சனி, 24 ஆகஸ்ட், 2013

MGR வேண்டாம் மதகஜராஜா போதும் ! அலறும் விஷால் ! தலைவா தமிழ் சினிமாவுக்கு தந்த பாடம்

விஷால் நடித்த படத்துக்கு சூட்டப்பட்டிருந்த ‘எம்.ஜி.ஆர்.’ என்ற பெயர் திடீர்
என்று மாற்றப்பட்டது. ‘‘எம்.ஜி.ஆர். என்பவர் மாபெரும் சக்தி. அவருடைய பெயரை தவறாக பயன்படுத்த விரும்பவில்லை’’ என்று விஷால் கூறினார்.‘எம்.ஜிஆர்.’ ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்த படம், ‘மதகஜராஜா.’ இதில் விஷால் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி, அஞ்சலி ஆகிய இருவரும் நடித்துள்ளனர். சுந்தர் சி. டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது. விழாவில், படத்தின் கதாநாயகன் விஷால் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–
‘‘நான், 2003–ம் ஆண்டில், ‘செல்லமே’ படத்தின் மூலம் கதாநாயகன் ஆனேன். செப்டம்பர் 6–ந்தேதி வந்தால், சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிறது. அந்த நாளில்தான் ‘மதகஜராஜா’வை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.
நான் நடித்த எல்லா படங்களுமே குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வந்துள்ளன. இந்த படம் தாமதமாகி விட்டது. அதனால் விஷால் பிலிம் சர்க்யூட் என்ற பெயரில் சொந்த பட நிறுவனம் தொடங்கி நானே வெளியிடுகிறேன்.
பெயர் மாற்றம்
இந்த படத்துக்கு முதலில், ‘மதகஜராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. பின்னர், ‘எம்.ஜி.ஆர்.’ என்று மாற்றப்பட்டது. எம்.ஜி.ஆர், ஒரு மாபெரும் சக்தி. அதை தவறாக பயன்படுத்த விரும்பவில்லை. அதனால் படத்தின் பெயர் மீண்டும் ‘மதகஜராஜா’ என்றே மாற்றப்பட்டு இருக்கிறது.’’
இவ்வாறு விஷால் கூறினார்.அடடா  அப்ப முதல்ல தப்பாதான் பயன்படுத்தி இருக்கீங்க?

தொல் திருமாவளவன் கவிதாவை ஏமாற்றி விட்டாராமே ? யாரைத்தான் நம்புவதோ ?

கோவை: விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாளவன் தம்மை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புார் அளித்துள்ளார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று பிற்பகல் சென்ற கவிதா என்ற பெண், போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கவிதா கூறியுள்ளதாவது: நான் கோவையில் உள்ள கவிதா தியேட்டர் உரிமையாளரின் மகள். எனக்கும் செந்தில் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம். அத் பின்னர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். குழந்தையை தத்தெடுப்பது தொடர்பாக டெல்லி சென்ற போது திருமாவளவனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்வதாக கூறியிருந்தார். கோவை ரேஸ் கோர்சில் உள்ள எனது வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில் சில காரணங்களைக் கூறி என்னை திருமணம் செய்ய முடியாது என்று அவர் கூறுகிறார். மேலும் எனக்கு மிரட்டல்களும் வருகிறது. எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது சொத்துக்களை திருமாவளவனின் பெயரைக்கூறி விஜயகுமார், சீனிவாசன், கார்த்தி, ஜெயந்தி ஆகியோர் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

ஓ ! நமக்கு வாய்த்த அடிமைகள் லிஸ்டில் பன்னீர்செல்வம் இல்லையாமே ? கடும் கோபத்தில் இதயதெய்வம்

சென்னை: தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கோபத்தில் இருப்பதாகவும் வில் வர உள்ள அமைச்சரவை மாற்றத்தில் அவருக்கு கல்தா கொடுக்கப்படலாம் என்றும் பரவிய தகவலால் அதிமுக வட்டாரம் பரபரப்பாகி இருகிறது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தான் தற்போதைய அமைச்சர்களில் சீனியர். கடந்த சிலவாரங்களாகே மூத்த அமைச்சர்கள் மற்றும் 21 மாவட்ட செயலர்களை ஜெயலலிதா எந்த நேரத்திலும் மாற்றுவார் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மூத்த அமைச்சர்களில் ஓ. பன்னீர்செல்வம் தலைதான் உருட்டப்படுவோர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓ. பன்னீர்செல்வம் மீது ஜெ. காட்டம்? கல்தா பட்டியலில் முதலிடமா? ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் மிகவும் நம்பிக்கைக்குரியவர் ஓ. பன்னீர்செல்வம் என்பதாலேயே முன்பு முதல்வர் பதவியையே கொடுத்தார். ஆனால் ஜெயலலிதாவுக்கு இப்போது போகும் ஏகப்பட்ட புகார் கடிதங்களில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரானவை அதிகம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள். அதிலும் பல புகார்களுக்கு கத்தை கத்தையாக ஆதாரங்களும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது கண்டு முதல்வர் ஜெயலலிதா அதிர்ந்து போனாராம்.

இடைத்தேர்தலில் நடிகை குத்து ரம்யா பெருவெற்றி !


கர்நாடகாவில் நடைபெற்ற 2 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு ரூரல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் வெற்றி பெற்றுள்ள நிலையில், மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நடிகை குத்து ரம்யா, தன்னை எதிர்‌த்து போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளரை விட 47, 662 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பிடிபட்ட மும்பை பாலியல் குற்றவாளி விலாவாரியாக விபரித்தான் ! 2வது குற்றவாளியும் கைது

மும்பை: மும்பையில் இளம் பத்திரிக்கையாளரை பலாத்காரம் செய்துவிட்டு சாவகாசமாக வீட்டில் போய் பாவ்பாஜி சாப்பிட்டுள்ளான் குற்றவாளி சந்த். மும்பையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் புகைப்பட நிருபராகப் பணிபுரிந்து வந்த 23 வயது பெண், வியாழக்கிழமை மாலை தனது ஆண் நண்பர் ஒருவருடன் புகைப்படம் எடுப்பதற்காக மும்பை லோயர் பேரல் பகுதியில் ஆள் அரவமின்றி பாழடைந்து கிடக்கும் சக்தி மில்ஸ் வளாகத்துக்கு சென்றுள்ளார். அங்கு 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழி மறித்தது. அப்பெண்ணின் நண்பரை தாக்கி, கட்டிப் போட்டது. பின்னர் அந்த 5 பேரும் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இடைத் தேர்தல்: (thivya spandana) குத்து ரம்யா முன்னிலை, அனிதாவுக்கு பின்னடைவு

பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா, பெங்களூர் புறநகர் லோக்சபா தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பெங்களூரு புறநகர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மருமகளும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவியுமான அனிதா குமாரசாமி போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சுரேஷ் நிறுத்தப்பட்டார். மாண்டியா தொகுதியில் காங்‌கிரஸ் வேட்பாளராக திரைப்பட நடிகை குத்து ரம்யாவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் புட்டராஜூ போட்டியிட்டனர். கடந்த 21-ந் தேதி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் இரண்டு தொகுதிகளிலுமே காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர tamil.oneindia.in

சிக்கிய பெங்களூர், தர்மபுரியை சேர்ந்த 6 பேர்களும் தீவிரவாதிகளா ? கியூ பிரான்ச் விசாரணை

புதுக்கடை:புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் கடற்கரை பகுதியில் நேற்று
இரவு நடந்த சோதனையில் பெங்களூர், தர்மபுரியை சேர்ந்த 6 பேர் சிக்கினர். இலங்கையில் இருந்து தமிழகத்துக்குள் ஊடுருவி மதுரை, மயிலாடுதுறை நகரில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத் துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு  இருக்கிறது. கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் ராணுவமும் இந்திய எல்லைக்குள் ஊடுருவல் ~ China Pakistan ஐ தொடர்ந்து தற்போது மியன்மரும்

பாகிஸ்தான், சீனாவைத் தொடர்ந்து மியான்மர் ராணுவமும் இந்திய எல்லைக்குள் ஊடுருவல்
இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும் பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவத்தின் தலைவலியை சமாளிக்கவே இந்திய அரசு திணறிக்கொண்டிருக்கும் வேளையில் புதிய திருகுவலியாக மியான்மர் ராணுவப் படைகள் மணிப்பூரில் உள்ள எல்லைக்கோட்டை கடந்து ஊடுருவி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா - மியான்மர் நாடுகளுக்கிடையே சுமார் 398 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள 76-வது கம்பம் அருகே கடந்த வியாழக்கிழமை மியான்மர் ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். சன்டேல் மாவட்டத்தில் உள்ள போலன்பை கிராமத்தில் கூடாரம் அமைக்கவும் அவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தினமலருக்கு அரசு விளம்பரம் NO ! அமைச்சர்களின் ஆழ்ந்த உறக்கமும் அம்மாவின் முழக்கமும் காரணமா ?

சென்னை:"முதல்வர் உரை நிகழ்த்திய போது, அமைச்சர்கள் எல்லாம் தூங்கி வழிந்து கொண்டிருந்த புகைப்படத்தை, முதல் பக்கத்தில் வெளியிட்ட காரணத்தாலோ என்னவோ, "தினமலர்' நாளிதழுக்கு, இரண்டு பக்க அரசு
விளம்பரங்கள் தரப்படவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.கருணாநிதி வழக்கமாக வெளியிடும், கேள்வி - பதில் அறிக்கை:
சென்னை பல்கலைக் கழகத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய பட்டமளிப்பு விழா உரையின் போது, எடுக்கப்பட்ட புகைப்படம், "தினமலர்' நாளேட்டில் முதல் பக்கத்தில் வெளி வந்ததைப் பார்த்தீர்களா?
பார்த்தேன்; அதை அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தானே, "தினமலர்' முதல் பக்கத்திலேயே மிகப் பெரியதாக வெளியிட்டிருந்தது. முதல்வரின் பேச்சை, அமைச்சர்கள் எல்லாம் அவ்வளவு ஆர்வமாகக்(?) கேட்கின்றனர் என்று, கிண்டலாக அதை அந்த இதழ் வெளியிட்டிருக்கிறது. அதைக்கூட, "முதல்வரின், "தாலாட்டு'ப் பேச்சில் அமைச்சர்கள் அயர்ந்து தூங்குகின்றனர்' என்று குறிப்பு எழுதியிருந்தது தான் கொடுமை! தூங்கு மூஞ்சி மங்குனி அமைச்சர்கள் படத்தை தினமலர் வெளியிட்டதால் அரசு விளம்பரம் தரவில்லையா? அல்லது விளம்பரம் தராத கோபத்தில் மலர் தூங்கும் படத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டதா? இதுதான் கலைஞரின் கேள்வி. இதில் உள்ள உள்ளார்த்தைப் புரிந்துகொள்ளாமல் அம்மாவின் அடிவருடிகள்சாமியாட்டம் ஆடி இருக்கின்றன. எங்கே தினமலர் நமக்கு எதிராக இவ்வாறு தொடர்ந்து உன்மையின் உரைகல்லாத மாறி விடப்போகிறோதோ என்ற அச்சம் ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் வெளின்பாடு இத்தனை காழ்ப்புணர்ச்சி

இந்தியா - சீன ராணுவ வீரர்கள் கூட்டுப் பயிற்சி:5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துவக்கம்

புதுடில்லி:இந்தியா- சீனா இருநாட்டு ராணுவ வீரர்களின் கூட்டுப்பயிற்சி 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துவங்கப்படுகிறது.இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்திருக்கும் அதே வேளையில்,பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதியில் இருந்து 14-ம் தேதி வரை சீனாவில் உள்ள செங்டு மாகாணத்தில் நடைபெறவுள்ளது. கூட்டுப்பயிற்சி துவக்கம்:இந்தியா - சீனாவுக்கிடையிலான ராணுவ கூட்டுப் பயிற்சிக்கு 2007-ம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.இதனையொட்டி, 2007-ம் ஆண்டு சீனாவிலும் தொடர்ந்து 2008-ம் ஆண்டு இந்தியாவின் முறையாக கர்நாடக மாநிலம் பெல்லாரியிலும் இருநாட்டு ராணுவ வீரர்கள் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி நடைபெற்றது.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

மதவெறியன் வருண்காந்தி மீதான வழக்குகள் ரத்து : முலயம் சிங்கின் முகத்திரை கிழிந்தது !

“இது கை அல்ல. தாமரையின் சக்தி. முசுலிம்களின் தலைகளை வெட்டி எறியும்” என்றும், “இந்துவுக்கு எதிராக எவனாவது கையை உயர்த்தினால், கீதை மீது ஆணையாக அந்தக் கையை வருண் வெட்டுவான்” என்றும் 2009 மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் பிலிபித் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிட்ட வருண்காந்தி மேடை தோறும் பேசியதை நாடெங்கும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. கோடிக்கணக்கான மக்கள் அதனைப் பார்த்தார்கள். அந்தத் தேர்தலில் வருண்காந்தி வெற்றியும் பெற்றார இம்மதவெறிப் பேச்சுக்காக அன்றைய உ.பி. அரசு வருண் காந்தி மீது இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி வருண்காந்தி தாக்கல் செய்த மனுவையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடனே பர்க்கரோ நீதிமன்றத்தில் சரணடையப் போவதாகக் கூறி, மதவெறிக் காலிகளின் படையைத் திரட்டிக் கொண்டு வருண் காந்தி நடத்திய பேரணி, தீவைப்பிலும் கல்வீச்சிலும் முடிந்தது. 25 பேர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக மற்றுமொரு வழக்கும் பதிவானது.
நாடறிய இழைக்கப்பட்ட இந்தக் குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று வருண் காந்தி பிலிபித் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

INDIA காமவெறியர்களின் தேசமாகிறதா ? டெல்லியில் மும்பையில் சென்னையில் கொல்கொத்தாவில் பாலியல் வன்முறை வன்முறை

A self-defence group in Lucknow have a simple message to the men who make their lives a misery – stop it, or else கொல்கத்தா என்னை கை விட்டது, இப்போது கொல்கத்தாவின்
நிலையை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்.” என்கிறார் பாலியல் தாக்குதலுக்குள்ளான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். மும்பையில் வசிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், ஹவுரா நிலையத்துக்கு அருகில் “வேடிக்கையை ரசிக்க” கூடியிருந்த பெரும் கும்பலுக்கு மத்தியில் தன் மீது பாலியல் தாக்குதல் நடத்தியவர்களுடன் போராடிய அந்த நடுங்க வைக்கும் இரவைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் விவரித்தார். தாங்கள் எந்த தவறும் செய்யாத நிலையில் அவரும் அவரது நண்பரும் தமது அடையாளங்களை மறைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருந்தார்கள். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலின்படி அவர்களது பெயர்களை வெளியிடவில்லை. “நான் சில ஆண்டுகளாகவே மும்பையில் வசித்து வந்தாலும் கொல்கத்தா என் மனதில் எப்போதுமே ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருக்கிறது. “எங்க நகரத்தில் மக்கள் அவ்வளவு நட்பானவங்க” என்று எனது நண்பர்களிடம் பெருமை பேசிக் கொண்டிருப்பேன். ஆனால், திங்கள் கிழமை இரவு நடந்த சம்பவம் என்னை கொல்கத்தாவின் நிலையை எண்ணி வெட்கப்பட வைக்கிறது.
ஹவுரா ரயில் நிலையத்துக்கு ஓரிரு தெருக்கள் தாண்டிய பகுதியில் இரண்டு பெண்கள் ரவுடிகள் கும்பல் ஒன்றால் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போது கொல்கத்தாவின் நட்பான முகம் எல்லாம் எங்கே போயிருந்தது? மனிதர்களின் பெருந்திரள் எங்களை சூழ்ந்திருந்தது. ஆனால் எங்களுக்கு உதவி செய்ய ஒரு ஆண்மகன் கூட முன் வரவில்லை. எங்களை பாதுகாக்க முயற்சி செய்த 71 வயதான என் அப்பா தாக்கப்பட்டார். காலிகளை தட்டிக் கேட்ட எங்கள் நண்பர் சுப்ரதா கோஷை அவர்கள் கொடூரமாக அடித்து துவைத்தனர். கொல்கத்தா நகரம் எவ்வளவு இருதயமற்றதாக மாறி விட்டது என்பதை நினைத்து என் மனம் நடுங்குகிறது.

விஜய்: ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றங்கள் கலைக்கப்படும் ! கல்லாதான் முக்கியம் ?

நேற்றுவரை அரசியல் பஞ்சுகளை அள்ளிவீசி விட்டு இன்று தான் எடுத்த வாந்திகளை தானே உண்ணும் நிலைக்கு ஆளாகிவிட்ட சினிமா கதாநாயகன்  இன்று சட்டி சுட்டதடா  ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைக்கப்படும் என்று நடிகர் விஜய் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகள் வருமாறு:அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை.அப்படி எண்ணம் உள்ள ரசிகர்கள் உடனேயே மன்றத்தை விட்டு வெளியேறிவிடுங்கள்"சில அரசியல்வாதிகள், அவர்களின் சுயநலத்திற்காக உங்களை பயன்படுத்த எண்ணுகிறார்கள் அதற்கு நீங்கள் பலியாகி விடவேண்டாம். மீறி அரசியல் செயல்களில் ஈடுபட்டால் மன்றங்கள் கலைக்கப்படும்.அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. தயவு செய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள் போட வேண்டாம்.அதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால், மன்றம் கலைக்கப்படும். இனி ரசிகர் மன்ற விஷயங்களில் நேரடியாக நானே சம்பந்தப்படுவேன்.என்னை இல்லாது என் தந்தையோ வெறு யாரோ மன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள்.இவ்வாறு பதிவிட்டுள்ளார் விஜய். அதாகப்பட்டது ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்வரை போத்திக்குன்னு  கமுக்கமா காசு மட்டும் சேர்ப்போம் , அப்புறம் திமுக வந்தால் அவயங்களால் நாட்டுக்கு கேடுன்னு சொல்லிகினே காலத்தை ஓட்டிடுவோம் . எவ்வளவு தான் திட்டினாலும் அவய்ங்க கண்டுக்க மாட்டானுங்க , கோமளவல்லியை சப்போட் பண்ணினாலும் தொல்லை பண்ணாட்டாலும் தொல்லை

Mumbai Gang Rape அந்த 5 பேரின் முகவரைபடங்களை போலீஸ் வெளியிட்டுள்ளது !

மும்பை:மும்பையில் நேற்றிரவு பெண் புகைப்பட பத்திரிகையாளரை 5 பேர்
கும்பல் பலாத்காரம் செய்தது. அவருடன் வந்த இளைஞரையும் கும்பல் தாக்கியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் புகைப்படக்காரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் 5 பேரின் வரைப்படங்களை போலீசார் இன்று வெளியிட்டுள்ளனர் மும்பையில் இருந்து வெளிவரும் வாரப்பத்திரிகை ஒன்றில் போட்டோகிராபராக பயிற்சி பெற்று வருபவர் ஷாலினி(புனைப்பெயர்). இவர் நேற்றிரவு தெற்கு மும்பை லோயர் பரேலில் உள்ள பாழடைந்த சக்தி மில்லுக்கு சென்றார். துணைக்கு தனது நண்பரையும் அழைத்து சென்றார். அவர் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போது 2 பேர் அங்கு வந்தனர். தனியார் இடத்தில் அத்துமீறி நுழைந்திருப்பதாக ஷாலினியையும், அவரது நண்பரையும் மிரட்டினர். பத்திரிகையாளர் என்ற தைரியத்தில் ஷாலினி அவர்களுடன் வாக்குவாதம் செய்தார். மிரட்டல் ஆசாமிகள் செல்போனில் பேசி மேலும் 3 பேரை வரவழைத்தனர். அவர்கள் 5 பேரும் சேர்ந்து ஷாலினியையும், நண்பரையும் அடித்து உதைத்தனர். நண்பரை கட்டிப்போட்டு விட்டு, ஷாலினியை தரதரவென மில்லுக்குள் இழுத்து சென்று பலாத்காரம் செய்தனர். பலத்த காயமடைந்த ஷாலினி மயக்கம் அடைந் தார். பலாத்கார கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. மயக்கம் தெளிந்த ஷாலினி, நண்பர் உதவியுடன் போலீசில் புகார் அளித்தார். >
ரத்தக் காயங்களுடன் இருந்த ஷாலினியை போலீசார் அருகில் இருந்த ஜஸ்லோக் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் குழு, அவரை பரிசோதித்தது. அவரது  உடல்நிலை மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ரூபாய் மதிப்பில் எப்போதும் இல்லாத வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வங்கிகளின் பணப்பரிமாற்றத்துக்கு இடையே முன்பு எப்போதும் இல்லாத வகையிலரூ.65.56 ஆக சரிந்து இறுதியில் ரூ.65.17-இல் நிலைத்தது.>வங்கிகளில் டாலர்கள் தேவை உயர்ந்ததால் இந்த நிலை ஏற்பட்டது. ஒரு வாரத்தில் இது ரூ.70 ஆக சரியக்கூடிய அபாயம் உள்ளது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, சமீபகாலமாக தொடர்ந்து சரிந்து வருகிறது.நேற்று முன்தினம் வங்கிகளின் பரிமாற்றத்துக்கு இடையே ரூபாயின் மதிப்பு ரூ.64.11 இல் முடிந்தது. இந்நிலையில், நேற்று காலை வங்கிகளில் பணப்பரிமாற்றம் தொடங்கிய உடனேயே ரூபாயின் மதிப்பு 74 காசுகள் சரிந்து ரூ.64.85 ஆனது. ஆனால், வர்த்தகத்தின் இடையே அது ரூ.65.56 வரை உயர்ந்தது. இதனால் இறக்குமதியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே மதியம் ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்து ரூ.65.17 ஆனது.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞரை மாற்ற கோரி திமுக மனு தாக்கல்

பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றக் கோரி திமுக பொதுச்செயலர் அன்பழகன் சார்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக பொறுப்பு வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகாரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு; அரசு வழக்கறிஞரை மாற்றக் கோரி திமுக மனு! பல்வேறு தடைகளைத் தாண்டி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

மும்பையில் பெண் பத்திரிகையாளர் கற்பழிப்பு 5 பேர்கொண்ட கும்பல் பொது இடத்திலே பட்ட பகலில் !

Associated PressMumbai: In a ghastly incident, a woman photojournalist was allegedly gangraped by five men in Parel area in central Mumbai on Thursday night, police said.
She was accompanied by a male colleague.
மும்பையில் 5 பேர் கொண்ட கும்பலால் பெண் புகைப்பட பத்திரிகையாளர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பிரபல பத்திரிகை ஒன்றில் புகைப்படப் பத்திரிகையாளராக பணியாற்றிவரும் பெண் ஒருவர், வேலை நிமித்தமாக தனது நண்பருடன் சக்திமில் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த இளைஞர்கள் இவர்களை சூழ்ந்துள்ளனர். உடனிருந்த நண்பரை அடித்து துரத்திய அந்த கும்பல், அந்த பெண்ணை அங்கேயே பாலியல் பலாத்காரம் செய்தது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அந்த பெண்ணை இளைஞர்களிடம் இருந்து மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து தப்பியோடி குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மும்பை உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், பலாத்கார சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். தற்போது அந்த  பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொந்தளிக்கும் குஷ்பூ ! பேசுகிறோம் பேசுகிறோம் பெண்கள் பலாத்காரம் ஓயவில்லையே ?

தொடரும் பலாத்காரம்.. பேசுகிறோம்.. பேசுகிறோம்..ஒன்னும் நடக்கலையே..:
கொந்தளிக்கும் நடிகை குஷ்பு! சென்னை: இந்தியாவில் நாள்தோறும் பெண் பலாத்காரம் செய்யப்படுகிறாள்.. இதுபற்றி பேசுகிறோம்.. பேசுகிறோம்..பேசிக்கொண்டே இருக்கிறோம்..ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என்று மும்பை பெண் போட்டோகிராபர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் கொந்தளிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மும்பையில் பெண் போட்டோகிராபர் நேற்று பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கொந்தளிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகை குஷ்பு. நடிகை குஷ்பு இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், இதுபற்றி தேசிய அளவில் விவாதம் நடத்த அழைப்பு விடுப்போம். 2 நாட்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்துவோம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு புதிய பெயரை சூட்டுவோம்.. இந்த புதிய வழக்குக்காக நாமும் காத்திருப்போம்.. டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயா ஒன்றும் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட முதல் பெண்ணும் அல்ல.. மும்பையில் பாதிக்கப்பட்ட பெண்ணும் கடைசியாகவும் இருக்கப் போவதில்லை.. இந்தியாவில் ஒவ்வொருநாளும் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இது பற்றி பேசுகிறோம்.. பேசுகிறோம்..பேசுகிறோம்.. ஆனால் ஒன்றுமே நடக்கவில்லையே... என்னுடைய ஜனநாயக இந்தியாவில் ஏன் பெண்களால் அச்சமின்றி இருக்க முடிவதில்லை? என்று பதிவிட்டிருக்கிறார்
tamil.oneindia.in

இனியா வது இவருக்கு வாய்ப்புக்கள் குவிய வாழ்த்துக்கள்

இந்தக் கேள்வியைதான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்
இனிமையான நடிகை. சினிமாவில் வாகை சூடலாம் என்று வந்தவருக்கு பூவாக எதுவும் கிடைக்கவில்லை நாராக சில காட்சிகளில் மட்டும் வந்து போங்க என்கிறார்களாம். தற்போது நடித்து வரும் டைகர் வால் படத்திலும்கூட இவருக்கு போட்டியாக ஓவியமான நடிகை இருக்கிறார். உடம்பு ஏறிப்போச்சு அதனாலதான் வாய்ப்பு வரமாட்டேங்குது என்று பலரும் சொன்னதால் குழாய் புட்டை தவிர்த்து கோழிக் குழம்பை மறுத்து பாதியாக இளைத்தும் பாவிப் பசங்க யாருமே சோலோ ஹீரோயின் வாய்ப்பு தரலையே என்று நடிகைக்கு பெருங் கவலை.

ஹிட்லரின் தந்திரத்தை பின்பற்றி ஆட்சியை கைப்பற்ற மோடி திட்டம்: திக்விஜய் சிங் தாக்கு


ஆட்சியின் அதிகாரத்தை பிடிக்க மோடி சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரின்
தந்திரத்தை பின்பற்றுகிறார். இதற்கான நிறைய ஒற்றைமைகள் அவரது நடவடிக்கையில் இருப்பதை நான் காண்கிறேன். ; குஜராத்தில் பாரதீய ஜனதா மிகச்சிறியதாக மாறியிருக்கிறது. ஆனால் மோடி மட்டுமே அங்கு பிரபலமாகி வருகிறார். அதுபோன்று மத்தியப்பிரதேசத்தில் ஷிவ்ராஜ் சிங் சவுகானும், சத்திஷ்கரில் ராமன் சிங் மட்டுமே தெரிகிறார்கள். ஆட்சியின் அதிகாரத்தை கைப்பற்ற மோடி என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். இதுகுறித்து யாரும்ஆச்சரியப்படக்கூடாது. காங்கிரஸ் இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்க நினைக்கும் மோடியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. இவ்வாறு அவர் கூறினாmalaimalar.com

ஜயேந்திரனுக்கு போட்டியாக ஆன்மீக குரு அஸ்ராம் பாபு ! பாலியல் வல்லுறவு சாமியார்

அஸ்ராம் பாபுஆசிரமத்தில் நடைபெற்ற மத விழா ஒன்றுக்கு அப்பெண்ணை அழைத்துள்ள ஆன்மீக குரு அச்சிறுமியிடம் தன் கைவரிசையை அதாவது வக்கிரத்தைக் காட்டியிருக்கிறான்.
ன்மீக குரு அஸ்ராம் பாபு (வயது 72) மீது பாலியல் வல்லுறவு செய்ததாக 16 வயது மைனர் பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள அவரது ஆசிரமத்தில் வைத்து இம்மாத துவக்கத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சஜன்பூரை சேர்ந்த அப்பெண் ஜோத்பூரில் உள்ள அஸ்ராம் பாபுவின் குருகுல விடுதியில் தங்கி படித்து வருகிறாள். ஆசிரமத்தில் நடைபெற்ற மத விழா ஒன்றுக்கு அப்பெண்ணை அழைத்துள்ள ஆன்மீக குரு அச்சிறுமியிடம் தன் கைவரிசையை அதாவது வக்கிரத்தைக் காட்டியிருக்கிறான். பல நாட்கள் தொடர்ச்சியாக இதனை செய்திருக்கிறான்.

1.5 கி.மீ., வாய்க்கால் வெட்டும் விவசாயிகள் ! பொது பிணி துறையின் அலட்சியம்

சென்னை: பொதுப்பணித் துறையினர் கைவிட்டும், துவண்டு விடாத தஞ்சை
மாவட்ட விவசாயிகள், சம்பா சாகுபடிக்காக, தங்கள் சொந்த உழைப்பில், ஒன்றரை கி.மீ., தூரம் வாய்க்கால் வெட்டி வருகின்றனர்.டெல்டா மாவட்டங்கள்: தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்கும் வெண்ணாறு, காவிரி, கல்லணை கால்வாய், அவற்றின் துணை ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் புதர் மண்டி, மணல் மேடாகி தூர்ந்து கிடக்கின்றன. இவற்றில், சம்பா சாகுபடிக்கான தண்ணீரை எடுத்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து, பொதுப்பணித் துறையிடம், விவசாயிகள் முறையிட்டனர். ஆனால், பொதுப்பணித்துறையினர் முக்கிய பாசன வழித் தடங்களை மட்டும் சீரமைத்து வருகின்றனர். இதனால், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு நடுவூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், ஒன்றரை கி.மீ., தூரத்திற்கு, சொந்த உழைப்பில் வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு மேலாக வாய்க்கால் வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. . இந்த பொது பிணி துறை அதிகாரிகள் முகமூடி கொள்ளையர்களை விட கேவலமானவர்களாக இருகின்றார்கள்.

10 கோடிக்கு மேல் வருமானத்திற்கு 35 வீதமாக வரியை உயர்த்த அரசு யோசனை !

புதுடில்லி: ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய்க்கு மேல், வருவாய் ஈட்டும் பெரும்பணக்காரர்களுக்கான வரியை, 35 சதவீதமாக உயர்த்துவது குறித்து, மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது. தற்போது, ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய் வருவாய் உள்ளவர்களுக்கு, வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு, 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். நேரடி வரிகள்: லட்சத்தில் இருந்து, 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு, 20 சதவீத வரியும், 10 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு, 30 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வருவாய்க்கு, வருமான வரியின் அடிப்படையில், 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இந்த அட்டவணையில், மேலும், ஒரு பிரிவை சேர்க்க, மத்திய நிதிஅமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, 10 லட்சத்தில் இருந்து, 10 கோடி ரூபாய் வரையிலான வருவாய்க்கு, 30 சதவீதமும், 10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வருவாய்க்கு, 35 சதவீதமும் வரி விதிக்கப்பட உள்ளது என, நிதிஅமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

ஏராளமான குற்ற வழக்குகள் உள்ள ரித்தீஷ் MP மீது ஏன் நடவடிக்கை இல்லை ?


தொடர்ந்து குற்றசம்பவங்களில் ஈடுபடுவதால் ஜே.கே.ரித்தீஷ் எம்.பி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா மஞ்சூரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித்தலைவர் தங்கராஜ் தாக்கல் செய்த மனு: மதுரையில் திமுக பொதுச்செயலர் அன்பழகனை வரவேற்க 2012 அக்டோபர் 30 -காத்திருந்த போது சிவக்குமார் என்ற ஜே.கே.ரித்தீஷ் தனது ஆதரவாளர்கள் சிலருடன் வந்து என்னை ஜாதி பெயரைச்சொல்லி தாக்கினார். இது தொடர்பாக மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் ரித்தீஷ் மீது வழக்கு பதிவாகியுள்ளது. மேலும் ரித்தீஷ் மீது காஞ்சிபுரம், பரமக்குடி, அபிராமம், திருப்பாலக்குடி, ராமநாதபுரம், மதுரை தல்லாகுளம்,சிலைமான் ஆகிய காவல் நிலையங்களில் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
2008 ம் ஆண்டு முதல் 3 வருடங்களில் மேற்கண்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.

அனில் அம்பானி கோட்டில் : தெரியல்லை! ஞாபகம் இல்லை ! ஸ்வான் telecom மா ? கேள்விபட்டதே இல்லையே ? பாவம் அணில் ஒண்ணுமே தெரியாது இந்த கோடீஸ்வரனுக்கு

ஸ்வான் டெலிகாமா? கேள்விப்பட்டதே இல்லையே?: கோர்ட்டில் ஒரேபோடு போட்ட அனில் அம்பானி!! டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரான ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி, ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனம் பற்றி தாம் கேள்விபட்டதே இல்லை என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களில் ஒன்று ஸ்வான் டெலிகாம். இது ரிலையன்ஸ் குழுமத்தால் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு அலைக்கற்றை உரிமம் பெற தகுதி இல்லாத நிலையிலும் முறைகேடாக உரிமம் பெறப்பட்டது என்பது சிபிஐ புகார். இது தொடர்பாக ரிலையன்ஸ் குழும அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இந்த வழக்கில் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி ஆகியோரை சிபிஐ தங்கள் தரப்பு சாட்சியமாக சேர்த்துள்ளது.

தயாளு அம்மையார் டெல்லி நீதிமன்றில் ஆஜராகவேண்டியதில்லை ! அவரிடம் சென்னையிலேயே விசாரிக்கலாம்

புதுடெல்லி,
http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/dayalu-ammal.jpg
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்காக டெல்லி தனிக்கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆவதில் இருந்து தயாளு அம்மாளுக்கு விதிவிலக்கு அளித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, கமிஷன் ஒன்றை அமைத்து அவரிடம் சென்னையில் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டு உள்ளது.
தயாளு அம்மாள்
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் பற்றி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக சி.பி.ஐ. சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் கலைஞர் டி.வி.க்கு குசேகான் புரூட்ஸ் மற்றும் வெஜிடபிள்ஸ் நிறுவனம், சினியுக் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் ரூ.200 கோடி கைமாறியதாக கூறப்பட்டு உள்ளது.
இதனால் இந்த வழக்கில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். திட்டமிட்டு புனையபட்ட இந்த வழக்கில் மிகபெரும் மர்மம் என்னவென்றால் மாறன் பிறதேர்ஸ் மீது ஒரு தூசும் படாது காய்கள் நகர்த்தப்படுகின்றன

வித்யா பாலனும் அன்னா ஹசாரே யும் அமெரிக்காவில் இந்திய பேரணியில் மெயின் அட்ராக்ஷன்

அண்ணா ஹசாரேவித்யா பாலன்ஹசாரே பல லட்சம் மக்களை தெருவில் நிறுத்திய நிதி நிறுவனங்களின் மெக்காவான அமெரிக்க பங்குச் சந்தையில் மணி அடித்து ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவு திரட்டுகிறார்.
ண்ணா ஹசாரே கடந்த 19-ம் தேதி நியூயார்க்கில் நடந்த இந்தியா தின பேரணியில் கலந்து கொண்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக நடந்த அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தால் கவரப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் அவரை இந்த பேரணியில் கலந்து கொள்ள அழைத்திருந்தனர்.

ஆண்டு தோறும் இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி நடத்தப்படும் இந்தியா தின கொண்டாட்டங்கள் அமெரிக்க வாழ் இந்தியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு குடிபெயரும் இந்தியர்கள் இந்தியாவுடனான தமது தொடர்புகளை கோயில்கள், பரத நாட்டியம், இந்திய உணவு இவற்றின் மூலம் பராமரித்துக் கொள்வது போல, தேசபக்தியை புதுப்பித்துக் கொள்ள ஆண்டு தோறும் இந்தியா தினம் நடத்தி இந்திய பிரபலங்களையும் அழைக்கின்றனர்.

விஜயின் அம்மா ஷோபாவின் சகோதரி வீட்டில் சிபிஅய் சோதனை

சென்னை: நடிகர் விஜய் உறவினர் வீடு உட்பட தமிழகம் முழுவதும் 43 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.சென்னை பாரிமுனை உட்பட பல இடங்களில் ‘இந்தேவ் குரூப்’ என்ற நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. இங்கு, வெளிநாட்டுக்கு விமானம் மற்றும் கப்பல் மூலம் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்த நிறுவனம், வருமான வரி செலுத்துவதில் முறைகேட் டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து வருமான வரித்துறையின் விசாரணை பிரிவு அதிகாரிகள் சென்னை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் 43 இடங்களில் நேற்று காலை முதல் மாலை வரை அதிரடி சோதனை நடத்தினர்.சென்னையில் ‘இந்தேவ் குரூப்’ அலுவலகம் மற்றும் உரிமையாளர் சேவியர் பிரிட்டோவின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களி லும் சோதனை நடந்தது. அதில் நடிகர் விஜய் அம்மா ஷோபாவின் சகோதரி கணவர் சேவியர் பிரிட்டோவின் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, Ôசோதனையில் கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. விசாரணைக்கு பிற குதான் சோதனை விவரங்களை வெளியிடுவோம்Õ என்றனர்

செம்மொழியை வெறுக்கும் ஜெயலலிதாவின் அதிமுக அரசு !

இன்றைய ஆட்சியாளர்களுக்கு விடை அளிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை! கலைஞர் அறிக்கை! திமுக தலைவர் கலைஞர் 22.08.2013 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,<"உலகில் 6 ஆயிரத்து 800 மொழிகள் உள்ளன எனக் கூறப்படுகிறது. எனினும், இன்றுள்ள மொழிகளில் 2,000 மொழிகள் மட்டுமே உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவற்றுள் கிரேக்கம், இலத்தீனம், அரேபியம், பாரசீகம், சீனம், ஈப்ரு, சமஸ்கிருதம் ஆகிய ஏழு மொழிகள் மட்டுமே, “செம்மொழி” எனும் தகுதியைப் பெற்றிருந்தன.
தமிழ் மற்ற செம்மொழிகளை விடவும் மேலானதாகும். இதற்குப் பல சான்றுகள் உள்ளன. செம்மொழிகளில் இலத்தீன், ஈப்ரு ஆகிய மொழிகள் இன்று பயன்பாட்டில் இல்லை. கிரீக் மொழி இடையில் நசிந்துவிட்ட போதிலும், தற்பொழுதுதான் மேலும் வளமடைந்து வருகிறது.

இந்தோனேசியாவில் மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை? கடும் எதிர்ப்பு !

A plan to make teenage girls undergo virginity tests to enter senior high school in a city in Indonesia has sparked outrage. இந்தோனேஷியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவிகளிடம் கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக வந்த கல்வி அதிகாரிகளின் அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தோனேஷியாவில் உள்ல சுமத்ரா தீவில் அமைந்துள்ள பிரபுமாலிக் மாவட்டத்தில் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு  கன்னித்தன்மை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாகாண  கல்வி அதிகாரிகள் அறிவித்தனர். இந்த அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றி கல்வி அதிகாரி முகமது ரஷீத் கூறுகையில் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவை தடுப்பதற்கும், விபச்சாரத்தால் மாணவிகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கும் இதுபோன்ற திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது என்றார். ஆனால் இது மனித உரிமைகளுத்கு எதிரானது என கடும் சர்ச்சை எழுந்தது.
  பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களிலும் ஏராளமானோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியை ராகுல் புதிப்பிக்க ஆலோசிக்கிராருங்கோ ! கவிழ்பானேன் கவுழுவானேன் ?

மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் திமுகவுடன் மீண்டும்
கூட்டணியை காங்கிரஸ் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு குறித்து ராகுல் காந்தி தீவிரமாக ஆலோசித்து வருகிறார். இதுதொடர்பாக கடந்த மாதம் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் தேசிய செயலர் சு. திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் ஆகியோரை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புகளின் போது, காங்கிரஸ் தலைவர்களில் ஒரு பிரிவினர் தமிழகத்தில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்றும், ஒரு பிரிவினர் திமுகவுடன் மீண்டும் கூட்டணியைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று வலியுறுத்தினர். ஆனால், மூன்றாவது பிரிவினர் திமுக, தேமுதிக, பாமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை ஓரணியில் சேர்த்துத் தேர்தலை சந்திக்கலாம் என யோசனை தெரிவித்தனர். இந்த அணி நிச்சயம் மதச்சார்பற்ற அணி என்ற அடையாளத்துடன் தேர்தலைச் சந்திக்க வாய்ப்புள்ளது என்று மூன்றாவது பிரிவினர் கூறியதை ராகுல் காந்தி ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

சிரியாவில் ரசாயன குண்டு தாக்குதலில் 1300 பேர் பலி !

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/Chemical-attacksyria.jpgஅம்மான்,
சிரியாவில் அதிபர் ஆதரவு படைகள் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தின. இந்த கொடூர தாக்குதலில் 1300 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். தூங்கிக்கொண்டிருந்த பெண்களும், குழந்தைகளும் உயிரிழந்த துயரம் நேரிட்டுள்ளது.
அதிபருக்கு எதிராக கிளர்ச்சி
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் குடும்பத்தினர் கால் நூற்றாண்டுக்கு மேலாக பதவியில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து ஜனநாயகம் மலரச்செய்வதற்காக பொதுமக்களும், புரட்சிப்படையினரும் இணைந்து அங்கு மாபெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனில் அம்பானி இன்று ஆஜாராகியே தீரவேண்டும் ! சிபிஐ நீதிமன்றம்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் ஏடிஏஜி குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
முன்னதாக, கடந்த ஜூலை 26-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என அனில் அம்பானி, அவரது மனைவியும், ரிலையன்ஸ் ஏடிஏஜி குழும இயக்குநர்களில் ஒருவருமான டினா அம்பானி உள்பட 13 பேருக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
அதை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அம்பானி தம்பதிக்கு சொந்தமான நிறுவனமும், 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிறுவனமுமான ரிலையன்ஸ் குழுமம் உச்ச நீதிமன்றத்தில் இரு வாரங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தது. "அந்த மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை நேரில் ஆஜராவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது' என்று சிபிஐ நீதிமன்றத்தில் அம்பானி தம்பதி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்திய பாகிஸ்தானிய கலைஞர்கள் மதவெறிக்கு எதிராக நடத்தும் ஓவியகண்காட்சி சூறை

கலை தாக்குதல்கடந்த 16.08.2013 அன்று வெள்ளிக்கிழமை மாலை 4.15 மணிக்கு அகமதாபாத் நகரில் அமைந்துள்ள அம்தவாத் நீ குபா என்ற கலைக் காட்சியகம் மீது விசுவ இந்து பரிஷத்தைச் (விஎச்பி) சேர்ந்த குண்டர்கள் 20 பேர் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த சுவர்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 30 ஓவியங்களை கீழே பிடித்து இழுத்து உடைத்ததால் அவை அனைத்தும் சேதமடைந்தன. அவற்றை வரைந்தவர்களில் 11 ஓவியர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள், ஆறு பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். ஓவியக் கண்காட்சியின் அமைப்பாளர் ரவீந்திர மராடியா புகாரின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வன்முறையில் ஈடுபட்ட இந்துமத வெறியர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

புதன், 21 ஆகஸ்ட், 2013

எம்.ஜி.ஆர் கதி என்னவாகபோகிறது ? காத்துக்கொண்டிருக்கும் கோடம்பாக்கம் ! MGR மதகாமராஜா

ஒரு அசிஸ்டண்ட் இயக்குனராக இருந்து ஹீரோவாக ஃபார்ம் ஆனவர் நடிகர் விஷால். சில வெற்றிப் படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டாலும், விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சமர், பட்டத்து யானை திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. எனவே அடுத்ததாக வெளியாகவிருந்த மதகஜராஜா(MGR) திரைப்படத்தைத் தான் விஷால் பெரிதும் நம்பியிருந்தார்.
ஆனால் சில பொருளாதார நெருக்கடி காரணமாக மதகஜராஜா படத்தை வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள். எனவே விஷால் தனது சம்பளப் பணத்தைக் கூட வாங்காமல் முதலில் படத்தை ரிலீஸ் செய்யும் வேலையை துவங்குங்கள் என்று கூறிவிட்டாராம். சுந்தர்.சி-யின் இயக்கத்தில் கடைசியாக வெளியான கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அம்மா பேசுகிறார் அமைச்சர்கள் தூங்குகிறார்கள் ! ம்ம் விழித்ததும் ஆதிபராசக்தி கருமாரி ஜெயமாரி என்று புகழ் பாடிவிட்டால் போச்சு !


அரசு வாங்கிய NLC பங்குகளை தனியாருக்கு விற்க தடையில்லை! ஜெயலலிதாவின் நரித்தனம் !

தொழிலாளர் போராட்டம்என்எல்சி பங்கு விற்பனைநெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பது தொடர்பான விவகாரம் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு விற்கவுள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தின் (என்.எல்.சி.) 3.6 சதவீதப் பங்குகளை ரூ. 500 கோடிக்கு வாங்கலாம் என்று இந்தியப் பங்குகள் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து 13 நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வந்த என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பியுள்ளனர்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதை எதிர்த்து நடந்த தொழிலாளர்களின் போராட்டம்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தின் 2012-13-ம் ஆண்டுக்கான நிகர லாபம் ரூ. 1,479 கோடி. இது சென்ற ஆண்டைவிட 3.5 சதவீதம் அதிகம். அப்படியிருந்தும் மைய அரசு ஏன் பங்குகளை விற்க வேண்டும்?
தொழில் நிறுவனங்களை அரசு நடத்தக்கூடாது; அனைத்தையும் சந்தைகளின் கட்டுப்பாட்டில் விட்டுவிட வேண்டும் – என்பதுதான் தனியார்மயக் கொள்கையின் தாரக மந்திரம். இதன்படி, நரசிம்மராவ் ஆட்சிக் காலத்திலிருந்து அடுத்தடுத்து வந்த ஆட்சிகள் அனைத்தும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நாட்டின் சொத்துக்களையும் அரசுத்துறை நிறுவனங்களையும் அடி மாட்டு விலைக்கு தனியார் முதலாளிகளுக்குத் தாரைவார்த்தன. இதன் ஒரு பகுதியாக ஏற்கெனவே என்.எல்.சி. நிறுவனத்தின் 6.44 சதவீதப் பங்குகள், பங்குச் சந்தையில் விற்கப்பட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக்கப்பட்டது.

விநோதினியை அசிட் வீசி கொன்றவனுக்கு கூடுதல் தண்டனை கோரி மேன்முறையீடு செய்வோம், தந்தை


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
காரைக்கால்:தனது மகளை ஆசிட் வீசி கொன்றவருக்கு கூடுதல் தண்டனை விதிக்க கோரி ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக வினோதினியின் தந்தை கூறியுள்ளார். புதுவை மாநிலம் காரைக்கால் எம்.எம்.ஜி. நகரை சேர்ந்த ஜெயபால் மகள் வினோதினி (22). சென்னையில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரை, காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி திருவேட்டக்குடியை சேர்ந்த அப்பு என்ற சுரேஷ் (28) ஒருதலையாக காதலித்தார். அவரது காதலை வினோதினி ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஊருக்கு வந்திருந்த வினோதினி மீது ஆசிட் வீசினார். இதில் வினோதினி முகம் கருகி பார்வை பறிபோனது.

பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் மதவெறியர்களால் படுகொலை !


தபோல்கர்மக்களை முட்டாள்களாக்கும் சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வந்த நரேந்திர தபோல்கர் அடிப்படையில் ஒரு மருத்துவர்
நரேந்திரசார்யாஜி மகாராஜ்ராட்டிய மாநிலத்தை சேர்ந்த பகுத்தறிவாளரும், மூட நம்பிக்கை எதிர்ப்பாளருமான நரேந்திர தபோல்கர் செவ்வாய்க் கிழமை காலை 7.20 க்கு புனே நகரத்தில் ஓம்கரேஸ்வரர் மேம்பாலத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தலையின் பின்பகுதியில் இரு குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே தபோல்கர் மரணமடைந்தார்.< நரேந்திர தபோல்கர்
மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தை 1989-ல் நிறுவி, தொடர்ந்து நடத்தி வந்த தபோல்கர் அந்த இயக்கத்தின் மூலமாக பல போலி சாமியார்களை, பாபாக்களை, மந்திரவாதிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி உள்ளார். தற்போது கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகி வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் சணல் இடமருகுவின் உற்ற நண்பரும் கூட.

முல்லைப் பெரியாறு வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை முடிந்தது ! கேரளாவுக்கு நீதிபதிகள் கண்டனம்

தமிழகத்திற்கு பாசன வசதி அளிக்கும் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. மேலும் கேரள அரசு கொண்டு வந்துள்ள அணை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் தமிழகம் வலியுறுத்தியது. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது, இரு மாநில அரசுகளும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தன. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கி வைக்க தமிழகத்திற்கு உரிமை உள்ளது என்றும், தேவைப்பட்டால் அங்கு புதிய அணை கட்டுவதற்கும் தமிழகத்திற்கு உரிமை இருக்கிறது என்றும் தமிழக அரசு வழக்கறிஞர் வாதாடினார்.

வதந்தியால் 2 மாதங்கள் முன்பாகவே தீபாவளியை கொண்டாடிய ம பி மக்கள் ! வியாபாரிகளுக்கு கொண்டாட்டம் .

BHOPAL: It is a cracker of a Diwali during the monsoon in 40 villages of Betul district in Madhya Pradesh. And festivities have kicked off two-and-half months early, not by tradition or a panchayat dikat — it's actually being driven by superstition and a fear of the unknown. தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 22–ந்தேதி வருகிறது. அதற்கு இன்னும் 2 1/2 மாதங்கள் இருக்கும் நிலையில் மத்திய பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் முன்கூட்டியே பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
40–க்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுபோல் பட்டாசு வெடித்து கடந்த 4–ந்தேதி கொண்டாடி விட்டனர். இதை அறிந்த பக்கத்து மாவட்ட மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஏன் முன்கூட்டியே தீபாவளி கொண்டாடினீர்கள் என்று கேட்டதற்கு அந்தப் பகுதியில் விசித்திரமான வதந்தி பரவியதே காரணம் என்று தெரியவந்தது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது கடும் மழை பெய்யும். இதனால் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட முடியாமல் போய்விடும்.

72 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக வேலைசெய்த வங்கி ஊழியர் மரணம் ! காபரெட் டார்ச்சர்

Slavery in the City: Death of 21-year-old intern Moritz Erhardt at Merrill Lynch sparks furore over long hours and macho culture at banks. Young German worked until 6am for three consecutive days before collapse at home in east London  இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள அமெரிக்க வங்கியில் பணியாற்றி வந்தவர் மோரிட்ச் எர்ஹார்ட். 21 வயதான இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். கிழக்கு லண்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தனது நண்பர்களுடன் பிளாட்டில் வாடகைக்கு தங்கி வங்கியில் பணியாற்றினார். நேற்று இவர் குளியலறையில் இறந்து கிடப்பதை கண்ட நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில்,  மோரிட்ச் எர்ஹார்ட் உள்பட சுமார் 300 பேர் இதே போல் அப்பகுதியில் உள்ள பல்வேறு வங்கிகளில் பணிபுரிந்தனர். படிப்பை முடித்து விட்டு புதிதாக பணியில் சேர்ந்திருந்தனர். மோரிட்ச் எர்ஹார்ட் நள்ளிரவு 3 மணி வரை விடாமல் வேலை செய்வார் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இறந்து கிடப்பதற்கு 3 தினங்களுக்கு முன்புதான் கடைசியாக அவரது அறை நண்பர்கள் அவரை பார்த்துள்ளனர். அதன்பின் அவரை இறந்து கிடந்த நிலையில் தான் கண்டனர். வங்கியில் நடத்திய விசாரணையில் விடாமல் இரவு பகலாக 72 மணிநேரம் மோரிட்ச் எர்ஹார்ட் பணிபுரிந்து விட்டு நள்ளிரவு அறைக்கு திரும்பியது தெரியவந்துள்ளது.

ரத்தன் டாடா சுப்ரீம் கோர்டில் ஆஜர் ! நீரா ராடியாவுடன் டெலிபோன் Talk

நீரா ராடியாவுடன் டெலிபோன் பேச்சு :
ரத்தன் டாடா சுப்ரீம் கோர்டில் ஆஜர் 2ஜி வழக்கில், அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலை பேசி உரையாடல்கள் தொடர்பான விசாரணையில் டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா இன்று சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். இன்று காலை 11 மணி அளவில் சுப்ரீம் கோர்ட் வந்த ரத்தன் டாடவுடன் அவருடைய வக்கீல் ராஜன் கரஞ்ச வாலா மற்றும் நிர்வாகிகளும் வந்தனர்.நீரா ராடியாவுடன் தான் பேசிய பதிவுகளை வெளியிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என கோரி , ரத்தன் டாடா இடைக்கால தடை விதிக்குமாறு மனு தாக்கல் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு வாதியாக திமுகவின் கோரிக்கை ஏற்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா விசாரித்து வருகிறார். தற்போது முதல்வர் ஜெயலலிதா தரப்பு வழக்குரைஞர்கள் வாதம் நடைபெற்று வருகிறது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் பவானி சிங் வாதாடி வருகிறார். இவர் அண்மையில் பொறுப்பேற்று இருப்பதால், வாதத்தின்போது, இவருக்கு உதவும் வகையில், தன்னை அரசுத் தரப்பு வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று, திமுக பொதுச்செயலர் அன்பழகன் சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி இன்று ஏற்றுக் கொண்டார்

சேரன் மகள் தாமினி பெற்றோருடன் இருக்க போவதாக அறிவிப்பு !

 பெற்றோருடனே இருக்கப் போவதாக சேரன் மகள் தாமினி அறிவிப்பு சென்னை: பெற்றோருடனே இருக்கப் போவதாக இயக்குநர் சேரன் மகள் தாமினி நீதிமன்றத்தில் உறுதியாகக் கூறிவிட்டார். கடந்த ஒரு மாதமாக இயக்குநர் சேரன் நடத்திய பாசப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். திரைப்பட இயக்குநர் சேரன் மகள் தாமினி, சந்துரு என்ற இளைஞரைக் காதலித்தார். காதலை தந்தை எதிர்ப்பதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறினார் தாமினி. தந்தை மீது கொலை முயற்சி புகாரும் தந்தார். இதைதொடர்ந்து சேரன் போலீசில் அளித்த புகாரில், சந்துருவின் நடவடிக்கை சரியில்லை என்றும், அவரது காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறினார். தன் மகள் தனக்கு வேண்டும் என்று பாசப்போராட்டம் நடத்தினார்.

மாஸ் காட்டி காசு பண்ணும் கீரோக்கள்/வியாபாரிகள் தலைவர்களாக வேஷம் போடுவது கொடுமை !

தமிழ்த் திரையுலகில் மாஸ் காட்டி காசு பண்ணும் முன்னணி நடிகராக இருந்த விஜய்யின் தலைவா பட பிரச்சனையில் முதன்முதலில் சப்போர்ட் செய்தவர் தனுஷ் தான்.ஒரு பிரச்சனை ஏற்படும்போது பல யூகங்கள் ஏற்பட்டு பிறகு தான் முக்கிய காரணம் தெரியவரும். ஆனால் முதல் குரலிலேயே பிரச்சனையின் ஆணிவேரை கண்டுபிடுத்து அடித்தவர் தனுஷ்(அதன்பிறகு அவர் அந்தர் பல்டி அடித்தது வேறு விஷயம்).இப்படி தலைவா பட பிரச்சனை மட்டுமல்லாமல் விஜய்க்கும் தனுஷுக்கும் வேறு ஒரு ஒற்றுமையும் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

மூடநம்பிக்கை மோசடி ஒழிப்புப் பிரிவு ஒன்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்துவது அவசியம்!

மூடநம்பிக்கை மோசடி ஒழிப்புப் பிரிவு ஒன்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்துவது அவசியம்!
அறவழி சித்தர் என்ற பெயரில் உள்ள சாமியார் - ஜோதிடரின்
பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் தப்பி விடக் கூடாது!
தமிழ்நாடு அரசுக்குத்  தலைவர் வீரமணி  வேண்டுகோள்!
அறவழி சித்தர் என்ற பெயரில் ஜோதிடம் கூறுவதாகத் தம்மை விளம்பரப்படுத்திக் கொண்டு இளம் பெண்களை விபச்சாரத்துக்குப் பயன்படுத்தும் பேர் வழி  கைது செய்யப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது என்றாலும் - இந்த ஆசாமியின் பின்னணியில் உள்ள பெரும் புள்ளிகளும் கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்றும் மூடநம் பிக்கை ஒழிப்பு என்ற ஒரு தனிப் பிரிவை தமிழக முதலமைச்சர் உருவாக்க வேண்டும் என்றும் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சென்னையில் அறவழி சித்தர் என்ற பெயரில் ஜோதிடத் தொழில் செய்த ஒரு மோசடிப் பேர் வழி, இளம் பெண்களை மயக்கியதும்,  தாயாரும் இதில் உடந்தையாய் இருந்ததும் மகாமகா நம்ப முடியாத மானக்கேடு!

ஏற்கனவே சம்பளம் வாங்கிய பாடகர்களுக்கு ஏன் ராயல்டி தரவேண்டும் ? தயாரிப்பாளர்கள் போர்க்கொடி

சினிமாவில் பாடுவதற்கு பாடகர்களின் திறமை, பாப்புலா‌ரிட்டியை வைத்து சம்பளம் தரப்படுகிறது. சினிமாவில் பாடுவதற்குதான் அந்தச் சம்பளம். அதே பாடலை தொலைக்காட்சி, வானொலி, அலைபேசி ‌ரிங்டோன் என எந்தவொரு வெளி ஊடகத்துக்கு தந்தாலும் அதில் வரும் பணத்தில் ராயல்டி தொகை தர வேண்டும் என்கிறார்கள்.இசையமைப்பாளர்களும் பாடலாசி‌ரியர்களும் பாடகர்களைப் போல ராயல்டி கோருகிறார்கள்.உதாரணத்துக்கு இரண்டு கோடி சம்பளம் தந்து ஒரு இசையமைப்பாளரை படத்துக்கு ஒப்பந்தம் செய்கிறோம். ஆறு பாடல்களை அவர் தருகிறார். ஆறு பேர் பாடுகிறார்கள், ஆறு பேர் பாடல்களை எழுதுகிறார்கள்.இப்போது அந்தப் பாடல்களை சோனி மாதி‌ரி ஒரு ஆடியோ நிறுவனத்துக்கு தயா‌ரிப்பாளர் விற்றுவிடுகிறார். அந்தப் பணத்தில் மேலே உள்ள மூவரும் - இசையமைப்பாளர், பாடகர், பாடலாசி‌ரியர் - ராயல்டி தர வேண்டுமென கேட்கிறார்கள்.

திருச்சி மாணவி சுல்தானா சாவுக்கு காரணம் யார்?


மர்ம கடிதத்தால் பரபரப்பு திருச்சியில் தண்டவாளத்தில் உடல் சிதறி கிடந்த மாணவி சாவுக்கு காரணம் யார், என்பது பற்றி மர்ம கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்தவர் தவ்பீக் சுல்தானா(13). மேலப்புதூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளி யில் 8ம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த 14ம் தேதி எ.புதூர் ரெட்டைமலை அருகே தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். பின்னர் இவ்வழக்கு எ.புதூர் போலீசு க்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கல் லூரி மாணவர்கள் 5 பேரை பிடித்து போலீசார் விசாரி த்து வருகின்றனர். தற்போது இவ்வழக்கு பாலக்கரை போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை(ஆர்பிஎப்) போலீ சாருக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. தாமஸ் என்பவர் எழுதியிருந்த அந்த கடித த்தை, மாநகர போலீஸ் துணை கமிஷனர் அபினவ்குமாரிடம் ஒப்படைத்தனர்.அந்த கடிதத்தில் எழுதியிருந்தது பற்றி போலீசார் கூறியதாவது: மாணவி சுல்தானாவுக்கும், அரியமங்கல த்தை சேர்ந்த 2 பேருக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவர்கள் தான் சுல்தானாவை எ.புதூரில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்ய முயன்றனர்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

உணவு பாதுகாப்பு திட்டம் ! ஏழைகள் பட்டினியோடு வாடும் நிலைக்கு முடிவு': சோனியா பேச்சு...

டெல்லி மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தி உணவு உத்தரவாத திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய அவர், உணவுக்கு உத்தரவாதம் தரும் இத்திட்டத்தால் நாட்டிலுள்ள 80 கோடி மக்கள் பயன் பெறுவர் என்று குறிப்பிட்டார். தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ள இந்த திட்டம், முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் கனவுத் திட்டம் என்றும் குறிப்பிட்டார். முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தி ஏழைகளின் துன்பத்தை நெருங்கி கவனித்தவர் என்று சோனியா காந்தி கூறினார். உணவு உத்தரவாத திட்டத்தால் கர்ப்பிணிகளும், இளம்பெண்களும் பயனடைவர் என்று கூறினார். மேலும் பேசிய சோனியா காந்தி இந்த திட்டம் ஏழைகள் பட்டினியோடும், ஊட்டச்சத்து இன்றியும் வாடும் நிலைக்கு முடிவு கட்டும் வகையில் இருக்கும் என்றார்.

நிலகரி ஊழல் கோப்புக்களை காணவில்லை ! முக்கிய ஆவணங்கள் எங்கே?: மத்திய அரசிடம் சி.பி.ஐ. கேட்கிறது

புதுடில்லி: நிலக்கரி ஊழல் விவகாரத்தில் முக்கிய ஆவணங்கள் மாயமானதாக மத்திய அமைச்சர் கூறியதை தொடர்ந்து , பார்லி.யில்இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்நிலையில்இந்த வழக்கி்ல் முக்கிய ஆவணங்களை மத்திய அரசு தரவில்லை என சி.பி.ஐ. ஒரு புது குற்றச்சாட்டினை மத்திய அரசு மீது சுமத்தியுள்ளது. இது‌தொடர்பாக சி.பி.ஐ. வட்டாரங்கள் கூறுகையில், 50 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கிய விவகாரத்தி்ல் 13 எப்.ஐ.ஆர்.கள் போடப்பட்டுள்ளன. இதனை மத்திய நிலக்கரி சுரங்க அமைச்சகத்திற்கு கடந்த மே மாதம் அனுப்பிவைக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது.அதில்,காங். எம்.பி.க்கள் நவீன்ஜிந்தால்,விஜய்தர்தா, முன்னாள் மத்திய அமைச்சர் தாசரி நாராயணராவ் ஆகியோர் மீதான புகார்கள் குறித்த முக்கிய ஆவணங்கள் இன்னும் சி.பி.ஐ. கைக்கு கிடைக்கவில்லை.‌மொத்தம் 16 முக்கிய ஆவணங்கள் விசாரணைக்கு தேவைப்படுகிறது. இவ்வாறு சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குழந்தை தானாகவே எரிய வாய்ப்பில்லை ! போலீசார் புலன் விசாரணை !

சென்னை: குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லை. யாராவது நெருப்பை வைத்து குழந்தையை சித்ரவதை செய்திருக்க வாய்ப்புள்ளது என்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் குழப்பம் உருவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள டி.பரங்குனி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கர்ணனின் குழந்தை ராகுல். குழந்தையின் உடல் தானாக தீப்பற்றி எரிவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இரண்டரை மாத குழந்தையின் உடலில் 4 முறை தானாக தீப்பற்றி எரிந்துள்ளதாக அதன் பெற்றோர்கள் தெரிவித்தனர். உடல் முழுவதும் தீக்காயத்துடன் குழந்தை காணப்பட்டது. இதனையடுத்து குழந்தை ராகுலுக்கு விழுப்புரம், புதுச்சேரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 9ம் தேதி முதல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தானாக தீப்பிடித்து எரியவில்லை... யாரோ எரித்துள்ளனர்... டாக்டர்கள் தகவலால் பரபரப்பு

நமக்கு தலைவாவும் வேண்டாம், தலைவியும் வேண்டாம் ! சகல படங்களுக்கும் ஜெயாவின் கிளியரன்சும் தேவைப்படும்

ஜெயா-விஜய் சந்திப்புதலைவாவின் யோக்கியதை தலைவியால் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தலைவியின் பாசிசம் தலைவாவின் அடிமைத்தனத்தால் அதிகரித்திருக்கிறது.
ம்ஜானுக்கு வெளியாக வேண்டிய தலைவா திரைப்படம் ஒரு வழியாக இன்று ஆகஸ்டு 20 ஆவணி அவிட்டமன்று வெளியாகி விட்டது. அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தமென்று இனி யாரும் கேட்க முடியாது. ஆயினும் ஊடகங்களில் இந்த வெற்றி குறித்த பரபரப்பு செய்திகள் அதிகமில்லை. ஏற்கனவே இந்த பரபரப்பில் சண்டை, சச்சரவு என்ற விறுவிறுப்பு இல்லாமல் சரணடைவு, கண்ணீர் எனும் சோகங்கள் மட்டுமே திகட்டுமளவு இருந்ததால் ஊடகங்களின் கவனம் அதிகமில்லையோ என்னமோ.
தலைவாபடம் வெளியாவது குறித்து நடிகர் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மீடியாக்களில் வந்த பல கட்டுக்கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சினையில் தலையிட்டு ‘தலைவா’ திரைப்படம் சுமூகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார். பல வேலைகளுக்கு நடுவிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழக அரசை சர்வாதிகார அரசு, இங்கு கருத்து சுதந்திரமில்லை, ஒரு நடிகருக்கே இங்கே வாழ்வுரிமை இல்லை என்று ஏகப்பட்ட கோணங்களில் ஜனநாயகம் பேசியவர்களின் கருத்தையெல்லாம் கட்டுக்கதை என்று ஒரே போடாக வெட்டி விட்டார் விஜய். பாவம், சிறைக்குச் செல்லும் வெள்ளைக் காலர் கிரிமினல்கள் தங்களது முகத்தை மறைப்பது போல நமது கருத்துரிமை கந்தசாமிகளின் நிலை ஆகிவிட்டது. இனியாவது ஜனநாயகம் எனும் உரிமையை காஸ்ட்லியான நட்சத்திரங்களின் தயவில் காப்பாற்ற முடியாது என்று அந்த அறிஞர் பெருமக்கள் திருந்தட்டும்.

ராபர்ட் வதேரா : நேரு பரம்பரையின் புதிய பில்லியரானது எப்படி ?

அசோக் கெம்காமூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா
கடந்த இருபது ஆண்டுகளில் ஊழல்களின் மதிப்பு ஆயிரம் கோடிகளில் இருந்து லட்சம் கோடிகளுக்கு மாறியிருக்கிறது. ஊழலின் பரிமாணமும் சகல துறைகளிலும் கால் பதிப்பதாக மாறியிருக்கிறது. அப்படி ஒரு பெரிய மோசடி ஹரியானா மாநிலத்தின் ஆளும் வர்க்க அதிகாரிகள், முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளுடைய கூட்டு முயற்சியால் சாத்தியமாகி உள்ளது.
பிளேபாய் வதேராசோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமும், டி.எல்.எஃப் என்ற கட்டுமான நிறுவனமும், ஹரியானா காங்கிரசு தலைவர் ஒருவரின் ஓங்காரேஸ்வரர் நிறுவனமும் இணைந்து இந்த ஊழலை நடத்தியுள்ளன. 2012 அக்டோபரில், இதனை அம்பலப்படுத்திய மூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா மீது இட மாறுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இம்முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட மூவர் குழு கெம்காவின் நடவடிக்கைகளுக்கு உள்நோக்கம் இருப்பதாக சொல்லி அவரை விசாரணைக்கு அழைக்காமலேயே அவரது உத்திரவுகளை ரத்து செய்தது. இப்போது கெம்கா பொதுவில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து 100 பக்க அளவில் கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இந்த ஊழலின் மூலம் வதேரா அடைந்த வருமானம் மட்டும் குறைந்தது ரூ 3.5 லட்சம் கோடி வரை இருக்கும் என கெம்கா கணக்கிட்டு சொல்லியிருக்கிறார்.

தலைவாவுக்கு பாலபிஷேகம் ! ஜெயலலிதா செய்ததே சரி !

நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் திருட்டு சி.டி வெளிவந்துவிட்டது. இந்த சி.டியை ரசிகர்களே பல இடங்களில் பிடித்து கொடுத்தனர். இந்த நிலையில் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து இன்று செவ்வாய் கிழமை தலைவா திரைப்படம்    தமிழ கத்தில் திரைக்கு வந்தது. புதுக்கோட்டையில் திரையரங்கம் முன்பு திரன்ட ரசிகர்கள் மாவட்ட அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜாபர் அலி தலைமையில் ஆடு வெட்டி, மொட்டை போட்டு விஜய் படத்திற்கு பாலா பிஷேகம் செய்தனர்  அப்போது அவர்கள் கூறும் போது தலைவா படம் தமிழகத்தில் நீண்ட நாட்கள் ஓட வேண்டும் என்பதற்காகத் தான் இந்த செய்கைகள் என்றனர். இந்த கண்றாவிகளை விலாவாரியாக பார்க்கவேண்டும் என்றால் கீழ்காணும் படங்களை பாருங்க , ஜெயலலிதா செய்தது சரிபோல் தெரிகிறது.சினிமாகாரனுக்கு பின்னால் போகும் சமுகம்

பெனாசிர் புட்டோ கொலைவழக்கில் முஷராப் கைது !


இஸ்லாமாபாத்
பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் பர்வேஸ் முஷரப் மீது கோர்ட்டில் குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டது.
பெனாசிர் கொலை வழக்கு
பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப்(70) பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு அவருடைய பண்ணை வீட்டில் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். அவர் மீதான வழக்குகளில் 2007–ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு ஒன்றாகும்.
இந்த வழக்கு ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நேற்று நீதிபதி ஹபிபூர் ரஹ்மான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பர்வேஸ் முஷரப் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குற்றச்சாட்டு தாக்கல்
அப்போது முஷரப் மீது கொலை, கொலை செய்ய சதி மற்றும் கொலைக்கு வழிவகை செய்து கொடுத்தது ஆகிய 3 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

ஆயுள் தண்டனை ! விநோதினியை அசிட் வீசி கொன்றவனுக்கு மரண தண்டனை இல்லையாம் ! too late too little

The man who snuffed out the life of 23-year-old Vinodhini through a gruesome acid attack was sentenced to life imprisonment by a sessions court on Tuesday.காரைக்கால்: அமில வீச்சில் காரைக்கால் வினோதினி உயிரிழந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீபாவளிப் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு சென்னை திரும்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ஆம் தேதி இரவு பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த வினோதினி மீது சுரேஷ் என்பவர் ஆசிட் வீசினார். இந்த சம்பவம் நடந்ததற்கு அடுத்த நாள் சுரேஷ் கைது செய்யப்பட்டார். அதே தினத்தில் மேல் சிகிச்சைக்காக வினோதினி சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர் விசாரணைகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 167 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி 12-ஆம் தேதி வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கொலை முயற்சி வழக்காக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை கொலை வழக்காக மாற்றி கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

P.சிதம்பரம்: சமுதாயப் புரட்சியாளர்களில் முதலிடம் வகிப்பவர் தந்தை பெரியார்!


  • சமுதாயப் புரட்சியாளர்களில் முதலிடம் வகிப்பவர் தந்தை பெரியார்!
  • சமுதாயத்தின் தலை மகன்களில் ஒருவர் பன்னீர்செல்வம்
  • இடஒதுக்கீட்டைத் தடுக்க சிலர் வித்தைகளைக் காட்டுகிறார்கள்
    அவற்றையும் சந்தித்து முன்னேற வழி வகுப்போம்!
    சர். ஏ.டி. பன்னீர்செல்வம் சிலையைத் திறந்து மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆற்றிய உரை

    நீடாமங்கலம் ஆக.19- சமு தாயப் புரட்சியாளர்களில் முதன் மையானவர் தந்தை பெரியார் என்று புகழாரம் சூட்டிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள். இடஒதுக்கீட்டுப் பாதையில்  குறுக்கிட்டுச் சிலர் வித்தைகளைக் காட்டுகிறார்கள். அவற்றையும் சந்தித்து சமூகநீதியை வென் றெடுப்போம் என்றார். நீடாமங் கலத்தையடுத்த வையகளத்தூரில் நீதிக்கட்சித் தலைவர் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பார்-அட்-லா அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது (17.8.2013).
    சமுதாயப் புரட்சியாளர்களிலே தந்தை பெரியார் முதலிடம் வகிக்கிறார்
    ஆண்டொன்று போனால், வய தொன்று போகும் என்று சொல் வார்கள், அதேபோலத்தான், ஆண் டொன்று போனால், பழைய நினை வுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். நம்முடைய வரலாறு நமக்குத் தெரியாமல் இருக்கக் கூடாது.

    தலைவா ? நிஜ வெற்றி திமுகவுக்கே ! ஜே அன்பழகனின் ட்விட்டர் தான் காயை நகர்த்தியது


    Untitled-1”தலைவா மேட்டர்தானேடா ஹாட் டாப்பிக் ? ”

    ”தலைவாதாண்டா ஹாட் டாபிக்.  ஆனா தலைவா மட்டுமா ஹாட் டாபிக் ? ”

    ”சரி இந்தப் பிரச்சினை எப்படிதாம்பா முடிவுக்கு வந்துச்சு ? ” என்றார் கணேசன்.

    ”தலைவா படப்பிரச்சினையை திமுக கையில எடுக்கப்போறாங்கன்னு தெரிஞ்சதும்தான் அரசாங்கம் வேக வேகமாக களமிறங்குச்சு.  படம் வெளியாகலைன்னதும், தயாரிப்பாளர் சார்பில உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டாங்க. ஆனா அனுமதி வழங்கப்படல.  விஜய் தரப்புல ஏதாவது வேகமா செய்யப்போறாங்கன்னு எதிர்ப்பார்த்தா, விஜய் தரப்பு படத்தை வெளியிடறதுக்கு யார் கால்ல வேணா விழறதுக்கு தயாரா இருந்தாங்க. அதனால அரசாங்கமும் மெத்தனமா இருந்துச்சு..

    இந்த நேரத்துலதான், கருணாநிதி இரண்டாவது முறையா இந்தப் படம் தொடர்பா பேட்டியளிச்சார்.   விஜய் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து, ஒரு படைப்பாளியாக என்ன நினைக்கிறீர்கள்னு கேட்டதுக்கு ஒரு படைப்பாளியாக பதைபதைக்கிறேன்னு பதில் சொன்னாரு.

    அன்னைக்கு, மதுரவாயல் உயர்வழிச்சசாலை திட்டம் நிறுத்தப்பட்டது தொடர்பா கைது செய்யப்பட்டிருந்த திநகர் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் ட்விட்டர்ல, 300 தியேட்டர்களில் தலைவா படத்தை வெளியிட நான் தயார்னு எழுதியிருந்தாரு.

    மயிலாபூர் கபாலி கோவிலில் இந்து தீவிரவாதம் தலைதூக்குகிறது ! பெண்கள் ஆடைக்கு தாலிபான் டைப் கட்டுபாடு வருகிறது

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், "ஜீன்ஸ் பேன்ட், டிஷர்ட்' போன்ற
    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பெண்கள் சேலை, சுரிதார், பாவாடை போன்ற உடைகளையும்; ஆண்கள் வேட்டி, சட்டை, சாதாரண பேன்ட் போன்ற உடைகளையும் அணிந்து மட்டுமே கோவிலுக்குள் வர வேண்டும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.துவக்கத்தில், உடை கட்டுப்பாடு குறித்து, பக்தர்களுக்கு, நோட்டீஸ், அறிவிப்பு பலகை போன்றவற்றின் மூலம் தெரிவித்துவிட்டு, பின் குறிப்பிட்ட கால இடைவெளியில், தடையை அமல்படுத்த கோவில் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. மேலும், குறிப்பிட்ட நாட்களில் மட்டும் நவநாகரிக உடைகள் அணிய தடை விதிக்கப்பட்டு, பின், அடுத்தடுத்த நாட்களுக்கும் தடையை விரிவுபடுத்தும் எண்ணமும், கோவில் நிர்வாகத்துக்கு உள்ளது. இது குறித்து, கோவில் நிர்வாக அதிகாரிகள், பதில் அளிக்க மறுத்து விட்டனர். கபாலீஸ்வரர் கோவிலில் ஆடை கட்டுப்பாடு, அமலுக்கு வரும் போது, சென்னையில் உள்ள மற்ற கோவில்களும், அதை பின்பற்றி, உடை கட்டுப்பாட்டை கொண்டு வரக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.
    நவநாகரிக உடைகள் அணிந்து வர, விரைவில் தடை விதிக்கப்படும் என, கூறப்படுகிறது. பெண்கள் அணியும் நவநாகரீக உடைகள், ஆண் பக்தர்களின் கவனத்தை திசை திருப்புவதாக கோயில் நிர்வாகத்தினர் இடையே எழுந்துள்ள கருத்தை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது.இந்த விதமான ஆர்கியுமென்ட் எல்லாம்தான் தாலிபான்கள் சொல்வது! பேசாம அவங்களை மயிலாபுருக்குக்கு கூப்பிடிங்க அவிங்களுக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லைங்க? ஆயிரக்கணக்கான வருஷங்களா புருப் பண்ணிக்கிட்டே இருக்கீங்களே ?