சனி, 27 ஜூலை, 2019

அமெரிக்க வாழ் இந்தியர்கள் சுயலாபத்திற்காக​ முன்னெடுக்கும் பாசிசத்தை பாருங்கள்

JP Terry : Fascist attitude of the Indians:
கீரின்கார்டு போன்ற​ தங்களின் சுயலாபத்திற்காக​ இந்தியர்கள் முன்னெடுக்கும் பாசிசத்தை பாருங்கள். நீங்கள் ஆதரிக்கும் இந்துத்துவ கும்பலின் லட்சணம் இது தான்.
இந்த​ பணத்தில் சிறுதுளியை எங்கள் ஊர்பகுதியில் இருக்கும் வறியநிலை​ உயர்சாதியினரின் கல்விக்காக​ இவர்கள் முதலீடு செய்தாலே அவர்களின் பொருளாதார​ நிலையும் வாழ்க்கை தரமும் கணிசமாக​ உயரும். இதை ஏன் இந்துத்துவவாதிகள் செய்வதில்லை? இதை நோக்கி கேள்வி கேட்க​ வேண்டிய​ இந்துமத​ ஆர்வலர்கள் அதனை செய்யாமல் அனிதா போன்ற​ ஓடுக்கப்பட்ட​ மக்களின் உரிமைகளை பறித்து அதனை பாசிசவாதிகள் கையில் ஓப்படைப்பது தான் ஏன்?
பிழைப்பு தேடி கைபர் போலன் கணவாய் வழியாக​ நம் மண்ணில் நுழைந்து தன் சுயலாபத்திற்காக​ சாதியை கொண்டு வந்து நம் மண்ணின் மக்களை ஓடுக்கிய​ இந்துத்துவா இன்று அது போன்ற​ பாசிசத்தை பிற​ நாடுகளிலும் முன்னெடுத்து அங்கேயிருக்கும் விளிம்புநிலை மக்களை ஓடுக்கி சுயலாபம் அடைய​ முயல்கிறது.
சொந்த​ நாட்டில் இருப்பவர்களை மதத்தின் பெயரால் சண்டையிட​ தூண்டிவிடுகிறார்கள் இந்த​ இந்துத்துவவாதிகள். ஆனால் அவர்கள் மட்டும் அரபியர்களுக்கும் மேலைநாட்டு கிறிஸ்தவர்களுக்கும் சேவகம் செய்து சுயலாபம் அடைகிறார்கள். ஏன் எந்த​ ஒரு இந்துமத​ ஆர்வலரும் இதனை கேள்வி கேட்பதில்லை?

ஒ.பன்னீர்செல்வம் : அப்துல் கலாம் இன் கனவு மெய்ப்பட அனைவரும் உறுதி ஏற்போம்

tamil.oneindia.com : முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின்
Everyone Work For APJ Abdul Kalams dream come true; O.Panneerselvam Tweet நினைவுநாளான இன்று, அவரது கனவு மெய்ப்பட அனைவரும் உறுதி ஏற்போம் என, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அப்துல் கலாம், 2015ம் ஆண்டின் இதேநாளில் (ஜூலை 27), ஷில்லாங்கில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மெண்டில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அனைவராலும் போற்றப்படும் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை, ஒட்டு மொத்த நாடே அனுசரித்து வருகிறது. அவரது நினைவிடம் பூக்களால்அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு காலை முதலே பலர் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அப்துல் கலாம் அய்யா.. சமுகவலையில் வெடித்து கிளம்பும் விமர்சனங்கள்

Chozha Rajan : இமயமலையில் தயானந்த சரஸ்வதியை சந்தித்ததாக அப்துல்கலாம் கூறியிருக்கிறார்...
அதன்பின்னர்தான் அவருக்கு இந்திய விண்வெளித்துறை ஆராய்ச்சிக்கூடத்தில் வேலை கிடைத்திருக்கிறது..
காங்கிரஸ் ஆட்சியில் முடிக்கப்பட்டு, ஐக்கியமுன்னணி ஆட்சியிலும் வெடிக்கப்படாமல் பாதுகாத்த அணுகுண்டு குறித்து வாஜ்பாயிடம் கூறி, அதை வெடிக்கச் செய்து வாஜ்பாய்க்கு பேர் கிடைக்கச் செய்த புண்ணியம் கலாமுக்கு உண்டு...
ஆனால் பாகிஸ்தான் பதிலுக்கு வெடித்து இந்தியாவுக்கு இணையாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் கலாமின் அவசரபுத்திதான் வழங்கியது...
சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பொருளாதார இழப்புக்கும் அதுவே காரணமாகியது.
அணுகுண்டு ரகசியத்தை சொல்லி தனக்கு பேர் பெற்றுக்கொடுத்த காரியத்துக்காகவே அவருக்கு குடியரசுத்தலைவர் பதவியை பாஜக கொடுத்தது என்பது ஊரறிந்த ரகசியம்...
குஜராத் கலவரத்தை திசைதிருப்பவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்ற விமர்சனத்தையும் கண்களை அகலத் திறந்து ரசித்துக்கொண்டிருந்தவர்தான் கலாம்...
பிப்ரவரி மார்ச்சில் கலவவரம் நடக்கிறது....
ஜூலையில் இவர் குடியரசுத்தலைவராகிறார்...

போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த திமுக பிரமுகரின் மகள்.. திருவள்ளூர் துணை மாவட்ட செயலாளரின்

Hemavandhana  tamil.oneindia.com : சென்னை: "வீட்டுக்கு போக மாட்டேன்..
உயிருக்கு ஆபத்து" என்று திமுக பிரமுகரின் மகள் பாதுகாப்பு கோரி மதுரை திருப்பரங்குன்றம் ஸ்டேஷனில் காதலனுடன் தஞ்சம் அடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பூந்தமல்லி ஸ்ரீ வித்திய கணபதி தெருவை சேர்ந்தவர் நிதர்சனா. நிதர்சனாவின் அம்மா காயத்ரி ஸ்ரீராம், 2009-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டவர்.
தற்போது சென்னை திருவள்ளுவர் தெற்கு தொகுதி துணை மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில், நிதர்சனா, சேஷா நகரை சேர்ந்த மைக் ரிச்சர்ட்சன் என்பவரை காதலித்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு இருந்திருக்கிறது. அதனால் இவர்கள் இருவரும் நேற்று திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கோரி திருப்பரங்குன்றம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். இதனிடையே நிதர்சனாவை காணவில்லை என்று, பூந்தமல்லி ஸ்டேஷனில் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

எடியூரப்பாவுக்கு குமாரசாமி கட்சியினர் வெளியில் இருந்து ஆதரிக்க வேண்டுமாம் .. எம் எல் ஏக்கள் மற்றும்

எடியூரப்பாஎடியூரப்பாவுக்கு குமாரசாமி வெளியில் இருந்து ஆதரவு?வெப்துனியா : கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கு குமாரசாமி வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூர்: கர்நாடகாவில் 15 எம்.எல். ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையில் நடந்து வந்த காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து பா.ஜனதா சட்டசபை தலைவர் எடியூரப்பா நேற்று புதிய முதல்- மந்திரியாக பதவி ஏற்றார்.
பதவி ஏற்றதும் எடியூரப்பா மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், “நெசவாளர்களின் ரூ.100 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவியுடன் சேர்த்து தலா ரூ.4 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

நோயாளி மிரட்டினார் உறவு கொண்டேன் - மவுனம் கலைந்த கனடா டாக்டர் தமிழ் டாக்டர்


Jeyalakshmi tamil.oneindia.com/ :  மவுனம் கலைந்தார் கனடா மருத்துவர் தீபா சுந்தரலிங்கம்- டொராண்டொ: சிகிச்சைக்கு வந்த நோயாளி என்னை மிரட்டினார், ஆபாசா செல்பிக்களை அனுப்பச்சொன்னார், எஸ்எம்எஸ்களை மருத்துவக் கவுன்சிலுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியே பாலியல் உறவு கொள்ள வைத்தார் என்று புற்றுநோய் மருத்துவரான தீபா சுந்தரலிங்கம் தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளார்.
கனடாவின் டொராண்டோ மருத்துவமனையில் டாக்டராக பணியில் இருந்த போது புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கடந்த ஜனவரியில் அவரது மருத்துவர் உரிமம் பறிக்கப்பட்டது.
தற்போது தன்மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். தீபா சுந்தரலிங்கத்திற்கு 37 வயதாகிறது. புற்றுநோய் சிகிச்சை பிரிவில் ஸ்பெசலிஸ்ட். 2010 முதல் மருத்துவராக இருக்கும் தீபாவிடம் சிகிச்சை பெற கடந்த 2015ஆம் ஆண்டு நோயாளி ஒருவர் வந்தார்.
அவரை நோயாளி என்பதை விட விதி என்றே சொல்ல வேண்டும்.
விதி வடிவத்தில் வந்த அந்த நோயாளிக்கு புற்றுநோய் தாக்கம் இருந்தது.

சிரியா விமானப் படைத் தாக்குதலில் தங்கையைக் காப்பாற்ற உயிரை விட்ட 5 வயது சிறுமி!

tamil.news18.com : விமானப் படைத் தாக்குதலில் தங்கையைக் காப்பாற்ற உயிரை விட்ட 5 வயது சிறுமி! மனதை உலுக்கும் புகைப்படம்2011-ம் ஆண்டிலிருந்து இதுவரையில் 3,70,000 பேர் உயிரிழந்துள்ளனர். பத்து லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் சிரியா போர் பகுதியிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர்.   சிரியாவின் வடமேற்கு மாகாணத்தில் அரசின் விமானப் படை நடத்திய தாக்குதலில் இடிந்துவிழுந்த வீட்டிலிருந்த 5 வயது சிறுமி, தங்கையை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்துள்ளார். மனதை உலுக்கும் இந்தப் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகிவருகிறது.
சிரியாவில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே போர் நடைபெற்றுவருகிறது. அதனால், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். 2011-ம் ஆண்டிலிருந்து இதுவரையில் 3,70,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி : ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் ஆட்சி அமைக்க முடியாது!

மாலைமலர் ; திமுக தலைவர் ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.
வேலூர் மக்களவை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், ஏசி சண்முகத்திற்கு ஆதரவாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- “  ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக இப்போது என்ன வாக்குறுதி தரும் என்று தெரியவில்லை. பொய் வாக்குறுதி என்ற மிட்டாயை மக்களிடம் கொடுத்து பொய்யான வெற்றி பெற்றது திமுக.
இன்னும் 10 ஆண்டுகள் கழித்து பார்த்தால் தமிழகம் விஞ்ஞான உலகமாக இருக்கும். எத்தனை லட்சம் மக்கள் வீடில்லாமல் இருந்தாலும் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும். அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார். ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. திமுகவின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக இப்போது என்ன வாக்குறுதி தரும் என்று தெரியவில்லை. தமிழகத்தில் மிகவும் உயர்தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிகமானோர் உயர்கல்வி படிக்கும் மாநிலம் தமிழ்நாடு" என்றார்

டாக்டர்களை தாக்கினால் பத்து ஆண்டுகள் சிறை

தினமலர் :திருச்சி: திருச்சி மத்திய சிறையில் தன்னை தாக்கியதாக சமூக ஆர்வலர் முகிலன் அளித்த புகாரின் பேரில் நேற்று திருச்சி நீதிமன்றத்தில் அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடந்தது.தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கடந்த ஒரு மாதத்துக்கு முன் மாயமானார். பின் கண்டுபிடிக்கப்பட்ட அவர் குளித்தலையில் பெண் கொடுத்த பாலியல் பலாத்கார புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிபதியின் உத்தரவுப்படி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின் கடந்த 22ம் தேதி கரூர் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு சென்ற முகிலன் சிறைத்துறை அதிகாரிகள் தன்னை தாக்கியதாக நீதிபதியிடம் கடிதம் மூலம் புகார் அளித்தார். அந்த கடிதம் குறித்து திருச்சி நீதிமன்றத்திலேயே விசாரிக்க கரூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.அதன்பேரில் நேற்று மதியம் முகிலன் திருச்சி ஜே.எம். 2 மாஜிஸ்திரேட் திரிவேணி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் மாஜிஸ்திரேட் 2 மணி நேரம் புகார் குறித்து தனியே விசாரித்தார். பின் சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின் முகிலன் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். புகார் மீது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் திரிவேணி தொடர் விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பார் என்று தெரிகிறது

பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களை ஒரு மாதத்துக்குள் பொருத்த வேண்டும்; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தினத்தந்தி :மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் ஒரு மாதத்திற்குள் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னை, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் ஒரு மாதத்திற்குள் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில், புரசைவாக்கத்தைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “கோவையில் சமீபத்தில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவரை, அந்த வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளி பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

பிரிட்டன். நாராயணமூர்த்தி மருமகன் உட்பட பல இந்தியர்களுக்கு கேபினட் பதவி.. பிரதமர் போரிஸ் ஜான்சன் செம.

கேபினெட் சந்திப்புகள் tamiloneindia.com லண்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த பலருக்கும், அமைச்சரவையில் இடம் கொடுத்து வரலாறு படைத்துள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். அதிகாரப்பூர்வமாக, நேற்று, பிரிட்டனின் புதிய பிரதமரானார்,
நாராயண மூர்த்தி மருமகன் போரிஸ் ஜான்சன். அக்டோபர் 31ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் இரண்டாம் எலிசபெத் மகாராணியை போரிஸ் ஜான்சன் சந்தித்து ஆசி பெற்றார். பிரிட்டன் பிரதமராக இருந்த தெரசா மேவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பின்னர் அரசு அமைக்க, அவர் போரிஸ் ஜான்சனை அழைப்புவிடுத்தார்.
 கேபினெட் இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்றுபேரை தனது கேபினெட்டில் சேர்த்து அசத்தியுள்ளார். பிரிட்டன் வரலாற்றில் இத்தனை அதிகமாக இந்திய வம்சாவளியினர் கேபினெட் அந்தஸ்தில் பதவி வகிப்பது இதுதான் முதல் முறை.

வெள்ளி, 26 ஜூலை, 2019

பாக்கிஸ்தானில் இந்து பெண்கள் கடத்தபட்டு இஸ்லாமியர்களாக்கி கட்டாய கல்யாணம் - சர்வதேச ஊடகம்


reena_raveena  பாக்கிஸ்தானில் காணாமல்போகும் இந்து யுவதிகள் இஸ்லாமியர்களாக திரும்புகின்றனர்- சர்வதேச ஊடகம் reena raveena e1564148067787 வீரகேசரி : பாக்கிஸ்தானில் இந்துமதத்தை சேர்ந்த இளம்பெண்கள் காணாமல்போவதும் பின்னர் அவர்கள் முஸ்லீம்களாக திரும்புவதும் அதிகரித்துள்ளதாக ஏபிசி செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
ரீனா ரவீனா என்ற இரு இந்து சகோதரிகளின் அனுபவத்தை அடிப்படையாக வைத்து ஏபிசி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தங்கள் இரு புதல்விகளும் கடத்தப்பட்டனர் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டனர் பின்னர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களை மணமுடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர் என அவர்களது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது இரு பிள்ளைகள் இருக்குமிடங்களை கண்டுபிடித்த பின்னர் தான் உள்ளுர் பொலிஸ்நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ததாக ரீனா ரவீனா சகோதரிகளின் தந்தை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் உள்ள இருவருக்கே தங்கள் புதல்விகளை திருமணம் செய்து வைத்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றவேளை சகோதரிகள் கடத்தப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிமன்றம் அவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தெரிவித்துள்ள கணவமன்மார்களுடன் அவர்களை சேர்த்துவைக்கும்படி உத்தரவிட்டது.

பௌத்த விகாரைகளுக்குள் நடக்கும் பாலியல் கொடுமைகள்! .. இலங்கை வீடியோ

சீனியம்மாள் : உண்மை குற்றவாளிகளை தப்பவைக்க திசை திருப்புகிறார்கள்! நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை ..

     வெப்துனியா :உமா மகேஷ்வரியை கொன்றதாக சந்தேகிக்கப்பட்ட சீனியம்மாள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.
 முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் வீட்டில் வேலை செய்து வந்த பெண் என 3 பேரையும் மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். உமா மகேஸ்வரியை கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் போலீஸாருக்கு சீனியம்மாள் என்னும் மதுரையை சேர்ந்த திமுக பிரமுகர் மீது சந்தேகித்தனர். அவரிடம் விசாரணையும் மேற்கொண்டர். பண பிரச்சனை காரணமாக சீனியம்மாள் உமா மகேஷ்வரியை கொலை செய்திருக்க கூடும் என விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால், சீனியம்மாள் செய்தியாளர்களுக்கு இந்த வழக்கு குறித்து பேட்டியளித்துள்ளார். சீனியம்மாள் கூறியதாவது, என்னை 2 முறை வந்து போலீசார் விசாரித்தார்கள். எனக்கு உடம்பு சரியில்லை. கூடல்நகரில் உள்ள என் மகள் வீட்டுக்குதான் நான் வந்திருக்கிறேன். வந்த இடத்தில் நான் எப்படி இப்படியெல்லாம் செய்ய முடியும்? என்று விசாரணையின் போது போலீஸாரிடம் கேட்டேன்.

திருநங்கை அபிராமியை அடித்துக் கொன்ற 3 திருநங்கைகள் உட்பட 7 பேர் கைது!

 7 arrested, including 3 transgender people!nakkheeran.in/author/sekar.sp : கடந்த 17ம் தேதி இரவு விழுப்புரம் அருகே செஞ்சி சாலை ஜெயேந்திரா பள்ளி அருகே அபிராமி என்ற திருநங்கை கொலைசெய்யப்பட்டு கிடந்தது பரபரப்பானது. இந்த கொலைச் சம்பவத்தில் திருநங்கைகள் புனிதா, மதுமதி, கயல்விழி மற்றும் அவர்களது நண்பர்கள் வீரபாண்டியன், சகாயம், ஆமோஸ், இம்தியாஸ் ஆகிய ஏழுபேர்
கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 7 பேரும் பத்திரிகையாளர்கள் முன்பு ஆஜர்படுத்திய மாவட்ட எஸ்பி.ஜெயக்குமார் கூறும்போது...
விருத்தாசலத்தை சேர்ந்த அபி என்கிற அபிராமி 10 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரத்தில் திருநங்கைகளோடு அய்யங்கோவில்பட்டு பகுதியில் தங்கியிருந்தார். புனிதா என்ற திருநங்கையின் சகோதரர் தங்கதுரையை திருமணம் செய்து கொண்டார் அபிராமி. அவரிடம் இருந்து நிறைய பணம் பெற்று அந்த பணத்தில் விருத்தாசலத்தில் இரண்டுமாடி கட்டியுள்ளார். இதனால் புனிதா உட்பட அவரது குடும்பத்தின் அபிராமி மீது கடும்கோபத்தில் இருந்தனர்.

தலித் ஆண்களே தலித் பெண்களை பாகுப்பாட்டோடு நடத்தும் போது ....

LR Jagadheesan : Do you wonder why the "metoo" movement in India has not taken off as a mass-based feminist movement despite India being one of the worst countries in the world to be a woman? Do you want to understand why it failed so miserably? Please read this brilliant post.
A must read and share post.
"சமூக செயற்பாடு என்று எடுத்துக்கொண்டாலும் கூட பார்ப்பன, ஆதிக்க ஜாதி, சற்றே வெள்ளை தோல் பெண்கள் கொண்டாடப்பட்ட அளவிற்கு எந்த தலித் பெண்ணும் கொண்டாடப்படவில்லை.
ஏன், தன்னை தலித்தாக காட்டிக்கொண்டு, மிகையான தலித்தியம் பேசி தங்களை பெரும் போராளிகளாக வளர்த்துக்கொண்ட ஆதிக்க ஜாதி பெண்களை கொண்டாடிய அளவிற்கு கூட எந்நேரமும் ஜாதி ஒழிப்பு, சமூக நீதி என்று முழங்கிக் கொண்டும், உட்படுத்தப்படும் பல்வகை பாகுபாடுகளை நிமிடம்தோறும் எதிர்த்துப் போராடிக்கொண்டும் இருக்கும் தலித் பெண்களை தலித் ஆண்கள் கொண்டாடியதில்லை.
அப்பெண்களுமே பின்னாட்களில் "நான் தலித் இல்லை, நீங்கள் எல்லாம் அப்படி நினைத்துக்கொண்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது" என்று சிறிதும் குற்றவுணர்வு இல்லாது பதிவுகள் போட்ட போதும் கூட அப்போலி முகத்திரைகளை விட்டுக்கொடுக்காது கொண்டாடியபடியே தான் இருந்தார்கள். இப்படியான ஈன செயல்களால் அவர்களின் "பிரபல அந்தஸ்துக்கு" எவ்வித பங்கமும் ஏற்படவில்லை.
ஆனால், இப்படியான ஏமாற்று செயல்களினூடாக தன்னை பிரபலமாக்கிக்கொண்ட பெண்களை அம்பலப்படுத்தியதற்காக நான் உட்பட பல தலித் பெண்களும் பல்வேறு வசவுகளுக்கு ஆளாகியிருக்கிறோம். இவையெதையும் பொருட்படுத்தாது, இன்றளவும் அப்போலிகளை பெரும் போராளிகளாக எங்களிடம் வந்து துதி பாடும் தலித் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தமிழக பாடநூலில் சமஸ்கிரதம்தான் தொன்மையான மொழி பொய் மூட்டைகள்

sanskrit mentioned as older than tamil in tamilnadu school textbook நக்கீரன் : புதிய கல்வி கொள்கை நாடு முழுவதும் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ள நிலையில், தமிழகத்தில் இந்த புதிய வரைவுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், திருநள்ளாறு அருகே செயற்கைகோள் நிற்பது, தவறான தேசிய கீதம் என தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தற்போது 12ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்தால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

வைகோவுக்கு வெங்கய்யா நாய்டு : “மின்னல் வேகத்தில் பேசுகிறீர்கள். ஆனால் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கக் கூடாது

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக கைவிடுக: வைகோமின்னம்பலம் : ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் முழுமையாக கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இன்று (ஜூலை 26) மாநிலங்களவையில் வலியுறுத்தியிருக்கிறார்.
இன்று பூஜ்ய நேரத்தில் இதுகுறித்துப் பேசிய வைகோ, “தமிழ்நாட்டின் காவிரி பாசனப் பரப்பை, விளைநிலங்களை முற்றிலும் அழிக்கக் கூடிய பெருங்கேடான, மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் எரிகாற்றுக் கிணறுகள் தோண்டும் திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்த முனைகின்றது. மோடி தலைமையிலான அரசு, இத்தகைய அழிவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகவும் தீவிரமாக இருக்கின்றது.

இனி தவறு செய்யமாட்டோம் ரவுடி மாணவர்கள் உறுதிமொழி

இனி தவறு செய்யமாட்டோம்: ரூட் தலைகள் உறுதிமொழி!  மின்னம்பலம்:  சென்னையில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரூட் தல எனப்படும் மாணவர்கள் இன்று (ஜூலை 26) காவல்துறை அதிகாரி முன்னிலையில் ’இனி நாங்கள் தவறு செய்யமாட்டோம்’ என்று உறுதிமொழி ஏற்றனர். இதுதொடர்பான வீடியோவை காவல் துறை வெளியிட்டுள்ளது.
சென்னை ரூட் தல பெயரில் கல்லூரி மாணவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வன்முறைகளில் ஈடுபட்டு வருவது பேருந்து ஓட்டுநர்களுக்கும் , பொதுமக்களுக்கும் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவல் துறையினர் நேற்று பச்சையப்பன், மாநில, நியூ கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாகச் சென்னையில் 90 ரூட் தலைகள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

முதலமைச்சராக பதவியேற்கும் எடியூரப்பா

முதலமைச்சராக பதவியேற்கும் எடியூரப்பா மின்னம்பலம் : கர்நாடக சட்டமன்றத்தில் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால் 14 மாதங்களுக்கு பின் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி அரசு கவிழ்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து குமாரசாமி ராஜினாமா செய்துள்ளார். மேலும், கர்நாடகாவில் ஆட்சிக்கு உரிமை கோருவது குறித்தும், அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்தும் ஆலோசிப்பதற்காக கர்நாடக பாஜக தலைவர்கள் நேற்று டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினர்.
மேலும், நேற்று ஆர்.சங்கர், ரமேஷ் ஜர்கிஹோலி, மகேஷ் குமதல்லி ஆகிய எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், எடியூரப்பா ஆட்சிக்கு உரிமை கோருவதற்கு அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா இன்று (ஜூலை 26) காலையில் ஆளுநரை சந்தித்து ஆட்சிக்கு உரிமை கோரினார்.

அவசர அவசரமாக மசோதாக்கள் நிறைவேற்றம்: 18 எம்.பி.க்கள் மாநிலங்களவை சபாநாயகரிடம் புகார் மனு

அவசர அவசரமாக மசோதாக்கள் நிறைவேற்றம்: 18 எம்.பி.க்கள் மாநிலங்களவை சபாநாயகரிடம் புகார் மனு
எம்பி-க்கள்கையெழுத்திட்ட கடிதம்எம்பி-க்கள்கையெழுத்திட்ட கடிதம்மாலைமலர் ; மத்திய அரசு அவசர அவசரமாக மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது என்று 18 எம்.பி.க்கள் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் புகார் அளித்துள்ளனர். பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு மக்களவையில் தனி மெஜாரிட்டி இருப்பதால் கிடப்பில் கிடக்கும் மசோதாக்கள், திருத்தம் செய்யப்பட்ட மசோதாக்கள் ஆகியவற்றை தாக்கல் செய்து நிறைவேற்றி வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்குள் என்ஐஏ, முத்தலாக், ஆர்டிஐ திருத்தம் போன்ற முக்கியமான மசோதாக்கள் உள்பட பல மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளனர். முக்கியமான மசோதாக்களை பாராளுமன்றத்தின் தேர்வு கமிட்டி மற்றும் நிலைக்குழுவுக்கு அனுப்பி ஆராய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முறையிட்டன.
ஆனால் பா.ஜனதா அரசு அவர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. இந்நிலையில் அவசர அவசரமாக மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன என மாநிலங்களவையைச் சேர்ந்த 18 எம்.பி.க்கள் துணை ஜனாதிபதியும், மாநிலங்களை தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் புகார் அளித்துள்ளன

10% இட ஒதுக்கீடு எளிதில் கோர்ட்டால் தூக்கி எறியப்படும்... ஒரு பார்ப்பனரின் ஆதங்கம்

மோடி பிராமணர்களுக்கு வைத்த சைலன்ட் ஆப்பு:
விபி. சிங் பிரதமராக இருந்த போது மண்டல் கமிஷன் அமைத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மிகவும் வலுவாக இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார். அதனால் தான் பிராமணர்கள் எவ்வளவோ முயன்றும் இன்றுவரை அதை நீக்க முடியவில்லை.
ஆனால் மோடி தலைமையிலான பிஜேபி அரசு எவ்வித அடித்தளமும் இன்றி அவசர கோலத்தில் 10% என தேர்தல் இனாம் கொடுப்பது போல அள்ளி பறக்கவிடுகிறார். இதனால் என்ன பயன்? நீண்ட நாட்களாக இருந்த இட ஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என்ற கோஷம் நீர்த்து போகும். இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் எல்லாம் ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை வரும். இட ஒதுக்கீடு அவசியமானதே என்ற எண்ணம் ஏற்படும்.
ஆனால் பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக் என்று உள்ள இந்த 10% இட ஒதுக்கீடு எளிதில் கோர்ட்டால் தூக்கி எறியப்படும். எந்த கணக்கும் ஆதாரமும் இல்லாமல் மனம் போன போக்கில் 10% என அள்ளி விசிறியது ஆபத்தாய் முடியும். ஒரே நொடியில் இச்சட்டம் செல்லாக் காசாய் ஆகும். அதிக பட்சம் ஆறு மாதமோ ஒரு வருடமோ இதை பிராமணர்கள் அனுபவித்தால் அதிகம். மேலும் தமிழகம் போன்ற 3% பிராமண மக்கள் உள்ள மாநிலத்திலும் 10% கொடுத்தால் மற்ற சமூகத்தவரின் கோபத்திற்கும் பரிகாசத்திற்கும் ஆளாக நேரிடும். இவ்வளவு நாள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து நாம் செய்த அனைத்து வேலைகளும் நாசமாகப் போகும். ஆனால் இந்த இட ஒதுக்கீடும் நீக்கப்பட்டுவிடும்.

கர்நாடகத்தில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பு?

தினமணி : பெங்களூரு: மஜத மற்றும் காங்கிரசின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 16 பேரின் நிலை குறித்து சபாநாயகர் முடிவு எடுக்கும் வரை, சட்டசபையை முடக்கிவைத்து, சில மாதம் கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படலாம் எனக்கூறப்படுகிறது.
இது தொடர்பாக கர்நாடக மாநில பா.ஜ., செய்தி தொடர்பாளர் மதுசூதனன் கூறுகையில், அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் குறித்து சபாநாயகர் முடிவு எடுக்கும் வரை, சட்டசபையை முடக்கி, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி கவர்னர் பரிந்துரை செய்யலாம். இந்த சூழ்நிலைகளில், நாங்கள் ஆட்சி அமைக்க அவசரப்பட மாட்டோம்.
அவர்களின் ராஜினாமா ஏற்கப்படும் வரை சட்டசபையின் பலம் , நியமன எம்எல்ஏ.,வை சேர்த்து, 225 ஆக இருக்கும். பெரும்பான்மைக்கு தேவை 113 எம்எல்ஏக்கள். நாங்கள் ஆட்சியமைத்த பின்னர், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டால், எங்களிடம் சுயேட்சைகளை சேர்த்து 107 பேரின் ஆதரவு தான் இருக்கும். பெரும்பான்மைக்கு 6 பேரின் ஆதரவு இன்னும் தேவை.

சென்னை 90 மாணவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது .. நடுவீதியில் பட்டா கத்தி . பயங்கரம்

கல்லூரி முதல்வர்களுடன் இணை கமிஷனர் ஆலோசனை மோதலுக்கு காரணமான 90 மாணவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது தினத்தந்தி :  சென்னையில் மோதலுக்கு காரணமான 90 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்லூரி முதல்வர்களுடன் இணை கமிஷனர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, சென்னையில் மோதலுக்கு காரணமான 90 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்லூரி முதல்வர்களுடன் இணை கமிஷனர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஆயுதம் ஏந்தினால் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்.
சென்னை அரும்பாக்கத்தில் நடுரோட்டில் கல்லூரி மாணவர்கள் குழுவினர், இன்னொரு குழுவினர் மீது பட்டாக்கத்தியால் வெட்டி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோதல் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.< கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை

பேராசிரியர் S.F.N. செல்லையா மறைந்தார்.. திராவிடர் கழக 'தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் பிரசுரத்தின் ஆங்கில ...

Prince Ennares Periyar : இன்று காலையில் ரயில் விட்டு இறங்கியதும் வந்த, ஆசிரியர் குழு உறுப்பினருமான
பேராசிரியர் செல்லையா இன்று காலை மறைவுற்றார் என்னும் செய்தியாகும்.

சற்றும் எதிர்பாராத இன்னொரு பேரிடி போன்ற செய்தி, பிரபல ஆங்கிலப் பேராசிரியரும், 'THE MODERN RATIONALIST' மாத இதழின்
லயோலா கல்லூரியில் பணியாற்றிய அவர் பெரியார் திடலுக்கு வந்த நாள் எனக்கு நினைவிருக்கிறது.
பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் பெரியார் திடலில் ஆங்கில பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட போதும் சரி, "பெரியார் திடலில் இருந்து ஆங்கிலத்தில் வெளிவரும், வெளிவர வேண்டிய எல்லா வெளியீடுகளுக்கும் என் பங்களிப்பு இருக்கும். இது சமூக நீதிக்காகப் பாடுபடும் இந்த இயக்கத்துக்கு நான் ஆற்ற வேண்டிய கடமை" என்று இயக்க வெளியீடுகளை மொழியாக்கம் செய்தும்,
The Modern Rationalist இதழில் பங்காற்றியபோதும் சரி, எவ்வித பொருளாதாரப் பலனையும் எதிர்பாராமல் தொண்டுள்ளத்துடன் வந்து பணியாற்றியவர். பணி ஓய்வுக்குப் பின் சமூகப்பணியாற்றுவதில் மற்றவர்க்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடியவர்.
இறை நம்பிக்கையாளர் எனினும், தந்தை பெரியார் மீதும், ஆசிரியர் வீரமணி அவர்கள் மீதும் மாறாப் பற்று கொண்டவர். ஆசிரியர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
அண்மையில் அவர் கொடுத்துச் சென்ற செல்வம்தான் இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான "Young friends, do you know?" தொகுப்பாகும்.

பரோலில் வந்த நளினிக்கு இடம் கொடுக்க முன்வந்த சிங்கராயர் ... கைவிரித்த சீமான் வகையறா

nalininakkheeran.in - athanurchozhan" : ராஜிவ் கொலையில் சிறையில் உள்ள ஏழுபேரை விடுதலை
செய்யக்கோரி எத்தனையோ போராட்டங்களை யார் யாரோ நடத்தினார்கள். நளினி தனது மகள் திருமணத்துக்காக பரோல் கேட்டு மறுக்கப்பட்டபோது கடுமையாக விமர்சித்தார்கள். விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்று சீமான் உள்ளிட்ட பல அமைப்புகள் மார்தட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், தனது மகள் திருமணத்தை நடத்த பரோலில் வெளிவந்த நளினிக்கு தங்குவதற்கு யாரும் வீடு தரவில்லை. தமிழ்தேசியம் பேசும் அமைப்புகளில் சுப.வீரபாண்டியன் தலைமையிலான திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர் மட்டுமே தனது வீட்டில் தங்கி திருமண வேலைகளை செய்ய நளினிக்கு உதவியிருக்கிறார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. சிங்கராயருக்கு சுப.வீரபாண்டியன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளா

சத்திஷ்கர் இளம்பெண்ணை 10 நாட்கள் அடைத்து வைத்து போதை ஊசி ஏற்றி பாலியல் வன்முறை

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிலாஷ்பூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் அக்கம் பக்கத்தினர் மற்றும் இளம்பெண்ணின் தோழிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண்ணுடன் அதே பகுதியை சேர்ந்த நிஷுகுப்தா (வயது20) என்ற வாலிபர் சுற்றித் திரிந்தது தெரிய வந்தது. போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மாயமான இளம்பெண் நேற்று முன்தினம் அப்பகுதியில் மீட்கப்பட்டார். அவர் உடல் முழுவதும் காயங்கள் மற்றும் கடிபட்ட அடையாளங்கள் இருந்தன. மேலும் அவரது உடலில் போதை மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி மயக்கமடையச் செய்து அவரை 10 நாட்களாக அடைத்து வைத்து கற்பழித்ததும் தெரிய வந்தது.
அந்த இளம்பெண் அடித்து உதைத்து கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட இளம்பெண்ணை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் நிஷுகுப்தா தான் அவரை கற்பழித்ததாக கூறினார்.

மத்திய பிரதேசம்.. 2 பாஜக எம் எல் ஏக்கள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்


.sathiyam.tv - mohamed : மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் 2 பேர் வாக்களித்துள்ள நிலையில் அவர்கள் ஏற்கெனவே காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததை தொடர்ந்து அங்கு மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது. இதனால் பெரும்பான்மை இல்லாத மத்திய பிரதேசத்திலும் பாஜகவினர் ஆட்சியை கைபற்றும் முயற்சியில் இறங்ககூடும் என காங்கிரஸ் கவலையில் உள்ளது.
மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களை காங்கிரஸ் வென்றது. 108 இடங்களை பாஜக பிடித்தது. நான்கு சுயேச்சைகள், இரண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள், ஒரு சமாஜ்வாடி எம்எல்ஏ ஆகியோரின் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பாஜக MLA க்கள் 2 பேர் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்து பாஜக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
இது குறித்து அந்த எம்.எல்.ஏ க்கள் கூறுகையில்; நாங்கள் சொந்த வீட்டுக்கு திரும்பி விட்டோம் என தெரிவித்துள்ளனர்

வியாழன், 25 ஜூலை, 2019

நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலையில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளிடம் விசாரணை

தினத்தந்தி :
நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலையில் திடீர் திருப்பம் : திமுக பெண் பிரமுகரிடம் விசாரணைநெல்லை  முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. மாவட்ட திமுக மகளிர் அணி துணை செயலாளராக உள்ள சீனியம்மாளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நெல்லை நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் உமா மகேசுவரி (வயது 62). தி.மு.க.வை சேர்ந்த இவர் நெல்லை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகவும் இருந்து வந்தார். உமா மகேசுவரியின் கணவர் முருகசங்கரன் (72). நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுடைய வீடு நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகில் உள்ள ரோஸ்நகரில் உள்ளது. இவர்களுக்கு கார்த்திகா, பிரியா என 2 மகள்கள் உள்ளனர். உமா மகேசுவரி வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரி என்பவர் பணிப்பெண்ணாக வேலை செய்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் உமா மகேசுவரி, முருகசங்கரன், மாரி ஆகிய 3 பேரையும் கொள்ளை கும்பல் கொடூரமாக கொலை செய்து விட்டு, தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த  மேலப்பாளையம் போலீசார் விரைந்து வந்து உடல்களை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

லோக்சபாவில் முத்தலாக் மசோதா நிறைவேற்றம்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

ராஜ்யசபாவில் நிறைவேறவில்லை tamil.oneindia.com - VelmuruganP: டெல்லி: லோக்சபாவில் முத்தலாக் தடுப்பு மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று நிறைவேற்றி உள்ளது.
தலாக், தலாக், தலாக் என மூன்று முறை கூறி பெண்களை விவாகரத்து செய்யும் முத்தலாக் முறை முஸ்லிம் சமுதயாத்தில் உள்ளது. இந்த முத்தலாக் முறையை தடுக்க மத்திய பாஜக அரசு கடந்த சில ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர முயற்சி செய்து வந்தது.
இந்த சட்டத்துக்கு எதிரக்கட்சிகளிடையே ஆதரவு இல்லை என்பதால் அவசர சட்டத்தை இயற்றியே பயன்படுத்தி வந்தது.
இதன்படி கடந்த ஆட்சியில் மோடி தலைமையிலான பாஜக அரசு லோக்சபாவில் முத்தலாக் தடுப்பு மசோதவை நிறைவேற்றியது. ஆனால் இந்த மசோதாவை ராஜ்யசபாவில் பாஜகவால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் இந்த மசோதா சட்டம் ஆகாமல் காலாவதியானது. இதையடுத்து கடநத் செப்டம்பரிலும், பிப்ரவரியிலும் முத்தலாக் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது.

ஆந்திராவில் அச்சடிக்கப்பட்ட பலகோடி ரூபாய் கள்ளநோட்டுகள் தமிழகத்தில் ஊடுருவல்.

கள்ள நோட்டு அச்சடிப்பு tamil.oneindia.com - VelmuruganP : சித்தூர் : ஆந்திராவில் அச்சடிக்கப்பட்ட பலகோடி ரூபாய் கள்ளநோட்டுகள் தமிழகத்தில் ஊடுருவியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குப்பத்தில் பிடிப்பட்ட கள்ள நோட்டு கும்பல் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளது.
தமிழக ஆந்திர எல்லையில் கள்ளநோட்டுக்களை சிலர் அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு தகவல்கிடைத்தது. இதையடுத்து ஆந்திர மாநிலம் குப்பத்தில் கள்ளநோட்டு கும்பல் 6 பேரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 76 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுக்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இவை அனைத்தும் ரூ.2000, ரூ.500, ரூ.200, ரூ.100 கள்ள நோட்டுக்கள் ஆகும்.
குப்பம் அருகே விஜலாபுரத்தில் ஒரு வீட்டையே கள்ள நோட்டுக்களை கத்தை கத்தையாக அடிக்கும் அச்சமாக மாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 6 பேரில் மணிகண்டன் (28), சுரேஷ்குமார்(23), குபேந்திரன்(50) ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள மருவிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனந்தகுமார் (33) குப்பத்தைச் சேந்தவர் , சுரேஷ் ரெட்டி (31), ஹேமந்த் (26) ஆகியோர் திருப்பதியை சேரந்தவர்கள் என்பதும் தெரியிவந்துள்ளது.

சிலை கடத்தலில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு தொடர்பில்லியாம்

minister nakkheeran.in/author/kalaimohan : நேற்று உயர்நீதிமன்றத்தில் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக தன்னை அவருடன் கூட்டுச் சேர்த்து கைது செய்திருப்பதாகவும், எனவே  பொன்மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டுமெனக் கோரியும் முன்னாள் டிஎஸ்பி காதர் பாஷா தொடர்ந்த வழக்கில் விசாரணை  நடைபெற்றது. விசாரணையின் போது  சிலைக் கடத்தலில் இரண்டு தமிழக அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக பொன்மாணிக்கவேல் தரப்பு தகவல் அளித்திருந்தது. இந்நிலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஒரு தனியார் தொலைக்காட்சியின் பெயரை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிசவாசன், எனது பெயரையும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பெயரையும் குறிப்பிட்டு செய்தி வந்திருக்கிறது. யாருக்கு தொடர்பு என்று பொன்மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கட்டும், ஆனால் அந்த தனியார் தொலைக்காட்சி எப்படி எங்களுக்கு அதில் தொடர்புள்ளது என செய்தி வெளியிடலாம். அந்த தொலைக்காட்சிக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்துள்ளோம் என்றார்.

வைகோ எம்.பி.யாக பதவியேற்ற முதல் நாளிலேயே ஸ்மிருதி இரானியிடம் கேள்வி வீடியோ

tamil.news18.com/ :மாநிலங்களவையில் வைகோ இன்று எம்.பி.யாக தமிழில் உறுதி மொழி எடுத்து பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து கேள்வி நேரத்தின் போது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், வைகோ துணைக்கேள்வி கேட்டார். அப்போது பேசிய வைகோ,  23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சபையில் கன்னி உரையாக முதல் துணைக்கேள்வி எழுப்ப வாய்ப்பு தந்தமைக்கு நன்றி என்றார். அப்போது அவையில் இருந்த பிரதமர் மோடி மேஜையை தட்டி வரவேற்றார்.
தொடர்ந்து பேசிய வைகோ, ”பருத்தி விலை, பஞ்சு விலை  திடீர் திடீரென மாறுவது ஒவ்வொரு ஆண்டும் நூற்பு ஆலைகளுக்கு நெருக்கடி சூழ்நிலை ஏற்படுகிறது. மூடப்பட்ட ஆலைகளால் இந்தியாவில் எத்தனை லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர் என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் தருவாரா? தமிழ்நாட்டில் நூற்பு ஆலைகள் சுற்றுச் சூழல் விதிகளை முறையாக பின்பற்றுகின்றன. ஆனால், மற்ற மாநிலங்கள் அப்படிப் பின்பற்றுவது இல்லை. இதனால் தமிழக நூற்பு ஆலைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் விதிகளை சமமாகப் பின்பற்ற அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?  என கேள்வி கேட்டார்.

வைகோ உள்ளிட்ட 5 தமிழக மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு !

தமிழில் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு!minnmbalam : மாநிலங்களவை உறுப்பினர்களாக வைகோ உள்ளிட்ட 5 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
தமிழகத்திலிருந்து 2013ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது. இதனையடுத்து, மாநிலங்களவை இன்று (ஜூலை 25) கூடியதும் தமிழகத்திலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. முதலில் அதிமுக உறுப்பினர் சந்திரசேகரன், கடவுளின் பெயரால் உறுமொழி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். அவரைத் தொடர்ந்து முகமது ஜானும் அவ்வாறே பதவியேற்றார்.

பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கத் தேவையில்லை. .. ஒரு பிராமண இளைஞர் கருத்து!

 Gopalakrishnan Sankaranarayanan : / எந்தக் காரணத்தைக் கொண்டும்
பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கத் தேவையில்லை. அதுவும் தமிழகத்தில் தேவையே இல்லை. எவ்வளவு ஏழை என்றாலும் ஒரு பிராமணர் பிழைத்துக்கொண்டு கெளரவமான வாழ்வு வாழ்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் இங்கே செய்யப்பட்டிருக்கின்றன. எந்த வேலையும் கிடைக்காத பிராமணர்கூட பிராமணர் என்பதால் மட்டுமே த்விஜஸ்தம்பம் இல்லாத வைதீகப் பிரதிஷ்டை கோயில்கள் (தனியார் கோயில்களில்) அர்ச்சகராக இருக்க முடியும். புரோகிதம், வைதீக காரியங்களுக்குச் சென்று பிழைத்துக்கொள்ள முடியும்.
இட ஒதுக்கீட்டால் வாழ்க்கையை இழந்த பிராமணர் யாருமே இல்லை அதிகபட்சம் அவர் படிக்க விரும்பிய உயர்க்லவியை, பெற விரும்பிய அரசுப் பணியை இழந்திருப்பார். 69% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்ட பிறகும் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் அரசுப் பணிகளிலும் உயர்கல்விகளிலும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் பல துறைகளில் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் அவர்களே அதிகமாக இருக்கிறார்கள்். இதற்கெல்லாம் அவர்கள் திறமையும் அறிவும் காரணமாக இருக்கும் என்றாலும் இவற்றுக்கான திறமையையும அறிவையும் பெற்றுக்கொள்வதற்கான சமூகச் சூழல் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை இருவரை தேடி வலைவீச்சு ..சி டி வி காட்சிகள்

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.dailythanthi.com : நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னை,; நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் உமா மகேசுவரி (வயது 62). இவர் தி.மு.க.வை சேர்ந்தவர். இவரது கணவர் முருகசங்கரன் (72). நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர இவர்களது வீடு பாளையங்கோட்டை ரோஸ் நகரில் உள்ளது. உமா மகேசுவரி தற்போது நெல்லை மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார். உமா மகேசுவரியின் வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரி (37) என்பவர் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். மாரி நேற்று காலை வழக்கம்போல் உமா மகேசுவரியின் வீட்டுக்கு வேலைக்கு வந்தார். அவர் தினமும் வேலையை முடித்துவிட்டு மதியம் வீட்டுக்கு சாப்பிட செல்வது வழக்கம

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதா தயக்கம்

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதா தயக்கம்dailythanthi.com : கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதா தயக்கம் காட்டி வருகிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் தீர்ப்பு அளிக்கும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு, கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. இந்தநிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் விழுந்தன. இந்தநிலையில் புதிய அரசு அமைக்கும் பணியில் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் தீவிரமாக களம் இறங்கினர்.
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெறும் என்றும், சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கவர்னரை சந்தித்து எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்றும் பா.ஜனதா தலைவர்கள் தெரிவித்தனர்.

மே.வங்க எம்.பி மஹுவா மொய்த்ரா மத்திய அரசை கடுமையாக ... வீடியோ


மின்னம்பலம : உபா சட்டத் திருத்த மசோதா மீது பேசிய திருணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, மத்திய அரசை கடுமையாக சாடினார்.
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா- 2019 ஐ (உபா) உள் துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி மக்களவையில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தினார். மசோதா மீதான விவாதத்தின்போது இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இறுதியாக வாக்கெடுப்பில் ஆதரவாக 287 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் பதிவானதால் மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
விவாதத்தில் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய மஹுவா மொய்த்ராவின் உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. “சில சட்டங்களின் உதவியுடன் தான் நினைப்பதை சாதிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தேசப் பாதுகாப்பு, கொள்கைகள் உள்ளிட்ட விவகாரங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள், சிறுபான்மையினர், செயற்பாட்டாளர்கள் ஆகியோர் அரசுடன் உடன்படாமல் கேள்வி எழுப்பும்போதெல்லாம் அவர்கள் மீது ஆண்டி-இந்தியன் முத்திரை குத்திவிடுகிறார்கள்” என்று அவர் குற்றம்சாட்டினார்.

ரூ.200 கோடி சொத்து: நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலைப் பின்னணி!

ரூ.200 கோடி சொத்து: முன்னாள் மேயர் கொலைப் பின்னணி!மின்னம்பலம் : திருநெல்வேலி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவரின் கொலைப் பின்னணியில் கூலிப்படையினர் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நெல்லை மாநகர முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி தனது கணவர் முருக சங்கருடன் ரெட்டியார்பட்டியிலுள்ள ஆசிரியர் காலணியில் வசித்துவந்தார். முருக சங்கர் நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்களது வீட்டிற்கு அருகிலேயே மகள் கார்த்திகா வசித்து வருகிறார். இவர் ஆரல் வாய்மொழியிலுள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றிவந்துள்ளார்.
உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இன்று காலை 7 மணிப் பதிப்பில் முன்னாள் மேயர் கொலை: நெல்லையில் பதற்றம்! என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

விஸ்வரூப வேலுமணி- அலர்ட் ஆகும் எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: விஸ்வரூப வேலுமணி-  அலர்ட் ஆகும் எடப்பாடி மின்னம்பலம்:  மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் கோயமுத்தூர் லொக்கேஷன் காட்டியது.
“சென்னையிலிருந்து சேலம் செல்லும்போதெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை வரை விமானத்தில் செல்வார். அங்கிருந்து புறப்படும்போதும் கோவை வந்துதான் சென்னைக்கு விமானம் ஏறுவார். இந்த நேரங்களில் சிஎம் ஏர்போர்ட் வந்துவிட்டாரா என்று கோவை பத்திரிகையாளர்களிடம் கேட்டால், அவர்கள் திருப்பிக் கேட்கும் கேள்வி, ‘எந்த சி எம்? கொங்கு சிஎம்மா? தமிழக சி எம் மா? ’ என்பதுதான். தமிழ்நாட்டுக்கு ஒரு சிஎம் தானே என்று கேட்டால், கோவைக்கு முதலில் எஸ்.பி. வேலுமணிதான் சி.எம். அடுத்துதான் எடப்பாடி பழனிசாமி என்று உடனடியாகச் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் ஆளுமையும் ஆதிக்கமும் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் கோவை வட்டார அதிமுகவினரும்.
தனது பிரதிநிதியாக டெல்லி செல்லும் அமைச்சர் வேலுமணி, அங்கே பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவிடம் தனிப்பட்ட முறையில் தொடர்புகளை வளர்த்துக் கொண்டு. பாஜகவில் கூட சேர்வதற்கு தயாராக தனி ஆவர்த்தனம் செய்து வருவதாக முதல்வர் எடப்பாடி ஆதங்கப்படுகிறார் என்ற செய்தி வேலுமணியா இப்படி? எடப்பாடி ஆதங்கம்என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் ஏற்கனவே வெளிவந்திருக்கிறது.

புதன், 24 ஜூலை, 2019

கிழக்கு முஸ்லிம்களோடு கிட்டு செய்துகொண்ட ஒப்பந்தம்.. புலிகளும் முஸ்லிம்களும் ..

  ilankainet.com  :;  கல்முனை உப பிரதேச செயலக விடயம் இன்று தமிழ் முஸ்லிம் அரசியல் என்பதுமாகும்.
பிரதேச செயலக பிரிப்பானது இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்த காலத்தில் தமிழ் ஆயுதக்குழுக்களின் ஆழுகைக்குள் கல்முனை இருந்தபோது, பிரிக்கப்பட்டாலும் அவ்விவகாரத்தில் ஆயுதக்குழுக்கள் நேரடியாக தலையிட்டார்கள் என்ற எவ்வித பதிவுகளும் இல்லை. அத்துடன் அப்பிரிப்பானது அத்தருணத்தில் மக்களின் வரவேற்பினை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பேயை அழிக்க பிசாசுடன் கூட்டுச்சேருவேன் என புலிகளுடன் தேனிலவு கொண்டாடிய பிறேமதாஸ புலிகளை ஏவல் பிசாசுகளாக மாற்றி மாகாண சபை நிர்வாகத்தை சீர்குலைக்க ஏவிவிட்டார். அதன் பின்னணியில் கிழக்கிலங்கையில் முஸ்லிம் கிராமங்களில் ஒழிந்து கொள்வதற்கும் மாகாண சபை நடவடிக்கைகளை முடக்குவதற்குமாக கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும் ஒப்பந்தம் ஒன்றை புலிகள் முஸ்லிம் தரப்புடன் செய்து கொண்டனர்.
புலிகளின் தளபதிகளின் ஒருவரான கிட்டு தலைமையில் சென்னையில் 1988 ஏப்ரல் மாதம் 15,16,19 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற குறித்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், பதினெட்டு (18) அம்சங்களைக்கொண்ட ஒப்பந்த பத்திரத்தில் 21.04.1988 திகதி புலிகளின் சார்பில் 'கிட்டு' என்று அழைக்கப்பட்ட சதாசிவம் கிருஷ்னகுமாரும், முஸ்லிம்கள் சார்பில் எம்.ஐ.எம். மொஹிதீன் என்பவரும் கையொப்பமிட்டதுடன் கூட்டறிக்கையும் வாசிக்கப்பட்டது.

வாடகைத் தாய் ஒழுங்குமுறைச் சட்டம்!' - கொந்தளிக்கும் மருத்துவச் செயற்பாட்டாளர்கள்!

விகடன் :வாடகைத்தாய் ஒழுங்குமுறைச் சட்டத் திருத்தம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? -
 ஓர் அலசல். குழந்தையில்லாத் தம்பதிகளுக்கு மிகப்பெரிய வரமாக இருப்பது, வாடகைத்தாய் முறை. ஆனால், தற்போது வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது வர்த்தகமாக மாறிவருகிறது. உலக நாடுகளில் உள்ள தம்பதிகளுக்கு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுத் தரும் வர்த்தக மையமாக இந்தியா செயல்பட்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான், வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா - 2019 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடகைத் தாய் மூலம் வணிக ரீதியாகக் குழந்தை பெறுவதைத் தடுப்பதுடன், அப்பாவிப் பெண்களை அந்த மோசடியிலிருந்து காப்பாற்றுவதே இந்த மசோதாவின் நோக்கம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  
வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதாவின் முக்கிய அம்சங்கள் திருமணமாகி குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த இந்தியத் தம்பதிகள், வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம். குழந்தை பெற்றுத்தரும் வாடகைத் தாய், குழந்தை பெற விரும்பும் தம்பதியின் உறவினராக இருக்க வேண்டும்.

பொன் மாணிக்கவேல் : சிலைக் கடத்தலில் 2 தமிழக அமைச்சர்களுக்கு தொடர்பு!

2 ministers involved in the abduction of a statue?The accusation of ponmanikkavel2 ministers involved in the abduction of a statue?The accusation of ponmanikkavelnakkheeran.in/author/kalaimohan : சிலை கடத்தலில் இரண்டு தமிழக அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் பொன்மாணிக்கவேல் தகவல் அளித்துள்ளார்.
சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக தன்னை அவருடன் கூட்டுச் சேர்ந்து கைது செய்திருப்பதாக டிஎஸ்பியாக இருந்த காதர் பாஷா வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னை பழி வாங்கும் நோக்கத்தில் கைது செய்த பொன்மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழக உள்துறை செயலாளரிடமும், தமிழக தலைமைச் செயலாளரிடம் மனு கொடுத்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் கொடுத்த அந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் டிஎஸ்பி காதர்பாஷா வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சிபிசிஐடி போலீசார் பொன்மாணிக்கவேல் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் பொன்மாணிக்கவேல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்ரான் கான் : பாகிஸ்தானில் 40 ஆயிரம் தீவிரவாதிகள் உள்ளனர்


தினத்தந்தி : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் ராணுவ தலைமை தளபதி ஜாவேத் பாஜ்வா, ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவர் ஃபைஸ் ஹமீது ஆகியோரும் சென்றுள்ளனர். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த ராணுவ நிதியுதவியை அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ள நிலையில், இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.
 இந்த பயணத்தில் அதிபர் டிரம்பை சந்தித்து அவர் பேசினார். இதன்பின் அவர் அமெரிக்காவின் இன்ஸ்டியூட் ஆப் பீஸ் என்ற அமைப்பில் உரையாற்றும்பொழுது, தனது பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் அரசு அதிகாரத்திற்கு வருவதற்கு முன் இருந்த அரசு, நாட்டில் இயங்கி வந்த தீவிரவாத குழுக்களை சரணடைய செய்ய அரசியல் தைரியம் இல்லாமல் இருந்தனர்.

என்னை அதிமுக பொதுச்செயலாளராக்குங்கள்..மோடி + அமித்ஷாவிடம் பன்னீர்செல்வம் வேண்டுதல்

epsamit shah o panneerselvamnakkheeran.in - prakash" : ஓ.பன்னீர்செல்வம் திடீரென டெல்லிக்கு போனதற்கு காரணம் அவரது மகனை மந்திரியாக்குவதற்கு என்று கூறப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் அமித்ஷா, ஜெ.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். பாஜகவின் தேசிய தலைவரான அமித்ஷா மற்றும் தமிழகத்தின் மத்திய அமைச்சரான நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை சந்திக்கும்போது தன்னுடன் யாரையும் துணைக்கு வைத்துக்கொள்ளவில்லை.
நிர்மலா சீதாராமனை சந்திக்கும்போது மட்டும் கடைசி 15 நிமிடங்கள் தமிழகத்தின் நிதித்துறை செயலாளரான கிருஷ்ணன் உடனிருந்தார். ஆகவே நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரின் நிறைவில் வரப்போகும் மந்திரிசபை மாற்றத்தில் மகனை மந்திரியாக்க மட்டும் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு செல்லவில்லை. அதற்கு பதிலாக ஒரு வித்தியாசமான கோரிக்கையை பாஜகவிடம் ஓ.பன்னீர்செல்வம் முன் வைத்திருக்கிறார்.
 ''நான் துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி கொள்கிறேன். என்னை அதிமுகவின் பொதுச்செயலாளராக்குங்கள். இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் துணையோடு கட்சியை கைப்பற்றி விடுவார். அது பாஜகவுக்கு எதிரான கட்சியாக மாறிவிடும்'' என ஓ.பன்னீர்செல்வம் சொல்லியிருக்கிறார்.

இலங்கைக்கு இந்தியா உட்பட 46 நாடுகளுக்கு விமான நிலையத்தில் விசா . நடைமுறை மீண்டும்

வீரகேசரி :ாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில்
வைத்து விசா வழங்கும் முறையை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து மீண்டும் அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறை, கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து, இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தினை, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க சமர்ப்பித்திருந்தார். இந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், டென்மார்க், சுவீடன், நோர்வே, பின்லாந்து, ஐஸ்லாந்து, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து விசா வழங்கப்படவுள்ளது.

புதிய கல்விக் கொள்கை மாநிலங்களுக்குப் பொருந்துமா?. .. கலைஞர் கருணாநிதி - July 23 - 2016

Boopathi PT ; குபீர் போராளிகளே!!! தமிழின துரோகி,
தலித்விரோதி, கட்டுமரம்
பேசுகிறேன் - July 23 - 2016 :
புதிய கல்விக் கொள்கை மாநிலங்களுக்குப் பொருந்துமா?
கடந்த சில நாட்களாக, நாளேடுகள், இதழ்கள், ஊடகங்கள், சமுதாய மற்றும் அரசியல் அரங்குகள் அனைத்திலும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பற்றிய சாதக-பாதகங்கள் விரிவாக விவாதிக்கப்படுகின்றன. புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான பரிந்துரைகள் அளிக்க முன்னாள் கேபினட் செயலாளர், டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன், ஐ.ஏ.எஸ்., தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்தக் குழு தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை கல்வித் தரத்தை உயர்த்த பல்வேறு பரிந்துரைகள் கொண்ட 200 பக்க அறிக்கையை அண்மையில் அளித்திருக்கிறது.
1964ஆம் ஆண்டு இந்தியக் கல்விக் குழு, பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவராக இருந்த கோத்தாரி தலைமையிலும்; 1993ஆம் ஆண்டு கல்விக் குழு கல்வியாளரும் அறிவியலாளருமான யஷ்பால் தலைமையிலும், அமைக்கப்பட்டிருக்கும் போது; தற்போது மத்திய பா.ஜ.க. ஆட்சியில் 2015ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான குழு கல்வியாளர் தலைமையில் அமைக்கப்படாமல், அரசின் பொது நிர்வாகத் துறையைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தலைமையில் அமைக்கப்பட்டிருப்பது வினோதமான முடிவாகும். அது மட்டுமல்ல; குழுவில் இடம் பெற்றுள்ள அய்வரில் நான்கு பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆவர்; ஒருவர் மட்டுமே கல்வியாளர் என்பது கூர்ந்து நோக்கத்தக்கது.