மாலை மலர் : சென்னை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும் இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறியும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், பொன்முடியின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில்:-
வெள்ளி, 22 டிசம்பர், 2023
பொன்முடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் அதிரடி
நிதிஷ்குமாரை சமாதான படுத்தும் முயற்சியில் ராகுல்காந்தி! தொலைபேசியில் பேசினார்
காங்கிரஸ் தற்போது மிகப்பெரிய அளவில் பா.ஜனதாவை எதிர்க்கும் வல்லமையோடு இருப்பதாக தெரியவில்லை. இதனால் 2024 மக்களை தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் அச்சாரம்போட்டார்.
இதற்கு லாலு பிரசாத்தின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆதரவு அளித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் உடைபடுமா தண்டனை? இரவு 11 மணிக்கு பொன்முடி எடுத்த திடீர் முடிவு
minnambalam.com - Aara : வைஃபை ஆன் செய்ததும் நீதிமன்றத் தீர்ப்பால் அமைச்சர் பதவியை இழந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பொன்முடி உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் சொத்து குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று டிசம்பர் 21ஆம் தேதி தண்டனையை அறிவித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இதற்காக இன்று காலை பொன்முடி தனது மனைவி விசாலாட்சியோடு காலை 10 மணிக்குள் உயர் நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார். இன்று நேரில் ஆஜராகலாமா அல்லது வீடியோ கான்பிரன்சிங் மூலமாக ஆஜர் ஆகலாமா என்று நேற்று இரவு வரை தனது வழக்கறிஞர்களோடு தீவிரமாக ஆலோசித்தார் பொன்முடி.
அந்த பெண்களின் சதை இன்னமும் போலீஸாரின் பல் இடுக்கில் இருக்கும்.. வீரப்பன் ஆவணப்படம் அதிர வைக்குது!
சின்ன பொண்ணை துரத்திக் கொண்டு ஒரு கர்நாடக போலீஸ் அம்மணமா ஓடுறான். அத்தனை வீடுகள் இருக்கு, ஊர் மக்கள் உள்ளனர். யாருமே நம்மை எதுவுமே செய்ய முடியாத என அதிகாரத்திமிர் அவனுக்கு எவ்ளோ இருக்கும் எனக் கேட்டுள்ளார்.
போலீஸ்காரர்கள் கொடுத்த சித்ரவதைகள் போதாது என மகனை வைத்து அம்மாவையும், அப்பாவை வைத்து மகளையும் வன்புணர்வு செய்ய வைத்த கொடுமைகள் எல்லாம் வொர்க்ஷாப் பெயரில் நடந்துள்ளதாக அந்த டாக்குமென்ட்ரி சீரிஸில் காட்ட காட்ட ஈரக்குலையே நடுங்குவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வியாழன், 21 டிசம்பர், 2023
மல்லிகார்ஜுன கார்கே மீதுள்ள கோபத்தை டி ஆர் பாலுவிடம் காட்டிய நிதிஷ் குமார்
tamil.samayam.com - மகேஷ் பாபு : பிரசாந்த் கிஷோர் சொன்னது பலிச்சிடுச்சு... கிளைமேக்ஸ் நெருங்கிடுச்சு... நிதிஷ் குமார் அரசியல் ரூட் இனி என்ன ஆகும்?
தேர்தல் வியூக நிபுணராக ஐபேக் நிறுவனம் மூலம் அறியப்பட்ட பிரசாந்த் கிஷோர், தமிழ்நாடு முதல் பஞ்சாப் வரை பல்வேறு மாநிலங்களில் தேர்தல் வெற்றிக்காக வேலை செய்துள்ளார். கார்ப்பரேட் பாணியிலான இவரது வியூகத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என அரசியல் கட்சிகளிடையே எந்தவித வேறுபாடும் கிடையாது. தற்போது ஐபேக்கிற்கு குட்பை சொல்லிவிட்டு தனது சொந்த மாநிலமான பிகாரில் அரசியல் புத்தெழுச்சி ஊட்டுவதற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்.
ஹிந்தி திணிப்பால் சிதறப்போகும் இந்தியா கூட்டணி? ஹிந்தியில் பேசிய நிதிஷ்குமார் அடாவடி!
tamil.oneindia.com - Mathivanan Maran : டெல்லி: "இந்தியா" கூட்டணியின் டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு ஆகியோர் மீது ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் கடும் கோபத்தை வெளிப்படுத்தியதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் நேற்று "இந்தியா" கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
I.N.D.I.A bloc: Nitish loses cool after DMK request translation of Hindi speech
திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டிஆர் பாலு எம்பி உள்ளிட்டோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், அக்கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் ஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
புதன், 20 டிசம்பர், 2023
பொன்முடி குற்றவாளி.. வாயையே திறக்காமல்.. கப்-சிப் என்று மாறிய அதிமுக!
tamil.oneindia.com - Shyamsundar : சென்னை; அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டு உள்ள தீர்ப்பு பற்றி அதிமுக நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்து பரபரப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகின்றன. அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
நாளை பொன்முடி வழக்கில் என்ன தண்டனை வழங்கப்படும் என்று நீதிபதி ஜெயசந்திரன் அறிவிப்பார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தாடியுடன் வகுப்பறைக்குள் நுழைய தடை - இலங்கை மருத்துவ கல்லூரிகளில் தாடிக்கு தடை! பி பி சி
BBC News தமிழ் - , யூ.எல். மப்றூக் : தாடி வைத்திருக்கிறார் எனும் காரணத்துக்காக, மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஒருவரை - கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட அனுமதிப்பதில்லை என, இலங்கை கிழக்குப் பல்கலைக் கழகம் எடுத்த தீர்மானத்துக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஸஹ்றி என்பவர் - தாடி வைத்துள்ளமையைக் காரணம் காட்டி, ‘அவர் கல்வி நடவடிக்கைகளைத் தொடர முடியாது’ என, அந்தப் பல்கலைக் கழகம் அண்மையில் தடை விதித்தது.
வாக்களித்ததற்கான ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ண வேண்டும்: இந்தியா கூட்டணி தீர்மானம்
மாலை மலர் : இந்திய கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் 28 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் பல்வேறு விசயங்களை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகளில் ஏராளமான சந்தேகம் இருக்கிறது.
இதனால் புதிய நடைமுறையை தேவை. விவி பேட் (வாக்கு அளித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம்) ரசீது வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பின் சேமிக்கப்பட வேண்டும் ஆகிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
A Quantum Leap In The Wrong Direction .பாஜகவின் பொருளாதார எடுப்புக்களின் உண்மை நிலவரம்
Vimalaadhithan Mani : இந்த ஜெயதி கோஷ் எழுதி இருக்கும் A Quantum Leap In The Wrong Direction என்ற புத்தகத்தை சில காலம் முன் படித்தேன் .
10 ஆண்டு கால நடுவண் அரசின் அருமையான செயல்பாடுகள் என்று சங்கிகளால் பில்டப் செய்யப்பட்டு இருக்கும் அத்தனை பர்னிச்சர்களையும் பீஸ் பீஸாக புள்ளி விவரத்துடன் போட்டு உடைத்து சம்பவம் செய்து இருக்கிறார் .
அப்படிப்பட்ட ஒரு பிரபல பொருளாதார மேதைதான் A Quantum Leap In The Wrong Direction என்ற அவரு9டைய ஆராய்ச்சி புத்தகத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு தமிழ்நாட்டுக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார்!
அதே போல இந்தியாவில் பிறந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமார்த்யா சென் அவர்கள் மற்றொரு பொருளாதார மேதை ஜான் ட்ரெஸ் (John Dreze) அவர்களுடன் இணைந்து எழுதி இருக்கும் அவருடைய "An Uncertain Glory: India and its Contradictions" என்னும் புத்தகத்தில் தமிழ்நாடு எப்படி சமூக நீதி, கல்வி, பொது சுகாதாரம் போன்றவற்றில் உலக நாடுகளுக்கு இணையாக வளர்ந்து இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒரு மாநிலமாக திகழ்கிறது என்று புள்ளி விவரங்களுடன் விளக்கி இருப்பார்.
செவ்வாய், 19 டிசம்பர், 2023
141 எம்.பி.க்கள் இடைநீக்கம்! BJP அரசின் சர்வாதிகாரம்
hindu tamil : : வரலாற்று ‘சம்பவம்’ – இந்திய நாடாளுமன்ற அமளியால் இதுவரை 141 எம்.பி.க்கள் இடைநீக்கம்!
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்ட மேலும் 49 எம்.பிக்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். மக்களவை இன்று காலை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. கடந்த 13-ம் தேதி மக்களவையில் நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் 90-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மேலும் பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். அந்த பதாகைகளில் பிரதமர் மோடியின் படம் விகாரமாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி சபாநாயகர் கண்டித்தார். பதாகைகளை ஏந்த வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஏற்காததால்இ அவை கூடிய சிறிது நேரத்துக்குள் அவையை அவர் ஒத்திவைத்தார்.
இந்திய வானிலை மைய கணிப்பு தவறியுள்ளது.. பெருமழை பெய்யும் என கணிக்கவில்லை..
tamil.oneindia.com - Mani Singh S : இந்திய வானிலை மைய கணிப்பு தவறியுள்ளது.. பெருமழை பெய்யும் என கணிக்கவில்லை.. சிவ்தாஸ் மீனா
சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையம் பெரு மழை பெய்யும் என கணித்து கூறவில்லை என்றும், வானிலை ஆய்வு மையம் கணிப்பு சரியாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் சரியாக இருக்கும் என்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறினார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் பெருமழை பெய்தது. இதில் நெல்லை, தூத்துக்குடியில் பல இடங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பலாலியில் தரையிறங்காமல் சென்ற சென்னை விமானம்!
hirunews.lk யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் வந்த விமானமொன்று தரையிறங்க முடியாமல் திரும்பிச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விமானத்தை தரையிறக்க பல முறை முயற்சி செய்தும் மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை விமான நிலையத்தை நோக்கி பயணித்தது.
இதனிடையே, யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக 435 குடும்பங்களைச் சேர்ந்த 1523 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 24 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
திங்கள், 18 டிசம்பர், 2023
மாமியாரை துன்புறுத்திய மருமகள் கைது .. கேரளாவில் ... வைரலாக பிரபலமான வீடியோ
கேரள மாநிலத்தில் 80 வயதான மாமியாரை ஆசிரியையான மருமகள் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில், இருக்கையில் அமர்ந்திருக்கும் மாமியாரை எழுந்து போகச் சொல்லி திட்டிய மருமகள், ஒருகட்டத்தில் மாமியாரை கட்டிலில் இருந்து கீழே தள்ளிவிடுகிறார்.
அதை அவரின் கணவர் வீடியோ எடுத்துள்ளார். கீழே விழுந்துகிடந்த மூதாட்டி தன்னை தூக்கிவிடும்படி கேட்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதுகுறித்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இன்று ஒரே நாளில் 78 எம்பிக்கள் சஸ்பெண்ட்! .. இந்தியா நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத வகையில்
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நுழைந்த சிலர் புகை வரும் குப்பிகளை வீசி ரகளை செய்தனர். அதேபோல இன்னும் சிலர் நாடாளுமன்றத்திற்கு வெளியே ரகளை செய்தனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டானது.
Amid Protests Over Breach 31 Opposition MPs Suspended From Lok Sabha
நாடாளுமன்றத்தில் நடந்த மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இது பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். அவர்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தூத்துக்குடி -காயல்பட்டினம் - 95 செ.மீ. மழை: ஓராண்டு மழை ஒரே நாளில் கொட்டியது - தற்போதைய நிலை என்ன?
BBC News தமிழ் - Ansari எழுதியவர், சிராஜ் : தூத்துக்குடி மாவட்டத்தின் காயல்பட்டினம் எனும் சிறிய கடற்கரை நகரம் தமிழ்நாட்டில் இப்போது அதிகம் பேசப்படும் ஒரு ஊராக மாறியிருக்கிறது,
காரணம் அங்கு ஒரே நாளில் பெய்துள்ள வரலாறு காணாத மழை. அங்கு 24 மணி நேரத்தில் 95 செ.மீ மழை பெய்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
சென்னை போன்ற ஒரு பெருநகரில் 2 நாட்களில் பெய்த 50 செ.மீ மழையே பல வாரங்களுக்கு நகரத்தை வெள்ளத்தில் தத்தளிக்க வைத்த போது, காயல்பட்டினம் எனும் சிறிய ஊரில் ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய மொத்த மழை 24 மணிநேரத்தில் பெய்தால் அந்த ஊரின் நிலை என்னவாகும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.
தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு..!!
நெல்லை,
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நெல்லையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய லேசான மழை பெய்தது. நேற்று அதிகாலை முதல் மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. பகல் 12 மணி அளவில் இருந்து கனமழை கொட்டித்தீர்த்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மிக கன மழை பெய்தது. மணிமுத்தாறு அணை மற்றும் அருவியின் மேல் பகுதியில் அமைந்திருக்கும் தேயிலை தோட்ட பகுதிகளான மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து மற்றும் காக்காச்சி பகுதிகளில் தலா 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவி வழியாக அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. மணிமுத்தாறு அருவி இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மூழ்கியவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது.
ஞாயிறு, 17 டிசம்பர், 2023
யாழ் வர்த்தகர் மகன் 10 கோடி ரூபா போதைப் பொருளுடன் கைது!!
நித்தியானந்தன் உங்கள் தோழன்: யாழ் பிரபல வர்த்தகர் ராஜனின் மகன் 10 கோடி ரூபா போதைப் பொருளுடன் கைது!! யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் ராஜனின் மகன் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதிமிக்க போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டான். யாழ்ப்பாணத்தின் போதைப்பொருள் விற்பனைக் கும்பல்களின் பிரதான வலையமைப்புக்களில் ஒன்றில் இவனது பங்கு பிரதானமாக இருந்ததாக கருதப்பட்டுவந்த நிலையிலேயே இவன் கைது செய்யப்பட்டான்.
இவனிடமிருந்து குஷ் ரக போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் இலங்கைக்கு புதிய வகையான போதைப்பொருளாகும். இன்னும் இலங்கையில் இந்த போதைப் பொருளை தடைசெய்யப்பட்ட போதைப் பொருளாக சட்டத்தில் கொண்டு வரப்படவில்லை. அதனால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ராஜனின் மகன் சிலவேளை பிணையில் வர சந்தர்ப்பம் உள்ளதாக தெரியவருகின்றது.
கயானா: 10இல் 4 பேர் இந்திய வம்சாவளியினர்
வெனிசுலாவுடன் இந்நாட்டுக்கு பல நூற்றாண்டுகளாகப் பழமையான தகராறு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இங்கு இருப்பவர்களில் 10-ல் 4 பேர் எப்படி இந்தியர்களாக உள்ளனர் என்ற கேள்வி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இந்நாட்டில் உள்ளவர்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாட்டவர்களாக உள்ளனர். நாட்டின் முழுப் பகுதியும் பிரிட்டிஷ் காலனியாக இருந்தபோது எப்படி இந்த எண்ணிக்கையில் இந்தியர்கள் அங்கு சென்றனர்?
கனமழை - 3 மாவட்டங்களுக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை
மாலை மலர் : நெல்லை: தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.