இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு செல்வோம்.
அம்பேத்கரின் தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை கோரிக்கையை முறியடிக்கும்
பூனா ஒப்பந்தம் 1932-ல் கையெழுத்தானது. பிறகு காந்தி தலித் மக்களின்
அதிருப்தியை, அதை புரிந்து வைத்திருக்கின்ற அம்பேத்கரின் செல்வாக்கைக்
குறைக்க ரூம் போட்டு யோசிக்கிறார். இந்த யோசிப்பு ஒரு ஆதிக்க சாதி ஆசார
இந்து மனதின் வலிமையிலும், அதை அருளுகின்ற பௌதீக பொருளியல் வர்க்கங்களின்
அரவணைப்பிலிருந்தும் உருவாகிறது.
இப்படித்தான் “ஹரிஜன சேவா சங்கமும், ஹரிஜன் பத்திரிகை”யும் உதிக்கின்றன. இங்கே நாம் பார்க்கப் போவது இந்தப் பிரச்சினை குறித்தல்ல. ஊடக அறம் குறித்த காந்தியின் நடைமுறை பரிசோதனை ஒன்றுதான் இங்கு கருப்பொருள்.
ஆங்கிலத்தில் “ஹரிஜன்” பத்திரிகை ஆரம்பிக்க எத்தனை பிரதிகள் அச்சடிப்பது, நிர்வாகம் எப்படி செயல்பட வேண்டும், ஆசிரியர் குழு வேலைகள் என அனைத்தும் ஒரு பொன்மாலைப் பொழுதில் உற்சாகமாய் யோசிக்கப்பட்டு காந்தியால் வரைவுத் திட்டமாக முன்வைக்கப்படுகிறது.