சனி, 9 அக்டோபர், 2021

கடலூர் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல்: ரமேஷிடம் ராஜினாமா வாங்கிய ஸ்டாலின்

கடலூர் மக்களவைத்  தொகுதிக்கு இடைத்தேர்தல்: ரமேஷிடம் ராஜினாமா வாங்கிய ஸ்டாலின்

மின்னம்பலம் : கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக எம்பியான ரமேஷ் தனது முந்திரி தொழிற்சாலையில் பணியாற்றிய கோவிந்தராஜ் என்ற தொழிலாளியை அடித்துக் கொன்றதாக கொலை வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இதையடுத்து அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பிவிட்டார்.
இந்த விவகாரத்தில் மின்னம்பலம் ஊடகம் மட்டுமே ஆரம்பம் முதல் தொடர்ந்து உண்மைகளை புலனாய்வு செய்து வாசகர்களுக்கு தெரிவித்து வந்திருக்கிறது.
கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி இரவு நடந்த சம்பவத்தின் அடிப்படையில் 20 ஆம் தேதி காலை கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் காவல் நிலையத்தில், “எனது தந்தை கோவிந்தராஜை திருட்டு பட்டம் சுமத்தி முந்திரி ஆலை உரிமையாளர் ரமேஷ் எம்.பி. உள்ளிட்டோர் தாக்கியதில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். எனவே எம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் கொடுத்தார்.

கிளிநொச்சி.. .அப்பளம் சாப்பிட்ட சிறுமிக்கு சூடு வைத்த தாய்

Tamilmirror Online || அப்பளம் சாப்பிட்ட சிறுமிக்கு சூடு வைத்த தாய்

tamilmirror.lk : கிளிநொச்சி – அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் விநாயகர் குடியிருப்பு பகுதியில் சிறுமிக்கு நெருப்பால் சூடு வைத்த தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாயார் நேற்றைய தினம் சமைத்துக்கொண்டு இருக்கும் போது, அப்பளம் வாங்கி வருமாறு மகளிடம் கூறியுள்ளார்.
அப்பளத்தை வாங்கிய சிறுமி அதை பச்சையாக உட்கொண்டுள்ளார். இதன் காரணத்தினால் ஆத்திரமடைந்த 5 வயதுச் சிறுமி வாயில் நெருப்பால் சுட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தை அவதானித்த சிறுமியின் தாத்தா அக்கராயன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

72 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேர விண்ணப்பிக்கவில்லை

மாலைமலர்  : சிறப்பு மற்றும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில் மாணவர் சேர்க்கை குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழ்நாடு  பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த இரு வாரங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. சிறப்பு மற்றும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில் மாணவர் சேர்க்கை குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதில் 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேர விருப்பம் தெரிவிக்கவில்லை என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 31 கல்லூரிகளில் ஒரு சதவீதத்திற்கும் கீழ் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.

கவிஞர் பிறைசூடன் 1,000 திரைப்பட பாடல்கள்... 5,000 பக்திப் பாடல்கள் - பல டப்பிங் படங்களின் வசனங்கள்

 Arsath Kan  -   Oneindia Tamil :  சென்னை: திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார்.
அவருக்கு வயது 65.    1985-ம் ஆண்டு எம்.எஸ். விஸ்வநாதன் மூலம் திரைத்துறைக்கு அழைத்து வரப்பட்ட இவரது பூர்வீகம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆகும்.
சென்னையில் வசித்தாலும் சொந்த ஊரான நன்னிலம் மீது அதிகம் பாசம் வைத்திருந்தார் கவிஞர் பிறைசூடன்.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப்பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்ட இவர், காஞ்சி மஹா பெரியவரின் தீவிர பின்பற்றாளர். மஹா பெரியவா என்ற தலைப்பில் அவரை பெருமைப்படுத்தும் நோக்கில் கவிதை தொகுப்பு ஒன்றை இவர் வெளியிட்டிருக்கிறார்.

வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

மாலைமலர் : சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு
நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை.
தற்போது தடை நீக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். அதன்படி அவர் நடிக்க உள்ள புதிய படத்தை சுராஜ் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்ற அறிவிப்பு கடந்த மாதமே வெளியானது.
இந்நிலையில், அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்திற்கு ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என தலைப்பு வைத்துள்ளனர். 

நீட் தேர்வு குறிதது ஏ.கே.ராஜனின் அறிக்கை தமிழ், இந்தி, மலையாளம்,பெங்காலி, கன்னடம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 7 மொழிகளில் மொழிபெயர்ப்பு!

ஏ.கே.ராஜனின் அறிக்கை 7 மொழிகளில் மொழிபெயர்ப்பு!

மின்னம்பலம் : நீட் தேர்வு தாக்கம் குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனின் அறிக்கை தமிழ்,இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், மாற்றுவழி குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக கடந்த ஜூன் 10ஆம் தேதியன்று ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
இக்குழு, நான்கு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, நீட் தேர்வு தொடர்பான தகவல்களை திரட்டியும், பொதுமக்களிடம் கருத்து கேட்டும், ஆய்வுகளை மேற்கொண்டது.

கொலை வழக்கு: அதிகாலையில் ஐவர் கைது- திமுக எம்பி தலைமறைவு!

கொலை வழக்கு: அதிகாலையில் ஐவர் கைது- திமுக எம்பி தலைமறைவு!

  மின்னம்பலம் : கடலூர் திமுக எம்பி ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி கம்பெனியில் வேலை செய்த தொழிலாளி கோவிந்தராஜ் இறந்துபோன வழக்கைத் தீவிரமாக விசாரித்து வரும் சிபிசிஐடி இன்று (அக்டோபர் 9) அதிகாலை முக்கியமான கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சந்தேக மரணம் என்று வழக்குப் பதியப்பட்டிருந்ததை மாற்றி கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி ஐந்து பேரை கைது செய்துள்ளது;
இந்த விவகாரம் தொடர்பாக மின்னம்பலத்தில் தொடர் புலனாய்வு செய்திகளை நாம் வெளியிட்டு வரும் நிலையில், நம் செய்தியில் குறிப்பிட்டவர்களையே கைது செய்துள்ளது சிபிசிஐடி.  அந்த செய்தியில், “செப்டம்பர் 20 ஆம் தேதி, காடாம்புலியூர் காவல்நிலையத்தில் மரணம் அடைந்த கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் தன் தந்தையை எம்பி ரமேஷ் உள்ளிட்டவர்கள் தாக்கிய கொலை செய்துவிட்டார்கள் என்று புகார் கொடுத்தார். ஆளுங்கட்சி எம்பி மீதான புகார். அதுவும் கொலைப் புகார் என்பதால் காடாம்புலியூர் காவல்நிலைய போலீஸார் உடனடியாக கடலூர் மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசனுக்குத் தகவல் அனுப்பினார்கள். 

ஆப்கானிஸ்தான் மசூதி தொழுகையின்போது தற்கொலை குண்டு தாக்குதல் - 50 பேர் பலி ! ... ஷியா முஸ்லிம்கள் மீது ISIS குறி?

சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த மசூதி ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட தாக்குதல்.

BBC :  சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த மசூதி ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட தாக்குதல்.
சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த மசூதி ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட தாக்குதல்.
ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த மசூதி ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மூன்று அதிஷ்டசாலிகளுக்கு 40 இன்ச் எல்.இ.டி டி.வி...மாவட்ட நிர்வாகம் முடிவு!

 40-inch LED TV for corona vaccinators ... District administration decides!

நக்கீரன் - ராஜ்ப்ரியன்  :   40-inch LED TV for corona vaccinators ... District administration decides!
கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து அரசு துறைகளையும் இணைத்து தடுப்பூசி விழிப்புணர்வும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான அவசியத்தையும் வலியுறுத்தி தடுப்பூசி போடப்படுகின்றன.
வீடு வீடாக சென்றும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
வடக்கு மற்றும் தென்னாற்காடு மாவட்டங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பின்தங்கியே உள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கென பரிசுகள், பொருட்கள் எல்லாம் வழங்கப்பட்டுவருகின்றன.

வெள்ளி, 8 அக்டோபர், 2021

செந்தில்பாலாஜியின் உள்ளாட்சி தேர்தல் பட்ஜெட்டால் அதிர்ந்து போன துரைமுருகன்

செந்தில்பாலாஜி பட்ஜெட்: அதிர்ந்து போன துரைமுருகன்

மின்னம்பலம் : ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அமைச்சர்களுக்கென ஒவ்வொரு மாவட்டத்தை, சட்டமன்றத் தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்து பொறுப்பாளராக்கினார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின். அந்த வகையில் வேலூர் மாவட்டத்தை உள்ளடக்கிய
காட்பாடி மற்றும் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை நியமித்தார்.
திமுக பொதுச் செயலாளரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் காட்பாடி தொகுதி அடங்கிய மாவட்டம் இது என்பதால் செந்தில்பாலாஜிக்கு பொறுப்பு இன்னும் கூடுதலானது. இதற்கு இன்னொரு பின்னணியும் உண்டு. ஏனென்றால் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பணப் பட்டுவாடாவால் தள்ளி வைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5 ஆம் தேதி நடந்தது. ஆனால் அப்போது துரைமுருகன், தன்னிடம் செலவழிக்க பணம் போதுமான அளவில் இல்லை என்று சொல்லிவிட்டதால் தேர்தல் பணியாற்றச் சென்ற மாவட்டச் செயலாளர்களே அதிகமாக செலவழிக்க வேண்டியிருந்தது.

Chennai Central Square சென்ட்ரல் சதுக்கம் திட்டப் பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

 நக்கீரன் செய்திப்பிரிவு :  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ரூபாய் 389.42 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் சென்ட்ரல் சதுக்கம்  (Central Square) திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (08/10/2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) / சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ் இ.ஆ.ப., மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Chief Minister who personally inspected the Metro projects!
சென்ட்ரல் சதுக்கம்  திட்டத்தின் கீழ் 31 மாடிகளுடன் சென்ட்ரல் பிளாசா கட்டடமும் கட்டப்பட்டுவருகிறது. சென்ட்ரல் பிளாசா கட்டடத்தின் கீழ் தளத்தில் 500 கார், 1000 பைக் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி அமைக்கப்படுகிறது.

அம்பாசிடர் காரில் 17 வருடங்களாக வசித்து வரும் சந்திரசேகர் .. கர்நாடகா காட்டில்

அம்பாசிடர் காரே வீடு... 17 வருடங்களாக காட்டில் வசித்து வரும் தனி ஒருவன் : நடந்தது என்ன?

கலைஞர் செய்திகள்  : கர்நாடகாவைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் 17 வருடங்களாக காட்டில் தனியாக வசித்து வருகிறார்.
கர்நாடக மாநிலம் மெக்ராஜே லோ கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் கடந்த 2003ஆம் ஆண்டு கூட்டுறவு வங்கியில் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கினார். இதன் பிறகு இந்தக் கடனை அவரால் அடைக்க முடியவில்லை.
இதனால் அவருக்குச் சொந்தமாக இருந்து 1.5 ஏக்கர் நிலத்தை வங்கி ஏலத்தில் எடுத்துக் கொண்டது. இதனால் மிகவும் மனமுடைந்த இவர் ஆடலேயில் உள்ள சகோதரியின் வீட்டிற்குச் சென்றார். அங்கு சில நாட்களே அவரால் தங்கியிருந்த முடிந்தது.
பின்னர் ஆடலே மற்றும் நெக்கரே ஆகிய கிராமங்களுக்கு இடையே உள்ள அடர்ந்த காட்டில் தனக்குச் சொந்தமான அம்பாசிடர் காரோடு குடிபெயர்ந்தார். பிறகு அங்கேயே தனது வாழ்க்கையை நடத்த ஆரம்பித்துவிட்டார்.

கவிஞர் பிறைசூடன் காலமானார்

 hindutamil.in : தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 65.
கவிஞர், நடிகர், வசனகர்த்தா, ஆன்மிகவாதி எனப் பன்முகப் பரிமாணங்கள் கொண்ட பிறைசூடன் திருவாரூர் மாவட்டன், நன்னிலம் கிராமத்தில் 1956-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி பிறந்தவர்.
1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ’ராசாத்தி ரோசாப் பூவே’ என்னும் பாடலை எழுதியதன் மூலம் தமிழ்த் திரைப்படத் துறையில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார்.
இளையராஜா இசையில் பல்வேறு படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.
‘என்னைப் பெத்த ராசா’ படத்தில் ’சொந்தம் ஒன்றாய்’ என்ற பாடலை எழுதினார். ‘ராஜாதி ராஜா’ படத்தில் புகழ்பெற்ற காதல் பாடலான ‘மீனம்மா மீனம்மா’ பாடலை எழுதினார். ‘பணக்காரன்’ படத்துக்காக ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ என்னும் திருமண வாழ்த்துப் பாடலை எழுதினார்.

ஏர் இந்தியாவை டா டா நிறுவனம் வாங்கியது! 18 ஆயிரம் கோடி?

 மாலைமலர் : நஷ்டத்தில் இயங்கி வந்த மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை, டாடா வாங்கியிருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நீண்ட காலமாக நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதனால் நிறுவனத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் ஆயிரக்கணக்கான கோடி இழப்பில் இயங்கும் நிறுவனத்தை வாங்குவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் தயக்கம் காட்டின.
டாடா உள்ளிட்ட ஒன்றிரண்டு நிறுவனங்கள் வாங்குவதற்கு விண்ணப்பித்திருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன் டாடா நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால், மத்திய அரசு அந்த செய்தியை உறுதி செய்யவில்லை.
இந்த நிலையில் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கியிருப்பதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. டாடா குழுமத்தின் டேலஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 18 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தாத்தா உ வே சாமிநாதய்யர் ஒரு போலி பிம்பம்! அவரை சுற்றி ஓராயிரம் பொய்கள்!

என் சரித்திரம் by உ.வே. சாமிநாதையர் / U.Ve. Saminathayar

 Gowra Rajasekaran  :  தமிழ் தாத்தாவின் அளப்பரிய ஃபர்னிச்சரை உடைத்திருக்கிறார் கார்த்திக் புகழேந்தி.  மாற்றுக் கருத்துகள் இருந்தால் சொல்லுங்கள் !
அன்புள்ள கார்த்திக் உ.வெ.சாமிநாத ஐயரை ஏன் தமிழ்தாத்தா என்று அழைக்கிறோம்? இது பற்றின விபரங்களை இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை அதனால் உங்களைக் கேட்கிறேன்.?
மா.கோதண்டம், மங்களாபுரம்.
அன்புள்ள மா.கோ.,
உ.வே.சா; விரித்துச் சொன்னால், உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாத ஐயர். பள்ளி கல்லூரிகளில் தமிழ் படித்தவர்கள் கொஞ்சமாவது இவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். 1855ல் பிறந்து தன் 87 வயது வரை வாழ்ந்தவர் என்பதால் தாத்தா என்று அழைக்கப்பட எல்லா தகுதியும் கொண்டவர். ஆனால், எப்படி சாமிநாத ஐயர்  ”தமிழ் தாத்தா” ஆனார் என்ற கேள்வி எனக்கும் எழுந்ததுண்டு!  
”உ.வே.சா.  தமிழுக்கு நிறைய தொண்டாற்றி இருக்கார். அழிஞ்சு போற நிலையில் இருந்த பழைய தமிழ் நூல்களை எல்லாம் தேடித் திரிஞ்சு சேகரிச்சார், அதுக்கெல்லாம் உரை எழுதினார். அதனால அவரை தமிழ் தாத்தான்னு சொல்றோம்...” என்று பல இடங்களில் இருந்து பதில் வரும்.  
சரி, தான் சேகரித்த நூல், சுவடிகளை எல்லாம் என்ன பண்ணினார்.? என்று பார்த்தால், ஆரம்ப காலங்களில் புத்தகங்களாகப் ப்ரிண்ட் போட்டு வியாபாரம் பார்த்திருக்கிறார்.. 

ஹெச்.ராஜாவுக்கு நீதிமன்ற பிடி ஆணை! அவதூறு வழக்கில் சிக்கினார்

H. Raja comfortable ... Court issued action order

tamil.asianetnews  : அவதூறு வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அவதூறு வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. H. Raja comfortable ... Court issued action order
கடந்த 2018 ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பிடிவராண்ட் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. ஹெச்.ராஜா மீது விருதுநகரைச் சேர்ந்தவர் தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாததால் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர்நீதிமன்ற நீதிபதி பரம்வீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

துரோகத்தால் வீழ்த்தப்பட்டதா வீரபாண்டியாரின் குடும்பம்..? சேலத்தில் .... பாரப்பட்டி சுரேஷ்குமார்.

Was Veerapandiyar's family brought down by betrayal? Exciting Salem ..!

tamil.asianetnews.com - Thiraviaraj RM   : கே.என்.நேருவை வைத்து தன்னை அவமானப்படுத்தி விட்டார் சுரேஷ்குமார் என்ற மனவேதனையுடன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வீரபாண்டி ராஜா இறந்துள்ளார்.
சேலம்  மாவட்டத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றி பல ஆண்டுகளாக கட்டிக் காத்துவந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ஆ.ராஜா ஓரிரு நாட்களுக்கு முன் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார்.
இந்நிலையில், அவரது இறப்பு குறித்து சேலத்தில் துண்டு பிரசுரம் ஒன்று வெளியாகி பரபரப்படை கிளப்பி உள்ளது. அதில், ‘’பாரப்பட்டி சுரேஷ்குமார் செய்த அராஜகம், 6 கொலைகள், கொள்ளை, நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து போன்ற வழக்குகளில் தொடர்பில்லாத வீரபாண்டியாரை சிக்க வைத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் காரணமாகவே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
 அதாவது, சுரேஷ்குமாரால் வீரபாண்டி ஆறுமுகம் கொல்லப்பட்டார். பாரப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மறைந்த குமாரின் குடும்பத்திற்கு தான் சீட் கொடுக்க வேண்டும். அதுதான் நியாயம் என வீரபாண்டி ராஜா உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்தபோதும் கே.என்.நேரு மூலமாக பாரப்பட்டி சுரேஷ்குமார் தான் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் என்று அறிவிக்க வைத்தார் இந்த பாரப்பட்டி சுரேஷ்குமார்.

பாகிஸ்தானும் தலிபான்கள் வசமாகுமா? தாலிபான்கள் மத்தியில் நிலவும் துடிப்பு

 .tamilmirror.lk  : பாகிஸ்தானின் ஆதரவினாலேயே தலிபான்கள் விரைவாகவும், அதிர்ச்சியூட்டும் வகையிலும் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றும் நிலைமை சாத்தியமானதென்று சர்வதேச சமூகமும், உலக சக்திகளும் பரவலாக நம்பின. அத்துடன் இதன் பயனாக இலாபங்களின் பயனாளியாக பாகிஸ்தான் இருப்பதாவும் நம்பப்பட்டது.
ஆனாலும் பல தலிபான் போராளிகள் தங்களின் அடுத்த தாக்குதல் இலக்கு பாகிஸ்தான் என்று நோக்குவதால் நிலைமை பெரும் வித்தியாசமானதாகத் தெரிகிறது.
தலிபான் தலைமைகள் ஆப்கானிஸ்தானில் தமது வெற்றியில் பூரிப்படைந்திருக்கும் நிலையில் பல போராளிகள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி இருப்பதும், இஸ்லாமிய ஷரீஹா சட்டத்தை திணித்திருப்பதும் மட்டும் தமது போராட்டத்தின் முடிவல்ல என்றும் இதுவே உலகில்  ஜிஹாத்தை பரப்புவதற்கான ஆரம்பம் என்றும் நம்புகின்றனர்.

மோடியின் பரிசு பொருட்களை ஏலத்தில் எடுக்க ஆளில்லை.. போலியாக ஏலம் கேட்ட நபர்கள் அசிங்கப்பட்ட சங்கிகள்

அசிங்கப்பட்ட மோடி... விலை போகாத பொருட்கள்... போலியாக ஏலம் கேட்ட நபர்களால் விழிபிதுங்கிய அதிகாரிகள்!

கலைஞர் செய்திகள் : விலை போகாத பொருட்கள்... போலியாக ஏலம் கேட்ட நபர்களால் விழிபிதுங்கிய அதிகாரிகள்!
பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட பொருட்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்பட்ட நிலையில், அதில் பல பொருட்கள் ஏலத்தில் விலை போகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அசிங்கப்பட்ட மோடி... விலை போகாத பொருட்கள்... போலியாக ஏலம் கேட்ட நபர்களால் விழிபிதுங்கிய அதிகாரிகள்!
பிரதமர் மோடிக்குப் பரிசாக வழங்கப்பட்ட பல பரிசுப் பொருட்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்பட்ட நிலையில், அதில் பல பொருட்கள் ஏலத்தில் விலை போகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,300க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்களை ஏலம் விட இணையதளம் வாயிலாக நடத்தப்படும் ஏல முறை கடந்த செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது.

தான்சானியா எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

 மின்னம்பலம் : 2021ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று (அக்டோபர் 7) சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகள் பிரச்சினை, காலனி ஆதிக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தனது படைப்புகளில் கொண்டு வந்ததற்காக நாவலாசிரியர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.
தான்சானியாவை பூர்வீகமாகக் கொண்ட அப்துல் ரசாக் குர்னாவுக்கு வயது 73. 1960ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு அகதியாக வந்த இவர், கென்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். 

ஹிட்லரின் 101 வயது நாஜி படை காவலர் மீது போர்க்குற்ற விசாரணை - 3,518 கொலைக்கு உடந்தை

Germany puts 100-year-old on trial for Nazi crimes - France 24

How Nazi guard Oskar Gröning escaped justice in 1947 for crimes at  Auschwitz | Holocaust | The Guardian

பி பி சி .தமிழ்  : ஹிட்லரின் நாஜி ஆட்சிக் காலத்தில் யூதர்கள் மற்றும் எதிரிகளை கொல்வதற்காக வதை முகாம்கள் நடத்தப்பட்டன.
இரண்டாம் உலகப்போர் முடிந்த 76 ஆண்டுகளுக்குப் பிறகு நாஜி வதை முகாம் ஒன்றின் காவலராக இருந்த ஒருவர் 3,518 பேரை கொலை செய்ய உதவியதற்காக விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
ஜெர்மனி தலைநகர் பெர்லின் அருகே உள்ள இரண்டாம் உலகப் போரின்போது சாக்சென்ஹாசன் வதை முகாமில் 2 லட்சத்துக்கும் மேலானவர்களை அடைத்து வைத்திருந்தனர். சாக்சென்ஹாசன் வதை முகாமில் இவர் பணியாற்றியுள்ளார்.
சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த கைதிகளை சுட்டுக் கொல்லவும் பிறரை சைக்லான் - பி (Zyklon B) நச்சுக் காற்றை செலுத்திக் கொல்லவும் ஜோசஃப் எஸ் எனும் அந்த நபர் உடந்தையாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாஜி கால குற்றத்துக்காக விசாரணையை எதிர்கொள்ளும் மிகவும் வயதான நபர் இவராவார்.

சென்னை ஃபோர்டு FORD தொழிற்சாலையை கைப்பற்றும் டாடா.. தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு வெற்றி.

டாடா ப்ராஜெக்ட்ஸ்
ஃபோர்டு - டாடா

Prasanna Venkatesh -  GoodReturns Tamil:   அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் இருக்கும் இரு தொழிற்சாலைகளை மூடுவதாக அறிவித்து ஒட்டுமொத்த இந்திய ஆட்டோமொபைல் துறையைப் புரட்டிப்போட்டது.
இதனால் பல ஆயிரம் ஊழியர்கள் வேலைவாய்ப்பை முழுமையாக இழக்கவும், சப்ளை நிறுவனங்கள் மொத்தமாகப் பாதிக்கப்படும் நிலையும் உருவானது.
Ford  ஃபோர்டு நிறுவனத்திற்குச் சென்னை மறைமலைநகர் மற்றும் குஜராத் சனந்த் பகுதிகளில் இரு தொழிற்சாலைகள் உள்ளது.
சென்னையில் இருக்கும் தொழிற்சாலையை காப்பாற்றும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு களத்தில் இறங்கியது.
தமிழ்நாடு அரசின் முயற்சி கிட்டதட்ட வெற்றி அடைந்துவிட்டது.
சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் கைப்பற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வியாழன், 7 அக்டோபர், 2021

வாக்காளர் பட்டியலில் வடமாநிலத்தவர்கள்! ஆர்.எஸ்.பாரதி புகார்!

வாக்காளர் பட்டியலில்  வடமாநிலத்தவர்கள்: ஆர்.எஸ்.பாரதி புகார்!

மின்னம்பலம் :  நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், 5000 வட மாநில தொழிலாளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 74.37% வாக்குகள் பதிவான நிலையில், நாளை மறு நாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் 5000க்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

டி ஆர் பாலு : அணுக் கழிவுகளை கொட்ட தமிழகத்தை விட்டால் வேறு இடமே இல்லையா? - ஒன்றிய அரசுக்கு கேள்வி

உலைக்கழிவு

Arsath Kan  -  Oneindia Tamil  :  சென்னை: அணுக் கழிவுகளை கொட்ட தமிழகத்தை விட்டால் வேறு இடமே இல்லையா என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு ஏற்காதா எனவும் அவர் வினவியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு டி.ஆர். பாலு எழுதியுள்ள கடிதத்தின் விவரம் பின்வருமாறு;
சென்ற 23.07.2021 அன்று , கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்று மற்றும் நான்காவது உலைகளில் பயன்படுத்தப்பட்ட கழிவுகளை சேகரிக்கும் கிடங்கு ஒன்றினை அணுஉலைக்கு வெளியே அமைப்பதற்கு தேவையான அனுமதி இசைவை அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் இந்திய அனுசக்தி கழகத்திற்கு வழங்கியுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள்.

BBC : லட்சத்தீவில் கைதான கடத்தல் கும்பலுக்கும் சீமானுக்கும் தொடர்பா? – என்.ஐ.ஏ விசாரணை

சீமான்

BBC ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ்:  என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சற்குணன் விவகாரத்தில் சீமானின் தொடர்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். `சற்குணன் மூலமாக சீமானுக்கு பெரும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன,’ என்கிறார் கே.எஸ்.அழகிரி.
லட்சத்தீவின் மினிக்காய் (Minicoy) கடற்கரையில் கடந்த மார்ச் மாதம் ஏ.கே 47 துப்பாக்கிகள், 1000 கிலோ தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் ஆகியவற்றை கடலோர காவல்படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது.

பொது இடங்கள் சாலைகளில் உள்ள சிலைகளை அகற்ற வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்

 மாலைமலர் : தமிழ்நாடு  முழுவதும் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவில் உள்ள கிராமம் ஒன்றில் அரசின் அனுமதி பெறாமல் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை அகற்றும்படி தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நெடுஞ்சாலைகளை சிலைகளை வைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு இருப்பதால், சிலையை அகற்றியதில் தவறில்லை' என்று கூறினார். இதனை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

“கலைஞர் ஏன் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டு தினமாக அறிவித்தார்?” - பொய்ப் பிரசாரங்களை தகர்க்கும் கட்டுரை!

கலைஞர் செய்திகள்  : கலைஞர் ஏன் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டு தினமாக அறிவித்தார் என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை.
தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாளா அல்லது சித்திரை முதல் நாளா என்ற ஒரு விவாதம் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றது. தமிழறிஞர்கள், தை 1-ம் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்று வலியுறுத்தி வந்தனர். அதனையடுத்து, 2008ம் ஆண்டு தை 1-ஐ தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு, காழ்ப்புணர்ச்சியில் அதனை ரத்து செய்தது.
மறைமலை அடிகளார், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், பேராசிரியர் கா.நமசிவாயர், இ.மு.சுப்பிரமணியனார், மு.வரதராசனார், இறைக்குருவனார், வ.வேம்பையனார், பேராசிரியர் தமிழண்ணல், வெங்காலூர் குணா, கதிர். தமிழ்வாணனார், சின்னப்பத்தமிழர், கி.ஆ.பெ.விசுவநாதர், திரு.வி.க, பாரதிதாசனார், கா.சுப்பிரமணியனார், ந.மு.வேங்கடசாமியார், சோமசுந்தர பாரதியார், புலவர் குழுவினர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்துரைத்தனர்.

சென்னையில் நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த யோகா மாஸ்டர்!

Yoga master sexually harasses teenage girls in Chennai | Tamil Nadu News

Govindaraji Rj | Samayam TamilU  : சென்னையில், யோகா பயிற்சி என்ற பெயரில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த யோகா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் யோகராஜ் என்கின்ற பூவேந்திரன் யோகா பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் யோகா பயிற்சி பெற்று வருகின்றனர்.
கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் யோகா பயிற்சி வகுப்பு நடத்தி வரும் இவர் 'பாட்னர் யோகா' என்ற பெயரில் பல கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் தவறாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் தன்னிடம் பயிற்சிக்கு வரும் பெண்கள் பலருக்கு குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்துக்கொடுத்து, பின்னர் அவர்களை சீரழித்து வீடியோ பதிவு செய்து வைத்துள்ளதாகவும், அதில் சில பணக்கார பெண்களை மிரட்டி பல லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதன், 6 அக்டோபர், 2021

கழுமரம் வரலாறு சிதம்பரம் நடராஜர் கோயிலில் - சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் கோவிலில்

May be an image of sculpture
May be an image of outdoors, monument and text that says '2 Thomas Alexander'

Jose Kissinger  : கழுமரம் சொல்லும்வரலாறு:
முதல் படம்- சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்பம்.
இரண்டாம் படம் - சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் கோவில் சிற்பம்.
முதல் படத்தில் காணப்படும்  கழுமரத்தில் ஏற்றிக் கொல்லப் பட்டவர்கள் யார்?
நீண்ட தலைமுடி, மீசை, தாடி எல்லாம் உள்ளதே! உடல் வலிமை மிக்கவர்களாக இருக்கிறார்களே? முனிவர்களான இவர்கள் செய்த தவறு என்ன?
இவர்கள் சமணர்கள் அல்ல.... ஆசீவக முனிவர்கள்.
ஏன்? 
ஆசீவக முனிவர் பார்ப்பனர்களின். வேதத்தையும், வேள்விகளையும் அறிவியல் நோக்கில் எதிர்த்தவர்கள்..
ஆசீவகர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனிவர்கள்...
மற்கலி கோசாலர் என்பவர்தான் ஆசீவகத்தின் நிறுவனர்.
இவரும், மகாவீரரும், புத்தரும்  சம காலத்தை சேர்ந்தவர்கள். காலம் கி.மு.6 ஆம் நூற்றாண்டு.

முதல்வர் வீட்டின் முன்பு தீக்குளித்தவர் .. உண்மையில் நடந்தது என்ன? பல தவறான செய்திகள்..

May be an image of 1 person and text
May be an image of 1 person and text

LR Jagadheesan  : முதல்வர் வீட்டின் முன்பு தீக்குளித்தவர் இறந்து விட்டார் . முதல்வரின் பாராமுகம் ?  என்றெல்லாம் செய்திகளை இணையத்தில் பார்க்கிறோம் .
தமக்கு தெரிந்த சில தவறான செய்திகளை வைத்து கொண்டு சில அரைகுறை விற்பன்னர்கள் செய்திகளை இங்கே பதிந்து வருகிறார்கள் .
முதலில் ஜமீன்  தேவர்குளம் கிராமத்தில்  நடந்தது என்ன ?
 கிராமத்தில்  இதுவரை  பொது பிரிவில் அனைவரும் போட்டி இடும் வண்ணமே  ஊர் பஞ்சாயத்து தேர்தல் இருந்த  பொழுது அதன் கடைசி  ஊர் தலைவராக இருந்தவர் கமலா , கமலாவின் கணவர் பெயர் பாலகிருஷ்ணன் .அந்த பகுதியில் நியாயமாக தொழில் செய்து வருபவர் . கமலாவின் ஐந்து ஆண்டு பஞ்சாயத்து நடப்பில் அந்த ஊர்  உதாரண ஊர் என்றும்;  தீண்டாமை அற்ற ஊர் என்றும் மாவட்ட தலைவரின் விருது பத்து லக்ஷம் வாங்கி உள்ள கிராமம் அது . தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்ட  கிராமம்  அது என்பதை விட .  தீண்டாமை  வாசமே அற்ற ஊர் அது .
பல நல்ல  திட்டங்களை செயல்களை செய்து முன்னோடி கிராமம் என்று பெயர் எடுத்த ஊர் .

விவசாயிகள் மீது கார் ஏற்றியதை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் சுட்டுக்கொலை" அதிர்ச்சித் தகவல்

"விவசாயிகள் மீது கார் ஏற்றியதை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் சுட்டுக்கொலை": குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

கலைஞர் செய்திகள்  : விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட வீடியோவை வெளியிட்ட செய்தியாளர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது பா.ஜ.க ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றிய சம்பவத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதனிடையே லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றிச் செல்லும் வீடியோவை நேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்ற முழக்கம் நாடுமுழுவதும் வலுத்து வருகிறது.
இந்நிலையில் இந்தக் கொடூர சம்பவத்தை உள்ளூர் செய்தியாளர் ராமு காஷ்யப் என்பவர்தான் எடுத்துள்ளார். இவர் சாத்னா பிரைம் நியூஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

அசோக்வர்த்தன் ஷெட்டி கனடாவில் இருந்து வருகிறார்! ஜெயாவால் பந்தாடப்பட்டவர் .. விரைவில் முதல்வர் ஆலோசகராக நியமனம்?

 ஜெ. ஆட்சிக் கால டார்ச்சர்

  Mathivanan Maran  -  Oneindia Tamil :   சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசகராக மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி விரைவில் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் தலைமை செயலாளர், முதல்வரின் ஆலோசகர்கள் என ஒவ்வொரு பொறுப்பிலும் நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் இந்த தொடக்கமே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
இருந்தபோதும் முதல்வர் தரப்பில் ஆலோசகர் பதவிக்கு என ஒரு தனிடம் ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு மாஜி அதிகாரிக்குதான்.
அவர்தான் தமிழகம் நன்கு அறிந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி. அன்றைய ஆலோசகர் ஷெட்டி அன்றைய ஆலோசகர் ஷெட்டி திமுகவின் 2006-2011 ஆட்சி காலத்தில் துணை முதல்வராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தார் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது உள்ளாட்சித்துறை செயலாளராக இருந்தவர்

போதை மருந்துக் கடத்தல்... புலி சந்தேக நபர் கைது! .

மின்னம்பலம் : பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.
இதுகுறித்து என்.ஐ.ஏ. இன்று (அக்டோபர் 6) வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில்,
“இலங்கையைச் சேர்ந்தவரான சற்குனம் என்ற சபேசன் (வயது 47) புலிகளின் உளவுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் அக்டோபர் 5 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
​சென்னை, வளசரவாக்கத்தில் வசிக்கும் சபேசன், பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுத மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், அதன் மூலம் கிடைத்த பணத்தைப் புலிகளின் மறு கட்டுமானத்துக்கு பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

அதிமுக 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு

மாலைமலர் : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும்‌ வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி கழகத்தின்‌ தொடக்க நாளை சிறப்பாகக்‌ கொண்டாடுமாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 தமிழகத்தில்‌ நடைபெற்று வந்த தீய சக்தியின்‌ ஆட்சியை அகற்றி, தர்மத்தையும்‌, நீதியையும்‌ நிலைநாட்ட வேண்டும்‌ என்ற நல்ல எண்ணத்தில்‌, உழைப்பால்‌ உயர்ந்தவரும்‌, பேரறிஞர்‌ அண்ணாவின்‌ இதயக்‌ கனியும்‌, தலைமுறைகள்‌ பல கடந்தும்‌ மக்கள்‌ நாயகனாக தொடர்ந்து எம்‌.ஜி.ஆர்‌. அவர்களால்‌ தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட  “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌’” 49 ஆண்டுகளைக்‌ கடந்து, 17.10.2021 – ஞாயிற்றுக் கிழமை அன்று “பொன்‌ விழா” காண இருக்கும்‌ இத்திருநாளை, கழகத்தின்‌ ஒவ்வொரு தொண்டரும்‌ மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய நேரமிது.

ஜெயா ஆட்சியில் இம்மாதிரி அரசாணை வந்திருந்தால் ... ராதாகிருஷ்ணனின் இடமும் தடமும் காணாமல் போயிருக்கும்

No photo description available.
No photo description available.

Antony Valan  :  ராதாகிருஷ்ணன்! சுகாதாரத்துறையின் நேற்றைய அரசாணையில் ஜெயலலிதாவை பாராட்ட மறந்துட்டீங்க பாஸ்
திமுக ஆட்சியில் மருத்துவதுறையின் அரசாணைகளில் இன்னமும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் குட்கா  விஜயபாஸ்கரை நாலு நக்கு நக்கி பாராட்டலன்னா அரசாணைகள் முழுமை அடையாது போல.
சுகாதாரத்துறை செயலரின் இது போன்ற அயோக்கியத்தனங்களை திமுக அரசு வேடிக்கை பார்த்துட்டு மொண்ணைகளா இருப்பது தான் கடுப்பாகுது..
ஜெயலலிதா ஆட்சியில் இந்த மாதிரி அரசாணை ஒண்ணு வந்திருந்தா இன்னேரம் ராதாகிருஷ்ணன் இருந்த இடமும் தடமும் தெரியாமலே போய் இருந்திருக்கும்..

பிரான்ஸ் திருச்சபை பாதிரியார்களால் 2,16,000 சிறாருக்கு பாலியல் கொடுமை: விசாரணை அறிக்கை

பாரிஸில் நடந்த ஒரு பிரார்த்தனை

BBC : 1950ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று இது தொடர்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.
2,900 முதல் 3,200 பேர் வரை சிறாரை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய குற்றங்களில் ஈடுபட்டதாக திருச்சபை உறுப்பினர்களின் கொடுமைகள் தொடர்பாக விசாரிக்கும் குழுவின் தலைவர் ஜீன் மார்க் சாவே தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி தமக்கு வலியை ஏற்படுத்துவதாக போப்பாண்டவர் பிரான்சிஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி ஆசிரியர்கள் போன்ற திருச்சபையின் சாதாரண உறுப்பினர்கள் செய்த தவறுகளை கணக்கிட்டால் இந்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,000 ஆக உயரும் என்று விசாரணை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
திருச்சபை அதன் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் சங்கமான லா பரோல் லிபரேயின் (சுதந்திர பேச்சு) நிறுவனர் பிரான்சுவா டெவாக்ஸ், "இது நம்பிக்கைக்கு துரோகம், மன உறுதிக்கு துரோகம், குழந்தைகளுக்கு துரோகம்" என்று கூறினார்.

ஓ.என்.ஜி.சி கிணறுகளை மூட அதிகாரிகள் ஆய்வு!

நக்கீரன் - பகத்சிங்  : புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நல்லாண்டார்கொல்லை, கல்லிக்கொல்லை, கருவடதெரு, கருகீழத்தெரு, வனக்கன்காடு, கோட்டைக்காடு முள்ளங்குறிச்சி, கறம்பக்குடி புதுப்பட்டி ஆகிய இடங்களில் எண்ணெய் எடுப்பதற்காக ஓஎன்ஜிசி நிறுவனம் சுமார் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் அடிகள் வரை ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து பரிசோதனைகள் செய்துள்ளனர். போதிய வருவாய் கிடைக்காது என்பதால் எண்ணெய் எடுக்கும் முயற்சியைக் கைவிட்டதோடு ஆழ்குழாய் கிணறுகளில் கசிவு ஏற்படாமல் 4 இடங்களில் தரைமட்டத்திலும், நல்லாண்டார்கொல்லை, கல்லிக்கொல்லை, கருவடதெரு உள்ளிட்ட 3 இடங்களில் எந்த நேரத்திலும் இயக்கும் அளவில் வாழ்வுகள் அமைத்தும் மூடி வைத்துச் சென்றனர்.
அனைத்து இடங்களிலும் உள்ள விவசாயிகளுக்கு தற்போது வரை குத்தகை தொகையை ஓஎன்ஜிசி நிறுவனம் வழங்குவதுடன் ஆண்டுக்கு ஒரு முறை அதிகாரிகள் வந்து கசிவுகள் உள்ளதா என்று சோதனைகளும் செய்து வருகின்றனர்.

செவ்வாய், 5 அக்டோபர், 2021

ஊழலை ஒரு வாழ்க்கை முறையாக இந்தியர்கள் கருதுவது ஏன்? நியூ சிலாந்தில் ஒரு ஆய்வு

Sooddram  :  ஊழலை சரிசெய்வதை விட இந்தியர்கள் சகித்துக்கொள்கிறார்கள்.
இந்தியர்கள் ஏன் ஊழல்வாதிகள் என்பதை அறிய, அவர்களின் வழிகள் மற்றும் செயல்களைப் பாருங்கள்.
முதல்: மதம் என்பது இந்தியாவில் ஒரு வணிகமாகும். ஒரு பரிவர்த்தனை, அதில் கடவுளுக்குப் பணம் செலுத்தி, அதற்குப் பதிலாக ஒரு வெகுமதியை எதிர்பார்க்கும் ஒரு முறை.‌ தகுதி இல்லாதவர்கள் கூட கடவுளிடம் பணம் கொடுத்து வெகுமதியை கேட்கிறார்கள்.
இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஊழல் செய்கிறார்கள்? அவர்களின் அணுகுமுறையில் என்ன தவறு?….
நியூசிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆயுவு கட்டுரையில் தெரிவிக்கிறது.
இந்தியர்களின் ஹோபிசியன் hobbesian – சுயநலத்தின் கலாச்சாரம்.
இந்தியாவில் ஊழல், ஒரு கலாச்சார அம்சமாகும். ஊழல் குறித்து இந்தியர்கள் குறிப்பாக மோசமாக எதுவும் நினைக்கவில்லை. ஏனெனில் ஊழல் இயற்கையாகவே நிலவுகிறது.கோவில் சுவர்களுக்கு வெளியே உள்ள உலகில், அத்தகைய பரிவர்த்தனை “லஞ்சம்” என்று அழைக்கப்படுகிறது.

உ.பி. கலவரம் வெடித்த குஷ்பு.. மனித உயிரைவிட வேறெதுவும் முக்கியமில்லை.

Congress cadres drifting over Kushbu's NEP remark- The New Indian Express
Kushbusundar : A vehicle mowing down 8 protesters in UP is unacceptable and a grave crime. Whoever responsible for this must be booked and taken to task, irrespective of who this person is. Nothing matters more than human lives. Humanity is thy the essence of this country.

 நக்கீரன் செய்திப்பிரிவு  :    உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர்.
அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

வள்ளலார் பிறந்த நாள் அக்டோபர் 5, 1823 வள்ளலார் காணாமல் போன நாள் சனவரி 30, 1874 என்ன நடந்திருக்கும்?

May be an image of 2 people

செல்லபுரம் வள்ளியம்மை :  வள்ளலார் இராமலிங்க ஸ்வாமிகளின் பிறந்த நாள்  அக்டோபர் 5, 1823
காணாமல் போன நாள் சனவரி 30, 1874
உண்மையில் வள்ளலாருக்கு என்னதான் நடந்திருக்கும்?
இன்னும் பதில் கிடைக்காத சில கேள்விகள்..
வள்ளலாரின் மர்ம மறைவும் நாவலரின் சந்தேக மௌனமும்!
வடலூர் ராமலிங்க சுவாமிகள்  காணாமல் போய் அல்லது மர்மமாக இறந்து  ஐந்து வருடங்களுக்கு பின்பாகத்தான் ஆறுமுக நாவலர் காலமானார்.
வடலூர் ராமலிங்க வள்ளலாரை கடுமையாக எதிர்த்து அவர் மீது பொய் வழக்கு போட்டு தோற்றுப்போனவர் ஆறுமுக நாவலர்!
நாவலரின் பின்பலமாக நின்றவர்கள் வைதீகர்கள் .
இராமலிங்க வள்ளலார் மீது நிகழ்த்தப்பட்ட கொடிய தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி இதுவரை ஒருவரும் கேள்விகள் எழுப்பியதில்லை.

போராடிய விவசாயிகள் மீது கார் ஏறிய அதிர்ச்சி வீடியோ!

 கலைஞர் செய்திகள் : உத்தர பிரதேச மாநிலம், லட்சுமிபூர் கேரி என்ற பகுதியில் ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அதேபகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக அம்மாநில துணை முதல்வர் கேசவ் மற்றும் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் கலந்துகொள்ளச் சென்றனர்.
இவர்களின் வருகையை அறிந்த விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய அமைச்சரை வரவேற்பதற்காக சென்ற கார் ஒன்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வேகமாக மோதி நிற்காமல் சென்று தடுமாறி விழுந்தது.
இந்த சம்பவத்தில் நான்கு விவசாயிகள் உட்பட 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் விவசாயிகள் மீது மோதிய காரில் ஒன்றிய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மேலும் ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும், ஒன்றிய அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இதையடுத்து ஒன்றிய அமைச்சர் அஜஸ் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 14 பேர் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வள்ளலார் பிறந்தநாள்: தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்- மு.க.ஸ்டாலின்

 மாலைமலர் :  வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்” என கடைப்பிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823-ல் பிறந்தார்.
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தார். அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார். இவர் வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினார்.
‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்றுவரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது.

பண்டோரோ பேப்பர்ஸ்: பிரபல உலக தலைவர்களின் ரகசிய சொத்துகள் - அம்பலப்படுத்தும் புலனாய்வு

பாண்டோரா

பேண்டோரா பேப்பர்ஸ் செய்திக் குழு  -     பிபிசி பனோரமா  :  உலகத் தலைவர்கள்   
பொதுவெளியில் பெரிதும் மதிக்கப்படும் உலக தலைவர்கள், மன்னர்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள் என பலரும் ரகசியமாகவும் குறுக்கு வழிகளிலும் பணத்தையும் சொத்துகளையும் குவித்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.
ஜோர்டான் மன்னர், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் என பலரும் இதில் சிக்கியிருக்கிறார்கள்.
300-க்கும் மேற்பட்ட தலைவர்கள் வரி ஏய்ப்புக்கு உதவும் வெளிநாட்டு ரகசிய நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பது 'பண்டோரா பேப்பர்ஸ்' எனப்படும் மிகப்பெரிய ஆவணக் கசிவின் மூலம் தெரியவந்திருக்கிறது.
பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஜோர்டான் மன்னர் அப்துல்லா குவித்திருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
11 வயதுச் சிறுவன் பெயரில் சுமார் 330 கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கியிருப்பதும் ஆவணங்களில் தெரியவந்திருக்கிறது.

திங்கள், 4 அக்டோபர், 2021

இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் சேவை முடங்கியது Multiple social media platforms down

.newsfirst.lk : COLOMBO (News1st): Facebook, Instagram and WhatsApp are currently down in many countries. Foreign media reports suggest that the outage had begun at around 9:15 pm. WhatsApp and Instagram are popular apps owned by parent company Facebook.
இந்தியா முழுவதும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் சேவை முடங்கியது

maalaimalar : உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் சேவை இந்தியா முழுவதும் முடங்கியதால் பயனாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தியா முழுவதும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் சேவை முடங்கியது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உலகளவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை முக்கிய வலைத்தளங்களாக விளங்கி வருகின்றன. இந்த நிலையில் தற்போது திடீரென மூன்று செயலிகளும் ஒரே நேரத்தில் முடங்கியது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள பயனாளிகள் அவதிக்குள்ளாகினர்.

நடிகர் அஜித்தால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனை ஊழியர் அஜித் வீட்டுக்கு முன்பு தீக்குளிக்க முயற்சி

  எக்ஸ்பிரஸ் செய்தி  நடிகர் அஜீத் வீட்டின் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தி இன்று கைது செய்தனர். சென்னை ஈஞ்சம்பாக்கம், அஜித் வீட்டின் முன்பு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்த பர்சானா என்ற பெண் ஊழியர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
போலீசார் கைது செய்த போது தனது சாவிற்கு அஜித் தான் காரணம் என சொல்லிக் கொண்டே சென்றார்.  இவர் நடிகர் அஜித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்தபோது  செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்ததால் தீக்குளிக்க முயன்றார் என்று போலீசார் தெரிவிக்கிறார்கள்.
இவர் நடிகர் அஜீத்தை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும் அஜீத் பார்க்க மறுத்துவிட்டார்
மேலும் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டும் அஜித் கண்டுகொள்ளவில்லை .
இதன் காரணமாக அப்போலோ நிர்வாகம் இவரை மீண்டும் பணிக்கு சேர்க்கவில்லை
நடிகர் அஜித் மன்னித்து விட்டால் இவரை மீண்டும் பணிக்கு சேர்ப்பதாக அப்போலோ நிர்வாகம் தெரிவித்து இருந்தது
ஆனால் திமிர் பிடித்த நடிகர் அஜித் மனம் இரங்கவில்லை

குஜராத்தில் இளம் மனைவியை ரூ.500க்கு விற்ற கணவன்... பாலியல் வல்லுறவு செய்த நண்பன்...அதானி அம்பானி மோடிகளின் மாநிலத்தின் உய்யலாலா கேவலத்திலும் கேவலம்

இளம் மனைவியை ரூ.500க்கு விற்ற கணவன்... பாலியல் வல்லுறவு செய்த நண்பன்... குஜராத்தில் கொடூர சம்பவம்!

 கலைஞர் செய்திகள்  : ரூ.500க்கு தன் மனைவியையே கணவன் விற்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் 21 வயதான பெண் ஒருவர் தன் கணவர் தன்னை வேறொரு நபரிடம் ரூ.500க்கு விற்றதாக போலிஸால் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில், “இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவு 9 மணிக்கு நானும் என் கணவரும் உணவகத்திற்குச் சென்றோம். அப்போது அங்கு வந்த நபர் என் கணவரிடம் ரூ. 500 கொடுத்தார்.
இதையடுத்து என் கணவர் என்னை அந்த நபருக்கு விற்றுவிட்டார். பின்னர் அவர் என்னை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு செய்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் கைது .. 8 பேர் உயிரிழப்புக்கு நீதி கேட்டு பிரியங்கா காந்தி

 தினத்தந்தி : பிரியங்கா காந்தி அவர்களுக்கு எதிராக நடந்த ஜனநாயகப் படுகொலையை கண்டித்து நாளை நாடு முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பதிவு: அக்டோபர் 04,  2021 15:29 PM
மத்திய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோத புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அந்தப் பகுதிக்கு வந்தபோது,
விவசாயிகள் பெருமளவில் திரண்டு கருப்புக் கொடி ஏந்தி, வேளாண் சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்திக் கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம்

 மாலைமலர் : மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்க அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்” என 12 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும்,
அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டுமெனக் கோரியும், மேற்குவங்காளம், ஒடிசா, ஆந்திரா, சத்தீஸ்கர், டெல்லி, கோவா, பஞ்சாப், கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, ஜார்கண்ட் ஆகிய 12 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு; 12 பேர் பலி

 தினத்தந்தி : ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
காபூல்,  ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள ஈத் கா என்ற மசூதியில் திடீரென இன்று குண்டுவெடிப்பு ஒன்று நடந்துள்ளது.  
இதில், 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  32 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி காரி சயீத் கோஸ்டி கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, 3 பேரை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது.  எனினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.  ஆப்கானிஸ்தானில் தலீபான் அமைப்புகள் பொறுப்பேற்ற பின்பு ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன

உ.பி.யில் வேளாண் சட்டத்திற்கு எதிராக கடும் வன்முறை.. 8 பேர் உயிரிழப்பு.. மத்திய அமைச்சரின் மகன் 3 பேரை கொன்றதாக பகீர் புகார்

 Rayar A -  Oneindia Tamil :  லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர்.
மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் கூட்டத்தில் காரை மோத செய்தும், துப்பாக்கியால் சுட்டும் 3 பேரை கொன்றதாக விவசாயிகள் பகீர் குற்றம்சாட்டி உள்ளனர்.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது.
ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது.
மத்திய அரசு மத்திய அரசு ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

ஹிட்லருக்காக 'ஆரிய' கர்ப்பிணிகள் பிரசவித்த பல ஆயிரம் குழந்தைகள் - அதிகம் அறியப்படாத வரலாறு

German Women Carrying Children On An Alleged Aryan Purity In A Lebensborn, Selection Center Births By Methods Eugenicists During The Second World War. (Photo by Keystone-France/Gamma-Keystone via Getty Images)German Women Carrying Children On An Alleged Aryan Purity In A Lebensborn, Selection Center Births By Methods Eugenicists During The Second World War. (Photo by Keystone-France/Gamma-Keystone via Getty Images) 

BBC : ஹிட்லருக்காக 'ஆரிய' கர்ப்பிணிகள் பிரசவித்த பல ஆயிரம் குழந்தைகள் - அதிகம் அறியப்படாத வரலாறு
 முதலாம் போரில் வீழ்ச்சியடைந்த ஜெர்மன் மக்கள் தொகையை மீண்டும் பெருக்க ஒரு அதிரடி திட்டத்தை அந்த நாட்டின் நாஜிப்படை அறிமுகப்படுத்தியது. அதில் பல பெண்கள் தாமாக முன்வந்து கர்ப்பம் தரித்து நாட்டுக்காக குழந்தைகளைப் பெற்றெடுக்க ஆர்வம் காட்டியது, நாம் அதிகம் படித்திருக்காத வரலாறு. அத்தகைய ஒரு மாறுபட்ட வரலாற்றுப்பதிவைத்தான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
1936 ஆம் ஆண்டில், நாஜி ஆதரவாளரும் பட்டதாரியுமான ஹில்டேகார்ட் ட்ரூட்ஸ் ஜெர்மனியின் இனரீதியான 'தூய்மையான' பெண்களில் ஒருவராக ஒரு திட்டத்தில் சேர்க்கப்பட்டார். ஆரிய குழந்தையை உருவாக்கும் நம்பிக்கையில் 'ஷுட்ஸ் ஸ்டேஃபல்' எனப்படும் எஸ்.எஸ் அதிகாரிகளுடன் உடலுறவு கொள்வது இந்த பெண்கள் நாஜி ஆளுகைக்கு ஆற்றும் சேவையாகப் பார்க்கப்பட்டது.

நடிகர் ஷாருக்கானின் மகன் கப்பல் போதை பார்ட்டியில் கைது .. மும்பாய்

 மின்னம்பலம் : நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட் வட்டாரத்தில் போதை பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நடிகை ரியா சக்ரவர்த்தி, அவர் தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் கிட்டத்தட்ட 3,000 கிலோ ஹெராயின் ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத் துறையால் கைப்பற்றப்பட்டது.
தற்போது மும்பையிலிருந்து கோவாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாகப் புறப்பட்ட கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதும், அதிலும் குறிப்பாகப் பிரபல பாலிவுட் ஸ்டார் ஷாருக் கான் மகன் ஆரியன் கான் பிடிபட்டதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மம்தா பானர்ஜி பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றி.. 56,388 பெரும்பான்மை வாக்குகள்

  மாலைமலர் : பவானிபூர் இடைத்தேர்தலில் பிரியங்கா டிப்ரிவாலை விட 56,388 வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.
கொல்கத்தா:  மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், அவரது கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. எம்.எல்.ஏ.வாக இல்லாத நிலையில் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
தேர்தல் கமி‌ஷன் விதிகள்படி எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி. பதவிகளில் இல்லாதவர்களும் முதல்-மந்திரியாக அல்லது மந்திரியாக பதவி ஏற்கலாம். ஆனால் அவர்கள் 6 மாத காலத்துக்குள் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற வேண்டும்.
அந்த வகையில் மம்தா பானர்ஜி நவம்பர் 5-ந்தேதிக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்.

தமிழ்நாடு ரவுடி ஒழிப்பு நடவடிக்கையில் விசிக குறிவைக்கப்படுகிறதா? ஆபரேஷன் டிஸ்ஆர்ம் என்ன செய்கிறது?

வன்னி அரசு.
ஆ.விஜய் ஆனந்த் -     பிபிசி தமிழுக்காக  :  `ஆபரேஷன் ‘டிஸ்ஆர்ம்’ என்ற பெயரில் தமிழ்நாடு காவல்துறை நடத்தும் `ரவுடிகள் ஒழிப்பு வேட்டை’, அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய ரவுடிகளை கைது செய்யவில்லை, அரசியல் போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களை ரவுடி பட்டியலில் சேர்க்கிறார்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகிகள் குறிவைக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் குற்றம்சாட்டுகிறார் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு.
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச் சம்பவங்களில் தொடர்பில்லாதவர்கள், அப்பாவிகள் ஆகியோரை இலக்காக வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் ஒரு காவல் துறை கண்காணிப்பாளர்.
இந்த நடவடிக்கையில் திமுக நிர்வாகி ஒருவரே கூட கைது செய்யப்பட்டுள்ளார் என்கிறார் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்.

மம்தா பானர்ஜியின் பவானிபூர் இடைத்தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை

 மாலைமலர் : மம்தா பானர்ஜி போட்டியிடுட்ட பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் 53.32 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.
கொல்கத்தா:   மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். என்றாலும் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றதில் இருந்து 6 மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினராக வேண்டும்.
அதற்கேற்ப பவானிபூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பவானிபூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். பவானிபூர் தொகுதியுடன் சாம்செர்கஞ்ச், ஜாங்கிபூர் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து ..200 கோடி ரூபாய் ஜீவனாம்சதை வேண்டாம் என உதறிய சமந்தா

பெயர்கள் மட்டுமே மாறியது

Kalaimath  - tamil.filmibeat.com :  சென்னை: நாக சைதன்யாவின் குடும்பத்தினர் ஜீவனாம்சமாக 200 கோடி ரூபாய் கொடுப்பதாக முன்வந்தும் அதனை வேண்டாம் என மறுத்துள்ளார் நடிகை சமந்தா.
நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யா விவாகரத்துதான் தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக உள்ளது.
சமந்தா - நாக சைதன்யா ஜோடி பல படங்களில் இணைந்து நடித்துள்ளது.
ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய இவர்களது பழக்கம் பின்னர் காதலாக மாறியது.
சுமார் 7 வருடங்கள் இருவரும் காதலித்தனர். இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். 2017ஆம் ஆண்டு அக்டோபரில் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கோவாவில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இருவரும் பிரிவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இருவரும் ஒரே மாதிரியான போஸ்டரையே தங்களின் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தனர். இருவரும் ஷேர் செய்த போஸ்டரில் பெயர்கள் மட்டுமே மாறியிருந்தது.