ஆனால், இந்த தேசிய கட்சியின் பலம் இப்போது குறைந்துள்ளது.. குறிப்பாக தமிழகத்தைவிட புதுச்சேரியில் மிக மோசமான நிலைமையில் காங். உள்ளது.. நாராயணசாமி மீது 5 வருஷமாக அதிருப்தி உள்ளது.. சொந்த கட்சிக்காரர்களே அவர் மீது புகார் சொல்கிறார்கள்.. கிரண்பேடிக்கு டஃப் தர அவரால் முடியவில்லை. 

அதேசமயம், தமிழக காங்கிரஸ் கட்சியோ 40 சீட்டுக்களுக்கு மிஞ்சாமல் வேண்டும் என்று கேட்டு கொண்டிருக்கிறது... எப்போதுமே கூட்டணி இல்லாமல் திமுக தேர்தலை சந்தித்ததும் இல்லை. அதேசமயம், காங்கிரஸை கூடவே இழுத்து கொண்டு செல்வதற்கும், பெருவாரியான தொகுதிகளை தருவதற்கும் திமுக தயாராகவும் இல்லை.. எனவேதான் புதுச்சேரியை கையில் எடுத்ததாக தெரிகிறது

10 முதல் 17 அமைச்சர்கள் சசிகலாவை ஓசூர் எல்லையில் வரவேற்க ரெடியாக இருக்காங்க..

Mathivanan Maran - /tamil.oneindia.com : சென்னை: சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவதை முன்வைத்து அதிமுக, அமமுக வட்டாரங்களில் சுவாரசியமான கிசுகிசுக்கள்தான் ரெக்கை கட்டி பறக்கின்றன. 

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது இல்லை என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு நிலைப்பாடு. ஆனால் ஓபிஎஸ் தரப்பு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக, அமமுகவில் நொடிக்கு நொடி என்கிற வகையில் நெருங்கிய வட்டாரங்களிலும் சரி.. சமூக வலைதளங்களிலும் சரி.. ஏகப்பட்ட கிசுகிசுக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தனை கிசுகிசுக்களையும் பட்டியலிட்டால் தலை கிறுகிறுத்துவிடும். 

 10 முதல் 17 அமைச்சர்களாம்... சசிகலாவை ஓசூர் எல்லையில் வரவேற்க இப்பவே 10 அமைச்சர்கள் ரெடியாக இருக்காங்க.. அந்த 10 பேரும் அப்பாயின்ட்மென்ட் கேட்டு வெயிட் பண்றாங்க.. இந்த 10 என்பது 17 ஆகவும் மாறும் என்பது அமமுகவின் உச்சகட்ட கிசுகிசு. 

 எல்லாம் பேசி முடிச்சுட்டாங்க என்பது இன்னொரு கொசுறு உலா. 10 முதல் 17 அமைச்சர்களாம் சசிகலாவை ஓசூர் எல்லையில் வரவேற்க இப்பவே 10 அமைச்சர்கள் ரெடியாக இருக்காங்க.. அந்த 10 பேரும் அப்பாயின்ட்மென்ட் கேட்டு வெயிட் பண்றாங்க.. இந்த 10 என்பது 17 ஆகவும் மாறும் என்பது அமமுகவின் உச்சகட்ட கிசுகிசு. அதேபோல் ஓபிஎஸ் தரப்பு ஓகே சொல்லியாச்சு.. எல்லாம் பேசி முடிச்சுட்டாங்க என்பது இன்னொரு கொசுறு உலா.

பாஜகவில் இணைந்த பெண் தாதா எழிலரசி: புதுவையில் தேடப்பட்டு வந்த குற்றவாளிக்கு கட்சியில் இடம்

புதுவையில் தேடப்பட்டு வந்த பெண் தாதா பாஜகவில் இணைந்தார்
பெண் தாதா எழிலரசி
BBC : புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த பிரபல பெண் தாதாவை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், பாதுகாப்பு கருதி பாஜகவில் இணைந்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த எழிலரசி(வயது 40) மீது கொலை வழக்குகள், மிரட்டி பணம் பறித்தல், வெடிமருந்து பயன்படுத்தி மிரட்டுதல், மோசடி வழக்கு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் காரைக்கால் பகுதி காவல்துறையினர் எழிலரசியை தேடிவரும் நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார் >காரைக்கால் பிராந்தியம் திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த சாராய தொழிலதிபர் ராமு (எ) ராதாகிருஷ்ணனின் இரண்டாவது மனைவி எழிலரசி, கணவர் ராமுவை தொழில் முன்விரோதம் காரணமாக 2013ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ராமுவின் முதல் மனைவி வினோதா மற்றும் புதுச்சேரி முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் வி.எம்.சி.சிவக்குமார் காரணமாக இருக்கலாம் என எழிலரசி தரப்பினர் கருதியதாக கூறப்படுகிறது.

கூட்டணியில் யார், யார்? ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு! மாசெக்கள் அதிர்ச்சி!

 டிஜிட்டல் திண்ணை: கூட்டணியில் யார், யார்? ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு! மாசெக்கள் அதிர்ச்சி!

minnambalam :மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது. "திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 21ஆம் தேதி அறிவாலயத்தில் நடந்தது. அண்மையில் திமுக கூட்டணிக்குள் யாருக்கு எத்தனை சீட்கள் என்ற விவாதம் திமுகவிலும் கூட்டணி கட்சிகளிலும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியுடன் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள திடீர் பிரச்சினை காரணமாக தமிழ்நாட்டிலும் அது எதிரொலிக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்... ஜனவரி 21ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி பற்றி ஸ்டாலின் சில முக்கியமான தெளிவுகளை ஏற்படுத்தி உள்ளார். மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் பேசிய அவர்... 'நம்முடைய கூட்டணி இப்படியே தொடர வேண்டும் என்பதில் நீங்கள் விருப்பமாக இருக்கிறீர்கள். நானும் இதையே விரும்புகிறேன்....கடந்த ஐந்து வருடமாக நம்முடைய ஒவ்வொரு போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் கூட்டணிக் கட்சிகளும் நம்மோடு சேர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். போராடி வருகிறார்கள். இப்படி நம்மோடு நிற்கும் கூட்டணிக் கட்சிகளை நாம் விட முடியாது... விடக்கூடாது.... அதே நரம் திமுக கூட்டணியில் சேர்வதற்கு இன்னும் சில கட்சிகள் என்னிடம் கேட்டு வருகிறார்கள். நான்தான் அவர்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறேன்.

ஐயோ வேண்டாம் தடுப்பூசி’’ – அலறும் மருத்துவர்களும்,அரசியல்வாதிகளும்! சாவித்திரி கண்ணன்

  aramonline.inசாவித்திரி கண்ணன் :இது வரை இந்திய வரலாற்றில் இல்லாத அதிசயமாக தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் மருத்துவர்களிடமும்,அரசியல்வாதிகளிடமும்,முக்கியஸ்தர்களிடமும் ஒரு பெரும் தயக்கம் நிலவுவது கண்கூடாகத் தெரிகிறது! இது,”தங்களை சோதனை எலிகளாக்கிக் கொள்ள அரசியல்வாதிகளும், வி.வி.ஐபிக்களும்,மருத்துவர்களும் தயாராக இல்லை’ என்பதையே காட்டுகிறது!  உலகத்தை அச்சுறுத்தும் ஒரு நோய்க்கு எதிராக ஒரு தடுப்பூசி கொண்டு வரப்பட்டு,அதனால் நன்மை ஏற்படுமென்றால், அதை ஏற்பதில் நமக்கு எந்த தயக்கமுமில்லை! ஆனால், நூற்றுக்கணக்கான நாடுகளும், தனியார் அமைப்புகளும் தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டிருக்கும் நிலையில் – மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு போவதற்கு முன்பாகவே – அவசர அவசரமாக நம் நாட்டில் தடுப்பூசி திட்டம் முதல் கட்டமாக மூன்று கோடிப் பேருக்கு போடப்படுகிறது என்பது இந்தியாவின் முன்னணி மருத்துவர்களையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது! ஏனெனில் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிந்தால் தான் ஒரு தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திற்னை அறிய முடியும் என்பது மருத்துவ உலகமே கடைபிடித்து வந்த நடைமுறையாகும்! இந்தியாவில் 130 கோடி மக்கள் தொகையில் ஒரு மூன்று கோடி பெரிய விஷயமில்லை என பாஜக அரசு நினைத்ததா தெரியவில்லை!

அரசியல் மாபியாக்கள் பலனடையவே கள்ளுக்கு தடை!- பனை வளத்தை படுகுழிக்கு தள்ளியவர் எம்.ஜி.ஆர் தான்!செ.நல்லசாமி ..

  aramonline.in-மாயோன் : January 21, 2021 உடலுக்கு கேடு விளைவிக்கும் டாஸ்மாக் மதுபானத்திற்கு அனுமதி! ஆனால், உடலுக்கு நன்மை செய்யும் பாரம்பரிய பானமான கள்ளுக்குத் தடையா…? விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் தரும் கள்ளை தடை செய்துவிட்டு, அரசியலில் உள்ள மாபியாக்கள் கல்லா கட்டுவதற்காக டாஸ்மாக் மதுபானத்தை தமிழகத்தில் ஆறாக ஓடவிட்டுள்ளனர் ஆட்சியாளர்கள்…! என்று பொங்கி வெடித்தனர் விவசாயிகள்! சென்னையில் இன்று (21.01.21) தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளரும் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான செ.நல்லசாமி தலைமையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் பார்த்தவர்களின் இதயத்தை உலுக்கியது.

இப்போராட்டம் ஏன் ? என்பது குறித்து செ.நல்லசாமி பேசியதாவது:  உலகில் 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் கள் இறக்கவும் பருகவும் தடை இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் இந்தத் தடை 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. இது நியாயமற்றது.

சுக்ராக்களினதும், நூராக்களினதும் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்கள் ..

Image may contain: 1 person, text

  Manazir Zarook : சிரச லட்சாதிபதி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற சகோதரி சுக்ரா விடயத்தில் சிலர் தற்போது சமூக அவலங்கள் பற்றி பாடம் எடுக்கத் தொடங்கி விட்டார்கள். இதில் சில ஆண்டிமாரின் அலப்பறைகள் வேறு. சமூகப் பிரச்சினைகளை பட்டியலிட்டு அதனை ஒழிக்க உழைக்க வேண்டும் என்றும், அதனை விடுத்து இவ்வாறான வெற்றிகளை கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை எனவும், பலவாறாக இப்பாடம் தொடர்கிறது. சமூகத்தின் பிரச்சினைகளை, அவலங்களை (குறிப்பாக்கிச் சொல்வதென்றால், வறுமையை) ஒழிக்க உழைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தினை யாரும் கொண்டிருக்க மாட்டார்கள். அதற்கு தன்னாலான உதவிகளையும், முயற்சிகளையும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ள வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இங்கு இவ்வாறான உணர்ச்சிசார்ந்து முன்வைக்கப்படும் ஆதங்கங்களின் வெளிப்பாட்டின் பின்னனியில் இரு முக்கிய சிக்கல்கள் உண்டு. சுருக்கமாகப் பார்ப்போம்.

வியாழன், 21 ஜனவரி, 2021

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி... தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை

Arsath Kan - tamil.oneindia.com : பெங்களூரு: சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து உடனடியாக கொரோனா வார்டுக்கு சசிகலா மாற்றப்படவுள்ளார். அங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் தொடர உள்ள

இன்று மாலை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று மட்டும் இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தெரிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி என்ற அறிவிப்பு சோதனை முடிவின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. 
63 வயதாகும் சசிகலாவுக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் இருக்கின்றன. இதற்காக அவர் வழக்கமாக சாப்பிடும் மருந்துகளை உட்கொண்டு வந்த நேரத்தில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட பெங்களூர் பெளரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வகையில் போதிய வசதிகள் இல்லாததால் இன்று பிற்பகல் விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சசிகலா. அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நுரையீரல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

துரைமுருகனுக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைக்குமா?

துரைமுருகனுக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைக்குமா?
minniambalam : திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சென்னையில் இருந்தாலும், தனது சொந்த ஊரான காட்பாடியில் இருந்தாலும் தினம் தினம் அவரை பலரும் வந்து சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகள், நண்பர்கள், நண்பர்களின் மகன்கள், மாற்றுக் கட்சியினர் என்று அவரை தினம் தினம் பலரும் வந்து சந்தித்து அரசியல் பேசுகிறார்கள்,கோரிக்கைகள் வைக்கிறார்கள். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் துரைமுருகனை பொதுச் செயலாளர் என்ற முறையில் சந்தித்து தேர்தலில் சீட் வாங்கும் முயற்சியிலும் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். தன்னிடம் சட்டமன்றத் தேர்தல் வாய்ப்பு கேட்பவர்களிடமெல்லாம், தான் தேர்தலில் நின்ற வரலாறையெல்லாம் சொல்லி, ‘நானெல்லாம் 25 ஆயிரம் ரூபாய்க்குள்ள தேர்தலை முடிச்சிருக்கேன். இப்ப என்னடான்னா கோடிகோடியா கொட்டிக்கிட்டிருக்காங்க. சரி பாத்துக்கலாம்யா’என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

புதிய வேளாண் சட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முன்வந்துள்ள அரசு

tamilmurasu.com.: இரு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வரும் நோக்கில், மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ஒன்றரை ஆண்டுகாலம் வரை நிறுத்தி வைப்பதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்து இருக்கிறது. தலைநகர் புதுடெல்லியில் நேற்று விவசாயிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இதனைத் தெரிவித்தார். இடைப்பட்ட காலத்தில், புதிய சட்டங்கள் தொடர்பில் நீண்டகாலத் தீர்வை எட்டும் விதமாக வேளாண் குழுக்களின் தலைவர்களும் அரசாங்கமும் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என்று வேளாண் அமைச்சு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அரசின் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை வெளியீடு

maalaimalar : சசிகலா உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை வெளியீடு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் நேற்று பவ்ரிங்கில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் முடிவு வந்தது. சிடி ஸ்கேன் உள்பட சில வசதிகள் இல்லாததால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை 6.30 மணி அளவில் சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ‘‘சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். சர்க்கரையின் அளவு சற்று அதிகமாக உள்ளது. நுரையீரல் தொற்று மேலும் பரவாமல் தடுக்க சசிகலாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாசிச பாசகவை எதிர்க்கும் லட்சணம். ! தப்பித்தவறி அதிமுகவை எதிர்த்துவிடக்கூடாது

Image may contain: 5 people, people smiling
Aazhi Senthil Nathan : · பாசிச பாசகவை எதிர்க்கும் லட்சணம். நேற்று சென்னையில் சில அரசியல் குழுக்கள் இணைந்து பாசிச பாசகவை வீழ்த்துவதற்காக ஒரு தேர்தல் வியூகத்தை வகுத்திருக்கின்றன. 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாசிச பாசகவை தோற்கடிப்போம் என்கிற தலைப்பில் ஒரு கலந்தாலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாகவே எங்கள் தன்னாட்சி்த் தமிழகத்தைப் புறக்கணிக்கும் இந்தக் குழுக்கள் இந்த முறை எங்களையும் அழைத்திருந்ததால், நானும் தோழர் தங்கபாண்டியனும் வியப்பும் எதிர்ப்பார்ப்பும் ஒன்று சேர அங்கே சென்றிருந்தோம். ஐம்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றுகூடி எதிர்வரும் தேர்தலில் பாசிச பாசகவைத் தோற்கடிக்கத் திட்டம் தீட்டியிருந்தன.
இதை முதலில் கலந்தாலோசனைக் கூட்டம் என்றுதான் நானும் நினைத்தேன். பிறகுதான் அவர்கள் ஏற்கனவே ஒரு திட்டத்தைத் தீட்டி தயாராக வைத்திருந்தார்கள் என்பதும் ஒரு ஐம்பது அறுபது அமைப்புகளைக் கூட்டி அவர்கள் மத்தியில் இதை அறிவிப்பதற்குத்தான் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது என்பதும் தெரிந்தது. சரி, இது என்ன புதிய விஷயமா நமக்கு என்று அமைதியாக இருந்தோம்.

விடுதலை சிறுத்தைகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டி?

Image may contain: 1 person, text that says 'JUST IN JUST IN JUST IN JUST IN NEWS வி.சி.க. தலைவர் திருமாவளவன் தகவல்! TAMR 7 JUSTIN JUST IN தேர்தலுக்கு 15 நாட்கள் முன், தனிச் சின்னம் பெற்று அதை பிரபலப்படுத்த முடியாது என்பதாலும், வெற்றிவாய்ப்பை கருத்தில் கொண்டும் வரும் சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை; ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் தனித்தன்மையை இழக்காது www.news7tamil.live NEWS7TAMIL NEWS7TAMIL NEWS7TAMIL guாV YTCCL Ranoans TA 560ട0 056 207 191 071 105 082 026 JUSTIN 21JAN2021 21 JAN 2021 FOLLOW US ON 059 1546 783 051'
Vignesh Anand : · உதயசூரியன் சின்னத்தில் விசிக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று விசிக தலைவர் சொன்னதாக செய்தி வருகிறது . இந்த செய்தியால் யாருக்கு நன்மை என்ற விவாதங்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் . முதலில் இந்த செய்தி உண்மை தானா ? இன்றைய ஊடகங்கள் வெளியிடும் செய்திகளில் உண்மை தன்மையே இல்லையே. ில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் 30 தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றால் இதே மேடையில் தற்கொலை செய்து கொள்வேன் என்று எம்.பி ஜெகத் ரட்சகன் சொன்னதை வைத்து பல விவதாங்கள் நடத்தப்பட்டன .
அதில் திருச்சி வேலுச்சாமி என்ற ஆநாகரிக காங்கிரஸ் ஆசாமி சங்கியை விட மிக தெரு பொறுக்கியை போல தரம் தாழ்ந்து விமர்சித்தார். அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் உண்மை திரித்து பேசும் நாக்கு வியாபாரிகள் திமுகவிற்கு ஏகப்பட்ட அறிவுரை வழங்கினர்.

எடப்பாடியை அவமதித்தாரா மோடி? சசிகலாவையும், தினகரனையும் அவர்கள் முற்றிலுமாக கைவிடுவதாக இல்லை.

 சசிகலாவுக்காக எடப்பாடியை அவமதித்தாரா மோடி?

minnambalam : 2021 பிறந்ததுமே 20:20 மேட்ச் வேகத்தில் தேர்தல் களத்துக்குத் தயாராகிவிட்டது தமிழகம். கொரோனா அச்சத்தைத் தாண்டி, தலைவர்களைக் காணக் குவிகிறது கூட்டம். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே பம்பரமாகச் சுழல ஆரம்பித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. புத்தாண்டு பிறந்ததும் அவருடைய நடவடிக்கைகளில் புத்துணர்வையும் புதிய வேகத்தையும் பார்க்க முடிகிறது. ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்திப்பது, திட்டங்களைத் தொடங்கி வைப்பது, ஸ்டாலினுக்கு சவால் விடுவது என்று எத்தனை கோணத்தில் எப்படி பந்து போட்டாலும் அடித்து ஆடத் தொடங்கிவிட்டார் எடப்பாடி.

அதேவேகத்தில்தான் அவருடைய டெல்லி பயணமும் தொடங்கியது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, கூட்டணியை முடிவு செய்துவிடுவதோடு, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா வாயால் ‘எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்’ என்று அறிவிப்பதற்கான உத்தரவாதத்தையும் பெற்றுவிட வேண்டுமென்ற நோக்கில்தான் அவருடைய டெல்லி பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. கட்சியின் தலைவராக நட்டா இருந்தாலும் உள் துறை அமைச்சர் அமித் ஷா எடுப்பதுதான் அங்கு முடிவு என்ற நிலையில், அவருடனான சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது.

பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்தது அமெரிக்கா .. ஜோ பைடன் உத்தரவு:

Joe Biden describes Kamala Harris as 'proven fighter' for middle class in  first joint appearance - YouTube
thinathanthi  :வாஷிங்டன், அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்பது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் நேற்று பதவி ஏற்று கொண்டார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்று கொண்டார். ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்ற முதல் நாளிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட உள்ளார் என வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ஜென் சகி கூறினார்.

சசிகலாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல்: அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

dayllythanthi : பெங்களூரு, 27-ந்தேதி விடுதலையாக உள்ள நிலையில் பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் செலுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை கடந்த 2020-ம் ஆண்டு செலுத்தினார். இதையடுத்து தண்டனை காலம் முடிவடைவதையொட்டி சசிகலா வருகிற 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் கடிதம் அனுப்பி இருப்பதாக அவரது வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் கூறினார்.

மலையக ஜாதி அமைப்பில் அருந்ததியருக்கு இழைக்கப்பட்ட அநீதி

அருந்ததியர் சமூகத்தின் ஆவணப் பெட்டகம்.  .namathumalayagam.com - நிலாந்தி சசிகுமார் :இலங்கையின் வரலாற்றில் அருந்ததியினர் சமூகம் பற்றி வெளிவரும் முதல் நூல் இதுவாகும்...


           90 களில் சரிநிகரில் வெளிவந்த தொடர் பத்தி தலித்தின் குறிப்புகளாக நூல் வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
உரிமைகள் மறுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் வரலாற்றில் எப்போதுமே பேசாப் பொருளாகவே வைக்கப்படுகின்றன. ஆனால் சரவணன் அவர்கள் எப்போதும் பேசாப் பொருளை பேச விழைவதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். 

அதே போல் அவர் எழுதும் கட்டுரைகளையும் நூல்களையும் தேடி வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவளாக நான் இருப்பதன் காரணம் அவரது கட்டுரைகளில் உள்ள உண்மைத் தன்மைகள் மற்றும் ஆதாரங்களின் வலு என்பனவேயாகும்.
வர்க்கப் போராட்டம், தமிழ் தேசியப் போராட்டம், பெண்ணியம், சூழலியல், சாதியத்திற்கு எதிரான போராட்டம் என பல தளங்களில் பணியாற்றி வரும் இவரின் எழுத்துப் பணியும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் கூடியதே.
 எப்போதுமே சாதியம் சார்ந்த நூல்களை எழுதுவதிலும் அது குறித்துப் பேசுவதிலும் பின் நிற்கும் மக்களின் முன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதோடு மட்டுமன்றி முகத்திற்கு நேராகக் கேள்விக் கணைகளை அள்ளி வீசிச் சென்றிருக்கிறார். யாரும் பதில் சொல்ல முடியாது திக்கித் திணறிக் கொண்டிருக்கையில் தான் அவர் வெற்றி காண்கிறார்.

சசிகலாவுக்கு என்ன நடக்கிறது? உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம்..

சசிகலா பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இதுவும் ஒரு நாடகமோ என்ற சந்தேகம் லேசாக எழுந்தாலும்கூட உண்மையிலேயே இவரின் ஆரோக்கியம் கெட்டுப்போயிருக்க வாய்ப்பிருக்கிறது .
ஏராளமான மன உளைச்சல் நீண்ட சிறைவாசம் வயதிற்கே உரிய ஆரோக்கிய குறைவு போன்ற காரணங்கள் ஏராளம் உண்டு .
இவை எல்லாவற்றையும் விட இவரின் அரசியல் எதிரிகள் மிகவும் அதிகம் . அதிலும் மத்திய மாநில அரசியல்வாதிகள் இவரின் வரவை விரும்பமாட்டார்கள் என்ற சந்தேகம் தெரிகிறது .
எனவே இவரின் உயிர் இன்று மிகவும் ஆபத்தில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது
இவருக்கு சர்வ வல்லமை உள்ள மத்திய மாநில அரசுகளிடம் இருந்து ஆபத்து வருவதாக இருந்தால் இவர் எப்படி இவற்றில் இருந்து மீளப்போகிறார் என்ற கேள்வி பலமாக இருக்கிறது.
இன்றைய நிலையில் அப்படி ஒரு ஆபத்து வருகிறது என்று சசிகலாவோ சசிகலாவை சார்ந்தவர்களோ நம்பினால்,
அவர்கள் நாடவேண்டியது திமுகவையும் தளபதி ஸ்டாலினையும்தான்

நாட்டுமாடுகளைப் பார்க்கமுடியாத மாட்டுப் பொங்கல்…!

aramonline.in மு.பத்மநாபன்: மாட்டுப்பொங்கல் ஒரு அதிர்ச்சியான செய்தியை மக்களுக்கு சொல்லிச்சென்றது. எங்க ஊர் வந்தவாசியில் அந்தக் காலத்தில் உழவு மாடுகளும், பசுக்களும் அழகழகாக ஜோடித்து, தான் விரும்பும் கட்சிக்கொடிகலர்களை கொம்புகளில் தீட்டியும் 500 மாடுகளுக்கு குறைவில்லாமல் வரும் திடலில் இன்று 50க்கு குறைவான மாடுகள்?. அந்த மாடுகளில் நாட்டு காளைமாடுகளோ பசுக்களோ ஒன்றுகூட இல்லை. அனைத்தும் ஜெர்ஸி இனகலப்பின பசு மாடுகளே. இன்றைய விவசாயம் 100%டிராக்டர்,டில்லர்கள் மூலம் செய்யப்படுவதால் விவசாயப் பணிகளுக்கு நாட்டு ஆண்மாடுகள் தேவையற்றதாக மாறிக் கொண்டிருக்கிறது. மாட்டுச் சாணமே இயற்கை உரமாக பயன்பட்ட நிலத்தில் ரசாயண உரங்கள்…!

உழவு இயந்திரங்களை வாங்க மானியங்களை கொடுத்து விவசாயத்தை இயந்திரமயமாக்கிவிட்டது அரசு. உழவுமாடுகளை அரசே முற்றிலுமாக  ஒழித்துவிட்டது.

புதன், 20 ஜனவரி, 2021

பிரபாகரன் கொல்லப்பட்ட மகிழ்ச்சியில் முன்னாள் புலி உறுப்பினர். முல்லைத்தீவு கிருபாகரன்! இலக்கம் 563. ‘கார்முகிலன்’

முல்லைத்தீவு கிருபாகரன்!  இலக்கம் 563. ‘கார்முகிலன்’
ilankainet.com : குருகந்த பௌந்த விகாரைக்கு நிதியுதவி யார் தெரியுமா? பிரபாகரன் கொல்லப்பட்ட மகிழ்ச்சியில் முன்னாள் புலி உறுப்பினர். முல்லைத்தீவு மாவட்டம் குருந்தக் குன்றில் அமைந்துள்ள சைவ ஆலயம் மற்றும்; பௌத்த விகாரை தொடர்பில் காலத்திற்கு காலம் இனமுரன்பாடுகளை தோற்றுவிக்கின்ற செய்திகள் பரவி வருகின்றது. அங்கே புதிதாக பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்விகாரையினால் சைவ ஆலயத்தின் இருப்பு கேள்விக்குறியாகின்றது என்றும் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.                    இந்நிலையில் குறித்த பௌத்த விகாரைக்கு முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரே தேவையான நிதியுதவிகளை மேற்கொண்டுவருதாகவும் அங்கு அமைந்துள்ள புத்தர் சிலையானது தனது முழுச்செலவிலேயே அமைக்கப்பட்டதாகவும் முல்லைத்தீவைச் சேர்ந்த கிருபாகரன் எனப்படும் முன்னாள் புலி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.        அவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளதாவது:

கிருபாகரன் (38) ஆகிய நான் முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்தவன். புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு காரணமாக அவ்வியக்கத்தில் இணைந்து செயற்பட்டதுடன் யுத்தத்தின்போது ஒருகாலை இழந்தேன். தற்போது பௌத்த மதத்தை தழுவியுள்ளதுடன் அம்மதத்தை முல்லைத்தீவில் பரப்புவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூட்டணிக் கட்சிகளை நிர்பந்திக்கவில்லை: மு.க.ஸ்டாலின்

tamil.indianexpress.com :தமிழகத்தில் வரும் மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரத்தில், அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  திமுக தலைவர் ஸ்டாலின்,  மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர்  கமல்ஹாசன் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக – வை புறக்கணிப்போம் என்ற பெயரில், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கிராமசபா கூட்டத்தை நடத்தி வருகிறார்..... மேலும் அதிமுக ஆட்சியில் அடுக்கடுக்காக ஊழல் புகார்களை சுமத்தி வரும் ஸ்டாலின், வரும் தேர்தலில் மக்கள் அதிமுக – வை புறக்கணிப்பார்கள் என தெரிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், திமுக –வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிடுவதாக கூறியுள்ளனர்.

Bank Alert: பிப்ரவரி 1 முதல் ATM-களில் இருந்து பணம் எடுக்க முடியாது..! பஞ்சாப் நேஷனல் வங்கி


zeenews.india.com  : PNB கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி, பிப்ரவரி 1 முதல் இந்த ATM-களில் இருந்து பணத்தை எடுக்க முடியாது என்று வங்கி தெரிவித்துள்ளது..நாடு முழுவதும் அதிகரித்து வரும் ATM மோசடிகளை கட்டுப்படுத்த பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. உங்களுக்கும் PNB வங்கியில் கணக்கு இருந்தால், இது உங்களுக்கு முக்கியமான செய்தி, 1 பிப்ரவரி 2021 முதல், PNB வாடிக்கையாளர்கள் EMV அல்லாத ATM இயந்திரங்களில் (Non-EMV ATM) பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது. அதாவது, EMV அல்லாத இயந்திரங்களிலிருந்து நீங்கள் தற்காலிக சேமிப்பை அகற்ற முடியாது. இது குறித்து தகவலை PNB தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல்களை வழங்கியுள்ளது. .... 

மருத்துவமனையில் சசிகலா! ஆக்சிஜன் லெவல் குறைவு

ஆக்சிஜன் லெவல் குறைவு: மருத்துவமனையில் சசிகலா

minnambalam.com :பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா இன்று ( ஜனவரி 20) பகல் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வரும் ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில்,. சில நாட்களுக்கு முன்பே அவரிடம் நிர்வாக அலுவல் ரீதியான கையொப்பங்கள் பெறப்பட்டு விட்டன. இந்த நிலையில் சசிகலாவை வரவேற்பதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில்.., இன்று சசிகலாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்வாதி கொலையை தொடர்ந்து ஜெயலலிதா? தொடர்கொலைகள் .. ?

Image may contain: ‎3 people, ‎text that says '‎مத THANIETY PRESENT SITUATION OF INFOSYS EMPLOYEE SWATHI MURDER CASE‎'‎‎

 Venkat Ramanujam   :; ஸ்வாதி முதல் சசி வரை
Infosys software Engineer ஸ்வாதி படுகொலை
Infosys தான் முக்கிய ஸ்விஸ் வங்கியின் software Management பார்த்து வருகிறது .. அதை நிர்வகிக்கும் பொறுப்பு ஸ்வாதி என்றே யார் சொல்லியும் யாரும் தெரிய வேண்டியது இல்லை
ஸ்வாதி வேலை பார்த்த அதே அலுவகத்தில் ஸ்வாதி கொலைக்கு பின்னர் அதே அலுவலகத்திலே இன்னொரு நபரும்  #தற்கொலை  செய்து கொள்கிறார் ...
ஸ்வாதி வேலை பார்த்த அதே அலுவகத்தில் #security காணாமல் மாயமாய்  போகிறார் .
chargesheet 2 நாட்களுக்கு முன்னர் #ராம்குமார் சிறையிலே வயர் கடித்து மர்ம மரணம்..
சொத்து குவிப்பு வழக்கில் சில முக்கிய பிரச்சனையில் Swiss கணக்கை காட்டி பாஜக் முக்கிய புள்ளியுடன்  ஜெயலலிதா கார சார விவாதம் ..இதன் ஒரே சாட்சி #சசிகலா ..  
ராம்குமார் மரணத்துக்கு பின்னர்  அடுத்த 2 நாட்களுக்குள் ஜெயலலிதா நிரந்திரமாக நினைவிழக்கிறார் ..
ஜெயலலிதா வின் 75 days மர்ம நாட்களில்  மத்திய அரசின் Home Minister உத்தரவின் படி  இயங்கும்   Z+ NSG உயர் செக்குரிட்டி நிலை யாருக்குமே தெரியவில்லை  ..

இயேசு அழைக்கிறார் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் ஐ.டி ரெய்டு .. I-T raids underway at 28 premises of Paul Dhinakaran in Tamil Nadu

tamil.indianexpress.com  : paul dhinakaran home it raid : மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் மத போதனை நிகழ்ச்சியை நடத்தி வருபவர்… 

 மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் மத போதனை நிகழ்ச்சியை நடத்தி வருபவர் பிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரன். இவருக்கு சொந்தமான அடையாறு இல்லம், கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட உள்பட 28 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.  இயேசு அழைக்கிறார் என்ற குழும்பத்திற்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் வந்ததாகவும் இந்த புகாரின் அடிப்படையில் வருமானத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

32 லட்சம் கோடி சொத்து’ தேசத்தின் உடைமையை பாதுகாப்போம்.

Image may contain: 1 person
Chinniah Kasi : · தீக்கதிர், ஜனவரி 20, 2021 நிதித்துறையில் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப்பட்டது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாகும். ஜனவரி 19- 1956, ஆயுள் இன்சூரன்ஸ் துறை தேசியமயம் அறிவிக்கப்பட்ட நாள். 154 இந்திய இன்சூரன்ஸ் கம்பெனிகள், 16 அந்நிய கம்பெனிகள், 75 வருங்கால வைப்புநிதி சொசைட்டிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு தேசியமயமாக்க முடிவு செய்யப்பட்டது. சட்டம் இயற்றப்பட்ட மறுநாளே 42 பொறுப்பாளர்கள் அரசாங்கத்தால் இந்த கம்பெனிகளை எடுப்பதற்காக அல்லது நிர்வகிப்பதற்காக உடனடியாக நியமிக்கப்பட்டனர். இது நாடு முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர்களின் கனவு மட்டுமல்ல; ஒரு அரசாங்கம் தன்னுடைய நாட்டு மக்களுக்கு எந்த வகையில் சேவை செய்ய வேண்டும் என்பதற்கான வாக்குறுதி ஈடேறிய நாள்.ஒரு பொதுத்துறை நிறுவனமாக இன்சூரன்ஸ் துறையை பாதுகாப்பதற்கான ஏற்பாடு அது. அரசின் ஏகபோகமாக அந்த துறை மாற்றப்பட்டது.

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவி ராஜேஸ்வரி சடலமாக மீட்பு! கழுத்து நெரிக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டு,

 மாணவி ராஜேஸ்வரியின் உறவினர்கள்

நக்கீரன் :திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை விடுதி உள்ளது.
ிருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை விடுதி உள்ளது.  இக்கல்லூரியில் அரியலூர் மாவட்டம்,
கருப்பூர் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமையாவின் மகள் ராஜேஸ்வரி     டி-பாஃம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
மாணவி ராஜேஸ்வரி இம்மாதம்    17-ம் தேதி தனது வீட்டிலிருந்து கல்லூரிக்கு வந்துள்ளார். 

திங்கள் கிழமை   இரவு 1 மணி வரை கல்லூரி விடுதியில் உள்ள தனது சக தோழிகளுடன் நன்றாகப்   பேசியுள்ளார். அதிகாலையில் மாணவி ராஜேஸ்வரி விடுதியில் காணவில்லை என சக    மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர்.. 

திமுக கூட்டணி நிலவரம்.. 180 தொகுதிகளில் உதயசூரியன்?

டிஜிட்டல் திண்ணை:  திமுக கூட்டணி நிலவரம்: ஸ்டாலின் சொல்லும் மெசேஜ்
minnambalam.com : ொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. “திமுகவின் அவசர மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 19ஆம் தேதி, இரவு தேனி மாவட்டத்திற்குச் சென்று இரவு தங்கிவிட்டு இன்று கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தார், ஆனால் தேனி மாவட்ட பயணத்தை ரத்து செய்துவிட்டு, இன்று 20ந் தேதி சென்னையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நாளை ஜனவரி 21ஆம் தேதி, மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்துக்கு அழைப்பு கொடுத்துள்ளார்.  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி சம்பந்தமாக பேசவிருப்பதாகவும் அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.   அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற திமுக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் முன்னிலைப் படுத்தப்பட்டதை அடுத்தும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றித்தான் இரு கட்சிகளிலும் பேச்சாக இருக்கிறது. புதுச்சேரி விவகாரத்தில் திமுக மேற்கொண்டிருக்கும் பணி கட்சி பணிகளை தவிர தேர்தல் பணி அல்ல என்று மு க ஸ்டாலின் இந்து ஆங்கில பத்திரிக்கைக்கு நேற்று பேட்டி கொடுத்திருந்தார்.

சாலையோரம் தூங்கிய தொழிலாளர்கள் 15 பேர் பலி! குஜராத்தில்

    minnambalam ": குஜராத்தில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர். பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நிதி உதவியை அறிவித்துள்ளார். குஜராத் மாநிலம், சூரத் நகரத்தில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்திருப்பது கொசம்பா கிராமம். அங்கு, ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் வந்து வேலை செய்துவிட்டு, நேற்று முன்தினம் சாலையோரம் நடைபாதையில் கண் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு தாண்டிய நிலையில், கிம் என்ற இடத்தில் இருந்து மாண்ட்வி என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டர் டிராலி மீது பயங்கரமாக மோதியது. அந்த வேகத்தில் லாரியானது சாலையில் இருந்து விலகி, சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறி ஓடியது. இதில், தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் உடல்கள் நசுங்கின.... 

தொலைந்த உறவுகளைத் தேடும் ஆயிஷா பரமேஸ்வரியின் கதை.. மலையகத்தை சேர்ந்தவர்




மணி ஶ்ரீகாந்தன்:..எட்டு வயதில் தமது உறவுகளை தொலைத்து விட்டு அவர்கள் எங்கிருக்கிறார்களோ என்று கனத்த இதயத்துடன் இன்று வரை தேடிக் கொண்டிருக்கிறார்.சிறுவயதில் காணாமல் போனவர்கள் பல வருடங்களுக்குப் பிறகு தமது உறவுகளை சந்தித்து அகமகிழ்ந்து போகும் சம்பவங்கள் உலகில் பல நாடுகளில் தினமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
போரில் தொலைந்து போன தமது குழந்தைகள் அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனப் பிறகு பெற்றோர்களுடன் இணைவது, சுனாமியில் தொலைந்த சிறுவனின் பெற்றோர்களை அடையாளம் காணும் முயற்ச்சி, வறுமையின் காரணமாக ஆங்கிலேயருக்கு தமது குழந்தையை விற்ற தமிழ்த் தாயை தமது 30வது வயதில் சந்திக்கும் பிரிட்டிஷ் தம்பதியரின் புதல்வன் உள்ளிட்ட செய்திகளை நாம் அவ்வப்போது படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இப்படியான நிகழ்வுகள் இன்று வரை தொடர் கதையாக நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

இந்த பரமேஸ்வரி என்ற ஆயிஷாவின் கதையும் அப்படித்தான் தொடங்குகிறது.
எட்டு வயதில் தமது உறவுகளை தொலைத்து விட்டு அவர்கள் எங்கிருக்கிறார்களோ என்று கனத்த இதயத்துடன் இன்று வரை தேடிக் கொண்டிருக்கிறார்…

இசைக்குயில் என்.சி.வசந்தகோகிலம் ! புகழின் உச்சியில் தனது 32ஆம் வயதில் திடீரென மறைந்த நட்சத்திரம்

Image may contain: 1 person, closeup

Sukumar Shan: வானொலி மற்றும் சினிமாவின் பொற்கால நினைவலைகள்.!
இசைக்குயில் ! என்.சி.வசந்தகோகிலம் - சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் ஒரு இனிய குரலுக்குச் சொந்தக்கார பாடகி ஒருவர் இருந்தார். அவர்தான் என்.சி.வசந்தகோகிலம் என்ற புகழ்பெற்ற பாடகி.
நாகப்பட்டினம் சந்திரசேகர வசந்தகோகிலம் என்பது இவரது முழுப்பெயர். இன்னிசை பாடி புகழ் பெற்ற காரணத்தால் அவருக்கு இந்தப் பெயரை இட்டார்களோ என்னவோ தெரியவில்லை
பிறந்தபோது இவருக்கு இட்ட பெயர் காமாக்ஷி. பிறந்த ஊர் இப்போதைய கேரள மாநிலத்தில் கொச்சி சமஸ்தானத்துக்குட்பட்ட இரிஞ்சாலக்குடா எனும் ஊர். அவர் இந்த பூமியில் வாழ்ந்த ஆண்டுகள் மிகக் குறைவு.
இளம் வயதில், தனது 32ஆம் வயதில் இவ்வுலக வாழ்க்கையை நீத்துவிட்ட இந்தப் பாடகி முழு வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் புகழின் உச்சிக்கே சென்றிருப்பார் என்பதில் ஐயமில்லை,
இவர் பிறந்தது 1919ஆம் ஆண்டில். காலமானது 1951 நவம்பர் 8ஆம் தேதி. கர்நாடக சங்கீதத்தில் பெரும் புகழ் பெற்றது மட்டுமல்ல, திரைப்படங்களிலும் அந்த நாளில் பாடி நடித்தும் புகழ் பெற்றார். கர்நாடக சங்கீதத்தில் பாடல்களைப் பாடி மக்களின் மனங்களைக் கவர்ந்தவர்.

செவ்வாய், 19 ஜனவரி, 2021

தீவிர சிகிச்சை பிரிவில் அமைச்சர் காமராஜ்... எக்மோ உள்ளிட்ட சிகிச்சைகள் ..

tamil.oneindia.com : சென்னை: கொரோனா காரணமாக கடந்த 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இதனிடையே அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். ஆகியோர் இரவு 10 மணியளவில் எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு காமராஜின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை! ஸ்ரீமுஷ்ணம் முடிகண்டநல்லூரைச் சேர்ந்த (14 வயது)

hjk

 nakkeeran :கடந்த 2019- ஆம் ஆண்டு ஸ்ரீமுஷ்ணம் முடிகண்டநல்லூரைச் சேர்ந்த (14 வயது) சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தது சம்பந்தமாக செல்வகுமார் என்பவர் மீது சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து  மகளிர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணவேணி விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்தார்.

   இந்த வழக்கு கடலூர் போக்சோ சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் இன்று நீதிபதி எழிலரசி, விருத்தாசலம் தாலுக்கா பூதாமூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 4,000/- அபராதத் தொகை விதித்து உத்தரவிட்டார். இதனடிப்படையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் சிறப்பு அரசு வழக்குரைஞர் கலாசெல்வி திறம்பட வழக்கினை கொண்டுசென்று எதிரிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுமூலம் ரூபாய் 3 லட்சத்தை 30 நாட்களுக்குள் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

maalaimalar : சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
புதுடெல்லி:டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  * புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கைகளை ஏற்று பிரதமர் மோடி தமிழகம் வருவதாக கூறி உள்ளார்.

பின்னர் சசிகலா தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது.

* சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை.

அடித்தட்டு மக்களுக்கு சினிமா Luxury Budget ஆக மாறிவிட்டது... 10 ஆண்டுகளுக்கு முன்பே?

Underrated Tamil films of 2018

Karthikeyan Fastura : · Covid உருவாக்கியுள்ள Behavioral Changes என்ன அலசிவரும்போது புலப்பட்ட சில விஷயங்கள் 1. சினிமா பார்க்க தியேட்டர் செல்வது குறைந்துள்ளது. அடித்தட்டு மக்களுக்கு சினிமா 10 ஆண்டுகளுக்கு முன்பே Luxury Budget ஆக மாறிவிட்டது. Middle Class மக்களுக்கு மாதாந்திர Budgetல் 1000ரூபாய்க்கு OTT சென்றுவிடலாம் என்ற எண்ணம் இருந்தது. அது சரியான முடிவு என்று இந்த கோவிட் காலம் நிரூபித்திருக்கிறது. இனி அவர்கள் சிறுபடங்களுக்கு தியேட்டர் வருவது கடினம். இது இங்கு மட்டுமல்ல உலகம் முழுக்கவே இது தான் நடந்து வருகிறது. தொழில்நுட்பமும் மிகக்குறைவான விலையில் தரமாக கிடைக்கிறது என்பது கூடுதல் வசதி.

2. இந்த காலகட்டத்தில் மிக அதிகமாக விற்பனையானது ஸ்மார்ட்போன்கள். இதற்கு பல காரணங்கள். இதன் பக்கவிளைவாக நிறைய Youtube Channels பிறந்திருக்கிறது. அதில் அதிகமாக உருவானவை சமையல். கூகிளிற்கு அடுத்து மக்கள் அதிகம் தேடியது Youtubeல். அதற்கு அடுத்த இடத்தில் Amazon.
3. நிறைய ஆன்லைன் வகுப்புகள் உருவாகியுள்ளது. பல தேவையற்றவை என்றபோதும் மக்கள் ஆர்வம் பலமடங்கு பெருகியுள்ளது. சில ஆன்லைன் வகுப்பறை ஸ்டார்ட்அப்கள் இந்த காலகட்டத்தில் கன்னாபின்னாவென்று வளர்ச்சி கண்டுள்ளது.
4. பங்குச்சந்தை நிதிமுதலீடுகளில் மக்களின் ஆர்வம் பெருகியுள்ளது. இந்த காலகட்டத்தில் Upstox போன்ற Market Brokerage Companies மும்மடங்கு Accounts புதிதாக வந்துள்ளது. எத்தனைபேர் புரிதலுடன் தொடங்கியுள்ளார்கள் என்று தெரியவில்லை.

பாடம் படிக்கவில்லை என கூறி 11 வயது மகனை தீ வைத்து கொளுத்திய கொடூர தந்தை.. ஐதராபாத்: தெலுங்கானா

malaimalar : 6-ம் வகுப்பு படிக்கும் தனது 11 வயது மகன் பாடம் சரியாக படிக்கவில்லை என கூறி அவனை தந்தையே தீ வைத்து கொளுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள குஹட்பல்லி பகுதியை சேர்ந்தவர் பாலு. இவருக்கு 11 வயதில் சரண் என்ற மகன் உள்ளார். சரண் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சரண் வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்துள்ளான். இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுகிழமை இரவு சரண் தனது தாயுடன் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது மதுபோதையில் வீட்டிற்கு வந்த தந்தை பாலு சிறுவனை அருகில் உள்ள கடைக்கு சென்று பீடி வாங்க அனுப்பியுள்ளார்.

சிறுவன் சரண் பீடி வாங்கிக்கொண்டு வந்து தனது தந்தையிடம் கொடுத்துவிட்டு மீண்டும் டிவி பார்க்க சென்றுள்ளான்.

கட்சி ஆரம்பிக்காததால் சிரமம்... கடனில் மூழ்குது லதா ரஜினியின் ஆஸ்ரம்!

கட்சி ஆரம்பிக்காததால் சிரமம்... கடனில் மூழ்குது லதா ரஜினியின் ஆஸ்ரம்!
minnambalam : ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை கிண்டியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியை நிர்வகித்து வரும் ஸ்ரீராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாளராக அவர் இருக்கிறார். இந்தப் பள்ளி அமைந்துள்ள இடத்துக்கு கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் வரை 1.99 கோடி ரூபாய் வாடகையைக் கல்விச் சங்கம் செலுத்தவில்லை என்று புகார் கிளம்பியது. இதற்காக இடத்தின் உரிமையாளர்கள் வெங்கடேஸ்வரலு, பூர்ணசந்திர ராவ் ஆகியோர் 2014ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் பின்னும் வாடகை செலுத்தப்படாததால், 2017ஆம் ஆண்டில் பள்ளிக்குப் பூட்டுப் போட்டனர். நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று பள்ளியைத் திறந்த லதா, 2020 ஏப்ரலுக்குள் இடத்தைக் காலி செய்வதாக ஒப்புக்கொண்டார்.

சீட்டைக் குறைத்தார் பீகே: ஸ்டாலின் சொன்னார் ஓகே! திமுக கூட்டணிக்கு வேட்டு?

சீட்டைக் குறைத்தார் பீகே: ஸ்டாலின் சொன்னார் ஓகே! திமுக கூட்டணிக்கு வேட்டு!

காங்கிரஸுக்கு 10 சீட்டுகள்தான் என்று இப்போது முடிவெடுத்திருக்கிறார் ஸ்டாலின். அது அதிகபட்சம் 11 ஆகுமே தவிர அதற்கும் அதிகமாக வாய்ப்பேயில்லை. வைகோ 16 சீட்கள் கேட்கிறார்; அவருக்கு 5 சீட் மட்டுமே தருவதாக முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 4 சீட்டுகள், விடுதலைச்சிறுத்தைகள், மனிதநேயமக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 2, கொங்கு ஈஸ்வரன், பச்சமுத்து, வேல்முருகன், பார்வர்ட் பிளாக் கட்சிகளுக்கு தலா ஒரு சீட் என்ற கணக்கில்தான் லிஸ்ட் கொடுத்திருக்கிறார் பீகே. அதற்கு ஸ்டாலினும் ஓகே சொல்லிவிட்டார்’’ என்று கூட்டல் கழித்தல் கணக்கைப் போட்டுக்காட்டினார்கள் திமுக சீனியர்கள்

minnnambalam :ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது என்பார்கள். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வந்துள்ள ஓவர் கான்ஃபிடன்ஸ் அவரை சிம்மாசனத்தில் அமர்த்தப் போகிறதா அல்லது சின்னாபின்னமாக்கப் போகிறதா என்பதுதான் இப்போது திமுக சீனியர்களின் சீரியஸ் விவாதமாகவுள்ளது. சென்ற 2019ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, திமுக அமோக வெற்றியைப் பெற்றது. அந்தத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு ஆலோசனை தந்தது சுனில். அவருடைய நிறுவனம்தான் இப்போது அதிமுகவுக்கு ஆலோசனை சொல்லிக்கொண்டிருக்கிறது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற பிரமாண்ட வெற்றிதான், ஸ்டாலினுக்கு தேசிய அரசியலில் ஓர் அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. ஆனால் அவருக்கோ, அவருடைய கட்சியின் எம்.பிக்களுக்கோ அது பெரிதாக உதவவேயில்லை. திமுகவின் ஒரே டார்கெட் சட்டமன்றத் தேர்தலில் அதே அளவு வெற்றியைப் பெற்று ஆட்சி பீடத்தில் அமர்வது மட்டும்தான்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்

daylithanthi : சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை, புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா. இவருக்கு 93 வயது. ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர். இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் சாந்தா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். மேலும் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப்புகழ் பெற்றவர் சாந்தா. அவர் தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்ம விபூஷண் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். டாக்டர் சாந்தாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்படுகிறது.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்... 2 தொகுதியில் போட்டி... மம்தா பானர்ஜி அதிரடி

Vigneshkumar - tamil.oneindia.com : கொல்கத்தா: வரும் சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம், பவானிபூர் என இரண்டு சட்டப்பேரவை தேர்தல்களிலும் போட்டியிடவுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
வரும் 2021ஆம் ஆண்டு மே மாதத்திற்குத் தமிழகம், மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சார பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.   
தமிழகமும் மேற்கு வங்காளமும் பாஜக நுழைய முடியாத மாநிலங்களாகக் கருதப்பட்டு வந்தது. இதை உடைத்து, மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதற்கேற்றவாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்களும் பாஜகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.
நந்திகிராமில் போட்டி இந்நிலையில் இன்று நந்திகிராமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, "வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவேன். இது எனக்கு ராசியான இடம்" என்றார். 10 ஆண்டுகளுக்கு முன், மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வர அம்மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் முக்கிய காரணமாக இருந்தது. அந்தப் போராட்டம் முக்கியமாக நந்திகிராம் பகுதியிலேயே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

'அந்தரி இல்லு!' எங்கள் வீட்டில் யாரும் தங்கி சமைத்து சாப்பிடலாம்!

Image may contain: 2 people, people standing
dinamalar : எங்கள் வீட்டில் யாரும் தங்கி சமைத்து சாப்பிடலாம்! பசியோடு இருக்கும் யார் வேண்டுமானாலும், அந்த வீட்டிற்குள் சென்று சாப்பிடலாம்; தேவைப்படும் உடைகளை எடுத்து அணிந்து கொள்ளலாம். அதற்கு ஏற்ற அனைத்து வசதிகளையும் செய்து உள்ளது பற்றி, டாக்டர் சூரிய பிரகாஷ் விஞ்சமூரி - டாக்டர் காமேஸ்வரி தம்பதி: "ஒரு நாள் காலை, 11:30 மணி இருக்கும். பசியோடு ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தார். உணவு சமைத்து பரிமாறினோம். வேக வேகமாக அந்த உணவை வாயில் போட்டு, தட்டில் இருந்தவற்றை, ஒரு சில நிமிடங்களில் காலி செய்து விட்டார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. 'ஏன் சார் அழுகிறீர்கள்' என்றோம். 'சாப்பிட்டு, இரண்டு நாட்கள் ஆகி விட்டன' என்று கூறி, சாப்பிடாமல் இருந்ததற்கான காரணத்தையும் கூறினார்.
அப்போது தான் எங்கள் மனதில், இந்த வீடு பற்றிய எண்ணம் உதித்தது.
பசியோடு, யார் வேண்டுமானாலும் வந்து, தேவையானதை சாப்பிட்டு செல்ல வசதி ஏற்படுத்தினால் என்ன என்ற எண்ணம் வந்தது.

மலையக மக்கள் முன்னணி என்ற முதல் அரசியல் கட்சியை மலைநாட்டில் .. Murugan Sivalingam

Image may contain: 2 people, people dancing, people standing, people on stage and people playing musical instruments

Murugan Sivalingam : · சாஸ்திரி... சிறிமா வதைப்படலம் பழையன நினைத்தல்--6!  

சிவலிங்கம் செந்தூரன் இரட்டையர்கள் உருவாக்கிய ஹைலண்ஸ் கல்லூரி அடையாளங்களான சில பிரபல்யங்களை இங்கு பதிவிடுவதுபெருமைக்குரியதாகும்! மு.க.நல்லையா என்ற "சாரல்நாடன்"கல்லூரி காலத்திலேயே தமிழ்..ஆங்கில மொழியில் பேச்சாற்றல் கொண்டவர். கல்லூரி தமிழ்ச்சங்க கையெழுத்துப் பத்திரிகையான "தமிழோசை" யின் ஆசிரியராக செயற்பட்டவர். தொழிலில் தலைமை தேயிலைத் தொழிற்சாலை உத்தியோகத்தராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.தோட்ட சேவையாளர் சங்கத்தின் செயலாளராக இருந்தவர்.கவிதைகள் சிறுகதைகள்.. ஆய்வு கட்டுரைகள் என இலக்கியப் படைப்புக்களைத் தந்தவர் கோதண்டராமன் நடேசய்யர்...கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை...இர.சிவலிங்கம் ஆகியோர் பற்றி வரலாற்று நூல்கள் எழுதியவர். பல இலக்கிய ஆய்வு நூல்களும் எழுதியவர்.மு.சிவலிங்கம் நாடகம் நடித்தல்..மேடைப் பேச்சு என முன்னணியில் இருந்தவர். சாரல்நாடனுக்கு அடுத்து கல்லூரியில் தமிழ்ச்சங்கப் பத்திரிக்கையான தமிழோசைக்கு ஆசிரியராக இருந்தவர்

கலி.பூங்குன்றன் : திராவிட இயக்கம் சாதித்தது என்ன?

Image may contain: 2 people

  திராவிட இயக்கம் சாதித்தது என்ன? (கலி.பூங்குன்றன்) பிராமணர் அல்லாதார் இயக்கமான திராவிட இயக்கம் தோன்றியதற்கு முக்கியக் காரணம், காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்திய பிராமண வழக்கறிஞர்கள்தான். அவர்கள் ஆதிக்கம் எங்கும் நிறைந்திருந்தது என்பதைத் தனது ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்னும் நூலில் பதிவுசெய்திருக்கிறார் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திவந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பிராமணர் அல்லாதோர் நிலை அந்தக் காலகட்டத்தில் உத்தியோகத் துறையில் எங்கும் பிராமணர் ஆதிக்கம்; பிராமணர் அல்லாதாருக்கு முட்டுக்கட்டை என்ற நிலை இருந்தது. எடுத்துக்காட்டாக 1912-ல் சென்னை மாகாணத்தின் நிலை என்ன? துணை ஆட்சியர்களில் 55%, சார்பு நீதிபதி 82.5%, மாவட்ட முன்சீப்களில் 72.6% பிராமணர்கள். இந்தப் பதவிகளில் இந்து பிராமணர் அல்லாதார் முறையே 21.5%, 16.7%, 19.5%. கடப்பை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் உயர் பதவி வகித்த டி.கிருஷ்ணாராவ் (ஹுஸுர் செரஸ்தார் - மாவட்ட ஆட்சியர் பதவிக்கு நிகரானது) என்பவரின் உறவினர்கள் 116 பேர் அந்தத் துறையில் இருந்தனர். சென்னை சட்ட மன்றத்தில் 1914-ல் சட்ட மன்ற உறுப்பினர் குன்சிராமன் நாயர் எழுப்பிய வினாவுக்குக் கொடுக்கப்பட்ட பதில் என்ன? 

திங்கள், 18 ஜனவரி, 2021

டிராக்டர் பேரணி குறித்து போலீஸார் தான் முடிவு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் Farmers Stage 'Rehearsal' Tractor Rally Around Delhi Ahead Of Republic Day Parade


zeenews.india.com :தில்லியில், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், குடியரசு தினத்தன்று டிராக்டர் டிராக்டர் பேரணியை நடத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு, டிராக்டர் பேரணியை தடை செய்ய கோரி தாக்கல் செய்தது.இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் (SupremeCourt) , தில்லிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும், எத்தனை பேரை அனுமதிக்க வேண்டும் என போலீஸார் தான் தீர்மானிக்க வேண்டும்,' என கூறியுள்ளது.   பேரணி என்பது சட்டம் ஒழுங்கு சார்ந்த விஷயம் என்பதால், போலீஸார் தான் அது தொடர்பான முடிவை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

புதுச்சேரியில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் திமுக காங்கிரஸ் கூட்டணி கேள்விக்குறி?

minnambalam :திமுக- காங்கிரஸ் கூட்டணியை உடைத்து சுக்கு நூறாக்கிவிட்டது இன்று (ஜனவரி 18) புதுச்சேரியில் நடந்த மாநில திமுக நிர்வாகிகள் கூட்டம். புதுச்சேரியில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் திமுக காங்கிரஸ் கூட்டணியை கேள்விக்குறியாக்கும் வகையில் திமுக அமைத்துள்ள வியூகம் பற்றி, புதுச்சேரியில் திமுக முதல்வர் வேட்பாளராகும் ஜெகத்ரட்சகன் என்ற தலைப்பில் முதன் முதலில் மின்னம்பலத்தில் ஜனவரி 6 ஆம் தேதியே செய்தி வெளியிட்டோம். அதுவே இன்று நடந்திருக்கிறது. புதுச்சேரியில் இன்று திமுக சார்பில் நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய திமுக எம்பி ஜெகத்ரட்சகன், “புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற வில்லையென்றால் நான் மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன்” என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

ஜெகத்ரட்சகனை புதுச்சேரியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் மாநிலப் பொறுப்பாளரான சிவக்குமார் பேச...அதன் பின் புதுச்சேரியில் பிரம்மாண்டமாக நடந்த மாநில திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார் ஜெகத்ரட்சகன். “நான் தாய் மடியில் பிறந்து தாய் விரலை பிடித்து விளையாடிய மண் இந்த மண். இந்த மண்ணைப் பார்த்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது. என் அருமை சொந்தங்களே...கறுப்பு சிவப்பு கொடி உழைக்கும் மக்களின் கொடி. நமது தலைவர் கலைஞர் செம்மொழிக்காக பாடுபட்டவர், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கிக் கொடுத்தவர்.

"விவசாயக் கடன்கள் ரத்து? -முதல்வர் டெல்லி பயணத்தில் மெகா திட்டம்!

விவசாயக் கடன்கள் ரத்து? -முதல்வர் டெல்லி பயணத்தில் மெகா திட்டம்!
minnambalam.com  ;தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஜனவரி 18ஆம் தேதி பிற்பகல் டெல்லி சென்றடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்ற அவருக்கு இன்று பிற்பகல் தமிழ்நாடு இல்லத்தில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.   டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை முதல்வர் சந்திக்கிறார்.

டெல்லி சென்ற முதல்வர் தமிழ்நாடு அரசின் சார்பாக சில கோரிக்கைகளையும், அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பான சில விஷயங்களையும் பிரதமருடனும், அமித்ஷாவுடனும் விவாதிக்க இருக்கிறார்.தமிழகத்திற்கு தேவையான நிதி உதவி தொடர்பான கோரிக்கைகளுக்கு இந்த டெல்லி பயணத்தின் போது எடப்பாடி அழுத்தம் கொடுப்பார் என்று தமிழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கிறார்கள். இதில் மிக முக்கியமான அம்சமாக விவசாயிகளின் கடன் தொடர்பான விஷயம் இடம்பெற்றுள்ளது என்கிறார்கள்.