குடிப் பழக்கத்தை கண்டித்ததால் அத்தையை கொன்று, சூட்கேசில் பிணத்தை அடைத்து, குப்பை கிடங்கில் போட்டு எரித்த மருத்துவக் கல்லூரி மாணவர் கைதனார்.
சென்னை போரூரை அடுத்த குன்றத்தூரில் ஒரு மைதானத்தில் நேற்று முன்தினம் குப்பை கிடங்கில் கருகிய நிலையில் பெண்ணி பிணம் கிடந்தது.
போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் கொலை செய்யப்பட்டு பிணம் எரிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதற்கிடையே போரூர் ஆனந்தா குடியிருப்பில் வசிக்கும் அப்ரூப் தாசரி (20) என்ற முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், தனது அத்தையை காணவில்லை என்று கூறியிருந்தார். போலீசார் அத்தையின் படத்தை கேட்டதற்கு, வீட்டிற்கு சென்று எடுத்து வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வரவே இல்லை.
இதையடுத்து போலீசார் அவரது வீட்டிற்குச் சென்றனர். சந்தேகத்தின்பேரில் வீட்டின் கதவை உடைத்து சோதனை போட்டபோது வீடு முழுவதும் ரத்தக்கறையுடன் துர்நாற்றம் வீசியது.
இதைத் தொடர்ந்து போலீசார் அப்ரூப்பை தேடினர். போரூர் ரவுண்டானா அருகே அவர் சிக்கினார். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது அப்ரூப், தானே தனது அத்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பிணத்தை எரித்தாக கூறினான். அவர் அளித்துள்ள வாக்குமூலம்:
எனது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் வாரங்கல் அருகே உள்ள பாபுபள்ளி. அப்பா சீனிவாசராவ், தாய் ரோமா. இருவரும் டாக்டர்கள். அமெரிக்காவில் வசிக்கின்றனர்.
நான் சென்னையில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கிறேன். முதலில் போரூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்தேன்.
என்னை கவனித்து கொள்ள ஊரில் இருந்து அத்தை தனுஜாவை (40) அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஆனந்தா குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்து நானும் அத்தையும் தங்கினோம்.
எனக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடித்து விட்டு வந்ததால் என் தந்தையிடம் அத்தை புகார் கூறினார். இதனால் அப்பா என்னை போனில் அடிக்கடி திட்டி வந்தார்.
இதனால் அத்தை மீது ஆத்திரம் ஏற்பட்டது. 5ம் தேதி இரவு வீட்டிற்கு வந்தேன். அப்போது அத்தை குடித்து விட்டு வீட்டுக்குள் வராதே என்று திட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த நான் காய்கறி வெட்டும் கத்தியால் அத்தையின் நெஞ்சில் குத்தினேன். அவர் கீழே விழுந்து அதே இடத்தில் இறந்தார்.
இதையடு்த்து அவரது உடலை சூட்கேசில் வைக்க முயன்றேன். அது முடியாமல் போகவே பெரிய சூட்கேசை வாங்கி வந்து அதில் பிணத்தை மடக்கி வைத்தேன். வரும் வழியிலேயே ஒரு பெட்ரோல் பங்கில் டீசல் வாங்கினேன்.
கால் டாக்சியை போனில் வரவழைத்து அதில் உடல் அடங்கிய சூட்கேஸ், டீசலுடன் குன்றத்தூர் சென்றேன். டாக்சியை அனுப்பி விட்டு அங்குள்ள குப்பைக் கிடங்கில் சூட்கேஸ் மீது டீசல் ஊற்றி தி வைத்தேன்.
பின்னர் வீட்டுக்கு வந்து வீட்டை சுத்தம் செய்தேன். மறுநாள் அத்தையை காணவில்லை என்று போலீசில் புகார் செய்தேன். ஆனால் மாட்டிக் கொண்டேன் என்று கூறியுள்ளான்.
இதையடுத்து அப்ரூப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.