'மூட போகும், 500 'டாஸ்மாக்' கடை பட்டியலில், எங்கள் பகுதியில்
உள்ள கடையையும் சேர்க்க வேண்டும்' எனக் கோரி, தினமும் ஏராளமான மக்கள்,
டாஸ்மாக் அதிகாரிகளிடம் மனு அளித்து வருகின்றனர். இதனால், அதிகாரிகள்
செய்வதறியாது திணறி வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா, முதற்கட்டமாக, 500
டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளார்.
இதையடுத்து,
சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவு, எழும்பூரில் உள்ள
டாஸ்மாக் தலைமை அலுவலகம், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்களில்,
மதுக்கடையை மூடுமாறு பலரும், கோரிக்கை மனுவை அளித்து வருகின்றனர்.