சனி, 28 டிசம்பர், 2019

தமிழக அகதி முகாம்களில் வசிக்கும் மலையக தமிழர்களின் .... கௌரவ முருகன் சிவலிங்கம் அறிக்கை

Murugan Sivalingam : தமிழக அகதி முகாம்களில் வசிக்கும் மலையக அகதிகள்
மூவர் ¸ 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கை அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நான் எழுதிய கடிதத்தை எனது இணையத்தளத்தில் வாசித்து விட்டு என்னோடு தொடர்பு கொண்டுள்ளார்கள். அவர்களில் பலரின் விருப்பங்கள் தமிழகத்திலேயே குடியுரிமை பெற விரும்புவதாகவும் இலங்கை குடியுரிமை பெற விரும்புபவர்களை இந்திய அரசே அறிந்து ஆவண செய்ய வேண்டும் என்பதும் அத்துடன் வடக்கு கிழக்கு அரசியல் தலைவர்கள் தமிழகம் வந்து சென்றுள்ளதாகவும் மலையக மக்கள் பற்றி மலையகத் தலைவர்கள் இவ்விவகாரம் பற்றி பேச வருவார்களா என்றும் கேட்டுள்ளார்கள். மலையக மக்களின் மேல் அக்கறை உள்ளவர்கள் அன்று எழுதிய கீழ்காணும் எனது கடிதத்தை வாசிக்கலாம்.ஓர் அகதி இன்று எழுதிய கடிதத்தை அடுத்து முகநூலில் பதி விடுவேன்....
''தமிழகத்தில் 28500 மலையக அகதிகள்
Hon. Members of Parliament
அவசர வேண்டுகோள்.
தமிழகத்தில் வாழும் மலையக அகதிகளுக்கு இலங்கை குடியுரிமை வழங்கும் சட்டமூலமும் சம்பந்தப்பட்ட மக்களின் விருப்பமறிதலும்..
Bill on granting Sri Lankan citizenship to Indian origin Tamil refugees in Tamil Nadu refugee camps..
இலங்கை நாடாளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் முன் வைக்கும், தமிழகத்தில் தங்கியுள்ள 28,500 அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பிரேரணையின் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த பிரேரணையின் சட்ட மூலம் நல்ல நோக்கத்தின் பெயரில் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்படலாம்.. அல்லது வாத பிரதி வாதங்களுக்குள்ளாகலாம்.
இன்று, வட கிழக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் கடந்த 30 ஆண்டுகளாக இந்திய அரசின் உதவியுடன் வாழ்ந்து வருவது பலரும் அறிந்த விடயமாகும்.;

இந்தியா வர விருப்பம் இல்லை- நித்யானந்தாவின் பெண் சீடர்கள் பிடிவாதம்

இந்தியா வர விருப்பம் இல்லை- நித்யானந்தாவின் பெண் சீடர்கள் பிடிவாதம்மாலைமலர் : தந்தையால் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதால் இந்தியாவுக்கு வர விருப்பம் இல்லை என்று நித்யானந்தாவின் பெண் சீடர்கள் கூறியுள்ளனர். அகமதாபாத்: பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தனது 2 மகள்களை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் கடத்தி சிறை வைத்து இருப்பதாக போலீசில் புகார் செய்தார்.
விசாரணையில் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் இருவரும் நித்யானந்தாவின் சீடர்களாக மாறியது தெரிய வந்தது. மேலும் அந்த இரு பெண்களும் சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டனர்.
அதில், ‘எங்களை யாரும் கடத்தவில்லை. எங்கள் தந்தையால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது’ என கூறி இருந்தனர். இதற்கிடையே கடத்தல் வழக்கில் நித்யானந்தா வெளிநாடு தப்பிச்சென்ற போது ஜனார்த்தன சர்மாவின் மகள்களையும் அவருடன் அழைத்து சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இந்த நிலையில் தனது மகள்களை மீட்டுத்தருமாறு ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு குஜராத் ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கைதிகளால் பண மழையில் நனையும் தமிழக சிறைச்சாலை அதிகாரிகள்!

prison officers in tamilnaduprison officers in tamilnaduprison officers in tamilnadunakkheeran.in - ஜெ.டி.ஆர் : தமிழக அரசியல்வாதிகள் டெண்டர்களில் கமிஷன் வாங்கி பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் எங்கள் சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளை கொடுக்காமல் கொடுத்தாக கணக்கு காட்டி கைதியையும், அரசாங்கத்தையும் ஏமாற்றுகிறார்கள். இது குறித்து இது வரை எந்த செய்தியும் வெளிவந்ததே இல்லை என்று சில கைதிகளும், சிறைத்துறையில் உள்ள சில அதிகாரிகளும் நம்மிடம் பேசினர், தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், பெண்களுக்கான 5 தனிச்சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 88 ஆண்களுக்கான கிளைச் சிறைகள், 8 பெண்கள் கிளைச் சிறைகள், ஆண்களுக்கான 2 தனி கிளைச் சிறைகள், 12 பார்ஸ்டல் பள்ளி, 3 திறந்தவெளிச் சிறை என மொத்தம் 138 சிறைகள் இருக்கிறது. இவற்றில் 22,332 கைதிகளை அடைக்க இடவசதி உள்ளது.
அவர்கள் நம்மிடம் பேசினதை அப்படியே தருகிறோம்…

நைஜீரியாவில் மீண்டும் தலைகள் துண்டிக்கப்படும் வீடியோ- வெளியிட்டது ஐஎஸ் ஆதரவு அமைப்பு


veerakesari : நைஜீரியாவில் 11 கிறிஸ்தவர்களை தலையை துண்டித்து படுகொலைசெய்துள்ளதாக ஐஎஸ் ஆதரவு அமைப்பொன்று அறிவித்துள்ளதுடன் இது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. கடந்த ஒக்டோபரில் தங்கள் தலைவர் அபு பக்கர் அல்பக்தாதி கொல்லப்பட்டமைக்கு பழிவாங்குவதற்காகவே இதனை செய்துள்ளதாக ஐஎஸ் ஆதரவு அமைப்பான ஐஎஸ்டபில்யூஏபீ தெரிவித்துள்ளது.
நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் கைதுசெய்யப்பட்டவர்களையே தலையைதுண்டித்து படுகொலைசெய்துள்ளாக ஐஎஸ் ஆதரவு அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட வீடியோவில் 11 பேர் வரிசையாக நிற்பதை காணமுடிகின்றது. முதலில் ஒருவர் சுட்டுக்கொல்லப்படுவதையும் பின்னர் ஏனையவர்களின் தலைகள் துண்டிக்கப்படுவதையும் காணமுடிகின்றது. இதன் பின்னர் அந்த வீடியோவில் தோன்றும் முகமூடியணிந்த நபர் ஒருவர் ஐஎஸ்தலைவர் கொல்லப்பட்டமைக்கு பழிவாங்குவதற்காகவே இவர்கள் கொல்லப்பட்டனர் என குறிப்பிடுகின்றார்.

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் : 10,000 மாணவர்கள் மீது வழக்கா?

 சிஏஏ எதிர்ப்பு போராட்டம் : 10,000 மாணவர்கள் மீது வழக்கா?மின்னம்பலம் : குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் 10,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், 1000 பேர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்திருப்பதாகக் காவல் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக நாடு முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது. தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் டெல்லி, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதுடன் தொலைபேசி சேவைகளும், இணையதள சேவைகளும் முடக்கப்பட்டன.
சிஏஏவுக்கு எதிராக அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைக் காட்டிலும் பல்கலை மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவு போராடி வருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேரணி ... வீடியோ

மாலைமலர் : குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் தலைமையில் பேரணி நடைபெற்றது. அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். ஆலந்தூர்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
குடியுரிமை திருத்த மசோதா, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் மாளிகையை நோக்கி இன்று பேரணி செல்லப்போவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அறிவித்து இருந்தது.
அதன்படி ஆலந்தூர் கோர்ட்டு அருகே அந்த அமைப்பின் நிர்வாகிகள், தொண்டர்கள் காலையில் இருந்தே குவிந்தனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் வந்து இருந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் சம்சுல்லுகா தலைமையில் ஆலந்தூர் கோர்ட்டு அருகே இருந்து பேரணி புறப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி நடத்தப்பட்ட இந்த பேரணி மிகவும் பிரமாண்டமாக இருந்தது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும் பங்கேற்றனர்.

நீதியரசர்..மோகன் அவர்களுக்கு வீரவனக்கம் .... நீதித்துறையில் ஒரு திராவிட விதை


Karuna Skp : திராவிட வித்தான நீதியரசர்..மோகன் அவர்களுக்கு வீரவணக்கம்!!!
இந்த மோகன் ரொம்ப வருத்தம் தேரிவிச்சேன்னு உன் அம்மாவிடம் போய்
சொல்லு!.....
நிஜமான சாதனையாளர்கள், பெரும் ஆளுமைகள் பலருடன் ஒரு நாள், ஒரு கணமேனும் பார்த்துப் பழக வாய்க்கப் பெற்ற பெருவாழ்வு எனது.
ராஜீவ் படுகொலையின் போது அன்று இரவே அந்தக் கொலைப்பழி திமுக மீது போடப்பட்டு, அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தில் வன்முறைக்கான
கதவு கேள்வி கேட்பாரேயின்றி திறந்துவிடப் பட்டதை 90களுக்குப் பின் பிறந்தவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அது குஜராத் மாடலுக்கான மினி முன்னோட்டம்.
திமுகவினர் வீடுகள், தொழில்கள் என தேடி தேடி அழிக்கப்பட்டன. பற்றியெரியும் தீயை அணைக்ககூட தீயணைப்பு வண்டி வரவில்லை. அப்படிதான் வெளியூரில்
நிறுத்தப்பட்டிருந்த எங்களது பேருந்து ஒன்று முழுவதுமாக தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அது எங்கள் தொழிலுக்கு பெரிய பின்னடைவும், மன வேதனையையும் அளித்தச் சம்பவம்.
பின்னாளில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பின்பு, அந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும்

திமுகவின் ராஜதந்திரம் பாய்ச்சல் வேகத்தில் .... பேரணி தடையும் அதை முறியடித்த வியுகமும் ...

tamil.oneindia.com - ArsathKan ; சென்னை: குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக நடத்திய பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் ஸ்டாலின்.
அரசியலில் கருணாநிதிக்கு இணையாக மதிநுட்பத்துடனும், ராஜதந்திரத்துடனும் யாராலும் காய்களை நகர்த்த முடியாது எனக் கூறப்பட்ட நிலையில் அவரிடம் கற்ற ராஜதந்திரத்தை ஸ்டாலின் இப்போது பயன்படுத்தியுள்ளார்.
பேரணிக்கு தடைகோரி வாராஹி என்பவர் தொடர்ந்த வழக்கில் திமுக வழக்கறிஞர்கள் யாரையும் ஆஜராக்காமலேயே அதில் வெற்றி கண்டு நினைத்ததை நடத்தி முடித்துவிட்டார் ஸ்டாலின்.
 ஐகோர்ட்டில் வழக்கு.... குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் திமுக இன்று பேரணி நடத்தியுள்ள நிலையில், அதற்கு தடைகோரி வாராஹி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மாலை அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் வன்முறை வெடிக்க வாய்ப்பிருப்பதால் திமுக பேரணிக்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.இந்நிலையில் இது தொடர்பாக கேட்கப்பட்ட விளக்கத்திற்கு திமுக பேரணிக்கு காவல்துறை அனுமதிதரவில்லை என தெரிவிக்கப்பட்டதுடன், வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தேவையில்லை எனவும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

ஜனவரி 16ஆம் தேதி மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் ..மோடியின் பேச்சை கேட்கவேண்டுமாம்

 வெப்துனியா : ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விடுமுறை என்பது ஜனவரி
14ம் தேதி போகிப்பண்டிகை, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள், ஜனவரி 17ம் தேதி திருவள்ளுவர் தினம் என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவது வழக்கமான ஒன்று
அதேபோல் வரும் 2020ஆம் ஆண்டும்
ஜனவரி 14 ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை பொங்கல் விடுமுறையாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திடீரென ஜனவரி 16 ஆம் தேதி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகிஉள்ளது.>ஜனவரி 16 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் உரையாற்ற இருப்பதால் அந்த உரையை கேட்க ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் என்றும்,

பார்படோஸில் நித்யானந்தா,, புதிய திருப்பம்! Nithyananda in Barbados Complainant's daughters' affidavits confirm their location

https://www.republicworld.com/india-news/general-news/nithyananda-in-barbados-complainants-daughters-affidavits-confirm-t.htmlNithyananda in Barbados Complainant's daughters' affidavits confirm their location
n another hearing of the habeas corpus matter of the self-styled Godman Nithyananda, two affidavits were filed in the Gujarat High Court by the legal team representing the corpuses claiming that the girls (daughters of the complainant Janardhan Sharma ) do not want to come to India since they ‘fear for their lives’. Both affidavits were also notarised and attested in Barbados – which proved that the girls – Lopa Mudra and Nithyananditha were in Barbados. பார்படோஸில் நித்யானந்தா?: வழக்கில் புதிய திருப்பம்!மின்னம்பலம் : நித்யானந்தா தனது இரண்டு மகள்களைச் சட்டவிரோதமாக ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பதாக ஜனார்த்தனன் சர்மா தொடர்ந்த வழக்கில், சம்பந்தப்பட்ட இரு பெண்களும் இந்தியத் தூதரகத்தில் ஆஜராகக் குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமத்தில் தங்களது இரு பிள்ளைகளைச் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாக ஜனார்த்தனன் சர்மா என்பவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது இரு மகள்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இதுதொடர்பான, வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பது இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

டெல்லியில் கடும் குளிர் - 2.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு .. வீடியோ


தினத்தநதி  : புதுடெல்லி,டெல்லியில், நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் ஆகும். இந்த 4 மாதங்களும் கடும் குளிர் மக்களை நடுங்கவைத்து விடும்.
கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. டெல்லியில் நேற்று அதிகாலை 6.30 மணிக்கு முக்கிய பகுதியான சப்தர்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 4.2 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. பகல் நேரத்தில் அதிகபட்சமாக 12 முதல் 13 டிகிரிவரை வெப்பநிலை இருந்தது. இதே பகல் நேரத்தில் நேற்று சென்னையின் வெப்பநிலை 28 டிகிரியாகவும், ஊட்டியின் வெப்பநிலை 17 டிகிரியாகவும் இருந்தது. கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி குடும்பத்தின் கறுப்பு பணத்தை உலகெங்கும் தேடும் வருமான வரி துறை?

 https://keralakaumudi.com/en/news/news.php?id=155364&u=income-tax-dept-issues-notice-to-ambani-family-under-black-money-act-asks-to-reveal-foreign-assets
Income tax dept issues notice to Ambani family under black money act, asks to reveal foreign assets.. MUMBAI: The Income Tax department has apparently issued a notice to Reliance Industries Chairman Mukesh Ambani and his family under provisions of the 2015 Black money act. As per reports, the IT department has asked Ambani to reveal about the family's undisclosed assets in the HSBC bank in Geneva. 
Subaguna Rajan :  காலையில் முகேஷ் அம்பானி கருப்புப் பணத்தை வருமான வரித்துறை உலகெங்கும் துரத்துகிறது என்ற செய்தியை வாசித்ததும்
ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் உண்டானது.
என்ன நடக்கிறது இந்தியாவில்?
இது போன்ற பெரும்புள்ளிகளிற்கெதிரான வருமான வரி தேடல் நம் கவனத்திற்குரியது. இப்போதே அவசரப்பட்டு சில அவதானங்களைச் செய்வது முறையில்லைதான். ஆனால் மகிழ்ச்சி சில வார்த்தைகளைப் பேச வைக்கிறது.
மோடி / ஷா பாணி அரசியலில் குஜராத் காலத்திலிருந்து “ பிளாக் மெயில் “ ஒரு முக்கியமான காரணி. குஜராத் உள்துறை அமைச்சராக அமீத் ஷா செய்த சாகசங்கள் அவரது வீழ்ச்சிக்கு பின் சுவராஸ்யமான நூலாகும் வாய்ப்புகள் அதிகம். அவர்களது ‘சொந்த நிறுவனமாக ‘ கருதப்படும் அதானி குழும்மும் , அம்பானி குழுமமும் மோதுகிறதோ என்ற எண்ணம்தான் தோன்றுகிறது.
அம்பானியின் ஆகப் பெரிய பலம் பெட்ரோலியம். சமீபத்தில் சவுதியின் மிகப் பெரிய நிறுவனத்தோடு மிகப் பெரிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு நிறுவனமான பி பி சி எல் ஐ யார் வாங்கப் போவது என்ற பேச்சு பரபரப்பாய் உள்ளது ( ப சிதம்பரம் அவர்களே ஒரு பேட்டியில் சொன்னார் ) . இந்த நடவடிக்கைக்கும் அதற்குமான தொடர்பு உள்ளதா?
அமீத் எதையும் செய்யத் தயங்காதவர். அதானி குழுமத்தை முதன்மையாக்குவதன் மூலம் ‘இந்தியாவை ‘ தங்களது விருப்பப்படி ஆட்டிப் படைக்கும் ஆவல் அவரிடம் இருப்பது ஆச்சர்யமில்லை.

இந்தியாவிலேயே முதன்முதல் ஈரல் மாற்று சிகிச்சை ... சாதனை வரலாறு .. ஸ்டான்லி மருத்துவ மனை ..

  டாக்டர் ஆர். சுரேந்திரன்:  1995ல் நான் ஸ்டான்லி மருத்துவமனைக்கு
மாற்றப்பட்டேன். அங்கு, ஈரல்
மாற்று பிரிவை தொடங்க விரும்புவதை சொன்னபோது எனது சகாக்கள் ஜோக் என்றே நினைத்தார்கள்.
இதற்கு நிறைய செலவாகும் என்றார்கள். அப்போது வடசென்னை எம்.பி. குப்புசாமியின் மனைவிக்கு உணவுக்குழாயில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு அறுவைச்சிகிச்சை செய்தேன். அவர், தனது தொகுதி வளர்ச்சி நிதியை ஈரல் மாற்று துறைக்குகொடுத்தார். ஆனால், அந்த நிதியும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது. நானும் எனது நண்பர்களும் ஒவ்வொரு இடமாக ஓடியும் பலனில்லை.
இதையடுத்து அதிகமாக உயிரிழப்பு ஏற்படும் இரைப்பை குடல் இயல் பிரிவைதொடங்கி, அதில் ஈரல் மற்றும் கணையம் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதுஎன்று முடிவெடுத்தோம். அதிகமாக உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் ஒரு வார்டை சிரமப்பட்டு பெற்றோம். அந்தத் துறைக்கென்று நர்சுகள் இல்லை. அதற்குப் பதிலாக ஒப்பந்த அடிப்படையில் நர்சுகளை எடுக்கும்படி கூறினார். உடனே, நர்சுகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தை தொடங்கியது. இதில் தனியார் மருத்துவமனை ஆதரவாளர்களும் இருந்தார்கள்.

இலங்கையில் தமிழில் தேசியகீதம் பாடப்படும் .. அமைச்சர் டலஸ் அழகபெருமா விளக்கம்

தேசிய கீதம் தமிழில் பாடமுடியாது என அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. டலஸ் அழகப்பெரும சுதந்திர தின நிகழ்வில் தேசியகீதம் இசைக்கப்படும்போது தமிழ் மொழி புறக்கணிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் தவறானது என கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
73வது சுதந்திர நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை இசைப்பதற்கும், தமிழ் மொழியை புறக்கணிப்பதற்கும் அரசாங்கம் இதுவரையில் எவ்விதமான உத்தியோகப்பூர்வ தீர்மானங்களையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசாங்கம் அனைத்து செயற்பாடுகளிலும் அனைத்து இன மக்களையும் இணைத்தே பயணிக்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம் பெற்றவுள்ள சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தியும், அதனை தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள மாறுப்பட்ட கருத்துக்கள் ஏற்பட்டமை தொடர்பிலும் தெளிவுப்படுத்தலை ஏற்படுத்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெறியாளர் செந்தில் ..பாஜக ராகவன் மோதல் .. கதாகாலாட்சேபம் என்பது தீய சொல்லா? வீடியோ


நீ சொல்றதெல்லாம் அம்புலி மாமா கதைன்னா கோபம் வரும்தானே?
காலம் காலமாக வெறும் அம்புலி மாமா கதைகளையே உண்மையாக நடந்த வரலாறுகள் புராணங்கள் கதாகாலட்சேபங்கள் என்று உள்ட்டா விட்டுகொண்டிருந்தார்கள்.
அதையெல்லாம் மக்கள் எல்லோரும் நம்புகிறார்கள் என்ற அவர்களின் நம்ம்பிக்கையை எல்லா பக்கங்களில் இருந்தும் பலர் இப்போது அசைத்து கொண்டிருக்கிறார்கள் இதை எண்ணி ஏற்கனவே கலங்கிபோயிருக்கும் அவாளுக்குக் நீங்க வாயை திறந்தாலே எல்லாம் அம்புலி மாமா கதைதான் என்று நேருக்கு நேர் கேட்க நேர்ந்தால் .. அது எவ்வளவு அதிர்ச்சி?
சும்மா கதை விடுறாங்க சார் என்று கூறுவது போல .. கதா காலட்சேபம் என்பது பச்சை பொய் உரையென்பது அவர்கள் அறிவார்கள் ..
இந்த உண்மை மக்களுக்கு புரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள் ஏனெனில் அதுதானே அவர்களின் மூலதனம். .. தோழர் செந்தில் அதை படாரென போட்டு உடைந்து விட்டாரே ... அதுவும் எவ்வளவு சாதரணமாக கூறிவிட்டார் ?
தங்களின் பேச்சுக்களை இவர்கள் நம்புவதில்லை .. அவற்றை வெறும் கட்டு கதைகள் என்றே கருதுகிறார்கள் என்பதை ராகவன் எதிர்பார்க்கவில்லை . ராகவன் வேண்டுமென்றே தொலைக்காட்சி விவாதம் நடத்திய திரு செந்திலை மிரட்ட வில்லை , தாளாத ஒரு கோபம் .அதை அடக்க முடியாமல் அடக்கி கொண்டு சீறுகிறார் ..

வெள்ளி, 27 டிசம்பர், 2019

CAA: உத்தரப்பிரதேசத்தில் 21 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் - தொடரும் போராட்டங்கள்


BBC : குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதை அடுத்து, உத்தரப் பிரதேசத்தின் 21 மாவட்டங்களில் அம்மாநில அரசு இணைய சேவையை முடக்கியுள்ளது. உத்தர பிரதேசத்தின் 21 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) நாள்முழுவதும் இணைய சேவை முடக்கம் நீடிக்கும் என்று அம்மாநில காவல்துறை இயக்குநர் ஓ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
"மாநிலம் முழுவதும் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இணைய சேவை முடக்கப்பட்டுள்ள 21 மாவட்டங்கள் விரைவில் நிலைமை சீராகும்" என்று ஓ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்தன. எனினும், உத்தர பிரதேசத்தில்தான் ஒப்பீட்டளவில் அதிகளவிலான வன்முறை சம்பவங்கள் பதிவாகின.
எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்? குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் இதுவரை நடந்துள்ள போராட்டங்களின்போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 - 16 உயிரிழந்து இருக்கலாம் என்று அம்மாநிலத்தின் உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்? சின்மயி எச் ராஜா கோஷ்டி எதிர்ப்பு அரசியல்

Samayam Tamil :; கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று எஸ்.ஆர். எம். பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. வைரமுத்துவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பட்டம் அளிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதை பார்த்தவர்கள் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த ஒருவருக்கு மத்திய அமைச்சர் கையால் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதா என்று கூறி  சின்மயி போன்றவரக்ள்  எதிர்த்தார்கள்.
வேண்டாம் ராஜ்நாத் சிங் வைரமுத்து பாலியல் புகார்களில் சிக்கியவர், இந்து கடவுளை அவமதித்தவர். தயவு செய்து அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று எச் ராஜாவும் சின்மயியும்   ராஜ்நாத் சிங்கிற்கு சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்தனர்.
 இதனால்  பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று ராஜ்நாத் சிங் தற்போது தெரிவித்துள்ளாராம்.
 பட்டமளிப்பு விழா ராஜ்நாத் சிங் வராவிட்டாலும் பட்டமளிப்பு விழா குறிப்பிட்ட தேதியில் வேறு சிறப்பு விருந்தினருடன் நடக்க உள்ளதாம். ஆனால் அந்த விழாவில் வைரமுத்துவுக்கு பட்டம் அளிக்கப்படுமா, இல்லையா என்பது தெரியவில்லை.

போராட்டத்தில் கலந்துகொண்ட 74 வயது நோர்வே பயணி வெளியேற உத்தரவு...


நக்கீரன் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஜமிலியா பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சட்டத்திற்கு எதிராக போராடியபின் போலீஸார் அவர்களை தாக்கினார்கள். இதனால் இந்தியா முழுவதும் கண்டன குரல்கள் வலுவானது. இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் இந்த சட்டத்திற்கு எதிராக போராட தொடங்கினார்கள்.அந்த வகையில் சென்னை ஐஐடியில் பயிலும் மாணவர்கள் சிஏஏ-வுக்கு எதிராக போராடினார்கள். அப்போது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் என்ற மாணவரும் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டார்.
அவர் கையில் வைத்திருந்த பதாகையில் ”அன்று நாங்கள் அங்கிருந்தோம்” ( “1933 to 1945; We Have Been There”) என நாஜி ஆட்சியை குறிக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது.
இதன் பின் அவர் விசா நெறிமுறையை மீறி செயல்பட்டதற்காக மீண்டும் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டார். இதேபோல கேரளாவில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட 74 வயது நார்வேவை சேர்ந்த பெண் சுற்றுலா பயணியையும் அவருடைய சொந்த நாட்டிற்கு செல்லுமாறு ஃபாரீன் ரீஜினல் ரெஜிஸ்ட்ரேசன் அறிவித்துள்ளது

வாக்குப் பெட்டி எரிப்பு, கடத்தல்: உக்கிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்!

வாக்குப் பெட்டி எரிப்பு, கடத்தல்: உக்கிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்!மின்னம்பலம் : முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 5 மணியோடு நிறைவடைந்தது.
ஊரகப் பகுதிகளுக்கான முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு இன்று (டிசம்பர் 27) காலை 7 மணிக்குத் துவங்கியது. வாக்குப் பதிவு ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே பல வாக்குச் சாவடிகளில் வாக்குச் சீட்டு தொடர்பாக குழப்பங்கள் எழுந்தன. அந்த இடங்களில் சிறிது நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடரப்பட்டது. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு நேரம் முடிந்தாலும் வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் மூடி சீல் வைக்கப்பட்டன. பிறகு அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகேயுள்ள பாப்பரம்பாக்கம் வாக்குச் சாவடி மையத்தில் ஏற்பட்ட தகராறில் வாக்குப் பெட்டியை வெளியே எடுத்துவந்த சில நபர்கள், அதற்கு தீவைத்து விட்டு தப்பியோடினர். இதனால் பாப்பரம்பாக்கம் வாக்குச் சாவடி அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருவள்ளூர் ஆட்சியர், “பாப்பரம்பாக்கம் பகுதியில் வாக்குப் பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டதால் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும்” என்று கூறினார்.

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்தது போக்சோ கோர்ட்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்தது போக்சோ கோர்ட்மாலைமலர் : கோவை அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடையில் 7 வயது சிறுமி, கடந்த மார்ச் மாதம் அவரது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு, அவர்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்குமார் மீதான குற்றம் நிரூபணமானதால், அவர் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

BBC : 1000 ஆண்டுகள் பழமையான மாயன் நாகரீக காலத்து மாளிகை கண்டுப்ப்டிப்பு


மெக்சிகோவில் 1000 ஆண்டுகள் பழமையான, மாயன் நாகரிகத்தை சேர்ந்த பழம்பெரும் மாளிகை ஒன்றின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். யுகாடன் மாகாணத்தில் உள்ள குலுபா என்ற பழமையான நகரத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது. மாளிகை என்று கருதப்படும் அக்கட்டடம் 20 அடி உயரமும், 55 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்டிருந்தது மாயன் நாகரீகத்தை சேர்ந்த மாளிகை ஒன்றின் இடிபாடுகள் ஸ்பெயின் இப்பிராந்தியத்தை கைப்பற்றும் முன்புவரை அங்கு மாயன் நாகரிகமே இருந்து வந்தது.
அந்த காலத்தில் மாயன்கள் தற்போது இருக்கும் குவாடமாலா, தென் மெக்சிகோ, பெலிஸ் மற்றும் ஹோண்டூரஸ் ஆகியவற்றின் பெரும் பகுதிகளை ஆண்டுவந்தனர்

பிபின் ராவத் கருத்து: பாகிஸ்தான் வழியில் இந்தியாவா?

பிபின் ராவத் கருத்து: பாகிஸ்தான் வழியில் இந்தியாவா?மின்னம்பலம் : ராணுவத் தளபதி பிபின் ராவத்தின் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள் எனப் பல தரப்பினரும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத், “குடியுரிமை திருத்தச்சட்ட விவகாரத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இதனைச் செய்பவர்கள் சரியான தலைவர்கள் அல்ல” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
ராணுவத் தளபதி ஒருவர் அரசியல் கருத்து கூறுவது இதுதான் முதல் முறை என்ற நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், பிபின் ராவத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

கஜகஸ்தானில் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து விபத்து

கஜகஸ்தானில் 100 பயணிகளுடன்  சென்ற விமானம் விழுந்து விபத்து தினத்தந்தி :  கஜகஸ்தான் நாட்டில் 100 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
அல்மாத்தி, மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தானில் உள்ள அல்மத்தி நகரில் இருந்து தலைநகர் நுர்சுல்தன் நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 95 பயணிகள் 5 விமான சிப்பந்திகள் என மொத்தம் 100 பேர் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான நிலையம் அருகே இருந்த 2 மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் போதிய உயரத்தை எட்ட முடியாததே கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதற்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை தேசிய கீதம்: தமிழில் பாட தடை: – விரிவான தகவல்கள் ... வீடியோ


BBC : இலங்கையின் தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை பிபிசி தமிழுக்கு தெரிவித்தார நாட்டின் தேசிய கீதம் என்பது ஒன்று எனவும், அது இரண்டாக பிளவுபடுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால், இரண்டு இனங்கள் என்ற பொருளை வெளிப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினத்தவர்களும் ஒரே இனம் என்ற அடிப்படையிலேயே தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய கீதத்தை இரண்டு தடவைகள் பாடுவதிலேயே நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என அவர் கூறினார்.
இந்தியாவிலும் ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதை அவர் இதன்போது நினைவூட்டினார். அரசியல்வாதிகள் கண்டனம் தேசிய கீதத்தைத் தமிழ் மொழியில் பாட முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை வன்மையாகக் கண்டிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமலிங்கம் சந்திரசேகரன் இதனை பிபிபி தமிழுக்கு கூறினார்.

HERO உங்கள் குழந்தைகளின் ரஃப் நோட்டைப் பார்த்திருக்கிறீர்களா ?”

வெந்து தணிந்தது காடு : “மார்க் ஷீட்,மற்ற நோட்டுப் புத்தகங்களைப் பார்த்திருக்கும் நீங்கள் என்றாவது உங்கள் குழந்தைகளின் ரஃப் நோட்டைப் பார்த்திருக்கிறீர்களா ?”
ஹீரோ படம் பார்த்த அனைவரையும் யோசிக்க வைத்த வசனம் இது தான்!
எனக்கு இந்தப் படம் பிடித்ததற்கு இரு காரணங்கள் உண்டு..
முதலாவது மது அருந்துவது,புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்கிற அறிவிப்பு எங்கும் காண்பிக்கப் படாதது...
இரண்டாவது ,இன்றைய கல்வி முறை என்ற
ஒரு வித்தியாசமான கருவை யோசித்தது..

குடும்பத்துடன் குறிப்பாகக் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம்..
சூப்பர் ஹீரோ இலட்சியத்துடன் வளரும் குழந்தைகள் எப்படி சுயநலவாதிகளாக மாறுகிறார்கள்?
எப்படி வேலைக்குச் செல்பவர்கள் தினமும் வீடு திரும்பி மறுநாள் வேலைக்கு ஆயத்தமாகி இந்த வலைக்குள் மீள முடியாதபடி சிக்கிக் கொள்கிறார்கள் ...
சுயமாக சிந்திப்பவனே சூப்பர் ஹீரோ...

542 இடங்களில் நடைபெற்ற தேர்தல்களில் 347 தொகுதிகளில் மோசடி..

மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆனபிறகு..? இந்த குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்குமா..? என்றெல்லாம் உங்கள் மனம் வினவுகிறதா..? நெருப்பில்லாமல் புகையாதே..! பனிமூட்டம் கூட புகை போல் தான் தெரியும் என்று கலைஞர் வசனத்தையே காவிகள் துணைக்கு அழைக்கலாம்..! ஆனால் உண்மையின் மறுபக்கம் மிகவும் அருவருப்பானது மட்டுமல்ல, மக்களாட்சி அமைப்புக்கு ஆபத்தானதும் கூட..! இதை நாம் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்வோம்...!
2019 இன் பாராளுமன்ற தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடத்தப்பட்டுதான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது பாஜக என்பதை தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் அறிந்த பிறகும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அது பற்றி பேசாமல் தவிர்ப்பது பாசிச பாஜகவின் தேர்தல் முறைகேட்டை அங்கீகரிப்பதாகவே பொருள்.
சுமார் 70 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையில் வாக்குப்பதிவை பெற்றுள்ளனர் . இவர்களுக்கு எதிராக தோல்வி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களின் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையை காட்டுகின்றன. அதுமட்டுமின்றி பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே கணிசமான வேறுபாடு காணப்பட்டது. தேர்தல் முடிவுகள் அச்சு ஊடகங்களில் வெளிவந்த போது இந்த குறைகள் வெளிப்படையாக கவனிக்கப் பட்டது.
இது குறித்து Quint என்னும் பத்திரிகை தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியதுடன் புகார் மனுவையும் அனுப்பி இருந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட காவி ஆதரவு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப் பூர்வ பக்கத்தில் வெளியிட்ட வாக்கு விபரங்களை முழுவதுமாக அழித்து விட்டனர். இதுவரை நடந்த எல்லாத் தேர்தல்களிலும் கட்சிகள், வேட்பாளர்கள் பெற்ற வாக்குத் தரவுகள் இருக்க 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மட்டும் வாக்கு விபரங்கள் இல்லாமல் காணப்படுகிறது.
திருடர்கள் களவாடும் தருணங்களில் தங்களை அறியாமல் சில ஆதாரங்களை விட்டுச் செல்வதைப் போன்று ஓட்டு இயந்திரத்தில் செய்யப்பட்ட பல தில்லுமுல்லுகள் மனித மூளைகளிடம் தற்போது சிக்கியதை தொடர்ந்து இந்த தரவுகளை அழிக்கும் வேலையில் அதிகாரிகள் ஈடுபட்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லி சிக்கியிருக்கிறார்கள். 'ஓரு சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை தவறுதலாக நடந்திருக்கலாம் என அறிவித்ததோடு மற்ற தரவுகளை தேர்தல் ஆணையம் அழித்து விட்டது.

பாஜகவிடம் வசமாக சிக்கிய சசிகலா... ரகசியத்தை கூறிய கிருஷ்ணப்ரியா... அன்றே போட்டுடைத்த நக்கீரன்

nakkheeran

sasikalanakkheeran.in - தாமோதரன் பிரகாஷ் : பணமதிப்பிழப்பு நேரத்தில் தொழிலதிபர்களை மிரட்டி சசிகலா 1674 கோடியே 50 லட்சத்துக்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார் என விவரமாக வருமானவரித்துறை தாக்கல் செய்த அறிக்கை சசிகலா குடும்பத்தில் மிகப் பெரிய மோதலை உருவாக்கியுள்ளது. அதன் எதிரொலியாக மன்னார்குடி குடும்பத்தின் வாரிசு ஒன்று பா.ஜ.க.வில் சேர்வதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது என்கிறது மன்னார்குடி வட்டாரம்.
சசிகலாவின் பெயர், கணவர் நடராஜன் பெயருடன் இல்லை. அவரது தந்தை விவேகானந்தன் தாயார் கிருஷ்ணவேணி ஆகிய பெயர்களுடன் இணைந்து வி.கே.சசிகலா என்றுதான் சிறைச்சாலை பதிவுகளில் காணப்படுகிறது. தனது தாயின் பெயரை சேர்த்து ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் மின்சார ஷாக் அடித்து இறந்த ஜெயராமனின் மகளுக்கு சசிகலா சொல்லி ஜெ. வைத்த பெயர்தான் கிருஷ்ணப்ரியா.

வியாழன், 26 டிசம்பர், 2019

அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால் என்ஆர்சி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு

pramila-jayapalhindutamil.in :சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்க எம்.பி.க்கள் உடனான தனது சந்திப்பை ரத்து செய்தார். அமெரிக்க எம்.பி.க்கள் குழுவில்ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்தியவம்சாவளி எம்.பி. பிரமிளா ஜெயபால், பிறகு சேர்க்கப்பட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
சென்னையில் பிறந்த பிரமிளா ஜெயபால் (54) அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய – அமெரிக்க பெண் ஆவார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கும் அமெரிக்க எம்.பி.க்கள் சிலரில் பிரமிளாவும் ஒருவர்.
இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டில் பிரமிளாஜெயபால் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

மூடநம்பிக்கையில் குழந்தைகளைப் புதைத்த பெற்றோர்கள்... சூரிய கிரகணமாம்

 மூடநம்பிக்கையில் குழந்தைகளைப் புதைத்த பெற்றோர்கள்!மின்னம்பலம் : சூரிய கிரகணத்தின் போது, 10 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனர். மூட நம்பிக்கையால் இவ்வாறு செய்ததற்கு சமூக ஆர்வலர் உட்படப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அரிய வகை நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது இந்நிகழ்வு ஏற்படுகிறது. இன்று காலை 8 மணி தொடங்கி 11.20 வரை தோன்றியது. இதனை பொது மக்கள் சூரிய கண்ணாடி அணிந்து ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். ஒரு சில இடங்களில் மேகமூட்டம் இருந்ததால் அதைக் காண வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இச்சமயத்தில் சில நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டன. 8 மணிக்கு முன்பாக சாப்பிட வேண்டும். வெளியில் பயணம் செய்யக் கூடாது. இந்த இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனப் பல தகவல்களைப் பரப்பினர்.

CAA / NPR / NRC தொடரும் ஆபத்துகள்… சவுக்கு .ஆன்லைன்

savukkuonline.com: by Jeevanand Rajendran · 26/12/2019
நாடு முழுவதும் தேசியக்குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு (CAB) எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன.   பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்திலிருந்து வரும் மதத்தால் (முஸ்லீம் அல்லாத) ஒடுக்கப்பட்டவர்களுக்கு  குடியுரிமை கொடுப்பதே அந்த சட்டதிருத்தம்.   உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு தருணங்களில் தேசிய மக்கள் பதிவேட்டிற்கு (NRC) முதல் படி தான் CAB என்று கூறியிருக்கிறார் .   அதன் படி NRC வரும்பட்சத்தில் முறையான ஆவணங்கள் கொடுக்க முடியாத முஸ்லீம் அல்லாதவர்கள் CAB சட்டத்தின் மூலம் குடியுரிமை பெறவும், முஸ்லீம்கள் நாடற்றவர்களாக மாறுவதும் சாத்தியம் என்பதால் தான் இத்தனை போராட்டமும்.
போராட்டங்கள் கைவிடப்படாத நிலையில் மோடி அவர்கள் டிசம்பர் 22இல் ஆற்றிய உரையில் NRC என்ற வார்த்தையை கூட இதுவரை பிரயோகப்படுத்தியது இல்லை எனவும் இந்தியாவில் எந்த மூலையிலும் அகதி முகாம்கள் இல்லை எனவும் ஒரு பச்சை பொய்யை கூறினார்.

பாகிஸ்தானுக்கு போ.. இல்லாட்டி சுடுகாட்டுக்கு போ.. மிரட்டிய போலீஸ்..லக்னோ வயோதிபருக்கு நேர்ந்த கொடுமை


Hemavandhana - tamil.oneindia.com : .. என் மனைவி, பேத்திகளை ஒரு ரூமில் தள்ளி பூட்டிட்டு போய்ட்டாங்க.. நகை, பணத்தை எடுத்துட்டு போய்ட்டாங்க" என்று இஸ்லாமியர் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் நடந்து வருகிறது.. இதற்கான போராட்டங்களும் வலுத்து வருகின்றன. அப்படித்தான் போன வெள்ளிக்கிழமை உத்திரபிரதேசம் முசாபர் நகரில் போராட்டம் நடந்தது.. அந்த நகரில் உள்ள எல்லா இஸ்லாமியர்களும் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.. எல்லோரும் சேர்ந்து ஊர்வலமாக சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
போராட்டம் இந்த ஊர்வலத்தில் ஒருவர்தான் ஹாஜி ஹமித் ஹசன்.. இவருக்கு 73 வயதாகிறது.. பெரியவர் என்று நினைத்துவிட வேண்டாம்.. இந்த போராட்ட ஊர்வலத்தை முன்னின்று நடத்தியதே இவர்தான்.. அதுவும் எந்த வன்முறையும் இந்த ஊர்வலத்தில் நடந்துவிடக்கூடாது என்று கண்காணிக்கும் முக்கிய பொறுப்பை இவர்தான் அன்று கவனித்தார். ஊர்வலத்தை மிக அழகாக முன்னெடுத்து சென்றார்.
ஊர்வலமும் முடிந்து 2 நாள் ஆன நிலையில், போலீசார் ஹமித் வீட்டுக்கு வந்துவிட்டனர்.. வீட்டை சுற்றி முற்றுகையிட்டு விட்டனர். இதை பற்றி ஹமித் சொல்கிறார்: "நான் வயதில் மூத்தவன் என்பதால், அந்த ஊர்வலத்தில் வன்முறை எதுவும் நடக்காமல் தடுத்து, கண்காணித்தபடியே வந்தேன்.. என் பையனும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டான்.. இதை தவிர வேற எந்த தப்புமே நாங்கள் செய்யவில்லை.. ஆனாலும் போலீசார் என் வீட்டை சுற்றிவிட்டனர்.

ஆட்சியை ராணுவம் கைப்பற்றும் அபாயம்... காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் எச்சரிக்கை


Bipin_Rawat_-EPSதினமணி : வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமைப் பண்பு கிடையாது என்ற ராணுவத் தலைமை தளபதி விபின் ராவத்தின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ராணுவத் தலைமை தளபதி விபின் ராவத்,
"மக்களைத் தவறான திசையில் வழிநடத்துபவர்கள் தலைவர்கள் அல்ல. நிறைய பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை நாம் பார்க்கிறோம். நமது நகரங்களில் அவர்கள் ஒரு பெரும் கூட்டத்தை வன்முறையை கையில் எடுக்கும் வகையில் வழிநடத்துகின்றனர். இது தலைமைப் பண்பு கிடையாது" என்றார்.

ஜார்க்கன்ட் புதிய அரசு பதவி ஏற்பு ....ஸ்டாலினுக்கு JMM அழைப்பு ...அகில இந்திய கட்சியாகும் திமுக?

வெப்துனியா : சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில்  காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனை அடுத்து வரும் 29ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழாவுக்கு முக ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்வார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன ஏற்கனவே சமீபத்தில் சிவசேனா தலைமையிலான ஆட்சி மகாராஷ்டிர மாநிலத்தில் பதவியேற்ற போதும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பதும் அவரும் அந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் அகில இந்திய அளவில் முக ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மகாராஷ்டிராவில் 30 ஆயிரம் பெண்கள்:கருப்பைகளை நீக்கிய அதிர்ச்சி ... வேலைக்காக வீடியோ


வெப்துனியா : மகாராஷ்டிராவில் மாதவிடாய் பிரச்சனையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக 30 ஆயிரம் பெண்கள் கருப்பையை நீக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து காங்கிரஸ் பிரமுகர் நிதின் ராவத் என்பவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதமொன்றில் ’மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளில் மாதவிடாய் சுழற்சி காலங்களில் பணிக்கு செல்ல முடியாமல் இருப்பதால் 30 ஆயிரம் பெண்கள் கருப்பையை நீக்கி இருப்பதாகவும் குறிப்பாக மகாராஷ்டிராவில் உள்ள கரும்புத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள் தான் கருப்பையை நீக்கியவர்களில் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 மாதவிடாய் காலங்களில் விடுமுறை எடுத்தால் தங்களுக்கு சம்பளம் இழக்க நேரிடும் என்பதால் சம்பள இழப்பை தவிர்ப்பதற்காக 30 ஆயிரம் பெண்கள் தங்களுடைய கருப்பையை நீக்கியுள்ளதாகவும், இதுகுறித்து உடனடியாக முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண்களின் வாழ்வாதாரம் குறித்து சரியான திட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கீழ்வெண்மணி படுகொலையும் பார்ப்பனர்களின் பங்கும்

Nilavinian Manickam : கீழ்வெண்மணி படுகொலை மட்டும் ஒரு பார்ப்பனரால் நிகழ்த்தப்பட்டிருந்தால் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு 'திராவிடர்கள்' அதனையே பேசப்படு பொருளாகக் கொண்டிருந்திருப்பார்கள்.
அவர்களின் துரதிஷ்டம், கொன்றது கோபாலகிருஷ்ண நாயுடுவாகப் போய்விட்டான்.//

இப்படி ஒரு பதிவு ஏனென்று தெரியவில்லை யாரோ ஒரு “ திராவிட ஒவ்வாமையால்” பாதிக்கப்பட்ட so called கம்யூனிஸ்டால் எனக்கு திரும்பத்திரும்ப மீள்பதிவு என்று அனுப்பப் பட்டுக் கொண்டே உள்ளது.
அதில் அவர்களுக்கு ஒரு திருப்தி போலும்.
பரவாயில்லை ஏதோ பதிலை எதிர்பார்க்கின்றார்கள் போலத் தெரிகின்றது.
பொதுவாகவே அரைகுறை பிரசவங்களுக்கும், பிஞ்சில் பழுத்து வெம்பியதுகளுக்கும், திருவிழாக்களில் விருந்தாளிகளுக்குப் பிறந்தற்கெல்லாம் நான் பதில் சொல்வதில்லை. ஆனாலும், ஏதோ ஆசைப்படுகின்றார்கள்.
முதலில் இதற்குப் பெயர், “நாகை தாலுக்கா உணவு உற்பத்தியாளர் சங்கம்” என்றுதான் பெயர். அதற்கு அப்போதைய தலைவர் ஆய்மழை மைனர் என்று சொல்லப்பட்ட, ஆய்மழை எஸ்.எஸ். ராமனாதத் தேவர். இது என்ன ஹோட்டல்காரன் சங்கமா ? என்றுதான் இரிஞ்சூர் பி. கோபால கிருஷ்ணநாயுடு தலைவரானபோது “ நாகை தாலுக்கா நெல் உற்பத்தியாளர் சங்கம் “ என்றாகின்றது.
so called கம்யூனிஸ்ட்களே அந்த சங்கத்தின் உப தலைவர் யார் தெரியுமோ ? ஆதமங்கலம். ஏ. தியாகராஜ அய்யர். அந்த சங்கத்தின் காரியதரிசி யார் தெரியுமோல்லியோ ? ஏ.எஸ். மணி அய்யர். சட்ட ஆலோசகர் வி.எஸ். ராமஸ்வாமி அய்யங்கார், பி.ஏ.பி.எல். அப்பறம், ஜீ.ராமமூர்த்தி அய்யர்ன்னும் ஒருத்தர் இருந்திருக்கா தெரியுமோ ?

லக்ஷ்மண் ஸ்ருதி .....கச்சேரிக் காதலன்! சிறப்பு கட்டுரை

சிறப்புக் கட்டுரை: கச்சேரிக் காதலன்!மின்னம்பலம் : ஸ்ரீராம்:  தமிழக மண்ணில் லைட் ம்யூஸிக் கச்சேரி என்றால் லக்ஷ்மண் ஸ்ருதி என்ற பெயரை தவிர்க்க முடியாது. 90 களில் எழுந்து இதுகாறும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை நடத்தியிருக்கும் மாபெரும் நிறுவனம் அது.
ஆம், அதை நிறுவனம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏறத்தாழ 100 கலைஞர்களுக்கு அன்றாடம் வேலை கொடுத்துக் கொண்டிருக்கும் நிறுவனம் அது.
அந்த நிறுவனத்தின் சூத்திரதாரிகள் ராமனும் லக்ஷ்மணனும். என்னில் வயது மூத்தவர்கள்தான் என்றாலும் நட்போடு அணைத்துப் பழகக் கூடியவர்கள். எனது கல்லூரிக் காலத்திலிருந்தே அவர்களை எனக்குப் பழக்கம்.
அன்றைய காலேஜ் கல்ச்சுரல் நிகழ்ச்சிகளில் கலக்கிக் கொண்டிருந்தவர்களில் பலர் பலத் துறைகளை நோக்கிப் போய்விட அந்தக் கலையார்வத்தை அப்படியே விரிவுபடுத்திக் கொண்டு வந்ததுதான் லக்ஷ்மண் ஸ்ருதி.
உழைப்பு என்றால் இப்படி அப்படிப்பட்ட உழைப்பல்ல....அசகாய உழைப்பு. ஒரு கட்டத்தில் 30 நாளைக்கு 45 கச்சேரிகள் என்னும் அளவுக்கு இரண்டு மூன்று டீம் செய்து கொண்டு நகரங்களை ஆக்ரமித்தார்கள். உலகை வலம் வந்தார்கள்.
எலக்ட்ரானிக் யுக வேகத்தையும் பட்ஜெட்டையும் முன்வைத்து மற்ற இசைக்குழுக்கள் கீ போர்டு – சேம்ப்ளர்ஸ் – மைனஸ் ஒன் என ஒப்பேற்றிக் கொண்டிருந்த போதிலும் நூறு சதவிகிதம் இசைக் கலைஞர்களை மட்டுமே வைத்து நடத்திக் கொண்டிருந்தது லக்ஷ்மண் ஸ்ருதி.

ஜார்க்கண்ட் கூட்டணி அரசு பதவி ஏற்பு .. சோனியா காந்திக்கு JMM தலைவர் ஹேமந்த் சோரன் அழைப்பு

thanthitv.com: ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்க உள்ள, முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன், வருகிற 29-ம் தேதி பதவியேற்க உள்ளார். ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்க உள்ள, முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன், வருகிற 29-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதற்காக, டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர்  சோனியா காந்தியின் இல்லத்திற்கு சென்ற ஹேமந்த் சோரன், விழாவில் பங்கேற்க நேரில் அழைப்பு விடுத்தார். அப்போது, ராகுல்காந்தி பங்கேற்பார், என சோனியா காந்தி கூறியதாக, செய்தியாளர்களிடம் பேசிய சோரன் குறிப்பிட்டார். மேலும், பதவியேற்பு விழாவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அழைக்க உள்ளதாக ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.  

மராட்டியத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்- உத்தவ் தாக்ரே

மராட்டியத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்- உத்தவ் தாக்ரேதினத்தந்தி  : மும்பை, மராட்டியத்தில் விவசாயிகள் தற்கொலைகளை கருத்தில் கொண்டு புதிதாக பதவியேற்ற சிவசேனா தலைமையிலான அரசு நடந்து முடிந்த குளிர்கால சட்டசபை கூட்டத்தில் பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவித்தது. இந்த திட்டத்தின்படி 2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான குறுகிய கால பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முழு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்குவோம் என்று கூறிவந்த சிவசேனா விவசாயிகளை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியது. இந்த நிலையில் புனேயில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவும், தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவாரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

அஸ்ஸாம் ரூ 7836 கோடி செலவில் குடிமக்கள் பதிவேடு சரிபார்த்தல் (Review) ...

Jose Kissinger : அசாமில் 3.3 கோடி மக்களில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ிகள், வங்காளிகள்) புதிதாக குடியுரிமை கிடைக்கும். மீதியுள்ளவர்கள் வதை முகாம்களுக்கு அனுப்பப்படுவர்.
முதலில் விடுபட்ட மக்கள் 40 இலட்சம். இதற்கு அரசு செலவு செய்த தொகை ரூ1600 கோடி. விடுபட்ட 40 லட்சம் பேரும் தங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட மேல்முறையீட்டு சரிபார்த்தல் (Review) நடவடிக்கையின் போது ரூ 7836 கோடி செலவு செய்துள்ளனர். அதன் பின்னும் இறுதிப் பட்டியலில் விடுபட்டவர்கள் 19 இலட்சம். அதில் 15 இலட்சம் பேர் இந்துக்கள். அவர்களுக்கு வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகள் என்று சொல்லி (உண்மையிலேயே இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த பழங்குடிகள்.
அந்த வதை முகாம்களில் இருப்போருக்கு உணவு, இருப்பிடம், அடிப்படை தேவைச் செலவு, பாதுகாப்பு படைக்கு செலவு என மாதாமாதம் சில கோடிகள்.
இந்தியா முழுவதும் அது போல கணக்கெடுத்து மிகமிகக் குறைவாகவே வைத்துக் கொண்டாலும் ஒரு சதவீதம் பேர் என்றாலும் 1.3 கோடி பேர் ஆகிறது. கணக்கெடுக்கவே ஒரு ஐம்பதாயிரம் கோடி ஆகும்.
பணமதிப்பிழப்பு செய்த அதே போல இதுவும் எலியைப் பிடிக்க அரண்மனையைக் கொளுத்தியது போல, இந்தியாவை மீளாத் துயரத்தில், மீண்டு எழவே முடியாத வெறுப்பு, பிரிவினை, பொருளாதார வீழ்ச்சியில் தள்ளப் போகிறது.

ஜெயேந்திர விஜயேந்திரர்களின் தியானமும் காமமும் குருரமும் .. Shocking Truth revealed Flashback

நவம்பர் 2004ஆம் ஆண்டு இந்த மடத்தின் பீடாதிபதிகளாக இருந்த ஜெயந்திர சரசுவதி மற்றும் விஜெந்திர சரசுவதி சுவாமிகள் இருவரும் சங்கர்ராமன் கொலை வழக்கில் கைதானதை அடுத்து இதற்கு இழுக்கு ஏற்பட்டது."
சங்கர ராமன் கொலை வழக்கில் சிக்குவதற்கு முன்பாகவே ஜெயேந்திரர் மீது அரசல் புரசலாக சில பாலியல் தொடர்பான செய்திகள் கசிந்தன. கோடம்பாக்கத்தில் இருந்துதான் கிசுகிசுக்கள் வரவேண்டுமென்ற நியதிகள் மாறி ஒரு பெரும்பான்மை மதத்தைப் பின்பற்றும் மக்கள் மதித்து, நம்பி வழிபடும் பாரம்பரியமும் புனிதமும் மிக்கதாக மக்கள் கருதும் மதச் சார்பின்றி நமது மரியாதைக்கும் உரிய காஞ்சி மடத்தில் இருந்தும் கிசுகிசுக்கள் கசிய ஆரம்பித்தன.
காமம் குரோதம் மோகம் போன்ற மனதின் வன்மங்களை மறந்தவர்களும் துறந்தவர்களும் தலைமைதாங்கும் மதத்தின் மடத்தில் காமத்தின் அடிப்படையிலான காரியங்களும், குரோதத்தின் அடிப்படையிலான கொலை போன்றவையும் நடந்ததாக கூறப்பட்டது . இந்தக் காரியங்களுக்கு முன்னோட்டமாக பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சியடையும்படி திடீரென்று அங்கு ஒரு சம்பவம் நடந்தது. அதாவது உலகப் புகழ் பெற்ற மடத்தின் தலைவராக இருந்த ஜெயேந்திரர் திடீரென்று காணாமல் போய்விட்டார்.
ஒரு உடலுக்குத் தலை இல்லாமல் போனது. முண்டம் மற்றும் துடித்துக் கொண்டு இருந்தது. தலையைத்தேடி இந்த நாட்டின் தலையே தலைக் காவிரி என்கிற இடத்துக்கு ஆளனுப்பித் தேடியது. ஆகவே ஜெயேந்திரர் மீது சங்கர ராமன் கொலை வழக்கு தொடரப் படுமுன்பே இவரது நன்னடத்தை பற்றிய சான்றிதழ் திருப்தி இல்லை என்றே வழங்கப் படக் காரணமானார்.

புதன், 25 டிசம்பர், 2019

சமுகவலையில் ஸ்டாலின் இமேஜை டமேஜ் செய்யும் நாக்பூர் உளவாளிகள் ..

Vijay Bhaskarvijay : வருங்கால தமிழக முதல்வரும் . திமுக தலைவருமான
திரு. மு.க ஸ்டாலின் மத்திய அரசை ஆளும் கட்சியை நோக்கி ஒரு விமர்சன அறிக்கை வெளியிடுகிறார்.
அது செய்தியாக முகநூலில் விழுகிறது.
வெளியான 39 நிமிடத்தில் 154 முகபாவனை குறிகள் விழுகின்றன.
அதில் திரு. ஸ்டாலினுக்கு ஆதரவாக 123 ம், எதிர்ப்பாக வெறும் 31 ம் குறிகள் விழுகின்றன.
அதாவது 80 % தமிழக மக்கள் ஸ்டாலினை ஆதரிக்கிறார்கள்.
20% தமிழர்கள் ஸ்டாலினின் அந்த அறிக்கையை எதிர்க்கிறார்கள்.
ஆனால் கமெண்ட் செக்சனைப் பாருங்கள்.
கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட கமெண்டுகள் ஸ்டாலினை மட்டரகமாக கிண்டல் செய்து இருக்கின்றன.
எதிர்ப்பு குறியே 31 தான் விழுந்திருக்கிறது.
ஆனால் கமெண்ட்கள் எப்படி நாற்பத்தி ஐந்தை தாண்டி போகிறது.
எப்படி போகிறது என்றால் மு.க ஸ்டாலினின் இமேஜ் கடுகளவு கூட மக்களிடையே உயர்ந்து விடக் கூடாது என்று ஒரு கூட்டமே உழைத்துக் கொண்டிருக்கிறது.
எங்கெல்லாம் சமூக வலைதளங்களில் மு.க ஸ்டாலினுக்கு ஆதரவான செய்தி வருகிறதோ அங்கெல்லாம் போய் அவருக்கு பயங்கர எதிர்ப்பு இருப்பது மாதிரி ஒரு சூழலை வாசிப்பவருக்கு காட்ட முயல்கிறது.

மேம்பாலத்தின் அடியில் சிக்கிய விமானம்- கொல்கொத்தா ....(வீடியோ

தினகரன் : கொல்கத்தா: ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்ற கூற்றுக்கு வானில் பறக்கும் விமானமும் விதிவிலக்கல்ல. இவ்வாறு மேற்கு வங்கத்தில் டிரக் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட இந்திய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வழியில் பாலத்தில் சிக்கிக் கொண்டது. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்த, அஞ்சல்துறையால் பயன்படுத்தப்பட்டு வந்த போயிங் விமானம் ஒன்று, கைவிடப்பட்டு, பயன்பாடற்று கொல்கத்தா விமான நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த விமானத்தை பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி ஒருவர், உலோகங்களை பிரித்தெடுப்பதற்காக விலைக்கு வாங்கி உள்ளார்.
இதனை 17 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அதை விமான நிலையத்தில் இருந்து டிரக்கில் ஏற்றி சாலை வழியாக கொண்டு சென்றுள்ளார். துர்காபூரில் சாலை வழியே சென்றுகொண்டிருந்த போது ஒரு மேம்பாலத்தின் அடியில் லாரி சிக்கிக் கொண்டது. விமானத்தின் உடல்பகுதி மேம்பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனை அறிந்த போக்குவரத்து போலீசார் தொழிலாளர்களுடன் சேர்ந்த அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

BBC : 3000 தலித்துகள் இஸ்லாம் மதத்திற்கு மாற திட்டம்.. மேட்டுப்பாளையம் 'தீண்டாமை சுவர்' விவகாரம்... வீடியோ


தலித் மக்கள் மீது காட்டப்படும் பாரபட்சம் காரணமாக 3000 தலித்துகள் இஸ்லாம் மதத்துக்கு மாறத் திட்டமிட்டுள்ளதாக தலித் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. எனினும், அவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. தமிழ் புலிகள் கட்சியின் இந்த முயற்சியை இந்து அமைப்புகள் விமர்சித்துள்ளன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நடூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் தனியார் சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 17 தலித் மக்கள் உயிரிழந்தனர். உயிரிழப்பிற்கு காரணமான ஜவுளிக்கடை அதிபர் சிவசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீஸார், தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனை கைது செய்தனர்.
இந்த வழக்கில் நாகை திருவள்ளுவன் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்- வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல்

கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்-  வருமானவரித்துறைக்கு சசிகலா தகவல்மாலைமலர் : ஜெயலலிதா மறைவுக்கு பின் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தானே உரிமையாளர் என்று சசிகலா வருமானவரித்துறைக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது, சசிகலா தன்னிடம் இருந்த உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ரூ.1,674 கோடிக்கு சொத்து வாங்கியதாகவும், ரூ.237 கோடி பணத்தை கடனாக வழங்கியதாகவும் வருமான வரித்துறை தெரிவித்த தகவல் ஏற்கனவே வெளியானது.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சொந்தம் என்று கூறப்பட்ட கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தனக்கு சொந்தமானது என்று சசிகலா கூறி இருப்பதாக வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்யப்பட்ட விளக்க அறிக்கையில் தகவல் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற சசிகலா 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே 5 நாட்கள் சசிகலா பரோலில் வந்தார். அவர் பரோலில் வந்து சென்ற பிறகு ஒரு மாதம் கழித்து நவம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன், சசிகலாவின் உறவினர் வீடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாளை மறுநாள் முதல் கட்ட வாக்குப் பதிவு- இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு

By Mathivanan Maran - tamil.oneindia.com/:  - : சென்னை: தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது.
 தமிழகத்தின் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் நாளை மறுநாளும் டிச.30-ந் தேதியும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 27 மாவட்ட ஊராட்சிகளில் 515 வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களில் 5090 வார்டு உறுப்பினர்கள், 9624 கிராம ஊராட்சிகளுக்கான தலைவர்கள், 76,746 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறுகிறது.
முதல் கட்டமாக நாளை மறுநாள் 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4700 கிராம ஊராட்சிகளின் தலைவர்கள், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறுகிறது.
இதில் ஏற்கனவே 20,000 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். r இந்த முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இப்பகுதிகளில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை மறுநாளும் 30-ந் தேதியும் வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் ஜனவரி 2-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்

2019இல் தமிழ் சினிமாவின் நிலை.. 196 நேரடி தமிழ்ப் படங்கள்

மின்னம்பலம் : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 150 முதல் 200 படங்கள் வரை ரிலீஸ் செய்யப்படுகின்றன. எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் வெற்றி சதவிகிதம் என்பது 20 சதவிகிதத்துக்குள் வருகிறது. இவற்றில் வியாபாரம், வசூல் அடிப்படையில் பார்த்தால் 10 சதவிகிதம் படங்கள் மட்டுமே முழு வெற்றி என்ற இடத்தைப் பிடிக்கிறது.
2019இல் தமிழ் சினிமாவின் நிலை!ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படம் வெளியானவுடன் அடுத்து வரும் நாட்களில் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்ததாக சமூக வலைதளங்கள் மூலம் செய்திகளைப் பரவவிட்டு பரவசமடையும் மாய வலைக்குள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிக்கிக்கொள்ளும் போக்கு தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்திய சினிமாவில் எந்த மொழியிலும் இல்லாத ட்விட்டர் டிரெண்டிங் என்கிற போதைக்குத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் நடிகர்களும் அடிமையாகி அதுவே மிகப்பெரும் வெற்றி என்கிற மாய பிம்பத்துக்குள் சென்று விடுகின்றனர்.
சினிமா என்கிற வலிமையான ஊடகத்தின் வெற்றி தோல்வியை சினிமாவைப் பற்றியும், படத்தின் உள்ளடக்கத்தைப் பற்றியும் பத்து வரி கூட எழுத தெரியாதவர்களால் படம் வெளியான அன்றே ‘சினிமா டிராக்கர்ஸ்’ என்பவர்களால் தீர்மானிக்கப்பட்டு அதுவே நிரந்தரம் என்று தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் முடிவுக்கு வருகின்றனர். இதன் நீட்சியாகவே வெள்ளிக்கிழமை வெளியாகும் படத்துக்குத் திங்கட்கிழமை வெற்றி விழாவைக் கொண்டாடுகிற போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்திருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக நீதிமன்ற ஆணை ... நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

கலெக்டருக்கு எதிராக வாரன்ட்!மின்னம்பலம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையனுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (டிசம்பர் 24) வாரன்ட் பிறப்பித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர் திட்டத்தின் கீழ் சிப்காட் வளாகம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்துக்கு ஒரு சென்ட்டுக்கு 5,500 ரூபாய் வழங்க காஞ்சிபுரம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் சிறப்பு தாசில்தாரர் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஒரு சென்ட்டுக்கு 10,325 ரூபாய் வழங்க 2012இல் உத்தரவிடப்பட்டது. இவ்வாறு உயர்த்தப்பட்ட தொகையின் அடிப்படையில் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நில உரிமையாளரான ஆனந்த் குமார் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்தார். தாமதமாக விண்ணப்பித்ததாக இவரது விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் நிராகரித்துள்ளார்.

மோடி - அமித் ஷா: மோதல் ஆரம்பம்?.. விரைவில் இது வெளிப்படையாகவெ தெரியவரு

டிஜிட்டல் திண்ணை: மோடி - அமித் ஷா: மோதல் ஆரம்பம்?மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“இவர்கள் இருவருக்கும் இடையே உரசல் வர வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொன்னவர்கள் கூட, ஒருவேளை அப்படியும் இருக்குமோ, அரசியல் - அதிகார விஷயத்தில் எதுவும் நடக்கலாமோ என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்பதை அடிப்படையாக வைத்துதான் டெல்லியில் தொடங்கி இந்தியா முழுவதும் மேற்கொண்ட கேள்விகளும் வியூகங்களும் எழுந்து வருகின்றன.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்த நிலையில், ஒரே ஆண்டில் ஐந்தாவது மாநிலமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை இழந்திருக்கிறது பாஜக. மோடி - அமித் ஷா மேஜிக் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் என்று சொதப்பி வருகிறது.
இந்த நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி பொதுமேடைகளில் பிரதமரின் கருத்தும், அமித் ஷாவின் கருத்தும் முற்றிலும் எதிர் திசைக்குச் சென்றதை பாஜகவினர் ஆச்சரியத்தோடு பார்த்தனர். முதலில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும். அதைப் பின் தொடர்ந்து நாடு முழுதும் தேசியக் குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்படும். ஊடுருவல்காரன் ஒருத்தனும் இங்கே இருக்க முடியாது, தூக்கி வெளியே போட்டுவிடுவோம்’ என்று நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல ஜார்க்கண்ட் மேடைகளில்கூட அமித் ஷா தனக்கே உரிய உறுதியான மொழியில் பேசினார். பாஜக செயல் தலைவர் நட்டாவும் இதையேதான் பேசினார்.

லக்‌ஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் தற்கொலை!


வெப்துனியா : பிரபல இசைக்குழுவான லக்‌ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகமெங்கும் இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகளை நடத்தி வரும் பிரபல இசைக்குழு லக்‌ஷ்மன் ஸ்ருதி. இதன் உரிமையாளர் லக்‌ஷ்மணன் மற்றும் ராமன் சகோதரர்கள். சென்னையில் உள்ள அசோக் நகரில் சொந்த வீட்டில் வசித்து வந்த ராமன் திடீரென நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல இசைக்குழுவின் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியாரின் வைக்கம் போராட்டம் ........ வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்?

periyar-in-vaikkamபழ.அதியமான் - hindutamil.in : வைக்கம் என்றதும் தமிழ்நாட்டினருக்கு மனத்தில் முதலில் விரியும் உருவமும் பெயரும் பெரியாருடையதுதான். வைக்கம் என்பது கேரளத்தில் பெரும்பான்மையருக்கு வைக்கத்தப்பன் குடிகொண்டுள்ள ஓர் ஊர். கொஞ்சம் வரலாறு தெரிந்தவர்களிடம் கேட்டால் சத்தியாகிரகம் நடைபெற்ற ஓரிடம். இன்னும் சமூக உணர்வாளர்களிடம் வினவினால் ஈழவர் முன்னேற்றத்தில் ஒரு மைல்கல்லான போராட்டம் நடந்த இடம் என்பர். ஆனால், தமிழ்நாட்டில் வைக்கம் என்றால் சமூக நீதியின் அடையாளம். அதை அடையப் போராடிய வீரர் பெரியார் என்பதாகப் பதில் விரிவடையும். “1924-25-ல் வைக்கம் போராட்டம் நிகழ்ந்த தருணத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரை ‘வைக்கம் வீரர் என்று எழுதினேன். அவருக்கு அது ஒரு பட்டப்பெயராகவே பிற்காலத்தில் ஆகிவிட்டது’ என்று திரு.வி.க. குறிப்பிட்டுள்ளார்.
எப்படித் தொடங்கியது போராட்டம்?
அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் சிவன் கோயிலைச் சுற்றிலுமுள்ள நான்கு தெருக்களில் ஈழவர் உட்பட தாழ்த்தப்பட்டோர் நடக்கத் தடை இருந்தது. இத்தகைய தடை கேரளம் முழுவதும் அளாவியது. இத்தடையை நீக்கி அவ்வீதியில் நடக்க உரிமை வேண்டி நிகழ்ந்த சத்தியாகிரகமே வைக்கம் போராட்டம். ஈழவர் தலைவர் டி.கே.மாதவன் பல்லாண்டு முன்முயற்சியில் கிளர்ந்த இந்த வைக்கம் போராட்டத்தை உற்சவ மூர்த்தியாகவும் மூளையாகவும் முறையே கேரள காங்கிரஸ் தலைவர்கள் கே.பி.கேசவ மேனனும் ஜார்ஜ் ஜோசப்பும் தொடங்கி வைத்தனர். தமிழ்நாட்டுப் பெரியார், கேளப்பன், குரூர் நீலகண்டன் நம்பூதிரி போன்றோர் நடத்துநராகப் போராட்டத்தைச் செயல்படுத்த, ஆலோசகரான காந்தி நிறைவில் வந்து முடித்து வைத்தார் எனச் சுருக்கமாக வைக்கம் போராட்டச் சித்திரத்தை வரையலாம்.

போராட்டத்தில் பங்கேற்றதால் ஜெர்மனி மாணவரை நீக்கியது ஐஐடி வீடியோ


hindutamil.in : குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 19-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவர் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் சென்னை ஐஐடியில் படித்து வந்த ஜெர்மனியைச் சேர்ந்த மாணவர் ஜேக்கப் லிண்டன்தாலும் பங்கேற்றார். அப்போது அவர் வைத்திருந்த பதாகையில் ‘நாம் இப்போது 1933 முதல் 1945 ஆண்டு வரையான காலத்தில் இருக்கிறோம்’ என மறைமுகமாக ஹிட்லரின் ஆட்சிக்காலத்தை சுட்டிக்காட்டினார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களிலும் வைரலானது. இதுதவிர போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களையும் மாணவர் ஜேக்கப் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் விசா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

தந்தை பெரியாரின் 46-வது நினைவுதினம் - ட்ரெண்டிங்கில் முதலிடம்!

 தந்தை பெரியாரின் 46 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள அவரது உருவ சிலைக்கு அருகே வைக்கப்பட்ட உருவ படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மக்கள் உணர்வுகளை மதிக்காமல் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை செயல்படுத்தியதால் ஜார்கண்ட் தேர்தலில் அமித்ஷா மற்றும் மோடிக்கு மரண அடி விழுந்துள்ளதாக கூறினார். மேலும் இந்தியாவில் இனி நடைபெறவுள்ள எந்த தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெறாது என்றும் கி.வீரமணி பேட்டியில் தெரிவித்தார்./tamil.news18.com ": தந்தை பெரியாரின் 46-வது
நினைவுநாளில் ட்விட்டரில் #பெரியார் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. தந்தை பெரியாரின் 46 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள அவரது உருவ சிலைக்கு அருகே வைக்கப்பட்ட உருவ படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். " தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மக்கள் உணர்வுகளை மதிக்காமல் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை செயல்படுத்தியதால் ஜார்கண்ட் தேர்தலில் அமித்ஷா மற்றும் மோடிக்கு மரண அடி விழுந்துள்ளதாக கூறினார். மேலும் இந்தியாவில் இனி நடைபெறவுள்ள எந்த தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெறாது என்றும் கி.வீரமணி பேட்டியில் தெரிவித்தார்."
தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மக்கள் உணர்வுகளை மதிக்காமல் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை செயல்படுத்தியதால் ஜார்கண்ட் தேர்தலில் அமித்ஷா மற்றும் மோடிக்கு மரண அடி விழுந்துள்ளதாக கூறினார். மேலும் இந்தியாவில் இனி நடைபெறவுள்ள எந்த தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெறாது என்றும் கி.வீரமணி பேட்டியில் தெரிவித்தார்.

கேவலமா இருக்குது... வெட்கப்படுகிறோம்... அதிமுக எம்எல்ஏக்கள் குமுறல்

ADMK MLAK's
ADMK MLAK'snakkheeran.in - ஜீவாதங்கவேல் : இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற பிரச்சனைகளில் மிக முக்கியமானது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம். இதில் அதிமுக பங்கு என்பது எந்த வகையிலும் வெளிப்படையாக பேசப்படாத பொருளாகபோய்க்கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. ஒட்டுமொத்தமாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றி பெற்றதற்கு அதிமுகவே காரணியாக அமைத்துள்ளது. இதை பிரதான எதிர்க்கட்சியான திமுக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திவிட்டது. இந்தநிலையில் இன்று தந்தை பெரியாரின் 46 வது நினைவுநாள் தமிழகம் முழுக்க அனுசரிக்கப்பட்டது. அதேபோல் அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆரின் நினைவு நாளும் அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுகவினர் எம்ஜிஆரின் புகைப்படங்களை வைத்து மலர் மாலை சூடி மரியாதை செலுத்தினார்கள்.அதேபோல் தந்தை பெரியாரின் 46 வது நினைவுநாளை  ஒவ்வொரு மாவட்டத்திலும் திராவிடர் கழகம் மற்றும் திமுக அதன் தோழமை கட்சிகள் மேலும் சமூகநல அமைப்புகள் பெரியாருக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

பீகார், டெல்லியிலும் பா.ஜனதா தோற்கும்.. வீழ்ச்சி தொடங்கி விட்டதாக காங்கிரஸ் ... Will NRC Hurt BJP's Chances In Delhi, Bihar?


தினத்தந்தி : வீழ்ச்சி தொடங்கி விட்டதாகவும், பீகார், டெல்லியிலும் பா.ஜனதா தோற்கும் என்றும் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரிதிவிராஜ் சவான் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 65 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று பா.ஜனதா கூறியது. ஆனால், அதில் பாதியைக்கூட கைப்பற்ற முடியவில்லை. சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதாவின் வீழ்ச்சி, குஜராத் தேர்தலிலேயே தொடங்கி விட்டது. மோடி, அமித் ஷாவை போல், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மராட்டியம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பிரசாரம் செய்யவில்லை. இருந்தாலும், அங்கு பா.ஜனதா வீழ்ந்து விட்டது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள பீகார், டெல்லி சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜனதா தோற்கும்

புலிகளின் டெலோ படுகொலைகள் ! ஒரு முன்னாள் புலி வீரரின் ஒப்புதல் வாக்குமூலம்!

பாரிய சகோதரப் படுகொலைக்கான திட்டமிடல் தொடங்குகிறது. அதீத விசுவாசம் கொண்டவர்கள் தலைமை கூறியதை விட மோசமான மனிதவதைகளை செய்தனர்! தலைமைக்கு பணிந்தவர்கள் தலைமை கூறியதை அப்படியே செய்தார்கள். மனிதாபிமானமுள்ளவர்கள் விறைத்துப் போய் செய்வதறியாது திகைத்து நின்றனர். சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்! தூங்கியவர்கள், தூங்க முடியாது வருத்தத்தில் படுத்திருந்தவர்கள், தப்பியோடியவர்கள் வெள்ளைக்கொடி பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று ஒருவரைக் கூட மிச்சம் வைக்காது வேட்டையாடல் நடைபெற்றது. தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணிக்க தயாராக இருந்த நூற்றுக்கணக்கான போராளிகள் தெருநாயை சுடுவது போல் வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 3 நாட்களாக கல்வியங்காட்டு சந்தியில் காவல் கடமையில் இருந்த எனக்கு கோப்பி முதல் 3 நேர உணவும் தந்து உபசரித்தார்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக என்று கட்டியெழுப்பிய மற்றைய இயக்கங்கள் தம் சொந்த சகோதர்கள் வேட்டையாடப்படுகையில் கைகட்டி மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள்!
பாலகுமார் - பத்மநாபா- பிரபாகரன் -  ஸ்ரீ சபாரத்தினம்
நெற்றிக்கண் - Thursday, 1 December 2016 : டெலோ இயக்க தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் சக தோழர்கள் விடுதலைப் புலிகளால் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது வருட நினைவஞ்சலிக் கூட்டத்தில் புலிகள் அமைப்பில் இருந்த வாசுதேவன் ஆற்றிய உரை.:
மகாத்மா காந்தியடிகள் கூறிய ஒரு வாசகம்! கண்ணுக்கு கண்ன் என்பது  உலகை குருடாக்கிவிடும்.மன்னிப்பு இல்லையேல் எதிர்காலம் இல்லை என்று நிற வெறிக்கெதிராக குரலெழுப்பிய Desmond Tutu ஆணித்தரமாக கூறுகிறார். மன்னிப்பு என்பது மறப்பதற்காக அல்ல! மாறாக மன்னிப்பு இல்லாவிட்டால் மனித எதிர்காலம் இல்லாது போய்விடும் என்று கூறுகிறார். இன்று நான் உங்கள் முன்நின்று உரையாற்றுவது எனது கடந்த காலத் தவறிற்கு பிராயச்சித்தம் தேட அல்ல. நாம் விட்ட தவறுகளை நீங்கள் இன்று மன்னித்தபோதும் நாம் இறக்கும் வரை அது நம்முடன் கூடவே பயணித்து அது எம்மை சித்திரவதை செய்யும். ஆனால் இன்று நீங்கள் என்னை இங்கு பேச அழைத்ததன் மூலம் அந்த சித்திரவதையில் இருந்து ஒரு சிறிய அசுவாசத்தை பெற உதவியிருக்கிறீர்கள். அதற்கு நான் உங்களிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.