BBC : பிரேசிலின் தென் கிழக்கு பகுதியிலுள்ள இரும்பு சுரங்கத்தில் அணை உடைந்ததால், சுமார் 300 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அணை உடைந்து அடித்து செல்லப்பட்ட பெருமளவு சகதியால் இந்த அணையில் இருந்த உணவகம் புதைந்துள்ளது.
அங்கு சுமார் 800 பேர் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்த வேளையில் இது நிகழ்ந்து ள்ளது.
மினாஸ் கெராயிஸ் மாநிலத்தில் புருமாடின்கோ நகரத்திற்கு அருகில் நிலத்தை தோண்டும் இயந்திரங்களை பயன்படுத்தி மீட்பு பணியாளர்கள் மக்களை காப்பாற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். புதையுண்டோர் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆளுநர் ரோமியு ஜிமா தெரிவித்திருக்கிறார்,
வாலெ என்கிற பிரேசிலின் பெரியதொரு சுரங்க அகழ்வு நிறுவனத்திற்கு சொந்தமான இந்த அணை உடைந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இதே மாநிலத்திலுள்ள மரியானாவில் அணை உடைந்து 19 பேர் பலியான மூன்று ஆண்டுகளில் இந்த அணை உடைந்துள்ளது. மரியானாவில் அணை உடைந்தது பிரேசிலின் மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவாக கருதப்பட்டது. ஃபெய்ஜியாவ் இரும்பு தாது சுரங்கத்திற்கு அருகிலுள்ள அணை உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு உடைந்தது. இதனால் இதற்கு கீழுள்ள இன்னொரு அணையில. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பெருமளவிலான சகதி அணை வளாகத்தின் ஊடாக சென்று அருகிலுள்ள நிறுவனங்கள், தொழிலாளர்கள் வாழுகிற பகுதிகளில் நிரம்பியதோடு, அவர்களின் வீடுகள், வாகனங்களையும் சேதமாக்கியுள்ளன. சாலைகள் அழிக்கப்பட்டுவிட்டதால், இந்த சகதியில் சிக்கிய டஜன் கணக்கானோரை, ஹெலிகாப்டர் மூலம் மீட்க வேண்டியதாயிற்று.