hindutamil.in : சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு, வரும் பிப்.3-வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான திட்டமிடல் மற்றும் கூட்டணி தொடர்பாக தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு, அதிக இடங்களில் போட்டி என பேசியும், சமூக வலைதத்தளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். காங்கிரஸாரின் இதுபோன்ற நடவடிக்கையால் திமுக தலைமை அதிருப்தியில் உள்ளது. அதே நேரத்தில், எந்த கட்சியாவது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என சொல்லுமா என அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரின் கருத்தை எப்படி புறந்தள்ள முடியும் என காங்கிரஸார் கேள்வி எழுப்புகின்றனர்.
சனி, 17 ஜனவரி, 2026
தமிழக நிர்வாகிகளுடன் ராகுல், சோனியா இன்று ஆலோசனை - ஆட்சியில் பங்கா, தவெகவுடன் கூட்டணியா?
மும்பை மாநகராட்சியை கைப்பற்றியது பாஜக கூட்டணி! ‘தாக்கரே’ கோட்டை தகர்ந்தது!
minnambalam.com - Mathi : Brihanmumbai Municipal Corporation
மகாராஷ்டிராவில் 28 ஆண்டுகளாக சிவசேனாவின் கோட்டையாக இருந்த மும்பை மாநகராட்சியை (Brihanmumbai Municipal Corporation) பாஜக கூட்டணி கைப்பற்றி சரித்திரம் படைத்துள்ளது.
மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று ஜனவரி 15-ந் தேதி நடைபெற்றது. இதனையடுத்து பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மும்பை மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 227 கவுன்சிலர் இடங்களில்- வார்டுகளில் பாஜக- 84; ஷிண்டே சிவசேனா 26; அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ்- 2 ஐ கைப்பற்றியுள்ளன.
உத்தவ் தாக்கரே சிவசேனா 63, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 1, காங்கிரஸ் 23, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 6 இடங்களில் வென்றுள்ளன.
வெள்ளி, 16 ஜனவரி, 2026
பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்: 1,000+ காளைகள், 600+ வீரர்கள் பங்கேற்பு!
hindutamil.in - வேட்டையன் : மதுரை: தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜன.16) காலை 9 மணி அளவில் தொடங்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை.
வியாழன், 15 ஜனவரி, 2026
அமெரிக்கா 75 நாடுகளுக்கான விசா தடை! full list
தினமலர் : அமெரிக்காவின் புதிய குடியேற்றக் கொள்கைகளின் ஒரு பகுதியாக, சுமார் 75 நாடுகளுக்கான விசா நடைமுறைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் (U.S. State Department) தீர்மானித்துள்ளது.
இன்று (ஜனவரி 14, 2026) வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு குறித்த விபரங்கள் இதோ:
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் குடியேற்றக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஜனவரி 21, 2026 முதல் நடைமுறைக்கு வரும் இந்த விசா இடைநிறுத்தப் பட்டியலில் ரஷ்யா, ஈரான், சோமாலியா, ஆப்கானிஸ்தான், பிரேசில், நைஜீரியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 75 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
விசா விண்ணப்பதாரர்களைப் பரிசோதிக்கும் முறைகளை (Vetting Procedures) மறுஆய்வு செய்யும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் பொதுச் சொத்துக்களைச் சுரண்டக்கூடிய அல்லது சுமையாக அமையக்கூடிய நபர்களைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Twenty-nine ways Trump has changed Canada
![]() |
theglobeandmail.com : Twenty-nine ways Trump has changed Canada
Jason Kirby, Matt Lundy, Mark Rendell
Prime Minister Mark Carney likes to call U.S. President Donald Trump “transformative.” One year after Mr. Trump first unleashed his threats of tariffs and territorial expansion, Canada has indeed been transformed.
It was a year ago this week when Mr. Trump threatened to hit Canada, Mexico and China with 25-per-cent tariffs unless they stopped migrants and drugs from entering the United States, and a year since he first floated his notion of Canada as the 51st state in a meeting with then-prime-minister Justin Trudeau.
To some degree, Mr. Trump has followed through on his tariff threats. While most Canadian exports are crossing the border duty-free, a bevy of products and industries are getting slammed by tariffs that run as high as 50 per cent.
Trump’s ‘51st state’ comments launched a wave of Canadian patriotism. Has your life changed since then?
பிரகாஷ் ராஜ் : இங்கே முஸ்லிம்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரை முற்றிலுமாக துடைத்தெறிய - ஒரு இனக்கொலைக்கான...?
Nazeer Suvanappiriyan · : நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த டிசம்பர் 17, 2025 அன்று ஹைதராபாத்தில் APCR ஏற்பாடு செய்த "Longing for Justice” நிகழ்வில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.
எவ்வளவு பெரிய சூழ்ச்சி செய்து வருகிறார்கள் என்பதை கீழ் கண்ட உரை உணர்த்தும்.
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்!
சில மாதங்களுக்கு முன்பு, நான் டெல்லியில் அரசியல் கைதிகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். இன்று நான் உமர் காலித் பற்றிப் பேச விரும்பவில்லை - அவர் யார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். டெல்லியில் நான் சொன்னதையே இங்கேயும் மீண்டும் கூற விரும்புகிறேன்.
புதன், 14 ஜனவரி, 2026
ரூட் எடுக்க முடியாமல் திணறும் தமிழ்நாடு காங்கிரஸ்! அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா?
tamil.oneindia.com - Rajkumar R : சென்னை: தமிழகத்தில் 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் தவிக்கும் காங்கிரஸ் கட்சி, இந்த முறை எப்படியாவது ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்ற தீவிர முனைப்புடன் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.
நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இடம்பெற்று வந்தாலும், அதிகாரத்தில் நேரடி பங்கு கிடைக்காத நிலை காங்கிரஸ் தலைமைக்கும், தமிழகத் தலைவர்களுக்கும் உள்ளுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்தச் சூழலில்தான் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் முன்வைக்கும் "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்ற அரசியல் வாக்குறுதி, காங்கிரஸை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் என தொடர்ந்து திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைத்திருந்தாலும், தற்போது அந்த உறவில் விரிசல் தென்படத் தொடங்கியுள்ளது. திமுக அதிக தொகுதிகளையும், ஆட்சியில் முக்கிய இடத்தையும் வழங்கத் தயங்குவதாகக் கூறப்படுகிறது.
டெல்லி விரித்த வலை.. சிக்கினாரா விஜய்? பயத்தை காட்டுறாங்க பரமா
minnambalam.com :; , “மலையிலதான் தீ பிடிக்கீது ராசா என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா” என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
யாரை பத்தி சொல்றீருய்யா?
விஜய்யை மையமா வைச்சுதான் எல்லா கட்சிகளும் பம்பரமா சுத்துறாங்கப்பா..
பிரதமர் மோடி ஜனவரி 23-ந் தேதி சென்னை வர்றாரு இல்லையா.. அந்த மீட்டிங்குல விஜய்யையும் மேடை ஏத்திவிடனும்னு ரொம்பவே ஒரு தரப்பு முயற்சிக்குது..
அதே மாதிரி சிபிஐ விசாரணைக்காக டெல்லிக்கு விஜய் போறதுக்கு முன்னாடியும் கூட ரொம்பவே சீரியசாக ’டெல்லி லாபி வாலாக்கள்’ நிறைய பேரு விஜய்க்கு வலை விரிச்சாங்களாம்..
ஓஹோ.. இது என்னய்யா புதுசா இருக்கே..
இதை பத்தி தவெக தரப்புல நாம பேசுனப்ப, “தளபதியை டெல்லிக்கு வர சொல்லி சம்மன் வந்ததில் இருந்தே, “நாங்க அமித்ஷாவுக்கு நெருக்கமானவங்க”ன்னு சில பேர் விடாம எங்ககிட்ட பேசுனாங்க..
இலங்கை மக்களின் மரபணு வரலாறு
Chanbasha KA : இலங்கையின் மக்களின் மரபணு வரலாறு நம்மில் யார் எங்கிருந்து வந்தோம்?
நம் உடலில் எழுதப்பட்ட வரலாறு
நாம் அனைவரும் “நான் தமிழன்”, “நான் சிங்களர்”, “நான் முஸ்லிம்” என்று சொல்வோம். ஆனால் உண்மையில் நம் உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் மரபணுக்கள் (DNA) நம் அடையாளத்தை இன்னொரு வழியில் விவரிக்கின்றன.
மனித உடலின் ஒவ்வொரு செலிலும் இருக்கும் அந்த சிறிய மூலக்கூறுகள் — நம் வரலாற்றை, நம் வேர்களை, நம் முன்னோர்களின் பயணங்களை, நம் கலாச்சார கலப்புக்களையும் சொல்லும் உயிரோட்டமான சாட்சிகளாகும்.
இது வெறும் உயிரியல் விஷயம் அல்ல — இது நம் அடையாளத்தின் மறைமுகமான கதை.
இலங்கை ஒரு சிறிய தீவாக இருந்தாலும், அது மனித மரபணு கலவையின் பெரிய ஆய்வகமாகவே விளங்குகிறது. பல்வேறு இனங்களும், மதங்களும், மொழிகளும், கலாச்சாரங்களும் நூற்றாண்டுகளாக இங்கே கலந்துள்ளன. அதனால் தான், இலங்கையின் மக்களின் DNA உலகில் மிகவும் பல்வகைமிக்கது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ராகுல் மேடையில் ஆ.ராசா : நீங்களும் ஸ்டாலினும் தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவை வழிநடத்துங்கள்!
minnambalam.com - Mathi : “நீங்களும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் இணைந்து தமிழ்நாட்டை மட்டுமல்ல எதிர்காலத்தில் இந்தியாவையும் வழிநடத்துங்கள்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. வேண்டுகோள் விடுத்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் ராகுல் காந்தி இன்று பங்கேற்றார். இந் நிகழ்ச்சியில் நீலகிரி மக்களவை தொகுதி எம்.பி.யான ஆ.ராசா பங்கேற்று பேசியதாவது: இந்திய நாட்டின் அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள “We, the people of india, having solemnly resolved to constitute india into a Sovereign Socialist Secular Democratic Republic” என்று சொல்கிற அந்த மதச்சார்பின்மையை, ஜனநாயகத்தை, இறையாண்மையை சோசலிசம் என்கிற சமதர்மத்தைக் காப்பாற்றுகின்ற நம்முடைய அருமைக்குரிய தலைவர் (ராகுல் காந்தி), இந்த நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு என்னுடைய வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.
ஈரான் மக்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை - தொடர்ந்து போராடுங்கள் மக்களே
hirunews : ஈரானிய தேசபக்தர்களே, தொடர்ந்து போராடுங்கள் - ட்ரம்ப்பின் அதிரடி பதிவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானில் பல ஆண்டுகளாக இல்லாத வகையில் நடைபெற்று வரும் பாரிய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தமது சமூக ஊடக பதிவில், "ஈரானிய தேசபக்தர்களே, தொடர்ந்து போராடுங்கள் - உதவி அதன் வழியில் உள்ளது" என்று கூறியுள்ளார்.
அத்துடன் போராட்டக்காரர்கள் மீதான "அறிவற்ற கொலைகள்" (Senseless killing) நிறுத்தப்படும் வரை, ஈரானிய அதிகாரிகளுடனான அனைத்து சந்திப்புகளையும் தாம் இரத்து செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
பராசக்தி ! அடப்பாவிகளா...இந்த படத்துக்கா நெகட்டிவ் ரிவ்யூ பரப்பிட்டு இருக்கீங்க?!
Kathija Sheikhmohamed : பராசக்தி ! அடப்பாவிகளா...இந்த படத்துக்காயா நெகட்டிவ் ரிவ்யூ பரப்பிட்டு இருக்கீங்க?!
இந்த படத்துல திமுக புகழை பரப்புற மாதிரி ஒண்ணுமே இல்ல. அண்ணா 3 ஸீன்ல வர்றார்..
கலைஞர் கருணாநிதி கேரக்டரையும் அதே மாதிரி 3 ஸீன்ல தான் காட்டுறாங்க.
அழுத்தமாவும் காட்டல. அவர் தான் கருணாநிதினே கடைசியில் கண்ணாடி போட்டு வர்ற ஒரு காட்சியில் தான் தெரியுது.
இது முழுக்க 1960களில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய கல்லூரி மாணவர்களை பற்றிய படம்.
நான் இங்கே அபுதாபியில் பார்த்தது uncut version. சில இடங்களில் நம்ம மக்கள் எவ்ளோ கஷ்டப்பட்டுருக்காங்கனு நினைச்சு அழுகையே வந்துடுச்சு.
செவ்வாய், 13 ஜனவரி, 2026
வானதி MLA : ஒரிஜினல் பராசக்தி படத்திற்கு 130 கட்! ஜனநாயகன் குறித்த ராகுலின் விமர்சனத்திற்கு,,
minnambalam.com - Pandeeswari Gurusamy : காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரிஜினல் பராசக்தி திரைப்படத்திற்கு 130 கட் கொடுக்கப்பட்டதாக ஜனநாயகன் பட விவகாரம் குறித்த ராகுலின் விமர்சனத்திற்கு வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்தார்.
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேலாண்டிபாளையம் பகுதியில் பா.ஜ.க. சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு “தாமரை கோலத் திருவிழா” என்ற பெயரில் கோலப் போட்டிகள் நடைபெற்றது. இதைப் பார்வையிட்ட பா.ஜ.க. தேசிய மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
புதிய ஓய்வூதியத் திட்டம்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பெ.சண்முகம் நன்றி!
hindutamil.in -வெற்றி மயிலோன் : சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று சந்தித்து, அரசு ஊழியர்களுக்கு "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS)" அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், டி. ரவீந்திரன் ஆகியோர் தமிழக முதல்வரை இன்று (13.1.2026) நேரில் சந்தித்து தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் கால்நூற்றாண்டு கோரிக்கையான ஓய்வூதிய பிரச்சனைக்கு தீர்வு கண்டது குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
நடிகர் விஜெயின் பினாமி விமான கம்பனி
![]() |
Giri Sundar : இன்று சினிமா நடிகன் தனி விமானத்தில் CBI அலுவலகத்திற்கு டெல்லி சென்றார்...
அந்த விமானம் FlySBS Aviation Limited என்ற நிறுவனத்திற்கு சொந்தமான Embraer Legacy 600 Jet வகை விமானம்...
இதன் உரிமையாளர்களாக அறியப்படுபவர்கள்
தீபக் பரசுராமன், அம்பாசங்கர் மற்றும் கண்ணண் ராமகிருஷ்னன் ஆகியோர்...
இவர்களின் பின்புலங்கள் மற்றும் அரசியல் தொடர்புகள் பொதுவெளியில் இல்லை, ஒரு போட்டோ கூட இல்லை, ஏவியயேசன் துறையில் நிபுணர்கள் என்பதாக அறியமுடிகிறது, வாடகை விமான நிறுவனம் ஆரம்பிக்கும் அளவு பின்புலம் இல்லை...
இந்நிறுவனம் 2020 ல் தொடங்கப்பட்டுள்ளது....
இது சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னையிலிருந்து மட்டுமே சர்வீஸ் உண்டு...
திங்கள், 12 ஜனவரி, 2026
சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய்... அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கும் அதிகாரிகள்..
மாலை மலர் : த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கடந்த மாதம் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள்.
மகாராஷ்டிராவில் இந்தியை திணித்தால் உதைதான்.. ராஜ்தாக்கரே எச்சரிக்கை!
மின்னம்பலம் - Mathi : மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி மொழியைத் திணித்தால் உதைதான் விழும் என மகாரஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே எச்சரித்துள்ளார்.
மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராஜ்தாக்கரே, உ.பி., பீகார் மாநிலங்களைச் சேர்ந்த மக்களே! உங்களது தாய் மொழி இந்தி அல்ல. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் எந்த ஒரு மொழியையும் வெறுக்கவில்லை. ஆனால் ஒரு மொழியை என் மீது திணித்தால் உதைதான் விழும்.
மராத்திய மக்களே! இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இங்கே வருகிறார்கள்.. உங்களது பங்கை அவர்கள் பறித்து செல்கிறார்கள். உங்கள் நிலமும் மொழியும் பறிபோனால் உங்கள் வாழ்க்கையும் முடிந்து போய்விடும். இன்றைக்கு உங்கள் வீட்டின் கதவுகளை இந்த பிரச்சனை தட்டிக் கொண்டிருக்கிறது.
சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் பிப்ரவரி 2-ஆம் வாரம் முதல்!
hindutamil.in -தமிழினி : இதனையடுத்து, பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2-வது வாரத்தில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்கினால் 25 நிமிடங்களில் பூந்தமல்லி பைபாஸில் இருந்து வடபழனி சென்றடையலாம் என்றும், 7 நிமிடத்தில் ஒரு ரயில் என்ற வீதத்தில் சேவை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
பின்னர், சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "போரூர்-வடபழனி இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. பூந்தமல்லி - வடபழனி இடையே வரும் பிப்ரவரி இரண்டாம் வாரம் பயணிகள் ரயில் சேவையை தொடங்க திட்டமிட்டிருக்கிரோம்.
ஞாயிறு, 11 ஜனவரி, 2026
இரான் நாடு கடத்தப்பட்ட இளவரசர் ரெசா பஹ்லவி - மீண்டும் ?
![]() |
பிபிசி பாரசீக சேவை : இரானின் கடைசி ஷா-வின் (மன்னர்) மகனான ரெசா பஹ்லவி, அந்நாட்டில் சமீபத்தில் வெடித்த போராட்ட அலைகளின் தொடர்ச்சியாக, வியாழக்கிழமையன்று ஒரு பெரிய புதிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 1979ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியால் பதவியிறக்கப்பட்ட மன்னரின் மூத்த மகனான இவர் யார்?
பிறந்தது முதலே இரானின் 'மயில் சிம்மாசனத்தை' அலங்கரிக்கத் தயார் செய்யப்பட்ட ரெசா பஹ்லவி, 1979ஆம் ஆண்டு புரட்சி அவரது தந்தையின் முடியாட்சியைத் தூக்கியெறிந்தபோது, அமெரிக்காவில் போர் விமானி பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்தார்.
ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்த அவரது தந்தை முகமது ரெசா ஷா பஹ்லவி, தஞ்சம் புக வேறு நாடு கிடைக்காமல் திணறியதையும், இறுதியில் எகிப்தில் புற்றுநோயால் இறந்ததையும் அவர் தொலைவில் இருந்து கவனித்தார்.
பராசக்தி - மிக ஆபத்தான ஒரு விளையாட்டில் இறங்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள்!
ராதா மனோகர் : பராசக்தி - மிக ஆபத்தான ஒரு விளையாட்டில் இறங்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள்!
தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்திய துணைக்கண்டத்திற்கே திருப்பு முனையாக அமைந்த ஒரு வரலாற்றை திரைப்படமாக தயாரிப்பதற்கு மிக பெரிய துணிச்சல் வேண்டும்!
இந்தி திணிப்புக்கு எதிராக அன்று தமிழகம் போர்க்கொடி தூக்கியது சாதாரண விடயம் அல்ல!
இந்தி பேசாத மாநிலங்களில் இந்திக்கு எதிரான உணர்வோ எதிர்ப்போ பெரிதாக எழுந்திராத ஒரு நிலையில் தமிழகத்தில் அன்று மொழிப்போர் வெடித்ததே ஒரு அசாதாரண நிகழ்வுதான்.
அந்த ஆதிக்க மொழி வெறி, மொழி திணிப்பு போன்றவை இன்றும் கூட தலைதூக்கி கொண்டிருக்கும் காலகட்டத்தில்,
இந்த எரியும் பிரச்னையை திரைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.
இது தடைகளை தாண்டி திரைக்கு வந்ததே பெரிய சாதனைதான்!
ஒரு சாதாரண திரைப்படத்தை விமர்சிப்பது போல் இந்த புதிய பராசக்தியை என்னால் விமர்சிக்க முடியாமல் இருக்கிறது.
இதற்கு காதல் காட்சிகளே தேவை இல்லை .
பராசக்தி தினமணி விமர்சனம்! தீ பரவியதா?
தினமணி : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கதை நாயகன் செழியன் (சிவகார்த்திகேயன்) ஹிந்தி திணிப்புக்கு எதிராக ஒரு மாணவர் படையையே வழிநடத்துகிறார். அம்மாணவர்கள் வேறுவேறு மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அனைவரும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றனர். அதனால், இவர்களின் போராட்டங்கள் பேசப்படுகிறது. அப்படியான சூழலில், மாணவர் சேனையை வழிநடுத்தும் செழியனுக்கு ஒரு இழப்பு ஏற்பட, அக்குழு சத்தமில்லாமல் கலைகிறது.



