சனி, 22 அக்டோபர், 2016

சுயமரியாதை உள்ள எந்த பெண்ணுக்கும் ரத்தம் கொதிச்சு கோபம் வரவேண்டும் .. காஞ்சி பெரியவாளின் ஆணாதிக்க வெறி!

தன்மானம், சுயமரியாதை, அறிவுள்ள
பொம்பளைக்கு இதை படிக்கும் பொழுது
ரத்தம் கொதிச்சு கோவம் வரணும்.....
இது போன்ற ஆன்மீக குப்பைகளை தூக்கி கடாசனும்.....
வளப்பமான அமெரிக்கா, அரபு நாடுகள்ல
உக்காத்துண்டு நன்னா சம்பாரிச்சு டொனேஷன்
என்கிற பேருல உங்களுக்கு எல்லாம் கொட்டி
கொட்டி கொடுக்கறாளே உங்களவா.....
ஒரு துரும்பை கூட நகர்த்தாம நன்னா உக்காந்து வக்கணையா சாப்பிடறேளே, அந்த பணத்துல....
அவா பொழப்பு தேடிப்போன அந்த
அமெரிக்காவுலயும் அரேபியாவுலயும்
மாசா மாசம் தீட்டு வர பொம்மனாட்டிக
தான் இருக்கா..... அப்புறம் அந்த நாடு மட்டும்
ஏன் செல்வசெழிப்போடு வளப்பமா இருக்கு, சுவாமிஜி.....!!!முக நூல் பதிவு

சசிகலா புஷ்பா: தம்பிதுரை மீது உரிமை மீறல் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்

புதுதில்லி, அக். 22 –
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், மக்களவை துணை சபாநாயகர்
தம்பிதுரை மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவர உள்ளதாக சசிகலா புஷ்பா எம்.பி. கூறியுள்ளார். திருச்சி சிவா எம்.பி.யுடனான மோதலையடுத்து, தன்னை முதல்வர் ஜெயலலிதாவிடம் அழைத்துச் சென்றபோதும், பின்னர் தில்லிக்கு அழைத்துச் சென்ற போதும் பெண் மற்றும் எம்.பி. என்ற வகையில் எனக்குரிய மரியாதையைத் தம்பிதுரை அளிக்கவில்லை; அவர் என்னைக் கைதி போல நடத்தினார்; எனவே, அவர்மீது குளிர்காலக் கூட்டத் தொடரின்போது உரிமை மீறல் புகார் தெரிவிப்பேன் என்று சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக, தமிழகத்தில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பற்றியும் நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்றும் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

சிவகாசி விபத்து : கொன்றது புகையா அரசின் அலட்சியமா ?

பாதாளச் சாக்கடையோ இல்லை பட்டாசுத் தொழிலோ நம் மக்கள் சாகவேண்டுமா? தீபாவளிக்கு வெடிக்க காத்திருக்கும் உள்ளங்கள் சிந்திக்கட்டும்
fire sivakasiருடா வருடம் தீபாவளி வாழ்த்து சொல்வதற்கு இணையாக பட்டாசு தொழில் விபத்தில் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்துவதும் அதிகரித்து வருகிறது. சிவகாசி – விருதுநகர் புறவழிச் சாலையில் உள்ள ராகவேந்திரா பட்டாசு கடையில் 20.10.2016 வியாழனன்று நடந்த விபத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
வியாபாரம் என்றால் அதில் சாமி பேர் இருக்க வேண்டும் என்ற விதிக்கு தப்பாத ராகவேந்திர கடையில் நேற்று பட்டாசுகளை வெளியூருக்கு அனுப்பும் முகமாக சிறு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். பட்டாசு பெட்டிகளில் புகையைப் பார்த்த ஊழியர்கள் அணைக்க முயன்றும் முடியவில்லை. உடனே அவர்களும் அருகாமை கடைக்காரர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

உப்பின் கதை .. உலக மயமாக்கலில் கரைந்து போன உப்பு தொழிலாளர் வாழ்வு!

salt-uppalam-08
உப்பு இல்லா பண்டம் குப்பையிலே” என்பார்கள். ஏனென்றால், நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் சரியான அளவில் உப்பு இருந்தால் தான் அதனை சுவைத்து சாப்பிட முடியும். இல்லையெனில் அதனை சாப்பிடவே பிடிக்காது. உப்பு சரியாக இல்லையென்றால் “என்ன கொழம்பு வக்கிர, உப்பு ஒறப்பு இல்ல” என்று வீட்டில் வசைபாடுகிறோம். உழைப்பின் உப்பு<> இருபது ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கம் அண்ணன் ஒத்தை மாட்டு வண்டியில் உப்பினை ஏற்றிக்கொண்டு வந்து வீடு வீடாக கிராமங்களில் விற்பனை செய்ய வருவார். அவர் எப்பொழுது வருவார் என எதிர்பார்த்து நெல், கோதுமை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களை வைத்துக்கொண்டு காத்திருப்பார்கள். உப்பு வண்டி வந்தவுடன் தானியங்களை கொடுத்து விட்டு உப்பினை வாங்கிச் செல்வார்கள். பண்டமாற்று முறையில் வியாபாரம் இருந்தது.

இயற்கையை அழித்து யாருக்காக உங்கள் ஆட்சி ? –யாருக்காக உங்கள் கட்சி? திருச்சி கருத்தரங்கம்

அ.தி.மு.க வினர் இன்று முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என்று காவடி தூக்குகிறார்கள். வேல் குத்துகிறார்கள். ஆனால் 1 ½ கோடி உறுப்பினர்களை கொண்ட நீங்கள் காவேரி பிரச்சனைக்கு போராடலாம்ல, ஏன் போராடல?
நீர் நிலைகளின் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும், என்ற தலைப்பில் திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பாக 12.10.16 அன்று மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டம் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு தோழர்.ப.தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது. தி.மு.கவின் திருச்சி வடக்கு மாவட்டச்செயலாளர் திரு.காடுவெட்டி ந.தியாகராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைச்செயலாளர் தோழர்.த.இந்திரஜித், திரு.திருச்சி.வேலுச்சாமி, காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் திரு.பாலசுப்ரமணியன் தீட்சதர், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் திரு.ம.ப. சின்னதுரை ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு சிறப்புரையாற்றினார். தோழர் ஜீவா வரவேற்புரை வழங்கினார்.
மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு தோழர்..தர்மராஜ் உரை:

வாமன ஜெயந்தி வானரங்களுக்கு கேரளாவில் ஆப்ப .. சந்தடி சாக்கில் மலையாளத்தில் கைவைத்து வாங்கிய செருப்படி !

bjp-brahminical-mischiefrss-brahminical-mischief-captionடந்த மாதம் (செப்.2016) கேரள மக்களால் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துத் தெரிவித்த பா.ஜ.க.வின் தலைவர் அமித் ஷா, “கேரள மக்களுக்கு இனிய வாமன ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்” என்று தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டிருந்தார். ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ மலையாள இதழான கேசரியும் தனது “ஓணம்” சிறப்பிதழில் இதே கருத்தைப் பதிவு செய்திருந்தது. மாவலி மன்னனின் மறுவருகையை வரவேற்கும் ஓணம் பண்டிகையை, வாமனன் அவதரித்த நாளாக மடை மாற்ற முயலும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இப்பார்ப்பனக் குசும்புத்தனத்தைப் பெரும்பான்மையான கேரள மக்களும் ஓட்டுக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் உடனடியாகக் கண்டித்துக் கருத்துக்களை வெளியிட்டன

பசுப்பாதுகாப்பு ..வன்புணர்வு ,கொலை ,கொள்ளை,கொடூர தாக்குதல்கள் .. காவிகளின் வெறியாட்டம் ..

mewat-victimsபசுப் பாதுகாப்பு என்ற பெயரில் கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி உள்ளிட்ட எல்லாக் குற்றங்களையும் இழைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். காலிகளுக்கு லைசென்சு வழங்கியிருக்கிறது, மோடி அரசு. 
ரியானா மாநிலம் மேவாத் மாவட்டத்தி தின்கர்ஹெரி கிராமத்தில் ஒரு முசுலீமின் வீட்டிற்குள் நள்ளிரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்த பசு பாதுகாப்பு இந்து மதவெறிக் கும்பலொன்று அவர்களிடம், ‘‘ஈத் பண்டிகைக்கு மாட்டுக் கறி சாப்பிடுவியா?” என வக்கிரமாகவும் வன்மத்தோடும் கேட்டு, அக்குடும்பத்தைச் சேர்ந்த இருவரைக் கொலை செய்து, இருவரைக் கொடுங்காயம் ஏற்படும் வண்ணம் அடித்துத் துன்புறுத்தி, சிறுமி உட்பட இரண்டு பெண்களைக் கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, மிகக் கொடூரமான வெறியாட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது. இந்து மதவெறிக் கும்பலால் கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஆளான முஸ்லிம் பெண்கள்.
கடந்த ஆகஸ்ட் 24 அன்று நள்ளிரவில் நடந்த இத்தாக்குதலில் விவசாயக் கூலி வேலை செய்து வரும் ஏழை முசுலீமான இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி ரஷீதா இருவரும் இந்து மதவெறிக் கும்பலால் இரும்புக் கம்பிகள் மற்றும் மரக்கட்டைகளால் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்டனர்.

அதிமுகவினர் சோக போஸ் கொடுத்து கொண்டே தங்க வசூலில் மும்மரம்


தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவ வல்லுநர்களால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஜெயலலிதா பூரண குணமடையும் வரை ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பு முதல்வராக பதவியேற்றுள்ளார். சமீபத்தில் கூடிய அந்த அமைச்சரவை கூட்டத்திலும் அமைச்சர்கள் அனைவரும் சோகம் கவிழ்ந்த முகத்துடனே காணப்பட்டனர். பதவியேற்ற பன்னீர்செல்வமும் அவரது துயரத்தை குறிக்கும்வகையில் வெள்ளை தாடி விட்டபடியே ஊடகங்களின் பார்வைக்குப்படுகிறார். ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆகும்போதுதான் நமக்கு தீபாவளி என அவரது தொண்டர்கள் எண்ணி வரும் நிலையில் அமைச்சர்கள் பெயரை சொல்லி அவருக்கு நெருக்கமானவர்கள் கான்ட்ராக்டர்களிடமும், அதிகாரிகளிடமும் வியாபாரிகளிடம் தங்க நாணய வசூல் வேட்டை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மின்னம்பலம்,காம்

அனைத்து கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு .. காவிரி விவகாரம் .. ஐப்பசி 25 ..

இந்தக் கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் பெயருக்கு கடிதம் எழுதி தலைமைக் கழகத்துக்கு ஆள் மூலம் கடிதம் கொடுத்து அனுப்பப்பட்டது. ஆனால், அந்த கடிதத்தை அதிமுக தலைமை கழகத்தில் உள்ளவர்கள் வாங்க மறுத்து விட்டனர். இதனால் இன்று கூரியர் தபால் மூலம் அதிமுக தலைமைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை : காவிரி விவகாரம் தொடர்பாக அக்டோபர் 25ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட திமுக தீர்மானித்துள்ளது. இதற்காக அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக அழைப்பு : காவிரி விவகாரம் தொடர்பாக அக்டோபர் 25ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. அனைத்துக்கட்சி கூட்டம் தொடர்பான அழைப்பு கடிதத்தை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான ஸ்டாலின் அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டாவிட்டால், திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என ஸ்டாலின் ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

திருநாவுகரசுவின் அதிமுக ஆதரவுக்கு டெல்லியில் கிடைத்த டோஸ்!

""அரசியலில் லாபமடை யணும்னா அவமானங்களை தூசிமாதிரி தட்டிட்டுப் போகணும். ஒரே நேரத்தில் டெல்லிக்குப் போய் தனித்தனியா தலைவர்களை சந்திச்சிருக்காங்களே திருநாவுக்கரசரும், இளங்கோவனும்?'' ""காங்கிரஸ் மாவட்ட தலைவர் கள் கூட்டத்தைக் கூட்டிய திருநா வுக்கரசர், அதில் தி.மு.க. கூட் டணிக்கு எதிரான குரல் அதிகம்ங்கிற தகவலைச் சொல்ல, டெல்லிக்குப் போனார். அவருக்கு முன்பாகவே கலைஞரின் எண்ணங்கள் கனிமொழி மூலம் சோனியா காதுக்கு போயிடுச்சி. திருநாவுக்கரசர் தலைமை ஏற்றதற்குப் பிறகு, தி.மு.க.வுடன் இணக்கமா இல்லை. இதே நிலை நீடித்தால், புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு நாங்கள் கொடுத்துவரும் ஆதரவு பற்றி பரிசீலிக்க வேண்டியிருக்கும்னு சோனியாவிடம் சொல்லப்பட்டிருக்கு. சோனியாவோ, திருநாவுக்கரசர் கருத்தை பெருசா எடுத்துக்க வேணாம். நம்ம கூட்டணி உறுதியாவே இருக்குன்னு சொல்லிவிட்டார்.'அதன் பின் திருநாவுகரசுவுக்கு அங்கு நல்ல பாடம் நடப்பட்டது . இருந்தாலும் அவர் அங்கு இனி ஒரு சந்தேக கண்ணோடுதான் நோக்கப்படுவார் ?

உபி ஹாவாலா அஜித் அப்போலோ வருகை ..அதன் பின் போயஸ் கார்டனில் காண்டேயினர்கள் நடமாட்டம் .. அப்புறம் மோடி அமித் ஷா ...

""ஹலோ தலைவரே, முதல்வர் ஜெயலலிதா இல்லாம, முதல் முறையா
அ.தி.மு.க அரசின் அமைச்சரவைக் கூட்டம் 19-ந் தேதி நடந்தது. தலைவர் இருக்கையில் யாரும் உட்காரலை. மேஜைமேலே ஜெ. படத்தை வச்சிட்டு, அவரே நேரில் பங்கேற்ற மாதிரி நினைச்சு மந்திரிகளெல்லாம் ஆடாம அசையாம உட்கார்ந்திருந்தாங்க.
"அமைச்சரவை கூட்டம் நடத்துற அதிகாரமுள்ள நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதற்கான அனுமதியை மன்னார்குடி தரப்பிடமிருந்து எதிர்பார்த்திருப்பதா நம்ம நக்கீரன் விரிவா எழுதியிருந்ததே?''
"ஆமாங்க தலைவரே.. வரும் 24-ந் தேதியோட உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைவதால், உள்ளாட்சிகளை கவனிக்க தனி அதிகாரிகளை நியமிக்கணும். அதற்கான ஒப்பு தலை அமைச்சரவை கூடித்தான் கொடுத்தாக ணும். அதற்குத்தான் சசிகலா அனுமதியை ஓ.பி.எஸ் எதிர்பார்க்கிறார்னு நம்ம நக்கீரன் எழுதியிருந்தது. அந்த இதழ், 18-ந் தேதி காலை, கடைகளுக்கு வந்தது. கொஞ்ச நேரத்தில், 19-ந் தேதி அமைச்சரவையைக் கூட்டும்படி அப்பல் லோவிலிருந்து அதிகாரி களுக்கு உத்தரவு வந்தி ருக்கு.'

இன்றைய அப்போலோ எபிசொட் . அம்மா விரைவில் பூரண குணம் அடைவார் !


ஒரு மாத காலமாக அப்பல்லோவின் அவசர சிகிச்சை உயிர் காக்கும் கருவிகளோடு போராடிக் கொண்டிருக்கும் முதல்வர் ஜெ.வின் உடல்நிலையில் எந்தளவு முன்னேற்றம் இருக்கும் என்பது குறித்து சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற பல மருத்துவர்களைக் கேட்டோம். புனித இசபெல்லா மருத்துவமனையில் உயிர் காக்கும் அவசர சிகிச்சைப் பிரிவின் டாக்டர் ஒருவர் நம்மிடம், " இத்தகைய நிலையில்தான், அவரை மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள் என்பதை நக்கீரன் வெளியிட் டுள்ள முதல்வரின் மருத்துவக் குறிப்பேடுகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. அதனடிப்படையில் பார்த்தால் முதலில் அவருக்கு இதயத்துடிப்பை வேகப்படுத்தும் கருவிகளை தற்காலிகமாக பொருத்தினார்கள். அதையே பின்னர், அவர்கள் நிரந்தர மாக்கி இருக்கிறார்கள். அதேபோல் மூச்சு விடுவதில் உள்ள சிரமத்தை லேசாக்கும் செயற்கை சுவாசக் கருவிகளை பொருத்தியிருக்கிறார் கள். வாய்வழியாக ட்யூப் மூலம் உணவு, மருந்து கொடுத்திருக்கிறார்கள்.

ஜியோ 4ஜி.,ன் வேகம் குறைவு ... ஏனைய நிறுவனங்களின் 4 g,,

புதுடில்லி : தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் 4ஜி சேவையின்
டிராய் வெளியிட்டுள்ள 4ஜி வேகம் குறித்த விபத்தில் ஏர்டெல் 11.4 எம்பிபிஎஸ்( mbps) கொண்டதாகவும், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 7.9 எம்பிபிஎஸ் கொண்டதாகவும், ஐடியா 7.6 ம்பெிபிஎஸ் கொண்டதாகவும், வோடபோன் 7.3 எம்பிபிஎஸ் கொண்டதாகவும் உள்ளன. அதே சமயம் ஜியோ 4ஜி சேவையின் வேகம் 6.2 எம்பிபிஎஸ் கொண்டதாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் டிராயின் இந்த புள்ளிவிபரத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
எதன் அடிப்படையில் இந்த வேகம் குறித்த அளவீடு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த ஆய்வு செய்து வருகிறோம். ஆய்விற்கு பிறகு அது குறித்து விபரத்தை டிராயிடம் அளிக்க உள்ளோம் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது

திருப்பரங்குன்றத்தில் விஜயகாந்த் போட்டியிட கட்சியினர் நெருக்கடி

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், விஜயகாந்த் போட்டியிட வேண்டும்' என, தே.மு.தி.க.,வினர் நெருக்கடி கொடுக்க துவங்கி உள்ளனர்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு, நவ., 19ல், தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க.,விற்கு போட்டியாக, வேட்பாளர்களை களமிறக்க வேண்டும் என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் விரும்புகிறார். இதற்காக, வேட்பாளர் தேர்வு ரகசியமாக நடந்து வருகிறது. இதுபற்றி தகவலறிந்த, தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள்,விஜயகாந்தை சந்தித்து, 'தேர்தலை புறக்கணிக்க வேண்டும்' என்றனர். ஆனால், திருப்பரங்குன்றம் தொகுதியில், அவர் போட்டியிட வேண்டும் என, நெருக்கடி கொடுக்க துவங்கி உள்ளனர்.

தமிழிசை : தினம் ஒரு தலித் வீட்டில் உண்கிறேன்! என்ன ஒரு தியாகம்? இந்த நாடார் தலைவியை விட பாப்பாத்திகள் மேல் ?

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டுமென தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும்போது, வழியில் விழுப்புரம் மாவட்டம் கிளியனூரில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு கட்சி பிரமுகர்களோடு உணவருந்தி உரையாடிவிட்டு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “பிரதமர் மோடியின் உத்தரவுப்படி தினம் ஒரு தலித் வீட்டில் மதிய உணவு உண்டு வருகிறேன். அதன்படி இன்று சகோதரர் ராமமூர்த்தியின் வீட்டுக்கு வந்து உணவருந்தினேன். தலித்துக்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்தி வரும் தமிழகத்தில், பாஜக மட்டுமே அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாடுபட்டு வருகிறது. தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட உள்ளது. வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு கட்சி தலைமையின் ஒப்புதலோடு விரைவில் வெளியிடப்பட்டும். கடந்த முறை பணப்பட்டுவாடா என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தேர்தல் நிறுத்தப்பட்டது.

தயாநிதி : காசு பணம் துட்டு மணி மணி’ - (திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன்! திமுக,பாஜக ,மதிமுக அப்புறம் திமுக .. ஏனுங்க? )


இடைத்தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், அரவக்குறிச்சியில் கே.சி.பழனிசாமி, தஞ்சாவூரில் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் போட்டியிட உள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணனை திமுக வேட்பாளராக நிறுத்தியுள்ளதை மு.க.அழகிரியின் மகனான தயாநிதி அழகிரி அவரது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். ‘இடைத்தேர்தலில் போட்டியிட சரவணனைவிட நல்ல வேட்பாளர் மதுரை திமுக-வில் இல்லை என்பதை அறியும்போது, கவலையாக உள்ளது. #காசு பணம் துட்டு மணி மணி’ என்று ஆங்கிலத்தில் ட்விட் செய்துள்ளார் தயாநிதி அழகிரி. இதன்மூலம், இடைத்தேர்தலில் சரவணன் வெற்றிக்கு மறைமுகமாகக்கூட அழகிரி உதவப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. முன்பு டாக்டர் சரவணன், மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். அதன்பிறகு பாஜக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளில் ஐக்கியமாகிய சரவணன், மு.க.ஸ்டாலின் மூலமாக திமுக-வில் இணைந்தவர். அந்த அதிருப்தியை தயாநிதி அழகிரி இப்படி வெளிப்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்.மின்னம்பலம்,காம்

நம் உடல் நமக்கு இல்லையா? எப்போது கடைசியாக குதித்து இருக்கிறீர்கள்?எப்போது ஓடியாடி டென்னிஸ் விளையாடி...

மின்னம்பலம்,காம் : கடந்த வாரம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இரு பெண்கள் பேசிக் கொள்வதைக் கேட்க நேர்ந்தது. இருவருமே திண்டிவனம் அருகில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள். மத்திய வயதில் இருந்தனர். ‘எங்க ஊர்ல இந்த வயசுப் பசங்க எல்லாம் சேர்ந்து போட்டி வச்சானுவ. அதுல நம்மள மாதிரி இருக்குற பொம்பளைகளுக்கும் ஓட்டப்பந்தயம் வச்சானுவ. நானு கலந்துக்குலாமா, வேண்டாமான்னு யோசிச்சுக்கினே இருந்தேன். என் மாமியா எதுவும் சொல்லிட்டா என்ன பண்றதுன்னு பயம். அப்புறமா என்ன ஆனாலும் பரவாலேன்னு போட்டியில சேர்ந்துட்டேன். எங்கூட என் தெருவுல இருந்த நாலு பொம்பளயவ சேந்துட்டாங்க. ஓடுனம்பாரு, ஒரு ஓட்டம். யப்பா… என்னம்மா ஓடினுனேன். அப்புறம் பார்த்தா நாந்தான் ஃபர்ஸ்ட்டுனு சொல்லிட்டானுவ அந்த பயலுவ. மேடையில கூப்புட்டு, ரெண்டு பிளேட்டு பரிசா தந்தானுவ. எனக்கு அழுகாச்சியா வந்துருச்சு. இந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்து 24 வருஷமாவுது. இப்பத்தான் இந்த ஊரு தெருவுல ஓடியிருக்கேன். எனக்கு ஓடணும்னு எம்புட்டு ஆச தெரியுமா? பள்ளியோடம் படிக்கிறப்ப ஓடினதுதான். அப்புறம் எங்க? ஒம்பதாவது படிக்கிறப்ப கண்ணாலம் பண்ணிட்டாங்க. அதுக்கப்புறம் காடு, ஊடுன்னு அலையத்தான் முடிஞ்சது. புள்ள குட்டின்னு பொழப்பு கெடந்து சீரழியுது. இதுல ஆசப்பட்டத செய்ய முடியுதா?’ என்று பேசி முடித்த கணம், அவரது கண்களில் ஏக்கம் இருந்ததை காண முடிந்தது.

14 மாநிலங்களைவிட அம்பானி பணக்காரர்! மாநிலங்களை விட சில தனி நபர்கள் பணக்காரர்கள் .. கொடுமை

உலகளவில் பணக்காரர் பட்டியலில் 32ஆவது இடத்திலும், இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தில் இருப்பவருமான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 23.1 பில்லியன் டாலராகும். ஃபோர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு வருடமும் இந்திய பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது, இதில் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக முதல் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தி அளவை விட அதிகமாக உள்ளது.
இந்திய பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் திலிப் ஷங்க்வின் சொத்து மதிப்பு 15.8 பில்லியன் டாலராகும். இவரது சொத்து மதிப்பு கோவா, அருணாச்சலப்பிரதேசம் உள்பட 13 மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தி அளவை விட அதிகமாக உள்ளது. இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள அசிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 15.4 பில்லியன் டாலராகும். இது 13 மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தி அளவை விட அதிகமாக உள்ளது.  மின்னம்பலம்,காம்

ஜே.என்.யூ: காணாமல் போன மாணவரை தேட உத்தரவு: ராஜ்நாத் சிங்!

டெல்லியில் உள்ள பிரபல ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த நஜீப் அகமது என்பவரை கடந்த 15ஆம் தேதி முதல் காணவில்லை. இதையடுத்து காணாமல் போன நஜீப் அகமதுவை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் நேற்று முதல் பல்கலைக்கழக வளாகத்தில் விடிய விடிய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக துணைவேந்தரையும் ஊழியர்களையும் அக்கல்லூரி மாணவர்கள் சிறை பிடித்தனர். அவருடன் கல்லூரி நிர்வாகிகள் 12 பேரும் நேற்று இரவில் இருந்து பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர்.

திரைக்கு வராத கதை .. பெண்கள் மட்டுமே நடிக்கும் புதிய முயற்சிக்கு யு எ சான்றிதழ் கொடுத்தது அநியாயம்


இந்திய சினிமாக்களில் பெண்களை வெறும் காட்சிப் பொருளாக
பயன்படுத்தியே பெரும்பாலான படங்கள் வருகின்றன. ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளே இங்கு அதிகமாக உலா வருகிறது. ஆடிக்கு ஒரு தடவையோ இல்லை, அமாவாசைக்கு ஒரு தடவையோதான் பெண்ணின் கதாபாத்திரத்தை முன்னிறுத்திய படங்கள் வெளிவருகின்றன. இதுபோன்ற சூழல் நிலவி வரும் நிலையில், ஆண் கதாபாத்திரங்களே இல்லாமல் ஒரு படம் வந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு புதிய முயற்சியை எடுத்திருக்கிறார் மலையாள இயக்குநர் துளசிதாஸ். மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது இந்தத் திரைப்படம். நடிகை நதியா, இனியா, கோவை சரளா, ஈடன், ஆர்த்தி, ஆரதி ஆகியோரின் நடிப்பில் வெளிவரவுள்ள ‘திரைக்கு வராத கதை’ தான் அந்தத் திரைப்படம். பெண்ணுணர்வு சார்ந்த ‘லெஸ்பியன்’ உறவை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சில உணர்வு ரீதியான காட்சிகளை காட்ட, கவர்ச்சியான காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. இதனை தணிக்கை குழுவுக்கு அனுப்பியபோது அங்குள்ள உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆபாச காட்சிகள் இருப்பதால் சான்றிதழ் தர முடியாது என்று மறுத்தனர். பின்னர் பெண்ணும் பெண்ணும் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளை, ஆபாசமாக இருப்பதாக கூறி நீக்கிவிட்டு, ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மினன்ம்பலம்,காம்

தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்!”: திருமுருகன் காந்தி

thetimestamil.com  :  பத்திரிகையாளர் சமஸ், தி இந்து தமிழ் நாளிதழில் எழுதிய “காவிரியில் நமக்கு உரிமைகளை பேச தகுதி இருக்கிறதா” என்ற கட்டுரைக்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி எழுதியுள்ள எதிர்வினை இங்கே: “காவிரியில் நமக்கு உரிமைகளை பேச தகுதி இருக்கிறதா” என்கிற கேள்வியோடு பொறுக்கித்தனத்தினை ‘தி இந்து’ கட்டுரை எழுதி இருக்கிறது.
‘தி இந்து’ எனும் ஆரிய இனவெறி- சனதானியிடம் சம்பளம் வாங்கி பிழைப்பு நடத்துபவர்களுக்கும், ‘ராஜபக்சேவிடம்’ சம்பளம் வாங்கி தமிழன் தலையில் சுடுபவனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதில் இருந்தே விவாதத்தினை துவக்க வேண்டும்.
தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் நாம் சமபலத்தில் எதிர்க்கிறோம் எனில், ‘தி இந்து’ போன்ற பொறுக்கிகள் , தமிழர் தரப்பினை பாசிஸ்டுகளாக எழுதும், இல்லையெனில் ‘ஃப்ரிஞ்ச் குரூப்’ என தலையங்கம் எழுதும். தமிழர்களுக்கான பக்கத்தில் நீதி இருப்பது பட்டவர்த்தனமாக தெரியுமிடத்தில், தமிழர்கள் போராட்டத்தினை கொச்சைப்படுத்தும், இல்லையெனில் நரித்தனமான கட்டுரைகளை எழுதும்.

சேலம் உருக்காலை- நட்டமாகும் கம்பெனியை வாங்குவதற்கு கார்ப்பரேட்டுகள் (ஜிண்டால்) முட்டாள்களா?

thetimestamil.com : சந்திர மோகன் சந்திர மோகன்4000 ஏக்கர் நிலப்பரப்பு, ரூ.15,000 கோடி சொத்து மதிப்பு, 1400 நிரந்தரமான தொழிலாளர்கள், அலுவலர்கள், ஒப்பந்தம் /மறைமுக வேலை வாய்ப்பு பெறுபவர்கள் 3000 பேர், சேலம் ஸ்டெயின்லெஸ் என்ற பிராண்ட் புகழ், இந்தியாவின் நாணயங்கள், ரெயில்வே, செயற்கை கோள்கள் முதல் வீடுகள், ஓட்டல்களின் பாத்திரங்கள் வரைத் தயாரிக்க பயன்படும் துருப்பிடிக்காத எஃகு தகடுகள் தயாரிக்கும் ஆலை, சேலம் உருக்காலை ஆகும்.
1970 களில், தமிழகத்திற்கு கிடைத்த பெருமை மிகுந்த பொதுத்துறை நிறுவனம். “இரும்பாலை வருகிறது , வேலை கிடைக்கும், வாழ்க்கை வளமாகும் ” என ஏழை விவசாயிகள் ஒரு ஏக்கர் நிலத்தை வெறும் ரூ.3000, 5000 எனக் கொடுத்து உருவான நிறுவனம். ஒருங்கிணைந்த உருக்காலையாக (Integarated Steeel Plant) உருவாகாமல் இருந்த போதும், 1980 லிருந்து 2010 வரைக்கும், உருட்டாலையாக இலாபகரமான நிலையில் தான் செயல்பட்டு வந்தது.

இந்துத்வா பயங்கரவாதிகளின் அடியாள் தினமலர்? கிறிஸ்துதாஸ் காந்தியின் வீட்டு முகவரியை வெளியிட்ட ரவுடி பத்திரிக்கை

சமீபத்தில் தந்தி டிவி பிரதமர் நரேந்திர மோடியின் “ஜெய் ஸ்ரீராம் முழக்கம்” குறித்து விவாதம் ஒன்றை நடத்தியது. இதில் முன்னாள் ஐஏஎஸ் கிறிஸ்துதாஸ் காந்தி, மத சுதந்திரம் உள்ள நாட்டில் நாத்திகர்களுக்கு ராமரை செருப்பால் அடிக்கும் உரிமையும் உண்டு எனப் பேசினார். இது இந்துத்துவ அமைப்புகளால் கண்டனத்துக்கு உள்ளானது. பகுத்தறிவாளர்கள் பலர் கிறிஸ்துதாஸ் காந்திக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் அளித்து, யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக பொதுமன்னிப்பு கேட்பதாகவும் கிறிஸ்துதாஸ் காந்தி தெரிவித்திருந்தார்.

காவிரி... தொழில் நுட்பக் குழுவின் துரோகப் பட்டியல

காவிரி நதிநீர் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் தற்போதைய நீர் இருப்பு, நீர் தேவை உள்ளிட்டவை தொடர்பான உண்மை நிலையை ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் அமைக்கப்பட்ட காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழு நேரில் ஆய்வு மேற்கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ‘இந்தக் குழு, நேர்மையாக நடந்து கொள்ளவில்லை, தமிழ்நாட்டுக்கு பல பாதகங்களை இழைத்துள்ளது’ என ஆதங்கக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.">பாதகங்களின் பட்டியல் 

 மாண்டியாவில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய பணத்தைக் கொடுக்காததுபோன்ற காரணங்களாலேயே அங்கு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால், அவர்கள் வறட்சியால் தற்கொலை செய்துகொண்டதாக ஆய்வுக் குழு சொல்கிறது.

மிஸ்டர் கழுகு : 45 நிமிஷம் உள்ளேயே இருக்கணும்! பன்னீர் அமைச்சரவை கூட்ட எபிசொட்

ஜெயலலிதா நலம் பெற்றுவிட்டார்... 27-ம் தேதி வீடு திரும்புகிறார்... என்றெல்லாம் செய்திகள் வருகிறதே?” - கழுகாரைப் பார்த்ததும் கேள்வியைப் போட்டோம். ‘‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, அப்போலோவில் இருந்து வெளிவரும் அறிக்கைகள் முற்றிலும் நின்றுவிட்டன. ‘முதலமைச்சரின் உடல்நிலை முன்னேறி வருகிறது’ என கடைசியாக கடந்த 10-ம் தேதி அறிக்கை வந்தது. அதன்பிறகு, 10 நாட்கள் ஆகியும் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. அரசுத் தரப்பில் இருந்து இதுவரையில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. ‘முதல்வர் நலம்பெற்றுவிட்டார்... இரண்டு நாளில் வீடு திரும்புவார்’ என்று அ.தி.மு.க. நிர்வாகிகள்தான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். ஜெயலலிதாவின் உடல்நிலையில் இறக்கமும் இல்லை; முன்னேற்றமும் இல்லை. அவர் சிகிச்சைக்கு சேர்ந்தபோது, என்னவிதமான உபாதைகளோடு அவதிப்பட்டாரோ அதே நிலைதான் தற்போதும் நீடிக்கிறது. செயற்கைச் சுவாசம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் செயற்கை சுவாசத்தில் இருப்பதே மிகவும் அபாயகரமான நிலையைத்தான் சொல்லாமல் சொல்கின்றன. அப்போலோ மருத்துவமனையின் மௌனமும், ஆட்சி நிர்வாக மூவ்மென்டுகளும் அதைத்தான் உறுதிசெய்கின்றன.”

அம்மா உடல்நிலை தேறி வருகிறார் .. இன்றைய அப்போலோ எபிசொட்

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் பிரதான துறைகள்: தொற்றுநோய் கிரிட்டிகல்/ இன்டன்சிவ் கேர் சர்க்கரை நோய் நுரையீரல் இதயம் இவை தவிர, டயட், பிசியோதெரப்பி பயிற்சி நிபுணர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இவை தவிர, டயட், பிசியோதெரப்பி பயிற்சி நிபுணர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. இந்த ஒரு மாத காலமாக, முதல்வரின் உடல்நிலை பற்றிய அரசின் குரலாக அப்போலோ மட்டுமே ஒலித்துவருகிறது. ஜெ.க்கு என்ன வகையான நோய் அறிகுறிகள் இருக்கின்றன, என்ன மாதிரியான சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன, அவரது உடல்நிலை பற்றி விவாதித்து சிகிச்சை முறைகளை முடிவுசெய்யும் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர் குழுக்கள் பற்றிய தகவல்களை அறிக்கைகள் வழியாக அப்போலோதான் வெளியிட்டு வந்தது. அதுவும், 10 நாட்களாக அறிக்கை எதுவும் தரவில்லை.

ராணுவ இரகசியங்கள் வருண் காந்தி மூலம் ஆயுத வியாபாரிகளுக்கு கிடைத்தது? அழகிகளை காட்டி அண்ணனை மயக்கினார்கள்?

Varun Gandhi(C)புதுடெல்லி  - ஆயுத வியாபாரி மற்றும் ஆயுத உற்பத்தியாளர்களுக்கு ராணுவ ரகசியங்களை தெரிவித்ததாக வருண் காந்தி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது இந்திய அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.  பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் மத்திய மந்திரி மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி உத்தர பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார். இவர் மீது குற்றம் சாட்டப்படும் வகையில் உள்ள ஒரு கடிதத்தை ஸ்வராஜ் அபியான் அமைப்பைச்சேர்ந்த பிரஷாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகிய இருவரும் வெளியிட்டனர்.  அமெரிக்காவை சேர்ந்த வழக்கறிஞர் எட்மண்ஸ் ஆலன் பிரதமர் அலுவலகத்துக்கு எழுதிய கடிதத்தின் பிரதியில், வருண் காந்தி ஆயுத வியாபரிகளுக்கு இந்திய ராணுவத்தின் ரகசியத்தை கசிய விட்டதாக கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 21 அக்டோபர், 2016

சிவகாசி பட்டாசு விபத்து ..லஞ்சம் வாங்கி அனுமதி கொடுத்ததன் விளைவு !

சிவகாசி: அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு விதிமுறைகளை
பின்பற்றாமல் பட்டாசு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதே சிவகாசி தொடர் பட்டாசு விபத்துகளுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகாசியில் பட்டாசு விபத்துகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. பட்டாசு தொழிற்சாலை, கிடங்குகள் மற்றும் விற்பனை கடைகளை அனுமதிக்கும் போது பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும். ஆனால் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் லஞ்சம் வாங்கி கொண்டு அலட்சியமாக செயல்படுவதே விபத்துகளுக்கு காரணம் என சமூக ஆர்லவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தனியார் பள்ளி ஆசிரியர்களை சுரண்டி கொழுக்கும் கல்வி வியாபாரிகள்

theekkathir.in  வாசல் கதவுக்கருகில் நின்று காவல் காக்கும் காவலாளி
ஆசிரியர்களது பணிச்சுமையினைக் குறைக்கும் வகையில் கூடுதலாகச் சிலரைப்
பணியிலமர்த்துவதற்கான வசதிகள் உள்ள ‘பெரிய’ பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டு, அனைத்து பள்ளிகளிலும் கல்விப் பணியல்லாத பிற வேலைகள் ஆசிரியர்கள் மீது சுமத்தப்படுவதைக் குறைக்கும் நோக்கத்தோடு இத்தகவல்கள் சேகரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. நகரத்தில் உள்ள ஒரு ஆடம்பரமான பணக்காரப் பள்ளியில் பணி புரிவது என்பது எத்தகைய அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கிறது? என்ற கேள்விக்கு திருப்திகரமான பதிலை ஆசிரியர்களிடமிருந்து உங்களால் பெற முடியாது.

Times Now ரவுடி அர்னாப் கோஸ்வாமிக்கு ஏன் ஒய் பிரிவு பாதுகாப்பு – மார்கண்டேயகட்ஜூ

புதுதில்லி, அக்.17- செய்தியாளர் அர்னாப் ஸ்வாமிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு
வழங்கப்படுவது ஏன் என்று மார்கண்டேய கட்ஜூ கேள்வி எழுப்பியுள்ளர். தனியார் ஆங்கில செய்தி நிறுவனத்தின் செய்தியாளராக பணிபுரிகிறார் அர்னாப் கோஸ்வாமிக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அவருக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜூ, மக்களின் வரிப்பணத்தில் இருந்து அதிகம் செலவழித்து அர்னாப் கோஸ்வாமிக்கு இத்தகைய உயரிய பாதுகாப்பு வழங்கப்படுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். அதிக சம்பளம் வாங்கும் அர்னாப் கோஸ்வாமி தனது பாதுகாப்பிற்கு தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மூலம் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், அரசு ஆயுதம் ஏந்திய 20 காவலர்களை நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளது ஏன் எனவும் மார்கண்டேய கட்ஜூ வினவியுள்ளார்.

ஜனநாயகம் என்பது ஒரு வதந்தி ? சந்தேக வினாக்களை தடைசெய்தால் அதுதான் ஜனநாயகத்தின் மரணம்?

தமிழ்நாட்டில் இப்போது 'வதந்தி ஒடுக்குமுறைத் தடுப்புச் சட்டம்' என்று ஓர்
அவசரச் சட்டம் மட்டும்தான் கொண்டு வரப்படவில்லை. மற்றபடி, ஒவ்வொரு நாளும் இரண்டு பேராவது, வதந்தி பரப்பினார்கள் என்னும் குற்றச்சாற்றில் கைது செய்யப்படுகின்றனர். இன்றுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 50 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் பலர் குறித்த பல வதந்திகள் தமிழ்நாட்டில் உலவி உள்ளன. அப்போதெல்லாம் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட்டதில்லை. இப்போது மருத்துவமனையில் உள்ள முதல்வர் பற்றி யாரேனும் ஏதோ ஒரு சிறு கருத்தை வெளியிட்டாலும் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமூக வலைத் தளங்களில் செய்த பதிவுகளுக்காக இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கேள்வி கேட்பது குற்றம் ஆனால் குழந்தைகளுக்கு இரும்பால் குத்தலாம்? 

சென்னை 145 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு .. ஓடிசாவில் இருந்து கேரளாவுக்கு கடத்தபப்ட்ட குழந்தைகள் ரயில்வே போலீசார் ..

ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னை வழியாக திருவனந்தபுரம் தனியார்
நிறுவனத்திற்கு வேலைக்காக ரயில் மூலம் அழைத்து வரப்பட்ட 145 குழந்தை தொழிலாளர்களை ரயில்வே போலீசார் மீட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னை வழியாக திருவனந்தபுரத்திற்கு ரயில் மூலம் குழந்தை தொழிலாளர்கள் அழைத்து செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை, தமிழக -கேரளா எல்லையான பாரச்சாலை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அப்போது 50 ஆடவர் மற்றும் 95 பெண்கள் உட்பட்ட 145 குழந்தை தொழிலாளர்களை ரயில்வே போலீசார் மீட்டனர். இந்த குழந்தைகளை அழைத்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஏஜன்ட் ராம்நாத் மிஸ்ரா என்பவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நியுஸ் 7.

முதல்–அமைச்சர் குறித்து பதிவை வெளியிட்ட தி.மு.க. நிர்வாகிகளின் வலைதளங்களை முடக்குவதற்கு தடை கேட்டு வழக்கு

சென்னை, தி.மு.க. நிர்வாகிகளின் சமூக வலைதளங்களை முடக்குவதற்கு
தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.< கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் ஆர்.நவநீதகிருஷ்ணன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– பிரசாரம் தி.மு.க.வின் கோவை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளராக பதவி வகிக்கிறேன். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் சமூக வலைதளம் மூலமாக பிரசாரம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளேன். பிரசார யுக்தியாக முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக தி.மு.க.வினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறேன். கடந்த அக்டோபர் 11–ந்தேதி எனக்கு ‘வாட்ஸ் ஆப்’ மூலமாக வந்த ஒரு பாடலை முகநூலில் பதிவு செய்தேன்.

வீரமணி :சமூகநீதிக்கு எதிரான புதிய கல்வித் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்காதது ஏன்?

கி.வீரமணி | கோப்புப் படம்: க.ஸ்ரீபரத்கி.வீரமணி | கோப்புப் படம்: க.ஸ்ரீபரத்
சமூகநீதிக்கு எதிரான புதிய கல்வித் திட்டத்தை தமிழக அரசு அதிகாரபூர்வமாக எதிர்க்காதது ஏன்? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வித் திட்டம் குறித்து தமிழக அரசு இன்னும் திட்டவட்டமான கருத்தை தெரிவிக்கவில்லை என்பது அதிர்ச்சிக்குரியது. புதிய கல்வித் திட்டத்துக்கு எதிராக மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள் என தொடர் நிகழ்ச்சிகள் நடக்கும் நிலையிலும் மத்திய அரசின் சமூக நீதிக்கு எதிரான, ஆபத்தான புதிய கல்விக்கொள்கை பற்றி தமிழக அரசு அதிகாரபூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.
குலக்கல்வி முறை, இந்தி, சமஸ்கிருத திணிப்பு, கல்வி தனியார்மயம், இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து, மாநில அரசின் முடிவில் தலையீடு என ஏராளமான பாதக அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. மழலையர் பள்ளி முதல் உயர்கல்வி வரை கல்வி நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் கோலோச்சும் திமுக! தன்னார்வ பதிவாளர்களை அதிமுக போலீஸ் குறிவைப்பதான் உள்நோக்கம் இதுதான்

இந்தியாவில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் ---திமுகவிற்கும்
ஒரு அடிப்படை வேறுபாடு இருக்கிறது...
மற்றக்கட்சிகள் எல்லாமே பொதுவாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடத்தப்படும் அரசியல் கட்சிகளாகும்....ஆனால்....ஆனால்....
திமுக மட்டும் தான்.... ஒரு இனவிடுதலை பேரியக்கமான அரசியல் கட்சி.
திமுக மட்டும் தான் ஈராயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டு கிடந்த ஒரு இனத்தை தட்டி எழுப்பி...தன்மானம்...சமத்துவம்...சமநீதி...சம உரிமைகளை நிலைநாட்ட ...இயங்கிவரும்....ஒரு சமூக எழுச்சி இயக்கமாக,,...ஓர் அரசியல் கட்சியாகவும் உருமாறி வெற்றிநடை போட்டு வருகிறது...
திமுக ஒரு சமூக விடுதலைக்காக போராடும் கட்சி
மற்றவை சாதாரண அரசியல் காட்சிகள்...
ஆகவே தான்...திமுக மேல்நோக்கி எழ எழ எதிரிகளால் வீழ்த்தப்படுகிறது ...மறுபடியும்...

என்னோட வீட்டுக்காரர் டாக்டர்தான. அவரும் டாக்டர்ஸ்கிட்ட பேசிட்டுதான் இருக்காரு. ஆனால் நீங்க சொல்ற மாதிரி இல்லை

minnambalam.com .“நேற்று அமைச்சர்கள் எல்லோரும் கோட்டையில் இருந்தார்கள். பன்னீர்செல்வம் பேசினார். அதன்பிறகு மற்ற அமைச்சர்கள், தங்கள் துறைசார்ந்த விஷயங்களை தங்களது அறையில் அமர்ந்தபடி பேசினார்கள். அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார்கள்.
ஜெயலலிதா மருத்துவமனைக்குப் போனபிறகு நேற்றுதான் கோட்டை பிசியாக இருந்தது. இன்று வழக்கம்போல அமைச்சர்கள் யாரும் அந்தப்பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. எல்லோரும் காலையிலேயே அப்பல்லோவுக்கு வந்துவிட்டார்கள். அமைச்சர்கள் யாருக்குமே தற்போது இரண்டாவது தளத்துக்கு அனுமதி இல்லை என்பதால், எல்லோரும் முதல் தளத்தில்தான் காத்திருந்தார்கள். தம்பிதுரையை மட்டும் மதியம் 1.30 மணியளவில் ஒருமுறை இரண்டாவது தளத்துக்கு அழைத்திருக்கிறார்கள்.

காஷ்மீர் பேருந்து விபத்து 24 பேர் இறப்பு .. kashmir ,gorji distirct accident 24 dead and 33 injured

நகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம்
ரியாசி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 24 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டடுள்ளனர். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்திலிருந்து புக்கிள் நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வியாழன், 20 அக்டோபர், 2016

சசிகலா புஷ்பா :எனக்கு ஆதரவாக பிரதமர் மோடி இருக்கிறார்! அன்று ஜெ.காக ராஜீவ் .. இன்று சசிக்காக மோடி... ரிப்பீட்டு

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுவிட்டாலும், கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாகவே நீடிக்கிறார் சசிகலா புஷ்பா. முதல்வருக்கு ஆதரவாகவும் சசிகலாவுக்கு எதிராகவும் அவர் வெளியிடும் கருத்துகள் அரசியல் மட்டத்தில் கவனிக்கப்படுகிறது. ராஜாத்தி அம்மாவின் சமாதானப் பேச்சு எடுபடாமல் போனதால், சசிகலா புஷ்பாவுக்கு எதிரான சுவரொட்டிகள், வழக்குகள் என விவகாரம் நீண்டுகொண்டே செல்கிறது.
சசிகலா புஷ்பாவிடம் பேசினோம்.
;தஞ்சை இடைத் தேர்தலில் முதல்வர் முன்பு தேர்வு செய்த ரங்கசாமியே நிற்கிறார். 'சசிகலா நிற்பார்' என்று வந்த செய்தி, வதந்திதானே?
" நிச்சயமாக இல்லை. அவர்களுடைய முதல் நோக்கமே, ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கொடுக்கப்பட்ட இடத்தைப் பிடிப்பதும் தஞ்சையில் வேட்பாளராக நிற்க வேண்டும் என்பதுதான். ' கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ஆகிவிட வேண்டும்' என முனைப்போடு செயல்பட்டார் சசிகலா. ' முதல்வரின் கையெழுத்தைப் பயன்படுத்தி மோசடி நடக்கலாம்' என நான் பேச ஆரம்பித்ததும், பின்வாங்கிவிட்டார். 'அப்படியே போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது' என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார்.

ஒரு நாள் கூத்து... படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

இந்த படம் வெளிவந்து (ஜூன் 2016) நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இறைவி போன்ற ‘பேசப்பட்ட’ படங்களின் காலத்தில் இந்தப் படம் அதிகம் பேசப்படாமல் போனது அதிசயமல்ல. அந்த பேசாமைக்கு காரணம் காதல், திருமணம் குறித்து உள்ளது உள்ளபடி உரையாடுவதற்கு நம் சமூகம் இன்னமும் தயாராக இல்லை.
தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்கும் காவ்யா (நிவேதா); அப்பாவின் கௌரவத்தால் திருமணம் தள்ளிப் போகும் லக்ஷ்மி (மியா); நடுத்தர வர்க்கத்திற்கே உரிய நிபந்தனைகளால் திருமணத்திற்கு போராடும் சுசிலா (ரித்விகா) என மூன்று பெண்களின் திருமண – காதல் நிகழ்வுகளை எதிரும் புதிருமான வாழ்க்கை அனுபவங்களைச் சுற்றி இக்கதை பின்னப்பட்டிருக்கிறது.

தேனை எடுத்த ஜெயாவும் புறங்கையை நக்கிய நத்தமும்

த்தம் விசுவநாதன், சைதை துரைசாமியின் பங்களாக்களிலும் பண்ணை வீடுகளிலும் நடந்த வருமான வரிச் சோதனை ஒரு பரபரப்புச் செய்தி என்பதைத் தாண்டி, எவ்வித அரசியல் முக்கியத்துவமும் இன்றி அமுங்கிப் போனது தற்செயலானது அல்ல. இத்துணைக்கும் அவர்கள் இருவரும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள், தொழில்களில் போட்டுள்ள முதலீடுகள் பற்றிச் சில புலனாய்வு பத்திரிகைகளில் கசிந்துள்ள செய்திகள், இந்த விவகாரம் சாதாரணமான ஊழல், கமிசன் கொள்ளை அல்ல – என எடுத்துக்காட்டுகிறது. ஆனாலும், இந்த வருமான வரிச் சோதனை தமிழக, தேசிய ஊடகங்களிலோ, அரசியல் வெளியிலோ காத்திரமான விவாதத்திற்கு உட்படுத்தப்படாமல், தாலுகா ஆபிஸ், டிராபிக் போலீசு லஞ்ச விவகாரம் போல ஒதுக்கித் தள்ளப்பட்டுவிட்டது.
ஜெயா-சசி கும்பலுக்கு அனைத்துமாக விளங்கிய ஐவரணியில் ஒருவராக இருந்தவரும், கடந்த ஆட்சியில் மின்சாரத் துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக இருந்தவருமான நத்தம் விசுவநாதன் மலை முழுங்கி மகாதேவன் என்பதைச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வந்தன. அவை அனைத்தும் உண்மை என்பதைக் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த வருமான வரிச் சோதனை நிரூபித்திருக்கிறது.

மாஃபியா கும்பலாகத் தமிழக போலீசு !

tn-police-thiefஹவாலா திருடர்களையே ரூட் போட்டு திருடும் தமிழக போலீசை என்ன பெயரிட்டு அழைக்கலாம்? சரியான பெயரைத் திருடர்கள்தான் சொல்ல வேண்டும்.
 கொடூரமான சித்திரவதைகள், கொட்டடிக் கொலைகள், பாலியல் வன்முறைகள் – என பயங்கரவாத அட்டூழியங்களைத் தொடர்ந்து செய்துவரும் வன்முறைக் கும்பலாக ஏற்கெனவே தமிழக போலீசு அம்பலப்பட்டுப் போயுள்ளது. போதை, விபச்சாரம், ஆற்றுமணல், தாதுமணல் கடத்தலுக்குத் துணைபோகும் கிரிமினல் கும்பலாகவும் சீரழிந்து கிடக்கிறது. இவையெல்லாம் போதாதென்று, இப்போது ஹவாலா கொள்ளைக் கூட்டமாக வளர்ந்து புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது, தமிழக போலீசு.

YG.மகேந்திரனின் பள்ளிகள் மொத்தமாக லண்டன் காப்பறேட்டுக்களுக்கு விற்பனை? அள்ளிக்கோ அள்ளிக்கோ

நடிகர் ரஜினியின்  சகலை YG மகேந்திரன் சென்னையில் நான்கு பள்ளிகள்
நடத்திவருகிறார். எல்லாமே பணக்கார பள்ளிகள். கூடவே முதல்வர் பேரனுக்கே சீட் கொடுக்க மறுத்தது, கட்டணக் கொள்ளை, நீச்சல் குளத்தில் மாணவன் மரணம் என அடிக்கடி சர்ச்சைகள் சுழலும் பள்ளிகள்தான் இந்த நான்கும். ரஜினியின் சகலை வை ஜி மகேந்திரனும் சர்ச்சைகளுக்கு சளைத்தவர் அல்ல…இவர்சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டையே பரபரப்பாக்கின சுவாதி கொலையில் பிலால் மீது அபாண்ட பழி சுமத்தி வில்லங்கத்தில் மாட்டிய ஒரு திமிர் பார்ப்பானாகும் .
ஐவரும் மகளும் இணைந்துதான் பள்ளிகளை நடத்தி வந்தனர். இவர்கள் பண்ணும் அலப்பறைகளுக்காக சம்பந்தமே இல்லாமல் உச்சத்தையும் சீண்டிப் பார்ப்பது வம்பர்கள் வழக்கம். இந்நிலையில் நடிகர் தனக்கு சொந்தமான இந்த நான்கு பள்ளிகளையும் மொத்தமாக விற்கப் போகிறாராம் சகலை. லண்டனைச் சேர்ந்த கார்ப்பொரேட் கம்பெனி ஒன்று மொத்தமாக விலைபேசி வருகிறது இது இன்னும் அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியாது. அப்படித் தெரிய வரும்போது போராட்டம் வெடிக்கலாம்

சிப்பெட் தலைமையாகத்தை டெல்லிக்கு மாற்றுவதா? ஸ்டாலின் கடும் கண்டனம்

minnambalam.com :கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கும் சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே நெய்வேலி, சேலம் உருக்காலை போன்ற விஷயங்களில் தமிழக உணர்வுகளை மத்திய அரசு மதிக்காதநிலையில் சிப்பெட்டை டெல்லிக்கு மாற்றும் முயற்சியைக் கண்டித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் தன்னாட்சி நிறுவனமாக இயங்கிவரும் ‘சிப்பெட்’ நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை டெல்லிக்கு மாற்ற மத்திய ரசாயனம் மற்றும் உரத் தொழில்துறை அமைச்சகம் முயற்சி மேற்கொண்டிருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் என்னை இன்று சந்தித்த, சிப்பெட் பணியாளர் சங்க நிர்வாகிகள் முறையிட்டார்கள்.

பேருந்திலிருந்து கட்டாயப்படுத்தி இறக்கிவிடப்பட்ட தலித்!

Hyderabad: Dalit man told to get off bus after passengers refuse to travel with him Balaiah was scheduled to go to Tirupati in the tour bus but the passengers refused to travel with him.  ஒரு தலித்மீது, சாதியத்தின் தாக்குதல் எங்கிருந்து வேண்டுமானாலும் வரும். திருப்பதியில், தலித் என்பதால் அவரை பேருந்திலிருந்து இறக்கிவிட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்றுபேர் வற்புறுத்தியுள்ளனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதியில் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் வேணு என்பவர் திருப்பதி மற்றும் அருகிலுள்ள ஆன்மீக இடங்களுக்கு ஐந்து நாள் சுற்றுலாவை ஒருங்கிணைத்துள்ளார். இதற்காக, அதிக பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். புதன்கிழமை, வெங்கட்ராவ் பேட் என்ற கிராமத்துக்கு மக்களை ஏற்றுவதற்கு பேருந்து சென்றது. அப்போது, முன்கூட்டியே பயணச்சீட்டு பதிவுசெய்த மூன்று பேர் ஏறினர். அங்கு பேருந்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த பாலையா என்ற தலித் ஒருவரும் அமர்ந்திருந்தார்.

ஜெ.வுக்கு அளிக்கப்படும் பிசியோதெரபி சிகிச்சை விவரம்

minnambalam.com :முதல்வர் ஜெயலலிதா, கடந்த கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருகிறார். 29ஆவது நாளாக தீவிர சிகிச்சையில் உள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் 29 நாட்களாக படுக்கையிலேயே இருப்பதால் புதிய சில பிரச்னைகள் உருவாகியிருக்கிறது. நுரையீரல் தொற்றால் அவதிப்பட்ட அவருக்கு சிகிச்சையளிக்க டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவசர சிகிச்சை நிபுணரான டாக்டர் ரிச்சர்ட் பேல் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ்நாயக் ஆகிய மருத்துவக் குழுவினரும் ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சையளித்தனர். இரண்டாம்கட்ட சிகிச்சைகள் முடிவடைந்தநிலையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் லண்டன் மருத்துவரும், எய்ம்ஸ் மருத்துவக் குழுவினரும் திரும்பிச் சென்றனர்.

சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து 8 பேர் மரணம்

மீட்புப் பணியில் தீயணைப்புப் படையினர் | படம்: இ.மணிகண்டன்.
மீட்புப் பணியில் தீயணைப்புப் படையினர் | படம்: இ.மணிகண்டன்.
சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகினர். பலியான 8 பேரும் அருகிலிருந்த ஸ்கேன் மையத்தில் சிக்கிக் கொண்டிருந்தவர்கள்.
சிவகாசி - விருதுநகர் பைபாஸ் சாலையில் ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் இருக்கிறது. இந்த குடோனில் இருந்து இன்று மதியம் இரண்டு வேன்களில் பட்டாசுகள் ஏற்றப்பட்டது.
அப்போது, பட்டாசுகளில் உராய்வு ஏற்பட்டு தீ பிடித்தது. இரண்டு வேன்களில் இருந்த பட்டாசுகளும் வெடித்துச் சிதறியதில் அந்த சுற்றுவட்டாரத்தில் இருந்த 15 ஸ்கூட்டர்கள், ஒரு ஜீப், பட்டாசு இருந்த வேன் உட்பட வாகனங்கள் பல எரிந்து நாசமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

5 இந்திய வங்கிகளின் 32 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கம்.. சீன ஹாக்கர்கள் மீது சந்தேகம்.

32 lakhs Debit Cards compromised in SBI, HDFC, AXIS, ICICI and Yes Bankஒரே நாளில் இந்தியாவின் 5 முன்னணி வங்கிகளின் 32 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்புக் குறைபாடு மற்றும் மால்வேர் தாக்குதல் காரணமாகவே இத்தனை லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, எச்.டி.எப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி போன்றவற்றின் டெபிட் கார்டுகள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கிட்டத்திட்ட 26 இலட்சம் டெபிட் கார்டுகள் விசா, மாஸ்டர்கார்டு வகையை சார்ந்தவை. மற்றவை ரூபே கார்டுகள் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மதுரை சிந்தாமணி ! வாழ்வின் நினைவுகளைச் சுமந்த திரையரங்கம்!

thetimestamil.com -  ஸ்ரீரசா
ஸ்ரீரசா
:   1937 ஆம் ஆண்டில் வெளியான படம் “சிந்தாமணி”. எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்தது. 1930ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சிடி சினிமா திரையங்கில் சிந்தாமணி படம் ஓராண்டையும் கடந்து ஓடி வ : சூலில் சாதனை படைத்தது. இத் தொகையில் இருந்தே தற்போது இடிக்கப்படும் பழமையான சிந்தாமணி திரையரங்கு கட்டப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களான ராயல் டாக்கீஸ் நிறுவனத்தினர் சிந்தாமணி படத்தின் லாபப் பணத்தில் மதுரையில் ஒரு தியேட்டரைக் கட்டினார்கள். அதற்கு “சிந்தாமணி” என்ற அந்தப் படத்தின் பெயரையே சூட்டினார்கள்.

ஜனகன’விற்கு எழுந்து நிற்காத மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்: முடமானவன் பேட்ஜ் அணிய வேண்டுமா?;

insideimage_1476873800.jpgthetimestamil.com : எழுத்தாளர். மாற்றுத்திறனாளிகளுக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர். குழந்தைகளின் மிக விருப்பமான ‘Galli Galli Sim Sim’ நிகழ்ச்சியின் அடிப்படையானவர். பார்வையற்றவர்களுக்காக கொங்கனி மொழியில் முதல் ஆடியோ புத்தகம் கொண்டு வந்தவர். அது மட்டுமல்லாமல், பார்வையற்ற குழந்தைகளை, பறவைகளை பார்க்க அழைத்து செல்லும் ஆர்வமுடையவர்.
84-ம் வருடம் முதல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் வலம் வரும் கோவாவை சேர்ந்த சலீல் சதுர்வேதியை பற்றிதான், மேலே குறிப்பிட்டிருக்கிறோம்.
தேசப்பற்றாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் சலீல் சதுர்வேதி, பழகுவதற்கு மென்மையானவர். மரியாதைக்குரியவர் என்கிறார்கள் ஊடகவியலாளர்கள்.  தேசப்பற்று இல்லாத நாடுகளில்தான் இந்த மாதிரி கண்டமேனிக்கு தேசியகீதம்  போன்ற தமாசுகள் இடம்பெறுகிறது. போலி  தேசியவாதிகள் இன்னொரு முகமூடிதான் இது