சனி, 2 மே, 2015

உலகின் மிகபெரும் புத்தர் சிலை இலங்கையில் முத்தையா ஸ்தபதி செதுக்கினார்

சென்னையைச் சேர்ந்த சிற்பி (ஸ்தபதி) ஒருவர் வடிவமைத்து ஒரே கல்லில் 67.5 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை இலங்கையின் குருநாகல் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. ரம்பொடகல மகாவிகாரையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புத்தர் சிலைதான் உலகிலேயே மிகப்பெரிய ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சமாதி நிலை புத்தர் சிலை.
இந்த சிலையை இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரைநீக்கம் செய்துவைத்தார்.
இந்தச் சிலையை, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஸ்தபதியான எம். முத்தைய்யா வடிவமைத்து உருவாக்கியிருக்கிறார்.
ரம்பபொடகலவில் உள்ள ஒரு மலைக்குன்றை தேர்வுசெய்து, அதில் புத்தர் சிலையை வடிக்கும் பணிகள் 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி துவங்கின.

சிவாஜியின் தெய்வமகனை காப்பி அடித்த ஹாலிவூட் வெற்றி படம்! Pirates of the Caribbean: At World’s End

maxresdefault1969 ல் வெளியானது ‘தெய்வ மகன்’ திரைப்படம். அதில் இரண்டாவது மகனாக வரும் மூன்றாவது சிவாஜியின் பாவங்கள்; ‘விடலைத்தனமான சேஷ்டைகள், செயற்கையாக இருக்கிறது’ என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. எனக்கும் முதல்முறை பாரக்கும்போது கோமாளித்தனமாகத் தோன்றியது.
2007 ல் வெளியான ‘Pirates of the Caribbean: At World’s End’ என்ற ஹாலிவுட் படத்தில், ‘Johnny Depp’ ன் நடை, பாவனை, நகம் கடித்தல், உடல் மொழி, வசனம் பேசுகிற முறை எல்லாமே அப்படியே தெய்வமகனில் 3 வது இளைய சிவாஜியின் நடிப்பை முற்றிலும் தழுவியதாக இருந்தது.
‘Johnny Depp’ ன் இந்த நடிப்பு, மிகச் சிறப்பாக இருக்கிறது என்று உலகம் முழுக்கக் கொண்டாடப்பட்டது. தெய்வ மகன் வெளியானபோது Johnny Depp ன் வயது 6.
ஒரு வேளை தெய்வ மகனை பார்த்திருப்பாரோ Johnny Depp? இது மிகைப்படுத்தப்பட்ட கேள்வியாகத் தோன்றலாம். ஆனாலும் தவிர்க்க முடியவில்லை.
‘தெய்வ மகன்’ ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்பது ஒரு கூடுதல் தகவல்.  mathimaran.wordpress.com

இந்திரா காந்தி சர்வதேச முனையத்துக்கு உலகின் சிறந்த விமான நிலைய விருது

தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு 2014-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலைய விருது கிடைத்துள்ளது. ஜோர்டானில் ஏப்ரல் 28-ம் தேதி நடைபெற்ற சர்வதேச ஏர்போர்ட் கவுன்சில் ஆசிய/பசிபிக்/ உலக ஆண்டுக் கூட்டத்தில் விமான நிலைய சேவைத் தரம் விருதை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வென்றது. விமான நிலைய சேவை தர அமைப்பின் 300 உறுப்பினர்களின் தர நிலைகளின் படி 5 புள்ளிகளுக்கு டெல்லி விமான நிலையம் 4.90 புள்ளிகள் பெற்றதையடுத்து இந்த விருதை வென்றது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம். அதாவது, ஆண்டு ஒன்றிற்கு 2 கோடியே 50 லட்சம் முதல் 4 கோடி பயணிகளை நிர்வகித்த விதம் என்ற வகைமையின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் முதல்வரின் பேருந்து பாலியல் கொலை! ஊத்தி மூட பிரகாஷ் சிங் பாதல் முயற்சி!

பஞ்சாபில் ஓடும் பஸ்சில் இருந்து சிறுமியை தாயுடன் தள்ளிவிட்ட பஸ் நிறுவனத்திற்கு தடை விதித்து துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.> பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடும் பஸ்சில் தாயுடன் சென்ற சிறுமியை கண்டக்டர் மற்றும் சில இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்தனர். இதை தடுக்க முயன்ற போது அந்த கும்பல் இருவரையும் பஸ்சில் இருந்து தள்ளி விட்டது. இதில் அந்த சிறுமி பலியானார். அவரது தாயார் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் தொந்தரவு நடைபெற்றதாக கூறப்படும் தனியார் பஸ் துணை முதல்–மந்திரி சுக்பிர் சிங் பாதலின் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதால் சம்பவத்தை விபத்தாக மாற்ற ஆளும் அகாலி தளம் கட்சி முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

பஞ்சாப் முதலமைச்சரின் பஸ்ஸில் பாலியல் பலி! பணம் வேண்டாம் நீதிதான் வேண்டும் பெண்ணின் தந்தை ஆவேசம்


பஞ்சாம் மாநிலம் மோகா என்ற பகுதியில் பாலியல் பலாத்காரத்தை எதிர்த்த சிறுமி பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தாயும் படுகாயம் அடைந்தார். சம்பவம் நடந்த பேருந்து பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங்கின் மகனுக்குச் சொந்தமானது ஆகும். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், சிறுமியின் உடலை வாங்கவும், மாநில அரசு சார்பில் அளிக்க முன் வந்த 20 லட்சம் நிதியுதவி, அரசு வேலையையும் ஏற்க மறுத்துவிட்ட சிறுமியின் தந்தை, எங்களுக்கு நிவாரணம் வேண்டாம், நீதிதான் வேண்டும். பேருந்து உரிமத்தை ரத்து செய்து, அதன் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.dinamani.com

குஜராத்தின் பவர் ஸ்டார் மோடி: மே தின பேரணியில் பரபரப்பு ஏற்படுத்திய பிளக்ஸ்!

திருச்சி: மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் திருச்சியில் நடந்த மேதின விழா  ஊா்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் நேற்று மே தின ஊா்வலத்டஅனுமதி கேட்டு போலீசில் மனு அளிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் தடையை மீறி பேரணி நடத்த திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மகஇகவினா் 300க்கும் மேற்பட்டோர், காந்தி மார்கெட் பகுதிகளில் குவிந்தனா். கூட்டம் அதிகமானதை  தொடர்ந்து அங்கு போலீ ஸார் குவிக்கப்பட்டனர். பிறகு வேறுவழியின்றி மாற்று பாதையில் பேரணி நடத்திக் கொள்ள கடைசி நேரத்தில் அனுமதி வழங்கினர்.

பன்னீருக்கு ஸ்டாலின் : Q :உங்கள் கடமை என்ன தெரியுமா? A: ஜெயாவுக்காக கமிசன் வாங்குதல் கேவி கேவி அழுதல் கோவில் கோவிலாக ......

கடமையை உணர்ந்துதான் செயல்படுகிறீர்களா?" என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள திறந்த மடலில் கேள்வி எழுப்பியுள்ளார். அக்கடிதத்தில், "தமிழகத்தைச் சூழ்ந்துள்ள தற்போதைய நிலைமைகள் குறித்து உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வரவே இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன்.
நீங்களும், உங்கள் அமைச்சரவை சகாக்களும், சிறிதும் கவலைப்படாமலும் அறியாமலும் இருக்கும் தமிழகத்தின் யதார்த்த நிலைகள் பற்றி தான் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் தொழில் தொடங்க ஆர்வத்துடன் நம் மாநிலத்தை நோக்கி அணி அணியாக வந்த காலம் ஒன்று இருந்தது. அப்போது தமிழகம் ஆற்றல் நிறைந்ததாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும், தொழில்நேயம் கொண்டதாகவும் திகழ்ந்தது.

அனைத்து பிரிவு ரத்தத்தையும் உடலில் செலுத்த முடியும் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கனடா,மே.01 (டி.என்.எஸ்) ‘ஓ’ பிரிவு போன்று எல்லா பிரிவு ரத்தத்தையும் உடலில் செலுத்த முடியும் என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.>ரத்தத்தில் ‘ஓ’ பிரிவு அனைவரின் உடல்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையாகும். அதே நேரத்தில் ஒருவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படும் போது வங்கியில் ‘ஓ’ ரத்த பிரிவோ, அல்லது நோயாளிக்கு தேவைப்படும் அவரது சொந்த பிரிவு ரத்தம் கிடைக்காத நிலையில் கடும் அவதி ஏற்படுகிறது.அதை தவிர்க்க விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக தீவிர முயற்சி செய்து வந்தனர். தற்போது அதற்கு உரிய பலன் கிடைத்திருக்கிறது. கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிதாக ஒரு ‘என்சைம்’ (நொதிப் பொருள்) கண்டுபிடித்துள்ளனர்.அதை ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு ரத்தத்தில் கலந்து விட்டால் அவற்றில் உள்ள சர்க்கரை சத்து நீங்கிவிடும். அதை தொடர்ந்து அந்த பிரிவு ரத்தமும் ‘ஓ’ பிரிவு ரத்தம் போன்று ஆகிவிடும். அதை நோயாளியின் உடல் ஏற்றுக் கொள்ளும்.

தீஸ்தா சேதல்வாத் மீது 6 குற்றவியல் வழக்குகள்! பாஜக NGO களை பார்த்து ஏன் பயப்படுகிறது? குஜராத் படுகொலைகள்?

ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களுக்கு அஞ்சாமல் 2002 குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக போராடி வரும் தீஸ்தா சேதல்வாத் சென்னை வந்திருந்த போது வினவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் 2-ம் பகுதி. 2. மோடி அரசு ஏவி விட்டிருக்கும் பழிவாங்கும் நடவடிக்கைகள்!தீஸ்தா சேதல்வாத்" /> இந்த அமைப்பை எதிர்தது நிற்பதால்தான் எங்களை பழிவாங்கும் நோக்கில் 6 குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
2004-ல் சாட்சியங்களை உருவாக்கியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பினர். 2010-ம் ஆண்டில் பிணங்களை தோண்டி எடுத்ததாக குற்றச்சாட்டு, அடுத்து உச்சநீதிமன்றத்தில் பொய் சாட்சியம் சொல்ல வைத்ததாக குற்றச்சாட்டு. அவை எடுபடவில்லை என்றதும் இப்போது நிதி விவகாரத்தை பயன்படுத்துகிறார்கள்.

வெள்ளி, 1 மே, 2015

பேராசிரியர் நன்னன் : 100 ஆண்டுகள் அடங்கிக் கிடந்த பார்பனீயம் படம் எடுத்து ஆட நினைக்கிறது

சென்னையில் இராயப்பேட்டை யில் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற சென்னை புத்தக சங்கமத்தில் (21.4.2015) மாலைநேர நிகழ்வில் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா.நன்னன் பங்கேற்று  பேசினார். பெரியார் பேருரையாளர் மா.நன்னன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் இயக்க வெளியீடுகளை வழங்கினார்.
பேராசிரியர் மா.நன்னன் பேசும்போது குறிப்பிட்ட தாவது:
இன்று ஒரு நல்ல கருத்தைப்பற்றி கொஞ்ச நேரம்  சொல்லலாம் என்று விரும்புகிறேன். இந்த புத்தகச் சங்கமம் ஏற்பட்டிருப்பதே ஒரு முன்னேற்றம்தான். நூலுக்காக, நூல் பதிப்புக்காக என்று நடைபெறுவது மனித வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம்தான். ஆசிரியர் அவர்கள் இதற்காக பெருமுயற்சி எடுத்துக்கொண்டு நடத்துகிறார்கள். சென்னைப் புத்தகச் சங்கமத்தை ஏற்பாடு செய்து நடத்துபவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

பழந்தமிழர் கடல் வணிகம் 5

தமிழக மக்களின் வணிகக் கண்ணோட்டம் எழுத்தாளர்: கணியன் பாலன் : தொல்காப்பியம், சங்க இலக்கியம் போன்றவற்றில் தலைவன் பொருள்வயிற்பிரிவு மேற்கொள்வதாக ஒரு செய்தி குறிப்பிடப்படுகிறது. இது குறித்து பொ. வேல்சாமி என்பவர், இச்செய்தி அக்காலகட்டத் தமிழ் இளைஞர்கள் பொருள் ஈட்டுவதற்காக அக்கம்பக்கத்து நாடுகளுக்குப் பயணம் செய்தார்கள் என்பதைக் குறிப்பதாகும் என்கிறார். மேலும் அவர் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த மாக்கோபோலோகூட, “ஆண் மக்களுக்கு பதின்மூன்று வயதாகிவிட்டால் பெற்றோர்கள் அவர்களை வீட்டில் வைத்துக்கொள்வது இல்லை. அந்த வயதில் வணிகம் செய்து பொருள் ஈட்டும் ஆற்றலை அவர்கள் பெற்றுவிடுகிறார்கள் என்றும் அவர்களை வளர்க்கும் பொறுப்பு அதற்குமேல் தங்களுக்கு இல்லை என்றும் பெற்றோர்கள் கருதுகிறார்கள்.

20 தமிழர்கள் கொலை lசிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது: ராஜ்நாத் சிங்

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ராஜ்யசபாவில் தமிழக எம்.பி.க்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். தமிழர்கள் படுகொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 'Order CBI probe on Chittoor killings,' demands Opposition அப்போது அதற்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியவர்களை பிடிக்க சென்ற போலீசாரை நூற்றுக்கணக்கான கடத்தல்காரர்கள் சூழ்ந்து கொண்டு கற்களாலும், பயங்கர ஆயுதங்களாலும் தாக்கினர். இதையடுத்து தற்காப்புக்காக அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 20 பேர் பலியாகினர்.

சோனியா அகர்வாலின் பெருந்தன்மையை போற்றி புகழும் விவேக்

விவேக், பாக்யராஜ், சோனியா அகர்வால், ராஜேந்திரன், மனோபாலா, ஆர்த்தி, செல் முருகன், இம்மான் அண்ணாச்சி என காமெடி நடிகர்கள் பட்டாளம் சங்கமம் ஆகியிருக்கும் திரைப்படம் பாலக்காட்டு மாதவன். சந்திரமோஹன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீடு சமீபத்த்ல் நடைபெற்றது. அதில் விவேக் பேசிய போது : கதாநாயக நடிகைகள் எல்லாருமே தங்கள் வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்றால் நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று பேட்டி யெல்லாம் கொடுப்பார்கள். ஆனால் காமெடியே வாழ்க்கையாக, சிரிக்க வைப்பதையே தொழிலாக உள்ள ஒரு காமெடியன் கூட நடிக்க மட்டும் வர மாட்டார்கள். ஆனால் என் படத்தில் என்னுடன் நடிக்க சோனியா அகர்வால் சம்மதித்தார் .அதற்காக சோனியா அகர்வாலுக்கு நன்றி. அது மட்டுமல்ல. அவருடன் நடிக்கும் போது அவரது இடுப்பை நான் கிள்ளுவது போன்ற காட்சி இருந்தது. அப்படி நடிக்க நான் தயங்கினேன். கூச்சப்பட்டேன். ஆனால் சோனியா அகர்வால் கூச்சப்பட வேண்டாம் கிள்ளுங்க நடிப்பு தானே என்றார்.

இலங்கை இந்திய படகு சேவைக்கு பன்னீர்செல்வம் முட்டு கட்டை! பின்னணியில் விமான நிறுவனங்கள்?

தமிழக முதல்வர், மாநில அரசின் தலைமைச் செயலர் மூலம் அனுப்பிய கடிதத்தில் இரு நாடுகளுக்கும் இடையே படகுச் சேவையை செயல்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ராமேசுவரத்தில் இருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு இடையிலான பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை ஏன் நிறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு மத்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக மக்களவையில் உறுப்பினர்கள் வியாழக்கிழமை எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பொன். ராதாகிருஷ்ணன் அளித்த பதில் வருமாறு:
2011-இல், இந்திய - இலங்கை அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு படகுப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. அப்போது, படகு சேவையைத் தொடங்க வேண்டாம் என்று தமிழக முதல்வர் சார்பில் அரசின் தலைமைச் செயலர், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேயர் சைதை துரைசாமியின் ஜெயலலிதா அஷ்டோத்தர சதநாமாவளி ! ஆடுவதும் பாடுவதும் காசுக்கு நாம ......


சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி மேயர் சைதை துரைசாமி சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:- பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்வது என்பது ஜெயலலிதாவின் ரத்தத்தில் கலந்திருக்கும் குணநலன். ஆட்சியில் இருக்கும்போதும் சரி, அதிகாரம் கையில் இல்லாத போதும் சரி, கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி, மக்களுக்கு உதவிகள் செய்திடும் மாசில்லாத் தங்கம் அவர். 8-வது வள்ளல் என பெயர் எடுத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஒரே வாரிசாய் அரசியலில் மட்டுமல்ல, வரையாது வழங்கும் வள்ளல் தன்மையிலும் குறையாது விளங்கும் குலவிளக்கு அவர்.  வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வள்ளலாரை போல வாடினாராம் மக்களின் முதல்வர் ம்ம்ம்ம் ஒருத்தரையும்   விட்டு  வைக்க  மாட்டாய்ங்க 

வியாழன், 30 ஏப்ரல், 2015

பஞ்சாப்: ஓடும் பஸ்ஸில் தாயையும் மகளையும் ஒரே நேரத்தில் பாலியல் பலாத்காரம்! மகள் பலி! முதலைமைச்சருக்கு சொந்தமான பஸ்!

அமிர்தரசஸ் - பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் தன் 14 வயது மகள் மற்றும் 10 வயது மகனுடன் குருத்வாரா கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். அவர்கள் ஏறிய தனியார் பஸ்சில் பயணிகள் மிக மிக குறைவாகவே இருந்தனர். சுமார் 10 கி.மீ தூரம் கடந்திருந்த நிலையில் பஸ்சில் இருந்த கண்டக்டரின் உதவியாளர் எழுந்து வந்து தாயாருடன் இருந்த இளம்பெண்ணிடம் தகாத செயல்களில் ஈடுபட்டார்.
இதை அந்த பெண்ணின் தாய் தட்டிக் கேட்டார். உடனே அந்த நபர் அந்த பெண்ணை அடித்து உதைத்தார். பஸ்சில் இருந்த யாரும் அதை தடுக்கவில்லை. அதற்கு பதில் அந்த பெண்ணிடமும் அவரது மகளிடமும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர். 6 பேரிடம் சிக்கி கொண்ட தாயும், மகளும் தப்பிக்க வழியில்லாமல் படாதபாடு பட்டனர்.
ஒரு கட்டத்தில் தாயும், மகளும் டிரைவரிடம் ஓடி சென்று பஸ்சை நிறுத்துங்கள் என்று கதறினார்கள். ஆனால் பாலியல் அட்டகாசத்தில் ஈடுபட்ட கும்பல் டிரைவருக்கு நண்பர்கள் என்பதால் டிரைவர் பஸ்சை நிறுத்தவில்லை.

10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை ! மலாலா கொலை முயற்சி வழக்கு

பாகிஸ்தானில் மலாலாவை படுகொலை செய்ய முயற்சித்த குற்றத்துக்காக 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கு அருகே பள்ளி முடித்து திரும்பிக் கொண்டிருந்த சிறுமி மலாலா மீது தாலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது கழுத்து மற்றும் தலையில் குண்டுகள் பாய்ந்து மலாலா உயிருக்குப் போராடினார். ராவல்பிண்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனளிக்காத நிலை மற்றும் தாலிபான்களின் தொடர் மிரட்டல்களை அடுத்து பாகிஸ்தான் அரசு மற்றும் இங்கிலாந்து அரசு உதவியோடு பர்மிங்ஹாமின் எலிசபெத் மருத்துவமனையில் மலாலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.

சட்டத்தின் ஆட்சியை கேலிக்கூத்தாக்கிய ஜெயலலிதாவுக்கு, இது சரியான தீர்ப்பே.

நீதிபதி தீபக் மிஸ்ராThe  learned  Appellate  Judge,  after  receipt  of  our judgment sent today, shall peruse the same and be guided by the observations made therein while deciding the appeal.ஜெயலலிதாவின் மேல் முறையீட்டை முடிவு செய்கையில், எங்கள் தீர்ப்பு கையில் கிடைத்த பிறகு, அத்தீர்ப்பை படித்துப் பார்த்து, அதில் கூறியவற்றை மனதில் வைத்து, தீர்ப்பு வழங்க வேண்டும்.
இதுதான் உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு.   இந்தத் தீர்ப்பு கிட்டத்தட்ட குமாரசாமி, ஜெயலலிதாவை தண்டிக்க வேண்டும் என்று மறைமுகமாக சொல்வது போலவே உள்ளதா என்றால் அப்படித்தான் உள்ளது.  வழக்கமாக கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக தீர்ப்பளிக்கையில் நீதிபதிகள், நாங்கள் இந்த தீர்ப்பில் கூறியுள்ள கருத்துக்கள், எந்த வகையிலும் தீர்ப்பளிக்கும் நீதிபதியின் எண்ணத்தை பாதிக்கக் கூடாது.இந்த கருத்துக்களை நிராகரித்து விட்டு, சாட்சிகளையும், ஆவணங்களையும் பரிசீலித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றே கூறுவார்கள்.
jjsasikalanakeeranஇது முழுக்க முழுக்க நீதிமன்ற மரபை மீறிய தீர்ப்பு. நீண்ட நாட்கள் குற்றவியல் வழக்குகளில் அனுபவம் பெற்ற ஒரு மூத்த வழக்கறிஞர் கூறியது “கடந்த 50 ஆண்டுகளாக, லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வந்துள்ள அனைத்து தீர்ப்புகளையும் நான் படித்துள்ளேன்.  இது போன்ற ஒரு தீர்ப்பை நான் பார்த்ததே கிடையாது” என்றார்.
இது நிச்சயமாக வரலாறு படைத்துள்ள தீர்ப்புதான்.  இதனால், ஜெயலலிதாவுக்கு பாதகமா என்றால் நிச்சயம் பாதகமே.    உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடம் எப்படி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று மூவர் அமர்வு கொண்ட உச்சநீதிமன்றம் சொன்னால், அவர் அதை மீறி எப்படி தீர்ப்பு வழங்க முடியும் ?  மேலும், அரசுத் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள அனைத்து எழுத்து பூர்வ வாதங்களையும் நிராகரியுங்கள் என்று தெளிவாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்கள். ஊழல் சமூகத்துக்கு எத்தகைய தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி, இதை பரிசீலித்து தீர்ப்பு வழங்குங்கள் என்று உத்தரவிட்டால், அது ஜெயலலிதாவுக்கு எப்படி பாதகமாக இல்லாமல் போகும் ? பாதகம்தான்.   ஆனால், வினையை விதைத்தால் தினையையா அறுவடை செய்ய முடியும் ?   இந்திய நீதிமன்றங்களையும், சட்டங்களையும், வளைத்து, நெளித்து, அதன் இண்டு இடுக்களில் எல்லாம் புகுந்து, வெளியேறி, 18 ஆண்டுகளாக ஒரு வழக்கை இழுத்தடித்து, சட்டத்தின் ஆட்சியை கேலிக்கூத்தாக்கிய ஜெயலலிதாவுக்கு, இது சரியான தீர்ப்பே.
ஜெயலலிதாவின் வழக்கில் பல்வேறு தீர்ப்புகளைச் சொன்ன விசித்திரமான நீதிமன்றங்கள், இறுதியாக வழங்கிய இந்தத் தீர்ப்பின் மூலம், இதுவும் விசித்திரமான நீதிமன்றம்தான் என்பதை உணர்த்தியுள்ளது.  ஆனால் இது நியாயத்தின் பக்கம் உள்ள விசித்திரம்..savukkuonline.com
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் – சிலப்பதிகாரம்.

இந்திய போக்குவரத்துக்கு துறையை காபறேட்டுக்ககளுக்கு தாரைவார்க்க துணிந்த பாஜக அரசு!

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்மோடி அரசின் சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா 2015: நாட்டின் பொதுப் போக்குவரத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தாரை வார்க்கும் சதித்திட்டம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
கார்ப்பரேட் கம்பெனிகள் பன்னாட்டுக் கம்பெனிகளின் எடுபிடியான மோடி அரசு, சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா (2015)-ஐ பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இருக்கிறது. பொதுப்போக்குவரத்தில் இருக்கும் அரசின் கட்டுப்பாட்டை முழுவதையும் நீக்கி, மாற்றி கார்ப்பரேட் கம்பெனிகளின் கட்டுப்பாட்டிற்கு விடுவதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். மக்கள் குறைந்த பட்சம் சாலையில் நடமாடுவதற்கான உரிமையையும் போக்குவரத்து உரிமையையும் பறிக்கும் இந்த சட்டத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்வதும் இந்த மசோதாவை முறியடிக்க உடனடியாக வீதியில் இறங்கி போராடுவதும் அவசர அவசியக் கடமையாக உள்ளது. எவ்வளவு வேகமாக மீண்டும் கும்பனி ஆட்சி இந்தியாவில் காலூன்ருகிறது? 

அந்நியன் தசாவதாரம் ஆஸ்கார் ரவிச்சந்திரன் சொத்துக்களை பறிமுதல் செய்தது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி!!

என்ன காரணத்துக்காகவும் தனது புகைப்படம் பத்திரிகைகளில் வந்துவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தவர் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இதற்காகவே தனது சொந்தப்பட விழாக்களில் கூட அவர் தலைகாட்டுவதில்லை. ஆனால் காலத்தின் கோலம் பாருங்கள். இன்று அவரது சில சொத்துக்களை வங்கிகள் ஏலம் போடும் விளம்பரத்தில் அவர் படம் தினசரிகளில் வெளியாகியிருக்கும் அவலம் நிகழ்ந்திருக்கிறது. Aascar Ravichandiran's properties come to bank auction ஆரமபத்தில் சில கோடி பட்ஜெட்களில் படங்களைத் தயாரித்து வந்த ஆஸ்கார் ரவி, அன்னியன், தசாவதாரம் படங்களை 30 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து மெகா பட்ஜெட்டில் தயாரித்தார். அடுத்து, ஐ படத்தை 75 கோடி பட்ஜெட்டில் தயாரித்தார். அதுமட்டுமல்ல, ஒரே நேரத்தில் பல படங்களையும் தயாரித்து வந்தார்.

டாப்ஸி: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது தவறில்லை!

திருமணம் பற்றி நடிகை டாப்சி சர்ச்சை கருத்தை வெளியிட்டு உள்ளார். கல்யாணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது தவறல்ல என்று அவர் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிரத்னம் இயக்கி சமீபத்தில் ரிலீசான ‘ஓ காதல் கண்மணி’ படம் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் கதையம்சம் கொண்டது. இதில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ளனர். இந்த படத்தின் சர்ச்சை கதை பற்றி நித்யாமேனன் கூறும்போது, முந்தைய காலங்களில் திருமணத்துக்கு முன் மணமக்கள் சந்திப்பது இல்லை. பார்ப்பதும் இல்லை. இப்போது அப்படி இல்லை. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது அவரவர் விருப்பத்தை பொருத்தது. அது தவறல்ல’’ என்றார்.

திருச்சி சுங்க அலுவலகத்தில் மேலும் பல கிலோ தங்கம் களவு போய்விட்டதாம்! கஸ்டம்ஸ் கஷ்டம்ஸ் ?

திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் மேலும் 15 கிலோ தங்கம் காணாமல் போயிருப்பது சிபிஐ அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 15 கிலோ தங்கம் காணாமல் போனது குறித்து திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தின் கண்காணிப்பாளர் முகமது சாருக், ஆய்வாளர் செந்தில் குமார் ஆகிய இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, இந்த விவகாரத்தில் சந்தேகம் எழுகிறது. அதாவது முதலில் 15 கிலோ காணாமல் போனது என்றனர். தற்போது மீண்டும் 15 கிலோ காணாமல் போனது என்றனர். விமானம் மூலம் கடத்தி வரப்படும் தங்கங்கள் இந்த அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும் தங்கம் காணாமல் போனதாக குற்றச்சாட்டு தற்போது வந்துள்ளது. அதாவது இங்கு வைக்கப்பட்டிருந்த தங்கக்கட்டிகள் வேலை செய்யும் ஊழியர்களால் பெருமளவில் களவு போயிருக்கலாம். அதனை வெளியே சொன்னால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைவார்கள் என்பதற்காக படிப்படியாக காணாமல் போனதாக அறிவிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார். ஜெ.டி.ஆர்.nakkheeran.in

நேபாள நிலநடுக்கம்: 500 குழந்தைகளை பாபா ராம் தேவ் தத்தெடுக்க போகிறானாம்? நல்ல பிசினெஸ் வேறென்ன இழவு ?

ஹரித்துவார் - நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பெற்றோரை இழந்த 500 குழந்தைகளை யோகா குரு பாபா ராம்தேவ் தத்தெடுத்துள்ளார். நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, காத்மண்டுவில் தங்கியிருந்த, யோகா குரு ராம்தேவ், கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி திரும்பினார்.
நிலநடுக்கத்தால் அனாதைகளான, 500 குழந்தைகளை, அவர் தத்தெடுத்துள்ளார்.நேபாளத்தில் உள்ள, ராம்தேவின், பதஞ்சலி யோகா பீடத்தில் தங்கியுள்ள, ஆச்சார்ய பாலகிருஷ்ணா, தத்தெடுத்த குழந்தைகளின் தேவைகள் மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வார்.
குழந்தைகள், பதஞ்சலி யோகா பீடத்தின் மருத்துவமனை மற்றும் யோகா பீடத்திற்காக புதிதாக கட்டப்பட்ட வளாகத்தில் தங்க வைக்கப்படுவர். அவர்களுக்கு 5ம் வகுப்பு வரை கல்வி, உணவு, இருப்பிடம் மற்றும் மருத்துவ வசதி அளிக்க, பதஞ்சலி யோகா பீடம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.வெப்துனியா com

நடிகை விஜயலக்ஷ்மி: நான் முஸ்லிமாக மாறமாட்டேன் நான் நானாகவும் அவர் அவராகவும் இருப்போம்!


சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி, உதவி இயக்குநராக உள்ள பெரோஸ் முகமதுவை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இப்போது பெற்றொர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.
சமீபத்தில், இனிமேல் நடிப்பதில் என்கிற முடிவை எடுத்திருந்தார் விஜயலட்சுமி. நடித்தது போதும். விரைவில் தயாரிப்பாளர் ஆகிறேன். படம் பற்றிய விவரத்தை விரைவில் அறிவிக்கிறேன். அனைவருடைய ஆதரவும் எனக்குத் தேவை என்று அவர் பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டார்.  இதையடுத்து விஜயலட்சுமியின் திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியானது.
விஜயலட்சுமி - பெரோஸ் முகமதுவின் திருமணம் செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ளது என்று விஜயலட்சுமியின் சகோதரி நிரஞ்சனி அகத்தியன் இந்தச் செய்தியை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். 

ஜெயலலிதாவின் வழக்குகளில் நீதி பரிபாலனம் பிறழ்ந்துள்ளது? சட்டம் ஒரு இருட்டறை? எப்போதும் அல்ல?

சட்டம் ஒரு இருட்டறை.  அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு.  ஏழைக்கு எட்டாத விளக்கு என்றார் அறிஞர் அண்ணா. ஆனால் ஜெயலலிதா போன்ற பணமும் செல்வாக்கும் படைத்தவர்கள், சட்டத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும், அணைத்து, இருட்டாக்கிட, இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களை வைத்து முயற்சி செய்தனர்.18 ஆண்டுகாலமாக ஜெயலலிதாவின் வழக்கில் இருட்டறையில் இருந்த சட்டத்தின் மீது தற்போது வெளிச்சம் பாய்ச்சப்பட்டுள்ளது.
பராசக்தி படத்தில் குணசேகரன் நீதிமன்றத்தில் பேசுவான் “இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது” என்று.  ஆனால் ஜெயலலிதாவின் வழக்கைப் பொறுத்தவரை, இந்த வழக்குதான் பல விசித்திரமான நீதிமன்றங்களை சந்தித்திருக்கிறது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு திமுக ஆட்சி இருந்தவரை, இந்த வழக்கின் விசாரணை ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருந்தது.  2001ல் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக ஆன பிறகு, நிலைமை தலைகீழ் ஆனது.   2001ல் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக ஆன பிறகு, சாட்சிகள் வரிசையாக மீண்டும் அழைக்கப்பட்டனர்.  ஏற்கனவே சாட்சியம் சொன்னவர்களை மீண்டும் விசாரிக்க அழைக்கப்பட்டனர்.   அழைக்கப்பட்ட அத்தனை பேரும் பிறழ் சாட்சியங்களாக மாறினர்.

அரசு அங்கீகாரம் இல்லாத ரஜினியின் ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி 4 ஆண்டுகளாக அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை

நடிகர் ரஜினிகாந்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான, சென்னை, கிண்டி யில் செயல்படும் ஆஷ்ரம் பள்ளி, கடந்த, நான்கு ஆண்டுகளாக அங்கீகாரமின்றி செயல்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 'ஸ்ரீ ராகவேந்திரா எஜுகேஷனல் சொசைட்டி' என்ற அறக்கட்டளையை நடிகர் ரஜினிகாந்த் நடத்தி வருகிறார். அறக்கட்டளை செயலர், லதா ரஜினிகாந்த். இந்த அறக்கட்டளை சார்பில், சென்னை, கிண்டி, ரேஸ் கோர்ஸ் சாலையில், ஆஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, 500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.   அறக்கட்டளை என்றுதான் பெயர்..ஆனால் பகற்கொள்ளையாக அந்த பள்ளி இயங்குகின்றது. பள்ளியின் கட்டணம் வெகு ஜோர். பள்ளியில் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் உணவு தரமில்லாதது .அறக்கட்டளை என்றால் ஓரளவேனும் பிள்ளைகளுக்கு உதவிடும் பொருட்டு நடத்திட வேண்டும்..அனால் இவர்கள் கொள்ளையோ கொள்ளை அடிக்கின்றார்கள். பல மாணவர்கள் சில ஆண்டுகளில் வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டார்கள் என்பதை விசாரித்து அறிந்து கொள்ளலாம்..இது பொய்யான செய்தி அல்ல..நண்பரின் பிள்ளைகள் இங்கேதான் படித்தார்கள்.ஒரே ஆண்டுதான்.வேறு பள்ளிக்கு மாற்றிகொண்டார்கள்.. அவ்வளவு தரம்..ராகவேந்திரர் பெயரில் ஓர் கொள்ளை..

லஞ்சம் : 7 ஆண்டுகள் சிறை! புதிய சட்டம்! கொடுத்தாலும் வாங்கினாலும்! அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: லஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்தத்திற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. லஞ்ச வழக்குகளுக்கு, அதிகபட்சம், ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்க, ஏற்கனவே சட்டத்தில் இடமுள்ள நிலையில், 'லஞ்சம், மிகக் கொடிய குற்றம்' என, திருத்தம் கொண்டு வர, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தங்களுக்கு சாதகமாக அரசு அலுவலகங்களில் வேலை நடைபெற அல்லது தங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைப்பதற்காக, அரசு அதிகாரிகளுக்கு, தனிநபர்கள் லஞ்சம் கொடுக்கின்றனர். இதனால், நேர்மையான நிர்வாகம் நடைபெறாத நிலை ஏற்படுகிறது.இதைத் தடுக்க, 1988ல், லஞ்ச தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின் படி, லஞ்சம் பெறும் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம், ஆறு மாதங்கள் முதல், அதிகபட்சம், ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும்.ஐ.நா., பரிந்துரை: இது போன்ற தண்டனைகள் தான், பெரும்பாலான உலக நாடுகளில் வழங்கப்பட்டன.

புதன், 29 ஏப்ரல், 2015

ரூபா மஞ்சரியின் சிவப்பு’. 2 வருடமாக தணிக்கை சிக்கல்

நவீன்சந்திரா, ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடித்துள்ள படம் ‘சிவப்பு’. 2 வருடமாக இப்படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டும் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப்போனது. இது குறித்து இயக்குனர் சத்ய சிவா கூறும்போது, ‘இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு தப்பிப்போக நினைக்கின்றனர். அப்படி முடியாதவர்களின் வலி, காதலை உள்ளடக்கிய படம்தான் இது. இலங்கை தமிழர் பிரச்னை சம்பந்தப்பட்ட படம் என்றாலே தணிக்கையில் சான்றிதழ் கிடைப்பது கடினம். இதனால் பல முறை இப்படத்துக்கு ரீ ஷூட் நடத்தப்பட்டது. அதனால்தான் இதன் ரிலீஸ் தாமதமானது. முக்தா ஆர்.கோவிந்த், கீதா தயாரிப்பு. எஸ்.எஸ்.மீடியா தேசிகன் ரிலீஸ். என்.ஆர்.ரகுநந்தன் இசை. மது அம்பாட் ஒளிப்பதிவு’ என்றார். முக்கிய வேடத்தில் நடிக்கும் ராஜ்கிரண் கூறும்போது, ‘இயக்குனர் சொன்னதுபோல் இலங்கை தமிழர் பிரச்னை படத்துக்கு சான்றிதழ் கிடைப்பது கடினமானதுதான். தணிக்கையில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே - See more at: tamilmurasu.org

France முஸ்லிம் மாணவிகளின் நீண்ட கருப்பு உடைக்கு தடை விதித்த பள்ளி நிர்வாகம்

கருப்பு
நிறத்தில் நீளமான பாவாடை அணிந்து வந்த முஸ்லிம் மாணவி ஒருவரை பிரான்சிலுள்ள பள்ளியொன்று, வகுப்புகளில் பங்கேற்பதற்கு தடை விதித்துள்ளது. பிரான்சிலுள்ள பள்ளியொன்றில் மாணவர்கள் ;கடந்த 2004 ஆம் ஆண்டு அங்கு மத நம்பிக்கைகளை வெளிப்படையாக தெரிவிக்கும் எந்தவொரு சின்னங்களுக்கும் சட்டரீதியான தடை பிறப்பித்து சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதை கடுமையாக கடைபிடிக்கும் வகையில் அந்தப் பள்ளியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜெ., வழக்கில் அரசு வக்கீலாக சம்மதித்தது ஏன்? ... மனம் திறந்தார் ஆச்சாரியா tamil.oneindia.com

பெங்களூரு: ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணையில் அரசு வக்கீலாக மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளார் பி.வி.ஆச்சாரியா. பவானிசிங் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டதை செல்லாது என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசு தரப்பு தனது வாதத்தை ஹைகோர்ட்டில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க அளித்த காலக்கெடு வெறும் ஒரே நாள்தான். இந்த ஒருநாளைக்குள், வழக்கு குறித்து படித்து, தண்டனையை உறுதி செய்ய கேட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கர்நாடக அரசு சிக்கியது. அப்போதுதான், ஆபத்பாண்டவராக கர்நாடக அரசின் கண்களுக்கு தெரிந்தார், ஆச்சாரியா. இவர் ஜெயலலிதா வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டபோது, 2005ம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 வருடங்கள் அரசு வக்கீலாக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். நெருக்கடி காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தவர். உடனடியாக சட்ட அமைச்சகம், ஆச்சாரியாவை தொடர்பு கொண்டு உதவ கேட்டுக்கொண்டது. சம்மதித்தார். ஆச்சாரியா. 18 பக்கங்களில், பளார், சுளீர் வாததங்களை தயார் செய்து, ஹைகோர்ட்டில் சமர்ப்பித்தும் விட்டார். ஜெயலலிதா வழக்கு விவரங்களை ஃபிங்கர் டிப்சில் வைத்திருந்த ஆச்சாரியாவை விட்டால் வேறு யார்தான் இந்த பணிக்கு பொருத்தமாக இருந்திருக்க முடியும். இதோ, மீண்டும் புயல் போல கிளம்பியுள்ள ஆச்சாரியா, 'ஒன்இந்தியாவுக்கு' தனது பிரத்யேக பேட்டியை அளித்தார். அதன் விவரம்:

மோடி : இலங்கையில் தற்போது இந்தியாவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது ஆனால் வைகோ எல்லாவற்றையும் கெடுக்கிறார் ?

இலங்கையில், தற்போது இந்தியாவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. இதை பயன்படுத்தி, பிரச்னையை தீர்க்கலாம். ஆனால், தமிழகத்தில் இப்பிரச்னையை பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி தான் நடக்கிறது. இதில் அரசியல் செய்வதையே தமிழகத்தில் சில கட்சிகள் வாடிக்கையாக கொண்டுள்ளன. இப்படி இருந்தால், எப்படி பிரச்னையை தீர்க்க முடியும்? குறிப்பாக, இலங்கை தமிழர் பிரச்னையில், வைகோவால் பிரச்னைகள் தான் ஏற்படுகின்றன. பிரச்னையை புரிந்து கொள்ளாமல், உணர்ச்சிகரமாக பேசுகிறார். சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு வெடிக்கிறார்; அழுகிறார். எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் நடந்தால், என்ன செய்வது? எப்படி பிரச்னையை தீர்க்க முடியும்?
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமையில், 10 கட்சிகளின் பிரதிநிதிகள் குழு, டில்லியில், பிரதமர் மோடியை சந்தித்தபோது பேசப்பட்ட விஷயங்கள் பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன இதுபற்றிய, விவரம் வருமாறு:டில்லியில், பிரதமரை அவரது அலுவலகத்தில், தமிழக பிரதிநிதிகள் குழு சந்தித்தபோது, முதலில், குரூப் போட்டோ எடுக்கப்பட்டது. அது முடிந்ததும், தாங்கள் வந்திருக்கும் நோக்கம் குறித்து, பிரதமரிடம் விஜயகாந்த் சில நிமிடங்கள் பேசினார். பின், கொண்டு வந்திருந்த மனுவை, பிரதமரிடம் அளித்தார்.காவிரியின் குறுக்கே, கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, தி.மு.க., பிரதிநிதிகள் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் அடுத்தடுத்து வலியுறுத்தினர்.

பாஜக, பிரேமலதா, சுதீஷ் ஏற்பாட்டில் டெல்லிக்கு விஜயகாந்த் அடித்த விசிட்!

பிரதமர் சந்திப்பு விவகாரத்தில், திடீர் திருப்பமாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன் கைகோர்த்து சென்ற கட்சிகள், இப்போது அவர் மீது அதிருப்தியில் இருக்கின்றன. மேகதாது அணை உள்ளிட்ட பொதுப் பிரச்னைகளுக்காக, பிரதமரை சந்திக்க சென்ற குழுவில், 10 கட்சிகள் இடம்பெற்றன. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அழைப்பை ஏற்று, இந்த கட்சிகளின் சார்பில், பிரதிநிதிகள் டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.குழுவுக்கு யார் தலை மை என்பதில், 'ஈகோ' பார்க்காமல், தி.மு.க., உள்ளிட்ட பெரிய கட்சிகளும் இதில் இடம்பெற்றன. தமிழகத்தில், எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரண்ட, புதிய அத்தியாயம் துவங்கியதாக, அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. ஆனால், அந்த பேச்சும், அத்தியாயமும் டில்லியிலேயே முறிந்து போனது. தமிழகத்தின் ஒட்டு மொத்த எதிர்கட்சிகளையும்  சினிமா செட்  ப்ரோபெர்டிகளாக யூஸ் பண்ணி விஜயகாந்த் டெல்லிக்கு போனது  பாஜக பிரேமலதாவின் கூட்டு தயாரிப்பாகும் .

இந்திய வரலாறு ஒரு கறை என்று மோடி வெளிநாட்டில் உளறியதற்கு பார்லிமெண்டில் கடும் அமளி

ஐரோப்பிய நாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஆற்றிய உரையின்போது, "இந்தியாவின் 60 ஆண்டுகால கறையைத் துடைப்போம்' எனப் பேசியதைக் கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் புகாருக்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "வெளிநாடுகளில் பிரதமரின் பேச்சுரிமைக்குத் தடையேதும் இல்லை' என்றார். ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதில், ஜெர்மனியிலும், கனடாவிலும் உரையாற்றியபோது, காங்கிரஸ் கட்சியின் 60 ஆண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களைக் குறிக்கும் வகையில், "இந்தியாவின் 60 ஆண்டுகால கறையைத் துடைத்து தூய்மையைக் கொண்டு வருவோம்' என்று மோடி குறிப்பிட்டார். யாரோ நவாஸ் சேரிப் பேசுற பேப்பரை இந்த ஆளு முன்னாடி வச்சுட்டாய்ங்களோ ?அவசரத்திலே இந்த ஆளும் வாசிச்சு தொலைசிருப்பார் விட்டு தள்ளுங்க . இன்னும் என்னன்னா கூத்தெல்லாம் காட்ட போறாகளோ?

10 அடி நகர்ந்த இந்தியப் பகுதிகள்! நேபாள நிலநடுக்கம் காரணமாக....

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தின் தாக்கமாக, இந்தியாவின் சில பகுதிகள் 10 அடி நகர்ந்துள்ளதாக சர்வதேச புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை நேபாளத்தில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் பிகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்தப் பேரிடரின் கோரதாண்டவத்துக்கு நேபாளத்தில் சுமார் 5,000 பேரும், இந்தியாவில் 72 பேரும் உயிரிழந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது கடந்த 81 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமானதாகும். இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இந்தியா, நேபாளத்தின் கீழுள்ள பூமித் தட்டுகள் சில மீட்டர்களுக்கு நகர்ந்துள்ளதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு முன் ஆடிட்டரை பார்க்க சென்றார் அதிகாரி வாக்குமூலம் -

நெல்லை: முத்துக்குமாரசாமி தற்கொலை செய்வதற்கு முன் நெல்லையில் உள்ள ஆடிட்டரை பார்க்க சென்றார் என்று சங்கரன்கோவில் கோர்ட்டில் வேளாண்  அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது மனைவி சரஸ்வதி, நெல்லை  வேளாண் துணை இயக்குனர் சந்திரசேகர், மேற்பார்வையாளர் பீட்டர்ஐசக் மற்றும் தேவேந்திரன், ஓய்வு பெற்ற அதிகாரி ராஜகோபால் ஆகியோர் நேற்று  சங்கரன்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.சரஸ்வதி தனது கணவர் தற்கொலைக்கு யார், யார்? காரணம் என்ற தகவலை  வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதேபோல் வேளாண் அதிகாரி ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தில், நான் கடந்த பிப்ரவரி 20ம்தேதி சேரன்மகாதேவியில் இருந்து  நெல்லைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தேன். அன்று காலை 9 மணிக்கு முத்துக்குமாரசாமி எனக்கு போன் செய்து நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டார்.  அதற்கு நான் ரயிலில் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தேன்.

ஜெ. அப்பீல் மனு தவறு- தண்டனையை உறுதி செய்க: பி.வி. ஆச்சார்யா ! கர்நாடகாவை ஒருதரப்பாக சேர்க்காத ஜெ. அப்பீல் மனு தவறு

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த ஜெயலலிதா, கர்நாடகா அரசை ஒருதரப்பாக சேர்க்காதது சட்டப்படி தவறு என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா அதிரடியாக தமது வாதத்தை முன்வைத்தார். மேலும் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆச்சார்யா தமது வாதத்தில் வலியுறுத்தினார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி குன்ஹா. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதமும் எஞ்சிய மூவருக்கும் தலா ரூ10 கோடி அபராதமும் விதித்தார். Jaya appeal case: Karnataka justifies trial court verdict இதனை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றம் 19வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியது

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் 19வது அரசியல் சட்டத்திருத்த மசோதாவை இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. மசோதாவுக்கு ஆதரவாக 215 வாக்குகளும், எதிர்ப்பாக ஒரே ஒரு வாக்கும் பதிவாயின. ஏழு பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஒருவர் வாக்கெடுப்பைப் புறக்கணித்தார். ஆளும் கட்சியுடன் எதிர்க்கட்சிகளும் இணைந்து மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர சட்டமுலத்திற்கு எதிராக வாக்களித்தார்.
ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார தான் வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தார்.bbc.co.uk

சொத்துக் குவிப்பு வழக்கு – இறுகும் கயிறு.savukkuonline

28TH_JAYA-5P9_2129324f
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங்கின் நியமனம் சரியா இல்லையா என்பதை முடிவு செய்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பவானி சிங்கின் நியமனம் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.   அந்தத் தீர்ப்பிலேயே, இந்த வழக்கை தொடுத்த திமுக பொதுச் செயலர் பேராசிரியர் அன்பழகனின் எழுத்து பூர்வமான வாதங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், உத்தரவிட்ள்ளது.     அந்த வாதங்களை கணக்கில் கொண்டு, நன்கு பரிசீலித்த பிறகே தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு.

இந்த உத்தரவின்படி, இன்று கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் முன்பாக, அன்பழகன் சார்பில், இன்று எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.  அதன் சாராம்சம் பின்வருமாறு.
இந்த வழக்கில் ஜெயலலிதா மற்றும் அவரது தரப்பு வாதங்களாக பின்வருபவை எடுத்து வைக்கப்பட்டன.
1) வளரப்பு மகன் திருமண செலவுகள் சரி வர கணக்கிடப்படவில்லை.
2)    கட்டுமான செலவுகள் மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜெ. வழக்கில் மீண்டும் அரசு வக்கீலாக ஆச்சாரியா? விவரம் தெரிந்தவர் விலைக்கு படியாதவர்!

பெங்களூரு: ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக சிறப்பு அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியாவை நியமிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அரசு வக்கீலாக பணியாற்றியவர் ஆச்சாரியா. ஆனால் அப்போதைய பாஜக அரசிடமிருந்தும், வேறு சிலரிடமிருந்தும் வந்த நெருக்குதல்களால் அரசு வக்கீல் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து தனது சுய சரிதை புத்தகத்திலும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அரசு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டார். ஆனால் ஹைகோர்ட்டில் ஜெ. மேல்முறையீடு செய்தபோது பவானிசிங்கை அரசு வக்கீலாக கர்நாடக அரசு நியமிக்கவில்லை. தமிழக அரசே நியமித்துக் கொண்டது. எனவே, இந்த நியமனத்தை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துவிட்டது. மேலும் கர்நாடக அரசு தனது வாதத்தை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 28ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

நடிகை ஊர்வசி கேரளா அசெம்ப்ளி யில் Full ஜாலி !


ஆந்திரா 20 Tamils விசாரணையை ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அடியோடு நிராகரித்தது !

ஆந்திர மாநிலத்தில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், முதற்கட்ட விசாரணை நடத்திய ஆந்திர காவல்துறையின் விசாரணைக் குறிப்பு ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டது.
ஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு விசாரணை ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை விசாரணைக் குறிப்பை ஆய்வு செய்த நீதிபதி, விசாரணை குறித்த விவரமே இல்லாத குறிப்பை தாக்கல் செய்தது ஏன் என்று காவல்துறையிடம் கேள்வி எழுப்பியது.
மேலும், ஒட்டு மொத்த விசாரணைக் குறிப்பையும் நிராகரிப்பதாக உத்தரவில் கூறியுள்ளது.dinamani.com

உலகை திரும்பி பார்க்கவைத்த திருச்சி சிவா! திருநங்கைகள் மசோதா! It's a rare honour


CHENNAI: It's a rare honour for a parliamentarian to get a private member's Bill, moved by him, passed in the House. The last time this happened in the country was 45 years ago. DMK Rajya Sabha member 'Trichy' Siva has this honour after The Rights of Transgender Persons Bill, 2014, was passed in the Rajya Sabha on Friday. Despite pressure from Union ministers, he refused to withdraw it. திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு தனி நபர் மசோதாவை நிறைவேற வைத்த திமுக எம்.பி. திருச்சி சிவா ஒட்டுமொத்த இந்திய திருநங்கைகளால் பாராட்டப்படுகிறார். அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி.
தனி நபர் மசோதா என்றால் என்ன? அதை எப்படி, யாரெல்லாம் தாக்கல் செய்யலாம்?
அரசால் கவனிக்கப்படாத முக்கியப் பிரச்சினைகள் குறித்து எம்.பி.க்கள் தனி நபர் மசோதாவை தாக்கல் செய்யலாம். தகுதி இருப் பின் நாடாளுமன்ற விவாதத்துக்கு பட்டியலிடப்படும். மொத்தம் தாக்கல் செய்யப்படும் மசோதாக் களில் பத்து மட்டும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அதில் ஐந்தை மட்டும் அன்றைய கூட்டத்துக்கு பட்டியலிடுவார்கள்.
அந்தக் கூட்டத் தொடருக்குள் விவாதம் தொடங்கப்படாவிட்டால் ஐந்து மசோதாக்களுமே காலாவதி ஆகிவிடும். தமிழ் உள்ளிட்ட 22 மாநில மொழிகளை ஆட்சி மொழியாக்க 2007-ல் நான் கொண்டு வந்த மசோதா ஐந்தாண்டுகள் கழித்துதான் பட்டியலுக்கு வந்தது. ஆனால், திருநங்கைகள் மசோதா உடனடியாக அதுவும் ஐந்தில் இரண்டாவதாக பட்டியலிடப்பட்டு பெரும் போராட்டத்துக்குப் பிறகு நிறைவேறி இருக்கிறது.

சொத்துக்காக அடுத்தடுத்து கொலைகள்: தடுக்க தவறிய போலீஸ் - முன்பே எச்சரித்த ‘தி இந்து’! வினோதா எழிலரசி ராமு !



காரைக்காலில் பிரபல சாராய வியா பாரியாக இருந்த ராமு (எ) ராதாகிருஷ்ணனின் முதல் மனைவி வினோதா (38) நேற்று முன்தினம் காரில் சென்று கொண்டிருந்தபோது சீர்காழியில் வழிமறித்து, கொடூர மாக வெட்டிக் கொலை செய்யப் பட்டார்.
சாராய வியாபாரி ராமு சேர்த்த கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளைக் கையகப்படுத்து வதில் ராமுவின் முதல் மனைவி வினோதா, இரண்டாவது மனைவி எழிலரசி ஆகிய இருவருக்கிடையே ஏற்பட்ட போட்டா போட்டியில், எழிலரசிதான் கூலிப்படை வைத்து வினோதாவைப் படுகொலை செய் ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.300 கோடி சொத்து
சாராய வியாபாரி ராமுவின் அசுர வளர்ச்சியால் அவருக்கு காரைக்கால் மற்றும் தமிழகத்தில் சுமார் ரூ.300 கோடி அளவுக்கு சொத்துகள் குவிந்தன. சொத்து தந்த சுகத்தில் முதல் மனைவியை விட்டு எழிலரசியிடம் திரும்பிய ராமு, ஒரு கட்டத்தில் சுமார் ரூ.100 கோடிக்கும் மேலான சொத்துகளை எழிலரசிக்கு அளித்தார்.

நேபாள பூகம்ப பலி 10000-ம் ஆக உயரும் - உலக நாடுகளுக்கு பிரதமர் கொய்ராலா கோரிக்கை

நேபாள நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 10000-ம் ஆக உயரும் என அந்நாட்டு பிரதமர் சுஷீல் கொய்ராலா தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கொய்ராலா, உலக நாடுகளை குடில்கள் மற்றும் மருத்துவ உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். போர்க்கால அடிப்படையில் அரசு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ள அவர், இது சவாலான தருணம். நாட்டுக்கு சிக்கலான நேரம் என்று கூறியுள்ளார். மக்கள் அனைவரும் வீடுகளை இழந்து வெட்டவெளியில் உறங்கும் நிலையில், மழை பெய்து அவர்களின் உறக்கத்தை கெடுக்கின்றது. அதுமட்டுமல்லாமல் பூகம்பத்தால் படுகாயமடைந்த 7000 பேருக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சையும் சவாலானதாக உள்ளது. எனவே உலக நாடுகள் டெண்ட்(குடில்) அமைப்பதற்கான பொருட்களையும், மருத்துவ உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் 9,000 என்.ஜி.ஓ.க்களின் உரிமம் ரத்து

என்.ஜி.ஓ (Non Governmental Organisations) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று, இந்தியாவில் சேவை உள்ளிட்ட பல காரியங்களுக்காக அந்த நிதியை பயன்படுத்துகின்றன. தற்போது வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை (Foreign Contribution Regulation Act) மீறியதற்காக சுமார் 9 ஆயிரம் என்.ஜி.ஓ.க்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, 2009-2010, 2010-2011 மற்றும் 2011-2012 ஆகிய ஆண்டுகளுக்கான வருமான வரி செலுத்துமாறு 10 ஆயிரத்து 343 என்.ஜி.ஓ.க்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வெளிநாட்டிலிருந்து நிதி பெற்றது, அந்த நிதி யாரிடமிருந்து வந்தது, எதற்காக நிதி பெறப்பட்டது, அதை வைத்து என்ன செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை ஒரு மாதத்திற்குள் அளிக்குமாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இனி சங்பரிவார் ஜியோக்கள் மட்டுமே இயங்க முடியும்?

Pakistan மனித உரிமையாளர் சபீன் சுட்டுக் கொல்லப்பட்டார்.


சபீன் மெஹ்மூதுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்த நிலையில், தற்போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
வாகனத்தில் வந்த ஆயுததாரிகள் வாகனத்தைச் செலுத்தியபடியே அவரைச் சுட்டுக் கொன்றனர்.
ஷபீன் மெஹ்மூத் தன் தாயுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சுடப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவர் தயாரும் காயமடைந்தார்.
இதற்கு முன்பாக பல முறை அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்திருக்கின்றன.
ஷபீன் மெஹ்மூத் டி2எஃப் என்று அறியப்பட்ட தி செகண்ட் ஃப்ளோர் என்ற அறக்கட்டளையின் இயக்குனராக செயல்பட்டுவந்தார்.
இந்த அமைப்பு, மனித உரிமை தொடர்பாக தொடர்ந்து கருத்தரங்குகளை நடத்திவந்தது. இதன் மூலம் ஒரு உணவகமும் புத்தகக் கடையும் நடத்தப்பட்டுவந்தன. இங்கே, கராச்சியின் செயற்பாட்டாளர்கள் மாணவர்கள் சந்திப்பது வழக்கமாக இருந்தது.

நேபாளம் நிலநடுக்கம் ஏன்? அதிர வைக்கும் தகவல்கள்!

நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி, அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு தளத்தட்டுகள் நகர்வதனால் இடம் பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்க மானியினால் (செசிஸ்மோமீட்டர்) ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நில நடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதே வேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் சேதத்தை ஏற்படுத்தும். பூமியின் மேற்பரப்பு (லித்தோஸ்பியர்) பெரும் பாளங்களாக அமைந்துள்ளன. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலும் உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் பிளேட்டுகளில் ஐந்து கண்டங்களும் பசிபிக் முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடக்கம். இந்த பிளேட்டுகள் சுமார் 80 கி.மீட்டர் வரை தடிமன் கொண்டதாக இருக்கிறது. இதன் அடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது.

கூட்டணியின் வெற்றிதான் தமிழகத்தை காப்பாற்றும்! எந்த கூட்டணி ?

தேமுதிகவுடன் கூட்டணிக்கான அச்சாரம் போடப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். மேலும், கூட்டணியின் வெற்றிதான் தமிழகத்தைக் காப்பாற்றும் எனவும் அவர் கூறியுள்ளார். சென்னையில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: கேள்வி: விஜயகாந்த் உங்களைச் சந்தித்ததை கூட்டணிக்கான அச்சாரம் என்று எடுத்துக் கொள்ளலாமா? பதில்: அது ஒவ்வொருவரும் தங்களுக்குள் எடுத்துக் கொள்வதைப் பொருத்த விஷயம். திமுகவைப் பொருத்தவரையில் இப்போதே முன் கூட்டியே எதுவும் சொல்வதற்கு இல்லை. ஆனால், இப்போது தமிழகம் உள்ள நிலையில் கூட்டணி தேவை என்பதையும், அந்தக் கூட்டணியின் வெற்றி ஒன்றுதான் தமிழகத்தைக் காப்பாற்றும் என்பதையும் நான் எடுத்துக் கூற விரும்புகிறேன். கேள்வி: விஜயகாந்த் எடுத்துள்ள முயற்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? பதில்: தமிழக மக்களை ஒன்று திரட்டும் முயற்சியை விஜயகாந்த் எடுத்துக் கொண்டதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். அப்படிப் பாராட்டுவதற்கு அடையாளமாகத்தான் திமுக அவருடைய முயற்சிக்கு எல்லா வகையான ஆதரவையும் தரத் தயாராக உள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்dinamani.com

திங்கள், 27 ஏப்ரல், 2015

ஊடகங்களின் ஊழல்தான் இந்தியாவிலேயே மோசமானது! உதாரணம் 2ஜி, 3ஜி அலைக்கற்றை ஏலம்..

தில்லியில் நடைபெற்ற 2ஜி, 3ஜி அலைக்கற்றை ஏலம் பத்தொன்பது நாள்களுக்குப் பிறகு ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. இறுதியில் ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் கோடியில், கடந்த மார்ச் 25ஆம் தேதி ஏல விற்பனை முடிந்திருக்கிறது.
இது வெறும் செய்தி அன்று. இதற்குள் மிகப்பெரிய அரசியல் ஒளிந்திருக்கிறது-. இதே அலைக்கற்றை விற்பனையை வைத்துத்தான் 1.76 லட்சம் கோடி ஊழல் என்று சொல்லி, தி.மு.க.வுக்கு எதிரான ஒரு பெரும் சூறாவளியைச் சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்கள் உருவாக்கின. முன்னாள் நடுவண் அமைச்சர் ஆ.ராசா பதினைந்து மாதங்கள் திகார் சிறையில் இருந்தார். அதே வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இன்னமும் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் இதனை ஊழல் வழக்கு என்று சொல்லுவதே மோசடியாகும். பெங்களூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குதான் ஊழல் வழக்கு. நம் ஊடகங்கள் அதனை சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கு என்று சொல்வதில்லை. சொத்துக் குவிப்பு வழக்கு என்று மட்டுமே கூறுவார்கள். அதிலும் தந்தி தொலைக்காட்சியோ, ‘சொத்து வழக்கு’ என்று மிகக் கவனமாகச் சொல்லும்.

புன்னைகை பூ கீதா காவல் படத்திலும் கதாநாயகி

புன்னகை பூ படத்தில் நடித்தவர் கீதா. அதிலிருந்து அப்பட பெயரும் அவரது நிஜ பெயருடன் ஒட்டிக்கொண்டது. இடையில பட தயாரிப்பில் ஈடுபட்டவர் தற்போது ‘காவல்’ படம் மூலம் மீண்டும் ஹீரோயினாகி இருக்கிறார். விமல் ஹீரோ. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இப்படம் பற்றி இயக்குனர் நாகேந்திரன் கூறியது:கல்லூரியில் படித்தபோது பிஎச்டி ஆராய்ச்சிக்காக கூலிப்படை என்ற சப்ஜெக்ட்டை எடுத்தேன். அதற்காக நிஜமாகவே கூலிப்படையில் இருப்பவர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுத்தேன். அதன் பாதிப்புதான் இப்படம். இதில் விமல் ஜோடியாக புன்னகைப்பூ கீதா நடிக்கிறார் என்றபோது பலரும் பலவிதமாக பேசினார்கள். ஆனால் அவர்தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தது. டூப் போடாமல் அவரே நடித்தார். இதனால் நிறைய அடியும் அவருக்கு பட்டது. அடுத்த படம் இயக்கினாலும் அவர்தான் என்படத்தில் ஹீரோயின்.இவ்வாறு நாகேந்திரன் கூறினார். - See more at: /tamilmurasu.org/

சந்திரபாபு நாயுடுவுக்கு அதிக செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகள்! யாரைப்பார்த்து பயமோ?

ஆந்திர மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒரு கட்டமாக சுமார் ஐந்தேகால் கோடி ரூபாய் விலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய குண்டு துளைக்காத பஸ் ஒன்றை ஆந்திர மாநில அரசு வாங்கியுள்ளது. அடிக்கடி, மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்துவரும் சந்திரபாபு நாயுடு, இந்த பஸ்சில் சுற்றுப்பயணம் செய்யும்போது அவருக்கு தேவையான முழு பாதுகாப்பும் கிடைக்கும். அதேவேளையில், இதுபோல் இட வசதியுள்ள பஸ்சில் அமர்ந்தவாறு சம்பந்தப்பட்ட மாவட்ட வளர்ச்சி பற்றி அம்மாவட்டத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு அவர் ஆலோசனைகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆந்திராவை உலுக்கிய ஹுட் ஹுட் புயலின்போது விசாகப்பட்டினம் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடச் சென்றபோது, சுமார் ஒருவார காலம் அங்கு முகாமிட்டிருந்த சந்திரபாபு நாயுடு பஸ்சில்தான் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மாலைமலர்com

பவானி சிங் மட்டுமா ? ஆளும்வர்க்கமே ஜெயாவுக்காக சேம்சைட் கோல்தானே போடுகிறது

கொள்ளைக் கூட்டத் தலைவி ஜெயலலிதாரைக் கொள்ளையடித்து சொத்து சேர்த்த ஜெயலலிதா மீதான லஞ்ச வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
பவானி சிங் நியமனம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
1991-96-ம் ஆண்டில் ஜெயா-சசி கும்பல் தமிழகத்தையே மொட்டையடித்தது.
“வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெறுவதால் அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அதே நேரம் இவ்வழக்கில் மறு விசாரணைக்கு அவசியமில்லை” என்று அந்தத்  தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
1991-96-ம் ஆண்டில் ஜெயா-சசி கும்பல் தமிழகத்தையே மொட்டையடித்தது. அந்த ஊழல் மலையின் சிறு துளிதான் இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கியிருந்தது. பின்னர் 2001-ம் ஆண்டில் பாசிச ஜெயா மீண்டும் தமிழகத்தை ஆண்ட போது இந்த வழக்கில் எல்லா முறைகேடுகளும் நடந்தன. அப்போது தி.மு.க தலைவர் அன்பழகன் தொடுத்த வழக்கின் விளைவாகத்தான் இவ்வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டது.

பவானிசிங் நியமனம் விஷத்தை பாய்ச்சும் செயல்: சுப்ரீம் கோர்ட் 'சுளீர்' தீர்ப்பு

டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக அரசு நியமித்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை முடிந்துவிட்டதால் அதில் மறுவிசாரணை தேவை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பவானிசிங் நியமனம் விஷத்தைப் பாய்ச்சும் செயல் என்றும் உச்சநீதிமன்றம் சாடியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் பரப்பன அக்ராஹா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வந்தார்.

பவானிசிங் நியமனம் செல்லாது: க.அன்பழகன் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு, கடந்த ஆண்டு செப்டம்பரில், நான்காண்டு சிறை தண்டனை விதித்து, பெங்களூரு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அவர் தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, பெங்களூரு ஐகோர்ட்டில் நடந்தது. அதில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானார். அதை எதிர்த்து, தி.மு.க., பொதுச் செயலாளர் க.அன்பழகன், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை, தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. க.அன்பழகன் சார்பில் அந்தி அர்ஜுனா ஆஜராகி வாதிட்டார். ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் பாலி நாரிமன், கர்நாடக அரசு சார்பில் எம்.என்.ராவ் ஆகியோர் வாதிட்டனர்.

கமலஹாசன் :பார்பனர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்று வேதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது !

Kamal Haasan
பார்ப்பனர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என இந்து மதத்தின் புனித நூல்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என நடிகர் கமல்ஹாசன் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தன் கருத்துகளைச் சொல்வதில் இம்மியளவு கூட தயக்கம் காட்டாதவர் கமல்ஹாசன். சமீபத்தில் என்டிடிவிக்கு அளித்த பேட்டியின்போது, மகாராஷ்ட்டிராவில் மாட்டுக்கறி தடை செய்யப்பட்டிருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், ஒருவர் என்ன சாப்பிடவேண்டும் - சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்யும் உரிமை அவருக்கானது. அதை அரசாங்கம் முடிவு செய்ய முடியாது. கட்டுப்படுத்தும் உரிமையும் கிடையாது. மாடுகளைக் கொல்லுவதைத் தடுக்க வேண்டும் என்றால், மீன்கள் உள்பட மற்ற மிருகங்களைக் கொல்லுவதையும் கண்டிப்பாகத் தடுக்கவேண்டுமே. சில இடங்களில் பிராமணர்கள் மீன் சாப்பிடுகிறார்கள். அந்த மீனைக் கொல்லுவதையும் தடுக்க வேண்டும். வேத காலத்தில் பிராமணர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதாக புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.நான் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை என்பது வேறு விஷயம். ஆனால், அதைச் சாப்பிடலாமா? வேண்டாமா? என்பதை அரசாங்கம் முடிவு செய்யக் கூடாது என்றார் அழுத்தம் திருத்தமாக..!  tamil.webdunia.com

மிஸ்டர் கழுகு :ஜெயாவுக்கு நெருங்கும் நெருக்கடி ! கனிமொழி யாருக்காக பழிசுமக்​கிறார்?


‘‘எல்லோர் பார்வையும் டெல்லியை நோக்கியே!” என்றபடியே வந்து குதித்தார் கழுகார்!
‘‘தமிழகத்தின் மொத்த அரசியலும் டெல்லியை எதிர்நோக்கியே இருக்கிறது. டெல்லி என்றால் பி.ஜே.பி தலைமை, மத்திய அரசு என்று நினைக்க வேண்டாம். அனைவரும் எதிர்பார்த்திருப்பது உச்ச நீதிமன்றத்தையே!” என்று சிறுவிளக்கத்தையும் சிந்திவிட்டு கழுகார் தொடங்கினார்.
‘‘ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் செய்துள்ளார்கள். விசாரணையை முடித்த நீதிபதி குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பைத் தள்ளி வைத்துள்ளார். இதில், அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஆஜராக உத்தரவு போட்டது. கர்நாடகத்துக்கு வழக்கை மாற்றினால், அந்த மாநில அரசுதானே அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் எதிர் மனு போட்டார். அதனுடைய விசாரணை கடந்த 21, 22 தேதிகளில் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது!”

பிரச்சினை இஸ்லாத்தில் இல்லை: ஸர்மிளா ஸெய்யித் நேர்காணல்

இஸ்லாமிய கிராமங்களில் சட்டம், ஒழுங்கு எல்லாம் ரெண்டாம்பட்சம்தான். மத நிறுவனங்கள்தான் முன்னிலையில் இருக்கின்றன. இந்த மத நிறுவனங்கள் பெண்களுக்கு எதிராகத் தீர்மானங்கள் எடுப்பதில்லை. ஆனால் எடுக்கப்படும் வன்முறைகளை எதிர்ப்பது கிடையாது.
ஸர்மிளா ஸெய்யித், இலங்கையின் இளம் தலைமுறை எழுத்தாளர்; சமூகச் செயற்பாட்டாளர். துணிச்சலான சமூகச் செயற்பாடுகளால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் விமர்சனத்துக்கு உள்ளானவர். அவரது சொந்த ஊரான இலங்கையின் ஏறாவூரில் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவர். ‘உம்மத்’ என்னும் நாவலை எழுதியுள்ளார். போருக்குப் பிறகான பெண்களின் வாழ்வு, இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆகியவை இந்த நாவலின் மையங்கள்.
ஸர்மிளாவைப் பற்றிய அவதூறுகளும் பெருகிவருகின்றன. அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகக்கூட இலங்கை இணையதளங்களில் செய்திகள் வந்துள்ளன. மதுரைக்கு வந்த அவரிடம் ‘உம்மத்’ குறித்து மேற்கொண்ட நேர்காணலின் சுருக்கம் இது.
உங்கள் நாவலில் விமர்சிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடக்கத்தில் இருந்தே இலங்கையில் இருக்கிறதா?
இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கைக்குப் புதிய ஒரு விஷயம்தான். இருபது வருஷத்துக்குள் உருவான விஷயமாகப் பார்க்க வேண்டியது.

அதிமுக தவிர்ந்த தமிழக கட்சிககள் பிரதமரையும் சோனியாவையும் சந்திக்கின்றன!

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், கர்நாடகா அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க, தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் முயற்சியில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று இறங்கினார். இதற்காக, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா., தலைவர் வாசன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரை நேற்று ஒரே நாளில் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரின் கோபாலபுரம் இல்லத்தில், நேற்று காலை, 11:00 மணிக்கு விஜயகாந்த் சந்தித்து பேசினார். அப்போது, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினும் உடனிருந்தார்.கருணாநிதியை சந்தித்த பின், சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார் விஜயகாந்த். அங்கு அம்பேத்கர் பிறந்தநாள் விழா பற்றிய, ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. அங்கு இருந்த, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நடிகை குஷ்பு ஆகியோரை விஜயகாந்த் சந்தித்து பேசினார்.

தண்ணீர் திறக்காமல் ஆந்திரா அலட்சியம் ! 25 கோடி கப்பம் கட்டியும் பலனில்லை!

கிருஷ்ணா நீரைத் திறக்க, ஒப்பந்தப்படி தமிழக அரசு, 25 கோடி ரூபாய் வழங்கியும் பலனில்லை. நக்சல் பிரச்னை, வெளிமாநிலங்களை காரணம் காட்டி, தண்ணீர் திறப்பை ஆந்திரா நிறுத்தியுள்ளது. ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, தமிழகத்திற்கு ஆந்திரா வழங்க வேண்டும். ஜூலை முதல் டிசம்பர் வரை, முதல் தவணை யில், 8 டி.எம்.சி.,யும், ஜனவரி முதல் ஜூன் வரை, இரண்டாவது தவணையில், 4 டி.எம்.சி.,யும் தர வேண்டும். ஆனாலும், இந்த தண்ணீரை ஆந்திரா முறையாக வழங்குவது இல்லை. கடந்த, 2014, ஜூலை வரை, தண்ணீர் திறக்கப்படவில்லை. தமிழக அரசு தரப்பில் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, ஆகஸ்டில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆந்திராவின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகள் போக, இந்த தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்தது. அதுவும், இடை இடையே நிறுத்தப்பட்டது.    தண்ணீர் திறக்க ஆண்டவனை வேண்டி அடிமைகள் பால்குடம், தீசட்டி, காவடி, மண்சோறு என்று தூள் பரத்த போகிறார்கள். செல்லூர் ராஜ் பறவை காவடியில் தொங்கி கொண்டு வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

கோபாலபுரத்தில் விஜயகாந்த் கலைஞர் சந்திப்பு !

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்தார். இந்த சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்தில் நடைபெற்றது. விஜயகாந்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். விஜயகாந்த்துடன் சுதீஷ், தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி உள்ளிட்டோர் சென்றனர். இந்த சந்திபுக்குப் பின்னர் செய்தியாளர்களை விஜயகாந்த் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாகவும், செம்மரக் கட்டை கடத்தியதாக தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம், தமிழக மீனவர் பிரச்சனை, தமிழக ஏழை விவசாயிகள் பிரச்சனை, நில கையகப்படுத்துதல் மசோதா, முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக கலைஞருடன் ஆலோசனை நடத்தினோம்.

Kathmandu நிலநடுக்கம் 2,263க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம்

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம், தலைநகர் காத்மாண்டு உட்பட, பெரும்பாலான இடங்களை உருக்குலைத்தது. இடிபாடுகளில் சிக்கி, 2,263க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. இதன் தாக்கத்தால், நம் நாட்டின் தலைநகர் டில்லி உட்பட, வட மாநிலங்களும் குலுங்கின. அண்டை நாடான நேபாளத்தில், நேற்று காலை, 11:56 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் காத்மாண்டுவிலிருந்து, 80 கி.மீ., துாரத்தில் உள்ள பொகாரா என்ற இடத்தில், பூமிக்கு அடியில், 15 கி.மீ., ஆழத்தை, மையமாகக் கொண்டு, இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில், 7.9 என, பதிவான இந்த நில நடுக்கம், 30 நொடிகளில் இருந்து, 2 நிமிடங்கள் வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து, 12 முறை சிறு சிறு நில அதிர்வுகளும் ஏற்பட்டன. சாலையில் விரிசல்: இந்த நில நடுக்கத்தால், தலைநகர் காத்மாண்டு, அதன் அருகேயுள்ள மற்ற நகரங்களிலும் கட்டடங்கள் குலுங்கின. கோவில்கள், வீடுகள், வணிக வளாகங்கள் இடிந்து விழுந்தன;