பாகிஸ்தானில் கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறையாக மத்திய அமைச்சரவையில் இந்து ஒருவர் இடம்பெற்றுள்ளார்.
சிந்து மாகாணத்தை சேர்ந்த டாக்டர் தர்ஷன் லால், பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸியின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்பாஸி கடந்த வெள்ளிக்கிழமையன்று பதவியேற்றுக்கொண்டார்.
புதிய அமைச்சரவையில் அறிமுகமாகியிருக்கும் ஆறு புதுமுகங்களில் டாக்டர் தர்ஷன் லாலும் ஒருவர்.
பாகிஸ்தானின் பஞ்சாப், பக்துன்க்வா, சிந்து, பலுச்சிஸ்தான் ஆகிய நான்கு மாகாணங்களையும் ஒருங்கிணைக்கும் பணி தர்ஷன் லாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தர்ஷன் லால், 2013-இல் நவாஸ் ஷரீஃபின் பி.எம்.எல்-என் கட்சியின் சார்பில் சிறுபான்மையினருக்கான ஒதுக்கீட்டில் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டம், மீர்புர் மதெலோ நகரத்தில் வசிக்கும் 65 வயதான டாக்டர் தர்ஷன் லால், அங்கு மருத்துவராகப் பணிபுரிகிறார். 2018-இல் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் பொது தேர்தலை கவனத்தில் வைத்து, இந்த புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமைச்சரவை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக