சனி, 21 ஜனவரி, 2023

EVKS இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத்திற்கு ஈரோடு கிழக்கில் வாய்ப்பு கிடைக்குமா?

 மின்னம்பலம் : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட காங்கிரஸ் கட்சியிடம் வாய்ப்பு கேட்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி, மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட கோரி அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தி வந்தனர்.

தேனீர் குடித்தே 50 ஆண்டுகளாக உயிர் வாழும் வங்காள பெண்

தேனீர் குடித்தே 50 ஆண்டுகளாக உயிர் வாழும் அதிசய பெண்

மாலை மலர் :  மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், சியாம் பஜார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெல்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் அனிமா சக்ரவர்த்தி. 76 வயதான இவர், மகன், பேரன்பேத்திகளையும் பார்த்துவிட்டார்.
இளம் வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு வேலைசெய்து அந்த வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். அப்போது வேலை செய்யும் இடங்களில் தரப்படும் மீந்துபோன உணவை, வீட்டுக்கு எடுத்துவந்து பிள்ளைகளுக்கு கொடுத்துவந்துள்ளார்.

பாஜக வழங்கிய அதிமுகவின் பன்னீர்செல்வம்

ஆலஞ்சி மு மன்சூர் :  கேவலம் ..30 ஆண்டுகள் ஆண்ட கட்சி ,தனித்து வார்டு உறுப்பினராக கூட வரமுடியாத ஒரு கட்சி ஆபீஸின் வாசலில் நிற்க வைக்கபட்டது ..
சொரணை உள்ள அதிமுககாரர்கள் இனியும் இந்த ஈனபிறவிகளை தூக்கிபிடிக்காமல் வெளியேறவேண்டும் ..
சுயமிழந்து மானமிழந்து கைகட்டி நிற்கும் அவலம் அதிமுகவிற்கு வந்திருக்கவேண்டாம் .. ஜெயலலிதாவின் இருந்தவரை போயஸ்கார்டனின் வாசல் கதவு திறக்காதா என நின்றிருந்த கூட்டத்திடம் கையேந்துகிற நிலை..
அதிமுக எனும் அரசியல்கட்சி இனி தமிழகத்திற்கு தேவையில்லை
அந்த இடத்தை பிற கட்சிகள் முயற்சிக்கலாம்..
மிக கேவலமாக பாஜக கேட்டால் தொகுதியை தருவதாக விசுவாச அடிமை பன்னீர் சொல்கிறார்  அவரின் உடல்மொழி படுகேவலம் சகிக்கவில்லை.. அதைதான் பாஜக எதிர்பார்க்கிறது ‍..
இரு கோஷ்டிகளும் அடித்துக்கொண்டு பழம் நம் கையில் என்று எதிர்பார்த்து காத்துநிற்கிறது .. இந்த அடிமை கூட்டம் சூடுசொரணையற்று நிலைமை புரியாமல் வசனம் பேசி திரிகிறது

மல்லிகார்ஜுன கார்கே : 6 காங்கிரஸ் அரசுகளை திருடிவிட்டது பாஜக!

hindutamil.in  6 காங்கிரஸ் அரசுகளை திருடிவிட்டது பாஜக - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
பதான்கோட்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரை அடைந்துள்ளது. இந்த யாத்திரை நேற்று முன்தினம் பஞ்சாபில் நடைபெற்றபோது பதான்கோட் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே பாஜகவின் குறிக்கோளாக உள்ளது. மக்கள் நலனுக்காக எதையும் சிந்திக்கவோ செயல்படுத்தவோ இல்லை.
ஆறு காங்கிரஸ் அரசுகளை அவர்கள் திருடிவிட்டனர். எங் களுக்கு உத்தரவு வழங்கிய 6 மாநிலங்களை அவர்கள் திருடினார்கள். அவர்களிடம் அதிகாரம் உள்ளது, மக்கள் காங்கிரஸை தேர்ந்தெடுத்த பிறகு அவர்கள் சதி செய்து எங்கள் கட்சியினரை அழைத்துச் சென்றனர். இந்திய ஒற்றுமை யாத்திரையில் பல்வேறு தரப்பை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இணைகின்றனர். யாத்திரையின் வெற்றியை கண்டு பாஜக அஞ்சி நடுங்குகிறது.

நடனமாட மறுத்த சிறுமி; பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியபீகார் இளைஞர்கள்

 நக்கீரன்  : நடனமாட மறுத்த சிறுமி மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் பகுவரா என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அப்பகுதி இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடினர். மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அங்கிருந்த 10 வயது சிறுமியை தங்களுடன் நடனமாட வற்புறுத்தியுள்ளனர்.
சிறுமி மற்றும் அவரது தோழிகள் இதற்கு மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மறுநாள் காலை அச்சிறுமி வீட்டை விட்டு வெளியில் வரும் பொழுது, அவரை சாலையில் இழுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசன் போட்டி? தகவல் பரவி வருகிறது.

 மாலைமலர் : ஈரோடு  கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கே மீண்டும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இல்லையென்றால் அவரது மனைவி வரலட்சுமி, 2-வது மகன் சஞ்சய் சம்பத், மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் மனைவி பூர்ணிமா ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இளங்கோவன் போட்டியிட விரும்பாதபட்சத்தில் தனது ஆதரவாளர் யாருக்காவது சீட் கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து இளங்கோவனை போட்டியிட அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மலையகத்தில் நுவரெலியா நானுஓயாவில் பேருந்து விபத்து: 7 பேர் மாணவர்கள் உயிரிழப்பு - 51 பேர் காயம்!

hirunews.lk  :   நுவரெலியாவில் கோர விபத்து: 7 பேர் பலி - 51 பேர் காயம்!
நுவரெலியா - நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா வைத்தியசாலை தரப்புகள் தெரிவிக்கின்றன.
இன்று இரவு பேரூந்து ஒன்றும் சிற்றூர்ந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கொழும்பு தேஸ்டன் பாடசாலையின் மாணவர்கள் சுற்றுலா சென்ற பேரூந்து, நுவரெலியாவில் இருந்து நானுஓயாவுக்கான ரதெல்ல குறுக்கு வழியில் கொழும்பை நோக்கி பயணித்துள்ளது.
இந்த பேரூந்து நானுஓயா குறுக்கு வீதியில் கோவில் ஒன்றுக்கு அருகில் உள்ள வளைவு ஒன்றில் பயணித்த போது, அதன் தடையாளி உரிய வகையில் இயங்காமையால் டிக்கோயா பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற சிற்றூர்தி ஒன்றுடன் மோதியதுடன், அதற்கு பின்னால் வந்த முச்சக்கர வண்டி ஒன்றுடனும் மோதி பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளது.

வெள்ளி, 20 ஜனவரி, 2023

ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் மேலிட முடிவுக்காக காத்திருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் மேலிட முடிவுக்காக காத்திருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மாலைமலர் : இளங்கோவன் மிக மூத்த காங்கிரஸ் தலைவர். மத்திய மந்திரி, எம்.பி., மாநில தலைவர் என்று பல பதவிகளையும் வகித்தவர் கடந்த தேர்தலில் காங்கிரசுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 8 ஆயிரம்தான்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளரை இறுதி செய்யும் பணிகளை தமிழக காங்கிரஸ் மேலிடம் தொடங்கி உள்ளது.
கட்சி நடைமுறைப்படி வேட்பாளர் பெயர் பட்டியலை தேர்வு செய்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்ப வேண்டும். டெல்லி மேலிடம் வேட்பாளர் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
 மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை களம் இறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

பேரறிஞர் அண்ணா பெட்ரோல் போட காசில்லாமல் கஷ்டப்பட்டார்.. அதுவும் முதல்வராக இருந்த காலத்தில் . அவரோடு இருந்த அதிகாரி சுவாமிநாதன்

Narayanaperumal Jayaraman 
: முதல்வராக இருந்த காலத்தில்...
அண்ணா பெட்ரோல் போட காசில்லாமல் கஷ்டப்பட்டார் என அவரோடு இருந்த அதிகாரி சுவாமிநாதன் எழுதி இருக்கிறார்!
அண்ணா இறந்த பொழுது,
நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் ரூபாய் 5000 மட்டும்  கையிருப்பு இருந்ததாக தகவல்!
எழுத்தாளர் ஜெயகாந்தன், அண்ணா நீங்கள் எழுதுவது சிறுகதையே அல்ல என்று விமர்சித்தது கூட, ஆம் என்று ஒப்புக் கொண்ட பெருந்தகை மனிதர்!
நேரு ஒரு முறை நான்சென்ஸ் என்று சொன்னபோது..  
"அவர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம், நாங்கள் கொட்டிக்கிடக்கிற செங்கல்!
என நாகரிக வார்த்தை மட்டுமே பயன்படுத்தினார்.
19 வருட பிரிவில், பெரியாரை விமர்சித்தது கிடையாது!
இவர்களின் விரல்களை நருக்குவேன் என்று சொன்ன காமராஜரை கூட... குணாளா குலக்கொழுந்தே என்றுதான் கூறியிருக்கிறார்!
ஈவிகே சம்பத், தோழர் அண்ணாதுரை என்று கூறிய போது கூட, "வைரக் கடுக்கன்" காது புண்ணாகி விடும் என்று கழட்டி வைத்திருக்கிறேன் என்றவர்!

ஈரான் பெண்ணுரிமைக்கு ஆதரவான இளைஞர்களு தூக்கு! வாதாட 15 நிமிடம்தான் - பொய் வழக்குகளால் தூக்கிலிடப்படுகிறார்கள்

BBC :  ஹிஜாப் அணிவதற்கு எதிராக இரானில் போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இதுவரை 4 இளைஞர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
மேலும் போராட்டத்தில் சம்பந்தபட்டுள்ள  மற்றொரு 22 பேருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானில் இயங்கிவரும் `மனித உரிமை ஆர்வலர்களின் செய்தி நிறுவனமான  HRANA - வின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொகமத் மெஹ்தி கராமி என்னும் 22வயது கராத்தே வீரர் கடந்த ஜனவரி 7ஆம் தேதி தூக்கிலிடப்பட்டுள்ளார். பிபிசியின் பாரசீக  மொழி சேவையிடம் பேசிய சிலர், மரண தண்டனை விதிக்கப்பட்டது
தொடர்பாக தன் தரப்பு வாதத்தை முன்வைப்பதற்கு அவருக்கு வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
அவர் கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து சரியாக 65-ஆவது நாளில் மொகமத் மெஹ்தி கராமி தூக்கிலிடப்பட்டார்.

நடிகை வன்னிதா : பிக்பாஸில் ஜெயிக்கிறதுக்கே வி சி க இவ்வளவு அராஜகம்னா, தேர்தல் வரும் போது என்னலாம் செய்வாங்க?

 மின்னம்பலம் christopher :  : திருமாவளவனுக்கு எதிராக கேள்வி எழுப்பிய நடிகைக்கு மிரட்டல்?
விக்ரமனுக்கு ஆதரவாக ட்விட்டரில் வாக்கு கேட்ட விசிக தலைவர் தொல் திருமாவளவனை, நடிகை வனிதா விஜயகுமார் விமர்சித்து இருந்தார்.
இதனையடுத்து குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த சிலர் தன்னை மிரட்டுவதாக அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தொடங்கியது.
21 நட்சத்திர போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களாக அசீம், அமுதவாணன், நந்தினி, விக்ரமன், ஷிவின் ஆகியோர் என 5 பேர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை காஷ்மீர் வந்தடைந்தது

 மாலைமலர் : ஸ்ரீநகர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். பல மாநிலங்களைக் கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை நேற்று இமாசல பிரதேசத்தில் நுழைந்தது. கடும் பனியை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் நடந்தனர்.
இந்நிலையில், இந்த யாத்திரை இன்று காஷ்மீரை வந்தடைந்தது. காஷ்மீரின் லகான்பூர் வந்தடைந்த நிலையில் ஏராளமானோர் தீப்பந்தம் ஏந்தி ராகுலுடன் வந்தனர்.
காஷ்மீர் வந்தடைந்த ராகுலின் பாதயாத்திரையில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பங்கேற்றார். ராகுல் காந்தியை வரவேற்று அவர் கலந்துரையாடினார்.

வியாழன், 19 ஜனவரி, 2023

வசூலை குவிக்கும் தென்னிந்திய சினிமா - வசூலில் தள்ளாடுகிறதா பாலிவுட்?

வாரிசு, துணிவு

bbc.com : புத்தாண்டு தென்னிந்திய சினிமாவுக்கு வெற்றிகரமான ஆண்டாக தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் வெளியான வாரிசு, துணிவு, வால்டர் வீரய்யா, வீர சிம்மா ரெட்டி ஆகிய படங்கள் வசூலை வாரிக் குவித்து வருவதால் இந்தி திரையுலகம் திகைத்துப் போய் நிற்கிறதா? சமீபத்திய வெற்றியைக் கொண்டு பாலிவுட் திரையுலகத்தை தென்னிந்திய திரையுலகத்துடன் ஒப்பிட முடியுமா?
இந்திய எல்லை தாண்டி, சர்வதேச அளவில் இந்திய சினிமா என்றாலே இந்தி  சினிமா என்று அடையாளப்படுத்தப்பட்ட காலம் மாறி வருகிறது. குறிப்பாக, பாகுபலி திரைப்படம் இந்திய திரையுலகம் மீதான உலகின் ஒட்டுமொத்த பார்வையையும் மாற்றிவிட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டி

 மாலைமலர் : முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பேச்சுவார்த்தை நடத்தினார். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மரணம் அடைந்தார்.
இதையடுத்து இந்த தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
வேட்பு மனுதாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்க உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

"சர்பிரைஸ் கிப்ட்" கண்ணை மூடிக்கொள்ள வைத்து கழுத்தை பிளேட்டால் வெட்டி கொன்ற காதலன்.. இலங்கை பல்கலைக்கழக மாணவன்


.tamilmirror.lk  : 24 வயது பல்கலைக்கழக மாணவி கொலை:“சப்ரைஸ் கொடுத்தேன்” காதலன் வாக்குமூலம்
விசேடமாக ஒன்றை கூறவேண்டும். உங்களை ஆச்சரியப்படுத்தும் (சப்ரைஸ்) வகையில் ஒன்றை செய்ய​ப்போகின்றேன். எனக் கூறியே அவளை நான், குதிரை பந்தைய திடலுக்கு அழைத்துச் சென்றேன்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் 3ஆம் வருட மாணவியொருவர், செவ்வாய்க்கிழமை (17) நண்பகல், கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்.
கொழும்பு – 07, குதிரைப் பந்தய திடலில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் கறுவாத்தோட்ட பொலிஸாரினால் சடலம் மீட்கப்பட்டதுடன், அவருடைய காதலனும் கொலன்னாவை, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து, அன்றைய தினமே கைது செய்யப்பட்டார்.  நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சந்தேகநபரான காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர், பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திலே​யே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாக்குமூலமளித்த அவர், அவ்வாறு அழைத்துவரும் போது இருவரும் பேசிக்கொண்டே வந்தோம்.

கனிமொழி : கலைஞர் சந்திக்க விரும்பிய தலைவர் சேகுவேரா அலேடாவை சந்தித்தது என் நல்வாய்ப்பு

 tamil.oneindia.com  - Yogeshwaran Moorthi  :  சென்னை: முன்னாள் முதலமைச்சர் கலைஞர்  சந்திக்க விரும்பிய புரட்சியாளர் சேகுவேரா என்றும், அவரின் மகளை சந்தித்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். அதேபோல் ஆளுநரின் விளக்கம் குறித்து பேசிய கனிமொழி, தமிழர்கள் சாதாரணமாக தான் இருப்பார்கள், சுரண்டி பார்த்தால் தீக்கங்கு வெளியாகும் என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு புரட்சியாளர் சே குவேராவின் மகளான அலெய்டா குவேரா 2 நாட்கள் சுற்றுப்பயணம் வந்துள்ளார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புதன், 18 ஜனவரி, 2023

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு; உண்மை கண்டறியும் சோதனை... 12 கேள்விகளுக்கு பதிலளித்த ரௌடிகள்!

Vikatan - எஸ்.மகேஷ் : அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த 2012-ம் ஆண்டு, மார்ச் 29-ம் தேதி அதிகாலை தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சிக்குச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், திருச்சி கல்லணை சாலையில் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். ஆனால், குற்றவாளிகள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனால், தன்னுடைய கணவர் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ராமஜெயத்தின் மனைவி லதா. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சி.பி.ஐ-யும் விசாரித்தது. ஆனால், குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடிக்கப்படவில்லை.
தம்பி ராமஜெயம் படத்துக்கு மலர் தூவும் அமைச்சர் கே.என்.நேரு

தம்பி ராமஜெயம் படத்துக்கு மலர் தூவும் அமைச்சர் கே.என்.நேரு

இதையடுத்து ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவால், இந்த வழக்கு மீண்டும் தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு வசம் சென்றது. எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் திருச்சி ராமஜெயத்தின் கொலை வழக்கை விசாரித்துவருகிறார்கள்.

இரட்டை இலைக்கு பதிலாக தாமரை -பாஜக நெருக்கடியில் எடப்பாடி

nn

நக்கீரன் : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பிறகு தமிழக அரசியல் களம் பரபரப்பை தொட்டுள்ளது.
திமுக தரப்பில் அங்கு திமுகவே நேரடியாக வேட்பாளரை நிறுத்த பெரும்பாலான வாய்ப்புள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் அதிமுக தரப்பிலும் நேரடியாக வேட்பாளர் நிறுத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார்.
எடப்பாடி சென்ற ஆட்சியில் நான்கு வருடம் முதல்வராக இருந்த போதும் பிறகு அதிமுக இப்போது இரண்டாக பிளவுப்பட்டு நிற்கும் சூழலில் கட்சி எனது கண்ட்ரோலில் தான் உள்ளது என தொடர்ந்து எடப்பாடி பேசி வரும் நிலையில்,

மருத்துவரின் சீட்டு இருந்தால் மட்டுமே மருந்து விற்பனை செய்ய வேண்டும்- தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 மாலை மலர்  :  சென்ன  மனநோய் மற்றும் தூக்க மருந்துகளை தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றதா என்பதை கண்காணிக்க,
 சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு துறை சார்ந்த அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அதில் சென்னை திருவான்மியூர் கடற்கரை சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் வலிநிவாரண மருந்துகள் அதிக அளவில் வாங்கி வைக்கப்பட்டிருந்ததும்,
உரிய ரசீது இல்லாமல் விற்பனை செய்யப்படுவதும் கண்டறியப்பட்டது.
இதன் தொடர்பாக அந்த மருந்துக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அந்த கடைமீது மருந்து மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

தலாய்லாமா 'எளிய துறவி' அல்ல! திபெத் நிலப் பிரபுத்துவ இறையாட்சி அமைப்பின் தலைவர் அவர்

 hirunews.lk : தலாய்லாமாவை அழைத்தமைக்கு சீன தூதரகம் அதிருப்தி!
திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய்லாமா இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ள வேண்டும் என்ற பௌத்த பிக்குகளின் கோரிக்கைக்கு, இலங்கைக்கான சீன தூதரகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
மல்வத்துபீட மஹாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை, கண்டியில் சந்தித்து கலந்துரையாடிய போதே, இலங்கைக்கான சீன தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஹூ வெய் (ர்ர றுநi) தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது கருத்துரைத்த இலங்கைக்கான சீன தூதரகத்தின் பொறுப்பதிகாரி, தலாய் லாமா கூறுவதை போல் ஓர் 'எளிய துறவி' அல்லர், 1951 இல் சீனா கையகப்படுத்தப்படுவதற்கு முன்னர் திபெத்தில் இருந்த நிலப் பிரபுத்துவ மற்றும் இறையாட்சி அமைப்பின் தலைவராகவும் பிரிவினைவாதியாகவும் செயற்பட்டவர் என குறிப்பிட்டார்.

செவ்வாய், 17 ஜனவரி, 2023

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்: எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு...

 தினமணி : ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த முறை வாக்குப்பதிவு ஏன் தேவை? என்று கேள்வி எழுப்பியுள்ள எதிா்க்கட்சிகள், இது தொடா்பான தோ்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
தொகுதியை விட்டு வெளியில் இருக்கும் வாக்காளா்களும் தோ்தலில் வாக்களிக்கும் வகையில் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திர முறையைக் கொண்டுவர தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கருத்துக் கேட்க எட்டு தேசிய, 57 பதிவுப் பெற்ற அரசியல் கட்சிகளின் கூட்டத்தை தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை கூட்டியது. இதில் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து செயல்முறை விளக்கம் காண்பிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் 40 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
’ரிமோட்’ வாக்குப்பதிவு இயந்திரம் தொடா்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்து வருமாறு:

திடீரென பாய்ந்த நாய்.. 3வது மாடியில் இருந்து குதித்த ஸ்விக்கி ஊழியர் உயிரிழப்பு . தெலங்கானாவில்

 tamil.news18.com  : தெலங்கானாவில் வளர்ப்பு நாயின் தாக்குதலில் இருந்து தப்பிக்க மூன்றாவது மாடியில் இருந்து குதித்த 23 வயது ஸ்விக்கி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் யூசுப்குட்டா பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரிஸ்வான். 23 வயதான ரிஸ்வான் கடந்த 3 ஆண்டுகளாகவே ஸ்விக்கி டெலிவரி பாய்யாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 11ஆம் தேதி பன்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கே சோபனா என்பவருக்கு ரிஸ்வான் உணவு டெலிவரி செய்ய சென்றுள்ளார்.
சோபனா 3ஆவது மாடியில் வசித்து வரும் நிலையிவ், ரிஸ்வான் வீட்டின் கதவை தட்டியுள்ளார்.

மகாசிவராத்திரிக்கு ஜக்கியின் மகா திட்டம்! ஓ.கே சொன்னாரா விஜய்? ஆளப்போராண்டா தமிழன்ன்ன்ன்

Isha's controversies continue! Jaki approaching Vijay!

நக்கீரன் : இந்த வருடம் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவுக்கு நடிகர் விஜய்யை அழைத்து பங்கேற்க வைத்தால் ஈஷா மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் மறந்துவிடுவார்கள். கூட்டத்திற்கு கூட்டமும் சேரும் என்ற கணக்கில் விஜய்யை அழைக்க ஜக்கி முடிவு செய்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் பெற்றோர் ஈஷாவின் பக்தர்கள். இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், “ஜக்கியால்தான் நான் மனத்தெளிவு பெற்றேன்” எனப் பேட்டியும் கொடுத்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு, “நடிகர் விஜய்யை, தான் நடத்தும் விழாவிற்கு அழைத்து வந்தால் கூட்டம் தானாகச் சேரும்...” என முடிவு செய்து விஜய்யின் பெற்றோரிடம் இதுபற்றி கூற... கோவை வ.உ.சி. மைதானத்தில் நடத்தப்படும் விழாவிற்கு போய்வரக் கூறியுள்ளனர்.
பெற்றோரின் தொடர் வற்புறுத்தலால் நிகழ்வில் கலந்துகொண்டு மேடையேறினார் விஜய். நடிகரைப் பார்க்க கூட்டம் முண்டியடித்துத் தள்ள, அங்கிருந்த நாற்காலிகள் உடைந்தன. ஜக்கியும், “உங்க ரசிகர்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்க.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அப்துல் ரகுமான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு

மாலைமலர் : பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவர் அப்துல் ரகுமான் மக்கி. இவர் அந்த அமைப்பின் தலைவரும், மும்பை, தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருமான ஹபீஸ் சயீத்தின் உறவினர் ஆவார்.
அப்துல் ரகுமான் மக்கி, ஜம்மு, காஷ்மீரில் இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுத்துவதிலும், தாக்குதல் நடத்த திட்டமிடுவதிலும் நிதி திரட்டுவதிலும் ஈடுபட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது.
இதையடுத்து இந்தியாவும் அமெரிக்காவும் அப்துல் ரகுமான் மக்கியை பயங்கரவாதியாக அறிவித்தன. இவரை சர்வேதச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியாவும் அமெரிக்காவும் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்மானம் கொண்டு வந்தன.

மதுரை தொகுதி தயாநிதி அழகிரிக்கு? தினமலர் சந்தேகம்

தினமலர்  :  மதுரை: 'வரும் லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியை கூட்டணிக்கு தாரைவார்த்துவிடாமல் தி.மு.க.,வே போட்டியிட வேண்டும்' என தி.மு.க., நிர்வாகிகள் கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
லோக்சபா தேர்தலையொட்டி தமிழக அரசியல் களத்தில் தற்போதே 'தேர்தல் ஜூரம்' பற்றிக்கொண்டுள்ளது. பிரதான கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் எந்த கட்சிகள் கூட்டணி வைக்கும்; எந்த கட்சிகள் வெளியேறும் என்ற 'அரசியல் கணக்கு' ஆரம்பித்து விட்டது.
இதில் தென் மாவட்டங்களின் வி.ஐ.பி., தொகுதியான மதுரையை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவும். இத்தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., கம்யூ., காங்., கட்சிகள் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தாலும் முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் அழகிரி 2009ல் வெற்றி பெற்றதால் 'மத்திய அமைச்சர்' அந்தஸ்தை இத்தொகுதி பெற்றது.

திருநெல்வேலியில் வெடித்த மர்மபொருள்.. போலீஸ் குவிப்பு- ஒரே பரபரப்பு.. என்னாச்சு?

 tamil.oneindia.com - Nantha Kumar R  :  திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் குற்றால ரோட்டில் உள்ள சர்ச் ரோட்டின் அருகே நேற்று இரவு காரில் வந்த நபர்கள் மர்மபொருளை தூக்கி வீசிய நிலையில் அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த ஆண்டு அதிகாலை 4 மணியளவில் சென்ற கார் திடீரென்று வெடித்து சிதறியது. காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காரிலேயே இருந்த ஜமேஷா முபின் இறந்தார்.
இதுதொடர்பாக அவரது நண்பர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சதிச்செயல்கள் இருக்கலாம் என்ற நோக்கத்தில் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

திமுகவில் மீண்டும் அழகிரி? - உதயநிதி உடனான சந்திப்பிற்கு பின் நடந்த நிகழ்வு

நக்கீரன் : மதுரை அவனியாபுரம் மற்றும் பாலமேடு, திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அதையடுத்து தீடீரென அழகிரி வீட்டிற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின் அழகிரிக்கு பொன்னாடை போர்த்தினார்.

திங்கள், 16 ஜனவரி, 2023

ஆப்கானிஸ்தான் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் முர்சல் நபிஷாடா சுட்டுக் கொலை! தாலிபான்கள் வெறியாட்டம்

 hirunews.lk  : ஆப்கானிஸ்தானின் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் முர்சல் நபிஷாடா சுட்டுக் கொலை
ஆப்கானிஸ்தானின் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான முர்சல் நபிஷாடா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டில் அவரது பாதுகாவலர் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அவரது சகோதரர் உட்பட இருவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
32 வயதான முர்சல் நபிஷாடா, 2021ஆம் ஆண்டு ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றிய பின்னரும் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவார்.
அவருக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பு காணப்பட்ட போதிலும் அதனை நிராகரித்திருந்தார்.

ஜல்லிக்கட்டில் 2 பேர் உயிரிழப்பு- நிதியுதவி வழங்க உத்தரவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாலை மலர் : சென்னை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது, 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ், காளை முட்டியதில் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த் என்ற வாலிபர் காளை முட்டியதில் உயிரிழந்தார்.
காளை முட்டி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு குடும்பங்களுக்கும் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மெரினாவில் காணும் பொங்கல் அன்று 1,200 போலீசார் பாதுகாப்பு- 9 டிரோன் மூலம் கண்காணிப்பு

 மாலை மலர்  :   சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் போலீஸ் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது
கூட்ட நெரிசலில் மாயமாகும் குழந்தைகள், முதியோர்கள் பற்றி உடனடியாக புகார்கள் தெரிவித்து, அவர்களை கண்டுப்பிடிப்பதற்கு,
போலீஸ் உதவி மையங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
கடற்கரை மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் 28 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. மெரினா கடற்கரை மணற்பரப்பில் 4 இடங்களில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் போலீஸ் உதவி மையம் நிறுவப்பட்டது.
இவற்றின் பயன்பாட்டை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

இலங்கை தமிழர்கள் வரலாற்று பௌத்தர்கள்தான்

See related image detail

தவமணிதேவி லோகசங்கர் :  தமிழன் கட்டிகாத்த புத்தமத்தை ஈழத்தமிழன் கைவிட்டது தான் எம் அடிப்படை பிரச்சனைகளின் ஆரம்பம்.
வடக்கு கிழக்கில்  பௌத்த மதச் சின்னங்களின் எச்சங்கள் இருப்பதால் அங்கு சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் என்று கூறுவது அறியாமை. மாறாகத் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதே உண்மை. மேலும் கி மு 500 முதல் ஏறக்குறைய 1500 ஆண்டுகள் பௌத்த மதம் ஈழத்திலும் ,தமிழகத்திலும் முக்கிய மதங்களில் ஒன்றாக விளங்கியது. சாதிப் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத தமிழர்கள், பிறப்பினால் மேல் சாதி – கீழ் சாதி எதுவும் இல்லையெனப் போதித்த பௌத்தத்தை இலகுவாக ஏற்றுக் கொண்டனர்.
இன்று பௌத்தத்தின் பாதுகாவலர்கள் எனப் பீற்றிக்கொள்ளும் சிங்களவர்களால் மணிமேகலை, குண்டலகேசி, நீலகேசி, உதயணன் காதை, வீரசோழியம் ஆகிய தமிழ்ப்பௌத்த காப்பியங்களுக்கு நிகரான ஒரு பௌத்தமத காவியத்தை இருபத்துமூன்று நூற்றாண்டுகளாகத் தரமுடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

திமுக கூட்டணி 2024 மக்களவை தேர்தலில் 40 க்கு 40 ம் வெற்றி பெற ஆளுநரும் ஒன்றிய அரசும் உதவி செய்கிறது

May be an image of 1 person and text that says 'தமிழ்நாடு'

எல்.ஆர்.ஜெகதீசன்: பாஜக தலைமையும் அதன் டெல்லி சுல்தான் அதிகாரத்துவமும் மூர்க்கத்தனமான திமிர்பிடித்த, அரசியல் அறியாத முன்னாள் அதிகாரிகளை கவர்னர்களாக அனுப்பும் வரை அவர்களால் தமிழ்நாட்டை வெல்ல முடியாது. குறைந்த பட்சம் தற்போதைக்கு அது சாத்தியமில்லை.
தமிழ்நாட்டு மக்களின் அரசியல் விழிப்புணர்வு, பொருளாதார ரீதியான வலுவான கட்டமைப்புடன் , கல்வியிலும் நன்கு  முன்னேறிய மாநிலமாக  தீர்க்கமான  சுதந்திரமான அடையாளத்துடன் உள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில், இந்த உண்மையை உணர்ந்து  ஏற்று மதிக்கும் அரசியல் கட்சிகள்/தலைவர்கள் ஆட்சி செய்தனர்.
திராவிட இயக்கம் அதை வரையறுத்து, கவனமாகக் கட்டமைத்து, உன்னிப்பாக வளர்த்து, பாதுகாத்தது..

காங்கிரஸ் போன்ற ஒரு தேசியக் கட்சி மாநிலத்தில் குறுகிய காலம் ஆட்சி செய்தபோதும்,
அதன் தலைவராக  திரு . காமராஜர் விளக்கியதும் ஒரு காரணமாகும்.
அவர் ஒரு உண்மையான தமிழ்த் தலைவராகக் காணப்பட்டார்,
வழக்கமான  காங்கிரஸ் தலைவர்களை போல  டெல்லி தர்பாரின் கைப்பாவையாக அவர்  இருக்கவில்லை.

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

அவனியாபுரம் ஜல்லிகட்டு நிறைவு... 28 காளைகளை அடக்கிய விஜய் என்பவருக்கு முதல் பரிசு!!

 tamil.asianetnews.com  -Narendran S :  மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு நிறைவடைந்த நிலையில் 28 காளைகளை அடக்கிய விஜய் என்பவருக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த போட்டியில் 737 காளைகளும், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதலாவதாக கோயில் காளை இறக்கிவிடப்பட்டது. பல்வேறு சுற்றுகளாக இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.
இதில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் 28 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார். 17 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்டது. 14 காளைகளை அடக்கிய விளாங்குடியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு மூன்றாம் பரிசு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து முதல்பரிசை வென்ற விஜய்க்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதேபோல் பிடிபடாத காளைகள் சிறந்த காளைகளாக அறிவிக்கப்பட்டன.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துவோம் : யாழில் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

வீரகேசரி  : அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் கலாசார முறைப்படி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஜனாதிபதிக்கு இந்து சம்பிரதாயபூர்வமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  வண்ணமயமான தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளும் இதன் போது அரங்கேற்றப்பட்டன.

நேபாள விமான விபத்து: 67 சடலங்கள் மீட்பு... நாளை துக்க தினம் அனுசரிப்பு

 மாலை மலர் ; காத்மாண்டு- நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் என மொத்தம் 72 பேருடன் பொக்காரா விமான நிலையத்திற்கு வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. விமானம் தரையிறங்குவதற்கு விமான நிலையத்தை நெருங்கியபோது, சேதி ஆற்றின் கரையில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இதையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீப்பற்றி கரும்புகை எழுந்ததால் மீட்பு பணி கடும் சவாலாக உள்ளது. இன்று மாலை நிலவரப்படி 67 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது.

கர்நாடகாவில் திராவிட கொள்கைகளை முன்னெடுக்க ராஷ்ட்ரிய திராவிட சங்கம் ஆரம்பம்

 ராதா மனோகர்  :   ஜனவரி 12 . பெங்களூரில்  ராஷ்ட்ரிய திராவிட
சங்கம் (RDS) தொடக்க விழா
கர்நாடகா மாநிலத்தில்  திராவிட உணர்வை மக்களிடம் எடுத்து செல்லும் நோக்கத்தில் ராஷ்ட்ரிய திராவிட சங்கம் ஆரம்பிக்க பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்
பிரபல பத்திரிகையாளரும் திரைக்கதை எழுத்தாளருமான அக்னி ஸ்ரீதர் இந்த அமைப்பின் நிறுவனராகும்.
விழா   நிகழ்வுகளை திராவிட நகர அமைப்பு நிறுவனர்  அபி கவுடா நடத்தினார்.
பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழா நடைபெற்றது
 சுமார் 250 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில்  கன்னடம் மற்றும் திராவிடத்தைப் போற்றி முழக்கங்களை பல முழக்கங்கள் எழுப்பப்பட்டன

அமெரிக்காவில் கறுப்பின இளைஞரை டீசர் துப்பாக்கியால் சுட்டு கொன்ற போலீஸ் tased by LA police

 hirunews.lk  :  அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது கருப்பின வாலிபர் ஒருவர் உயிரிழப்பு
அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது கருப்பின வாலிபர் ஒருவர் உயிரிழந்த மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் கைது நடவடிக்கையின்போது ஜோர்ஜ் பிளொய்ட் என்ற கருப்பினத்தை சேர்ந்தவரை காவல்துறையினர் தரையில் வீழ்த்தி, அவரது கழுத்தில் கால் முட்டியை வைத்து பலமாக அழுத்தியதில் அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து ஜோர்ஜ் பிளொய்ட்ன் மரணத்துக்கு நீதி கோரி அமெரிக்காவில் மாத்திரமின்றி, சர்வதேச ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இனவெறிக்கு எதிரான 'பிளாக் லைவ்ஸ் மேட்டர்' என்கிற தன்னார்வ அமைப்பு இந்த போராட்டங்களை முன்னெடுத்தது.

திமுகவில் இருந்து பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்

 நக்கீரன் : 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில்,
முதல் நாளிலேயே சட்டப்பேரவையில் நிகழ்ந்த சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு தயாரித்து கொடுத்த உரையில் சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு ஆளுநர் பேசியதும், அதற்கு எதிராக தமிழக முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்த போது, ஆளுநர் அவையை விட்டு உடனடியாக வெளியேறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனைத்தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் ஆளுநர் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விருகம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற திமுகவின் பேச்சாளர் தமிழக ஆளுநர் குறித்து அவதூறான வகையில் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருந்தது.

தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு.. விருது பட்டியல்!

திருவள்ளுவர் விருது - நா.கு. இரணியன் பொன்னுசாமி
பேரறிஞர் அண்ணா விருது - உபயதுல்லா
பெருந்தலைவர் காமராசர் விருது - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
மகாகவி பாரதியார் விருது - டாக்டர் இ.ரா. வேங்கடாசலபதி
பாவேந்தர் பாரதிதாசன் விருது - வாலாஜா வல்லவன்
திரு.வி.க விருது - நாமக்கல் பொ.வேல்சாமி
பெரியார் விருது - கவிஞர் கலி.பூங்குன்றன்
கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது - கவிஞர் மு.மேத்தா
அம்பேத்கர் விருது - எஸ்.வி.ராஜதுரை
தேவநேயப் பாவாணர் விருது - முனைவர் இரா. மதிவாணன்

 tamil.oneindia.com  -  Vignesh Selvaraj  :  சென்னை : தமிழ்நாடு அரசின் 2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான 9 விருதுகள் பெறுவோர் பட்டியல் தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.