நித்தியானந்தாவின்
பெயரைக் கேட்டாலே சக சாமியார்கள் அதிர்கிறார்கள். பெங்களூரு நித்தியானந்தா
மடத்துக்கு மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக
பரமாச்சார்ய சுவாமிகள் விசிட் அடித்துவிட்டு வந்த பிறகு, மதுரை ஆதீன
மடத்துக்கு வந்தார் நித்தி. வந்ததும் "ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதி
நான்தான்' என்றார்.""நான்
பெங்களூருவில் இருந்தபோது, பாலில் என்னத்தையோ ஊத்திக் கொடுத்தாய்ங்க,
அதுலயிருந்து கெறக்கமாவே இருக்கு. மதுரை ஆதீனமடத்தின் மடாதிபதி
பதவியிலிருந்து நித்தியானந்தாவை நீக்குகிறேன்''’-தெளிவு நிலைக்கு வந்தபின்
மதுரை ஆதீனம் இப்படிச் சொன்னார்."
;நித்தியின் சிஷ்ய கோடிகள், சமீபத்தில் திருவண்ணாமலை பவளக்குன்று மலைக்குச் சென்று பூஜை செய்கிறோம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றபோது, பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டனர். அதற்கடுத்து சென்னை பல்லாவரத்தில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் கட்டில், மெத்தை, கேரவன் வேன்களுடன் டெண்ட் அடித்து அக்கப்போர் பண்ணினர்.
;இப்போது அவர்களின் அடுத்த இலக்கு, காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடம். 2000 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த ஆதீனமடம், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்திற்குட்பட்டது. "ஆதீனம் ஞானப்பிரகாசர் மடம்' என்ற பெயரில் செயல்பட்டுவரும் இம்மடமானது கொண்டைகட்டி முதலியார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டது.
இப்போது இந்த தொண்டை மண்டல மடத்தின் ஆதீனமாக இருப்பவர் 232-ஆம்
பட்டம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள். இந்த சுவாமிகள்தான் இப்போது ஒருவித தியான நிலைக்கு ஆட்பட்டு, நித்தியின் சீடர்களால் முற்றுகை யிடப்பட்டுள்ளார். மடத்தில் நடந்துவரும் மல்லுக்கட்டுகளை நம்மிடம் சொல்லத் தொடங்கினார் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் அறங்காவலரான ரகு வெங்கடேசன்."ஆயிரம் கோடிக்கும் மேல இந்த மடத்துக்குச் சொந்தமா சொத்துக்கள் இருக்கு. ஜூலை 17-ஆம் தேதி இரவு, மடத்தில் தூங்கிக்கொண்டிருந்த சுவாமிகள், மறுநாள் காலையில் மாயமாகிவிட்டார். மூன்று நாட்கள் கழித்து நித்தியானந்தாவின் டி.வி.யில் பேசினார், அப்புறம் காஞ்சிபுரம் மடத்துக்கு வந்தார், இப்போது உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். ஏடாகூடமா எதோ நடந்திருக்குமோன்னு எங்களுக்குச் சந்தேகமாகயிருக்கு''’என்ற பகீர் தகவலைச் சொன்னார் ரகு வெங்கடேசன்.
"தேசிக பரமாச்சாரியார் சுவாமிகளுக்கு பணிவிடை செய்கிறோம் எனச் சொல்லி நித்தியானந்தாவின் சீடர்கள் ரெண்டு மூணு பேருதான் ஆரம்பத்தில் மடத்துக்குள் வந்தார்கள். சில நாட்களில் எண்ணிக்கை 20 ஆச்சு. கூடவே பெண் சீடர்களும் இரவில் மடத்திலேயே தங்க ஆரம்பித்தார்கள். காலம் காலமாக ஈசனை மட்டுமே வழிபட்டு வந்த இந்த மடத்தில் நித்தியானந்தாவின் சிலையை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்தார்கள். மடாதிபதி அணிய வேண்டிய ஆபரணங்களைத் தவிர்த்துவிட்டு, கையில் செங்கோலும் வேறு வகையான ஆபரணங்களையும் அணியத் துவங்கிவிட்டார் ஆதீனம். எல்லாமே மர்மமா இருக்கு''’-இப்படிக் கவலைப்பட்டார் கொண்டைகட்டி முதலியார்களின் சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழக மாநிலத்தலைவர் ராதாகிருஷ்ணன்.
;இதே பண்பாட்டுக் கழகத்தின் மாநில செயலாளர் ராஜா விஜயகுமார் வைக்கும் சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் இன்னும் சந்தேகத்தைக் கிளப்புகிறது. “""மதுரை ஆதீனத்தின் மடாதிபதியாக நித்தியானந்தா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து 2012-ல் தர்மபுர ஆதீன மடத்தில் கூட்டம் நடந்தது. ஒன்பது ஆதீனத்தில் எட்டு பேர் நித்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, இவர் மட்டும் ஆதரவுக் குரல் கொடுத்துவிட்டு, கூட்டத்தைவிட்டு எழுந்து போய்விட்டார். இந்த காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடம் மட்டும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. இப்போது இந்த மடத்துக்கு அதிபதியாக துடிக்கும் நித்தியின் சீடரான சுந்தரேசானந்தா, அறநிலையத்துறையின் கமிஷனர் வீரசண்முகமணிக்கு நெருக்கம். அடுத்த மடாதிபதியாக சுந்தரேசனை நியமித்து அரசாணை வெளியிட்டுவிட்டால் யாரும் கேள்வி கேட்க முடியாது. இதைவைத்து காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் நித்தி''’என்கிறார் ராஜா விஜயகுமார்."
சுந்தரேசானந்தாவைச் சந்தித்து இது குறித்துக் கேட்டபோது, “""ஆதீனத்திற்கு தொண்டு செய்யவே யாம் இங்கு வந்துள்ளோம், வேறெதுவும் சொல்வதற்கில்லை''’என்றவர், நம்மை வீடியோ எடுக்கத் தவறவில்லை.">ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் சுவாமிகளை நாம் சந்தித்தபோது, “""யாம் யாராலும் கடத்தப்படவில்லை''’மூன்றே வார்த்தைகளில் முடித்துக்கொண்டார், இவரும் நம்மை வீடியோ எடுத்துக்கொண்டார்.>பலமுறை விடாமல் முயற்சித்தும் இந்துசமய அறநிலையத்துறையின் கமிஷனர் வீரசண்முகமணி நமது செல்போன் அழைப்பை ஏற்கவில்லை.>படங்கள்: செண்பகப்பாண்டியன் நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக