ராதா மனோகர் : சென்ற வாரம் பிரான்ஸ் தலைநகரில் லாச்சப்பல் என்ற இடத்தில வைத்து ஒரு தமிழ் பெண் ( மலையக பூர்வீகம்) மீது படுமோசமான தாக்குதல் மிரட்டல் முட்டை வீச்சு இடம்பெற்றது.
தாக்குதல் நடத்தியவர்கள் எலி ஆதரவாளர்கள்!
அந்த பெண் டிக் டாக்கில் இயக்கம் பற்றி பல சுதந்திர கருத்துக்களை கொஞ்சம் காரமாகவே தொடர்ந்து முன் வைத்திருக்கிறார்.
இதுவரையில் அந்த பெண்ணின் டிக் டொக் பற்றியோ அல்லது அவரை பற்றியோ தெரியாதவர்களுக்கும் இப்போது தெரியவந்துள்ளது
ஆயிரக்கணக்கில் அவருக்கு பின் பற்றாளர்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்
இனி அவருக்கு இலட்சக் கணக்கான பின்பற்றாளர்கள் கிடைப்பார்கள்!
அந்த அளவுக்கு அவர் உலக அளவில் பிரபலமாகி விட்டார்
இப்போது கிடைத்திருக்கும் விளம்பரத்தை அந்த பெண் இனி ஆக்கபூர்வமான விடயங்களுக்கு பயன் படுத்தலாம்.
இவருக்கு கிடைத்திருக்கும் வெளிச்சம் சாதாரணமானது அல்ல.
இந்த வகையில் இவர் இந்த தாக்குதல் மூலம் கிடைத்த மன உளைச்சலை வெற்றி கொள்ளலாம்.
சனி, 6 ஏப்ரல், 2024
France பாரிஸ் நகரில் மலையக தமிழ் பெண் மீது புலியாதரவாளர்கள் தாக்குதல் - முட்டை வீச்சு!
கமலஹாசன் : சர்வாதிகாரத்தை திருப்பி திருப்பி அடித்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
நக்கீரன் : 'திருப்பி திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்'-கமல்ஹாசன் பேச்சு
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்பில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் திமுகவின் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார்.
விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்
மாலைமலர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இதற்காக வேட்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னதாகவே வருகை தந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகைக்கு காத்திருந்தனர். நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதற்கு முன்பு மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ. புகேழந்தி மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதல் உதவி செய்தனர்.
உடலில் பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதல் மனிதர் - BBC News தமிழ்
BBC News தமிழ் Massachussets General Hospital
உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 62 வயதான அந்த நபருக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம், அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
அவர் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் (MGH) இரண்டு வாரங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ உலகில் புதிய சாதனையாகக் கருதப்படும் இந்த சிகிச்சை முடிந்து அவர் கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 3) வீடு திரும்பினார்.
மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உறுப்புகள் மனிதர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுவது கடந்த காலங்களில் தோல்வியடைந்தது.
மாநில உரிமைகள்…காங்கிரஸ் தேர்தல் அறிக்கை…வரலாறு மாறியது எப்படி?
சுதந்திர இந்தியாவில் அரசியலமைப்பு சாசனம் உருவான காலம் தொட்டு மாநிலங்களின் அதிகாரத்தினைப் பறித்து வருவதாக கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட கட்சி காங்கிரஸ்.
பாராளுமன்றத்தை அதிரவைத்த அண்ணா
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் தனிநாடு கேட்டு முழக்கமிட்டதும், மாநில சுயாட்சி என்று ஓங்கி ஒலித்ததும் காங்கிரசின் ஆட்சியை எதிர்த்துத் தான். முதல்முறையாக பாராளுமன்றத்தில் நுழைந்தபோது நான் திராவிட நாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்று பேசி பாராளுமன்றத்தையே அதிர வைத்தார் பேரறிஞர் அண்ணா. மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுவதை எதிர்த்து பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த முதல் குரல் அண்ணாவுடையது.
வெள்ளி, 5 ஏப்ரல், 2024
முதல்வர் ஸ்டாலினிடம் சோனியா காந்தி சிதம்பரம் மூலம்சொல்லிய முக்கிய செய்தி
மின்னம்பலம் -Aara : ஸ்டாலினுக்கு சோனியா அனுப்பிய முக்கிய மெசேஜ்!
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் சிதம்பரம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த புகைப்படம் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
“முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் நேற்று (ஏப்ரல் 4) மாலை மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
அதற்கு முன்பாக நேற்று பகல் அமைச்சர் சேகர்பாபுவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார் சிதம்பரம். அமைச்சர் சேகர்பாபு சில நிமிடங்கள் இருந்து விட்டு வெளியே வந்து விட, ஸ்டாலினும் சிதம்பரமும் தன்னந்தனியாக 10 நிமிடங்கள் ஒருவருக்கொருவர் முக்கியமான விஷயங்கள் பற்றி விவாதித்து இருக்கிறார்கள்.
வாட்ஜ் பேங்க்: கச்சத்தீவுக்கு பதிலாக இந்தியா பெற்ற 6,500ச.கி.மீ நிலப்பகுதியில் என்ன இருக்கிறது?
பிபிசி முரளிதரன் காசிவிஸ்வநாதன் - பிபிசி செய்தியாளர் : காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சத்தீவை இலங்கைக்கு தந்துவிட்டதாக பா.ஜ.க. குற்றம்சாட்டிவரும் நிலையில், அதற்குப் பதிலாக முக்கியத்துவம் வாய்ந்த 'Wadge Bank' பகுதியை பெற்றதாக காங்கிரஸ் கூறியிருக்கிறது. இந்த Wadge bank பகுதி எங்கே இருக்கிறது? இதன் முக்கியத்துவம் என்ன?
1974ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக் நீரிணை பகுதியில் எல்லையை வகுக்கும்போது, கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டதாக பா.ஜ.க. குற்றம்சாட்டி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பா.ஜ.கவின் பெரும்பாலான தலைவர்கள் இந்த விவகாரத்தை முன்னிறுத்திப் பேசிவருகின்றனர்.
வியாழன், 4 ஏப்ரல், 2024
மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு
நக்கீரன் : நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில்,
முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன.
கச்சத்தீவு ஸ்ரீமாவோ - இந்திரா காந்தி - Smiling Buddha -- அணு குண்டு!
ராதா மனோகர் : கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றிய புரிந்துணர்வுக்கு சில விடயங்களை ஆழமாக ஆய்ந்து பார்ப்பது அவசியம்.
குறிப்பாக தெற்கு ஆசியாவில் இலங்கையின் வகிபாகம் பற்றிய வரலாறு பற்றிய ஆய்வும் முக்கியமான தொன்றாகும்!
இலங்கை ஒரு சிறிய நாடக இருந்தாலும் அது பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது.
அதன் பழைய வரலாறும் சரி அண்மைக்கால வரலாறும் சரி நுட்பமாக கவனிக்க தக்கது
குறிப்பாக தெற்காசிய பிராந்தியத்தின் முக்கியமான ஒரு தளமாக காலனித்துவ காலங்களிலும் சரி இன்றும் சரி இலங்கை விளங்குகிறது.
இந்த கோணத்தில் சில விடயங்களை பாப்போம்!
இந்துமாக்கடல் பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை சுதந்திரம் அடைந்த காலங்களில் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளது.
May 1954 இல் தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு கொழும்பில் நடந்தது
அந்த மாநாட்டில் இலங்கை பிரதமர் சேர் ஜான் கொத்தலாவலை *Sri Lanka’s Prime Minister Sir John Kotelawala) அவர்கள் இது பற்றி கூறுகையில்:
உலகில் பெரும் நாசத்தை விளைவிக்க கூடிய அணு ஆயுத போட்டி பற்றி ஊடகங்களை இருட்டடிப்புக்களையும் தாண்டி சில கவலைக்குரிய செய்திகளை அறிகிறோம்.
உலக மக்களின் கரிசனையை மனதில் கொண்டு அமெரிக்கா ரஷியா பிரித்தானிய போன்ற நாடுகள் இது பற்றிய செய்திகளை வெளிப்படையாக கூறவேண்டும் என்று வலியுறுத்தினார்
1958 ஆம் ஆண்டு ஐநாவில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட அமைச்சர் டி பி சுபாசிங்கா இது பற்றி ஐநாவில் பேசும்பொழுது : “For all countries, whether large or small, has a right to protest against policies which endangered their very existence”
சிறிய நாடுகளாக இருந்தாலும் பெரிய நாடுகளாக இருந்தாலும் தங்களின் இருப்புக்கு சவாலாக இருக்க கூடிய திட்டங்களை எதிர்க்கும் உரிமை உண்டு என்று குறிப்பிட்டார்.
புதன், 3 ஏப்ரல், 2024
62 சதவீத தனியார் சைனிக் பள்ளிகள் சங்பரிவார், பாஜக , மற்றும் இந்துத்வ அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாம்.
Vasu Sumathi : மாணவர்களை இந்திய ராணுவத்தில் சேரத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கடந்த 1961-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் சுமார் 33 சைனிக் பள்ளிகள் கட்டப்பட்டு ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வந்தது.
இந்த சூழலில், கடந்த 2021-ல் புதிய கொள்கை ஒன்றை உருவாக்கிய ஒன்றிய அரசு,
தனியார் பங்களிப்போடு நாடு முழுவதும் மேலும் 100 புதிய சைனிக் ராணுவப் பள்ளிகள் அமைக்க திட்டமிட்டது.
அந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 40 தனியார் பள்ளிகளுடன் சைனிக் பள்ளிகளை அமைக்க ஒன்றிய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இவர்கள் ஏதாவது புதிய திட்டம் என்றாலே இதில் மக்கள் நலம் இருக்காது. அவர்கள் மக்கள் நலம்தான் பிரதானமாக இருக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே.
கச்சத்தீவு - ப சிதம்பரம் : அந்நாட்டில் 35 லட்சம் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தினமணி : புது தில்லி, ஏப். 2: கச்சத்தீவு பற்றி உண்மைக்குப் புறம்பான மற்றும் ஆக்ரோஷமான அறிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டு இலங்கையில் வாழும் 35 லட்சம் தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்க வேண்டாம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு விவகாரம் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு காங்கிரûஸயும் திமுகவையும் பிரதமரும், பாஜக தலைவர்களும் திங்கள்கிழமை விமர்சித்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்வினையாற்றியிருந்தது.
Resources of the Wadge bank and pedro bank! By A.S.Mendis! இலங்கை இந்திய கடலும் மீன் வளமும் . வாட்ஜ்ஜெ பாங் பெட்ரா பாங்
Resources of the Wadge bank and pedro bank! By A.S.Mendis.
CEYLON’S interest in trawler fishing dates back to 1902
(Fisheries Research Station , Colombo 3, Ceylon )
Introduction
CEYLON’S interest in trawler fishing dates back to 1902/ when a Colombo merchant attempted to operate a trawler off Ceylon waters.
The next attempt was made in 1907.
These attempts did not proceed any further.
Between 1920 and 1923 a very comprehensive survey of the littoral waters around Ceylon was carried out.
One of the principal aims of the survey was to investigate the possibility of trawler fishing in the seas around Ceylon.
Malpas (1926) and Pearson and Malpas (1926) reporting the results of the survey indicated that the Wadge and Pedro banks were the only areas available to Ceylon for commercial trawler operations and indicated that the fish resources in the two banks could be profitably exploited.
Commercial exploitation of the Wadge bank commenced in 1928 and a fishery is now firmly established in the bank.
ராஜீவ் காந்தி கொலையாளிகள் முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமார் கொழும்பு வந்தனர்
hirunews.lk : இலங்கையை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமார்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கையை வந்தடைந்தார்கள்.
UL-122 என்ற விமானத்தில் இலங்கையை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புத்தூரில் வைத்து கொல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரொபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார், முருகன், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்கு பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தைவானில் 7.4 சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!
தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கி உள்ளன. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
யாழில் வாள் வெட்டு – 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
வீரகேசரி : யாழில் வாள் வெட்டு – 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் 22 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
தாக்குதல்களுக்கு இலக்காகி காயங்களுடன் திடீரென 22 பேர் வைத்தியசலையில் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குள் அனுமதிக்கப் பட்டமையால் , வைத்தியர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் உதவிக்கு வந்தவர்கள், வைத்தியசாலையினுள்ளும் மோதல் போக்குடன் காணப்பட்டதுடன், மோதலில் ஈடுபடவும் முயன்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கச்சத்தீவை மீட்டால் கன்னியாகுமரி கொல்லம் ஆழ்கடல் மீன்பிடிப்பு Wedge bank பகுதியை இலங்கைக்கு திருப்பித்தரவேண்டும்.
Seetha Ravi Suresh : கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்டால், கன்னியாகுமரி முதல் கொல்லம் வரையிலான மீனவர்களின் தொழில் ஆதாரமான ஆழ்கடல் மீன்பிடிப்பு Wedge bank பகுதியை இலங்கைக்கு திருப்பித்தரவேண்டும்.
அப்படி நடந்தால், சுமார் ஒன்றரைகோடி தமிழ்நாடு மற்றும் கேரள மீனவர்கள் மற்றும் மீன்பிடி கம்பெனிகள் பாதிக்கப்படுவர்.
அதுவே இந்துத்வாவின் அடுத்த திட்டமாகும்.
ஏனென்றால், தூத்துக்குடி மாவட்டம் கடலாடி முதல் கொல்லம் வரையிலான மீனவர்களில் நூற்றுக்கு 99% கிறிஸ்த்துவர்கள்.
அது மட்டுமல்லாமல் மதரீதியாக பணவசதிமிக்க ஆர்சி சர்ச்சுகளின் மக்கள். Resources of Wadge and Pedro banks
இந்தப்பகுதிகளில் இந்துங்கிற பெயரில் மயித்தைக்கூட நீட்டமுடியாது!
வெட்டி கடலுக்குள்ளே வீசிருவானுக.
இந்த கரையோர மீனவர்களின் சாதிரீதியான எதிரிகள் யாரென்றால், அது பொன் ராதா குரூப்புதான்.
பொன்ராதா கலவரம் நடந்தேதீரும்னு சொல்றதுக்கும் இதற்கும் தொடர்புண்டு.
அதனால், கச்சத்தீவு பிரச்சனையை தேர்தல் நேரத்தில கிளப்புறதுக்கு சங்கிகளுக்கு திடீர்னு புத்திவர காரணம்.
நம்ப நாட்டாமை கோஷ்டி மற்றும், சினிமாக்கார பாஜகவினர்தான் என்பதை,
அண்ணாமலை ஆர்டிஐ தகவல் விஷயத்தில் சொன்ன பொய்பித்தலாட்டத்தை வைத்தே சொல்லிவிடலாம்.
மீனவர்களே சங்கிகளிடம் சாக்கிறதையாக இருங்கள்.
*ஏப்ரல் – 3 – 1973 -முதல் செல்போன் வடிமைத்த தினம்! தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
Venkatesan Gangatharan : *தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*! *ஏப்ரல் – 3 – 1973 -முதல் செல்போன் வடிமைத்த தினம்!
உலகின் முதலாவது கைபேசி அழைப்பை நியூயோர்க் நகரில் மோட்டோரோலா நிறுவனத்தின் மார்ட்டின் கூப்பர் பெல் ஆய்வுகூடத்தின் ஜொயெல் ஏங்கல் என்பவருக்கு மேற்கொண்ட தினம்*
கடந்த 1973, ஏப்ரல் 3-ம் தேதி அன்று தான் வடிவமைத்த உலகின் முதல் கைபேசியை கொண்டு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டிருந்தார் அமெரிக்க பொறியாளர் மார்ட்டின் கூப்பர்.
இவர் செல்போனின் தந்தை என அறியப்படுகிறார். அதன் பிறகு சுமார் 10 ஆண்டு காலம் தனது குழுவினருடன் இணைந்து அதற்கு இறுதி வடிவம் கொடுத்தார்.
செவ்வாய், 2 ஏப்ரல், 2024
விவிபேட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங். வரவேற்பு!
தினமணி : மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அருண்குமார் அகர்வால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள ‘விவிபேட்’ இயந்திரங்களில் துண்டுச் சீட்டாக விழும் ஒப்புகைச் சீட்டுகளையும், தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும் போது, எண்ண வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்.
வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்கை பதிவு செய்தவுடன், அதுதொடா்பான சின்னம் அருகிலுள்ள ‘விவிபேட்’ இயந்திரத்தில் துண்டுச் சீட்டாக 7 விநாடிகள் தெரியும். பின்னா், அந்த துண்டுச் சீட்டு ‘விவிபேட்’ இயந்திரத்தின் உள்ளேயே விழுந்து விடும். வாக்கு எண்ணிக்கையின்போது, ‘விவிபேட்’ இயந்திரத்தில் விழும் துண்டுச் சீட்டுகளையும் ஒப்பிட்டு எண்ண வேண்டுமென தோ்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சியினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
கச்சத்தீவை திரும்ப தருமாறு இந்தியா கோரிக்கை எதுவும் விடுக்கவில்லை - ஜீவன் தொண்டமான் இலங்கை அமைச்சர் விளக்கம்
தினகரன் : கொழும்பு: கச்சத்தீவை பொறுத்தவரை இலங்கையின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கைக்கு கச்சத்தீவை இந்திரா காந்தி தாரை வார்த்து விட்டதாக பாஜ குற்றம் சாட்டி வருகிறது.
தேர்தல் காலத்தில் கச்சத்தீவை அரசியல் ஆக்க பா.ஜ.க நாடகமாடி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மக்களவை தேர்தல் சமயத்தில் கச்சத்தீவு விவகாரத்தை பிரதமர் மோடி மீண்டும் கிளப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கச்சத்தீவை மீட்கும் பணிகளை இந்திய அரசு தொடங்கி உள்ளதாக அண்ணாமலை கூறிய நிலையில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்; கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் அனுப்பவில்லை.
யாழில் குடும்பமாக பிச்சை எடுத்து நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் உழைத்து கொழும்பில் வீடு கட்டும் கில்லாடி குடும்பம்!
வம்பன் : பாத்திரமறிஞ்சு பிச்சையிடு எண்டு முந்தின ஆக்கள் சொல்லுறது இப்பவும் பொருத்தமாத்தான் இருக்குது. நாலைஞ்சு நாளுக்கு முதல் யாழ்ப்பாணத்தில மூண்டு சந்தியளில ஒவ்வொரு சின்னப்பிள்ளையள் நிண்டுகொண்டு போறவாற ஆக்களிட்ட பிச்சை கேட்டிருக்கினம்.
பத்தியெரியிற இந்த வெயிலுக்குள்ள பச்சைப்பிள்ளையள் பிச்சை கேட்டால் எல்லாருக்கும் இரக்கம் வரும்தானே. அதால அந்தச் சந்தியால போறவாறவையெல்லாம் பார்த்துப் பாராமல் அந்தப் பிள்ளையளுக்குக் காசைப் போட்டிட்டு போயிருக்கினம்.
ஆனால் ஆரோ ஒரு புண்ணியவான் ‘சின்னப்பிள்ளையளை வைச்சு பிச்சை எடுக்கினம்’ எண்டு பொலிஸுக்குப் போட்டுக்குடுக்க, அந்தப்பிள்ளையளை அப்பிடியே அள்ளிக்கொண்டுபோய் விசாரிச்சிருக்கு பொலிஸ்.
பாஜகவுக்கு மம்தா சவால்! - முதலில் 200-ஐ தாண்டுங்கள் பார்க்கலாம்
அதன்படி நேற்று திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் கிருஷ்ணா நகர் தொகுதி வேட்பாளர் மஹுவா மொய்த்ராவுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சீன விவகாரத்தை திசை திருப்பவே மோடி கச்சத்தீவு பிரச்சினையை எடுக்க காரணமே - டிஆர்பி ராஜா
tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: கச்சத்தீவு விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் டிஆர்பி ராஜா, சீன விவகாரத்தை திசை திருப்பவே பிரதமர் மோடி, கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்து இருப்பதாக சாடியுள்ளார்.
தழிழக பாஜக தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்களைப் பகிர்ந்து இருந்தார். அதைப் பிரதமர் மோடியும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
அதில், " சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் கொடுக்க போவது இல்லை. கச்சத்தீவு உரிமையை விட்டுக்கொடுப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை" என்று அப்போதைய பிரதமர் நேரு கூறியது இடம்பெற்றிருந்தது.
திங்கள், 1 ஏப்ரல், 2024
ஜனாதிபதிக்கு அவமரியாதை... பெண் என்பதாலா? பழங்குடி என்பதாலா? : தலைவர்கள் கண்டனம்!
மின்னம்பலம் - christopher : அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கும்போது குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவமதிக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நாட்டில் சமுதாய வளர்ச்சிக்காக தொண்டாற்றியவர்களை கெளரவிக்கும் விதமாக மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ் மற்றும் சரண் சிங், பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதன், மறைந்த முன்னாள் பீகார் மாநில முதலமைச்சர் கர்பூரி தாக்கூர், பாஜக தலைவராகவும் துணை பிரதமராகவும் பணியாற்றிய எல்.கே.அத்வானி ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
மது அருந்தும் போட்டியில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு! ஹட்டன் மலையகம்
தினகரன் : மது அருந்தும் போட்டியில் வெல்வதற்காக அதிகளவு மது அருந்திய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். இப்போட்டி, ஹற்றன் லெதண்டி தோட்டத்தில் இடம்பெற்றது.
ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெதண்டி தோட்டத்தின் மால்ப்ரோ பிரிவில் வசிக்கும் கணேசன் இராமச்சந்திரன் என்ற 39 வயதுள்ள மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தோட்டத்திலுள்ள ஆலயத்தில் (27) வருடாந்த தேர் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளைஞர்கள் சிலர் அதிகளவு மது அருந்துபவர்களை தெரிவு செய்யும் போட்டியை நடத்தியுள்ளனர்.
அதே தோட்டத்தில் வசிக்கும் 03 பேர் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 750 மில்லிலீற்றர் மது போத்தல்கள் மூன்று வழங்கப்பட்டுள்ளன.குறைந்த நேரத்தில் மது போத்தல் மூன்றையும் அருந்துபவரை வெற்றியாளராக தேர்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
ஞாயிறு, 31 மார்ச், 2024
டெல்லியில் ஒன்று கூடிய 'இந்தியா' கூட்டணி தலைவர்கள்! ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான பேரணி'
டெல்லியில் ஒன்றுகூடிய ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் - என்ன பேசினர்?
டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் பேரணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பேரணிக்கு ‘ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான பேரணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பேரணி நடத்தப்படுகிறது. இந்தப் பேரணியில், மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், சரத் பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், திமுக சார்பில் திருச்சி சிவா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனும் கலந்துகொண்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம்சாட்டிய சிறிசேன!!
வீரகேசரி : முன்னாள் ஜனாதிபதியின் புதிய சகாவே இந்த குற்றச்சாட்டிற்கு காரணமா?,
என அரசாங்கம் விசாரணை!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கிய வேளை,
உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னணியில் இந்தியாவே உள்ளதாக தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சண்டே டைம்ஸ்,
மைத்திரிபால சிறிசேனவுடன் சமீபத்தில் இணைந்துகொண்டுள்ள நபர் ஒருவரே இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளரா என அரசாஙகமட்டத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளது
இது குறித்து சண்டேடைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது
கடந்தகாலங்களில் வெளியான விடயங்களை தலைகீழாக மாற்றும் விதத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றை மாற்றியமைக்கும் விதத்தில்,
புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதிமுக ஒரு திராவிட கட்சியாக உருவாகியதா? தடுமாற்றம் எங்கே நிகழ்ந்தது ? நடுநிலை ஆய்வு கட்டுரை
Isaiamudhan Amudhan : என் சிறுவயதிலிருந்து நான் கவனித்து வந்தது.
ஆரம்ப கால திமுகவில் படித்தவர்கள், படிக்காதவர்கள், அரசியல் அறிவு பெற்றோர், அவ்வளவு தெளிவில்லாத பாமரமக்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இருந்தனர்.
பெரியாரின் வழி வந்து, அண்ணாவால், அண்ணாவின் கொள்கையால் கவரப்பட்டு, கலைஞரால் ஈர்க்கப் பட்டவர்கள் என்று,
படித்தவர்கள் , மற்றும் படிக்காத, ஆனால் அரசியல் தெளிவு பெற்ற மக்கள் என ஒரு பிரிவு.
திமுகவில் பாமர மக்களிடையே வாக்கரசியலில் மக்களைக் கவர எம்ஜியாரை உபயோகப் படுத்தியதால்,
சினிமாக் கவர்ச்சியால் ரசிகர்களாக மாறியிருந்தவர்களும், (பெரும்பாலும் இவர்கள் கல்வி அறிவற்ற பாமர மக்கள்.
மதுரை வீரனைப் பார்த்துக் குலசாமியாக ஏற்றுக் கொண்டவர்கள்.
விவசாயி, தொழிலாளி, படகோட்டி etc. பார்த்துத் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டவர்கள். சினிமா கதாபாத்திரத்தை நிஜம் என்று நம்பியவர்கள்)
மற்றும் படித்து, கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தாலும், அவ்வளவாக அரசியல் தெளிவு இல்லாதவர்கள் என
இப்படி ஒரு இரண்டாம் பிரிவினரும் இருந்தனர்.
திமுகவிலிருந்து எம்ஜியார் பிரிந்து, தனிக்கட்சி தொடங்கியபோது, இந்த முதல் பிரிவினர் யாரும் அவர் பின் போகவில்லை.
ஆனால் இந்த இரண்டாம் பிரிவினர் எம்ஜியாருடன் போய் விட்டனர்.
இதுவல்லாமல் எம்ஜியாருடன் இணைந்த இன்னொரு முக்கியப் பிரிவினர உண்டு.
தமிழகத்தில் 120 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்கள் 55 பேர்- 90 முதல் 99 வயதுடையவர்கள் 2 லட்சத்து ஆயிரம
தந்தி டிவி : தமிழகத்தில், 60 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 24 லட்சமாக உள்ளதாக தேர்தல் ஆணையத்தின் தரவுகள் கூறுகிறது.
60 முதல் 69 வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை 71 லட்சத்து 64 ஆயிரமாக உள்ளது.
70 முதல் 79 வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 66 ஆயிரமாக உள்ளது.
80 முதல் 89 வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 38 ஆயிரமாக உள்ளது.
90 முதல் 99 வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து ஓர் ஆயிரமாக உள்ளது.
100 முதல் 109 வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 368ஆக உள்ளது.
110 முதல் 119 வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை 114ஆக உள்ளது. 120 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 55ஆக உள்ளது.
தமிழக வாக்காளர் எண்ணிக்கை உயர்வு- 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 !
சென்னை,
கடந்த ஜனவரி 22-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி, தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதன் பின்னரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றையெல்லாம் சரிபார்த்து பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.
கடந்த வாரத்தில், தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 ஆக இருந்தது. அதில், ஆண்கள் 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367; பெண்கள் 3 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 69; மூன்றாம் பாலினத்தவர் 8,465 என இருந்தது. தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
ED க்கு மோடியின் அவசர அசைன்மென்ட்- அலர்ட் ஸ்டாலின்
minnambalam.com - Aara : “ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மார்ச் 30 ஆம் தேதி வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம். இதுவரை ஆங்காங்கே செயல் வீரர்கள் கூட்டம் நிர்வாகிகள் சந்திப்பு என்று நடத்திக் கொண்டிருந்த வேட்பாளர்கள் நாளை முதல் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்குகிறார்கள்.
இந்த நிலையில்தான்… தமிழ்நாடு தேர்தல் களம் எப்படி இருக்கிறது, தமிழ்நாட்டில் பாஜகவின் நகர்வுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன என்பதையெல்லாம் அடிக்கடி ரிப்போர்ட்டாக கேட்டு தெரிந்து கொள்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் இருந்து, பாஜக கூட்டணிக்கு எத்தனை எம்பிக்கள் கிடைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் அடிக்கடி தமிழ்நாடு குறித்த அப்டேட்டுகளை கேட்டு பெறுகிறார் மோடி.
அந்த வகையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும் பணத்தை அள்ளி இறைப்பதற்கு திட்டமிடுகிறார்கள் என்று பிரதமருக்கு லேட்டஸ்ட் ரிப்போர்ட் சென்றிருக்கிறது.