சனி, 19 ஆகஸ்ட், 2023
அ.தி.மு.க. தொண்டர்களின் பசியாற்ற 5 ஆயிரம் சமையல் கலைஞர்கள் .. பொன்விழா எழுச்சி மாநாடு
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மதுரை வலையங்குளத்தில் முழுவீச்சில் நடைபெற்று 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மாநாட்டுப் பந்தல், வாகனங்கள் நிறுத்துமிடம், உணவு தயாரிக்கும் கூடம் அமைக்கும் பணிகள் 5 லட்சம் சதுர அடியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த ரஜினிகாந்த்.. உபியில் “நோஸ்கட்” செய்தும் ஜெயிலர் திருந்தல! வீடியோ இதோ
தர்பார், அண்ணாத்த திரைப்படங்களின் தோல்வியை தொடர்ந்து டாக்டர், கோலமாவு கோகிலா, பீஸ்ட் படங்களின் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் ஜெயிலர். மலையாள மெகா ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், தமன்னா, யோகி பாபு, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், சுனில், சரவணன், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.
திரு அல்பிரட் துரையப்பாவை அரசியலில் இருந்து அகற்றவேண்டிய தேவை எந்த கட்சிக்கு இருந்தது? தமிழரசு கட்சிக்கு!
ராதா மனோகர் : 1965 ஆண்டு தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையை தரவில்லை
ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஏறக்குறைய சம பலத்தில் வெற்றி பெற்றிருந்தன.
இந்நிலையில் ஸ்ரீமாவோ அம்மையாரும் டட்லி சேனாநாயவும் தமிழரசு கட்சியின் (14ஆசனங்கள்) ஆதரவை கோரினார்கள்.
தமிழரசு கட்சியினர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவை கொடுத்தார்கள் அதற்கு ஏதோதோ காரணங்களை கூறினார்கள் பின்பு வழமை போல ஐக்கிய தேசிய கட்சி ஏமாற்றி விட்டதாக கூறி வெளியே வந்தார்கள்
இது தமிழ் தேசிய அரசியலின் வழமையான விக்டிம் டிராமாதான்
ஆனால் உண்மையான காரணம் வேறு!
தமிழரசு கட்சி டட்லியோடு சேர்ந்து ஆட்சி அமைந்ததற்கு முக்கிய காரணம் அவர்கள் அப்போது திரு அல்பிரட் துரையப்பாவின் வளர்ச்சியை பார்த்து மிரண்டு போயிருந்ததுதான்.
1965 இல் ஸ்ரீமாவோடு சேர்ந்து ஆட்சி அமைத்திருந்தால் அப்போதே யாழ்ப்பாண பல்கலை கழகத்தை ஸ்ரீமாவோ அம்மையார் நிறுவியிருப்பார்.
ஏனெனில் ஏற்கனவே அவர் யாழ் எம்பி திரு அல்பிரட் துரையப்பாவின் யாழ்ப்பாண பல்கலை கழக கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்து ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை (1964) எடுத்திருந்தார்
கல்வி அமைச்சர் பதியுதீன் மொகமத்தை திரு அல்பிரட் துரையப்பாவோடு ராமநாதன் கல்லூரியையும் பரமேஸ்வரா கல்லூரியையும் பார்த்து அவரை பல்கலை கழகத்திற்கு ஏற்றவைதானா என்று அறிந்து கொண்டார்.
மதுரையில் முன்னாள் அரசு அதிகாரியின் குடும்பமே தற்கொலை; குடிதண்ணீர் கூட வாங்க காசு இல்லாததால் விபரீத முடிவு!
tamil.samayam.com - அன்னபூரணி L : முன்னாள் அரசு அதிகாரியின் குடும்பம் தற்கொலை:
மதுரை மாநகர் தாசில்தார் நகர் அன்பு நகர் ராஜராஜன் தெருவை சேர்ந்த பாண்டியன் என்ற மருத்துவர் சுகாதாரத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்போது மருத்துவர் பாண்டியன் தனது மனைவி வாசுகி மற்றும் மகள் உமாதேவி (45) மகன் கோதண்டபாணி (42) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக மருத்துவர் பாண்டியன் மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேறிய நிலையில், பாண்டியனின் மனைவி வாசுகி மற்றும் திருமணமாகாத நிலையில் மகள் உமாதேவி (45) மகன் கோதண்டபாணி (42) ஆகிய மூவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். பாண்டியன் பிரிந்துசென்ற விரக்தியில் இருந்த குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளயே முடங்கியுள்ளனர்.
செல்வப்பெருந்தகைக்கு கே எஸ் அழகிரி எதிர்ப்பு! தமிழக காங்கிரஸ் தலைமை - மல்லிகார்ஜூன கார்கேயுடன் பெங்களூருவில் சந்திப்பு
மாலை மலர் : 15க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் அடங்கிய குழு சந்திப்பு. காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன் கே.எஸ்.அழகிரியே தமிழக காங்கிரஸ் தலைவராக தொடர வலியுறுத்தல். கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்துள்ளார்.
9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் அடங்கிய குழு சந்தித்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல் பரவும் நிலையில் கே.எஸ்.அழகிரி சந்தித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன் கே.எஸ்.அழகிரியே தமிழக காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023
கல்யாணத்தில் முகத்தில் கேக் அப்பிய மணமகனை திருமணம் செய்ய மறுத்த மணப்பெண்
dailythanthi : ஒரு மணப்பெண் தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடிக்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் மணமேடை ஏறி உள்ளார்.
ஆனால் அப்பொழுது மேடையில் தனக்கு பிடிக்காது என்று ஏற்கனவே கூறிய ஒரு செயலில் அந்த மணமகன் ஈடுபட்டதால் மேடையிலேயே, தனக்கு திருமணமான சில நொடிகளில் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கூறியுள்ளார் அந்த பெண்.
கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார் அந்த காதலன்.
அந்த காதலை ஏற்றுக் கொண்ட அந்தப் பெண் தனது சுயமரியாதைக்கு எந்த விதத்திலும் தீங்கு வராத வண்ணம் நம்முடைய காதல் வாழ்க்கையும், திருமண வாழ்க்கையும் இருக்க வேண்டும் என்று கூற அதை ஏற்றுக்கொண்டு சுமார் மூன்று ஆண்டுகளாக நல்ல முறையில் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர்.
திமுகவுக்கு ஆப்பு செருகும் ஆதன் ஐ பிசி போன்ற ஊடகங்களை மட்டும் வளர்த்து விடும் திமுக! மனோஜ் குமார் அதிரடி
திமுக அரசுக்குள் அல்லது திமுகவில் திமுகவின் எதிரிகள் ஊடுருவி உள்ளார்கள் என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக பலருக்கும் இருக்கிறது.
இது ஒன்றும் ரகசியம் அல்ல! தொடர்ந்து திமுக சார்புடையவர்களை வளர்த்து விடாமல்,
யார் யாரெல்லாம் திமுகவுக்கு ஆப்படிக்க முயல்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே விளம்பரங்களை வழங்கும் நிலைதான் இன்றுவரை தொடர்கிறது
திமுக தலைமைக்கும் களநிலைமைக்கும் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது என்ற சந்தேகம் உண்டாவது உண்மையே.
இது போன்ற பல அதிரடி கருத்துக்களை திராவிட சிந்தனையாளரான தோழர் மனோஜ் இப்போது வெளிப்படையாக கூறியுள்ளார்
தோழர் ஜீவசகாப்தன் அரண் செய் போன்ற...
மோடி : அடுத்த அவசர நிலைக்கு தயாராகுங்கள் ஜி 20 மாநாட்டில் பிரதமர் எச்சரிக்கை
மாலைமலர் அடுத்த அவரசநிலைக்கு தயாராகுங்கள்.. ஜி20 மாநாட்டில் பயம்காட்டிய மோடி..!
அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்டது தான் ஜி20.
முக்கிய சர்வதேச பொருளாதார பிரச்சினைகளில் உலகளாவிய ஒத்துழைப்புடன் உறுப்பினர் நாடுகளுக்கு ஒரு கட்டமைப்பை வடிவமைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த அமைப்பின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு நாட்டுக்கும் சுழற்சி முறையில் தரப்படுகின்றது.
1 டிசம்பர் 2022 முதல் 30 நவம்பர் 2023 வரை ஜி20 அமைப்பின் தலைவர் பதவியை இந்தியா வகிப்பதால் 2023 ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்று இருக்கிறது.
ஜெய்ப்பூர் ரயிலில் கூச்சலிட்டதால் உயிர் பிழைத்த பயணிகள்; ரயிலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் திடுக் தகவல்
nakkeeran ; அண்மையில் மும்பை ஜெய்ப்பூர் ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் சேத்தன் என்பவர் பயணிகள் நான்கு பேரை சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பலரை அவர் கொல்ல முயன்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரயிலில் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற சேத்தன் பல பேரை சுட முயன்றுள்ளார்.
அப்போது அங்கிருந்து பயணிகள் ஒன்றாக சேர்ந்து கூச்சலிட்டுள்ளனர்.
உடனடியாக அதிகாரிகள் அங்கு வந்ததாகத் தெரியவந்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் எங்கே? விலகும் மர்மம்!
மின்னம்பலம் -monisha : அசோக் எங்கே? விலகும் மர்மம்!
“கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை தனது கஸ்டடியில் வைத்து விசாரித்தது.
அதற்குப் பிறகு ஆகஸ்ட் 12ஆம் தேதி அவரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அன்றே அமலாக்கத்துறை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது.
அதாவது, ‘செந்தில் பாலாஜி இந்த கஸ்டடி விசாரணையில் ஒத்துழைப்பு வழங்கவே இல்லை. பல கேள்விகளுக்கு நழுவலான பதில்களையே அளித்தார்.
போக்குவரத்துக் கழக வேலைகளுக்கு பணம் வாங்கிய வழக்கில் கூட்டுச்சதி நடைபெற்றிருக்கிறது.
எனவே இந்த வழக்கை எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்’ என்று அமலாக்கத் துறை கோரியிருந்தது.
வவுனியா பல்கலைக்கழக 2 மாணவர்கள் நீர்க்குழியில் விழுந்து உயிரிழப்பு : பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல்
வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டியானது வவுனியாப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றிருந்த போது நீர்க்குழியில் விழுந்து இரு மாணவர்கள் மரணமடைந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இன்று வியாழக்கிழமை (17) மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டிகள் கடந்த இரு தினங்களாக பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியாப் பல்கலைகழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் இரண்டாவது தினமான இன்றும் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் மைதானத்தில் அருகில் காணப்பட்ட நீர்க்குழியில் இரு மாணவர்கள் தவறுதலாக விழுந்துள்ளனர்.
வியாழன், 17 ஆகஸ்ட், 2023
குஜராத்தில் 23.30 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு! நிதி அயோக் அதிர்ச்சி புள்ளி விபரம்
குஜராத் மாநிலத்தின் கிராமபுறங்களை சேர்ந்த பாதிக்கும் மேற்பட்டோர் (44.45 சதவீதம்), நகர்ப்புறங்களில் சுமார் 28.97 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது.
பின்தங்கிய மாநிலங்களாக இருக்கும் சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்டவை ஊட்டச்சத்து குறைபாடு அளவில் குஜராத் மாநிலத்தை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன. தேசிய குடும்பநல கணக்கெடுப்பின் படி தேசிய அளவில் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் குஜராத் நான்காவது இடம்பிடித்துள்ளது. இந்த மாநில குழந்தைகளில் சுமார் 39 சதவீதம் பேர் தங்களது வயதிற்கு ஏற்ற எடையை விட குறைந்த எடை கொண்டிருக்கின்றனர்.
பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்குமாம்? அதுவும் 326 எம்பிக்களுடனாம்.. திரிப்பு கணிப்புக்கள் ஆரம்பம்
மாலைமலர் : புதுடெல்லி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அடுத்த ஆண்டு (2024) மே மாதம் வரை பதவி காலம் உள்ளது.
என்றாலும், பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.
இதற்காக அவர் டெல்லியில் தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகளும் தீவிரமாக உள்ளன. இதற்காக மாறுபட்ட கொள்கைகள் உடைய எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருங்கிணைந்து உள்ளன. அவர்களது கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
மழை காலங்களில் தமிழகத்தில் தண்ணீரை சேமிக்க திட்டம் எதுவுமில்லை- உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி
maalaimalar : தமிழகத்தில் உள்ள கண்மாய்களை முறையாக தூர்வாரி இருந்தால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை இருந்திருக்காது.
விவசாய பாசனத்திற்கு தாமிரபரணி ஆற்றின் முக்கிய கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் முன்னிலையில் வந்தது.
அப்போது, மழை காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழ்நாட்டில் எந்த திட்டமும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், "தமிழகத்தில் உள்ள கண்மாய்களை முறையாக தூர்வாரி இருந்தால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் இருந்திருக்காது" என்றனர்.
ஆப்பிரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து - 63 அகதிகள் உயிரிழந்துள்ளன
மாலை மலர் : கேப் வெர்டே உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மத்திய தரைக்கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர்.
இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்து விடுகிறது. அளவுக்கு அதிகமான பயணிகளுடன் செல்லும் படகுகள் கவிழ்ந்து ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டைச் சேர்ந்த அகதிகள் சுமார் 63 பேர் ஸ்பெயினின் கேனரி தீவுகள் நோக்கி கப்பலில் புறப்பட்டனர். இந்த படகு கேப் வெர்டே தீவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென படகு கவிழ்ந்தது.
புதன், 16 ஆகஸ்ட், 2023
மதிவதனியும் மகள் துவாரகாவும் உயிருடன் உள்ளனர்! அக்கா சாரதா பேட்டி
இருப்பினும் தமிழ் ஈழ ஆர்வலர்கள் பிரபாகரன் போரில் கொல்லப்படவில்லை என்றும், அவர் தற்போது வரை உயிருடன் இருக்கிறார் என்றும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபாகரனோடு போரில் கொல்லப்பட்டு விட்டதாக கருதப்படும் அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை மதிவதனி அக்கா வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
நாங்குநேரி சம்பவத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
tamil.oneindia.com - Hemavandhana : நொடிக்கு நொடி.. "முதல் வெடியை" வீசிய விசிக.. அப்படீன்னா திமுகவில் மொத்தமா மாறுதா.. கவனித்த அறிவாலயம்
சென்னை: திமுக - விசிக கூட்டணி முறிகிறதா? ஏன் விசிக இப்படி ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது என்ற சந்தேகங்கள் சோஷியல் மீடியாவில் முளைக்க துவங்கிவிட்டன.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவை சேர்ந்த 17 வயது மாணவன் சின்னத்துரை.. 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்..
சின்னத்துரையை அவருடன் படிக்கும் மாணவர்கள், சாதிய பாகுாட்டை காட்டி படிக்கவிடாமல் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அளவுக்கு அதிகமாக அவமானப்பட்ட சின்னத்துரை, ஸ்கூலுக்கு போகாமலேயே இருந்துள்ளார்.
பாசிச பாஜக ஒழிக என்று விமானத்தில் தமிழிசைக்கு எதிராக முழக்கமிட்ட தூத்துக்குடி சோபியா வழக்கு ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மாலை மலர் : மதுரை: தூத்துக்குடியைச் சேர்த்த லூயிஸ் சோபியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2018-ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பயணித்தேன். அந்த விமானத்தில் அப்போதைய தமிழக பாரதிய ஜனதாவின் தலைவரும், தற்போதைய புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களின் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜனும் பயணம் செய்தார்.
விமானத்தில் இருந்து இறங்கும் போது மத்திய அரசை விமர்சித்து நான் கோஷம் எழுப்பினேன். இதையடுத்து கோபமடைந்த தமிழிசை, என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
: ஹரியானாவில் 5 நாட்களில் 1208 (முஸ்லீம்) கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
Gnaniyar Zubair : ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் எத்தனை கட்டிடங்கள் இடிக்கப்பட்டன?
என்ற கேள்விக்கு அதிகார வர்க்கத்திடம் பதில் இல்லை.
ஆனால், ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை எடுத்த மதிப்பீட்டின்படி 5 நாட்களில் 1208 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
ஏறக்குறைய அனைத்தும் முஸ்லிம்களின் வீடுகளே.
ஏதேனும் இந்துக்களின் வீடுகளும் அதில் உள்ளது.
ஆனால் அது மிகவும் குறைவானதே.
வீடுகளை பிடிப்பதற்கு முன் எவ்வித அறிவிப்பும் அறிவிக்கையும் கொடுக்கப்படவில்லை.
கலவரத்துக்கு முன்பும் இடிப்பிற்கான எந்த பணிகளும் அறிகுறிகளும் இல்லை.
இன அழிப்பின் முதல் குறி முஸ்லிம் என்று குருஜி கோல்வால்கர் சொல்லிக் கொடுத்த பாடத்தின் அடிப்படையில் இருப்பிட இடிப்புத் திட்டத்தை சந்தர்ப்பம் கிடைக்கும் போது கடைபிடித்தார்கள். அவ்வளவுதான்...
கழகமும் வேடந்தாங்கல் பறவைகளும் ஒரு உடன்பிறப்பின் ஆதங்கம்
Raja BN : அண்ணா.. வணக்கம்
தலைவர் கலைஞர் அவர்கள் சென்னை மெரினாவில் ஓய்வு எடுக்க சென்ற போதே
கடமை கண்ணியம் கட்டுப்பாடு கருப்பு சிகப்பு உதயசூரியன் சின்னம் தலைவர் கலைஞரின் உண்மையுள்ள தொண்டர்கள் எல்லாம் ஓய்வு எடுக்க சென்று விட்டார்கள்
இப்போது இருப்பது எல்லாம் வேடந்தாங்கல் பறவைகளும் வியாபாரிகளும் தான்
அண்ணா கடந்த 10 வருடங்களாக கொள்ளை அடித்த பணத்தை வைத்து கொண்டு கழகத்தின் துணை பொறுப்புகளை அமோகமாக விலை பேசி வங்கி விட்டார்கள்
நாம் பணத்திற்கும் எங்கே போவது
நம்மிடம் இருப்பது எல்லாம் 4 கருப்பு சிகப்பு கரைவோஷ்டியும் உதயசூரியன் சின்னமும் தான்
நம்மை யார் மதிப்பார்கள்?
லாலு பிரசாத் : செங்கோட்டையில் அடுத்த முறை நாங்கள் கொடியேற்றுவோம்!
dinamani.com tசெங்கோட்டையில் அடுத்த முறை நாங்கள் கொடியேற்றுவோம்: லாலு பிரசாத்...
பாட்னா: செங்கோட்டையில் பிரதமா் மோடி கொடியேற்றுவது இதுவே கடைசி முறையாக இருக்கும். அடுத்த முறை நாங்கள் (எதிா்க்கட்சிகள் கூட்டணி) அங்கு கொடியேற்றுவோம் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் தெரிவித்தாா்.
பாட்னாவில் உள்ள இல்லத்தில் லாலு பிரசாத், தனது மனைவியும் பிகாா் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியுடன் சுதந்திர தினத்தை கொடியேற்றி கொண்டாடினாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இந்த சுதந்திர தினத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்வதுடன், சுதந்திரம் பெற்றுத்தந்த மகாத்மா காந்தி, சுபாஷ்சந்திர போஸ், மெளலானா அபுல் கலாம் ஆசாத், அம்பேத்கா் உள்ளிட்டோரின் தியாகத்தை நினைவுகூா்ந்து மரியாதை செலுத்துகிறேன்.
இலங்கை ஊடக துறையில் அழுத்தமாக கால் பதிக்கும் லைக்கா நிறுவனம்
BBC Tamil : இலங்கை அரசு தொலைக்காட்சி சேனலை வாங்கிய லைகா நிறுவனம்
லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரனுடன் ரணில் விக்ரமசிங்க இருப்பது போன்ற புகைப்படம் இலங்கை ஊடகங்களில் வெளியானது
இலங்கையின் அரசு தொலைக்காட்சியான ‘ஐ’சேனலை லைகா நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாக வெளியான தகவல் போலியானது என ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
ஒவ்வொரு வாரமும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சேனல் ஐ தொலைக்காட்சி சேவையை லைகா நிறுவனத்திற்கு வழங்கும் யோசனை அமைச்சரவையில் நிராகரிக்கப்பட்டதாக இன்றைய தினம் வெளியான பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
நான்குநேரியில் நாம் இந்துகள் - நாம் தமிழர்கள் கள்ள மெளனத்தோடு வேடிக்கை பார்க்கிறார்கள்.
தோழர் SriRam : தலை முதல் பாதம் வரை உடம்பில் வெட்டுப்படாத இடமே இல்லை!
இரண்டு கைகளும் கால்களும் அறிவாள்களால் வெட்டி கிழிக்கப் பட்டுள்ளன.
சினிமாவில் வரும் "சைக்கோ' - போன்றவர்களால் தான் இது போன்றகொடூரத்தை செய்ய முடியும்.
நெல்லை மாவட்டம் நான்குநேரியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பட்டியலினத்தை ச் சார்ந்த மாணவன் சின்னதுரையையும்..
அவனது தங்கையையும் இரவு10மணிக்கு வீட்டுக்குள் புகுந்து கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளது ஒரு சாதி வெறி பிடித்த சிறார் குழு!
படிப்பில் விளையாட்டில் ஒழுக்கத்தில் திறமையில் அப் பள்ளியில் முன்னுதாரணமாக விளங்கியுளான்
சின்னத்துரை!
இவரைப் போல இருங்க என ஆசிரியர் பாராட்டியுள்ளார்!
இவனெல்லாம் நமக்கு மேலயா?
செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023
பறிக்கப்பட்ட மருத்துவ படிப்புகள் துக்ளக் வகையறாக்களின் புள்ளி விபரம்
Sundaram : துக்ளக் இதழின் "ரீடர்ஸ் க்ளப்" என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகி யுள்ள ஒரு கடிததத்தை கீழே கொடுக்கிறேன் படித்துப் பாருங்கள், பிறகு இந்த நீட் என்கின்ற சூழ்ச்சி என்ன என்று புரியும்.....
"பிராமணக் குழந்தைகளே!!!
நீங்கள் டாக்டராக நல்ல வாய்ப்பு!!!
பிராமணக் குழந்தைகளுக்கு வாழ்த்துகள்!!!
உங்களில் பலருக்கு எம்.பி.பி.எஸ். டாக்டராக வேண்டுமென்ற கனவு இருக்கும்.
நேற்றுவரை, நாமெல்லாம் ஃபார்வர்ட் கம்யூனிட்டி; நமக்கு டாக்டர் சீட்டெல்லாம் கிடைக்காது என்று நாமே சொல்லிக் கொண்டிருந்தோம். அதில் உண்மையும் இருந்தது.
ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. நீட் தேர்வு முறை நமக்கு நல்ல பலன்களைத் தரத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சில புள்ளி விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின்மொத்த எண்ணிக்கை 22.
அவற்றில் உள்ள எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு சீட்களின் எண்ணி க்கை 2,652.
கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். சேருவத ற்காக விண்ணப்பித்த முற்படுத்தப் பட்ட மாணவர்கள் ( Forward Community – FC ) எண்ணிக்கை 4.6 சதவீதம் மட்டுமே.
3 ஆயிரம் பக்க ஆவணங்களை கொடுங்க.. செந்தில் பாலாஜி மனு மீது நீதிபதி அதிரடி உத்தரவு..!
மாலை மலர் : ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை முதல் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினர்.
ஐந்து நாட்கள் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
இலங்கை பிரதமராக வரக்கூடிய நிலையில் இருந்த தூத்துக்குடி தமிழர் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே
தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு நடந்த மரதன் ஓட்ட போட்டி ஆரம்பமாகும் மைதானத்தில் வைத்து கௌரவ அமைச்சர் திரு ஜெயராஜ் பெர்ணான்டோபிள்ளை அவர்கள் புலிகளால் கொல்லப்பட்டார்.
இவரின் மூதாதையர்கள் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள்!
இலங்கையில் அடுத்த பிரதமர் என்று செய்திகள் கசிந்த நிலையில்தான் அவர் புலிகளின் தற்கொலை குண்டுதாரியால் விளையாட்டு மைதானத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது!
என்னை பொறுத்தவரை அவர் பிரதமராக மட்டுமல்ல ஜனாதிபதியாக கூட எதிர்காலத்தில் வரக்கூடியவர்தான்!
இவர் ஒரு தமிழர் என்று தெரிந்தும் சிங்கள மக்களும்,
தமிழர்கள் உட்பட ஏனைய சிறுபான்மை இன மக்களும் இவருக்கு தொடர்ந்து பெரும் ஆதரவை நல்கினார்கள்!
அரசியலுக்கு வருமுன்பு இவர் வழக்கறிஞராக பணியாற்றிய பொழுது ஒரு ஏழை பங்காளனாக அறியப்பட்டவர்
பலருக்கு பணம் வாங்காமலேயே நீதிமன்றங்களில் தோன்றியவர்.
திங்கள், 14 ஆகஸ்ட், 2023
நீட் தோல்வி: மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தற்கொலை!
மின்னம்பலம் - Selvam : நீட் தோல்வி: மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தற்கொலை!
நீட் தேர்வு தோல்வியால் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது தந்தை செல்வசேகர் நேற்று (ஆகஸ்ட் 13) இரவு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் செல்வசேகர். புகைப்படக்காரரான இவரது மகன் ஜெகதீஸ்வரன் 2020-ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்து நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார்.
ஆந்திராவில் இருந்து சென்னை வந்த 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகளிடம் கொள்ளை
maalaimalar : சென்னை:ஆந்திராவில் அடுத்தடுத்து 2 சென்னை ரெயில்களை நிறுத்தி மர்ம கும்பல் பயணிகளிடம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்-சென்னை இடையே ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல இந்த ரெயில் ஐதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.
நள்ளிரவு 1.20 மணிக்கு ரெயில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் சிங்கராய கொண்டா மற்றும் கவாலி ரெயில் நிலையம் இடையே சென்று கொண்டு இருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 106 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளான சம்பவங்கள் பதிவு
Tamil mirror : கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுமிகள் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட 106 சம்பவங்களின் மருத்துவ அறிக்கைகள் கடந்த 3 ஆண்டுகளாக கிடைக்கப்பெறாமையால், அது தொடர்பில் வழக்குத் தொடர்ந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்பனவற்றில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
சட்ட மருத்துவ அதிகாரிகள் மாற்றலாகிச் சென்றமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் கடந்த 3 ஆண்டுகளாக சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 106 சம்பவங்கள் தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை வழங்கப்படவில்லை. அந்த அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
நாங்குநேரி சம்பவம்... உதயநிதியை கைது செய்யவேண்டும் - கிருஷ்ண சாமி : மாமன்னனால் வந்த வினை
மின்னம்பலம் - christopher : நாங்குநேரி சம்பவம்… உதயநிதியை கைது செய்யவேண்டும் : கிருஷ்ண சாமி
தமிழ்நாட்டில் ஜாதி மோதலை தூண்டி விடும் விதமாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்
நாங்குநேரியில் பட்டியலின மாணவன் மற்றும் அவனது தங்கையை சக மாணவர்கள் வீடு புகுந்து கொடூரமாக தாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நாங்குநேரி சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023
நீட் தேர்வு விலக்கு மசோதா ஆளுநர் வசம் இல்லை .. குடியரசு தலைவர் கைகளில் உள்ளது அமைச்சர் மா சுப்பிரமணியம்
மாலைமலர் : தென்காசி தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.75 லட்சம் மதிப்பில், புதிதாக கட்டப்பட்ட கண் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளிகளின் கவனிப்பு பிரிவு, ஹோமியோபதி சிகிச்சை பிரிவு உள்ளிட்ட கட்டிடங்களை இன்று, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இன்னும் மருத்துவக் கல்லூரி வராமல் இருப்பதற்கு காரணம் ஒன்றிய அரசு தான் காரணம். ஒன்றிய அரசு அனுமதி கொடுக்காததால் தான் மாவட்ட மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு காலதாமதம் ஆகி வருகிறது.
நீட் தேர்வு விலக்கு மசோதாவானது தற்போது ஜனாதிபதியிடம் ஒப்புதலுக்கு நிலுவையில் உள்ள சூழலில், கவர்னர் கையெழுத்திடமாட்டேன் என கூறுவது வேடிக்கையாகவே உள்ளது.
அரிவாளெடுத்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு - வழக்கறிஞர் அருள்மொழி அண்ணாமலை திராவிடர் கழகம்
Annamalai Arulmozhi : அரிவாளெடுத்த மாணவர்களின் பெற்றோருக்கு!
உங்களைப் போன்ற பெற்றோர்களில் ஒருவராக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
எந்தப்பிழையும் செய்யாத இரண்டு இளம் குருத்துகள் சாதியின் பெயரால் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் கிடக்கிறார்கள்.
அவர்களைப் பெற்ற தாயின் வயிறும் தன்னந்தனியாக அவர்களை வளர்த்த அந்த உயிரும் எப்படித் துடிக்கும் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
நீங்கள் அதன் மறுமுனையில் நிற்கிறீர்கள். உங்கள் பிள்ளைகள் கொலைவெறித் தாக்குதலை நடத்தியவர்கள்: இன்று சிறையில் இருக்கிறார்கள்.
நாளை அவர்கள் நிலை என்னவாகும் என்ற கவலை உங்கள் மனதையும் நடுங்கச் செய்யும் என்றே நம்புகிறேன்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார கைது!
மாலை மலர் :பல முறை நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அசோக் குமார் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.
அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு உடல்நிலை சீரடைந்ததையடுத்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நாங்குநேரி தங்கையுடன் வெட்டுப்பட்ட மாணவர்.. இப்போது எப்படி இருக்கு? களநிலவரம் இதுதான்
tamil.oneindia.com - Nantha Kumar R ; திருநெல்வேலி: நாங்குநேரியில் சாதி பாகுபாட்டால் தங்கையுடன் சேர்த்து 12ம் வகுப்பு மாணவனை மாணவர் கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.
இந்நிலையில் தான் நாங்குநேரியில் மக்கள் பீதியில் உள்ளதும், அங்கு நிலவும் தற்போதைய நிலை என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் தற்போது ‛டாக் ஆப்தி டவுன்' ஆக மாறி இருப்பது நாங்குநேரி தான். திருநெல்வேலி மாவட்டத்தில் நாகர்கோவில் செல்லும் வழியில் நாங்குநேரி அமைந்துள்ளது.
வழக்கம்போல் கடந்த 9ம் தேதி காலை நேர சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை நாங்குநேரி அமைதிப்பூங்காவாக தான் இருந்தது.
மக்கள் அனைவரும் தங்களின் பணிகளுக்கும் சென்று வந்தனர்.
புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி! ஜான்சன்ஸ் நிறுவனத்தின் ஊசி மருந்துக்கு அமெரிக்காவில் அனுமதி
kamadenu.hindutami: இரத்த புற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருந்து ஒன்றை ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் கண்டுபிடித்திருப்பதாகவும்,
அதற்கு அமெரிக்கா சார்பில் அங்கீகாரமும், அனுமதியும் கிட்டியிருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
உடலைப் பாதிக்கும் தீரா நோய்களில், மனிதர்களை அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக புற்றுநோய் இருந்து வருகிறது.
அந்த புற்று ரகங்களில் மிகவும் கொடிது இரத்தப்புற்று. உடலின் அவயங்கள் எதிலேனும் புற்றுநோய் அதன் ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காணப்பட்டால், முழுவதுமாக குணப்படுத்தும் வகையில் நவீன மருத்துவமும் மருந்துகளும் முன்னேற்றம் கண்டுள்ளன.