ராய்பூர்: ஷிர்டி சாய்பாபா கடவுளோ குருவோ அல்ல.. எனவே அவரது உருவச்
சிலையை வழிபடக் கூடாது என துவாரகை சங்கராச்சாரியார் தலைமையில் நடந்த
கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது புதிய சர்ச்சையைக்
கிளப்பியுள்ளது.
ஷிர்டி சாய் பாபா 19ம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த மகான். அவருக்கு
கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். ஷிர்டியில் உள்ள அவரது கோயிலுக்கு
ஏராளமானோர் சென்று அவரது உருவச் சிலையை வழிபட்டு வருகின்றனர். மதங்களுக்கு
அப்பாற்பட்ட ஒரு மகானாகவே அவரை பலரும் வழிபடுகின்றனர்.இந்த நிலையில் துவாரகை பீடத்தின் சங்கராச்சாரி ஸ்வரூபானந்த சரஸ்வதி
தலைமையில் ராய்பூரில் இரண்டு நாள் மதக் கருத்தரங்கம் நடந்தது. இதில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவி ஷிர்டி
சாய்பாபா கடவுளோ குருவோ அல்ல.. எனவே சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோர் அவரது
உருவச் சிலையை வழிபடக் கூடாது," என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜாதி வெறியர்களுக்கு சீரடி சாயி பாபாவை பிடிக்காதுதான்
புதன், 27 ஆகஸ்ட், 2014
மார்ச் மாதத்துக்குள் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் தீர்ப்பு? ஆ.ராசா !
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு
குற்றச்சாட்டில் திமுகவின் மீதான களங்கம் நீங்கும் என முன்னாள் மத்திய
தொலைத்தொடர்புத் துறை அமைச்சரும், திமுக கொள்கை பரப்புச் செயலருமான ஆ.ராசா
தெரிவித்தார்.
உதகை நகர திமுக சார்பில் உதகையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட திமுக கொடியேற்று விழாவில் பங்கேற்ற ஆ.ராசா, நிருபர்களிடம் கூறியது:
கடந்த மக்களவைத் தேர்தலின்போது, மோடி அலை வீசியதால், பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காததும், காங்கிரஸ் கட்சிக்கு எதிரானதாக அமைந்துவிட்டது.
எனவே, கடந்த தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி உருவாகி இருந்தாலும், இதே தோல்விதான் ஏற்பட்டிருக்கும். ஆனால், நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிட்டிருந்தால், நான் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்பேன். எனக்கு எதிராக சதி செய்யப்பட்டுவிட்டது.
அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் தீர்ப்பும் வெளியாகிவிடும். இதன் மூலமாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு குற்றச்சாட்டில் திமுகவின் மீதான களங்கம் நீங்கும்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை திமுக குற்றச்சாட்டுகளின்றி எதிர்கொள்ளும். அப்போது தேர்தல் முடிவுகளும் மாறிவிடும் என்றார் dinamani.com

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்?
புதுடில்லி: சிரியா மற்றும் ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, சில
பகுதிகளை கைப்பற்றி, அதை, இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள, அல் குவைதா ஆதரவு,
ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தமிழகம், கேரளா போன்ற சில மாநிலங்களில்
இருந்து முஸ்லிம் இளைஞர்கள் சிலரை தங்கள் பயங்கரவாத பணிக்கு
அமர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களெல்லாம் சொர்க்கம் கிடைக்கும் என்று மூளை சலவை செய்யப்பட்டு அங்கே
சண்டைபோட செல்கிறார்கள். இறந்த பிறகு, நரகம் செல்லும் பொழுது தவறை
உணரபோகிரார்கள். வெளியே அமெரிக்காவிற்கு ஆதரவான அரசை கவிழ்க்க போர்
புரிகிறோம் என்று கூறிவிட்டு, உள்ளே இஸ்ரேலுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட
பேசாத இந்த தீவிரவாத அமைப்புக்காக போராட போகிறார்கள். போங்கள். ஆனால், திரும்பிமட்டும் வந்துவிடாதீர்கள்
விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம்: குற்ற பத்திரிகை
ஸ்ரீபெரும்புதூர்: மவுலிவாக்கம், 11 மாடி கட்டட வழக்கில் தொடர்புடைய, எட்டு
பேர் மீது, சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார், நேற்று முன்தினம்,
ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கட்டட விபத்திற்கு, விதிமீறல்கள் தான்
காரணம் என, விசாரணைகுழுவினர் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014
லஞ்சம்: கம்பெனிகள் பதிவாளர் மனுநீதிச் சோழன் கைது! தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி மீது வழக்கு!!
சென்னை: லஞ்சம் பெற்றதாக கம்பெனிகள் பதிவாளர் மனுநீதிச் சோழனை சிபிஐ
அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். மனுநீதி சோழனுக்கு லஞ்சம் கொடுத்ததாக
செட்டிநாடு குழுமத்தின் தலைவர் பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி மீது
சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் கம்பெனிகள் பதிவுத் துறையின்
பதிவாளராக இருப்பவர் மனுநீதிச் சோழன். பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம்.
ராமசாமியை அனைத்து செட்டிநாடு நிறுவனங்களில் இருந்தும் நீக்குவது என அவரது
நிறுவனங்களின் ஆண்டு பொதுக்குழுக் கூட்ட உறுப்பினர்கள் கூடி தீர்மானம்
நிறைவேற்றியுள்ளனர்.
தமக்கு எதிரான இந்த பொதுக்குழுக் கூட்ட முடிவுகள் அனைத்துமே செல்லாது என்று
சட்டப்பூர்வமாக அறிவிப்பதற்காக எம்.ஏ.எம். ராமசாமி, கம்பெனிகள் பதிவாளர்
மனுநீதிச் சோழனை அணுகியுள்ளார். இதனைத் தொடர்ந்து எம்.ஏ.எம். ராமசாமி
கேட்டுக் கொண்டதன் பேரில் பொதுக்குழு முடிவுகளை செல்லாது என்று
அறிவிப்பதற்காக ரூ10 லட்சத்தை லஞ்சமாக பெற்றிருக்கிறார் மனுநீதிச் சோழன். ஆயிரக்கணக்கான கோடிகள் சேர்த்தால் குடும்பத்தில் குழப்பம் வராமல் இருக்குமா ? அது சரி அது யாரப்பா அந்த மனு நீதி சோழன் ? ஆஹா அருமையான பெயரு , ஆக கூடி வெறும் பத்து லட்சம் தானா சோழா ?
அஞ்சலியிடம் பணம் பறிக்க களஞ்சியத்தின் நாடகம் !
இயக்குநர் களஞ்சியம் உயிருக்குப் போராடுவதாக அவரது நண்பர்கள் அறிக்கை,
அஞ்சலியிடமிருந்து எப்படியாவது பணம் பறிக்க போட்ட நாடகம் என்பது வெட்ட
வெளிச்சமாகியுள்ளது.
ஆந்திராவில் ஓங்கோல் அருகே விபத்தில் சிக்கி, படுகாயமடைந்து உயிருக்குப்
போராடுகிறார் களஞ்சியம் என்று முதலில் செய்தி வெளியிட்டார்கள். அடுத்து
ஓங்கோல் மருத்துவமனையிலிருந்து திடீரென அவர் திருச்சிக்கு
கொண்டுவரப்பட்டதாகக் கூறி, சுய நினைவே இல்லாமல் கிடக்கும் களஞ்சியத்தை
அஞ்சலிதான் பணம் கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்று கோர்த்துவிட்டார்கள்,
அவரது நண்பர்கள்.
களஞ்சியம் விபத்துக்குள்ளானால், அஞ்சலி என்ன செய்ய முடியும் என்ற
கேள்வியுடன்தான் இந்த அறிக்கையை வெளியிட்டார்கள் நேற்று. இன்றோ, களஞ்சியம்
அடிபட்டு உயிருக்குப் போராடும் லட்சணத்தை புகைப்படத்துடன்
அம்பலமாக்கிவிட்டார்கள்.
அவர் திருச்சி மருத்துவமனையில் படுத்தபடி கிடக்கும் ஒரு படம்
வெளியாகியுள்ளது.
எம் ஏ எம் ராமசாமி கைது ! 10 லட்சம் லஞ்சம் கொடுக்கும்போது மாட்டினார் !
லஞ்ச
வழக்கில் முன்னாள் எம்.பி.யும், தொழிலதிபருமான எம்.ஏ.எம் ராமசாமி மற்றும்
கம்பெனிகள் பதிவாளர் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கம்பெனிகள் பதிவாளர் மனுநீதிசோழனை சென்னை நுங்கம்பாக்கத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
இந்நிலையில், லஞ்ச வழக்கில் முன்னாள் எம்.பி.யும், தொழிலதிபருமான எம்.ஏ.எம் ராமசாமியையும் சிபிஐ கைது செய்துள்ளது. இதன் பின்னணியில் வேறு எதோ உள்குத்து இருக்க வேண்டும், யாருக்கோ உரிய மாமூலை கொடுக்கல்லையோ ?
நீதி வளையுமா ? பார்பானுக்கு , கல்வி கொள்ளையனுக்கு அல்லது இந்துதத்வா ?
இந்த நாட்டில போலீசு, கோர்ட்டு, அதிகாரிகள் யாரும
மக்களுக்காக வேலை செய்றது கெடையாது. சாதாரண குடிமகன் ஏதாவது ஒரு
பிரச்சனைன்னு போலீஸ் ஸ்டேசனுக்குப் போனா, இழுத்தடிப்பானுங்க, லஞ்சம்
கேட்பானுங்க. நீதிமன்றங்களைப் பத்தி சொல்லவே வேண்டாம். நம்ம கேச
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவே பல மாதங்கள் பிடிக்கும். அதற்கு பிறகும்
வாய்தா வாங்கி இழுத்தடிப்பாங்க. அதனால, எந்த வம்புதும்புலையும்
மாட்டிக்காம, நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு போக வேண்டியதுதான்.”
இதுதான் நாட்டின் பெரும்பான்மை குடிமக்களின்
நிலைமை.
கோட்டையில் ரஜினி ! லிங்காவும் பாஜகவும் எழுச்சி பெற வேறு வழி?
மோடிக்கு கொடி பிடித்த பார்ப்பனிய ஊடகங்களோ ரஜினியை வைத்து தாமரையை மலரச்
செய்யலாம் என்று கனவு காண்கின்றன. ‘லிங்கா’ குழுவினரோ இந்த அமர்க்களத்தை
வைத்து படத்தை வெற்றிகரமாக ரிலீஸ் செய்யலாம் என்று ப்ளான் பன்னுராய்ங்கோ
பாரதிய ஜனதாவை வெறும் அகோரி, சங்கர மட, ஆதீனங்களின் கட்சியாக
மட்டும் சுருக்குவது தவறு. கஞ்சா, நெய் பொங்கல், புளியோதரையால் வரும்
சக்தியையோ இல்லை சதியையோ ஒரு ஊட்டி தேநீரை அருந்தியபடியே நாம் எதிர்கொண்டு
விடலாம். ஆனால் அமேசான் காட்டின் ‘மூலிகை திரவ’த்தை ஆம்வேயால் அருந்திக்
கொண்டு, மெக்டனோல்டு, பர்கரோடு புல்லட் புரூஃப் இறுமாப்பில் மௌரியா
ஷெர்ட்டனில் கதைக்கும் கனவான்களை அப்படி எதிர்கொள்வது சிரமம்.
அமெரிக்கா முதல் அம்பானி வரை, விகடன் துவங்கி குமுதம் வரை, சோ தொட்டு சுப்ரமணியசாமி இட்டு ஒரு பெரும் அறிஞர் கூட்டமே ராப்பகலாய் பாஜகவின் எதிர்கால அதிகார மென்பொருட்களை வன்நபர்களால் வடிவமைத்து வருகிறது. இந்த சிந்தனைக் குழாம் ஒன்று விடாமல் சர்வசாத்திய வஸ்துக்களையும் குலுக்கி போட்டு தாமரையை மலர வைக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறது.
இவர்களின் எண்ணங்களோ, எதிர்பார்ப்புகளோ பல்வேறு வண்ணபாதைகளை காட்டினாலும் பாதைகள் சேருமிடம் காவிக்கரைதான். பாஜகவின் புதிய தமிழகத் தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜனின் நியமனத்தை பெண்ணுரிமையின் வெற்றியாக கொண்டாடுகிறார்கள். வானம் பார்த்த சோகத்திலிருக்கும் வானதி சீனிவாசனும் கூட ஒரு பெண்தான் என்பதை மறந்துவிடுகிறார்கள். பாஜகவின் ப்ரியத்திற்குரிய வட இந்திய வணிக வர்க்க கூட்டணியை இங்கேயும் நட்டு வைப்போமென பாடுபடும் நாடார் பெருவணிகர்கள் தங்களது வெற்றியாக அகமகிழ்கிறார்கள். தமிழிசை ஒரு நாடார் அல்லவா!

அத்வானி-முரளி மனோகர் ஜோஷி பா.ஜ.க. ஆட்சிமன்ற குழுவிலிருந்து நீக்கம் !
பா.ஜ.க.வில் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதிலிருந்து
அதிருப்தியடைந்த எல்.கே. அத்வானி கட்சி நடவடிக்கைகளிலிருந்து
ஒதுங்கியிருந்தார். ஆனால் கட்சி நடவடிக்கைளில் இருந்து அவர் ஒதுக்கி
வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் பா.ஜனதா கட்சியின் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும்
ஆட்சிமன்றக் குழுவிலிருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்த தலைவர்கள்
எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங்
ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக மத்தியப் பிரதேச முதல்வர்
சிவராஜ் சிங் சவுகான், பா.ஜ.க மூத்த தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் புதிய
உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் நமக்கென்னவோ இது ரஷ்யாவில் லெனினுக்கு பின்பு வந்த ஸ்டாலின் பெரியவர்கள் எல்லோரையும் களையெடுத்து ஒருவளிப்பண்ணி தான் ஒரு கொடிய சர்வாதிகாரியானது மாதிரி தான் மோடி அமித் ஷா கும்பலின் போக்கு இருக்கிறது இதுதாண்டா மோடி பாஜக ,maalaimalar.cm
மேயர் தேர்தலுக்காக புதிய திட்டங்கள் அறிவிப்பு !
மூன்று மாநகராட்சி மேயர் பதவிக்கு, இடைத்தேர்தல் வர உள்ளதால், அந்த
மாநகராட்சி மக்களை கவரும் வகையில், முதல்வர் ஜெயலலிதா, புதிய திட்டங்களை
அறிவித்துள்ளார். இது எதிர்க்கட்சிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளதுதூத்துக்குடி
மேயர் சசிகலா புஷ்பா, திருநெல்வேலி மேயர் விஜிலா சத்தியானந்த், ஆகியோர்,
ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வானதால், தங்கள் மேயர் பதவியை ராஜினாமா செய்தனர்.
கோவை மேயர் வேலுசாமி, கட்சி தலைமை உத்தரவை ஏற்று, தன் பதவியை ராஜினாமா
செய்தார்.காலியாக உள்ள, மூன்று மாநகராட்சி மேயர் பதவிக்கு, சட்டசபை கூட்டத்
தொடர் முடிந்த பின், இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என,
எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையம், யாரும்
எதிர்பார்க்காத வகையில், கடந்த 6ம் தேதி, திருநெல்வேலி மற்றும்
தூத்துக்குடி மேயர் பதவிக்கு, தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அன்றைய
தினமே, மனு தாக்கல் துவங்குவதாகவும், செப்., 18ம் தேதி, தேர்தல் நடைபெறும்
என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இவ்ளோ பதவி வெறி கூடாது. பப்பெட் ஷோ தான் ஆட்சியிலே அதிகம்.
இதுகளுக்கு ஜால்ரா தட்டும் பிரவீன்குமாரை முதல்ல நாடு கடத்தனும் இல்லே
மிசாராமுக்கு துரத்தனும். அரசு அதிகாரிகள் ஜால்றாவாக இருக்கும்வரை இதே
தொல்லைகளே தொடரும். டிவி சீரியல்கள் போல இலவசத்துக்கு பறக்கும் மக்கள்
உள்ளவரை நாடு நாசமா தான் போவும்
மவுலி வாக்கம் கட்டிட விபத்து இயற்கை பேரிடராம்? ஊத்தி மூட ஆயத்தம் !
சென்னை, மவுலிவாக்கத்தில், 61 பேரை பலி கொண்ட அடுக்குமாடி கட்டட
விபத்தை, இயற்கை பேரிடராக வகைப்படுத்தும் விதமாக, விசாரணை கமிஷனின்
பரிந்துரைகள் அமைந்துஉள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் தனியார் நிறுவனத் தால் கட்டப்பட்ட, 11 மாடி கட்டடம், ஜூன், 28ம் தேதி இடிந்து விழுந்ததில், கட்டுமான பணியாளர்கள், 61 பேர் உயிரிழந்தனர். இதில் சிக்கிய, 27 பேர், உயிருடன் மீட்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணங்கள், தவறுகளுக்கு பொறுப்பானவர்கள், வருங்காலங்களில் இத்தகைய விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விசாரித்து பரிந்துரை அளிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையிலான விசாரணை கமிஷன், ஜூலை, 3ம் தேதி அமைக்கப்பட்டது. மவுலி வாக்கம் , அப்படி பார்த்தால் சென்னையில் உள்ள பாதி கட்டிடங்கள் இது போன்ற இடியில் விழுந்திருக்க வேண்டும்... இங்கெல்லாம் 30~40 மாடிகள் சர்வசாதாரணம்..100%சுத்தமான உண்மை என்ன வென்றால் மௌலிவாக்கம் பில்டர்கள் ஏடிஎம்கே வோட பினாமிகளே என்பது உறுதியா தெரியுது. அவாளை தப்பிக்க வைக்கவே அரசு நாடகம் போடுது. ஏழைகளின் வோட்டு மட்டுமே வேண்டும். உசிரு போனால் நோ ப்ராப்ளம்

தாமிரபரணி-நம்பி ஆறு இணைப்பு திட்டம்: 3 ஆண்டாக கிடப்பில் போடப்பட்டது ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி
சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அப்பாவு
தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தாமிரபரணி -கருமேனி ஆறு -
நம்பி ஆறு இணைப்பு திட்டம் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி
தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.369 கோடியாகும்.
2009ல் ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2010ல் ரூ.41 கோடியும் அதற்கு
அடுத்த ஆண்டு ரூ.107 கோடியும் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் இரண்டு கட்ட பணிகள் முடிவடைந்தன. அதன்படி தாமிரபரணி
ஆற்றிலிருந்து மூலக்கரைப்பட்டி வரை கால்வாய் வெட்டும் பணி முடிவடைந்தது.
மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட பணிகளுக்காக தமிழக பட்ஜெட்டில் 2012-13ம் நிதி ஆண்டில் ரூ.100 கோடியும் 13-14ம் நிதி ஆண்டில் ரூ.156 கோடியும் 14-15ம் ஆண்டில் ரூ.119 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த பணிகள் மேம்படுத்தப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இதென்ன புதுசா குற்றச்சாட்டு ? திமுகவின் எல்லா திட்டங்களையும் கிடப்பில் போடுவதை அரசு கொள்கையாக வைச்சிருக்கோம்ல ? பெரிய கொலம்பஸ் கண்டுபிடிப்பு ! அப்பிடிதாய்ன் கிடப்பில் போடுவோம் நீ பண்றதை பண்ணு மக்க நம்ப கூட ஐ அய்லசா அய்யலசா ?

அழகிரி விவகாரம்: ஸ்டாலினை சமாதானப்படுத்த கருணாநிதி திட்டம்
அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கும் விவகாரத்தில் ஸ்டாலினை சமாதானப்படுத்த திமுக தலைவர் கருணாநிதி முயன்று வருகிறார்.
இதன் ஒருபகுதியாக டெசோ கூட்டத்துக்கு வரும் வீரமணி உள்ளிட்ட தலைவர்களை
ஸ்டாலி னுடன் பேச வைக்க கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர்
மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடந்து
வருகின்றன. கடந்த வாரம் தனது தாயார் தயாளு அம்மாளை அழகிரி சந்தித்துப்
பேசியுள்ளார்.
சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1993- 2004, 2006- 2013 காலகட்டத்தில் செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க
ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்றும், எனவே அந்த ஒதுக்கீடுகள்
அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன எனவும் உச்ச நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
நிலக்கரி ஒதுக்கீடுகள் செய்த கண்காணிப்பு கமிட்டியின் செயல்பாடுகள்
நியாயமாகவும், வெளிப்படையாகவும் இல்லை. வரையறுக்கப்பட்ட நெறிகள் ஏதும்
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் பின்பற்றப்படவில்லை. நிலக்கரிச் சுரங்க
ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை. எனவே, 1993- 2004, 2006- 2013
காலகட்டத்தில் செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் ரத்து
செய்யப்படுகின்றன என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான
அமர்வு தெரிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட நிலக்கரி படுகைகளை வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு
செய்வது குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை
அமைக்கலாம் எனவும் அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
திங்கள், 25 ஆகஸ்ட், 2014
ரைஸ் பக்கெட் சேலஞ்ச் என்றால் என்ன? Facebook கினால் பிரபலமாகும் கருணை !
சில
நாட்களாக இணையதளத்தில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்ற வீடியோ படுவேகமாக பரவி
வந்தது. ஏஎல்எஸ் நோய்க்கு நிதி திரட்ட ஆரம்பிக்கப்பட்ட ஐஸ் பக்கெட் சேலஞ்ச்
சுய விளம்பரமாகவும், வைரல் பொழுதுபோக்காகவும் மாறியது. உலக பிரபலங்கள்
தொடங்கி உள்ளூர் பிரபலம் வரை அனைவரது ஐஸ் பக்கெட் சேலஞ்ச் வீடியோக்களும்
யூடியூப் இணையதளத்தில் நிரம்பின. இந்நிலையில் இந்தியாவில் ரைஸ் பக்கெட்
சேலஞ்ச் வைரலாக பரவத் துவங்கியுள்ளது.
ரைஸ் பக்கெட் சேலஞ்ச் என்றால் என்ன?
இந்தியாவில் பல ஏழை மக்கள் உணவுக்காக தடுமாறுவதால் அதனை தடுக்கும் நோக்கத்துடன் அருகில் இருக்கும் உணவு தேவைப்படும் ஒருவருக்கு ஒரு பக்கெட் அரிசியோ அல்லது 100 ரூபாய் பணத்தையோ தர வேண்டும். இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் உங்களது நண்பர்களை டேக் செய்ய வேண்டும். இதனை # குறியீட்டுடன் ரைஸ் பக்கெட் சேலஞ்ச் என்று ட்ரெண்ட் செய்ய வேண்டும். இதுவே ரைஸ் பக்கெட் சேலஞ்ச் ஆகும்.

மெட்ரிக் கொலைக்கூடங்கள்! தனியார் கல்வி கொள்ளைக்கு முடிவில்லையா ?
தனியார் கல்விக்கொள்ளைக்கு பலியான இளந்தளிர்கள் – சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவி ஹேமலதா
குடந்தை பள்ளித் தீயில் தனது பிள்ளையைப் பறிகொடுத்த ஒரு தாய், நீதிமன்ற வளாகத்தில் தன்னைத்தானே நொந்து புலம்பிக் கொண்டிருந்தாள். குடந்தை கிருஷ்ணா பள்ளி உரிமையாளரின் மனைவி, ஆங்கில வழிக்கல்வி, தரமான கல்வி என்ற ஆசை காட்டியதையும், அதற்கு மயங்கி தன் பிள்ளையை அங்கு சேர்த்து நெருப்புக்கு பலி கொடுத்து விட்டதையும் நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தாள் அந்தத் தாய். தனியார் கல்விக்கொள்ளைக்கு பலியான இளந்தளிர்கள் – புதுக்கோட்டை குரும்பக்காடு, லாரல் மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவன். அருண்ராஜ்
பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. அன்று குடந்தைப் பள்ளிக்கு தேடிச்சென்று ஆள் பிடித்தார்கள் என்றால், இன்றைக்கு பெற்றோர் தனியார் மெட்ரிக் பள்ளிகளைத் தேடிச் சென்று தமது பிள்ளைகளை விட்டில் பூச்சிகளா கருகக் கொடுக்கிறார்கள். மாணவர் தற்கொலை அல்லது மர்ம மரணம் என்ற செய்தி இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது.

மைக்கேல் பிரௌன் ! அமெரிக்க மனசாட்சி நீதி வழங்குமா ?
மைக்கேல் ப்ரௌன் 18 வயதே ஆன அமெரிக்க கருப்பின இளைஞன்.
அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்திற்கு உட்பட்ட செயின்ட் லூயிஸ் பகுதியில்
அமைந்துள்ள பெர்குசன் நகரத்தைச் சேர்ந்தவர். மைக்கேல் கடந்த ஆகஸ்ட் 9-ம்
தேதி இரவு தன் பாட்டி வீட்டிற்கு நண்பன் டோரியன் ஜோன்சனுடன் நடந்து சென்று
கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த டேரன்
வில்சன் என்கிற வெள்ளையின போலீசு அதிகாரி, இந்த இளைஞர்களைத் தடுத்து
நிறுத்துகிறார்.
Gandhi ! Richard Attenborough காந்தி பட இயக்குனர் சார் ரிச்சர்ட் அட்டேன்போரோ காலமானார்
காந்தி பட இயக்குநரும், நடிகருமான ரிச்சர்ட் அட்டென்பரோ(வயது 90) காலமானார் நேற்று காலமானார்.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆங்கிலப் பட நடிகருமான ரிச்சர்ட் அட்டென்பரோ
1982-ல் வெளியான ‘காந்தி’ திரைப்படத்தை இயக்கியவர். பல்வேறு படங்களை
தயாரித்த ரிச்சர்ட் அட்டென்பரோ, பல்வேறு படங்களில் நடித்தும், படங்களை
இயக்கியும் தனிப்பெரும் அடையாளத்துடன் திகழ்ந்தார். ரிச்சர்ட் அட்டென்பரோ,
மகாத்மா காந்தியின் அகிம்சை வரலாற்றை சித்தரிக்கும் ‘காந்தி’ படத்தை
இயக்கியதன் மூலமாக இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்தவர்.
இந்த படத்தின் மூலம் சிறந்த இயக்குனர் விருது உள்பட 8 ஆஸ்கர் விருதுகளை
பெற்றார். பல்வேறு விருதுகளை பெற்ற படங்களை இயக்கியும் உள்ளார்.
18 சட்டமன்றத் தொகுதிகளில் 11 தொகுதிகளை காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி !
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொதுவாக
இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சியின் செயல்பாட்டுக்கு மக்கள் வழங்கும்
தீர்ப்பாகவே கருதப்படும். பீகார், கர்நாடகம், மத்திய பிரதேசம், பஞ்சாப்
ஆகிய 4 மாநிலங்களில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 11
தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மக்கள்
மகத்தான வெற்றியை வழங்கியிருக்கிறார்கள். <
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக
நினைத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வுக்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகள்
மிகப் பெரிய சரிவை கொடுத்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் 4 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் எப்படியிருக்கும் என்பதற்கு இன்றைய
தேர்தல் முடிவுகள் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளன. இவ்வாறு அவர்
கூறியுள்ளார்.dailythanthi.in
திருப்பூரில் சுமார் 700 நைஜீரியர்களால் மக்கள் கடும் அவதி ! விசா. வொர்க் பெர்மிட் இல்லை ! லஞ்ச அதிகாரிகள் அலட்சியம் ? ?
திருப்பூரில் வாடகைக்கு வீடுகளைப் பிடித்து தங்கி வேலை பார்த்து வரும்
நைஜீரியர்களால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை
ஏற்பட்டிருப்பதாலும், திருட்டு, அடிதடி என அவர்கள் ஈடுபட்டு வருவதாலும்,
அவர்களை 10 நாட்களுக்குள் திருப்பூரை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் போட்டுள்ளனர்.
தமிழர்களுக்கு உள்ளூரிலேயே ஏகப்பட்ட பிரச்சினைகள். இந்த நிலையில் தற்போது
வெளிநாட்டினராலும் கூட உள்ளூர் தமிழன் ஒப்பாரி வைக்கும் நிலை
ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் தங்கியுள்ள 700க்கும் மேற்பட்ட நைஜீரியர்களால் அந்த ஊர்
மக்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது
நைஜீரியர்களுக்கு எதிராக திருப்பூர் மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
Karnataka: பாஜக கோட்டையான பெல்லாரியில் காங்கிரஸ் வெற்றி
கர்நாடகா இடைத்தேர்தலில், பாரதீய ஜனதா கட்சியின் கோட்டையாக திகழ்ந்த பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதல்–மந்திரி
எடியூரப்பா, ஸ்ரீராமலு, பிரகாஷ் ஹூக்கேரி ஆகியோர் வெற்றி பெற்று
எம்.பி.க்கள் ஆனார்கள். இதையடுத்து, அவர்கள் 3 பேரும் தங்களது எம்.எல்.ஏ.
பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கர்நாடக சட்டசபைக்கு காலியாக இருந்த
சிகாரிபுரா, பெல்லாரி புறநகர், சிக்கோடி ஆகிய 3 தொகுதிகளுக்கு கடந்த 21–ந்
தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும்
நடைபெறாமல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான
வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.
பிகாரில் நிதிஷ் லாலு காங்கிரஸ் கூட்டணி வெற்றி நோக்கி ! 10 க்கு 7 இடங்களில் வெற்றி வாகை ? பாஜக 3 இடங்களில் மட்டுமே !
Lalu-Nitish and Congress i 'grand alliance' set to beat BJP in Bihar
பாஜகவுக்கு நிச்சயம் இது ஒரு நல்ல செய்தி அல்ல, இந்தி மொழி பேசும் cow belt இல் இந்த வெற்றி மதசார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கு பிரமாண்டமான ஒரு ஒளியை காட்டி உள்ளது , வெறும் இடைதேர்தல்தானே என்று இலகுவாக ஒதுக்கி தள்ளி விடக்கூடிய வெற்றி அல்ல இது, அனேகமாக இனிவரும் பல இடைத்தேர்தல்கள் பல மாநில தேர்தல்களில் இது நிச்சயம் எதிரொலிக்கும், தமிழக சட்ட சபை தேர்தலை எண்ணி மனப்பால் குடித்து கொண்டிருக்கும் பாஜாவுக்கு புத்தி புகட்டும் தேர்தல் முடிவு இது.

களஞ்சியம் உயிரை காப்பாத்த அஞ்சலியிடம் கெஞ்சும் களஞ்சியம் தரப்பு !
அஞ்சலி எப்படி சென்னை வருகிறார் பார்க்கிறேன்.. என் படத்தில்
நடிக்காவிட்டால் எந்த மொழிப் படங்களிலும் நடிக்க முடியாது என்றெல்லாம்
மிரட்டிக் கொண்டிருந்த இயக்குநர் களஞ்சியம், இப்போது விபத்தில் சிக்கி
மருத்துவமனையில் உள்ளார்.
அவரது உயிரைக் காப்பாற்றும்படி நடிகை அஞ்சலிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
களஞ்சியம் தரப்பினர்.
இயக்குனர் களஞ்சியம் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி ஓங்கோல் என்ற
இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால் ஓங்கோலிலிருந்து திருச்சி
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.
உடம்பு முழுவதும் பலத்த அடி பட்டிருப்பதால் அவரால் முழுமையாக எதையும் உணர முடியவில்லையாம். யாரைப் பார்த்தாலும் முதலில் அவர்கள் அணிந்திருக்கும் உடையின் நிறம் மட்டுமே அவருக்குத் தெரிகிறதாம். இன்னும் எவ்வளவு காலம் சிகிச்சையில் இருப்பார் என்பது தெரியவில்லை. அஞ்சலி நடித்த ஊர்சுற்றிப் புராணம் படம் வேறு பாதியில் நிற்கிறது. சிகிச்சைக்காக யாரிடம் போய் உதவி கேட்டாலும் ஏற்கெனவே படத்திற்காக கொடுத்த பணம் என்ன ஆச்சு? என்று உதவ மறுக்கிறார்களாம். இந்த காலத்துல செய்ஞ்ச வினைக்கெல்லாம் சீக்கிரமாகவே பலன் கிடைக்கறது ! இன்னா பண்றது சீக்கிரம் குணமாக பிரார்த்திக்கிறோம் ?

உலகை உலுக்கி கொண்டேயிருக்கும் பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலியின் மரணம் !
பயங்கரவாதம், அமெரிக்க ஊடுருவல் இவற்றுக்கெல்லாம் நடுவில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள். போர் நடக்கும் இடத்துக்குச் சென்று அங்கு நடப் பதைப் பற்றி எழுதுவது மிகவும
ஆபத்தான வேலை. ஆனால், இந்த வேலை 19-ம் நூற்றாண்டின் மைய ஆண்டுகளிலிருந்து
தொடர்ந்து நடந்து வந்துகொண்டிருக்கிறது. போர்க்களத்தில் மாண்ட பத்திரிகை
யாளர்கள் நூற்றுக்கணக்கில் இருப்பார்கள். இராக்கிலும் சிரியாவிலும்
நடக்கும் போர்களில் மட்டுமே இறந்த நிருபர் களின் எண்ணிக்கை 61 என்று
பிரித்தானிய நாளிதழ் ஒன்று சொல்கிறது.
ஆனால், போரின் வெப்பமான தருணங்களில் பலியாவது வேறு. ஆனால், கடத்தப்பட்டு, சுமார் 2 வருடங்கள் சிறை களில் செலவிட்ட பின், கால்நடைகளைப் போலக் கழுத்தறு பட்டுக் கொல்லப்படுவது வேறு. ஆகஸ்ட் 19-ம் தேதி நடந்த அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலியின் கொலை நம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. போரில் பிடிபட்டவரையோ அல்லது கடத்தப்பட்டவரையோ தலையை அறுத்துக் கொல்வது என்பது இராக்-சிரியா பயங்கரவாதத்தின் முத்திரை. இராக்கில் நடந்த இத்தகைய கொலைகள் கணக்கில்லாதவை. ஆனால், ஒரு நிருபர் இதுபோன்று கொல்லப்படுவது இரண்டாவது முறையாக நடந்திருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன்னால் டானியல் பெர்ல் என்பவரின் தலை பாகிஸ்தானில் அறுக்கப்பட்டது.

இந்தியாவில் மது அருந்தி தற்கொலை செய்வதில் தமிழகம் முதலிடம் !
சென்னை பழைய கார் பவனி Vintage Cars' Exhibition In Chennai
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரம்பரிய கார்கள் கண்காட்சியில் இடம் பெற்ற எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் ஆகியோர் பயன்படுத்திய கார்கள். கண்காட்சியைக் காண வந்த பார்வையாளர்களில் ஒரு பகுதியினர்."
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரம்பரிய கார்கள் கண்காட்சியில் இடம்
பெற்ற எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் ஆகியோர்
பயன்படுத்திய கார்கள். கண்காட்சியைக் காண வந்த பார்வையாளர்களில் ஒரு
பகுதியினர்.
பாரம்பரிய கார்கள் அணிவகுப்பு, கண்காட்சி சென்னை எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியில் இடம் பெற்றிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நடிகர் ஜெமினி கணேசன் கார்களின் முன்பு பார்வையாளர்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சென்னை பாரம்பரிய மோட்டார் சங்கம், மை டிவிஎஸ் சார்பில் 10-ஆவது ஆண்டு பாரம்பரிய கார்கள் கண்காட்சி, பேரணி, எழும்பூர் டான்போஸ்கோ பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் தாசரி இதனைத் தொடங்கி வைத்தார்.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014
சமுகவலை தளங்களை பார்த்து நடுங்கும் சினிமாகாரர்கள் ! அஞ்சான் கொடுத்த அனுபவம் !
தமிழ் சினிமா படைக்கும் நல்லுலகம் இதுவரை மொக்கைப்
படத்தையே ரசிகர்களுக்குத் தந்தது இல்லையோ?!' என்ற ஐயத்தை ஏற்படுத்தி
இருக்கிறது, லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த 'அஞ்சான்'
படமும், அதற்கு சமூக வலைதளத்தில் குவிந்த 'கழுவி ஊற்றல்' எதிர்வினைகளும்!
இப்படிப்பட்ட கலாய்ப்பு விமர்சனங்களை எள்ளளவும் எதிர்பார்த்திடாத நடிகர்
சூர்யா, இணையத்தில் தனது படம் மீதான தொடர் தாக்குதல்களால் அதிர்ச்சியுற்று,
"தியேட்டரில் படம் தொடங்குவதற்கு முன்பே, சீட்டில் இருந்தபடி ட்விட்டர்,
ஃபேஸ்புக்கில் விமர்சனங்களை வெளியிடுகிறார்கள்" என்று ஆதங்கத்தைக்
கொட்டினார்.
சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டால், குறிப்பிட்ட அப்படம் வசூல் ரீதியிலும்
வெற்றி அடைய வேண்டும்தானே? ஆனால், 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' முதலான
படங்கள் வர்த்தக வெற்றியை எட்டாதது இங்கே கேள்வியை எழுப்புகிறது.
12 வயது மாணவி தற்கொலை ! மாணவியை ஆசிரியை நிர்வாணமாக 2 மணித்தியாலங்கள் நிற்கவைத்தார் !
கான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளிக்கு செல்போன் எடுத்துச்
சென்றதால் தண்டனை என்ற பெயரில் ஆடையை அவிழ்த்துவிட்டு 2 மணிநேரம் நிற்க
வைத்ததால் 12 வயது மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னார் மாவட்டத்தில் உள்ள நாசியாபாத்தில் இருக்கும்
பள்ளியில் 12 வயது சிறுமி ஒருவர் 6வது வகுப்பு படித்து வந்தார். பள்ளியில்
நடந்த சோதனையில் சிறுமியின் பையில் செல்போன் இருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியை ஒருவர் சிறுமிக்கு தண்டனை
கொடுத்துள்ளார்.
அதாவது சிறுமியின் ஆடைகளை அவிழ்க்க வைத்து அவரை அப்படியே 2 மணிநேரமாக
வகுப்பறையில் நிற்க வைத்துள்ளார். இதனால் அவமானம் அடைந்த சிறுமி பள்ளி
முடிந்ததும் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டை அடைந்த அவர் தூக்கு போட்டு
தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அந்த ஆசிரியையை உடனே கைது செய்யக் கோரி
பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். இதற்கிடையே தண்டனை கொடுத்த ஆசிரியை
தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த எஸ்.பி. எம்.பி. வர்மா பள்ளிக்கு சென்று
சிறுமியின் பெற்றோரை சமாதானப்படுத்தினார். மேலும் அந்த ஆசிரியை மீது
வழக்குப்பதிவு செய்ய அவர் உத்தரவிட்டார்
tamil.oneindia.in
tamil.oneindia.in
காஞ்சி ஜெயேந்திரர் மீதான கொலைவழக்கு மேல்முறையீடு பயனற்றது மத்திய அரசு தலைமை வக்கீல் கருத்து !
புதுடெல்லி
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்வது பயனற்றது என்று மத்திய அரசு தலைமை வக்கீல் கருத்து தெரிவித்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கு காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன் கடந்த 2004–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3–ந் தேதி கோவில் அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்டார். சங்கரமடம் பற்றி புகார் கடிதங்கள் எழுதியதால் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திரர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் ஜெயேந்திரரின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை புதுச்சேரி கோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதாய்ன் ஊத்தி மூடிட்டாகளே இனியும் இனியும் அதை கிளற பைத்தியமா பிடிச்சுருக்கு ? அவரு சுத்த நம்மவா ! பிரேமானந்தா நித்தியானந்தான்னா சட்டம் தயவு தாட்சண்யம் பார்க்காம கடமையை செய்யும் அவா சூத்ரா இதுதான் பாலபாடம் !

அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட தொடங்க வேண்டும் ! சு. சாமி தொடங்கிட்டாரு !
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை மத்திய அரசு வரும் 2016ஆம்
ஆண்டுக்குள் தொடங்க வேண்டும்' என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான
சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்.
கோவில் கட்டுமானக் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியாவை நியமிக்கலாம். அவருடன் வி.கே.சிங் போன்ற மத்திய அமைச்சர் ஒருவரையும் நியமிக்கலாம்.

மதுக்கடைகளை பகலிலாவது மூடுங்கள் ! அரசுக்கு ஜெயமோகன் வேண்டுகோள் !
தமிழகத்திலும் சரி, பொதுவாக இந்தியாவிலும் சரி மது என ஒன்று உண்மையில்
கிடைப்பதில்லை. சர்க்கரைப்பாகில் இருந்து சீனி எடுக்கப்பட்ட பின்பு எஞ்சும்
‘மொலாஸஸ்’ தான் வெவ்வேறு வகையில் சாராயமாக ஆக்கப்பட்டு உண்ணப்படுகிறது.
பரம்பொருளுக்கு ஆயிரம் பெயர்கள் என்பதுபோல அந்த திரவம் பல வண்ணங்களில் ,பல
சுவைகளில் ,பிராந்தி விஸ்கி ரம் வோட்கா பீர் என பல நாமங்களில்
குடிக்கப்படுகிறது.
இந்த மொலாசஸ் தொழிற்சாலைக்கு நான் மூன்றுமுறை சென்று பார்த்திருக்கிறேன். கழிப்பறை செப்டிக் டேங்க் போல நாறும். அதன் உண்மையான மதிப்பு லிட்டருக்கு இரண்டு ரூபாய். மதுவாக நாமகரணம் செய்யப்பட்டு நூறு மடங்கு விலைக்கு விற்கப்படுகிறது. உலகிலேயே அபாயகரமான குடிவகை என அதை ஒருமுறை சிங்கப்பூர் நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)