சனி, 1 அக்டோபர், 2011

அமெரிக்கக் கடன் நெருக்கடி- மைனரின் சாயம் வெளுத்தது!

 ‘‘உலகின் மிகப் பெரிய பணக்கார நாடு” என அமெரிக்காவைப் பற்றி உலகெங்கிலும் திணிக்கப்பட்டிருந்த பிம்பத்தை, அந்நாட்டின் கடன் நெருக்கடி மீண்டுமொருமுறை கலைத்துப் போட்டுவிட்டது. உலகிலேயே மிகப்பெரிய கடனாளி நாடு அமெரிக்காதான் என்பதை மட்டுமின்றி, வல்லரசு அமெரிக்கா மஞ்சக் கடுதாசி கொடுக்க வேண்டிய போண்டி அரசாக இருப்பதையும் இந்தக் கடன் நெருக்கடி அம்பலப்படுத்தியிருக்கிறது.
அமெரிக்கக் கடன் நெருக்கடி -  மைனரின் சாயம் வெளுத்தது !1970களில் 283 கோடி அமெரிக்க டாலராக இருந்த அமெரிக்காவின் கடன் சுமை, 2011இல் 14.5 இலட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்தக் கடன் தொகையை இந்திய ரூபாயில் சொன்னால் (66,70,00,00,00,00,000  அதாவது, 6.67 கோடியே கோடி ரூபாய்) அதிலுள்ள பூஜ்யங்களை எண்ணுவதற்கே தலை கிறுகிறுத்துப் போய்விடும். இம்மொத்தக் கடனில் சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடன் மட்டும் 4.5 இலட்சம் கோடி டாலர்கள்.

யாழ். குடா கிறீஸ் பூத பின்னணியில் இந்தியர்களும் புலம் பெயர் தமிழர்களும்

-மேஜர் ஜெனரல் மஹிந்த அதுருசிங்க! 

யாழ். குடாவில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான நிலைக்கும் சட்ட விரோத செயற்பாடுகளுக்கும் உல்லாசப் பயணிகளாக இலங்கை வந்து யாழ். குடாவுக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரஜைகளின் ஒரு குழுவினரே காரணம் என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அதுருசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான சுமார் 17 பேரைக் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். குடாவில் ஏற்பட்டுள்ள கிறீஸ் பூத விவகாரத்தின் பின்னணியில் இவர்களது தொடர்பும் இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ள அவர், இவர்களுக்கும் புலம் பெயர் தமிழர்களுக்கும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

தமிழ் வாக்குகளுக்காக கனடா அரசியல் செய்ய கூடாது

உள்நாட்டு அரசியல் லாபங்களுக்காக கனடா இலங்கையை பலிக்கடவாக்கக் கூடாது-ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணே!

உள்நாட்டு அரசியல் லாபங்களுக்காக கனடா, இலங்கையை பலிக்கடவாக்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.
கனேடிய வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து, இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜ் ராஜரட்னம் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியுள்ளதாக

ராஜ் ராஜரட்னம் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியுள்ளதாக வானிட்டி என்னும் பிரபல சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது!

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பிரபல அமெரிக்க வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியுள்ளதாக வானிட்டி பெயார் என்னும் பிரபல சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.

ராஜ் ராஜரட்னம் அமெரிக்க நிதிச் சந்தை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நிதிச் சந்தை சார் தகவல்களை இரகசியமாக பெற்றுக் கொண்டு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகளுக்கு ராஜ் ராஜரட்னம் பெருமளவு பணத்தை வழங்கியதாக குறிப்பிடப்படுகிறது.

ஜேவிபியின் இரட்டை முகம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது!

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜேவிபி சந்திக்கின்ற மிக நெருக்கடியான காலகட்டம் இது. முன்னரும் ஜேவிபி பல நெருக்கடியான காலகட்டங்களைத் தாண்டி வந்திருக்கிறது தான் என்றாலும் அவற்றிற்கும் இப்போதுள்ள நெருக்கடிக்கும் இடையே பிரதானமான வேறுபாடு ஒன்று உள்ளது.

முன்னைய சந்தர்ப்பங்களின் போதெல்லாம் நெருக்கடி ஏற்பட்டது அதற்கு வெளியிலிருந்து தான். குறிப்பாக 1971 கிளர்ச்சியின் போதும், 1988 -1989 காலகட்டத்தின் போதும் அது நெருக்கடியை வெளியிலிருந்து எதிர்கொண்டது. அவ்விரு சந்தர்ப்பங்களின் போதும் தனது உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் ஆயிரக்கணக்கில் இழக்க நேர்ந்த போதும் சரி, ஏன் அதன் ஏன் தலைவரையும் இழந்த போதும் சரி அது இவ்வாறான ஒரு நெருக்கடிக்கு ஆட்பட்டதில்லை.

2ஜி, சுவாமி, சிதம்பரம், இராசா, கனிமொழி

வெகு நாள்களுக்குப் பிறகு 2ஜி பற்றி எழுதுகிறேன். என் கருத்தில் இப்போதும் மாற்றமில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் இல்லாமல் கொடுத்ததால் நஷ்டம் ஏதும் வந்துவிடவில்லை என்றே தொடர்ந்து சொல்லிவந்துள்ளேன். இப்போதும் அப்படியே.
சுவாமி என்ன வாதிடுகிறார்? இராசா தனியாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் அமைச்சரவை, இரு அமைச்சர்கள் அடங்கிய குழுவை நியமித்து, முடிவை அவர்களே எடுக்குமாறு கூறியது. அந்த இரு அமைச்சர்கள் அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதமபரமும் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.இராசாவும். எனவே ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாமல் சும்மா கொடுத்ததால் நஷ்டம் ஏற்பட்டது என்றால் அதற்கு இருவருமே காரணம். எனவே இராசாவைப் போலவே சிதம்பரத்தையும் விசாரித்து ஜெயிலுக்கு அனுப்புங்கள் என்கிறார் சுவாமி.
சிறை நாள்களைத் திருப்பித் தரமுடியுமா நீதிமன்றத்தால்?
நியாயமான வாதம்தான். இதனால்தான் அரசு ஆரம்பத்திலிருந்தே, ஒரே குரலில் பேசியிருக்கவேண்டும். ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாததால் நஷ்டம் ஏதும் இல்லை என்று அடித்துச் சொல்லியிருந்தால் இத்தனை கூத்தும் தேவையே இல்லை.

வங்காரி மாத்தாய் : ஒரு தேன்சிட்டின் மௌனம்

பெரிய பெரிய விலங்குகளும் சின்ன சின்ன விலங்குகளும் உள்ள ரொம்ப பெரிய காடு அது. விதம் விதமான பறவைகள். பற்பல பூச்சிகள். உயர்ந்த மரங்கள். எல்லாவிதமான உயிர்களுக்கும் அந்த காடுதான் வீடு. ஆனால் ஒருநாள் அங்கே எவரோ தீ மூட்டிவிட்டனர். காடு எரிய ஆரம்பித்தது. காட்டில் வாழும் விலங்குகள் பதறின. அங்கும் இங்கும் ஓடின. மரங்களோ ஓட முடியாமல் இறுதி வரை எரிய தங்களை தயார் படுத்திக் கொண்டன. ஓடிய விலங்குகள் எல்லாம் ஒரு தடாகத்தின் அருகே சிறிய குன்றொன்றில் நின்று கொண்டு தம் நல்ல இல்லம் எரிந்து சாம்பலாவதைச் செயலிழந்து பார்த்துக் கொண்டிருந்தன.
அப்போது அங்கு ஒரு விசித்திரம் நடந்தது. ஒரு சின்னஞ்சிறிய தேன் சிட்டு எரியும் காட்டுக்குள் சென்றது. பின் திரும்பியது. தடாகத்துக்குள் மூழ்கியது. பின் மீண்டும் காட்டுக்குள் சென்றது. இப்படி பல முறை.
யானைதான் கேட்டது முதலில். ‘என்ன செய்கிறாய் நீ?’
‘காட்டு நெருப்பை அணைக்கப் பார்க்கிறேன்’ என்று வந்தது பதில். ‘என் வாய் நிறைய தடாக நீரை நிரப்பி காட்டுத் தீயை அணைக்கப் பார்க்கிறேன். நம் வீடல்லவா பற்றி எரிகிறது. பார்த்துக் கொண்டு சும்மா நிற்க முடியுமா?’

எனக்கு ஞாபக மறதி! ப.சிதம்பரம்கணக்கிலும் பலவீனம்

புது தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசுகிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்
புது தில்லி, செப்.30: 2ஜி விவகாரம் குறித்த செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் தனக்கு ஞாபக மறதி உள்ளதாகத் தெரிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஒவ்வொரு மாதமும் தில்லியில் செய்தியாளர்களை சந்தித்து தனது துறை சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். தனது துறையின் செயல்பாடு, எதிர்காலத் திட்டம் குறித்து விளக்கம் அளிக்க செய்தியாளர்கள் கூட்டத்தை சிதம்பரம் கூட்டினாலும் அவரது துறை சாராத கேள்விகளை அவரிடம் செய்தியாளர்கள் கேட்காமல் விடுவதில்லை.இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார் சிதம்பரம். 2ஜி விவகாரத்தில் அவருக்கு இக்கட்டான சூழல் உருவாகியுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதனால் இந்தச் சந்திப்பின் போது பெரும்பாலும் 2ஜி சார்ந்த கேள்விகளையே செய்தியாளர்கள் எழுப்பினர். இதற்கு சிதம்பரமும் சளைக்காமல் சுவையாகப் பதில் அளித்தார்.அவை வருமாறு:செய்தியாளர்கள்: 2ஜி விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், உங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஒரு வழியாக சமரசத்தில் முடிந்துள்ளது. இதை உங்களுக்கு கிடைத்த வெற்றியாகவும், பிராணாபுக்கு கிடைத்த தோல்வியாகவும் எடுத்துக்கொள்ளலாமா?ப.சிதம்பரம்: நீங்கள் சொல்வதுபோல் எந்த ஒரு சம்பவமும் உள்துறை அமைச்சகத்தில் நடந்ததாக எனக்கு ஞாபகமில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எனக்கு ஞாபக மறதி உண்டு.செய்தியாளர்கள்: 2ஜி விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்னையால் நீங்கள் எத்தனை தடவை ராஜிநாமா செய்ய முன்வந்திருப்பீர்கள்?ப.சிதம்பரம்: எனக்கு ஞாபக மறதி உண்டு என்பது மட்டுமல்ல எனக்கு கணக்கிலும் பலவீனம் உண்டு. செய்தியாளர்கள்: நன்றாக யோசித்துப் பாருங்கள். ஒரே ஒரு தடவை ராஜிநாமா செய்ய முன்வந்திருப்பீர்களா?ப.சிதம்பரம்: உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இப்போதுதான் நான் எண்ணக் கற்றுக்கொள்கிறேன்.

பாலா, அமீர் தயாரிப்பாளர்களை புலம்பவிடுவதில் வல்லவர்கள்

ஆதிபகவன் என்னாச்சு - தாடி எங்கே? ஜெயம் ரவி பதில்...  

   பாலா, அமீர் போன்ற இயக்குனர்கள் சிறந்த இயக்குனர்கள் என்பதை நிரூபித்திருந்தாலும் தயாரிப்பாளர்களை புலம்பவிடுவதில் வல்லவர்கள். விக்ரம், சூர்யா, ஜீவா, கார்த்தி என இப்போதைய வசூல் நாயகர்கள் எல்லோரும் இவர்களைக் கடந்து வந்தவர்கள் எனபதும் குறிப்பிடத்தக்கது.

புகைக்கும்' சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தால், இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக ஒன்பது லட்சம் பேர், இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் இந்த தொகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது' என்ற அதிர்ச்சித்தகவல், ஆய்வு ஒன்றில், வெளியாகியுள்ளது.

ஐ.நா.,வின் அங்கமான உலக சுகாதார அமைப்பு, "குளோபல் அடல்ட் டொபோக்கோ சர்வே' என்ற புகையிலை பயன்பாட்டு விகித ஆய்வை நடத்துகிறது. இந்த ஆய்வு, புகையிலை பழக்கம் அதிகம் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்படுகிறது. தற்போது, இந்தியாவில் நடந்த ஆய்வில், 15 வயதிற்கு மேல், புகையிலை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது.

கனிமொழிக்கு ஜாமின் சி.பி.ஐ எதிர்ப்பு, சிதம்பரத்தை விசாரிக்ககூட தேவை இல்லை

புதுடில்லி :"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழி உள்ளிட்ட ஏழு பேருக்கு ஜாமின் அளிக்க, சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில், தி.மு.க., எம்.பி., கனிமொழி, கலைஞர் "டிவி' நிர்வாகி சரத் குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் புரோமோட்டர் ஷாகித் பல்வா, குசேகான் வெஜிடபிள்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானி ஆகிய ஏழு பேரும், இரண்டாவது முறையாக ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களுக்கு ஜாமின் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.பி.ஐ., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

புலிக்கொடி ஏந்தி புலன்கெட்டுக் கிடக்கும் புலன்பெயர்

இன்னும் பல சராச்சந்திரன்களை உருவாக்கத் துடிக்கும் புலன்பெயர் புலியமைப்புக்கள் (ஜிரிஎவ்,ரிஜிரிஇ,பிரிஎவ்.ரிவைஓ…..இன்னும் பல) திருந்துவார்களா இவர்கள்….?

நியூயோர்க் சிறையிலிருந்து கனேடிய முன்னாள் இளையோர் அமைப்பின் தலைவரான சதாஜன் சராசந்திரன் தன்நிலையுணர்ந்து வரைந்த கடிதம் இன்னும் புலிக்கொடி ஏந்தி புலன்கெட்டுக் கிடக்கும் புலன்பெயர் தமிழர்களின் இதயத்தை உலுக்கியிருக்க நியாயமில்லைத் தான்.
அவர் தனது கடிதத்தில் பிழையான வழி நடத்தல்களாலும் தேவையற்ற வகையில் வன்முறை உணர்வுகளைத் தூண்டி விட்டதாலும் தான் இந்த  நிலைக்குள்  மீளமுடியாத சகதிக்குள் வீழ்ந்துவிட்டதாக எண்ணி மிக வேதனைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு விதிக்கப்பட்ட 25 வருட சிறைத்தண்டனையில் ஐந்தாண்டுகள் மட்டுமே கழிந்த நிலையில் தான் சார்;ந்த இளம் சமூகம் இந்த வன்முறைப் போராட்டங்களில் சிக்கி வழி தவறிவிடக்கூடாது என்ற நன்னோக்கோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லை என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் ஆயுதங்களை ஏந்தி தமிழ் இளைஞர் யுவதிகள் தவறிழைக்கக் கூடாது என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.அதேவேளை இவ்வாறு வழிநடத்தும் தலைமைகள் சுயநலநோக்கோடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தலைமைகளிடம் சிக்கி புலம்பெயர் தேசங்களிலும் எமது இளம் சமூகத்தை சீரழிவதற்கு நாம் எல்லாம் காரணகர்த்தாக்களாக வேண்டுமா?

முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு நன்றி

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் 1800 பேரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றைய தினம் அவர்களது பெற்றோர்களிடம் கையளித்தார்.
அலரி மாளிகையில் நேற்றுக் காலை நடைபெற்ற விசேட வைபவத்தில் இவர்கள் 1800 பேரும் தமது உறவினர்களுடன் இணைந்து கொண்டதுடன் பெற்றோர்களிடம் பிள்ளைகளை ஒப்படைத்த ஜனாதிபதி அவர்களின் எதிர்கால வளமான வாழ்வுக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்தியா தலையிடாது மன்மோகன் சிங் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

இலங்கையின் உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா தலையீடுகளை மேற்கொள்ளாது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்!

இலங்கையின் உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா தலையீடுகளை மேற்கொள்ளாது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நிவ்யோர்க்கில் இடம் பெற்ற 66 வது ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் கலந்து கொண்ட போது இலங்கை ஜனாதிபதிக்கு இது குறித்து தெளிவுப்படுத்தியதாக மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

வன்முறையை கைவிடுங்கள்” –புலிகளின் கனடிய ஆயுதத் தரகர் வலியுறுத்தல்

sathjhanவன்முறையை கைவிடுங்கள்” – சிறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் கனடிய ஆயுதத் தரகர் வலியுறுத்தல்
சத்ஹஜன் சரத்சந்திரன் எல்.ரீ.ரீ.ஈ முகாமில் வைத்து ஒரு இயந்திரத்துப்பாக்கியை பிடித்தபடி உள்ளார்,சிறையிலிருந்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் அந்தக் குழுவை கைவிட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.(அமெரிக்க மாவட்ட நீதி மன்றின் கோப்புகளிலிருந்து)
ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஸ்ரீலங்கா போராளிக் குழு ஒன்றுக்காக, 1 – மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதத் தரகில் ஈடுபட்டிருந்த சமயம் பிடிபட்ட ஒரு முன்னாள் கனடியத் தமிழ் செயற்பாட்டாளர், தனது தவறுகளை மீண்டும் யாரும் செய்யவேண்டாம் என இளைஞர்களை வலியுறுத்தி எழுதியுள்ள பகிரங்கக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தெற்கைப்போல் வடக்கையும் பார்ப்பவன். நாம் பிரிந்து நிற்காமல் இணைந்து செயற்படுவோம்

Mahintha-0110111,800 முன்னாள் புலி உறுப்பினர்களை பெற்றோரிடம் கையளிக்கும் வைபவத்தில் ஜனாதிபதி அழைப்பு
ஒரு சிலரது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இலட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பலியிட இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

கடந்த கால கசப்பான சம்பவங்களைக் கிளறி பகைமையையும் குரோதத்தையும் தோற்றுவிப்பதை விடுத்து ஒரு தாய் மக்களாக நாம் அனைவரும் இணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நான் வடக்கு, கிழக்கு என பிரித்துப் பார்ப்பவனல்ல. எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் எமது மக்கள். தெற்கைப் போலவே வடக்கையும் பார்ப்பவன் நான். நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளதால் பிரிந்து நிற்காமல் நாம் இணைந்து செயற்பட்டு நம் தாய் நாட்டை முன்னேற்றுவோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

என்னை NLFT இயக்கத்தின் ‘அன்ரன் பாலசிங்கம்’ ஆக்கிய புலிகள்!

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (16)
LTTE torture camp-6காந்தியும் உதயனும் என்னைக் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருக்கையில், இரவு 7 மணியளவில் ஒரு சிறிய மினிவான் அங்கு வந்து நின்றது. அதைத் தொடர்ந்து அங்கு நின்ற புலிகள் எல்லோரும் சுறுசுறுப்பானார்கள். அதன்பின் காந்தி எழுந்து எங்கோ சென்றுவிட்டான். அவனுடைய கூட்டாளி உதயன் தொடர்ந்து என்னிடம் விசாரணை நடாத்திக் கொண்டு இருந்தான். அவனுடைய விசாரணைகள் பெரும்பாலும் என்.எல்.எப்.ரி (NLFT – தமிழீழ தேசிய விடுதலை முன்னணி) இயக்கத்தைப் பற்றியதாகவே இருந்தன.
எனக்கும் என்.எல்.எப்.ரி இயக்கத்துக்கும் அரசியல் ரீதியாகவோ அல்லது ஸ்தாபன ரீதியாகவோ எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவனுக்கு திரும்பத்திருப்ப விளக்க முயன்றேன். அவன் எனது விளக்கத்தை ஏற்கும் நிலையில் இல்லை. என்.எல்.எப்.ரி இயக்கத்தின் முன்னோடி அமைப்பான ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ என்ற அமைப்பை எமது இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியே உருவாக்கியிருந்ததால், நாம் தான் என்.எல்.எப்.ரி இயக்கத்தையும் பின்னணியில் இருந்து இயக்குகிறோம் என்பதே புலிகளின் கருத்து என்பதை, அவனது உரையாடலிலிருந்து விளங்கிக் கொள்ள முடிந்தது.

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

சூப்பர் சிங்கர்.மலையாள சதியை தமிழ்மக்கள் முறியடித்தனர்


சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை :
ஸ்ரீநிவாஸ் ஆவேசம் - சுஜாதா கண்ணீர்
தமிழ் நாட்டு மக்கள் பெருவாரியான வாக்குகளை சாய் சரணுக்கு கொடுத்து இந்த மலையாள மாபியாக்களின் சதியை முறியடித்தனர்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் -3 ன் பயணம் கடந்த  ஜூலை 2010ல் தொடங்கியது.  தமிழகம், கனடா, சிங்கப்பூரில் இருந்தும் வந்து போட்டியில் கலந்துகொண்டு பாடிவந்தனர்.

தமிழ்த் திரையுலகின்  அனைத்து முக்கிய பின்னனிப் பாடகர்களும்,இசையமைப்பாளர்களும்
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தனர்.

சத்யப்பிரகாஷ்,ஸ்ரீநிவாஸ்,கிருஷ்ணா, தன்யஸ்ரீ, பூஜா என்று நல்ல பாடகர்கள்
பாடிக் கொண்டிருந்தார்கள்.    ஆனால் இறுதிப்போட்டி களத்தில்  சத்யப்பிரகாஷ், சாய்சரண், பூஜா,  சந்தோஷ் ஆகிய நால்வர் மட்டுமே நின்றனர்.

வடிவேலு:‘தொழிலைப் பாருய்யா’ன்னு தலைவரே சொல்லிட்டாரு!

  ‘‘உஷ்ஷ்...... ஓய்வுதான்! மூணு மாசம் ஓய்வு எடுத்தாச்சு! இனி சினிமாவில் அதிரடியாக இறங்கப்போறேன்! ரெண்டு பெரிய டைரக்டர்கள் ஒன் லைன் கதை சொல்லி இ ருக்காங்க! பெரிய ஹீரோவுடன் சேர்ந்து செய்யப்போறேன்!’’

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்குப் போகவில்லையா?

‘ஏன் இந்தக் கொலைவெறி?’ என்பது போல் நம்மை ஒரு மாதிரி பார்த்தார். ‘‘என்னோட முழுக்கவனமும் இனி தொழிலில்தான்! இந்த வடிவேலு காமெடிதானே இன்னமும் வீடு, வீடா ஓடிக்கிட்டிருக்கு! ‘தொழிலைப் பாருய்யா’ன்னு தலைவரே சொல்லிட்டாரு! அதனால் இனி சினிமாதான்! நானும் மிகப் பெரிய இயக்குநரும் மறுபடியும் ஒண்ணா சேரப் போறோம். அதுக்கான கதையைப் பத்திதான் பேசிக்கிட்டிருக்கிறோம். சீக்கிரமே அறிவிப்பு வரும்! எனக்கு யாரும் விரோதி இல்லை! ஆனா என்னை விரோதியா நினைக்கிறவங்களோடு கைகுலுக்கமாட்டேன்! இதாங்க என்னோட பாயிண்டு! ஆளை விடுங்க!’’ என்று சிரித்தார்.

காணிப்பதிவு: இடைநிறுத்துமாறு சங்கரி ஜனாதிபதிக்கு கடிதம்

காணிப்பதிவால் தமிழர்களுக்கு தொந்தரவு: இடைநிறுத்துமாறு சங்கரி ஜனாதிபதிக்கு கடிதம்
காணியமைச்சினால் காணிகள் பதிதல் சம்பந்தமாக தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்த சங்கரி வழமைப்போன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தின் முழு வடிவத்தை கீழே காண்க..
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ்,
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.
30-09-2011

காணியமைச்சினால் காணிகள் பதிதல் சம்பந்தமாக
கௌரவ ஐனாதிபதி அவர்களுக்கு,
மக்களின் சொந்தக் காணிகள், நம்பிக்கைச் சொத்தாக அல்லது வேறு விதமாக பெறுப்பேற்றிருக்கும் காணிகள் அத்தனையையும் அரசு பதிவதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்பதனை மிக்க வருத்தத்துடன் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

காணி அபிவிருத்தி அமைச்சினால் பி.எஸ்.01.2011 என்னும் இலக்கம் கொண்ட பத்திரம் மூலம் காணி சொந்தக்காராகளிடமிருந்து காணிகளைப் பதியும் விபரங்களை அவ்வளவு சுலபமாக எவராலும் சேகரிக்கவும் முடியாது. மக்கள் தருவது கடினமானதாகும். மக்கள் இத்திட்டத்தை நியாயப்படுத்தவும் முடியவில்லை.

பெரும் எதிர்ப்பார்ப்பு 'வாகை சூடவா' - 'வெடி'!

Vaagai Sooda Vaa and Vedi
இன்று வெள்ளிக்கிழமை... வழக்கமாக பண்டிகை தினங்களில்தான் விசேஷமான படங்கள் வெளியாகும்.

ஆனால் இந்த வெள்ளிக்கிழமை இரண்டு முக்கியமான படங்கள் வெளியாகின்றன. ஒன்று களவாணி படம் மூலம் நம்பிக்கை இயக்குநராகத் திகழும் ஏ சற்குணம் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படைப்பான வாகை சூடவா.

இந்தப் படம் முழுக்க முழுக்க 1966-ம் ஆண்டின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளதால், நல்ல படம் பார்க்கத் துடிக்கும் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் வாகை சூட வா-வுக்கு காத்திருக்கிறார்கள்.

ராசாவுக்கு ஒரு நியாயம், சிதம்பரத்திற்கு ஒரு நியாயமா?: பாஜக

ஆதாரங்கள் இருந்தும், சிதம்பரத்தை வெளியே விட்டுவைப்பதா? பாஜக


டெல்லி: 2ஜி விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருக்கின்றது. அதனால் அவரை திஹார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது.
பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் துவங்கியது. அதில் பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறியதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்ததாவது,

ஜெயலலிதா வென்றார்! 2 கோடி ஊழல் பரிசு வழக்கு தள்ளுபடி

Jayalalithaரூ. 2 கோடி பிறந்த நாள் பரிசு வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதா விடுவிப்பு

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறந்த நாள் பரிசாக ரூ 2 கோடி காசோலைகள் வந்தது தொடர்பான வழக்கிலிருந்து அவரை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, அவரது பிறந்த நாளுக்குப் பரிசாக ரூ. 2 கோடி அளவிலான காசோலைகள் வந்தன. இதை அரசுக் கணக்கில்சேர்க்காமல்தனது கணக்கில் அவர் போட்டுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா தவிர, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிஐ நடத்தி வந்தது.

சந்தேகநபர் மரணம்! கம்பஹா - தொம்பே பொலிஸில் பதற்றம்

கம்பஹா - தொம்பே பொலிஸ் நிலைய பகுதியில் ஒரு வகை பதற்ற சூழ்நிலை காணப்படுவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும்போதே உயிரிழந்துள்ளதை அடுத்து அங்கு பிரதேசவாசிகள் கூடியுள்ள நிலையில் இந்த பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இணைப்பு:- இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததுடன் அங்கிருந்த பொலிஸ் வாகனங்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.
பின்னர் சிவில் பாதுகாப்புப் படையினர் அவ்விடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

யாழ். இந்துக் கல்லூரி மணவர்கள் ஆர்பாட்டம்

Jhc demo-1
யாழ். குறிகட்டுவான் பிரதேசத்தில் மாணவன் பஸ்ஸில் ஏறும்போது தவறி வீழ்ந்து பலியான சம்பவதில் யாழ். இந்துக் கல்லூரியின் நிர்வாகத்தினரின் கவனயீனமான செயற்பாடே காரணம் என தெரிவித்து கல்லூரி மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீதிகளில் சைக்கிள் ரயர்களைப் போட்டு எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். 44 பேர் பயணிக்க கூடிய பஸ்சில் 90இற்கும் அதிகமான மாணவர்களை அனுமதித்தமை, ஒழுங்கற்ற நிர்வாக முறைகாரணமாகவும், அந்த மாணவர்களோடு பெறுப்பு வாய்ந்த ஆசிரியர்கள் கூடத் செல்லவில்லை எனவும் குற்றம் சுமத்தினர்.

குறிகட்டுவானில் யாழ் இந்து மாணவன் பலி கோர விபத்து


குறிகட்டுவான் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற கோரவிபத்தில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் நல்லைநாதன் தனுசன் அவ்விடத்தில் உயிரிழந்துள்ளார்.
இம்மாணவன் திருநெல்வேலி கிழக்கு வாலையம்மன் கோவிலடியை சேர்ந்தவராவர்.
இவரது ஈமைகிரிகைகள் இன்று நடைபெறுகிறது.
நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவிலுக்கு நவராத்திரி பூஜையினையொட்டி யாழ் இந்து கல்லூரியிலிருந்து ஒரு தொகுதி மாணவர்கள் கோவிலுக்கு சென்று விழிபாடுகளை முடித்து விட்டு வரும் போது குறிகட்டுவான் பிரதேசத்தில் பஸ்ஸில் ஏறும்பொழுது தவறி பஸ் சில்லுக்குள் தலை சிக்குண்டதன் காரணமாக திருநெல்வேலியைச் சேர்ந்த தரம் 9ல் கல்வி கற்றும் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் நல்லைநாதன் தனுசன்; அவ்விடத்தில் உயிரிழந்துள்ளார்.

மனைவி: ‘ஆமாம்...அவன் என் காதலன்தான்

மனைவியிடம் இது பற்றி கேட்டார். ‘ஆமாம்...அவன் என் காதலன்தான்

மதுரையைச் சேர்ந்தவர் தங்கவேலு. ஷேர் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்க்கிறார். இவருக்கும் மாலினிக்கும் சமீபத்தில்தான் திருமணம் செய்தார்கள். கணவர் தங்கவேலுவை விட சாஃப்ட்வேர் துறையில் வேலை பார்க்கும் மாலினிக்கு எக்கச்சக்க சம்பளம். இதனாலயே தங்கவேலு குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி தினந்தோறும் வீட் டில் சண்டை போட்டுக் கொணடார்கள். மாலினிக்கு இரவு, பகல் என மாறி மாறி வேலை இருந்ததால் கணவரே சமைக்கும் நிலை. ஏதோ குடும்பம் ஓடிட்டிருக்கு என்ற நினைப்பில் இருந்த தங்கவேலுக்கு ஒரு திடீர் ஷாக்.

யாரோ ஒரு நபர் வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டுக்கு மர்மமாக வந்துபோவதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்ல, தங்கவேலு தன் மனைவியிடம் இது பற்றி கேட்டார். ‘ஆமாம்...அவன் என் காதலன்தான். பெங்களூரில் ஒன்றாக வேலைபார்த்தபோதே இருவரும் நெருக்கமாயிட்டோம்’ என்று சாதாரணமாக சொல்லியிருக்கிறார்.

தோற்ற கருணாநிதியே தனியாக நிற்கும்போது, ஜெயித்த நமக்கு என்னவாம்?

அரசியல் தன்னைச் சுற்றியே சுழல வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் கருணாநிதி.

 சக அரசியல் சக்திகளை வெறும் கறிவேப்பிலையாகக் கருதும் எண்ணம், எதிர்பாராத நேரத்தில் சறுக்கலையே கொடுக்கும். நல்லதையும் அல்லதையும் சொல்ல நண்பன் இல்லாதது சொந்த வாழ்க்கைக்கு மட்டும் அல்ல; பொது வாழ்க்கைக்கும் இழப்பாகவே ஜெயலலிதாவுக்கு இருக்கப்போகிறது!ப.திருமாவேலன்
'தனியே... தன்னந்தனியே...’ இது இப்போது காதல் பாட்டு அல்ல. தேர்தல் பாட்டு!
வென்றாலும் வீழ்ந்தாலும் அரசியல் தன்னைச் சுற்றியே சுழல வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் கருணாநிதி. அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளை மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தொடங்குவதற்கு முன்பே, ''இந்தத் தேர்தலில் தி.மு.க. தனித்துப் போட்டி!'' என்று கருணாநிதி அறிவித்தார். கடந்த 40 ஆண்டுகளாக சவாரி பாலிடிக்ஸ் செய்துவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு, இதை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. கருணாநிதியின் அறிவிப்புக்குக் கருத்து சொல்லாத தங்கபாலு, ''காங்கிரஸும் தனித்துப் போட்டி!'' என்று காமெடி பண்ணினார். ''இத... இதத்தான் எதிர்பார்த்தேன்' என்றார் இளங்கோவன். தீராத தலைவலியில் சிக்கி இருக்கும் சிதம்பரத்துக்கு இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட நேரம் இல்லை. ஜி.கே.வாசன் இப்போது கப்பலைப்பற்றி மட்டுமே பேசுகிறார். கட்சிபற்றிப் பேசுவது இல்லை.

ப.சி. மாட்டினால், 2ஜி-யில் சிக்கப்போகும் '4-வது ஜி பிரதமர் மன்மோகன்

மிஸ்டர் 4G ப.சி! ப.திருமாவேலன்

ஆ.ராசாவையும் கனிமொழியையும் லபக்கிய ஸ்பெக்ட்ரம் பூதம்... தயாநிதி மாறன் மீது லேசான பல் தடத்தை மட்டும் பதித்துவிட்டு, இப்போது ப.சிதம்பரம் பக்கம் திரும்பி இருக்கிறது!
ப.சி. மாட்டினால், 2ஜி-யில் சிக்கப்போகும் '4-வது ஜி’-யாகச் சொல்லலாம். 5-வது ஜி-யாக பிரதமர் மன்மோகன் சிங்கே இருக்கலாம்!


ராசா மீது சீறிப் பாய்ந்த சி.பி.ஐ, சிதம்பரம் விஷயத்தில் சிணுங்கிப் பதுங்குமானால், ''இந்த வழக்கே அரசியல் உள்நோக்கம்கொண்டது'' என்று கருணாநிதி சொல்லிவந்த குற்றச்சாட்டு உண்மை ஆகிப்போகும்
இந்தியாவின் தொலைத் தொடர்பு வளத்தை எவ்வித விதிமுறையும் இல்லாமல் பட்டா போட்டுப் பண்ணையம் பண்ணிய கதையின் க்ளைமாக்ஸ் இன்னமும் தெரிய வில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களை திஹார் சிறையில்வைத்து, விவகாரத்தை பாட்டியாலா கோர்ட்டில் விசாரித்தாலும், ஏக இந்தியாவும் ஒரே மூச்சாக நம்புவது இந்தியாவின்உச்ச நீதிமன்றத்தைத்தான்.

மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது சி.பி.ஐ. குற்றச்சாட்டு பதிவுசெய்கிறது. இரண்டு, மூன்று முறை விசாரிக்கிறது. 'அவர் மீது தவறு இருக்கிறது’ என்று 'நம்பிய’ மன்மோகன் சிங், பதவி விலகச் சொல்கிறார். ராசா ராஜினாமா நடக்கிறது. சி.பி.ஐ. அவரைக் கைது செய்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தொலைத் தொடர்பு அமைச்சராக வந்த கபில்சிபல், ''எந்தத் தவறும் நடக்கவில்லை'' என்று அடம்பிடித்தார். அப்படியானால், ஆ.ராசாவை எதற்கு ராஜினாமா செய்யச் சொன்னார் பிரதமர்? மத்திய அமைச்சராகவே அவரை வைத்துக்கொண்டு, மத்திய அரசே வழக்கை நடத்தி இருக்கலாமே? என்ற கேள்விக்குப் பதில் இல்லாத நிலையில், ப.சிதம்பரம் வருகிறார்.

மதுரை மேயர் பதவி தேர்தல் ஓடிப் போன' பாமக!

Ramadoss

மதுரை மேயர் பதவி தேர்தல்: சொல்லாமல் கொள்ளாமல் 'ஓடிப் போன' பாமக!

மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த பாமக திடீரென பின்வாங்கிவிட்டது.
இந்தப் பதவிக்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

பழம்பெரும் நடிகர்-இயக்குநர் எஸ்.ஏ.கண்ணன் மரணம்

பில்லா-2வில் அஜித்துக்கு ஜோடியாக பார்வதி ஓமண குட்டன்...!


Parvathy omanakuttan to pair with Ajith in Billa-2
பில்லா-2வில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருந்த ஹியூமா குரேஷி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற பார்வதி ஓமணக்குட்டின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மங்காத்தா படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடித்து வரும் படம் பில்லா-2. இது ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லா படத்தின் 2ம் பாகம் ஆகும். இப்படத்தை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோல்டி இயக்குகிறார், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்துஜா குழுமத்தின் ஐஎன் எண்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனமும், சுரேஷ் பாலாஜி-ஜார்ஜ் பயஸின் வைட் ஆங்கிள் நிறுவனமும் இணைந்து பில்லா-2 படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு மலிவுவிலை கணினி அக்.5இல்

புதுடில்லி, செப்.29-தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மலிவு விலையில் (ரூ.1,715) கையடக்க கம்ப்யூட்டர் மற்றும் அதற்கான உபகரணங்களை வழங்க உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்தார்.

இது குறித்து கபில்சிபல் கூறுகையில், தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை அனைவருக்கும் எளிய வழியில் தொழில்நுட்ப வசதி கிடைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதற்காக சந்தையில் உள்ள மற்ற கம்ப் யூட்டர்களில் உள்ள வசதிகள் போன்று மலிவு விலையில் கையடக்க கம்ப்யூட்டர் தயாரிக்கப் பட்டுள்ளது.

இந்த கம்ப்யூட்டரின் விலை ரூ.1,715. இவை அக்டோபர் 5ஆம் தேதி முதல் மாணவர் களுக்கு வழங்கப்படும்.

புலம்பெயர் புலிப்பினாமிகளின் புலிமாயை

சிறைவாசம் தந்த ஞானோதயம் புலிகளுக்கு உயிரூட்ட நினைப்பவர்களின் செவிப்பறைகளுக்கு

கனேடிய சிறையில் கடந்த ஐந்து வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுத முகவரான சதாஜன் சாராசந்திரன் தமிழ்இளைஞர் யுவதிகளுக்கு கடிதம் மூலம் பகிரங்க கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லை என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் ஆயுதங்களை ஏந்தி தமிழ் இளைஞர் யுவதிகள் தவறிழைக்கக் கூடாது என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருந்த போது தான்  கைது செய்யப்பட்டதாகவும்

சந்தன வீரப்பன் பெயரால் வனத்துறை மேற்கொண்ட கற்பழிப்பு கொலை கொள்ளை

1992-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி, தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் சந்தனக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக்கூறி, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய சோதனையின்போது அரங்கேற்றப்பட்ட அட்டூழியங்களுக்கு 2011 செப்டம்பர் 29-ல் தண்டனை கிடைத்திருக்கிறது.  பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நியாயம் கிடைத்திருக்கிறது. காலம் கடந்து கிடைத்த தீர்ப்பு ,

 இதற்காக அந்தக் கிராம மக்களும், மலைவாழ் அமைப்புகளும், இடதுசாரி இயக்கங்களும் தொடர்ந்து போராடியதால்தான் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, இப்போதாகிலும் நியாயம் கிடைத்திருக்கிறது.

புற்றுநோயில் இருந்து எஜமானரை மீட்டது நாய் இங்கிலாந்தில் ஆச்சரியம்

லண்டன் : எஜமானருக்கு புற்றுநோய் இருப்பதை மோப்ப சக்தியால் கண்டறிந்து உணர்த்தி உயிரை காப்பாற்றியுள்ளது செல்ல நாய். இது இங்கிலாந்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி லண்டனில் வெளியாகும் டெய்லி ஸ்டார் நாளிதழில் இடம்பெற்ற செய்தி வருமாறு: இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்தவர் பிரெண்டா ஜோன்ஸ். வயது 47. இவரது 5 வயது செல்ல நாய் மர்பி. கடந்த 10 நாட்களுக்கு முன்பிருந்து அதன் நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிந்தது. எப்போது பார்த்தாலும் பிரெண்டாவின் மடியில் வந்து படுத்துக் கொண்டது. வித்தியாசமான சத்தம் எழுப்பியது.
ஒரு வாரமாக அதை கவனித்த பிரெண்டா, ஏன் இப்படி செய்கிறாய் என்று அதை கேட்டபோது, ஒரு காலால் அவரது இடது மார்பகத்தை அழுத்தியது.

நாடுகடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் விடுதலை!

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் நேற்று சி. ஐ. டி.யினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மெக்ஸி புரொக்டர் தெரிவித்தார்.

புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட 50 இலங்கையர்களையும் நாட்டுக்கு திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசு தீர்மானித்திருந்தது. இதன்படி அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட 42 ஆண்களும் 8 பெண்களும் நேற்று காலை 10.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இலங்கையை வந்தடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த  4 வயது சிறுமி சுவாதி,  அங்குள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தாள். 1 1/2  மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை லசி போஷ்கோ, அசிரியை போர்சியா ஆகியோர் மாணவி சுவாதியை அறையில் அடைத்து வைத்து செக்ஸ் சித்ரவதை செய்தனர்.

 இந்த விஷயத்தை யாரிடமாவது கூறினால் இருட்டு அறையில் பாம்புடன் உன்னை அடைத்து வைத்துவிடுவோம் என்று மிரட்டினார்கள். ஆனாலும் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சுவாதி தனது பெற்றோரிடம் வந்து கூறினார். இதனால் கோபம் அடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினர் 20 பேரை அழைத்துக்கொண்டு 2 ஆசிரியைகளின் வீடுகளுக்கும் சென்று அவர்களை தாக்கினார்கள்.

இதில் போர்சியா காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மறுநாள் காலையில் இந்த தகவல் காட்டு தீ போல பரவியது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பள்ளி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி நகரமே பரபரப்புக்கு உள்ளானது. இந்த தகவல் தெரிந்ததும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியை போர்சியாவும், தலைமை ஆசிரியை லசி போஷ்கோவும் கள்ளக்குறிச்சியில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கொழும்பு - பரு. பஸ்சில் பயணித்த இருவருக்கு நஞ்சு கலந்த பால் கொடுத்து

கொழும்பு - பரு. பஸ்சில் பயணித்த இருவருக்கு நஞ்சு கலந்த பால் கொடுத்து பணம் நகை திருடியவர் நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைப்பு


கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற பஸ்ஸில் பயணித்த இருவருக்கு, நஞ்சு கலந்த பால் அருந்தக் கொடுத்து மயக்கி, அவர்களிடம் இருந்த 7,500 ரூபா பணம், கைத் தொலைபேசி, சங்கிலி என்பவற்றை அபகரித்துக் கொண்டு தப்ப முயன்ற காலியைச் சேர்ந்த ஒருவர் கையும் மெய்யுமாகப் பிடிபட்டு நீர்கொழும்புப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.மயக்கமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த இருவரும் உனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

முன்னாள் போராளி: புலிகளின் பொறுப்பற்ற செயலால் உயிர்களை இழந்தோம்

ஜனாதிபதியின் சிறந்த ஆளுமையினால்தான் தமிழ் இளைஞர்களுக்கு புதுவாழ்வு கிடைத்தது- புலிகளின் முன்னாள் போராளி சசிகுமார் கூறுகிறார்
புலிகளின் பொறுப்பற்ற செயலால் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்தோம் - விசாகன்
sasikumar-1"ஜனாதிபதி அவர்களின் பாரபட்சமற்ற நல்ல ஆளுமையினால்தான் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்களுக்கு புது வாழ்வு கிடைத்திருக்கிறது. என்னைப் போன்ற எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தினால் தவறான வழியில் இட்டுச் செல்லப்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகளை புனர்வாழ்வளித்து விடுவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குமாரவேல் சசிகுமார் கூறினார்.

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தில் இருந்த போதுதான் அனுபவித்த துன்பங்களைப்பற்றி விபரித்த அவர்; “ஜனாதிபதி மஹிந்த ராஜ்பக்ஷ அவர்கள் தனது வாழ்வுக்கு வழிகாட்டுவார்” என்று நம்பிக்கை வெளியிட்டார்.

எல்ரீ.ரீ.ஈ இயக்கத்தினால் பல்வேறு துன்பங்களை அனுபவித்து மயிரிழையில் உயிர்தப்பிய இரண்டு தமிழ் இளைஞர்கள் நேற்று தினகரன் காரியாலயத்திற்கு வந்து ஆசிரிய பீடத்தினரிடம் மனம் விட்டு உரையாடினார்கள்.

ஊழல்கள் நிரூபிக்கப்படுமாயின் உடன் விலகுவேன் : யாழ்.நகர முதல்வர்

'எனது ஊழல்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படுமாயின் மாநகர முதல்வர் பதவியில் இருந்து உடன் விலகுவேன்' என யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோயேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையின் 9 ஆவது கூட்டத்தொடர் இன்று வியாழக்கிழமை காலை யாழ்.மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். யாழ்.மாநகர சபையின் நிதி நிலமைகள், பாகுப்பாய்வு , வருமானங்கள் செலவீனங்கள் தொடர்பாக சபை உறுப்பினர்களுக்கு விளக்கும் தேவை தமக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் தான் மாநகர சபையின் வேலைத் திட்டங்களில் ஊழல் செய்து இருந்தால் அதனை ஆதாரங்களுடன் சபையில் நிரூபிக்கலாம் என சபை உறுப்பினர்களுக்கு அவர் சவால் விட்டுள்ளார். ஊழல் செய்ய வேண்டிய தேவை தனக்கு இல்லை என்று குறிப்பிட்ட அவர் யாழ்.மாநகர சபையின் நிதி நிலமைகள் பற்றி தெளிவு படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வியாழன், 29 செப்டம்பர், 2011

ஊடகங்களின் ஏக்கம், பிணங்கள் தெருவில் விழும் செய்தி வரவில்லையே

சங்கிலியன் சிலையை புத்தர் சிலையாக்கிய தமிழின விரோதிகள்.இப்போது யாழ் பழைய பூக்கா பற்றி திருகுதாளம்!…

யாழ் சங்கிலியன் சிலை புனரமைக்கப்பட்டபோது அங்கு புத்தர் சிலை கட்டப்படுவதாக தகிடு தித்து தாளம் போட்டன திரிபு வாத தமிழ் ஊடகங்கள். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த யாழ் ஊடகங்கள் சிலவும் புலம்பெயர் சொகுசு ஊடகங்கள் சிலரும் சேர்ந்து பொரித்த மீன் துடிக்குது பார் என்று துடி துடிக்க பொய்யுரைத்து மக்களை நம்ப வைத்தனர்.ஆனாலும், யுத்த அனர்த்தனங்களின் போது சிதைவுற்றிருந்த சங்கிலியன் சிலை புதுப்பொலிலோடு புதிய கம்பீரத்தோடு அதே இடத்தில் எழுந்து நின்ற போது வெட்கித்தலை குனிந்தன வெட்கம் கெட்ட தமிழ் ஊடகங்கள்.

சார்ஜாவில் இலங்கையர் 14 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை

சார்ஜாவில் உள்ள 14 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 6 இலங்கையர்கள் உள்ளடங்கலான கொள்ளையர் குழுவினரை சார்ஜா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பலகடைகளிலும் மற்றும் சந்தைதொகுதிகளிலும் பணமும் பொருட்களும் கொள்ளை போவதாக சார்ஜா பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையிலே குறித்த கொள்ளை குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துரைராசா போர் குற்றவாளி என கனேடிய நீதிமன்றம் அறிவிப்பு

புலிகளின் நிதித்துறையில் பணியாற்றியவரை போர் குற்றவாளி என கனேடிய நீதிமன்றம் அறிவிப்பு

தீவிரவாத இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு வரி மூலம் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட இலங்கை பிரஜை ஒருவரை போர் குற்றவவாளி எனக்கூறியுள்ள கனேடிய பிராந்திய நீதிமன்றம் அவரை கனடாவிலிருந்து நாடு கடத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

பூவசரச் துறைராஜா என்று அழைக்கப்படும் 36 வயதுடைய இலங்கையர் கனடாவிற்குச் செல்லும் முன்னர் இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டவர் என கனடாவில் உள்ள பிராந்திய நீதிமன்றம் ஒன்று அறிவித்துள்ளது.

விபச்சாரத்தை ஏன் அங்கீகரிக்க கூடாது?

கேள்வி:
பாலியல் தொழில் செய்யும் பெண்கள் மட்டும் இல்லையென்றால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிடும், சிறு பெண் குழந்தைகளை கூட கற்பழித்து சாக்கடையில் வீசுவது அதிகரிக்கும் என்பது என் எண்ணம், நம் இந்திய கலாசாரத்திற்கு அப்பாற்பட்டு மேற்கத்திய நாடுகளை போல் நம் அரசு பாலியல் தொழிலை ஏன் ஒரு குடிசை தொழிலாக கொண்டு வரக்கூடாது?இதனால் வேலைக்கு போகுமிடங்களிலும் பொது இடங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது குறையுமே?
- சத்யா
___________________________________________
அன்புள்ள சத்யா,
இந்திய கலாச்சாரம் விபச்சாரத்தை பகிரங்கமாகவே ஏற்கிறது. சீதை, கண்ணகி, முதலான ‘கற்புக்கரசிகள்’ போற்றப்படும் இந்நாட்டில்தான் தேவதாசி என்ற உலகிலேயே மூத்த விபச்சார நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்து மதக் கோவில்களுக்கு நேர்த்திக்கடனாக விடப்படும் அபலைப் பெண்கள் தங்களை அழகுபடுத்தி, ஆடல், பாடல் கலைகளை கற்றுத் தேர்ந்து, அரசர்கள், குறுநில மன்னர்கள், அமைச்சர்கள், தளபதிகள், பார்ப்பனப் புரோகிதர்கள் முதலான அன்றைய ஆளும் வர்க்கத்தினருக்கு காமக்கிழத்தியாக பணி புரிய வேண்டும். இந்த முறை சென்ற நூற்றாண்டு வரை கூட புழக்கத்தில் இருந்தது.
தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று திராவிட இயக்கம் போராடிய போது அதை காங்கிரசு தலைவர் சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் எதிர்த்தது வரலாறு.

கொலைகாரர்களை பாதுகாக்கும் போலீசு, சி.பி.ஐ!சங்கரசுப்பு மகன் படுகொலை

கொலையை தற்கொலையாக்க காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் காவல் துறையின் முயற்சிகள்:

சதீஷ் குமார்
சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்  சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார்  படுகொலை வழக்கினை உயர்நீமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்திரவிட்டு 3 மாதங்கள் கடந்துவிட்டன. சிபிஐ இவ்விசாரணையில் காட்டும் அலட்சியத்தை உயர்நீதிமன்றத்தில் ஒவ்வொரு விசாரணையின் போதும் வழக்குரைஞர் சங்கரசுப்பு சுட்டிக்காட்டியும், வாய்தா வாங்குவதில்தான் சிபிஐ தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது.

1700 முன்னாள் புலிகளுக்கு நாளை விடுதலை 1700 முன்னாள் புலிகளுக்கு நாளை விடுதலை

1700 முன்னாள் புலிகளுக்கு நாளை விடுதலை
புனர்வாழ்வளிக்கப்பட்ட சுமார் ஆயிரத்து 700 முன்னாள் புலி உறுப்பினர்கள் நாளையதினம் காலை 11 மணியளவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எம்.எஸ்.சதீஸ் தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
11ஆயிரத்து 700 முன்னாள் புலி உறுப்பினர்கள் இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தனர்.
இவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டனர்.
இவர்களில் 8 ஆயிரத்து 240 பேர் 28 சந்தர்ப்பங்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது 29ஆவது தடவையாக மேலும் 1700பேர் விடுவிக்கப்படுகின்றனர் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் ஆலோசகர் எம்.எஸ். சதீஸ் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் கொலையாளிகளின் குற்றப் பின்னணி!


Rajiv-Gandhi_0Rajiv-mordராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவருக்கு கருணை காட்ட வேண்டும் என்ற பிரசாரம், தொலைக்காட்சிகள் உதவியுடன் நடைபெறுகிறது. சாதாரணமாக ‘தமிழ் உணர்வாளர்கள்’ என்று அறியப்படுபவர்கள், தற்போது ‘மனித நேயக் காவலர்களாக’ அவதாரம் எடுத்துள்ளனர். இந்நிலையில், அந்த படுகொலையைப் பற்றிய சில விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
யாழ்ப்பாண மேயர் கொலை வழக்கில் பிரபாகரன் சார்பாக வாதாடிய வக்கீல் எஸ்.நடராஜன், டெஸோ தலைவர் சிறி.சபாரத்தினம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் எம்.பி., E.P.R.L.F. ஜார்ஜ், P.L.O.T.E. வாசுதேவன், E.P.R.L.F. பத்மனாபா, கிருபன், யோக சங்கரி மற்றும் நால்வர் தவிர, ரஞ்சன் விஜயரத்னே, பிரேமதாசா, லக்ஷ்மண் கதிர்காமர், காமினி திசநாயகே, நீலம் திருச்செல்வன், அருணாசலம் தங்கதுரை, சாம் தம்பிமுத்து, சரோஜினி யோகேஸ்வரன், யாழ்ப்பாண மேயர்.... என்று பலர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்கள். தவிர விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மாத்தையா, கிட்டு உட்பட பலரும் கொல்லப்பட்டனர். இவர்களெல்லாம் யார்? இவர்களுக்கு எது பொதுவானது?
பிரபாகரனுக்குப் பிடிக்காத, அவருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்கள் என்ற காரணத்திற்காக இவர்கள் எல்லோரும் ‘துரோகி’ பட்டம் சூட்டப்பட்டனர். ஈவு இரக்கமின்றி, கோழைத்தனமாக, மனித நேயம் துளியும் இன்றி கொலை செய்யப்பட்டனர்.

கணவனுக்காக தனது தற்கொலை காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து வைத்த பெண்


மும்பையின் மேற்கு அந்தேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.நேற்று காலை சம்தாஷி வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது நிதிஜிங் கணவரிடம் உங்களிடம் முக்கியமான விஷயம் பற்றி பேச வேண்டி உள்ளது. எனக்காக 10 நிமிடங்கள் ஒதுக்குங்கள் என்று கேட்டார். இதற்கு ஒப்புக் கொண்ட சம்தாஷி 10 நிமிடங்கள் அவருடன் பேசினார்.

பின்னர் ஆபீசுக்கு கிளம்பிய போது மீண்டும் அவரை தடுத்து நிறுத்தினார். ஏற்கனவே ஆபீசுக்கு நேரமாகி விட்ட அவசரத்தில் இருந்த சம்தாஷி, மனைவியின் செயலால் கோபம் அடைந்து அவரை சத்தம் போட்டுவிட்டு ஆபீசுக்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த நிதிஜிங் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

Spectrum அனில் அம்பானியின் தொடர்பு குறித்தும் விசாரணை-சிபிஐ

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ரிலையன்ஸ் டெலிகாம் அதிபர் அனில் அம்பானியின் தொடர்பு குறித்தும் விசாரித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் லாபமடைந்த மற்றவர்கள் குறித்தும் விசாரிக்கப் போவதாகவும் சிபிஐ கூறியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்... பிரச்சாரத்துக்கு வடிவேலு?

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஹைலைட்டாக அமைந்தது நடிகர் வடிவேலுவின் பிரச்சாரம்.
விஜயகாந்துக்கு எதிராக அவர் செய்த அந்தப் பிரச்சாரம் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்தாலும் போகப் போக நாராசமாகி, அவர் திரையுலக வாழ்க்கையை தற்காலிக ஓய்வு கொள்ள வைத்தது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், வடிவேலு சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார் எனும் அளவுக்கு அமைதியாக உள்ளார். இத்தனைக்கும் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடியன் அவர்தான்.

வெளிநாடு 'பறக்கும்' சோனா!!

தன்னை எஸ்பிபி சரண் பாலியல் வன்முறை செய்ய முயன்றார் என்று புகார் கொடுத்து, தொடர்ந்து போராட்டம் என்றெல்லாம் புயல் கிளப்பிய நடிகை சோனா, இன்று 'விட்டால் போதுமென' வெளிநாடு பறக்கிறார்.

எஸ்பிபி சரண் என்னிடம் பகிரங்கமாக, அதுவும் மீடியா முன்பாக வந்து மன்னிப்பு கேட்டால்தான் வழக்கு வாபஸ் என்று கூறிவந்த சோனா, நேற்று வரை தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

ஆனால், போலீஸார் இந்த வழக்கில் யாருக்கு சாதகமாக உள்ளனர், அவர்களின் 'ட்ரீட்மென்ட்' போன்றவை புரிந்ததும், தானாகவே அமைதியாகிவிட்ட சோனா, இன்று இந்த வழக்கையே வாபஸ் பெறுவதாகக் கூறிவிட்டார். சரணை தான் மன்னித்துவிட்டதாகவும் கூறினார்.

வாச்சாத்தி ஏரியும் பாலியல் தொந்தரவுக்கு ஆளான 18 பெண்களும்


தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைக்கிராமத்தில் கடந்த 1992ம் ஆண்டில் வனத்துறை, காவல் துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளை சேர்ந்த கூட்டுக்குழுவினர் சந்தன மரம் கடத்தல் புகார் தொடர்பாக சோதனை நடத்தினார்கள்.

அப்போது மலைவாழ் மக்கள் சமூகத்தை சேர்ந்த 18 பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தப்புகார் குறித்து சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

more pictures

வாச்சாத்தி: 12 பேருக்கு தலா 17 ஆண்டு தண்டனை- 5 பேருக்கு 7 ஆண்டு, ரூ.2000 அபராதம்!

தர்மபுரி: வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டோருக்கான தண்டனை விவரத்தை நீதிபதி குமரகுரு அறிவித்துள்ளார்.
ஐஎப்எஸ் அதிகாரியான ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோருக்குத் தண்டனை விவரம் வெளியாகியுள்ளது. ஹரிகிருஷ்ணனுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்துள்ளது.
இதுவரை அறிவித்துள்ள தண்டனை விவரம்:
12 பேருக்கு தலா 17 ஆண்டு சிறைத் தண்டனை
5 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை மற்றும் ரூ. 2000 அபராதம்
150 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை
70 பேருக்கு தலா ஓராண்டு சிறை மற்றும் ரூ. 1000 அபராதம்


ஏன் குறைந்த அளவிலான தண்டனை?
சாதாரண பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்த காரணத்தால்தான் குறைந்த அளவிலான தண்டனை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கு

தர்மபுரி: வாச்சாத்தி மலை கிராமத்தில் போலீசார், வருவாய்த்துறையினர், வனத்துறையினரால் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நான்கு இந்திய வனப்பணி அதிகாரிகள் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்களில் உயிருடன் உள்ள 215 பேருமே குற்றவாளிகள் என்று தர்மபுரி கோர்ட் இன்று பரபரப்புத் தீர்ப்பை வழங்கியது.

பள்ளிகளில் இனி மதிப்பெண்களுக்கு பதில் கிரேடு முறை: அரசு உத்தரவு

சென்னை: 2012-13ம் கல்வியாண்டு முதல் 1-8 வகுப்புகளுக்கு கிரேடு முறை அமல்படுத்தப்படுகிறது. 2013-2014ம் கல்வியாண்டில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

கல்முனையில் உயிரிழந்த டொல்பின்கள் அதிகம் கரையொதுங்குகின்றன

கல்முனையில் உயிரிழந்த டொல்பின்கள் அதிகம் கரையொதுங்குகின்றன"

இலங்கையின் கிழக்கு மகாணம் கல்முனை கடலோரத்தில் இயல்புக்கு மாறாக டால்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதாக உள்ளூர் மீனவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட டால்பின்கள் உயிரிழந்த நிலையில், கரையொதுங்கியுள்ளதாக கல்முனைப் பகுதி மீனவர்களும், மீனவ அமைப்புகளும் தெரிவித்தனர்.

கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு!

Broker சுப்பிரமணிய சாமிக்கு கிடைக்கும் உதவி

டில்லி அரசியலை எப்போதும் பரபரப்பாகவே வைத்துக் கொண்டிருப்பதில் பெரும் பங்கு சுப்பிரமணியசாமிக்கு தான். எந்த நேரத்தில் எந்த குண்டைத் தூக்கிப் போடுவார் சாமி என்று சொல்ல முடியாது.தற்போது, இவர் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார். "எப்படியாவது சிதம்பரத்தை, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்க வைத்து விடுவேன்' என்று அடித்துச் சொல்கிறார். சமீபத்தில், இவர் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த நிதியமைச்சக குறிப்பு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தையடுத்து, இன்னொரு அரசியல் புள்ளியை குறி வைத்துள்ளார். அது யார் என்பதை சொல்ல மறுக்கிறார் சாமி.சாமிக்கு அரசு ஆவணங்கள் எப்படி கிடைக்கின்றன என்று மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் தலைவர்களும் ஆச்சர்யப்படுகின்றனர். ஒரு சில ஆவணங்களை சாமி தேடிப் போகிறார்; மற்றவை இவரைத் தேடி வருகின்றன.

இரத்தினபுரி காட்டுக்குள் ஓர் அதிசயம்!பழைய காலத்துக் கோயில்

இலங்கையின் இரத்தின மாநகரம் என்றழைக்கப்படும் இரத்தினபுரியிலிருந்து 53 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கிறது இறக்குவானை எனும் அழகிய நகரம்.
சிங்கராஜ வனத்தை எல்லைப்பகுதியாகக் கொண்ட இறக்குவானை அனைத்து மதங்களுக்கும் பொதுவானதோர் இடமாக விளங்குகிறது. நகரத்திலிருந்து பார்க்கும்போது நாலாபக்கமும் தூரத்தே தெரியும் ஆரண்யகத்தின் வனப்பு எம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
இந்த காட்டுக்குள் ஒரு சிவன் ஆலயம் இருப்பதாகவும் அது அதிசக்தி வாய்ந்த ஆலயம் என்றும் அப்பகுதி மக்கள் அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு. அதனை கண்டறிவதற்காக எமது பயணம் ஆரம்பமானது.
‘ஆமாங்க, பழைய காலத்துக் கோயில் ஒன்னு இருக்குது. கங்கொடை என்கிற இடத்த தாண்டி காட்டு வழியா போகனும். யானை உருவத்தில ஓர் ஆல மரம் இருக்கும். அதான் அடையாளம்’ என்றார் ஊர் பெரியவர் ஒருவர்.
யானை உருக்கொண்ட ஆல மரம் என்றதும் எமது எதிர்பார்ப்பு அதிகமானது.
நகரத்திலிருந்து 8 கிலோ மீற்றர் தூரப் பயணம். சுமார் 3 கிலோமீற்றர் தூரம் வரை கால்நடையாகத்தான் செல்ல வேண்டும். காட்டுவழியே கால்நடையாகச் செல்லும்போது கவனமாக செல்லும்படியும் குரங்குகளின் அட்டகாசம் அதிகம் என்றும் கங்கொடையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளாகள் கூறினார்கள்.

வெளியில் வரலாமா; கைது செய்வீர்களா? அதிகாரிகளிடம் கேட்கும் தி.மு.க.,வினர்!

கோவை :உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிர கவனம் செலுத்த துவங்கியிருப்பதால், நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய நபர்களை வேட்டையாடி கைது செய்யும் நடவடிக்கைக்கு தற்காலிகமாக இடைவேளை விட்டது போல தெரிகிறது. கைதுக்கு பயந்து மாதக்கணக்கில் தலைமறைவாக இருந்த தி.மு.க.,பிரமுகர்கள் பலரும், "நாங்கள் வெளியில் வரலாமா; வந்தால்... கைது செய்வீர்களா ?' என, தங்களுக்கு நம்பிக்கையான போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்தபடி உள்ளனர்.

மாலைத்தீவு சார்க் மாநாட்டுக்கு இலங்கை அதிரடிப்படை பாதுகாப்பு!

மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக செல்லவுள்ளனர். இலங்கை ஜனாதிபதி உட்பட பலநாட்டு அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளமையினால் அவர்களின் பாதுகாப்பு கருதியே விசேட அதிரடிப்படையினரை அனுப்பத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. இது சம்பந்தமாக மோப்ப நாய்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

யாழ். பழைய பூங்கா இடித்துடைப்பு?

யாழ். நகரில் வரலாற்று புகழ்மிக்க பழைய பூங்கா கட்டடம் வடமாகாண ஆளுநரின் பணிப்புரையின் பேரில் இடித்துடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் கச்சேரியாகவும் அரச அதிபரின் வாசஸ்தலமாகவும் பாவிக்கப்பட்ட குறித்த கட்டடம் 1829ஆம் ஆண்டு யாழ். மாவட்ட அரச அதிபர் காரியாலயத்திற்கு சொந்தமானதென முன்னாள் அரச அதிபர் லைக்கினால் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போதைய யாழ். அரச அதிபர் காரியாலயத்திற்கு நேரெதிரே அமைந்துள்ள குறித்த பழைய பூங்கா கட்டடம் தொல்பொருள் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டும் வந்துள்ளது. இந்நிலையிலேயே வடமாகாண ஆளுநர் சந்திரசிறியின் பணிப்பு என்று கூறி, அவரது பிரத்தியேக செயலர் தலைமையில் குறித்த கட்டடத்தின் பகுதியும் சுற்று மதிலும் இன்று இடிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரிடம் கேட்டபோது: 'யாழ். மாவட்டத்தில் என்ன நடைபெறுகிறதென்றே தெரியவில்லை. எங்களையும் மீறி என்னென்னமோ நடைபெற்று வருகிறது.

தோழர் உமாகாந்தனின் கனவுகள்

umakanthanதி. ஸ்ரீதரன் - பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈழத் தமிழர்களின் இன்றைய வாழ்நிலை பின்புலத்தில் தோழர் உமாகாந்தன் மறைந்து  ஆண்டுகள் 7  உருண்டோடிவிட்டன. தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தோழர் உமாகாந்தன் புலம்பெயர் தளத்தில் காத்திரமான பங்கை வழங்கியிருந்தார். அவர் உலகின் ஒடுக்கப்பட்ட தேசங்கள், மக்கள் தொடர்பாக அக்கறை கொண்டிருந்தார். கவிதை, இலக்கியம் பத்திரிகை என அவரின் ஈடுபாடு விசாலமானது. சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில் புலம் பெயர் தளத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதில் காத்திரமான பங்களிப்பை வழங்கியவர், பிரான்சில் அவரது அரசியல் சமூக செயற்பாடுகள் தனித்தன்மை வாய்ந்தனவாக அமைந்திருந்தன.

சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா

Sona
தன்னிடம் கடிதம் மூலம் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துவிட்டார் சரண் என்றும் இதனால் அவரை மன்னித்துவிட்டதாகவும் நடிகை சோனா தெரிவித்துள்ளார்.

மங்காத்தா மதுவிருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக எஸ்பிபி சரண் மீது புகார் தெரிவித்தார் சோனா. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதில் எஸ்பிபி சரணுக்கு இருவார கால முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களாக இந்த விவகாரம் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டு வந்தது. சோனாவை சமாதானப்படுத்த எஸ்பி பாலசுப்ரமணியம் உள்ளிட்டோரும் நேரில் போய் பேசினர்.

சர்வதேசத்தின் சூழ்ச்சி மீண்டும் தோல்வி

கொழும்பு:இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் சூழ்ச்சி மீண்டும் தோல்வி கண்டுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் அறிக்கை முன்வைக்கப்படவிருந்தது.

இதற்கான முயற்சிகளை வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள இலங்கை பு தமிழர்களும், சர்வதேச நாடுகளும் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் இது தோல்வி கண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

4 வயது மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 4 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சவுந்தரவல்லிபாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

கள்ளக்குறிச்சி போலீசில் ரமேஷ்-ராணி தம்பதியினர் கடந்த 3.8.11 அன்று புகார் ஒன்றை கொடுத்தனர். அவர்களது 4 வயது மகள் கவிதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏ.கே.டி. மெட்ரிக் பள்ளியின் ஆசிரியைகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளனர்.

புதன், 28 செப்டம்பர், 2011

தனித்து நிற்போம், தன்மானம் காப்போம் அட்ரஸ் இல்லாமல் போவோம்


தனித்து நிற்போம், தன்மானம் காப்போம் என்ற ஈவிகேஎஸ், யுவராஜா மீது நெல்லை காங்கிரசார் கடும் அதிருப்தி!


நெல்லை மாவட்டத்தில் மாநகர மேயர் தவிர மற்ற பகுதிகளின் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட தாமதம் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பும், வேட்பாளர் பற்றிய அறிவிப்பும் காங்கிரஸ் மட்டத்தில் காலதாமம் ஏற்படுது சகஜமானது தான்.
தற்போது வேட்பு மனு தாக்கல் முடிவடைவதற்கு இரு தினங்கள் இருக்கின்றன. இந்த நிலையில்கூட பட்டியல் வெளியாகாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் நெல்லை காங்கிரசார்.
(இளங்கோவனும் யுவராஜும் சும்மா சவடால் அரசியல் பேசிய வெத்து வேட்டுகளாகும் இந்த இரு செல்லாகாசுகளும் தனியாக நிற்க வேண்டி வரும் என்று நினைக்கவில்லை. ஒசிச்சவாரி செய்தே காலத்தை ஓட்டிடலாம் என்று பார்தால் அய்யாவும் அம்மாவும் ஒரே அடியாக பேதிகுளிசை கொடுதிட்டாங்களே.  )

எதிர்ப்பை மீறி வெளியாகும் 'சத்யானந்தா!


சென்னை:போலிச்சாமியார்கள் பற்றிய திரைப்படம் ஒன்று சத்யானந்தா என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகிறது.

இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என நித்யானந்தா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அந்த எதிர்ப்பையும் மீறி இந்தப் படத்தை திரையிடுகிறார்கள்.


படத்தின் டப்பிங், ரீ ரிக்கார்டிங் போன்ற பணிகள் முடிந்துள்ளது. தற்போது தணிக்கை குழுவுக்கு இப்படம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் சத்யானந்தா படத்தை ரிலீஸ் செய்வதற்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படத்துக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கும், அத்துடன் ரூ. 3 கோடி கேட்டு தனியாக மானநஷ்ட வழக்கும் தொடர்ந்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் நஷ்டம் ரூ.2,645 தான்.. இதை ரூ.1.76,000 கோடி என தணிக்கை அதிகாரி உயர்த்தி சொன்னது ஏன்?

டெல்லி: 2007ம் ஆண்டு நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ரூ. 1.76,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுவதில் உண்மையில்லை என்று தெரிகிறது. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் ரூ. 2,645 கோடி மட்டுமே என்று இந்திய தலைமைத் தணிக்கை அதிகாரி அலுவலகத்தைச் (Comptroller and Auditor General -CAG) சேர்ந்த மூத்த ஆடிட்டர் ஒருவர் கணக்கிட்டுள்ளார்.

UK 50 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு அகதி அந்தஸ்த்து கோரிச் சென்ற இலங்கையர்கள் சிலர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 50 இலங்கையர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டதாகவும் அவர்கள் நாளைய தினம் இலங்கையை வந்தடைவர் எனவும் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரிசி ஏற்றுமதி செய்கிறது முதலில் கென்யாவுக்கு

முதன்முறையாக இலங்கை ஆப்பிரிக்க நாடான கென்னியாவிற்கு 250 மெற்றிக் தொன் அரிசியை ஏற்றுமதி செய்யவுள்ளது.
வியாங்கொட களஞ்சியசாலையில் உள்ள அரிசி இருப்பே இவ்வாறு கென்னியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
இலங்கையில் அரிசி இருப்பில் உள்ளதால் அதனை ஏற்றுமதி செய்ய தீர்மானித்ததாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்தார்.

மேலும் இருப்பில் உள்ள அரிசி சவுதி ஆரேபியா உட்பட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்

பிரதமரின் ஒப்புகைக் கடிதமும் ராசாவும்,அனைவரையும் திசை திருப்பியுள்ளார்


டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த அனைத்தும் பிரதமருக்கும், ப.சிதம்பரத்திற்கும் தெரியும் என கோர்ட்டில் ஒவ்வொரு முறையும் கூறி வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, பிரதமர் தனக்கு அனுப்பிய ஒரு ஒப்புகைக் கடிதத்தை வைத்து அனைவரையும் திசை திருப்பியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார் ராசா. அதில், பிரணாப் முகர்ஜியை தான் சந்தித்து மொபைல் லைசென்ஸ் குறித்த கொள்கை வகுப்பு குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது பிரணாப் முகர்ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான முடிவுகளைக் கையாளும் உயர் மட்ட அமைச்சர்கள் குழுவின் தலைவராக இருந்தார்.

பதிலுக்கு 2008ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் அனுப்பினார். அதில், உங்களது கடிதம் பெற்றேன் என்று கூறியுள்ளார் சிங்.

வேலூர் மருத்துவமனையில் பெண் பேய்!! - உண்மையா? ( வீடியோ இணைப்பு)


வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக ஒரு பெண் பேய் உலவி வருவதாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது! பலரின் செல்போன்களிலும் இந்த பேய் வீடியோ காட்சிகள்தான் இப்போது முதலிடம்.
ஐடா ஸ்கடர் என்ற வெளிநாட்டுப் பெண் இந்தியா வந்தபோது, சரியான மருத்துவ வசதி இல்லாமல் பலர் மடிகிறார்களே என்ற நல்லெண் ணத்தில் 1901-ல் ஆரம்பிக்கப்பட்டதுதான் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை. 

இங்கு அனைத்து நோய்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதால், உலக அளவில் பிரபலம். எனவே, உள்ளே நோயாளிகளுக்குத் தங்க இடம் இல்லாதபோது, பெரும்பாலானோர் அருகில் இருக்கும் லொட்ஜ்களில் மாதக்கணக்கில் தங்கி சிகிச்சை பெற்றுச் செல்வார்கள்.

இந்த நிலையில்தான் இந்த பீதி! செக்யூரிட்டி ஒருவர், ”சார் இங்க ஆறு வருஷமா கான்ட்ராக்ட்ல வேலை செய்றேன். நீங்கள் கேள்விப்பட்டது சத்தியமா உண்மை. இப்பக்கூட எனக்கு கை நடுங்குது பாருங்க.