சனி, 13 ஆகஸ்ட், 2022

கேரளா 14 வயது மாணவன் கஞ்சா கொடுத்து மாணவிகளை சீரழித்தான்

tamil.asianetnews.com  Raghupati R  :  9 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் 20க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா, கண்ணூர் நகரில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் புதிதாக மாணவி சேர்ந்திருக்கிறார். அந்த மாணவி மிகவும் தயக்கத்துடன் பள்ளி வகுப்பறையில் காணப்பட்டார். இந்நிலையில் அந்த மாணவியிடம் நட்பு முறையில் நெருங்கிப் பழகியுள்ளான் சக மாணவன் ஒருவன். அந்த மாணவியும், அம்மாணவனுடன் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
அந்த மாணவன் ஒருகட்டத்தில் போதைப் பொருட்களைக் கொடுத்து, இது உன்னுடைய தயக்கத்தைப் போக்கி புத்துணர்ச்சி தரும், பயன்படுத்தி பார் என்று கூறியுள்ளார். போதைப்பொருள் விபரீதம் அறியாத மாணவியும் அதனை தொடர்ந்து பயன்படுத்தி உள்ளார். அந்த மாணவியை போதைப்பொருளுக்கு அடிமையாக்கி, தான் சொல்வதை கேட்க வேண்டும் என்று கூறியுள்ளன.

சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி... அம்பந்தொட்டா துறைமுகத்தில்..

tamil.asianetnews.com/  - Narendran S   :  சர்ச்சைக்குரிய சீன உளவுக் கப்பல் அம்பந்தொட்டா துறைமுகத்தில் நிற்க இலங்கை அனுமதி அளித்துள்ளது.
சர்ச்சைக்குரிய சீன உளவுக் கப்பல் அம்பந்தொட்டா துறைமுகத்தில் நிற்க இலங்கை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பன்தோட்டா துறைமுகம் சீனாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த துறைமுகத்தில் யுவான் வாங்க் - 5  என்ற சீனாவின் உளவு கப்பல், நிறுத்தி வைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சீனாவின் இந்த உளவு கப்பல், நம் நாட்டின் தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகியவற்றை கண்காணிக்க அனுப்பப்படுவதாக, மத்திய அரசு சந்தேகம் தெரிவித்தது. தங்களுடைய சந்தேகம் மற்றும் எதிர்ப்பை இலங்கை அரசுக்கு மத்திய அரசு உறுதிபட தெரிவித்தது.

திரு .ஆனந்தசங்கரி : இறுதி யுத்தத்தில் உயிர் சேதங்கள் ஏற்படப் போகின்றது என தெரிந்தும் பேச்சு வார்த்தைக்கு வராமல் தட்டி கழித்தார்கள் தமிழ் தேசிய கூட்டணியினர்

கூட்டமைப்பை விரும்பாதவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையலாம் –  ஆனந்தசங்கரி அழைப்பு - ஐபிசி தமிழ்

தேசம்நெட் -   அருண்மொழி  :  தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி இருக்கும் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்கள் விரும்பினால் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து பயணிக்கலாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார்.
நேற்று ( வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சித் தலைமையகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களிடமிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு குறைந்து கொண்டே செல்கின்றது. இதனை நான் கூறவில்லை அண்மை காலங்களில் இடம் பெற்ற தேர்தல் முடிவுகள் இதனை நன்கு உணர்த்துகின்றன.

மதுரையில் பி டி ஆர் கார் மீது காலணி வீச்சு ... ஐவர் கைது .. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தினத்தந்தி மதுரை .அவனியாபுரம், நேற்று முன்தினம் ரஜ்ஜவுரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர் லட்சுமணன் உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இன்று காலை (13-ந் தேதி) தனி விமானம் மூலம் அவரது உடல் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்டது.

சென்னை பெடரல் வங்கியில் 20 கோடி நகை, பணம் கொள்ளை...பட்டப் பகலில் நிகழ்ந்த பயங்கரம்

மாலைமலர் : சென்னை அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பெடரல் வங்கிக்கு இன்று பட்ட பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அதிரடியாக உள்ளே புகுந்தனர்.
அங்கிருந்த காவலாளி மற்றும் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டிய கட்டிப் போட்ட அவர்கள் வங்கியில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பினர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறை கூடுதல் ஆணையர் அன்பு, துணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற் கொள்ளப்பட்டது.
அந்த வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

ஜாக்கி வாசுதேவின் ஈஷா BSLN பாக்கி 2.5 கோடியை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

மின்னம்பலம்  - பிரகாஷ் : ஈஷா யோகா மையம் மற்றும் பி.எஸ்.என்.எல் ஆகியவற்றுக்கு இடையேயான வழக்கு விவகாரத்தில் புதிதாக விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் உள்ள ஈஷா பவுண்டேசன் அமைப்புக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் தங்கள் இணைப்பை பயன்படுத்தியதில் ரூ.2.5 கோடி கட்ட வேண்டும் என்று பில் அனுப்பியது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஷா யோக மையம் தொடர்ந்த வழக்கு இசைவு தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த இசைவு தீர்ப்பாயம், “44 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்” என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, பிஎஸ்என்எல் நிறுவன கோவை முதன்மை பொது மேலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று (ஆகஸ்ட் 12) விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, “ஈஷா யோகா மையம் 44 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும்” என்ற தீர்ப்பை ரத்து செய்ததுடன், ”இதுகுறித்து ஏற்கனவே இசைவு தீர்ப்பாயம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று

அபுதாபியில் முன்னாள் புலி உறுப்பினர் கைது

May be an image of 1 person and standing

சமுகம்  : விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரும் வெடிமருந்துகள் தொடர்பில் நிபுணத்துவம் கொண்டவருமான ஒருவர் அபுதாபியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கைது செய்யப்பட்டவர் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் தலைமையிலான பொலிஸ் குழு வொன்று அபுதாபிக்குச் சென்று விடுதலைப்புலி உறுப்பினரை அபுதாபியிலிருந்து சிறப்புப் பாதுகாப்புடன் விமானத்தில் இலங்கைக்கு (11) அழைத்து வந்தனர்.

சிவாஜி குடும்ப சொத்து வழக்கு...சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...அடுத்து என்ன நடக்கும்?

Sivaji Ganeshan family property case...Chennai HC adjourned the judgement without specifying a date

tamil.filmibeat.com  : சென்னை : நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கு பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதாகவும், எனவே தங்களுக்கு சேர வேண்டிய சொத்துக்களை எங்களுக்கு பிரித்து வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சிவாஜி மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் அதன் சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் சகோதரர்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதாகவும், பிரதான வழக்கு விசாரணை முடியும் வரை இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டிருந்தனர்.

சல்மான் ருஷ்டி தீவிர சிகிச்சை பிரிவில் .. கண் பார்வையை இழக்கலாம் - அதிர்ச்சி தகவல்

 தினத்தந்தி  : கத்திக்குத்து தாக்குதலுக்க்கு உள்ளான எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (வயது 75) மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார்.
இதில், சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் 24 வயதான ஹடி மடர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து - நியூ யார்க் அமெரிக்கா-

etvbharat.com : அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது சௌதாகுவா: 1980களில் ஈரான் நாட்டில் மரண அச்சுறுத்தல்களுக்கு வழிவகுத்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, அமெரிக்காவின் மேற்கு நியூயார்க்கில் ஒரு நிகழ்வில் பங்கேற்றிருந்தார். அப்போது மேடைக்குச்சென்று விரிவுரை செய்யவிருந்தபோது , அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சல்மான் ருஷ்டியை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

'சீன உளவு கப்பல் இலங்கைக்கு வராது'

தினமலர் : இலங்கை: 'சீனாவின் உளவு கப்பல், திட்டமிட்டபடிஅம்பன் தோட்டாதுறைமுகத்துக்கு வராது' என, இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நம் அண்டை நாடான சீனாவின் 'யுவான் வாங் 5' என்ற உளவு கப்பலை, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் ஆக., 11 - 17 வரை நிறுத் திவைக்க சீனா திட்டமிட்டது.விண்வெளி மற்றும் செயற்கைக்கோளை கண்காணிக்கும் இந்த உளவு கப்பலை இலங்கையில் நிறுத்துவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால், மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது.

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?

மின்னம்பலம் -Jegadeesh  : தமிழ்நாட்டில் மாநில கல்விக்கொள்கை உருவாக்குவதற்கு டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கருத்து கேட்கப்பட்டு வருகிறது. மாநில அளவில் ஏற்கனவே கல்வித் துறையைச் சார்ந்த அலுவலர்களுடன் இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் எட்டு மண்டலங்களில் பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில கல்விக்கொள்கை உருவாக்குவதற்கான குழுவின் ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ( ஆகஸ்ட் 12 ) நடைபெற்றது.

காத்தான்குடியில் மாணவன் மீது தாக்குதல்: ஆசிரியை கைது .. அதிபர் தலைமறைவு

hirunews.lk : காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில்  தரம் 5 ம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 10 சிறுவனை தாக்கியதையடுத்து சிறுவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், ஆசிரியை ஒருவர் நேற்று (11) வியாழக்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், அந்த பாடசாலையில் அதிபர் தலைமறைவாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள ஒரு பாடசாலையில் கல்விகற்றுவரும் 10 வயது சிறுவன் சம்பவதினமான 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு சென்றுள்ள நிலையில் பாடசாலைக்கு அருகிலுள்ள கடை ஒன்றிற்கு பாடசாலை இடைவேளை நேரத்தில் சென்று அங்கு சாப்பிடுவதற்கான பொருட்களை வாங்கி வந்துள்ளான்.

லோக்சபா தேர்தல் இப்போது நடந்தால் பாஜகவுக்கு பின்னடைவு-- பீகார் திருப்பத்தால் ! -இந்தியா டுடே கணிப்பு

Mathivanan Maran  -   Oneindia Tamil :  டெல்லி: பீகார் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் லோக்சபா தேர்தல் இப்போது நடைபெற்றால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தடுமாற்றத்தை எதிர்கொள்ளும் என்கிறது இந்தியா டுடே- சி வோட்டர் கருத்து கணிப்பு.
பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை ஜேடியூ முறித்துக் கொண்டது. மேலும் பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ்-ஆர்ஜேடி-இடதுசாரிகளுடன் இணைந்து ஜேடியூ தலைமையில் புதிய ஆட்சியை அமைத்துள்ளார் நிதிஷ்குமார்.
பொதுவாக மாநிலங்களில் பாஜகதான் ஆட்சியை கவிழ்ப்பது; கட்சியை உடைப்பது என்கிற சர்ச்சையில் சிக்கும். ஆனால் பீகாரில் பாஜக எந்த வகையிலும் எழுந்துவிடாதபடி ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. இது தேசிய அளவில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

சேகர் ரெட்டி ரூ.2,682 கோடி வருமான வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவு ரத்து.. சென்னை உயர் நீதிமன்றம்..

ஓ.பன்னீர்செல்வத்திடம்

tamil.oneindia.com -  Vignesh Selvaraj   :  சென்னை : கடந்த 2014-15 முதல் 2017-18ஆம் ஆண்டுகளுக்கு 2,682 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தும்படி, சேகர் ரெட்டிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014-15 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனத்தின் வருமானம் 4 ஆயிரத்து 442 கோடி ரூபாய் எனத் தீர்மானித்த வருமான வரித்துறை, அதற்கு 2 ஆயிரத்து 682 கோடி ரூபாயை வரியாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த வழக்கில் குறுக்கு விசாரணை செய்யப்படாத சாட்சிகளின் வாக்குமூலங்கள், வருமான மதிப்பீட்டின்போது பயன்படுத்தப்பட மாட்டாது என தனி நீதிபதி முன் உறுதியளித்த வருமான வரித்துறை, அதற்கு மாறாக செயல்பட்டுள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து தாய்லந்து செல்கிறார் . அங்கு 3 மாத அனுமதி வழங்கப்பட்டது

நக்கீரன் : சிங்கப்பூரில் இருந்து இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அங்கு போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்தன. குறிப்பாக, இலங்கை அதிபர் மாளிகையைச் சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர்.
உளவுத்துறையின் தகவலையடுத்து, அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார்.
அவருக்கான விசா காலத்தை அந்நாட்டு அரசு நீட்டித்த நிலையில், தற்போது விசா காலம் முடிந்ததால், விமானம் மூலம் தாய்லாந்துக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க .. தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ராஜதந்திரி ?

May be an image of 1 person and text that says 'WORLD ECONOMIC FORUM WORLD CONOM FORUM WORL ECONOI M Lo LD'

Asaam A Careem :  Ranil - * பொறுமையாக இருந்து ஒரே ஒரு தேசிய பட்டியலுக்கு கட்சி உறுப்பினர்கள் வாயாலேயே தன்னை பொருத்தம் என கூற வைத்து பாராளுமன்றம் நுழைந்தார்.
* மகிந்தவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி தான் பிரதமரானார்.
* மொட்டு கஞ்சிக்கு தெய்வமாக தெரிந்த நிதி அமைச்சர் பசிலை பதவி நீக்கி அவரது பலத்தை உடைத்தார்.
* ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் மறைகரமாகவும் மறுபுறம் ஜனாதிபதிக்கு மொக்கையான ஆலோசனையும் வழங்கிக்கொண்டிருந்தார்.
* நாட்டின் கஷ்டத்தை ஊதிப்பெருதாக காட்டி மக்களை உசுப்பேற்றி ஜனாதிபதி மீதான எதிர்ப்பை தீவிரப்படுத்தினார்.
* போராட்டத்தை வலுப்படுத்தி கோட்டாவை ஜனாதிபதி பதவியில் இருந்து துரத்தி நாடு நாடாக அலையவிட்டார்.
* தற்காலிக ஜனாதிபதியானார்.
* எல்லா கட்சிகளும் ரணிலை துரத்தி வேறு ஒருவரை ஜனாதிபதியாக கொண்டு வர திட்டமிட்ட போது டலஸ் எனும் டம்மியை வேட்பாளராக்கி தான் வெற்றி பெற்று எதிர்க் கட்சிகளை மண்ணை கவ்வ வைத்து தன்னை அடுத்த தேர்தல் வரை நிரந்தர ஜனாதிபதியாக்கியிருக்கிறார்.

புதன், 10 ஆகஸ்ட், 2022

தேசியக்கொடி வாங்கலைனா ரேஷன் பொருள் இல்லை..? - ‘நாட்டுக்கே வெட்கக்கேடு’ - கொந்தளித்த ராகுல்,

Vignesh Selvaraj - Oneindia Tami :  சன்டிகர் : பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் தேசியக்கொடியை வாங்கினால் தான் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும் எனக் கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வீடு தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்ட நிலையில், இந்த ஆண்டு அரசு சார்பில் தபால் நிலையங்கள் வாயிலாகவே தேசியக்கொடி விற்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரேஷனில் பொருட்கள் வாங்குவோர் கட்டாயமாக தேசியக் கொடியை வாங்க வேண்டும் இல்லாவிட்டால் ரேஷன் பொருட்கள் அளவு குறைக்கப்படும் என ரேஷன் கடை ஊழியர் மிரட்டும் வீடியோவை பகிர்ந்துள்ள பாஜக எம்.பி வருண் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கே அதிக எம் எல் ஏக்கள்

மின்னம்பலம் : பீகார் அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்!
பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக எட்டாவது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளைக் கொண்ட மகா கூட்டணியில் ஐக்கியமானார்.
இதைத் தொடர்ந்து, அக்கூட்டணியில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதிஷ்குமார், ஆளுநரைச் சந்தித்து மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஒரே நாளில் நிகழ்ந்த மாற்றங்களைத் தொடர்ந்து, பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக அரசின் அடுத்த இரண்டு பெரிய முயற்சிகள்.. Chess Olympiad விழா உரையில் குறிப்பிட்ட முதலமைச்சர்!

Image

கலைஞர் செய்திகள் : ஆசிய கடற்கரை போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த முயற்சிகள் நடக்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஜூலை 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த பிரம்மாண்ட தொடக்க விழாவை அடைத்து மாமல்லபுரத்தில் போட்டிகள் நடைபெற்றது.
இதையடுத்து இன்று செஸ் ஒலிம்யாட் போட்டியின் நிறைவு விழா கலை நிகழ்வுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:-
செஸ் என்பது விளையாட்டுப் போட்டியாக மட்டுமல்லாமல் - விளையாட்டு விழாவாக மட்டுமல்லாமல் - இந்தியாவில் நடைபெறும் உலகளாவிய பண்பாட்டுத் திருவிழாவைப் போல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - என்று இதன் தொடக்கவிழாவில் நான் குறிப்பிட்டேன். அத்தகைய பண்பாட்டுத் திருவிழாவில் கலந்து கொள்ள வருகை தந்த செஸ் விளையாட்டு வீரர்கள் - பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள் அனைவர்க்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதிச்சநல்லூரில் 3000 ஆண்டுக்கு முந்தைய தங்க கிரீடம் கண்டுபிடிப்பு”:

kalaignarseithigal.com  : “ஆதிச்சநல்லூரில் 3000 ஆண்டுக்கு முந்தைய தங்க கிரீடம் கண்டுபிடிப்பு”: செல்வ செழிப்புடன் வாழ்ந்த தமிழர்கள்!
தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் முதல்கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி நடந்து வருகிறது.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக முத்தரசன் மீண்டும் தேர்வு!

R Mutharasan, 5000 இடங்களில் 'மக்கள் நாடாளுமன்றம்'; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  திடீர் அறிவிப்பு! - communist party of india (cpi) state secretary r  mutharasan has said that he will hold ...

மின்னம்பலம்  -  Jegadeesh  : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக முத்தரசன் மீண்டும் தேர்வு!
திருப்பூர் மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் 9 ) நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் ஆர்.முத்தரசன் மீண்டும் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு விதிகள்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சியின் மாநில பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்படும். அந்த மாநாட்டில் மாநிலச் செயலாளர் தேர்வு நடைபெறுவது வழக்கம்.
ஆகஸ்ட் 6 ஆம் தேதி திருப்பூரில் சிபிஐ-ன் 25வது மாநில மாநாடு தொடங்கியது. இந்த மாநாடு 4 நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார் , இந்த மாநாட்டில் பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பிகார் அதிரடி தேஜஸ்வி லாலுவின் கட்சியோடு ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் உரிமை உரிமை கோரினார்

 நக்கீரன் செய்திப்பிரிவு :  பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெளியேறியது. இதையடுத்து,
தனது முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை, நிதிஷ்குமார் அம்மாநில ஆளுநர் பகு சௌஹானை நேரில் சந்தித்து வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ்குமார், "ஐக்கிய ஜனதா தள கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினோம்" என்று தெரிவித்துள்ளார்.

பீகார் பாஜக நிதிஷ் ஆட்சி கவிழ்ந்தது! CM நிதிஷ் குமார் ராஜினாமா! பாஜக கூட்டணி உடைந்தது .. லாலு கட்சியோடு கூட்டணி உருவாகும்?

zeenews.india.com  ; பீகார் சட்டசபைக்கு கடந்த 2020-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், பீகாரில் பாஜக- ஜேடியூ கூட்டணி ஆட்சி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
ஆரம்பத்திலிருந்தே பாஜக மீது பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு அதிருப்தி இருந்து வந்தது.  
மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு இடம் கொடுக்கவில்லை என்பதால் இந்த அதிருப்தி ஏற்பட்டது.
மாநிலத்தில் இதுவரை பாஜக ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில்,
இன்று இந்த கூட்டணி முறிந்தது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா செய்துள்ளார்.
நிதிஷ் குமார் ராஜினாமா அளுநர் பாகு செளகானை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.  

ரஜினியின் பணம் அன்புச்செழியனிடம் .. வருமான வரி துறையிடம் பிடிபட்டதா


 hindutamil.in  : பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகள் உள்பட 40 இடங்களில் வருமான வரி சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்
வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்திய, சென்னை தி.நகரில் உள்ள திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியனின் வீடு.படம்: ம.பிரபு
சென்னை: திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் வீடு, அலுவலகம் என சுமார் 40 இடங்களில் நேற்று வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இலங்கையில் 50 புதிய எரிபொருள் நிலையங்கள் அமைக்க இலங்கை அரசு அனுமதி

tamil.goodreturns.i  - Pugazharasi S  : இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழலுக்கு மத்தியில், அங்கு பல்வேறு பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது. குறிப்பாக உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது.
இதற்கிடையில் இலங்கையில் லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், 50 புதிய எரிபொருள் நிலையங்களை தொடங்குவதற்கு இலங்கை அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் போது, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டினை தீர்ர்க்க இது ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் பஞ்சாப் பெண் தற்கொலை . கணவன் பணம் கேட்டு கொடுமை .. வீடியோவில் பேசி விட்டு தற்கொலை

 Ezhumalai Venkatesan  : வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை..
மன்தீப் கவுர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு வாழ்க்கைப்பட்டு போனார்.
கொஞ்ச நாளிலேயே வரதட்சணை கொடுமை ஆரம்பமானது. கணவன் சாந்துவிடம் இருந்து  தினமும் அடி உதை .
இது போதாது என்று ஏராளமான பெண்களுடன் வேறு சாந்துவுக்கு சகவாசம்..
இரு மகள்கள் பிறந்து 4 வயது 6 வயது ஆன பிறகும், மனைவியை கணவன் கொடுமைப்படுத்துவது மட்டும் நிற்கவே இல்லை.
விரக்தியின் உச்ச கட்டத்திற்கு சென்ற மான்தீப் கவுர், கணவன் குடும்பத்தார் செய்த கொடுமைகள் எல்லாம் அழுதபடியே பட்டியலிட்டு வீடியோவாக வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடிகாரர்கள் வரிசையில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் அடுத்து கர்நாடகம் மத்திய பிரதேசம் மேற்கு வங்கம் தெலுங்கான ராஜஸ்தான் ...

ராதா மனோகர் : தேசிய குடிகாரரர்கள் வரிசையில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் 21.8
கர்நாடகம் இரண்டாவது இடத்தில் 20,6
மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்தில் 19.9
மேற்கு வங்கம் நான்காவது இடத்தில்  17,7
தெலுங்கானா ஐந்தாவது இடத்தில்  15.7
ராஜஸ்தான் ஆறாவது இடத்தில் 15.2
ஹரியானா ஏழாவது இடத்தில்  13. 7
ஆந்திர பிரதேஷ் எட்டாவது இடத்தில்    11.3
தமிழ்நாட்டின் குடிகார வீதம் வெறும் 5 .8 வீதமாகும்
உண்மை நிலைமை இப்படி இருக்கும்பொழுது சதா தமிழ்நாடு குடிகாரர் மாநிலம் என்று ஆரிய பார்ப்பன ஊடகங்களும் பிரமுகர்களும் பிரசாரம் செய்வது எவ்வளவு பெரிய மோசடி?

திங்கள், 8 ஆகஸ்ட், 2022

E-Rickshaw-வுக்கு சார்ஜ் செய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு.. டெல்லியில்!

E-Rickshaw-வுக்கு சார்ஜ்  செய்தபோது நடந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு!

கலைஞர் செய்திகள்   : டெல்லியில் e-rickshaw-வுக்கு சார்ஜ் செய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
E-Rickshaw-வுக்கு சார்ஜ் செய்தபோது நடந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு!
உலகம் முழுவதும் மின்சார வாகனத்தின் மீதான ஆர்வம் மக்களுக்கு அதிகரித்துள்ளது. இதற்கு எரிபொருளின் விலையும் காரணமாக அமைந்துள்ளது.

உதயநிதிக்கு அரசியலை விடத் தொழில்தான் முக்கியம்: அண்ணாமலை

மின்னம்பலம் : திமுக அரசு மீது விமர்சனங்களை முன்வைத்து வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தற்போது லால்சிங் சத்தா படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆமீர்கான் – கரீனா கபூர் நடித்துள்ள இந்தி படமான லால் சிங் சத்தா வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகிறது. இந்த படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் திமுக எம்.எல்.ஏ உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
திமுகவைப் பொறுத்தவரைக் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி திணிப்பை எதிர்த்து வருகிறது. இந்தநிலையில், அக்கட்சியைச் சேர்ந்தவரும், குறிப்பாக முன்னாள் முதல்வர் கலைஞரின் பேரனும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி இந்தி படத்தை வெளியிடுவது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை - ரூ.698 கோடி ஒதுக்கீடு! தமிழக அரசு அறிவிப்பு

மாலை மலர் : அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி தொடர மாதம்தோறும் ரூ.1000 உதவி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
ஏழை மாணவிகள் பள்ளியோடு படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்தத் திட்டத்தில் லட்சக்கணக்கான மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த மாதம் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பும் சவுக்கு சங்கரும்

ரூ. 3 கோடிப்பு.. சவுக்கு சங்கர் இன்வெஸ்டிகேட்.. பேரம் பேசிய சிறுமியின்  குடும்பம்?.. கறாராக மறுத்த நிர்வாகம்..! அதிர்ச்சி உண்மை..! - TamilSpark

savukkuonline.con  :  கசடற – 8 – என் பிரியமான எதிரிகளே !
எத்தனையோ விமர்சனங்களைக் கண்டிருக்கிறேன். மிரட்டல்களையும் தான். எப்போதும் அஞ்சியதில்லை. நான் சாலை விபத்தில் மரணமடைந்ததாகக் கூட செய்திகளை சில மாதங்களுக்கு முன்பு பரப்பினார்கள். அப்போதும் நான் என் வேலைகளைத் தொடர்ந்து கொண்டு தான் இருந்திருக்கிறேன்.
அனைத்துக் கட்சியினரையும், நேர்மையற்ற அதிகாரிகளையும், ஏன் நீதிபதிகளையும் பற்றியும் கூட எழுதியிருக்கிறேன்.
அதனால் அனுதினமும் பிரச்சனைகள் என்னை சூழ்ந்தபடி தான இருக்கின்றன.
ஆனால் , இந்த கள்ளகுறிச்சி மாணவி மரணத்தில் நான் தெளிந்து அறிந்து கொண்டதை சொன்னபிறகு என்னைச் சுற்றி ஏற்பட்ட மாற்றங்களைப் பார்த்துவருகிறேன்.
இந்தக் கட்டுரையை மிகுந்த யோசனைக்குப் பிறகே எழுதுகிறேன்.
எனது நலன் விரும்பிகளுக்காக நான் எழுதும் கட்டுரை இது.  என்னை தாக்குகிறவர்களுக்கான விளக்கம் அல்ல. அவர்கள் நான் மதிக்கும் அளவுக்கான எதிரிகள் அல்ல.   

இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம் பற்றிய விரிவான கட்டுரை ..விக்டர் ஐவன்

கோட்டாபயவை சந்திக்கவில்லை: மறுக்கும் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் |  TamilWireless

Victor Ivan :  புயலின் சுயரூபம்
போராட்டம் வெற்றிகொள்ள வேண்டிய தெளிவான இலக்குகள் குறித்த சரியான தெளிவு இருக்கவில்லை..
அதே போன்று அதற்கு தன் ஆற்றல் வரம்புகள் பற்றிய தெளிவான புரிதலும் இருக்கவில்லை.
போராட்டத்தின் பலத்தையும் விவேகத்தையும் விட,
 அந்தப் போராட்டத்தினால் முன்வைக்கப்பட்ட சவாலை,
 தவறாக மதிப்பிட்டு கையாள  முயன்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பலவீனமான நிலையே  போராட்டத்தின் வளர்ச்சியை குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய தனது பதவியை விட்டு விலகி ஓடும் ,
ஏற்படுத்து மளவு தாக்கம் செலுத்தியது என்று கூறலாம்..
தேசத்தைப் பற்றியோ, தேசமொன்றின் ஆட்சியைப் பற்றியோ அவருக்கு எந்தப் புரிதலும் இருக்கவில்லை. அதுமட்டுமின்றி, படை பலத்தின் மீது நம்பிக்கைகொண்ட, சிங்கள பௌத்த மதவாத மனப்போக்கையும் கொண்ட ஒரு தீவிரப்போக்குடைய தலைவனாகக் கருதலாம்.

தமிழ்நாட்டு அகதி முகாமிலிருந்து | போரின் மறுபக்கம் |

 

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

அரசியல் விளையாட்டில் கலைஞர் என்ற விளக்கை பறிகொடுத்து விடாதீர்கள்!

ராதா மனோகர்
: கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஒரு அரசியல் கட்சிக்கு மட்டுமே சொந்தமானவர்  என்பதல்ல.
இன்னும் சரியாக சொல்லப்போனால்,
கலைஞரின் சமூக அரசியல் கோட்பாட்டை புரிந்து அதன் வழி நடக்க முயலும் அத்தனை பேர்களுக்கும் அவர் சொந்தமானவர்தான்
கலைஞர் என்ற சுயமரியாதை சகாப்தத்தை வெறும் தேர்தல் அரசியலுக்குள் குறுக்கி விடமுடியாது
ஒரு  முதல்வர் - ஒரு கட்சியின் தலைவர்  என்ற  படிநிலைகளை தாண்டி இன்று முழு தெற்கு ஆசியாவுக்கும் தேவையுள்ள கோட்பாட்டு மனிதராக கலைஞர் நிற்கிறார்
இனி வரும் காலங்களில் இந்திய ஒன்றியம் எங்கிலும் கலைஞர் கலைஞர் கலைஞர் என்ற பெயர் ஒலிக்கப்படும்!
இன்னும் சரியாக தெளிவாக சொல்வதாயின்,
தென்னக மாநிலங்கள் தோறும் சுயமரியாதை சமூகநீதி பகுத்தறிவு கருத்துக்களின் தேவை தற்போது பெரிய அளவில் உணரப்படுகிறது
எதிர்முகாம்களில் இருக்கும் பலரும் கூட கலைஞரின் பெயரை உச்சரிக்க தொடங்கி இருக்கிறார்கள்
கலைஞர் என்ற அடையாளம் தமிழ்நாட்டை  தாண்டி விரிந்து கொண்டே இருக்கிறது

தைவான் நீரிணையில் நிற்கும் சீனப் போர்க்கப்பல்கள்..!

பாலிமர் நியூஸ் : தைவான் நீரிணை நடுக்கோட்டுப் பகுதிக்கு அருகில் சீன, தைவான் கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தைவான் மீது சீனா போர் தொடுத்து அதைக் கைப்பற்றக் கூடும் எனக் கூறப்பட்ட நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்து அதிபரைச் சந்தித்துச் சென்றார்.
இதையடுத்துத் தைவானைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் சீனப் போர்க்கப்பல்களும் போர் விமானங்களும் ஒத்திகையில் ஈடுபட்டன. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையே அறிவிக்கப்படாத படைவிலக்கப் பகுதியான தைவான் நீரிணை நடுக்கோட்டுக்கு அருகே இருநாடுகளின் பத்துப் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.வி. டி ராக்கெட் திட்டம் தோல்வி - பிரதேசம் சென்சார் செயலிழந்தது!

மாலை மலர் :  தகவல் இழப்புக்கான காரணத்தை கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் நீண்ட நேரம் போராடினார்கள்.
செயற்கைக் கோள்களை இனி பயன்படுத்த முடியாது என இஸ்ரோ அறிவித்துள்ளது. சென்னை: பூமியை கண்காணிக்கும் இ.ஒ.எஸ்-02 செயற்கை கோள் மற்றும் இந்தியாவில் உள்ள 750 மாணவர்கள் உருவாக்கிய ஆசாடிசாட் என்னும் சிறிய செயற்கை கோள் ஆகிய 2 செயற்கை கோள்களுடன் எஸ்.எஸ்.எல்.வி.-டி1 ராக்கெட்டை இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியது.
ராக்கெட்டில் இருந்து செயற்கை கோள்களை பிரிக்கும் பணிகளை மேற்கொண்டபோது,
செயற்கை கோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. கடைசி நிலையில் ஏற்பட்ட தகவல் இழப்புதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

சீன உளவு கப்பலுக்கு இலங்கை அரசு தடை; இந்தியாவின் எதிர்ப்பால் திடீர் முடிவு

தினகரன் : கொழும்பு: இந்தியாவின் கடும் எதிர்ப்பு காரணமாக, சீனாவின் உளவு கப்பலை அம்பந்தோட்ட துறைமுகத்துக்கு வருவதற்கு இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது.
இலங்கைக்கு கடன் மேல் கடன் கொடுத்து, இங்குள்ள அம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ள சீனா, இங்கிருந்து, இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், சீன ராணுவத்தின் ‘யுவான் வாங்க்-5’என்ற செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் உளவுக் கப்பல் அம்பந்தோட்டாவுக்கு வரும் 11ம் தேதி வந்து, 17ம் தேதி வரை முகாமிட்டு இருக்கும் என இலங்கை அரசு தெரிவித்தது.
இந்தியாவின் பாதுகாப்புக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால், இலங்கையின் இந்த முடிவுக்கு ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.