Hemavandhana - /tamil.oneindia.com : சென்னை: "இத்தனை ஊடகங்கள் கணித்து இருக்கும் எக்ஸிட் போலை, தவறு என்று சொல்வதற்கு இவங்க எல்லாம் மிக பெரிய ராஜதந்திரிகளா?
கூவத்தூர் கூத்தில் கோபுரத்தில் ஏறி உட்கார்ந்தவரும், டீ கடையில் வேலை பார்த்துவிட்டு, தெருவில் நின்றவர் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும், இவர்களுக்கும் அரசியலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?' என்று திராவிடர் கழக பேச்சாளர் நாஞ்சில் சத்பத் கேள்வி எழுப்பி உள்ளார்.
தேர்தல் முடிந்த நிலையில் நாளைக்கு ரிசல்ட் வர உள்ளது.. இதுவரை வந்த கருத்து கணிப்புகளின்படி, திமுகவே மெஜாரிட்டி பெறுகிறது..
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பும்,வாக்குப்பதிவு அன்று கணிப்பும், தேர்தலுக்கு பிந்தைய கணிப்பும், திமுகவே அபாரமாக வென்று ஆட்சியை அமைக்கும் என்று அறுதியிட்டு சொல்லப்பட்டுள்ளது.. ஏராளமான அரசியல் நோக்கர்களும், தேர்தல் வல்லுநர்களும்கூட இதையேதான் சொன்னார்கள்..
அதாவது 170 இடங்களுக்கு குறையாமல் திமுக வெற்றி பெறும் என்றார்கள்.. அதேபோல, அதிமுகவோ 60ஐ தாண்டாது என்று கூறியுள்ளார்கள். இத்தகை எக்ஸிட் போல்கள் அதிமுக தலைமைக்கு பெருத்த ஷாக்காக இருந்தது.. இதன்மூலம் அதிமுக தொண்டர்கள் சோர்வடைய கூடாது என்பதற்காகவே நேற்றைய தினம் அதிமுக தலைமை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கையில், "நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்; இரட்டை இலையே என்றென்றும் வெல்லும். கடமைகள் அழைக்கின்றன; கண்மணிகளே வெற்றி மாலை சூடத் தயாராகுங்கள். வரலாறு வியக்கும் வகையில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்"... என்று கூறியிருந்தது. இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் நக்கீரன் இதழ் ஒரு பேட்டி எடுத்துள்ளது. அந்த பேட்டி இதுதான்.
கேள்வி: கருத்துக் கணிப்புகள் சொல்லும் முடிவையே மே 2ஆம் தேதி எதிர்பார்க்க முடியுமா?
சனி, 1 மே, 2021
நாஞ்சில் சம்பத் :"கூவத்தூர்" கூத்தும்.. டீக்கடையும்.. ராஜதந்திரிகளா.. இவங்களுக்கு இதான் கடைசி தேர்தல்..
இன்று 147 பேர் உயிரிழந்துள்ளனர்.ஒரே நாளில் அதிர்ச்சி தரும் தமிழக பட்டியல்!
minnambalam: தமிழகத்தில் இன்று(மே 1) ஒரே நாளில்19,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 11,86,344 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இன்று 147 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 14,193 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 92 பேரும், தனியார் மருத்துவமனையில் 55 பேரும் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17,164 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 10,54,746 பேர் குணமடைந்துள்ளனர். 1,17,405 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,51,452 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 11,951 பேர் ஆண்கள், 7,637 பேர் பெண்கள்.
ஆக்சிஜன் பற்றாக்குறை: டெல்லி பாட்ரா மருத்துவனையில் 8 பேர் உயிரிழப்பு - பிடிஐ
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் விநியோகத்தின் மீது மிகக் கடுமையான அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது.
குஜராத் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 18 பேர் பலி
பட்டேல் நல மருத்துவமனை என்ற அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு வாக்கில் தீப்பிடித்தது.
அந்த அவசர சிகிச்சைப் பிரிவில் சில நோயாளிகள் வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டிருந்தனர்.
அவசர சிகிச்சைப் பிரிவு முழுவதும் இந்த தீ பரவியிருந்தது என்கிறார் பிபிசி குஜராத்தி சேவைக்காக பரூச்சியில் இருந்து செய்தி அளிக்கும் சஜித் பட்டேல்.
மருத்துவமனையில் தீப்பிடித்தது குறித்து அறிந்ததும் அக்கப்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கே விரைந்து வந்து உதவினர்.
தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்தனர்.
அவசர சிகிச்சைப் பிரிவின் கதவை தீ சூழ்ந்துகொண்டதால், ஜன்னல்களை உடைத்து உள்ளே மாட்டிக்கொண்டவர்கள் மீட்கப்பட்டனர்.
கே வி ஆனந்த் என்றொரு கேமராக்காதலன்
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- முன்னணி நிலவரம் நாளை காலை 11 மணிக்கு தெரியும்
கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் அகழாய்வில் அரண்மனை சுவர் கண்டுபிடிப்பு
ஈவிஎம்களில் என்ன செய்ய முடியும்? திமுகவினரை அலர்ட் செய்த ஸ்டாலின்
minnambalam :மே 2ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நேற்று (ஏப்ரல் 30) மாலை காணொளி காட்சி வழியாக நடைபெற்றது.
தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எக்சிட் போல் முடிவுகள் முன்னணி ஊடகங்கள் - கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் கூட்டணியில் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இவற்றில் கிட்டத்தட்ட அனைத்து எக்சிட் போல் கணிப்புகளுமே தமிழகத்தில் திமுகவே ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளன. இந்த நிலையில்தான், “ஏப்ரல் 30 மாலை 5 மணிக்கு திமுக தலைவர் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
மம்மூட்டியின் ONE கடைக்கால் சந்திரன் பினராயி விஜயன் அல்ல! எம் கே ஸ்டாலின்?
உண்மைதான் இது ஸ்டாலினை மனதில் வைத்து கொண்டு உருவான படம் போலத்தான் தெரிகிறது.
மம்மூட்டியின் உடல் மொழி முகபாவம் மற்றும் ஆடைகள் போன்றவை மட்டுமல்ல மாமூட்டி பேசும் வசனங்களும் கூட ஓரளவு ஸ்டாலினை நினைவு படுத்துகிறது
எல்லாவற்றிலும் பார்க்க கடந்த காலங்களில் திரு ஸ்டாலின் மக்களை சந்தித்து குறை கேட்பு கூட்டங்களை நடத்தியதும் அதில் சாதாரண மக்களின் கோரிக்கைகளுக்கு உரிய மரியாதையும் கவனமும் உண்டு என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்தது என்ற செய்தியை இந்த திரைப்படம் உள்வாங்கி இருக்கிறது என்று கருதுகிறேன்
சாதாரண மக்களின் மனதில் கடைக்கால் சந்திரன் (மம்மூட்டி) இடம்பிடித்த நிகழ்வுகளும் திரு ஸ்டாலினை நினைவு படுத்துகிறது போலவே உள்ளது.
மாமூட்டியை சுற்றி கமெரா சுழலும் போது பல காட்சிகளில் மறைமுகமாக திரு ஸ்டாலின்தான் தெரிகிறார்.
இந்த படத்தில் வன்முறை காட்சிகள் இல்லை . சிந்தனைக்கு சரியான வாய்ப்புக்களை பல காட்சிகள் வழங்கி இருக்கிறது.
ஒரே ஒரு தெரு கலவர காட்சி வருகிறது ஆனாலும் அதில் கூட ரத்தம் சொட்ட சொட்ட கத்தி கொண்டு வெறிகொண்டு தாக்கும் காட்சிகள் இல்லை .
அந்த தெருக்கலவர காட்சியின் போது இது எனக்கானது அல்ல என்று கூறாமல் கூறிக்கொண்டு மம்மூட்டி மெதுவாக தெருவோரம் நடந்து செல்கிறார்
ஒரு முதலமைச்சர் தங்கள் கண்முன்னே எந்த பந்தாவும் இல்லாமல் நடந்து செல்கிறார் .தெருவோரம் அவரை காணும் மக்கள் முகம் மலர்ந்து சிரிக்கிறார்கள்
வெள்ளி, 30 ஏப்ரல், 2021
கொரோனா இந்தியா-நிமிடத்திற்கு 2 மரணங்கள், வினாடிக்கு 4 புதிய தொற்றுக்கள்
Jeyalakshmi C - tamil.oneindia.com : டெல்லி: இந்தியாவில் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு இரண்டு கொரோனா மரணங்கள் நிகழ்வதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விநாடிக்கு 4 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட 3,498 புதிய இறப்புகளில், 77.44 சதவீதம் 10 மாநிலங்களைச் சேர்ந்தவை என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் நேற்று 3,86,452 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,87,62,976 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கொரோனாவிலிருந்து 1,53,84,418 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 2,97,540 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஒரே நாளில் 3,498 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் 65.41 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் கடந்த 10 நாட்களில் 31.46 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன.
வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ள வழக்குகளில், 10 மாநிலங்கள் 73.05 சதவீத சுமைகளைக் கொண்டுள்ளன - மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ராஜஸ்தான்
3,498 பேர் மரணம் ஏப்ரல் 21 முதல், இந்தியா சராசரியாக நிமிடத்திற்கு இரண்டு இறப்புகளைப் பதிவு செய்து வருகிறது. வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட 3,498 புதிய இறப்புகளில், 77.44 சதவிகிதம் 10 மாநிலங்களைச் சேர்ந்தவை.
கொரோனா தடுப்பூசிக்கு கே.வி.ஆனந்த் மற்றொரு பலியா..?
aramonline.in : இது கொரானா தடுப்பூசிக்கு எதிரான பதிவல்ல. அவரவர்கள் தங்கள் சொந்த பட்டறிவையும், பகுத்தறிவையும் சார்ந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்! ஆனால்,சில நிதர்சனங்களை புறம் தள்ளாதீர்கள் என சொல்வதற்காகவே இதை எழுதுகிறேன். கே.வி.ஆனந்த் மிக சமீபத்தில் தான் கொரானா தடுப்பூசி முதல் டோஸ் போட்டார்! அது போடும் வரை உற்சாகமாக இருந்தவர் போட்ட பிறகு உடல் நலன் குன்றியுள்ளார். இதற்கு முன்பில்லாத வகையில் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமமும், நெஞ்சுவலியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனை சென்று சோதித்ததில் அவருக்கு கொரானா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ரத்த உறைதல் ஏற்பட்டதா..? எனத் தெரியவில்லை.
கொரோனா ஆக்சிஜன்: சமூக ஊடக காணொளிகளை தடுக்கக் கூடாது - உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
அதையும் மீறி அத்தகைய தகவலை பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இந்த நிலையில், மருத்துவமனைகளில் போதுமான ஆக்சிஜன் இல்லாததாலும் போதிய சிகிச்சைக்கு இடம் கிடைக்காததாலும் பல இடங்களில் நோயாளிகள் உயிரிழக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டோருக்கு ஆக்சிஜன் உள்ளிட்ட வசதிகள் கிடைக்காத நிலையை விவரித்து கண்ணீருடன் காணொளிகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இதில் பல இடங்களில் இத்தகைய தகவல் பகிருவோரை எச்சரிக்கும் வகையில் தவறான தகவலை பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகங்களும் காவல்துறையும் எச்சரித்து வருகின்றன
வெற்றியைக் கொண்டாடுவதைவிட உயிரைப் பாதுகாப்பதுதான் நோக்கம்” - மு.க.ஸ்டாலின்
நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை- தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு
maalaimalar : வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் யார்- யாரை ஈடுபடுத்த வேண்டும்? ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வெளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் போலீசார் யார்- யார் என்பது பற்றிய பட்டியல் தயாராக உள்ளது.
சென்னை: தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6-ந் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
மின்னணு ஓட்டு எந்திரங்கள் மூலமாக வாக்குப்பதிவு முடிவடைந்ததும் அன்று இரவே அனைத்து மின்னணு எந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று தமிழகம் முழுவதும் 75 மையங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இயக்குனர் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார்.. திடீர் நெஞ்சு வலி... தானே காரில் மருத்துவமனை பயணம்...
நியூஸ் 18 :திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இயக்குனர் கே.வி.ஆனந்த்த அயன், கோ, மாற்றான், கவன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். 54 வயதான கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநரானவர். இயக்குனர் கே.வி.ஆனந்த் மாடைப்பு காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்ததாக செய்தி தொடர்பாளர் ரியாஸ் கே அகமது தகவல் தெரிவித்துள்ளார்.
tamil.abplive.com :தமிழ்த்திரையுலகம் தொடர்த்து திடீர் இழப்புகளை சந்தித்துவருகிறது. நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகம் அடுத்து இயக்குநர் கே.வி. ஆனந்தை இழந்திருக்கிறது. இதழ் ஒன்றில் புகைப்படக் கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த், சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின்னர் இயக்குநராக மாறியவர். பிரித்விராஜ், ஶ்ரீகாந்த் நடித்த 'கனா கண்டேன்' எனும் படத்தை முதன்முதலாக இயக்கியவர் அதன் பிறகு தொடர்ந்து 'அயன்', 'மாற்றான்', 'காப்பான்' எனப் பல ஹிட் படங்களை நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கினார். இயக்குனர் சங்கரை போன்றே தனது படங்களிலும் பிரமாண்டங்கள் சிறிதும் குறையாமல் பார்த்துக் கொண்டவர் கே.வி.ஆனந்த்.
ஜெர்மனியில் மருத்துவமனையில் நடந்த கொலைவெறி தாக்குதல்- 4 பேர் உயிரிழப்பு
ஜெர்மனியின் போட்ஸ்டாம் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென ஒரு நபர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.
இந்த தாக்குதல் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்தவர்களின் உடல்கள் அவர்கள் தங்கியிருந்த அறைகளில் இருந்து மீட்கப்பட்டன.
மருத்துவமனையில் பணியாற்றிய 51 வயது நிரம்பிய பெண்ணை வலுவான சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
ட்ரோன் மூலம் விவசாய பயிர்களுக்கு மருந்தடிக்கும் சோதனை ஓட்டம்!.. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில்
முதற்கட்ட பரிசோதனையானது, வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள முந்திரி பண்ணையில், அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகளை மேம்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானத்தின் மூலம் 6 நிமிடத்தில் ஒரு ஏக்கர் பயிர்களுக்கு மருந்தடிக்க முடியும் என்பதால், ஒரு நாளைக்கு 25 ஏக்கர் பரப்பளவில் விவசாய பயிர்களுக்கு ஏற்றது போல் மருந்து அடிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்....
மத்திய அரசு இதயமற்றதாக உள்ளது - நிர்மலா சீதாராமனின் கணவர் கடும் விமர்சனம்!
nakkheerannewseditor - நக்கீரன் செய்திப்பிரிவு : ;இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது.
தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் கரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்தநிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகல பிரபாகர், கரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கரோனா இரண்டாவது அலை காரணமாக நிகழ்ந்து வரும் மோசமான பாதிப்பின் மீது, மத்திய அரசு உணர்ச்சியற்றதாகவும், இரக்கமற்றதாகவும் இருக்கிறது என கூறியுள்ள அவர் "பிரதமரின் புகழ் மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவை இந்த அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் இதயமற்றத் தன்மையை ஈடுசெய்கிறது.
அறிஞர் ஜெயரஞ்சனுக்கு பசுமை விகடன் சவால்! சமூகவலையில் அனல் பறக்கும் விவாதங்கள் (`பொருளாதார புலி' ஜெயரஞ்சனுக்கு பசுமை விகடனின் பகிரங்க சவால்!)
நம்ம கூட ஒரு விவாதம் வையேன். முதல் கேள்வி கடந்த 3 ஆண்டுகளில், ஏக்கருக்கு 20 லட்சம் எடுக்கலாம் போன்ற அட்டைப்படங்களில் வந்தவர்களை மட்டும் கூப்பிடு போதும். மீதியை நாங்க பாத்துகிறோம்.
Terms of Trade - இது அடுத்த விவாததலைப்பு.
எப்ப, எங்க வச்சுக்கலாம்.
Karthick Ramasamy : தைரியம் இருந்தால் அவருடன் நேரடியாக விவாதிக்க முன்வாங்க
சவால்னு விட்டா போதுமா?
லால்குடி ஆஸ்டின் : போலி விவசாயம் பற்றி கதை எழுதி கோடி கணக்குல பணம் சம்பாரிச்ச திருட்டு பய பசுமை விகடன். பேச்சை பாரு.
Sadhu Sadhath :ஆட்டுகுட்டி அண்ணாமலைய ப்ரமோட் செஞ்ச பசுமை விகடன் இப்போது ஆட்டுகுட்டியார் பற்றி புட்டு புட்டு வைப்பார்
Sadhu Sadhath : ஏம்பா நேத்து 85 வயசு கொராணா கிழவன் தன்னுடைய பெட்ட இளைஞருக்கு கொடுங்கனு சொல்லிட்டு வீட்டுக்கு போய்ட்டாருனு Fake News போட்ட மூதேவிங்க தானடா நீங்க ..
இப்ப என்னடா நல்லவனாட்டம் நடிக்கிறீங்க
Ravi Kathiresan : நீங்கள் விவசாயிகளின் மேல் அக்கறை கொண்டவர்களாக இருந்தால்...உரவிலை ஏற்றம், விவசாயகூலிப்பிரச்சனை, தரகர்கள் மற்றும் வியாபாரிகளின் ஏமாற்றுவேலை இதைப் பற்றி கட்டுரை பிரசுரித்துள்ளீர்களா? அடிப்படை பிரச்சனையை பற்றி பேசாமல்...கறுப்பு பண ஒழிப்பு பற்றி ஷங்கர் பிரமாண்டமாய் , பள பள வென..படம் எடுப்பது போல் நொந்து காய்ந்து போயிருக்கும் விவசாயியைப்பற்றி பள பள வென ஒரு இதழை வெளியிடுவது ஆகச் சிறந்த நகைமுரண்
வியாழன், 29 ஏப்ரல், 2021
கோவிட்19 2.0 இல் இருந்து மீண்ட தொழிலதிபரின் அனுபவங்கள்
Muralidharan Pb : நாம் நினைப்பதை விட வேகமாக முன்னேறி வருகிறது கோவிட்19 2.0
எத்தனையோ சந்தர்ப்பங்களில் தப்பித்த நான்,
இந்த முறையும் தப்பிக்க நினைத்து, இறுதியாக மாட்டிக் கொண்டேன். ஆம் கோவிட் இரண்டாவது அலை என்னை கவிழ்த்துவிட்டது.
2020 மார்ச்சில் இந்தியாவுக்கு கோவிட் வந்த புதிதில், எனக்கு காய்ச்சல், இருமல், சளி, கொடுமையை 21 நாட்கள் அனுபவித்தேன். ஒருவேளை அதனால் எனக்கு கடந்த ஒருவருடமாக காய்ச்சல், ஜலதோஷம், இருமல் எதுவுமே அண்டாமல் இயற்கை அரணாக காத்தது என கருதினேன்.
இத்தனைக்கும் கட்டுப்பாடு என்பதை மிகக் கவனமாக கடைபிடித்தவன். தெரு முனை காய்கறி கடைக்கு செல்லும் போது கூட முகக் கவசம் இல்லாமல் சென்றதே இல்லை. இரண்டு வீடு தள்ளி, திரும்ப வீட்டுக்குள் வந்தாலும் சாண்டைஸ் பண்ணாம வருவதில்லை. அப்படியான கட்டுப்பாடு.
ஏப்ரல் 1 அன்று கோவிஷீல்ட் போட்டுக் கொண்டேன். ஆனால் ஏப்ரல் 14 மாலை குளிர் போல மெல்ல உடல் வெப்பம் அதிகமாக ஆனது. 15 ஆம் தேதி, மருத்துவமனை சென்று, ஆக்ஸிஜன் 100%, பல்ஸ் 100 மேல். ஆகவே மற்ற ரத்த பரிசோதனைகள் செய்து பார்த்துவிட எல்லாமே மறுநாளில் நெகட்டீவ். ஊசி கொஞ்சம் லேட்டாக வேலை செய்கிறது என மனதுக்குள் அற்ப ஆசை.
அப்பவும் கோவிட் இருக்காது என நம்பியவன். 16ஆம் தேதி, டெஸ்ட் எடுத்து, 17 பாஸிட்டீவ் வந்தது. ஆனால் நல்ல யோசனையுடன் 14 முதல் தனி அறையில், தனிமைப்படுத்திக் கொண்டேன். வேறு ஒரு அறையை மனைவி தயார் செய்து, கொடுக்க 17 சனிக்கிழமை முதல், இங்கு தனிமை. இதுவரை இல்லாத தனிமை கொஞ்சம் கொடுமையாக இருந்தது.
மே.வங்கம் மம்தா கட்சி 158, பாஜக 115, காங். அணி 19, இதர 2 - மூன்றாவது முறையாகவும் மம்தா winning
Jeyalakshmi - tamil.oneindia.com : கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் திதீ மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீயாய் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அரியணையில் அமரப்போகிறார்
டைம்ஸ் நவ் சி வோட்டர் நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபைத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி உள்ளது
அந்த மாநிலத்தில் தொடர்ச்சியாக இரண்டு முறை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பெற கடும் முயற்சி செய்துள்ளார் மதா பானர்ஜி. முதல்முறையாக ஆட்சியை பிடித்து அரியணை ஏற வேண்டும் என்று பாஜக தீவிரமாக களம் இறங்கி உள்ளது. அதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் மீண்டும் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று பரம வைரியான காங்கிரஸ் கட்சியுடன் கரம் கோர்த்துள்ளது.
கேரளாவில் இடசாரிகள் பிரமாண்ட வெற்றி! அசுரர் பலத்தோடு பினராயி விஜயன் (இடதுசாரிகள் 140 ? காங்கிரஸ் 30?)
Velmurugan P - tamil.oneindia.com :திருவனந்தபுரம்: இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் பெரும்பலான இடங்களில் இடதுசாரிகளே வென்று ஆட்சியமைப்பார்கள் என தேர்தலுக்கு முந்தைய பெரும்பாலான கணிப்புகள் கூறியிருந்தன.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் அதே முடிவைத்தான் சொல்லியுள்ளன. பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் அசுர பலத்துடன் கேரளாவில் ஆட்சியை தக்கவைப்பார்கள் என்று கணிப்புகள் கூறுகின்றன,
அதாவது மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் இடதுசாரிகள் கூட்டணி: 104-120 இடங்கள் பெறும் என இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் பினராயி விஜயன் மகுடம் சூட்டுவார்.. ஒற்றை இலக்கில் பாஜக... ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு காங்கிரஸ் தலைமையிலான யூடிஎப் கூட்டணி 20-36 இடங்களில் வெல்லும் என கணித்துள்ளது
திமுக 234 தொகுதிகளிலும் வெல்லும்.. வாக்கு வித்தியாசம் - குறைந்தபட்சம் 5000 ஒட்டுகள் இருக்கும்! சாய் லட்சுமிகாந்த்
சாய் லட்சுமிகாந்த் :1996இல் திமுக கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் 60+%. இந்த முறையும் 50-55% வாங்கும். ஓட்டு சதவிகிதமும் 2021 தேர்தலை போல 70%க்கு கீழ். ஆனால் 1996ஐ போல் இத்தனை முனை போட்டி இல்லை. திமுக 1996 போல ஒரு மெகா கூட்டணி வைத்தாலும் 1996 (176) இடங்கள் போல அதிக இடங்களில் நின்றுள்ளது.
அப்போது ஜெயலலிதா மீது வெறுப்பிருந்தாலும் அதிமுக விசுவாசிகள் ஜெவிற்கு ஓட்டு போட்டனர்.
இருந்தும் அதிமுக 4 தொகுதிகளில் தான் வெற்றி பெற முடிந்தது.
இன்றும் அதிமுக வில் ஆளுமை மிக்க தலைவர் இல்லை. எடப்பாடியை ஒரு மனிதனாக கூட அதிமுகவினர் பார்க்கவில்லை என்பதே நிதர்சனம்.
கொங்கு பகுதியில் கூட இந்த முறை அதிமுக washout தான்..
ஆகவே தான் சொல்கிறேன் 234 தொகுதிகளிலும் திமுக வெல்லும்.. வாக்கு வித்தியாசம் - குறைந்தபட்சம் 5000 ஒட்டுகள் இருக்கும்.
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லக்கூடிய தொகுதிகள்
1. சேப்பாக்கம் . 2. ஒட்டன்சத்திரம் . 3. திருவாரூர்! மே 2ம் தேதி சந்திப்போம்.
minnambalam :மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் எட்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 29) மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில்... சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிறகான வாக்குக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் கணிப்புகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன...
Tamil Nadu Exit Polls 2021 Live: வெளியானது பரபரப்பான எக்ஸிட் போல் முடிவுகள்!
* கொல்லிமலையில் அமைச்சர் எம்.சி.சம்பத் யாகம் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 21ஆம் தேதி ஜெயலலிதாவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள வள்ளலார் குடிலில், ஐந்து நாட்கள் யாகம் செய்துள்ளார். முழு செய்தியை
* தேர்தலுக்கு முன்பு டைம்ஸ் நவ் - சி வோட்டர் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 177 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றும். அதிமுக - பாஜக கூட்டணிக்கு 49 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று தெரியவந்தது. மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகளுக்கு 3 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
* திமுக ஆட்சி உறுதி என பல்வேறு தரப்பு தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் அமைச்சரவை உத்தேச பட்டியலை தயாரித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவிற்கு நிதித்துறை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. !
அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடல்நல குறைவால் சென்னையில் காலமானார்..!
dinakaran :சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடல்நல குறைவால் சென்னையில் இன்று காலமானார். தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளை அதிக அளவில் கொண்டு வந்தவர் இவர். எம்ஜிஆர், ஜெயலலிதா அமைச்சரவையில் அங்கம் வகித்தவர் அரங்கநாயகம்.
பாஜக தமிழ்நாட்டில் 20 தொகுதிகளிலும் வாஷ் அவுட் ஆகும்! உளவுத்துறை செய்தி - டெல்லி அதிர்ச்சி
தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் சுமார் ஒரு மாத இடைவெளி இருந்த நிலையில் அந்த சஸ்பென்ஸை மெல்ல அவிழ்க்கும் விதமாக இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு அல்லது வாக்கு கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன. தமிழகத்தில் யாருக்கு வெற்றி? லீக்காகும் வாக்குக் கணிப்பு முடிவுகள்!தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் திமுகவுக்கு சாதகமாக இருந்தன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் இன்று தெரிந்துவிடும். அதிமுக எத்தனை இடங்களைப் பெறும் என்பதைக் கடந்து அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவின் நிலை என்ன என்பதை அறியும் ஆர்வம் மக்களிடையே இயல்பாக பார்க்கமுடிகிறது.
பீகாரில் 7 ஆண்டு கால மனைவியை காதலனுக்கு மணமுடித்து வைத்து கண் கலங்கிய கணவர்
கடப்பாரையால் தாயை தாக்கி கொலை செய்த மகன் .. கரூரில் குடிபோதையால் விபரீதம்..
பரமக்குடி கொரோனா சிகிச்சைக்கு வந்த அரசு டாக்டர்களை ஜீப்பில் ஏற்றிய டிஎஸ்பி1
அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள் மருத்துவர்கள்.
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 985 பேரை காவு கொண்டது கொடூர கொரோனா!
ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தியை தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு கண்காணிக்கும்
Giridharan N | Samayam TamilUpdated: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த அனுமதி நகல் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்த பிறகு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்..
இதைத் தொடர்ந்து 9 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலான இந்த குழுவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் சித் சிங், சுற்றுச்சூழல் பொறியாளர், ஆக்சிஜன் தொழிற்சாலை குறித்து தொழில்நுட்ப அறிவு சார்ந்த அதிகாரி, மத்திய சுற்றுச்சூழல் வனத் துறை பரிந்துரையின்படி தேர்ந்தெடுக்கப்படும்
யாழ்ப்பாணம் .. எமில் சௌந்தரநாயகம் .. உலகை கலக்கிய அந்த காலத்து உலகமகா கில்லாடியின் கதை
எமில் சவுந்தரநாயகம் பற்றிய பெருமை மிகு வீராவேச கதைகளை பலரும்
அவை எல்லாம் ஒரு கிராமத்து பேச்சு வழக்கு போல இருந்தது .
யாரவது ஒரு புத்திசாலியை அவன் ஒரு எமில் அவன் ஒரு எமில் சவுந்தரநாயகம் என்ற ஒரு புகழ் வசனமாக இருந்தது. ஆனால் யாரும் அதை பற்றி முழுமையாகவோ விரிவாகவோ கூறுவதில்லை. பலருக்கும் அதுபற்றி முழு விபரமும் தெரிந்திருக்கவில்லை.
எந்த ஊடகமும் தமிழில் எழுதவே இல்லை. ஒரு ஈழத்தமிழிழர் இவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கிறாரே?
ஏன் ஒருவருக்கும் அதுபற்றி சரியாக தெரியவில்லை? எவ்வளவு முக்கியமான ஒரு வரலாறு பற்றி ஏன் ஈழத்தமிழ் ஊடகங்கள் ஒன்றுமே எழுதவில்லை என்று சிந்தித்தேன். .
இது தமிழ் ஊடகங்களுக்கே உள்ள ஒரு பொறுப்பற்ற தன்மைதான் .
வெறும் வெற்று கோஷங்களும் நுனிப்புல் மேய்ச்சலுமே தமிழ் ஊடகங்களின் ..குறிப்பாக இலங்கை தமிழ் ஊடகங்களின் வரலாறாக இருக்கிறது .
அதன் வெளிப்பாடுதான் ஈழத்தமிழர்களின் அரசியல் கருத்துக்கள் பலவும் ஒரு நுனிப்புல் மேய்ச்சல் விவகாரமாகவே இருக்கிறது .
எந்த கிரிமினலையும் அவனது கிரிமினல்தனத்தை ஒரு கதாநாயக பாவத்தோடு கொண்டாடும் மனோபாவம் வளர்ந்தது .
எமில் ஒரு மோசமான குற்றவாளி . ஆனால் சிறுவயது முதலே அவரை ஒரு பெரிய கதாநாயகன் போன்றுதான் நான் கேள்வி பட்டிருக்கிறேன்.
எமில் சவுந்தரநாயகம் கொஞ்சம் பிந்தி பிறந்திருந்தால் அவனும் ஒரு ஈழவிடுதலை போராட்ட தலைவனாகி இருப்பான் . மக்களும் போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே என்று கொண்டாடி இருப்பார்கள்.
ஏனெனில் ஈழப்போராட்ட வரலாறுகளில் காணப்படும் சாகச தில்லுமுல்லுகளை விட பல மடங்கு அதிக தில்லாலங்கடி எல்லாம் அறுபதுக்கு முன்பே எமில் சவுந்தரநாயகம் என்ற ஈழத்தமிழர் அரங்கேற்றி உள்ளார் .
பெங்களூரில் 3 ஆயிரம் கொரோனா நோயாளர்களை காணவில்லை.! இவர்கள் கொரோனா வைரஸை பரப்புவார்கள் .. அமைச்சர் எச்சரிக்கை
Vishnupriya R - tamil.oneindia.com : பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தொற்று உறுதி செய்யப்பட்ட 3 ஆயிரம் பேர் மாயமாகியுள்ளதாவும் அவர்கள் மூலமே கொரோனா பரவுவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது.
கடந்த புதன்கிழமை அன்று ஒரே நாளில் கர்நாடகா மாநிலத்தில் 39,047 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அது போல் ஒரே நாளில் அந்த மாநிலத்தில் 229 பேர் பலியாகிவிட்டனர்.
மாநிலத்தின் மொத்த பாதிப்பில் பெங்களூரில் நகர்புறப் பகுதியில் 22,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
3 ஆயிரம் பேர் இந்த நிலையில் கொரோனா உறுதியான 3 ஆயிரம் பேரை காணவில்லை.
அவர்களது தொலைபேசியும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடகா வருவாய் துறை அமைச்சர் அசோகா கூறுகையில் 3 ஆயிரம் பேரை போலீஸார் தேடி வருகிறார்கள்
பரமகுடி மருத்துவர்களை இரவில் கைது செய்து துன்புறுத்திய பரமக்குடி போலீஸ் டி எஸ் பியின் அடாவடி
Sen Balan : இதுபோன்ற மிருகங்களை காவல்துறையிலிருந்து பணிநீக்கம் செய்ய வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை.
பரமக்குடி அரசு கலைக்கல்லூரி தற்போது தற்காலிக கோவிட் கேர் செண்டராக மாற்றப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக பல ஊர்களில் இருந்தும் இளம் மருத்துவர்கள் அங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு தற்போது சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அந்த மருத்துவர்களுக்கு தனியான தங்கும் இடமோ, உணவு வசதிகளோ செய்யப்படவில்லை.
இருப்பினும் கொரொனா காலத்தை கருத்தில் கொண்டு அந்தக் கல்லூரியிலேயே தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள்.
அந்த கோவிட் கேர் செண்டரை நேற்று இரவு 8.00 மணியளவில் சுகாதார துணை இயக்குநர் பார்வையிட வந்துள்ளார்.
அங்கு சோதனை நடத்திய பின் இரவு 8.20க்கு மேல் வெளியேறியுள்ளார்.
அவர் வெளியேறிய பின் அங்கு புதிதாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரண்டு இளம் மருத்துவர்கள் பற்பசை, சோப்பு போன்றவை வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த பரமக்குடி டிஎஸ்பி “என்னடா ஊரைச் சுத்திட்டு இருக்கீங்க? நீங்கலாம் டாக்டரா? டாக்டருக்கு எதுக்கு யமஹா பைக்? தூக்கி உள்ள வச்சிருவேன்” என மிரட்டியுள்ளார்.
“நாங்க புதுசா கோவிட் டியூட்டிக்கு வந்திருக்கோம். சோப்பு, பேஸ்ட் வாங்க வந்தோம்” என்று மருத்துவர்கள் பதில் அளித்துள்ளனர்.
“போலிஸ்கிட்டயே பதிலுக்கு பதில் பேசுறியா?” என போலிஸ் ஜீப்பில் இரண்டு மருத்துவர்களையும் ஏற்றி, நடு இரவு வரை பல இடங்களுக்கும் சுற்றியுள்ளார்.
காவல்நிலையத்திற்கோ நீதிமன்றத்திற்கோ செல்லவில்லை.
அரசு ஒரு மாதம் லாக்டவுன் அறிவித்தால் என்ன செய்யலாம்?
வெங்கடேஷ் ஆறுமுகம் |
தடுப்பூசியில் 3,28,000 கோடி கொள்ளை! பிணந்தின்னும் பாஜக அரசு.
புதன், 28 ஏப்ரல், 2021
தமிழகத்தில் மருந்து, ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்!
nakkeeran : தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 16,665 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் ஒரே நாளில் 4,764 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,10,308 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 15,114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 10,06,033 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மருந்து மற்றும் ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உடல்களை எரிக்க இடமில்லை; திறந்த வெளிகளில் தற்காலிக தகன மேடைகள் – தொடரும் அவலம்
பி பி சி : :டெல்லியில் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை எரிக்க இடமில்லாததால் திறந்த வெளிகளில் தற்காலிக தகன மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் டெல்லி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு நிரம்பிவிட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. திங்கள்கிழமை ஒருநாளில் மட்டும் டெல்லியில் 380 பேர் உயிரிழந்தனர்.
இந்திய அளவில் கடந்த சில நாள்களிலேய பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை ஒரே நாளில் 3,52,991 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
செவ்வாய்க்கிழமையன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து 3,23,144-ஆக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 1.7 கோடியை நெருங்கிவிட்டது. இவர்களில் 1.92 லட்சம் பேர் உயிரிழந்து விட்டனர்.
கர்நாடகா: ஆக்சிஜன் கிடைக்காமல் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு
கோலாரில் உள்ள எஸ்.என்.ஆர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 20 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இரவு அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சரியாக கிடைக்காததால் 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இறந்தவர்களின் உடல்களை சுகாதாரத்துறையினர் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
இந்நிலையில், மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், இதன்காரணமாக சிகிச்சை கிடைக்காமல் 8 பேர் இறந்துவிட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், எஸ்.என்.ஆர் அரசு மருத்துவமனையின் ஆக்சிஜன் இணைப்பு பிரிவு அதிகாரி உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அனுமதி-
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ள நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இலவசமாக ஆக்சிஜனை தயாரித்து வழங்க அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் டெல்லி உச்சநீதிமன்றம் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட உச்சநீதிமன்றம் கோர்ட்டு ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழக அரசு முன்வரவேண்டும், இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என கூறியது.
அசாமில் பயங்கர நிலநடுக்கம் 6.4 ரிச்டர் அளவில் . கட்டிடங்கள் இடிந்து சேதம் 6.4 - strong earthquake shook the state of Assam this morning
இலங்கையில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை- அமைச்சரவை ஒப்புதல்!
Mathivanan Maran - /tamil.oneindia.com :கொழும்பு: இலங்கையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்கும் பர்தா (புர்கா) உள்ளிட்ட ஆடைகளை அணிய தடை விதிக்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. முகத்தை மறைக்கும் பர்தா ஆடை அணிவது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இந்த தடைக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் 2019-ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் தேவாலயங்களின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல்களில் 260க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
மதராசாக்கள் மூடல் ... இதையடுத்து இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தன.
இதன் ஒருபகுதியாக இலங்கையின் தேசிய கல்வி கொள்கையை பின்பற்றவில்லை என மதராசாக்களை மூட உத்தரவிடப்பட்டது.
பர்தா தடைக்கு முடிவு ... இதேப்போல் இலங்கையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்கும் பர்தா (புர்கா) ஆடை அணியவும் தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது.
திரிபுராவில் திருமண வீட்டில் புகுந்த நீதிபதி .. அதிரடி தடியடி கைது சட்டவிரோதமாக ஒன்று கூடியமை ..
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சில மாநிலங்களில் முழு ஊரடங்கும், சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததும் திரிபுராவில் இரவு 11 மணிக்கு மேல் திருமணம் நடந்ததால், திரிபுரா மேற்கு மாவட்ட நீதிபதி அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
திமுகவின் வெவ்வேறு தளங்களில் அமைச்சரவை பற்றிய விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
minnambalan :தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதிக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன.
இந்த நிலையில் திமுகவின் வெவ்வேறு தளங்களில் அமைச்சரவை பற்றிய விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. கொடைக்கானலில் சில நாட்கள் குடும்பத்தோடு ஓய்வெடுத்த திமுக தலைவர் ஸ்டாலின், அடுத்த அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவது என்பது பற்றி தனது மாப்பிள்ளை சபரீசனுடன் பேசி முடிவுசெய்து, தனது கைப்பட வெள்ளைத்தாளில் எழுதி வைத்திருக்கிறார் என்று திமுகவின் உயர் வட்டாரங்களில் தகவல்கள் கசிகின்றன. அந்த வெள்ளைத்தாளில் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறியவும், அப்படி இடம்பெறவில்லை என்றால் கடைசி நேர மாற்றங்களில் தங்கள் பெயர் இடம்பெறவும் பலத்த முயற்சிகளைச் செய்து வருகிறார்கள் திமுக புள்ளிகள்.
செவ்வாய், 27 ஏப்ரல், 2021
பிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ.. பிரான்ஸ் போலி தமிழ் தேசியர்கள் கண்டுகொள்ளாத தமிழ் வரலாற்று பேரறிவாளர்
ஆக்சிஜன் தயாரிப்பை ஆதரிக்கவும் வேண்டும் கண்காணிக்கவும் வேண்டும் தேவை ஏற்படின் போராடவும் வேண்டும்
இன்றைய நிலையில் இருக்கும் எந்த வசதியையும் கொண்டு ஆக்சிஜன் தயாரிக்க முயல்வது புரிந்து கொள்ளக்கூடியதே.
மருத்துவ பாவனைக்காக அல்லது இதர தொழில்துறைக்கு தேவையான ஆக்சிஜன் தயாரிப்பும் கூட அளவு கணக்கில்லாமல் தட்டுப்பாடான ஒரு சூழ்நிலைதான் உள்ளது.
வழக்கமாக தொழில்துறைக்கு தேவையான ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவ தயாரிப்பு ஆக்சிஜனையே அதிக அளவு தயாரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வேதாந்தாவின் முன்னே தற்போது ஆக்சிஜன் நிறுத்தப்பட்டிருக்கிறது.
வேதாந்தவால் ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அவை மருத்துவ தேவைக்கு அதிக அளவில் பயன்படாது என்றாலும் கூட அதன் தேவை இன்று ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டிருக்கிறது என்பதுவும் உண்மைதான்
இப்போது மத்தியில் ஒரு கொடூர சர்வாதிகார அரசு ஆட்சியில் இருக்கிறது.
அதன் கைப்பாவை என்றாகிவிட்ட உச்ச நீதிமன்றமே ஆக்சிஜன் சிலிண்டரை கடத்துபவர்களை தூக்கில் போடுங்கள் என்று ஒரு கூறியது எவ்வளவு பயங்கரவாத வார்த்தைகள்?
இந்த வார்த்தைகளின் பின்னணி என்பது வெறும் ஆக்சிஜன் தேவையினால் மட்டுமே கூறப்பட்டதாக எனக்கு தோன்றவில்லை .
கொரோனா பிரச்சனை தங்களை காவு கொள்ளகூடிய அளவு தலைக்கு மேலே போய்விட்டது என்பது அவர்களுக்கு புரியத்தொடங்கிவிட்டது .
அதனால்தான் இந்த பதற்றம்
இந்த நிலையையே வேதாந்தா அகர்வால் மார்வாடிகள் நன்றாக புரிந்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கிறார்கள் என்றே கருதுகிறேன்.
தமிழ்நாட்டு மக்கள் வேதாந்தாவின் சூழல் அழிவுக்கு எதிராக என்பதை திரிபு படுத்தி,
தமிழர்களின் வடஇந்தியாவின் ஆக்சிஜன் தேவைக்கு எதிரான ஒரு மனோநிலையில் உள்ளார்கள் என்பது போல காட்டுகிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.
இந்த தரவுகளின் பின்னணியில் இருந்துதான் வேதாந்தாவுக்கு வழங்கப்பட்ட நான்கு மாத ஆக்சிஜன் தயாரிப்பு அனுமதியை நோக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
இந்த விதத்தில் சர்வகட்சி கூட்டத்தினர் எடுத்த முடிவு சரியானதாகவே எனக்கு படுகிறது.
திமுக தலைவர் திரு ஸ்டாலின் கூறியவாறு கண்டிப்பாக ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்க வேதாந்தாவுக்கு அனுமதி வழங்கியுள்ளதை தமிழக மக்கள் முழு மனதோடு ஆதரிக்கவேண்டும் கூடவே கண்காணிக்கவும் வேண்டும்
ஒருவேளை வேதாந்தா குழுமம் இந்த நிபந்தனையை மீறினால் அவர்களை நிரந்தரமாக மூடுவதற்கு மக்கள் திமுகவோடும் இதர கட்சிகளோடும் சேர்ந்து போராடவேண்டும்
தேவை ஏற்பட்டால் அந்த போராட்டத்தை வேதாந்தாவின் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் மீதும் மேற்கொள்ள வேண்டும் அவர்கள்தான் உலகம் முழுவதும் பரந்து கடை விரித்திருக்கிறார்களே?
தி.மு.க அரசு அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாகச் சீல் வைக்கப்படும்” - மு.க.ஸ்டாலின் உறுதி!
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக காபந்து அரசின் சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.கழகம், கொரோனா இரண்டாவது அலை பரவலின் வேகமும் அது ஏற்படுத்தும் விபரீத தாக்கமும் பொதுமக்களைக் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியுள்ள நிலையில், மருத்துவ ஆக்சிஜனின் தேவையை உணர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டுமே தற்காலிக அனுமதி வழங்கப்பட வேண்டும்
இந்திபேசா மாநில முதல்வர்களுக்கு வைகோ கடிதம்!
minnambalam : புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது குறித்து இந்தி பேசாத மாநில முதல்வர்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மின்னஞ்சல் மூலமாக இன்று (ஏப்ரல் 27) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்தி பேசாத மாநிலங்களின் முதல்வர்களோடு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜக அல்லாத கட்சிகளின் முன்னணித் தலைவர்களுக்கும் வைகோ எழுதியுள்ள அந்த கடிதத்தில், புதிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும் என்பது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
“இதுவரை இந்தியைப் பரப்பியது போதாது என்று, புதிய கல்விக்கொள்கையின் வழியாக, சமஸ்கிருத மொழியைக் கொண்டு வந்து திணிக்கும் முயற்சிகளை, பாரதிய ஜனதா கட்சி அரசு தொடங்கி இருக்கின்றது. 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி, இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுகின்றவர்கள் வெறும் 24000 பேர்தான். பேச்சுவழக்கில் இல்லாத, இறந்து போன ஒரு மொழியின் வளர்ச்சிக்காக, பல நூறு கோடி ரூபாய்கள் செலவில், பல பல்கலைக்கழகங்களைத் தோற்றுவித்து இருக்கின்றார்கள். அதேவேளையில், பல கோடி மக்கள் பேசுகின்ற பெங்காலி, மராட்டி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, மைதிலி உள்ளிட்ட பல்வேறு மாநில மொழிகளின் வளர்ச்சிக்குப் போதுமான நிதி ஒதுக்கவில்லை; நடுவண் பல்கலைக்கழகங்களையும் தொடங்கவில்லை.
காப்பர் பிளான்ட்டுக்குள் நுழையக் கூடாது: ஸ்டெர்லைட்டுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
minnambalam :கொரோனா பரவல் நெருக்கடியையும் ஆக்ஸிஜனுக்கான தேவையையும் உணர்ந்து, ஒரு அசாதாரண நடவடிக்கையாக வேதாந்தா நிறுவனம், தனது ஆக்ஸிஜன் உற்பத்தி பிரிவை தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் வளாகத்தில் இயக்க உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 27) செவ்வாய்க்கிழமை அனுமதித்தது. தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க, தனது ஆலையில் இருக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் மூலமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, பின் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்ய அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம், “எங்கள் ஆலையில் தமிழக அரசு கையகப்படுத்தி ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியாது. அந்த அளவுக்கு தொழில் நுட்பத் திறன் அரசுக்கு இல்லை”என்று வாதிட்டது.
ஸ்டெர்லைட் அடாவடி - மார்வாடிகள் கையில் தமிழ்நாடு! ஸ்டெர்லைட் ஆக்சிஜன் தமிழ்நாட்டுக்கு கிடையாது! உச்ச நீதிமன்றம்
அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, “ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறியது. இதைத்தொடர்ந்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் 4 மாதங்கள் இயக்க அனுமதிக்கலாம் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் எந்த காரணத்தை கொண்டும் வேறு எந்த பணிகளும் நடக்க கூடாது என்று அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.
François Gros பிரான்ஸ் நாட்டுத்தமிழறிஞர் பிரான்சுவா குரோ மறைந்து விட்டார்.
இலங்கநாதன் குகநாதன் :பிரான்ஸ் நாட்டுத்தமிழறிஞர் பிரான்சுவா குரோ { François Gros } மறைந்து விட்டார்.
பிரான்சில் 1933ம் ஆண்டில் பிறந்த இவர் 1963ம் ஆண்டு
புதுச்சேரி பிரான்சு ஆய்வு நிறுவனத்தில் இணைந்தது முதல் தமிழில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
சங்க இலக்கியங்கள் முதல் பக்தி இலக்கியங்கள் வரைக் கற்றுத் தேர்ந்த அவரின் #தமிழ்த்தொண்டுகளில் சில வருமாறு.
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலினைக் கற்றமையுடன், அதை இசையுடன் குடந்தை ப. சுந்தரேசனார் என்பவரிடமிருந்து கேட்டறிந்தார் {நாம் இன்னமும் சங்க இலக்கியங்கள் படித்தறிவதற்கு மட்டுமே என்று இன்றும் நம்பிக் கொண்டு இருக்கிறோம்.
பரிபாடலின் இசையுண்மைகளைக் கண்டறிந்த பின்னரே பிரான்சு மொழியில் பரிபாடலினை மொழி பெயர்த்திருந்தார்.
திருக்குறளின் காமத்துப் பாலை பிரான்சு மொழியில் மொழி பெயர்த்து 1993 இல் வெளியிட்டிருந்தார் { நாம் இன்னமும் திருக்குறளின் மூன்றாவது பாலினைக் `#இன்பத்துப்பால்` என அழைக்க, அவர் சரியாகக் `#காமத்துப்பால்` எனவே குறிப்பிட்டிருப்பார் }
காரைக்கால் அம்மையார் வரலாறு, சேக்கிழார் பாடிய காரைக்கால் அம்மையார் புராணம் உட்படப் பல பக்திஇலக்கியங்களையும் பிரான்சு மொழியில் மொழி பெயர்த்திருந்தார்.Francois-Gros classical Tamil
இந்தோனீசியாவில் காணாமல்போன நீர்மூழ்கிக் கப்பல்; 53 பேரும் உயிரிழந்தனர்
இதையடுத்து சிங்கப்பூர் உட்பட உலக நாடுகளிடம் இந்தோனீசியா உதவி ேகட்டது.
நாகரிகத்தைக் குலைக்கும் நாம் தமிழர் கட்சி!! -சுப. வீரபாண்டியன்
உத்தர பிரதேசதில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லையாம்! முதல்வர் யோகியின் பச்சை பொய்! விளாசிய பிரியங்கா காந்தி!
Vishnupriya R - tamil.oneindia.com : லக்னோ: உணர்வற்ற அரசுதான் இது போன்ற அறிக்கையை அளிக்கும் என உத்தரப்பிரதேச அரசு மீது பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது.
அந்த மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 38 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் இதுவரை 10.86 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதுவரை 7 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில் தற்போது 2 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஹரீத்வார் கும்பமேளாவில் பலர் பங்கேற்றதால் இங்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
ஸ்டெர்லைட்: திமுகவின் அணுகுமுறையில் மாற்றமா?
மின்னம்பலம் : நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கான வழிவகைகளில் ஒன்றாக, தூத்துக்குடியில் மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை, ஆக்ஸிஜன் தயாரிக்க தங்களை அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில், தமிழக அரசு இன்று (ஏப்ரல் 26) காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. இந்த கூட்டத்தில், 'ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாதங்களுக்கு ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம்' என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் கலந்துகொண்ட கனிமொழி, "உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த நேரத்தில், ஏப்ரல் 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தில் கூட, தூத்துக்குடி மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்கள்.
"தேன்" - சமூக போராளிகளும் பார்க்க மறந்து போன குரங்கணி காட்டு திரைப்படம்
கதிர்மாயா கண்ணன் : தேன் திரைப்படம் பார்த்தேன். அழுதேன். படம் குறித்து நீளமாகவும், நீலமாகவும், நிலமாகவும் பேச வேண்டும். கர்ணனை கொண்டாடிய நாம், தேனை கொண்டாட தவறி விட்டோமே. கற்பனை கதை என்று சொல்லி விட்டு, அப்பட்டமாய் குரங்கணி மலையில் வாழும் மக்களின் வலிகளை, வாழ்வியலை போட்டு உடைத்துள்ளது. காலம் காலமாய் மலையோடு வாழும் மக்களை வெளியேற்றத் துடிக்கும் அதிகாரத்தை போகிற போக்கில் தோலுரித்துள்ளது. ஆரம்ப கல்விக்கு கூட மலைகளில் நீண்ட தூரம் நடக்கும் குழந்தைகள், இந்த மலைப்பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பள்ளிகளுக்கான சாட்சியம். மரத்தை, மலையை, வானத்தை வணங்கிக் கொள்ளும் மக்களிடம் தமிழர் மெய்யியல் உயிர்ப்போடு மலைகளில் இன்னமும் இருப்பதற்கான சான்று. மலை உச்சியில் இருக்கும் ஆலைக் கழிவுகளால் தண்ணீர் நஞ்சாகி மக்களை மெல்லக் கொல்லும் அரசியலை சொல்கிறது படம்.
திங்கள், 26 ஏப்ரல், 2021
தமிழகத்திலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் ... ? ஸ்டெர்லைட் ஆக்சிஜன் அனுமதியின் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதான்
அசாம் மாநிலத்தில் அரசு சார்பா ஒரு liquid oxygen & nitrogen manufacturing unit set பண்ற proposal plan இது பற்றிய ஒரு தெளிவான செய்தியை தருகிறது...
estimated cost 44 கோடி. மினிமம் 2 acres of land and time period for completion 18 months (11/2 years) னு கொடுக்கபட்டிருந்தது.
ஆக, புதுசா ஒரு plant start பண்ணனும்னா crisis situation ல போர்கால அடிப்படைல செயல்பட்டா கூட ஆறு மாதங்களுக்கு குறைவா முடிக்க வாய்ப்பில்ல..
மே மாதத்துல கொரோனா பரவல் உச்சத்தை தொடும்னு medical experts தெரிவிக்கும் போது , நாடு முழுவதும் உள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறைய கணக்கில் எடுத்து பார்க்கும் பொழுது,
தமிழகத்திலும் அதுபோன்ற ஒரு நிலை ஏற்படாது என்று உறுதியாக சொல்லமுடியாத போது,
பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் ,
இந்த பத்து ஆண்டுகளில் ஆளும் அடிமை அதிமுக அரசு மருத்துவ சுகாதார துறையே சிதைத்து வைத்திருக்கும் போது ,
புதிதாக அமையவிருக்கும் திமுக அரசு தமிழக மக்களுடைய உயிரை காக்கும் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது.
கோலார் வயல் திருமதி செல்வி தாஸ் காலமானார் .. முன்னாள் எம்பி, துணைவேந்தர்..
Susairaj Babu : வருந்தத்தக்க இரவு நண்பர்களே....
கோலார் தங்கவயல் பெண்கள் 1920களிலேயே கல்லூரிப் படிப்பை முடித்தார்கள், பைக் ஓட்டினார்கள், கலப்புத் திருமணத்திற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்,
இந்தியாவில் இருக்கின்ற அனைத்து சாதியினரும் திருமணம் செய்து கொண்டவர்கள் தங்கவயல் பெண்கள். இது வரலாறு. வடார்க்காடு மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டு தங்கவயலில் தங்கச் சுரங்க பகுதியில் குடியேறிய ஒரு குடும்பத்தின் பெண் தான் கல்வியாளர் செல்வி தாஸ்!
இவருடைய தந்தை திரு, தாஸ் காண்ட்ராக்டர்,
அரசில் தங்கச் சுரங்கத்தில் சுரங்க கட்டமைப்பிற்கு மரங்களை வழங்கிய ஒரு பெரிய காண்ட்ராக்டர், இவருடைய மகள் தான் செல்வி தாஸ்
இன்றுவரை இந்தியாவிலேயே அதிகம் படித்தவர் என்ற பெருமை கொண்டவர்,
மைசூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஐந்து ஆண்டு காலம் பணியாற்றியவர்,
தமிழகத்தில் ஓராண்டுக்கு ஜனாதிபதி ஆட்சி ! மருத்துவர் கிருஷ்ணசாமி கோரிக்கை மனு
tamil.indianexpress.com :தமிழக சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கோரி,
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் கொரோனா மக்களை வாட்டி வதைக்கக்கூடிய நேரத்தில்
ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையில் முகக் கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும் என்றார்.
தமிழக மக்களுடைய நலன் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய மக்களுடைய நலன் கருதி தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்தியபிரதா சாகு அவர்களை நான் அவருடைய அலுவலகத்தில் சந்தித்தேன்.
என்னுடன் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் சக்திவேல் உள்ளிட்ட நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு, எந்தச் சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப்படாது - மு.க.ஸ்டாலின்
தினத்தந்தி :சென்னை, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் ஆக்சிஜன் ஆலை அமைப்பது பற்றிய விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக முடிவெடுக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார்.
கூட்டத்தில் ஆக்சிஜன் தயாரிப்புக்கு மட்டுமே அனுமதி, மின்சாரத்தைத் தமிழக அரசு மட்டுமே வழங்க வேண்டும்,
இதை வைத்து ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடவடிக்கை, எதிலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் செயல்பட அனுமதி வழங்கக் கூடாது,
4 மாதத்திற்கு மட்டுமே தற்காலிக அனுமதி, ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்து தமிழகப் பயன்பாட்டுக்குப் போக வெளி மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் தரப்பில் ஒருமித்த கருத்தாக வெளிப்பட்டது.
அனைத்துக் கட்சிகள் கருத்தை அரசு ஏற்கும் என்று தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, ஆக்சிஜன் உற்பத்திக்காக 4 மாதங்களுக்கு மட்டுமே அனுமதிக்கலாம்,
மே 1 மற்றும் 2 தேதிகளில் முழு ஊரடங்கை அறிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை
Vishnupriya R - tamil.oneindia.com : சென்னை: மே 1 மற்றும் 2 ஆகிய இரு தேதிகளிலும் முழு ஊரடங்கை அறிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை மே 2ம் தேதி நடைபெற உள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை விட்டால் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேறு நிறுவனங்களே தமிழகத்தில் இல்லையா?..
வாக்கு எண்ணிக்கை குறித்து பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, கொரோனா பாதிப்பால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகலாம் என்றும் மே 2ம் தேதி நள்ளிரவுக்குள் அனைத்து தொகுதிகளிலும் முடிவை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என்றும் கூறியிருந்தார்
ஏப்ரல் 30 இதனிடையே, மே 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என கேள்வி எழுந்தது.
இது குறித்து விளக்கமளித்த தேர்தல் ஆணையம், ஞாயிற்றுக் கிழமை ஊரடங்குக்கான உத்தரவு ஏப்ரல் 30ம் தேதி வரையிலேயே போடப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் கட்டுப்பாடுகள் மே 2ம் தேதி மட்டும் ஊரடங்கு இருக்காது என தெரிவித்திருந்தது. இருப்பினும், வாக்கு எண்ணிக்கையின் போது மக்கள் கூடுவதை தவிர்க்க அன்றைய தினம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது
ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதத்துக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி- தமிழக அரசு அனுமதி
* ஸ்டெர்லைட் ஆலையில் தாமிர உற்பத்தி உட்பட எவ்வித உற்பத்தி அலகையும் திறக்க, இயக்க அனுமதியில்லை.
* ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
* உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்துக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.
சீமானால் கைவிடப்பட்ட நடிகை விஜயலட்சுமி வீதிக்கு வந்தார் . வாடகை செலுத்த முடியாமல்
தமிழ்நாட்டுக்கு ஆக்ஸிஜன் தேவை; பிற மாநிலங்களுக்கு வழங்கக் கூடாது’ – பிரதமருக்கு பழனிசாமி கடிதம்
ஆக்ஸிஜன் தயாரிப்புக்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததே இந்த நிலைக்குக் காரணம் எனலாம். ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவும் மாநிலங்களுக்கு விரைவாக உதவும் பொருட்டு மத்திய அரசு ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டரைகளையும், ஒதுக்கீடு அடிப்படையில் திரவம் நிரப்பப்பட்ட லாரிகளையும் அனுப்பி துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
நடிகர் அஜித்தின் ஆணவத்தால் வேலையும் இழந்து நிர்கதியான மருத்துவ பணியாளர்
tamil.filmibeat.com சென்னை : கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை தீவிரமடைந்திருந்த போது, தமிழகம் முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.
அந்த சமயத்தில் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். இந்த வீடியோ வெளியோகி பரபரப்பை கிளப்பியது.
இதனால் அஜித் ரசிகர்கள் கவலை அடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் உடல்நிலைக்கு ஏதும் இல்லை எனவும், இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் எனவும் பின்னர் அஜித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ரசிகர்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
அஜித்துடன் ஃபோட்டோ எடுத்த மருத்துவமனை ஊழியர்
அதே சமயம், அஜித் மருத்துவமனைக்கு வந்த போது, அந்த மருத்துவமனை ஊழியர் ஃபர்சானா, அஜித் உடன் ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டார்.
இதை சமீபத்தில் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனையடுத்து, மருத்துவமனை விதிகளை மீறியதாக ஃபர்சானாவை மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
ஞாயிறு, 25 ஏப்ரல், 2021
சனாதனத்திற்கு எதிரான களத்தில் திமுகவும் ஸ்டாலினும்- He will be sensitive to the public ! definitely that is the great quality of leaders! ஜெகத் கஸ்பார் அடிகளின் பேட்டி
ஜெகத் கஸ்பார் அடிகள் : தளபதி திரு முக ஸ்டாலின் அவர்கள் அவரது தந்தை அளவுக்கு எழுத்தாற்றல் பேச்சாற்றல் எல்லாம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் மக்கள் கருத்தை கண்டு அஞ்சுகிற ஒரு உயர்ந்த பண்பு இருக்கிறது! இதை நான் மறுக்கவே மாட்டேன்!
தமிழக மருத்துவ கட்டமைப்புக்கள் மீது நம்பிக்கை வைத்து நிச்சயம் சிகிச்சை பெறமுடியும்!
Kathir RS மற்ற மாநிலங்களைப்பற்றித் தெரியவில்லை... ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை..
உங்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு அது பதிவுசெய்யப்பட்டவுடன் உங்களை அழைத்துசெல்வது நோயின் தீவிரத்தைப் பொறுத்து உங்களுக்கான சிகிச்சையை இறுதி செய்வது தேவைப்பட்டால் மருத்துவமனையில் சேர்ப்பது அல்லது வீட்டிலேயே இருக்கச் சொல்வது ஆகியன நடக்க குறைந்தது ஒரு நாள் ஆகும்.
தற்போதைய சூழ் நிலையில் கிங் இன்ஸ்டிட்யூட்டில் நீண்ட வரிசைகளில் 3 -4 மணி நேரம் கூட நோயாளிகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
இந்த முறையை எந்த வகையிலும் பை பாஸ் செய்ய இயலாது. அப்படி செய்ய முயல்வது நமக்கு நெருக்கமான அரசு அதிகாரிகள் மருத்துவர்களிடம் உதவி கேட்பது ஆகிய எதுவுமே இதில் பயன்படாது. அப்படி செய்வது இந்த சூழலில் சரியான அணுகுமுறையல்ல.
நமது அரசுகள் உருவாக்கிய கட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்து பொறுமையுடன் இருந்தால் நமக்கான சிகிச்சை நிச்சயம் கிடைக்கும்.கிடைக்கவில்லையெனினும் உரிமையுடன் கேட்டு சண்டையிட்டாவது பெற இயலும்.இப்படியான சூழல் ஒருவேளை உருவானால் நமது நண்பர்களிடம் உதவி கேட்கலாம்.
ஆனால் இந்த முறைகளில் அப்பொல்லோ ஆஸ்பத்திரி தரத்தை எதிர்பார்க்க இயலாது. சிறப்பு உபசரிப்புகள் ப்ரிவிலிஜ்கள் இவை பற்றிய சிந்தனைகளை ஓரங்கட்டிவிட்டு இது ஒரு பேரிடர் காலம் என்பதை உணர்ந்து அரசு வழங்கும் இந்த உதவியை பயன்படுத்திக் கொள்வது நமக்கும் நமது குடும்பத்துக்கும் நமது சமூகத்திற்கும் நல்லது. கதிர் ஆர்எஸ் 25/4/21
இந்தியாவிற்கு கைகொடுக்க முன்வரும் உலக நாடுகள்! சீனா பாகிஸ்தான் பிரான்ஸ் அவுஸ்திரேலியா ..
நக்கீரன் செய்திப்பிரிவு : இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது.
தினசரி 3 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்படுவதுடன், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனைகளில் படுக்கை வசதியின்றி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வெளியே காத்துக்கிடக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது.
இந்தநிலையில், கரோனாவிற்கு எதிரான போரில், இந்தியாவிற்கு உதவ உலக நாடுகள் முன்வந்துள்ளன. இதுதொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், "மீண்டும் எழுந்துள்ள கரோனா அலையின் எழுச்சியை எதிர்கொண்டு வரும் இந்திய மக்களுக்கு, ஒற்றுமைக்கான செய்தியை அனுப்ப விரும்புகிறேன். யாரையும் விட்டுவைக்காத இந்தப் போராட்டத்தில், பிரான்ஸ் உங்களுடன் (இந்தியர்களுக்கு) இருக்கிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயராக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு உதவ சீனாவும் முன்வந்துள்ளது.
மேலும், இதுதொடர்பாக இந்தியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. "தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சீன அரசாங்கமும் மக்களும், இந்திய அரசாங்கத்தையும் இந்திய மக்களையும் உறுதியாக ஆதரிக்கின்றனர்.
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின- மக்கள் வீடுகளில் முடக்கம்
இன்று முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படும் கோயம்பேடு மேம்பாலங்கள்
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு கடந்த 18-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த 5 நாட்களாக இரவு 10 மணியளவில் இருந்து அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட்டது.
பிரான்ஸ் போலீஸ் நிலையத்துக்குள் பெண் அதிகாரி கழுத்தை அறுத்து படுகொலை! இஸ்லாமிய பயங்கரவாதி கொடூரம்
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தலைநகர் பாரீசில் உள்ள பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்த சாமுவேல் பெட்டி என்பவர் கருத்து சுதந்திரம் குறித்து வகுப்பு எடுத்த போது, `சார்லி ஹெப்டோ’ பத்திரிகையில் வெளியான சர்ச்சைக்குரிய அந்த கேலிச் சித்திரத்தை மாணவர்களிடம் காட்டி பாடம் நடத்தினார்.