சனி, 4 ஜூன், 2022

கூகுள் நிறுவனத்தில் சாதிப் பாகுபாடு! தேன்மொழி சௌந்தரராஜன் (அமெரிக்க தலித் செயற்பாட்டாளர்) உரை ரத்து – நடந்தது என்ன?

BBC Tamil  : கூகுள் நிறுவனத்தில் சாதிப் பாகுபாடு: அமெரிக்காவில் தலித் செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் உரை ரத்து – அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சாதிப் பாகுபாடு குறித்த ஓர் உரையை, சாதி ஆதரவாளர்களின் பலத்த எதிர்ப்புக்கிடையே அந்த நிறுவனம் ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவில் தலித் உரிமைகளுக்காகப் பாடுபடும் சமத்துவத்துக்கான ஆய்வகம் (ஈக்வாலிடி லேப்ஸ்) என்ற குடிமை உரிமை அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் இந்த உரையை நிகழ்த்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தலித் வரலாற்று மாதத்தை ஒட்டி கடந்த மாதம் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

கோவை பெண் ஊழியர் எரித்துக்கொலை- தொழில் அதிபரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு

 மாலைமலர் : கோவை இளம்பெண் மரண வழக்கில் பல்வேறு மர்மங்கள் உள்ளதால் நவநீதனை காவலில் எடுத்து விசாரிக்க கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதன் (வயது 50). தொழில் அதிபரான இவர் கோவை மட்டுமல்லாமல் ஈரோட்டிலும் டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
ஈரோட்டில் உள்ள நிறுவனத்தில் பவானியைச் சேர்ந்த 37 வயது பெண் வேலை பார்த்து வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்த அந்த பெண், நீண்ட நாட்களாக நவநீதனின் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.
சம்பவத்தன்று அந்த பெண், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதனின் வீட்டுக்கு வந்தார்.
அதன்பின் தீக்காயங்களுடன் அந்த பெண் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பரபரப்பு; தீட்சிதர்கள் எடுத்த அதிரடி முடிவு!

tamil.samayam.com : கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் அரசின் உத்தரவும், அவற்றை எதிர்க்கும் தீட்சிதர்களும் என பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கண்ணன் மற்றும் துணை ஆணையர் சி.ஜோதி ஆகியோருக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் எஸ்.ஹெமசபேச தீட்சிதர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் தன்னிச்சையாக கோயில் ஆவணங்களை கோர இயலாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பிலேயே கூறப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட 19-9-2014 தேதியிட்ட அரசாணை எண் 236-ல் இந்து அறநிலையத்துறை 6-1-2014 தீர்ப்பின் படி தீட்சிதர்கள் தனி சமய பிரிவினர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்கால வழக்குகளிலும், மேற்சொன்ன தீர்ப்பின்படி முன்வழக்கு தடையாக செயல்படும்.               எனவே மேற்கண்ட தீர்ப்பின் முடிவு இறுதியாக உள்ளது என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தீட்சிதர்கள் தனி சமய சீர்மரபினர் என்று தீர்ப்பு முடிவு இறுதியாக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சட்டப் பிரிவு 107-ன் கீழ் தீட்சிதர்கள் நிர்வாகமானது இந்து சமய அறநிலையத்துறையின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது.

டாஸ்மாக் செந்தில் பாலாஜியின் வசூல் அரசாங்கம்: முதல்வரை சந்திக்க தேதி கேட்கும் தொழிற்சங்கங்கள்!

டாஸ்மாக் செந்தில் பாலாஜியின் வசூல் அரசாங்கம்: முதல்வரை சந்திக்க தேதி கேட்கும்  தொழிற்சங்கங்கள்!

மின்னம்பலம் : தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில் பாலாஜி மீது டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
குறிப்பாக சிஐடியு தொழிற்சங்கம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கள் டாஸ்மாக் நிர்வாகத்தில் முழுமையாக தலையிட்டு வசூல் வேட்டை நடத்துவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் சிஐடியு தொழிற்சங்கம் மட்டுமல்லாமல் பல்வேறு டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆட்கள் நிர்வாகத்தை கைப்பற்றுவதை எதிர்த்து போராட்ட அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றன.
சிஐடியு, ஏஐசிசிசிடியு, டியுசிசி, டிடிபிடிஎஸ், டிஜிடிஇயு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் கடந்த மே 31ஆம் தேதி சென்னையில் உள்ள சிஐடியு மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.

வெள்ளி, 3 ஜூன், 2022

கலைஞர் பிறந்தநாள்: விருது, குடியிருப்பு ஆணை வழங்கிய முதல்வர்!

கலைஞர் பிறந்தநாள்:  விருது, குடியிருப்பு ஆணை வழங்கிய முதல்வர்!

கலைஞரின் 99ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. முதன்முறையாக அரசு விழாவாக கலைஞர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் முதல்வர் ஸ்டாலின், ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்று அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பழம்பெரும் இயக்குநரும் வசன கர்த்தாவுமான ஆரூர் தாஸுக்கு 'கலைத் துறை வித்தகர்' விருதைச் சென்னை தி.நகரில் உள்ள ஆரூர் தாஸுன் வீட்டிற்கே சென்று வழங்கி கவுரவித்தார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை தரப்பில் மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதனுக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து 'கலைஞர் எழுதுகோல் விருதையும் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.

கலைஞர் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாட்டம்- சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

 கலைஞர் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கலைஞரின்  படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்கள்.
இதையொட்டி பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்தார். சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.

இளையராஜா : எனக்கு கலைஞர் தந்தைக்கு சமம்''

 நக்கீரன் : இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் 'ராஜா லைவ் இன் கான்செர்ட்' நிகழ்ச்சி கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் கலந்து கொண்டார்.
மேடையில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி ''உங்களைப் பார்த்ததும் மிகவும் சந்தோசமா இருக்கு சார், என்ன பேசுவதென்று தெரியவில்லை உங்களைப் பார்த்ததும். தேங்க்யூ சார்'' என்றார். அதன்பிறகு மைக்கை வாங்கிய இளையராஜா 'உங்க ஊரிலேயே நான் 16 வயதாக இருக்கும்போது என் அண்ணனோட வந்து இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறோம். எனக்கு கலைஞர் தந்தைக்கு சமம்'' என்றார். 

வியாழன், 2 ஜூன், 2022

செந்தில் தொண்டமான் பேட்டி : இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகள் கிடைக்க கலைஞரும் சோனியாவும் காரணமா இருந்தாங்க!

 அன்று கனிமொழி டி ஆர் பாலு திருமாவளவன் அழகிரி சுதர்ஷன் நாச்சியப்பன் இளங்கோவன் சித்தன் எம்பி ..நெறைய பேர் வந்திருந்தாங்க  நானும் நின்றிருந்தேன்  அன்னைக்கு மகிந்த ராஜபக்ஸவுக்கு இவங்க கை கொடுத்ததாலதான் மகிந்த அந்த ஐம்பதாயிரம் வீடு திட்டத்திற்கு அனுமதி கொடுத்தார்  அன்னைக்கு அவங்க அப்படி கைகொடுக்காமல் விட்டிருந்தால்,
இன்னைக்கு அந்த ஐம்பதாயிரம் விதவைகளுக்கு  வாழறதுக்கு இடமில்லாம  இருந்திருப்பாங்க   
ஏனென்னா மூணு வருஷமா இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்கல
இந்த பத்து எம்பிக்களும் வந்து ஜனாதிபதி பார்த்து .. பேசி நட்பு ஏற்படுத்திய பின்புதான் அவரு அனுமதியை கொடுத்தாரு ......  
மறைந்த கலைஞர் அய்யா அவர்களும்  அம்மையார் சோனியா காந்தி அம்மையாரும் இந்த ஐம்பதாயிரம் வீடுகள் எங்க மக்களுக்கு கிடைக்கிறதுக்கு காரணமா இருந்தாங்க ...
இன்னைக்கு விமர்சனம் பண்றவங்க எவராலும் அங்கு ஒரு செங்கல் கூட எடுத்து வைச்சிருக்க முடியாது
 முழு பேட்டியையும்  பாருங்கள் பல முக்கிய செய்திகளை திரு செந்தில் தொண்டமான் இங்கே கூறுகிறார்

சிங்கள மக்களின் மரபணுக்கள் தமிழ்நாட்டோடு நெருங்கி இருப்பதேன்?

 ராதா மனோகர்   : இலங்கை தமிழர்களின் மரபணு   சிங்கள மக்களின் மரபணுவோடு     55.20% +/- 9.47 வீதம் பொருந்தி உள்ளது  
இலங்கையில் உள்ள சிங்கள  மக்களின் மரபணு  69.86% +/- 0.61 தென்னிந்திய தமிழர்களிடம் பொருந்தி உள்ளது
இலங்கையில் உள்ள தமிழர்களின் மரபணு 16.63% +/- 8.73 தென்னிந்திய தமிழர்களோடு பொருந்தி உள்ளது
ஆச்சரியமான ஒரு விடயம்  இலங்கை தமிழர்களை விட சிங்கள மக்களின் மரபணு  தமிழ்நாடு தமிழர்களோடு அதிக அளவில் பொருந்தி உள்ளது
மேலும் சிங்கள மக்களின் மரபணு   25.41% +/- 0.51 வீதம் வங்காள மக்களோடு பொருந்தி உள்ளது
இலங்கையில் உள்ள சிங்கள மக்களும் தமிழ் மக்களும் 55%. மரபணு  பொருந்தி உள்ளது
 The  Sinhalese had the greatest contribution from South Indian Tamils (69.86% +/- 0.61),
Sri Lankan Tamils to have a greater contribution from the Sinhalese of Sri Lanka (55.20% +/- 9.47)
While the Sri Lankan Tamil are closely related to the Sinhalese who are closely related to Indian
followed by Bengalis from the East India (25.41% +/- 0.51). With both the Sri Lankan Tamils and Sinhalese in the island sharing a common gene pool of 55%.
They are farthest from the indigenous Veddahs.[1] This close relationship between the Sri Lankan Tamils and Sinhalese makes sense, as the two populations have been close to each other historically, linguistically, and culturally for over 2000 years.

சோனியா காந்திக்கு கொரோனா!

மின்னம்பலம் : காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று பாதிப்பு 100ஐ கடந்தது. நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், சோனியா காந்தி கடந்த வாரத்தில் கட்சித் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தி வந்தார். அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன.

இளைஞரை லாரி ஏற்றிக் கொன்ற வடமாநில டிரைவர் - கண்டெய்னர் நிறுத்துவதில் தகராறு.

kalaignarseithigal. : செங்குன்றம் தனியார் லாரி பார்க்கிங் யார்டில் மதுபோதையில் தகராறு செய்தவர்களை லாரி ஏற்றிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்டெய்னர் நிறுத்துவதில் தகராறு.. இளைஞரை லாரி ஏற்றிக் கொன்ற வடமாநில டிரைவர் - பகீர் சம்பவம்!
சென்னை செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் தனியாருக்கு சொந்தமாக லாரி பார்க்கிங் யார்டு உள்ளது.
 இங்கு வடபெரும்பாக்கம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (36) வடபெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நவீன் (36) வடகரை பகுதியை சேர்ந்த குமரன் (34) மற்றும் நண்பர்கள் அங்கு அமர்ந்து மது அருந்தி கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த வடமாநில லாரி டிரைவர் லாரியை எடுக்க முயற்சி செய்துள்ளார். இது சம்பந்தமாக அவர்களுக்கும் வடமாநில லாரி டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த வடமாநில லாரி டிரைவர் லாரியை அவர்கள் மீது வேகமாக ஏற்றியதில் சம்பவ இடத்திலேயே கமலக்கண்ணன் உடல் நசுங்கி துடிதுடித்து பலியானார்.

அமெரிக்காவில் கர்ப்பிணிப்பெண்ணை ஐந்து முறை சரமாரியாக சுட்ட பொலிசார்!

 மாலைமலர் : அமெரிக்காவில், பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தும், பொலிசார் அவரை ஐந்து முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒன்று வெளியாகி மனதை பதறவைத்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில், அமெரிக்காவிலுள்ள Kansas நகரில், கார் ஒன்றை ஆயுதங்களுடன் சிலர் கடத்திச் செல்வதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் கார் ஒன்றைத் துரத்திச் சென்றுள்ளார்கள்.
ஒரு கட்டத்தில் அந்தக் கார் நிற்க, அந்தக் காரிலிருந்து இறங்கிய சாரதி ஓட்டம் பிடித்துள்ளார்.
அதே நேரத்தில், மற்றொரு பெண் காரிலிருந்து இறங்கியுள்ளார். அவர், காரில் ஒரு துப்பாக்கி இருப்பதாகக் கூறியுள்ளார்.
அவரை பொலிசார் தரையில் படுக்குமாறு கூறியுள்ளார்கள். ஆனால், தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறிய அந்தப் பெண், தன்னால் தரையில் குப்புறப் படுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

ஆஸ்பத்திரியில் இருந்து துண்டான கையை கவ்விக்கொண்டு போன நாய் விபத்தில் துண்டான கையை... மேற்கு வங்காளம்

West Bengal: Dog found chewing severed hand of man at Siliguri hospital

தினத்தந்தி : ஆஸ்பத்திரியில் விபத்தில் துண்டான வாலிபரின் கையை நாய் கவ்வி எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்பத்திரியில் சுற்றி திரிந்த நாய் வாயில் விபத்தில் துண்டான வாலிபரின் கை
நாய் வாயில் விபத்தில் துண்டான வாலிபரின் கை
மேற்கு வங்காள மாநிலம் சிலிகிரி துர்காராம் காலணி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் சர்க்கார். வாலிபரான இவர் சம்பவத்தன்று ஒரு சாலை விபத்தில் சிக்கினார்.

செங்கல்பட்டு யோகா உயர்வு மையத்திற்கு திருமூலர் பெயர் .. முதல்வர் ஸ்டாலினுக்கு அறிஞர்கள் வேண்டுகோள்

May be an image of text that says 'தமிழக அரசே..! செங்கல்பட்டு யோகா உயராய்வு மையத்திற்கு திருமூலர் பெயரைச் சூட்டுக..!'

Sundaravadivel Balasubramanian :  My letter to the Honorable Chief Minister of Tamil Nadu regarding the naming of the International Yoga and Naturopathy Medical Science Centre in Chengalpattu, Tamil Nadu.
தமிழ்நாட்டின் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு என் பணிவான வணக்கம்!
என் பெயர் சுந்தரவடிவேல். நான் தென் கரோலின மருத்துவப் பல்கலைக் கழகத்தில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைத் துறையில் பணிபுரிகிறேன்.
எனது ஆராய்ச்சி உயிரணுக்களில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியது.
அதனோடுகூடவே மூச்சுப்பயிற்சி முறைகளையும் ஆராய்ச்சி செய்துவருகிறேன். எங்களது ஆராய்ச்சியானது, முதன்முதலாக தமிழ்ச் சித்தர்களில் ஒருவரான திருமூலர் அவர்களின் திருமந்திர நூலில் இருக்கும் மூச்சுப்பயிற்சி முறைகளை ஆராய்ந்து அதன் விளைவாக உடலில் ஏற்படும் வேதிமாற்றங்களை எடுத்துக் கூறியது.
குறிப்பாக நரம்புகளை வளர்க்கும் புரதங்களும், உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை உண்டாக்கும் புரதங்களும், மன அழுத்தத்தைக் குறைக்கும் புரதங்களும் மாறுபடுவதைக் கண்டறிந்தோம்.

புதன், 1 ஜூன், 2022

PFRDAவில் ‘1 ரூபாய் கூட வரலாற்றில் யாரும் டெபாசிட் செய்ததேயில்லை’ நிதியமைச்சர் PTR!

 கலைஞர் செய்திகள் : ‘1 ரூபாய் கூட வரலாற்றில் யாரும் டெபாசிட் செய்ததேயில்லை’ : அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த நிதியமைச்சர் PTR!
புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து கருத்து கூறிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டில், நிதிச்சுமையைக் காரணம் காட்டி அ.தி.மு.க அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தது.
இதற்கு புதில் புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த புதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநாடு பட வசூல் 117 கோடி .. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்

 மின்னம்பலம் : நடிகர் சிலம்பரசனின் ‘மாநாடு’ திரைப்படத்தின் உலகளாவிய வசூலை அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பகிர்ந்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் ‘மாநாடு’. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. படம் வெளியாகி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகும் நிலையில் உலகம் முழுவதுமே இந்தப் படம் 117 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாநாடு திரைப்படம் உலகம் முழுவதுமே கிட்டத்தட்ட 117 கோடி ரூபாயை பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த வருடத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றியாகவும் இந்தப் படம் அமைந்துள்ளது. 

தோழிகளின் காதலை பிரித்து வைத்த பெற்றோர் - சேர்த்து வைத்த நீதிமன்றம்... கேரளா

கலைஞர் செய்திகள்   : ஓரினச் சேர்க்கை காதலர்களுக்கு ஒன்றாகச் சேர்ந்து வாழக் கேரள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
காதல் செய்த தோழிகள்.. பிரித்து வைத்த பெற்றோர் - சேர்த்து வைத்த நீதிமன்றம்: நடந்தது என்ன?
கேரளா மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலா. அதேபோல் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் பாத்திமா நூரா. இவர்கள் இருவர் குடும்பமும் நட்பாகப் பழகி வந்துள்ளனர்.
இதையடுத்து தோழிகள் இருவரும் சவூதி அரேபியாவில் ஒன்றாகப் படிக்கச் சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இது பற்றி அறிந்த இருவரது குடும்பமும் அவர்களைப் பிரித்துவைத்துள்ளது. பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியே தொண்டு நிறுவனம் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது அங்கு வந்த பாத்திமாவின் உறவினர்கள் அவரை கடத்தி சென்றுள்ளனர்.

உக்கிரேனில் பிரித்தானியர்கள் உட்பட தினமும் 250 படையினர் கொல்லப்படுகின்றனர்?

 Thesam Jeyabalan  :  பிரித்தானிய வீரர்கள் உட்பட தினமும் 250 படையினர் கொல்லப்படுகின்றனர்!! உக்ரைன் இன்னுமொரு வன்னி!!!
பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் லிஸ் ரஸ், உக்ரெய்ன்னுக்கு சென்று யுத்தத்தில் ஈடுபடுபவதை தான் ஆதரிப்பதாக அறிவித்ததையடுத்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்றுள்ளனர். இவர்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தினமும் உக்ரெயினில் நடைபெறும் யுத்தத்தில் இரு தரப்பிலும் 250 படையினர் கொல்லப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் லிஸ் ரஸ், யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட சில தினங்களிலேயே இந்த அறிவிப்பை வெளிளிட்டார். இதுவரை மரணித்துள்ள 20 பிரித்தானியர்கள் பற்றி பிரித்தானிய பிரதமரோ அமைச்சர்களோ எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.

மம்தா பானர்ஜி : 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக நுழைய முடியாது... நான் முழு வலிமையுடன் போராடுவேன்'!

 விகடன்  - சாலினி சுப்ரமணியம்   :  ``2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க நுழைய முடியாது என்பதை நான் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை உருவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.
`காங்கிரஸ் விரும்பினால் நாம் அனைவரும் இணைந்து 2024 பொதுத்தேர்தலில் போட்டியிடலாம். இப்போதைக்கு நேர்மறையாகவும் அமைதியாகவும் அடுத்து வரும் தேர்தல் பற்றிச் சிந்திப்போம்' என அண்மையில் மம்தா கூறியிருந்தார்.
இந்த நிலையில், மம்தா பானர்ஜி புருலியா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றினார்.

ஆயிஷாவை தொட்டேன் துடித்தாள் சகதியில் உயிர்போகும் வரையிலும் .. கொலைகாரன் வாக்குமூலம்


வீரகேசரி : அவள் வீடு திரும்புவதற்கு முன்னரே, வீட்டுக்குச் செல்லும் வழியில் ஓடி மறைந்திருந்தேன். கோழி இறைச்சியை வாங்கிக்கொண்டு வந்துகொண்டிருந்த போது அலாக்காக தூக்கிச்சென்று, உடல் முழுவதும் தொட்டேன் முரண்டுபிடித்தாள் அதனால், சகதியில் அமிழ்த்தினேன் என அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வாக்குமூலமளித்துள்ளார்.எனது இச்சையை தீர்த்துக்கொள்ளவே தூக்கிச்சென்றேன்.
எனினும், முரண்டுபிடித்தால், வன்புணர்வதற்கு எடுத்த முயற்சி கைகூடவில்லை.
இதனை யாரிடமாவது சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில்,   சதுப்பு நில சேற்றில் முகத்தை அமிழ்த்தி சிறுமியின் உடலின் முதுகுப்பகுதியில் தன் முழங்காலினால் ஊன்றி உயிர்போகும் வரையிலும் அமிழ்த்திகொண்டிருந்தேன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா உல்லாசப் பயணிகளுக்கு வழிவிடுங்கள்!

 Thesam Jeyabalan   :  நாட்டிற்குள் டொலரை வர வழிவிடுங்கள்! உல்லாசப் பயணிகளுக்கு வழிவிடுங்கள்!
நாட்டின் மொத்த உற்பத்தியில் 12வீதத்தை அதாவது 10 பில்லியன் டொலர்களை நாட்டிற்குள் கொண்டுவரும் உலாசப் பயணிகளுக்கு வழிவிடுங்கள். நாட்டின் பொருளாதாரம் நெருக்கடி நிலையைச் சந்திக்கிறது என்று போராடுபவர்கள் நாட்டின் பொருளாதார விருத்தியை முடக்குவது தீர்வு அல்ல.
இன்று எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பது அவற்றை கொள்வனவு செய்வதற்கான அந்நியச் செலவாணி இல்லாமையே. அதனால் நாட்டிற்குள் டொலரைக் கொண்டுவரக்கூடிய நடவடிக்கைகளை முடக்கிவிட வேண்டும். இக்கருத்துக்கு முற்றிலும் முரணாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டிற்குள் வரும் உல்லாசப் பயணிகள் காலிமுகத்திடலில் மட்டையைப் பிடித்து போராடலாம் என்ற வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

செவ்வாய், 31 மே, 2022

மலையக அரசியல்வாதிகளும் இடம்பெயரும் வாக்கு வங்கிகளும்

மலையானந்தன் :  கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை போன்ற வடக்கு கிழக்கு மாகாணங்களில்  குடிபெயர்ந்த மலையக மக்களின் வாழ்க்கை ஓரளவு வெற்றிகரமாக இருப்பதாகத்தான் தெரிகிறது
கொழும்பு கம்பஹா மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்த மலையக மக்களின் வாழ்வும் கொஞ்சம் முன்னேற்றமாகதான் இருக்கிறது
ஆனால் மலையக அரசியல்வாதிகளுக்கு இப்படியாக மலையக மக்கள் இதர பகுதிகளுக்கு இடம்பெயர்வதில் விருப்பம் இல்லை என்றே தெரிகிறது
தங்களின் வாக்கு வாங்கி கரைந்து கொண்டு போவதை யிட்டு அவர்களுக்கு கடும் வேதனை இருப்பதாக எண்ணுகிறேன்
அதனால்தான் மலையக தனித் தேசிய இனம் என்ற  பிரசரத்தை அவிழ்த்து விடுகிறார்கள் போலும்

நெல்லை கண்ணன் : முதல்வர் ஸ்டாலினோடு பேச என்னை அனுமதிக்கமாட்றாங்க..

file videw

 Asianet Tamil  : . முதல்வர் ஸ்டாலினோடு பேச என்னை அனுமதிக்கமாட்றாங்க.. நொந்து போன நெல்லை கண்ணன்!
அன்று என் கரங்களைப் பற்றி தன் மடியில் வைத்துக் கொண்டு, ‘இனி நீங்கள் கண் கலங்கி நான் பார்க்கக் கூடாது’ என்றார். இனி நான் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வேன். என்னை நீங்கள் எப்போதும் அழைக்கலாம் என்றார்.
79 வயதுக் கிழவன் நொந்து போயுள்ளேன். யாராவது  சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை என்று காங்கிரஸ் பிரமுகரான நெல்லை கண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திராவிட வரலாற்றை பட்டிதொட்டி எங்கும் .. ‘திராவிட மாடல் பயிற்சி பாசறை’ !

 கலைஞர் செய்திகள்  - பிரேம்குமார் : ‘திராவிட மாடல்' என்று சொல்வது ஒரு நூற்றாண்டின் வரலாற்றைச் சொல்வதாக ஆகும். அந்த அடிப்படையில் இப்பாசறைக் கூட்டங்கள் வெற்றி பெறட்டும்!
பெரியார் - அண்ணா - கலைஞரைத் தொடர்ந்து.. நூற்றாண்டின் வரலாற்றைச் சொல்லும் ‘திராவிட மாடல் பயிற்சி பாசறை’ !
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் - தமிழகத்தில் மாபெரும் அறிவுப்புரட்சிக்கு வித்திடுவதாக அமைந்துள்ளது. அனைவரையும் கொள்கை ரீதியாக, கோட்பாடு ரீதியாக பயிற்றுவிக்கும் கடமையை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி இருக்கிறார்கள்.

தமிழகத்திற்கு ரூ.9,062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவித்தது ஒன்றிய அரசு

 மாலைமலர் : மே 31-ம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ரூ.9,062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவித்தது மத்திய அரசு
ஜி.எஸ்.டி
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையில் ரூ.86,912 கோடியை மத்திய அரசு விடுவித்தது.
இதில் தமிழகத்திற்கு ரூ.9062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.
மே 31-ம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளது.

கோயில் பெயரில் நிதி! பாஜகவின் கார்த்திக் கோபிநாத் - யூடியூபர் கைது!

 மின்னம்பலம் : பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு அந்த பகுதி மக்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
இங்குள்ள மலையில் துணை கோயில் எனக் கூறப்படும் பெரியசாமி கோயில் அமைந்துள்ளது.
சுடுமண்ணால் வடிவமைக்கப்பட்ட செல்லியம்மன், பெரியசாமி, ஆஞ்சநேயர் உட்பட ஏராளமான சிலைகள் இருந்தன.

இலங்கை விமானங்கள் திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்புகின்றன! கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி:

 தினத்தந்தி :  இலங்கை விமானங்கள் திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்புகின்றன.
திருவனந்தபுரம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி விமான எரிபொருள் தட்டுப்பாடும் அங்கு தீவிரமாக உள்ளது.
இதனால் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
எனினும் கொழும்புவில் இருந்து ஜெர்மனியின் பிராங்க்பர்ட், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு இயக்கப்படும் விமானங்களால் அதிக வருவாய் ஈட்டப்படுவதால் இந்த தடத்தில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த விமானங்களுக்கும் போதுமான எரிபொருள் கிடைக்கவில்லை.

அமரர் ஃபெரோஸ் காந்தி! பல ஊழல்களை வெளிகொண்டுவந்தவர் .. அகால உயிரிழப்பு

Sundar P  :  ஃபெரோஸ் காந்தி...
(செப்டம்பர் 12, 1912 - 8 செப்டம்பர் 1960)
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு அமைந்த பாராளுமன்றத்தின் ரேபரேலி தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஃபெரோஸ் காந்தி. இவர்தான் இந்திராகாந்தியின் கணவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பலமுறை சிறை சென்றவர்..
அந்த காலகட்டத்திலேயே புலனாய்வு பத்திரிகை நடத்தியவர் ஃபெரோஸ்...
அந்த காலத்தில் நடந்த இமாலய ஊழல்களை துணிச்சலாக வெளிக்கொணர்ந்து நாட்டின் பொருளாதார சீரழிவை தடுப்பதில் பெரிய பங்காற்றினார்...
டால்மியா சிமெண்ட்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா க்ருப்புடைய முதலாளியான ராம்கிஷன் ஜெயின் செய்த பங்குச் சந்தை மோசடிகளை செய்தியாக்கி அவருக்கு தண்டனை பெற்றுத் தந்தார்

திங்கள், 30 மே, 2022

ஐ டி ஊழியர் குடும்பத்துடன் தற்கொலை... வெளிவந்த தகவல் ரூ.80 லட்சம் கடன்- வாரம் தோறும் 9 பேருக்கு வட்டி கொடுத்து ...

 

மாலைமலர் : பணம் கொடுத்தவர்கள் கொடுத்த நெருக்கடியால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் குடும்பத்தினை கொலை செய்து விட்டு தற்கொலை முடிவுக்கு சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
தாம்பரம்:
பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது41). சாப்ட்வேர் என்ஜினீயர்.
இவரது மனைவி காயத்ரி (39). வீட்டின் அருகே உள்ள வடிவேல் தெருவில் மருந்து கடை நடத்தி வந்தார். மேலும் பொழிச்சலூர் மண்டல பா.ஜனதா மகளிர் அணி செயலாளராகவும் இருந்தார்.

தசரத சக்கரவர்த்தி ஒரு சமணரா? ராமாயணம் இந்து சாயம் பூசப்பட்ட ஒரு சமண காப்பியம்?

May be an image of temple
May be an image of indoor

Anitha N Jayaram  :; குகைக்குள் குகை, அவற்றின் அறைகளில் சிதிலிமடைந்த நிலையில் ஓவியங்கள்.
Shalini  : இவை ஜீனாலய சுவர் ஓவியங்கள்.
ஜைன சமயத்தில் சக்கரத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.
வாழ்க்கை சக்கரம்
பிறவி மறு சுழற்சி
கால சக்கரம்
இவை எல்லாம் ஜைன கருத்துக்கள்
ஜைன மன்னர்களில் சிறந்தவர்களை சக்ரவர்த்தி என்று அழைக்கிறார்கள்.
தசரதரும் ஒரு சக்ரவர்த்தி.
அப்படீன்னா; ராமர் ஜெயினரா?
இல்லை அவர் செருப்பு அணிந்து இருந்தார்....
அவர் அப்பா எப்படி சக்ரவர்த்தி?
இளமையில் சம்சாரியாக வாழ்ந்து, முதுமையில் மட்டும் துறவு மேற்கொள்ளும் population stabilization strategy....
அப்ப ராமாயணம் ஜைன காப்பியமா?

கலைஞர் சிலை திறப்பு விழா.. கனிமொழியுடன் வந்த ராசாத்தி அம்மாள்.. நெகிழ்வாக வரவேற்ற ஸ்டாலின் B

 Vishnupriya R   -   Oneindia Tamil ; முத்தமிழறிஞர் கலைஞரின்  சிலை திறப்பு விழாவிற்கு மகள் கனிமொழி எம்பியுடன் ராசாத்தி அம்மாள் வந்துள்ளார்.
அவரை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.
சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நடைபெறும் விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின்  சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா  திறந்து வைத்தார்.
ரூ 1.17 கோடி மதிப்பில் சுமார் 16 அடி உயரத்தில் கலைஞரின்  சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர், அரசு அதிகாரிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
எம்ஜிஆர் மறைவின் போது அண்ணா சாலையில் தகர்க்கப்பட்ட  கலைஞரின்  சிலை 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

நக்மா அதிருப்தி.. மாநிலங்கள் அவை தேர்தல் .. எனக்கு தகுதி இல்லையா? மகிளா காங்கிரஸ்...

மின்னம்பலம் : மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் நடிகையும் மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நக்மா காங்கிரஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 57 எம்பிக்களின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. இதற்காக வரும் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாளையுடன் வேட்பு மனுத்தாக்கல் முடிவடைகிறது.
மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடம் உட்பட நாடு முழுவதும் 16 வேட்பாளர்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர்.

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது' வழங்கும் தேர்வு குழு 0 எஸ்.பி. முத்துராமன் - நடிகர் நாசர் - கரு. பழனியப்பன் ...

 மாலைமலர் : 'கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது' வழங்கும் தேர்வு குழுவில் எஸ்.பி. முத்துராமன் தலைவராகவும், நடிகர் நாசர் மற்றும் இயக்குநர் கரு. பழனியப்பன் உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு 'கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது' வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தலைவராகவும், நடிகர் நாசர் மற்றும் இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினராக கொண்ட தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா திராவிடர்கள், ஆதிவாசிகளுக்கு சொந்தமானது'ஓவைசி பேச்சு

 தினத்தந்தி : தானே, 'இந்தியா திராவிடர்கள், ஆதிவாசிகளுக்கு சொந்தமானது' என பிவண்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஓவைசி பேசினார்.
தானே மாவட்டம் பிவண்டி நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம்.(மஜ்லிஸ்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், 'பா.ஜ.க., காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி போன்றவை, தங்கள் வாக்கு வங்கியைக் காக்க விரும்புவதால்,
சிறுபான்மையினர் குறிவைக்கப்படும்போது வாய் திறப்பதில்லை.
நாட்டில் 8 ஆண்டுகால ஆட்சியை பா.ஜ.க.வும், மோடியும் கொண்டாடும் வேளையில்,

ஒன்றிய தலைவரும் மாநில தலைவரும்

 Muralidharan Pb : மோடியும் ஸ்டாலினும்..   
ஒப்பிட முடியாத இரு தலைவர்கள். ஒரே மேடை என்பது இரு கட்சியினரும் கனவிலும் எதிர்பாராத ஒன்று.
இருப்பினும் அரசு விழா என்பதால் நடந்தேறி விட்டது. ஆகவே இப்பதிவு‌.
26.5.2022 அன்று நலத்திட்டங்கள் நேரு விளையாட்டரங்கில் நடந்த தொடங்கி வைக்கும்  நிகழ்வு கூட்டத்தில் ஒரு போட்டி. அது ஒன்றிய பிரதமர் மோடிக்கும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆனது.
ஸ்டாலின் கையில் புள்ளிவிவரங்களும் மக்களின் வாழ்வாதாரம், சமூகநீதி மற்றும் சுயமரியாதை உணர்வுகளை ஆயுதங்களாக்கி அவற்றை சொற்களாகத் வார்த்திருந்தார்.

ஞாயிறு, 29 மே, 2022

அய்யா விடுதலை விரும்பி அவர்கள் மருத்துவ மனையில் ....

May be an image of 2 people, people sitting and indoor

அய்யா விடுதலை விரும்பி அவர்கள் மருத்துவ மனையில் ....
Narasimman Naresh  - ஆ.சிங்கராயர்.  :  உண்மையான தொண்டனின் மரண சாசனம் இப்படியாகவே இருக்கும்.
அடிப்படை திமுக உறுப்பினர்கள் இப்படியானவர்கள். இவர்களின் எளித பிம்பத்தை மீசைகளும்  ஆடம்பர மோதிரங்களும்  மறைத்துவிடுகின்றன.
திமுக தொண்டர்கள் ஏன் இவ்வளவு பாசத்தோடும்,
ஒருவித வெறித்தனத்தோடும் பேசியும் சண்டையிட்டும் வர வேண்டும் என்று
நான்கூடப் பல நேரங்களில் சிந்தித்துண்டு.
ஆம், காரணமில்லாமலில்லை.
நானும் அய்யா பேராசிரியர் சுபவீ,அண்ணன் திரு.பொள்ளாச்சி உமாபதி அவர்களும்  கோவை ஆவாரம்பாளயத்தில்  தலைவரின்   ஓராண்டு சாதனைவிளக்கப் பொதுக்கூட்டம் பேசிவிட்டு வந்துகொண்டிருந்த போது அண்ணன் திரு.பொள்ளாச்சி உமாபதி அவர்கள்  வாருங்கள் ஒரு முக்கியமான ஒரு நபரைப் பார்த்துவிட்டு வருவோம் என்று ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

பாக்கிஸ்தானில் கிமு 2ஆம் நூற்றாண்டு பௌத்தப் பள்ளி கண்டுபிடிப்பு !

May be an image of outdoors

Subashini Thf  :  பாக்கிஸ்தான் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் கிமு 2ஆம் நூற்றாண்டு பௌத்தப் பள்ளி கண்டுபிடிப்பு !
வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பண்டைய பௌத்த மதச் சான்றுகள் கிடைப்பதைப் பற்றிய செய்திகள்,
வரலாற்று ஆய்வுகளின் வழியும் தொல்லியல் கள ஆய்வுகளின் வழியும் கிடைக்கின்றன. இதைப்போல இன்றைய பாகிஸ்தான்,
ஆப்கானிஸ்தான் ஆகிய நிலப்பகுதிகளிலும் இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பல்வேறு வரலாற்றுத் தேடல்கள், அகழ்வாய்வுப் பணிகளில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்ற கண்டுபிடிப்புகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

ரணிலின் மிரட்டலில் மஹிந்தவின் சாம்ராஜ்யம், நாமலின் மனக்கணக்கு, கோட்டாவின் சிங்கள இமேஜ் சரிவடைந்ததா..?

jaffna muslim:  ரணிலின் மிரட்டலில் மஹிந்தவின் சாம்ராஜ்யம், நாமலின் மனக்கணக்கு, கோட்டாவின் சிங்கள இமேஜ் சரிவடைந்ததா..?
Sunday, May 29, 2022 கட்டுரை
நிதியமைச்சர் பதவியை கொடுக்காவிட்டால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வேன் என்று கடந்த வாரம் ஜனாதிபதிக்கு தகவல் அனுப்பினாராம் ரணில்...
நிதியமைச்சு பதவிக்கு பொதுஜன முன்னணி எம்.பி ஒருவரை நியமிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாகவே , அதிருப்தியடைந்த ரணில் அப்படி தகவல் அனுப்பினார்...
அடுத்த நாளே கூப்பிட்டு பதவியை கொடுத்தார் கோட்டா.. இப்போதெல்லாம் ரணிலுக்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டு ஒதுங்கி நிற்கிறார் ஜனாதிபதி.. அமைச்சர் பதவி கோரியவர்களைக் கூட , அதனை ரணிலிடம் பேசுங்கள் என்று கூறி ஒதுங்கியுள்ளார் கோட்டா.அதற்கு ஜனாதிபதியின் விட்டுக்கொடுப்பல்ல , வேறு வழியில்லை என்பதே சரியான காரணம்..
இப்போது ரணிலை நீக்கி ஆளுங்கட்சி எம்.பி ஒருவரை பிரதமராக்க , பொதுஜன பெரமுன சதி வேலைகளை செய்து வருகிறது,

மாநிலங்களவை வேட்பாளராக ப.சிதம்பரம்.. திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில்

 நக்கீரன் செய்திப்பிரிவு :  நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது  வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது.
 இந்நிலையில் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுகவுக்கு கிடைத்திருக்கும் நான்கு இடங்களில் ஒன்றை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக திமுக அறிவித்திருந்தது. இந்நிலையில் மீதமுள்ள அந்த ஒரு இடத்தில் யார் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என கேள்வி எழுந்த நிலையில், தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநிலங்கள் அவையில் பாஜக பெரும்பான்மை இழக்கிறது! பெரிய கட்சியாக . ஒருமாதம் கூட நீடிக்க முடியவில்லை

 கலைஞர் செய்திகள்  : 15 மாநிலங்களில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.கவின் மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை 100க்கு கீழ் குறைய உள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ல் நடைபெறும் என மே 12ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து இந்த 15 மாநிலங்களிலும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு 100 எம்.பி.க்களை கொண்ட சாதனையை பா.ஜ.க இந்த மாநிலங்களவை தேர்தல் இழக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது என்னவென்றால், 1990ம் ஆண்டு மாநிலங்களவையில், 108 காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இருந்தனர். இதற்குப் பிறகு எந்த ஒருகட்சியும் இந்த அளவிற்குப் பெரும்பான்மையை பெறவில்லை.

ராமநாதபுரம் ம் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அதிரடி உத்தரவு.. சாட்டையை சுழற்றும் ராமநாதபுரம் உள்ளாட்சிகள்

 Noorul Ahamed Jahaber Ali  -  Oneindia Tamil  :;  ராமநாதபுரம்: வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில் செய்து வருபவர்களின் விபரங்களை சமர்பிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.
ராமேஸ்வரத்தில் மீனவப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் ஒடிசாவை சேர்ந்த 2 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

பஞ்சாபில் காங்கிரஸ் பாடகர் சித்து மூஸ்வா சுட்டுக்கொலை . - பாதுகாப்பை விலக்கிய மறுநாளில் நடந்த பயங்கரம்

 மாலைமலர் : பாடகர் சித்து மூஸ்வாலாவுக்கு அரசு வழங்கிய பாதுகாப்பு நேற்று வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பஞ்சாபி பாடகர் சுட்டுக் கொலை - பாதுகாப்பை விலக்கிய மறுநாளில் நடந்த பயங்கரம்
பாடகர் சித்து முஸ்வாலா
சண்டிகர்:. பஞ்சாப் மாநிலத்தில் பிரபல பாடகராக இருந்து வருபவர் சித்து மூஸ்வாலா. காங்கிரஸ் கட்சியில் கடந்த டிசம்பர் மாதம் இணைந்தார்.
இந்நிலையில், மான்சா மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது சித்து மூஸ்வாலா மர்ம கும்பலால் சுடப்பட்டார். இதில் அவரும், அவருடன் இருந்த 3பேரும் படுகாயம் அடைந்தனர்.

குடியரசுத் தலைவராக வெங்கையாவுக்கு திமுக ஆதரவு?

 மின்னம்பலம் : முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சிலையைத் திறந்துவைத்த பின்னர், கலைவாணர் அரங்கத்தில் கூட்டம் நடைபெற்றது. மூத்த அமைச்சர் துரைமுருகனின் வரவேற்புரைக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், தலைமைச் செயலர், நாடாளுமன்ற, சட்டமன்ற இன்னாள், முன்னாள் உறுப்பினர்களை வரிசையாகச் சொல்லிக்கொண்டே வந்தவர், நடிகர் ரஜினிகாந்த்தை தனியாகக் குறிப்பிட்டார்.
தன்னுடைய தந்தையின் சிலையைத் திறக்கவில்லை என உணர்த்துவதைப் போல, நவீன தமிழ்நாட்டின் தந்தையாக கலைஞர் என்னென்ன செய்தார் என்பதைப் பட்டியலிட்டார், முதலமைச்சர் ஸ்டாலின்.