ஆந்திர
இளம்பெண் கடத்தி வரப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர்
திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்தான்,
சேலத்தில் இருந்து கடத்தி வந்தது விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.
ஆந்திர
மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அமீர்பேட் பகுதியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட்
நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஷாலினி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
என்பவரை, சேலத்தை சேர்ந்த ஆஷா என்பவர் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி,
கடந்த 28ம் தேதி சேலத்திற்கு வரவழைத்துள்ளார்.பின்னர் அங்கு
அவர் 3 பேரை அறிமுகப்படுத்தி, அவர்கள் சினிமாவில் நடிக்க வாய்ப்பு
தருவார்கள் என்று கூறி, அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். அந்த 3 பேரும்
ஷாலினியை காரில் திருச்சிக்கு அழைத்து வந்து, கருமண்டபம் நியூ செல்வநகரில்
உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். அங்கு ஏற்கனவே
ஒரு பெண் இருந்துள்ளார்.அவர்களிடமிருந்து
ஷாலினி தப்பி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். போலீசார் அந்த பகுதி
முழுவதும் தேடியும், ஷாலினியால் அந்த வீட்டை அடையாளம் காட்ட முடியவில்லை.
இதையடுத்து ஆஷாவின் செல்போன் நம்பரை வைத்து, தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில்
போலீசார் மடக்கி பிடித்தனர். அவரது உதவியுடன் நியூ செல்வா நகரில் உள்ள
வீட்டையும் போலீசார் கண்டுபிடித்தனர்.மேலும் அங்கிருந்த சேலம்
மாவட்டம் வாழப்பாடி, பெருமாள்புரத்தை சேர்ந்த கவிதா (20), திருப்பூர்,
அங்கேரி பாளையம், கோகுல தெரு பிரபு (31), சேலம், வலையப்பட்டி, பெரு மாள்
பாளையம் சக்திவேல் (34), மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த முகம்மதுசபீதுல் (30)
ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த
நிலையில் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்
திருச்சியைச் சேர்ந்த அதிமுக சேர்மன் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது
தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி
சேர்மன் ஒருவருக்கும் இந்த பலாத்கார சம்பவத்தில் தொடர்பு இருப்பது
தெரியவந்துள்ளது. நக்கீரன்.com ஜே.டி.ஆர்.