tamil.oneindia.com - Halley Karthik :; வாஷிங்டன்: 68 வயது முதியவருக்கு இருக்கும் விந்து அளவில் பாதிகூட இளைஞர்களுக்கு இல்லை என்று அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை செயலர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்கள் தொகை குறைவு, அதற்கான காரணம் விந்தணுக்களின் எண்ணிக்கையும், தரமும் குறைவுதான் என்று தொடர்ந்து கென்னடி குறிப்பிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் கூறியிருக்கும் இந்த விஷயம் அமெரிக்க மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சனி, 18 அக்டோபர், 2025
68 வயது முதியவரின் விந்து அளவில்.. பாதி கூட இளைஞர்களுக்கு இல்லை! அமெரிக்காவின் நிலை இதுதான்
வெள்ளி, 17 அக்டோபர், 2025
ஆணவப் படுகொலைகளை தடுக்க முன்னாள் நீதிபதி தலைமையில் தனி ஆணையம் : முதல்வர் அறிவிப்பு!
மின்னம்பலம் - Kavi : ஆணவப் படுகொலைகளை தடுக்க சட்டம் கொண்டு வருவதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
சிபிஐயிடம் சிக்கிய டிஐஜி- வீட்டில் பதுக்கிய ரூ.5 கோடி ரொக்கம், 1.5 கிலோ தங்கம், துப்பாக்கிகள் பஞ்சாப்
மின்னம்பலம் - Mathi : பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ரூ.8 லட்சம் லஞ்சப் புகாரில் அம்மாநில டிஐஜி ஹர்சரன் புல்லர், சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது வீட்டில் இருந்து ரூ.5 கோடி ரொக்கம் மற்றும் 1.5 கிலோ தங்க நகைகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் ஃபதேஹர் மாவட்டத்தைச் சேர்ந்த பழைய இரும்பு வர்த்தகர் ஒருவர் சிபிஐயிடம் டிஐஜி ஹர்சரன் புல்லர், ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்பதாக புகார் கொடுத்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சண்டிகர் சிபிஐ அதிகாரிகள் ஹர்சரன் புல்லரின் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பஞ்சாப் மாநில போலீசாருக்கு சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை.
தமிழ் மாணவி கழுத்து அறுத்து கொலை: பெங்களூரில் ஒரு தலைக்காதல் பயங்கரம்!
தினமலர் ஸ்ரீராமபுரம்: பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஸ்ரீராமபுரம் சுதந்திரபாளையா, 1வது மெயின் ரோட்டில் வசிப்பவர் கோபால். இவரது மனைவி வரலட்சுமி. இந்த தம்பதிக்கு பிரசாந்த், 22, என்ற மகனும், யாமினி பிரியா, 20, என்ற மகளும் இருந்தனர்.
கோபாலின் சொந்த ஊர் தமிழகத்தின் வேலுார் மாவட்டம், படவேடு கிராமம். பல ஆண்டுகளாக பெங்களூரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
பனசங்கரியில் உள்ள தனியார் கல்லுாரியில், யாமினி பி.பார்ம் 2ம் ஆண்டு படித்தார். இவரை, எதிர்வீட்டில் வசிக்கும் விக்னேஷ், 25, என்பவர் ஒருதலையாக காதலித்தார். பல முறை தன் காதலை வெளிப்படுத்தியபோதும், அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
வியாழன், 16 அக்டோபர், 2025
அண்ணா பல்கலையில்.. 'துப்புரவு பொறியியல்' துறை! முதல்வரிடம் கோரிக்கை வைத்த சிபிஎம்!
Halley Karthik-tamil.oneindia.com :; சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்புரவு பொறியியல் துறை உருவாக்கப்பட்டு, அதன் மூலம் புதிய உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கட்சியின் மாநில செயலாளர் பி.சண்முகம் கோரிக்கை மனுவை கொடுத்திருக்கிறார்.
முதலமைச்சரிடம் வழங்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து பெ.சண்முகம் தெரிவித்திருப்பதாவது, "தமிழ்நாடு முதலமைச்சரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மதுரை மேயர் இந்திராணி கைது? ரூ. 200 கோடி வரி விதிப்பு மோசடி - புதிய மேயர் யார்?
மின்னம்பலம் - Mathi : மதுரையை அதிரவைத்த ரூ.200 கோடி வரி விதிப்பு மோசடி விவகாரத்தில் மேயர் பதவியை ராஜினாமா செய்த இந்திராணி கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மதுரை மாநகராட்சியின் புதிய மேயர் நாளை தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பில் ரூ.200 கோடி மோசடி நடந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சொத்து வரியை குறைவாக மதிப்பீடு செய்து இதன் மூலம் அரசுக்கு ரூ.200 கோடி இழப்பை ஏற்படுத்தினர் என்பது அதிமுக கவுன்சிலர் ரவி தொடர்ந்த வழக்கு. உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இலங்கை - சர்வதேச விசாரணை நியாயம்தான்! ஆனால் நடைமுறையில் சாத்தியமா?
![]() |
S T Nalini Ratnarajah : சர்வதேச விசாரணை — நியாயம்தான்... ஆனால் நடைமுறையில் சாத்தியமா?
யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை அரசில் நம்பிக்கை இல்லை என்பதற்குக் காரணம் உள்ளது.
பல தசாப்தங்களாக நடந்த யுத்தம், காணாமல் போனவர்கள், பாலியல் வன்முறைகள், அநீதிகள் — இதற்கெல்லாம் இதுவரை யாருக்கும் முழு நீதி கிடைக்கவில்லை.
அதனால்தான் பலர் சொல்லுகிறார்கள்:
“எங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும்!
இல்லையென்றால் எங்களுக்கு நீதி கிடையாது!”
இது நியாயமான கோரிக்கை.
ஆனால் ஒரு கேள்வி
“சர்வதேச விசாரணை இலங்கையில் நடந்தால் அது எப்படி இருக்கும்?”
சர்வதேச விசாரணை என்றால் என்ன நடக்கும்?
சர்வதேச விசாரணை என்றால், யுத்தத்தில் நடந்த குற்றச்சாட்டுகளை
அரசு, இராணுவம், அரசியல் கட்சிகள், ஆயுதக் குழுக்கள் (புலிகள் உட்பட) — அனைவரையும் விசாரிப்பார்கள்.
அதாவது இது “சிங்கள அரசை மட்டும்” குறிவைப்பது இல்லை.
இது புலிகளும், புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்களும் முன்னே நாள் போராளிகளும் தமிழ் அரசியல் தலைவர்களும், புலிகளிலிருந்து பிரிந்து கட்சிகள் உருவாக்கியவர்களும், அந்த காலத்திலிருந்த சாட்சிகளும் — எல்லாரையும் விசாரிக்க வாய்ப்புள்ளது.
புதன், 15 அக்டோபர், 2025
ஆஷ்லே டெல்லிஸ்: அமெரிக்காவில் சீனாவுக்கு உளவு பார்த்ததாக இந்திய வம்சாவளி நபர் கைது
BBC News தமிழ் : வெர்ஜீனியாவின் வியன்னாவைச் சேர்ந்த 64 வயதான ஆஷ்லே டெல்லிஸ் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாகத் சேகரித்ததாக கிரிமினல் குற்றம்சாட்டப்பட்டு வார இறுதியில் கைது செய்யப்பட்டதாக அமெரிக்காவின் வெர்ஜீனியாவின் கிழக்குப் பகுதிக்கான அமெரிக்க அட்டர்னி லிண்ட்சே ஹாலிகன் கூறியுள்ளார்.
வெர்ஜீனியாவின் கிழக்கு மாவட்ட அமெரிக்க அட்டர்னி அலுவலகம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
சொந்த மக்களை சுட்டுக் கொல்லும் ஹமாஸ்! களை எடுப்பாம் புலிப்பாணி சகோதர கொலைகள் ஆரம்பம்
மாலைமலர் : இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து ஹமாஸ் குழுவினர் சொந்த பாலஸ்தீன மக்களையே சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடர்ந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு இறுதியாக அமைதி ஒப்பந்தம் எட்டியுள்ளது. அதை தொடர்ந்து ஹமாஸ் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை வட மாகாணத்திற்கு ஏற்றது காற்றாலையா? சூரிய சக்தியா? ..

![]() |
வடக்கிற்கு ஏற்றது காற்றாலையா? சூரிய சக்தியா? ..
வடக்கில் சோலார் கூரை மின்சாரத்தை ஸ்டோரேஜ் செய்யும் வசதியை பெருகினால்
காற்றாலைதான் வேண்டும் என்று குத்தி முறிய தேவையில்லையே?
வடக்கில் உற்பத்தியாகும் மிதமிஞ்சிய சோலார் சக்தியை வீணடிப்பது என்னவிதமான பொருளாதார அறிவு?
Gobi Periyathambi : தெற்கில் solar panel வியாபாரத்திற்கு பெரும் முதலாளிகளை ஊக்கு விக்கும் அரசுகள் வடக்கில் ஒவ்வொரு வீட்டிலும் Solar Panel பொருத்த அனுமதி மறுக்கிறது !
பெண்கள் (மாறி மாறி) கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை இலவச பயணம்
Maha Laxmi : இலவச பயணம்! கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை டவுன் பஸ் - டவுன் பஸ் என மாறி மாறி மாறி இலவசமாக பெண்கள் செல்லலாம்!
பெண்களுக்கு மட்டும்.
கன்னியாகுமரி - நாகர்கோவில்.
நாகர்கோவில் - பணகுடி
பணகுடி - வள்ளியூர்
நெப்போலியன் : நடிகன் அரசியலுக்கு வந்தா எப்படி இருக்கனும் தெரியுமா? சிறப்பு நேர்காணல்
மின்னம்பலம் - Mathi : “ஒரு நடிகன் அரசியலுக்கு வரும் போது சினிமாவைப் போல பஞ்ச் டயலாக் பேசாமல் கொள்கை, கோட்பாடுகள் பேச வேண்டும்..
பொதுமக்கள் கூடினால் கட்சியினர்தான் தொண்டர்களை ஒழுங்கு செய்ய வேண்டும்;
அரசாங்கத்தை குறை சொல்லக் கூடாது;
கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க வேண்டும்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு ‘பாடம்’ எடுத்துள்ளார் மூத்த நடிகரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான நெப்போலியன்.
’15 வயது மாணவனுக்கு வயகரா’’ கொடுத்த ஆசிரியை - டெல்லி
இலக்கியா இன்போ : டெல்லியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம், ஆசிரியர்-மாணவர் உறவின் புனிதத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.
ஒரு ஆசிரியையின் காம வெறியால், பள்ளி மாணவனான கவுசிக் (வயது 15) உயிரிழந்த சம்பவம், கல்வி நிறுவனங்களில் நம்பிக்கையை உடைத்து, சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் லட்சுமன் மற்றும் சரஸ்வதி தம்பதி, கூலி வேலை செய்து தங்கள் மூன்று பிள்ளைகளை வளர்த்து வந்தனர்.
இவர்களது மூத்த மகன் கவுசிக், 15 வயதில் மிகவும் திறமையான மாணவனாக விளங்கினார்.
செவ்வாய், 14 அக்டோபர், 2025
கிட்னி நோயாளிகளுக்கு உரிய இரு வகை டயலிசிஸ் . Hemodialysis ஹீமோ - Peritonial dialysis பெரிடோனியல்
பெரிடோனியல் டயாலிசிஸ் - வீட்டிலேயே டயாலிசிஸ் - ஆயுள் காக்கும் தோழன்
தினமணி
சிறுநீரக நோயால் அவதிப்பட்டு நீங்கள் டயாலிஸிஸ் செய்து கொள்ள வேண்டும் என்பது மேலே உள்ள தலைப்பின் நோக்கம் அல்ல.
எதிர்பாராமல் துரதிருஷ்டவசமாக சிறுநீரகச் செயலிழப்பு என்ற நிலைக்கு ஒருவர் தள்ளப்படும் நிலையில், எளிய முறையில் ஆயுளை நீட்டிக்கும் மாற்று வழியைச் சொல்லவே "வீட்டிலேயே டயாலிஸிஸ்-ஆயுள் காக்கும் தோழன்' என்ற அறைகூவல் விடப்பட்டுள்ளது.
சிறுநீரகங்கள் - முக்கியப் பணி என்ன?
விலாப்புறத்தில் அவரை விதை வடிவத்தில் இரண்டு சிறுநீரகங்கள் அமைந்துள்ளன. நாம் குடியிருக்கும் வீட்டுக்கு ஒரு குளியலறை, கழிவறை எவ்வளவு அவசியமோ, அது போன்று நம் உடலிலிருந்து வெளியாகும் புரதக் கழிவுகளை சிறுநீராக வெளியேற்றுவதே சிறுநீரகங்களின் முக்கியப் பணி ஆகும்.
தயாராகும் விஜய் : பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! நிதியுதவி.. தத்தெடுப்பு! புனிதராக காட்டிக் கொள்ள....
tamil.oneindia.com -Rajkumar R : சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து இதுவரை சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் வாய் திறக்காமல் இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுவெளிகளில் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
கரூர் சம்பவத்தை தங்கள் அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தத்தெடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கும் நிலையில் கடந்த மாதம் முதல் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். திருச்சியில் தொடங்கிய சுற்றுப் பயணம் கரூரோடு நின்று விட்டது.
பீகார் தேர்தல்: 60 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்
minnambalam.com -Mathi : பீகார் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளில் போட்டியிடக் கூடும் என கூறப்படுகிறது.
பீகார் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 14-ந் தேதி எண்ணப்படும்.
பீகார் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் காங்கிரஸ்- ஆர்ஜேடி- இடதுசாரிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி அல்லது Mahagathbandhan கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது.
இன்றைய ஆர் எஸ் எஸ் வளர்ச்சிக்கு அன்றே விதை போட்ட பாரதி!
![]() |
Parimala Rajan : நண்பர்களே! கீழ்கண்ட ஆதாரங்களே போதுமானவை என்று கருதுகிறேன்.
பெரியாருக்கும் திராவிடத்திற்கும் எதிரான இந்துதேசிய வெறியர் பாரதியைப் போற்றுவது, பெரியாரும் திராவிடமும் பகையாகக் கருதிய இராமனையும், இராமாயணத்தையும் போற்றுவது ஆகிய நிலைப்பாடுகளைப் பிரச்சாரம் செய்வது மூலம் இந்தியாவின் அடையாளம் இராமனே என்று முழங்கும் இன்றைய இந்து தேசியத்திற்கு அடித்தளமிட்டுக் கொடுத்த போலி கம்யூனிஸ்ட்தான் ஜீவா என்று அறுதியிட்டுக் கூறிவிடமுடியும்.
அன்புடன், மருதமுத்து.- நன்றி: தோழர் தியாகு
பேராசிரியர் மருதமுத்து எழுதுகிறார் -12/10/25
நண்பர்களே,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (ஒன்றுபட்டு இருந்த காலத்திலேயே) காந்தியின் மென்மையான நயவஞ்சக இந்துத்துவாவுக்கு சாரத்தில் அடிபணிந்ததாகவே இருந்து வந்துள்ளது.
(ஆனால், ஏராளமான அடிமட்டக் கட்சித் தொண்டர்கள் இதுபற்றிய உண்மை தெரியாமல் பல தியாகங்களைச் செய்தனர் என்பது உண்மையே)
தலைவர்களின் இந்த துரோகத்திற்கு திரு ப. ஜீவானந்தம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆவார்.
ஞாயிறு, 12 அக்டோபர், 2025
ஆபரேஷன் புளுஸ்டார் இந்திரா காந்தியின் தவறு! ப சிதம்பரம் பாஜகவுக்கு தாவப்போகிறாரோ?
BBC Tamil : ஜூன் 1984ல் நடந்த 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' ஒரு தவறான நடவடிக்கை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இதற்கான விலையாக தனது உயிரைக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஹிமாசல் பிரதேசத்தில் நேற்று (சனிக்கிழமை) ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "நான் இங்கிருக்கும் ராணுவ வீரர்களை அவமதிக்கவில்லை. ஆனால் பொற்கோவிலை மீட்பதற்கு ப்ளூ ஸ்டார் நடவடிக்கை சரியானது அல்ல" என்றார்.
ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு : இறந்தவர்களை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக!
hindutamil.in : சென்னை: இறந்தவர்களை வைத்து தமிழக வெற்றிக் கழகம் அற்ப அரசியல் செய்வதாகவும், அதற்கு அதிமுகவும் பாஜகவும் துணை நிற்பதாகவும் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டயுள்ளார்.
இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் துயர சம்பவம் நடந்தவுடனே எந்தவித அரசியலுக்கும் இடம் கொடுக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் உறுதுணையாக இருந்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
1/2 ச.கிமீ கச்சத்தீவை பெற்று கொண்டு 6500Sq Km wadge bank ஐ இந்தியாவுக்கு விட்டு கொடுத்த ஸ்ரீ மாவோ பண்டாரநாயகே
![]() |
![]() |
Vimalaadhithan Mani : கச்ச தீவு பிரச்சினையில் உண்மையில் நடந்தது என்ன என்று வாட்சப் வதந்தியை வாந்தி எடுத்து திரியும் சங்கி மிருகங்களுக்கு புரியாது. படித்து தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மேலே படியுங்கள்.
1.கட்சத்தீவு என்பது மனிதர்கள் வசிக்கவே தகுதியற்ற ஒரு கிரிக்கெட் கிரவுண்ட் அளவேயுள்ள(0.6Sq km) ஒரு சிறு தீவு அங்க அதிகபட்சம் வலைய காயவைக்கலாம்(இப்பவும் காய வைக்க உரிமை உண்டு)
2.wadge bank எனப்படும் 6500Sq Km கடற்பரப்பை இந்தியா பெற்றுக்கொள்ள இலங்கையுடன் செய்த உடன்படிக்கை அது.
3. 1/2 ச.கிமீ பொட்டகாடு எடத்த குடுத்துட்டு
6500 ச.கிமீ இடத்த புடிச்சவன் புத்திசாலியா இல்ல, 38000 ச.கிமீட்டர சைனாக்காரன் புடிச்சிட்டான்னு ஒப்பாரி வச்ச சங்கிக கையாளாகாத பெட்டையா?
சொல்லுங்கடா சங்கீ டாபர்ஸ்.
கச்சதீவுக்கு பதிலாக இலங்கை அரசிடமிருந்து இந்தியா அரசு பெற்ற 4000 கிலோமீட்டர் வளம் கொழிக்கும் வெட்ஜ் பேங்க் (Wedge Bank) பகுதி பற்றி ஏன் எந்த சங்க பரிவார நாதாரியும் பேச மாட்டேங்குறானுங்க ?
அப்படி ஒரு சம்பவம் இரண்டு நாடுகளுக்கும் நடுவில் நடந்து இருக்குனாவது இந்த நாதாரிகளுக்கு தெரியுமா ?





