மகாவீரர் |
ஏற்றி அவருக்கு அஞ்சலி செலுத்தி கொண்டாடும் நாள் தீபாவளி என்றானது
மகாவீரர் |
எஸ்.ராமகிருஷ்ணன் |
hindutamil.in :வையாபுரிப்பிள்ளை ஆசிரியராகப் பங்கெடுத்து வெளிக்கொண்டுவந்த ‘தமிழ்ப் பேரகராதி’ (Tamil Lexicon) எக்காலத்துக்குமான ஒரு பெரும் சாதனை என்றால், தற்காலத் தமிழுக்கான ‘க்ரியா’ அகராதி நாம் வாழும் காலத்தில் ஒரு முக்கியமான சாதனை. அகராதிக்கான இலக்கணங்களை முழுமையாகக் கொண்டு, கச்சிதமான எழுத்துருக்களோடும் வடிவத்தோடும் அமைந்த ‘க்ரியாவின்’ தற்காலத் தமிழ் அகராதி இப்போது இன்னொரு மைல்கல்லை எட்டியிருக்கிறது; அது மேலும் விரிவாக்கப்பட்டு மூன்றாம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது.
இன்றைய தலைமுறையினரையும் நம்முடைய மொழி முழுமையாகச் சென்றடையும் வகையிலான ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யின் முதல் பதிப்பு 1992-ல் வெளியானது. பின்னர் 16 ஆண்டுகள் கழித்து, இடைப்பட்ட காலத்தில் தமிழில் உருவான சொற்களையும் மாற்றங்களையும் உள்ளடக்கி மேம்படுத்தப்பட்ட பதிப்பு 2008-ல் வெளிவந்தது. அடுத்து 12 ஆண்டுகளுக்குப் பின்னர், இடைப்பட்ட காலத்தில் தமிழில் உருவான சொற்களையும் மாற்றங்களையும் உள்ளடக்கியதாக இப்போது மூன்றாவது பதிப்பு வெளியாகியிருக்கிறது.சிறப்பு என்ன?
nakkeeran: மதுரை தெற்கு மாசி வீதியில் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்ற போது உயிரிழந்த வீரர்கள் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிவடைந்து இருவரின் உடல்களுக்கும் தீயணைப்புத்துறை டி.ஐ.ஜி மற்றும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு இருவரது உடலும் அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல் அவரது குடும்ப வழக்கம் முறைப்படி இறுதி இறுதிச்சடங்கு செய்யப்பட்டு இருவரது உடல்களும் தகனம் செய்யப்பட்டது. தீபாவளி நாளில் தீயணைப்புத்துறையினர் இருவர் உயிரிழந்த சம்பவம் அந்தந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
minnambalam : தீபாவளித் திருநாளை ஒட்டி இன்று (நவம்பர் 14) காலை திமுகவில் அழகிரி ஆதரவாளர்களாக இருந்து இப்போது சைலன்ட் மோடில் இருக்கும் பலருக்கும் அழகிரியிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.
ஒவ்வொருவரிடமும் ஐந்து நிமிடம், ஏழு நிமிடம், பத்து நிமிடம் என்று பொறுமையாக பேசி தீபாவளி வாழ்த்துகளை சொல்லியிருக்கிறார் அழகிரி. பிறகு அவரவர் பகுதியில் திமுக நிலைமை என்ன என்பதையும் விரிவாகவே விசாரித்திருக்கிறார். இந்த தொலைபேசி உரையாடலின் போது அழகிரி கூறிய ஒற்றை விஷயம் அவரது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. தீவிர அழகிரி ஆதரவாளரும்திருச்சி மாவட்ட அழகிரி பேரவை நிர்வாகியிடம் இதுகுறித்துப் பேசினோம். “ஆமாம் சார். அழகிரி அண்ணன் பேசினார். தீபாவளி வாழ்த்து சொன்னாரு. அதைவிட ரொம்ப உற்சாகமா இனிமேதான் எங்களுக்கு தீபாவளி அப்படிங்குற மாதிரி ஒரு தகவலையும் சொன்னாரு.
பயோன்டெக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் உகுன் சகின் இதனை தெரிவித்துள்ளார். பிபைஜர் பையோன்டக் டெக் நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கியுள்ள மருந்து மூன்றாம் கட்ட சோதனைகளின் போது எங்களின் எதிர்பார்ப்பையும் மீறி செயற்பட்டுள்ளது,கொரோனா வைரசினால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதில் அது 90வீதம் பலனளித்துள்ளது என குறிப்பிட்டுள்ளன. இதேவேளை தொடரும் சோதனைகள் குறித்த முழுமையான தரவுகள் வெளியாகாத நிலையில் இந்த மருந்து அறிகுறியற்ற நோயாளிகளை குணப்படுத்தும் திறன் உடையதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேவேளை கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் கொரோனா வைரஸ் தொற்றினை இந்த மருந்துமூலம் தடுத்து நிறுத்தமுடியுமா என்றால் எனது பதில் ஆம் என்பதே என பயோன்டெக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் உகுன் சகின குறிப்பிட்டுள்ளார்.
Add caption |
உதாரணமாக விவாகரத்து, பிரிந்து வாழ்தல், சொத்து பிரிவினை, மது அருந்துதல், தற்கொலை, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உடனான பாலியல் உறவு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் உடனான உறவுகளை அமெரிக்காவின் உதவியுடன் சீராக்கியதை தொடர்ந்து இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சமீபத்தில் ஜக்கிய அரபு அமீரகத்துடனான உறவை மேம்படுத்தியது இஸ்ரேல்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இதனால் ஏற்கனவே இஸ்ரேலிய சுற்றுலா வாசிகளும் முதலீட்டாளர்களும் அதிகரித்துள்ளனர்.
மும்பை, டெல்லி, பெங்களூர், சென்னை, கொல்கத்தா, லக்னோ, பாட்னா மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட 8 பெருநகரங்கள் மற்றும் பெருநகரங்கள் அல்லாத சிறிய நகரங்களில் 1200-க்கும் மேற்பட்ட நகர்ப்புற இல்லத்தரசிகள் மற்றும் 250 கணவர்களிடம் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆராய்ச்சியின் முடிவாக இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கபட்டவர்கள் 22 முதல் 45 வயதுக்குட்பட்ட கூட்டு மற்றும் தனி குடித்தனமாக வாழ்பவர்கள் ஆவர். மேலும் 70% வீட்டு இல்லத்தரசிகள் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டபடிப்பை முடித்தவர்கள் ஆவர்.
Add caption |
இதுகுறித்து பிகார் எதிரொலி: காங்கிரஸுக்கு கடிவாளம் போடும் திமுக என்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணை பகுதியில் எழுதியிருந்தோம். அதில், ‘பிகார் பாடத்தை நாம் அடுத்து வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே கற்றுக் கொள்ள வேண்டும். எனவே காங்கிரஸ் கட்சிக்கு அள்ளிக் கொடுக்கக் கூடாது. பிகார் தேர்தலை காரணம் காட்டியே நாம் காங்கிரஸுக்கு 20 முதல் 30 தொகுதிகள் மட்டுமே கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தேஜஸ்வி யாதவ் மாதிரி நாமும் இலவு காத்த கிளியாக மாற வேண்டிய நிலை ஏற்படும்’ என்று ஸ்டாலினிடம் திமுக மாசெக்கள் எச்சரித்திருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தோம்.
maalaimalar :என் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்தது அதிர்ச்சியளிக்கிறது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறினார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி, அரியர் தேர்வு ரத்து விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டிற்கு சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் அவர் புகார்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும் விசாரணை குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. குழு தரும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Subashini Thf |
veerakesari :பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்கக்கூடாது என்று இந்தியா பிரிட்டனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2000 ஆம் ஆண்டளவில் பிரிட்டன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்த்தது. எனினும் யுத்தம் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இலங்கையில் எந்த விதமான வன்முறைகளும் இடம்பெறாததையடுத்தும் புலிகள் அமைப்பின் தடையை நீக்க வேண்டும் என்ற கோரப்பட்டது. இந்த நிலையிலேயே புலிகள் மீதான தடையை பிரிட்டன் நீக்கவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சும் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தது. இவ்வாறான சூழலில் புலிகள் மீதான தடையை பிரிட்டன் நீக்கக்கூடாதென இந்தியா. பிரிட்டிஷ் உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் ஜனாதிபதி ஆர் . பிரேமதாஸா ஆகியோரின் படுகொலைகளுக்க புலிகளே காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
Poovannan Ganapathy : · அஞ்சு ரூபாய் டாக்டரும் நூறு ரூபாய் விமான பயணமும் சைவ உணவு நல்லது, இந்துக்கள் பெருந்தன்மையானவர்கள் , நேரு நிறைய நல்லவர் ,அரசு படுகொலைகளுக்கு , பெரும்பான்மைவாதத்துக்கு எதிரானவர் என்று பொய்களை உண்மையாக பொதுப்புத்தியில் ஏற்றியது போல ஏற்றப்படும் ஒன்று அஞ்சு ரூபாய் டாக்டர், நூறு ரூபாய் விமானப்பயணம்.
எந்தவொரு சேவைக்கும் ,பொருளுக்கும் ஒரு அடிப்படை விலை உண்டு.அதனைக் குறைவாகக் கொடுத்தால் எங்கோ யாரிடமோ exploitation நடக்கிறது என்று பொருள்.விமான பயணமோ , அறுவை சிகிச்சையோ பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியவை.பல நூறு, ஆயிரம் ஊழியர்கள் தொடர்புடையவை. ஊழியர்களின் ஊதியத்தை வெகுவாக குறைத்து, உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறைந்த பட்ச ஊதியத்தில் கால்வாசி கொடுத்து , பணி நிரந்தரம் செய்தால் தர வேண்டிய கூடுதல் ஊதியம் ஊதிய உயர்வு,மருத்துவம் , விடுமுறை சார்ந்த சலுகைகளைத் தவிர்க்க , எட்டு மணிநேரத்திற்கு ஊதியம் கொடுத்து விட்டு பதினாறு மணிநேரம் ஊதியம் வாங்க , தொழிற்சங்கம் அமைக்காமல் இருக்கத் தொகுப்பு ஊழியர்களாக வைத்திருந்தால்,பாதுகாப்பு சார்ந்த நடைமுறைகளை வெகுவாக குறைத்தால் தான் குறைந்த விலைக்கு அறுவை சிகிச்சையோ , விமான பயணமோ சாத்தியம்.
dhinamalar :பாட்னா:''முதல்வர் பதவிக்கு, நான் உரிமை கோரவில்லை,'' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் கூறினார்.
பீஹார்
சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள, 243 தொகுதிகளில், 125 தொகுதிகளில்
வென்று, தே.ஜ., கூட்டணி, ஆட்சியை தக்க வைத்துள்ளது.இதையடுத்து, பீஹார்
முதல்வராக, ஏழாவது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்பார் என,
எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், நிதிஷ் குமார் கூறியதாவது:பஹார்
தேர்தலில், தே.ஜ., கூட்டணிக்கு, மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். இந்த
கூட்டணியே, ஆட்சியமைக்கும். முதல்வர் பதவிக்கு, நான் உரிமை கோரவில்லை.
தே.ஜ., கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தான், முதல்வர் தேர்வு
செய்யப்படுவர். பதவியேற்பு விழா பற்றியும், அப்போதுதான் முடிவு
செய்யப்படும். தே.ஜ., கூட்டணிக்கு விரோதமாக செயல்பட்ட, லோக் ஜனசக்தி
கட்சியின் மீது, பா.ஜ., தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டணியில் அந்த
கட்சி தொடர்வது பற்றி, பா.ஜ., தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்
கூறினார்.
உதயநிதி போட்டி தொடர்பாக பிகே ஆலோசனை - ஓகே சொன்ன ஸ்டாலின் - எதிர்க்கும் உதயநிதி என்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணையில், “தனது தாத்தா கலைஞர் போட்டியிட்டு வென்ற சென்னை சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி நிற்பதற்கான பூர்வாங்க வேலைகளை அவரது தரப்பினர் தொடங்கிவிட்டனர்” என்று சொல்லியிருந்தோம்.
உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ரஷ்யா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளின் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன. அண்மையில், அமெரிக்கா பிஃப்சர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள மருந்து 90 சதவிகிதம் வெற்றியைத் தருவதாகத் தெரிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்பூட்னிக் V, 92% பாதுகாப்பு அளிக்கிறது என்று அந்நாட்டுச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஸ்பூட்னிக் V மருந்து, ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் நிறுவனத்தால் சோதனை செய்யப்படுகிறது.
Add caption |
Silambu Rajendran - ஆறாம் அறிவு : · இந்த மதம் எங்கே போகிறது பகுதி - 5
வெறும் கற்சிலைகளை தெய்வங்களாக்கிய பிராமணர்கள். வழிபாடு என்றால்? பூசெய்... என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள் .பூணூல் வந்த கதை வேடிக்கையானது. புத்தம் சரணம் கச்சாமி...தர்மம் சரணம் கச்சாமி... சங்கம் சரணம் கச்சாமி... என்ற மெல்லிய கோஷங்கள் தென்னிந்தியாவின் தொண்டை மண்டலக் காற்றில் கலக்க ஆரம்பித்த காலம். இங்கே தமிழ் பண்பாடு... நாகரிகத்தின் உச்சியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. சங்க இலக்கியங்கள் இயற்கை, இறைமை, காதல், பக்தி என சகல விசேஷங்களையும் தொட்டு தமிழாட்சி நடத்திக் கொண்டிருந்தது. பொதுவாகவே உலக அளவில் வழிபாட்டு முறையில் ஓர் ஒற்றுமை இருந்து வந்துள்ளது. (i) கல்லை வழிபடுதல்-Fetish worship(ii) விலங்குகளை வழிபடுதல்-Totemism worship(iii) மனித- உரு செய்து வழிபடல்-Shamnaism worship(iஎ) விக்ரம், சிலை செய்து வழிபடுதல் -Idol worship நாகரிக பண்பாட்டு வளர்ச்சியின் அடிப்படையில் இந்த வழிபாட்டு முறைகளும் வளர்ச்சி கண்டு வந்தன.
Karthikeyan Fastura : · இருப்பதிலேயே மிகவும் சிரமமான மார்க்கெட்டிங் என்பது மிகப் பெரும்பான்மையான மக்களை சென்று சேர வேண்டிய வெகுஜன மார்க்கெட்டிங் தான். இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை அதற்கு மிகப்பெரிய அவசியம் இருந்ததில்லை, காரணம் உலகெங்கும் உள்ள நாடுகளில் பெரும்பான்மையானவை மன்னர் ஆட்சியின் கீழ்தான் இருந்தது. அன்று பிரச்சாரத்தின் தேவை என்பது ஆட்சியாளர்களுக்கு கிடையாது. பெரும்பான்மையான ஆட்சியாளர்கள் மத நிறுவனங்களுக்கு கட்டுப்பட்டு இருந்ததால் மத போதகர்களுக்கும் உள்நாட்டில் பிரச்சாரத்தின் தேவை கிடையாது, ஏனென்றால் மதத்தை பரப்புவதற்கு மன்னரின் உத்தரவே போதுமானதாக இருந்தது . மன்னர்களின் ஆட்சியில் இருந்து விடுபட விரும்பிய, மக்களாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட அரசியல் தலைவர்களுக்கு தான் மாஸ் மார்க்கெட்டிங் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.
அதற்கு அன்றைய காலத்தில் இருந்த பழமையான உத்தி என்பது புத்தகங்கள் எழுதுவதும், அதை பதிப்பித்து அறிவுசார் கூட்டத்திடம் சென்று சேர்ப்பதுமே ஆகும். ஏனென்றால் அச்சு எந்திரத்தின் கண்டுபிடிப்பு பலவாசல்களை திறந்துவிட்டது அறிவியலிலும், அரசியலிலும், மத பரப்புரையிலும். அதற்கு பெரும்பான்மையான தலைவர்கள் பல்கலைக் கழகங்களை பயன்படுத்தினார்கள். கம்யூனிச சித்தாந்தம் இப்படித்தான் பரவியது.
இன்னும் சரியாக சொல்லப்போனால் திமுகவை தாக்குவதற்கு ஒரு போலியான வாய்ப்பு கிடைக்குமானால் கூட வரிந்து கட்டிக்கொண்டு முன்வருகிறார்கள் என்றால் இவர்கள் பார்ப்பனீய அடிமை மனோபாவம் கொண்டவர்கள்தான் . அருந்ததி ராய் போன்ற பார்ப்பன ஊடக வெளிச்சம் அளவுக்கு மீறி உள்ளவர்கள் எல்லோரும் இந்த ரகம்தான் . மீண்டும் மீண்டும் இந்திய இடதுசாரிகளில் மேல்தட்டு இந்திய இடதுசாரி தலைவர்கள் ஊடக மேதாவிகள் இலக்கிய வாதாபிகள் எல்லோருமே பார்ப்பனீயம் இந்தியாவில் காக்கப்படவேண்டும் என்ற உள்ளுணர்வு கொண்டவர்கள்தான் என்பதற்கு அருந்ததி ராயும் ஒரு அக்மார்க் உதாரணம்தான் .
Veerakumar -
tamil.oneindia.com : புதுச்சேரி: புதுச்சேரியில் கலைஞர் பெயரில் காலைச் சிற்றுண்டி திட்டம்,
துவங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ஒன்று "டாக்டர் கலைஞர்
மு.கருணாநிதி காலைச் சிற்றுண்டித் திட்டம்" என்ற பெயரில் நவம்பர் 15-ம்
தேதி முதல் தொடங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி,
சட்டப்பேரவையில் 2020 -21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது
அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று (15-11-2020), காலை 9.00 மணி அளவில், புதுச்சேரி அரசின்,
பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் புதுச்சேரி, காராமணிக்குப்பம்
ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் "டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலைச்
சிற்றுண்டித் திட்டத் தொடக்க விழா", புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
தலைமையில், கல்வி அமைச்சர் இரா.கமலக்கண்ணன் முன்னிலை வகிக்க, கழக அமைப்புச்
செயலாளரும் - நாடாளுமன்ற மாநிலங்களவை கழக உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி,
எம்.பி., திட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றியதுடன், பள்ளி மாணவர்களுக்கு
சிற்றுண்டி வழங்கி துவக்கி வைத்தார்.
யானைக்கவுனி பகுதியில் வசித்து வந்தவர் தலில் சந்த் (74). இவர் மனைவி புஷ்பா ராய் (70). இவர்களுக்கு ஷீத்தல் என்ற மகனும் பிங்கி என்ற மகளும் உள்ளனர். அதே பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளனர்.
தலில் சந்த்தின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் பிரோகி ஜவான் ஆகும். ஷீத்தலுக்கும் மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ஜெயமாலா என்பவருக்கும் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இரு ஆண்டுகளுக்கு முன்பு கணவரைப் பிரிந்து ஜெயமாலா புனேவுக்கே சென்றுவிட்டார்.
ஆனாலும் அந்தக் கூட்டணியில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையே பெற்றிருக்க, பாஜகவோ 74 தொகுதிகளை ஜெயித்துள்ளது. இந்நிலையில் கூட்டணி அரசில் பழைய அணுகுமுறையை பாஜக பின்பற்றுமா என்பதில் சந்தேகப்பட்ட நிதிஷ்குமார், ‘முதல்வர் பதவியை ஏற்க விருப்பம் இல்லை’என்று தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன. பாஜகவின் அணுகுமுறை மாற்றத்தின் முதல் வெளிப்படாக முன்னாள் பாஜக பொதுச் செயலாளரும், முன்னாள் பிகார் பொறுப்பாளருமான உமாபாரதி, “பிகார் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்பு பாஜக இரண்டாம் இடத்தில் இருந்தது.இப்போது பாஜகதான் பிகாரின் பெரியண்ணன். அதற்காக ஏறி வந்த ஏணியான நிதிஷ்குமாரை நாங்கள் எட்டி உதைக்க மாட்டோம்”என்று
hindutamil.in/ :பிஹார் தேர்தல் முடிவுகளை ஒட்டி எழுந்திருக்கும் விவாதங்களில் கவனிக்கக் கூடிய ஒன்றாக இருப்பது, ‘பாஜகவை எதிர்கொள்ள முஸ்லிம்கள் ஓரணியில் திரள வேண்டாமா; முஸ்லிம் கட்சிகள் தனித்து நின்றால் பாஜகவுக்குத்தானே வசதி!’
பிஹாரில் ஒவைஸி தலைமையிலான ‘ஆல் இந்தியா மஜ்லிஸே இத்திகாதுல் முஸ்லிமீன்’ கட்சியும், எஸ்டிபிஐ கட்சியும் போட்டியிட்டதும், 20 தொகுதிகளில் போட்டியிட்ட ஓவைஸி கட்சி ஐந்து இடங்களை வென்றிருப்பதும், சில தொகுதிகளில் ராஜத, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகளின் ‘மகா கூட்டணி’யின் தோல்விக்கு இது காரணமாக இருந்திருப்பதும் இந்த விவாதத்துக்குக் காரணம் ஆகியிருக்கிறது.
ஒரு மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நாட்டில், அந்த மதத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், நாட்டின் பிரதான கட்சியாகவும் பாஜக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, போட்டியின் ஒருபுறத்தில் பிரம்மாண்டமாக நிற்கும்போது, மறுபுறத்தில் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு கட்சியையும் ‘மகா கூட்டணி’ இணைத்துக்கொள்ளவில்லை என்பதை நாம் முதலில் கவனிக்க வேண்டும்.
.hindutamil.in : பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறி பிஹார் முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்க ஆதரவு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே ஆளும் பாஜக கூட்டணிக்கும் ஆர்ஜேடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கூட்டணிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தன.
மொத்தமுள்ள 243 தொகுதி களில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக கூட்டணி 125 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத் துக் கொண்டது.
minnampalam : பிகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய நிலையில் மீண்டும் முதல்வர் நாற்காலியில் நிதிஷ்குமார் அமருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேற்று (நவம்பர் 11) டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த தேர்தல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வளர்ச்சி அரசியலுக்குக் கிடைத்த வெற்றி இது. புதிய முதல்வராக நிதிஷ்குமார் தொடர்ந்து பணியாற்றுவார்" என்று பேசினார். ஆனால், பிகார் அரசியல் வட்டாரங்களிலோ புதிய முதல்வராகப் பதவியேற்பதற்கு நிதிஷ்குமாருக்கு விருப்பமில்லை என்ற தகவல்கள் உலவி வருகின்றன.
Add caption |
Sundar P : · காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனின் அவதார நட்சத்திரத்தை ஒட்டி நேற்று 1008 லிட்டர் பாலில் அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்கர மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி பங்கேற்று பாலாபிஷேகம் செய்து வழிபட்டார்.
ஐக்கிய நாட்டு சபையின் மனிதவள மேம்பாட்டு சுட்டெண்ணின் படி (HDI), இந்தியாவில் 75.6% மக்கள் ஒரு நாளைக்கு ரூ.150 க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர், 41.6% மக்கள் ஒரு நாளைக்கு ரூ.75 க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர்.
இந்த லட்சணாத்தில் 1008 லிட்டர் பால் வீனடிக்கப்பட்டுள்ளது...
உணவுப் பொருளை வீணாக்கும் ஆட்களை தண்டிக்க கடும் சட்டம் இயற்றபடவேண்டும்!
அதே சமயம் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் 76 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆர்ஜேடி வெற்றிபெற்ற பல இடங்களில் முதல்வர் தலையிட்டு ஆளுங்கட்சியினரை வெற்றிபெற வைத்ததாக ஆர்ஜேடி கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில் பிகார் தேர்தலில் வென்ற நிதிஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், “பிகாரின் இளம் தலைவராக உருவெடுத்து, மக்களின் ஆதரவோடு உயர்ந்துவரும் தேஜஸ்வி யாதவ் தலைமையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இந்தத் தேர்தலில் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள தனிப் பெரும் கட்சியாகப் பிகார் மாநிலத்தில் வெற்றி பெற்றிருப்பது, அந்த மாநிலத்தின் ஜனநாயகத்திற்கு நல்ல உயிரோட்டத்தையும், துடிப்பான ஊக்கத்தையும் அளித்திடக் கூடியது” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
இடைக்கால ஜாமீன் மனு மீதான விசாரணையில், மும்பை உயர்நீதிமன்றத்தின் போக்கை கண்டித்த உச்ச நீதிமன்றம், தனிமனித சுதந்திரம் மறுக்கப்படும் விஷயங்களில் உயர்நீதிமன்றங்களின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை என்றும் கருத்து தெரிவித்தது. “இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் நிறுவப்பட்ட உயர்நீதிமன்றங்கள், தனிமனித சுதந்திரம் மறுக்கப்படும் விஷயங்களில் போதுமான அளவு செயல்படவில்லை. இது, எங்களுக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. …”என்று நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார்.
பிகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணும் இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் தேர்தல் முடிவுகளை முழுமையாக வெளியிட நேற்று (நவம்பர் 10) இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது.
இந்த வகையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 இடங்களில் பெரும்பான்மையான 125 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி 137 இடங்களில் தனித்துப் போட்டியிட்ட லோக் ஜனசக்தி கட்சி பல இடங்களில் நிதிஷ்குமார் கட்சியை தோல்வி அடையச் செய்தும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தான் வெற்றிபெற்றது.
இவர் ஒரு இந்திய தமிழ் பெண்ணாக ஒரு ஜமேக்கா கறுப்பு இன பெண்ணாக ஒரு அமெரிக்க பெண்ணாக எல்லாம் கருதப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் .
கமலாவை பற்றிய பிம்பம் ஊடங்களால் இப்படித்தான் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது. ஆனால் கமலாவை பற்றிய உண்மைகள் கொஞ்சம் வித்தியாசமானவையாக உள்ளது.
2014 ஆம் ஆண்டு கமலா டக்ளஸ் எக்கோம் என்பவரை (இரண்டாவது கணவர்) வாழ்க்கை துணையாக்கி கொண்டார் . 2016 ஆம் ஆண்டு தேர்தலில் வென்று செனட்டர் ஆனார் . இந்த 2020 ஆம் ஆண்டு உதவி குடியரசு தலைவர் ஆகியுள்ளார்.
கமலாவின் கணவர் டக்ளஸ் எம்கோப் ஒரு யூதர் . வழக்கறிஞர் . அதுவும் சாதாரண வழக்கறிஞர் கிடையாது . பல மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கும் சட்ட நிபுணர்.. அவரின் முதல் மனைவி (Kerstin Emhoff ) திரைப்பட ஊடக துறையில் பெரும் வெற்றி பெற்றவர். அவரின் திரைப்படங்களும் கிராமி ,. கேன் போன்ற பல படவிழாக்களில் பரிசு பெற்றவைதான்.
தேர்தல் நடத்தும் அதிகாரி சட்டப்படி செயல்படாமல் அதிகார துஷ்பிரயோகம் செய்து அந்த தொகுதிகளில் முடிவுகளை மாற்றினார்கள்... உதாரணம் ராதாபுரம் அறந்தாங்கி பெரம்பூர்... ராதாபுரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றும், இன்னும் தீர்ப்பு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக பல வழக்குகள் குஜராத் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது... ஐகோர்ட் 2 பாஜக எம்எல்ஏக்களின் தேர்தலை வெற்றிடமாக அறிவித்தது... இப்போது பீகாரில் மீண்டும் இதே நடக்கிறது.. இது ஜனநாயக படுகொலை... பிஜேபி நடத்தும் மெகா மோசடி...
nakkeeran :பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றது.
பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில்
மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தளம்
மற்றும் பாஜக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம்
உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டன. இந்நிலையில்,
இந்தியாவே பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கும் இந்த தேர்தல் முடிவுகள் தற்போது
வெளியாகி வருகின்றது. 243 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு, 55
மையங்களில் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் டெல்லி மற்றும் இந்தியாவில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையில் இருக்கும் மாநிலங்கள் ஆகியவற்றில் பட்டாசு வெடிக்க தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது நடப்பு மாதத்தில் சராசரி அளவிற்கும் கீழே காற்றின் தரம் குறைந்த சிறு மற்றும் பெரு நகரங்களுக்கும் பொருந்தும்.
எஸ்.பி.எஸ். தமிழ்: தானில்லாத காலத்தில் தனது பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே பிள்ளைகளை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டதாக லண்டனில் தனது இரண்டு பிள்ளைகளினதும் கழுத்தை கத்தியால் வெட்டிக்கொன்றுவிட்டு தனது கழுத்தையும் வெட்டி தற்கொலை செய்துகொள்ள முயன்று உயிர்தப்பிய இலங்கையை சேர்ந்த குடும்பஸ்தர் கூறியுள்ளார்.
லண்டனின் கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட நடராஜா நித்தியகுமார், தனது நாலு வயது மற்றும் 19 மாதக் குழந்தைகளை கத்தியால் வெட்டி படுகொலை செய்தார். அப்போது குளியலறையிலிருந்த அவரது மனைவி வந்து பார்த்தபோது, பிள்ளைகளும் நித்தியகுமாரும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டிருந்தனர். அவசர சிகிச்சைப்பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நடராஜா நித்தியகுமாருக்கு எதிராக தற்போது கொலைக்குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த கொலை குறித்த அதிர்ச்சியான விவரங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ளார்.
சதீஷ் பார்த்திபன் - பிபிசி தமிழுக்காக : கேப்டன் அஸ்ரின் கொரோனா விவகாரத்தால் மலேசிய விமானப் போக்குவரத்துத் துறை பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அனுபவம் வாய்ந்த விமானி ஒருவர் வேலையிழப்பு காரணமாக சாலையோர உணவகம் ஒன்றைத் தொடங்கி உள்ளார். இதையடுத்து சூழ்நிலைக்கேற்ப முடிவெடுத்து வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வதாக கூறும் அவருக்கு மலேசியர்கள் பலரும் வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்துள்ளனர். மலிண்டோ ஏர் விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் அஸ்ரின். கொரோனா பாதிப்பால் கடும் இழப்பைச் சந்தித்த அந்நிறுவனம் அண்மையில் ஆட்குறைப்பு நடவடிக்கையாக 2,200 ஊழியர்களைப் பணியிலிருந்து விலக்கியது. விமானிகள் முதல் தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் வரை பலர் பணியிழந்தனர். அவர்களில் கேப்டன் அஸ்ரினும் ஒருவர். கடந்த சில மாதங்களில் நடந்தவற்றைப் பார்த்த பிறகு நானும் எனது குடும்பமும் கடுமையாகப் பாதிக்கப்படுவோம் என்பதை நன்கு அறிந்திருந்தேன். குறிப்பாக பொருளாதார ரீதியில் பாதிப்பு இருக்கும் என்பது தெரிந்ததால் மாற்று வழிகளை சிந்திக்கத் தொடங்கினேன்.
கடந்த 2018ஆம் ஆண்டு அன்வய் நாயக் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ரிபப்ளிக் டிவி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட நிலையில் சிவசேனா ஆட்சியில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் காங்கிரஸ்- கோஸ்வாமி மோதல் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸார் அதிரடியாக கைது செய்தது தெரியவந்தது. அவரது வீட்டுக்குள் சென்று அவரை தரதரவென இழுத்து வந்து வேனில் ஏற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அவரது குடும்பத்தாரையும் தாக்கியதாகவே சொல்லப்படுகிறது.
இதையடுத்து அவர் அலிபாக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து நீதித் துறை தலைமை மாஜிஸ்திரேட் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
minnampalam :டோல்கேட்டுகளில் செல்லும்போது ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி கட்டணம் வாங்கும் முறையை மாற்றி, ஃபாஸ்டாக் முறை2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 7 ஆம் தேதி மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், 2021 ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“ 2017-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட நான்குசக்கர வாகனங்கள், எம் மற்றும் என் வகை மோட்டார் வாகனங்களில் பழைய வாகனங்களுக்கு 2021ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்படுகிறது. மத்திய மோட்டார் வாகன விதிகளில் இதற்காக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சகத்தின் சார்பில் 2020 நவம்பர் 6-ம் தேதியிட்ட ஜிஎஸ்ஆர் 690 (இ) என்ற ஆணையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழா போல் மகிழ்ச்சி
பாகிஸ்தானின் நெருங்கிய நண்பர் என்று ஜோ பிடனை அந்நாட்டு அரசியல் தலைவர்கள்
ஆரம்பம் முதலே பாராட்டி வந்துள்ளனர். கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளியை
சேர்ந்தவர், தமிழகத்தை சேர்ந்தவர் என்ற போதிலும், பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்
என்பதாகவே அவரது கடந்த கால செயல்பாடுகள் இருந்தன. எனவே இவர்கள் இருவரும்
அமெரிக்காவின் அதிபர், துணை அதிபராக பதவியேற்றால், பாகிஸ்தானின் கை ஓங்கும்
என்ற பேச்சு பரவலாக உள்ளது. அதற்கு ஏற்றார் போல் டிரம்ப் வெளியேற
இருப்பதை, பாகிஸ்தான் அரசும், மக்களும் அங்கு திருவிழா போல் கொண்டாடி
மகிழ்கிறார்கள்..
தான் வெற்றி பெற்றால் கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆக்கப்படுவார் என்று பைடன் அறிவித்தபோது, கமலா மீது இவ்வளவு கவனம் விழக் காரணம் அமெரிக்க துணை அதிபர் பதவியில் இதுவரை ஒரு பெண்ணோ, ஆப்ரிக்க-அமெரிக்க வம்சாவளியினரோ, ஆசிய-அமெரிக்க வம்சாவளியினரோ இருந்ததில்லை. அந்த வரலாற்றை மாற்றப் போகும் கமலா ஹாரிஸ் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில தகவல்களைப் பாப்போம்.
minnambalam.com :தமிழக வேளாண் துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த அக்டோபர் 31ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். சென்னையிலிருந்து பாபநாசம் கொண்டுசெல்லப்பட்ட அவரது உடல், சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே 300 கோடி ரூபாய் அளவுக்கான பணம் துரைக்கண்ணு தரப்பிடம் இருந்ததாகவும், அதனை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதத்தை பெற்றுக்கொண்ட பிறகுதான் மரண அறிவிப்பை வெளியிடவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.